மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 371 - 380. Show all posts
Showing posts with label Lessons 371 - 380. Show all posts

10.8.10

அது டீம் ஒர்க்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அது டீம் ஒர்க்!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 6

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
அது டீம் ஒர்க்!

“வாத்தி (யார்) அது டீம் ஒர்க் என்றால் எது?”
“பாடத்தைப் படியுங்கள். தெரியவரும்”
--------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண். 14
ஸ்ரீனிவாசன்
பானிபட்

Dear sir,
Thank you very much for Q&A session. my question are

1] is it good (irrespective of position of life lord Saturn & lagna lord ), if Jupiter aspects eighth house?

லக்கின அதிபதி, ஆயுள்காரகன் அவர்கள் இருவரும் எக்கேடு
கெட்டாலும் பரவாயில்லை. எட்டாம் வீட்டைக் குரு பார்த்தால்
மட்டும் போதுமல்லவா - அது நல்லதுதானே? நல்ல ஆயுளைத்
தரும்தானே? என்பதுதானே உங்கள் கேள்வி? அவர்கள் இருவரையும் ஓரங்கட்டிவிட்டுப் பலனைப் பார்க்க முடியாது.

கீழ்கோர்ட்டு, மேல்கோர்ட்டு, உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம்
என்று எல்லா மன்றங்களையும் தாண்டித்தான் குடியரசுத்
தலைவரிடம் கருணை மனு அளிக்க முடியும். பார்வையைக்
கருணையாகக் கடைசியில்தான் எடுத்துக்கொள்ள முடியும்.

2] if sixth and eight house lords  interchange ,,, will increase the life ?

பரிவர்த்தனை எப்போதுமே நல்ல பலனைக் கொடுக்கும்!

3] as you said in lesson if Saturn in eighth house , the person will have more life. 
In amsam ,if Saturn is ineighth house , will the effect is same?
4] how we have to analyze horoscope-based on rasi and amsam?

அம்சம் என்பது ராசியின் விரிவாக்கம். magnified version of rasi chart
இரண்டையும் பார்க்க வேண்டும்
-------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.15
முத்துக்குமார். கே
சென்னை
வயது 29.
   
என்னுைடய வினாக்கள்
Hi Sir
1. லக்னம் துலாம், துலா லக்னத்திற்கு சனி ேயாகக்காரகன்,
5 ஆம் (கும்பம்) விட்டிற்குைடயவன்  சனி  ம றைவிடமான 
12 (கன்னி) ல் இருந்தால் புத்திர புத்திர தோஷமா?.  சனியின் 
பாதிப்பு எப்படி இருக்கும் 5  விட்டிற்கு?

புத்திர பாக்கியம் என்பது டீம் ஒர்க்! ஒரு படத்திற்கு நாயகன் நாயகி, திரைக்கதை, வசனகர்த்தா, இயக்குனர், இசையமைப்பாளர்,
ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர், எடிட்டர், முக்கியமாகத்
தயாரிப்பாளர் என்று பலரின் பங்குஇருப்பதைப்போல, குழந்தை பாக்கியத்திற்கும் பங்களிப்பு உள்ளது. கணவன் &  மனைவி இருவரின்
ஜாதகம், அவற்றில் ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, குழந்தைக்குக்காரகன்
(authority for children) குரு பகவான் என்று பலரின்  பங்களிப்பு இருக்கும்.
நீங்கள் சொல்கிறபடி ஒருவரை வைத்து மட்டும் இந்த ஆட்டத்தைக்
கணிக்க முடியாது. ஜாதகத்தில் ஒருவர் ஆடும் ஆட்டம் கிடையாது.

2, லக்னம் துலாம், 10 ல் ராகு (கடகம்), கடக ராகு இராஜ யோகத்தைத் 
தரும் என்பது உண்ைமயா?

நைசாக உங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து ஒரு கேள்வியை
நுழைத்து விட்டீர்கள். இல்லையென்றால் 10ல் இருக்கும்
ராகுவைப் பத்தி உங்களுக்கு எதற்குக் கவலை? கடக ராகு
நன்மை செய்யும். அவ்வளவுதான். ராஜயோகத்தைக் கொடுத்தால்
வேண்டாம் என்று சொல்லாதீர்கள். கிடைப்பதைப் பெற்றுக்
கொள்ளுங்கள். அப்படியே நமது வகுப்பறைக் கண்மணிகளையும்
உங்கள் யோகவரவுகளால் கவனித்துக்கொள்ளுங்கள்!

3) 5ல் 19 பரல்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்ைலயா?

ஐந்தாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு. House of mind,
House of Poorva punniya & House of Children. சந்திரன் (மனகாரகன்)
குரு (புத்திரகாரகன்) அதன் அதிபதி ஆகியவர்களைப் பொறுத்து
அந்தந்தத் துறைகள் சிறப்பாகச் செயல்படும். ஆகவே 19 ஐ
மட்டும் வைத்துக் குழம்பாதீர்கள். அவர்களின் வலுவையும்
பாருங்கள்.
----------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.16
ராஜேஷ். R

அய்யா, என்னுடைய நான்கு கேள்விகள்.

௧..ஒருவருக்கு தீர்க்க ஆயுள் உள்ளது என்று வைத்துகொள்வோம்.
அவருக்கு மாங்கல்ய பலமில்லாத பெண் மனைவி அமைந்தால் 
பலன் என்ன?

அதற்குத்தான் ஜாதகங்களைப் பொருத்தம் பார்த்துச் சேர்க்கிறார்கள். பொருத்தம் பார்க்காமல் சேர்க்கும்போது, இந்த மாதிரி சிக்கலில்
மாட்டிக் கொள்ள நேரிடும். தீர்க்க ஆயுள் உள்ள ஒருவரின்
மனைவிக்கு மாங்கல்ய பலம் இல்லையென்றால், பிரிவில்
முடிந்துவிடும் (Their relationship will end in separation)

௨.செவ்வாயும் சனியும் ஆறாம் வீட்டை நோக்கினால் என்ன பலன்?

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று காதல்
எல்லாம் உண்டாகாது. லக்கினத்தைவைத்து சனிக்கும்,
செவ்வாய்க்கும் என்ன ஆதிபத்யம் உள்ளதோ அதன்படி
பலன்கள் நடக்கும். அத்துடன் ஆறாம் வீடு, அதன் அதிபதி,
அங்கே டேரா போட்டு அமர்ந்திருக்கும் கிரகங்கள் ஆகையவற்றை
வைத்துப் பலன்கள் மாறுபடும். டிக்கெட் வாங்கினோம் படத்தைப்
பார்த்தோம் என்பதுபோல, பார்வை போன்ற ஒரு விதியை மட்டும்
வைத்துப் பலனைச் சொல்ல முடியாது. அனைத்தையும் சீர் தூக்கிப்
பார்க்க வேண்டும். பழைய பாடங்களைப் படியுங்கள். இந்த சந்தேகம்
எல்லாம் வராது.

௩. உங்களின் தமிழ் ஆர்வம் வாழ்க! எண்களைத் தூய தமிழில் 
எழுதியவர், இரண்டு கேள்விகளோடு நிறுத்திக்கொண்டு 
விட்டீர்களே. குறிப்பிட்டுள்ள நான்கில் மற்ற இரண்டு 
கேள்விகள் எங்கே சாமி?
-------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.17
மகேஷ்.டி, சென்னை
வசிக்கும் ஊர்: திருச்சி
பிறந்த ஊர்: வேடசந்தூர்   

ஐயா வணக்கம்          

1) விதிப்படிதான் நடக்கும் என்றால், சிலர் பரிகாரம் செய்வது எதற்கு?
அதனால் பயன் உண்டா?

இறைவன், வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர் என்றால்,
அவரை எதற்காக வணங்க வேண்டும்? தன்னை வணங்காதவனுக்கும்
அவர் நன்மை செய்ய வேண்டும் அல்லவா? என்று கேட்பதைப்போல
உள்ளது உங்கள் கேள்வி. பரிகாரம் செய்வது, பிரார்த்தனை செய்வது போன்றவற்றால், ஜாதகனுக்குத் தாக்குப்பிடிக்கும் சக்தி கிடைக்கும்.
தாக்குப் பிடிக்கும் சக்தி வேண்டாமா? வேண்டுமல்லவா?
அதுதான் பயன்!

 2) முன்னோர் செய்த (பித்ருக்களின் தோஷம் ) ஜாதகம்  கொண்டு கண்டு கொள்ளமுடியுமா? அதற்கு பரிகாரம் உண்டா?

ஜாதகம் என்ன திரைப்படமா? நம் முன்னோர்கள் செய்த தீமைகள்
எல்லாம் ப்ளாஷ் பேக்கில் தெரிவதற்கு? அதெல்லாம் தெரியாது.
மொத்தமாகப் பரிகாரம் உண்டு. ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் போது, குறைந்தது மூன்று
ஏழை ஜனங்களுக்கு உணவளியுங்கள். அதற்கு மேற்பட்டவர்
களுக்கு உணவளிப்பதற்குத் தடைகள் எதுவுமில்லை. அது
உங்கள் மனசு, மற்றும் பர்ஸில் இருக்கும் பணத்தின் அளவைப்
பொறுத்தது!
     
3)   ஜாதகத்தில் ( சூரியன் + செவ்வாய் ) 7th இருந்தால் அமங்கலி  என்பது பொதுவிதி என்கிறார்கள் - உண்மையா?

உண்மைதான். மற்றவற்றையும் (ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்
களையும் ) அலச வேண்டும்!  
--------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

9.8.10

safe modeல் காதலிப்பது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
safe modeல் காதலிப்பது எப்படி?

கேள்வி - பதில் பகுதி எண்.5

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்!
_________________________________________________
மின்னஞ்சல் எண். 14
சிவசுப்பிரமணியம்

Hello Sir,
I am one of the followers of your blog and have a question...
we normally see the birth chart and do the match making... if the birth chart match making is not giving good results. can we use the birth chart of boy and puberty chart of girl and make a match of that. will this work out
Please answer...
Regards,
Siva/////

பெண் பூப்படைந்த ஜாதகத்தை வைத்துத் திருமணப் பொருத்தம் பார்க்கலாமா என்பதுதானே உங்கள் கேள்வி? puberty horoscope is the one to be studies for their conjugal happiness. ஒரு பெண் உடல் உறவுகளால் அடையவிருக்கும் மகிழ்ச்சியைப் பார்ப்பதற்குப் பூப்டைந்த ஜாதகத்தைப் பயன்படுத்துவார்கள்.. திருமணப் பொருத்தத்திற்கு அது சரியாக வராது.

ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் இருவர் ஓடுகிறார்கள் என்றால், ஸ்டார்ட்டிங் பாயிண்ட் இருவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒருவருக்கு 0 மீட்டரில் இருந்தும் இன்னொருவருக்கு 500வது மீட்டரில் இருந்தும் ஓட்டத்தைத் துவங்கச் சொல்லலாமா? அது நியாயமா?

திருமணப் பொருத்தம் பார்க்க இருவரின் பிறப்பு ஜாதகங்களை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.பொருத்தம் இல்லை என்றால், இப்படிக் குறுக்கு வழியை எல்லாம் யோசிக்காமல், வேறு வரன்களைப் பார்க்க வேண்டியது தான்.

சம்பந்தப் பட்ட பெண் காதலி என்றால், அப்பா, அம்மா, ஜோதிடர், ஜாதகம் எல்லாவற்றையும் கடாசிவிட்டு, அவளை மணந்து கொள்ள வேண்டியதுதான். காதல் புனிதமானது. அவளோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும்.

ஏதாவது பிரச்சினை வந்தால்?

அப்புறம் எதற்காகக் காதலிக்கிறீர்கள்? ஜாதகத்தை வாங்கிப் பார்த்துவிட்டுப் பொருத்தங்கள் உள்ள பெண்னையே காதலிக்கலாம். ஆட்டத்தை safe modeல் ஆடலாம். அதாவது காதலிப்பதை safe modeல் காதலிக்கலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண். 15
லக்ஷ்மணன்
லண்டன்

கேள்வி-1 :

நவாம்சம் பாடத்தில் ''சனியும் செவ்வாயும் நவாம்சத்தில் பரிவர்த்தனை  பெற்று இருப்பது நல்லதல்ல...அதை எட்டாம் வீட்டை பற்றிய பாடத்தில் படிக்கலாம்'' என்று தாங்கள் கூறி இருந்தீர்கள்...அண்மையில் தாங்கள் சிறப்பாக நடத்திய எட்டாம் வீட்டு படத்தில் 'சனி செவ்வாய் பரிவர்த்தனை'' பற்றி குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்....(ஒருவேளை தாங்கள் வேறு பாடத்தில் குறிப்பிட்டு இருக்கலாமோ ?அதை பற்றி சற்று தயவு செய்து கூறுங்களேன்.

அதைப்பறிக்கூற வேண்டாம் என்றுதான் விட்டுவைத்தேன். விட மாட்டீர்கள் போலிருக்கிறதே!  Sani-Kuja exchange, in rasi or navamsha, in kendras from lagna "in fateful degrees" the native's death will be through  weapons. இது பொது விதி. உங்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் கவிழ்ந்து படுத்துவிடாமல், எட்டாம் வீடு சம்பந்தப்பட்ட மற்ற அமைப்புக் களையும் சீர் தூக்கிப் பாருஙகள்

கேள்வி-2:
எட்டாம் வீட்டை பற்றிய தங்களது பாடத்தில் ஏழாம் வீட்டு  (களத்திரக்கரன்) அதிபதியின் தசா / புத்தி அல்லது  ரெண்டாம் வீட்டு (குடும்ப ஸ்தான) அதிபதியின் தசா / புத்தி மரணம் (கண்டம்) ஏற்படும் என்று கூறி இருந்தீர்கள்..இது விசயமாக அடியேன் எனக்கு ஒரு சிறு பிள்ளைத்தனமான சந்தேகம்..ஏழாம் வீடு மற்றும் ரெண்டாம் வீடு ரெண்டுமே லௌகீக வாழ்க்கைக்கு உரிய வீடுகள்..அந்த வீட்டின் அதிபதிகளின் தசா புத்தியில் மரணம் ஏற்படுவது அனைத்து பிறவிகளுக்கும் உண்டா? கடுமையான பிரம்மசாரியத்தை கடைப்பிடித்த முனிவர்கள், தபசிகளுக்கும் இது பொருந்துமா? மோட்ச பிறவிக்கும் இது பொருந்துமா?

