மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.8.10

திண்டுக்கல்லும் வைரக்கல்லும்!


 திண்டுக்கல்லில் உள்ள குன்றின் படம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திண்டுக்கல்லும் வைரக்கல்லும்!

“வாத்தி (யார்), சூரத்திற்கும் வைரக்கல்லிற்கும் தொடர்பு உண்டு. காரைக்குடிக்கும், வைரக்கல்லிற்கும் தொடர்பு உண்டு. ஆனால் திண்டுக்கல்லிற்கும் வைரக்கல்லிற்கும் என்ன தொடர்பு? தலைப்பு சரியாக இல்லையே!”

“பதிவை முழுதாகப் படித்துவிட்டுப் பிறகு சொல்லு ராசா!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருக்கணிதம், வாக்கியம் என்று இரண்டு ஜோதிடப் பஞ்சாங்கங்கள் உள்ளன. அந்த இரண்டு முறைகளில் எது சரியானது என்பதில் பல்வேறு கருத்துக்களும், சந்தேகங்களும் உள்ளன. அந்த இரண்டு ஜோதிடக் கணிப்பு முறைகளையும் வைத்து ஜாதகம் கற்றுக்கொள்கிறவர்கள் மிகவும் குழம்பிப்போவது உண்மை!

எது சரியானது?

எது சரியானது என்பதைவிட, எது உகந்தது என்று கேட்க வேண்டும்!

சரி, இப்போது சொல்லுங்கள் எது உகந்தது?

வாக்கியம்தான் நமக்கு உகந்தது!

எப்படி?

தமிழனுக்கு எது சரியான உடை? வேஷ்டி துண்டா? அல்லது கால் சட்டை, மேல் சட்டையா? (Shirt & Pant)

நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் அனைவரும் வேஷ்டி & மேல் துண்டுதான் அணிந்திருந்தார்கள். வெள்ளைக்காரர்களின் நாகரீகம் பரவப் பரவ, தையல் இயந்திரங்கள் வாழ்வில் ஊடுருவ ஊடுருவக் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் கால்சட்டை & மேல் சட்டைக்குத் தாவினார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு எந்தப் பெண்ணும் ரவிக்கை அணிந்து கொள்ளவில்லை. ஒன்பது முழம் சேலையையே சேலையாகவும், ரவிக்கையாகவும் உடம்போடு அணைத்துக் கட்டிக்கொள்வார்கள். பாட்டியாலா சுடிதாரும், குஷ்பு ரவிக்கையும், ஸ்லீவ்லெஸ் ரவிக்கையும் அப்போது கிடையாது. யாருக்கும் தெரியாது.

எங்கள் பகுதிகளில் பெரிய பெரிய வீடுகள். 15 அடிக்கு 20 அடி அகல நீள முள்ள ஜமுக்காளங்கள் விரித்து வைத்திருப்பார்கள். அதே அகல நீளமுள்ள பர்மா பிரம்ப்புப் பாய்களை விரித்து வைத்திருப்பார்கள். 30 பேர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய பந்தி ஜமுக்காளங்கள் வைத்திருப்பார்கள். உட்காருவதற்கும் , உணவு உண்பதற்கும், படுத்துப் புரள்வதற்கும் வேஷ்டிதான் ஏற்ற உடை.

கிராமங்களில், திண்ணைகளில் உட்கார்ந்து அரட்டையடிப்பதற்கும்,  கயிற்றுக்கட்டில்களில் படுத்துக் கிடப்பதற்கும்  மாட்டு வண்டிகளில் கால்களை மடக்கி உட்கார்ந்து பயணிப்பதற்கும் வேஷ்டிதான் ஏற்ற உடை
ஆனால் இப்போது, பல்சர் மோட்டார் சைக்கிளில் பறப்பதற்கும், சிட்டி பஸ்களில் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டே பயணிப்பதற்கும் வேஷ்டிகள் சரிப்பட்டு வராது. அனைவருக்கும் கால்சட்டைதான் ஆடையாகிவிட்டது.

எது சரியான உடை?

இரண்டுமே சரியான உடைகள்தான்! அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது அது.

குடிப்பது நல்லதா? குடிக்காமல் இருப்பது நல்லதா? 70% தமிழர்களுக்கு டாஸ்மாக் கடைகள்தான் கோவில்கள். அவர்களிடம் போய்க் குடிக்காதே - குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்ல முடியுமா?

வெஜிடேரியன் உணவு நல்லதா? நான் - வெஜ் உணவு நல்லதா? அய்யன் வள்ளுவர் புலால் உண்ணாமை என்னும் அதிகாரம் எழுதியுள்ளார். அதைப் படியுங்கள் நான் - வெஜ் உணவு நல்லதல்ல என்று அவற்றை விரும்பிச் சாப்பிடுபவர்களிடம் உங்களால் சொல்ல முடியுமா?

காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் சிறந்ததா? என்று கேட்டால் எது சிறந்தது? மூன்று வருடமாகக் காதலில் சிக்கிக் கிடக்கும் பெண்ணிடம் (சிக்கிக் கிடக்கும் aஎன்ற வார்த்தையைக் கவனியுங்கள்) சென்று நீ உருப்படுவாயா? படித்து முடித்து, வேலைக்குச் சென்று, பொருளாதார சுதந்திரம் கிடைக்கும்வரை உனக்குப் பெற்றோர்களின் தயவு வேண்டியதாயிருந்தது. இன்று அவர்களை உதறிவிட்டு, அல்லது அவர்களுக்குத் தெரியாமல் இந்தக் கலியுகக் கண்ணனைக் காதலிக்கிறாயே? நியாயமா? மோகம் 30 நாள் ஆசை அறுபது நாள் என்று உன்மேல் சலிப்பு ஏற்பட்டு, அவன் உன்னைக் கைவிட்டுவிட்டால் என்ன செய்வாய்? அன்று உனக்கு யார் உதவிக்கு வருவார்கள்? என்று கேட்கமுடியமா? கேட்டால்தான் அவள் உங்களுக்கு நின்று பதில் சொல்வாளா?

 “மகளிர் காவல் நிலையம் உள்ளது. அவனை நான் பார்த்துக்கொள்கிறேன். என் பெற்றோர்களைச் சம்மதிக்க வைக்கும் வழியை மட்டும் எனக்குச் சொல்லிக் கொடுங்கள்” என்று ஒரு பெண் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்
இதுதான் இன்றையக் காதலின் நிலைமை!

எல்லாவற்றிற்குமே இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். Like 2 sides of a coin

அதுபோல, உங்கள் தந்தையார் எழுதிவைத்துள்ள ஜாதகத்தை வைத்திருந்தால் வாக்கியப் பங்சாங்கம்தான் உங்களுக்குச் சிறந்தது. கணினி மென்பொருட் களில் கணக்கிடும் முறைக்காக திருக்கணிதப் பஞ்சாங்கத்தை உள்ளிட்டிருப்பர்கள். அதில் ஜாதகத்தைக் கணித்து எடுத்து உங்கள் கைவசம் உள்ள ஜாதகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சில மாற்றங்கள் தெரியும் சிலருக்கு லக்கினமே மாறியிருக்கும். லக்கினம் மாறியிருந்தால் அதைப் பார்க்கும் நம் ஆசாமி டென்சனாவிடுவான். கோபம் உச்சந்தலைக்கு ஏற உடனே சந்தேகப்படவும் ஆரம்பித்துவிடுவான். எது சரி அப்பா எழுதிவைத்துள்ளதா? அல்லது 25 ரூபாய் வாங்கிக் கொண்டு டேட்டா சென்ட்டர்காரன் கணித்துக் கொடுத்ததா? யாரைக் கேட்டால் தெரியும்?

ஜோதிடம் தெரிந்த யாருடைய  தலையையாவது பிய்த்து உருட்ட ஆரம்பித்துவிடுவான். அவனுக்கு ஒரே ஒரு கவலைதான். தன் சந்தேகம் நிவர்த்தியாக வேண்டும்.

அடிப்படைப் பாடங்களையே சரியாகப் படித்துத் தெளியாத ஒருவனுக்கு நீங்கள் எப்படி வித்தியாசத்தைப் புரிய வைக்க முடியும்?

வாக்கியப் பஞ்சாங்கம் காலம் காலமாக உள்ளது. திருக்கணிதம் மேற்கத்திய மேதைகளால்  உருவாக்கப்பட்டு இடையில் வந்தது. தமிழக ஜோதிடர்கள் எல்லாம் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் கடைப்பிடித்திருக்கிறார்கள். கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, “உன் தந்தையார் உனக்கென்று எழுதி வைத்திருக்கும் ஜாதகம்தான் சரியானது. அதையே வைத்துக் கொள். கணினி ஜாதகத்தைக் கிழித்துப்போட்டுவிடு.” என்றால் விட மாட்டன்.   “என் தந்தையார் எழுதி வைத்துள்ள கருமத்தில் (ஜாதகத்தில்) மாந்தியும் இல்லை, அஷ்டகவர்க்கமும் இல்லை. அதற்கு என்ன செய்வது?” என்பான்.

   “தமிழக ஜோதிடர்கள் பெருவாரியானவர்களுக்கு அது இரண்டைப் பற்றியுமே தெரியாது. அவைகள் இல்லாமலேயே அவர்களால் பலன் சொல்ல முடியும். ஆகவே உன் ஜாதகப் பலன்களுக்கு, உள்ளூரில் ஜோதிடரைப் போய்ப் பார்” என்றால், அப்பவும் விடமாட்டான்

”நல்ல ஜோதிடரின் முகவரியை நீங்களே கொடுங்கள்”

ஏன்டா, கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால், நல்ல பெண் கிடைக்கவில்லை நீயே என்னைத் திருமணம் செய்துகொள் என்பதைப் போன்றது அது!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதலில் பஞ்சாங்கம் என்பது என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அவற்றிற்குள் உள்ள வித்தியாசத்தையும், அவற்றை எப்படிச் சரி செய்வது என்பதையும் அடுத்துப் பார்ப்போம்

A panchangam (It is a Sanskrit word) is a Hindu astrological almanac, which follows traditional Indian cosmology, and presents important astronomical data in tabulated form. It is sometimes spelled Pancanga or Panchanga, and is pronounced Panchanga. Pachangas are used in Jyotisha (Jyotiṣa)

Panchangas are published in India by many learned authors, societies, academies, and universities. Different publications differ only minutely, at least for a casual or un-trained reader. They forecast celestial phenomena such as solar eclipses, forecast weather (rain, dryspells) as well as more mundane occurrences.

