மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.8.10

safe modeல் காதலிப்பது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
safe modeல் காதலிப்பது எப்படி?

கேள்வி - பதில் பகுதி எண்.5

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்!
_________________________________________________
மின்னஞ்சல் எண். 14
சிவசுப்பிரமணியம்

Hello Sir,
I am one of the followers of your blog and have a question...
we normally see the birth chart and do the match making... if the birth chart match making is not giving good results. can we use the birth chart of boy and puberty chart of girl and make a match of that. will this work out
Please answer...
Regards,
Siva/////

பெண் பூப்படைந்த ஜாதகத்தை வைத்துத் திருமணப் பொருத்தம் பார்க்கலாமா என்பதுதானே உங்கள் கேள்வி? puberty horoscope is the one to be studies for their conjugal happiness. ஒரு பெண் உடல் உறவுகளால் அடையவிருக்கும் மகிழ்ச்சியைப் பார்ப்பதற்குப் பூப்டைந்த ஜாதகத்தைப் பயன்படுத்துவார்கள்.. திருமணப் பொருத்தத்திற்கு அது சரியாக வராது.

ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் இருவர் ஓடுகிறார்கள் என்றால், ஸ்டார்ட்டிங் பாயிண்ட் இருவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒருவருக்கு 0 மீட்டரில் இருந்தும் இன்னொருவருக்கு 500வது மீட்டரில் இருந்தும் ஓட்டத்தைத் துவங்கச் சொல்லலாமா? அது நியாயமா?

திருமணப் பொருத்தம் பார்க்க இருவரின் பிறப்பு ஜாதகங்களை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.பொருத்தம் இல்லை என்றால், இப்படிக் குறுக்கு வழியை எல்லாம் யோசிக்காமல், வேறு வரன்களைப் பார்க்க வேண்டியது தான்.

சம்பந்தப் பட்ட பெண் காதலி என்றால், அப்பா, அம்மா, ஜோதிடர், ஜாதகம் எல்லாவற்றையும் கடாசிவிட்டு, அவளை மணந்து கொள்ள வேண்டியதுதான். காதல் புனிதமானது. அவளோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும்.

ஏதாவது பிரச்சினை வந்தால்?

அப்புறம் எதற்காகக் காதலிக்கிறீர்கள்? ஜாதகத்தை வாங்கிப் பார்த்துவிட்டுப் பொருத்தங்கள் உள்ள பெண்னையே காதலிக்கலாம். ஆட்டத்தை safe modeல் ஆடலாம். அதாவது காதலிப்பதை safe modeல் காதலிக்கலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண். 15
லக்ஷ்மணன்
லண்டன்

கேள்வி-1 :

நவாம்சம் பாடத்தில் ''சனியும் செவ்வாயும் நவாம்சத்தில் பரிவர்த்தனை  பெற்று இருப்பது நல்லதல்ல...அதை எட்டாம் வீட்டை பற்றிய பாடத்தில் படிக்கலாம்'' என்று தாங்கள் கூறி இருந்தீர்கள்...அண்மையில் தாங்கள் சிறப்பாக நடத்திய எட்டாம் வீட்டு படத்தில் 'சனி செவ்வாய் பரிவர்த்தனை'' பற்றி குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்....(ஒருவேளை தாங்கள் வேறு பாடத்தில் குறிப்பிட்டு இருக்கலாமோ ?அதை பற்றி சற்று தயவு செய்து கூறுங்களேன்.

அதைப்பறிக்கூற வேண்டாம் என்றுதான் விட்டுவைத்தேன். விட மாட்டீர்கள் போலிருக்கிறதே!  Sani-Kuja exchange, in rasi or navamsha, in kendras from lagna "in fateful degrees" the native's death will be through  weapons. இது பொது விதி. உங்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் கவிழ்ந்து படுத்துவிடாமல், எட்டாம் வீடு சம்பந்தப்பட்ட மற்ற அமைப்புக் களையும் சீர் தூக்கிப் பாருஙகள்

கேள்வி-2:
எட்டாம் வீட்டை பற்றிய தங்களது பாடத்தில் ஏழாம் வீட்டு  (களத்திரக்கரன்) அதிபதியின் தசா / புத்தி அல்லது  ரெண்டாம் வீட்டு (குடும்ப ஸ்தான) அதிபதியின் தசா / புத்தி மரணம் (கண்டம்) ஏற்படும் என்று கூறி இருந்தீர்கள்..இது விசயமாக அடியேன் எனக்கு ஒரு சிறு பிள்ளைத்தனமான சந்தேகம்..ஏழாம் வீடு மற்றும் ரெண்டாம் வீடு ரெண்டுமே லௌகீக வாழ்க்கைக்கு உரிய வீடுகள்..அந்த வீட்டின் அதிபதிகளின் தசா புத்தியில் மரணம் ஏற்படுவது அனைத்து பிறவிகளுக்கும் உண்டா? கடுமையான பிரம்மசாரியத்தை கடைப்பிடித்த முனிவர்கள், தபசிகளுக்கும் இது பொருந்துமா? மோட்ச பிறவிக்கும் இது பொருந்துமா?

பிறப்பு (நீங்கள் பட்டியல் இட்டிருக்கும்) அனைவருக்கும் பொதுவானது!
அதை ஒப்புக்கொள்கிறீர்களா? இதையும் ஒப்புக்கொள்ளுங்கள். மரணமும் அனைவருக்கும் பொதுவானதுதான். அதில் ஸ்டேட்டசை வைத்து விதிவிலக்கெல்லாம் கிடையாது!

