மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label பொது அறிவு. Show all posts
Showing posts with label பொது அறிவு. Show all posts

13.4.21

பேச்சுத் திறமைக்கு ஒரு உதாரணம்!


பேச்சுத் திறமைக்கு ஒரு உதாரணம்!

கலைஞர் ஒரு பொது கூட்டத்தில் பேசியது:
     
"நீதி" க்கு முன்பு 'அ' போட்டால் என்ன வரும்?

மக்கள் சொன்னார்கள் " அநீதி"

" நியாயத்திற்கு " முன்னால் ' அ' போட்டால்?

மக்கள் சொன்னார்கள்" அநியாயம்".

" சுத்தம்" முன்னாடி' அ' போட்டால்?

மக்கள்; "அசுத்தம்".

மீண்டும் கலைஞர் கேட்டார் " யோக்கியன்" முன்னாடி 'அ' போட்டால்?

மக்கள்: "அயோக்கியன்".

இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு 'அ' போட்டது வேண்டுமா?

' அ' போடாதது வேண்டுமா?

மக்கள் சொன்னார்கள் 

'அ' போடாதது தான் வேண்டும்.

அப்போது கலைஞர் சொன்னார்.

சிந்தியுங்கள் மக்களே............      " திமுக"விற்கு முன்னால் 'அ' போட்டிருக்கிறார்கள்.  திமுக வா? அதிமுக வா?

இதை கேட்ட எம்.ஜி.ஆர்  ஓடிப்போய் தன் கட்சியின் பெயரை அஇஅதிமுக என்று மாற்றியது வேறு கதை.!
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.9.19

தலைமுறை இடைவேளி

தலைமுறை இடைவேளி

அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம் 
சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது ,

டேய் உனக்காவது இது கிடைத்தது , நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன  என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!

இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது  150ரூபாய் மதிப்புள்ள examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி  இதவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,,

என் மகளிடம் பொருமையாக பாரும்மா, அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத      காலண்டர் அட்டையை தான் கொண்டு போவேன்,, ink பாட்டில் வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன், , சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்;

bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;; என்று என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள்!! நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!😉😉

நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா(25பைசா) சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெரிவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால் இன்று அப்பா filter water கேன் (2குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும் (3 std படிக்கிறாள்) பார்க்கிறேன் 🤔

இதுதான் தலைமுறை இடைவேளியா?

நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாண்டுவிட்டு  தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி
( அவங்க என்ன ஆளுங்க என்று எங்களுக்கு தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்று அவங்களுக்கும் தெரியாது! !)  அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க, என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்

நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்!!

( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டர்) ;

இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்? என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!

இன்று jio SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நான் , ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறேன்( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!!

இன்று 64gb memory card ல்10 படங்களை வைத்து இருக்கும் நான் ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!

இன்று

ஒரு லிட்டர் gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி கொண்டு ஓடி இருக்கிறேன்

(கடைக்கார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடலை புண்ணாக்கை எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்)

boost is secerd of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;

இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது;

நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க 🤔🤔

இது நெட்டில் சுட்டது இல்லை!

வாழ்கையில் பட்டது!!..
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.9.19

உலகின் எட்டாவது அதிசயம்!!!!


உலகின் எட்டாவது அதிசயம்!!!!

உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும், எஞ்சினீரிங்க் மார்வெல் – காரகோரம் ஹைவே !!!!

கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால், இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்….

பாகிஸ்தானிலிருந்து – சீனாவிற்கு செல்லும், 1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே” ( Karakoram Highway )… இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில் உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி )பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.

இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும், மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது….

இந்தப்பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த பாதையை உருவாக்கும் பணியில் – நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே
– 810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.

காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது,இந்த பாதை சுமார்
15,466 அடி அதாவது 4,714 மீட்டர் உயரத்தில் செல்கிறது….

உலகத்தின் 26,000 அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில் அமைந்திருக்கும்
5 சிகரங்களை இந்தப்பாதையில் பயணிக்கும்போது பார்க்க முடியும்….இதிலிருந்து நெருங்க முடியும்… உலகத்தின் மிக
அதிசயமான, ஆபத்தான பாதையில் பயணம் …!!!

மீண்டும் ஒரு முறை பாருங்கள். அப்போது தான் அதன் அருமையை
உணர முடியும்… பலமுறை பார்த்தும்  பிரமிப்பு அடங்கவில்லை… எப்படித்தான் திட்டம் போட்டு, எப்படித்தான் கட்டினார்களோ…?
அதுவும் அவ்வளவு உயரத்தில், செங்குத்தான சிகரங்களில்….!!!

காணொளி:


மேலதிகத் தகவல்களுக்கு!!!!
https://en.wikipedia.org/wiki/Karakoram_Highway
-----------------------------------------------------------------
படித்து, வியந்து பகிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.19

இதுவும் விஷம்தான்!!!!


இதுவும் விஷம்தான்!!!!

அதிக விஷயம்... விஷம்.
-----------------------
சிந்திக்க!

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்.
வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர்
படுத்தேன்.
குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..
படுக்கவிடாமல் படுத்தாறங்களே.

காலையில் நடக்க சொன்னார்கள் நடந்தேன் நேராக நடக்க கூடாது எட்டு போட்டு தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன். போதாது போதாது அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..கேன்சர் உறுதியாக வராதாம்.!!

உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாயு என்றார்... வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...

இனிப்பை தொட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்... சரி என்று நிறுத்தினேன்.

நடக்கும் போது நண்பர் சொன்னார், low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..

இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார்..

காபி, டீ வேண்டாம்,
அரிசி கஞ்சி வேண்டாம்
பால் வேண்டாம்
ஐஸ் வாட்டர் வேண்டாம்
பாட்டில் ஜீஸ் வேண்டாம்
என்றார்கள்... சரி என்று பழகினேன்..

ஒன்று புரிந்தது.
ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து,
அதிகமாக தெரிந்தாலும் ஆபத்து என்று.

Over qualification is disqualification
என்று எங்கோ படித்த நினைவு

Too much information will make you to suffer from distinguishing between useful And useless information.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,
உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி
உடம்பையே பாத்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...

எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..

வாழ்க்கை,
வாழை இலையில் விழுந்த ரசம் போல,
எந்தப் பக்கம் ஓடுது என்றே
தெரியாமல் ஓடுகிறது.

வாழ்க்கை ரசத்தை
குடிக்க முடியலையே?

அதிக விஷயம், விஷம்.

இயல்பாக இருங்க.

வாழ்க்கை யாத்திரை
சுகமான நித்திரையோடு
மாத்திரை இல்லாத
யாத்திரையாக வாழ்த்துகள்.
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.3.19

வாருங்கள்! பொதிகைமலைக்கு போய் வருவோம்!!!!!!!


வாருங்கள்! பொதிகைமலைக்கு போய் வருவோம்!!!!!!!

