மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

30.3.22

உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகை!




உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகை!

அமெரிக்கா       :   32.1 கோடி 
ரஷ்யா                  :   14.6 கோடி 
ஜெர்மனி             :     8.5 கோடி 
துருக்கி                 :     8.4 கோடி 
யூ:கே                      :    6.8 கோடி
பிரான்ஸ்              :    6.5 கோடி 
இத்தாலி               :    6.1 கோடி 
ஸ்பெயின்            :    4.7 கோடி 
போலந்து             :    3.8 கோடி 
ருமேனியா          :    1.9 கோடி 
நெதர்லாந்து       :    1.7 கோடி
கிரீஸ் டப்பா         :   1.7 கோடி 
பெல்ஜியம்           :  1.2 கோடி 
செக் குடியரசு      :   1.1 கோடி 
போர்ச்சுகல்         :   1.1 கோடி 
சுவீடன்                   :      1 கோடி 
ஹங்கேரி              :      1 கோடி 
சுவிட்சர்லாந்து    : 0.9 கோடி பல்கேரியா            : 0.7 கோடி 
டென்மார்க்           :   0.6 கோடி 
பிரேசில்                :  21.2கோடி 
அர்ஜென்டினா  :   4.45 கோடி 
-------------------- 
மொத்தம் 22 நாடு : 130.95 கோடி 
=============
ஐரோப்பாவின் மற்ற 44 சிறிய நாடுகள் : 6 கோடி 

130.95 + 6.    = 136.95 கோடி! 

*மொத்தம் 66 நாட்டு மக்கள் தொகை 137 கோடி*

*இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடி*!

இப்போது தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த
*ஐரோப்பா*        *+* *அமெரிக்கா*    ➕
*பிரேசில்*            ➕
*அர்ஜென்டினா* எவ்வளவு வேலை செய்கின்றனவோ இதை 
*இந்தியா தனி நாடாக செய்கிறது…*

கேலி பேசுவது, ஒப்பிடுவது என்பது பொறுப்பற்ற வீனர்களின் வேலை.
 பாரத மாதாவின் பிள்ளைகளுக்கு  இல்லை..

என்ன கடினமான சவால்.??

*நாம் நாட்டின் நிலைமையை புரிந்து கொண்டு அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயல்படுவதே  நம் அனைவரின் கடமையாகும்.*

ஒற்றுமையே பலம்
*ஒன்றுபடுவோம் உயர்வடையும்*
      
          *ஜெய்ஹிந்த் 🙏🇮🇳*
---------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.3.22

மிகவும் கடினமான படிப்பு எது?


மிகவும் கடினமான படிப்பு எது?

வேத பாடசாலைகளில் படிப்பதுதான் கடினமான படிப்பு ஆகும்! என்ன கடினம் என்றுன் வாருங்கள் பார்ப்போம்!!!!

"வேத பாடசாலைகள்”

காலையில் பழையது,அல்லது உப்புமா, மதியம் சாதாரண ஒரு கறியுடன் சாப்பாடு..மாலையில் கரைத்து குடிக்கும் மதிய சாதம்.. இரவு மதியம் வடித்த அதே சாதம்.. உப்புமா.. காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவும் கிடையாது..

வருடம் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு ஊருக்கு போய் வரலாம்.. ஆனால் அங்கும் தினமும் எல்லா அனுஷ்டானம்களும் செய்யணும்.. சுமார் 2 மணி நேரம் பாடம்..
பின் 6 மணி நேரம் சந்தை சொல்லணும்..

மிக மிக கடினமான படிப்பு..கண்டிப்பு மிக அதிகம்..

நீங்க நினைத்த உடை உடுத்த முடியாது..

இந்த பால வயதில் அவங்க உடையை அவங்களே துவைத்து கொள்ள வேண்டும்.
.
விளையாட வேண்டிய வயசுல விளையாடாம, மற்ற பசங்க மாதிரி ரொம்ப நேரம் தூங்கிட்டு மெதுவா எழுந்திருக்காம..சீக்கிரம் தூங்காம லேட்டா தூங்கிட்டு, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, இப்படி எல்லோரையும் விட்டுட்டு...

ஒரு டிவி உண்டா?

சினிமா உண்டா?

பொழுது போக்கு உண்டா?

ஜாலியா லீவுல ஊர் சுற்றினோம்னு உண்டா?

இப்படி எதுவுமே கிடையாது இந்த பசங்களுக்கு.. வருஷத்துல ஒரு தடவையோ இரண்டு தடவையோ தான் விடுமுறை இவங்களுக்கு..

தீபாவளி சமயத்துலயும், மே மாதத்துலயும் மட்டுமே இவர்கள் தாய் தகப்பனாருடன் சேர்ந்து வாழ முடியும்.. கிட்டத்தட்ட 8 அல்லது 10 வருடங்கள் வரை குடும்பம், உற்றார் உறவினரை பிரிந்து வேதம் கற்க வேண்டும்..

விவரம் அறியாத வயசுல வேதத்தை தவிர வேற ஒன்னுமே உலகம் இல்லை.. அப்படின்னு நினைச்சுட்டு வேதம் படிக்க வர்ற பசங்களை நினைச்சு பாருங்களேன்..

தவ வாழ்க்கை அல்லவா இது..!!

எழுதாக்கிளவியான அதாவது எழுத்து வடிவில் இல்லாத, வேதத்தை பதம், க்ரமம், ஜடை மற்றும் கனம் என பிரித்து அத்யயனம் (மனனம்) செய்யும் முறையிலும் விதிக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஸ்வரங்களின் படி ஓதும் முறையிலும் ஒரு வார்த்தை கூட ஏன் ஒரு அக்ஷரம் கூட கூட்டவோ குறைக்கவோ இயலாது என்ற அளவுக்கு மிகக் கவனமாக தலைமுறை தலைமுறையாக ஓதப்பட்டு வருகிறது.

எதற்காக என்றால் லோக ஷேமத்துக்காக..

இந்த வேத விருட்சம் நன்றாக வளர நாமெல்லாம் நீர் ஊற்ற வேண்டும்..உரமிட வேண்டும்.. இவர்களைக் காக்க வேண்டும்..

தேசத்துக்காக ஒரு மகனைத் தருவதும் வேதத்துக்காக ஒரு குழந்தையைத் தருவதும்.. இரண்டுமே தியாகம் தான்..

நாட்டு எல்லையில் இருந்து கொண்டு ஒரு வீரன் எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுகிறானே அதே போல ஊருக்குள் இருந்து கொண்டு வேதம் படித்த ஒருவன் துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறான்...

பணம் இருந்தால் என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம்...

ஆனால் வேதம் படிக்க வேண்டுமானால் தாய் தகப்பன் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே குழந்தைகள் வேதம் படிக்க முடியும்....!!

மனதை நனைத்த பதிவு
--------------------------------------
படித்ததில் மனதில் பதிந்த பதிவு; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.3.20

நீங்களும் நானும் ஆக்ஸிஜனும்!

நீங்களும் நானும் ஆக்ஸிஜனும்!

"பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்...?*

*ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்...?*

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை'னு கேக்கறீங்களா...?

காரணம் இருக்கு... அதை கடைசியா சொல்றேன்... இப்ப பதில் சொல்லுங்க... 

"இதென்ன கேள்வி...? எல்லா உயிரினங்களும் அழிந்து போகும்...!" என்கிறீர்களா...?

ஓகே... நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்...?

'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை... என்ன... எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது... பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை...' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்...

இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூலக்கூறு மற்றும் தூசுகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது...
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும்ம்'ன்னு இருட்டா கருப்பா ஆயிடும்.  மேலும் இப்போது பார்ப்பதை போல அனைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல  வெளிச்சம், குவிக்க பட்ட நிலையில் கிடைக்கும். (சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க, இன்னும் விடியலை போல'னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும்... அது வீடோ பாலமோ... எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல பொல பொலவென உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கியப் பிணைப்பு ஆக்சிஜன் தான்.

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது  ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும். எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன். அதாவது வாயு. அதுவும் அது எப்படி பட்ட வாயு...? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹைட்ரஜன். எனவே மொத்த கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவியாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல காணாம கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டி இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில்  ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது.. (நிக்க நேரம் இல்லனா சமாளிக்கலாம் நிற்க நிலமே இல்லனா என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள்... நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல... சூரியனில் உள்ள புறஊதாவை ஓசோன் (O 3) தான் வடிகட்டி அனுப்புகிறது. அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும்  தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காது குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்கபடாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைப்பதற்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்.. அழுத்தம் கணிசமான அளவில் குறைந்துவிடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும்...!  (ஹலோ நான் சொல்றது கேக்குதா...? ஹலோ.... ஹலோ....??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்கபடுவது ஆக்சிஜன் தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம்.. ஓடும் கார்.. பைக்.. எதுவானாலும் அங்கங்கே  இயங்காமல் நிற்கும். (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும்.
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு  இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான். அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக் கொள்ளும்...!