பிறப்பு (நீங்கள் பட்டியல் இட்டிருக்கும்) அனைவருக்கும் பொதுவானது!
அதை ஒப்புக்கொள்கிறீர்களா? இதையும் ஒப்புக்கொள்ளுங்கள். மரணமும் அனைவருக்கும் பொதுவானதுதான். அதில் ஸ்டேட்டசை வைத்து விதிவிலக்கெல்லாம் கிடையாது!

கேள்வி-3 :
மற்றுமொரு சிறு பிள்ளைத்தனமான கேள்வி...ஒரு மனிதன் ஆறாவது பிறவியில் (எழாவது பிறவி மோட்சமாக இருக்கும் பட்சத்தில்) முன்பகுதியில் அதாவது 30 வயதுக்கு முன் செய்த தவறுகள்/பாவங்களுக்கான பலன்களை அந்த ஆறாவது பிறவியின் பின் பகுதி வாழ்க்கையில் அனுபவிப்பானா? அல்லது கடைசி பிறவியில் (மோட்சமாக இருக்கும் பட்சத்தில்) அனுபவிப்பானா?

நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! எனது அனுபவங்களை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முன் ஜென்ம கர்ம வினைகளின்படி பிறவிகள் அமையும் எனப் படித்துள்ளேன். அனுபவத்திலும் பலரைப் பார்த்துத் தெளிந்துள்ளேன்.

arrears ஆக உள்ள பாவங்கள் எல்லாம் என்ன ஆகும்? அது எந்தக்கணக்கில் வசூலிக்கப்படும்? அல்லது வராத கடன் என்று தள்ளுபடி செய்யப்ப்படுமா? என்கின்ற விவரம் எனக்குத் தெரியாது. நீங்கள் ஏன் அதைப் பற்றி இப்போது கவலைப் படுக்கிறீர்கள்? கடன் கொடுத்தவனல்லவா - அதாவது உங்களை மிச்சம் வைக்க விட்டவன் (கால தேவன்) அல்லவா கவலைப்பட வேண்டும்.

நாங்கள் லண்டனையும், நியூயார்க்கையும், டோக்கியோவையும் தான் (பூவுலக) மோட்சமாக நினைக்கிறோம். நீங்கள் லண்டனில் இருந்து கொண்டு, மோட்சத்தைப் பற்றிக் கேட்கலாமா?

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

அன்பான, அரவனைக்கும் மனைவியைவிடவா சொர்க்கம், மோட்சம் எல்லாம் பெரியது?

  “நீபாதி நான்பாதி பெண்ணே
   நீயின்றித் தூங்காது என்கண்ணே!”
என்று பாடியவாறு நிம்மதியாக இருங்கள்

கண்ணுக்குத் தெரியாத மோட்சத்தைவிட, கைகளால் அணைக்கும் மனைவி மேல்! அதாவது மேலானது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.
கணேஷ் பாவா
சேலம்
வயது: 27

1) Can we get good result from Vakra planet?

பதில் கீழே உள்ளது.

2) What is different between vakra planet and normal planet?

சுழற்சியில் வித்தியாசம். பலன் தருவதில் வித்தியாசம்

3) For example I will give two scenarios for my question If a child born on this period as thanusu lagna, now Jupiter in vakra in kanni. Now can we calculate Jupiter in 3rd place or 4th place in lagna?

தனுசுவிற்கு கன்னி வீடு நான்காம் இடமா? கடிகாரச் சுற்றில் வலம் வந்து கணக்கிடுங்கள். கடிகாரச் சுற்றிற்கு எதிராக எதற்காகச் சுற்றிக் கணக்கிடுகிறீர்கள்? கிரிக்கெட் ஆடுகளத்திற்குச் சென்று கோல் போஸ்டைத் தேடுவதைப் போன்று உள்ளது உங்கள் செயல்!

Generally everybody calculates Jupiter in 4th place as a vakra.
one person moon rasi is thanusu. From 21/12/2009 Guru in 3rd place from moon rasi. So, one year that person meet some kind of bad result. But 5/5/2010 guru transited to 4th place as vakraa. But, many people say, guru still in 3rd place and your problem also continue till next transit of guru.Why this different ? In birth time guru in 4th place as vakra and in Gochara time guru in still in 3rd place.

ராசிச் சக்கரத்தில் உள்ள குருவையும் (birth time guru) கோள்சாரத்தில் உள்ள குருவையும் (Gochara time guru) ஒன்றாக்கிப் பார்த்து மிகவும் குழம்பிப்போய் உள்ளீர்கள்.

வாத்தியார் கேட்டாராம்:  “பஞ்ச பாண்டவர்கள் எத்தனைபேர்?”
பையன் சொன்னானாம்:   “பஞ்சபாண்டவர்கள் கட்டில் கால்களைப் போல மூன்று பேர்!
உங்கள் படிப்பு அந்த நிலையில்தான் உள்ளது. பொறுமையாக மீண்டும் ஒருமுறை அத்தனை பாடங்களையும் படியுங்கள்

4) Why vakra planet improperly moves forward and backward? Plz give me scientific and spiritual explanation for Vakra planet

சுழல்வது மட்டும் எனக்குத் தெரியும். ஏன் சுழல்கிறது? யார் அதைச் சுழலச் சொன்னார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விஞ்ஞான விளக்கத்தை ISRO அல்லது NASA விஞ்ஞானிகளிடம்தான் கேட்க வேண்டும். தெய்வீகமான காரணத்தை சங்கர மடத்தில் கேட்கலாம்.

கேட்டு அல்லது தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை. சேலத்தில்தானே இருக்கிறீர்கள்? வக்கிரகதியைப் மறந்து விட்டு, வில்வாத்திரி பவனுக்குச் சென்று (ஒரு கிண்ணம் பாஸந்தி + மூன்று மைசூர் போண்டா) ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

கிரகங்களின் வக்கிரகதியை (retrogression of planets) வைத்து இத்தனை கேள்விகளா? பழைய பாடங்களை நீங்கள் படிக்காததன் கோளாறு இது. உங்களைத் தனியாக உட்காரவைத்துப் பாடங்களை மீண்டும் நடத்த வேண்டும்.. அது சாத்தியமா?

வக்கிரகதியில் உள்ள கிரகங்கள்: சுப கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் உரிய பலனைத் தராது. தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால்  அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும். ஜாதகன் பல வழிகளிலும் அவதிப்பட நேரிடும். தப்பித்து ஓட முடியாது. அவதிப்பட்டே ஆக வேண்டும். இதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் போதும்.

One more doubt saaar... Plz  ... :)
5) 7 planet and 2 invisible planet each planet have some special unique function or frequency wave. they affected human life. but we are lived in earth.earth also have o2,o3,co2,h2 and so on. human not affected by earth. why?is it any special frequency for earth?in astrology, not representing earth. why?
thanks

இந்தக் கேள்விக்கு நம் வகுப்பறை மாணவரும், ஜாம்பவானும் ஆன ஜப்பான் மைனரைப் பதில் சொல்லப் பணிக்கிறேன்.
-----------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

5.8.10

ராக்கம்மாவும் சனியப்பனும்!

ராக்கம்மாவும், சனியப்பனும் ஒன்றாக இருக்கும் படம் கிடைக்கவில்லை. சும்மா விட வேண்டாம் என்று இந்தப் படத்தைப் போட்டிருக்கிறேன். இவர்களை அவர்களுடன் சம்பந்தப் படுத்திப் பார்த்தால் 
அதற்கு நான் பொறுப்பல்ல!
எனக்குப் பிடித்தமானவர்கள் இவர்கள்...ஹி.ஹி...!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ராக்கம்மாவும் சனியப்பனும்!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 4

சீஸன் என்னும் சொல் விஜய் தொலைக்காட்சி உபயம்

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
---------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண். 11
நித்தியானந்தம். எம்.
வயது 49
கரையாம்பாளையம்
பல்லடம்

குருவுக்கு வணக்கம்!
.1  ஆறாம்வீட்டின் பரல்கள் முப்பத்தாறுக்கு அதிகமாக இருந்தால் கடன் நோய் எதிர்ப்பு ஆகியவை எந்த அளவுக்கு பாதிக்கும்? 

ஆறாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருப்பதால், ஜாதகனுக்கு கடன், எதிரிகள், நோய்கள் ஏற்படும் வாய்ப்பில்லை. ஜாதகத்தில் வேறு அமைப்பினால் ஏற்பட்டாலும், அதைச் சமாளிக்கும், எதிர்க்கும் ஆற்றல் ஜாதகனுக்குக் கிடைக்கும்!

2. ஆறாம் வீட்டில் தனியாக  சந்திரன் நீசமாகி சந்திரன் எட்டு பரல்களுடன் இருந்தால் என்ன பலன்?

சந்திரன் நீசம் பெற்றாலும் எட்டு பரல்களுடன் இருப்பதால், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் ஸ்திரமான மனதைக் கொடுப்பார்.

3. காலசர்ப்ப தோஷத்தில் லக்கினம் சந்திரன் இரண்டும் வெளியே இருந்தாலும் அது அந்த அமைப்புக்குள் வருமா?

வரும்! வரும்! வரும்! 
===================================================
மின்னஞ்சல் எண். 12
S.உமா,
தில்லி
வயது.(துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார்) = 36
பொதுவாகப் பெண்கள் வயதையும், ஆண்கள் வருமானத்தையும் சொல்ல மாட்டார்கள். ஆகவே சகோதரி திருமதி உமாவின் துணிச்சலுக்கு ஒரு “ஓ” போட்டுவிடுவோம்!
   
வணக்கம் சார், எனது சில கேள்விகள்:

1. நீங்கள் முன்பு  Reversal of birth timing பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தீர்கள். மற்றும் பெண்களுக்கான சிறப்பு ஜோதிட விதிகள் பற்றியும் சொல்லி யிருந்தீர்கள்.  உங்களின் வேலைப்பளுவை நாங்கள் அனைவரும் புரிந்து வைத்திருக்கிறோம். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எழுதவும்.

ஜாதகரின் பிறந்த நாள் தெரியும். நேரம் சரியாகத் தெரியாது.  உத்தேசமாகத் தான் தெரியும் என்றால், அதற்கு இந்த Reversal of birth timing முறையில் நேரத்தை சரியாகக் கண்டு பிடித்துத் திருத்திக்கொடுப்பார்கள். நீங்கள் அதற்கு உதவியாக பல செய்திகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். படித்து முடித்த தேதி, வேலையில் சேர்ந்த தேதி, திருமணம் ஆன தேதி போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். தசாபுத்தி, அந்தரங்களை வைத்து அவற்றையும் வைத்து
சரியான நேரத்தைக் கண்டு பிடித்துக்கொடுப்பார்கள். தில்லியில்
சந்தானம் என்பவர் முன்பு அதைச் செய்து கொண்டிருந்தார். அவருடைய கட்டுரைகள் பல அந்தக் கால சஞ்சிகைகளில் (பத்திரிக்கைகளில்) வெளியாயின.

பெண்களின் ஜாதக விஷேசங்கள் குறித்துத் தனிக்கட்டுரைகள் பின்னால் வரவுள்ளன. பொறுத்திருங்கள்.

2. நிறைய கனவுகள் வருவதற்கு எது காரணம்? நான் கேள்விப்பட்டது, கனவுகள் வருபவர்க்கு, ஆழ்ந்த தூக்கம்  இருப்பதில்லை. இதற்கு,12 ஆம் வீட்டைப் பார்க்க வேண்டுமா?

நல்ல தூக்கம் என்பது வரம். பண்பலை வானொலியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்தால், முதல் பாட்டு முடிவதற்குள் தூங்கிவிட வேண்டும். முதல் 2 அல்லது 3 மணி நேரத்திற்குக் கனவுகள் வரக்கூடாது. அதுதான் ஆழ்ந்த தூக்கத்திற்கு அடையாளம். நல்ல தூக்கத்திற்கான அமைப்பு.

கவலை இல்லாத மனிதனுக்கு மட்டுமே நல்ல தூக்கம் கிடைக்கும்.
கவலை இல்லாமல் இருப்பதற்கு அல்லது கவலை இருந்தாலும்
அதை உதறிவிட்டு இருப்பதற்கு, ஜாதகத்தில் மனகாரகன் (அதாங்க
நம்ம சந்துரு) நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் சந்துருவுடன்
ராக்கம்மா (ராகு) கேதம்மா (கேது) சனியப்பன் ஆகிய மூவரும்
சேராமல் இருக்க வேண்டும். அத்துடன் வேறு எங்காவது ஒளிந்து
கொண்டு, சந்துருவைத் தங்கள் பார்வையால் லுக் விடாமல் அல்லது
உங்கள் மொழியில் சொன்னால் சைட் அடிக்காமல் இருக்க வேண்டும்

3. ஒருவர் ஜாதகத்தை வைத்து, அவரின் destiny பற்றி சொல்ல முடியுமா?  ஏன் கேட்கிறேன் என்றால், எனக்குத் தெரிந்த ஒருவரிடம், இன்னொருவர் நீ இந்த காலகட்டத்தில், எழுத்தாளராக இருப்பாய் என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அது சரியாகவும் இருந்தது.  அவர் மேலும் சொன்னது, அதன்பின் நீ ஒரு M.P. ஆவாய் என்று. அது இனிமேல்தான் தெரியும்.

வேலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள், உயர்வுகள், பற்றிச் சொல்ல முடியும். சில சமயங்களில் துறைகளைப் பற்றிச் சொல்ல முடியும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல, pin point ஆக இன்ன position ல் இன்ன வேலை என்று சொல்வதற்கெல்லாம் தெய்வ அருள், வாக்கு சித்தி வேண்டும். உங்கள் மொழியில் சொன்னால் அதற்கு intution power வேண்டும்.

4. ஒருவர் தன் சொந்த ஊரை விட்டு ரொம்ப தூரத்தில் இருப்பார் என்று 
எந்த கிரகம் (அ) அமைப்பை வைத்து சொல்லலாம்?  சில பேர் தன்
வாழ்க்கை முழுவதும் ஒரே இடத்திலும், சிலர் 10, 15 வருடங்களுக்குப்
பின் தன்சொந்த ஊருக்கும் திரும்பி விடுகின்றனர். இதை எப்படி கண்டுபிடிப்பது? தசா புத்தியை வைத்தா?

