சண்டாளன் என்பதற்கு அகராதியைப் பார்த்தால் இப்படிப் பதில் இருக்கிறது:
அது வசைச் சொல். பெரும் பாதகம் செய்பவன். சிறிதளவுகூட இரக்கம்
இல்லாதவன்.a term of abuse.one who commits heinous crime; cruel person
அப்படிப்பட்ட தீயவன் யாருக்காவது நன்மை செய்வானா?
செய்வான் என்கிறது ஜோதிடம்.
அதுவும் சில யோகங்களைக் கொடுப்பானாம்
அதற்குப் பெயர் ஒன்றையும் சூட்டி மகிழ்ந்திருக்கிறது ஜோதிடக்கலை!
அதற்குப் பெயர்: குரு சண்டாள யோகம்!
அதானே பார்த்தேன். குருவோடு சேர்ந்தவுடன் அவனுக்கும் நல்ல பெயர்
எடுக்கும் ஆசை வந்துவிடுமோ என்னவோ? யார் கண்டது?
சானியா மிர்சாவுடன் சேர்ந்தால் நமக்கும் டென்னிஸ் ஆட்டத்தில் ஆர்வம்
பிறக்காதா என்ன? சானியாவுடன் மாதத்தில் ஒரு நாளாவது மட்டையைத்
தூக்கிக் கொண்டு ஆடிப்பார்த்துவிட மாட்டோமா என்ன?
This yoga is formed when Jupiter is in conjunction with or is aspected
by Rahu or Ketu
The native is prone to act immorally and perform many misdeeds.
However the results are not as frightening as they are made out to be.
Different results are obtained for the combination in different houses
however if benefic planets are present with this combination or this
combination is aspected by benefic planets the results are auspicious
as the inauspiciousness decreases.
ஆமாம் தீமைகள் குறைவதால் நன்மை என்கிறார்கள். சரி ஏற்றுக் கொள்வோம்
அதை மட்டும்தான் நாம் செய்ய முடியும்!
In different houses this combination gives different results as follows
1
ராகு குரு கூட்டணி 8ல் இருந்தால் ஜாதகனுக்கு colic pains ஏற்படும்
அது என்ன காலிக் பெயின்?
COLIC, Pain Abdomen
A severe paroxysmal pain in the abdomen, due to spasm, obstruction,
or distention of some one of the hollow viscera.
{Hepatic colic}, the severe pain produced by the passage of a gallstone
from the liver or gall bladder through the bile duct.
{Intestinal colic}, or {Ordinary colic}, pain due to distention of the
intestines by gas.
{Lead colic}, {Painter's colic}, a violent form of intestinal colic, associated
with obstinate constipation, produced by chronic lead poisoning.
{Renal colic}, the severe pain produced by the passage of a calculus
from the kidney through the ureter.
{Wind colic}. See {Intestinal colic}, above.
------------------------------------------------------------------------------------
2
இந்தக் கூட்டணி ஒன்பதில் இருக்க மூன்றாம் வீட்டில் சனியும் கேதுவும்
இருக்கப் பிறந்த ஜாதகன், சட்டப்படி பிறந்த குழந்தையாக இருக்க மாட்டான்
The native may be an illegitimate child.
அடப்பாவமே!
------------------------------------------------------------------------------------
3.
நான்கில் ராகுவும் குருவும் கூட்டாக இருந்து, அவர்கள் மேல் ஒரு சுபக்கிரகத்தின்
பார்வை விழுந்தால், ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். பக்தியில் திளைப்பவனாக
இருப்பான். சிலர் நீதித்துறைக்குச் சென்று புகழ் பெறுவார்கள்.
-----------------------------------------------------------------------------------------
4.
லக்கினம் சுபக்கிரகத்தின் வீடாக இருந்து, அதை சந்திரனும் இருக்க, இந்த ராகு,
குரு கூட்டணி 5 அல்லது 9ஆம் வீடுகளில் அமையப்பெற்றால், ஜாதகன் சிறந்த
கல்வியாளனாகவும், செல்வந்தனாகவும், மக்களால் மதிக்கப்பெறுபவானவும்
இருப்பான்.
-----------------------------------------------------------------------------------------
5.
மகர லக்கினக்காரர்களின் 9ஆம் வீட்டில் அவர்கள் இருவரும் இருந்தால்,
ஜாதகன் பெரிய செல்வந்தனாக இருப்பான். அல்லது உருவெடுப்பான்.
பலரது மதிப்பையும் பெற்றவனாக இருப்பான். அவன் விரல் சொடுக்கில்
எல்லாம் நடக்கும். எல்லா வாழ்க்கை வசதிகளுடனும் வாழ்வான்.
(இருக்காதா பின்னே? எல்லாம் பணம் படுத்தும் பாடு தம்பி, பாடு!)
------------------------------------------------------------------------------------
6.
அந்த அமைப்பு 3ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மிகவும் துணிச்சலானவன்.
அதோடு அந்த அமைப்பை செவ்வாய் பார்வை இட்டால், அபரிதமான
துணிச்சல் இருக்கும். எதற்கும் பயப்படமாட்டான். சர்வதேசத் துணிச்சல் என்று
வைத்துக்கொள்ளுங்கள்
-----------------------------------------------------------------------------------
7.
