
நினைப்பது எல்லாம் கிடைக்குமா? கிடைக்காது. அது முகேஷ் அம்பானியாக
இருந்தலும் சரி அல்லது பில்கேட்ஸாக இருந்தலும் சரி, நினைத்தது அனைத்தும்
கிடைக்காது அல்லது நடக்காது
சரி கொஞ்சமாவது கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
உங்கள் பணிகளைச் செவ்வனே செய்யுங்கள் போதும். அதாவது கல்லை
எறியுங்கள், மாங்காய் விழுந்தாலும் சரி, விழுகாவிட்டலும் சரி. முயற்சியை
விடாதீர்கள். பத்து கல்லிற்கு ஒரு மாங்காயாவது விழுகாதா?
அவனுக்கு மட்டும் மூன்று கல்லிற்கு மூன்று மாங்காய் கிடைக்கிறது. எனக்கு
ஏன் கிடைக்கவில்லை? என்று கேட்காதீர்கள்
அவரவர் ஜாதகப் பலன் அது!
இதாவது கிடைத்ததே என்று நினையுங்கள். திருப்திப்படுங்கள். மகிழ்ச்சிக்கான
மந்திரம் அதுதான்!
--------------------------------------------------------------------------------
Rahu / Mercury - The Rahu / Mercury association shows an understanding
of skills and information are being developed. This native will feel convinced
that if they study, get as many facts as possible and develop their skills
accordingly, there will be an ultimate answer. This leads to more and more
frustration. as there is always another fact or skill to learn. What is being
developed is the realization that the best use for our mind is as a tool that
doubts all mental concepts as being ultimate. Rahu's exhaustion of skills
and information leads the mind to Jnana Yoga, recognizing each incorrect
attachment to the thinking process.
This allows us to separate truth from fiction.
புதனும் ராகுவும் ஜோடி சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் பலன்கள்:
1ல்
+++++ஜாதகன் சுறுசுறுப்பானவன். கெட்டிக்காரன். வெட்டிக் கொண்டு வா
என்றால் வெட்டி எடுத்து piece போட்டு pack செய்து கட்டிக் கொண்டு வந்து
விடுவான்.
விட்டால் வெட்டியதைக் காச்சாக்கிக்கொண்டும் வந்துவிடுவான். புதுப்புது
விஷயங்களில், செயல்களில் ஆர்வம் உடையவனாக இருப்பான்
-------------------------------------------------------------------------------
2ல்
ஜாதகன் எதையும் முடிக்க முடியாது. விட்டு, விட்டுத் தொடர வேண்டும்.
உதாரணத்திற்குப் புதிதாக வீடு கட்டுகிறான் என்றால் எட்டு மாதங்களில்
முடிக்க வேண்டிய வேலை. நான்கு ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கும்.
குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. கணவன் மனைவி இருவரில்
ஒருவருக்குத் துரோகம் அல்லது வஞ்சகத்தால் பெரும் துன்பம் ஏற்படும்
-------------------------------------------------------------------------------
3ல்
தொழில் அல்லது வேலை காரணமாக ஜாதகன் பெட்டி படுக்கையோடு
ஊர் ஊராக அலைய நேரிடும். சமயங்களில் அவனும், அவன் குடும்பத்தினரும்
ஒரே ஊரில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இது அந்த இருவருடைய
தசா புத்திகளில் நடக்கும்.
ஜாதகனுக்குப் பெண்களால் தொல்லை ஏற்படும். பெண்கள் என்ன அவர்களாகவா
வந்து இவனைத் தொல்லை செய்யப்போகிறார்கள்? இல்லை. ஜாதகன் பெண்கள்
விஷயத்தில் பல தவறுகளைச் செய்வான். செய்துவிட்டு முழிப்பான். விழிகள்
பிதுங்கும்!
----------------------------------------------------------------------------------
4ல்
+++++ஜாதகன் உயரிய கல்வியாளனாகத் திகழ்வான். அத்துறையில் பெரும் புகழ்
பெறுவான் .தொழில் வீடான பத்தாம் வீடும் நன்றாக இருந்தால், ஜாதகன்
வணிகம் செய்து, பெரும்பொருள் ஈட்டுவான். செல்வம் சேரும்.
---------------------------------------------------------------------------------
5ல்
இந்த அமைப்பு நல்லதல்ல. ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு தாமதமாகும்.
சிலருக்குக் குழந்தைகள் இல்லாமலும் போகும்.
ஜாதகன் நுண்ணறிவு உள்ளவனாகத் திகழ்வான்.