லக்கினாதிபதி, 10ஆம் அதிபதி, 12ஆம் அதிபதி மற்றும் அவர்களுடைய தசா புத்திகளை வைத்து ஊர் மாற்றங்கள் இட மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டலாம்.

5. ஆண்களுக்கு சுப கிரஹங்கள் கேந்திரத்தில் இருந்தால், அதிக பலன் கிடைக்காது என்பது உண்மையா?  கேந்திராதிபத்ய தோஷம் பற்றி ஒரு பதிவு நேரம் கிடைக்கும்போது எழுதவும்.

உண்மையில்லை! கிரகங்களுக்கு ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடுகள் எல்லாம் கிடையாது. கிரகங்களுக்கு  உமா சேச்சியும் ஒன்றுதான் சுப்பையா வாத்தியாரும் ஒன்றுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.13
A.R.பாபு கிருஷ்ணா,
மலேசியா

ஐயா வணக்கம்.
எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வீகசக்தியை எளிதில் உணர்வார்கள்?
அன்புடன்,
ஏ.ஆர்.பாபுகிருஷ்ணா
மலேசியா

இதற்கு நட்சத்திரங்கள் எதற்கு? ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுப்பவர் கள்  அனைவருமே தெய்வ சக்தியை  உணர்ந்தவர்கள்தான். நன்றாக, தெனாவட்டாக இருக்கும் வரை, எல்லாமே என் செயல் என்ற நினைப்பு இருக்கும்வரை எவனுமே ஜாதகத்தைக் கையில் எடுக்க மாட்டான். நம்மையும் மீறி ஏதோ நடக்கிறது என்பதை உணரும் போதுதான் மனிதன் தெய்வ சக்தியை உணர்வான்.

4ஆம்வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீடு வலுவாக இருக்கும் ஜாதகங்களுக்கு ஞான ஜாதகங்கள் என்று பெயர். அவர்கள்தான் சொத்து, சுகங்களை எல்லாம் இழந்து, அல்லது பறிகொடுத்து, பல துன்பங்கள், ஏமாற்றங்கள், துரோகங் களுக்கு ஆளாகி, இவ்வளவுதான், உலகம் இவ்வளவுதான் என்பதை சீக்கிரம் உணர்வார்கள். அவர்களுக்குத்தான் ஞானம் வரும். அத்துடன்,

  “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
  தன்னாலே வெளிவரும் தயங்காதே..
    தலைவன் இருக்கிறான் மயங்காதே”


என்ற பாடல் வரிகள் அவர்களுக்கு வேதமாகி விடும். நம்மால் நடப்பது ஒன்றும் இல்லை. எல்லாம் ஈசன் செயல்  என்பதை உணர்ந்திருப்பார்கள்.

இப்போது சொல்லுங்கள் யாருக்கு தெய்வ சக்தி எளிதில் தெரியவரும்? அல்லது எளிதில் உணர்வார்கள்?
================================================
(தொடரும்)

இதன் தொடர்ச்சி 9.8.2010 திங்களன்று வெளிவரும். இடையில் வேறு பாடம். வெரைட்டி வேண்டாமா? ருசியாக இருக்கிறது என்பதற்காக புலவு சாதத் தையே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமா? நடுவில் தயிர்சாதம் வித் மாங்காய் ஊறுகாய்.

8.8.2010 ஞாயிறன்று காலை விசேசச் சிற்றுண்டி. இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பாருடன். நமது வகுப்பறை மாணவரின் உபயம். யார் அவர்? அது சஸ்பென்ஸ். சாப்பிடும்போது தெரியவரும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

4.8.10

வாழைப்பழத்தை இலவசமாகத் தந்தால் போதுமா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழைப்பழத்தை இலவசமாகத் தந்தால் போதுமா?

வாழைப்பழத்தை இலவசமாகத் தந்தால் போதுமா? யார் உறித்துத் தின்பது? உறித்துத் தாருங்கள்!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.7
ஷ்யாம் பிரசாத்
   
அன்புள்ள  சார் அவர்களுக்கு ,

1. ஜாதகத்தில் வக்ரத்தில் உள்ள குரு பகவான் நல்லது செய்வாரா ?
Blog Commentல் போஸ்ட் செய்து விட்டேன் . மன்னிக்கவும் .

ஏன் செய்ய மாட்டார்? “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!” என்ன, முழு அளவு செய்ய மாட்டார்.
குறைவாகச் செய்வார். (பதிவிலேயே சொல்லியிருந்தேன். இருந்தாலும் அனைவர் கண்ணிலும் படுவதற்காக மீண்டும் ஒருமுறை இங்கே கொடுத்துள்ளேன்.)

2. http://classroom2007.blogspot.com/2008/07/blog-post_11.html  இந்த போஸ்டில் உள்ள கேள்விகளுக்கு தாங்கள்   பதில் எங்கு எழுதி உள்ளீர்கள்?

இந்த போஸ்ட்டில் உள்ள கேள்விகளா? பின்னூட்டங்களா? அதைத் தெளிவாகச் சொல்லுங்கள். பின்னூட்டங்கள் என்றால், அந்தப் பதிவிலேயே பதில்கள் இருக்கும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.8
கோபாலகிருஷ்ணன்.ஜி
பவானி, ஈரோடு
   
Dear Sir,
             I have one small clarification, i born on 09-04-1984 at 6:40 PM, when my jhathaka written, where they wrote it as kadaka rasi and dhulam lagna and punarpoosam natchathiram and now few months back we have seen computer astrology, there lagna is mentioned as kanni lagna and astrologer told that if these lagna changes won't be problem, prediction(balankal) will be same. please kindly clarify, which lagna we have to consider whether dhulam or kanni. what my doubt is, if lagna is changing means, planets position also will change, and entire prediction will change, is it right sir?, please kindly clarify my doubt, which one i have to follow, whether computer based or astrologer written jhadhakam, it will be very helpful to other's also.
Thank you,
Yours obediently,
Gopalakrishnan.G(Bhavani-Erode)

கர்நாடக இசை வேறு, மேற்கத்திய இசை வேறு. இரண்டும் இசைதான். ஆனால் இரண்டையும் ஒன்றுபடுத்திக் கும்மி அடிக்கக்கூடாது. எல்விஸ் பிரஸ்லியின் பாடலும், திருமதி. சுதாரகுநாதனின் பாடலும் தனிதன்மை வாய்ந்தவை.

அதுபோல பஞ்சாங்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வாக்கியப் பஞ்சாங்கம். இரண்டாவது திருக்கணிதப் பஞ்சாங்கம்.

நம் வகுப்பறைக்கு வரும் பெரும்பாலான ஜாதகர்களின் அப்பாக்கள், உள்ளூர் ஜோசியரிடம் கொடுத்து ஜாதகத்தை manual ஆகக் கணித்து அல்லது எழுதி வாங்கியிருப்பார்கள். அவை அனைத்துமே வாக்கியப் பஞ்சாங்கத்தின்  அடிப்படையில் எழுதப்பெற்றதாக இருக்கும். ஆகவே கணினி மூலம் (திருக்கணிதம்) தன் ஜாதகத்தை ஒரு ஜாதகன் கணித்து எடுத்து, தன் தந்தையார் கொடுத்த ஜாதகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தலை சுற்றும்.
கணினியில் வாக்கிய முறையில் கணிப்பதற்கும் வசதி (option) இருக்கிறது. பலருக்கும் அது தெரியாது.
ஆகவே கணினியில் ஜாதகத்தை உள்ளிட்டு எடுக்கும்போது, இந்த optionஐ பயன் படுத்தி எடுக்க வேண்டும்.
அப்போது சரியாக இருக்கும்!

இப்போது புதிதாக வரும் எல்லோரும் கேட்கும் கேள்வி: இரண்டு பஞ்சாங்கங்கள் ஏன்? அவற்றிற்கிடையே ஏன் வித்தியாசம்?

இதற்குப் பலமுறைகள் நான் பதில் சொல்லியுள்ளேன். பாடங்களை முழுமையாகப் படிப்பதற்குப் பலருக்குப் பொறுமையும், நேரமும் இல்லை. இங்கே உள் நுழைந்து சட்டென்று கேட்பார்கள். பழைய படத்தில் இருக்கிறது என்றால் - அதன் சுட்டியைத் (Link URL) தாருங்கள் என்பார்கள். அதைத் தேடிப்பார்ப்பதற்கு விருப்பம் இருக்காது. நேரம் இருக்காது. சிலருக்கு சோம்பேறித்தனத்தால் தேடிப்பார்க்க வலிக்கும்.

வாழைப்பழத்தை இலவசமாகக் கொடுத்தாலும், கனிந்த பழமாகக் கொடுக்க வேண்டும்
தோலை உறித்துக் கொடுக்க வேண்டும்
துண்டுகள் போட்டு, சாப்பிடுவதற்கு ஏதுவாக picking sticks போட்டும் கொடுக்க வேண்டும்

இன்று அதைச் செய்திருக்கிறேன்.
ஏன் செய்திருக்கிறேன்?
ஒரே / இதே கேள்வியை 3 பேர்கள் கேட்டிருக்கிறார்கள்.


26.12.2009 அன்று கேள்வி - பதில் பகுதியில் இதற்கான பதில் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது. அழுத்திப் பார்க்கவும்!

Doubt: எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?
Doubts: கேள்வி பதில் பகுதி 20 (Dated 27.1.2010)
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபது! (27.1.2010)
URL: http://classroom2007.blogspot.com/2010/01/doubt_27.html

----------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.9
சுபாஷிணி

I have a doubt:
You have been taking on strength/parals of planets.
If a particular planet is debiliated in navamsa will it have high paral points ?
Similarly if a planet is well placed in navamsa is it possible to have low paral points?
In that case which is effective? Either position of planet or paral strength?
For eg sukra is neecha in navamsa but with 67.5% strength but sani is aatchi in navamsa but with least strength.Considering navamsa is magnified version of the raasi chart.
Please explain
Thanks in Advance
Shuba/////

நவாம்சத்தையும், அஷ்டகவர்க்கப் பரல்களையும் ஒன்றாக்கி உங்களை நீங்களே ஏன் குழப்பிக் கொள்கிறீர்கள்?
ராசிக்குத்தானே அஷ்டகவர்க்கம் (அதாவது பரல்கள்) நவாம்சத்திற்குத் தனியாக ஏது பரல்கள்?

நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம் (Magnified version of a rasi chart)
அஷ்டகவர்க்கம் என்பது ஒரு ஜாதகத்தின் பலனை மதிப்பெண்களால் கணக்கிடுவது.

ராசியில் பகைவீட்டில் இருக்கும் கிரகம் அம்சத்தில் உச்ச வீட்டில் இருக்கலாம். அப்படியிருந்தால், அக்கிரகம் ஜாதகனுக்கு உச்சமானதன் பலனையே தரும். கிரகங்களின் உண்மையான வலிமையை நவாம்சத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.( assessing the value of a planet) நவாம்சத்தின் மூலம் செய்யவேண்டும்.

உங்கள் பணியைச் சுலபமாக்க உள்ளதுதான் அஷ்டகவர்க்கம் (பரல்கள்). ராசியில் உச்சமாக உள்ள கிரகம் அம்சத்தில் நீசமாக இருக்கலாம். அதௌ தன் சுயவர்க்கத்தில் 6 பரல்களுடனும் இருக்கலாம். அம்சத்தில் நீசமான
கிரகத்திற்கு சுயவர்க்கத்தில் 6 பரல்கள் கிடைத்தது எப்படி என்றால் என்ன செய்வது. ராசியின் மற்ற அமைப்புக்களைவைத்து வந்திருக்கும். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

சுடிதாரையும், சேலையையும் ஒன்றாகக் கட்டிக்கொள்ள முடியாது. அதாவது உடுத்திக்கொள்ள முடியாது.
அஷ்டகவர்க்கத்தைக் கட்டிக்கொண்டால், அம்சத்தை சற்றுத் தள்ளி வைத்து விடுங்கள். அம்சத்தைக் கட்டிக்கொண்டால், அஷ்டகவர்க்கத்தைக் கொடியில் தொங்க விட்டு விடுங்கள்.

சுடிதாரைப் போட்டுக்கொண்டு அதன் மேல் சேலையையும் கட்டிக்கொள்ளலாமா என்று ஒரு பெண் கேட்டால் என்ன சொல்வீர்கள்?
------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.10
மணிவண்ணன்
பிறந்த ஊர்: ராசிபுரம்
வசிக்கும் ஊர்: ஹைதராபாத்
வயது: 29
   
ஐயா,

பாடங்கள் அருமை. எனக்கு சில சந்தேகங்கள்.

1. மிதுன லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருந்தால் நல்லதா? எட்டாம் இடத்திற்கு 23 பரல்கள். சுக்கிரனுக்கு சுயவர்க்கத்தில் 6 பரல்கள்.

நைசாக சொந்தக் கேள்வியை நுழைத்துவிட்டீர்கள். பரவாயில்லை. பதில் சொல்கிறேன். சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருப்பது நல்லதுதான். ஆனால் கேதுவுடன் இருப்பது நன்மை செய்யும் அமைப்பு அல்ல! 8ல் கேது இருப்பதே நன்மையானதல்ல!

2. 9-ஆம் இடத்து அதிபதி சனியும் 10-ஆம் இடத்து அதிபதி குருவும் சேர்ந்து 4 - ஆம் வீட்டில் இருந்தால் யோகம் எப்பொழுது பலன் தரும்.

தங்களின் தசா/புத்திகளில் தருவார்கள்

3. 4 - ஆம் வீட்டு அதிபதி புதனும் 9-ஆம் இடத்து அதிபதி சனியும் பரிவர்த்தனை ஆனால் பலன் எப்பொழுது கிடைக்கும். தயவு செய்து பதில் சொல்ல முடியுமா அய்யா?

கிரகங்கள் பலனைத் தங்களின் தசா புத்திகளில் தருவார்கள். தரும்வரை காத்திருக்க வேண்டும். ஆட்டோவில் ஆட்களை அனுப்பி கிரகங்களை மிரட்ட முடியாது. தட்டவும் முடியாது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

3.8.10

சைடு டிஷ் இல்லாமல் சாப்பிட முடியாதா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சைடு டிஷ் இல்லாமல் சாப்பிட முடியாதா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 2

சீஸன் என்னும் சொல் விஜய் தொலைக்காட்சி உபயம்

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்

இதன் முதல் பகுதி 29.7.2010 அன்று வெளியானது. அதற்கான சுட்டி இங்கே!