பொதிகை மலை , அங்கே போறதுக்கு  அகத்திய பெருமானோட அருள் வேணும் அடுத்து அங்க போறதுக்கு சரியாய் வழிகாட்டி வேணும் , அது ஒரு அடர்ந்த காடு அப்பறம் தமிழ்நாடு வழி புலி சரணாலயமா இருக்கிறதால் கவனமாகப் போகணும். அங்க போறதுக்கு சிறந்த வழி கேரளா வழி தான் , தமிழ் நாடு வழி வனவிலங்குகள் அதிகம் , போற ஆட்கள் நிறைய பாதிக்கப்பட்டு இருக்காங்க , விஷயம் வெளியே வரவில்லை. காரணம் வன இலாகாவில் இருந்து யார் கிட்டயும் முறைப்படியான அனுமதிவாங்காமல் போனததினால் தான் .. கேரளா வழியும் சும்மா இல்லை. ஜன நடமாட்டம் இவ்ளோ இருக்குற நாட்கள்லயே யானைகள் சாதரணமா வந்துட்டு போகுது , அதுவும் சரிதான் அது இடத்துக்கு தான நாம போறோம் .

 பொதிகை மலை அகத்தியர் மலை ஒரு பயணம்...

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர். தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர்.

அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.

அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை. இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.

கயிற்றின் துணையுடன்  தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன்  மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது. முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.

அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம். குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.

 சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம். 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம். இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை’ என்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

 இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது.

 இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது,  காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம். அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும்.பனிபடர்ந்த அகத்தியர் மலை
 கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம் அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்து. இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.இம் மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகாது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர்.

இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.ஆனால் மலைப்பகுதிகளில் மெதுவாக வழிந்தோடும் சிற்றோடையில் குளிப்பது அற்புதமான அனுபவம். உடல் அதிகபட்சமாக தாங்கும் அளவிற்கான குளிர்ச்சி, சில்லிப்பு நீரில் உறைந்து ஊறி இருக்க..முழங்கால் அளவு நீரில் உடலை மூழ்கச் செய்ததும்.. சின்னச்சிறு லட்சக்கணக்கான ஊசிகள் உடலில் இருந்து வெளியேறுவது போன்ற உணர்வு தொடர்ந்து பல நிமிடங்களுக்கும் இருக்கும்!!!!!
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.9.18

காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்?


காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்?

நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி
பார்த்துக்கொள்வாள் என்பார்கள்.
நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை.
அதற்காகத்தான் இந்தப் பதிவு.
காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.
சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்...

வாழைக்காய்..
...........................
முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.
வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.
வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும்
பழுக்காமலும் இருக்கும்.

உருளைக்கிழங்கு..
.................................
செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும்
இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.
பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் உள்ள உருளைக்கிழங்குகள் நன்றாக இருப்பதில்லை. சிறுமுளை
கண்டவற்றையும், தோல் சுருங்கியவற்றையும் வாங்குதல் கூடாது.

முள்ளங்கி..
.....................
முள்ளங்கியை, சற்றுப் பருத்து நீண்டிருப்பதாகவும், நடுவில் இலைகளும் ஓரத்தில் பச்சை இலைகளும் இருப்பதாகவும் பார்த்து
வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில பொத் பொத்தென்று சத்தம் கேட்கும்.
சோளத் தட்டுப் போல் இருக்கும். அவைகளை வாங்குதல் கூடாது.
சமைக்க உதவாது. முக்கியமான ஒன்று வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ சமைத்துவிட வேண்டும்.

முருங்கைக்காய்..
..............................
முருங்கைக்காயை நல்ல கரும்பச்சை நிறத்தில் சற்றுப் பருமானாகவும் (ரொம்ப இல்லை) உருண்டையாகவும் இருந்தால் வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் வாங்கக் கூடாது.
இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டு லேசாக முறுக்கினால் சற்று வளைந்துகொடுக்க வேண்டும். அது இளசாக இருக்கும்.
கட்டைபோல் இருந்தாலோ அல்லது முறுக்கும்பொழுது மளமளவென்று சத்தம் கேட்டாலோ வாங்காதீர்கள்.
அது முற்றலாய் இருக்கும். முப்பட்டையாகவோ, சற்று மஞ்சள் கலந்த பச்சைநிறத்திலோ, விதைகள் வெளியே தெரியும்படியாகவோ, முட்டி முட்டியாகவோ இருந்தால் காய் முற்றலென்று தெரிந்துகொள்ளலாம்.
காய்களை வாங்கி வந்தவுடன் ஒரு வாளித்தண்ணீரில் பாதிக்காய்கள் முழுகும்படி போட்டு வைக்கவேண்டும்.


தக்காளி...
....................
தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் சற்று
அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.
உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும்.
பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும். காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில்
சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும்.

பீன்ஸ்...
............
பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான்
நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும்.
நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை. விதைகள்
புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும்.
இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தால் சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும்.
இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும்.

அவரைக்காய்...
............................
அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான்.
மேலும் அவரை முற்றியிருந்தாலும் மளுக்கென்று உடையாது. சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.

கத்தரிக்காய்...
..........................
கத்தரிக்காயை சிறு ஓட்டைகூட இல்லாமல் பார்த்து வாங்கினால்தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் பளபளவென்று இருத்தல் வேண்டும்.
காம்புடன் கூடிய வால்பகுதி நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல். இலைப்பகுதி
குட்டையாக இருந்தாலும் முற்றலே. ஆழ்ந்த ஊதா நிறத்தில் உள்ள காய்கள் நல்லது.
பச்சை நிற காய்களும் ஏற்றவையே. பச்சைக் காயில் மேலே வெள்ளை வரிகள் இருந்தால் கசக்கும். குழம்பே கசப்பாகிவிடும்.
காம்பிள் முள் இருந்தால் நல்லவையே. காம்பு கறுத்து சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் என்று அர்த்தம். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவும் நீரில்போட்டால் கறுப்பாகாமல் இருந்தால் நல்ல காய் என்ற அர்த்தம்.

வெண்டைக்காய்...
.................................
வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம்.
ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும்.
அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல்.
காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.

வெங்காயம்...
.........................
வெங்காயத்தில் நாட்டு வெங்காயம் சாம்பார் வெங்காயம்தான் ருசியானது. உடம்புக்கும் நல்லது.
பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது.
வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத்
தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

முட்டைக்கோஸ்...
..................................
இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய்
உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து
பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.


பீர்க்கங்காய்...
...........................
பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து
வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலாகும்.
சற்று மெல்லிய காய்களை, நன்றாக பச்சையாக இருக்கும்படியும் நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும்.
பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும். பச்சையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு...
.............................
சேப்பங்கிழங்கு நீளவாட்டத்தைவிட உருண்டை வடிவமாக இருப்பதைப் பார்த்து வாங்கினால் சவுகரியாக இருக்கும். மேலே
நிமிண்டிப் பார்த்தால் தோல் வரும்.
உள்ளே வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.
ஆனால் நீள்வட்டக் கிழங்கில் சத்து அதிகம்.

புடலங்காய்...
........................
புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்து மளுக்கென்று உடைந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய்...
..................................
பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது.

எலுமிச்சம் பழம்..
...............................
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது.
காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.