இப்ப சொல்லுங்க...
பூமியில் ஐந்து நொடி... ஐந்தே ஐந்து நொடி...  பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?

நிச்சயமாக முடியாது தானே...?
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்...? 

அப்படிப்பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி செய்ய முடியாத ஆக்சிஜனை ஒரு மரத்தால் உற்பத்தி செய்ய முடியும்...!

எனவே

*"மரம் வளர்ப்போம்...! ஆக்சிஜன் பெருக்குவோம்...!"*

நன்றி:tamil.pratilipi.com
------------------------------------------
படித்ததில் பிடித்த பதிவு
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.5.19

அறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்!!!!!

அறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்!!!!!

முயற்சி செய்யாமல் பிறரைக் குறை கூறுவதை விட, முயற்சி செய்து தோற்றாலும் அதை அமைதியாய் ஏற்று கொள்வதே மேல்.

எத்தனை முறை நீ ஏமாற்றப் பட்டாலும் ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக் கொள்ளாதீர்கள். அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார்கள் நேர்மைக்கு என்றுமே மரணமில்லை. கவலையை விடுங்கள்.

தனிமையில் வாழப் பழகி விட்டால் எவரையும் குற்றம் கூறவும்  முடியாது. நம்மளையும் யாரும் குறை கூற வழியும்  இருக்காது.

யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாகக் காரணம் அதிகமாக பேசியதன் விளைவாகத் தான் இருக்கும்.

எங்கே என்ன நடந்தாலும் அதில் பாதிக்கப் பட்டோரின் மன நிலையுடன் நம் குடும்பத்தில், உறவுகளில், நமக்கே நடந்தது போல் ஒப்பிட்டுப் பார்க்கும் இந்த மனசு தாங்க மனிதம் மனதில் இருப்பதற்கு சான்றாக இருக்கிறது.

உலகத்துலேயே நாம விரும்பாத ஒன்னு, நமக்கு இலவசமா கிடைக்குது'னா அது அட்வைஸ் ஒன்னு தான்.

நம்மை பிடிக்காத உறவினர்களிடம் பேசும் போது நாம் எப்படி வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினாலும், இறுதியில் அதை அப்படியே திசை திருப்பி விடுகிறார்கள்.

இன்றைய மனிதர்களிடம் படிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பண்பாடு குறைவாக இருக்கிறது. இது தான் இன்றைய நெருக்கடிகளுக்கு எல்லாம் மூல காரணம். படிப்பதோடு பண்பாட்டையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்க முயற்சி செய்வோம்.

கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.

கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமிருந்து எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், நிதானமாக பிரச்சினைகளை அணுகி வெற்றி காண்பவர்களே சிறந்த மனிதர்கள்.

சாதித்த பிறகு வருமே ஒரு அமைதி அது இந்த பிரபஞ்சத்தின் தொலை தூர ஓசை போன்றது.

கடன் வாங்கியவன் உறங்கலாம். கடன் கொடுத்தவன் உறங்குவதேயில்லை.

தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட, தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்.

இப்பெல்லாம் கடன் வாங்கினவனை விட, கடன் கொடுத்தவன் தான் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான்.

ஒரு தந்தை தான் நினைத்தை எல்லாம் தன் பிள்ளை சாதிக்க வேண்டும் என்பதற்கும், என் பிள்ளை நினைத்தை எல்லாம் சாதிக்க நான் துணை நிற்பேன் என்பதற்கும் அதிக வேறுபாடு இருக்கிறது.

ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர் யாரும் வேலை செய்யத் தயாராக இல்லை.

அந்தக் காலத்தில் குடும்பத்தில் முதியவர்களை பிள்ளைகள் கவனித்தனர். இப்போ தன் பிள்ளைகளை கவனிக்க முதியவர்களை வைத்திருக்கின்றனர்

பிறர் வெற்றியை தவறான வழியில் தட்டிப் பறிப்பது சாமர்த்தியம் அல்ல. சமூகத்தின் சீர்கேடு.

உனக்கெல்லாம் காலம் பதில் சொல்லும் என்று விட்டு விட்டு, அதை மறந்து போயிடனும், எப்ப தான் கெட்டு போவார் என நினைத்தால் நம் நிம்மதி போய் விடும்.

பிறர் குறைகளை கண்டு பிடிப்பதில் இருக்கும் வேகம், சுய குற்றங்களை கண்டு பிடிப்பதில் குறைவு.

எல்லாம் நன்மைக்கே : நல்லதே நடக்கும்
--------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.1.19

கணிதத்தில் நாம் தான் முன்னோடி!



கணிதத்தில் நாம் தான் முன்னோடி!

இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்.

கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா.

இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், "என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?" என்றார்.

"ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!" என்றாள்.

இரத்தினம் தாத்தா: "இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் "பிதாகரஸ் தேற்றம்"
என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா"

அமிர்தா: "சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா"

இரத்தினம் தாத்தா: "சொல்றேன் கேள், இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, *போதையனார்* என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
- போதையனார்

விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில்
பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.

இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில்
குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை
அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔

தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் ....
அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்." என்றார்.

அமிர்தா: "தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்கு, இதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா" என்றாள்.
--------------------------------
இது வெறும் கதை அல்ல.
நிரூபணம்:
அ) நீளம் = 4m, உயரம் = 3m.
எனில் கர்ணம்,
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணம் = √(4^2 + 3^2) = 5

போதையனார் கோட்பாடு:
கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5

ஆ) நீளம் = 8m, உயரம் = 6m.
எனில் கர்ணம்,
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணம் =
=√6^2+ 8^2=√36+64=10
போதையனார் கோட்பாடு:
கர்ணம்  👇
=(8-(8÷8))+(6÷2)=10
வாழ்க தமிழ்
23/12/18, 7:21 pm -
------------------------------------
மேலதிக தகவல்களுக்கு
Pythagorean theorem
https://en.wikipedia.org/wiki/Pythagorean_theorem
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.1.19

பள்ளிப் பாடப் புத்தகம் மட்டுமே வாழ்க்கையில்லை!!!!



பள்ளிப் பாடப் புத்தகம் மட்டுமே வாழ்க்கையில்லை!!!!

முரண் பட்ட வாழ்க்கை
ஒரு பாமரன் பேசுகிறேன்.

விநோதமான
விசித்திர உலகம் இது

தவறுகளையே  சரி என்னும்
தறுதலை உலகம் இது

ஒரு
பள்ளிக்கூடம் கடக்கிறேன்

குழந்தைகளை
முட்டி போட வைத்து விட்டு
சுதந்திரம் பற்றி
ஒருமணி நேரம்
நீதி போதனை செய்கிறார்
ஓர் ஆசிரியர்

வகுப்புக்கு வெளியே
வானம் பார்த்தவர்களை
பிரம்புகளால்
கை குலுக்கி விட்டு
கரும்பலகையில்
ஆகாயம் வரைகிறார்
ஒரு ஆசிரியை

பட்டாம்பூச்சிகளாக
பறந்து திரிய வேண்டிய
பாலகப் பூக்களைச்
சங்கிலியால் கட்டி விட்டு
நந்தவனங்களின்
சௌந்தர்யம் பேசுகிறார்
ஒரு போதகப் பிதா

அஞ்சு பைசாவுக்குப்
பயனில்லாத
அல்ஜீப்ரா...

வெக்டார் கால்குலேஷன்

டிஃபரன்ஷியேஷன்
கால்குலஸ்

அவன் வாழ்வதற்கான
ரூட்டை சொல்லித்தராமல்,
ரூட் த்ரி வேல்யூ
சொல்லித்தந்து பலனில்லை...

ப்ராபபல்டி போதித்து விட்டு
வீட்டின் பால்கணக்கிற்கு
கால்குலேட்டர் தேடச் சொல்கிறார்
ஒரு ராமானுஜர்...

கொள்ளையடிக்க வந்த
கஜினி முகமதை
கோரி முகமதை
கில்ஜி வம்சத்தை
தைமூர் பரம்பரையை
மொகல் மூஞ்சூறை
ஆங்கிலேய ரௌடிகளை
மனப்பாடம் செய்யச் சொல்லி
குழந்தை மூளையை
கெடவைக்கிறார்
ஒரு  வரலாற்று
வாஸ்கோடகாமா...

சும்மா கிடந்த
தவளையை
கொலைசெய்ய வைத்து
குழந்தையை
கொலைகாரன்
ஆக்குகிறார் ஒரு
விலங்கியல் வேதாந்திரி

செத்துப் போன
லத்தீன் பெயர்களை
எங்கள் ஊர்ப் பூக்களுக்குச்
சொல்ல செடிகளைத்
தற்கொலை செய்ய
வைக்கிறார் ஒரு
தாவரவியல் சாக்ரடீஸ்...