கேள்வி-3 :
மற்றுமொரு சிறு பிள்ளைத்தனமான கேள்வி...ஒரு மனிதன் ஆறாவது பிறவியில் (எழாவது பிறவி மோட்சமாக இருக்கும் பட்சத்தில்) முன்பகுதியில் அதாவது 30 வயதுக்கு முன் செய்த தவறுகள்/பாவங்களுக்கான பலன்களை அந்த ஆறாவது பிறவியின் பின் பகுதி வாழ்க்கையில் அனுபவிப்பானா? அல்லது கடைசி பிறவியில் (மோட்சமாக இருக்கும் பட்சத்தில்) அனுபவிப்பானா?

நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! எனது அனுபவங்களை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முன் ஜென்ம கர்ம வினைகளின்படி பிறவிகள் அமையும் எனப் படித்துள்ளேன். அனுபவத்திலும் பலரைப் பார்த்துத் தெளிந்துள்ளேன்.

arrears ஆக உள்ள பாவங்கள் எல்லாம் என்ன ஆகும்? அது எந்தக்கணக்கில் வசூலிக்கப்படும்? அல்லது வராத கடன் என்று தள்ளுபடி செய்யப்ப்படுமா? என்கின்ற விவரம் எனக்குத் தெரியாது. நீங்கள் ஏன் அதைப் பற்றி இப்போது கவலைப் படுக்கிறீர்கள்? கடன் கொடுத்தவனல்லவா - அதாவது உங்களை மிச்சம் வைக்க விட்டவன் (கால தேவன்) அல்லவா கவலைப்பட வேண்டும்.

நாங்கள் லண்டனையும், நியூயார்க்கையும், டோக்கியோவையும் தான் (பூவுலக) மோட்சமாக நினைக்கிறோம். நீங்கள் லண்டனில் இருந்து கொண்டு, மோட்சத்தைப் பற்றிக் கேட்கலாமா?

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

அன்பான, அரவனைக்கும் மனைவியைவிடவா சொர்க்கம், மோட்சம் எல்லாம் பெரியது?

  “நீபாதி நான்பாதி பெண்ணே
   நீயின்றித் தூங்காது என்கண்ணே!”
என்று பாடியவாறு நிம்மதியாக இருங்கள்

கண்ணுக்குத் தெரியாத மோட்சத்தைவிட, கைகளால் அணைக்கும் மனைவி மேல்! அதாவது மேலானது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.
கணேஷ் பாவா
சேலம்
வயது: 27

1) Can we get good result from Vakra planet?

பதில் கீழே உள்ளது.

2) What is different between vakra planet and normal planet?

சுழற்சியில் வித்தியாசம். பலன் தருவதில் வித்தியாசம்

3) For example I will give two scenarios for my question If a child born on this period as thanusu lagna, now Jupiter in vakra in kanni. Now can we calculate Jupiter in 3rd place or 4th place in lagna?

தனுசுவிற்கு கன்னி வீடு நான்காம் இடமா? கடிகாரச் சுற்றில் வலம் வந்து கணக்கிடுங்கள். கடிகாரச் சுற்றிற்கு எதிராக எதற்காகச் சுற்றிக் கணக்கிடுகிறீர்கள்? கிரிக்கெட் ஆடுகளத்திற்குச் சென்று கோல் போஸ்டைத் தேடுவதைப் போன்று உள்ளது உங்கள் செயல்!

Generally everybody calculates Jupiter in 4th place as a vakra.
one person moon rasi is thanusu. From 21/12/2009 Guru in 3rd place from moon rasi. So, one year that person meet some kind of bad result. But 5/5/2010 guru transited to 4th place as vakraa. But, many people say, guru still in 3rd place and your problem also continue till next transit of guru.Why this different ? In birth time guru in 4th place as vakra and in Gochara time guru in still in 3rd place.

ராசிச் சக்கரத்தில் உள்ள குருவையும் (birth time guru) கோள்சாரத்தில் உள்ள குருவையும் (Gochara time guru) ஒன்றாக்கிப் பார்த்து மிகவும் குழம்பிப்போய் உள்ளீர்கள்.

வாத்தியார் கேட்டாராம்:  “பஞ்ச பாண்டவர்கள் எத்தனைபேர்?”
பையன் சொன்னானாம்:   “பஞ்சபாண்டவர்கள் கட்டில் கால்களைப் போல மூன்று பேர்!
உங்கள் படிப்பு அந்த நிலையில்தான் உள்ளது. பொறுமையாக மீண்டும் ஒருமுறை அத்தனை பாடங்களையும் படியுங்கள்

4) Why vakra planet improperly moves forward and backward? Plz give me scientific and spiritual explanation for Vakra planet

சுழல்வது மட்டும் எனக்குத் தெரியும். ஏன் சுழல்கிறது? யார் அதைச் சுழலச் சொன்னார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விஞ்ஞான விளக்கத்தை ISRO அல்லது NASA விஞ்ஞானிகளிடம்தான் கேட்க வேண்டும். தெய்வீகமான காரணத்தை சங்கர மடத்தில் கேட்கலாம்.

கேட்டு அல்லது தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை. சேலத்தில்தானே இருக்கிறீர்கள்? வக்கிரகதியைப் மறந்து விட்டு, வில்வாத்திரி பவனுக்குச் சென்று (ஒரு கிண்ணம் பாஸந்தி + மூன்று மைசூர் போண்டா) ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

கிரகங்களின் வக்கிரகதியை (retrogression of planets) வைத்து இத்தனை கேள்விகளா? பழைய பாடங்களை நீங்கள் படிக்காததன் கோளாறு இது. உங்களைத் தனியாக உட்காரவைத்துப் பாடங்களை மீண்டும் நடத்த வேண்டும்.. அது சாத்தியமா?