அதே அமைப்பு 6ல் இருந்து செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகன் புரிந்து
கொள்ளச் சிரமமானவன். தான் பிறந்த மதத்தையே இழிவாகப் பேசக்கூடியவன்.
எல்லா மதங்களிலும் உள்ள சிறப்பைப் பேசாமல், அவற்றில் உள்ள சில
ஒவ்வாத நியதிகளை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு அதை மட்டுமே
குறையாகப் பேசிக்கொண்டு திரிவான்.
-----------------------------------------------------------------------------------
8
பொதுவாக இந்த யோகம் நல்லதொரு யோகமாகக் கொண்டாடப் படுவதில்லை
ஜாதகனுக்கு பல விரோதிகள் இருப்பார்கள். எப்போது வேண்டுமென்றாலும்
அவர்கள் அவனைக் கவிழ்ப்பார்கள்.ஜாதகன் முறையற்ற சிந்தனைகளை
உடையவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------
9
இந்த அமைப்பில் ராகு குருவின் வலிமையைக் குறைப்பான். குரு அதீதமான
சுபக்கிரகம், அவன் அதீதமான அசுபக்கிரகமான ராகுவுடன் சேர்ந்தால் என்ன
ஆகும்? கிராமங்களில் சொல்வார்களே, எதோடு சேர்ந்த எதோ ஒன்று எதையோ
தின்றது என்பார்களே, அதுதான் நடக்கும்.
அந்த எதோ எதோ என்னவென்று தெரிகிறதா? தெரியாதவர்களுக்கு மட்டும்
அடுத்த வரியில் அதைச் சொல்லியிருக்கிறேன். மற்றவர்கள் அந்த வரியைப்
படிக்காமல் தாண்டிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பன்றியோடு சேர்ந்த பசுவும், 'அதைத்' தின்னும்!
--------------------------------------------------------------------------------
10
சிலர் சொல்வார்கள் இந்த அமைப்பு நன்மை செய்யும் என்று. நடைமுறையில்
அது இல்லை. ராகுவின் கோரத்தைக் குரு குறைப்பான் என்பார்கள்.யாரும்
யாரையும் மாற்ற முடியாது.
Donkey is always a donkey: It will not become a horse!
--------------------------------------------------------------------------------
11
குரு குழந்தை பாக்கியத்திற்கான கிரகம், அவனுடன் சேரும் ராகு
ஜாதகனின் 5ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பது
தாமதமாகும். சிலருக்கு குழந்தை இல்லாமலும் போகும். சிலரது
மனைவி அடிக்கடி கருச் சிதைவுகளுக்கு உள்ளாவாள்.
அதைவிடக் கொடுமை, சிலருக்கு சற்று ஊனமான குழந்தை பிறக்கலாம்
--------------------------------------------------------------------------------
12.
இதே அமைப்பு 3ல் இருந்தாலும், நான்காம் வீட்டதிபதி நான்கைத் தனது
பார்வையால் பார்க்காவிட்டாலும், ஜாதகனின் கல்வி பாதியில் நின்று போகும்.
நல்ல அறிவும் திறமையும் அவனிடம் இருந்தாலும் முறையான கல்வியை
அவன் பெற முடியாது
---------------------------------------------------------------------------
13
இதே அமைப்பு ஏழில் இருந்தால், திருமண வாழ்வு சோகமாகிவிடும். சிலரது
திருமணம் விவாகரத்தில் முடியும். இந்த அமைப்புள்ளவர்கள் கலப்புத் திருமணம்
செய்தவர்களாக இருந்தால் தப்பித்துவிடுவார்கள்.
ஏழாம் அதிபனுடன் ராகு சேர்ந்தாலும் கலப்புத் திருமணம்தான்!
-----------------------------------------------------------------------------
14.
இந்தக் கூட்டணி அசத்தலாக வேலை செய்யும் இடம் பத்தாம் வீடு.
ஜாதகன் தொழில் செய்தாலும் அல்லது வேலையில் இருந்தாலும் அவன்
சர்வ அதிகாரம் மிகுந்தவனாக இருப்பான். அது நல்ல வழியில் வந்த
அதிகாரமாக இருக்காது. குறுக்கு வழியில் வந்த (சைடு டிராக்கில்)
அதிகாரமாக இருக்கும். தன் தொழிலுக்கு அல்லது வேலைக்கு வேண்டிய
அத்தனை ஜிகினா வேலகளையும் செய்வதில் ஜாதகன் திறமைசாலியாக
இருப்பான். அதை ராகு அவனுக்கு உகந்து வழங்குவார். உயர்வான நிலைக்குச்
ஜாதகன் செல்வான். ராகு அதைத்தன் தாசா புத்திகளில் செய்வார்.
சைடு டிராக் வேலை என்பது காரியம் நடப்பதற்காக தன் முதலாளி அல்லது
அலுவலக நிர்வாகிக்கு, கால் பிடித்துவிடுவதில் இருந்து கூஜா தூக்குவது வரை
அத்தனை வேலைகளையும் செய்வது.
பதிவில் எழுத முடியாத சில வேலைகளையும் ஜாதகன் செய்து எப்படியோ
அடித்துப் பிடித்து மேன்மைக்கு வந்து விடுவான்.
