வகுப்பறையின் வார மலர். ஒவ்வொரு ஞாயிறன்றும் வெளியாகும். ஆக்கங்கள் உங்களுடையது. படித்து ரசித்தவர்கள், தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடலாம். பங்கு கொள்ள விரும்புபவர்கள் தங்கள் ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நமது வகுப்பறையின் சிறப்பு மாணவரான இந்த இளைஞரின்
பெயர் V. கோபாலன்.
V for Venkatraman. வயது 74.
இணையத்தில் வலம் வருபவர்கள் அனைவரும் இளைஞர்களே - என்னையும் சேர்த்து! மனதிற்கு ஏது சாமி வயது?
அன்பரின் சொந்த மற்றும் பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தில்லையாடி. சின்னஞ்சிறு வயதில், நான்கு மாதக் குழந்தையாக
இருந்தபோது காலனிடம் தன் தந்தையாரைப் பறிகொடுத்தவர்.
ஊரிலிருந்த வீடு, நிலம் இவற்றை விற்றுக் காலத்தைக் கடத்தியும் தன்னுடைய எட்டாம் வகுப்பு வரையில் மயிலாடுதுறையில்
படித்தும், பின் வசதி இன்மையால் தன்னுடைய தாய்மாமன் வாழ்ந்த
வட ஆற்காடு மாவட்டம் அரக்கோணத்தில், அவர் வீட்டில் தங்கிப்
படிக்கவும் செய்தார்.
இப்போது இவர் இருப்பது தரணி போற்றும் தஞ்சாவூர். ’கல்கி’
அவர்களின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்களுக்கு
மட்டுமே தஞ்சையின் பெருமை தெரியும்.
அரக்கோணத்தில் இவர் படித்த பள்ளி, முதலில் சி.எஸ்.எம்.
உயர்நிலைப் பள்ளியாக இருந்து பின் செயிண்ட் ஆண்ட்ரூஸ்
உயர்நிலைப் பள்ளியாக மாறியது. தஞ்சாவூர் மாவட்டத்தில்
எட்டுவரை படித்துவிட்டு ஆந்திராவின் எல்லையான
அரக்கோணத்தில் வாழ்க்கையைத் தொடர்ந்தார். அந்த வட்டார
மொழியைப் புரிந்து கொள்ளவே சில ஆண்டுகள் பிடிக்கும்.
இரு ஆண்டுகள் போலீஸ் இலாக்காவிலும், பிறகு முப்பத்தெட்டு
ஆண்டுகள் லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பொரேஷனிலும் பணியாற்றி
ஒய்வு பெற்று, இப்போது பாரதி இயக்கம் எனும் பெயரில்
நண்பர்களோடு இலக்கியப் பணியும், திருவையாறு ஐறாறப்பர்
ஆலயத்தில் நடைபெறும் 'நாட்டியாஞ்சலி" குழுவின்
தலைவராகவும் இருந்து பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.
மன்னார்குடி மதில் அழகு என்பார்கள். மன்னார்குடி மக்களும் அழகானவர்கள்தான். அதற்கு இவர் ஒரு உதாரணம். எல்லாம் மன்னார்குடியில் உறையும் ராஜகோபால சுவாமியின் அருள்!
எண்பதும், நூறும் கண்டு இவர் இன்புற்று வாழ,
நம் வகுப்பறையின் சார்பில் பழநிஅப்பனைப் பிரார்த்திக்கிறேன்!
நம் வகுப்பறையின் சார்பில் பழநிஅப்பனைப் பிரார்த்திக்கிறேன்!
இவருடைய இளமைக்கால நினைவுகள் கட்டுரையாக வந்துள்ளது.
கீழே கொடுத்துள்ளேன். அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்.
படித்து இன்புற்றவர்கள், தங்கள் கருத்தை ஒரு வரியில் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.
நன்றி, வணக்கத்துடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------------
Over to posting!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ "நீங்காத நினைவுகள்"
தலைப்பு: தன்னை அடித்தவனை என்ன செய்தார் ஆசிரியர்?
1950/51 தொடங்கி 1953/54 வரை உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது
முதல் பள்ளி இறுதி வகுப்பு (11ம் வகுப்பு) வரை படித்தேன். மூன்று
வகுப்புக்கள் தானே, நான்கு வருடங்கள் எப்படி என்று கேட்காதீர்கள். அஸ்திவாரம் பலமாக இருக்க ஒன்பதில் இரண்டு வருடங்கள்
விரும்பிப் படித்தேன். என் விருப்பமில்லை. ஆசிரியர்களின் விருப்பம்.