வக்கிரகதியில் உள்ள கிரகங்கள்: சுப கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் உரிய பலனைத் தராது. தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால்  அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும். ஜாதகன் பல வழிகளிலும் அவதிப்பட நேரிடும். தப்பித்து ஓட முடியாது. அவதிப்பட்டே ஆக வேண்டும். இதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் போதும்.

One more doubt saaar... Plz  ... :)
5) 7 planet and 2 invisible planet each planet have some special unique function or frequency wave. they affected human life. but we are lived in earth.earth also have o2,o3,co2,h2 and so on. human not affected by earth. why?is it any special frequency for earth?in astrology, not representing earth. why?
thanks

இந்தக் கேள்விக்கு நம் வகுப்பறை மாணவரும், ஜாம்பவானும் ஆன ஜப்பான் மைனரைப் பதில் சொல்லப் பணிக்கிறேன்.
-----------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

45 comments:

 1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  --"விதியை மதியால் வெல்லலாம்"
  என்பதற்கு, அர்த்தமுள்ள இந்து மதத்தில்,கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கூறுவதைப்போல்,--விதியை மதியால் வெல்வதற்கு என்று விதி இருந்தால் தான் அதுவும் நடை பெறும்.--
  என்பதற்கு இணங்க விதி உள்ளவர்கள்
  ////"ஜாதகத்தை வாங்கிப் பார்த்துவிட்டுப் பொருத்தங்கள் உள்ள பெண்ணையே காதலிக்கலாம்". /////
  எல்லாம் விதிப் பயன்.
  - - - - - - - - - - -- - - - - -
  கேள்வி - பதில் பகுதி எண்.5
  கேள்விக்கான. _ பதில்கள் உபயோகமாக உள்ளன.
  நன்றி
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி
  2010-08-09

  ReplyDelete
 2. கேள்வி பதில் பகுதி அருமை. இன்றைய பதிவில் சனி செவ்வாய் வக்ரம் என்றால் படாத பாடு படவேண்டும் என்று கூறியுள்ளிர். அடியேனுக்கு சனி, செவ்வாய், குரு இம்மூன்றும் வக்ரம். என்று தீரும் என் துயரம் என்ற ஐயம் வந்துவிட்டது.
  முருகனே துணை.

  ReplyDelete
 3. கேள்வி பதில் அங்கத்திற்கு நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 4. வணக்கம் அய்யா.....

  கேள்விக்கான பதில்கள் அசத்தல் ...அதிலும் மைனர் அண்ணனுக்கு லிங்க் கொடுத்தது சூப்பர்...மைனர் அண்ணா சீக்கரம் வாங்க .....

  நன்றி வணக்கம்

  ReplyDelete
 5. தலைப்பு சரியான நச் . . .
  பதில்கள் ஒவ்வொன்றும் ஒரு பன்ச்..

  தெரியாது என தெளிவாக வெளிப்படையாக சொல்லும் ..

  எங்கள் வாத்தியார்
  எங்களுக்கு கிடைத்த கிளின்ச் . .

  ReplyDelete
 6. காதலை பற்றி இன்றைய இளை
  ஜர்களுக்கு கூறியதை கண்டு மகிழிச்சி
  கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு .உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி

  ReplyDelete
 7. சார் வணக்க்ம்,
  மைனர் வாள் ரொம்ப குழப்பத்தில் இருக்கிறார் அவர் பதில் சொல்லுவார் என்ற் நம்பிக்கை எனக்கு இல்லை. சார் விருச்சிக லக்கனத்திற்கு சனி சம்மானது தானே அது பர்வியுமில்லை அது யோககாரணுமில்லை அவருக்கு சனி மகா திசை விரைவில் வ்ருகிறது சனி ரிஷபத்திலிருக்கிறது. அதான் அவருக்கு ரொம்ப கவலை. பாடம் ரொம்ப நல்லாயிருந்தது.
  சுந்தரி.

  ReplyDelete
 8. நல்ல பதில்கள்

  ReplyDelete
 9. ////Shyam Prasad said...
  மிக்க நன்றி/////

  நல்லது. நன்றி ஷியாம்!

  ReplyDelete
 10. /////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  --"விதியை மதியால் வெல்லலாம்"
  என்பதற்கு, அர்த்தமுள்ள இந்து மதத்தில்,கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கூறுவதைப்போல்,--விதியை

  மதியால் வெல்வதற்கு என்று விதி இருந்தால் தான் அதுவும் நடை பெறும்.--
  என்பதற்கு இணங்க விதி உள்ளவர்கள்
  ////"ஜாதகத்தை வாங்கிப் பார்த்துவிட்டுப் பொருத்தங்கள் உள்ள பெண்ணையே காதலிக்கலாம்". /////
  எல்லாம் விதிப் பயன்.
  - - - - - - - - - - -- - - - - -
  கேள்வி - பதில் பகுதி எண்.5
  கேள்விக்கான. _ பதில்கள் உபயோகமாக உள்ளன.
  நன்றி
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி//////

  நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

  ReplyDelete
 11. ////GKS said...
  கேள்வி பதில் பகுதி அருமை. இன்றைய பதிவில் சனி செவ்வாய் வக்ரம் என்றால் படாத பாடு படவேண்டும் என்று கூறியுள்ளிர். அடியேனுக்கு சனி, செவ்வாய், குரு இம்மூன்றும் வக்ரம். என்று தீரும் என் துயரம் என்ற ஐயம் வந்துவிட்டது. முருகனே துணை./////

  அவனைத் துணைக்கு அழைத்துவிட்டீர்கள் அல்லவா? துன்பங்கள் ஓடிவிடும்!

