அடேயப்பா, என்னவொரு மிரட்டல் சாமி!
இனி எவனாவது குவார்ட்டர் தாரான்,
பிரியாணி
தாரான்னு,
கொடிய பிடிச்சிட்டு அலைஞ்சா, குடலை
உருவி
உப்புக்கண்டம்
போட்ருவேன்
ஆமா!!!
--------------------------------------------------------------------------------------------------------
2
2
பேய் மழைக்குத் தெரியுமா - ஏ.சி. முத்தையா அய்யாவை?
அவர் எத்தனை பெரிய கோடீஸ்வராக இருந்தால் என்ன?
கோட்டூர்புரத்தில் உள்ள அவருடைய மாளிகைக்குள்ளும் தண்ணீர் புகுந்து, தப்பித்தால் போதும் என்ற நிலைமையில் அவரையும் படகில் பயணிக்க வைத்துவிட்டது. மனிதர் கட்டியுள்ள கைலியுடன் படகில் பயணிப்பதைப் பாருங்கள்
படத்தின் மீது கர்சரை வைத்து கிளிக்கிப் பார்த்தால் படம் பெரிதாகத் தெரியும்!
-----------------------------------------
3
3
--------------------------------------------------------------------------------------------------------------------
4
அடடே, நீங்கள்
தான் அடுத்த வீட்டுக் காரரா?
இந்த பதிவை யார் எழுதியதுன்னு
தெரியல. மிக
அருமையான பதிவு! கண்டிப்பாக படிக்கவும்!
👇
----------------------------------------------------------------------------------
பூமியை
விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய்
தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும்
பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு
நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது.
அது பேரச்சம் கலந்த வாய்ப்பு.
நிமிடம்
தோறும் ஒரு இஞ்ச், அரையடி
என உயர்ந்த தண்ணீர் சாலைகளை
விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு
வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத்
துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை
நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே
அது தளும்பத் துவங்கியது.
நதிகளிடம்
அனுமதிவாங்காமல் மனிதர்கள் காங்கிரீட் மரங்களை நட்டிருந்தார்கள். தண்ணீர்,
மனிதர்களிடம் அனுமதி வாங்காமல் நதிகளின்
பாதையை உருவாக்கிக் கொண்டன. எங்கும் தண்ணீர்.
எங்கும் பதட்டம். சென்னையில் மழை பெய்யவில்லை என்பதே
நீண்டநாள் கவலையாய் இருந்தது. ஏன் கடவுள் மழையை
சென்னைக்கு அனுப்பவில்லை என்பது இப்போது தான்
புரிகிறது.
மழை பல பாடங்களையும் கற்றுத்
தந்தது. மனிதாபிமானத்தின் கதவுகளை அறைந்து சாத்தியிருந்த
வீடுகள் கூரைகளையும் சேர்த்தே திறந்தன. தங்கள் பெயருக்குப் பின்னாலும்,
முன்னாலும் பட்டங்களையும், பதக்கங்களையும் குத்தி வைத்திருந்த மக்கள்
கழுத்துவரை தண்ணீரில், சாக்கடைகளை உதாசீனப்படுத்தி நடந்தனர்.
போர்ட்டிகோவில்
முழங்காலளவு நீரில் தெரு நதியை
வேடிக்கை பார்த்தபடி வாசலில் நின்றிருந்த என்னிடம்
ஒருவர் வந்து இரண்டு பால்
பாக்கெட்களை நீட்டினார். "உடனே காய்ச்சிடுங்க... இல்லேன்னா
கெட்டுடும்" என்றார். யாரது.. நம்மைத் தேடி
வந்து பால் பாக்கெட் தருவது
? பால் பாக்கெட் கிடைக்காமல் ஊரே நெட்டோட்டம் ஓடும்
இந்த நேரத்தில் என மனதில் குழப்ப
ரேகைகள்
'... நீங்க
?...' என
இழுத்தேன்.
பக்கத்து
வீடு தான். மாடில குடியிருக்கேன்.
என்றார். என் வீட்டை ஒட்டியபடி
இருந்தது அந்த வீடு. நாலடி
இடைவெளியில் இருந்தது வீட்டுச் சுவர். கூனிக் குறுகினேன்.
