மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label weekend post. Show all posts
Showing posts with label weekend post. Show all posts

9.7.16

Week end posts: நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

Week end posts: நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. அவனிருக்கையில் நமக்கென்ன குறை!



2. இதுதான் மத நல்லிணக்கம்! கடப்பா (ஆந்திர மாநிலத்தில்) கிடைத்த காணொளி!



3. தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்!



நன்றாக இருந்தன. உங்களுக்குஅறியத் தந்துள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
============================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.11.15

Humour: நகைச்சுவை: காக்காய் கத்துவதற்கும் அம்மா கத்துவதற்கும் என்ன வித்தியாசம்?

Humour: நகைச்சுவை: காக்காய் கத்துவதற்கும் அம்மா கத்துவதற்கும் என்ன வித்தியாசம்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
----------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
2
---------------------------------------------------------------------------------------------------------------------
3


----------------------------------------------------------------------------------------------
4
என்ன நடக்கிறது?

ரயிலை ஓட்டி வந்த டிரைவர், லெவல் கிராஸிங்கில் ரயிலை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று, அருகே இருக்கும் கடையொன்றில் மீன் வாங்கிக் கொண்டு வந்துவிட்டு, ரயிலில் ஏறி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்.

காணொளியில் உள்ளது. நீங்களே பாருங்கள்!

இது தப்பில்லையா?

நம் நாட்டில் எதுவுமே தப்பில்லை! நாம்தான் சகிப்புத்தன்மையோடு இதை எல்லாம் பார்க்க வேண்டும். மேலும் எதிர்கொள்ள வேண்டும்!


எல்லாமுமே சிரிப்பதற்கு என்றால் எப்படி? கொஞ்சம் சோகத்திற்காக ஒரு செய்தி. கீழே உள்ள பதிவைப் பாருங்கள்
----------------------------------------------------------------
Week end post: சென்னையில் மெட்ரோ ரயில் மாதிரி மெட்ரோ போட் வசதி!

சென்னை நகரத்தில் போட் வசதியா? என்ன சொல்கிறீர்கள் என்று கேட்காமல் கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்!

--------------------------------------------------------------------------------------------------
எது நன்றாக உள்ளது?
அன்புடன்,
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.11.15

Week end post: இதல்லவா காதல் மயக்கம்!!!


Week end post: இதல்லவா காதல் மயக்கம்!!!

கவியரசர் கண்ணதாசனின் காதல் பாடல்கள் - பகுதி ஒன்று  

அன்பு, பாசம், நேசம், கருணை, தியாகம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, பரவசம், காதல், கோபம், தாபம், வருத்தம், துக்கம் என்று பல கலவையான உணர்வுகளால் ஆனதுதான் மனித மனம்!

அவற்றுள் மிகவும் சக்திவாய்ந்த உணர்வு காதல் உணர்வு என்றால் அது நிதர்சனமான உண்மை!

"காதல் வந்துவிட்டால் கண் உறங்காது" என்றார் கவியரசர். கண் மட்டுமா உறங்காது? மனதின் எல்லா செயல்பாடுகளுமே மாறிவிடும். அதையும் அவர் தன்னுடைய பல பாடல்களில் சிறப்பாக விவரித்து எழுதியுள்ளார்.

ஒரு பாடலா அல்லது இரண்டு பாடலா நூற்றுக்கணக்கான காதல் பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

படத்தில் காதலர்களின் தன்மைக்கேற்ப, மனநிலைமைக் கேற்ப பல அற்புதமான பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

காதலினால் ஏற்படும் தவிப்பு, ஏக்கம், கிறக்கம், மயக்கம், வாட்டம், (பிரிவினால் ஏற்படும்) துக்கம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என்று எல்லா
உணர்வுகளுக்கும் பாட்டு எழுதியிருக்கிறார் அந்தக் கவிமாமன்னர்.

எந்த உணர்வை மேல்நிலைப் படுத்தி இந்தக் காதல் பாட்டு அத்தியாயத்தைத் துவக்குவது என்ற சிறு மனக்குழப்பம் என் மனதில் ஏற்பட்டது!.

காதல் என்ற நந்தவனத்திற்குள் வந்தாகிவிட்டது. கவியரசர் வைத்துவிட்டுப்போன பல நறுமண மலர்கள் உள்ளன. வரிசை என்ற கட்டுப்பாட்டை உடைத்துவிட்டுக் கண்ணில் படுவதை எல்லாம், படுகின்ற விதத்தில் உங்களுக்குக் கொடுப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டேன்.