கொத்துமல்லி, கருவேப்பிலை..
..........................................................
கடைசியாக இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லி, கீரை வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும்
பார்த்துவாங்க வேண்டும். கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது. மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம்
இருப்பதில்லை.

--------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.8.18

நீங்களும் உங்கள் பொது அறிவும்!!

நீங்களும் உங்கள் பொது அறிவும்!!

உங்கள் பொது அறிவை மேன்மைப் படுத்துவதற்காக பல செய்திகளைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பதிய வைத்துக்கொள்ளுங்கள்
-----------------------------------------------
*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?* சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?* ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?* பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?* சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?* தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?* ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?* சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?* கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?* அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?* பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?* ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?* சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?* இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?* இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்

  நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
*1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?*
7வது இடம்
*2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?*
23 வது இடம்
*3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*
16வது இடம்
*4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*
15வது இடம்
*5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?* 14வது இடம்
*6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?*
மதுரை
*7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?*
2004
*8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?*
72993
*9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?*
சென்னை
*10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?*
1076 கி.மீ
*11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது?*
1986
*12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?*
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
*13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?*
சென்னை (23,23,454)
*14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*
சென்னை (46,81,087)
*15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*
68.45 ஆண்டுகள்
*16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?*
13 மாவட்டங்கள்
*17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*
234
*18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?*
1
*19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?*
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
*20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?*
சென்னை
*21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*
71.54 ஆண்டுகள்
*22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?*
15979
*23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?*
561
*24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*
146
*25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*
18
*26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*
39
*27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?*
தர்மபுரி (64.71 சதவீதம்)
*28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*
பெரம்பலூர் 5,64,511
*29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?*
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
*30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?*
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
*31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?*
தர்மபுரி
*32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?*
32
*33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?*
அரியலூர்
*34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?*
திருப்பூர்
*35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?*
80.33 சதவீதம்
*36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?*
17.58 சதவீதம்
*37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?*
வரையாடு
*38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?*
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
*39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?*
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
*40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?*
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
*41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?*
999பெண்கள்(1000 ஆண்கள்)
*42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?*
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
*43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?*
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
*44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?*
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
*45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?*
www.tn.gov.in
*46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?*
சென்னை
*47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?*
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
*48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?*
திருவில்லிபுத்தூர் கோபுரம்
*49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?*
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
*50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?*
நீராடும் கடலுடுத்த
*51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?*
பரத நாட்டியம்
*52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?*
மரகதப்புறா
*53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?*
பனைமரம்
*54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?*
செங்காந்தள் மலர்
*55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?*
கபடி
*56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?*
1,30,058 ச.கி.மீ
*57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?*
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087

கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்து கொல்லாம்
படித்துப் பகிர்ந்துள்ளேன்!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.7.17

தெரிந்து கொள்வோம்: வட்டார வழக்குச் சொற்கள்!!!


தெரிந்து கொள்வோம்: வட்டார வழக்குச் சொற்கள்!!!

செட்டிநாட்டுப் பகுதிகளில் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சில கலை சொற்கள்

சத்த :~
சற்று என்பது மருவி சத்த என்றானது .

பைய :~
 பொறுமை, மெதுவாக.

எங்குட்டு :~
எந்தப் பக்கம்.

எம்புட்டு :~
எவ்வளவு.

இம்புட்டோண்டு :~
சிறிதாக.

எம்புட்டு :~
என்னுடையது.

மகிர உள்ளது :~
நிரம்ப உள்ளது .

வெள்ளந :~
இருட்டு அகன்று 'வெள்ளி்' முளைக்கையிலே   அதாவது வானில் வெள்ளி காலையில் குறிப்பிட்ட நேரமே தோன்றும் அது தோன்றும் பொழுது என்பது பொருள்

குறிச்சி :~
சாய்வு நாற்காலி.

கொட்டகை :~
மங்கல நிகழ்வுகளில் கொட்டகை என்றும்  அதையே துயர துக்க நிகழ்வுகளில் பந்தல் என்றும் சொல்லும் வழக்கம்

மாடு கட்டுமிடத்தை
தொழுவம்
கட்டுத்தரை

வட்டி :~
உணவு உண்ணும்  கும்பா
(வட்டில் என்பது பண்டையத் தமிழ் வழக்கு,)
அதாவது அசலில் கை வைக்காமல் அதன் வருமானத்தில் சாப்பிடுதல்

சிலாத்தி :~
சல்லடை.

சிட்டை
குறிப்பு

சுளகு  சொளகு
முறம்.

மரவை
மரத்தால் ஆன தாம்பாளம்

போகினி / லோட்டா /
குவளை  தோட்டா என்பது பர்மிய சொல்

குந்தாணி
 உரல்.

திருகை
அரிசி உடைக்கப் பயன்படுத்தப் படும் ஒருவகை கல் உரல்

ஏவம் கேட்டல் :~
பரிந்து பேசுதல்.

கொண்டி :~
போக்கிரி.
(கொண்டி மகளிர் என்னும் சொல்லாட்சி பட்டினப்பாலையில் இடம் பெறுகிறது)

தாக்கல் :~
தகவல்  தாக்கீது

ஒள்ளத்தி  உள்ளத்தி
மிகச்சிறிய அளவு.
(எள் அத்தனை. எள்ளத்தி என்பதன் மரூஉவாக இருக்கலாம்)

தொக்கடி  தொக்கு + அடி
மிகக் குறைந்த விலை.

மருக்கோளி :~
பைத்தியம்.

வறளி :~
பிடிவாதக்காரர்.

மூதலித்தல் :~
மெய்ப்பித்தல்.

பட்டியல்
விலைச்சீட்டு

பெட்டகம் :~
இரும்பால் ஆன அலமாரி.

பெட்டக சாலை
பெட்டிக்குள் வைக்கும் இடம்

கேணி :~
கிணறு.

கிண்ணி :~
சிறு தட்டு.

பலகாரம்:~
பலாரம் ( காலைப் பலகாரம் , இராத்திரிப் பலகாரம் ) - டிபன்.

துடுப்பு :~
மரத்தால் ஆன ஒருவகைக் கரண்டி.

கொட்டான் :~
பனை ஓலையில் பின்னப்பட்ட ஒருவகைக் கூடை.

சத்தகம் :~
தேங்காய் கீறுவதற்கு பயன்படுத்தப்படும்
ஒரு வகை கத்தி போன்ற கரண்டி

வக்கூடை.
மூங்கிலால் பின்னிய கூடை

சுவத்தலமாரி :~
வீடுகளில் சுவற்றோடு பதிக்க பட்டிருக்கும் அலமாரி.

சீசா :~
கண்ணாடிக் குடுவை.

ரொட்டிக்கட்டு :~
பிஸ்கட் பாக்கெட்.

தாளிக்கிற பெட்டி :~
அஞ்சரை பெட்டி / அஞ்சு அறைப் பெட்டி.

இரவைக்கு :~
இரவு

கடிசு - கடிது :~
கடினம்.

சவுக்காரம் :~
சோப்பு.

கடைக்கால் :~
அஸ்திவாரம்.

தொலைவு :~
தூரம்.