அது சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து பள்ளிக்கூடம், அப்போதுதான்
இந்திய மயமாகி வேறு நாமகரணம் சூட்டியிருந்தார்கள்.
அங்கு தலைமை ஆசிரியராக இருந்தவர் தெலுங்கு பேசும் கிறிஸ்தவர். அவருடைய தோற்றம் மற்றும் செயல்பாடுகள் எல்லாம் கண்டவரை அடிபணிய வைக்கும். அதாவது மரியாதை செய்ய வைக்கும்.
அப்படிப்பட்ட நேர்மையாளர், கட்டுப்பாட்டைக் கெடுபிடியாக அமல்படுத்துவார். தவறு செய்பவர்களைக் கடுமையாகத்
தண்டிப்பார், அவன் எவ்வளவு பெரிய வீட்டுப் பிள்ளையானாலும் சரி!
அன்றைய பெற்றோர்கள் புகார் மனு எடுத்துக் கொண்டு மேலதிகாரி
களிடமும் காவல் துறையிடமும் செல்ல மாட்டார்கள். அப்படியொரு
பண்பாடு அன்றையப் பெற்றோர்களிடமும் நிலவியது.
அந்தப் பள்ளியில் எல்லா ஆசிரியர்களும் ஆங்கில வழக்கப்படி கோட்,
சூட், டை அணிந்துதான் பள்ளிக்கு வருவார்கள். சில பழையகால
மனிதர்கள் பேண்ட்டுக்கு பதில் வேட்டியைக் கச்சமாகக் கட்டிக்
கொண்டு சட்டையை இன் பண்ணிக்கொண்டு டை கட்டிக்கொண்டு,
தலையில் தலைப்பாகை அணிந்து வருவார்கள். அவர்களுக்கு
மத்தியில் ஜெய்சிங்ராஜ் என்பவர். வேட்டி ஜிப்பா அணிந்துதான்
வருவார். மிகச் சிறந்த பண்பாளர். உயர் வகுப்புக்களுக்கு சோசியல்
ஸ்டடீஸ் என்னும் பாடம் நடத்துவார்.
ஒரு நாள் என் வகுப்பில் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். என்
பக்கத்தில் மாசிலாமணி என்னும் மாணவன். அவன் அருகிலிருந்த ஒரு கிராமத்திலிருந்து பள்ளிக்கு வருவான். அவ்வளவாக அவனுக்கு
மற்றவர்களோடு பழகத் தெரியாது. முரடன், ஆனாலும் நல்லவன்.
ஆசிரியர் ஜெய்சிங்ராஜ் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது இவன் டெஸ்க்கில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். இதைக் கவனித்த
ஆசிரியர் அவன் மீது தன் கையில் வைத்திருந்த சாக்பீஸ் கட்டியைத்
தூக்கி எறிந்தார். அவன் திடுக்கிட்டு எழுந்தான். அப்போது
ஆசிரியருக்கும் மாசிலாமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆசிரியர் ஒரு கட்டத்தில் கோபமடைந்து "என்னடா! பேச்சுக்கு எதிர்பேச்சு பேசிக் கொண்டிருக்கிறாய்? எழுந்திரு, வகுப்பை விட்டு வெளியே போ" என்றார்.
கேட்கக்கூடியவன் இல்லையே அவன். போகாமல் உட்கார்ந்திருந்தான். ஆசிரியர் அவனை நெருங்கி வந்து அவனை இழுக்க முயன்றபோது, இவன் ஆத்திரமடைந்து அவரை அடித்து விட்டான்.
ஒரு மாணவன் வகுப்பில் அனைவர் எதிரிலும், எதிர்பாராமல்
தன்னை அடித்ததும் அவர் ஒரு கணம் திகைத்துப் போனார். ஒரே
ஒரு கணம்தான். அடுத்த நொடி அவர் திரும்பிப் போய்த் தன்
இடத்தில் சிறிது நேரம் மெளனமாக உட்கார்ந்தார்.
வகுப்பே மயான அமைதியாக மாறிற்று. ஒருவரும் பேசக்கூட இல்லை.
என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் அனைவருக்குமே இருந்தது. மாசிலாமணியோ ஆடு திருடிய கள்ளன் போல என் பக்கத்தில்
உட்கார்ந்திருக்கிறான். ஆசிரியர், அவரைவிடக் கண்டிப்பான தலைமை ஆசிரியர் பிரகாசத்திடம் போய்ச் சொன்னால் போயிற்று. மாசிலாமணியின் படிப்பு அவ்வளவுதான்.
