மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Clever Posts. Show all posts
Showing posts with label Clever Posts. Show all posts

13.4.21

பேச்சுத் திறமைக்கு ஒரு உதாரணம்!


பேச்சுத் திறமைக்கு ஒரு உதாரணம்!

கலைஞர் ஒரு பொது கூட்டத்தில் பேசியது:
     
"நீதி" க்கு முன்பு 'அ' போட்டால் என்ன வரும்?

மக்கள் சொன்னார்கள் " அநீதி"

" நியாயத்திற்கு " முன்னால் ' அ' போட்டால்?

மக்கள் சொன்னார்கள்" அநியாயம்".

" சுத்தம்" முன்னாடி' அ' போட்டால்?

மக்கள்; "அசுத்தம்".

மீண்டும் கலைஞர் கேட்டார் " யோக்கியன்" முன்னாடி 'அ' போட்டால்?

மக்கள்: "அயோக்கியன்".

இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு 'அ' போட்டது வேண்டுமா?

' அ' போடாதது வேண்டுமா?

மக்கள் சொன்னார்கள் 

'அ' போடாதது தான் வேண்டும்.

அப்போது கலைஞர் சொன்னார்.

சிந்தியுங்கள் மக்களே............      " திமுக"விற்கு முன்னால் 'அ' போட்டிருக்கிறார்கள்.  திமுக வா? அதிமுக வா?

இதை கேட்ட எம்.ஜி.ஆர்  ஓடிப்போய் தன் கட்சியின் பெயரை அஇஅதிமுக என்று மாற்றியது வேறு கதை.!
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.8.20

நவரத்தின கற்களின் தரம் அறிவது எப்படி???

நவரத்தின கற்களின் தரம் அறிவது எப்படி???

1
முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
2
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு
குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
3
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு
சிவப்பு நிறமாக தோன்றும்.
4
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால்
குத்தினால் உடையாது.
5
பவளம் :- உண்மையான பவள மையத்தில்
ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
6
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால்
குங்குமப்பூ வாசனை வரும்.
7
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால்
தாமரை பூ வாசனை வரும்.
8
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால்
வெள்ளை நிறமாக மாறும்.
9
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால்
ஒருவித ஒலி வரும்.

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த
விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.இம்புட்டு ரகசியமா?

   ( நமக்குத் தான் வாங்குவதற்கு யோகம் இல்லை இருப்பவர்களாவது தெரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்)
----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.19

ஆறுதல் கிடைக்க என்ன செய்யவேண்டும்?


ஆறுதல் கிடைக்க என்ன செய்யவேண்டும்?

நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை "ஆசுகவி" என்பார்கள்.

தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.

இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை. 

அவற்றுள் இனிமையான ஒரு பாடலை இங்கே பார்ப்போமா?

"ஆறுதல் என்பது ஐந்து முறை வரும்படி பாடல் பாட முடியுமா, உம்மால்?"   காளமேகத்திடம் சவால் விட்டார் ஒருவர்.

புன்னகைத்த காளமேகம் உதட்டிலிருந்து அடுத்த நொடி வந்து விழுந்தன நான்கு வரிகள்!

"சங்கரர்க்கும் ஆறுதலை; சண்முகற்கும் ஆறுதலை;
ஐங்கரற்கு மாறுதலை ஆனதே - சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை; பித்தா! நின்பாதம்
பிடித்தோர்க்கும் ஆறுதலைப் பார்!"

பாடிவிட்டு வெற்றிக் களிப்போடு நகைத்தார் காளமேகம்.

"பாடல் சரி, ஆனால் பொருள் குழப்புகிறதே?  சண்முகனுக்கு ஆறுதலை சரி. மற்றவர்களுக்கு இப்பாடல் பொருந்தாதே?"

சவால் விட்டவரே தோல்வியை ஒப்புக்கொண்டு தலையைச் சொறிய, காளமேகம் கம்பீரத்தோடு சொன்னார்:

"சங்கரருக்கு ஆறு தலை - அதாவது தலையில் கங்கை ஆறு.
முருகனுக்கும் ஆறுதலை.
ஐங்கரனுக்கு-  அது ஆறுதலை இல்லை, மாறுதலை! யானை முகமாக மாறிய தலை.
சங்கைப் பிடித்த  திருமாலுக்கும் மாறுதலை. நரசிம்மாவதாரத்தில் சிங்கமாக மாறிய தலை.
பித்தனாகிய ஈசன் கால்களைப் பிடித்தோருக்கு இறுதியில் கிடைப்பது ஆறுதல்!
அவ்வளவு தான்! "

தமிழை வைத்து என்ன அழகாக வார்த்தை விளையாட்டு விளையாடியிருக்கிறார், பார்த்தீர்களா?

நன்றி பசுபதிநாதன் சேலம் அவர்கள்
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.9.19

சுஜாதாவின் எழுத்துத் திறமை!


சுஜாதாவின் எழுத்துத் திறமை!

இதை படித்த பிறகு கண்ணீர் வந்தால் அது மகா பெரியவா மகிமை மற்றும் சுஜாதாவின் எழுத்து திறமை.

'தேடல்' - சுஜாதா

போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள் போல முளைத்தன. நுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது.

“சரியா இருபது வருஷம் ஆச்சு இந்த மெட்ராசை விட்டு” “நிறைய மாறுதல் இருக்கும்” என்றாள் பாகீரதி.

“கடல் மட்டும்தான் மாறலை !”

பாகீரதி தன் கைப்பெட்டியைத் திறந்து, சின்னச் சின்ன பல வர்ணக் குப்பிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறந்து கவிழ்த்து கிடைத்த ரோஜா நிறக் குழம்பை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தன் வயசைப் பத்து நிமிஷம் குறைத்துக் கொண்டாள். விமானத்தில் குப்பென்ற வாசனை சூழ்ந்தது.

“சங்கராச்சாரியாரைப் பார்க்கப் போறதுக்கு மேக் அப்பா ?”

“மேக் அப் இல்லை வெய்யில் தாங்காது என் ஸ்கின்.”

“மே ஐ ஹேவ் யுர் அட்டென்ஷன் ப்ளீஸ்…!” என்று மண்டை மேல் இருந்த ஸ்பீக்கர் கமறியது. அதற்கப்புறம் புரியவில்லை.

“உலகத்திலேயே மோசமான ஏர்லைன்னு வருஷா வருஷம் இந்தியன் ஏர்லைன்சுக்குத்தான் பரிசு தரணும்.”

பாகீரதியின் ஆழ்ந்த மௌனத்தைத் தொடர்ந்து, “உலகத்திலேயே மோசமானதொரு ஏர்போர்ட் பாம்பே” என்றார்.

பாகீ அவரைக் கடைக் கண்ணால் பார்த்து, “உங்க இந்தியா தூஷணையை ஆரம்பிச்சுட்டீங்களா ?”

“உண்மையைத்தானே சொல்றேன். இந்த நாடு உருப்படுமா சொல்லு. ஏர்போர்ட்டில் குடிக்க ஒரு வாய் தண்ணி கிடையாது. உட்கார ஒரு நாற்காலி கிடையாது. அமெரிக்கால Confirm பண்ண டிக்கெட் இங்க மெசேஜ் வரலைங்கிறான். ப்ளேன் மூணு மணி நேரம் லேட்டு. எதுக்காக இந்த நாட்டுக்கு ஏரோப்ளேன் ?”

பாகீரதி பேசாமல் இருந்தாள். இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னால் இன்னும் பெரிசாக வாக்குவாதம் வளரும்.

“காஞ்சீபுரத்தில் ஓட்டல் ஏதாவது உண்டா இல்லை வயக்காட்டு பக்கம் ஒதுங்கலாமா ?”

பேசவில்லை.

“அலுமினிய சொம்போட ?”

பேசவில்லை.

விமானம் தரை தொட்டு ஒரு தடவை குதித்தது.

“என்ன மோசமான லாண்டிங் !”

விமானம் ஊர்ந்தது.

“உனக்கு வேணும்னா அவரைத் தரிசனம் பண்ணிக்கோ. எதுக்காக என்னை இழுக்கறே !”

“நீங்களும் பார்க்கணும்.”

“எதுக்கு நான் ? எனக்குத்தான் இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாதே. நான் ஒரு ஃபிசிக்ஸ் ஆசாமி — அக்னாஸ்டிக் !”

பாகீ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமின்றி, “இன்னிக்கு என்ன கிழமை ?” என்றாள்.

“இந்தியாவுக்கு வந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்குக் காத்திருந்து கிழமையே மறந்து போச்சு….”

“எத்தனை நேரம்?இவங்களுக்கெல்லாம் எதுக்கு ஏரோ பிரிட்ஜ்?”

பிரயாணிகள் இறங்க அவசரப்பட்டு முன் வாசலில் நெருக்கினார்கள்.

“மூணு மணி நேரம் உட்கார்ந்திருந்தாங்க. மூணு நிமிஷம் கதவு திறக்கப் பொறுமை இல்லை ........ இந்தியன்ஸ்!”

“நீங்க இந்தியன் இல்லையா ?” என்று கேட்க விருப்பமின்றி பாகீ பேச்சை மாற்றினாள்.

“நீங்க முதல்ல அமெரிக்கா புறப்படறப்ப எத்தனை டாலர் வச்சிருந்தீங்க ?”

“ரெண்டு டாலர்! ஜஸ்ட் டூ டாலர்ஸ் !”

அது அவருடைய செல்ல ‘டாபிக்.’ எத்தனை தடவை சொல்லியிருக்கிறார் !

“கென்னடில வந்து இறங்கறேன், டெலிபோன் செய்யக் காசு இல்லை. ‘கலெக்ட் கால்’ னா என்னன்னே தெரியாது. அப்ப அங்க ஒரு….”

அவர் வாழ்க்கையில் முன்னேறிய கதையை 27வது தடவை கேட்கத் தயாரானாள்.

சீட்டிலேயே உட்கார்ந்திருந்து, எல்லோரும் இறங்கியதுமே அவர்கள் வெளியே வந்து பாலம் கடக்கும் போது, உஷ்ணம் அவர்களைத் தாக்கி, ஐம்பது அடி அவர்களுடனேயே கூட வந்து ‘ஏசி’க்குக் கொண்டு வந்துவிட்டது.

‘எஸ்கலேட்டர் அவுட் ஆப் ஆர்டர் ‘ என்று போர்டைப் பார்த்து சிவசங்கரன் நக்கலாகச் சிரித்தார்.