நிறுத்துங்கள்
எங்கள்
ஆசிரிய தெய்வங்களே

இந்த
இதயமற்ற அரசிடம்
இனியாவது பேசுங்கள்

பிள்ளைகளின்
அறிவுத் திரியில்
தீபமேற்ற ஏதாயினும்
திட்டம் செய்யுங்கள்

அவனவனுக்கு எது வரும்
அதைக்
கற்றுக் கொடுங்கள்...

இவன் உயர் உயர்ந்த
ஜாதிகாரன் இவன்
தாழ்ந்த ஜாதிகாரன்
என்கின்ற மாயையை
கிள்ளி எறிய
கற்று காகொடுங்கள்...

அனைவரும்
சமம் என்பதை போதியுங்கள்...

வள்ளுவன் கையில்
ஜாவா திணிக்காதீர்கள்...

பில்கேட்ஸ் கையில்
தொல்காப்பியன்
செருகாதீர்கள்...

பிள்ளைகள்
மிருதுவானவர்கள்
அவர்களை
மனப்பாடம் செய்யும்
ஏடிஎம் ஆக்காதீர்கள்...

யாரையும்
யாரோடும் ஒப்பிடாதீர்கள்...

முதல் மதிப்பெண்
பெற்றவனே
மூளைக்காரன்
என்ற இந்த
முகவரி மாற்றுங்கள்...

மூன்றாம் பரிசு பெற்ற
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்னும் வாழ்கிறது...

முந்திய இரண்டைக்
காணவில்லை...

மூன்றுமணி நேரம்
தின்றதை வாந்தியெடுக்க
அவர்களுக்கு
இனிமா தராதீர்கள்...

புரியும்படி
சொல்லிக் கொடுங்கள்...

புரியும்வரை
சொல்லிக் கொடுங்கள்...

வீட்டுப்பாடம் என்ற பெயரில்
அவர்களைக்
காட்டுக் குரங்குகளாக
மாற்றாதீர்கள்...

ஒன்று கவனித்தீர்களா

காலையில் பள்ளிக்கூடம்
கவலையோடு வரும்
அதே குழந்தை தான்
மாலையில் எத்தனை
மகிழ்வோடு ஓடுகிறது
பாருங்கள்...

எங்கே பிழை...
எது சரியில்லை
கண்டுபிடியுங்கள்...

உங்களுக்கும்
ஆயிரம் பிரச்சினை...

மறுக்கவில்லை
மகான்களே...

இன்னும்
கரிசனையோடு அணுகுங்கள்
கனவான்களே...

பள்ளிக்கூடத்தால்
துரத்தி விடப்பட்டவன் தான்
எடிசன்...

ஆக
பாடப் புத்தகம் மட்டுமே
வாழ்க்கையில்லை...

சாக்ரடீஸ் என்பவன்
படித்தவனில்லை...

ஆனால்
புத்தகங்களுக்கே
ஆனா ஆவன்னா
சொல்லிக் கொடுத்தவன்...

ஐன்ஸ்டீன்
தன்
மரணப் படுக்கையிலும்
சூத்திரங்கள் எழுதியவன்...

பீத்தோவன்
காது கேளாதவர்
ஆனாலும்
செவிக்கினிய
புதிய புதிய
இசைக்குறிப்பு செய்தவன்...

கண் தொலைந்த பிறகும்
அணுவை ஆய்ந்தவள்
மேரி கியூரி...

உங்கள்
பாடப் புத்தகத்தை
பாராயாணம்
செய்தவர்களை விட
உலகம் உணர்ந்தவன்
வென்றிருக்கிறான்...

சரவணா ஸ்டோர்ஸ்
நிறுவியவன்
படித்தவனில்லை...

அவனிடம்
எம்பிஏக்கள்
க்யூவில் நிற்கிறார்கள்...

வாடகை வீட்டுக் கூரையில்
மெஸ் நடத்தியவன்
சரவண பவன்...

அவன் கிளை இல்லாத
தேசம் இல்லை....

கம்பன்
இளங்கோ
பாரதி
கண்ணதாசன்
எங்கே படித்தனர்...

அவர்கள் படைத்தவைகள்
பல்கலைக்கழகங்களுக்கே
பாடங்களாய்...

இந்த மண்
அறிவாளிகளின் மண்

இந்த மண்
ஞான மாணாக்கர்களின்
மண்

அவனவன்
நதி மாதிரி

அவனவனை
அவன் போக்கில்
விடுங்கள்

அப்போது தான்
இந்த
நிலம் செழிக்கும்
இந்த
வனம் செழிக்கும்

அவனவனின்
சுய சிந்தனை வளருங்கள்

இந்தத்
தேசத்தைக்
காதலிக்கச்
சொல்லிக் கொடுங்கள்

இந்த
மக்களை
அன்பு செய்யச்
சொல்லிக் கொடுங்கள்

சாதி மதம் என்கின்ற
பிரிவினை இல்லாத,
ஏழை பணக்காரன்
என்கின்ற பிரிவினை
இல்லாத,
வேறுபாடு இல்லாத
நேசத்தை  உருவாக்கிக்
கொடுங்கள்...

தாயை விட உயர்ந்தது
தாய்நாடு என்கின்ற 
தேசப்பற்றை கற்றுக்
கொடுங்கள்.

தேசத்திற்காக
உழைத்து உயிரை விட்ட வீரபாண்டியகட்டபொம்மன்,
வஉசிதம்பரனார்,
அம்பேத்கர்
நேதாஜி சுபாஷ் சந்திரபாபோஷ்,
பகத்சிங்,  திருப்பூர்குமரன்,
ஜான்சிராணி ஆகியாயோரைப் பற்றிய பாடங்களைச் சொல்லிக் கொடுங்கள்.

பகத்சிங் உணர்வுகள்
பாரெங்கும் பரவிவளரட்டும்.

எல்லோர்க்கும் எல்லாம்
என்கின்ற சூழல்  வளர
முயற்சியுங்கள்.

இதை உங்கள் கல்வியில்
உயிரெழுத்தாய்க் கொடுங்கள்

சமூகத்தை நேசிக்கக்
கற்றுக் கொடுங்கள்

பண்பாடு கலாச்சாரம்
பந்தி வையுங்கள்

பெண்களை
மரியாதையோடு பார்க்க
இளைய கண்களுக்கு
எழுதிக் கொடுங்கள்...

ஒவ்வொரு பெண்ணும்
தாய் என்று
உணர வையுங்கள்...

ஈவதை
எங்கள் பிள்ளைகளுக்குச்
சொல்லிக் கொடுங்கள்
பரம பிதாக்களே...

அதை விடுத்து
உங்கள் பிள்ளை
சரியில்லை என
மாதக் கூட்டத்தில்
ஒப்பாரிப் பத்திரம்
வாசிக்காதீர்கள்...

எங்களை விட அதிக நேரம்
உங்களிடமே இருக்கிறார்கள்
எங்கள் பிள்ளைகள்

எங்கள் குழந்தைகள்
பச்சை மூங்கில்
அதை
புல்லாங்குழலாக்குங்கள்

எங்கள் மழலைகள்
வெறும் நதிதான்
அதை
கடல் சேருங்கள்

நான் ஒரு பாமரன்.

நான் சொன்ன
எல்லாவற்றையும்
கணக்கில் எடுக்காதீர்கள்

எது தேவையோ
அதை மட்டும் எடுங்கள்
இந்தச் சமூகம்
பயன்படும்படி
பலம்படும்படி
வளம்படும்படி
நலம்படும்படி......

அதோ!
இந்தப் பாமரன்
போய்க்கொண்டே
இருக்கிறேன்
இந்தச் சமூகத்தைச்
சலவை செய்யும்படி...                       
(முகநூலில் நிருபர் பழனிவேல் என்பவர் எழுதிய கவிதை படித்தேன் பிடித்துது பகிர்ந்துள்ளேன் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி)
----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.11.18

பிறவி மேதையைப் பற்றி சில செய்திகள்!!!


பிறவி மேதையைப் பற்றி சில செய்திகள்!!!

கணித மேதை சகுந்தலா தேவி 👀 பிறந்தநாள்..! 💐

அந்தக் குட்டிப் பெண்ணின் பெயர் தேவி. அவள் அப்பா வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவரோ, சர்க்கஸ் பக்கம் போனார். எண்ணற்ற வித்தைகள், பலவித மேஜிக்குகள் என அசத்தினார். அப்பாவைப் பார்த்து அந்தச் சுட்டிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

''அப்பா, எனக்கும் ஏதாச்சும் சொல்லித்தா!' என்றாள். அட்டைகளில் மேஜிக் சொல்லித் தந்தார் அப்பா. கொஞ்ச நேரம்தான், எல்லா அட்டைகளையும் மனப்பாடமாக ஒப்பித்தாள் தேவி. அப்போது அவள் வயது 3.