  ReplyDelete
 12. /////Alasiam G said...
  கேள்வி பதில் அங்கத்திற்கு நன்றிகள் ஐயா!//////

  நல்லது. நன்றி ஆலாசியம்!

  ReplyDelete
 13. /////astroadhi said...
  வணக்கம் அய்யா.....
  கேள்விக்கான பதில்கள் அசத்தல் ...அதிலும் மைனர் அண்ணனுக்கு லிங்க் கொடுத்தது சூப்பர்...மைனர்
  அண்ணா சீக்கரம் வாங்க .....
  நன்றி வணக்கம்/////

  வருவார். வருவார். வருவார்!

  ReplyDelete
 14. /////iyer said...
  தலைப்பு சரியான நச் . . .
  பதில்கள் ஒவ்வொன்றும் ஒரு பன்ச்..
  தெரியாது என தெளிவாக வெளிப்படையாக சொல்லும் ..
  எங்கள் வாத்தியார்
  எங்களுக்கு கிடைத்த கிளின்ச் . .//////

  நல்லது அய்யர். எல்லாம் உங்களுக்காகத்தான்!

  ReplyDelete
 15. /////sudhanthira said...
  காதலை பற்றி இன்றைய இளைஞர்களுக்கு கூறியதை கண்டு மகிழ்ச்சி
  கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு .உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி/////

  அதன் URLஐக் கொடுங்கள். பார்க்கிறேன்!

  ReplyDelete
 16. ////sundari said...
  சார் வணக்க்ம்,
  மைனர் வாள் ரொம்ப குழப்பத்தில் இருக்கிறார் அவர் பதில் சொல்லுவார் என்ற் நம்பிக்கை எனக்கு இல்லை. சார் விருச்சிக லக்கனத்திற்கு சனி சம்மானது தானே அது பர்வியுமில்லை அது யோககாரணுமில்லை அவருக்கு
  சனி மகா திசை விரைவில் வருகிறது சனி ரிஷபத்திலிருக்கிறது. அதான் அவருக்கு ரொம்ப கவலை. பாடம் ரொம்ப நல்லாயிருந்தது.
  சுந்தரி.//////

  கவலையும், குழப்பமும் இல்லாத மனிதர் அவர். அதனால்தான் அவருக்கு மைனர் என்கின்ற பட்டம்!
  பொறுத்திருங்கள். வருவார். வருவார். வருவார்!

  ReplyDelete
 17. ////INDIA 2121 said...
  நல்ல பதில்கள்/////

  நல்லது. நன்றி 2121 - minus 2010

  ReplyDelete
 18. சார்..ஈசியான கேள்விக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிட்டு கஷ்டமான கேள்வியாப்பார்த்து என்னை மாட்டிவுட்டுட்டீங்களே சார்..
  இவ்வளோ நாளா astroadiக்கு எம்மேல அப்பிடி என்ன காட்டமோ தெரியலேயே..
  இருந்தாலும் scientific ரீதியிலே விளக்க முற்படுகிறேன்..ஒரு ஜாதகத்தைக் கணிக்கும்போது longitude , lattitude வெச்சு with reference to the patricular origin point தான் calculations ஆரம்பமாகுது.
  அந்த ஜீவன் பூமியிலே ஜனித்த போது
  உலக உருண்டையை கற்பனை செய்து கொள்ளுங்கள்..அன்றைய தினம் கோட்சாரப்படி சுற்றிக்கொண்டிருந்த கிரகங்கள் எங்கெங்கு,எந்தெந்த ராசித் தொகுதிகளில்(-ராசி என்பது தேள் வடிவ நட்சத்திரக்கூட்டமைப்பை விருச்சிகம் என்றார்களோ என்னவோ ) இருந்திருக்கிறது என்பதையும் அவை பூமியில் பிறந்த அந்த இடத்திலிருந்து எத்தனை டிகிரியில் உள்ளன,மறைந்து விட்டிருக்கின்றனவா,அல்லது உச்ச,நீச,ஆட்சி என்று வகுக்கப்பட்டுள்ள அவைகளுக்கான இடங்களில் இருந்து தங்கள் fielding position லே எப்படி வியூகம் அமைத்து தங்கள் ஆட்டத்தை ஆரம்பிக்கின்றன என்கிற ரீதியில்தான் ஜாதகக்கட்டம்..redgum.bendigo.latrobe.edu.au/.../test.html
  இந்த லின்க்கை கிளிக்கி படத்தை ஒருதரம் பார்த்துவிடுங்கள்..
  இதிலே striker ஆக லக்கினத்தையும் non -striker ஆக ராசியையும் கற்பனை செய்து பாருங்களேன்..கொஞ்சம் கிறுக்குப்பிடிச்சதனமான கற்பனைதான்..இருந்தாலும் interesting ஆ இருந்தா சரிதான்..
  சரி..சப்ஜெக்ட்டுக்கு வருவோம்..
  பூமிக்கு எந்த பக்கம் எந்த அளவு டிகிரி என்கிறமாதிரியான அளவிலே கொண்டுசெல்லப்படும் விஷயம் என்பதால் பூமியை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை..என்று நினைக்கிறேன்..
  யப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே..frequency மேட்டர் தனியாக ..