இதோ காதல் வரிசையில் முதல் பாடல். பலருக்கும் இது மிகவும் பிடித்த பாடல் என்பதை இன்றும் வானொலியில் ஒலிக்கும் இந்தப் பாடல் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றது!
--------------------------------------------------
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே

(சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே..
ஹோய்...

(சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா..
ஹோய்..

(சிட்டு)

படம் : புதிய பறவை - வருடம் 1964
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகை : சரோஜாதேவி

நாயகிக்கு வந்து விட்ட காதல் உணர்வைச் சொல்ல முத்தம் கொடுத்துக் கொஞ்சும் சிட்டுக்குருவிகளையும், கடலில் கலக்கின்ற செவ்வானத்தையும் உதாரணமாகக் காட்டிப் பாடலைத் துவக்கிய கவியரசர்,
"பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே!
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே"
என்று தனக்கொரு காதல் துணை இன்னும் வரவில்லையே என்று ஏங்குவதைச் சிறப்பாகச் சொன்னதோடு, அவள் கனவு நாயகன் கிடைத்தும்கூட, அவனிடம் தன் காதலை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் வராததையும், நாணம் விடாததையும் சொன்னதுதான் இந்தப் பாடலின் சிறப்பு

அதோடு விட்டாரா?

"ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா.."

என்று நாயகியின் மன ஏக்கத்தையும் முத்தாய்ப்பாகச் சொல்லிப் பாடலை முடித்தார் பாருங்கள் - அதனால் இந்தப் பாடல் அமரத்துவம் பெற்றது!
-------------------------------------------------------------------------
மற்றொரு பாடல்.

“பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே!

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்கக் கோபுரம் போல வந்தாயே!

புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே!

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை

இந்த மனமும் இந்த உலகும்
என்றும் வேண்டும் என்னுயிரே!

ஆலமரத்தின் விழுதினைப்போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக்கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே!

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே!’’

படம்: ஆலய மணி - வருடம் 1962
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
குரல்: திரு. டி.எம்.செளந்தரராஜன்

கவியரசர் அவர்கள் எழுதிய பாடல்களில் மிகவும் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்தால், நிச்சயமாக இந்தப் பாடலும் அதில் அடங்கும்.

இந்தப் பாட்டிற்கு விளக்கம் எழுதுவது அறிவீனம் பாடலின் ஒவ்வொரு சொல்லுமே விளக்கமாக இருக்கும்.

பாடலின் முத்தாய்ப்பான வரிகள் என்ன என்கிறீர்களா?

அதைச் சொல்லாமல் இந்தப் பதிவை நிறைவு செய்வேனா? கீழே கொடுத்துள்ளேன்.

“உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே!’’

காதல் பாடல்கள் அடுத்த வார இறுதியில் தொடரும்
-----------------------------------------------------
இந்த இரண்டு பாடல்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எந்தப் பாடல்?
அன்புடன்,
வாத்தியார்

முதல் பாடலின் காணொளி வடிவம் கீழே உள்ளது.
our sincere thanks to the person who uploaded this song in the net



=====================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

20.4.13

டாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே?


டாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே?

கலக்கலான  செய்திகள் பல உள்ளன.  கடைசிவரை பொறுமையாகப் படியுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீங்கள் பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய பதிவுகளை பட்டியலிட்டுள்ளேன்

1

பன்முகத் திறமை உள்ளவரின் வலைப்பூ இது. பாரதியின் மேல் அவருக்குத் தான் எத்தனை பிரியம்! கலைகளின் மேல் எத்தனை காதல்? அவர் வயதுக்கு, பதிவுகளைப் படிப்பதே பெரிய விஷயம். ஆனால் அவர் பதிவுகளை எழுதி நம்மை ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறார். படித்துப் பாருங்கள்
http://www.bharathipayilagam.blogspot.in/
-----------------
2
இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே?

எல்லாம் கிடைக்கும் அங்கே!
அரசியல், உலகச் செய்திகள் இவற்றை நகைச்சுவை கலந்து தருகிறார். அத்துடன் தன்னைப்பற்றிய செய்தியையும் நகைச்சுவையுடனேயே தந்துள்ளார். சென்று பாருங்கள்
http://idlyvadai.blogspot.in/
----------------------
3
தான் பணிமாற்றம் பெற்று மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டதைக் கவிதை மொழியில் சொல்லியுள்ளார். படித்துப்பாருங்கள்
(தன் பெயருக்கு முன் உள்ள கவியாழி’ என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்!)
http://kaviyazhi.blogspot.in/2013/04/blog-post_18.html
------------------------------------------
4
படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. Face Book, Twitter, Cell Phone SMS, Chatting என்று எல்லாம் மாறிவிட்ட நிலையில் படிக்கும் பழக்கத்தின் அவசியத்தை சொல்லின் செல்வர் சிறப்பாகக் கூறியுள்ளார். அவர் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள்
Reading Habit - Speech by Suki Sivam
http://youtu.be/-2SGmuIiBa4
-----------------------------------------
5
நடிகர் சத்யராஜும், இயக்குனர் மணிவண்ணனும் சேர்ந்து கலக்கிய படம் அமைதிப்படை.(ஆண்டு 1994) அதில் ஒரு காட்சியின் காணொளி உள்ளது. பார்த்துத்  ரசியுங்கள்!
http://youtu.be/t_pxN1QGj3E