எப்படியோ நன்றாக இருந்தால் நல்லதுதான். நம்மைப் பாதிக்காதவரை சரிதான்
என்று அவன் உடன் இருப்பவர்கள் நினைப்பார்கள்
-------------------------------------------------------------------------------------
1.ல் நன்மை இல்லை (திருமண வாழ்வில் சிக்கல்)
2.ல் நன்மை (வசதிகள், மனைவியால் செல்வம்)
3.ல் பாதி நன்மை (The native will marry a foreign lady) வெளி நாட்டில்
வசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்
4.ல் பாதி நன்மை. ஏமாற்று வேலைகளின் மூலம் பணம் வரும். சொத்துக்கள் சேரும்
5.ல் தீமை.குழந்தை பாக்கியம் பாதிப்படையும். இறைவழிபாடு மட்டுமே பரிகாரம்
6.ல் தீமை. ஜாதகன் அறிவில்லாதவனாக இருப்பான்
7.ல் தீமை. ஜாதகனுக்கு 33 வயதிற்கு மேல் திருமணம் நடைபெறும். ஜாதகன்
அந்த வயதிற்குள் பல ஆட்டங்களைப் போட்டுவிடுவான்.
என்ன ஆட்டமா? காமக் களியாட்டம்தான் சுவாமி!
8.ல் தீமை. ஜாதகனுக்கு, உடலில் பல கோளாறுகள் உண்டாகும். பல மருத்துவர்
களுக்கு அவன் வேண்டப்பட்ட நோயாளியாக இருப்பான்.
9.ல் பாதி நன்மை, ஜாதகருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கும். தர்மமில்லாத
வழிகளில் பொருள் ஈட்டலும், வாழ்க்கையும் நடக்கும்
10.ல் நன்மை. ஜாதகர் பல தொழில்களைக் செய்வார். வசதியாக வாழ்வார்
11.ல் முழு நன்மை. ஜாதகன் பலருக்கும் ஆசானாக, வித்வானாக அல்லது
வாத்தியாராக இருப்பார். செல்வாக்கு, சொத்து என்று எல்லாம் உடையவராக
விளங்குவார்
12ல் முழு நன்மை. சுகபோகங்கள் நிறைந்தவர். சாதனைகளைப் படைக்கக்கூடியவர்
நாட்டாமையைப் போல வாழ்வார். எந்தப் பிரச்சினையும் தன்னை அணுகாமல்
திறமையாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வார்.
==============================================================
இங்கே சொல்லப்படுள்ளவைகள் அனைத்துமே பொதுப்பலன்கள்.
தனிப்பட்டவர்களுக்கு அவர்களின் ஜாதகங்களில் உள்ள வேறு அமைப்புக்களை
வைத்து இந்தப் பலன்கள் கூடலாம்; குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம்
அதைக் கவனத்தில் கொள்க!
(தொடரும்)
வாழ்க வளமுடன்!

அட நான் தான் முதல் ஆளா இன்னிக்கு? :)))
ReplyDeleteஐயா, இன்று பாடம் மிக எளிமை, கடும் வேலைபளு, விட்டு போன பாடங்களை கவர் செய்ய முயல்கிறேன்.
இன்றைய பாடத்துக்கு சாம்பிள் ஜாதகம் ஏதாவது?
மகர லக்கினக்காரர்களின் 9ஆம் வீட்டில் அவர்கள் இருவரும் இருந்தால்,
ReplyDeleteஜாதகன் பெரிய செல்வந்தனாக இருப்பான். அல்லது உருவெடுப்பான்.
பலரது மதிப்பையும் பெற்றவனாக இருப்பான். அவன் விரல் சொடுக்கில்
எல்லாம் நடக்கும். எல்லா வாழ்க்கை வசதிகளுடனும் வாழ்வான்.
(இருக்காதா பின்னே? எல்லாம் பணம் படுத்தும் பாடு தம்பி, பாடு!)
is it applicable only with kuru and Raghu or even guru with Kethu? mine is mahara laganam and Guru and Kethu in 9th position.
////Blogger ambi said...
ReplyDeleteஅட நான் தான் முதல் ஆளா இன்னிக்கு? :)))
ஐயா, இன்று பாடம் மிக எளிமை, கடும் வேலைபளு, விட்டு போன பாடங்களை கவர் செய்ய முயல்கிறேன்.
இன்றைய பாடத்துக்கு சாம்பிள் ஜாதகம் ஏதாவது?////
உங்கள் ஜாதகத்தைக் கொடுங்கள். போட்டுவிடுகிறேன்:-)))))
//////Blogger aravindaan said...
ReplyDeleteமகர லக்கினக்காரர்களின் 9ஆம் வீட்டில் அவர்கள் இருவரும் இருந்தால்,
ஜாதகன் பெரிய செல்வந்தனாக இருப்பான். அல்லது உருவெடுப்பான்.
பலரது மதிப்பையும் பெற்றவனாக இருப்பான். அவன் விரல் சொடுக்கில்
எல்லாம் நடக்கும். எல்லா வாழ்க்கை வசதிகளுடனும் வாழ்வான்.
(இருக்காதா பின்னே? எல்லாம் பணம் படுத்தும் பாடு தம்பி, பாடு!)
is it applicable only with kuru and Raghu or even guru with Kethu? mine is mahara laganam and Guru and Kethu in 9th position.///////
பாடம் ராகு/குரு கூட்டணியைப் பற்றியது. குரு/கேது விற்குப் பிறகு வரும்!