'நன்றி..
என்ன பண்றீங்க.. ' என முதன் முறையாக
விசாரித்தேன்.
கால்களுக்குக் கீழே கிடந்த ஈரம்
இதயங்களிடையே பரவியது.
மின்சாரம்
செத்துப் போய் இரண்டு நாளாகியிருந்தது.
நான்கு நாட்கள் அது உயிர்த்தெழவேயில்லை.
வீட்டுக்குள் ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து
குழந்தைகளுடனும், மனைவியுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் கதைபேசிய கணங்களில் உணர்ந்தேன் வெளிச்சம் எவ்வளவு தூரம் எங்கள்
உறவுகளுக்குள் இருட்டை விரித்திருக்கிறது
என்பதை.
இருட்டு எங்களுக்கிடையே வெளிச்சத்தை அதிகரித்திருந்தது.
சுற்றியிருந்து
கதைபேசி, விளையாடி, சாப்பிட்டு செலவிட்ட நான்கு நாட்கள் கால்நூற்றாண்டுகளுக்கு
முன் நான் வாழ்ந்த வாழ்க்கைக்குள்
என்னை இட்டுச் சென்றது. அம்மாவும்,
அப்பாவும், சகோதர சகோதரிகளும், எங்கள்
கிராமத்துத் திண்ணையும் மனதுக்குள் இதமாய் வந்திறங்கியது.
வெளிச்சம்
வீட்டில் மூலைகளுக்குள் மனிதர்களைத் துரத்தும். இருட்டோ, ஒற்றைப் புள்ளியில் எல்லோரையும்
இணைக்கும் எனும் உண்மையை நான்
உணரும் வாய்ப்பாய் அது அமைந்தது.
தொலைக்காட்சி
அமைதியாய் மூலையில் கிடந்தது. லேப்டாப்கள் மரத் துண்டுகளைப் போல
வீட்டில் மூலைகளில் கிடந்தன. வரிக்குதிரை போல கம்பீரமாய் நிற்கும்
செல்போன் சிக்னல், வட்டத்திற்குள் விட்டம் வரைந்து வெறுமனே
கிடந்தது. கைப்பிடிக்குள் இருந்த உலகம் சட்டென
கைவிட்டுப் பறந்த ஒரு பட்டாம்
பூச்சியைப் போல பறந்து மறைந்தது.
மீண்டும்
ஒரு முறை தகவல் தொடர்புகள்
இன்லென்ட் லெட்டர்களின் முதுகில் பயணித்த காலத்தில் பயணித்த
அனுபவம். செல்போன்களும், வாட்ஸப்களும், மின்னஞ்சல்களும் இல்லாத நான்கு நாட்கள்
வாசிக்கவும், நேசிக்கவும், எழுதவும் கிடைத்தவை குடும்ப உறவுகள் மட்டுமே.
பாசமிகு மனங்கள் மட்டுமே.
புள்ளி
வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல
வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை
என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய
வரப்பிரசாதமே பெருமழை.
அவசரமாய்
ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன.
நேரமில்லை என புலம்பிய மனது
அடிக்கடி சொன்னது, "அட அஞ்சு மணி
தான் ஆச்சா.. வாங்க கதை
சொல்லி விளையாடலாம்...".
நேரம் எப்போதும் நம்மிடம் இருக்கிறது. அதை டிஜிடல் ஸ்ட்ராக்கள்
உறுஞ்சிக் கொள்கின்றன என்பது புரிய வைத்த
நிகழ்வாய் அது இருந்தது.
ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம்
வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள்
நுழைந்தது போல முதன் முறையாய்
உணர்ந்தேன். மனைவி சொன்னார்,
"கரண்ட்
இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு...".
பிள்ளைகள்
சொன்னார்கள், "என்ன டாடி.. நெட்வர்க்
வந்துச்சா... போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க..."
அது மழையல்ல,
பிழைகளைப்
புரியவைத்த இறைவனின் இழை !
இந்த ஒரு பதிவை மட்டும்
எழுதிவிட்டு லேப்டாப்பை ஒதுக்கி வைப்பதென முடிவு
செய்து விட்டேன்.