'இனி சர்க்கஸ் வேண்டாம்’ என முடிவு செய்த அப்பா, மகளைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவளின் அதிவேகக் கணக்குப் போடும் ஆற்றலைக் காட்டினார். ''சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு செக் பண்ணிடலாம்'' எனப் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தன.

வீட்டின் வறுமையைப் போக்க, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்து, பின் அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு. இப்போது தேவிக்கு வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா?

916748676920039158098660927585380162483106680144308622407126516427934657040867096593279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள்.

கணினி 13,000 கட்டளைகளுக்குப் பிறகு, ஒரு நிமிடத்தில் பதிலைச் சொல்லத் தயாரானபோது, 546372891 என 10 நொடிகள் முன்னமே தேவி சொல்லி விட்டார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் நீண்ட கரவொலி எழுப்பினர்.

லண்டன் மாநகரில் 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொன்னார்கள். 28 நொடிகளில் விடையைச் சொல்லி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். அவர்தான் சகுந்தலா தேவி.

தான் பள்ளிக்கல்வி பெறாவிட்டாலும் சுட்டிகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் பல நூல்களை எழுதினார். ''கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், விளையாட்டு என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித் தர வேண்டும். கணிதத்தைக் கதை போலச் சொல்லித் தர வேண்டும்'' என்றார் சகுந்தலா தேவி. இன்று (05/11/18) அவரது பிறந்தநாள்..!

உலகின் அதிவேக மனிதக் கணினியை அன்போடு நினைவுகூர்வோம்.🙏🏼
-------------------------------------------------------------------------
படித்து வியந்தது!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.8.18

நீங்களும் உங்கள் பொது அறிவும்!!

நீங்களும் உங்கள் பொது அறிவும்!!

உங்கள் பொது அறிவை மேன்மைப் படுத்துவதற்காக பல செய்திகளைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பதிய வைத்துக்கொள்ளுங்கள்
-----------------------------------------------
*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?* சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?* ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?* பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?* சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?* தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?* ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?* சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?* கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?* அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?* பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?* ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?* சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?* இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?* இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்

  நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
*1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?*
7வது இடம்
*2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?*
23 வது இடம்
*3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*
16வது இடம்
*4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*
15வது இடம்
*5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?* 14வது இடம்
*6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?*
மதுரை
*7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?*
2004
*8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?*
72993
*9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?*
சென்னை
*10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?*
1076 கி.மீ
*11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது?*
1986
*12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?*
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
*13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?*
சென்னை (23,23,454)
*14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*
சென்னை (46,81,087)
*15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*
68.45 ஆண்டுகள்
*16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?*
13 மாவட்டங்கள்
*17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*
234
*18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?*
1
*19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?*
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
*20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?*
சென்னை
*21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*
71.54 ஆண்டுகள்
*22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?*
15979
*23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?*
561
*24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*
146
*25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*
18
*26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*
39
*27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?*
தர்மபுரி (64.71 சதவீதம்)
*28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*
பெரம்பலூர் 5,64,511
*29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?*
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
*30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?*
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
*31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?*
தர்மபுரி
*32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?*
32
*33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?*
அரியலூர்
*34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?*
திருப்பூர்
*35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?*
80.33 சதவீதம்
*36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?*
17.58 சதவீதம்
*37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?*
வரையாடு
*38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?*
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
*39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?*
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
*40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?*
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
*41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?*
999பெண்கள்(1000 ஆண்கள்)
*42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?*
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
*43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?*
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
*44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?*
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
*45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?*
www.tn.gov.in
*46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?*
சென்னை
*47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?*
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
*48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?*
திருவில்லிபுத்தூர் கோபுரம்
*49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?*
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
*50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?*
நீராடும் கடலுடுத்த
*51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?*
பரத நாட்டியம்
*52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?*
மரகதப்புறா
*53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?*
பனைமரம்
*54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?*
செங்காந்தள் மலர்
*55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?*
கபடி
*56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?*
1,30,058 ச.கி.மீ
*57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?*
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087

கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்து கொல்லாம்
படித்துப் பகிர்ந்துள்ளேன்!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.6.18

இன்ஜினீயரிங் படிப்பின் இன்றைய நிலைமை!!!!

இன்ஜினீயரிங் படிப்பின் இன்றைய நிலைமை!!!!

இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு  என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ... நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும்  பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில்... எங்கெங்கு காணினும்  பொறியாளர்கள். ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக்  கிடைத்துவிட்டதா? 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்... கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா? இது விடை தெரியாத கேள்வி அல்ல.

பல  லட்சங்கள் செலவழித்து இன்ஜினீயரிங் படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்களை நமக்குத் தெரியும். ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல, அவர்களின் முகங்களில் எதிர்காலம் குறித்த  அச்சம் உறைந்திருக்கிறது. எப்படியாவது, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடத் துடிக்கிறார்கள்.  யதார்த்தம், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதா?

பொறியியல் மோகம்!

தமிழ்நாட்டில்  மட்டும் 498 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2,36,417 பேர் படித்து வெளியில் வருகின்றனர். மொத்த இந்தியாவையும் கணக்கிட்டால், நாடு முழுவதும் உள்ள  4,469 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 16,03,012 பேர் படித்து வெளியில்  வருகின்றனர். இது, 2011-12ம் ஆண்டின் கணக்கு. இதற்கு முந்தைய ஆண்டுகளில், இந்த  எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருக்கலாம். எப்படி இருப்பினும், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும்  மேற்பட்ட புதிய பொறியாளர்கள் உருவாகிக்கொண்டே வருகின்றனர்.

இது தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களில், ஒரு தகவல் நம்மை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா மற்றும் 
சீனாவில் எவ்வளவு பொறியாளர்கள் உருவாகிறார்களோ... அதைவிட அதிகமான எண்ணிக்கையில்  இந்தியாவில் பொறியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர். பொருளாதாரரீதியாக நம்மைவிட வலுவாக  உள்ள நாடு மற்றும் பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் நம்மைவிட பெரிய நாடு... இந்த இரண்டுக்கும்  தேவைப்படுவதைவிட, நம் நாட்டுக்கு அதிக பொறியாளர்கள் தேவைப் படுகின்றனரா?

''உண்மையில்  இப்படிப்பட்ட எந்தக் கணக்கும் இந்திய அரசிடம் இல்லை. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பொறியாளர்கள் தேவை எனக் கணக்கிட்டு அதற்கேற்ப கல்லூரிகளில்  கல்வியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதைவிட அதிகமான இடங்களுக்கு அனுமதி தரக்கூடாது. ஆனால், இந்திய அரசிடமே அப்படி ஒரு கணக்கீடு இல்லை என்பதால், விருப்பம் போல கல்லூரிகளுக்கும் கல்வியிடங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. விளைவு, பொறியியல்  கல்லூரிகள் மழைக்கால ஈசல்களைப் போல பெருகியிருக்கின்றன'' என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும், சேவ்-தமிழ்ஸ் அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன்.

எனவேதான் ஜனவரி - 2011  நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2013-ல் 
1.8 கோடியாக அதிகரித்துள்ளது.

பெற்றோர்களின் சுமை!

வேலை கிடைக்கவில்லை என்பது  மாணவர்களைவிட பெற்றோர்களுக்கே அதிக மன உளைச்சலைத் தருகிறது. ஏனெனில், அவர்கள்தான்  சொத்துகளை விற்று, நகைகளை விற்று, சொந்த-பந்தங்களிடம் கடன் வாங்கி பிள்ளைகளைப் படிக்க  வைக்கின்றனர். படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைக்கும்; சம்பளம் கிடைக்கும்..அதைக்கொண்டு கடனை அடைத்துவிடலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. அது பொய்க்கும்போது  யதார்தத்தை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். கடன் மேல் கடன் வாங்கி ஓட்டாண்டியான  குடும்பங்கள் எத்தனையோ. 'தொழிற்கல்வி’ என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள் கல்வியைத்  தொழிலாக நடத்த, தொழில் நடத்திய பல பெற்றோர்கள் சொத்துகளை இழந்து கடனாளிகளாக  நிற்கின்றனர்.

