மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
7.8.10
அது ஒரு தனி அரசாங்கம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அது ஒரு தனி அரசாங்கம்!
புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 14
புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
-------------------------------------------------------------------------------------
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு
ஆறுமுகம் இங்கு
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா
படம் : தெய்வம்
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலின் ஒலி & ஒளி வடிவம் காண இங்கே சுட்டி உள்ளது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
Subscribe to:
Post Comments (Atom)
மகாத்மாவின் பொன்மொழிகளுக்கு நன்றி ஆசிரியரே!
ReplyDelete"பாடலின் வரிகள் இமயம்,குரல்கள் அதன்
சிகரம். வழிந்தோடும் இசையது புனித கங்கா."
நாங்கள் ஆதியில் நெல்லை மாவட்டக்காரர்கள்.என் தாய், தந்தை இருவரும்
ReplyDeleteஇளமைக் காலத்தை நெல்லைச் சீமையில் கழித்தவர்களே!1949 முதல் 1970வரை சேலம்.பின்னர் 3 வருடங்கள் சென்னை, கோவை என்று கழித்துவிட்டு 1973ல் தஞ்சையைத் தஞ்சம் அடைந்தேன். வந்தாரை வாழ வைக்கும் தஞ்சைத் தரணி என்னையும் வாழ வைத்தது.ஏன் இந்த சுய புராணம்? எல்லாம் அந்த செந்தூரார் எங்களவர் என்று சொந்தம் கொண்டாடதான்
எண்ணங்களை பிரதிபலிக்கும்
ReplyDeleteஎளிமையான வாத்தியார் . .
உங்கள் விருப்பம் வானொலியில்அல்ல
எங்கள் வகுப்பறையிலும் . .
என மெய்பிக்கும்
விரும்பி கேட்ட பாடலை
திருசெந்தில் ஊரான் உங்கள் மனதில் நின்று எழுத பாட வைத்திருக்கிறான் என
எண்ணுகையில் எண்ணில்லா நரம்புகள் எழுச்சி பெறுகின்றன..
மனதை 30 வினாடிகளாவது உளுக்கும் இந்த அருமையான பாடலை எழுதிய பாடிய இங்கு பதிவு செய்த
அத்தனை உள்ளங்களுக்கும்
நன்றி . . . நன்றி . . . நன்றி . .
/////Alasiam G said...
ReplyDeleteமகாத்மாவின் பொன்மொழிகளுக்கு நன்றி ஆசிரியரே!
"பாடலின் வரிகள் இமயம்,குரல்கள் அதன்
சிகரம். வழிந்தோடும் இசையது புனித கங்கா."////
நல்லது நன்றி ஆலாசியம்!
////kmr.krishnan said...
ReplyDeleteநாங்கள் ஆதியில் நெல்லை மாவட்டக்காரர்கள்.என் தாய், தந்தை இருவரும்
இளமைக் காலத்தை நெல்லைச் சீமையில் கழித்தவர்களே!1949 முதல் 1970வரை சேலம்.பின்னர் 3 வருடங்கள் சென்னை, கோவை என்று கழித்துவிட்டு 1973ல் தஞ்சையைத் தஞ்சம் அடைந்தேன். வந்தாரை வாழ வைக்கும் தஞ்சைத் தரணி என்னையும் வாழ வைத்தது.ஏன் இந்த சுய புராணம்? எல்லாம் அந்த செந்தூரார் எங்களவர் என்று சொந்தம் கொண்டாடத்தான்/////
குமரியில் தவம் செய்யும் அன்னை முதல் திருத்தணியில் அருள் பாலிக்கும் முருகன்வரை அத்தனை தெய்வங்களும் உங்களவர்தான். பழநிஅப்பனை மட்டும் விட்டுவிடுங்கள்!:-)))))
/////iyer said...
ReplyDeleteஎண்ணங்களை பிரதிபலிக்கும்
எளிமையான வாத்தியார் . .
உங்கள் விருப்பம் வானொலியில்அல்ல
எங்கள் வகுப்பறையிலும் .
என மெய்பிக்கும்
விரும்பி கேட்ட பாடலை
திருசெந்தில் ஊரான் உங்கள் மனதில் நின்று எழுத பாட வைத்திருக்கிறான் என
எண்ணுகையில் எண்ணில்லா நரம்புகள் எழுச்சி பெறுகின்றன..