“இருக்கிற ஏழை ஜனங்களுக்கு உணவும் உடையும் கொடுத்து, பாப்புலேஷனை கண்ட்ரோல் பண்ணா போதும். மத்த எதுவும் வேண்டாம் இந்தியாவுக்கு. சாட்டிலைட் எதுக்கு ? எதுக்காக மிசைல் ப்ரோக்ராம் ?” என்று மூன்று வரியில் இந்தியாவுக்கு விமோசனம் சொன்னார்.

பாகீ மௌனமாகவே வந்தாள். அமெரிக்காவில் இருந்தால் விவாதித்திருப்பாள்…. ‘நாமெல்லாம் இதைச் சொல்வது ரொம்பச் சுலபம், நடைமுறை தான் கஷ்டம்’ என்று.

இங்கே பாகீரதி அவருடன் எந்த விதத்திலும் வாதாட விரும்பவில்லை, காஞ்சிபுரம் போய்ச் சேரும் வரையாவது!

கீழே ஹாலில் இறங்கினதும் கைவண்டி எடுத்துக் கொண்டார். அதன் சக்கரங்கள் சண்டி பண்ண, “சேச்சே ! ஒரு கைவண்டி சரியா பண்றாங்களா பாரு இந்தியாவிலே …”

கன்வேயரில் சுயம்வர ராஜகுமாரி போல் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அவர்கள் பெட்டியை, ஒரு சிப்பந்தி அதன் பாகேஜ் சீட்டைத் தப்பாகப் படித்து, எடுத்து வைத்துக் கொள்ள, சிவசங்கரன் “எக்ஸ்க்யூஸ்மி, எக்ஸ்க்யூஸ்மி” என்று ஓடிப் போய் அவன் கையைப் பிடித்துத் தடுக்க, அந்தச் சிப்பந்தி. “பொட்டி உன்னுதுன்னா சொல்லு – மேல கை போடாதே ! நீ கை வச்சா நான் கை வைக்க எத்தினி நேரமாகும் ? நீ சீமான்னா உங்க ஊரோட வச்சுக்க — இந்தப் பேட்டைல நான் சீமான் “ என்றான்.

“வாட் வாட் ?”

அவர் திரும்பிய போது முகம் சிவந்திருந்தது. கைகள் உதர ஸார்பிட்ரேட் மாத்திரை எடுத்து அடக்கிக் கொண்டார்.

“ஃபூல்ஸ் ! ஃபிலிஸ்டைன்ஸ்…” பாகீரதியின் மேல் பாய்ந்தார்.

“எல்லாம் உன்னால தான். எதுக்காக என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தறே? நான்தான் இந்தியா வர மாட்டேன்; பிரின்ஸ்டன்லயே இருக்கேன்; எனக்குப் பிடிக்காது இதெல்லாம்னு சொன்னேனில்லையா? எதுக்காக என்னை டார்ச்சர் பண்றே ? நான் எதுக்காக மெட்ராஸ் ஏர்போர்ட்டில ஒரு பொறுக்கி கிட்ட கெட்ட வார்த்தை கேட்கணும் ?”

“டேய் ...... யார்ரா பொறுக்கி! ஒரு உதை விட்டன்னா அரை டிராயர்லாம் ரத்தம் ஆயிரும் !”

“நீங்க வாங்க; அவனோட என்ன ?”

பாகீரதி அவசரமாக வெளியே வந்தாள். இந்த உச்ச சமயங்களில் பேசவே கூடாது.

வராந்தாவுக்கு வந்தார்கள். வாசலில் கார் காத்திருக்கும் என்று சொன்னார்கள். யார் என்று தெரியவில்லை. அவரவர் அவரவர் கார்களில் ஆரோகணித்துக் கதவு சாத்திக் கொண்டு புறப்பட்டுச் செல்ல, சற்று நேரத்தில் வராந்தா காலியாகி விட்டது.

“ஆட்டோ போலாங்களா ? செவண்டி ருப்பீஸ் கொடுத்துருங்க. எங்க மைலாப்பூர் தானே !”

“நான் எங்கே போனா உனக்கென்ன ?”

“அவனோட பேச வேண்டாம்.”

“சும்மனாங்காட்டியும் கேட்டேன். கோவிச்சுக்கிறியேம்மா !”

அப்போது ஒரு டிரைவர் வந்து, “நீங்க டாக்டர் சிவராமனா ?”

“டாக்டர் சிவசங்கர்.”

“காஞ்சி பார்ட்டி நீங்கதானே ? ப்ரதிபா டிராவல்சிலே வண்டி கேட்டிருந்தீங்களே !”

“ஆமாம்.”

“இருங்க வண்டி வந்திருக்குது.”

“நான் சிவராமன் இல்லைப்பா.”

“சரி சிவசங்கர். வாங்க! உங்களுக்குத்தான் வண்டி.”

பாகீரதிக்கு அந்த டாக்ஸி டிரைவரைப் பிடித்திருந்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கதவை மரியாதையாகத் திறந்து, மூடி, ஓடிப் போய் சீட்டில் அமர்ந்தான்.

“ஒரு பேரை ஒழுங்காக் கொடுக்கத் தெரியலை; என்ன ட்ராவல் எஜெண்டுப்பா !”

“அது சில சமயங்கள்ள தப்பாயிருதுங்க, டெலெக்ஸ்ல….”

“எது சரியாய் இருக்கு உங்க நாட்டில ?”

“டிரைவர் உங்க பேரு என்ன ?”

“பால்ராஜு...ங்கம்மா. ஏசி போட்டுரலாங்களா…? காசட் போட்டுரலாங்களா…?” காசட்டைச் செருகினான்.

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்….”

“எனக்குக் காதல் வேண்டாம்ப்பா !”

கார் கிளம்பி நெடுஞ்சாலையில் சேர்ந்து கொண்டது. “பக்தி பாட்டு போடட்டுங்களா ?”

“எதுவும் வேண்டாம்ப்பா, ஆளை விடு!”

“பூந்தமல்லி பக்கம் திரும்பியதும், “பால் ராஜ், மெதுவாப் போங்க, அவசரமே இல்லை.”

“நீங்க பெரியவரைத் தரிசனம் பண்ண வேண்டாமா இன்னைக்கு ? போயிரலாங்க ரெண்டு அவர்ல.”

“நாளைக்கு மெதுவா தரிசனம் பண்ணிக்கறம்பா. எனக்கு அவசரம் இல்லை. நான் பார்க்கலைன்னாக்கூட பரவால்லை. இந்த அம்மாதான்… இதுக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்குது !”

“அப்படீங்களா ? சந்தோசங்க. மனித தெய்வம் சார் பெரியவரு. இதுவரைக்கும் எம்பத்தொன்பது முறை தரிசனம் பண்ணிட்டேங்க! இன்னம் பதினொன்று பண்ணா நூறாயிடும் — அவருக்கு நூறு வயசு ஆனாப்பல….”

“பால்ராஜ் நீங்க கிறிஸ்டியன்தானே ?

“ஆமாங்க அதனாலே என்ன சார் ?”

“Funny !” என்றார் சிவசங்கர்.

“எங்க வீட்டுல அவருதாங்க தெய்வம். அவரு என்ன சொல்றாரு ? நீ சர்ச்சுக்குப் போ – மசூதிக்குப் போ – கோயிலுக்குப் போ — கடைசில — எல்லா தெய்வங்களும் ஒண்ணு தானே ….”

“விபூதி வரவழைப்பாரா ?”

“அது சாய்பாபாங்க. அவர் உங்களைப் பார்த்தாலே போதுங்க — நினைச்ச காரியம் நடக்கும்.”

“உனக்கு நடந்ததா ?”

“பின்ன ? நம்ம புள்ள ரோஸ்மேரிக்குத் தபால் ஆபீஸ் உத்தியோகம் கிடைக்கணும்னு ஒருமுறை கேட்டேங்க. அடுத்த ட்ரிப்ல ஆர்டர் வந்துருச்சு !”

“அப்படியா டெலிபோன்ஸ்லயும் இருக்காரா இவர் !” என்றார்.

அந்தக் கேலியை பால்ராஜ் கவனிக்கவில்லை.

“பெரியவர்தாங்க தெய்வம். தூரக்க இருந்து பார்த்து மனசில கேட்டா காரியம் நடக்குது. உங்களுக்கு என்ன வேணுங்க !”

“காஞ்சிபுரத்தில நல்ல ஓட்டல்பா !”

“அம்மா உங்களுக்கு ?”

“நிம்மதி “ என்றாள்.

“அய்யாதான் கேலியாய்ப் பேசறாரு !”

“பால்ராஜ், பாருங்க எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் செய்யற ஆராய்ச்சில கடவுள் தேவைப்படறதில்லை.”

“எனக்குத் தேவைப்படுதுங்க.”

“லுக் அவுட் !” என்று கத்தினார்.

வண்டி ஒரு லாரியை நூலிழையில் தவிர்த்து, தார் சாலையை விட்டு இறங்கி பாம்பு போல் நெளிந்து மரத்தருகே நின்றது.

அவர் உடல் நடுங்கி நெற்றி வியர்வை படர்ந்திருக்க, பால்ராஜ் இறங்கி டயரை உதைத்து, “பஞ்சர்ங்க! பதினைந்து நிமிஷத்தில ஸ்டெப்னி போட்டுரலாங்க. இளநி சாப்பிடுங்க.”

சிவசங்கர் சிகரெட் பற்றவைத்தார். மரத்தடியில் கயிற்றில் குலை குலையாக இளநீர் தொங்கியது.

“இளநி சீவலாங்களா ?”

“வேண்டாம்ப்பா .”

“சீவிட்டேங்களே…”

பாகீரதி பதற்றத்துடன் மற்றொரு வாக்குவாதத்தை எதிர்பார்த்தாள்.

“சரி, குடு” என்றார். நல்ல வேளை.

இளநீரை உறிஞ்சுகையில், “இந்தியால இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு !”

பால்ராஜ் டயர் ஸ்பானரை டிக்கி இடைவெளியில் செருகி விட்டு, “போவலாங்க” என்றார்.

“இளநி சாப்பிடுங்க பால்ராஜ்” என்றாள் பாகீ.

“வேண்டாம்மா. பெரியவரைப் பார்க்கிற வரைக்கும் பச்சை தண்ணி பல்லுல படக்கூடாது.”

“மயிரிழைல தப்பினம்.” “எல்லாம் பெரியவர் ஆசிங்க !”

“அப்படியா ?” மறுபடி கேலிக் குரல்.

காஞ்சிபுரத்தை அணுகும்போது மணி மூன்றாகிவிட்டது. ஏரியில் வாத்துகள் நீந்த, அதை அணைத்துச் சென்ற பாதையில் பனைமர சோல்ஜர்கள் காவல் நின்றன. கோபுரங்கள் வெண்மையாக, புதுசாகத் தெரிந்தன. நகரமே நூறாவது ஆண்டைக் கொண்டாட அலங்கரித்துக் கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்கும் தட்டியும் மூங்கிலும், சுதந்திர மாடுகளும், ஓடும் நாய்களும், லாட்டரி டிக்கெட் நிறைந்த சைக்கிள்களும்….