வாத்தியாரே..
ReplyDeleteநானும் ஆஜர்..
ராகு பகவான் எனக்கு தனித்து நின்றே தண்ணி காட்டிக் கொண்டிருப்பதால் நான் கவலைப்படேன்..
வாத்தியாரையா,
ReplyDeleteபாடங்கள் எனக்கு ஓவர் டோஸாக இருக்கின்றன. ட்ராப்-அவுட் ஸ்டூடன்ட் ஆகி விடுவேன் போலிருக்கிறது.
சண்டாளன் என்றாள் பிராமண பெண்ணுக்கும் மற்ற சாதி ஆணுக்கும் பிறந்த பிள்ளை என்று மனு த(க)ருமம் சொல்கிறது
ReplyDeleteகாச நோய்(T.B) பற்றித் தெரிந்தால் மருத்துவமே தெரிந்தமாதிரி என்று சொல்வார்கள் ,
ReplyDeleteஅதுபோல் ராகு பற்றித்தெரிந்தால் ஜோதிடமே தெரிந்தமாதிரி என்று சொல்லலாம் போல் உள்ளது .
அப்படியா ஆசானே.
சண்டாளன் என்பதை ஷண்டாளன் என்று மாற்றினால் மகிழ்வேன்
ReplyDeleteஅன்புள்ள ஐயா!
ReplyDeleteராகு குரு கூட்டணி பற்றிய பாடம் அருமை. யோகத்திலே நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் (அவயோகம்) உள்ளது என்பதை இப்பொழுது தான் அறிந்தேன்.
ஒரு கேள்வி, ஐயம் தீருங்கள்!!
செவ்வாய் மற்றும் ராகு கூட்டணியும் இதே போல் தான் இருக்கும் இடத்துக்கு தகுந்த பலனை தருமா?
என்றும் அன்புடன்!
ஐயா,
ReplyDeleteபடாங்கள் அருமை. லக்னாதிபதி சந்திரன்,மாந்தி லக்கனதிட்கு 3 ல்.
நவாம்சத்தில் 12 ல் ராகு,சந்திரன்,மாந்தி. தாயாருட்கு கூடாதா ,வாழ்க்கையில் மனபோராட்டம் திடீர் விரயம் இருக்குமா?
ஐயா , பாடம் அருமை.
ReplyDeleteGood Morning Sir,
ReplyDeleteLesson is good. Thanks.
/////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
நானும் ஆஜர்..
ராகு பகவான் எனக்கு தனித்து நின்றே தண்ணி காட்டிக் கொண்டிருப்பதால் நான் கவலைப்பட்டேன்..////
அதற்காகத்தான் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தன் பாடல் வரிகளில் இப்படிச் சொன்னார்:
"நமக்கும் கீழே இருப்பவர்கள் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு"
///////Blogger அமர பாரதி said...
ReplyDeleteவாத்தியாரையா,
பாடங்கள் எனக்கு ஓவர் டோஸாக இருக்கின்றன. ட்ராப்-அவுட் ஸ்டூடன்ட் ஆகி விடுவேன் போலிருக்கிறது.///////
அதெல்லாம் ஆகமாட்டீர்கள். உங்களைப் போன்றோர்களுக்கத்தான் நிறைய உதாரணங்கள், கதைகளுடன் பாடத்தை நடத்துகிறேன். பொறுமையாகப் படியுங்கள். எல்லாம் வசப்படும்
அவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது என்று நினைத்துத்தான் எதையும் நான் நம்பிக்கையோடு செய்வேன்.
எல்லாம் எனக்கு வசப்பட்டது. உங்களுக்கும் வசப்படும். நம்பிக்கையும் ஆர்வமும் முக்கியம் பாரதி!
//////Blogger செந்தழல் ரவி said...
ReplyDeleteசண்டாளன் என்றாள் பிராமண பெண்ணுக்கும் மற்ற சாதி ஆணுக்கும் பிறந்த பிள்ளை என்று மனு த(க)ருமம் சொல்கிறது////
மனு தர்மம் என்று எல்லோரும் சொல்கிறீர்கள். நான் இதுவரை படித்ததில்லை. படிக்க வேண்டும்போல இருக்கிறது.
இணையத்தில் பாடம் இருக்கிறதா? இருந்தால் சுட்டியைக் கொடுங்கள் தழலாரே!
//////Blogger KS said...
ReplyDeleteகாச நோய்(T.B) பற்றித் தெரிந்தால் மருத்துவமே தெரிந்தமாதிரி என்று சொல்வார்கள் ,
அதுபோல் ராகு பற்றித்தெரிந்தால் ஜோதிடமே தெரிந்தமாதிரி என்று சொல்லலாம் போல் உள்ளது .
அப்படியா ஆசானே.//////
இல்லை. ஜோதிடம் கடல். நான் சுட்டிக்காட்டுவது சில கரையோரப் பகுதிகளை மட்டுமே!
//////Blogger செந்தழல் ரவி said...