இன்னொரு பக்கம் கல்விக் கடன். லட்சக்கணக்கான இளைஞர்கள், கல்லூரியைவிட்டு பொறியாளர்களாக மட்டும் வெளியேறவில்லை... கடன்காரர்களாகவும் வருகின்றனர். ஆனால், மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரமோ கல்விக் கடனை ஒரு புரட்சிகரத் திட்டம் போலவே அறிவித்து வருகிறார். சொந்தக் குடிமக்களுக்குத் தரமான கல்வியை இலவசமாகத் தர வழியற்ற அரசு, லட்சக்கணக்கான நடுத்தரவர்க்கக் குடும்பங்களை கடனாளிகளாக மாற்றியிருப்பது எப்படி புரட்சிகரத் திட்டமாகும்? நாடு முழுவதும் புற்றீசல் போல திறக்கப்பட்டுள்ள தனியார் கல்வி முதலாளிகளின் கொள்ளை லாபத்தை  உத்தரவாதப்படுத்தவே, இந்தக் கல்விக் கடன்கள் உதவுகின்றன. அந்தப் பக்கம் கடன் தந்துவிட்டு, இந்தப் பக்கம் அதைக் கல்வி வியாபாரிகளின் கல்லாவில் வாங்கிப் போடுகிறார்கள். ஆனால், மாணவர்களோ... படிப்பு முடிந்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து வட்டியுடன் கடனைத் திருப்பிச்  செலுத்தியாக வேண்டும்.

''நான் திருப்பூர் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் பெற்றுதான் படித்தேன். ஒருமுறை நான் வங்கி சென்றிருந்தபோது ஒரு மாணவன், இரண்டாவது தவணை கல்விக் கடனைப் பெறுவதற்காகப் பெற்றோருடன் வங்கிக்கு வந்திருந்தான். அவனது தேர்வு  மதிப்பெண் அட்டையை வாங்கிப் பார்த்த வங்கி மேலாளர், மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், 
அவனைக் கடுமையாகத் திட்டியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால், ஆசிரியர் திட்டுவார், பெற்றோர் திட்டுவார்கள். ஆனால், ஒரு வங்கி மேலாளர் திட்டியதைக் கண்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது'' என்கிறார் தற்போது சென்னையில் பணிபுரியும்  பாரதிதாசன்.

ஒரு பக்கம் குடும்பக் கடன், கல்விக் கடன், வேலை கிடைக்காத சூழல், குடும்பத்தின்  நெருக்கடி... என்று படித்த இளைஞர்களின் மனம், பெரும் பாரத்தைச் சுமக்கிறது. இன்னொரு பக்கம், இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை ஒவ்வோர் ஆண்டும் பலவீனமாகி வருகிறது.

குறையும்  வேலைவாய்ப்பு!

இந்தியாவின் வேலைவாய்ப்பு சதவிகிதம் 2004-2005ம் ஆண்டில் 42 சதவிகிதமாக  இருந்தது. இது 2009-10ம் ஆண்டில் 36.5 சதவிகிதமாகவும், 2011-12ம் ஆண்டில் 35.4 சதவிகிதமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது. மாறாக, ஒவ்வோர் ஆண்டும் இந்தியப் பொறியாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது, தேவையைவிட அதிக உற்பத்தி. தேவைப்படாதபோது ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் பொருள் வீணாவது மட்டுமல்ல... அதை உருவாக்கச் செலவிடப்பட்ட பணம், நேரம், மனிதவளம் அனைத்தும் வீணாகின்றன. இது 
எளியோர்களுக்கான கணக்கு. முதலாளிகளின் உலகத்தில், இந்த மிகை உற்பத்தியும் தந்திரமாக லாபமாக்கப்படுகிறது.

நாட்டின் தொழில் துறை வளர்ச்சி விகிதத்துக்கு எவ்வளவு பொறியாளர்கள் தேவையோ... அதற்கேற்ற எண்ணிக்கையில் கல்லூரிகளும் கல்வியிடங்களும் இருக்க வேண்டும். மாறாக, நம் ஊரில் பொறியியல் கல்லூரிகள் ஏராளமாகப் பெருகிவிட்டன. 'பொறியியல் படிப்பதுதான் கௌரவம். அதுதான் எதிர்காலம்’ என்ற ஆசை உருவாக்கப்பட்டு, மாணவர்கள் அதில் சேர்க்கப்  படுகின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு இந்தியத் தொழில் துறையில் வளர்ச்சி இல்லை. இதனால் இந்தியப் பொறியாளர்கள், மிகவும் சவாலான வேலைவாய்ப்புச் சந்தையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான 'நாஸ்காம்’ வெளியிட்ட தகவலின்படி, 2013-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற, சுமார் 10 லட்சம் பொறியாளர்கள் போட்டியிட்டனர். இப்படிக் குறைந்த எண்ணிக்கையிலான 
வேலைகளுக்கு அதிக எண்ணிக்கையிலானோர் போட்டியிடும்போது, இயல்பாகவே ஊதியம்  குறைக்கப்படுகிறது!

மிகை உற்பத்தி... மிகை லாபம்!

''இதில் நுணுக்கமாக ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கட்டி, அதில் 
லட்சக்கணக்கான மாணவர்களைப் படிக்க வைத்து, நம் குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பை உறிஞ்சுகின்றனர். அந்தக் கல்லூரிகளின் மூலம் தேவைக்கு அதிகமான பொறியாளர்களை உற்பத்தி செய்து, அவர்களை குறைந்த கூலியில் வேலைக்கு எடுத்து, நம் இளைஞர்களின் உழைப்பை  உறிஞ்சுகின்றனர். அதிலும் லாபம்; இதிலும் லாபம்'' என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும் செந்தில்.

எனினும், இந்த வேலைகூட கிடைப்பது இல்லை என்பதுதான் இன்றுள்ள யதார்த்தச் சூழல். இதனால், பொறியியல் படித்த லட்சக் கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பி.பி.ஓ., டெஸ்ட்டிங் என்று ஐ.டி. துறையில் வந்து சரணடைகிறார்கள். இந்த வேலைகளும் உறுதியானவையோ, நிரந்தரமானவையோ அல்ல. இவை அனைத்தும் இந்தியாவின் குறைந்த சம்பளத்தைக் 
கணக்கில்கொண்டு அவுட்சோர்ஸ் செய்யப்படுபவையே. இதைவிட குறைவான சம்பளத்துக்கு வேறொரு நாட்டில் பணியாளர்கள் கிடைக்கும்போது, அவுட்சோர்ஸ் வேலைகள் அங்கு பறந்துவிடுகின்றன.

2014-ம் ஆண்டு பிப்ரவரியில் புகழ்பெற்ற கணினி நிறுவனமான ஐ.பி.எம்., குறைந்துவிட்ட தனது லாப விகிதத்தைச் சமப்படுத்த, உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் இருந்து 13,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்த நிறுவனத்தின் பெங்களூரூ கிளையில் ஒரே  நாளில் 50 பேர் திடீரென்று நீக்கப்பட்டனர்!

கை கொடுக்காத கேம்பஸ்!

புறச்சூழல் இத்தகைய  நெருக்கடிகளுடன் இருப்பது, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் தெரிகிறது. 
இதனால் எப்படியாவது 'கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும் வளாக நேர்முகத் தேர்விலேயே ஒரு வேலையைப் பெற்றுவிட வேண்டும் என்று அவர்கள் துடியாகத் துடிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வளாக நேர்முகத் தேர்வு நடத்தவரும் நிறுவனங் களின் எண்ணிக்கையும், அவர்கள்  தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டன. காரணம், உலகளாவியப் பொருளாதார நெருக்கடி. ஏற்கெனவே கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே அவர்களால் வேலை தர முடியவில்லை. புகழ் பெற்ற மும்பை ஐ.ஐ.டி-யில் 2012-13வது கல்வி ஆண்டில் 1,501 மாணவர்கள் கேம்பஸில் தேர்வானார்கள். ஆனால், அவர்களில் 1,005 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதே கல்லூரியில், கடந்த ஆண்டு 1,389 பேர் கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டு, 1,060 பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டது.

வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்காவிட்டால், அது மன அழுத்தமாக மாறி சில நேரம் தற்கொலையில்கூட முடிகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த ஷாகில் முகமது என்கிற மாணவர், வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்கவில்லை என்று கடந்த ஆண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

எனில், பொறியியல் படிப்பது வீண் செயலா? பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா? இப்படி ஒரு முடிவுக்கு வருவது இல்லை இந்தக் கட்டுரையின் நோக்கம், ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டில் சுமார் இரண்டு லட்சம் பேர் பொறியியல் படிப்புப் படித்து வெளியில் வருகின்றனர் என்றால், அதில் குறிப்பிடத்தகுந்த பேருக்கு வேலை கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அடியோடு அது வீண் என்று சொல்வதற்கு இல்லை. அதே நேரம் 'பொறியியல் படிக்கும் அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை உறுதி’ என்ற நிலை இன்று இல்லை. இந்த நிலையில் கல்வியாளர்களின் பரிந்துரைதான்  என்ன? அது எப்போதும் சொல்வதுதான். பிள்ளைகளின் ஆர்வம் எதில் இருக்கிறதோ, அந்தப் படிப்பில் சேர்த்துவிடுங்கள். 'இதற்குத்தான் எதிர்காலம் இருக்கிறது’ என்று ஊதிப் பெருக்கப்பட்ட மாயைக்கு  இரையாகாதீர்கள்!