பாகீரதிக்கு உற்சாகம் பொங்கியது.

பெரிசாக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இங்கதான் விழா நடக்கப் போகுதுங்க.”

“யாராவது இந்த ஊரைப் பார்த்தா பழைய பல்லவர் காலத்து தலைநகர்னு சொல்வாங்களா ? வாட்டிகனைப் பார்த்தியே எப்படி இருந்தது ? ஆயிரம் ஆண்டு பழசுன்னா அமெரிக்கால என்னமா ‘ப்ரிசர்வ்’ பண்ணுவா !”

“நமக்கு அதெல்லாம் முக்கியமில்லைங்க,”

“நான் உன்கிட்ட பேசலை பால்ராஜ்.”

“நேராப் போய்ப் பெரியவரை முதல் தரிசனம் பண்ணிறலாங்க. அப்புறம் போயி மத்த சாமிங்களைப் பார்த்துறலாம்.”

சிவசங்கர் தீர்மானமாக மறுத்தார். “முதல்ல ஓட்டல் போய் ‘செக் இன்’ பண்ணிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்.”

“இல்லைங்க. அரைமணிதான் அவரைப் பார்க்க சமயம். அதுக்குத்தாங்க வண்டியை விரட்டிக்கிட்டே வந்தேன்.”

“நாளைக்குப் பார்த்துக்கலாம். முதல்ல ஓட்டல். எனக்குப் பசிக்கிறது.”

ஆர்ச் வளைவுகளில் மூன்று பெரியவர்களும் ஆசிர்வதிக்க நரசிம்மராவ் எழுதிக் கொண்டிருந்தார்.சினிமா சுவரொட்டியை உரக்கப் படித்தார்.

ஒரே ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டல்தான் இருந்தது. அதிலும் ரூம் போட்டு உள்ளே சென்று படுக்கையில் உட்கார்ந்ததும் குறை சொன்னார்.

“பாத்ரூமில் கரப்பான் பூச்சி, சுவர்களில் ரத்தக் கரை, டவல் அழுக்கு, மருந்து நாற்றம்…அமெரிக்கால ஒரு மினிமம் comfort - ஆவது….”

பாகீரதி கடைசியாகப் பொறுக்க முடியாமல், “ரெண்டு நாளைக்கு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வாங்களேன். நாம வந்தது பரமாச்சாரியாளைத் தரிசனம் பண்ண. ஓட்டல் மூட்டைப்பூச்சியை எண்ண இல்லை.”

“நாம வந்ததுன்னு சொல்லாதே. நீ வந்தது! எனக்கு இதில இஷ்டமில்லை; நம்பிக்கை இல்லை.அவரைப் பார்க்காட்டிக் கூட எனக்குப் பரவாயில்லை. தலைவலி எனக்கு !”

அதற்குள் பால்ராஜ் வந்து, “அம்மா, அம்பாள் பூசை செய்யறாரு சின்னவரு. வாங்க… போய் தரிசனம் பண்ணிடுங்க.”

“வரேன் பால்ராஜ்… கிளம்புங்க.”

“நான் வரலை நீ போ. நான் ரூம்ல இருக்கேன்.”

“நீங்க வராம தனியாப் போக மாட்டேன்.”

“அதான் பால் இருக்கானே ?”

“அய்யா நான் உள்ளே வர மாட்டேங்க! வெளியே பெரியவரை ஒருமுறை தரிசனம் செய்தா போதும்….”

“ச்சே! உன்னோட வேதனை பாகீ !”

“ப்ளீஸ்! ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு உங்க ஃபிசிக்ஸ் பேசறதை மறக்கக் கூடாதா, பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா ? இந்தப் பிடிவாதம் பிடிச்சுத் தானே பிள்ளையைப் பறிகொடுத்தோம் .”

அவர் சட்டென்று மௌனமாகத் தீய்க்கும் கண்களால் பாகீரதியைப் பார்த்து, “நான் தான் காரணமா ! நான் மட்டும்தான் காரணமா ?” என்றார்.

“மறுபடி ஆரம்பிக்க வேண்டாம்.”

“நான்தான் காரணமா சொல்லு ?”

“சரி நானும்தான் காரணம்.”

பால்ராஜ் தர்மசங்கடத்தை உணர்ந்து, “நான் ஓட்டல் வாசல்ல வண்டி கொண்டு வரேங்க!”

சிவசங்கர் “ஆல் ரைட் ! வரேன். ஆனா என்னால சட்டையெல்லாம் கழட்ட முடியாது. அப்பப்ப ஸ்மோக் பண்ணுவேன். நான் நாஸ்திகன். மதமும் ஒரு போதைப் பொருள். ஒரு ஏமாற்று வேலைன்னு நம்பறவன்.”

“சும்மா வாங்களேன் துணைக்கு!”

அவர் அரை டிராயரையும் யுனிவெர்சிட்டி பனியனையும் மாட்டிக் கொண்டு தலையில் பேஸ்பால் குல்லா போட்டுக் கொண்டு “லெட்ஸ் மூவ்!” என்றார்.

பாகீரதிக்கு அழுகை வந்தது. ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் ! ஏதோ நிகழப் போகிறது என்று வயிற்றில் பயம் முலாம் பூசியது.

மடத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்திருக்க மேடை மேல் பூஜை நடந்து கொண்டிருந்தது.

“ஹூ இஸ் திஸ் பாய் ?”

“புதுப் பெரியவா.”

“வாட் நான்சென்ஸ், இந்தப் பையன் கால்ல விழணுமா ?”

“நீங்க விழ வேண்டாம்.”

“இவர் நம்பர் த்ரீயா ? வேர் இஸ் நம்பர் டூ ?”

“பேசாம இருங்களேன் ப்ளீஸ்.”

ஆயாசம் தரும் அளவுக்குக் காத்திருந்த பின் ஆரத்தி எடுத்தார்கள்.

அங்கிருந்து சுவரோரமாக நடந்து நழுவி, பெரியவரைப் பார்க்கச் சென்றார்கள்.
சிவசங்கரன் ஓரமாக நிற்க ........ “நிக்கறேளே உட்காருங்கோ. பேரு ? “
“ஷிவ்ஷங்கர்.”

“ஊரு ?”

“அமெரிக்கால ப்ரின்ஸ்டன்ல பிசிக்ஸ் ப்ரொபசரா இருக்கேன்.”

” ப்ரின்ஸ்டன்லதானே ஜெயராமன்னு மடத்துக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் இருக்கார்.”

“எனக்குத் தெரியாது. ப்ரின்ஸ்டன்ல ஐன்ஸ்டைன்னு ஒரு மகாமேதை இருந்தார்.”

“உங்க பௌதீக சாஸ்திரம் என்ன சொல்றது, ஆதி சங்கரர் சொன்னதைத் தானே !”

“இல்லை சுவாமி. பௌதீகம் ரொம்ப தூரம் போயிட்டது. பிரபஞ்சத்தையே ஒரு துகள், ஒரே ஒரு சக்தி இதில் விளக்க முடியுமா பார்க்கறா !”

“அதையே தான் – சக்தியும் சிவமும்னு ஒரு சரீரத்தில் அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தோட ஒரே பொருளா விளங்கறா !”

”இல்லை நாங்க சொல்றது வேற .”

“அது இங்கிலீஷ், இது சம்ஸ்கிருதம். பவானீத்வம். இனி நீயாவே நான் ஆகி விடுகிறேன். நான், என்னுடையது என்கிறதை உன்னிடத்திலேயே கரைச்சுடறேன்ன்னு சொல்றார்…”

“அப்படி இல்லை “ என்றார் சிவசங்கரன்.

“வாங்க போகலாம்” என்றாள் பாகீரதி.

“உங்களுக்கு மிராகிள்ஸ்ல நம்பிக்கை இல்லையா ?”

“இல்லை.”

“பால்ப்ரண்டன், ஆர்தர் கோஸ்லர் எல்லாரும் எழுதிருக்காளே படிச்சதில்லை ?”

“இல்லை.”

“பரமாச்சார்யாள் மெஹபூப் நகர்ல சாதுர்மாஸ்ய பூஜைக்காக காம்ப் இருக்கறப்ப, உங்களைப் போலத் தான் ஒருத்தர் அமெரிக்காவில இருந்து வந்திருந்தார். பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ரிக்ஷாவைப் போட்டுண்டு வந்தார். ஆசீர்வாதம் வாங்கிண்டார்.

அப்பல்லாம் மஹாபெரியவா நன்றாகவே எல்லோருடனும் பேசுவா. அவர் கொடுத்த குங்குமத்தைத் தன் தலையிலே அப்பிண்டு, ஆப்பிளைக் கொடுத்து அனுப்பிச்சார்.

அவர் மடத்திலேயே சாப்பிட்டுட்டு ஏதாவது கான்ட்ரீப்யூஷன் பண்ணலாம்னு பர்சை எடுக்கறார். காணோம். பதறிப் போய்ட்டார்.

பர்ஸ் மட்டும் இல்லை. பாஸ் போர்ட்டு, ‘டிராவலர் செக்’குங்கறாளே — பதினஞ்சாயிரம் டாலர் — எல்லாமே காணும். அப்படியே ஒடிஞ்சு போய்ட்டார். எங்கன்னு தேடுவார் ? சாப்ட்ட இடத்தில இல்லை. சைக்கிள் ரிக் ஷாக்காரனை வீடு தேடித் போனா அவங்கிட்டேயும் இல்ல..கடைசில எங்க இருந்தது தெரியுமா ? பஸ் ஸ்டாண்டிலஸ்டாண்டி சிமெண்ட் பெஞ்சில அவர் உட்கார்ந்திருந்த இடத்தில. அந்த இடத்தில் ரெண்டாயிரம் பேராவது புழங்கியிருப்பா. இதுக்கு என்ன சொல்றேள் சிவசங்கரன், மிராக்கிள் இல்லையா இது ? இதை உங்க பௌதீக சாஸ்திரம் எப்படி விளக்க முடியும் ?”

“நீங்க மிராக்கிள்ன்னு சொல்லலாம். நான் இதை பிராபபிலிட்டி — சான்ஸ் இப்படித்தான் சொல்வேன். தரிசனம் ஆச்சோல்லியோ போகலாமா பாகீ !”

அவர் புன்னகைத்துப் பிரஸாதம் படாமல் கொடுத்தார்.

வெளியே வரும்போது பாகீரதி கோபத்தில், “அவர் கிட்ட கூடவா ஆர்க்யுமென்ட்?”