The study of Panchangas involves understanding Rasi phala (also pronounced 'Rashi phala'), the impact of the signs of the zodiac on the individual. Astrologers consult the Panchangam to set auspicious dates for weddings, corporate mergers, and other worldly activities as per religion.

The actual casting of a Panchanga involves elaborate mathematical work involving high level of spherical geometry and sound understanding of astronomical phenomena, such as sidereal movements of heavenly bodies. However, in practice the tabulation is done on the basis of short-cut formulations as propounded by ancient Vedic sages and scholars.

A typical Panchanga may state tabulations of positions of Sun, Moon, and other planets for every day of the year on a fixed place (longitude, latitude) and time of day (in 24-hour format IST). The users calculate the remaining data using the their relative difference from this fixed place and time.

There are several panchangas that contain information for more than one year. There is one Vishvavijaya Panchanga that is for 100 years.

The theories propounded in the two scriptures, Surya Siddhanta and Grahalaghava formed the basis for the plethora of calendars or Panchangas in the past in different regions of the country - a culturally complex system.

The Grahalaghava was compiled some 600 years ago and Surya Siddhanta was available ages before that. But these had become outdated and did not tally with actual astronomical events and did not tally with each other also. Hence, a committee was appointed by the Government of India with experts in the field drawn from various parts of the country who were involved with preparation of Panchanga in local languages to draw up a reliable Panchanga in which the mathematical calculations provides the positions of grahas (the planets) and nakshatras (constellations) in the sky as they are observed.

Thus, the Government of India has prepared the National Panchanga or the Indian national calendar in 1957 (was proposed by Saha and Lahiri in 1952), which is used in predictive astrology. The Lahiris Ephemeris published annually is the most widely used English almanac in Vedic astrology apart from the many Panchangas published in local languages, which are mostly based on the National Panchanga.

இந்த லஹிரிதான் திருக்கணிதம்!

Accuracy of attributes depending upon Moon's motions were considered most crucial for the reliability of a panchānga, because Moon is fastest among all heavenly entities shown in traditional panchāngas. Tithi, Nakshatra, Rāśi, Yoga, and Karana depend upon Moon's motions, which are five in number. Panchānga is a Sanskrit word, literally meaning "having five limbs". If these five limbs, for example, the five attributes depending upon Moon, are accurate, an almanac is held to be reliable, because other elements are not so difficult to compute due to their slow rates of change.

There are three popular meanings of panchānga:

1. In Vedic astrology, meaning "five attributes" of the day. They are:

    * Tithi - Ending Moment (EM) of elongation of the Moon, the lunar day , the angular relationship between Sun and Moon ( True Moon minus True Sun). One Tithi equals 12 degree difference between Moon and Sun.
    * Nakshatra - EM of asterism of the day, that is, the stellar mansion in which Moon is located for an observer on Earth. One Nakshatra equals 13 degrees:20 minutes. There are 27 Nakshatra in 360 degrees.
    * Yoga - EM of the angular relationship between Sun and Moon( True Moon plus True Sun). One Yoga equals 13 degrees:20 minutes. There are 27 Yogas in 360 degrees.
    * Karana - EM of half of a Tithi. One Karaṇa equals 6 degree difference between Moon and Sun.
    * Var weekday the seven weekdays.

Monier-Williams gives "solar day" instead of Rāśi as the fifth limb. Some people enumerate Vār (days of the week) instead. Vār or solar days do not involve intricate computations, unlike EM of Rāśi; however, in the Hindu system the five elements only constitute the five limbs of the Panchangam.

2. An almanac that contains the astronomical / astrological daily details also came to be called a panchānga because of the importance of five attributes.

3. Panchānga-pūjan, which is a part of Ganesh-Ambika-pūjan.

In Vedic Astrology, the basic tenet of astrology was integrated with celestial events and thus was born various branches of Vedic Astrology and the Panchanga. In simple terms, “ Panchanga” means the Day, Nakshatra (Star), Thithi, Yoga and Karana every day. It is a mirror of the sky. The document used as Panchanga has evolved over the last 5000 years. The theories propounded in the two scriptures, Surya Siddhanta and Grahalaghava formed the basis for the plethora of calendars or Panchangas in the past in different regions of the country - a culturally complex system.

The five Angas or parts of Panchanga are elaborated in the following paragraphs but before that the composition of the Samvatsara OR Years (60 Years cycle), Varsha or Year and Masa or month are first explained, as these important calendar events are part of every Panchanga. All the components of Panchanga are relevant in Predictive Astrology, Prasna Shastra (electional astrology), etc.

All followers and practitioners of Vedic astrology must necessarily know how to read a Panchanga and in this context it is necessary to know the Terminology used in the Panchanga for different time slots of the Day. Panchangas are also published in English as Ephemeris - The Lahiris Ephemeris is most widely used, which gives all the details as contained in a traditional Panchanga published in Sanskrit or Hindi and all the regional languages of the country.

There are several forms of reckoning the Varsha or Year based on Solar Entry (Solar Ingress), Lunar entry, Jupiter entry in a sign or the Julian calendar of starting the year from the first of January, but the most widely accepted practice in India is the Samvatsara, a 60 years cycle based on Solar entry. Each zodiacal sign is represented by 5 years starting from Pramadi and the Sixty years are equally distributed in successive order among the 12 signs (Rasis) starting from Mesha (Aries) and ending in Meena (Pisces).

Varsha or the year in astrological parlance is the solar calendar of year and months, which starts with Sun entering Aries (Mesha Rasi) and completing a full circle of the 12 zodiacal signs in a period of 12 months. The reckoning is done in a cycle of 60 years as explained above.

There are two kinds of Lunar months followed in India - the New Moon ending called the Amanta or Sukladi system and the Full Moon ending (covering one Full Moon to the next) called the Purnimanta system. But it is the lunar months Full Moon reckoned), which are reckoned in predictive astrology, and each represents the name of the star on Full moon day of the Solar months. The twelve Lunar months starting from Chaitra along with the names of the Solar months are given below.
No.   Lunar Month     Solar Month
1     Chitta                Chaitra
2     Visaka                Vyshaka
3     Jyeshta             Jyeshta
4     Poorvashada       Ashada
5     Sravana              Shravana
6     Poorvabhadra     Bhadrapadha
7     Aswini                Aswija
8     Kartika               Kartika
9     Mrigashira          Margashira
10   Pushyami            Pushya
11    Makha               Magha
12   Uttaraphalguni     Phalguna

In VedIc astrology, the basic tenets of astrology were integrated with celestial events with Vara or Week day and thus was born the Muhurtha Astrology or Electional Astrology.

Thithi or Lunar day is an important concept in Hindu Astrology. It means lunation. There are thirty Thithis in a Lunar month distributed in the 360 degrees of the Zodiac and each Thithi is completed when the longitude of the Moon gains exactly 12 degrees or its multiple on that of the Sun. By name there are only 15 thithis repeating in the two half’s of the month – Shukla 1 to Shukla 15 (known as Poornima or Full Moon) and Krishna 1 to 15 (known as Amavasya or New Moon). In astrological parlance Thithi has great significance in the fact that each Thithi from 1 to 14 in both Pakshas has what are called Daghda rasis or Burnt Rasis – two rasis for each Thithi except Chaturdasiwhich has four Daghda rasis. But New Moon and Full Moon have no Dagdha Rasis. The Thithis are divided into five groups as under.

   1. Nanda (Ananda or Joyous) thithi - Prathipada (1st), Shasti (6th) and Ekadashi (11th);
   2. Bhadra (Arogya or Mangala or Healthy) thithis on – Dwitiya (2nd), Saptami (7th) and Dwadashi (12th);
   3. Jaya (Victory) Thithi –Tuesday- Tritiya (3rd), Ashtami (8th ) and Trayodashi (13th);
   4. Rikktha (Loss or Nashta) Thitihis – Saturday - Chathurthi (4th) Navami (9th) and Chaturdasi (14th);
   5. Poorna (Sampoorna - Full Moon or New Moon) Thithis –Thursday Panchami (5th), Dashami (10th) and Amavasya (New Moon) or Poornima.

A unique Vedic system is followed in Muhurtha Astrology, Horary Astrology and predictive astrology, which envisages grouping of Nakshtaras (Stars) into nine sub-groups. Each sub-group covers three stars and has a specific name of ‘Tara’ proceeded by a word defining benefic or malefic nature. These are found to be extremely useful in Vedic Astrology which is widely practiced in India. The nine Taras (Stars)by their individual names are elaborated below.

   1. Janma (Birth) Tara – The Janma (birth star) Nakshatra, the 10th from Janma nakshatra also known as Karna nakshatra and the 19th from Janma nakshatra known as Adhana nakshatra constitute this Tara.
   2. Sampat Tara – The 2nd the 11th and the 20th Nakshatras counted from Janma nakshatra constitute this Tara.
   3. Vipat Tara – The 3rd, the 12th and the 21st stars counted from Janma nakshatra constitute this Tara.
   4. Kshema Tara – The 4th, the 13th and the 22nd Nakshatras counted from the janama nakshatra constitute this Tara.
   5. Pratyak Tara – The 5t, the 14th, and the 23rd nakshatras from Janma nakshatra constitutes this Tara.
   6. Sadhaka Tara – The 6th, the 15th, and the 24th nakshatras from Janma nakshatra constitutes this tara.
   7. Nidhana Tara – The 7th, the 16th , and the 25th nakshatras from the Janma nakshatra constitutes this tara.
   8. Mitra Tara – The 8th, the 17th and the 26th nakshatras from Janma nakshatra constitute this tara.
   9. Ati or Parama Mitra Tara – The 9th, the 18th and the 27th nakshatras from Janma nakshatra constitutes this tara.