==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
உண்மைதான் ஐயா! இயற்கை அல்லது இறைவனின் சன்னிதியில் ஏ சி முத்தையாவும், ஐயனாவரம் கோபாலும் ஒன்றுதான்.சமம்தான்.
ReplyDeleteசென்னை வெள்ள ஆரம்பத்திலிருந்தே ஒன்றே ஒன்றை அவதானித்தேன்;
ReplyDeleteஉயிர்ச்சேதம் மிக குறைவாக அமைந்தமையே. அந்த அளவில் இது ஒரு பெரும் அவலம் அல்ல
என்றும், மிக விரைவில் மனிதர்கள் பழைய நிலையை அடைந்து விடலாம்
என்றும் எண்ணிக் கொண்டேன்.
ஆனால், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அப்படி எங்கேனும் எழுதினாலோ,
குறிப்பிட்டாலோ பலரின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதால், உயிர் சேதத்தை
தவிர்த்த அந்த இறைவனுக்கு நன்றியை கூறிக்கொண்டதுடன் ஆறுதல் பட்டுக்கொண்டேன்.
என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதே தெரியாமல்,
ஏதோ இயந்திரம் போல்தான், ஏற்கனவே அறிவுறுத்தல் (program) பண்ணி விடப்பட்டது
போல் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றனர் இன்று மனிதர்கள் எந்த மண்ணிலுமே.
இப்படியான நிகழ்வுகள் அல்லாமல், ஒட்டுமொத்தமாக எல்லோரையும் ஒன்றாக, ஓடுவதிலிருந்து நிறுத்தி வைத்து, மனித இயல்புகளை மீட்டெடுக்க இயலாது என்பதே மிகப்பெரிய உண்மை.
உள்ளபோது இல்லாத பல, இல்லாத போது உருவாக இடமானது என்பது நல்ல திருப்புமுனையே.
சென்னை நகர வாழ்க்கை விரைவில் மீள வேண்டும் என்று விரும்புவதை விட,
அத்தியாவசிய இருப்பிட, வாழ்க்கை வசதிகளை விரைவில் அவர்கள் அடைய
வேண்டும் என்பதே தற்போதைய தேவை.
மிகுதியை அவரவர் அனுபவங்கள் செய்து விடும்.
அய்யா வணக்கம், 5 பூதங்களும் அனைவர்க்கும் சொந்தம். யாரையும் அது தனித்து பார்பதில்லை, அதைத்தான் வருண பகவான் செய்தார், அடுத்து என்ன என்பதை பொறுத்து தான் பார்க்கணும். இயற்க்கை மாற்றம் அதிகம் உள்ளது இக்காலம் முதல்,
ReplyDeleteநன்றி, அனுபுடன் சா. குமணன்.
குரு வணக்கம்.
ReplyDeleteமுதல் போஸ்ட்: கலக்கல்!
இரண்டாவது :மழைக்கு ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி சென்னையில் வாட்டியதை உணர்த்துகிறது.
மூன்றாவது : மழையை வைத்து மக்களை வேட்டையாடும் மற்றொரு "இதயமற்றசொல்" விளம்பரம்.
நான்காவது :திறமையான நாவலாசிரியராயிருப்பதற்கான எல்லா
அறிகுறிகளுமுள்ள சிறந்த வரிகளுடன் உள்ள எழுத்துக்கள்.நா. பா அவரகளை
ஞாபகப்படுத்தும் சொற்கள்!
இத்தனையும் தந்த தங்களுக்கு எங்களின் ஏகோபித்த கரகோஷங்கள்!!
தலைக்கு மேல வெள்ளம் வந்தாலும் நாங்க
ReplyDelete"அது"க்கும் மேல என தலை தூக்கும்
சென்னைவாசிகளின் வாழ்க்கையை
செழுமை படுத்தி காட்டியது இந்த பதிவு...
எடிசன் பிறந்தநாள் அன்று
இப்படித்தான் 2 நிமிடம் ஊர் முழுதும்
அவருக்கு அஞ்சலி செலுத்த
அப்படி மின்சாரத்தை நிறுத்தி வைப்பார்களாம்.
உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா?
