மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.12.15

தியானத்திற்குப் புது மாதிரியான விளக்கம்!

தியானத்திற்குப் புது மாதிரியான விளக்கம்!

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.

சிறுவனிடம், "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம்
இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

மகர்ஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர்முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச்
சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர
அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை
வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான்.

சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.

"இரண்டு 'ம்' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ?" என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.

கதை முடிந்தது.

ரமணர் சொன்ன இரண்டு 'ம்' கள் வாழ்வும், சாவும் எனவும், இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே ஒருவன் தியானத்தில் அமிழ
வாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள முதிரும் காலமே வேறுபடுகிறது
=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23 comments:

lrk said...

Ayya vanakkam
Arumai ayya .
Kannan

kmr.krishnan said...

very nice

Unknown said...

vanakkam sir.super vilakkam.mahaangal always MAHAANGAL.andal rajasekaran

B. Lakshmi Narayanan, Tuticorin said...

அருமை... பகிர்வுக்கு நன்றி வாத்தியாரே!!!

அப்பறம், அந்த பாப்கார்ன் பொட்டலம் தருவீர்கள்தானே!!!


அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

siva kumar said...

உள்ளேன் ஐயா
உன்மைதான் ஐயா. நானும் இதை உனர்ந்தவன் தான்

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
Ayya vanakkam
Arumai ayya .
Kannan/////

நல்லது. நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
very nice////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

Blogger Unknown said...
vanakkam sir.super vilakkam.mahaangal always MAHAANGAL.andal rajasekaran/////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
அருமை... பகிர்வுக்கு நன்றி வாத்தியாரே!!!
அப்பறம், அந்த பாப்கார்ன் பொட்டலம் தருவீர்கள்தானே!!!
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.//////

தந்தால் போயிற்று. சற்று பொறுத்திருங்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா
உன்மைதான் ஐயா. நானும் இதை உணர்ந்தவன் தான்/////

நல்லது. நன்றி சிவகுமார்!

Shankar Ravi said...

I need email lessons.

வரதராஜன் said...

குரு வந்தனம்.
மிகவும் சுவையான பக்திப் பகிர்வு.
வாத்தியாரின் தேர்வு என்றுமே முதல்நிலை தான்.

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
இன்றைக்கு லேட் அட்டெண்டன்ஸ்!
ரமணமகரிஷி அவர்களைப் பற்றிய புதிய தகவலை அறியத்தந்தமைக்கு நன்றிகள்!!!
அன்புடன்,
-பொன்னுசாமி.

seenivasan said...

good story
thanks

Gajapathi Sha said...

Vanakkam ayya migavum arumaiyana Vazhikattuthal vazhga nalamudan

Subbiah Veerappan said...

////Blogger Shankar Ravi said...
I need email lessons./////

மின்னஞ்சல் பாடங்கள் என்று தனியாக எதுவும் இல்லை. எல்லாவற்றையும் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவில் சேர்த்துவிட்டேன். மொத்தம் உள்ள 900 பாடங்களில் அவைகளும் அடக்கம்!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
குரு வந்தனம்.
மிகவும் சுவையான பக்திப் பகிர்வு.
வாத்தியாரின் தேர்வு என்றுமே முதல்நிலை தான்.////

நான் எளிமையான ஆசாமி. என்னை அதிகமாக புகழ்கிறீர்கள். இருந்தாலும் உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
இன்றைக்கு லேட் அட்டெண்டன்ஸ்!
ரமணமகரிஷி அவர்களைப் பற்றிய புதிய தகவலை அறியத்தந்தமைக்கு நன்றிகள்!!!
அன்புடன்,
-பொன்னுசாமி.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

////Blogger seenivasan said...
good story
thanks//////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Gajapathi Sha said...
Vanakkam ayya migavum arumaiyana Vazhikattuthal vazhga nalamudan/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Kumanan Samidurai said...

அய்யா வணக்கம், அருமையான அமிர்தம் பற்றி சொன்னீர், நன்றி.அன்புடன் சா. குமணன்

Subbiah Veerappan said...

////Blogger Kumanan Samidurai said...
அய்யா வணக்கம், அருமையான அமிர்தம் பற்றி சொன்னீர், நன்றி.அன்புடன் சா. குமணன்/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குமணன்!

Chandrasekaran Suryanarayana said...

மிகவும் அருமை.
நடைமுறைப்படுத்த மிகவும் பாடுபட வேண்டும்.
கடினமான தத்துவத்தை சுலபமான முறையில் சொல்லகூடிய திறமை மகரிஷிகளுக்கு இறைவன் கொடுத்த வரம்.
தாமதமாக கருத்து தெரிவித்ததற்கு மன்னிக்கவும்.