[edit] Usage

The basic purpose of Hindu Panchangam is to check various Hindu festivals and auspicious time (election- Muhurta). In the Hindu system of election, various element of Panchangam constitute auspicious and inauspicious moments (Yogas) by combination of weekday-Tithi, weekday-constellation, weekdays-Tithis-constellations. In addition, individual weekdays, Tithis, constellations, Yoga and Karanas have been prescribed for specific activities which fructify during their currency.

For selecting an auspicious moment Panchangam Shuddhi (purified-time) is fundamental. In addition favourable transits, purified ascendant, absence of malefic yogas, favourable Dasha (Hindu progression), name of doer, propitiations, chanting of Mantras, place of activity, social customs, omens, mode of breathing are also examined.
-------------------------------------------------------------------------------
சரி, அடுத்த கேள்விக்கு வருகிறேன். இரண்டு முறைகளில் (வாக்கியம், திருக்கணிதம்) எது நம்பகமானது?

முன்பு எழுதியதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். சுட்டியைக் கொடுத்தால், நீங்கள் அதைத் தேடிப்பார்க்க சிரமப் படுவீர்கள் என்று அதையும் இங்கேயே கொடுத்துள்ளேன்.

எத்தனை அடித்தாலும் வடிவேல் தாங்கிக்கொள்வார். எவ்வளவு நீளப் பதிவுகளைக் கொடுத்தாலும் கூகுள் ஆண்டவர் வாங்கிக்கொள்வார்
________________________________________________________________________________
email.No.81 (27.1.2010)

அருள் முருகன்,
தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைகழகத்தில்
ஜோதிடம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்
(ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு, என்னை விரிவாகப் பதில் எழுத வைத்தமைக்கு, அவருக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!)

கேள்வி:
Sir, why so many conflicts and changes in your opinion within two years?
In the beggining stages of lessons, you told that thirukanitha panchanga is the right one by citing an example of horoscope of a child born in chennai. Later on you said to cast horoscopes by both the methods, and take vakiya panchanga if the lagna changes or else take thirukanitha. To my surprise in an answer given three days ago, you have told that for casting horoscopes vaakiya is only right one, thirukanitha is suitable only for mathematical calculations, why so many contradictions? As I am going to seriously pursue diploma course offered by Sastra University, Tanjore in Astrology I am really confused and surprised by the statements. My intention is not to blame you or find fault. But I tell openly what I feel, as in my horoscope Guru is in dhanus lagna. 

( 15.07.1984, 5:20 pm, madurai).

நீங்கள் சொல்வது உண்மை. துவக்க காலங்களில், வகுப்பறையில், மாணவக் கண்மணிகளுக்கு, திருக்கணிதத்தைப் பயன்படுத்த அறிவுரை  சொல்லி யிருக்கிறேன். பிறகு, மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி, உள்ளே நுழைந்தவர்களில் பலபேர்கள், தங்கள் வீடுகளில் தங்கள் பெற்றோர்கள் எழுதிவைத்திருக்கும் ஜாதகத்திற்கும், கணினியில் கணிக்கும் ஜாதகத்திற்கும் லக்கினம் வித்தியாசமாக இருக்கிறதே என்று கூறிய போது, நிலைமையை உணர்ந்தேன்.

அதாவது 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக எழுதப்பெற்ற ஜாதகங்கள் அனைத்தும் பொதுவாக வாக்கியமுறைப்படிதான் எழுதப்பெற்றிருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள் தங்களுக்கு வழிவழியாக வந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துக் கணித்துத்தான் எழுதியிருப்பார்கள். இன்றும் எழுதுவார்கள்.
அதனால் கணினியில் கணிக்கும்போது சிலருக்கு (எல்லோருக்கும் அல்ல) லக்கினம் வித்தியாசப்படும்

யார் அந்த சிலர்?

ஒரு லக்கினத்திற்கு 30 பாகைகள் - காலம் சுமார் 120 நிமிடங்கள் - 2.25 நட்சத்திரங்கள் - 9 நட்சத்திரப்பாகைகள்.

லக்கினத்தின் கடைசி நட்சத்திரப்பாகையின் பின் பகுதியில், அதாவது அந்த லக்கினத்தின் முடிவில் பிறக்கும் ஜாதகக் காரர்களுக்கு, லக்கினம் மாறிவிடும். திருக்கணிதத்தில் கடக லக்கினம் என்பது, வாக்கியத்தில் சிம்ம லக்கினம் என்று மாறிக்காட்சியளிக்கும்.

அதற்குக் காரணம் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் உள்ள பாகை வித்தியாசம் 1 பாகை 57 விநாடிகள். மணியில் சொல்வதென்றால் 6 நிமிடமும் 28 விநாடிகளும் ஆகும். நட்சத்திரத்தின் அளவு 13.3 பாகைகள் அதை 4ஆல் வகுத்தால் ஒரு பாகையின் அளவு 3.33 பாகைகள். மணியில் சொன்னால் 120 நிமிடங்கள் வகுத்தல் 9 பாதங்கள் = 13.33 நிமிடங்கள்.

அதனால் கடைசிப் பாதத்தின் பின் பகுதியில் (அதாவது காலசந்தியில்) பிறந்த ஜாதகனுக்கு, இரண்டு முறைகளிலும் கணித்துப் பார்த்தால் மேலே கூறியுள்ளபடி லக்கினம் மாறியிருக்கும். இது எல்லாக் கால சந்திப் பிறப்புக்களுக்கும் உள்ள பிரச்சினை!

அதற்கு என்ன தீர்வு?

காலசந்திப்புப் பிறப்புக்களுக்கு, இரண்டு லக்கினங்களின் குணங்களும் இருக்கும். கேரளா - தமிழ்நாடு எல்லையில் உள்ள மக்கள் இரண்டு மாநில மொழிகளையும் சரளமாகப் பேசுவார்கள். இரண்டு மாநிலக் கலாச்சாரங்களும் அவர்கள் வாழ்க்கையில் கலந்திருக்கும். அதுபோலத்தான் இதுவும்.

அதனால் காலசந்திப்பில் பிறந்தவர்கள், அந்த இரண்டில் எந்த முறையை வேண்டுமென்றாலும் பின்பற்றலாம். பெரிய வித்தியாசம் இருக்காது.
-------------------------------------------------------------------
சரி, எந்தமுறை சரியானது?

அது பற்றி பெரிய யுத்தம் நடத்தும் அளவிற்கு இரண்டு முறைகளுக்குமே ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

முதலில் திருக்கணிதத்திற்கும் (Lahiri Ayanamsa), வாக்கியத்திற்கும் (Raman's Ayanamsa) உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்

Lahiri Ayanamsa.its value is 23 degrees, 51 minutes, 10 seconds.
Raman's Ayanamsa its value is 22 degrees, 24 minutes, 44 seconds.
Diffrence 1 degree, 27 minutes

இந்த வித்தியாசத்தின் காரணமாக நட்சத்திரத்தின் ஒரு பாதத்தில் பதிப்பாகம் வித்தியாசம் இருக்கும். ஒரு ராசியில் உள்ள ஒன்பது பாதங்களில் கடைசி பாதத்தில் பிறந்த ஜாதகனின் நட்சத்திரப்பாதம் (உதாரணத்திற்கு) லஹிரியில் சிம்ம லக்கினம் (உத்திரம் ஒன்றாம் பாதம்) என்றும், ராமன் முறையில் கன்னி லக்கினம் (உத்திரம் 2ம் பாதமாகவும்) என்றும் இருக்கும்.

ஜாதகன் குழம்பிப்போவான். தான் சிம்ம லக்கின ஜாதகனா? அல்லது கன்னி லக்கின ஜாதகனா என்று குழம்பிப்போவான். கால சந்திப்பில் (அதாவது லக்கின சந்திப்பில்) பிறந்த ஜாதகர்களுக்கு இந்தக் குழப்பம் இருக்கும்.

அதேபோல ராசி சந்திப்பில் உள்ள, புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களும் இடம் மாறி (ராசி மாறி) உட்கார்ந்து நம் கழுத்தை அறுக்கும்!

என்னுடைய ஜாதகத்தில் அந்தக் குழப்பம் உண்டு. நான் காலசந்திப்பில் பிறந்தவன். லஹிரி (திருக்கணித) முறையில் என்னுடைய லக்கினம் கடகம் என்று வரும். வாக்கிய முறையில் (ராமன் அயனாம்சப்படி) சிம்மம் என்று வரும்.

என் அன்னைவழிப் பாட்டனார், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என்னும் பிரபல ஜோதிடரிடம், எங்கள் ஜாதகத்தை எல்லாம் கணித்து எழுதிவைத்துள்ளார். அதில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு பெங்களூர் வெங்கட்ராமன் (அவர்தான் இந்த ராமன் அயனாம்சத்தின் நந்தை என்று பகழப்படுபவர். இந்தியாவின் முதல் நிலை ஜோதிடராகத் திகழ்ந்தவர்) அவர்களுக்கு என்னுடைய பிறப்பு விவரங்களை அனுப்பி ஜாதகத்தை எழுதி வாங்கினேன்.(பணம் அனுப்பித்தான் சுவாமி)

அதுவும் என்னுடைய பாட்டனார் எழுதி வைத்துள்ள ஜாதகமும் (மிகத் துள்ளியமாகச்) சரியாக இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அவர் இந்தியாவின் புராதன ஜோதிட முறையான வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கிறார் என்று! அதனால் முழு நம்பிக்கையுடன் நானும் அதைத்தான் உபயோகித்து வருகிறேன். எனக்கு என்னுடைய லக்கினத்தின்படி பலன்களும் சரியாக உள்ளன! (அதானால் அந்த நம்பிக்கை பலமடங்கு கூடிவிட்டது)

என்னைப் பொறுத்தவரை, அவர்தான் அற்புதமான ஜோதிட ஞானம் உடைவராகத் திகழ்ந்தவர். விற்பன்னர். ஜோதிடத்தின் காரகராகப் போற்றப்பெற்றவர் (authority of vedic astrology). எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை ஜோதிடர்களும் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கின்றார்கள்.