ReplyDeleteசண்டாளன் என்பதை ஷண்டாளன் என்று மாற்றினால் மகிழ்வேன்//////
நேற்றைய பின்னூட்டத்தில் அன்பர் ஒருவர் வந்து எதற்கு வடமொழி எழுத்துக்கள் என்று கேட்டார்.
நீங்கள் சொல்வதற்காக மாற்றினால், அவர் வந்து வருந்துவார் தழலாரே!:-)))))))
உண்மை நிலை தெரிந்தாலும் நீங்கள் மகிழ்வீர்கள்.
//////Blogger SP Sanjay said...
ReplyDeleteஅன்புள்ள ஐயா!
ராகு குரு கூட்டணி பற்றிய பாடம் அருமை. யோகத்திலே நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் (அவயோகம்) உள்ளது என்பதை இப்பொழுது தான் அறிந்தேன்.
ஒரு கேள்வி, ஐயம் தீருங்கள்!!
செவ்வாய் மற்றும் ராகு கூட்டணியும் இதே போல்தான் இருக்கும் இடத்துக்கு தகுந்த பலனை தருமா
என்றும் அன்புடன்!////////
இல்லை! அந்தக் கூட்டணியில் இருவருமே பொல்லாதவர்கள்!
//////Blogger vino, canada said...
ReplyDeleteஐயா,
படாங்கள் அருமை. லக்னாதிபதி சந்திரன்,மாந்தி லக்கனதிடற்கு 3 ல்.
நவாம்சத்தில் 12 ல் ராகு,சந்திரன்,மாந்தி. தாயாருக்கு கூடாதா ,வாழ்க்கையில் மனபோராட்டம் திடீர் விரயம் இருக்குமா?/////
சந்திரன் தாய்க்கு உரிய கிரகம் அவருடன் மாந்தி சேர்வது நல்லதல்ல, நீங்கள் சொல்லியுள்ள மூன்றுமே இருக்கலாம்.
இறைவனை வழிபடுங்கள். He will give you standing power to face any (bad) situation
///////Blogger sridhar said...
ReplyDeleteஐயா , பாடம் அருமை.//////
நன்றி ஸ்ரீதர்!
////////Blogger krish said...
ReplyDeleteGood Morning Sir,
Lesson is good. Thanks.///////
நன்றி நண்பரே!
ஐயா,
ReplyDeleteமயில் மேயசென்றதால் வர தாமதமாகிவிட்டது. தாமதத்துக்கு மன்னிக்கவும்.
பதிவு அருமை. எனக்கு இருவரும் கூட்டணியில் இலலை. தனித்தே இருக்கின்றனர்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Dear Sir,
ReplyDeleteAll the lines ("lesson") are nice and too aggressive.Thanks sir.
Iam telling you sir "Really you are Extra Ordinary".
Sir Iam not telling simply sir...
Please keep it up sir(Kethu With Saturn)...Thanks sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir
ReplyDeleteIam expecting next lesson sir....(Kethu with Saturn).
Rahu Lessons are nice and aggressive..
Thank u
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir
ReplyDeleteYou are a hardworking person
you are a Good Astrologer
you are a Good "Teacher"
You are Extraordinary
You are a Mass Sir...
Totally you are great.. (Not only astrology lesson)..you have Multiple skills sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
subbiah anna , ennaku guru/rahu 5 l irukku. aana ennaku 5th house meenam , guruvoda aatci veedu ahunala paathagam kuraiyuma .Inga guru valimayoda irukrathala (6 paral) theemai vilaguma konjam enak u solringala anna pl
ReplyDeleteசேராத இடந்தன்னில் சேரவேண்டாம் என்பது பூரண சுபரான குருபகவானுக்கும் பொருந்தும் போலிருக்கிறது.......ராகு பகவானின் ரகளை தொடர்கிறது....அலசித் துவைத்துக் காயப்போடும் ஆசிரியருக்கு அன்பு வணக்கங்கள்...
ReplyDeleteDear sir,
ReplyDeleteFigure represents is like a Nokia (Combination of Rahu and Guru)- Advertisement
Based on adv..it will affect the market(person) sir.
Is it Correct?
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
//////Blogger வேலன். said...
ReplyDeleteஐயா,
மயில் மேயச்சென்றதால் வர தாமதமாகிவிட்டது. தாமதத்துக்கு மன்னிக்கவும்.
பதிவு அருமை. எனக்கு இருவரும் கூட்டணியில் இலலை. தனித்தே இருக்கின்றனர்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////
மயில் மேயச் சென்றால் பரவாயில்லை. சேவல் என்ன ஆயிற்று?
Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir,
All the lines ("lesson") are nice and too aggressive.Thanks sir.
Iam telling you sir "Really you are Extra Ordinary".
Sir Iam not telling simply sir...
Please keep it up sir(Kethu With Saturn)...Thanks sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman///////
அதெல்லாம் விடுவோமா? கேதுவையும் சனியையும் இதைப் போலவே அலசிக் காயப்போட்டு விடுவோம்!
////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Iam expecting next lesson sir....(Kethu with Saturn).
Rahu Lessons are nice and aggressive..