பட்டியக்கல் :~
கருங்கல்லால் ஆன  தரை

தொரட்டி :~
உயர்த்தில் உள்ள மரக்கிளைகளை வளைத்து ஒடிக்கப் பயன்படும் கருவி / துரட்டி.

அம்புட்டு :~
அவ்வளவு.

பூராத்தையும் :~
அனைத்தையும்.

சீவிக்கிரபொட்டி :~
கண்ணாடி சீப்பு வைத்து கொள்ளும் பெட்டி.

ஊரணி :~
குளம்.

புரவி :~
குதிரை.

அங்கிட்டு :~
அந்தப் பக்கம்.

இங்கிட்டு :~
இந்தப் பக்கம்.

பொட்டல் :~
மைதானம்.

விளக்கு வைக்கணும் :~
விளக்கு ஏற்றனும்.

ஏத்தனும்
ஏற்றனும்

ராக்கை :~
அடுக்கம் / Rack.

படைக்கிற அறை :~
சாமி அறை.

உக்குராண அறை :~
சேமிப்பு அறை - சமையல் சாமான்கள் அறை

முகப்பு (மோப்பு ) :~
வீட்டின் முன்பகுதி.

வளவு - வளைவு :~
செவ்வகமான மத்தியப் பகுதி.

 திறந்த வெளியாகவும் இரு பக்கங்களிலும் அறைகள் கொண்டதாக அமைத்திருக்கும்.

வாரம் :~
தாழ்வாரம்.

பேழை :~
 ஓலையால் செய்த பெட்டி.

தடுக்கு :~
ஓலையில் செய்த சிறு பாய்.

அவுக :~
அவர்கள்.

இவுக :~
 இவர்கள்.

வந்தாக :~
வந்தார்கள்.

போனாக :~
போனார்கள்.

வருவாக :~
வருவார்கள்.

மேலைக்கு
பிற்பாடு
அதாவது யாராவது உதவி கேட்டு வந்தால் தரமாட்டேன் என்று சொல்லாமல் மேலைக்கு பார்போம் என்பர்
===========================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.5.17

அவர்கள் என்ன செய்தார்கள்? பதிலுக்கு நாம் என்ன செய்தோம்?


அவர்கள் என்ன செய்தார்கள்? பதிலுக்கு நாம் என்ன செய்தோம்?

Q.What is difference b/w India and USA?

Answers.

1.America produced Microsoft, 
India produced Satya Nadella (CEO)

2.America produced Pepsi Co.
India produced Indra Nooyi (CEO)

3.America produced Adobe Systems, 
India produced Shantanu Narayen (CEO)

4.America produced CitiGroup, 
India produced Vikram Pandit (Ex CEO)

5.America produced Berkshire Hathaway Insurance, 
India produced Ajit Jain (President)

6.America produced MasterCard, 
India produced Ajay Banga (CEO)

7.America produced Quest Diagnostics, 
India produced Surya Mohapatra (Ex CEO)

8.America produced Deloitte, 
India produced Punit Renjen (Global CEO)

9.America produced Google, 
India produced Sundar Pichai (CEO)

And finally,

10. 🇺🇸America produced Quora, 
India produced Balaji Viswanathan.

It’s sad to see so many comments with negative👎 perspective which “completely disregard " the role of India played to mold those top Indians.

So here is a little stat:

1. Satya Nadella- B.E Electrical Engineering from Manipal Institute of Technology

2. Indra Nooyi- (PGDM /MBA) from IIM Calcutta

3. Shantanu Narayen- BSc. Electronics Engineering from Osmania University

4. Ajit Jain- B.Tech Mechanical Engineering from IIT Kharagpur

5. Ajay Banga- PGDM (/MBA) from IIM Ahmedabad

5. Surya Mohapatra- B.S in Sambalpur University

6. Sundar Pichai- B.Tech Metallurgical Engineering from IIT Kharagpur.

7. Balaji Viswanathan- B.E Computer Engineering from Thiagarajar College of Engineering

Indian Schools were the ones to provide the “basic” for those geniuses which created the roots for the tree to grow.
Proud to be Indian

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.10.16

இரண்டு இதிகாசங்களுக்கும் என்ன வித்தியாசம்?


இரண்டு இதிகாசங்களுக்கும் என்ன வித்தியாசம்?

மண்ணால்
போரெனில்
பாரதம் ....
பெண்ணால்
போரெனில்
ராமாயணம் ....

சகுனி
குழப்பினால்
பாரதம்....
கூனி
குழப்பினால்
ராமாயணம் ....

பெண்
ஐந்தை
மணந்தால்
பாரதம் ...
பத்தை
மறுத்தால்
ராமாயணம் ....

அனுமன்
கொடிதனில்
பறந்தால்
பாரதம் ...
கடல்தாண்டி
பறந்தால்
ராமாயணம் ....

இறை
இப்புவி
இறங்கி ...
சாரதியானால்
பாரதம் ...
சத்திரியனானால்
ராமாயணம் ....

மேய்த்தது
கோ எனில்
பாரதம்...
மேன்மை
கோ எனில்
ராமாயணம் ...

பகடையால்
பகையெனில்
பாரதம்....
பாவையால்
பகையெனில்
ராமாயணம் ........

பிறன்மனை
அவமதித்தால்
பாரதம்...
பிறன்மனை
அபகரித்தால்
ராமாயணம் ....

அவதாரம்
புனிதனாய்
வலம்வந்தால்
பாரதம் ....
மனிதனாய்
வலம்வந்தால்
ராமாயணம் ...

இறை
கீதை
தந்தால்
பாரதம் ...
சீதை
பெற்றால்
ராமாயணம்....

கர்ணன்
வில்
தாங்கினால்
பாரதம்....
துயில்
தங்கினால்
ராமாயணம்....

கதை
நாயகியைத்
தொட்டு
சேலை
இழுத்தால்
பாரதம்...
தொடாது
சோலையில்
வைத்தால்
ராமாயணம் .....

ஐவருக்கு
ஒருத்தியெனில்
பாரதம் ....
ஒருவருக்கு
ஒருத்தியெனில்
ராமாயணம் ....

மறைந்திருந்து
அம்பெய்ய
கற்றால்
பாரதம் ...
அம்பெய்து
கொன்றால்
ராமாயணம்...

வில்லால்
அடித்து
வீரனுக்கு
விவாகமெனில்
பாரதம் ...
வில்லை
ஒடித்து
வீரனுக்கு
விவாகமெனில்
ராமாயணம் ....

கற்பு
நெறிக்காக
பெண்
கண்ணை
கட்டினால்
பாரதம்...
கனல்
இறங்கினால்
ராமாயணம்....

கதையில்
குருடன்
கோ எனில்
பாரதம்....
கதையை
எழுதியது
திருடன்
கோல் எனில்
ராமாயணம் ...

அரக்கினால்
மதில் ஆனதால்
அரண்மனை
எரிந்தால்
பாரதம் ....
அரக்கியின்
மதி கோணலால்
அரண்மனை
எரிந்தால்
ராமாயணம் ....

அரங்கனின்
செய்கையால்
அபலைக்கு
அபயமெனில்
பாரதம் ....
குரங்கனின்
செய்தியால்
அபலைக்கு
அபயம் எனின்
ராமாயணம்....