----------------------------------------------
6.
இன்று மக்களைக் கவர்ந்திருக்கும் யதார்த்தமான காமெடிக்கு ஒரு சிறிய காட்சி காணொளி வடிவில் உள்ளது. பார்த்து மகிழுங்கள்
Paruthiveeran Comedy
http://youtu.be/ogvTus6FuyA




-----------------------------------------------
7
இந்தவாரப் பாடல்! (கவிஞர் தனுசுவிற்கு சமர்ப்பணம்)
படம்: வத்திக்குச்சி. நடிப்பு திலீபன் & அஞ்சலி
http://youtu.be/VBI2qrGcCDE


----------------------------
8
க்யூவில் நிற்பதற்கான யோசனை! (இது நல்லாயிருக்கே!)



-----------------------------
9

இந்தவாரப் படம்!



எந்த இடம் என்று முடிந்தால் சொல்லுங்கள்!

இந்த ஒன்பதில் எது மிகவும் நன்றாக உள்ளது? ஒரு வார்த்தை சொல்லுங்கள் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

6.4.13

டாஸ்மாக் பதிவுகள் - பகுதி ஒன்று


டாஸ்மாக் பதிவுகள் - பகுதி ஒன்று

வாரக்கடைசி என்றால் பாதி மக்களுக்கு டாஸ்மாக்தான் நினைவிற்கு வரும். இது வாரக்கடைசி பதிவு. அதனால் அந்தபெயரையே தலைப்பாக வைத்துள்ளேன்!

கலக்கி அடிப்போம் வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
1
வலைப்பூக்கள் (பதிவுகள்) வந்த விதம், வளர்ந்தவிதம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உள்ள சுட்டியைக் க்ளிக் செய்து படித்துப் பாருங்கள்

http://www.seenuguru.com/2013/04/blog-post_5.html
------------------------------------------------------------------------------
2
முறையாகத் தியானம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே உள்ள பதிவைப் படியுங்கள் (எழுதியவர்.வி.பிரசன்ன குமார்)

http://vprasanakumar.blogspot.in/2013/01/blog-post_2715.html
----------------------------------------------------------------------------------------------
3
காமெடியான காதல் கதை - குறும்படம்! (Short Film)

8:35 நிமிடம் திரையில் ஓடக்கூடிய சூப்பரான குறும்படம் ஒன்று உள்ளது. அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். க்ளிக்கிப் பாருங்கள். படம் பிடித்திருந்தால்  அதன் இயக்குனர் Karty Jazz அவர்களைப் பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். பாராட்டுக்கள்தான் ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் உண்மையான  வெகுமதி! அவருடைய மின்னஞ்சல் முகவரி: kartyjazz@gmail.com

Love Story - Short Fim
http://youtu.be/Gw2m2IKLiC8
---------------------------------------------------------------------------------------------------
4.
பார்த்ததில் பிடித்தது


-------------------------------------------------------
5.
இல்லை இல்லை என்று சொல்லியே இருக்கும் எல்லாவ்ற்றையும் சொல்லிவிடுகிறார் நாயகன். அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்


காணொளி: http://youtu.be/xr5A9rUiWqQ
Our sincere thanks to the person who uploaded the clipping in the net

பாடல்: என் காதல் சொல்ல நேரம் இல்லை
படம்: பையா (2010)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தான்வி
நடிப்பு: கார்த்திக், தமன்னா
++++++++++++++++++++++++++
6
 ஏரி நன்றாக இருக்கிறதல்லவா? எந்த ஊர் ஏரி என்று தெரிகிறதா? தெரிந்தால் சொல்லுங்கள். க்ளு வேண்டுமா? கொடுத்தால் போகிறது. ஏரி இந்திய மண்ணில்தான் உள்ளது!


 இந்த 6ல்  உங்கள் மனதை மிகவும் கவர்ந்து எது?


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++