அனிஷ்குமார், மெக்கானிக்கல் இன்ஜினீயர்: ''என்னோட 1.20 லட்ச ரூபாய் கல்விக் கடன், இப்போ 1.40 லட்சமா இருக்கு. வேலைத் தேடிப்போற இடத்துல எல்லாம், 'டிப்ளமோ படிச்சிருந்தா வேலை தர்றோம். இன்ஜினீயரிங்னா வேண்டாம்’ங்கிறாங்க. ஏன்னா, டிப்ளமோவா  இருந்தா அதிக வேலை வாங்கிட்டு கம்மி சம்பளம் தரலாம். இன்ஜினீயரிங்னா அது முடியாதே... 10 லட்சம் செலவு செஞ்சு இன்ஜினீயரிங் படிச்சதுக்கு 10 ஆயிரம் சம்பளத்துல வேலை கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு!''

திராவிடத் தம்பி, கம்ப்யூட்டர் சயின்ஸ்: ''படிப்பு முடிச்சு அஞ்சு வருஷமா பி.பி.ஓ. வேலைதான் பார்க்கிறேன். இப்போ ஐ.டி. வேலைக்கு இன்டர்வியூ போனா, 'உங்களுக்கு டச்  விட்டுப்போச்சு. வேற ஃபீல்டுக்குப் போயிட்டீங்க... வேண்டாம்’ங்கிறாங்க. இந்த வேலையைப் பார்க்கிறதுக்கு எதுக்கு லட்சம், லட்சமா செலவழிச்சு நாலு வருஷம் படிக்கணும்?''

ரிஸ்வான், பி.டெக். ஐ.டி.: ''2007-ல் படிப்பு முடிச்சேன். ஏழு வருஷம் ஆச்சு. மூணு வருஷம் வாத்தியார் வேலை பார்த்தேன். 
டேட்டா என்ட்ரி, டீச்சிங் எதுக்குப் போனாலும் 7,000, 8,000 தான் சம்பளம் தர்றாங்க. யாரும் வேலை தர்றது இல்லை. ஆனா, எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்கிறாங்க. வேலையே கொடுக்காம எக்ஸ்பீரியன்ஸுக்கு எங்கே போறது?''

மீண்டும் வங்கிப்பணி மோகம்!

இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகளின் உருவாக்கம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சுமார் 250 முன்னணி நிறுவனங்களில் 'எக்கனாமிக் டைம்ஸ்’ ஒரு சர்வே நடத்தியது. அதன்படி 2011-வது நிதியாண்டில் 2.02 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இது, 2012-ல் 1.91 லட்சமாகவும், 2013-ல் 1.23 லட்சமாகவும்  வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, 2011-ம் நிதியாண்டில்  6.4 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பு வளர்ச்சி, 2012-ல் 5.7 சதவிகிதமாகவும், 2013-ல் 3.5 சதவிகிதமாகவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால், 20 வயதில் இருந்து 30 வயது வரையிலான பொறியியல் பட்டத்தாரிகளில் 74 சதவிகிதம் பேர் வங்கி தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்ட  ஆரம்பித்துவிட்டார்களாம். வருங்காலத்தில் வங்கி தொடர்பான வேலைவாய்ப்புகள் லட்சக்கணக்கில்  அதிகரிக்க இருக்கும் நிலையில், பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகள் வங்கித் தேர்வுகளுக்குத்  தயாராகி வருவதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!

'கெம்பா’ கார்த்திகேயன், மனிதவள நிபுணர்:

''தற்போதைய நிலையில், வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உண்மைதான். அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தில்  பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருவதும் உண்மை. அதனால் பொறியியல் படிப்பு குறித்து  அடியோடு அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. பொறியியல் கல்லூரிகள் அதிகமாக இருப்பதோ, தேவையைவிட அதிக பொறியாளர்கள் உருவாக்கப்படுவதோ ஒரு பிரச்னை இல்லை. உருவாகிவரும் 
பொறியாளர்களின் பெரும்பகுதியினர் திறனற்றவர்களாக இருப்பதுதான் பிரச்னை. இதற்கு, தனிநபர்களைக் குற்றம் சொல்ல முடியாது. முதலில் நாம் நமது கல்லூரிகளை, அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் கொண்டவையாக மாற்ற வேண்டும். உள் கட்டமைப்பு என்றால், வெறும் கட்டடங்கள் அல்ல; மாணவர்களின் தனித்திறனையும் ஆற்றலையும் வளர்க்கும் கல்விமுறை, 
திறமையான ஆசிரியர்கள்... என்பதில் இருந்து அதைத் தொடங்க வேண்டும். இது, உடனடி பலன் அளிக்காது; எனினும், நீண்டகால நோக்கில் நிச்சயம் பலன் அளிக்கும்!'
------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.5.18

ஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்?


ஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்?

நான் உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள்? இன்டெர்வியூவில் பகீர் கேள்வி!

ஐஎஎஸ் நேர்முக தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும்  அதற்கான பதில்களும் தான்.... இவை , 'திங் அவுட் ஆப் பாக்ஸ்' வகையை
சேர்ந்தவை...

ஐஏஎஸ்  தேர்வில் வெற்றி பெற சிறப்பாக படித்தால் மட்டும் போதாது. சில சாதுரியமான விஷயங்களும்  தெரிந்திருக்க வேண்டும்.

சரியாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் அது தவறாகப்  போக வாய்ப்புள்ளது.

ஐஏஎஸ் என்பது கடக்கமுடியா தீவில்லை ஆனால் அதனை சரியாக முறையில் கணக்கிட்டு கடந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

கடந்த கால ஐஎஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட சுவரஸ்யமான கேள்விகள் சில...

கேள்வி 1: நான் உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடிவிட்டால்  என்ன செய்வீர்கள்?

பதில்: என் தங்கைக்கு உங்களை விட சிறந்த வாழ்க்கை துணை வேறு யாராக இருக்க முடியும்.

கேள்வி 2: ஒரு முட்டை மேலிருந்து கான்கிரிட் தரையில் போடப்படுகிறது ஆனால்  உடையவில்லை ஏன்?

பதில்: ஏன்னா கான்கிரிட் தரை முட்டையை விட பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி 3: பாதி ஆப்பிள் போல் இருப்பது?

பதில்: இன்னொரு பாதி ....

கேள்வி  4: 5+5+5=550? ஒரே ஒரு நேர்கோடு மட்டும் போட்டுக்கொள்ளலாம் ஆனால் விடை 550 வர
வேண்டும்.

பதில்: 5 ஆம் எண்ணின் பக்கத்தில் உள்ள + குறியீட்டில் சாய்வாக ஒரு கோடு போடப்படுகிறது. இதன் பின் +சிம்பிள் 4ஆக
மாற்றப்படுகிறது. விடை 545+5=550?

கேள்வி 5: ராமன்  தன்னுடைய முதல் தீபாவளியை எங்கு கொண்டாடினார்?

பதில்: இந்த கேள்வி நாம் ஏற்கனவே  பிரியமான தோழி படத்தில் பார்த்துவிட்டோம் என நினைக்கிறீர்களா அந்த கேள்விகள்
யூபிஎஸ்சியில்  கேட்கப்பட்டதுதான்.
நரகாசுரனை கொன்றதால் தீபாவளி கொண்டாடுகின்றோம் இல்லையா?
நரகாசுரனை கொன்றது யார்? கிருஷ்ணன். ஆக கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பு ராம அவதாரம்
எடுக்கப்பட்டது. எனவே ராமரருடைய காலத்தில் தீபாவளி இல்லை. சிம்பிள்.

கேள்வி 6 : செவன் ஈவன்  நெம்பர் சொல்லுங்கன்னு கேட்ட கேள்விக்கு

பதில்: சிம்பிள் சார் செவன்ல இருந்து 'எஸ்' ரிமூவ் பண்ணா  ஈவன் நம்பர் கிடைத்து விடும்.

கேள்வி7: தொடர்ந்து வரும் மூன்று நாட்களை அவற்றின் பெயர்களின்றி எவ்வாறு சுட்டிக்காட்டுவீர்கள்?

மூன்று நாட்கள் தொடர்ந்து வரிசைப்படுத்த வேண்டும். ஆனால்  புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரக்கூடாது?

பதில்: நேற்று, இன்று, நாளை

கேள்வி  8: 1918 ஆம் ஆண்டில் முடிவு என்ன?

பதில்: 1918 ஆம் ஆண்டின் முடிவு 1919 ஆண்டு தொடக்கம்.

கேள்வி 9: ஒரு மனிதன் 8 நாட்கள் தூங்காமல் வேலை செய்ய முடியுமா?