மனதை 30 வினாடிகளாவது உலுக்கும் இந்த அருமையான பாடலை எழுதிய பாடிய இங்கு பதிவு செய்த
அத்தனை உள்ளங்களுக்கும்
நன்றி . . . நன்றி . . . நன்றி . . ///////
நல்லது. உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!
கந்தன் என்ற பெயர் சொன்னால் கடிதாக நோய் தீரும் என்பார்கள். என்னப்பன் கந்தனின் பாடலைக் கொடுத்ததற்கு மிக்கநன்றி ஐயா
ReplyDelete.... Politics without principles,
ReplyDeletewealth without work,
pleasure without conscience,
knowledge without character,
commerce without morality,
science without humanity and
worship without sacrifice."
நன்று ,பகிர்வுக்கு நன்றி ,....
எங்கள் மெல்பெர்ன் முருகன் பற்றி பாட கண்ணதாசனும் இசை அமைக்க குன்னக்குடியும் இன்று இல்லையே என்று ஏங்க வைக்கிறது
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்
ReplyDeleteவிஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது ' பிதாமகன் பீஷ்மர்' வில் அம்புவில் ஆனா மரணபடுக்கையில் மேல் படுத்துக்கொண்டு புண்ணிய காலம் வரும்வரை உள்ளகாலத்தில் எம்பெருமான் ஆபத்பாண்டவன் கருநீல வண்ணன் கண்ணனை போற்றி பாடிய ஸ்துதி என்பதி சரியானோ ?
ஸ்ரிசுத்தம் மற்றும் விஷ்ணுசுத்தம் எப்பொழுது யாரால் இயற்றபெற்றது
தங்களின் மற்றும் கிருஷ்ணன் ஐயாவின் பதிலுக்காக
ஐயா வணக்கம்...!
ReplyDeleteஎன்னுடைய சிறு வயதில் எங்கள் ஊர் முருகன் கோயிலில் இருந்து நான் அதிகம் விரும்பிக் கேட்ட பாடல், கேட்கும்போது தன்னை மறந்து மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்... மீண்டும் ஒருமுறை பார்க்க, கேட்க தந்தமைக்கு மிக்க நன்றிகள், குருதேவா...
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
//////புதுகைத் தென்றல் said...
ReplyDeleteகந்தன் என்ற பெயர் சொன்னால் கடிதாக நோய் தீரும் என்பார்கள். என்னப்பன் கந்தனின் பாடலைக் கொடுத்ததற்கு மிக்கநன்றி ஐயா/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
//////Soundarraju said...
ReplyDelete.... Politics without principles,
wealth without work,
pleasure without conscience,
knowledge without character,
commerce without morality,
science without humanity and
worship without sacrifice."
நன்று ,பகிர்வுக்கு நன்றி ,..../////
நல்லது. நன்றி நண்பரே!
/////NandaKumar said...
ReplyDeleteஎங்கள் மெல்பெர்ன் முருகன் பற்றி பாட கண்ணதாசனும் இசை அமைக்க குன்னக்குடியும் இன்று இல்லையே என்று ஏங்க வைக்கிறது/////
உங்களின் ஏக்கம் அந்த மெல்பெர்ன் முருகனுக்குத் தெரியாமலா இருக்கும்? ஏதாவது வழிபிறக்கும். பொறுமையாக இருங்கள்!
///////kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்
விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது ' பிதாமகன் பீஷ்மர்' வில் அம்புவில் ஆனா மரணபடுக்கையில் மேல் படுத்துக்கொண்டு புண்ணிய காலம் வரும்வரை உள்ளகாலத்தில் எம்பெருமான் ஆபத்பாண்டவன் கருநீல வண்ணன் கண்ணனை போற்றி பாடிய ஸ்துதி என்பதி சரியானோ?
ஸ்ரிசுத்தம் மற்றும் விஷ்ணுசுத்தம் எப்பொழுது யாரால் இயற்றபெற்றது?
தங்களின் மற்றும் கிருஷ்ணன் ஐயாவின் பதிலுக்காக/////
It is in this Veda Vyasa’s Mahabharata, in the shanti parva, that we will find the Vishnu Sahasranama Stotra, which Bheeshma prescribes to King Yudhisthira. The backdrop to the prescription is as follows:
Soon after the death of Duryodhana, Yudhisthira was coroneted as the king. Though the war was over, Bheeshma was still lying on the bed of arrows as he vowed to leave this world only when the kingdom of Hastinapur is safe. Knowing this, immediately after the coronation, Yudhisthira, accompanied by Lord Krishna and his brothers, went to Bheeshma. Before leaving his mortal body, Bheeshma gives a long discourse to Yudhisthira on various aspects of life and Dharma. After listening to everything, Yudhisthira wants to know if there is any one thing through which one can achieve all; and Bheeshma prescribes the Viashnusahasranama stotra. The first 13 stanzas are the dialog between Yudhisthira and Bheeshma. The next three stanzas are the customary Dhyana verses.