+++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.3
ராம்குமார்
சென்னை
வயது 32+
   
Dear Sir,
You have taken most of the lessons, but u have not taken the lessons on Dosams, which are mainly playing the spoiler role in lot of girls and boys marriage. just explain us on the some of them such as Chevvai, Kalasurbam,
with regards,
P.Ramkumar

நமது வகுப்பறையில் நிறைய திருமணம் ஆகாத அல்லது கூடிவராத இளைஞர்கள் இருக்கிறார்கள். திருமண வயதில் பெண் குழந்தைகளை
வீட்டில் வைத்திருக்கும் பெரியவர்களும் இருக்கிறார்கள். அவர்களைக்
கலவரப்படுத்த வேண்டாம் என்றுதான் செவ்வாய் தோஷத்தைப் பற்றி விரிவாக எழுதவில்லை.

செவ்வாய் தோஷத்தைப் பற்றி ஜோதிடர்களிடையே இரு வேறு கருத்துக்கள் உள்ளன. சிலர் இருக்கு என்பார்கள். சிலர் அதையே இல்லை என்பார்கள்.

தன் சொந்த வீட்டில் மற்றும் உச்ச வீட்டில் இருக்கும் செவ்வாய் தோஷத்தைக் கொடுக்காது. அது தனக்குத்தானே  தோஷத்தை செய்து கொள்ளாது என்பவர்கள் ஒரு சாரார். இல்லை எங்கே இருந்தாலும் செவ்வாய் செவ்வாய்தான் தோஷம் உண்டு என்று மற்றொரு சாரார் சொல்வார்கள்.

2, 4, 7, 8 & 12ஆம் வீடுகளில் இருக்கும் செவ்வாயால் ஜாதகனுக்குத்
தோஷம் உண்டு. 7 & 8ஆம் வீடுகளில்  முழு அளவும், மற்ற
இடங்களில் குறைந்த அளவும் இருக்கும். திருமணத்திற்கு செவ்வாய் தோஷத்தைப் பார்த்துத்திருமணம் செய்வதுதான் நல்லது. தோஷமுள்ள ஜாதகிக்கு, தோஷமுள்ள ஜாதகனைத் திருமணம் செய்வதுதான் நல்லது. பெண்ணை விட ஆணுக்குத் தோஷம் குறைவாக இருக்கக் கூடாது.

தோஷம் இல்லாத ஒருவரையும், கடுமையான தோஷம் இருக்கும் ஒருவரையும் இணைத்தால் என்ன ஆகும்?

இருவரில் ஒருவரைத் தூக்கிவிடும். (தூக்கிவிடும் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா?) அல்லது (நீதி மன்றம்வரை சென்று) ஒருவரை ஒருவர் பிரிய நேரிடும். The marriage will end in separation. விளக்கம் போதுமா?

காலசர்ப்ப தோஷம் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது!
-----------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் 4
தமிழ்மணி மாணிக்கம்.
பெங்களூர்
வயது 29

வணக்கம் அய்யா,
எனது சந்தேகங்கள்...

1. ஜாதக நிபுணராக (குறைந்தபட்சம் ஜாதக அறிவு பெற) நமது ஜாதகம் அமைப்பு எப்படி இருக்கவேண்டும்.?

குறைந்தபட்ச அறிவு பெற ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். நிபுணத்துவம் எனும்போதுதான் சிக்கல். படித்தது எல்லாம் விளங்க
வேண்டும். மண்டையில் ஏற வேண்டும். மறக்காமல் நினைவில்
இருக்க வேண்டும்.தேவைப்படும் சமயத்தில் வெளிப்பட வேண்டும்.
அதற்கு ஜாதகத்தில் புதன் நன்றாக இருக்க வேண்டும். புதன் ஆட்சி
அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கேந்திரங்கள்
அல்லது திரிகோண வீடுகளில் இருக்கவேண்டும். சுபர்களின் சேர்க்கை/
பார்வையைப் பெற்றிருக்காவிட்டாலும், தீயவர்களின் சேர்க்கை/
பார்வையைப்  பெற்றிருக்கக்கூடாது.

2. குலதெய்வ வழிபாட்டிற்கும் ஜாதகத்திற்கும் தொடர்பு உண்டா?

ஜாதகத்திற்கு இல்லை. ஆனால் சுபிட்சமான, அம்சமான குடும்ப
வாழ்க்கைக்கு உண்டு. குடும்ப ஒற்றுமைக்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும் குலதெய்வங்கள் வழிகாட்டும்.

2-A குலதெய்வ வழிபாட்டை இரண்டு மூன்று தலை முறை செய்யவில்லை என்றால்?

அறியாமல் செய்யவில்லை என்றால் ஒன்றும் ஆகாது.

2 -B, குலதெய்வம் என்ன என்பது தெரியவில்லை என்றால் மீண்டும் 
எவ்வாறு குலதெய்வ வழிப்பாட்டைத்  தொடர்வது?

கருப்பர், அய்யனார் என்று ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்
குலதெய்வம் இருக்கும். ஒரு நல்ல காரியத்தைத்  துவங்கும்
முன்பாகக் குல தெய்வத்தை வழிபட்ட பிறகுதான் துவங்குவார்கள்.
எங்கள் பகுதியில்  முன்னோர்களையே குல தெய்வங்களாக
வழிபடும் பல குடும்பங்கள் உண்டு. படைப்பு (படையல்) வைத்து
அனைவரும் சேர்ந்து வழிபடுவார்கள். ஆகவே நீங்களும் உங்கள் முன்னோர்களைக் குல தெய்வங்களாக நினைத்து வழி படலாம்.
உங்களின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி, கொள்ளுத்தாத்தா,
கொள்ளுப்பாட்டிஅனைவரும் குல தெவங்களே! குல தெய்வம்
என்பது குடும்ப தெய்வம். நீங்கள் வழிபடுவதற்கான முதல் தெய்வம்.

3.. நவக்கிரக தோசங்களுக்கு செய்யப்படும் பரிகாரம் அல்லது பரிகார ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மீண்டும் மீண்டும் குறிபிட்ட இடைவெளியில் செய்யவேண்டுமா? அல்லது ஒருமுறை 
செய்தால் போதுமா?

பணத்தைச் செலவழித்துச் செய்யும் பரிகாரங்கள் எல்லாம்
பரிகாரமாகாது. பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம். அது உங்கள்
வசதியையும், பொருளாதார சூழ்நிலையையும் பொறுத்தது. அந்தந்த ஸ்தலங்களுக்குச் சென்று வருவதை ஒரு முறை செய்தால் போதும். ஒருமுறை கூடச் செய்ய இயலாதவர்கள், தங்கள் இருப்பிடத்தில்
இருந்தே கோளறு திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வழிபடலாம்.
செலவே இருக்காது. வசதி இருக்கிறவர்கள்அடிக்கடி சென்று வரலாம்.

4.  6 , 8 , 12  போன்ற மறைவிடங்களில் நிற்கும் லக்கினாதிபதிக்கு அது 
சொந்த வீடாக இருந்தாலும் வலு  இல்லையா?

மேஷ லக்கினத்திற்கு, விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய்.
ரிஷப, துலா லக்கினங்களுக்கு அதிபதி சுக்கிரன்.
மிதுன, கன்னி லக்கினங்களுக்கு அதிபதி புதன்
மீன, தனுசு லக்கினங்களுக்கு அதிபதி குரு
மகர, கும்ப லக்கினங்களுக்கு அதிபதி சனி
கடக லக்கினத்திற்கு அதிபதி சந்திரன்
சிம்ம லக்கினத்திற்கு அதிபதி சூரியன்
சிலருக்கு மட்டுமே 6, 8, 12ஆம் இடங்கள் எப்படி சொந்த வீடாக அமையும். உதாரணத்திற்கு மேஷ லக்கின செவ்வாய், விருச்சிகத்தில் இருந்தால்
(8ஆம் இடம்) அது அவருக்கு சொந்த வீடு. துலா லக்கினச் சுக்கிரன்,
ரிஷபத்தில் இருந்தால் அது அவருக்கு சொந்த வீடு. அதுபோல
இருவருக்கும் 6ஆம் இடமும் சொந்த இடமே!.

மிதுன புதனுக்கு 4ஆம் வீடும், கன்னி புதனுக்கு 10ஆம் வீடும் சொந்த வீடுகள். மற்றபடி வேறு எந்த இடமும்  சொந்த இடமாகாது. குரு பகவானுக்கு மீனத்தில் இருந்து 10ஆம் வீடும், தனுசுவில் இருந்து 4ஆம் வீடும் சொந்த  வீடு. வேறு இடங்கள் சொந்த வீடாகாது.

கும்ப சனிக்கு அதன் 12ஆம் வீடான மகரம், மட்டுமே சொந்த வீடு

கடகச் சந்திரனுக்கும், சிம்மச் சூரியனுக்கும் தங்கள் லக்கினத்தைத் தவிர வேறு சொந்த இடம் எதுவும் இல்லை.

6, 8 & 12ஆம் இடங்கள் தீய இடங்கள். (inimical places) அங்கே
அமரும் லக்கினாதிபதிகள் ஜாதகனுக்கு உரிய  நன்மையைச் செய்ய மாட்டார்கள். சொந்த வீடாக இருந்தாலும் செய்ய மாட்டார்கள்.
உரிய எனும் சொல்லைக்கவனிக்கவும். ஜாதகன் அத்தனைக்கும்
எதிர் நீச்சல் போட வேண்டியதாக இருக்கும்.

ஆட்சி வீடுகள் = சொந்த வீடுகள். இங்கே அமரும் கிரகங்கள் அதிகாரத்துடன் இருக்கும். உச்ச வீடுகள்: மாமியார் வீடுகள் எனலாம். இங்கே சர்வ அதிகாரத்துடன் இருக்கும்.நட்பு வீடுகள்: விருந்தினராகத் தங்கும் வீடு. அதற்குரிய செல்வாக்கு மட்டும் இருக்கும் 6, 8 & 12 பகை
வீடுகள் பாம்புகள் அதிகமாக இருக்கும் வனம். இங்கே அமரும்
கிரகங்கள் ஜாதகனுக்கு உரிய பலனைத்தரமுடியாமல் இருக்க நேரிடும்.
நீச வீடுகள்: நீரில்லா பாலைவனம். அங்கே கிரகங்கள் எப்படி இருக்க
நேரிடும் என்பதை உங்கள் கற்பனைக்கே  விட்டு விடுகிறேன்! (ஒரு உதாரணத்திற்காக இவற்றைச் சொல்லியிருக்கிறேன்)
------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் 5
தாமோதரன்
பிறந்த ஊர்: திருச்செந்தூர்
வசிக்கும் ஊர்: மதுரை
வயது: 26
   
அய்யா,
கேள்வி :

1. மேஷம், துலாத்தில் சனியும், சூரியனும் சேர்ந்திருப்பது மற்றும் 
ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும் சேர்ந்திருப்பது  இந்த அமைப்பு
நீசபங்க ராஜ யோகம்.  சனிக்கு,  சூரியனும் மற்றும் ராகுவுக்கு, 
சந்திரனும்  எதிரிகள் என்பதால் நீசபங்க ராஜ யோகம் முழுப் 
பலனையும்  தருமா ? எத்தனை சதவீதம் பலன் கிடைக்கும் ?

ஏன் இந்த சந்தேகம்? அடிப்படைப் பாடத்தையே சந்தேகப்படலாமா? அடிப்படைப்பாடத்தை சந்தேகப் படுவது  பெற்ற அன்னையை சந்தேகப் படுவதற்கு நிகரானது. யோகம் யோகம்தான். ரிஷபத்தில் உச்சமான
சந்திரன்  ஜாதகத்தில் தான் எந்த வீட்டிற்கு (எண்ணிக்கையில்)
அதிபதியோ, அந்த வீட்டிற்கான அதிகபட்ச பலனைத் தருவார்.
மற்ற கிரகங்களும் அப்படியே தருவார்கள். தங்கள் தசா/புத்திகளில் தருவார்கள். இல்லையென்றால் யோகத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடாதா? அதை எழுதிவைத்த ரிஷிகளின் வாக்கும்
பொய்யாகிப்  போய்விடாதா? எத்தனை சதவிகிதம் பலன் என்பதைத்
தராசு வைத்தா பார்க்கமுடியும்? லக்கினாதிபதி, சுகாதிபதி,
பூர்வபுண்ணியாதிபதி, பாக்கியாதிபதி, லாபாதிபதி போன்றவர்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

நான் பிறந்த வருடம் 1984. இந்த வருடத்தில் கேது விருசிகத்தில்(உச்சம) ராகு ரிசபத்தில் (நீசம்) என்னுடைய நண்பர்கள் இருவர் விறுசிகம் மற்றும் ரிசப ராசிகரர்கள். அவர்களுடைய ஜாதகத்தை வாங்கி அதன் மூலம் ஒப்பிட்டு படித்து வருகிறேன். அவர்களுடைய ஜாதகத்தில்  நீச பங்க ராஜ யோகம் அமைப்பு வுள்ளது.   என்னுடைய தனிப்பட்டு ஜாதக விளக்கம் பெறுகிறேன் என்று இந்த வினாவைத் தவிர்த்து விட வேண்டாம். சென்ற
முறை தங்கள் என்னுடை வினாவை தவிர்த்து விட்டீர்கள். தயவு கூர்ந்து என்னுடைய சந்தேகத்தை விளக்கவும்.
நன்றி !

வேண்டுமென்று எதையும் நான் தவிர்ப்பதில்லை. வகுப்பறை
மாணவர்களில் 99% எனக்குத் தெரியாத முகங்களே. அவர்களில்
எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்னும் பேச்சிற்கே
இடமில்லை. சொந்த ஜாதகங்களை வைத்துக் கும்மி அடிப்பதை
மட்டுமே தவிர்ப்பேன். சென்றமுறை அதுதான் நடந்திருக்கும்.
---------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.6
புனைப்பெயர்: Miss Sija
நிஜப் பெயர்: நிஷாந்தி
வசிக்கும் ஊர்: Swiss
வயது 20க்கு மேல், 25க்கு உள்ளே :)

வணக்கம் ஐயா!