வகுப்பு முடிந்து மணி அடித்தது. ஜெய்சிங்ராஜ் போய்விட்டார். அடுத்த வகுப்பிற்கு விக்டர் எனும் ஆசிரியர் வந்து ஆங்கிலம் நடத்தினார்.
மாணவர்கள் யாருக்கும் பாடத்தில் கவனம் இல்லை. தலைமை ஆசிரியரிடமிருந்து பியூன் வந்து மாசிலாமணியை அழைக்கப் போகிறான். இன்றோடு அவன் சீட்டுக் கிழிந்தது என்று அச்சத்தோடு அனைவரும் உட்கார்ந்திருந்தனர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.
மறுநாளும் வந்தது. ஜெய்சிங்ராஜ் வகுப்புக்கு வந்தார். பாடம் நடத்தினார். ஒன்றுமே நடக்காதது போல வழக்கம்போல கலகலப்பாக இருந்தார்.
அந்த ஆண்டு முடிந்தது. பள்ளி இறுதி வகுப்பல்லவா? அன்று
வகுப்பில் கடைசி நாள். மாணவர்கள் குதூகலமாகப் பேசிக்
கொண்டு இருந்தனர். ஆசிரியர்கள் அன்று எல்லோருடனும்
பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியான சூழ்நிலை.
நான் எழுந்து அவரிடம் கேட்டேன், “சார்! மாசிலாமணி விஷயம் ஒன்றுமில்லாமல் போய்விட்டதே. நீங்கள் தலைமை ஆசிரியரிடம் விஷயத்தைச் சொல்லவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.
ஒரு மாணவனின் எதிர்காலத்தைக் கெடுக்க நீங்கள் விரும்பவில்லை
என்றும் பேசுகிறார்கள். என்ன ஆயிற்று? இது குறித்து நீங்கள்
புகார் கொடுக்க வில்லையா?" என்றேன்.
ஜெய்சிங்ராஜ், புன்னகையுடன் என்னருகில் வந்து என்னைத் தட்டிக் கொடுத்து விட்டு சொன்னார்: "மாணவப் பருவம் அப்படித்தான். இளம் கன்று பயமறியாது. இதை ஒரு குற்றமாகக் கருதி புகார் செய்தால், ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பாழாகப் போகும். நானும் ஒரு மாணவனாக இருந்துதான் ஆசிரியராக வந்திருக்கிறேன். ஒருவனைக் கெடுத்துவிட ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் அவனை மனிதனாக வாழ விடுவதுதான் ஒரு ஆசிரியரின் கடமை. புரிந்ததா? நீங்களும் உங்களால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். எந்த காரணம் கொண்டும் யாரையும் கெடுக்க முயலாதீர்கள். இதைக் கடைப்பிடிப்பீர்களா?” என்றார்
எங்கள் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். அனைவரும் கைதட்டி அவர் சொன்னதை வரவேற்றோம், நண்பன் மாசிலாமணி உட்பட!
இதைவிட மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக வேறு என்ன வேண்டும்?
அன்று மனதை நெகிழ வைத்துவிட்டார், அந்த ஒப்பற்ற மனிதர்!
என் மனைதில் நீங்காமல் தங்கிவிட்ட நிகழ்வாகும் இது!
மாசில்லாமணி என்ன ஆனான் என்று கேட்கிறீர்களா?
அவன் பிறகு, ரயில்வே பணி மனையில் பணி செய்து, ஓய்வு பெற்று, இப்போது பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
- ஆக்கம் - V. கோபாலன்.
வாழ்க வளமுடன்!
// "மாணவப் பருவம் அப்படித்தான். இளம் கன்று பயமறியாது. இதை ஒரு குற்றமாகக் கருதி புகார் செய்தால், ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பாழாகப் போகும். நானும் ஒரு மாணவனாக இருந்துதான் ஆசிரியராக வந்திருக்கிறேன். ஒருவனைக் கெடுத்துவிட ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் அவனை மனிதனாக வாழ விடுவதுதான் ஒரு ஆசிரியரின் கடமை. புரிந்ததா? நீங்களும் உங்களால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். எந்த காரணம் கொண்டும் யாரையும் கெடுக்க முயலாதீர்கள். இதைக் கடைப்பிடிப்பீர்களா?” //
ReplyDeleteமிக மிக நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்து இருக்கின்றார் ஆசிரியர். அப்பேற்பட்ட ஆசிரியரிடம் படித்த மாணவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
ஆஹா! அருமையான ஒரு நினைவு
ReplyDeleteகதைகூறும் நீதியே அதற்கு மகுடம்...
"புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!"
---சி சுப்ரமணிய பாரதி.
தனக்கு நேர்ந்தது விதி!!!...
அதை புகாராக்கினால் அந்த
மாணவனின் கதி???????...
உயர்ந்த மதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!....
அவரும் ஆசிரியரல்லவா!...
தங்களின் எண்ணக் குவியலில்
ஒருதுளியை விருந்தாக்கிய அருமை
பெரியோய்! ஐயா! உங்களை வணங்குகிறேன்.
நன்றிகள் குருவே!
அய்யா . . .
ReplyDeleteவாழ்த்துவதற்கு வயது தேவையில்லை . .
நல்ல எண்ணம் தான் வேண்டும் . .
இல்லையெனில்
நமச்சிவாய வாழ்க
என மாணிக்க வாசகர் நமச்சிவாயத்தை வாழ சொல்லித் தருவாரா . . .?
இளமை நினைவுகள் வகுப்பறையில் ஒலி ஒளி அரங்கேறுவது புது முயற்சி . .
நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை
என்ற வரிகளினால் . .
அது தேவையில்லையோ என தோன்றுகிறது . .
மாற்று சிந்தனைகள் என்றாலும் அய்யாவின் வகுப்பறை என்பதால் உரிமையுடன் பதிவு செய்கிறேன்
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDelete"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்".
என்ற திருக்குறளின்படி, நடந்து இருக்கிறார் ஆசிரியர்..
ஒரு மாணவனின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதே மரியாதைக்குரிய ஆசிரியர் திரு.ஜெய்சிங்ராஜ் அவர்கள் அமைதியாக இருந்ததற்குக் காரணமாக இருந்துள்ளது.ஆசிரியர் மிகவும் யோசித்து செயல்பட்டுள்ளார்.மனம் பக்குவமடைந்தவர்கள் மட்டுமே இத்தகைய செயலை செய்யமுடியும்.
அந்த மாணவர் மாசிலாமணிஅவரின் வாழ் நாளில் தனது செயலை நினைத்து வருந்தியதோடு, மற்றவர்களோடு பழகத் தெரியாத
முரடனாக இருந்தவர் அதன் பிறகு நல்லவராக வாழ்வதற்கு நல்ல வாய்ப்பினை இதன் மூலமாகப் பெற்றிருப்பார் என்று கருதுகிறேன்.
- - - - - - - - - - -- - - - - - -
இத்தகைய படிப்பினையை அளிக்கக்கூடிய ஆக்கத்தினை அளித்த உயர்திரு.V. கோபாலன் அய்யா அவர்களுக்கும்,வாத்தியார் அய்யா அவர்களுக்கும் எனது நன்றி யினைத் தெரிவித்துகொள்கிறேன்.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-08-01
குழந்தைகள் பாதுகாப்புக்கென்று சட்டம், ஆசிரியர் மாணவரை அடித்தால் தவறென்று சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் சமயம் பிரசுரிக்கப்பட்டிருக்கும் அய்யாவின் இந்த ஆக்கம்
ReplyDeleteஆசிரியர் பாதுகாப்பு சட்டமும் அவசியமோ என்று எண்ணமிடத் தோன்றுகிறது..மாசிலாமணி இந்தக் கதையின் எந்த இடத்திலுமே ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கோரவில்லை என்பது அவர்போன்று வகுப்பறையில் தூங்குவதும் கண்டிக்க எத்தனிக்கும் ஆசிரியரை அடிப்பதும் சரியானதே எனும் மனோபாவத்தை சித்தரிப்பதாக உள்ளது.
நிகழ்ந்த நிகழ்வு என்ற போதிலும் இருவர் செய்ததுமே சரியல்ல என்பதுதான் எனது நிலைப்பாடு..பெருந்தன்மை என்பதை இளிச்சவாய்த்தனம் என்று பார்க்கிற மனோபாவம் கொண்டவரிடம் பெருந்தன்மை பாராட்டுவது முற்றிலும் சரியானதல்ல என்பது என் கருத்து.
/////Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி./////
நல்லது. நன்றி நண்பரே!
////இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// "மாணவப் பருவம் அப்படித்தான். இளம் கன்று பயமறியாது. இதை ஒரு குற்றமாகக் கருதி புகார் செய்தால், ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பாழாகப் போகும். நானும் ஒரு மாணவனாக இருந்துதான் ஆசிரியராக வந்திருக்கிறேன். ஒருவனைக் கெடுத்துவிட ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் அவனை மனிதனாக வாழ விடுவதுதான் ஒரு ஆசிரியரின் கடமை. புரிந்ததா? நீங்களும் உங்களால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். எந்த காரணம் கொண்டும் யாரையும் கெடுக்க முயலாதீர்கள். இதைக் கடைப்பிடிப்பீர்களா?” //
மிக மிக நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்து இருக்கின்றார் ஆசிரியர். அப்பேற்பட்ட ஆசிரியரிடம் படித்த மாணவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்த நிலையை அடைவார்கள்./////
நல்லது. உங்களின் மனப்பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி ராகவன்!
//////Alasiam G said...
ReplyDeleteஆஹா! அருமையான ஒரு நினைவு
கதைகூறும் நீதியே அதற்கு மகுடம்...
"புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!"
---சி சுப்ரமணிய பாரதி.
தனக்கு நேர்ந்தது விதி!!!...
அதை புகாராக்கினால் அந்த
மாணவனின் கதி???????...
உயர்ந்த மதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!....
அவரும் ஆசிரியரல்லவா!...
தங்களின் எண்ணக் குவியலில்
ஒருதுளியை விருந்தாக்கிய அருமை
பெரியோய்! ஐயா! உங்களை வணங்குகிறேன்.
நன்றிகள் குருவே!////
நல்லது. உங்களின் மனப்பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
/////iyer said...
ReplyDeleteஅய்யா . . .
வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை . .
நல்ல எண்ணம் தான் வேண்டும் . .
இல்லையெனில்
நமச்சிவாய வாழ்க
என மாணிக்க வாசகர் நமச்சிவாயத்தை வாழ சொல்லித் தருவாரா . . .?
இளமை நினைவுகள் வகுப்பறையில் ஒலி ஒளி அரங்கேறுவது புது முயற்சி . .
நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை
என்ற வரிகளினால் . .
அது தேவையில்லையோ என தோன்றுகிறது . .
மாற்று சிந்தனைகள் என்றாலும் அய்யாவின் வகுப்பறை என்பதால் உரிமையுடன் பதிவு செய்கிறேன்/////
நல்லதை நினைவுகூர்வதில் எங்கே சாமி அமைதி இல்லாமல் போகும்? இதில் மாற்று சிந்தனை எங்கே இருக்கிறது?
//////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்".
என்ற திருக்குறளின்படி, நடந்து இருக்கிறார் ஆசிரியர்..
ஒரு மாணவனின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதே மரியாதைக்குரிய ஆசிரியர் திரு.ஜெய்சிங்ராஜ் அவர்கள் அமைதியாக இருந்ததற்குக் காரணமாக இருந்துள்ளது.ஆசிரியர் மிகவும் யோசித்து செயல்பட்டுள்ளார்.மனம் பக்குவமடைந்தவர்கள் மட்டுமே இத்தகைய செயலை செய்யமுடியும்.
அந்த மாணவர் மாசிலாமணிஅவரின் வாழ் நாளில் தனது செயலை நினைத்து வருந்தியதோடு, மற்றவர்களோடு பழகத் தெரியாத
முரடனாக இருந்தவர் அதன் பிறகு நல்லவராக வாழ்வதற்கு நல்ல வாய்ப்பினை இதன் மூலமாகப் பெற்றிருப்பார் என்று கருதுகிறேன்.
- - - - - - - - - - -- - - - - - -
இத்தகைய படிப்பினையை அளிக்கக்கூடிய ஆக்கத்தினை அளித்த உயர்திரு.V. கோபாலன் அய்யா அவர்களுக்கும்,வாத்தியார் அய்யா அவர்களுக்கும் எனது நன்றி யினைத் தெரிவித்துகொள்கிறேன்.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////
நல்லது. உங்களின் மனப்பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!
minorwall said...
ReplyDeleteகுழந்தைகள் பாதுகாப்புக்கென்று சட்டம், ஆசிரியர் மாணவரை அடித்தால் தவறென்று சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் சமயம் பிரசுரிக்கப்பட்டிருக்கும் அய்யாவின் இந்த ஆக்கம்
ஆசிரியர் பாதுகாப்பு சட்டமும் அவசியமோ என்று எண்ணமிடத் தோன்றுகிறது..மாசிலாமணி இந்தக் கதையின் எந்த இடத்திலுமே ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கோரவில்லை என்பது அவர்போன்று வகுப்பறையில் தூங்குவதும் கண்டிக்க எத்தனிக்கும் ஆசிரியரை அடிப்பதும் சரியானதே எனும் மனோபாவத்தை சித்தரிப்பதாக உள்ளது.