இந்தக் கணினியில் ஜோதிடம் கணிக்கும் முறைகள் எல்லாம் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் நமது பிரதேசத்திற்குள் அடியெடுத்து வைத்தது.

ஆகவே அதற்கு முன்பாகப் (அதாவது 1990ற்கு முன்பாகப்) பிறந்தவர்கள் அனைவருடைய ஜாதகங்களும் வாக்கிய முறையிலேயே கணிக்கப் பெற்றதாக இருக்கும்.

கணினி ஜாதகத்தில் உள்ள option தெரியாமல், திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, பல இளைஞர்கள் என்னிடம் லக்கினம் மற்றும் கிரக அமைப்புக்கள், தங்கள் பெற்றோர்கள் கணித்து அல்லது எழுதி வைத்துள்ளதுபோல இல்லையே எனும்போது, நான் அவர்களுக்கு, உங்கள் பெற்றோர் எழுதிவைத்துள்ளதையே உபயோகியுங்கள் என்று சொல்வேன்.

ஆனால், தற்சமயம் உள்ள கணினி மென்பொருட்களில், வாக்கிய முறைகளிலும் கணிக்கும் வசதி வந்துவிட்டதால், அனைவருக்கும் அதன்படியே கணிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

வாக்கிய முறைப் பஞ்சாங்கம் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. முனிவர்களால் உருவாக்கப்பெற்றது. அதை நீங்கள் அனைவரும் நம்பலாம். திருக்கணிதத்தை மறந்துவிட்டு, நீங்கள் அனைவரும், வாக்கிய முறையில் உங்கள் ஜாதகத்தைக் கணித்து/எழுதி வைத்துக் கொள்வது நல்லது!

இந்த இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம் சுமார் ஆறரை நிமிடங்கள் மட்டுமே எனும்போதும், நமது வீடுகளில் அந்தக் காலத்தில் இருந்த கடிகாரங்களை நம்பி அவர்கள் பிறந்த நேரத்தைக் குறித்துவைத்தார்கள் - அது 5 நிமிடங்கள் முன் பின்னாக நேரத்தைக் காட்டவில்லை என்பதற்கு ஆதாரம் இல்லாததாலும், நான் அலட்டிக்கொள்ளாமல், இரண்டு முறைகளுக்குமே கொடிகாட்டி வருகிறேன்.

ஆகவே பழைய பிறப்புக்களுக்கு, அவரவர் விருப்பப்படி எதை வேண்டு மென்றாலும் உபயோகியுங்கள். சராசரியாக 9 பேர்களில் ஒருவர்தான் காலசந்திப்பில் பிறந்திருப்பார். அவருக்கு மட்டும்
இரண்டு மனைவிகள். அதாவது இரண்டு லக்கினங்கள்:-))))))
-----------------------------------------------------------
சில இடங்களில் வேஷ்டியுடன் செல்வது உபயோகமாக இருக்கும். சில இடங்களில் கால்சட்டையுடன் (pant)செல்வது உபயோகமாக இருக்கும். நீங்கள் ஒரு சமயம் வேஷ்டி அணிந்து கொள்கிறீர்கள், ஒரு சமயம் கால் சட்டை அணிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்? ஒரே வரியில், என் வசதிக்காக அணிந்து கொள்கிறேன் என்றுதான் சொல்ல முடியும். தேவகோட்டையில் வேஷ்டிதான் செளகரியமான ஆடை. கோவையில் கால்சட்டைதான் செளகரியமான ஆடை.

இந்த இரட்டைமுறை கணிக்கும் வசதி ஆரம்பகால மென்பொருட்களில் இல்லாததால், நான் கணினி ஜாதகங்களுக்கு திருக்கணிதத்தை சிபாரிசு செய்தேன். இப்போது வந்துவிட்டதால், குழப்பம் இல்லாமல் இருக்க வாக்கியமுறையையைச் சிபாரிசு செய்கிறேன்.

விளக்கம் போதுமா அன்பரே?
----------------------------------------------------------------------
உபரித் தகவல்கள்:

கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகிய மூன்றும் இந்தியாவில் இருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. நமது நாட்டிற்கு முற்காலத்தில் வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாகப் பரவியது.

நமது ஜோதிடம் வேதகாலத்தில் உருவானது. அதை Indian Vedic Astrology என்பார்கள். நமது ஜோதிடமுறை சந்திரனையும், அதன் சுற்றுப்பாதையில் உள்ள நட்சத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டது. நமது முறைக்கு Sidereal astrology என்று பெயர்.

மேலை நாட்டவர்களின் ஜோதிடம் சூரியனின் எழுச்சியை அடைப்படையாகக் கொண்டது. அதை அவர்கள் Sun Signs என்பார்கள். அவர்களுடைய முறைக்கு Tropical astrology என்று பெயர்.

The difference between the Tropical ( Western ) & The Sidereal ( Indian ) Zodiacs is round about 23 degrees this year. Sidereal Astrology is based on the immovable Zodiac- the Sidereal Zodiac - and Western Tropical Astrology is based on the Tropical Zodiac which is movable.

Jyotish (Sanskrit meaning “Science of Light”), is based on the Sidereal, or Nirayana, zodiac, which is fixed in relation to the stars, as opposed to the symbolic Tropical, or Sayana, zodiac, which is based on the Vernal, or Spring, Equinox. The difference between the two zodiacs lies in the ayanamsa, the difference in degrees and minutes between 0° Aries in the sidereal zodiac, and the Vernal Equinox. Since the earth's rotational axis moves slowly in a circular, or “precessional,” motion, the Vernal Equinox, the point where the Sun crosses the celestial equator each year, moving from south declination to north declination, never quite returns to its starting place.
---------------------------------------------------------------------------------------------

Unlike Western astrology that is based on the Tropical zodiac, the Vedic system of astrology (jyotish) employs the Sidereal (or true) position of the planets. The difference between the two, due to the precession of equinox, is called the "Ayanamsa".

However the apparent position of the planets (including Sun) in relation to the constellations is subject to this precession of the equinox which, basically, is the earth's slight backward movement through the constellations (aprox. 50.25 seconds per year) as it wobbles on it's axis.

There are several different Ayanamsa in use today but the one most widely used by traditional astrologers is the Lahiri ayanamsa which is sanctioned by the Indian government. This puts the degree of precession for (Oct) 2002 at approximately 23:53:26.

இந்த லஹிரி அயனாம்சம் என்பதைத்தான் நாம் திருக்கணிதம் என்கிறோம். கணினிகளில் இதன் முறைப்படி கணிப்பதற்கு option கொடுக்கப்பட்டிருக்கும். வாக்கியம் என்பது இதற்கெல்லாம் முற்பட்டது. காலம் காலமாக நாம் பாவிப்பது (உபயோகிப்பது)
---------------------------------------------------------------------------------


URL for ayanamsa calculation
---------------------------------------------------------------------
கணினி மென் பொருட்களில் இரண்டு முறைகளுக்கும் உள்ள வசதியைக் (option) காட்டும் படங்கள் கீழே உள்ளன. படஙகளின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்!1. லஹரி முறை (அதாவது திருக்கணித முறை)


2. ராமன் அயனாம்ச முறை (வாக்கிய முறை)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

3. அயனாம்சத்தைக் கண்க்கிட உதவும் தளம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


4. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி மற்றும் வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் கிரக பாதாச்சாரங்கள் (லக்கினத்தைக் கவனியுங்கள்) இரண்டு முறைகளுக்கும் உள்ள , கிரக பாகைகளைக் கவனியுங்கள்
======================================================

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
“வாத்தி (யார்), திண்டுக்கல்லும் வைரக்கல்லும் என்ற தலைப்பிற்குக் காரணத்தைச் சொல்லாமல் போகிறீர்களே?”

 “திட்டத் திட்ட திண்டுக்கல், வைய வைய வைரக்கல்” என்று கிராமங்களில் ஒரு சொல்லடை உண்டு. அதாவது ஒருவனைத் திட்டிக்கொண்டே இருந்தால், அவன் திண்டுக்கல்லில் உள்ள குன்றைப்போல உறுதியாகிவிடுவான். வைரக்கல்லைப்போல ஜொலிக்க ஆரம்பித்துவிடுவான். நான் எனக்குத் தெரிந்தவற்றை, அடுத்த தலைமுறையின ருக்குத் தெரியப்படுத்த வேண்டும். சொல்லித்தர வேண்டும் என்ற நோக்கோடு என் அரிய நேரத்தைச் செலவழித்துப் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். நான்கு ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். மாதம் சுமார் 20 பதிவுகளுக்குக் குறையாமல் வலையில் ஏற்றிக்கொண்டிருக்கிறேன். பஞ்சாங்கங்களுக்கும், பாவ சந்திப்பில் பிறந்தவர்களுக்கு உள்ள ஜாதகக் கோளாறுகளுக்கு உள்ள வித்தியாசத்தையும் பலமுறை விளக்கி எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் சரியாகப் படிக்காமல் அல்லது சரியாகப் அதைப் புரிந்து கொள்ளாமல், சிலர் (மின்னஞ்சல் மூலமாக) என்னைத் திட்ட ஆரம்பித்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் முகமாகத்தான் இந்தப் பதிவு,

போற்றுபவர்கள் போற்றற்றும் - புழுதிவாரி
தூற்றுபவர்கள் தூற்றற்றட்டும்.
எல்லாம் - என்னை எழுதப் பணிக்கும்
பழநியப்பனையே சேரட்டும்!
-வாத்தியார்


வாழ்க வளமுடன்!