இதோ எனது கேள்வி:
1. திருமணத்திற்காக 10 பொருத்தம் பார்ப்பார்கள். மணமகள், மணமகன் ஜாதகத்தில் திருமணவாழ்க்கை நன்றாக இருக்கும் என்றிருந்தாலும், இருவருக்கும் 10 பொருத்ததில் ஒரு பொருத்தமும் இல்லை என்றால்..இருவருக்கும்  திருமணம் பண்ணி வைத்தால் சந்தோஷமாக 
வாழ மாட்டார்களா? இந்த 10 பொருத்தத்துக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இரண்டு ஜாதகமும் நல்லா இருந்தால் பொருத்தம் தேவை இல்லையா?

சைடு டிஷ் இல்லாமல் சாப்பிட முடியாதா?
சட்னி, சாம்பார் இல்லாமல் வெறும் இட்லியைச் சாப்பிட முடியாதா?
காரக் குழம்பு இல்லாமல் வெறும் சோற்றைத் திங்க முடியாதா?
காய்கறிகள் இல்லாமல் வெறும் உணவை உண்ணக்கூடாதா?
தாளக் கருவிகள் இல்லாமல் பாடலுக்கு இசை அமைக்க முடியாதா?
ஜதி, அடவுகள் இல்லாமல் நடனம் ஆட முடியாதா?

  “இரண்டு ஜாதகமும் நல்லா இருந்தால் பொருத்தம் தேவை இல்லையா?” என்று கேட்பது, பாசுமதி அரிசிச்  சாதம் என்றால் சாம்பார், ரசம், தயிர், காய்கறிகள், ஊறுகாய் இல்லாமல்  சாப்பிடலாமில்லையா
என்று கேட்பதைப்போல உள்ளது.

முடியாது என்று எதுவும் இல்லை. எல்லாம் மனதைப் பொறுத்த விஷயங்கள்.

ஜாதகத்தைப் பார்த்தால்தானே இந்தப் பிரச்சினைகள். ஜாதகத்தைப் பார்க்காமலேயே திருமணம் செய்து  கொள்ளலாம். விதிப்படி
நடக்கட்டும் என்று விட்டு விடலாம். இறைவன் பார்த்துக்கொள்வான்
என்று விட்டு விடலாம்.

பார்த்தால் இரண்டையுமே பார்க்க வேண்டும். பொருத்தமும்
வேண்டும். ஜாதகங்களும் அமைப்பாக இருக்க  வேண்டும். வசியப்
பொருத்தம் (mutual attraction) ரஜ்ஜுப் பொருத்தம் (duration of married life)
மகேந்திரப் பொருத்தம் (குழந்தை பாக்கியம்) என்று பத்து விதமான பொருத்தங்கள் இருந்தாலும், தினம், கணம், யோனி, ராசி  &
ரச்சு ஆகிய ஐந்தும் முக்கியமானவை என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

அதுபோல, பெண்ணின் நட்சத்திரம் மூலமாயின் மாமனாருக்கும், ஆயில்யமானால் மாமியாருக்கும்,  கேட்டையானால் மூத்த
மைத்துனருக்கும், விசாகமானால் இளைய மைத்துனருக்கும்
ஆகாது என்றும் மேற்படிதோஷங்கள் புருஷ நட்சத்திரங்களூக்கு
இல்லை என்றும்  நூல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் இருவரின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருக்கிறதா
அல்லது இல்லையா என்றும் பார்க்க வேண்டும். தசா சந்திப்பு உள்ளதா
என்றும் பார்க்க வேண்டும். இருவருக்கும் ஏழாம் இடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட தீயகிரகங்கள் ஒன்றாக இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.

தலை சுற்றுகிறதா? ஆமாம் சுற்றும்!

இதற்கு ஏதாவது மாற்று வழி இல்லையா?

ஏன் இல்லை?

ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, நடப்பது நடக்கட்டும்
என்று ஜாதகத்தைப் பார்க்காமல் திருமணம் செய்வதுதான் உத்தமம்.
ஜாதகம் பார்க்க ஆரம்பித்தால் திருமணம் தள்ளிக்கொண்டே போகும்.
ஜாதகம் பொருந்தினால், ஆசாமியைப் பிடிக்காது. ஆசாமியைப்  பிடித்திருந்தால் ஜாதகம் பொருத்தமாக இருக்காது. பெரிய
தலைவலியாக இருக்கும்! உங்கள் மொழியில் சொன்னால்
மண்டைக் குடைச்சலாக இருக்கும்:-)))))

ஜாதகம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், வருவதைத் தவிர்க்க முடியாது. விதியைத் தடுக்க முடியாது. அதை மனதில் வையுங்கள்.
----------------------------------------------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

29.7.10

Doubts - “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா?”

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubts - “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா?”

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 1

சீஸன் என்னும் சொல் விஜய் தொலைக்காட்சி உபயம்

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
------------------------------------------------
மின்னஞ்சல் எண் ஒன்று!
கண்ணன் சீதாராமன்,
கத்தார்

   
ஐயா வணக்கம்.

1.ஒருதிசை நடக்கும் பொழுது அதன் புத்தினாதன் வேலை செய்ய மாட்டார் என்பது உண்மையா அதாவது புதன் திசையில் புதன் புத்தியில் புத்தினாதன் வேலை செய்யமாட்டார் மறு புத்தி வந்த உடன்தான் வேலை செய்வார்  என்று கேள்விபட்டது உண்டு. உண்மையா?

உண்மைதான். சுயபுத்தியில் கிரகங்கள் உரிய பலனைத் தராது. சுபகிரகங்கள் நன்மையான பலனைத்தராது. தீயகிரகங்கள் தீய பலனைத் தராது. இரண்டையும் சேர்த்துப்பாருங்கள். நன்மையாகத் தெரியும்:-))))

2. கால சர்பதோசம்  உள்ளவர்கள் அதே காலசர்ப்ப தோஷம் உள்ள பெண்ணை கல்யாணம் செய்தால் நன்று என்பது உண்மையா?  எந்த அளவில் சாத்வீகப்படும் ஐயா இதற்கு வேறு ஏதேனும் விதி விலக்கு உண்டா ஐயா

தோஷம் உள்ளவர்கள், தோஷம் உள்ள பெண்ணை மணக்கலாம். அது செவ்வாய் தோஷத்திற்கு மட்டும்தான்.
எனக்குத் தெரிந்தவரை, காலசர்ப்ப தோஷத்திற்கு அதுபோலச் செய்யச் சொல்லி யாரும் கொடிகாட்டவில்லை.

3. ஐந்தாவதாகப் பிறக்கும் ஆண்குழந்தை ஆகாது என்கின்றனரே ஏன்? இதற்கு  ஜோதிட ரீதியாக காரணம் ஏதேனும் உண்டா?

அதெல்லாம் உண்மையில்லை. எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? இப்போது உள்ள கல்விக் கட்டணங்களாலும், விலைவாசியாலும், யாரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை.

இன்றையத் தாரக மந்திரம் இதுதான்:
நாம் இருவர்
நமக்கு இருவர்
எப்போதும்
நாம் நால்வர்!

கூட்டுக் குடும்பங்களை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டார்கள். இன்று எல்லாம் சிறு குடும்பங்களே (Micro Families)
சுயநலம் மிகுந்துவிட்டது. பெற்றோர்களைக்கூடக் கவனிக்க பலருக்கும் நேரமில்லை. அதுதான் உண்மை!
கையில் காசை வைத்திருக்கும் பெற்றோர்கள் தப்பிப்பார்கள். இல்லையென்றால் முதியோர் இல்லம்தான்!
--------------------------------
4. தனது ஜாதகத்தை வைத்து கொண்டு தனக்கு வரும் மனைவி மக்களை  எவ்வாறு தெரிந்து கொள்வது ஐயா அதாவது படிப்பு, வேலை, மற்றும் இனம், மொழி என தெரிய வழி வகை உண்டா?

இனம், மொழியை எல்லாமா? சொந்தத்திலா அல்லது அந்நியத்திலா என்பது மட்டுமே தெரியும். எழாம் அதிபதி அல்லது சுக்கிரன், சூரியன் அல்லது சந்திரனோடு தொடர்பு கொண்டிருந்தால் சொந்தத்தில் திருமணம். இல்லையென்றால் அந்நியத்தில் திருமணம். ஏழாம் அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருந்தால், வேறு சுபப்பார்வையின்றி இருந்தால், கலப்புத்திருமணம்.

எந்த மொழியில் திட்டினால் என்ன? மனைவி திட்டினால், அழகாகத்தான் இருக்கும். இரசித்துக் கேட்கப் பழகிக் கொள்ளுங்கள்.
  “சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?” என்றார் கவியரசர் கண்ணதாசன். அதையே சற்று மாற்றி இப்படிப் பழகிக்கொள்ள வேண்டியதுதான்: “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா?”

(மக்களைப் பற்றித் தனிபதிவாக பின் ஒருநாள் எழுதுகிறேன். பெரிய பதிவாக எழுத வேண்டும்)

5. உலகில் உள்ள ஜீவா ராசிகளை பஞ்சபூதங்கள் தான் ஆட்சி செய்கின்றன என்பது உண்மைதானே அப்படி இருக்க விதியை மதியால் எப்படி வெல்ல முடியும்?  அதுதான் சொல்லுவார்களே கடினமாக உழைத்தால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்பது எப்படி ஐயா உண்மை ஆகும் . அதுதான் ஊழ் வினை உழைக்க விடாதே அப்படியே முயற்சி செய்தாலும் கோவலன் கண்ணகி கதையால் அல்லவா முடிவாகிபோகும் ஐயா மிகவும் அருமையாக கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் பிள்ளையார் பிடிக்கப் போகக் குரங்கு ஆன கதையாக அல்லவா ஆகி விடும் ஐயா
kannan Seetharaman
Qatar.


பஞ்சபூதங்கள்தான் ஆட்சி செய்கின்றன. நீரும், நெருப்பும், காற்றும், மண்ணும் இல்லை என்றால் நீங்கள் ஏது? நான் ஏது? இந்த உலகம்தான் ஏது?

விதியை மதியால் வெல்ல முடியுமா? வெல்ல முடியாது!

இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம். அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை! வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று உயிருடன் இருந்திக்க வேண்டும்!

அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக் கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும் அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும் கிடையாது"

Nothing is stronger than destiny!

மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப்பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை
இறைவன் எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!

அதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர்  கண்ணதாசன் அவர்கள். எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே வாழ்ந்த அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் - எத்தனை இலட்சம் தமிழ் உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்! அவர் எழுதிச் சென்ற கவிதைகளை எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இதை வெறும் அதிர்ஷ்டக் கணக்கில் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அவருக்கிருந்த  தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்யவைத்தன!

இந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி  திருவினையாக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.
----------------------------------------------------------------------------------------
2
Chittoor.S.Murugesan said...:
சித்தூர் முருகேசன்

    ஐயா,
    சுமார் இரண்டு மணி நேரத்துக்கு ஒரே லக்னம் தான். இந்தியாவில் நிமிடத்துக்கு 4 குழந்தை பிறக்கிறது. 120 நிமிடத்துக்கு 480 குழந்தைகள் ஒரே லக்னத்தில் ஒரே ஜாதகத்தில் பிறக்கின்றன. ஆனால் 480 சூப்பர் ஸ்டார்களோ, 480 சச்சின் டெண்டுல்கர்களோ இல்லை. இதற்கு காரணம் என்ன?
    (நமக்குனு ஒரு குன்ஸு இருக்குங்கண்ணா . நீங்க அஃபிஷியலா,தியரிட்டிக்கலா எத்தனையோ மேட்டர் சொல்றிங்க இந்த மேட்டர்ல என்ன சொல்றிங்க பார்க்கலாமேனு ஒரு ...இது)

நல்ல கேள்வி சித்தூர் முருகேசன். நீங்கள் தொழில்முறை ஜோதிடர். ஜோதிட ஆய்வாளர். செய்தித்துறையில் இருக்கிறீர்கள். இரண்டு மொழிகளில் பாண்டித்துவம் மிக்கவர். (தமிழ், தெலுங்கு) நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கலாமா? நான் என்ன சொல்வேன் என்று பார்க்க இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். சரிதான். உங்களின் ஆர்வம் வாழ்க! வளர்க!

நீங்கள் சொல்லும் (480) குழந்தைகள் எல்லாம் குவியலாக ஒரே ஜாடியில் ஜனிப்பதில்லை. அதாவது ஒரே இடத்தில் பிறப்பதில்லை. இந்தியா எத்தனை பெரிய தேசம். அட்ச ரேகை, தீர்க்க ரேகை, இந்தியப் பொது நேரம், உள்ளூர் நேரம் என்ற கணக்கெல்லாம் எதற்கு இருக்கிறது?

இந்திய நேரப்படி 9:30 மணி என்றால், அந்த நேரத்தில் கான்பூரில் மணி ஒன்பதரை.. கொல்கத்தாவில் மணி பத்து. மும்பையில் மணி  ஒன்பது மட்டுமே. அந்த ஷணத்தில் இந்த 3 ஊர்களிலும் பிறக்கும் குழ்ந்தைகளின் ஜாதகம் மாறுபடாதா?

சென்னைக்கும், கோவைக்கும் 13 நிமிடங்கள் வித்தியாசம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த இரு ஊர்களிலும் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் வேறு படாதா?

அட்ச ரேகை, தீர்க்க ரேகைகள்:
சென்னைக்கு: 13.04' N, 80.17' E. .
கோவைக்கு:  11.00' N. 77.00' E

3.17 பாகைகள் வித்தியாசம்தான் 13 நிமிடங்களை வேறுபடுத்துகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மற்ற ஊர்களுக்குத் தெரிந்துகொள்ள இங்கே சுட்டி உள்ளது.

நாடி முறையில் 150 நாடிகள் உள்ளன. அவற்றையும் இரண்டாகப் பிரிக்கலாம். பூர்வ நாடி. உத்திர நாடி. ஆக மொத்தம் 300 பிரிவுகள். அவற்றின் அளவுகள் ஒரே மாதிரியானவை அல்ல! அவற்றை மேலும் பிரித்தால் 8 விநாடிகளுக்கு ஒரு நாடி வரும் (விநாடி என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்கவும்). சுருக்கமாகச் சொன்னால், எட்டு விநாடிகள் வித்தியாசத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகளின் ஜாதகம்/வாழ்க்கை வெவ்வேறாக இருக்கும்.