பதில்: முடியும் இரவில் தூங்கிக் கொள்ளலாம்.

கேள்வி10: உங்களை நோக்கி ஒருவர் துப்பாக்கி காட்டுகிறார் என்ன செய்வீர்கள்?

பதில்:  அந்த துப்பாக்கியை பார்பேன் புடிச்சிருந்தா வாங்குவேன். புடிக்கலைன்னா சாரி சொல்லி நான் வாங்க  விருப்பலைன்னு சொல்லிருவேன்.
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.4.18

பறவைகளுக்கு வானத்தில் சரியான திசையைக் காட்டுவது யார்?


பறவைகளுக்கு வானத்தில் சரியான திசையைக் காட்டுவது யார்?

நமது ஊரில் இருக்கும்  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும். வருடத்தின் குறிப்பிட்ட சில மாதங்களில் வேடந்தாங்கலைத் தேடி பறவைகள் படையெடுத்து வரும். அவை உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இங்கே வருபவை. வடஅமெரிக்க கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் கனடா முதல் சைபீரியா வரை உலகின் பல இடங்களில் இருந்தும் பல்வேறு வகை பறவைகள் அங்கு வருகின்றன. இதில் பெரும்பாலானவை இனப்பெருக்கத்திற்காக வருபவை, சிலவை வேறு எங்கோ செல்லும் வழியில் இங்கே சில காலம் தங்கிச் செல்பவை. எது எப்படியாக இருந்தாலும் ஏதோ ஒரு இடத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வேறு இடத்திற்கு வழி தவறாமல் வந்து சேர்கின்றன. இப்படிப் பல வருடங்களாக இந்த விஷயம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது, அதில் வேடந்தாங்கல் என்பது சிறிய உதாரணம்தான் உலகம் முழுவதிலுமே பல இடங்களில் பறவைகளின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது.

வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கும் போது அவை இலக்கின்றி பறந்து திரிவதைப் போல தோன்றினாலும் உண்மையில் அவை அப்படிப் பறப்பதில்லை. அவைகளுக்குத் தெரிந்த வழியில்தான் பறந்து செல்கின்றன. எந்த ஒரு பறவையாக இருந்தாலும் காலையில் இரை தேடிச் செல்லும் பின்பு மாலையில் சரியாக தனது இடத்தை அடைந்து விடும். பழக்கப்பட்ட இடங்களில் இருப்பதுதான் இப்படிச் சரியான பாதையைக் கண்டுபிடிக்கின்றன என்பதில்லை. எடுத்துகாட்டாகப் புறாப் பந்தயத்தில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் சென்று பறக்க விடப்படும் புறாக்கள் சில நாட்களில் வளர்க்கப்படும் இடங்களுக்கு வந்து சேர்ந்து விடும்.வானில் பறக்கும்போது திசையைச் சரியாக அறிந்துகொண்டால் மட்டுமே ஒரு பறவையால் சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் இந்த விஷயத்தில் பல வருடங்களாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பெரிய குழப்பம் உண்டு. 'பறவைகள் எப்படிச் சரியான வழியைக் கண்டுபிடிக்கின்றன'? அது மட்டுமின்றி  பூமியின் திசையை எப்படி அறிந்து கொள்கின்றன என்பது போன்ற விஷயங்கள் பல வருடங்களாகவே மர்மமாக இருந்து வந்தது.

பூமியைச் சுற்றி காந்தப்புலம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பூமியின் இந்த காந்தப்புலன் பல வகைகளில் உதவிகரமாக இருக்கிறது. பல வருடங்களாகவே காம்பஸ் எனப்படும் திசைகாட்டியின்  உதவியுடன் மனிதர்கள் திசைகளை அறிந்து வந்திருக்கிறார்கள். பறவைகளும் கூட திசைகளை அறிவதற்குப் பூமியின் காந்தப்புலத்தை பயன்படுத்தக்கூடுமோ என்ற சந்தேகம் பல வருடங்களாக இருந்துவந்தது. எனவே அதைச் சார்ந்து  அவற்றின் மூளைக்குள் திசைகாட்டி இருக்கிறது, அதன் இறக்கைகளில் இருக்கும் இரும்புதான் திசையைக் கண்டறிய உதவுகிறது என்பது போன்ற கருத்துக்கள் பல வருடங்களாகவே கூறப்பட்டு வந்தன. இறுதியாகப் பறவைகள் எப்படி திசையை சரியாகக் கண்டறிகின்றன என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் ஜீப்ரா பின்ச் ( zebra finche) மற்றும் யூரோப்பியன் ராபின் ( European robin) என்ற இரண்டு வகை பறவைகளில் நடத்திய தொடர்ச்சியான  ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்  Cry4 என்ற புரதம்தான் அவைகளுக்குத் திசையை கண்டறிவதற்கு உதவியாக இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.  கண்களின் ரெட்டினா பகுதியில் இருக்கும் இந்த  Cry4  புரதம் கிரிப்டோகுரோம் என்ற வகையைச் சேர்ந்தது, இது தாவர வகைகள் மற்றும் விலங்குகளில் காணப்படும் வழக்கமான புரதமாக இருக்கிறது. இந்தப் புரதம் ஒளி உணர் தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்தப் புரதம் கண்களில் இருப்பதால் பறவைகளும் பார்வையின் மூலமாகவே பூமியின் காந்தப்புலத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. இந்தப் புரதம் சிரிகார்டியன் ரிதத்திலும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. பறவைகள் இடம்பெயரும் காலகட்டத்தில் இந்தப் புரதம் பறவைகளுக்கு அதிகமாகச் சுரப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

படித்ததில் வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.7.17

சி.ஏ.படித்தவர்களுக்கான வாய்ப்புக்கள்!!!!



சி.ஏ.படித்தவர்களுக்கான வாய்ப்புக்கள்!!!!

சி ஏ படிப்பு

தமிழ்நாட்டில் 1940 முதல் 1960 வரை வழக்கறிஞர்களுக்கு பெருமதிப்பு இருந்தது. சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் அவர்கள் இருந்தார்கள். 60ல் இருந்து 80கள் வரை மருத்துவர்களுக்கு சமூகத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இப்போதும் அவர்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அப்போதுபோல் இருக்கிறது எனச் சொல்லமுடியாது. இப்போது, எம்.எஸ்.ஸா, எம்.சி.ஹெச்சா என்றெல்லாம் துணைக் கேள்வி கேட்கிறார்கள். அதன்பின்னர் பொறியியல், அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு காலம் வந்தது. இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. அதேசமயம், சராசரி வரவேற்புடனும் இருந்திருக்கிறது. ஆனால், இன்றுவரை ஒரு துறை மட்டும் வருடத்துக்கு வருடம் பெரிய அந்தஸ்த்தோடு வளர்ந்து வருகிறதென்றால் அது C.A. முடித்த ஆடிட்டர்கள் இயங்கும் தணிக்கைத் துறைதான். அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வேலையில்லாத வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் உண்டு. ஏன், போணியாகாத மருத்துவர்கள்கூட உண்டு. ஆனால், வேலையில்லாத ஆடிட்டரைப் பார்ப்பது அரிது. 100 சதவிகிதத்துக்கும் மேல் வேலை வாய்ப்புள்ள துறை.

பை நிறையச் சம்பளம். இருந்தும் போதுமான அளவு ஆடிட்டர்கள் தமிழகத்தில் இல்லை.

இதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதலாவது கடினமான தேர்வு முறை.

இரண்டாவது இத்துறைபற்றி பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.

விழிப்புணர்வு இருக்கும் பெற்றோர்களிடமும், மாணவனிடமும் இந்தப் படிப்பை முடிக்க முடியுமா எனும் சந்தேகம், முடிக்காமல் விட்டுவிட்டால் வாழ்க்கை வீணாகிவிடுமே! என்ற பயம்.

அடுத்ததாக, சி.ஏ. முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால்
ஏற்படும் பொருளாதார நிர்ப்பந்தம்.

முதலில் சி.ஏ. தேர்வுபற்றி பார்ப்போம்.

சி.ஏ. சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ்
ஆப் இந்தியா (ICAI) எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் பவுண்டேசன் கோர்ஸ், அடுத்ததாக சி.ஏ. இண்டர் எனப்படும் தேர்வுகள், அது முடிந்ததும் மூன்று ஆண்டுகள் ஆடிட்டர் ஒருவரிடம் கட்டாயப் பயிற்சி எடுக்க வேண்டும். அதன்பின்னர், சி.ஏ. பைனல் எனப்படும் தேர்வுகள். இதைக் கடந்தபின்னர் ஆடிட்டர் என்று அழைக்கப்படுவார்கள்.