  ReplyDelete
 19. வணக்கம் அய்யா !
  ஒரு மாணவனாக ஓவிய பரிசு ஒன்றை தங்களுக்கு இணைத்து அனுப்பிஉள்ளேன்.
  நன்றி
  அல்லது இந்த வலைப்பூவை பார்க்க வேண்டுகிறேன்....
  http://sugumarje.blogspot.com/

  ReplyDelete
 20. கேள்விகளுக்கு ரேஷன் வைக்கலாம் என்று தோன்றுகிறது.இந்தப் பதிவு மிகவும் நுனிப் புல்லாகப் போய்விட்டது.தயக்கத்தோடுதான் இதைச் சொல்கிறேன்.தவறென்றால் மன்னித்து விடுங்கள்.

  ஆனந்தின் வகுப்பறையில் ருண விமோசன ஸ்தோத்திரம் நரசிம்மர் படத்துடன் வெளியிட்டுள்ளார்.கடன் தொல்லையில் அவதிபடுவோருக்கு
  ஏற்ற மந்திரம் ஆகும்
  http://ananth-classroom.blogspot.com

  ReplyDelete
 21. இரண்டாவதா frequency ஒரு numerology சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட்..simply to describe numerology..every human being has been defined by three coordinates..assume like in euclidean 3D space theory..like X,Y,Z..
  The two co-ordinates X,Y has been assigned by the date of birth..these two initial co-ordinates cant be changed..but the third one is the name of the subject..This is to be pronounced by pure suound..so,quite naturally the subject of frequency is coming to play..try to brief, this sound vibration,a explained through various methods of numerologies, could be resonated in tune with the natural frequency of the subject-person..If it is well tuned there will be responding good things will happen to the subject..
  this is the concept..
  இங்கே மனிதன் பூமியில் இருக்கிறான்..அவன் புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு நிற்கிறான்..ஒவ்வொரு கிரகத்துக்கும் சொல்லப்பட்ட frequency கொண்டு அவனது பெயர் அமையும்போது அந்த அதிர்வுகள் இவனைப் பாதிப்பதாகக் கொண்டால் திரும்பவும் பூமியில் இருப்பவனை பாதிக்கும் external elements of sound vibrations which has been assigning his identity as name, the earth will have no count on this account..thats all...ஏதோ ..என்னாலே முடிஞ்சது ..எல்லாமே
  ஒரு logical theorythaan ..hypothetical point லேருந்துதான் எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கணும்..ஒவ்வொரு stageஆ ஆராய்ச்சிக்கு உட்படுத்தி நம்மை நாமே டெஸ்ட் பண்ணிப்பார்த்து இருக்க இல்லையான்னு realize பண்ணலாம்..இல்லேன்னா இல்லவே இல்லன்னு சொல்லிட்டு கவுந்தடிச்சுப் படுத்துக்கலாம்..

  ReplyDelete
 22. என்ன ஆச்சு? நான் அனுப்பின பதில் ரெண்டும் ஏன் இன்னும் publish ஆகலை..பிளாக்கர் சொதப்பலா?

  ReplyDelete
 23. இதுலே ஜாம்பவான் அப்பிடி இப்பிடின்னு ஏன் என் தலையை உருட்டறீங்க சார்.?
  சுய ஜாதகத் தொடர்பான கேள்வி கேட்டால் நீங்க பதில் சொல்றதில்லை..அதுனாலே நான் கேள்வி கேக்குறதில்லை..அதுக்காக என்கிட்டே ஒரு கேள்வியக் கேட்டு பதிலை சொல்லுடான்னா என்னா அர்த்தம்?

  ReplyDelete
 24. வணக்கம் ஐயா!
  அப்புறம் எதற்காகக் காதலிக்கிறீர்கள்?

  சரியான கேள்வி அதனைவிட சரியான பதிலும் கூட
  காதல் என்பதற்கு உரிய மதிப்பு என்ன என்பதனை புரிய வைத்தமைக்கு நன்றி ஐயா

  இருந்தாலும் எல்லோருக்கும் இந்த காதல் பாக்கியம் கூடிவருவதில்லையே அது தானே பிரச்சனையே ஐயா

  ReplyDelete
 25. Safe mode காதலா. நல்ல ideaஆக இருக்கிறாதே. வேண்டாம் என்று பார்த்தேன். இதை (பொருத்தம் பார்ப்பதை) வைத்தும் ஒரு பதிவு போடலாம் போலிருக்கிறது.

  ReplyDelete
 26. மைனர் அண்ணா கலக்குறீங்க போங்க.....எதிர்பார்ப்பு வீண்போக வில்லை மைனர் அண்ணா...ஜப்பான் மைனர் னா சுமா வகுப்பறையே அதிருது போங்க.....