(The concept of Cuspal Interlinks Theory is basically the concept of Nadiamsha. In Nadi system  there are 150 nadis and each has been divided into two parts- Purva and Uttara. The prediction for the native born in purva of a naadi is quite different from that of Uttara. In Nadi astrology smallest nadiamsa is of 1 minute 40 seconds and the largest one is of 30'. While in Sub-Sub theory, smallest Sub-Sub arc is of 2' and the largest Sub-Sub arc is of 22.2'. Thus, the division in Cuspal Interlinks Theory is very close to that of Nadiamsha. Since 15" arc of Ascendant rises on the eastern horizon in 1 second change of time. So the Ascendant's arc of 2" (smallest arc in Sub-Sub theory) will rise in approximately 8 seconds. It means the nativity of two individuals, born in the interval of 8 seconds (in case of smallest arc), will be totally different. Like Nadiamsha theory as to with division of a Nadiamsha in purva and uttara, here also the sub-sub arc of Ascendant is divided into two parts - former part and later part. Former part in male sign indicates Male native while later part in male sign indicates Female native. While later part in female sign indicates Male and Former Part in Female sign indicates Female. So, if a male native has to take birth while the smallest arc of ascendant is rising (for example only) in a male sign, he will have to take birth in the former part i.e. up to 4 seconds change of time. This is why, in Sub-Sub Theory , nativity of an individual always tends to be unique to specify uniqueness of native and horoscope prepared is supposed to simulate the destiny of native)
நீங்கள் ஜோதிடர்களை மடக்கும் விதமாக, “அந்த எட்டு வினாடிகளுக்குள், ஒரே மருத்துவமனையில் இரண்டு வெவ்வேறு அறைகளில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் எப்படி இருக்கும்?” என்று கேட்கலாம்.

அதற்கும் பதில் இருக்கிறது. அந்த ஜாதகங்களுக்கு இணையான ஜாதகங்கள் (parallel horoscopes) என்று பெயர். இருவரது வாழ்க்கையும் ஒன்று போலவே இருக்கும். இவனும் எட்டாவது வரையே படித்திருப்பான். அவனும் எட்டாவது வரையே படித்திருப்பான். இவனும் கூலித் தொழிலாளியாக வேலை பார்ப்பான். அவனும் கூலித் தொழிலாளியாக வேலைபார்ப்பான். இவனும் 48 வயதில், மனைவி இரண்டு குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டு மாண்டு போவான். அவனும் 48 வயதில், மனைவி இரண்டு குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டு மாண்டு போவான்.

இணையான ஜாதகங்களின் வாழ்க்கை வேறுபடாதா? ஒரே மாதிரியாகத்தான் இருக்குமா?

பூர்வ புண்ணியத்தை வைத்து, சில குறிப்பிடும்படியான வேறுபாடுகள் இருக்கும். வாழ்க்கை வசதிகள், குடும்பப் பாசம் போன்றவை வேறு படலாம். அதெல்லாம் பூர்வ புண்ணியக்கணக்கில் வரும். அதைக் கணித்துச் சொல்ல எந்தக் கொம்பனுக்கும் சக்தி கிடையாது. அது தர்ம, கர்மக் கணக்கு.

ஒரே ஷணத்தில் பிறந்த இருவரில் ஒருவன் Citi Bankல் வேலை பார்ப்பான். இன்னொருவன் உள்ளூர் கோ-ஆப்பரேடிவ் வங்கியில் வேலை பார்ப்பான். வாங்கும் சம்பளத்தால் இருவருடைய வாழ்க்கைத் தரமும் வேறுபடும்.

ஒருவன் Times of India நாளிதழில் செய்தி ஆசிரியராக வேலைபார்ப்பான். இன்னொருவன் சிவகாசி போன்ற சிற்றூர்களில் இருந்து வெளியாகும் சிறு நாளிதழில் வேலை பார்ப்பான். ஒருவன் மணி ரத்தினத்திடம் உதவியாளனாக வேலை பார்ப்பான். இன்னொருவன் உப்புமா இயக்குனர் ஒருவரிடம் உதவியாளனாக வேலை பார்ப்பான். இந்த வித்தியாசம் எல்லாம் பூர்வ புண்ணியம் செய்யும் ஜகஜால வேலை.

விளக்கம் போதுமா அன்பரே?

இல்லை என்றால், மீண்டும் வருகிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அறிவிப்பு:

   “வாத்தியார் முன்னதாகவே கேள்வி பதில் வகுப்பைத்
துவங்கிவிட்டாரே” என்று யாரும் நினைக்க வேண்டாம்.
1.8.2010 ஞாயிறன்று வகுப்பறை மாணவர் ஒருவரின்
‘நீங்காத நினைவுகள்’ கட்டுரை வெளியாக உள்ளது,
யாருடையது அது? என்கிறீர்களா? பதிவைப் பார்த்துத்
தெரிந்து கொள்ளுங்கள். அதுவரை அது சஸ்பென்சாகவே
இருக்கட்டும்.

சஸ்பென்ஸ் இல்லை யென்றால் வாழ்க்கை சுவைக்காது.

அத்துடன் 2.8.2010 அன்று வாத்தியார் வெளியூர்ப் பயணம். அன்று
வகுப்பிற்கு விடுமுறை. ஆகவேதான் உங்களுடைய ஏமாற்றத்தைத்
தவிர்க்கும் முகமாகக் கேள்வி பதில் வகுப்பு இன்றே துவங்கியுள்ளது. கேள்விகள் நிறைய வந்துள்ளன. ஒவ்வொன்றாக வலயேறும்.
அடுத்த கேள்வி பதில் வகுப்பு 3.8.2010 செவ்வாயன்று.
அனைவரும் பொறுத்திருந்து படிக்கவும்!
----------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

28.7.10

Doubts: நீங்களும் உங்கள் சந்தேகங்களும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubts: நீங்களும் உங்கள் சந்தேகங்களும்!

Doubts: மீண்டும் ஒருமுறை நீங்களும், உங்கள் சந்தேகங்களும் பகுதி!

மீண்டும் ஒருமுறை உங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம் என்று உள்ளேன். ஆகவே உங்களது   சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

மின்னஞ்சலின் Subject பெட்டியில் Doubts in Lessons என்று மறக்காமல் குறிப்பிடவும்.

ஒரு மின்னஞ்சலில் அதிகபட்சமாக நான்கு கேள்விகள் கேட்கலாம். அதற்கும் மேலாகக் கேள்விகளை  வைத்திருப்பவர்கள் மற்றொரு மின்னஞ்சல் மூலமாகக் கேளுங்கள்.

1. பாடத்தில் உள்ள சந்தேகங்களை மட்டுமே கேளுங்கள்

2. முழுப் பாடத்தையே சந்தேகமாகக் கேட்டு மீண்டும் அதே பாடத்தை எழுத வைக்காதீர்கள்.

3. வகுப்பறைப் பதிவேட்டில் உள்ளவர்கள் (Follower's List)  மட்டுமே வகுப்பறை மாணவர்கள். அவர்கள் மட்டுமே கேள்விகள் கேட்கலாம். மின்னஞ்சலில் இதைக் குறிப்பிடுங்கள். முடிந்தால் உங்களின் லிங்கைக்
கொடுக்கவும். தேவையில்லாமல் உள்ளே நுழைபவர்களை வடிகட்ட, இது தேவைப்படுகிறது.

4. பாடத்தில் உள்ள சந்தேகங்களை மட்டும் கேளுங்கள். உங்கள் சொந்த ஜாதகத்தின் பலனை அறிந்து கொள்ளும்  முகமாகக் கேள்விகள்
கேட்பதைத் தவிர்க்கவும். உங்கள் கேள்வி மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். சொந்தக் கதை, சோகக் கதைகளுக்கெல்லாம், பின்னால்
தனியாக வகுப்பு வைக்க உள்ளேன். கச்சேரியை  அப்போது வைத்துக் கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------
புது முகங்களுக்கு, பழைய பாடங்களில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. சிலருக்கு அத்தனை பாடங்களையும்  சரியாகப் படிக்காததால்
சந்தேகங்கள். சிலருக்குப் படித்தும் சந்தேகங்கள். உங்கள்
சந்தேகங்களை முன்பு ஒரு முறை தீர்த்து வைத்தேன். ஆகவே
படித்தும் சந்தேகம் உள்ளவர்கள் மட்டும் சந்தேகங்களை எழுதுங்கள்.
பாடத்தை முழுவதுமாகப் படித்திராதவர்கள் அவற்றைப் படிக்கவும்.

24.12.2009 - 2.2.2010 வரை மொத்தம் 24 பதிவுகளில், வந்த கேள்விகளுக்கான பதில்களை எழுதினேன். 100 மாணவர்கள், 100 மின்னஞ்சல்கள், 300 ற்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தேன்

Side Bar ல் முன்பு நடத்தப்பெற்ற கேள்வி - பதில் வகுப்பின் சுட்டிகள் உள்ளன.  Doubts - Lessons 1 - 30 என்று  இருக்கும். அதைக்
கிளிக்கிப் பார்த்து உங்கள் சந்தேகத்தை இதற்கு முன்பே யாராவது கேட்டு, வாத்தியார்பதிலையும் கொடுத்திருக்கிறாரா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். அதில் கேட்கப்படாத கேள்வி என்றால்,  நீங்கள்
இப்போது கேட்கலாம்.
-------------------------------------------------
இப்போது ஒரு குட்டிக் கதை:
இரண்டு இளைஞர்கள் தேவாலத்திற்குச் சென்றார்கள். இருவரில் ஒருவன் ஈடுபாட்டுடன் சென்றவன்.

அடுத்தவன், நண்பனின் வற்புறுத்தலுக்காகச் சென்றான்.

பாதிரியார் அருமையாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். துவங்கி 2 மணி நேரமாகியும், உற்சாகமாக உரை  நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

வற்புறுத்தலுக்காகச் சென்றவன் புகை வண்டி ஆசாமி (அதாவது  
chain smoker) அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.தன்
நண்பனிடம் கிசுகிசுத்தான்:

“டேய் மெல்ல எழுந்து போய், ஒரு தம் அடித்து விட்டு வருகிறேன்”

”அதெல்லாம் கூடாது. சும்மா உட்கார், எழுந்து சென்றால், பாதிரியாரின் கண்ணில் படும்.”

”அப்படியென்றால், இங்கேயே சிகரெட்டைப் பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிடவா?”

”அதெல்லாம், கூடாது. கொன்று விடுவேன். பாதியார் பார்த்தால் கோபம் கொள்வார்!”

”கோபம் கொண்டால் அவர் எப்படிப் பாதிரியாராக இருக்க முடியும்? நீ எழுந்து அவரையே கேள். இல்லையென்றால் நான் எழுந்து கேட்கிறேன்”

அவனுடைய நச்சரிப்புத் தாங்காமல், கூட்டிக்கொண்டு போன நண்பன், எழுந்து நின்று கேட்டான், “Father,  பிரார்த்தனையின் போது, புகை பிடிக்கலாமா?”

பாதிரியார் பதில் சொன்னார், “இல்லை, கூடாது!”

நம்ம ஆள் சொன்னான், உனக்குக் கேட்கத் தெரியவில்லை. நான் கேட்கிறேன் பார் என்று கிசுகிசுத்தவன், எழுந்து  நின்று, கணீரென்ற குரலில் கேட்டான். “Father, புகைபிடிக்கும் போது பிரார்த்தனை செய்யலாமா?”

“செய்யலாம். இறைவனைப் பிரார்த்திப்பதற்கு எதுவும் தடையில்லை!”
---------------------------------------------------------------------
”வாத்தி (யார்) எதற்காக இந்தக் கதை?

”அகடவிகட சாமர்த்தியம் எப்படி இருக்கும் என்பதற்காக இதைச் சொன்னேன்”

”அது சரி, வகுப்பறையில், எதற்காகச் சொன்னீர்கள்?

”சந்தேகத்தைக் கேட்கச் சொல்லிவிட்டாரே, வாத்தியார் என்று தங்கள் சொந்த ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களை,  பொதுச் சந்தேகம் போல தோற்ற மளிக்கும்படி யாரும் கேட்க வேண்டாம் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன்”
---------------------------------------------------------------------
அடுத்து வரும் ஆகஸ்ட் திங்கள் முழுவதும் சந்தேகங்கள் தீர்க்கப்படும். அரசில் குறை கேட்கும் மாதம் என்று நடத்துவார்களே. அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.

தினமும், இரண்டு அல்லது மூன்று சந்தேகங்களுக்கு (பதில்களின் அளவைப் பொறுத்து) பதில்  அளிக்கப்படும்.ஆகவே எழுதிவிட்டு, அதற்கு அடுத்த நாளே பதில் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

வரிசைப்படி வரும்.

எங்கே பார்க்கலாம்....முதல் மூன்று கேள்விகள் யாருடையதென்று!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

27.7.10

மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் - பகுதி 2

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் - பகுதி 2

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் சுட்டி இங்கே!
------------------------------------------------------------------------------------------
கொடுக்கப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பொது விதிகள். ஜாதகத்தின் மற்ற அம்சங்களை வைத்து இவைகள் மாறுபடலாம். ஆகவே யாரும் குழம்ப வேண்டாம்.

18. எட்டில் கேது இருக்க, அவர் மீது சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், ஒன்றும் பிரச்சினை இல்லை. செவ்வாயின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை தற்கொலையில் முடியலாம்

19. லக்கினத்திற்கு 2ல் எட்டாம் அதிபதி இருக்க (அதாவது தன் வீட்டை நோக்கி இருக்க) லக்கினத்தில் சனியும், 3ல் கேது அல்லது ராகு இருக்கப் பிறந்த ஜாதகனின் முடிவு வலியுடையதாக இருக்கும்.(pain killer உபயோகித்து வலியைப் போக்க முடியாது)

20. மேஷ லக்கினத்திற்கு லக்கினாதிபதியும், எட்டாம் இடத்து அதிபதியும் ஒருவனே. அதாவது செவ்வாய் அந்த இரண்டு இடங்களுக்கும் அதிபதியாவார். அவர் அந்த ஜாதகத்தின் 12ஆம் வீட்டில், சூரியனுடன் (அஸ்தமனமாகி) இருந்தால், ஜாதகனின் மரணம் வலியுடையதாக இருக்கும்.

வலி என்பது, ஜாதகன் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்து, சிகிச்சையளைத்தும் பயனளிக்காமல் இறந்து போகும் நிலைமை. இந்த விபத்து என்பது வாகன விபத்து, தீ விபத்து அல்லது கலவரங்களில் கத்திக் குத்து, துப்பாக்கிச் சூடு போன்று எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதை மனதில் கொள்க! இது வலி என்று கூறப்படும் அனைத்திற்கும் பொதுவானதாகும்.