இந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம். இளங்கலைப் பட்டம் வாங்கியவர்களுக்கு இது தேவையில்லை. பி.காம்.தான் என்றில்லை. எந்த டிகிரியாக இருந்தாலும் சி.ஏ. படிக்க பதிவு செய்துகொள்ளலாம். பி.காம். படித்தவர்களுக்கு இந்தத் தேர்வுகள் ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். சி.ஏ. இண்டரில் முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 3 பேப்பர்களும் இருக்கும். இதில், எந்த ஒரு பேப்பரில் பாஸ் செய்யாவிட்டாலும் மீண்டும் அந்த குரூப்பில் எல்லா பேப்பர்களையும் திரும்ப எழுதவேண்டும். ஒரு குரூப்பில் எல்லாவற்றிலும் பாஸ் செய்தாலும் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட சதவிகித மார்க்கையும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திரும்பவும் எல்லா பேப்பர்களையும் எழுத வேண்டும். சி.ஏ. பைனலிலும் அப்படித்தான். அதில், முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 4 பேப்பர்களும் இருக்கும். இந்த பைனல் தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும். தேர்வு அட்டவணையும்கூட இடையில் விடுமுறையின்றி தொடர்ந்து இருக்கும்.

பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளில் ரெகுலர் வகுப்புகள் இருக்கும். எனவே, தினமும் படிக்கும் வாய்ப்பு, காதில் பாடத்தைக் கேட்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், சி.ஏ.வில் நாம் போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்வதுபோல தன்னிச்சையாகப் படிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டங்களும் ஒவ்வொரு ஆண்டு பார்லிமெண்ட் பட்ஜெட் தாக்கல் ஆனவுடன் அதற்கேற்ப மாறும். மேலும், இடையிலும்கூட பார்லிமெண்ட்டில் நிறைவேறும் சட்டங்களைப் பொறுத்து மாறும். பயிற்சி செய்யும் ஆடிட்டர்கள்தான் அத்தனை புத்தகங்களையும் வாங்கி அடுக்க முடியும்.

இரண்டாவதாக, பெற்றோர்களின் போதிய விழிப்பின்மை. மற்ற தொழில்நுட்பப் படிப்புகள் குறித்து அடிக்கடி செய்தித்தாள்களில், பத்திரிகைகளில் செய்திகள் வரும். இன்று விண்ணப்பம் வழங்கப்படுகிறது, இன்று தேர்வு என்று. ஆனால் இந்தப் படிப்புபற்றி எந்தப் பத்திரிகையிலும் செய்தி வராது. இதைப்போலவே, மத்திய அரசு நடத்தும் AIIMS போன்ற தேர்வு சென்டர்கள் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில்தான் இருக்கும். எனவே, மற்ற பள்ளி மாணவர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வே இருக்காது.

மேலும், இந்தப் படிப்பைப்பற்றி பெற்றோர்கள் யாரிடம் விசாரித்தாலும் மிக எதிர்மறையாகவே பதில்வரும். ‘இத
முடிக்கிறது கஷ்டம்ங்க’ என்பார்கள். எனவே, பெற்றோர்கள்
மிகவும் தயங்குவார்கள். மேலும், சி.ஏ. படிப்புக்கு பதிவு செய்தவர்களில் வெற்றி சதவிகிதம் 0.1க்கும் குறைவு என்பதும் பெற்றோர்களை யோசிக்கவைக்கும். அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு, வெறும் கையோடு வந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு.

அடுத்ததாக, டிகிரி முடித்தவர்கள் இந்தப் படிப்பை முடிக்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும். ஆடிட்டரிடம் பயிற்சிபெறும் (ஆர்டிகிள்ஷிப்) காலத்தில் இப்போதும்கூட 3000 ரூபாய் சம்பளம்தான் வழங்கப்படுகிறது. பொறியியல் படித்தவன் 21 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான். ஆடிட்டருக்கு 30 வயதில்தான் வருமானம். எனவே, மகனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பவர்கள் இதற்குத் தயங்குவார்கள். மேலும், குடும்பம் அவனை சப்போர்ட் செய்யாவிட்டல் தன் பொருளாதார நிலை குறித்து விரக்தியடைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனால், இதிலிருந்து விலகிக்கொண்டவர்களும் அதிகம்.

ஆனால், என் மகன்/மகள் இதை முடிக்கட்டும் என மன தைரியத்துடன் பி.காம். படிக்கவைத்து, ஆறு, ஏழு ஆண்டுகள் பொருளாதாரரீதியாக சப்போர்ட் செய்தால் தலைமுறைக்கும் எந்தக் கவலையும் இல்லாத ஒரு முன்னத்தி ஏர் கிடைக்கும். ஏனென்றால், ஒரு ஆடிட்டர் என்பவர் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுடனேயே எப்போதும் பழகுபவர். அவரின் சிபாரிசு எந்தக் கல்வி நிலையத்திலும், கம்பெனியிலும் எடுபடும். அந்த பழக்கவழக்கங்களின் மூலமாகவே அடுத்தடுத்த தலைமுறையை வளர்த்துவிடலாம்.

சி.ஏ. இண்டரில் தமிழகத்தில் நிறையப்பேர் தேர்வு பெற்றுவிடுகிறார்கள். பைனலில்தான் தேர்வாக முடியாமல் தவிக்கிறார்கள். மேலும், ஆர்டிகிள்ஷிப் காலத்தின்போது ஆடிட்டரிடம் இயைந்துபோக முடியாமையும் ஒரு காரணமாக இருக்கும். ஆடிட்டரிடம் இருப்பது பண்டைய கால குருகுலவாசம் போலத்தான். இவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக அமைவது ஐசிடபிள்யூ ஏ (ICWA) எனப்படும் காஸ்ட் அக்கவுண்டிங் கோர்ஸ்.

இதிலும் பவுண்டேசன், இண்டர், பைனல் என சி.ஏ. போலவே படிநிலைகள். ஆனால், ஆடிட்டரிடம் மூன்றாண்டுகள் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. தேர்வுகளும் சி.ஏ.வோடு ஒப்பிடுகையில் சற்று எளிதாக இருக்கும்.

சி.ஏ.வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், சி.ஏ. முடித்தவர்கள் ஒரு நிறுவனத்தின் தலை முதல் அடி வரை உள்ள செயல்பாடுகளை தணிக்கை செய்பவர்கள், அந்த நிறுவன வளர்ச்சிக்கு எப்படிச் செயல்பட வேண்டுமென யோசனை கூறுபவர்கள், வரி விதிப்பு முறைகளை ஆராய்ந்து நிறுவன வளர்ச்சிக்கு/லாபத்துக்கு ஏற்ப யோசனை சொல்பவர்கள். ஆனால், ஐசிடபிள்யூஏ முடித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பிராஜக்ட்டுக்கு எவ்வளவு செலவாகிறது? அதற்கேற்ற லாபம் இருக்கிறதா? இல்லை நஷ்டமா? என கணக்குப் பார்ப்பவர்கள். ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை எல்லாம் ஒன்று சேர்ப்பவர்கள். ஆனால், இவர்கள் கணக்கை தணிக்கை செய்ய மாட்டார்கள். இவர்களுக்கும் பெரிய அளவில் டிமாண்ட் இருக்கிறது. சம்பளமும் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே ஆறிலக்கத்தை எட்டிவிடும்.

சி.ஏ.இண்டர் பாஸ் செய்து, பைனலில் தவறியவர்கள் சற்று முயற்சித்தால் ஐசிடபிள்யூஏ பாஸ் செய்துவிடலாம். ஓரளவுக்கு ஒரேமாதிரியான பாடத்திட்டம்தான் இருக்கும். எலுமிச்சையை குறிவைத்துத் தோற்றவர்கள் தர்ப்பூசணியை எளிதில் குறி தவறாமல் அடிக்க முடியுமல்லவா?

அப்படியும் பாஸ் செய்ய முடியவில்லையென்றால், சி.ஏ. இண்டர் பாஸ் செய்தவர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (ICAI) “அக்கவுண்ட் டெக்னீசியன்” என்னும் சான்றிதழை வழங்கும். இந்தச் சான்றிதழ் பெற்றவர்கள் எந்த நிறுவனத்திலும் அக்கவுண்டண்டாகப் பணியாற்றலாம். சி.ஏ.வை கடுமையாகப் படித்து தோல்வியடைந்தவர்கள் வங்கித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெறலாம்.

பெற்றோர்கள் இருவரும் நல்லவேலையில் இருக்கிறார்கள். பொருளாதாரப் பிரச்னை இல்லை என்றால் தைரியமாக பிள்ளைகளை சி.ஏ.வுக்கு திருப்பிவிடலாம். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காது அவர்களை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருந்தால் ‘வேலை இழப்பு’ என்ற வார்த்தையே கேள்விப்பட்டிராத பெருமைமிகு தணிக்கையாளர் சமூகத்தில் உங்கள் பிள்ளையும் ஒரு அங்கமாகலாம்.

படித்ததில் பிடித்தது!!!!

அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!