மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.12.15

தமிழனின் சாதனை பட்டியல்கள்


தமிழனின் சாதனை பட்டியல்கள்

தமிழன் என்ன கண்டுபிடித்தான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்................பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................

பதாகைக்கு (பதாகை என்பது கொடியைக் குறிக்கும் சொல்) வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!

கல்லணை :-

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு
இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும்
காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு
முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி,
அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி
கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில்
தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல்
சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன
ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் :-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற
தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று
வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான்
மிகப் பெரியது.திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின்
நான்கு பக்க  சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால்
கூட 300 ஆண்டுகள் ஆகும்.

இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல்
சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண
முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா
அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின்
போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்து
விடுகிறது. அதே நேரத்தில்  செயற்கைகோள்களுக்கு எந்த வித
பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை
கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள்
மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் :-

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப்
பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்
பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகி
யிருக்க  முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து
எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை
ஆங்கிலம் பயின்ற  அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம்,
15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ
இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின்
கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள்
கோயிலை உருவாகிள்ளனர்.

கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக
யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் :-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில்
உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக
விளங்குகிறது.

தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர்
முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி
பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி
அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.

இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும்
ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப்
படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும்
ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து
கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள்

சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத்
துளைத்து................... என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த
மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே
தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய்
மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் :-

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு
மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது
கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே
இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம்
பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம்
இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல்
கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார்
நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக்
என்பவர் காணொளி,

ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள்,
ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும்
சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன்
பேரரசன் அருள் மொழித் தேவனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது
சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ
வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள்
தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே  போதும் இவையணைத்தும் நான் படித்து
ரசித்தவையே உங்களது மேலான   பார்வைக்கும் பதிந்திருக்கிறேன்
நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறியட்டும்

வாட்ஸப்பில் வந்தது. உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

Prasanna Venkatesh said...

தமிழனின் சாதனைகள் தலைநிமிர வைக்கிறது......

lrk said...

ஐயா வணக்கம்
படித்தோம் ,மகிழ்ந்தோம், பகிர்வோம்.
நன்றி
கண்ணன்

வேப்பிலை said...

என்னும் எழுத்தும்
கண் என தகும்

என்ற சிந்தனியின் வெளிப்பாடே
எப்போதும் நாம் பயன் படுத்தும் கணினி

கணினிக்கு தெரிந்தது பைனரி
கணக்கு தான் அது தான் அந்த அடிப்படி சிந்தனை

money transfer முறையை சுந்தரர் வரலாற்றிலும்
மனிதன் இன்றைய பல தமிழரின் கண்டுபிடிப்பு

முன்பு இது குறித்து எழுதிய ஆய்வு கட்டுரையை கண்
முன் நிறுத்தியது இந்த பதிவு...

siva kumar said...

வணக்கம் உள்ளேன் ஐயா

Mrs Anpalagan N said...

ஐயா,

இந்தச் சிறப்புகளை யாரும் தாமாக மறக்கவில்லை. மறக்கடிக்க வைக்கப்பட்டது.

யார் மறக்கடித்தனரோ, அவர்களாலேயே அதன் சிறப்புகள் ஆராயப்பட்டு மீண்டும்
எமக்கே மெருகூட்டப்பட்ட நிலையில் தரப்பட்டுள்ளது மட்டுமன்றி, உலகம் முழுதுமே அறிந்து கொள்ளவும் அது வழி செய்து விட்டது.

இவ்வாறு தான் தீமையிலும் நன்மை விளைவது என்பது.

வீழ்ந்து பின் வாழும் தமிழும், மதமும், எதுவும்.

Subbiah Veerappan said...

/////Blogger Prasanna Venkatesh said...
தமிழனின் சாதனைகள் தலைநிமிர வைக்கிறது....../////

உண்மைதான். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger lrk said...
ஐயா வணக்கம்
படித்தோம் ,மகிழ்ந்தோம், பகிர்வோம்.
நன்றி
கண்ணன்////

நல்லது. நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
என்னும் எழுத்தும்
கண் என தகும்
என்ற சிந்தனியின் வெளிப்பாடே
எப்போதும் நாம் பயன் படுத்தும் கணினி
கணினிக்கு தெரிந்தது பைனரி
கணக்கு தான் அது தான் அந்த அடிப்படி சிந்தனை
money transfer முறையை சுந்தரர் வரலாற்றிலும்
மனிதன் இன்றைய பல தமிழரின் கண்டுபிடிப்பு
முன்பு இது குறித்து எழுதிய ஆய்வு கட்டுரையை கண்
முன் நிறுத்தியது இந்த பதிவு.../////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
வணக்கம் உள்ளேன் ஐயா/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger Mrs Anpalagan N said...
ஐயா,
இந்தச் சிறப்புகளை யாரும் தாமாக மறக்கவில்லை. மறக்கடிக்க வைக்கப்பட்டது.
யார் மறக்கடித்தனரோ, அவர்களாலேயே அதன் சிறப்புகள் ஆராயப்பட்டு மீண்டும் எமக்கே மெருகூட்டப்பட்ட நிலையில் தரப்பட்டுள்ளது மட்டுமன்றி, உலகம் முழுதுமே அறிந்து கொள்ளவும் அது வழி செய்து விட்டது.
இவ்வாறு தான் தீமையிலும் நன்மை விளைவது என்பது.
வீழ்ந்து பின் வாழும் தமிழும், மதமும், எதுவும்./////

உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

Sundaravadivel K said...