The Greatest Hindu philosopher of India, Adi Shankaracharya, wrote the Bhashya (word-to-word meaning) of the 1000 names of Vishnu that are there in this sahasranama stotra, in the 6th century ad. The story of writing this is also an interesting one. Actually, being a great Devi devotee he wanted to write the commentary on the Lalita sahasranama stotra and asked a disciple to bring the text. The disciple brought the Vishnu sahasranama text. Twice this mistake was repeated and then Shree Shankaracharya heard a Divine voice asking him to write the commentary on the Vishnu sahasranama.
//////Blogger M. Thiruvel Murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்...!
என்னுடைய சிறு வயதில் எங்கள் ஊர் முருகன் கோயிலில் இருந்து நான் அதிகம் விரும்பிக் கேட்ட பாடல், கேட்கும்போது தன்னை மறந்து மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்... மீண்டும் ஒருமுறை பார்க்க, கேட்க தந்தமைக்கு மிக்க நன்றிகள், குருதேவா...
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்////
நல்லது நண்பரே!
ஆசிரியரே, ஒருவர் சில காலம் வேலை செய்த பிறகு - நிறைய வருடங்கள் வேலையே இல்லாமல் - சேமிப்பில் உண்டு வாழ்வது போன்ற நிலைமையை ஜாதகம் காட்டுமா?
ReplyDeleteநான்கு கிரகங்கள் பத்தாம் வீட்டில் இருந்தால் ( சூரியன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ) யாருடைய பலன்கள் தசா புத்தியில் பலன் தரும்?
பதிலுக்காக
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஇறைவனின் புகழைப் பாடும் பாடல்கள்-பகுதி14 -ல்
முருகன் புகழ் பாடும் , "திருசெந்துரின் கடலோரத்தில்", ----மிகவும் அருமையான பாடலினைத் தந்துள்ளீர்கள். கோவில் மற்றும் சுவாமியின் படம் நன்றாக உள்ளது.
பாடலின் ஒலி & ஒளி வடிவம் கேட்கச் சென்றபோது ,அங்கே முருகனின் புகழைப் பாடும் பாடல்கள் அனைத்தையும் ஒலி & ஒளி வடிவமாக ,. இன்று கேட்கும் வாய்ப்பு கிடைத்தது .
பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.
நன்றி
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-08-07
விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றி வாத்தியார் சொன்னது 99% சதம் சரியே.பீஷ்மபிதாமகர் தான் விரும்பும் போது மரணத்தைத் தழுவும் வரம் பெற்றவர்.எனவே அம்புகளால் துளைக்கப்பட்டாலும் உயிரைவிடாமல் உத்தராயணத்திற்காகக் காத்திருக்கும் போது தர்மரும் தம்பிகளும் கண்டு ஆசி பெறுகிறார்கள். அப்போது ஆட்சி செய்பவர்களுக்கான அறிவுரைகளையும் முத்தாய்ப்பாக விஷ்ணு சஹஸ்ரநாமமும் உபதேசித்தார்.தை மாதம் வளர்பிறை சப்தமி அஷ்டமி கூடும் சமயம் உயிர் நீத்தார்.ரதசப்தமி அன்று அவர் நினைவாக தலையில் எருக்கம் இலையை வைத்து நீராடுவதை
ReplyDeleteஇன்றளவும் பாரத மக்கள் செய்கிறார்கள்.அந்த அஷ்டமி பீஷ்மாஷ்டமி என்று
போற்றப்படுகிறது.நீத்தார் கடன் செய்ய வசதி அற்றவர்கள் பீஷ்மாஷ்டமி அன்று பீஷ்மரை நினத்துக்கொண்டாலே திதி செய்யாத தோஷத்தில் இருந்து
விடுபடுவர்.
சூக்தம் வேத்தின் அங்கம். எனவே அதை இன்னார் எழுதினார்கள் என்பது பகவான் தான் சொல்ல வெண்டும். வேதம் என்பது இறைவனின் கீதம். அந்த மந்திரங்களை ரிஷிகள் 'கண்டார்கள்'.'மந்த்ர த்ரஷ்டா' அதாவது 'மந்திரங்களைப் பார்த்தவர்கள்' என்பது ரிஷிகளுக்கான பெயர்.