Thank u
Loving Student
Arulkumar Rajaraman/////
எழுதித் தட்டச்ச வேண்டுமே? அதோடு பின்னூட்டங்களுக்கு, பதிவைக் குறித்து வரும் தனி மின்னஞ்சல்களுக்குப் பதில் எழுத வேண்டுமே? எனக்குக் கிடைக்கும் நேரம் குறைவு. அதையும் சமாளித்து எழுதுகிறேன். உங்கள் மேல் (மாணவக் கண்மணிகள்) உள்ள அன்பு, அல்லது ஆர்வக் கோளாறு என்று எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை வாரம் மூன்று இடுகைகள் (Postings) உண்டு!
//////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
You are a hardworking person
you are a Good Astrologer
you are a Good "Teacher"
You are Extraordinary
You are a Mass Sir...
Totally you are great.. (Not only astrology lesson)..you have Multiple skills sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////
நான் ஒரு தீவிர வாசகன்
நான் ஒரு கலை ரசிகன்
நான் ஒரு சினிமா விசிறி
நான் இலக்கியத் தாகம் உள்ளவன்
நான் ஒரு சிறுகதை எழுத்தாளர்
நான் சந்தைப்படுத்தும் துறையில் இருப்பவன்
அவ்வளவுதான்
great என்பது மட்டும் இல்லை. அது பெரிய வார்த்தை!
/////Blogger VigneshGopalsamy said...
ReplyDeletesubbiah anna , ennaku guru/rahu 5 l irukku. aana ennaku 5th house meenam , guruvoda aatci veedu ahunala paathagam kuraiyuma .Inga guru valimayoda irukrathala (6 paral) theemai vilaguma konjam enak u solringala anna pl//////
அது குருவின் ஆட்சி வீடு என்பதாலும் அதிகப் பரல்களுடன் குரு நல்ல நிலையில் இருப்பதாலும் பாதகங்கள் குறையும்
//////Blogger படித்துறை.கணேஷ் said...
ReplyDeleteசேராத இடந்தன்னில் சேரவேண்டாம் என்பது பூரண சுபரான குருபகவானுக்கும் பொருந்தும் போலிருக்கிறது.......ராகு பகவானின் ரகளை தொடர்கிறது....அலசித் துவைத்துக் காயப்போடும் ஆசிரியருக்கு அன்பு வணக்கங்கள்...//////
நன்றி கணேஷ்! படித்துறை எனும் அடைமொழியின் விசேடம் என்ன? சொல்லுங்களேன்!
///Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear sir,
Figure represents is like a Nokia (Combination of Rahu and Guru)- Advertisement
Based on adv..it will affect the market(person) sir.
Is it Correct?
Thank you
Loving Student
Arulkumar Rajaraman///////
இருக்கலாம் நண்பரே!
ஐய்ர்!
ReplyDeleteதங்களீன் ",ஞான் பெற்ற செல்வம், பெறுக இவ்வய்யகம்" என்ற கொள்கையில் எல்லோரும் இருந்தால் தமிழ் ஈழத்திலும்
சமாதாணம் மலரும்.
உருத்திரா.
அய்யா,
ReplyDeleteபாடமும், விளக்கங்களும் அருமை.
நிதானமாக இரவில் மீண்டும் ஒருமுறை சில ஜாதகங்களை வைத்து அலசி பார்க்க வேண்டும்.
நன்றி,
ஸ்ரீதர் S
வணக்கம் அய்யா
ReplyDeleteகுரு உடன் கூட்டனி கொண்ட இராகு பகவானின் அட்ட்காசம்
ரொம்ப ஒவர் அய்யா!!
வணக்கம் அய்யா ,
ReplyDeleteநீங்கள் எல்லா கிரகங்களையும் நன்றாக துவைத்து வருகிறீர்கள்.
நகைசுவை மற்றும் கதை என்னும் உஜாலவையும் சேர்த்து அருமையாக உள்ளது .
எல்லா பாடங்களையும் படித்து வருகிறேன்.
எப்போது ஜாதகத்தை அலசும் வித்தையை சொல்லி கொடுக்க போகிறீர்கள் ?
அன்புடன்.
http://padithuraiganesh.blogspot.com
ReplyDeleteதயவு செய்து எனக்காக எனது பிளாக் ஸ்பாட் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் படிக்கவும்...படித்துறைக்கான காரணமும் அதில் சொல்லியிருக்கிறேன்....
////Blogger Rudra said...
ReplyDeleteஐய்ர்!
தங்களின் "யான் பெற்ற செல்வம், பெறுக இவ்வையகம்" என்ற கொள்கையில் எல்லோரும் இருந்தால் தமிழ் ஈழத்திலும்
சமாதாணம் மலரும். உருத்திரா./////
உங்கள் எண்ணம் ஈடேற இறைவன் அருள் புரிவாராக!
/////Blogger Sridhar said...
ReplyDeleteஅய்யா,
பாடமும், விளக்கங்களும் அருமை.
நிதானமாக இரவில் மீண்டும் ஒருமுறை சில ஜாதகங்களை வைத்து அலசி பார்க்க வேண்டும்.
நன்றி,
ஸ்ரீதர் S/////
ஒரு வாளிக்குப் பத்து வாளி தண்ணீரைவைத்துக் கொண்டு அலசிப்பாருங்கள், ஸ்ரீதர்!