நிகழ்ந்த நிகழ்வு என்ற போதிலும் இருவர் செய்ததுமே சரியல்ல என்பதுதான் எனது நிலைப்பாடு..பெருந்தன்மை என்பதை இளிச்சவாய்த்தனம் என்று பார்க்கிற மனோபாவம் கொண்டவரிடம் பெருந்தன்மை பாராட்டுவது முற்றிலும் சரியானதல்ல என்பது என் கருத்து. /////
அந்தக் காலத்துப்பெற்றோர்களின் பண்பட்டைக் கட்டுரை ஆசிரியர் இப்ப்டிக்கு குறிப்பிட்டுள்ளாரே! அதை ஏன் மைனர் நீங்கள் கவனிக்கவில்லை?
///////அன்றைய பெற்றோர்கள் புகார் மனு எடுத்துக் கொண்டு மேலதிகாரிகளிடமும் காவல் துறையிடமும் செல்ல மாட்டார்கள். அப்படியொரு பண்பாடு அன்றையப் பெற்றோர்களிடமும் நிலவியது.///////
அந்தக் காலத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும், அடியாத மாடு படியாது என்னும் உறுதியான எண்ணத்தை கொண்டிருந்தார்கள். அது உங்களுக்குத் தெரியாமல் போனது வியப்பே!
என் தந்தையார் இப்படிச் சொல்வார்: ஆணை (ஆண் பிள்ளையை) அடக்கி வள (வளர்க்க வேண்டும்), பெண்ணைப் (பெண் பிள்ளையை) பொசுக்கி வள (வளர்க்க வேண்டும்),
இப்போது யாரும் அப்படிச் சொல்வதில்லை. சொன்னால் பிற்போக்குவாதி என்னும் முத்திரை குத்தப்பட்டுவிடுவார்
.
மேலும், பஃபிற்கும், பாருக்கும் நண்பர்களுடன் செல்லும் இந்தக் காலத்து இளசுகள் (பெண்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) மகளிர் காவல நிலையத்திற்கும் செல்லத் தயங்க மாட்டார்கள். சொன்னவனை முட்டிக்கு முட்டி தட்டி தட்டி எடுத்து விடுவார்கள். கலி முற்றிக்கு கோண்டிருக்கிறது மைனர்.
பிள்ளையைத்தான் பெத்து கிட்டு பேரு வைக்கலாமா? அல்லது வைக்கலாம் என்பதுதான் இன்றையைக் கலாச்சாரம்
மைனர்! மைனர்! மைனர்!
உலகம் எங்கும் இன்று மக்கள் விரும்பும் ஒரே பணம்தான் - அது அமெரிக்க டாலர்
உலகம் எங்கும் இன்று இளசுகள் விரும்பும் ஒரே கலாச்சாரம் - அது அமெரிக்கக் கலாச்சாரம்!
இந்தியக் கலாச்சாரம் எல்லாம் எங்கள் தலைமுறையோடு ஒழிந்து போனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை மைனர்!
அலுவலகத்தில் எனக்கு மிகவும் சீனியரும், நட்புக்கு என் வயது கருதாமல்
ReplyDeleteசமமாக பாவிப்பவரும் ஆன அன்பு நண்பர் திரு வே.கோபாலன் அவர்களின் பள்ளிப் பருவ நினைவுப் பதிவு நல்ல ஆக்கம்.பொறுமை கடலினும் பெரிது என்பதை அக்கால ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து செயல் பட்டார்கள்.கையைத்தடுத்த மாணவனைக் கடித்துவிட்ட இக்கால ஆசிரியையின்
உண்மைக் கதை எனக்குத் தெரியும்.வெளியில் அடையாளம் காட்டக் கூடாது.
திரு வே. கோபாலன் 3 பிளாக் நடத்துகிறார்.ஒன்று மஹாகவி பாரதியர் பற்றி அவ்ர் நடத்திய அஞ்சல் வழிப்பாடத்திட்டத்தின் பாடங்களின் தொகுப்பு.
மற்றொன்று கம்பராமயணம் முழுவதும் உரைநடையில் அவர் எழுதியது.