மண்ணின்
மயக்கத்தினால்
பிளவெனில்
பாரதம் ...
மானின்
மயக்கத்தினால்
பிரிவெனில்
ராமாயணம் ....

உறவுக்குள்
சண்டையெனின்
பாரதம்...
உறவுக்காக
சண்டையெனின்
ராமாயணம் ....

ரசித்தது
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.8.16

இனிமேல் எச்சரிக்கையா இருங்கள்!

இனிமேல் எச்சரிக்கையா இருங்கள்!

தெருக்களில் செல்லும் மக்களின் பாதுகாப்பிற்காகவும், வாகனங்களில் செல்வோரை முறைதவறாமல் வாகனங்களை செலுத்துவதற்காகவும், அபராதச் சட்டங்கள் திருத்தியமைக்கப்பெற்றுள்ளது.

சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்

ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்

அன்புடன்
வாத்தியார்
=============================================











======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.8.16

எப்படித் தேர்வு செய்தார் கர்மவீரர் காமராஜர்?


எப்படித் தேர்வு செய்தார் கர்மவீரர் காமராஜர்?

கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota ஒதுக்கியிருந்தார்களாம். அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம். காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம். ஊரெல்லாம் இவரைப் பெரிய மனம்   கொண்டவர் என்று சொல்கிறார்களே, இவர் எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று பார்ப்போம். தன் ஜாதி அடிப்படையிலா, தன் ஊர்க்காரர்களுக்கு கொடுப்பாரா, நண்பர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பாரா அல்லது கட்சிக்காரர்களுக்கு கொடுப்பாரா? என்று பார்க்கலாம். அப்போது இவர் சுயரூபம் தெரிந்து விடும் என்று எண்ணினாராம்.

காமராஜர் முன்பு விண்ணப்பங்களை எடுத்து சென்று கொடுத்தாராம். சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த காமராஜர், கடகடவென பத்து விண்ணப்பங்களை எடுத்து கொடுத்து விட்டு சென்று விட்டாராம். அவற்றைப் பார்த்த உதவியாளருக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவர் எண்ணிய ஒரு அடிப்படையில் கூட அவர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்கள் இல்லை. நேராக காமராஜரிடமே சென்று, நீங்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள், உங்கள் ஜாதி, ஊர், நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று எந்த அடிப்படையிலும் வரவில்லையே, பிறகு எந்த அடிப்படையில் இவர்களை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டாராம்.

சிரித்துக் கொண்டே கல்வி வள்ளல், கர்மவீரர் காமராஜர் சொன்னாராம், நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தேன், அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் யார் விண்ணப்பங்களில் எல்லாம் கைய்யெழுத்துக்கு பதில் கைநாட்டு [கை ரேகை] இருந்ததோ, அவற்றைத் தான் நான் தேர்வு செய்தேன். எந்த குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத் தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினாராம். இப்படிப்பட்ட தலைவர்களும் நம் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்துள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
----------------------------------------------------------------------
2
மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.
👉 நேரம்
👉 இறப்பு
👉 வாடிக்கையளர்கள்
மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.
👉 நகை
👉 பணம்
👉 சொத்து
மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.
👉 புத்தி
👉 கல்வி
👉 நற்பண்புகள்
👑4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.
👉 உண்மை
👉 கடமை
👉 இறப்பு
👑5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.
👉 வில்லிலிருந்து அம்பு
👉 வாயிலிருந்து சொல்
👉 உடலிலிருந்து உயிர்
👑6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.
👉 தாய்
👉 தந்தை
👉 இளமை
👑7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.
👉 தாய்
👉 தந்தை
👉 குரு
👑நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
👑வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
👑நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
👑கவனிக்க ஏழு விஷயங்கள் :
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
---------------------------------------------------------------
3
சிறந்தவனாக இரு, சிறந்ததை வைத்திரு, சிறந்ததை செய்.
2.   ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவு கொள்ளாது.
3.   போகும்போதே என்னை ரசித்து கொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு - வாழ்க்கை.
உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை
===================================================================
படித்ததில் பிடித்தது.உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.12.15

தமிழனின் சாதனை பட்டியல்கள்


தமிழனின் சாதனை பட்டியல்கள்

தமிழன் என்ன கண்டுபிடித்தான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்................பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................

பதாகைக்கு (பதாகை என்பது கொடியைக் குறிக்கும் சொல்) வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!

கல்லணை :-

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு
இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும்
காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு
முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி,
அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி
கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில்
தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல்
சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன
ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் :-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற
தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று
வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான்
மிகப் பெரியது.திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின்
நான்கு பக்க  சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால்
கூட 300 ஆண்டுகள் ஆகும்.

இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல்
சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண
முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா
அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின்
போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்து
விடுகிறது. அதே நேரத்தில்  செயற்கைகோள்களுக்கு எந்த வித
பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை
கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள்
மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் :-

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப்
பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்
பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகி
யிருக்க  முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து
எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை
ஆங்கிலம் பயின்ற  அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம்,
15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ
இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின்
கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள்
கோயிலை உருவாகிள்ளனர்.

கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக
யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் :-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில்
உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக
விளங்குகிறது.

தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர்
முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி
பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி
அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.

இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும்
ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப்
படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும்
ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து
கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள்

சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத்
துளைத்து................... என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த
மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே
தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய்
மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் :-

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு
மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது
கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே
இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம்
பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம்
இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல்
கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார்
நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக்
என்பவர் காணொளி,

ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள்,
ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும்
சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன்
பேரரசன் அருள் மொழித் தேவனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது
சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ
வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள்
தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே  போதும் இவையணைத்தும் நான் படித்து
ரசித்தவையே உங்களது மேலான   பார்வைக்கும் பதிந்திருக்கிறேன்
நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறியட்டும்

வாட்ஸப்பில் வந்தது. உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.10.15

வார்த்தைகளால் விவரிக்க முடியாத படைப்புக்கள்!


வார்த்தைகளால் விவரிக்க முடியாத படைப்புக்கள்!

சில படைப்புகளை வார்த்தைகளால் விளக்கவோ விவரிக்கவோ முடியாது! அதற்கு மிகச் சிறந்த உதாரணம் அமரர் சில்பியின் அமரத்துவம் பெற்ற ஓவியங்கள். ஓவியம் வரையும் திறனை இறைவன் பலருக்கு அளித்துள்ளான் எனினும் தன்னையே (இறைவன்) வரையும் திறனை மிகச் சிலருக்கு மட்டுமே அவன் அருளியுள்ளான்! அதில் முதன்மையானவர் ஓவியர் சில்பி என்றால் அது மிகையாகாது.

மதுரை தொடங்கி ஹளேபீடு வரை 39 ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை ஓவியங்களாக வடித்திருக்கிறார் ஓவியர் சில்பி.