ஊருக்குள் தண்ணீர் வந்தால்
உலக நாடுகள் கூட தமிழருக்கு
உதவும்.. ஆனால் மற்ற மாநிலத்தில்
இது போல வெள்ளம் வந்தால் கூட
இந்த தமிழன் ஆபிஸ் போயுடுவான் ...
பணம் கொடுக்க மாட்டான்
பாவப்பட்டு உதவி கூட செய்ய மாட்டான்
நியூஸ் கூட கேட்க மாட்டான்
நிஜம் தான் என சொல்பவர்கள்
ஒரு வரி எழுதி விட்டு செல்லுங்களேன்
உங்கள் நிலையை காட்ட வேண்டாம்.
குரு வணக்கம்.
ReplyDelete"அது மழையல்ல,
பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை !"_
எழுதிய ஆசிரியரின் கைகளுக்கு ஒரு "ஜே"
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteஇயற்கைக்கு முன் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடே கிடையாது ..337 பரல்தான் ..!!
வரவேற்பறையில் உலகம் .வந்து நின்றவுடன் முதலில் பிரமிப்புடன் பார்த்த நாட்கள் ..???குடும்பத்துடன் மனம் விட்டு மனசை பகிர்ந்த பொது சந்தோஷங்கள் ...ஆதங்கமாக வெளிப்பட்டது ..???அருமை ..!!
முதல் ..படம் இருக்கே 1000 அர்த்தங்கள் ...??
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஉண்மைதான் ஐயா! இயற்கை அல்லது இறைவனின் சன்னிதியில் ஏ சி முத்தையாவும், ஐயனாவரம் கோபாலும் ஒன்றுதான்.சமம்தான்./////
நல்லது. உங்களது மேலான பின்னூட்டத்திற்கு நன்றி!
//////Blogger Mrs Anpalagan N said...
ReplyDeleteசென்னை வெள்ள ஆரம்பத்திலிருந்தே ஒன்றே ஒன்றை அவதானித்தேன்;
உயிர்ச்சேதம் மிக குறைவாக அமைந்தமையே. அந்த அளவில் இது ஒரு பெரும் அவலம் அல்ல
என்றும், மிக விரைவில் மனிதர்கள் பழைய நிலையை அடைந்து விடலாம்
என்றும் எண்ணிக் கொண்டேன்.
ஆனால், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அப்படி எங்கேனும் எழுதினாலோ,
குறிப்பிட்டாலோ பலரின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதால், உயிர் சேதத்தை
தவிர்த்த அந்த இறைவனுக்கு நன்றியை கூறிக்கொண்டதுடன் ஆறுதல் பட்டுக்கொண்டேன்.
என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதே தெரியாமல்,
ஏதோ இயந்திரம் போல்தான், ஏற்கனவே அறிவுறுத்தல் (program) பண்ணி விடப்பட்டது
போல் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றனர் இன்று மனிதர்கள் எந்த மண்ணிலுமே.
இப்படியான நிகழ்வுகள் அல்லாமல், ஒட்டுமொத்தமாக எல்லோரையும் ஒன்றாக, ஓடுவதிலிருந்து நிறுத்தி வைத்து, மனித இயல்புகளை மீட்டெடுக்க இயலாது என்பதே மிகப்பெரிய உண்மை.
உள்ளபோது இல்லாத பல, இல்லாத போது உருவாக இடமானது என்பது நல்ல திருப்புமுனையே.
சென்னை நகர வாழ்க்கை விரைவில் மீள வேண்டும் என்று விரும்புவதை விட,
அத்தியாவசிய இருப்பிட, வாழ்க்கை வசதிகளை விரைவில் அவர்கள் அடைய
வேண்டும் என்பதே தற்போதைய தேவை.
மிகுதியை அவரவர் அனுபவங்கள் செய்து விடும்./////
தனி மனிதர்கள் தங்களது தேவைகளைச் சரி செய்துகொண்டு விடுவார்கள். அதற்கு இறையருள் துணை புரியட்டும் சகோதரி!
////Blogger Kumanan Samidurai said...