/////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
ReplyDeleteவணக்கம் அய்யா
குரு உடன் கூட்டனி கொண்ட இராகு பகவானின் அட்டகாசம்
ரொம்ப ஒவர் அய்யா!!///////
அங்கே போடா, தடா சட்டங்கள் எதுவுமில்லை. இருந்தால் ராகுவைத் தூக்கி உள்ளே போட்டுவிடலாம்!
//////Blogger Geekay said...
ReplyDeleteவணக்கம் அய்யா ,
நீங்கள் எல்லா கிரகங்களையும் நன்றாக துவைத்து வருகிறீர்கள்.
நகைச்சுவை மற்றும் கதை என்னும் உஜாலவையும் சேர்த்து அருமையாக உள்ளது .
எல்லா பாடங்களையும் படித்து வருகிறேன்.
எப்போது ஜாதகத்தை அலசும் வித்தையை சொல்லி கொடுக்க போகிறீர்கள்?
அன்புடன்./////
பாடங்கள் முடியும் போது உங்களுக்கே அது வசப்பட்டுவிடும்! (இப்போதைக்கு பாடங்கள் முடியாது
இன்னும் பல பகுதிகள் உள்ளன!)
/////Blogger படித்துறை.கணேஷ் said...
ReplyDeletehttp://padithuraiganesh.blogspot.com
தயவு செய்து எனக்காக எனது பிளாக் ஸ்பாட் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் படிக்கவும்...படித்துறைக்கான காரணமும் அதில் சொல்லியிருக்கிறேன்...//////
ஆகா, படிக்கிறேன் நண்பரே.
//////Blogger SP Sanjay said...
ReplyDeleteஅன்புள்ள ஐயா!
ராகு குரு கூட்டணி பற்றிய பாடம் அருமை. யோகத்திலே நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் (அவயோகம்) உள்ளது என்பதை இப்பொழுது தான் அறிந்தேன்.
ஒரு கேள்வி, ஐயம் தீருங்கள்!!
செவ்வாய் மற்றும் ராகு கூட்டணியும் இதே போல்தான் இருக்கும் இடத்துக்கு தகுந்த பலனை தருமா
என்றும் அன்புடன்!////////
இல்லை! அந்தக் கூட்டணியில் இருவருமே பொல்லாதவர்கள்!////
தகவல் தந்தமைக்கு நன்றி!!
Respected Vaathiyar Aiiya,
ReplyDeleteVanakkam & Nanri for your lessons. Very useful.
But Please read the below link which has been written by our
scientist Nellai Su. Muthu who is servering in Sriharihota - ISRO
http://kadagam.blogspot.com/2008/04/blog-post_2987.html
For me the article looks correct.
Accroding to this articles if you link bask to our astrological
system, The basic horoscope formation itself becomes void.
There is a pre-shift in the tamil month and What we currently consider Meenam according to horoscope becomes Mesham(Pre-Shift).
I request you to have a thought on the same.
If the above is true, Your Lagnam may shift to Kadagam rather than Simham accroding to this article
Regards, Astrofriend
ஐயா , ஜாதகம் கணிக்கும் பொழுது GMT difference , மற்றும் latitude , longitude எடுத்து கணக்கிட வேண்டாமா ?
ReplyDeleteஅப்படி எல்லாம் எடுத்து செய்தால் ஒரு கணிப்பும் , எடுக்காவிட்டால் ஒரு கணிப்பும் வருகிறதே !
GMT , latitude , longitude எடுத்து கணித்தால் எனது நட்சத்திரம் உத்திரட்டாதி ஆகவும் , எடுக்காவிட்டால் ரேவதி எனவும் வருகிறதே ?Pls clarify
//////Blogger Astro said...
ReplyDeleteRespected Vaathiyar Aiiya,
Vanakkam & Nanri for your lessons. Very useful.
But Please read the below link which has been written by our
scientist Nellai Su. Muthu who is servering in Sriharihota - ISRO
http://kadagam.blogspot.com/2008/04/blog-post_2987.html
For me the article looks correct.
Accroding to this articles if you link bask to our astrological
system, The basic horoscope formation itself becomes void.
There is a pre-shift in the tamil month and What we currently consider Meenam according to horoscope becomes Mesham(Pre-Shift).
I request you to have a thought on the same.
If the above is true, Your Lagnam may shift to Kadagam rather than Simham accroding to this article
Regards, Astrofriend///////
குழப்பாதீர்கள் நண்பரே! இப்போது இருக்கும் வழிமுறைகள் ஒழுங்காக உள்ளன.
வான் வெளியில் ஒரு மிகப் பெரிய வட்டத்தின் சுற்று 0 வில் துவங்கி 360 பாகைகளில் முடிவடைகிறது. அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் சொல்லுங்கள்
சூரியன் தன் சுழற்சியில் அந்த 0 - 360 பாகைகளைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நாட்கள் 365.25. அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் சொல்லுங்கள்
சூரியன் அந்த வட்டத்தை நிறைவு செய்து மீண்டும் 0 பாகைக்கு வரும் நாளே புத்தாண்டு. அது இந்த ஆண்டில் சித்திரை ஒன்றாம் தேதியன்று (14.4.2009) நிகழவுள்ளது. சித்திரை மாதம் சூரியன் இருக்கும் ராசிதான் மேஷம். அன்று சூரிய உதயத்தில் பிறக்கும் குழந்தையின் லக்கினம் மேஷ லக்கினம். அதை மாற்றிச் சொல்லி அல்லது மாற்றச் சொல்லிக் குழப்ப முயலாதீர்கள்!