கருவிலேயே கலைஞனாக உருவெடுப்பவர்களின் புகழ், காலத்தால் மறையாது. அவர்கள் மெய் உருக உழைத்த உழைப்பின் பலன்களை எப்பேர்ப்பட்ட சக்தியாலும் கரைத்துவிட முடியாது. தெய்வீகச் சிற்பங்கள் தரும் ஆத்ம அமைதியை நாடிச் செல்லும் எண்ணத்தின் வெளிப்பாடு, மாபெரும் நோன்பாகவே அமைந்துவிடும். அப்படி, சிலை வடிவச் சிற்பங்களைச் சித்திர வேலைப்பாடுகளாக வெளியிடுவது, அதுவும் தெய்வீகச் சிற்பங்களைத் தெளிவான சித்திரங்களாக வரைவது என்பது, கிடைத்தற்கரிய பெரும்பேறு. தீர்க்கமான பார்வை, தெய்வீக மோன நிலை, தூரிகையைத் தாங்கிய விரல்கள், உதடுகளில் புன்னகை பிரியாத அழகு மலர்ச்சி, நெற்றியில் படிப்படியான விபூதிக் கோடுகள், நடுவில் குங்குமப் பொட்டு இவையே மாபெரும் கலைஞனாக விளங்கும் சில்பியின் மறக்க முடியாத அடையாளங்கள். வரைகலையையே தன் வாழ்வாக எண்ணி, வாழ்வின் ஒவ்வொரு கணமும் தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, ஆன்மாவின் ரகசிய தாக்கங்களையும், அறிவு தொட முடியாத ஞானத்தின் சிகரங்களையும், வார்த்தைகளால் விளக்க முடியாத தத்துவங்களையும் தன் ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளார் சில்பி.

கருவறைக்குள் வீற்றிருக்கும் தெய்வங்களின் அமரத்துவம் வாய்ந்த வண்ண ஓவியங்கள் மட்டுமின்றி மதுரை, கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோவில்... எனத் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கும் திருக்கோயில்களின் ராஜ கோபுரங்கள், விமானங்கள், தூண்கள், மண்டபங்கள், சிலை ரூபங்கள், கலாசாலைகள்... எனச் சிற்பக் கலைச் செல்வங்களைத் திரட்சியான கோட்டோவியங்களாகப் பதிவு செய்துள்ளார் சில்பி.

மேலும், சித்திரங்களே சிலாகித்தபடி சொல்லும் புராண & இதிகாச நிகழ்வுகளைத் தொகுத்து, சொக்கத் தமிழில் அவர் சொல்லியிருக்கும் அழகும் அற்புதமானது. 1948 & ஜனவரி தொடங்கி 1961 & ஏப்ரல் வரையில் விகடன் இதழில் சித்திரப் படைப்பில் முத்திரை பதித்து வெளிவந்தவற்றைத் தொகுத்து, வாசகர்களுக்கு நூல் வடிவில் கலை விருந்து படைத்துள்ளது விகடன் பிரசுரம்.  அற்புதத் தொகுப்பு இது. நூலினுள் நுழைந்துவிட்டால், தன் அற்புத சுவையிலிருந்து மீளவும் மனம் வராது. இந்த நூல், கலா ரசிகர்களின் கலைக் கருவூலமாகவும், படித்து, ரசித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகவும் என்றென்றும் விளங்குவது திண்ணம்.

இத் தொகுப்புகளை வாங்கி பக்கம் பக்கமாக சில்பி வடித்துள்ள சிற்பங்களை (ஓவியங்கள்!) அதன் பின்னணியில் உள்ள விளக்கங்களோடு படித்துப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கும் என்பது என்னவோ உண்மை!

புத்தகம் கிடைக்கும் இடம்:

Vikatan Media Services
757, Anna Salai,
Chennai 600002
Phone : 044 42634283 & 84 Mobile : 95000 68144
Email : pubonline@vikatan.com

ஓவியர் சில்பியின் இயற்பெயர் சீனிவாசன். அவரைப்பற்ரிய மேலதிகத்தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பெற்றுள்ள சுட்டியைக் கிளிக்கிப் பார்க்கவும்
https://en.wikipedia.org/wiki/Silpi

அன்புடன்
வாத்தியார்
----------------------------
உங்கள் பார்வைக்கு அவர் வரைந்தவற்றுள் சில ஓவியங்கள்:











================================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2.12.14

ஆத்தாப் பொண்ணும் சீத்தாப் பழமும்!


ஆத்தாப் பொண்ணும் சீத்தாப் பழமும்!

எங்கள் பகுதியில் அம்மாவை ஆத்தாள் என்று அழைப்பார்கள். அகத்தில் (வீட்டில், உள்ளத்தில்) இருக்கும் அன்னையை ஆத்தாள் என்பார்கள்.
வீட்டில் இருக்கும் குட்டிப் பெண்களை ஆத்தாப் பொண்ணு என்று
செல்லமாக அழைப்பார்கள்,

ஆத்தாப் பெண்ணே சீத்தாப் பழமே என்று ரைமிங்கோடு சொல்லி அழைப்பார்கள். அத்துடன் குட்டிப் பெண்களுக்கு, அதாவது மழலை
மாறாத குட்டிப் பெண்களுக்கு 4 வரிப் பாடல் ஒன்றைச் சொல்லிக்
கொடுத்து திரும்ப அவர்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு
மகிழ்வார்கள். அந்த மழலைகளும் பாடலின் பொருள் தெரியாமல்
குரல் கொடுத்துப் பாடலாகத் திரும்பச் சொல்வார்கள்.

அந்த 4 வரிப் பாடல் கீழே உள்ளது. நீங்களும் பாருங்கள்:

"ஆத்தாப் பொண்ணுக்குக் கல்யாணமாம்
அவுக அவுக வீட்டில சாப்பாடாம்
கொட்டு மேளம் கோயில்லையாம்
வெத்தலை பாக்கு கடையிலையாம்!"

எப்படி உள்ளது பாட்டு? அர்த்தமானதா?
-----------------------------------------------
சரி சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்:

சீத்தாபழத்தின் பெருமையை அறிவீர்களா...?

இது இந்தியாவை சேர்ந்த பழம் இல்லை. அமெரிக்காவில் கண்டு
பிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்ததாக
மொகாலய அரசர் அக்பர் தனது ஆவணங்களில் குறித்து
வைத்துள்ளார்.

சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சி'யைக்
கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு போதுமான
கால்சியம் ஒரு பழம் உண்பதாலேயே கிடைக்கும்.

அல்சர் உள்ளவர்கள் அல்லது வயிற்றில் அதிகபடியான அமிலத்
தன்மை உடையவர்களுக்கு இப்பழம் சிறந்தது. இதன் விதை பூச்சி
கொல்லி மருந்தாகவும், இதன் பொடியானது தலை முடியில் உள்ள
பேன் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

இதில் 16.5 சதவிகிதம் சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உள்ளவர்கள்
இதை சாப்பிடுவதை தவிர்க்கலாம். எடைகுறைவாக உள்ளவர்கள்
எடையை அதிகப்படுத்த இப்பழத்தை தினமும் சாப்பிடலாம்.

இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து இப்பழம் பாதுகாக்கிறது. உங்களுக்கு மாறிகொண்டே இருக்கும் இரத்தஅழுத்தம் இருந்தால் தினமும்
இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்தஅழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

நோய்க்கு மருந்தாவதோடு மட்டுமல்லாமல் அழகுக்கும் உதவுகிறது.
இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் மற்றம் தோல் பளபளப்பாக மாறும்.