ஐயா,

மிக்க நன்றி ஐயா நான் அறிந்த ஒரு விடயத்தை தங்கள் முன் வைக்கிறேன்.

For image

https://m.facebook.com/photo.php?fbid=1153923417958807&id=100000234793039&set=a.932961356721682.1073741826.100000234793039&source=48&ref=bookmarks

இந்த படத்தை எடுக்கும் போது நான் ஆச்சரிய பட்ட விடயம். இது வழக்கமான சூரியன் மறையும் படம் தானே. ஆனால் இதில் என்ன விந்தை இருக்கிறது என நினைக்கிறீர்களா ? சொல்கிறேன் கேளுங்கள்.
அனைவருக்கும் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என தெரியும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு திசைகளுக்கு நான்கு கோபுரங்கள் உள்ளதே அப்படியென்றால் சூரியன் மேற்கு கோபுரத்திற்கு நேராக தானே மறைய வேண்டும் ? இப்படி தென் மேற்கில் மறைகிறதே ?
உங்கள் அனைவருக்கும் தெரியும் உலகம் உருண்டையானது என கலிலீயோ 300 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்தார். பூமி 23.5° டிகிரி சாய்வாக சுற்றுகிறது என நூறாண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்திருப்பர்.
ஆனால் நம் தமிழர்கள் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட ஆரம்பித்து விட்டனர். அன்றே தெள்ள தெளிவாக கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என 360° கோணத்தில் சரியாக 23.5° கணக்கிட்டு கட்ட ஆரம்பித்துள்ளனர். அன்று எந்த கருவியை கொண்டு விஞ்ஞானமும் புவியியலும் கணிதமும் கட்டிடக்கலையும் கண்டறிந்தனர் ?
நான் எடுத்த இந்த படம் கூட கோணலாக இருக்கலாம். ஆனால் குலசேகர பாண்டியன் கட்ட ஆரம்பித்த இந்த கோவிலில் எந்த கோணலும் இருக்காது. பாருங்கள் சூரியன் சரியாக மேற்கிலிருந்து 23.5° டிகிரி சாய்வாகவே மறைகிறது.
300 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயனுக்கு தெரிந்த விஞ்ஞானத்தை 3600 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளனர் தமிழர்கள். கோவிலை கட்ட நிர்மானித்த குலசேகர பாண்டியனுக்கும் கிழக்கு கோபுரத்தையும் மேற்கு கோபுரத்தையும் நேர் கோட்டில் கட்டிய சுந்தரபாண்டியன் மற்றும் பராக்கிரம பாண்டியனுக்கும் தலை வணங்குவோம்.

Subbiah Veerappan said...

////Blogger Sundaravadivel K said...
ஐயா,
மிக்க நன்றி ஐயா நான் அறிந்த ஒரு விடயத்தை தங்கள் முன் வைக்கிறேன்.
For image
https://m.facebook.com/photo.php?fbid=1153923417958807&id=100000234793039&set=a.932961356721682.1073741826.100000234793039&source=48&ref=bookmarks
இந்த படத்தை எடுக்கும் போது நான் ஆச்சரிய பட்ட விடயம். இது வழக்கமான சூரியன் மறையும் படம் தானே. ஆனால் இதில் என்ன விந்தை இருக்கிறது என நினைக்கிறீர்களா ? சொல்கிறேன் கேளுங்கள்.
அனைவருக்கும் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என தெரியும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு திசைகளுக்கு நான்கு கோபுரங்கள் உள்ளதே அப்படியென்றால் சூரியன் மேற்கு கோபுரத்திற்கு நேராக தானே மறைய வேண்டும் ? இப்படி தென் மேற்கில் மறைகிறதே ?
உங்கள் அனைவருக்கும் தெரியும் உலகம் உருண்டையானது என கலிலீயோ 300 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்தார். பூமி 23.5° டிகிரி சாய்வாக சுற்றுகிறது என நூறாண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்திருப்பர்.
ஆனால் நம் தமிழர்கள் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட ஆரம்பித்து விட்டனர். அன்றே தெள்ள தெளிவாக கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என 360° கோணத்தில் சரியாக 23.5° கணக்கிட்டு கட்ட ஆரம்பித்துள்ளனர். அன்று எந்த கருவியை கொண்டு விஞ்ஞானமும் புவியியலும் கணிதமும் கட்டிடக்கலையும் கண்டறிந்தனர் ?
நான் எடுத்த இந்த படம் கூட கோணலாக இருக்கலாம். ஆனால் குலசேகர பாண்டியன் கட்ட ஆரம்பித்த இந்த கோவிலில் எந்த கோணலும் இருக்காது. பாருங்கள் சூரியன் சரியாக மேற்கிலிருந்து 23.5° டிகிரி சாய்வாகவே மறைகிறது.
300 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயனுக்கு தெரிந்த விஞ்ஞானத்தை 3600 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளனர் தமிழர்கள். கோவிலை கட்ட நிர்மானித்த குலசேகர பாண்டியனுக்கும் கிழக்கு கோபுரத்தையும் மேற்கு கோபுரத்தையும் நேர் கோட்டில் கட்டிய சுந்தரபாண்டியன் மற்றும் பராக்கிரம பாண்டியனுக்கும் தலை வணங்குவோம்./////

உண்மைதான் நண்பரே! இந்தச் செய்தியை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி!

KING OF WIN - RAJA said...

ஐயா வணக்கம்

தமிழனின் சாதனைகள் தலைநிமிர வைக்கிறது......

படித்தோம் ,மகிழ்ந்தோம், பகிர்வோம்.......

Nallaswamy Raju said...

வணக்கம் அய்யா ,

தமிழனின் சாதனைகளுக்கு தலை வணங்குவோம்.

இராஜு