“ஏன் ? அவரும் என்னைப் போல் ஒரு ஆத்மா தானே ? அதானே அத்வைதம் சொல்றது ?”

பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்க, நீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்க. மஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”

அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்தது. மெல்ல மெல்ல நகர பாகீரதி

ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்து கொண்டாள். மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.

ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள். உள்ளே இலேசான இருட்டாக இருந்தது. மெல்ல அணுகினார்கள்.

உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர் ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம் வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை.

அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வப்போது மாலையை அணிவித்துக் கழட்டிக் கொண்டிருந்தான். இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”

“தொண்ணூறுங்க ! அய்யா ..... அமெரிக்காவிலிருந்து வந்திருக்காரு”

“அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ ” என்று பாகீரதியை அருகே அழைக்க .......

பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்க, புடவை மேல் பட்டுத் தெறித்தது.

“பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோ. இந்த க்ஷணத்துக்குத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம். மேம்போக்கா இவர் குதர்க்கம் பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான்.

ஒரே பிள்ளை. பாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான். பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் !

உலகம் பூரா தேடியாச்சு. நேபாள், சிலோன், ஜப்பான், எல்லாம் தேடியாச்சு. ஆக்சிடெண்டில போய்ட்டானா, செத்துப் போய்ட்டானா, இருக்கானா…. ? எம்புள்ளை போய்ட்டான். நிம்மதியே இல்லை. இன்னி வரைக்கும் !”

“பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்க. சார் நீங்களும்தான் சார்.”

அந்த இளைஞன், அருகில் சென்று அவர் காதுடன் சொல்ல, ஸ்ரீமஹா பெரியவா கைகளை உயர்த்தி வாழ்த்தினார். பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது.

காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது.

ஆப்பிள் பழத்தையும் ரோஜாவையும் கொடுத்த அந்த இளைஞன், “எல்லாம் சரியாய்ப் போய்டும். கவலைப்படாதீங்கோ.

பையன் பேர் என்ன சொன்னேள் ?”

“பாலாஜி.”

அவர்கள் வெளியே வந்தனர்.

சிவசங்கர் கோபமாக, “ஏன் சின்னக் குழந்தை மாதிரி அழறே ?” “சினிமாவில வர மாதிரி உன் பிள்ளை வருவான்னு நினைச்சியா !

அவள் அடங்காமல் அழுதாள்.

“பாகீ ! பாகீ ... டோன்ட் பி சில்லி. டோன்ட் மேக் எ ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றி, பரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்தி அழைத்துச் சென்றார். பின்னால் குரல் கேட்டது. மடத்து சிப்பந்தி ஒருவர் ஓடி வருகிறார். '' மாமி மாமி, பெரியவா உங்க கிட்ட யாரையோ அனுப்பியிருக்கா "'

யார்?

ஒரு கட்டுக்குடுமிக்காரர் ஒருவர் ஒரு இளம் வாலிபனுடன் வந்தவர் '' டேய் பாலாஜி நேத்திக்கி பெரியவா சொன்னாளே இன்னிக்கி வருவான்னு ''இவா தானே அது -

''எங்க அப்பா அம்மா தான் வந்திருக்கா !”

இதற்கு மேல் எழுதுவது அர்த்தமில்லை. இதயமும் மனமும் தானே எழுதிக் கொள்ளும்...
--------------------------------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.19

நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....!!!!!


நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....!!!!!

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால், ஓய்வு எடுக்க எண்ணினார். அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம், நேர்மையானவரிடம், உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார். ஒரு புதுமையான முறையில் நிர்வாகம் செய்திட ஒரு உண்மையான உழைப்பாளியை தேர்ந்தெடுக்க எண்ணினார்.

எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

முதலாளி பேச ஆரம்பித்தார்: அன்புள்ள ஊழியர்களே, என்னுடைய ஓய்வுக்குப் பின், உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால் உங்களுக்குள் நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.

யார் வெற்றியடைகின்றார்களோ,அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த பொறுப்பாளி என்றார்.

இப்போது என் கையில், பலதரப்பட்ட, பல வகைகளை சார்ந்த, ஏராளமான விதைகள் இருக்கின்றன. யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது.

இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு, தண்ணீர் ஊற்றி, நன்றாக வளர்த்து, அடுத்த வருடம் இதே நாளில், என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.

யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ, அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும் இராமசாமிக்கும் ஒரு விதை கிடைத்தது. அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.

தன் மனைவியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.

அந்த அம்மையாரும் உடனே ஒரு தொட்டியும், மண்ணும், சாணமும், தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து, அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் இராமசாமியின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது ம்ஹூம். செடி வளரவே இல்லை, நாட்கள் உருண்டோடின. ஆறு மாதங்கள் ஆனது.

அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார்.

ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது.

எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.

இராமசாமியும் தன் மனைவியிடம் காலி  தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன், எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார்.

அந்த அம்மையார் அவரை சமாதானப்படுத்தி சொன்னார்: நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள். உங்கள் நேர்மை, உழைப்பு ஒரு போதும் வீணாகாது என்றார். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

இராமசாமி செட்டியாரும் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.

எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.

விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. பல்வேறு விதமான பூக்கள் பலவித வண்ணங்களில் பூத்துக் குலுங்கின.

இராமசாமியின் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.

அருமை. அழகு என்றார். எல்லாரும் செம்மையாக, செழிப்பாக செடியை வளர்த்து உள்ளீர்கள் என்று புகழ்ந்தார்.

உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.

அங்கிருந்த ஒவ்வொரு ஊழியரும் தனக்குக்குதான் பொறுப்பாளர் பதவி கிடைக்கப் போகிறது என்ற மகிழ்வில் இருந்தனர். அச்சமயம் இராமசாமி மட்டும் மிகவும் அமைதியாக கடைசி வரிசையில் நின்றிருந்தார். அவரை அருகே வருமாறு அழைத்தார் அந்த முதலாளி.

முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார், என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் நேர்மைவாதியான, உழைப்பாளியான இராமசாமி.

முதலாளி இராமசாமியிடம் உங்கள் செடி எங்கே? என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விபரமாக கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னார் இராமசாமி.

முதலாளி இராமசாமியைத் தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார்.

பிறகு இராமசாமியை அழைத்து, தோளில் கையை போட்டுக் கொண்டு: நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

இராமசாமி செட்டியாருக்கு ஒரே அதிர்ச்சி. தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே! பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்? என்று குழம்பிப் போனார்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:

சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா? அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled Seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால், அது முளைக்க இயலாது. அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால், அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

ஆனால் இராமசாமி மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார். ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.

நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.

அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.

உண்மையும், நேர்மையும், தர்மத்தை பாதுகாக்கும், என்ற கொள்கையை நீருபித்த இராமசாமிக்குக் கிடைத்தது மிகப் பெரிய பதவி.

நேர்மை ஒரு போதும் வீண் போகாது. நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும். புகழ் வர வேண்டாம்.

ஏனெனில், அந்த புகழுக்கு உரியவன் ஆண்டவன் மட்டுமே!
-----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.9.19

வாரியார் சுவாமியும் எம்.ஆர்.ராதாவும்!!!!


வாரியார் சுவாமியும் எம்.ஆர்.ராதாவும்!!!!

ஆறு தலைகள் கொண்ட முருகன் எப்படி ஒரு பக்கமாக படுத்து தூங்குவார்.?

(படித்ததில் பிடித்த பதிவு)

தி. க. M. R. ராதாவை தலை குனிய வைத்து யோசிக்க வைத்த திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் !

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார்.

அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.  இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான பாணியான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்ம சங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மண மக்களின் தந்தையரை அழைத்து  அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”

அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கே  தூக்கம் வரவில்லை.உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?” என்றார் வாரியார் சுவாமிகள்.

இதைக் கேட்ட நடிகர் ராதா தலை குனிந்தார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது இறுதி வாழ் நாளில் கடுமையான இரத்த புற்று நோயால் பாதிக்கப் பட்டு… இறுதியில் காஞ்சி மகா பெரியவாளிடம் தனது தவறுக்கு மன்றாடி மன்னிப்பு கேட்டு.. தனது நோயின் வலி.. வலி.. வலி .. தாங்க முடியவில்லை எனக் கூறி அவரிடம் சரணடைந்து வலி இல்லாமல்  மரணமடைந்தார் என்பது உலகறிந்த உண்மை!
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.8.19

ஏ.சி யை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?


ஏ.சி யை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

தமிழ்நாடு மின்சார வாரிய செயல் பொறியியலாளரால் அனுப்பப்பட்ட மிகவும் பயனுள்ள தகவல்.

*AC யின் சரியான பயன்பாடு:*

*நாம் தொடர்ந்து**ஏர் கண்டிஷனர்கள்* *பயன்படுத்துகிறோம்.**அதில் சரியான முறையை பின்பற்றுவோம்.*

*பெரும்பாலான மக்கள் 20-22 டிகிரிகளில் தங்கள் ஏசியை இயக்கும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் குளிர்ச்சியாக இருக்கும்போது, அவர்கள் போர்வையால் போர்த்திக் கொள்கின்றனர்.**இது இரட்டை இழப்புக்கு வழிவகுக்கிறது. எப்படி ???*

*நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்று உங்களுக்குத் தெரியுமா? 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை எளிதில் சமாளிக்க முடியும்.* * இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.*

*அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் போது, உடல் தும்மல், நடுக்கம், ஏற்படுகிறது.*

*நீங்கள் 19-20-21 டிகிரிகளில் ஏசியை இயக்கும்போது, அறை வெப்பநிலையானது சாதாரண உடல் வெப்பநிலையைவிட மிகக் குறைவாகவும், உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் பாதிக்கவும் உடலில் உள்ள சிறுநீர்ப்பை எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது. கீல்வாதம் போன்ற நீண்ட கால தீமைகள் பல ஏற்படுகின்றன.*

*பெரும்பாலான நேரங்களில் ஏசி இருக்கும் போது எந்த வியர்வையும் வெளிப்படுவது இல்லை. அதனால் உடலின் நச்சுகள் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதுடன், தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படலாம்.*

*இது போன்ற குறைந்த வெப்பநிலையில் நீங்கள் ஏசி இயக்கும்போது, அது 5 நட்சத்திர தரத்துடன் இருந்தாலும்கூட,* *தொடர்ந்து முழு சக்தியிலும் இயங்குகிறது, அதிகமான மின்சாரம் உறிஞ்சப்படுகிறது,*