  ReplyDelete
 27. வக்கிரம் பற்றி இதைப்பார்க்கவும்!

  http://www.youtube.com/watch?v=72FrZz_zJFU

  http://www.youtube.com/watch?v=ln1fHZvRr8o&feature=related

  ReplyDelete
 28. //////minorwall said...
  சார்..ஈசியான கேள்விக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிட்டு கஷ்டமான கேள்வியாப்பார்த்து என்னை
  மாட்டிவுட்டுட்டீங்களே சார்..
  இவ்வளோ நாளா astroadiக்கு எம்மேல அப்பிடி என்ன காட்டமோ தெரியலேயே.. பூமிக்கு எந்த பக்கம் எந்த அளவு டிகிரி என்கிறமாதிரியான அளவிலே கொண்டுசெல்லப்படும் விஷயம்
  என்பதால் பூமியை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை..என்று நினைக்கிறேன்..
  யப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே..frequency மேட்டர் தனியாக ../////

  ஆமாம் சரிதான். நினைக்க வேண்டாம். உண்மை அதுதான். பூமியில் பிறந்த குழந்தைக்கு, அந்த ஷணத்தில் அது

  வானமண்டலத்தை நோக்கும் இடத்தை லக்கினமாகவும், மற்ற கிரகங்களை அந்த நேரத்தில் அதது இருக்கும்

  இடத்தில் வைத்தும் ஜாதகத்தைக் கணிக்கிறோம். இதில் பூமியையும் சேர்த்து எப்படிக் குறிக்க முடியும்?
  திரைப்படத்தைப் படம் பிடிக்கும் காமெரா படத்தில் வராது. அதுபோல நம் ஜாதகத்தைப் படம் பிடித்துக்கும் பூமி
  ஜாதகக் கட்டத்தில் வராது.

  ReplyDelete
 29. /////Sugumarje said...
  வணக்கம் அய்யா !
  ஒரு மாணவனாக ஓவிய பரிசு ஒன்றை தங்களுக்கு இணைத்து அனுப்பிஉள்ளேன்.
  நன்றி
  அல்லது இந்த வலைப்பூவை பார்க்க வேண்டுகிறேன்....
  http://sugumarje.blogspot.com///////

  சூப்பராக உள்ளது. வலையில் ஏற்றிவிடுகிறேன்! உங்களின் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 30. /////kmr.krishnan said...
  கேள்விகளுக்கு ரேஷன் வைக்கலாம் என்று தோன்றுகிறது. இந்தப் பதிவு மிகவும் நுனிப் புல்லாகப் போய்விட்டது.தயக்கத்தோடுதான் இதைச் சொல்கிறேன்.தவறென்றால் மன்னித்து விடுங்கள்.
  ஆனந்தின் வகுப்பறையில் ருண விமோசன ஸ்தோத்திரம் நரசிம்மர் படத்துடன் வெளியிட்டுள்ளார்.கடன்
  தொல்லையில் அவதிபடுவோருக்கு
  ஏற்ற மந்திரம் ஆகும்
  http://ananth-classroom.blogspot.com/////

  நுனிப்புல்லோ அடிப்புல்லோ அது மேய்பவர் கையில் இருக்கிறது. என் கையில் இல்லை. மாவிற்குத் தகுந்த
  பணியாரம். அதற்காக கேள்விகளை ஒதுக்கவும் முடியாது. உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன் சார்!

  ReplyDelete
 31. /////minorwall said...
  இரண்டாவதா frequency ஒரு numerology சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட்..simply to describe numerology..every human being has been defined by three coordinates..assume like in euclidean 3D space theory..like X,Y,Z.. The two co-ordinates X,Y has been assigned by the date of birth..these two initial co-ordinates cant be changed..but the third one is the name of the subject..This is to be pronounced by pure suound..so,quite naturally
  the subject of frequency is coming to play..try to brief, this sound vibration,a explained through various methods of
  numerologies, could be resonated in tune with the natural frequency of the subject-person..If it is well tuned there
  will be responding good things will happen to the subject..
  this is the concept..
  இங்கே மனிதன் பூமியில் இருக்கிறான்..அவன் புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு நிற்கிறான்..ஒவ்வொரு
  கிரகத்துக்கும் சொல்லப்பட்ட frequency கொண்டு அவனது பெயர் அமையும்போது அந்த அதிர்வுகள் இவனைப் பாதிப்பதாகக் கொண்டால் திரும்பவும் பூமியில் இருப்பவனை பாதிக்கும் external elements of sound vibrations which has been assigning his identity as name, the earth will have no count on this account..thats all...ஏதோ
  ..என்னாலே முடிஞ்சது ..எல்லாமே
  ஒரு logical theorythaan ..hypothetical point லேருந்துதான் எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கணும்..ஒவ்வொரு
  stageஆ ஆராய்ச்சிக்கு உட்படுத்தி நம்மை நாமே டெஸ்ட் பண்ணிப்பார்த்து இருக்க இல்லையான்னு realize
  பண்ணலாம்..இல்லேன்னா இல்லவே இல்லன்னு சொல்லிட்டு கவுந்தடிச்சுப் படுத்துக்கலாம்../////

  நீங்கள் ஜப்பானில் இருந்து கொண்டு கவுந்தடிச்சுப் படுக்கலாமா? கிமோனோ நடனம் பார்த்திருக்கிறீகளா? அது

  பற்றிய நினைவுகளை எழுதுங்கள் மைனர். வாரமலரில் போட்டுவிடலாம்!

  ReplyDelete
 32. /////minorwall said...
  என்ன ஆச்சு? நான் அனுப்பின பதில் ரெண்டும் ஏன் இன்னும் publish ஆகலை..பிளாக்கர் சொதப்பலா?////

  நான் வந்தபிற்கு வலை ஏறியுள்ளன.

  ReplyDelete
 33. /////minorwall said...
  இதுலே ஜாம்பவான் அப்பிடி இப்பிடின்னு ஏன் என் தலையை உருட்டறீங்க சார்.?
  சுய ஜாதகத் தொடர்பான கேள்வி கேட்டால் நீங்க பதில் சொல்றதில்லை..அதுனாலே நான் கேள்வி கேக்குறதில்லை..அதுக்காக என்கிட்டே ஒரு கேள்வியக் கேட்டு பதிலை சொல்லுடான்னா என்னா அர்த்தம்?////

  நம்பிக்கைதான். வேறென்ன?