31 comments:

 1. உங்கள் மனத்தாங்கள் புரிகிறது . .
  எப்போதுமே நல்ல விஷயங்களை சொன்னால் ஏற்க மறுப்பது இன்றைய தலைமுறை . .
  உடைகளை பற்றி சொன்னீர்கள் . .
  அதை விட கொடுமை
  வருங்கால தலைமுறையினருக்கு .
  அத்தை மாமா அண்ணன் தம்பி அக்கா தங்கை என்பதற்கு பொருள் தெரியாது . .

  எல்லாம் ஒத்தையாய் வளர தொடங்கி . . விரும்பியதை வேண்டாததை என வாங்கி திணித்து . .

  அடுத்த சில தலைமுறைகளை கெடுக்கத் தொடங்கிவிட்ட பெரியவர்களை குற்றம் சொல்வதா . .
  கெட்டு குட்டிச்சுவராகும் இளைய தலைமுறையினை குற்றம் சொல்வதா . .

  காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என கண்ணதாசன் பாடலை பாடி அமைவதா . .

  வேடிக்கை மனிதனைப் போல் வீழ்வேன் என நினைத்தாயோ என பாரதி வரிகளுக்கு கட்டியம் கட்டியது போல் வரும் உங்கள் வகுப்பறை பாடங்களில் ஒரு சிலராவது மாறினால் மகிழ்ச்சி . .
  மாற நினைத்தாலே மகிழ்ச்சி என சொல்ல வைக்கிறது . .

  ReplyDelete
 2. போற்றுபவர்கள் போற்றற்றும் - புழுதிவாரி
  தூற்றுபவர்கள் தூற்றற்றட்டும்.
  எல்லாம் - என்னை எழுதப் பணிக்கும்
  பழநியப்பனையே சேரட்டும்!

  Thanks for your patients and your kind replies on repeated answers

  ReplyDelete
 3. காய்த்த மரம் கல்லடி படுகிறது.....
  குறி மட்டும் காயாக இருக்கட்டும்,,,,,,

  " மோகம் 30 நாள் ஆசை அறுபது நாள் என்று உன்மேல் சலிப்பு ஏற்பட்டு, அவன் உன்னைக் கைவிட்டுவிட்டால் என்ன செய்வாய்? அன்று உனக்கு யார் உதவிக்கு வருவார்கள்? என்று கேட்கமுடியமா? கேட்டால்தான் அவள் உங்களுக்கு நின்று பதில் சொல்வாளா?"

  உளவியல் ரீதியில் யோசித்தால்,பார்த்தால், காதலிப்பவர்கள் (இந்திய சமூக அமைப்பில்) பலவீனமானவர்கள்.. அவர்களின் இந்த பலவீனம் வாழ்வின் பல கட்டங்களில் அவர்களை, வெவ்வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதைத் தான் சமூகத்தின் நிகழ்வுகள் உணர்த்துகிறது. 99 % நான் பார்த்த காதலர்கள் வாழ்க்கையில் (வறுமை கிடக்கட்டும்) இப்படி வெவேறு காலகட்டங்களில் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள். (இவர்கள் காதலர்கள் 1 % கூட சருக்கக் கூடாது அது தானே உண்மைக் காதல்). சபலமா? சலனமா? அல்லது உண்மையான அன்பா? இனம் கண்டுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல!

  ReplyDelete
 4. வணக்கம் அய்யா.
  அருமையான பதிவு.
  இனிமேலாவது யாரும் திருக்கணிதத்திற்கும்
  வாக்கியத்திற்கும் சந்தேகம் கேட்காமல்
  இருந்தால் அதுவே இந்த பதிவிற்கு
  கிடைத்த வெற்றி.
  நன்றி அய்யா.

  ReplyDelete
 5. வாத்தி ஐயா வணக்கம்

  கண்ணதாசன் அவர்கள் அர்த்தம் உள்ள ஹிந்து மதத்தில் மிகவும் அருமையாக சொல்லுவார்

  இல்லை என்று சொல்லு பவனுக்கு இந்த உலகில் இறைவனை தொட்டு ஒன்றுமே இல்லை என்பார் .
  உண்டு என்று சொல்லுபவனுக்கு தான் பிரச்சனையே என்பார்.

  உண்டு என்பதற்கு ஆதாரம் காண்பித்து ஆகவேண்டிய சூழலுக்கு இவன் தள்ள படுகின்றான் என்பார்

  தாங்கள் வாத்தியார் நாங்களோ மாணவர்கள் சந்தேகம் என்று வரும் பொழுது மண்டை குடைச்சல் மற்றும் மனது கிடைந்து அலைபாய தொடங்குகின்றது ஐயா ( ஐயாவிற்கு நன்கு அறியும் மனிதனின் மனம் ஒரு குரங்கு என்பது )

  சொல்லடை ஒன்று உண்டு ஐயா

  " தெய்வத்தை நம்புகின்றவன் ஜாதகத்தை நம்ப மாட்டான் " என்பது

  ஐயா இந்த நிலை எம்மை போன்றவர்களுக்கு (இளம் வயதினருக்கு அதுவும் இல்லறத்தில் உள்ளவருக்கு ) நடைமுறை சாத்விகம் என்பது முடியாதகாரியம் ஐயா.

  என்னை தொட்டு இங்கு வருபவர்கள் எல்லாம் அதிக முக்கியத்துவம் உறவுகளுக்கு மற்றும் இறைவழிபாடு, ஆன்மிகத்திற்கு கொடுக்கிறவர்கள் ஐயா. இதில் இளம் வயதினர் என்றால் வாழ்க்கையில் ஏற்படும் தடங்கள் மற்றும் மனித சக்திக்கும் மீறிய ஒரு செயல் நம்மை ஆட்டிபடைப்பதை உணர்த்த உடன் அது என்ன என்பதனை அறியும் நோக்குடன் தான் ஜாதகம் என்ற மைல் எல்லைக்கு வருகின்றனர் .

  அப்படி வரும் நபர்களில் அங்கும் பிரச்சனை என்னும் பொழுதுதான் ஐயா

  கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாகி விடுகின்றது ஐயா .

  ஜோதிடத்தில் நல்ல திறமை அல்லது புரியும் தன்மை உள்ளவர்களின் நிலைமை வேறு. எம்மை போன்ற சாதாரண மனிதனின் நிலைமை என்பது வேறு தாங்கள் இங்கு பொருளை புரிந்துகொள்ள வேண்டும் ஐயா

  இந்த கலியுக வாழ்கையில் முட்டி மோதி கண்ணீர் விட்டு கதறி அழுத பின்னர் நம்மளுக்காக இல்லாவிட்டாலும் நம்மை சார்ந்தவருக்காவது வாழவேண்டிய கட்டாயத்தில் தான் இங்கு நிறைய பேருடைய வாழ்க்கை பயணம் தொடர்கின்றது இந்த பயணத்தில் ஐயாவை போன்று நல்ல உள்ளகளின் அன்பும் அதரவிம் என்று தேவை ஐயா


  பெரியவர்கள் சொல்லுவார்கள் நடைமுறை உண்மையும் கூடத்தான்

  " தெய்வம் நேரில் எதனையும் சொல்லாது எவர் அல்லது எதனில் மூலமாவது தான் சொல்லும் " என்பது ஐயா

  இங்கு நாங்கள் ஜாதகத்தை மட்டும் படிக்க வில்லை . தாய் மொழியை அந்நியநாட்டில் இருந்து கொண்டு படிக்கின்றோம் அதனுடன் பண்பாடு, கலை. நாகரிகம், மனிதாபிமானம், ஒழுக்கம், புண்ணியம், தர்மம் என அடுத்த தலைமுறைக்கு வேண்டிய நற்சிந்தனை கூடவும் தான் ஐயா

  ReplyDelete
 6. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  ////எது சரியானது என்பதைவிட, எது உகந்தது என்று கேட்க வேண்டும்!
  சரி, இப்போது சொல்லுங்கள் எது உகந்தது?
  வாக்கியம்தான் நமக்கு உகந்தது!////////

  மிகவும் தெளிவான விளக்கம்.
  நன்றி
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி
  2010-08-13

  ReplyDelete
 7. உ ஸ்ஸ் ஸ் ஸ் ஸ் , இப்பவே கண்ண கட்டுதே.
  ஐயா இந்த பதிவிற்கு நன்றி, ஆனால் இதை புரிந்து கொள்ள தற்போது எனக்கு முடியவில்லை, மீண்டும் மீண்டும் படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.
  நீங்கள் கூறியபடி நான் மற்றும் ஒரு முறை மென்பொருளில் சோதித்து பார்த்தேன். 24/07/1981, காலை 10.32, பண்ருட்டி. ராமன் அயனாம்சம், 360 நாட்கள்.
  இப்பொழுதும் எனக்கு அதே பிரச்சனை நீடிக்கின்றது.
  மென்பொருளில் 10-ல் புதன் உள்ளது, ஆனால் பனை ஓலையில் ல் 11-ல் புதன் உள்ளது.
  மேலும் திசை இருப்பிலும் நவாம்சத்திலும் சில குளறுபடிகள்.
  என்ன கொடுமை சார் இது!