21. எட்டாம் அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருக்க - அதாவது 7ல் இருக்க, அவருடன் ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் கூட்டாக இருந்தால் மரணம் வலி உடையதாக இருக்கும்.

மரணத்தைப் பொறுத்தவரை, வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியவை தவிர மற்ற அனைத்துக் கிரகங்களுமே தீயவைகள்தான். அதிலும், செவ்வாய், ராகு, கேது ஆகியவைகள் முதல் நிலைத் தீயவர்கள். உங்கள் மொழியில் சொன்னால்  Number one rascals!!

22. துலா லக்கின ஜாதகத்திற்கு 1 & 8ஆம் வீடுகளுக்கு உரியவர் சுக்கிரன். அவர் ஜாதகத்தில் எந்த இடத்திலாவது பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டிருந்தால், மரணம் இயற்கையானதாகவும், அமைதியானதாகவும் இருக்காது.

23. எட்டாம் வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் இருந்து, எட்டாம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருப்பதோடு, எட்டாம் அதிபதி சனியின் பார்வை பெற்றிருந்தால், மரணம் இயற்கையானதாகவும், அமைதியானதாகவும் இருக்காது.

24. பொதுவாக பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் வீடு அல்லது வீட்டுக்காரனால் ஜாதகனுக்கு நன்மை கிடைக்காது. எட்டாம் வீட்டிற்கும் அது பொருந்தும்.

25. ராகு, செவ்வாய், சனி ஆகிய 3 கிரகங்களும் 5ல் இருக்க அல்லது 5ஐப் பார்க்க, எட்டாம் அதிபதி நீசமாகி இருந்தால் ஜாதகன் விபத்தில் இறக்க நேரிடும்.

26. 3 & 6ஆம் வீட்டுக்காரர்கள் இருவரும் எட்டில் ஒன்றாக இருக்க, சனி & செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஆயுதத்தால் மரணம்.

27. எட்டாம் வீடு, எட்டாம் அதிபதி, சந்திரன் ஆகிய மூவரும் ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகனின்
மரணம் இயற்கையானதாகவும், அமைதியானதாகவும் இருக்காது.

28. எட்டாம் வீடு, எட்டாம் வீட்டுக்காரன் ஆகியவைகள், செவ்வாய், ராகு அல்லது கேதுவால் பாதிப்பிற்குள்ளாகி இருந்தால் மரணம் வலியுடையதாக இருக்கும்

29. சூரியனும், செவ்வாயும் பரிவத்தனையாகி, எட்டாம் அதிபருக்குக் கேந்திரத்தில் இருந்தால், ஜாதகனின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருக்கும்.

30. லக்கினாதிபதியும், எட்டாம் அதிபதியும் வலுவிலந்து இருப்பதோடு, ஆறாம் அதிபருடன் செவ்வாய் ஒன்றாக இருந்தால் ஜாதகன் யுத்தத்தில் அல்லது தெருச்சண்டையில் இறக்க நேரிடும். ஆயுதத்தால் கொல்லப்படுவன் அல்லது அடித்துக் கொல்லப்படுவான்.

31. லக்கினாதிபதி & எட்டாம் அதிபதி இருவரும் நீசம் பெற்றிருந்தால், ஜாதகனின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருக்கும் அல்லது வலி உடையதாக இருக்கும்.

32. 1ல் சனி, 7ல் ராகுவும் நீசம் பெற்ற சந்திரனும் இருக்க அமைந்துள்ள ஜாதகனின் மரணம் வலி உடையதாக இருக்கும்.

33. லக்கினத்தில் சனி தனித்திருக்க (அதாவது சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையின்றி இருக்கும் நிலைமை) சூரியன், ராகு, சந்திரன் ஆகிய மூவரும் ஒன்றாக இருந்தால் ஜாதகன் ஆயுதத்தால் கொல்லப்படுவான்.

34. சந்திரன் 6, 8, 12ஆம் வீடுகள் ஒன்றில் இருக்க, லக்கினாதிபதி, சனி அல்லது மாந்தி அல்லது ராகுவுடன் கூட்டாக இருக்கும் நிலைமையும் இயற்கைக்கு மாறான மரணத்தையே கொடுக்கும்.

இப்படிப் பல அமைப்புக்கள் இருக்கின்றன. தொடர்ந்து இன்னும் இரண்டு கட்டுரைகள் எழுதலாம். அடியவன் முக்கியமானவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன். நமது லெவலுக்கு இது போதும். அதாவது நமக்கு ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளது என்னும் நிலைமை மட்டுமே. நம்மில் யாரும் ஜோதிடராக ஆகப் போவதில்லை. அதுதான் நமது லெவல். ஆகவே இது போதும்.

இல்லை, மேலும் தெரிந்து கொள்ளப் பிடிவாதமாக இருப்பவர்களும், அல்லது விருப்பமுள்ளவர்களும், ஜெய்மானி (ஜெய்மினி) ஜோதிட நூலைத் தேடிப் பிடித்துப் படிக்கலாம்.
--------------------------------------------------------------------------------
கல்வி, மருத்துவம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மத் தொழில். காசு வாங்கிக் கொண்டு இவற்றைச் செய்யக்கூடாது என்பது மரபு. தர்மம். அந்தக் காலத்தில் இதைச் செய்தவர்களுக்கு எல்லாம், மன்னர்கள் மானியம் அளித்தார்கள். அதாவது வயிற்றுப்பாட்டிற்கு உதவித் தொகை அளித்தார்கள். வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். ஆகவே அவர்களால் அதைத் தர்மமாகச் செய்ய முடிந்தது.

“கிரகத்தைவைத்துக் காசு பார்க்கும் தொழிலைச் செய்யாதே - அது உகந்த தொழிலல்ல” என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள்.

இன்று அந்த மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழிலாகும். தர்மதேவனும் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கின்றான். ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறான்? இது கலியுகம். இப்படித்தான் நடக்கும் என்பது விதி. பகவான் கிருஷ்ணரே சொல்லியிருக்கிறார். “கலியுகத்தில் நான்கு பேருக்கு மூன்று பேர்கள் அயோக்கியர்களாக இருப்பார்கள்”

கலி முற்ற முற்ற அந்த அளவும் மாறுபடும். தற்சமயம் எட்டு பேர்களுக்கு ஒருவர்தான் நல்லவர்.

இன்று மன்னர்கள் இல்லை. அரசும் இந்தத் தொழில் செய்பவர்களுக்கு உதவுவதில்லை. ஆகவே பணமின்றி இத்தொழிலை யாரும் இலவசமாகச் செய்ய முடியாது. தங்கள் வயிற்றுப் பாட்டிற்கும் வாழ்க்கைக்கும் 
தேவையான அளவில் பொருள் சேர்ப்பதில் தவறில்லை. ஆனால் 
அளவிற்கு அதிகமாக, வருகிறவனை அவதிப்படுத்தியோ
அல்லது நிர்ப்பந்தப் படுத்தியோ அல்லது அச்சுறுத்தியோ அல்லது ஏமாற்றியோ பொருள் சேர்ப்பது முடிவில் நன்மையளிக்காது. 

இதை அவர்கள் உணரவேண்டும்

சரி, அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கெல்லாம் தண்டனை இல்லையா? உண்டு. அதைப் பகவான் சொல்ல வில்லை.

ஞானிகளுக்கு அது தெரியும். தர்மத்தின் விதிகளையும், கர்மவினைகளின் விளைவுகளையும் அவர்கள் அறிவார்கள். முடிந்தவரை, நாமும் தர்மத்தின் படியே நடப்போமாக!

எட்டாம் வீடைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது!

பொறுமையாகப் படித்துவந்த உங்கள் அனைவருக்கும் நன்றி!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

26.7.10

மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!

 பறவையின் அப்பாவித்தனத்தோடு இருக்கும் நம்மை நோக்கிக் 
காலன் வரும் காட்சி!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!
கவியரசர் கண்ணதாசன் “பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும்
ஒருவிதம்” என்று பாடி வைத்தார். அதை நான் சற்று மாற்றி, “மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!” என்று தலைப்பிட்டு, மரணத்தை  வகைப்படுத்தி எழுதியுள்ளேன்.

மரணம் என்றால் ஒன்றுதானே? அதில் வகைப்படுத்த என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள், பதிவை விட்டு விலகவும்.

இளவரசி டயானா கார் விபத்தில் இறந்தார். ஜுல்ஃபிகர் அலி புட்டோவும், சதாம் ஹூசெய்னும், அவர்கள் நாட்டின் அதிபராக இருந்த காலத்தில் நினைத்துப்பார்த்திருக்காத வகையில், தூக்கில் தொங்கவிடப்பட்டு, இறந்தார்கள்.

தேசத்தந்தை மகாத்மா காந்தி. கருப்பின மக்களின் தந்தை மார்ட்டின் லூதர் கிங், அன்னை இந்திரா காந்தி, ஜான் எஃப் கென்னடி ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்கள்.

ராஜீவ் காந்தி, பெனாஸிர் புட்டோ போன்றவர்கள் தீவிரவாதிகளின் வெடிகுண்டிற்கு இரையானார்கள்.

பொதுமக்களில் பலர், கார், இரயில், விமான விபத்தில் இறக்கிறார்கள். சிகிச்சையின்போது இறக்கிறார்கள் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

  “ உடலுக்கு ஒன்பது வாசல்
     மனதிற்கு எண்பது வாசல்”
என்பது கவிஞனின் வாக்கு

மரணத்திற்கோ எண்ணிக்கை இல்லாத வாசல்கள்.
அவற்றில் சிலவற்றை இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------------------------------
செவ்வாய், ராகு & கேது ஆகிய கிரகங்கள் ஒருவருக்கு மரணத்தைத் திடீர் என்று கொடுக்கும். அகால மரணம் என்று சொல்லலாம். இவற்றில் ராகுவின் பங்கு அதீதமானது.

அஸ்தமனத் திதிகள், குறிப்பாக அமாவாசைத் திதி நன்மையானதல்ல. ஜாதகன் பிறந்த வீட்டில் ஜாதகனுடன் வறுமையும் நுழைந்துவிடும். பல திரதிர்ஷ்டங்களையும் கூடவே கூட்டிக்கொண்டுவரும். அந்தத் திதியில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் இடம் வலுவாக இல்லையென்றால், அது அவளைச் சீக்கிரம் விதவையாக்கிவிடும்.
A lady born in this Tithi is said to become a widow early in her married life! (இது பொது விதி)
--------------------------------------------------------------------------------------
மரணம் வரும் வழி!

முதல் நிலை மாரக ஸ்தான அதிபதியின் வீடான ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகங்களும், அதைப் பார்க்கும் கிரகங்களும், ஜாதகனுக்கு வித்தியாசமான முறையில் மரணத்தை ஏற்படுத்துவதில் வல்லமை பெற்றவை.

எச்சரிக்கை: கொடுக்கப் பெற்றுள்ளவை அனைத்துமே பொதுப்பலன்கள். அதை மனதில் கொள்க!

1. சந்திரன் எட்டில் இருப்பதுடன், சனியின் நேரடிப் பார்வையையும் பெற்றால், ஜாதகன் அறுவை சிகிச்சையின்போது உயிரைவிட நேரிடும்.

2. தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், அல்லது சனி, அல்லது ராகுவுடன் கைகோர்த்துக்கொண்டு எட்டில் இருந்தால், ஜாதகன் நீரில் மூழ்கி இறப்பான். அல்லது நெருப்பில் சிக்கி இறப்பான். அல்லது ஆயுதங்களால் தாக்குண்டு இறப்பான்.

3. சூரியன், சந்திரன், செவ்வாய், சனி ஆகிய நான்கு கிரகங்களும் ஒன்றாக எட்டாம் வீடு, அல்லது ஐந்தாம் வீடு அல்லது ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மலை உச்சி போன்ற உயரமான இடங்களில் இருந்து தவறி விழுந்து இறக்க நேரிடும். அல்லது இடி, மின்னல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் சிக்கி இறக்க நேரிடும்.

4. தேய்பிறைச் சந்திரன் 6 அல்லது 8ல் இருக்க, ஜாதகனின் 4 & 10 ஆம் வீடுகளில் பாவக்கிரகங்கள் இருந்தால், ஜாதகன் எதிரிகளின் சூழ்ச்சியால் இறக்க நேரிடும். அல்லது எதிரிகளால் கொல்லப்படுவான்.

5. சூரியன், சந்திரன், புதன் ஆகிய 3 கிரகங்களும் ஏழில் இருக்க, சனி லக்கினத்திலும், செவ்வாய் விரையத்திலும் இருந்தால் ஜாதகன் வெளி தேசங்களில் இறக்க நேரிடும். அல்லது தூர தேசங்களுக்குப் போகும்போது இறக்க நேரிடும்.

6. புதனும், சுக்கிரனும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன் தூக்கத்திலேயே இறந்து போவான் (அடடே, இது நன்றாக இருக்கிறதே!)

7. புதனும் சனியும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன், அரச தண்டனையால் இறக்க நேரிடும்.

8. சந்திரனும் புதனும் 6 அல்லது 8ஆம் வீட்டில் ஜாதகனின் மரணம் விஷத்தால் (poison) ஏற்படும்.

9. சந்திரன், சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக 8ல் இருந்தால் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

10. செவ்வாய் 12லும், சனி 8லும் இருந்தாலும், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

11. சந்திரன் 12ல், சனி 8ல் இருந்தாலும் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

12. ஆறில் செவ்வாய் இருந்து, அவர் மீது வேறு சுபப்பார்வை எதுவுமில்லை என்றால், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.

13. ஆறாம் வீட்டில் ராகுவும் நான்காம் அதிபதியும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் திடீர் என இறக்க நேரிடும். அதாவது திருட்டு, கொள்ளை, கலவரம் போன்ற நிகழ்வுகளில் இறக்க நேரிடும்.

14. அந்த இடத்தில் ராகுவிற்குப் பதிலாக கேது இருந்தாலும், அதே முடிவுதான்!

15. எட்டாம் வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாவக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலி உடையதாக இருக்கும். அது புற்றுநோய் போன்ற கொடிய நோயாக இருக்கலாம் அல்லது விபத்தாக இருக்கலாம். அல்லது, கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களால் ஏற்படலாம்.