இதில் மெக்னீசியத்தின் அளவை அதிகம் கொண்டிருப்பதால் உடலில்
நீர் இருப்பு நிலையை பராமரிக்கிறது. சீத்தாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கு மருந்தாகும்.

இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
--------------------------------------------------------------------------------------
2

ஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....

ஆஃபரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு
ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு சிறு
நீரகத்தில் உருவாகும் கற்களும் விதிவிலக்கல்ல. அவ்வாறு
ஆஃபரேசன் செய்து நீக்கிவிட்டாலும் இதுவரை ஆப்பரேசன் செய்து கொண்டவர்களுக்கும் திரும்ப கற்கள் உருவாவதும் மீண்டும் அதற்கு
சிகிச்சை எடுத்துக்கொள்வதும் வழக்கமாக நடந்து கொண்டுதான்
இருக்கிறது.

எனக்கு மூன்று முறை சிறுநீரகக் கற்கள் நீக்கப்பட்டுள்ளது. நான்கு
முறை சிறுநீரகக் கற்கள் நீக்கப்பட்டன என்று கணக்குச் சொல்பவர்கள்
தான் அதிகம்.

ஏன் இத்தனை முறை ஆஃபரேசன் செய்ய வேண்டி வந்தது? என்ற
கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

முதல்முறை கற்கள் உருவான பொழுதே அதற்குக் காரணம் என்ன
வென்று கண்டுபிடித்து அதை சரிசெய்திருந்தால் இரண்டாவது முறை
கற்கள் உருவாகி இருக்காது. அதைவிட்டுவிட்டு அப்ரேசன் செய்து
கற்களை அகற்றுவதனால் அந்த மனிதன் செய்யும் தவறுகளால்
மீண்டும் கற்கள் உருவாகிறது. பிறகு மீண்டும் ஆஃபரேசன் செய்வதே தொடர்கதையாகிப் போய்க் கொண்டே எனவே நிரந்தரமாக சிறுநீரகக் கற்களை நீ ஆஃபரேசன் இன்றிக் கரைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது.
அது மிக எளிமையான வழியும் கூட. அதற்கு பீன்ஸ் வைத்தியம்
என்று பெயர். பீன்ஸ் என்றால் சோயா பீன்ஸ் என்று புரிந்து கொள்ள வேண்டாம். ஆங்கிலக் காய்கறி என்று சொல்லக்கூடிய பீன்ஸ்.

சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக கூறுபவர்கள் கீழ்கண்டவாறு நாம் சொல்வதைக் கடைபிடித்தால் ஓரே நாளில் கற்கள் கரைந்து குண
மடைந்து விடுவார்கள். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தால் கூட
அங்கு கற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

என்ன செய்ய வேண்டும்?

அரைக்கிலோ பீன்சை எடுத்துக் கொண்டு அதில் உள்ள விதைகளை
எல்லாம் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு நறுக்கிய
பீன்சை அதில் போட்டு அடுப்பில் வைக்கவேண்டும். இளம் தீயாக
எரிய விடவேண்டும். கேஸ் அடுப்பு எனில் சிம்மில் வைத்து அதை
வேக வைக்க வேண்டும். அதாவது தீ கொஞ்சம் தான் எரிய வேண்டும்.
விறகு அடுப்பாக இருந்தாலும் நெருப்பு மிதமாக அதிலிருந்து
வெளிப்படுமாறு வைத்துக்கொண்டு பீன்சை வேகவைக்க வேண்டும். சீக்கிரமாக அதுவேகாமல் இவ்வாறு இரண்டு மணிநேரம் கழித்து வெந்திருக்கக் கூடிய பீன்ஸையும், நீரையும் சேர்த்து மிக்சியில்
போட்டு நன்கு கூல்போல் அரைத்துக் கொண்டு ஆறியபின் குடித்துவிடவேண்டும். இந்த பீன்ஸ் கூலைக் குடித்தவுடன் அந்தக் கணத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் மூன்று லிட்டர்
தண்ணீரைக் குடித்துவிடவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு
லிட்டர் என்கிற அளவில் சிறிதளவு அதக் குடித்து விடவேண்டும்.
இவ்வாறு 3 மணிநேரத்திற்குள்ளாக 3 லிட்டர் தண்ணீரைக் குடித்து முடிக்கவேண்டும்.

அதன் பின்னர் சிறுநீர் கழிக்கும் பொழுதெல்லாம் அதை ஒரு
டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு கற்கள் அதில்
வந்திருக்கிறதா? எனப் பார்க்கவேண்டும். எப்படியும் அன்று
இரவுக்குள் சிறுநீரக கற்கள் வெளியேவந்துவிடும். அதுவரை
வேறு எந்த உணவுகளும் எடுத்துக்கொள்ள கூடாது. அதன் பிறகு
மூன்று மணி நேரத்திற்குப் பின் சாதரணமாய் குடிக்கும் நீரைவிட
சற்று அதிகமாகக் குடித்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்த
சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது அன்று முழுவதும் ஓய்வாக இருக்கவேண்டும். வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது.
கண்களை மூடிப்படுத்துக் கொண்டு நன்கு ஓய்வாகவும் உடலும்,
மனதும் தளர்வாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இப்படிப்பட்ட வழிமுறைகளுடன் செய்தால் சிறுநீரகக்கற்கள்
கண்டிப்பாக கரையும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி
நிறையப்பேர் குணமடைந்திருக்கிறார்கள். ஒரே நாளில் சிறுநீரகக்
கற்கள் கரைந்துவிட்டது என பலரும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள். ஸ்கேன் ரிப்போர்ட் படி கிட்னி கற்கள் கரைந்து
விட்டது என்றும் அவை இருப்பதற்கான அறிகுறியே இல்லை
என்றும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு உள்ளனர்.

எனவே சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இந்த வழிமுறையைக்
கையாண்டு ஆரோக்கியம் பெறலாம். சிறுநீரகக்கற்களைக்
கரைப்பதற்கான வழிமுறைகளைப் பார்த்தோம். ஆனால் இதை
விடவும் சிறந்த வைத்தியம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால்
சிறுநீரகக் கற்கள் ஏன் உருவாகிறது. அது உருவாகாமல் தடுப்பதற்கு
என்ன வழி என்பது தான் அது.

நமது அனாடமிக் செவிவழித் தொடுசிகிச்சை என்ற புத்தகத்திலும், டிவிடியிலும் இதுகுறித்து விளக்கமாகக் கூறி இருக்கிறோம்.
இருப்பினும் அதுபற்றி இங்கு சுருக்கமாக பார்த்துவிடலாம்.

சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்.
1. உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும்.
2. உப்பு குறைவாக சாப்பிட்டாலும் வரும்.
3. தண்ணீர் அதிகமாகக் குடித்தால் வரும்.
4. தண்ணீர் குறைவாக குடித்தால் வரும்.
5. மனதில் பயம் இருந்தால் வரும்.
6. காற்றோட்டம் இல்லாத இடத்தில் உறங்கினால் வரும்.
7. கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்யூடு போன்றவை பயன்படுத்தினால்
வரும்.
8. ஏசி, ரூமில் இருப்பவர்களுக்கு வரும்.