  ஐயா தூற்றுபவர்களை நினையாமல் உங்களால் பயனடைவர்களை மற்றும் எண்ணி மகிழுங்கள், வீறு நடை போடுங்கள். உங்கள் ஒளியியல் பனி தொடர எல்லாம் வல்ல இயற்கை தங்களுக்கு அனுகூலமாக இருக்கட்டும்.
  இவன்
  உங்களின் எழுத்தால் பயன்பெரும் மாணவன்
  இரா.புரட்சிமணி

  ReplyDelete
 8. ஐயா வணக்கம்...!
  மீண்டும் ஒரு முறை நீண்டதொரு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.. தாங்கள் மிகவும் மதிக்கும் கவியரசரின் சில வரிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன.. அவை,

  "கவிஞன் யானோர் காலக்கணிதம்
  கருப்பட பொருளை உருப்பட வைப்பேன்
  ......
  கொள்வோர் கொள்க குறைப்போர் குரைக்க.."

  எனக்குத்தெரிந்த வரை தாங்களும் ஒரு காலக்கணிதம்தான்.. தங்கள் கருத்தை கொள்வோர் கொள்ளட்டும், குறைப்போர் குரைக்கட்டும்...

  சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு ஜோதிடர் (திருக்கணிதத்தை ஆதரிப்பவர்) "வாக்கியப் பஞ்சாங்கத்தில் வருடத்திற்கு 360 நாட்கள் என்று கணக்கிடுகிறார்கள், ஆனால் திருக்கணிதத்தில் வருடத்திற்கு 365.25 நாட்கள் என்று கணக்கிடுகிறார்கள், எனவே திருக்கணிதம்தான் விஞ்ஞானப்பூர்வமானது" என்று சொன்னார். அதைப்பற்றி ஓரிரு வார்த்தைகள்...

  தங்கள் அன்பு மாணவன்
  மா. திருவேல் முருகன்

  ReplyDelete
 9. தமிழில் திருக்கணித பஞ்சாங்ககளும் வெளிவருகின்றன. யாரும் பயன்படுத்தாவிட்டால் எப்படி அச்சிடப் பட்டு வெளிவரும். இந்த திருக்கணித முறையும் தமிழகத்தில் பல ஆண்டு காலமாகவே பயன் பாட்டில் இருக்கிறது. அந்த காலத்திலேயே (நான் பிறந்த 1971ல்) என் தந்தை என் ஜாதகத்தை திருக்கணித முறையில்தான் எழுதி வைத்திருந்தார். அதற்கு முன்பாகவே திருகணித முறை தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துதான் வருகிறது. 60களில் தமிழில் வெளியிடப் பட்ட திருக்கணித பஞ்சாங்கமும் எங்களிடம் இருக்கிறது. திருகணித முறை ஏதோ இன்று நேற்றுதான் வந்தது என்பது போல் தாங்கள் எழுதியதால் இவ்வளவு சொல்ல வேண்டியதாகி விட்டது.

  ReplyDelete
 10. ///////iyer said...
  உங்கள் மனத்தாங்கல் புரிகிறது . .
  எப்போதுமே நல்ல விஷயங்களை சொன்னால் ஏற்க மறுப்பது இன்றைய தலைமுறை . .
  உடைகளை பற்றி சொன்னீர்கள் . .
  அதை விட கொடுமை
  வருங்கால தலைமுறையினருக்கு .
  அத்தை மாமா அண்ணன் தம்பி அக்கா தங்கை என்பதற்கு பொருள் தெரியாது . .
  எல்லாம் ஒத்தையாய் வளர தொடங்கி . . விரும்பியதை வேண்டாததை என வாங்கி திணித்து . .
  அடுத்த சில தலைமுறைகளை கெடுக்கத் தொடங்கிவிட்ட பெரியவர்களை குற்றம் சொல்வதா . .
  கெட்டு குட்டிச்சுவராகும் இளைய தலைமுறையினை குற்றம் சொல்வதா . .
  காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என கண்ணதாசன் பாடலை பாடி அமைவதா . .
  வேடிக்கை மனிதனைப் போல் வீழ்வேன் என நினைத்தாயோ என பாரதி வரிகளுக்கு கட்டியம் கட்டியது போல் வரும் உங்கள் வகுப்பறை பாடங்களில் ஒரு சிலராவது மாறினால் மகிழ்ச்சி . .
  மாற நினைத்தாலே மகிழ்ச்சி என சொல்ல வைக்கிறது . .////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அய்யர்!

  ReplyDelete
 11. //////Ram said...
  போற்றுபவர்கள் போற்றற்றும் - புழுதிவாரி
  தூற்றுபவர்கள் தூற்றற்றட்டும்.
  எல்லாம் - என்னை எழுதப் பணிக்கும்
  பழநியப்பனையே சேரட்டும்!
  Thanks for your patients and your kind replies on repeated answers/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. /////Alasiam G said...
  காய்த்த மரம் கல்லடி படுகிறது.....
  குறி மட்டும் காயாக இருக்கட்டும்,,,,,,
  " மோகம் 30 நாள் ஆசை அறுபது நாள் என்று உன்மேல் சலிப்பு ஏற்பட்டு, அவன் உன்னைக் கைவிட்டுவிட்டால் என்ன செய்வாய்? அன்று உனக்கு யார் உதவிக்கு வருவார்கள்? என்று கேட்கமுடியமா? கேட்டால்தான் அவள் உங்களுக்கு நின்று பதில் சொல்வாளா?"
  உளவியல் ரீதியில் யோசித்தால்,பார்த்தால், காதலிப்பவர்கள் (இந்திய சமூக அமைப்பில்) பலவீனமானவர்கள்.. அவர்களின் இந்த பலவீனம் வாழ்வின் பல கட்டங்களில் அவர்களை, வெவ்வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதைத் தான் சமூகத்தின் நிகழ்வுகள் உணர்த்துகிறது. 99 % நான் பார்த்த காதலர்கள் வாழ்க்கையில் (வறுமை கிடக்கட்டும்) இப்படி வெவேறு காலகட்டங்களில் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள். (இவர்கள் காதலர்கள் 1 % கூட சருக்கக் கூடாது அது தானே உண்மைக் காதல்). சபலமா? சலனமா? அல்லது உண்மையான அன்பா? இனம் கண்டுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல!//////

  இப்போதைய காதலுக்கு அடிப்படை 80% இனக்கவர்ச்சி (காமம்)!

  ReplyDelete
 13. //////thirunarayanan said...
  வணக்கம் அய்யா.
  அருமையான பதிவு.
  இனிமேலாவது யாரும் திருக்கணிதத்திற்கும்
  வாக்கியத்திற்கும் சந்தேகம் கேட்காமல்
  இருந்தால் அதுவே இந்த பதிவிற்கு
  கிடைத்த வெற்றி.
  நன்றி அய்யா.//////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி திருநாராயணன்!

  ReplyDelete
 14. //////kannan said...
  வாத்தி ஐயா வணக்கம்
  கண்ணதாசன் அவர்கள் அர்த்தம் உள்ள ஹிந்து மதத்தில் மிகவும் அருமையாக சொல்லுவார்
  இல்லை என்று சொல்லு பவனுக்கு இந்த உலகில் இறைவனை தொட்டு ஒன்றுமே இல்லை என்பார் .
  உண்டு என்று சொல்லுபவனுக்கு தான் பிரச்சனையே என்பார்.
  உண்டு என்பதற்கு ஆதாரம் காண்பித்து ஆகவேண்டிய சூழலுக்கு இவன் தள்ள படுகின்றான் என்பார்
  தாங்கள் வாத்தியார் நாங்களோ மாணவர்கள் சந்தேகம் என்று வரும் பொழுது மண்டை குடைச்சல் மற்றும் மனது கிடைந்து அலைபாய தொடங்குகின்றது ஐயா ( ஐயாவிற்கு நன்கு அறியும் மனிதனின் மனம் ஒரு குரங்கு என்பது ) சொல்லடை ஒன்று உண்டு ஐயா
  " தெய்வத்தை நம்புகின்றவன் ஜாதகத்தை நம்ப மாட்டான் " என்பது
  ஐயா இந்த நிலை எம்மை போன்றவர்களுக்கு (இளம் வயதினருக்கு அதுவும் இல்லறத்தில் உள்ளவருக்கு ) நடைமுறை சாத்விகம் என்பது முடியாதகாரியம் ஐயா.
  என்னை தொட்டு இங்கு வருபவர்கள் எல்லாம் அதிக முக்கியத்துவம் உறவுகளுக்கு மற்றும் இறைவழிபாடு, ஆன்மிகத்திற்கு கொடுக்கிறவர்கள் ஐயா. இதில் இளம் வயதினர் என்றால் வாழ்க்கையில் ஏற்படும் தடங்கள் மற்றும் மனித சக்திக்கும் மீறிய ஒரு செயல் நம்மை ஆட்டிபடைப்பதை உணர்த்த உடன் அது என்ன என்பதனை அறியும் நோக்குடன் தான் ஜாதகம் என்ற மைல் எல்லைக்கு வருகின்றனர்
  அப்படி வரும் நபர்களில் அங்கும் பிரச்சனை என்னும் பொழுதுதான் ஐயா
  கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாகி விடுகின்றது ஐயா .
  ஜோதிடத்தில் நல்ல திறமை அல்லது புரியும் தன்மை உள்ளவர்களின் நிலைமை வேறு. எம்மை போன்ற சாதாரண மனிதனின் நிலைமை என்பது வேறு தாங்கள் இங்கு பொருளை புரிந்துகொள்ள வேண்டும் ஐயா
  இந்த கலியுக வாழ்கையில் முட்டி மோதி கண்ணீர் விட்டு கதறி அழுத பின்னர் நம்மளுக்காக இல்லாவிட்டாலும் நம்மை சார்ந்தவருக்காவது வாழவேண்டிய கட்டாயத்தில் தான் இங்கு நிறைய பேருடைய வாழ்க்கை பயணம் தொடர்கின்றது இந்த பயணத்தில் ஐயாவை போன்று நல்ல உள்ளகளின் அன்பும் அதரவிம் என்று தேவை ஐயா
  பெரியவர்கள் சொல்லுவார்கள் நடைமுறை உண்மையும் கூடத்தான்
  " தெய்வம் நேரில் எதனையும் சொல்லாது எவர் அல்லது எதனில் மூலமாவது தான் சொல்லும் " என்பது ஐயா
  இங்கு நாங்கள் ஜாதகத்தை மட்டும் படிக்க வில்லை . தாய் மொழியை அந்நியநாட்டில் இருந்து கொண்டு படிக்கின்றோம் அதனுடன் பண்பாடு, கலை. நாகரிகம், மனிதாபிமானம், ஒழுக்கம், புண்ணியம், தர்மம் என அடுத்த தலைமுறைக்கு வேண்டிய நற்சிந்தனை கூடவும் தான் ஐயா////

  உங்களின் மனம் திறந்த நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!

