மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.12.15

குப்பை வண்டி விதி’ தெரியுமா? - The Law of the Garbage Truck


குப்பை வண்டி விதி’ தெரியுமா? - The Law of the Garbage Truck

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை

.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.

“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும்.

அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல,

அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31 comments:

 1. மிக அருமையான கதை.....

  ReplyDelete
 2. அன்புள்ள வாத்தியாரிற்கு வணக்கங்கள்,
  எவ்வளவு உண்மை, இதனை எல்லோரும் கடைப்பிடித்தால், the world will be a much nicer place to live.

  பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி.
  அன்புடன்
  ராஜம் ஆனந்த்

  ReplyDelete
 3. உள்ளேன் ஐயா
  மிகவும் சரியாக சொன்னார் டேக்ஸி டைவர்.

  ReplyDelete
 4. Anbudan vanakkam vathiyaar ayya.
  Asathal arumaiyana sinthanai!!

  ReplyDelete
 5. பகிரப்பட வேண்டிய முக்கியமான விடயம்.
  இதைத்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் உபயோகிப்பது.
  இங்கு குறிப்பிடப்பட்டவர் மூன்றாம் நபர் என்பதால் இப்படி நடப்பது சரியே. அத்துடன்
  பிரச்சனையும் ஓய்ந்து விடும்.
  ஆனால் நன்கு தெரிந்த; நண்பர்களோ, உறவினரோ இப்படி நடக்கும் போதும், இதே
  யுக்தியைத்தான் நான் அதிகம் உபயோகிப்பது. அது பலவிதத்திலும் நன்மையை தந்தபோதும்,
  எதிர்தரப்பினருக்கு (வேறு என்ன பதம் உபயோகிப்பது என்று புரியவில்லை) அது மிகுந்த
  ஆச்சரியத்தையும், மேலும் வெறுப்பையும் கோபத்தையுமே எம்மீது உண்டாக்குகிறது.
  காரணம்; அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் பதிலுக்கு நாமும் அவர்கள் போலவே நடப்போம் என்பதையே.
  நமது பலமும், தமது பலவீனமும் தெரியவரும்போது அது அவர்களை சுடவே செய்கிறது.

  நாய் (வார்த்தைக்கு மன்னிக்கவும், உதாரணத்திற்காக சொல்கிறேன்.) நம்மைப் பார்த்துக் குரைக்கிறது என்று நாமும் நின்று குரைக்கலாமோ? அதன் வேலை அது தான். நமக்கு முக்கிய விடயங்கள் இருக்க, தேவையற்றவற்றுக்கு கூக்குரலிட்டு பிரச்னையை வளர்த்து தேவையற்று நேரத்தையும், வீணே டென்ஷன் ஆகி நமது சக்தியையும், அமைதியையும் வீணடிப்பானேன்?
  அது தனக்கு தெரிந்த, தன்னால் முடிந்த வேலையை செய்யட்டும் என்று விட்டு விட்டு, நாம் செய்ய வேண்டிய வேலையில் கவனம் செலுத்துவதே நமக்கு நல்லது.
  அதற்கு ஈடான இன்னொரு நாய் அதற்கு கிடைக்காமல் போய் விடுமா என்ன?

  ReplyDelete
 6. //////Blogger Prasanna Venkatesh said...
  மிக அருமையான கதை.....//////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 7. //////Blogger Rajam Anand said...
  அன்புள்ள வாத்தியாருக்கு வணக்கங்கள்,
  எவ்வளவு உண்மை, இதனை எல்லோரும் கடைப்பிடித்தால், the world will be a much nicer place to live.
  பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி.
  அன்புடன்
  ராஜம் ஆனந்த்///////

  உண்மைதான். நன்றி சகோதரி!

  ReplyDelete
 8. /////Blogger siva kumar said...
  உள்ளேன் ஐயா
  மிகவும் சரியாக சொன்னார் டேக்ஸி டிரைவர்.//////

  ஆமாம். ஆமாம். நன்றி!

  ReplyDelete
 9. /////Blogger hamaragana said...
  Anbudan vanakkam vathiyaar ayya.
  Asathal arumaiyana sinthanai!!/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

  ReplyDelete
 10. //////Blogger Mrs Anpalagan N said...
  பகிரப்பட வேண்டிய முக்கியமான விடயம்.
  இதைத்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் உபயோகிப்பது.
  இங்கு குறிப்பிடப்பட்டவர் மூன்றாம் நபர் என்பதால் இப்படி நடப்பது சரியே. அத்துடன்
  பிரச்சனையும் ஓய்ந்து விடும்.
  ஆனால் நன்கு தெரிந்த; நண்பர்களோ, உறவினரோ இப்படி நடக்கும் போதும், இதே
  யுக்தியைத்தான் நான் அதிகம் உபயோகிப்பது. அது பலவிதத்திலும் நன்மையை தந்தபோதும்,
  எதிர்தரப்பினருக்கு (வேறு என்ன பதம் உபயோகிப்பது என்று புரியவில்லை) அது மிகுந்த
  ஆச்சரியத்தையும், மேலும் வெறுப்பையும் கோபத்தையுமே எம்மீது உண்டாக்குகிறது.
  காரணம்; அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் பதிலுக்கு நாமும் அவர்கள் போலவே நடப்போம் என்பதையே.
  நமது பலமும், தமது பலவீனமும் தெரியவரும்போது அது அவர்களை சுடவே செய்கிறது.
  நாய் (வார்த்தைக்கு மன்னிக்கவும், உதாரணத்திற்காக சொல்கிறேன்.) நம்மைப் பார்த்துக் குரைக்கிறது என்று நாமும் நின்று குரைக்கலாமோ? அதன் வேலை அது தான். நமக்கு முக்கிய விடயங்கள் இருக்க, தேவையற்றவற்றுக்கு கூக்குரலிட்டு பிரச்னையை வளர்த்து தேவையற்று நேரத்தையும், வீணே டென்ஷன் ஆகி நமது சக்தியையும், அமைதியையும் வீணடிப்பானேன்?
  அது தனக்கு தெரிந்த, தன்னால் முடிந்த வேலையை செய்யட்டும் என்று விட்டு விட்டு, நாம் செய்ய வேண்டிய வேலையில் கவனம் செலுத்துவதே நமக்கு நல்லது.
  அதற்கு ஈடான இன்னொரு நாய் அதற்கு கிடைக்காமல் போய் விடுமா என்ன?//////

  உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி சகோதரி!

  ReplyDelete
 11. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
  நல்ல அருமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ள பதிவு!
  நன்றியுடன்,
  -பொன்னுசாமி

  ReplyDelete
 12. குப்பை வண்டிகளிலே தான் பலர்
  குடும்பம் நடத்துகின்றனர்...

  குப்பை இல்லாமல் இருக்க முடியாது தான்
  குப்பையை தினம் தினம் அகற்றலாம்

  அதற்க்கு தான் த்யானம் போன்ற பயிற்சிகள்.
  அதற்க்கு நேரம் இல்லாமல்.. சிலர்

  ரிமோட்-ஐ யாரிடமோ தந்து விட்டு...
  recyclebin ஆக வாஷிங் மிஷின் இல் போட்ட

  துணி போல சுத்தி சுத்தி
  துவண்டு போகிறார்கள்...

  ReplyDelete
 13. மிகவும் அருமை சார்... மீள் பதிவு போல உள்ளதே!!! ஏற்கனவே தாங்கள் பகிர்ந்துள்ளீர்கள் என நினைக்கிறன்...

  நன்றி...

  ReplyDelete
 14. குரு வந்தனம்.
  நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிச் சித்தரிப்பின் மூலம் எத்தகைய வாழ்க்கைப் பாடம் உணர்த்தப்படுகிறது என்பது வியப்பூட்டும் செய்தி!டாக்ஸி டிரைவர் பாராட்டப்படவேண்டியவர்.
  சிந்தையைக் கவர்ந்த விந்தை செய்தி!

  ReplyDelete
 15. ஐயா வணக்கம்
  இதே போல் வாழ்க்கையில் பல இடங்களில் செய்தால் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமே இல்லை தான் ஐயா.
  நன்றி
  கண்ணன்.

  ReplyDelete
 16. Vanakkam ayya, migavum katrukolla vendiya padam, nantri vazhga valamudan

  ReplyDelete
 17. /////Blogger GOWDA PONNUSAMY said...
  அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
  நல்ல அருமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ள பதிவு!
  நன்றியுடன்,
  -பொன்னுசாமி//////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

  ReplyDelete
 18. //////Blogger வேப்பிலை said...
  குப்பை வண்டிகளிலே தான் பலர்
  குடும்பம் நடத்துகின்றனர்...
  குப்பை இல்லாமல் இருக்க முடியாது தான்
  குப்பையை தினம் தினம் அகற்றலாம்
  அதற்க்கு தான் த்யானம் போன்ற பயிற்சிகள்.
  அதற்க்கு நேரம் இல்லாமல்.. சிலர்
  ரிமோட்-ஐ யாரிடமோ தந்து விட்டு...
  recyclebin ஆக வாஷிங் மிஷின் இல் போட்ட
  துணி போல சுத்தி சுத்தி
  துவண்டு போகிறார்கள்...///////

  நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

  ReplyDelete
 19. //////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
  மிகவும் அருமை சார்... மீள் பதிவு போல உள்ளதே!!! ஏற்கனவே தாங்கள் பகிர்ந்துள்ளீர்கள் என நினைக்கிறன்...
  நன்றி..///////.

  இல்லை. புதிய பதிவுதான் தூத்துக்குடிக்காரரே!

  ReplyDelete
 20. //////Blogger வரதராஜன் said...
  குரு வந்தனம்.
  நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிச் சித்தரிப்பின் மூலம் எத்தகைய வாழ்க்கைப் பாடம் உணர்த்தப்படுகிறது என்பது வியப்பூட்டும் செய்தி!டாக்ஸி டிரைவர் பாராட்டப்படவேண்டியவர்.
  சிந்தையைக் கவர்ந்த விந்தை செய்தி!///////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 21. /////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  இதே போல் வாழ்க்கையில் பல இடங்களில் செய்தால் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமே இல்லை தான் ஐயா.
  நன்றி
  கண்ணன்./////

  நல்லது. நன்றி கண்ணன்!

  ReplyDelete
 22. /////Blogger Vasudevan Tirumurti said...
  அருமை! அருமை!/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 23. //////Blogger Gajapathi Sha said...
  Vanakkam ayya, migavum katrukolla vendiya padam, nantri vazhga valamudan/////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 24. /////Blogger slmsanuma said...
  மிக அருமை/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 25. /////Blogger selvaspk said...
  Very nice post!
  Thanks for sharing!/////

  நல்லது. நன்றி செல்வா!

  ReplyDelete
 26. ellorukkum thevayana story thanks for sharing

  ReplyDelete
 27. Thank you sir, sharing with my friends.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com