ReplyDeleteஅய்யா வணக்கம், 5 பூதங்களும் அனைவர்க்கும் சொந்தம். யாரையும் அது தனித்து பார்பதில்லை, அதைத்தான் வருண பகவான் செய்தார், அடுத்து என்ன என்பதை பொறுத்து தான் பார்க்கணும். இயற்கை மாற்றம் அதிகம் உள்ளது இக்காலம் முதல்,
நன்றி, அனுபுடன் சா. குமணன்.////
ஆமாம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குமணன்!
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுரு வணக்கம்.
முதல் போஸ்ட்: கலக்கல்!
இரண்டாவது :மழைக்கு ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி சென்னையில் வாட்டியதை உணர்த்துகிறது.
மூன்றாவது : மழையை வைத்து மக்களை வேட்டையாடும் மற்றொரு "இதயமற்றசொல்" விளம்பரம்.
நான்காவது :திறமையான நாவலாசிரியராயிருப்பதற்கான எல்லா
அறிகுறிகளுமுள்ள சிறந்த வரிகளுடன் உள்ள எழுத்துக்கள்.நா. பா அவரகளை
ஞாபகப்படுத்தும் சொற்கள்!
இத்தனையும் தந்த தங்களுக்கு எங்களின் ஏகோபித்த கரகோஷங்கள்!!/////
நல்லது. நன்றி வரதராஜன்!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteதலைக்கு மேல வெள்ளம் வந்தாலும் நாங்க
"அது"க்கும் மேல என தலை தூக்கும்
சென்னைவாசிகளின் வாழ்க்கையை
செழுமை படுத்தி காட்டியது இந்த பதிவு...
எடிசன் பிறந்தநாள் அன்று
இப்படித்தான் 2 நிமிடம் ஊர் முழுதும்
அவருக்கு அஞ்சலி செலுத்த
அப்படி மின்சாரத்தை நிறுத்தி வைப்பார்களாம்.
உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா?
ஊருக்குள் தண்ணீர் வந்தால்
உலக நாடுகள் கூட தமிழருக்கு
உதவும்.. ஆனால் மற்ற மாநிலத்தில்
இது போல வெள்ளம் வந்தால் கூட
இந்த தமிழன் ஆபிஸ் போயுடுவான் ...
பணம் கொடுக்க மாட்டான்
பாவப்பட்டு உதவி கூட செய்ய மாட்டான்
நியூஸ் கூட கேட்க மாட்டான்
நிஜம் தான் என சொல்பவர்கள்
ஒரு வரி எழுதி விட்டு செல்லுங்களேன்
உங்கள் நிலையை காட்ட வேண்டாம்/////
தமிழர்களின் இந்தக் குணம் கண்டிக்கத்தக்கதே! நன்றி வேப்பிலையாரே!.
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுரு வணக்கம்.
"அது மழையல்ல,
பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை !"_
எழுதிய ஆசிரியரின் கைகளுக்கு ஒரு "ஜே"/////
நல்லது. நன்றி வரதராஜன்!
//////Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
இயற்கைக்கு முன் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடே கிடையாது ..337 பரல்தான் ..!!
வரவேற்பறையில் உலகம் .வந்து நின்றவுடன் முதலில் பிரமிப்புடன் பார்த்த நாட்கள் ..???குடும்பத்துடன் மனம் விட்டு மனசை பகிர்ந்த பொது சந்தோஷங்கள் ...ஆதங்கமாக வெளிப்பட்டது ..???அருமை ..!!
முதல் ..படம் இருக்கே 1000 அர்த்தங்கள் ...??//////
நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!
தமிழர்கள் எல்லோருமே உதவா மனநிலை உள்ளவர்கள் அல்ல.
ReplyDeleteஆனால் கடந்த 20 வருடங்களில் தமிழர் மனநிலை மாத்திரமல்ல
மனிதர்கள் பலருடைய மனநிலையுமே அதிகளவில் மாறியுள்ளது.
ஆனாலும், இன்றும் நல்லுள்ளங்கள் குறைந்த அளவிலேனும் இருந்து
கொண்டேயுள்ளனர் (இலை மறை காயாக).
வாத்தியார் ஐயா அண்மையில் இட்ட பதிவில் உள்ளது போல்;
'இவர்கள் ஏன் இப்படி? என்பதிலும், இவர்கள் இப்படித்தான்' என்று
எடுத்துவிட்டு போவதே சரி.