---------------------------------------------------------------------------------
6ல்
ஜாதகனுக்கு விநோதமான நோய்கள் உண்டாகும். தோல் நோய்கள், மற்றும்
நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------
7ல்
ஜாதகன் அதீதக் காம இச்சை உடையவனாக இருப்பான். காம இச்சை
இருக்கலாம். அதீத இச்சைகள் இருந்தால் என்ன ஆகும்? அதற்கு உரிய
விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
மனைவி வழி உறவுகளுடன் மோதல் உண்டாகும். இந்த அமைப்புள்ள
ஜாதகர் கூட்டாக எந்த வேலையைச் செய்தாலும், கடைசியில் அது
விவகாரத்தில்தான் முடியும். வம்பு, வழக்கில்தான் முடியும்.
எச்சரிக்கையாக இருப்பது நல்லது!
------------------------------------------------------------------------------
8ல்
ஜாதகன் பல துரோகங்களையும், வஞ்சகங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.
சிலருக்கு 50 வயதிற்குள் கண்டம் ஏற்படலாம். இறைவழிபாடு அவசியம்!
-----------------------------------------------------------------------------
9ல்
++++++ஜாதகர் சகலகலா வல்லவர். சகல வித்தைகளிலும் நிபுணராக இருப்பார்.
சமநோக்கு உடையவர்.
சிலர் ஆன்மீகம் இறைவழிபாடு என்று புது வழியில் இறங்கித் தீவிர
பக்திமான் ஆகிவிடுவார்கள்.
-----------------------------------------------------------------------------
10ல்
+++++++++ஜாதகர் கலைத்திறமை மிக்கவர். பயிலும் கலையில் முதன்மை
பெற்றுத் திகழ்வார். திரப்படத்துறையில் இருப்பவர்களுக்கு, இந்த அமைப்பு
இருந்தால், சினிமாவின் எந்தப் பிரிவில் இருந்தாலும், அந்தப் பிரிவில்
உச்ச நிலைக்குச் சென்று, பணம், புகழ், மதிப்பு என்று அனைத்தையும்
பெறுவார்கள்! காதாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று புகழ்பெற
இந்த அமைப்பு மிக, மிக அவசியம்.
-----------------------------------------------------------------------------
11ல்
+++++ ஜாதகர் சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார். செல்வந்தராக
இருப்பார். அல்லது செல்வந்தர் நிலைக்கு உயர்வார். பலரும் விரும்பும்
வண்ணம் அவரது வாழ்க்கை சிறந்து விளங்கும்.
----------------------------------------------------------------------------
12ல்
ஜாத்கர் வேலைக்கு மட்டுமே செல்ல வேண்டும். சொந்தத் தொழில் செய்தால்
தெருவிற்கு வர வேண்டியதாகிவிடும். பல வழிகளிலும் விரையம் ஏற்படும்.
விரையம் என்றால் என்ன வென்று தெரியும் அல்லவா? Losses!
எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்!
----------------------------------------------------------------------------
Rahu / Sun - The Rahu / Sun association will show a native who projects
the power of the Sun and thus may appear very confident, yet there is
usually stress and fear beneath the surface revolving around a lack of
confidence. Much of their bravado and dramatic expression is an over
compensation for this fear. The true nature of Self is being developed in
this native, thus a large ego can be seen in less evolved types as well
as a personality, which over estimates in own importance to others.
Over time, a person with this placement becomes more realistic about their
own importance and greater understanding of themselves beyond the level
of personality.
சூரியனும் ராகுவும் ஜோடி சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் பலன்கள்:
1.
லக்கினத்தில் இருந்தால்:
The native will be successful in all the ventures he undertakes!
ஜாதகன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவான்.
லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால், ஜாதகன் வம்பு, வழக்கு,
கேஸ், கோர்ட் என்று அலைய வேண்டியதிருக்கும்.
.................................................................................................................
2
ஜாதகனுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயதான
காலத்தில் ஏற்படும்.
..................................................................................................................
3.
ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதைச்
ஜாதகன் சரி செய்ய வேண்டியதிருக்கும். பணம் கரையும்.
................................................................................................................
4
அந்த அமைப்பு இங்கே இருந்தால் நல்லதல்ல! ஜாதகனுக்குத் தன் தாய்
வழி உறவில் சிக்கல்கள் உண்டாகும். படித்த படிப்பு வீணாக, சம்பந்தம்
இல்லாத வேறு தொழிலைச் ஜாதகன் செய்ய நேரிடும்
................................................................................................................
5.
ஜாதகனுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். சிலருக்கு
மட்டும் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்கள் நன்றாக இருந்தால்
நாள் கழித்து ஆண் மகவு பிறக்கும்
................................................................................................................
6
ஜாதகருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். சிலருக்குக் கண்டமும்
ஏற்படும்.
.................................................................................................................
7.
ஜாதகர் இயற்கைக்கு மாறான உடல் உறவுகளில் விருப்பம் உள்ளவராக இருப்பார்.
சிலர் விவஸ்தையின்றி நெருங்கிய உறவுகளுடன் உடலுறவு கொள்வார்கள்.
இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்.
.................................................................................................................
8
ராகு சூரியனுடன் மற்றும் ஒரு தீயகிரகம் இங்கே அமர்ந்தாலோ அல்லது
பார்த்தாலோ ஜாதகருக்கு, விஷத்தால் அல்லது விஷக்கடியால் மரணம்
ஏற்படலாம்.
அந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்
................................................................................................................
9.
ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபடுவார், மேடைகளில் இறைவனைப் பற்றிப் பேசிப்
பேசி மிகவும் பிரபலமாகிவிடுவார்
................................................................................................................
10
ஜாதகர் சட்டங்களுக்கு எதிரான வழிகளில் தொழில் செய்து பொருள் ஈட்டுவார்
சமயங்களில் மாட்டிக் கொள்ளவும் செய்வார்
----------------------------------------------------------------------------------------------
11
ஜாதகர் பொது மக்களை ஏமாற்றும் தொழில் செய்து பிழைப்பார்.
சிலர் அதே வேலையை அரசியலில் சேர்ந்து செய்வார்கள்
..................................................................................................................
12.
ஜாதகர் தன்னுடைய செயல்களுக்காக அல்லது வேலைகளுக்காக அல்லது
தொழிலுக்காக ஒருமுறையாவது தண்டிக்கப்படுவார். சிலர் சிறைவாசம்
செல்ல நேரிடும்.
--------------------------------------------------------------------------------
Sun and Mercury are united (Budha-Aditya Yog) in Kendra, and well supported
by Jupiter/Saturn or both in 1-5-9 combination or 1-5 combination makes
Native read and follow ancient Sciences leading to Spiritual Progress.
Here, Mercury makes Native read, experience and gain Knowledge.
Sun and Saturn in Kendra, above said situation makes Native believe in
Karma followed by complete worship to God (In general reading, this is
Daridrya (Poverty) Yoga). This is a Bramhachari Yog.
Sun with Rahu is a very Powerful Combination in Spiritual Field. If placed
in Kendra, this combination surely gives interest in Spirituality to the native.
------------------------------------------------------------------------------
ராகுவைப் பற்றிய முக்கிய செய்திகள்:
ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டைச் சொந்த வீடாக்கிக்
கொள்வார். வீட்டுக்காரன் ஏமாந்தால் முழுவீடும் அவருக்குச் சொந்தமாகி
விடும். கிரயப்பத்திரம் எங்கே என்று அவரிடம் யார்போய்க் கேட்பது?
கேட்பவனைத் தொங்கவிட்டு அடிப்பார்.
நட்பு வீடுகள்; மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ஆறும்
பகை வீடுகள்: மேஷம், கடகம், சிம்மம் & கும்பம் (4 வீடுகள்)
உச்ச வீடு: விருச்சிகம்
நீச வீடு: ரிஷபம்.
------------------------------------------------------------------------------
ராகுவின் மகா தசைப் பலன்:
ராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்)
ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்)
ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்)
இந்த மூன்று தாசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம்
ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார்.
மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்)
நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார்.
ஜாதகனை துவைத்து அலசிப் பிழிந்து வெய்யிலில் காயப் போட்டு விடுவார்.
ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில்
ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார்.
அதை நீங்கள் நன்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------------
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும்.
மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம்
இருந்தால் (அதுதான் சாமி Birth Dasa Balance) அதற்கு முன் கூட்டியே
திசை ஆரம்பித்துவிடும்
அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன்
நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும்,
அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும். ஜாதகன் School Drop out
அல்லது college Drop out ஆகிவிடுவான்
..................................................................................................................
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும்.
மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம்
இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது
சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து
28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும்.
இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது
திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும்
அதேபோல் சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாது
வாட்டிவிடும்
----------------------------------------------------------------------------------------
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது
அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால்
ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க
இயலாமல் அவதியுறுவான்.
----------------------------------------
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்)
இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு
மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை.
அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும்
ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும்
பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது.
இதுவாவது கிடைத்ததே என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்
உண்மை நிலை!
-----------------------------------------------------------------------------------------------
ராகுவின் கோச்சார பலன்கள்:
3ல் இருக்கும் போது (அந்தப் பதினெட்டு மாதங்களில்) சுகம், காரிய சித்தி
ஏற்படும்
6ல் இருக்கும்போது, வெற்றி, உடல் உபாதைகள் நிவர்த்தி, பகை வெல்தல்
போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
11ல் தனலாபம், சுகம், போகம்
மற்ற இடங்களில் அவர் வலம் வந்து தங்கும் காலங்களில் நன்மை இருக்காது!
-------------------------------------------------------------------------------------------------
ராகுவைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது!
நன்றி, வணக்கம் மற்றும் அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!