எனவே சூக்தங்களுக்கு எழுதிய ஆசிரியர் யாரும் கிடையாது.
தெரிந்தவரை கூறினேன். மிகப்பெரிய விஷயம். தவறு இருந்தால் மன்னிக்கவும்
//////Vijayashankar said...
ReplyDeleteஆசிரியரே, ஒருவர் சில காலம் வேலை செய்த பிறகு - நிறைய வருடங்கள் வேலையே இல்லாமல் - சேமிப்பில் உண்டு வாழ்வது போன்ற நிலைமையை ஜாதகம் காட்டுமா?
நான்கு கிரகங்கள் பத்தாம் வீட்டில் இருந்தால் ( சூரியன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ) யாருடைய பலன்கள் தசா புத்தியில் பலன் தரும்?/////////
வேலை வெட்டி எதுவும் செய்யாமல், அப்பன் சொத்தில் அல்லது மாமனார் வீட்டு சொத்தில் காலம் தள்ளுகிறவர்களும் உண்டு. அதற்குப் பெயர் சுகஜீவனம். 4ஆம் வீட்டின் அமைப்பை வைத்து அந்த் சுகம் கிடைக்கும்.
4 கிரகங்கள் ஒரு இடத்தில் இருந்தால் அதற்கு கிரகயுத்தம் என்று பெயர். இருக்கும் கிரகங்கள் அதனதன் தசாபுத்தியில் உரிய பலனைத் தரும்!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள்-பகுதி14 -ல்
முருகன் புகழ் பாடும் , "திருசெந்துரின் கடலோரத்தில்", ----மிகவும் அருமையான பாடலினைத் தந்துள்ளீர்கள். கோவில் மற்றும் சுவாமியின் படம் நன்றாக உள்ளது.
பாடலின் ஒலி & ஒளி வடிவம் கேட்கச் சென்றபோது ,அங்கே முருகனின் புகழைப் பாடும் பாடல்கள் அனைத்தையும் ஒலி & ஒளி வடிவமாக ,. இன்று கேட்கும் வாய்ப்பு கிடைத்தது .
பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.
நன்றி
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!
/////kmr.krishnan said...
ReplyDeleteவிஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றி வாத்தியார் சொன்னது 99% சதம் சரியே.பீஷ்மபிதாமகர் தான் விரும்பும் போது மரணத்தைத் தழுவும் வரம் பெற்றவர்.எனவே அம்புகளால் துளைக்கப்பட்டாலும் உயிரைவிடாமல் உத்தராயணத்திற்காகக் காத்திருக்கும் போது தர்மரும் தம்பிகளும் கண்டு ஆசி பெறுகிறார்கள். அப்போது ஆட்சி செய்பவர்களுக்கான அறிவுரைகளையும் முத்தாய்ப்பாக விஷ்ணு சஹஸ்ரநாமமும் உபதேசித்தார்.தை மாதம் வளர்பிறை சப்தமி அஷ்டமி கூடும் சமயம் உயிர் நீத்தார்.ரதசப்தமி அன்று அவர் நினைவாக தலையில் எருக்கம் இலையை வைத்து நீராடுவதை
இன்றளவும் பாரத மக்கள் செய்கிறார்கள்.அந்த அஷ்டமி பீஷ்மாஷ்டமி என்று
போற்றப்படுகிறது.நீத்தார் கடன் செய்ய வசதி அற்றவர்கள் பீஷ்மாஷ்டமி அன்று பீஷ்மரை நினத்துக்கொண்டாலே திதி செய்யாத தோஷத்தில் இருந்து
விடுபடுவர்.
சூக்தம் வேத்தின் அங்கம். எனவே அதை இன்னார் எழுதினார்கள் என்பது பகவான் தான் சொல்ல வெண்டும். வேதம் என்பது இறைவனின் கீதம். அந்த மந்திரங்களை ரிஷிகள் 'கண்டார்கள்'.'மந்த்ர த்ரஷ்டா' அதாவது 'மந்திரங்களைப் பார்த்தவர்கள்' என்பது ரிஷிகளுக்கான பெயர்.
எனவே சூக்தங்களுக்கு எழுதிய ஆசிரியர் யாரும் கிடையாது.
தெரிந்தவரை கூறினேன். மிகப்பெரிய விஷயம். தவறு இருந்தால் மன்னிக்கவும்///////
மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!