*ஏசி இயக்க சிறந்த வழி என்ன ?? *
*25 டிகிரிக்கு வெப்பநிலை* *அமைக்கவும்.*
*25+ டிகிரிகளில் ஏசி இயக்கவும்.*
*மெதுவான வேகத்தில் விசிறியை வைப்பது சிறந்தது.*

*இதனால் குறைவான மின்சாரம் செலவாவதுடன், உங்கள் உடல் வெப்பநிலையும் கட்டுப்பாட்டில் இருக்கும். மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.*

*இதில் மற்றொரு சாதகமாக, AC குறைந்த மின்சாரம் சாப்பிடுவதால், மூளையின் மீது இரத்த அழுத்தம் குறையும் மற்றும் சேமிப்புடன் இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.* *எப்படி ??*

*26 டிகிரியில் ஏறத்தாழ 10 லட்சம் வீடுகள் ஏசி பயன்படுத்துவதன் மூலம் இரவில் ஏசி ஒன்றுக்கு சுமார் 5 யூனிட்களை நீங்கள் சேமிக்கலாம். எனில், நாளொன்றுக்கு 5 மில்லியன் யூனிட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.*

*பிராந்திய அளவில் இந்த சேமிப்பு நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான அலகுகள் இருக்கலாம்.*

*தயவு செய்து மேலே குறிப்பிட்டபடி, உங்கள் AC ஐ கீழே 25 டிகிரிகளுக்கு கீழ் இயக்க வேண்டாம். உங்கள் உடலையும் சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.*

பொது ஆர்வத்தில் முன்னனுப்பப்பட்டது
சக்தி மற்றும் சக்தி அமைச்சகம். இந்திய அரசாங்கம்.
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.8.19

அம்பானி அசத்தலாகச் சொன்ன அறிவுரை!!!!


அம்பானி அசத்தலாகச் சொன்ன அறிவுரை!!!!

பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..!
முகேஷ் அம்பானி கொடுத்த பட்டாசு பதில்!

பூஜா என்ற  இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து
கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று  இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான்
வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம்
செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.

இந்தப்  பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில்....

“உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை
தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு
செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன்.
காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும். பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும்.

பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான
மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை,
தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும்
முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு
மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே
தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக
வளருங்கள்.” என்றார்
------------------------------------
படித்து வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.8.19

கர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை!!!!!


கர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை!!!!!

முப்படைகளுக்கும் தனித்தனி தளபதி !

*தமிழ் நாட்டின் முதலமைச்சராயிருந்த  காமராஜர் ஒருமுறை டெல்லியில் பிரதமர் நேருவைச் சந்திக்கப் போகிறார்.

நேருவோ வழக்கமான உற்சாகத்தோடு காணப்படவில்லை ; மனத்தில்
ஏதோ சிந்தனை அலைப்பாயக் கவலையோடு இருந்தாராம்...

*பிரதமரைப் பார்த்துப் பல்வேறு செய்திகளைப் பேசுவதற்காக ஆர்வத்தோடு போன காமராஜர், " என்னடா இவர் இப்படி உட்கார்ந்திருக்கிறாரே.. இவரிடம் எப்படி தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளைத் கேட்டுப் பெறுவது...? என்னும்
தயக்கத்தோடு அவரே பிரதமரிடம் ஆரம்பித்திருக்கிறார் .

*"எப்பவுமே கலகலப்பா இருப்பிங்க...இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு..?

*நேரு விரக்தியோடு, " நம்ம இராணுவத் தளபதி திம்மையாவுக்கும், இராணுவ மந்திரி கிருஷ்ணமேனனுக்கும் எந்தநாளும் ஒரே தகராறா இருக்கு காமராஜ்!  திம்மையா கோப்புகளை மந்திரிக்கு அனுப்ப முடியாதுங்கிறார்.
கிருஷ்ணமேனனோ , திம்மையா தளபதியாய் இருக்கிறவரை தான் மந்திரியாக வேலை பார்க்க முடியாதுங்கிறார்.இராணுவ விஷயமா இருக்கிறதாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்த சிக்கல எப்படி தீர்க்கிறதுன்னே எனக்குப் புரியலே..." என்றாராம். 

* " இந்த ரெண்டு பேர்ல் யார வைச்சுக்கணும்...யாரைக் கழற்றி விட்டுவிடலாம் என்று நெனைக்கிறீங்க...? என்று கேட்டார் தலைவர்.

*"கிருஷ்ணமேனன் மூத்த அரசியல்வாதி; எனக்கு வாத்தியாராகவே இருந்தவர். அவரை நாம விட முடியாது. திம்மையாவைத்தான் ஏதாவது பண்ணியாகனும் ..." என்றார் நேரு.

*கொஞ்சம் கூடத் தயங்காமல், உடனே காமராஜர் சொன்னார். " நீங்க உடனே கேபினட் மீட்டிங்க போட்டு, திம்மையாவுகற்கும் கேபினட் அந்தஸ்து கொடுங்க அவர்கூட கெட்டிக்காரா அதிகாரிகள் 'டெபியூஸ்ட்' பண்ணி, பணத்தையும் கொடுத்து, ஆறு மாசத்துக்கு வெளிநாடுகள்ல சுத்திட்டு வரச் சொல்லுங்க. உலகம் பூரா புதுசா வந்திருக்கிற இராணுவ தளவாரங்கள் பத்தி அவங்க ' ஸ்டடி'பண்ண போறங்கன்னு கேபினட்ல தீர்மானம் போட்டு விட்டுடுங்க. அவங்க போய் ' ரவுண்ட்' அடிச்சுட்டு வரட்டும். அதுக்குள்ளே
நீங்க இங்கே பண்ண வேண்டிய மத்ததையெல்லாம் பண்ணிவிடலாம்!!!! ”

*வியப்போடு கேட்டுக் கொண்டிருந்த நேரு, " திம்மையா திரும்பி வந்ததும் அவரை எங்கே ' அக்காமடேட்' பண்றது.? என்று கேட்டார்...

*பளிச்சென்று அடித்தார் பெருந்தலைவர். " இப்பதிம்மையா இந்தியாவின் மொத்த இராணுவத்துக்கும் தளபதியா இருக்கார். இதுவே ரொம்ப டேஞ்ஜர். அவர் நினைச்சா ஒரே ராத்திரியிலே பிரைம் மினிஸ்டரையே '*ஹவுஸ்கஸ்டடியில வச்சுப்புடலாம். அவரு திரும்பி வர்துக்குள்ளே
மூணு படைகளுக்கும் மூணு தனித்தனி தளபதிய நியமிச்சுடுங்க. அவரு புல்லையும் புடுங்கிடலாம்; வந்து பார்த்துட்டு அவரால ஒண்ணும் முட்டும் முடியாது...

*ஏகத்துக்கு தளபதியா இருந்துநாட்டாமை பண்ணின ஒருத்தர்  ஒரே ஒரு படைக்குத் தளபதியா இருக்க சம்மதிக்கவும் மாட்டார் வெளியேறத்தான் நினைப்பாரு. அமைதியாய் ஓய்வு கொடுத்து வீட்லே ஒக்கார வச்சுப்பிடலாம் ! " என்று தலைவர்

பேசப்பேச நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து, மகிழ்ச்சி தாள முடியாமல் காமராஜரைக் கட்டித் தழுவிக்கொண்டு...

" Kamaraj... Fantastic Kamaraj...! What a burte common sense ! "

*தலைவர் காமராஜர் சொன்னபடியே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த திம்மையா தானே ஓய்வு பெற்று வெளியேறினார்.

*அரசியல் சதுரங்கத்தில் தனது அனுபவ அறிவை வைத்தே காய்களை நகர்த்திக் களம் கண்டவர் காமராஜர்.

*புத்தகத்தைக் படிப்பதைவிட பூமியைச் படித்தவர் அவர்.

சொன்னவர் :- திரு.S. செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்.

*நன்றியுடன் ஆதார நூல்; "ஆகட்டும் -- பார்க்கலாம் "- திரு.வீரபாண்டியன்.
பக்கம் எண் : 111&112.
===========================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.5.19

அறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்!!!!!

அறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்!!!!!

முயற்சி செய்யாமல் பிறரைக் குறை கூறுவதை விட, முயற்சி செய்து தோற்றாலும் அதை அமைதியாய் ஏற்று கொள்வதே மேல்.

எத்தனை முறை நீ ஏமாற்றப் பட்டாலும் ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக் கொள்ளாதீர்கள். அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார்கள் நேர்மைக்கு என்றுமே மரணமில்லை. கவலையை விடுங்கள்.

தனிமையில் வாழப் பழகி விட்டால் எவரையும் குற்றம் கூறவும்  முடியாது. நம்மளையும் யாரும் குறை கூற வழியும்  இருக்காது.

யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாகக் காரணம் அதிகமாக பேசியதன் விளைவாகத் தான் இருக்கும்.

எங்கே என்ன நடந்தாலும் அதில் பாதிக்கப் பட்டோரின் மன நிலையுடன் நம் குடும்பத்தில், உறவுகளில், நமக்கே நடந்தது போல் ஒப்பிட்டுப் பார்க்கும் இந்த மனசு தாங்க மனிதம் மனதில் இருப்பதற்கு சான்றாக இருக்கிறது.

உலகத்துலேயே நாம விரும்பாத ஒன்னு, நமக்கு இலவசமா கிடைக்குது'னா அது அட்வைஸ் ஒன்னு தான்.

நம்மை பிடிக்காத உறவினர்களிடம் பேசும் போது நாம் எப்படி வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினாலும், இறுதியில் அதை அப்படியே திசை திருப்பி விடுகிறார்கள்.

இன்றைய மனிதர்களிடம் படிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பண்பாடு குறைவாக இருக்கிறது. இது தான் இன்றைய நெருக்கடிகளுக்கு எல்லாம் மூல காரணம். படிப்பதோடு பண்பாட்டையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்க முயற்சி செய்வோம்.

கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.

கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமிருந்து எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், நிதானமாக பிரச்சினைகளை அணுகி வெற்றி காண்பவர்களே சிறந்த மனிதர்கள்.

சாதித்த பிறகு வருமே ஒரு அமைதி அது இந்த பிரபஞ்சத்தின் தொலை தூர ஓசை போன்றது.

கடன் வாங்கியவன் உறங்கலாம். கடன் கொடுத்தவன் உறங்குவதேயில்லை.

தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட, தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்.

இப்பெல்லாம் கடன் வாங்கினவனை விட, கடன் கொடுத்தவன் தான் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான்.

ஒரு தந்தை தான் நினைத்தை எல்லாம் தன் பிள்ளை சாதிக்க வேண்டும் என்பதற்கும், என் பிள்ளை நினைத்தை எல்லாம் சாதிக்க நான் துணை நிற்பேன் என்பதற்கும் அதிக வேறுபாடு இருக்கிறது.

ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர் யாரும் வேலை செய்யத் தயாராக இல்லை.

அந்தக் காலத்தில் குடும்பத்தில் முதியவர்களை பிள்ளைகள் கவனித்தனர். இப்போ தன் பிள்ளைகளை கவனிக்க முதியவர்களை வைத்திருக்கின்றனர்

பிறர் வெற்றியை தவறான வழியில் தட்டிப் பறிப்பது சாமர்த்தியம் அல்ல. சமூகத்தின் சீர்கேடு.

உனக்கெல்லாம் காலம் பதில் சொல்லும் என்று விட்டு விட்டு, அதை மறந்து போயிடனும், எப்ப தான் கெட்டு போவார் என நினைத்தால் நம் நிம்மதி போய் விடும்.

பிறர் குறைகளை கண்டு பிடிப்பதில் இருக்கும் வேகம், சுய குற்றங்களை கண்டு பிடிப்பதில் குறைவு.

எல்லாம் நன்மைக்கே : நல்லதே நடக்கும்
--------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.2.19

நமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)


நமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)

*உண்மை இதுதான்*

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது மடத்தனம் ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்

ஹா ஹா ஹா.......நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் .

*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், காிகாலனின் கல்லணை.  சிதம்பரம்  நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான்  இன்னும் இது
போன்ற எத்தனையோ கட்டிடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.=!

*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது

*Bachelor/ Master_of_Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

*Anomaly Scan/ Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

என்ன!  அதிசயமாக இருக்கிறதா...?

 இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள். எம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறிய பகிருங்கள்.

ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசகம்   மந்திரம்   போதும்

இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் பிளட்டெஸ்ட்டிங் கிடையாது  லேப்டெக்னிஸ்யன் (LABtechnicient ) படிப்பு கிடையாது.

ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும்  விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து  அதில்  பல அணுக்கள்  போராடி  அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா் உண்டாகிறது என்று.

ஆனால்  நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன் திருமூலா் பெருமான்  அற்புதமாக  தன் ஞானத்தினால்  லட்சமாக உருவெடுத்து  ஆயிரம் ஆகி நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா்என்றாா்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது  தமிழர் மரபும்
கலாச்சாரமும்  ஞானமும் - அதை நீங்கள் உணர வேண்டும!!!
-----------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.2.19

எதை முதலில் *நேசிக்க வேண்டும்*


எதை முதலில் *நேசிக்க வேண்டும்*

தன் மனைவியின் பிறந்தநாளுக்காக ஒரு கணவன் அவளுக்கு ஒரு காரைப் பரிசளித்தான்.

முதலில் காரின் சாவியையும், பின்னர், அவளது ஓட்டுனர் உரிமம் உட்பட, தேவையான ஆவணங்கள் அடங்கிய ஒரு சிறு பையையும் அவளிடம் கொடுத்து விட்டு, அவளை ஆரத் தழுவினான்.

பின் அவளிடம், குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், அவள் விரும்பினால் நீண்ட தூரம் காரை ஓட்டிச் சென்று வரலாம் என்றும் கூறினான்.

அவள் ஒரு முத்தத்தால் அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டுத் தன் புதிய காரை ஓட்டிச் சென்றாள்.

ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு உள்ளாகவே, சாலையை இரண்டாக வகுக்கும் நடுப் பகுதியில் காரை மோதி விட்டாள்.

அவளுக்கு காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும் கார் ஒடுக்காகி விட்டது. குற்ற உணர்வு அவளைப் பற்றிக் கொண்டது.

அவரிடம் என்ன சொல்வது? அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார்? போன்ற கவலைகள் அவளை மொய்த்தன.

விபத்துப் பகுதிக்குக் காவல்துறை விரைந்து வந்து சேர்ந்தது. காவலர், நான் உங்கள் ஓட்டுனர் உரிமத்தைப் பார்க்கலாமா? என்று கேட்டார்.

நடுங்கும் கைகளுடன் தன் கணவர் கொடுத்த சிறு பையை அவள் திறந்தாள்.

கண்களில் கண்ணீர் தாரைத்தாரையாக ஓடிக் கொண்டிருக்க, ஓட்டுனர் உரிமத்தை அவள் எடுத்தாள்.

அதன் மீது அவளது கணவரின் கையெழுத்தில் ஒரு துண்டுக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.

அதில்,

என் அன்பே!
ஒருவேளை நீ ஏதாவது விபத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால்,
இதை நினைவில் வைத்துக் கொள்.
நான் நேசிப்பது உன்னைத் தான்,
காரை அல்ல.
அன்புடன்! என்று எழுதப்பட்டிருந்தது.

பொருட்களை நேசிக்க வேண்டும்.மக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றில்லாமல், மக்களை நேசிக்க வேண்டும்.
பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்து வைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்.
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.1.19

வாருங்கள், தமிழ் தேன் பருகுவோம்!!!!


வாருங்கள், தமிழ் தேன் பருகுவோம்!!!!

*தமிழ் தேன் பருகலாமா*

ஒரு புலவர் காளமேக புலவரிடம் கேட்டார்.

“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” என்றார்

“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேக புலவர்

”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். *செருப்பில்* தொடங்கி *விளக்குமாறில்* முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.

என்ன கொடுமை?

என் இறைவனை,
முத்தமிழ்முதல்வனை,
செந்தமிழ் தெய்வத்தை,
வெற்றி வேல் அழகனை,
கருணைக் கடவுளை,
கண்கவர் காளையை,
முருகனை
பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா?
தகுமா? முறையா? என மனம் கேட்க

அதை தகும் என்றும்  ,  முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேக புலவர்

...இப்படி .....

 *செருப்புக்கு வீரர்களை*
*சென்றுழக்கும் வேலன்*
*பொருப்புக்கு நாயகனை*
*புல்ல- மருப்புக்கு*
*தண்தேன் பொழிந்த*
*திரு தாமரைமேல் வீற்றிருக்கும்*
*வண்டே விளக்குமாறே*

செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம்.
குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே,
அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.விளக்குமாறு என்பதற்கு விளக்கம் ,  சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.....?

இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.....!
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.1.19

சிகரெட் பற்றிய சுஜாதாவின் சுவாரஸ்யமான கட்டுரை!!!!


சிகரெட் பற்றிய சுஜாதாவின் சுவாரஸ்யமான கட்டுரை!!!!

சுஜாதா அவர்களின் புகை பிடிக்கும் பழக்கம் - ஒரு சிகரெட் எழுதும் கட்டுரை (pressbooks என்ற வலைமனையில் வந்த ஒரு சுவாரஸ்யமான பதிவு) .

சுஜாதா ஒரு ஸ்மோக்கர் என்பதும், அந்தப் பழக்கத்தை உதறியும், வருடக் கணக்கில் நிறைய புகைத்ததின் காரணமாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு (வேறு பல உபாதைகள் இருந்திருந்தாலும்) அவர்
நம்மைவிட்டு சீக்கிரமே பிரிந்த சோகமும் நிகழ்ந்தது....இதை ஒரு சிகரெட் (தன்மை ஒருமையில்) கூறினால் எப்படி இருக்கும் என்ற நோக்கில் அமைந்தது இந்தக் கட்டுரை....

சுஜாதாவின் காதல்கள்:

ப்ளேயர்ஸ், கோல்டு ப்ளேக், வில்ஸ் ஃபில்டர் என என் மூன்று வடிவங்களை அடுத்தடுத்து காதல் செய்த  எழுத்தாளர் சுஜாதாஅவர்கள் என்னை பிரேக்-அப், அதாங்க கழட்டி விட்டதன் இரகசியம் பற்றி என்ன  கூறி இருக்கிறார் என பாருங்கள்.

“பற்ற வைப்பதற்கு முன் ஒரு நிமிஷம்..!” என்ற தலைப்போடு, கற்றதும் பெற்றதும் பகுதியில் 29.12.2002 ஆனந்தவிகடனில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று! நீங்கள் என்னை விட்டு விட உங்களுக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

=========================

இனி சுஜாதா (அவருடைய வார்த்தைகளில்)  .....

“மூச்சு ஆராய்ச்சி நிறுவனம் (ரெஸ்பிரேட்டரி ரிசர்ச்ஃபவுண்டேஷன்) சென்னை வடகிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், டாக்டர் நரசிம்மன் அவர்கள்
கிரானிக்அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் (C.O.P.D- பிடிவாதமான சுவாசத்தடை வியாதி) மனிதனைக் கொல்வதில், மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்று சொன்னார். இதய நோய், புற்றுநோய் போன்றவை மெள்ள மெள்ள குறைந்து வரும்போது ஸி.ஓ.பி.டி முதலிடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறதாம்.

இந்தக் கூட்டத்தில் புகைப்பதை கைவிடுவது எப்படி என்கிற தலைப்பில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். இதற்கு நான் தகுதியான ஆள்தான். 1986 வரை ஒரு நாளைக்கு பாக்கெட் சிகரெட்
– ப்ளேயர்ஸ், பிறகு கோல்டு ப்ளேக், இறுதியாக வில்ஸ் ஃபில்டர் பிடித்தவன். அதை ஒரே நாளில் கைவிட்டவன்.

சிகரெட் பழக்கம் தற்செயலாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக வீட்டில் கட்டுப்பாடாக வளர்ந்த இளைஞர்கள் அதை ஒருவிதமான defiance (எதிர்ப்பு காட்டும் மனப்ப்பான்மை) ஆகப் பழகிக் கொள்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குடுமி வைத்துக்கொண்டு
பிரபந்தம் சொல்லிக்கொண்டிருந்த நண்பன் வேலை கிடைத்து, டெல்லி வந்து குடுமியை நறுக்கிய கையோடு மகாவிஷ்ணு
சங்கு சக்கரம் போல் கையில் ‘பனாமா’ பற்றவைத்துக் கொண்டான். ரிட்டயட் ஆனப்புறம்தான் நிறுத்தினான்.

இக்கால இளைஞர்கள் பெண் சிநேகிதிகள் முன்னால் ஸ்டைலாக சிகரெட் பற்றவைத்து ஒரு இழுத்து

இழுத்து விட்டுப் பேசிக் கொண்டே வார்த்தை வார்த்தையாக புகையை வெளிவிடுவது ரொம்ப ஸ்டைலாக இருக்கும். சில காதலிகளும் இதைக் கல்யாணம் வரை விரும்புவார்கள். பிள்ளை பிறந்ததும் அதன் தலைமேல் சிகரெட் புகை வாசனை வரும்போது பழக்கத்தை கைவிட்டே ஆகவேண்டும். இல்லையேல் சுளுக்கு.