  ReplyDelete
 15. ///////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  ////எது சரியானது என்பதைவிட, எது உகந்தது என்று கேட்க வேண்டும்!
  சரி, இப்போது சொல்லுங்கள் எது உகந்தது?
  வாக்கியம்தான் நமக்கு உகந்தது!////////
  மிகவும் தெளிவான விளக்கம்.
  நன்றி
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி////

  நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

  ReplyDelete
 16. //////R.Puratchimani said...
  உ ஸ்ஸ் ஸ் ஸ் ஸ் , இப்பவே கண்ண கட்டுதே.
  ஐயா இந்த பதிவிற்கு நன்றி, ஆனால் இதை புரிந்து கொள்ள தற்போது எனக்கு முடியவில்லை, மீண்டும் மீண்டும் படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.
  நீங்கள் கூறியபடி நான் மற்றும் ஒரு முறை மென்பொருளில் சோதித்து பார்த்தேன். 24/07/1981, காலை 10.32, பண்ருட்டி. ராமன் அயனாம்சம், 360 நாட்கள்.
  இப்பொழுதும் எனக்கு அதே பிரச்சனை நீடிக்கின்றது.
  மென்பொருளில் 10-ல் புதன் உள்ளது, ஆனால் பனை ஓலையில் ல் 11-ல் புதன் உள்ளது.
  மேலும் திசை இருப்பிலும் நவாம்சத்திலும் சில குளறுபடிகள்.
  என்ன கொடுமை சார் இது!
  ஐயா தூற்றுபவர்களை நினையாமல் உங்களால் பயனடைவர்களை மற்றும் எண்ணி மகிழுங்கள், வீறு நடை போடுங்கள். உங்கள் ஒளியியல் பனி தொடர எல்லாம் வல்ல இயற்கை தங்களுக்கு அனுகூலமாக இருக்கட்டும்.
  இவன்
  உங்களின் எழுத்தால் பயன்பெரும் மாணவன்
  இரா.புரட்சிமணி//////

  பார்டர் சந்திப்பில் (இரண்டு லக்கினங்களின் சந்திப்பில் - ஜங்சனில்) பிறந்தவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும்.
  இரண்டு லக்கினங்களின் குணங்களும் அவர்களுக்கு இருக்கும். கடக லக்கினம் - சிம்ம லக்கினம் பார்டரில் பிறந்தவனுக்கு, அதீத கோபமும் இருக்கும், மற்றவர்களை அனுசரித்துப்போகும் குணமும் இருக்கும்.
  குழப்பம் வேண்டாம் என்றால், கணினி ஜாதகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டு, உங்கள் வீட்டில் ஓலையில் எழுதி வைத்திருக்கும் ஜாதகத்தைப் பின்பற்றுங்கள். அதைவிட இன்பமான வழி இருக்கிறது.....மின்னஞ்சலில் கேளுங்கள். சொல்கிறேன்!

  ReplyDelete
 17. //////M. Thiruvel Murugan said...
  ஐயா வணக்கம்...!
  மீண்டும் ஒரு முறை நீண்டதொரு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.. தாங்கள் மிகவும் மதிக்கும் கவியரசரின் சில வரிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன.. அவை,
  "கவிஞன் யானோர் காலக்கணிதம்
  கருப்பட பொருளை உருப்பட வைப்பேன் ......
  கொள்வோர் கொள்க குறைப்போர் குரைக்க.."
  எனக்குத்தெரிந்த வரை தாங்களும் ஒரு காலக்கணிதம்தான்.. தங்கள் கருத்தை கொள்வோர் கொள்ளட்டும், குறைப்போர் குரைக்கட்டும்...
  சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு ஜோதிடர் (திருக்கணிதத்தை ஆதரிப்பவர்) "வாக்கியப் பஞ்சாங்கத்தில் வருடத்திற்கு 360 நாட்கள் என்று கணக்கிடுகிறார்கள், ஆனால் திருக்கணிதத்தில் வருடத்திற்கு 365.25 நாட்கள் என்று கணக்கிடுகிறார்கள், எனவே திருக்கணிதம்தான் விஞ்ஞானப்பூர்வமானது" என்று சொன்னார். அதைப்பற்றி ஓரிரு வார்த்தைகள்...
  தங்கள் அன்பு மாணவன்
  மா. திருவேல் முருகன்////////

  வாக்கியப்பஞ்சாங்கத்தில் தசா புத்திகள் அனைத்திலுமே ஆண்டுக்கு 360 நாட்கள் மட்டுமே அதனால் நீங்கள் சொல்லும் அந்த 5.25 நாட்கள் வித்தியாசம் அடிபட்டுப்போகும். பஞ்சாங்கம் ஒன்றை வாங்கிப் பாருங்கள். நீங்கள் இருக்கும் இமயத்தில் அது கிடைக்காது இல்லையா? தமிழ் நாட்டு விஜயத்தின் போது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 18. அப்பா! எவ்வளவு நீ......................ள‌ப் பதிவு! இதுவரை கண்டதில்லை இது போல். திட்ட ஆரம்பித்தவர்கள் கொஞ்சமாவது புரிந்து கொள்வார்களா?ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

  ReplyDelete
 19. அய்யா,

  யார் என்ன சொன்னாலும் அதை தாங்கள் பொருட் படுத்தாது, பணியை தொடர வேண்டுகிறேன்.

  சிறக்கட்டும் உங்கள் பணி.

  அன்புடன்
  வெங்கடேசன்

  ReplyDelete
 20. ananth said...
  தமிழில் திருக்கணித பஞ்சாங்ககளும் வெளிவருகின்றன. யாரும் பயன்படுத்தாவிட்டால் எப்படி அச்சிடப் பட்டு வெளிவரும். இந்த திருக்கணித முறையும் தமிழகத்தில் பல ஆண்டு காலமாகவே பயன் பாட்டில் இருக்கிறது. அந்த காலத்திலேயே (நான் பிறந்த 1971ல்) என் தந்தை என் ஜாதகத்தை திருக்கணித முறையில்தான் எழுதி வைத்திருந்தார். அதற்கு முன்பாகவே திருகணித முறை தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துதான் வருகிறது. 60களில் தமிழில் வெளியிடப் பட்ட திருக்கணித பஞ்சாங்கமும் எங்களிடம் இருக்கிறது. திருகணித முறை ஏதோ இன்று நேற்றுதான் வந்தது என்பது போல் தாங்கள் எழுதியதால் இவ்வளவு சொல்ல வேண்டியதாகி விட்டது.

  1952ல் இந்திய அரசாங்கத்தின் முயற்சியால அது வெளியானதாகச் செய்தி. அதையும் பதிவில் குறிப்பிட்டுள்ளேன் சாமி! அந்தப் பகுதியை உங்களுக்காக மீண்டும் தந்துள்ளேன்!
  Thus, the Government of India has prepared the National Panchanga or the Indian national calendar in 1957 (was proposed by Saha and Lahiri in 1952), which is used in predictive astrology. The Lahiris Ephemeris published annually is the most widely used English almanac in Vedic astrology apart from the many Panchangas published in local languages, which are mostly based on the National Panchanga.
  1995 கணினி மென்பொருளாக வந்ததற்குப் பிறகுதான் அது மிகவும் பிரபலமானது. இன்று நேற்றுதான் வந்தது என்பது போல் நான் எப்போதும் எழுதியதில்லை!

  ReplyDelete
 21. //////kmr.krishnan said...
  அப்பா! எவ்வளவு நீ......................ள‌ப் பதிவு! இதுவரை கண்டதில்லை இது போல். திட்ட ஆரம்பித்தவர்கள் கொஞ்சமாவது புரிந்து கொள்வார்களா?ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.///////

  சிலருக்கு எப்போது புரியாது.அவர்கலையும் அனுசரித்து நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அது இறைவனின் சித்தம்!

  ReplyDelete
 22. /////venkatesan.P said...
  அய்யா,
  யார் என்ன சொன்னாலும் அதை தாங்கள் பொருட்படுத்தாது, பணியை தொடர வேண்டுகிறேன்.
  சிறக்கட்டும் உங்கள் பணி.
  அன்புடன்
  வெங்கடேசன்//////

  அதெல்லாம் தொடர்வேன் - பழநிஅப்பன் அருள் உள்ளவரை!

  ReplyDelete
 23. Sir,
  Please tell me the tamil software link which you mentioned in your lesson which will enable us calculate horoscope both in Vaakkiya and Thrigukkanitha methods.
  G.Nandagopal

  ReplyDelete
 24. அருமையான விளக்கம் அய்யா
  என் போல் ஜோதிடம் கற்றுக் கொள்ளும்
  மாணவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட
  வைத்தீர்கள்.இந்த காலத்தில் ஜோதிடத்தை பற்றி விளக்கம் கேட்டால்
  ஜோதிடரே சொல்லி தருவதில்லை.
  உங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி!