  ReplyDelete
 34. ////kannan said...
  வணக்கம் ஐயா!
  அப்புறம் எதற்காகக் காதலிக்கிறீர்கள்?
  சரியான கேள்வி அதனைவிட சரியான பதிலும் கூட! காதல் என்பதற்கு உரிய மதிப்பு என்ன என்பதனை புரிய வைத்தமைக்கு நன்றி ஐயா! இருந்தாலும் எல்லோருக்கும் இந்த காதல் பாக்கியம் கூடிவருவதில்லையே அது
  தானே பிரச்சனையே ஐயா!//////

  கூடிவந்தாலும் நல்ல குணவதியாக அமையாவிட்டால், அதுவும் பிரச்சினைதான் கண்ணன்.

  ReplyDelete
 35. /////ananth said...
  Safe mode காதலா. நல்ல ideaஆக இருக்கிறதே. வேண்டாம் என்று பார்த்தேன். இதை (பொருத்தம் பார்ப்பதை) வைத்தும் ஒரு பதிவு போடலாம் போலிருக்கிறது.////

  நிறைய இளைஞர்களும், இளைஞிகளும் பதிவிற்கு வருகிறார்கள். காதலை ஆதரித்து நான் எழுதுவதில்லை.
  காதலுக்கு விரோதியும் அல்ல! காதலர்களுக்கு உங்கள் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்று மணம் செய்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவேன். முடியாது என்று சொல்லாமல் சத்யாகிரஹம் செய்தாவது அனுமதி பெறுங்கள். அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, திருட்டுக் கல்யாணம் செய்து கொள்ளாதீர்கள் என்று
  அறிவுறுத்துவேன். அதெல்லாம் மின்னஞ்சலில். பதிவில் எழுதுவதில்லை.

  ReplyDelete
 36. //////astroadhi said...
  மைனர் அண்ணா கலக்குறீங்க போங்க.....எதிர்பார்ப்பு வீண்போக வில்லை மைனர் அண்ணா...ஜப்பான்
  மைனர்னா சும்மா வகுப்பறையே அதிருது போங்க.....//////

  அதுதான் மைனர் டச்!

  ReplyDelete
 37. அன்புள்ள திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களுக்கு மணிகண்டன் எழுதும் இதயம் கனிந்த மடல் தங்களின் வலைதளத்தை தற்செயலாக சோதிடம் சம்பந்தமாக கூகுளில் தேடிய போது பார்க்க நேர்ந்தது எனது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அப்பப்பா எத்தனை எத்தனை விஷயங்கள் அதுவும் சோதிடம் மட்டுமல்லாது எவ்வளவு விஷயங்கள் எழுதியுள்ளீர்கள். தாங்கள் அறிவிற்கு எல்லையே இல்லையோ என்று என்னை செய்து வீட்டீர்கள். நான் புகழ்ச்சிக்காக எழுதவில்லை உண்மையில் விதிபற்றி தாங்கள் எழுதிய விஷயங்கள் எனது நெஞ்சை தொட்டவை. இப்படிப்பட் ஒரு ஆசிரியரை தான் நான் வெகு காலம் தேடினேன் கடவுள் என்னை தகுதியான குருவிடம் சேர்த்து விட்டார் என்று மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

  ReplyDelete
 38. Vanakam sir,

  This topic is really interesting sir...sorry that all these days I didn't leave any comment, but always read ur posts...keep it up sir...also i enjoyed reading the previous one about rakamamma...kelvi &pathil...

  Thanks
  Thanuja

  ReplyDelete
 39. //////astroadhi said...
  மைனர் அண்ணா கலக்குறீங்க போங்க.....எதிர்பார்ப்பு வீண்போக வில்லை மைனர் அண்ணா...//////
  Astroadi க்கு நன்றி..எப்படி..ஒரு வழியா சமாளிச்சிட்டேனா?எல்லாம் நீங்களும் வாத்தியாரும் கொடுக்குற build -up தான் காரணம்.அப்புறம் சுந்தரியம்மா வேற உசுப்பி உட்டுட்டாங்கோ..
  சரி..இந்த இடத்துலே ஏதும் பஞ்ச் டயலாக் வெச்சா நல்லா இருக்காது..?
  நாங்க லேட்டா வந்தாலும் சும்மா லேட்டஸ்ட் மேட்டரோட வருவோமில்ல?.......................
  (ஏதோ கணேஷ் பாவாவுக்கு நேரம் நல்லா இருந்தது..இத்தோட விட்டேன்..இன்னும் போட்டிருந்தா பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார்..deepஆ கட் பண்ணலை..இன்னும் டீப்பா போனால் நல்லா அலசலாம்..ஆனால் நான் என் பதிவுலே போடுறாப்போலே ரொம்ப நீண்ட பின்நூட்டமாப்போயிடும்..)