என் சிகரெட் பழக்கம்… எம்.ஐ.டி. (M.I.T) ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மெஸ்ஸில் டின்னர் கொடுக்கும்
போது ஒரு 555 சிகரெட் தருவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை நாலணா. அதை நண்பனிடம் கொடுத்து அவன் புகை வளையம் விடுவதை வேடிக்கை பார்ப்பேன். ஒரு நாள் நாமே குடித்துப்
பார்க்கலாமே என்று தோன்றியதில் பழக்கம் ‘பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டது.

சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சில சமயம் சிகரெட் பிடிப்பதற்காகவே எதையாவது சாப்பிடுவேன். கொல்லைப்புறம்
போவதற்கு சிகரெட் பிடித்தாக வேண்டும்.

சாப்பிட்டவுடன் கட்டாயம் பிடிப்பேன். சிந்தனா சக்தி வேண்டும் என்று வெத்து காரணம் சொல்லி பற்றவைத்து விரலிடுக்கில் வைத்து சாம்பலை சொடுக்குவேன். இதனால் பல சுவைகளை, வாசனைகளை இழந்தேன். இவ்வாறு அது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வபோது ‘ச்சே’
என்று தோன்றி நிறுத்திவிடத் தீர்மானிப்பேன். ஒவ்வொரு புதுவருஷமும் தவறாத வைராக்கியமாக சிகரெட்டை நிறுத்துவேன். அது சில சமயம் பிப்ரவரி வரி நீடிக்கும். சில சமயம் ஜனவரி 2ம் தேதி வரை. பெங்களூரில் ஒரு முறை செக்கப்புக்கு போனபோது டாக்டர் பரமேஸ்வரன் “ரங்கராஜன், நீ சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும்” என்றார்.

“ஏன்?’ என்றேன். ‘உன் ஹார்ட் சரியில்லை” என்றார்.

“எப்போதிலிருந்து விட வேண்டும்? என்று கேட்டதற்கு ‘நேற்றிலிருந்து” என்றார். “கைவிடாவிட்டால் என்ன ஆகும்?” என்றேன். “ஹார்ட் அட்டாக்… லங்கேன்சர்.. யூ ச்சூஸ்.. நீதான் எத்தனையோ படிக்கிறாயே… உனக்கு சொல்ல வேண்டுமா?”

இந்த முறை பயம் வந்து விட்டது. ஞாபகம் வைத்துக் கொள்வதற்குத் தோதாக ஆகஸ்ட் பதினைந்தைத் தேர்ந்தெடுத்து பெல்காலனி தெருநாய் ஜிம்மி உள்பட அனைத்து நண்பர்களிடமும், “நான் சிகரெட்டை  நிறுத்திவிட்டேன்” என்று அறிவித்தேன். இது முக்கியம். யாராவது நான் புகைபிடிப்பதை பார்த்தால் உடனே உலகத்துக்கும் மனைவி மக்களுக்கும் தகவல் சொல்லிவிடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினேன்.

சிகரெட் பழக்கம் என்பது பைனரி இதைத் தெளிவாக உணரவேண்டும். ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை. – சிகரெட் பிடிப்பவர், பிடிக்காதவர், அவ்வளவுதான். குறைவாக பிடிப்பவர்… எப்போதாவது பிடிப்பவர்… இதெல்லாம் ஏமாற்று வேலை. கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிட வேண்டும்.

இருபது சிகரெட்டிலிருந்து பத்து, பத்திலிருந்து 8 என்று குறைப்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது. முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம். சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும்… இந்த இம்சை தேவையா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்க வேண்டும். சிகரெட்டுக்கு பதிலாக பாக்கு, பான்பராக்என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது.

வேறு ஏதாவது வேலையில் கவனம் செலுத்துவது உத்தமமானது. நீங்கள் விட்டுவைத்த புல்புல்தாரா வாசிப்பது, இயற்கை காட்சிகளை வரைவது, கவிதை எழுதுவது போன்ற பயனுள்ள பொழுது போக்குகளைத் தொடரலாம்.

உதடுகளில் லேசாக நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் குளிர்ந்த தண்ணீர் குடித்துவிட்டு "யார் தெச்ச சட்டை… எங்க தாத்தா தெச்ச சட்டை… தாத்தா தெச்சசட்டை சட்டைப்பைல பாத்தா ரெண்டு முட்டை” என்று தொடர்ந்து சொல்ல வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் புகார் செய்தால், “ஒரு வாரம் அப்படித்தான் இருக்கும்” என்று அவர்கள் மேல் பாயலாம். யாரையாவது அடிக்க வேண்டும் போல இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள்… கூடவே  உதைப்பதற்கு ஒரு கால்பந்தும், சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக் கொள்ளலாம். (கண்
ஜாக்கிரதை) ஒரு வாரமானதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத் துவங்கலாம். தமிழ்ப்படங்கள் போல வெற்றிகரமான பத்தாவது நாள்… இன்று பதினைந்தாவது நாள்..சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம்.. இப்படி, மெள்ளமெள்ள நண்பர்களிடம், மனைவியிடம் பீற்றிக் கொள்ளத் துவங்கலாம். போஸ்டர் கூட ஒட்டலாம். ஆனால், இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும் மிதப்புக்காகப் பையில் குடிக்காமல் சிகரெட்வைத்துக் கொள்வதும் விஷப் பரீட்சைகள்.

பழக்கத்தை விட்ட நாற்பத்தெட்டாவது நாள் முதல் மைல்கல் தாண்டி விட்டீர்கள். ஒரு சிகரெட்டை எடுத்து அதைப் பற்ற வைக்காமல் மூக்கில் ஒட்டிப்பார்த்து விட்டு ‘ச்சீ நாயே’ என்று சொல்ல முடிந்து,

அழுகை வராவிட்டால் பரீட்சையில் பாஸ். இனியெல்லாம் சுகமே.

சிகரெட் பழக்கம் நம்முடன் அஞ்சு வருஷம் தேங்குகிறது என்று டைம் பத்திரிக்கையில் படித்தேன்.

அதாவது சிகரெட்டை நிறுத்துன அஞ்சு வருஷத்துக்குள் ஒரு சிகரெட் பிடித்தாலும் மறுதினமே பழைய ஞாபகம் உசுப்பப்பட்டு பத்தோ, இருபதோ வழக்கமான கோட்டாவுக்கு போய்விடுவீர்கள். அஞ்சு வருஷம் தாண்டிவிட்டால் பழக்கம் போய்விடுகிறது.”

நன்றி: ஆனந்த விகடன்

மனுஷன் பெரிய ஆளுதான். எல்லாவற்றையும் சரியாக ஆராய்ச்சி செய்து கன கச்சிதமாய் எழுதியிருக்கிறார். அவர் சொன்னதையெல்லாம் இன்னும் விரிவாகச் சொல்லி உங்களுக்கு
உதவப்போகிறேன், அவ்வளவுதான்! என்னையும், தன்னையும் உணர்ந்த மனிதர்!

--இப்படிக்கு சிகரெட் (உங்களுக்கு பிடித்த ப்ராண்ட் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்)
------------------------------------------------------------------
படித்ததில் இரசித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.11.18

வாட்ஸ் ஆப்பில் அழகிய தமிழ்


வாட்ஸ் ஆப்பில் அழகிய தமிழ்

கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம்

தமிழ் எழுதத் தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்

தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை

ஆச்சரியம், அருமை. எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகள்.

நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகிறது

வழி

play Store செல்லவும்
Gboard app என டைப் செய்து download செய்யவும்
உடனடியாக வாட்ஸ் ஆப் போகவும்
வழக்கம்போல இருக்கும் கீபோர்டு சற்றே வித்தியாசமாக தெரியும்
தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும்

கீபோர்ட் மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும் அதில் பேசக்கூடாது
அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே கருப்பு கலரில் சின்ன மைக் இருக்கும்
ஜஸ்ட் அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம்
speak now என வரும்

நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும்

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்

தூய தமிழில் பேச வேண்டும்

செய்தி வாசிப்பாளர்களை போல தெளிவாக பேசினால் வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்

முயற்சி செய்து பாருங்கள்

குறிப்பு

ஆன்ட்ராய்டு மொபைலில் மட்டுமே வேலை செய்யும் என நினைக்கிறேன்

Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும் அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும்

நீண்ட பதிவு போல இருக்கும்  ஆனால் செய்து பார்த்தால் இரண்டே நிமிடம்தான்

இனி ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்புவதைத் தவிருங்கள்

ஏற்கனவே இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் இவ்வளவு எழுத்துப்பிழை இல்லாமல் நான் இதுவரை கண்டதில்லை

நன்றி
----------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.11.18

சுக்லாம் பரதரம் ஆச்சா?'


சுக்லாம் பரதரம் ஆச்சா?' 

மகா பெரியவரின் நகைச்சுவை

காஞ்சிமகாப் பெரியவர் தம் சீடர் ஒருவரைப்  பார்த்து, ''சந்தியா வந்தனம் ஆச்சா? சுக்லாம் பரதரம் ஆச்சா?'' என்று கேட்டார்.

சீடரும், 'ஆச்சு' என்று தலையசைத்தார்.

அதற்கு  மகா பெரியவர், 'சுக்லாம் பரதரம் சொன்னாயான்னு நான் கேட்கலை... ஆச்சான்னு தான் கேட்டேன்” என்றார்.

சீடர் ஒன்றும் புரியாமல் குழம்பினார்.

மகா பெரியவர் சீடரிடம், “சுக்லாம் பரதரம் சொல்லு பார்ப்போம்” என்றார்.

“சுக்லாம் பரதரம் விஷ்ணும்  சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே” என்று சீடர் சொன்னார்.

மகா பெரியவர், “இதற்கு அர்த்தம்  தெரியுமோ?” என்று கேட்டார்.

“தெரியும்” என்று பதிலளித்த சீடர், ''வெள்ளை உள்ளம், யானையின் கருப்பு நிறம், நான்கு கரங்கள், பிரகாசமான முகம், எல்லாரையும் நினைக்கச் செய்யும் உருவம் ஆகியவற்றைக் கொண்ட விநாயகரை நினைத்தால் எல்லா தடைகளும் கவலைகளும்
நீங்கும்,'' என்றார்.

“இதற்கு வேறொரு அர்த்தமும் இருக்கு... அது உனக்குத் தெரியுமோ? என்று சொல்லி  சிரித்தார்.

“சுக்லம்' என்றால் 'வெள்ளை'... அதாவது பால்;

'விஷ்ணும்' என்றால் 'கருப்பு' அதாவது 'டிக்காஷன்';

'சசிவர்ணம்' என்றால்  கருப்பும், வெள்ளையும் கலந்தது...