பிறிதொன்று தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வழ்க்கைக்குறிப்பு
இதுவரை 100க்கும் மேற்பாடவர்களைப்பற்றி எழுதியாயிற்று.வகுப்பறை மாணவர்கள் இந்த தளங்களுக்கும் சென்று பயனடைய வேண்டுகிறேன்.
http://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com
2. http:/www.privarsh.blogspot.com
3. http:/www.bharathipayilagam.blogspot.com
வணக்கம் அய்யா
ReplyDeleteஒன்னை மூடி வசிருக்கரவரைதான் அது புதிர். திறந்து வசிட்ட அதில் ஒண்ணுமில்ல. ஆனா இயற்க்கை அதை ஏன் மூடி வசிருக்கிதுங்கரதைதான் ஆளாளுக்கு தப்பு தப்ப புரிஞ்சிருக்காங்க. "வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம் போகும் பாதை ரொம்ப தூரம்".
பிறகு உங்களிடம் ஒரு சந்தேகம் பிறப்பு பற்றி சிதூர் முருகேசன் அவர்களுக்கு பதில் கூறியிருந்தீர்கள் அதே கேள்வியை இறப்பு பற்றி கேட்டு அதற்க்கு சரியான பதில் அளிக்கப்பட்டால் மட்டுமே அது சரியான கேள்வி பதில் விமான விபத்து , உலகப்போர்கள் , ஹிரோஷிமா நாகசாஹி, சுனாமி இதெல்லாம் எவாறு சாத்தியப்பட்டது. அந்த நேரத்தில் அவர்கள் எல்லோருக்குமே கோள்கள் பகையாயிருக்குமா ? இல்லை அவ்விடங்களுக்கு அந்த ஷனத்தில் நேரம் பகை என்றாலும் அந்த நேரத்திலும் சில உயிர்கள் தப்பியதே அது எவாறு? எனக்கும் புரியும்படி விளக்கவும் நன்றி....
இவர்தான் வாத்தியார். வாத்தியார்களுக்கே ஓர் இலக்கணம் போன்றவர். அந்த மாணவர் என்றாவது ஒரு நாள் தன் செயலுக்காக நிச்சயம் வருந்தியிருப்பார். மேல் நாட்டு கலாச்சாரத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. ஆனால் கூடாதவற்றையே பலர் கற்றுக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.
ReplyDeleteஎன் பதிவை தொடங்கி விட்டேன் ஐயா. இன்று அறிமுகம். எனது முதல் ஜோதிட பதிவு செவ்வாயன்று வெளியாகும்.
http://ananth-classroom.blogspot.com/
//////kmr.krishnan said...
ReplyDeleteஅலுவலகத்தில் எனக்கு மிகவும் சீனியரும், நட்புக்கு என் வயது கருதாமல்
சமமாக பாவிப்பவரும் ஆன அன்பு நண்பர் திரு வே.கோபாலன் அவர்களின் பள்ளிப் பருவ நினைவுப் பதிவு நல்ல ஆக்கம்.பொறுமை கடலினும் பெரிது என்பதை அக்கால ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து செயல் பட்டார்கள்.கையைத்தடுத்த மாணவனைக் கடித்துவிட்ட இக்கால ஆசிரியையின் உண்மைக் கதை எனக்குத் தெரியும்.வெளியில் அடையாளம் காட்டக் கூடாது.
திரு வே. கோபாலன் 3 பிளாக் நடத்துகிறார்.ஒன்று மஹாகவி பாரதியர் பற்றி அவ்ர் நடத்திய அஞ்சல் வழிப்பாடத்திட்டத்தின் பாடங்களின் தொகுப்பு.
மற்றொன்று கம்பராமயணம் முழுவதும் உரைநடையில் அவர் எழுதியது.
பிறிதொன்று தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வழ்க்கைக்குறிப்பு
இதுவரை 100க்கும் மேற்பாடவர்களைப்பற்றி எழுதியாயிற்று.வகுப்பறை மாணவர்கள் இந்த தளங்களுக்கும் சென்று பயனடைய வேண்டுகிறேன்.
http://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com
2. http:/www.privarsh.blogspot.com
3. http:/www.bharathipayilagam.blogspot.com///////
மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சார்!
//////geekayvee said...
ReplyDeleteவணக்கம் அய்யா
ஒன்னை மூடி வசிருக்கரவரைதான் அது புதிர். திறந்து வசிட்ட அதில் ஒண்ணுமில்ல. ஆனா இயற்க்கை அதை ஏன் மூடி வசிருக்கிதுங்கரதைதான் ஆளாளுக்கு தப்பு தப்ப புரிஞ்சிருக்காங்க. "வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம் போகும் பாதை ரொம்ப தூரம்".