  ReplyDelete
 40. /////MANI said...
  அன்புள்ள திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களுக்கு மணிகண்டன் எழுதும் இதயம் கனிந்த மடல் தங்களின் வலைதளத்தை தற்செயலாக சோதிடம் சம்பந்தமாக கூகுளில் தேடிய போது பார்க்க நேர்ந்தது எனது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அப்பப்பா எத்தனை எத்தனை விஷயங்கள் அதுவும் சோதிடம் மட்டுமல்லாது எவ்வளவு விஷயங்கள் எழுதியுள்ளீர்கள். தாங்கள் அறிவிற்கு எல்லையே இல்லையோ என்று என்னை செய்து வீட்டீர்கள். நான் புகழ்ச்சிக்காக எழுதவில்லை உண்மையில் விதிபற்றி தாங்கள் எழுதிய விஷயங்கள் எனது நெஞ்சை தொட்டவை. இப்படிப்பட் ஒரு ஆசிரியரை தான் நான் வெகு காலம் தேடினேன் கடவுள் என்னை தகுதியான குருவிடம் சேர்த்து விட்டார் என்று மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.//////

  கற்றது கைமண் அளவு. அதை அடுத்த தலைமுறையினருக்காகப் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்!

  ReplyDelete
 41. /////Thanuja said...
  Vanakam sir,
  This topic is really interesting sir...sorry that all these days I didn't leave any comment, but always read ur posts...keep it up sir...also i enjoyed reading the previous one about rakamamma...kelvi &pathil...
  Thanks
  Thanuja/////

  நல்லது. நன்றி சகோதரி! நீங்கள் தொடர்ந்து படித்தால் போதும். பின்னூட்டம் பற்றிக் கவலைப்பட வேண்டாம்!

  ReplyDelete
 42. /////minorwall said...
  //////astroadhi said...
  மைனர் அண்ணா கலக்குறீங்க போங்க.....எதிர்பார்ப்பு வீண்போக வில்லை மைனர் அண்ணா...//////
  Astroadi க்கு நன்றி..எப்படி..ஒரு வழியா சமாளிச்சிட்டேனா?எல்லாம் நீங்களும் வாத்தியாரும் கொடுக்குற build -up தான் காரணம்.அப்புறம் சுந்தரியம்மா வேற உசுப்பி உட்டுட்டாங்கோ..
  சரி..இந்த இடத்துலே ஏதும் பஞ்ச் டயலாக் வெச்சா நல்லா இருக்காது..?
  நாங்க லேட்டா வந்தாலும் சும்மா லேட்டஸ்ட் மேட்டரோட வருவோமில்ல?.......................
  (ஏதோ கணேஷ் பாவாவுக்கு நேரம் நல்லா இருந்தது..இத்தோட விட்டேன்..இன்னும் போட்டிருந்தா பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார்..deepஆ கட் பண்ணலை..இன்னும் டீப்பா போனால் நல்லா அலசலாம்..ஆனால் நான் என் பதிவுலே போடுறாப்போலே ரொம்ப நீண்ட பின்நூட்டமாப்போயிடும்..)///////

  இப்போது சொல்லுங்கள் மைனர் - உங்களை மாட்டிவிட்டதாகச் சொன்னீர்களே - அது எந்த அளவு உண்மை?

  ReplyDelete
 43. \\\\\\\\\\\SP.VR. SUBBAIYA said... இப்போது சொல்லுங்கள் மைனர் - உங்களை மாட்டிவிட்டதாகச் சொன்னீர்களே - அது எந்த அளவு உண்மை?/////////
  ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.. எனக்கு இந்த அளவிலே ஜாதக அடிப்படை விவரங்களை புரிந்துகொண்டு விளக்கம் அளிக்கும் அளவுக்கு இந்த வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி..இன்னும் புரியாத பகுதிகள் எவ்வளவோ..நான் ஏற்கனவே நவாம்சம் சம்பந்தமான chart (http://classroom2007.blogspot.com/2008/08/blog-post_10.html கிரகங்களின் நவாம்சம்-ஒரு பார்வை ) பற்றியும் தசா புக்தியை பற்றியும் எப்படி scientific ரீதியில் விளக்க முடியும் என்று கேட்டிருந்தேன்..தெரியவில்லை என்று பதிலளித்திருந்தீர்கள்..
  வகுப்பறைத் தோழர்கள் யாருக்கும் இது பற்றி தெரிந்திருந்தால் விளக்கவும்..

  ReplyDelete
 44. ///minorwall said...
  \\\\\\\\\\\SP.VR. SUBBAIYA said... இப்போது சொல்லுங்கள் மைனர் - உங்களை மாட்டிவிட்டதாகச் சொன்னீர்களே - அது எந்த அளவு உண்மை?/////////
  ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.. எனக்கு இந்த அளவிலே ஜாதக அடிப்படை விவரங்களை புரிந்துகொண்டு விளக்கம் அளிக்கும் அளவுக்கு இந்த வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி..இன்னும் புரியாத பகுதிகள் எவ்வளவோ..நான் ஏற்கனவே நவாம்சம் சம்பந்தமான chart (http://classroom2007.blogspot.com/2008/08/blog-post_10.html கிரகங்களின் நவாம்சம்-ஒரு பார்வை ) பற்றியும் தசா புக்தியை பற்றியும் எப்படி scientific ரீதியில் விளக்க முடியும் என்று கேட்டிருந்தேன்..தெரியவில்லை என்று பதிலளித்திருந்தீர்கள்..
  வகுப்பறைத் தோழர்கள் யாருக்கும் இது பற்றி தெரிந்திருந்தால் விளக்கவும்.. //////

  விஞ்ஞானமும் மெய்ஞானமும் எப்போதும் ஒத்துப்போகாது. அவர்கள் நிலைப்பாடு அவர்களுக்கு. நமது நிலைப்பாடு நமக்கு! நல்லது. நன்றி மைனர்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com