அதாவது காபி;

'சதுர்புஜம்' என்றால் நான்கு கை. அதாவது மாமியோட இரு கைகளால் காபியைக்  கொடுக்க, மாமாவின் இரு கைகள் அதைப்
பெற்றுக் கொள்ளும்.

'த்யாயேத்' என்றால் 'நினைத்தல்'. அதாவது இப்படி காபி கொடுப்பதை மனதில் நினைப்பது.

பிரசன்ன வதனம்' என்றால் 'மலர்ந்த முகம்' அதாவது காபியை மனதில் நினைத்ததும், மாமாவின்  முகம் மலர்ந்து விடும்.

'சர்வ விக்னோப சாந்தயே' என்றால் 'எல்லா கவலையும் நீங்குதல்'. அதாவது காபி குடித்தால் கவலை நீங்கி  மனம் சாந்தமாகி விடும்.

'சுக்லாம் பரதரம் ஆச்சா?' என்பதில் 'காபி குடிச்சாச்சா' என்பதும் அடங்கியிருக்கிறது என்று தெரிந்து கொண்ட சீடர்கள் தங்களை
மறந்து சிரித்தனர்.
-----------------------------------------------------
படித்து ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.11.18

பிறவி மேதையைப் பற்றி சில செய்திகள்!!!


பிறவி மேதையைப் பற்றி சில செய்திகள்!!!

கணித மேதை சகுந்தலா தேவி 👀 பிறந்தநாள்..! 💐

அந்தக் குட்டிப் பெண்ணின் பெயர் தேவி. அவள் அப்பா வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவரோ, சர்க்கஸ் பக்கம் போனார். எண்ணற்ற வித்தைகள், பலவித மேஜிக்குகள் என அசத்தினார். அப்பாவைப் பார்த்து அந்தச் சுட்டிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

''அப்பா, எனக்கும் ஏதாச்சும் சொல்லித்தா!' என்றாள். அட்டைகளில் மேஜிக் சொல்லித் தந்தார் அப்பா. கொஞ்ச நேரம்தான், எல்லா அட்டைகளையும் மனப்பாடமாக ஒப்பித்தாள் தேவி. அப்போது அவள் வயது 3.

'இனி சர்க்கஸ் வேண்டாம்’ என முடிவு செய்த அப்பா, மகளைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவளின் அதிவேகக் கணக்குப் போடும் ஆற்றலைக் காட்டினார். ''சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு செக் பண்ணிடலாம்'' எனப் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தன.

வீட்டின் வறுமையைப் போக்க, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்து, பின் அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு. இப்போது தேவிக்கு வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா?

916748676920039158098660927585380162483106680144308622407126516427934657040867096593279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள்.

கணினி 13,000 கட்டளைகளுக்குப் பிறகு, ஒரு நிமிடத்தில் பதிலைச் சொல்லத் தயாரானபோது, 546372891 என 10 நொடிகள் முன்னமே தேவி சொல்லி விட்டார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் நீண்ட கரவொலி எழுப்பினர்.

லண்டன் மாநகரில் 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொன்னார்கள். 28 நொடிகளில் விடையைச் சொல்லி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். அவர்தான் சகுந்தலா தேவி.

தான் பள்ளிக்கல்வி பெறாவிட்டாலும் சுட்டிகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் பல நூல்களை எழுதினார். ''கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், விளையாட்டு என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித் தர வேண்டும். கணிதத்தைக் கதை போலச் சொல்லித் தர வேண்டும்'' என்றார் சகுந்தலா தேவி. இன்று (05/11/18) அவரது பிறந்தநாள்..!

உலகின் அதிவேக மனிதக் கணினியை அன்போடு நினைவுகூர்வோம்.🙏🏼
-------------------------------------------------------------------------
படித்து வியந்தது!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.11.18

கஜா புயலுக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது?


கஜா புயலுக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது?

புயலுக்கு பெயர் வைத்தவர்கள் யார்?

புயல்களும் அதன் பெயர்களும் !

 புயல் என்றவுடன் அனைவர் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே கேள்வி அந்த புயலின் பெயர் என்ன? என்பது தான், ஏனென்றால்
புயலின் தாக்கமும், வீரியமும் அந்த அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன. புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க
தொடங்கினார்கள்? எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது? இதுவரை
தமிழகத்தை தாக்கிய புயல்கள் எத்தனை? இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் பார்க்கலாம்.

*புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்?*

வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு
செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்.

மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்தெந்த புயல்கள் எந்த
திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

*யார் முதலில் பெயர் வைத்தது?*

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும்
வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.

ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

 பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக
வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.

*எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்?*

வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தில் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.

 இதில் ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்களை வழங்கியுள்ளது. இதில் இந்திய வழங்கியுள்ள 8 பெயர்களான அக்னி, ஆகாஷ், பிஜ்லி,
ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவை ஆகும்.

*இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !*

✅ 2005 டிசம்பர் - பானூஸ்
✅ 2008 நவம்பர் - நிஷா
✅ 2010 நவம்பர் - ஜல்
✅ 2011 டிசம்பர் - தானே
✅ 2012 அக்டோபர் - நீலம்
✅ 2013 டிசம்பர் - மடி புயல்
✅ 2015 டிசம்பர் - நாடா
✅ 2016 டிசம்பர் - வர்தா
✅ 2017 நவம்பர் - ஒகி
✅ 2018 நவம்பர் - கஜா

*கஜா புயல் :-*

தமிழகத்தை சமீபத்தில் புரட்டிப் போட்ட புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை இந்த புயலுக்கு பெயர்
வைத்துள்ளது.
----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.11.18

கவியரசரின் பாடல்கள் கற்றுத்தந்தவை!!!!


கவியரசரின் பாடல்கள் கற்றுத்தந்தவை!!!!

திரைப் பாடல்களில் வாழ்க்கைக் கலையைக் கற்றுத் தந்த கவியரசர்....

காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலினின் மேலே*

எவ்வளவு நாகரிகமான , நாசுக்கான , மென்மையான வரிகள் ...

இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா இந்த காலத்தில் என்று மலைக்க வைக்கும் வார்த்தைகள் ...

அந்த வரிகள் மென்மையாக இருந்தும் பார்க்கும் பார்வையில் ஒருவர் கொச்சை படுத்தி இருக்கலாம் ...

காம கணைகளை கண்கள் மூலம்  அள்ளி வீசி இருக்கலாம் ...

ஆனால் நம்மவர் கண்ணதாசன் வரிகளுக்கு அமரத்துவம் வாங்கி கொடுத்தார் ...

அதை சொல்லும் விதம் , அதில் அடங்கியுள்ள பெருமை , ஆண்மை என்ற கர்வம் அதே சமயத்தில் பெண்மையை மதிக்கும் பார்வை

, அவள் அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாள் என்று கண்களில் தேக்கும் ஏக்கம் எல்லாமே அரை நொடியில் ...

*அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே*

நானும் உனக்கு  சற்றும் இளைத்தவள் அல்ல ...

நீயோ எனக்கு உன் பரிசை பரந்து விரிந்து இருக்கும் இந்த கட்டிலின் மேலே தந்தாய் ...

அதற்கு நான் உயிர் கொடுத்தேன் உடல் கொடுத்தேன் , பேசும் சக்தி கொடுத்தேன் , பரிசு ஒரு சின்ன தொட்டிலுக்குள் அடங்கி
விட்டது என்று எண்ணாதே ...

அந்த பரிசுக்கு விலை ஏதும் இல்லை என்கிறாள் துணைவி ...

நாணம் ஒரு புறம் பெருமை ஒரு புறம் அதே உணர்ச்சிகளில் அந்த பரிசை பார்க்கிறாள் ...

அந்த பரிசும் அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்கிறது ...

பெண்மையை மதிக்கும் ஒருவனுக்கும் ஆண்மையை ஆதரிக்கும் ஒரு பெண்ணுக்கும் பரிசாக வந்ததை எண்ணி பெருமை படுகிறது

முழு பாடலை அலச வேண்டிய அவசியம் இல்லை ... இந்த இரண்டு வரிகள் போதும் ...

எங்கிருந்தோ என் நினைவுகளை தொந்தரவு செய்ததைப்போல் சில பாடல் வரிகள் காற்றில் இருக்கும் அசுத்தத்துடன் பறந்து
வந்தன ...

கல்யாணம் தான் பண்ணிக்கிட்டு     .... பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு .

கைகள் என்னை கேட்காமல் ஓடிச்சென்று என் இரு காதுகளையும் பொத்திக்கொண்டன ...

கண்கள்,  தான் சேர்த்து வைத்த உப்பு நீரை கீழே கொட்டிக்கொண்டிருந்தன   ...

வாய் மட்டும் ... அந்த நாளும் வந்திடாதா என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன ....😰😰
----------------------------------------------------------------------
2
அந்த காலத்திலேயே கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசனத்தோடு internet and online shopping பத்தி ஒரு பாட்டு எழுதி இருக்கார்.

தேடினேன் வந்தது - Google search

நாடினேன் தந்தது - Amazon / online shops

வாசலில் நின்றது - UBER / SWIGGY / ZOMOTO

வாழ வா என்றது - Matrimony dot com🌹
--------------------------------------------------------------------
படித்து பரவசப்பட்டது!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.10.18

என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்!


என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்!

எதுவும் நடக்கும் - படித்ததில் சுவைத்த சிந்தனைக் கதை

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரையை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது வளையை விட்டு மெள்ள
தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் எஜமானனும், எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும்!’ என்று ஆவலோடு பார்த்தது அந்த எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது ‘பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார் எனக்கு பயமாக இருக்கிறது’ என்று.

அதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது ‘உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம் தான்.
நல்லவேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை’ என்று.

‘உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது வான்கோழியும் அதே பதிலைச்
சொல்லியதோடு ‘நான் எலிப்பொறியை யெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்’ என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது.

ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அது மட்டும் அல்ல ஆடு, அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை ‘எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?’ என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.

எலி மாட்டிக்கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள் ‘ஆ’ எனக்
கத்தினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது எஜமானியம்மாளை உடனே
ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு
ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி ‘பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு ‘சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது’ என்று
யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை.

உடனுக்குடன் கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம்
தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.

அவர்களுக்குச் சமைத்துப்போட வான் கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார் பண்ணையார்.
இப்போது எலி தப்பித்து விட்டது.

நீதி ::--

அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் ‘என்ன’ என்றாவது கேளுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன
பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்

என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்!
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!