பிறகு உங்களிடம் ஒரு சந்தேகம் பிறப்பு பற்றி சித்தூர் முருகேசன் அவர்களுக்கு பதில் கூறியிருந்தீர்கள் அதே கேள்வியை இறப்பு பற்றி கேட்டு அதற்க்கு சரியான பதில் அளிக்கப்பட்டால் மட்டுமே அது சரியான கேள்வி பதில் விமான விபத்து , உலகப்போர்கள் , ஹிரோஷிமா நாகசாஹி, சுனாமி இதெல்லாம் எவாறு சாத்தியப்பட்டது. அந்த நேரத்தில் அவர்கள் எல்லோருக்குமே கோள்கள் பகையாயிருக்குமா ? இல்லை அவ்விடங்களுக்கு அந்த ஷனத்தில் நேரம் பகை என்றாலும் அந்த நேரத்திலும் சில உயிர்கள் தப்பியதே அது எவ்வாறு? எனக்கும் புரியும்படி விளக்கவும் நன்றி....///////
இன்னும் பல உள்ளன. ஹிட்லர் தன் ஆட்சிக் காலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்களைக் கொன்று குவித்தாகச் சொல்வார்கள்.இது பற்றிய ஆராய்ச்சியை நானும் செய்து கொண்டிருக்கிறேன். என் அறிவிற்குத் தகுந்த, தேடலுக்குத் தகுந்த சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் தனிப் பதிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்.
ananth said...
ReplyDeleteஇவர்தான் வாத்தியார். வாத்தியார்களுக்கே ஓர் இலக்கணம் போன்றவர். அந்த மாணவர் என்றாவது ஒரு நாள் தன் செயலுக்காக நிச்சயம் வருந்தியிருப்பார். மேல் நாட்டு கலாச்சாரத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. ஆனால் கூடாதவற்றையே பலர் கற்றுக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.
என் பதிவை தொடங்கி விட்டேன் ஐயா. இன்று அறிமுகம். எனது முதல் ஜோதிட பதிவு செவ்வாயன்று வெளியாகும்.
http://ananth-classroom.blogspot.com/
நல்லது. வாழ்த்துக்கள் ஆனந்த்!
Noble teacher. Nice posting. Thanks for sharing.
ReplyDelete//////நாடோடிப் பையன் said...
ReplyDeleteNoble teacher. Nice posting. Thanks for sharing.////
நல்லது. நன்றி நண்பரே!
மிக அருமையான ஆசிரியர்,அபூர்வமானரும் கூட திரு.ஜெய்சிங்ராஜ் அவர்கள்...
ReplyDelete////மதி said...
ReplyDeleteமிக அருமையான ஆசிரியர்,அபூர்வமானரும் கூட திரு.ஜெய்சிங்ராஜ் அவர்கள்.../////
நல்லது. நன்றி நண்பரே!
தங்களுக்கும், நான் எழுதியுள்ள நினைவலைகளுக்கு பதிலெழுதிய அன்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகிறேன். நான் என் வயதை என்றும் எண்ணிப்பார்ப்பதே இல்லை. தொடர்ந்து எனது பணிகளில் கவனத்தோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இனியும் அவ்வண்ணமே இருப்பேன். நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு மீண்டும் எனது நன்றி.
ReplyDelete/////Thanjavooraan said...
ReplyDeleteதங்களுக்கும், நான் எழுதியுள்ள நினைவலைகளுக்கு பதிலெழுதிய அன்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகிறேன். நான் என் வயதை என்றும் எண்ணிப்பார்ப்பதே இல்லை. தொடர்ந்து எனது பணிகளில் கவனத்தோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இனியும் அவ்வண்ணமே இருப்பேன். நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு மீண்டும் எனது நன்றி. ///////
உங்களிடம் இருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. இந்த வயதிலும் உங்களிடம் உள்ள சேவை உணர்வு (3 பதிவுகள் அந்தக் கணக்கில் வரும்) உழைப்பு, பணிவு. நன்றி சார்!
குழு மரணம் பற்றி ராமன் எழுதி உள்ளார். In mundane astrology the events of the place override the individual horoscope. He even says that some people survive because of the horoscope strength. I will give his exact writings when I could locate it in one of his books.
ReplyDelete/////krish said...
ReplyDeleteகுழு மரணம் பற்றி ராமன் எழுதி உள்ளார். In mundane astrology the events of the place override the individual horoscope. He even says that some people survive because of the horoscope strength. I will give his exact writings when I could locate it in one of his books. ///////
நானும் படித்திருக்கிறேன். தேடி எடுக்க நேரமில்லை! நன்றி க்ரீஷ்!