16. எட்டாம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலியில்லாததாகவும்,இயற்கையானதாகவும், அமைதியனதாகவும் இருக்கும்.

17. எட்டில் சந்திரன் இருக்க, எட்டாம் வீட்டில் இருபுறமும் பாவக்கிரகங்கள் இருந்தால் (அதாவது எட்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தல்)  ஜாதகன் நீரில் மூழ்கி இறக்க நேரிடும்.

(இன்னும் உள்ளது. தொடரும்)

உங்களின் பொறுமை, பதிவின் நீளம், எனது தட்டச்சும் நேரம் ஆகியவற்றின் காரணமாக இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை நாளை!

கொடுக்கப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு அவற்றில் உள்ள கிரக அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடலாம். ஆகவே யாரும் குழப்பம் அடைய வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அன்புடன்,
வாத்தியார்.


வாழ்க வளமுடன்!

20.7.10

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!




++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!

  “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இலன்”


என்று எழுதினார் வள்ளுவர் பெருந்தகை!

எந்தப் பொருளின் மீதும் பற்று வைக்காதே! அப்படி வைக்காமல் இருந்தால் அந்தப் பொருளினால் உனக்கு ஒரு துன்பமும் வராது என்பது அதன் பொருள்.

பாழும் மனம் கேட்குமா? கேட்காது.

அழகான பெண்ணைப் பார்த்தால் ஏக்கம். அமெரிக்க டாலரின் மீது ஏக்கம். அடையாரில் உள்ள வீடுகளின் மேல் ஏக்கம். அமைச்சர் பதவியின் மேல் ஏக்கம். ரோல்ஸ்ராய்ஸ் காரின் மீது ஏக்கம். அம்பானியின் செல்வாக்கைப் பார்த்து ஏக்கம். சரவணபவன் சாப்பாட்டின் மேல் ஒரு தாக்கம். தலைப்பாக்கட்டி பிரியாணி மேல் ஒரு தாக்கம். சீவாஸ் ரீகல் விஸ்கியின்மேல் ஒரு தாக்கம். ஃபில்டர் காப்பியின் மேல் ஒரு தாக்கம். வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டின் மேல் ஒரு தாக்கம். இப்படி ஏக்கத்தையும், தாக்கத்தையும் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்.

அதைத்தான் சுருக்கமாக வள்ளுவர் சொன்னார் “எதன் மீதும் ஆசை வைக்காதே; பற்று வைக்காதே!”

கிடைக்காததன் மேல் ஆசை வைக்காதீர்கள்.“கிட்டாதாயின் வெட்டன மற!” என்று அவ்வையார் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்.

ஜோதிடப் பாடம் படிக்கும் உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: நீண்ட ஆயுளின் மேல் யாரும் ஆசை வைக்காதீர்கள். பூரண அயுளைப் பெற்று வாழ்வது முக்கியமில்லை. இருக்கும்வரை நன்றாக (ஆரோக்கியமாக) இருந்துவிட்டு, நடை, உடையுடன் இருக்கும்போதே மரணத்தைத் தழுவுவதுதான் முக்கியம். உங்கள் மொழியில் சொன்னால், உயிர் வாழும் கடைசி நொடிவரை அடுத்தவன் தயவில்லாமல் வாழவேண்டும். அதுதான் நிறைவான வாழ்க்கை.

அது நம் கையில் இல்லை என்றாலும், கிடைக்கத் தினமும் பிரார்த்தனை செய்யுங்கள்.

வலி இல்லாமல் பத்து நிமிடங்களுக்குள் மரணம் ஏற்பட வேண்டும். மரணம் ஏற்படும் வரை, நாம் நடை, உடையுடன் இருக்க வேண்டும்.

வயதானவர்கள் இருக்கும் வீடுகளுக்குச் சென்று பாருங்கள். அல்லது ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்று பாருங்கள். படுத்தால், உட்கார்ந்தால் தானாக எதுவும் செய்ய முடியாத நிலையில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள் .கழிப்பறைக்குக்கூட அவர்களால் சுதந்திரமாகச் சென்று திரும்பமுடியாது. Bed Pan, Diaper, walking stick, walker போன்ற சாதனங்களை நம்பி அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது. அத்துடன் அவர்களை வைத்துப் பராமரிப்பவர்கள் சலிப்படையாமல் இருக்க வேண்டும்.

வயதானவர்களின் அவலநிலை பற்றிய ஏராளமான கதைகள் என்னிடம் இருக்கின்றன. ஒன்றே ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன். நிலைமை பிடிபடும்.

ஒரு தாய் இருந்தார். வயது 85. நன்றாக இருந்தவரை தன்னைத்தானே அவர் பார்த்துக்கொண்டார். கணவர் இறந்து 10 ஆண்டுகள் வரை அவர் தன் வீட்டில் தனியாகவே இருந்தார். மூன்று மகன்கள். யார் வீட்டிற்கும் போய் இருக்க அவருக்கு விருப்பமில்லை. அவரைக் கொண்டு போய் வைத்துப் பராமரிக்க அவருடைய மருமகள் மூன்று பேருக்கும் விருப்பமில்லை. பேரன்கள் இருவர் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். அவர்களும் கண்டு கொள்ளவில்லை. தள்ளாத மூப்பு வந்தது. உடன் இணைப்பாக இயலாமையும் வந்தது.

வீட்டு உறுப்பினர்கள், பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்தார்கள். முடிவெடுத்தார்கள். தாயாரைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டார்கள். அவர் நொந்து போய் விட்டார். நடைக்கம்பியின் (walker) உதவியால் வாழ்க்கை மேலும் ஒராண்டு ஓடியது. பிறகு அந்த அம்மையாரால், அடிக்கடி எழமுடியாத நிலைமை. நம்பர் ஒன் & நம்பர் டூ வெல்லாம் தனது படுக்கையிலேயே கழித்துவிடும் நிலைமை.

முதியோர் இல்ல ஊழியர்கள் ஆரம்பத்தில் சுத்தம் செய்தவர்கள், பிறகு ஒரு நாள் தாக்குப் பிடிக்காமல், “ஏய் கிழவி, இனிமேல் இதெல்லாம் வரும் சமயத்தில் எங்களிடம் சொல். நாங்கள் பேன் (pan) வைக்கிறோம்” என்றார்கள்.அதெல்லாம் சில சமயம் சொல்லாமல் வருமல்லவா?

அந்த ஊழியர்களிடம், அன்பே உருவான அந்தத்தாய், அடிவாங்க ஆரம்பித்துவிட்டார்.

அடுத்தமுறை, தன் மூத்த மகன் தன்னைப் பார்க்க வந்திருந்தபோது, கதறி அழுதார்:

 “டேய் கண்ணா, நான் சின்னபிள்ளையாக இருந்தபோது செல்லமாக வளர்ந்தவள். என் அப்பச்சி என்னைப் போற்றி ஓவியமாக வளர்த்தார். என் கணவரும் உத்தமமானவர். என்னை ராணி மாதிரி வைத்திருந்தார். அவர்கள் இருவரும் இருந்தவரை, என் மீது ஒரு துரும்புகூடப் பட்ட தில்லை. இங்கே என்னை அடிக்கிறார்களாடா!  என்னால் இனிமேல் இங்கே இருக்க முடியாதுடா! ஒன்று என்னை உன்னுடன் கூட்டிக்
கொண்டு போ அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுத்து விட்டுப்போ!”

வந்த மகன் அந்த இரண்டையும் செய்யவில்லை. அங்கே இருந்த ஊழியர்களிடம் ஆளுக்கு ஐநூறு கொடுத்து அடிக்காமல் பார்த்துக் கொள்ளூம்படி சொல்லிவிட்டுப்போனார். தன் தாயாரையும் சமாதானம் செய்துவிட்டுப் போனார்.

அதற்குப் பிறகு என்ன ஆயிற்று?

மன உளைச்சலில் அடுத்து வந்த இரண்டாவது மாதமே அந்த அன்புத்தாய் இறந்து போனார்.

   “எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
      எங்கே மனிதன் இல்லையோ, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்”


என்று தன்னைப் படைத்த இறைவன் திருவடிக்கே சென்று விட்டார்,
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு முக்கியமான பலன் உண்டு. எட்டாம் வீட்டின் முக்கியமான பலன் ஆயுளை நிர்ணயம் செய்வதற்கு உரிய வீடு அதுதான்.

அந்த வீட்டின் தன்மை, அதாவது அது சுபக்கிரகத்தின் வீடா, அதன் அதிபதி ஜாதகத்தில் எங்கே போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அந்த வீட்டின் மேல் விழும் பார்வைகள், அதன் அதிபதியுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள் என்று எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். அதே போல 3ஆம் வீடு, அதன் அதிபதி, ஆயுள்காரகன் சனீஷ்வரன் ஆகியவற்றின் நிலைப்பாடுகளும் முக்கியம். ஜாதகத்தில் சனி, எட்டாம் அதிபதி, லக்கின அதிபதி ஆகிய மூவருக்கும் உள்ள தொடர்பு நிலையும் முக்கியம்.

ஜோதிடத்தில் ஆயுள் சம்பந்தப் பட்ட முக்கிய வீடுகள் மற்றும் அவற்றின் தன்மைகளை அல்லது வலிமையைப் பற்றிய விவரங்களைக் கீழ்க்கண்டவாறு பார்க்க வேண்டும்.
ஏழாம் அதிபதி
ஏழாம் வீட்டில் உள்ள கிரகங்கள்
ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள்
லக்கினாதிபதி
லக்கினத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்
லக்கினாதிபதியுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள்
இரண்டாம் வீட்டதிபதி
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்
இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள்

எட்டாம் வீடு மரணத்தையும் அழிவுகளையும் (death & destruction) சுட்டிக்காட்டும் இடமாகும். மரணத்தை ஏற்படுத்துவதில், ஏழாம் அதிபதி, இரண்டாம் அதிபதி, மாரக அதிபதி மற்றும் சனீஷ்வரனின் ஆகியோரின் பங்கு இருக்கும். ஆகவே இந்த நால்வரின் தசா புத்திக் காலத்தில் ஏதாவது ஒரு சமயத்தில் ஜாதகனுக்கு மரணம் ஏற்படலாம். அதைத் தெரிந்து கொள்வதற்கு, ஜாதகத்தை நன்கு அலசுவது அவசியமாகும்.

ஒருவரின் ஆயுளை எப்படிக் கணித்துத் தெரிந்து கொள்வது? மிகவும் அசாத்தியமான வேலை அது. ஜோதிடத்தில் மிகவும் சிரமமான பகுதி அதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் ஜாதகனுக்குத் தீர்க்க ஆயுளைக் கொடுக்கும் (பொதுவிதி)

1. லக்கின அதிபதி ஆட்சி அல்லது உச்ச பலம் பெற்றிருத்தல்.
2. எட்டாம் வீட்டில் சனி அல்லது குரு இருப்பது.
3. லக்கினமும், சந்திரராசியும் சுபகிரகங்களின் சேர்க்கை பெற்றிருப்பது.
4. லக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திர வீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருக்கும் நிலைமை.
5. லக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்
6. எட்டாம் வீட்டிற்கு அதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது லக்கினத்திலோ இருத்தல் அல்லது லக்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ தன் பார்வையில் வைத்திருக்கும் நிலைப்பாடு.
7. சந்திரனும், லக்கினாதிபதியும் சேர்ந்து இருப்பது.
8. குரு அல்லது சனி எட்டாம் வீட்டையோ பார்க்கும் நிலைப்பாடு.
9. சனி அல்லது எட்டாம் வீட்டதிபதி ஒரு உச்சமான கிரகத்துடன் சேர்ந்திருந்தால் தீர்க்கமான ஆயுள்
10. லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோண வீட்டில் இருப்பதுடன், ஜாதகத்தில் தீய கிரகங்கள் 6 & 12ஆம் வீட்டில் இருந்தால் தீர்க்கமான ஆயுள்
11. லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோண வீட்டில் இருப்பதுடன், குரு அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தால் தீர்க்கமான ஆயுள்.
12. லக்கினாதிபதியும், எட்டாம் இடத்ததிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் எட்டாம் இடம் அல்லது 11ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள்.
13. ஜாதகத்தில் சனி, லக்னாதிபதி அல்லது எட்டாம் அதிபதியுடன் கூட்டாகச் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத்
தீர்க்கமான ஆயுள்.
14. எட்டாம் அதிபதி ஆட்சி பலம் பெற்றிருப்பதுடன், எட்டாம் வீட்டில் சனி இருக்கும் அமைப்பு ஜதகனுக்குத் தீர்க்க ஆயுளைக் கொடுக்கும்.
15. லக்கினாதிபதி வலிமையாக இருப்பதுடன், குரு உச்சம் பெற்றிருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்காயுள்.

இன்னும் நிறைய அமைப்புக்கள் உள்ளன. நான் முக்கியமானவற்றையே குறிப்பிட்டுள்ளேன். நம் லெவலுக்கு இது போதும்!

சுருக்கமாக:
லக்கினாதிபதியும், சுபக்கிரகங்களும் (வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன்) ஆகியவைகள் கேந்திர வீடுகளில்   1, 4, 7, 10 இருந்தால் ஜாதகனுக்குத் தீர்க்காயுள்.
அவைகளே 2, 5, 8, 11 ஆம் வீடுகளில் இருந்தால் மத்திம ஆயுள்.
அவைகளே 3, 6, 9, 12 ஆம் வீடுகளில் இருந்தால் குறைவான ஆயுள்.

இவைகள் அனைத்துமே பொதுவிதிகள். ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் வைத்து ஆயுளை நிர்ணயிக்க வேண்டும்.

இதைப் போல பல கிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் கூறிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை மட்டும் நான் கொடுத்துள்ளேன். முழுவதையும் தெரிந்துகொள்ள விரும்புவர்கள் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களைப் படிக்கலாம். ஆயுளைப் பற்றி  விரிவாக அவற்றில் உள்ளது.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

பாடம் மேலும் உள்ளது. அவைகள் தொடர்ந்து வரும்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
எட்டாம் வீட்டைப் பற்றிய மேலதிகத் தகவல்:
எட்டாம் வீட்டிற்கான வேலைகள்:
Diseases,
Death
Finances through unfair means,
internal sex organs,
longevity,
mental pain,
obstacles,
mode of death,
imprisonment,
worries and
It also indicates body parts as scrotum, pelvis, seminal vesicles, external genitalia, etc.



வாழ்க வளமுடன்!