ஜோதிடம் துல்லியமாக உள்ளது. அதை எழுதிவைத்துவிட்டுப்போன முனிவர்களும் சிறப்பாகத்தான் செய்துவிட்டுப்போயிருக்கிறார்கள். நாம்தான் கண்டதையும் படித்துக் குழம்பிப்போகிறோம்!
There is no necessity to link anything or shift anything! Let it be as it is!
/////Blogger DevikaArul said...
ReplyDeleteஐயா , ஜாதகம் கணிக்கும் பொழுது GMT difference , மற்றும் latitude , longitude எடுத்து கணக்கிட வேண்டாமா ?
அப்படி எல்லாம் எடுத்து செய்தால் ஒரு கணிப்பும் , எடுக்காவிட்டால் ஒரு கணிப்பும் வருகிறதே !////////
அது மூன்றும் இல்லாமல் எப்படி ஜாதகத்தைக் கணிப்பீர்கள்? அப்படியே கணித்தாலும் GMT difference for India is +5:30 Hours நிச்சயமாக 2 லக்கினங்கள் தாண்டிவிடும்.
/////GMT , latitude , longitude எடுத்து கணித்தால் எனது நட்சத்திரம் உத்திரட்டாதி ஆகவும் , எடுக்காவிட்டால் ரேவதி எனவும் வருகிறதே ?Pls clarify////
காலசந்திப் பிறப்புக்கள்ளுக்கு (That is border births between 2 stars) வித்தியாசம் வரும். வாக்கியப் பஞ்சாங்கப்படி ஒன்று
வரும். திருக்கணிதப்படி ஒன்று வரும். திருக்கணிதம் மட்டுமே சரியானது. கணினிகள் திருக்கணிததைப் பின்பற்றுகின்றன
(it is based on mathematics) மீண்டும் மீண்டும் குழம்பாமல் கணினி கொடுத்த ஜாதகத்தையே பயன்படுத்துங்கள்
ஜோதிடர்கள் பயன் படுத்துவது வாக்கியப் பஞ்சாங்கம்
வாக்கியப் பஞ்சாங்கத்தில் ஆண்டிற்கு 360 நாட்கள் என்று மட்டுமே கணக்கிடப்படும். ஏனென்றால் தசா புத்திகளும் 360 நாட்களை வைத்தே கணக்கிடப்படுகின்றன.
திருக்கணிதத்தில் ஆண்டிற்கு 365.25 நாட்கள்.
இப்போது குழப்பம் தீர்ந்ததா?
தீராவிட்டால், இந்தப் பின்னூட்டத்தைக் குழப்பம் தீரும்வரை மீண்டும் மீண்டும் படியுங்கள். வேறு வழியில்லை:))))))
Dear Sir,
ReplyDeleteCould please explain about "Natchathira Saram".
Could you please explain little bit elobarate about this lesson.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
My humble namaskar to respected Mr.SVS. In this net age, I am blessed to learn the tip of (Astrology) ocean through Master Mr.SVS. My sincere thanks and hope I will be regular reader of this blog .
ReplyDeleteDubai-aktrajan
Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir,
Could please explain about "Natchathira Saram".
Could you please explain little bit elobarate about this lesson.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////
ஒரு நட்சத்திரம் 4 பாதங்களாகப் பிரிபடும். 27 நட்சத்திரங்கள் வகுத்தல் 12 ராசிகள் = ஒரு ராசிக்கு 2.25 நட்சத்திரம். இப்படிப் பின்னமாக வருவதால் அதை எளிமைப்படுத்த நட்சத்திரங்களை 4 பாதங்களாகப் பிரித்துக் கொடுத்தார்கள். 27 Stars x 4 divisions = 108 divided by 12 signs = 9
உதாரணத்திற்கு மேஷம் என்றால் அஸ்விணி, பரணி நட்சத்திரமும், கார்த்திகை நட்சத்திரத்தில் முதல் பாதமும் அதில் அடங்கும்.
அதற்கு அடுத்து ரிஷபம் என்றால் கார்த்திகை நட்சத்திரத்தின் 3 பாதங்களும் ரோகிணி நட்சத்திரத்தின் 4 பாதங்களும், மிருகசீர்ஷ நட்சத்திரத்தின் 2 பாதங்களும் அடக்கம். இப்படியே வரிசையகக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்
ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் இருக்கிறது என்பதைச் சொல்வதை நட்சத்திர சாரத்தில் அந்தக் கிரகம் உள்ளது என்பார்கள். அந்த நட்சத்திரம் அந்தக் கிரகத்தின் சொந்த நட்சத்திரம் என்றால் பலன் அதிகம்.
இது Natal Chartஐப் பார்ப்பதற்கும் உதவும். அதே போல கோச்சாரப் பலனைப் (Benefit out of Transit planets) பார்ப்பதற்கும் உதவும். விளக்கம் போதுமா?
/////Blogger TK said...
ReplyDeleteMy humble namaskar to respected Mr.SVS. In this net age, I am blessed to learn the tip of (Astrology) ocean through Master Mr.SVS. My sincere thanks and hope I will be regular reader of this blog .
Dubai-aktrajan/////
உங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்