  ReplyDelete
 25. ' இது சரியான பழைய பஞ்சாங்கம்ப்பா...' என்று பழமைவாதிகளை கிண்டலடித்துப் பேசுவது வழக்கிலே உண்டு..இன்றுதான் உண்மையிலேயே பழைய பஞ்சாங்கம் என்று ஒன்று உண்டு என்பது தெரிய வந்திருக்கிறது..
  /////////////The theories propounded in the two scriptures, Surya Siddhanta and Grahalaghava formed the basis for the plethora of calendars or Panchangas in the past in different regions of the country - a culturally complex system.
  The Grahalaghava was compiled some 600 years ago and Surya Siddhanta was available ages before that. But these had become outdated and did not tally with actual astronomical events and did not tally with each other also. Hence, a committee was appointed by the Government of India with experts in the field drawn from various parts of the country who were involved with preparation of Panchanga in local languages to draw up a reliable Panchanga in which the mathematical calculations provides the positions of grahas (the planets) and nakshatras (constellations) in the sky as they are observed.\\\\\\\\\\\\\\\\\\
  இதுலேருந்து பார்த்தால் க்ரஹாலகவா முறை சமீபத்தியது என்பதும் அதனால் இந்த முறைதான் வாக்கியத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்ததாக அறிகிறேன்.
  (சூரிய சித்தாந்தா,க்ரஹாலகவா பற்றி சொல்லிய செய்தி எப்படி நமது இன்றைய வகுப்பு பாடத்துடன் தொடர்பு என்பதையும் விளக்கியிருக்கலாம்..)
  இந்த இரண்டுமே நடப்பு கோட்சார நிகழ்வுகளுடன் பொருந்திப்போகாததால் இந்திய அரசாங்கம் 1952 லே அப்போதைய telescopic observations வுடன் ஒத்துப்போகிற வகையில் மாற்றியமைக்கப்பட்ட நம்பத்தகுந்த சமீபத்திய லகிரி முறையை அறிமுகப்படுத்தியது என்பது புரிகிறது..
  லகிரி திருக்கணித முறை நம்பத்தகுந்தது என்கிற வார்த்தைபிரயோகம் வாக்கிய முறையை நம்பத்தகாததாக்கிவிடும் போது திருக்கணித முறையையே பயன்படுத்தச் சொல்லிவிடுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..சுவாரஸ்யத்துக்கு சேர்க்கப்பட்டிருக்கும் வேட்டி சட்டை, கால் சட்டை உதாரணங்கள் உடலின் மேலே பயன்படுத்தப்படும் துணிகள் மட்டுமே என்பதால் உயிரை குறிக்கும் இலக்கின கணிப்புடன் தொடர்பான விளக்கத்தில் பொருந்தவில்லை..12 பாவமும் லக்கினத்திலிருந்து தீர்மானிக்கப்படுவதால் எல்லா பலன்களுமே மாறிப்போய் குழப்பம் மட்டுமே மிஞ்சும்..சரியாக இல்லாத காரணத்தினால் சரியானதொன்றை அரசாங்கம் அளித்திருப்பதனால் பின்பற்றுவது இன்றும் நாளைய தலைமுறைக்கும் தெளிவானதொரு தீர்வாகும்..முடிந்தால் பழைய ஜாதகங்களையும் மென்பொருள் உபாயத்துடன் கணித்து சரியானதாக மாற்றி பயன்படுத்துவது நல்லது..
  ஜோதிடம் என்பது பலரால் ஏற்கனவே ஒரு நம்பத்தகுந்ததல்ல என்று புறந்தள்ளப்படும் விஷயம்; பஞ்சாங்கம் போன்ற அடிப்படை விஷயங்களில் முரண்பாட்டை அப்படியே தொடருவது
  மென்மேலும் தவறான பாதைக்கே இட்டுச்செல்லும்..அறிவியல் பூர்வமாக பொருந்துமானால் மட்டுமே அது நாளைய தலைமுறையின் நடைமுறை வாழ்க்கையை செப்பனிட உதவும் ஒரு கருவியாக அமையும்..

  ReplyDelete
 26. ஐயா!!!

  நீங்கள் உபயோகிக்கும் “337” நிச்சயம் நிறைய பேர்களுக்கு மன நிம்மதியை கொடுத்திருக்கும்;உங்கள் மன வள கட்டுரைகள் நிறைய பேர்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைத்து இருக்கும். உங்களின் எழுத்திற்கு பலன் உண்டு. தொடர வேண்டும் உங்கள் தொண்டு...

  ReplyDelete
 27. ///////G.Nandagopal said...
  Sir,
  Please tell me the tamil software link which you mentioned in your lesson which will enable us calculate horoscope both in Vaakkiya and Thrigukkanitha methods.
  G.Nandagopal//////

  உங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவியுங்கள் அனுப்பிவைக்கிறேன்!

  ReplyDelete
 28. //////INDIA 2121 said...
  அருமையான விளக்கம் அய்யா
  என் போல் ஜோதிடம் கற்றுக் கொள்ளும்
  மாணவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட
  வைத்தீர்கள்.இந்த காலத்தில் ஜோதிடத்தை பற்றி விளக்கம் கேட்டால்
  ஜோதிடரே சொல்லி தருவதில்லை.
  உங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி!/////

  நல்லது. நன்றி நண்பரே!!

  ReplyDelete
 29. ///////////minorwall said...
  ' இது சரியான பழைய பஞ்சாங்கம்ப்பா...' என்று பழமைவாதிகளை கிண்டலடித்துப் பேசுவது வழக்கிலே உண்டு..இன்றுதான் உண்மையிலேயே பழைய பஞ்சாங்கம் என்று ஒன்று உண்டு என்பது தெரிய வந்திருக்கிறது..
  /////////////The theories propounded in the two scriptures, Surya Siddhanta and Grahalaghava formed the basis for the plethora of calendars or Panchangas in the past in different regions of the country - a culturally complex system.
  The Grahalaghava was compiled some 600 years ago and Surya Siddhanta was available ages before that. But these had become outdated and did not tally with actual astronomical events and did not tally with each other also. Hence, a committee was appointed by the Government of India with experts in the field drawn from various parts of the country who were involved with preparation of Panchanga in local languages to draw up a reliable Panchanga in which the mathematical calculations provides the positions of grahas (the planets) and nakshatras (constellations) in the sky as they are observed.\\\\\\\\\\\\\\\\\\
  இதுலேருந்து பார்த்தால் க்ரஹாலகவா முறை சமீபத்தியது என்பதும் அதனால் இந்த முறைதான் வாக்கியத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்ததாக அறிகிறேன்.
  (சூரிய சித்தாந்தா,க்ரஹாலகவா பற்றி சொல்லிய செய்தி எப்படி நமது இன்றைய வகுப்பு பாடத்துடன் தொடர்பு என்பதையும் விளக்கியிருக்கலாம்..)
  இந்த இரண்டுமே நடப்பு கோட்சார நிகழ்வுகளுடன் பொருந்திப்போகாததால் இந்திய அரசாங்கம் 1952 லே அப்போதைய telescopic observations வுடன் ஒத்துப்போகிற வகையில் மாற்றியமைக்கப்பட்ட நம்பத்தகுந்த சமீபத்திய லகிரி முறையை அறிமுகப்படுத்தியது என்பது புரிகிறது..
  லகிரி திருக்கணித முறை நம்பத்தகுந்தது என்கிற வார்த்தைபிரயோகம் வாக்கிய முறையை நம்பத்தகாததாக்கிவிடும் போது திருக்கணித முறையையே பயன்படுத்தச் சொல்லிவிடுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..சுவாரஸ்யத்துக்கு சேர்க்கப்பட்டிருக்கும் வேட்டி சட்டை, கால் சட்டை உதாரணங்கள் உடலின் மேலே பயன்படுத்தப்படும் துணிகள் மட்டுமே என்பதால் உயிரை குறிக்கும் இலக்கின கணிப்புடன் தொடர்பான விளக்கத்தில் பொருந்தவில்லை..12 பாவமும் லக்கினத்திலிருந்து தீர்மானிக்கப்படுவதால் எல்லா பலன்களுமே மாறிப்போய் குழப்பம் மட்டுமே மிஞ்சும்..சரியாக இல்லாத காரணத்தினால் சரியானதொன்றை அரசாங்கம் அளித்திருப்பதனால் பின்பற்றுவது இன்றும் நாளைய தலைமுறைக்கும் தெளிவானதொரு தீர்வாகும்..முடிந்தால் பழைய ஜாதகங்களையும் மென்பொருள் உபாயத்துடன் கணித்து சரியானதாக மாற்றி பயன்படுத்துவது நல்லது..
  ஜோதிடம் என்பது பலரால் ஏற்கனவே ஒரு நம்பத்தகுந்ததல்ல என்று புறந்தள்ளப்படும் விஷயம்; பஞ்சாங்கம் போன்ற அடிப்படை விஷயங்களில் முரண்பாட்டை அப்படியே தொடருவது
  மென்மேலும் தவறான பாதைக்கே இட்டுச்செல்லும்..அறிவியல் பூர்வமாக பொருந்துமானால் மட்டுமே அது நாளைய தலைமுறையின் நடைமுறை வாழ்க்கையை செப்பனிட உதவும் ஒரு கருவியாக அமையும்..////

  உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி மைனர்!

  ReplyDelete
 30. //////Arul said...
  ஐயா!!!
  நீங்கள் உபயோகிக்கும் “337” நிச்சயம் நிறைய பேர்களுக்கு மன நிம்மதியை கொடுத்திருக்கும்;உங்கள் மன வளக் கட்டுரைகள் நிறைய பேர்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைத்து இருக்கும். உங்களின் எழுத்திற்கு பலன் உண்டு. தொடர வேண்டும் உங்கள் தொண்டு...//////

  உங்கள் பின்னூட்டம் கண்டேன்
  நெஞ்சில் உவகை கொண்டேன்!

  ReplyDelete
 31. கொஞ்ச நாளா இந்த குழப்பம் இருந்தது அய்யா, வாக்கியமா இல்லை எண் கணிதமா என்று..
  நன்றி, கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருக்கு.. இன்னும் இரு முறை வாசித்து பார்க்கவேண்டும்..

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com