பல சந்தர்ப்பங்களிலும், நானும் கூட இந்த மனநிலையை அவதானித்து
மனம் நொந்ததுண்டு. 'என்ன மனிதர்கள் இவர்கள்' என விசனமடைந்ததுண்டு.
ஆனால், தற்போது பாரிய தெளிவு.
'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்'
என்பதற்கேற்ப, ஆபத்தில் உதவாதவர்களுக்கு கூட, ஆபத்தில் உதவாமல்
விட இப்போதெல்லாம் மனம் ஒப்புவதில்லை. காரணம், நாம் செய்வது
மனிதாபிமானம் என்பதில் அடங்கும். அதை நமக்கு தந்த அந்த இறைவனுக்கு
நாம் செய்யும் நன்றிக்கடன். யார் கணக்கு வைக்காவிடினும், அவன் கணக்கு
வைத்துக் கொண்டே இருப்பான். என்றேனும் ஓர் நாள், நமக்கென ஆபத்து
வரும்போது, இந்த மனிதர்கள் செய்யாவிடினும், மனிதாபிமானமுள்ள
மனிதர்களை நம்மை நோக்கி வர வைப்பது அவனின் செயலே.
இவர்களுக்காக இல்லாவிடினும், நமக்காகவேனும் நம்மால் முடிந்ததை
செய்து கொண்டிருப்பதே நமக்கு நல்லது. இவ்வாறே நான் 'சுயநலம்' என்பதற்கும்
நல்லர்த்தம் கொடுப்பது.
ஆனாலும், சென்னை இயற்கை அனர்த்தத்தில் பல தமிழர்கள் உதவியதை,
உதவுவதை நாம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. மனிதம் மீண்டும்
உயிர்க்க ஆரம்பித்துள்ளதற்கு இது அடையாளம்.
அதையும் தவிர, ஒரு அனர்த்தமே பல விடயங்களை நமக்கு உணர வைப்பது.
பாடம் சொல்லித்தருவது. தலைக்கு வருவது தலைப்பாகையுடன் போகும்
மட்டும் எதுவுமே தவறாகாது. நம்மை நிறுத்தி, சில விடயங்களைப் பற்றி
ஆழ்ந்து சிந்திப்பதற்கும், சில விடயங்களை மாற்றுவதற்கும் வேறு வழி
என்பது சில சமயங்களில் இல்லாமல் இருப்பதே இயற்கை சில சமயம்
பிரம்பை கையில் எடுப்பதன் காரணம்.
'எல்லாம் நன்மைக்கே'; காலம் தாழ்த்தி அதை புரிந்து கொள்ளும் போதேனும்.
வீட்டிற்குள் தண்ணீர் வந்தது...
ReplyDeleteவந்து போன மழையால் (மட்டும்)அல்ல..
போதிய முன் அறிவிப்பு இல்லாமையே
போதும்.. இனி வேண்டும் மாற்றம்
என்ற எண்ணம் இப்போ இருக்கிறது
எல்லா தரப்பு மக்களிடமும்..
இளைய அரசியல் தலைவரை தேடுகிறது
இந்த தமிழகம்...
எனது விருப்பத்தை சொல்லி உள்ளேன்
எப்படியோ அவர் வந்தால் போட்டி இன்றி
வெற்றி பெறுவார்... அவர்
விருட் என சொல்லலாம்
நீங்கள் நினைக்கும் அவர் அல்ல...
நிதானமாக யோசித்து பாருங்கள்....
நாலு எழுது பெயர்(தமிழில்)உள்ளவர்
நல்லதையே நினைக்கும் கலாமிடம்
வளர்ந்தவர்.. நம்ம
விருதுநகரை சேர்ந்தவர்..
அவர் பிறந்த தேதி 16-07-1966
அவரை பற்றி அறிய கூகிள் இடம்
கேட்டு பாருங்கள்... அவர் விருப்பத்தை
கேட்கும் முன் நாம் அவர் ஜாதகம் பார்த்து
பலன் சொல்வோம். தமிழகம்
பயன் பெற செய்வோம்
Eyarkkai annayinai mathikkavendum meerupavargal thandanaiyilluruthu thappar enpayhar sameeppathin vellame satchi vazhga valamudan
ReplyDelete