மேற்சொன்ன காரணங்களைக் கவனமாக படித்துகொண்டு அதன்படி
நடந்து வரவேண்டும். ஏசியைப் பயன்படுத்தவே கூடாது. கொசுவர்த்திச் சுருளில் உள்ள இரசாயான நச்சுக்கள் சுவாசத்தின் வழியே உள்ளே நுரையீரலுக்கு சென்று சிறுநீரகத்தில் கல்லாய் மாறுகிறது. எனவே கொசுவர்த்தியைப் பயன்படுத்தவே கூடாது.

மனதில் பயம் இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். எனவே
மனதில் உள்ள பயத்தைப் போக்கி சிறுநீரகக் கற்களைக் கரைத்துவிட
முடியும். அது எப்படி என்பதை இந்த இதழில் வெளியாகி கட்டுரையைப் படிக்கும் பொழுது புரிந்துகொள்வீர்கள்.

அடுத்ததாக நம் நாவிற்கு எந்தளவிற்கு உப்புச் சுவை தேவைப்
படுகிறதோ அந்த அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
உப்பினைக் குறைவாகவும் எடுத்துக்கொள்ள கூடாது. கூடுதலாகவும்
எடுத்துக் கொள்ளக் கூடாது. உப்பில் தற்பொழுது பாக்கெட்டுகளில்
வரும் போடி உப்பினைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதில்
கல் உப்பினைப் பொடி செய்து பயன்படுத்தலாம். கல் உப்பினை பயன்படுத்துவதே முன்னர் சட்டியில் போட்டு வறுத்துப் பயன்
படுத்துவது மிகமிக சிறந்தது.

தண்ணீரின் தேவை நமது தாகத்தைப் பொறுத்து மாறுபடும். நாம்
செய்யும் வேலை, தட்ப வெப்பநிலை போன்றவற்றைப் பொறுத்து
தண்ணீரின் தாகம் நமக்கு இருக்கும். எனவே தண்ணீரை தினசரி
இவ்வளவு லிட்டர் தான் குடிக்கவேண்டும். என்று கணக்கு வைத்துக்
கொண்டு தாகம் எடுக்காமல் தண்ணீர் குறைவாகவும் குடிக்கக் கூடாது? அதிகமாகவும் குடிக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள் எப்பொழுது குடிக்கின்றன. எவ்வளவு தேவையோ அவ்வளவு
குடிக்கின்றன. நாமும் அதைக் கடைப்பிடிப்போம்.

பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதற்கு இந்த எட்டு
காரணங்கள் இல்லாமல் இன்னொரு முக்கியமான விசயமும்
இருக்கிறது. அது என்ன தெரியுமா?

அதிகமாக பேசினால் சிறுநீரகத்தில் கற்கள் வரும். ஆசிரியர்கள்,
பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்கள், தொலைபேசி அழைப்பாளர்கள் போன்றோருக்கு சிறுநீரகத்தில் கற்கள் தோன்றும் வாய்ப்புகள்
அதிகம். எவ்வளவு நேரம் அதிகளவு பேசிக்கொண்டு இருக்கிறோமோ சிறுநீரகத்தில் அவ்வளவு விரைவில் கற்கள் தோன்றும்.

அதிகநேரம் பேசிக் கொண்டிருப்பதை தொழிலாகச் செய்பவர்கள்
இனிமேல் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் இந்தக் கட்டுரையின்
மூலம் இரண்டு விசயங்களை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

1. சிறுநீரகக் கற்களை எவ்வாறு கரைப்பது?
2. சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்பது எப்படி?

எனவே சிறுநீரகக் கற்கள் இனிவராமல் எப்படி பார்த்துக் கொள்வது
என்பதும், இருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பது எப்படி என்பதையும் பார்த்திருக்கிறோம். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு என்றும் ஆரோக்கியமாக வாழ்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !!
இந்தக் கட்டுரையை எழுதியவர்:
www.amaidhiyumaarokiyamum.com 
Contact: (+91) 8883805456.

அடியவன் இணையத்தில் படித்தேன். உங்களூக்குப் பயன்படும் 
என்று தோன்றியதால் அறியத் தந்திருக்கிறேன்
=====================================
3
நீரழிவு உபாதைக்கு வெண்டைக்காய் வைத்தியம் 



இதையும் அடியவன் இணையத்தில் படித்தேன். உங்களூக்குப் 
பயன்படும் என்று தோன்றியதால் அறியத் தந்திருக்கிறேன்
=====================================
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.10.14

Interesting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்


மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்

மாடுகள் வேண்டாம். பண்ணைகள் வேண்டாம். செயற்கையாகப் பால் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சியை மேற்கொண்ட  பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா,இஷா தத்தார் ஆகிய மூவர்
அணியினர் செய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ (Muufri) என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும்  என்று அவர்கள் கூறியுள்ளனர்.


பெருமாள் காந்தி

ஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து  பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால் தயாரிக்கப் போகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அடிப்படையில் பால் என்பது என்ன? ஆறு வகைப் புரதங்கள். எட்டு வகையான கொழுப்புப் பொருட்கள், அவ்வளவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கைப் பால் தயாரிப்பு முறையில்  சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகையான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரையான் பாண்டியா
செயற்கைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும்.
அத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்டதாக, ருசி
கொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஷா தத்தார்

செயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட  கொலஸ்ட்ராலும் இராது.

செயற்கைப் பால் கெட்டுப் போகாதது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செயற்கைப் பால் அடங்கிய பாட்டிலுடன் பெருமாள் காந்தி
இந்த மூவர் கூட்டணியில் ஒருவரான பெருமாள் காந்தி சென்னையில் 
உள்ள ஒரு பல்கலையில் உயிரி தொழில் நுட்பம் படித்து பட்டம் பெற்றவர். முமபையில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி விட்டு அமெரிக்கா சென்று மேல்படிப்பு படித்து வருபவர். மற்ற இருவரும் உயிரி தொழில் 
நுட்பப் படிப்பு படித்தவர்களே.

இவர்கள் தொடங்கியுள்ள நிறுவனத்துக்கு ரையான் பாண்டியா CEO. 
பெருமாள் காந்தி தலைமை தொழில் நுட்ப அதிகாரி. இஷா தலைமை 
கல்ச்சர் அதிகாரி.

இவர்களது திட்டம் வெற்றி பெறுமானால் செயற்கைப் பாலானது பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக இருக்கும். மருந்து ஆலைகள் மாதிரியில் உயர்ந்த தரத்திலான தயாரிப்பு முறைகள் பின்பற்றப்படும் 
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மக்கள் தொகை பெருத்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் செயற்கைப் பாலைத்தான் பயன்படுத்துபவர்களாக இருப்பர் என்று 
அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செயற்கைப் பால் இப்போது எப்படி சாத்தியமாகியது என்று கேட்டதற்கு இதுவரை யாரும் இதற்கு முயலவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

Source: http://www.ariviyal.in/2014/10/blog-post_28.html
------------------------------------------------------------------------------------------------
இணையத்தில் படித்தேன். செய்தி சுவையாக இருந்ததால் உங்களுக்கு அறியத்தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!