மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

16.8.19

Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா?

Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா?

ஒரு இளம் பெண்ணின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி அனுஷ நட்சத்திரக்காரர். ஜாதகி அவரது 22 ஆவது வயதில் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றுவிட்டார். மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்று படிக்க ஆசைப்பட்டார்.

அவருடைய ஆசை அல்லது விருப்பம் நிறைவேறுமா?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 18-8-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.8.19

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!!


வகுப்பறை மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் 
வாத்தியாரின் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!!!!
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை


கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை

கி.வா.ஜகந்நாதன் ஒரு ஊருக்குப் பேச்சாளராகச் சென்றார்.  அவருக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்பவர், "தங்களுக்குப் பூரி பிடிக்குமா? என்று கேட்டார். அதற்கு இவர், 'ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?' என்று சொல்ல,
அருகிலிருந்த அனைவரும் அவரது சமயோசித பதிலைக் கேட்டுச் சிரித்தனர்.

கி வா ஜ உதிர்த்த முத்து

ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வந்தார், கி வா ஜ. ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அவர் கை கழுவத் தந்தார், ஒரு அன்பர்.

சாதாரணமாக நீரில்தான் குவளை இருக்கும் !!
இங்கே குவளையில் நீர் !!

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது.

அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை.

கி.வா.ஜ உடனே  *“இம்மைக்கும் சரியில்லை,  அம்மைக்கும் சரியில்லை"* என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல, அனைவரும் ரசித்தனர்.
_________

ஒரு குழந்தைக்கு, அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ. 'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார், அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு பார்த்தார்.

பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார், *'ஊசி இருக்கிறது'* என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!
__________

கி வா ஜ ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு cough syrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
கி வா ஜ அவர்கள் இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள் என்று கேட்டார்.
___________

பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர்.

பாராட்டுரை சொல்ல வந்த கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'* என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, *"நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பே_னாவால் கௌரவிக்கிறார்"* என்றதும் மறுபடியும் கைதட்டல்
வானைப் பிளந்தது.
____________

ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க,
கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு,
கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார்.

“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.

*ஓகோ! கடை சிப்-பந்திக்குக் கடைசிப் பந்தியா?!”* என்று கேட்டார் கி.வா.ஜ.
____________

ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.

“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,

*“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!”* என்றார் கி.வா.ஜ.
கிவாஜ சிலேடையில் உச்சமான ஒன்று!!

அவரை அதே போல மடக்கிய ஒரு பெண் உண்டு தெரியுமா? -
ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள்.

கிவாஜ - *இன்னிக்கு வேணாமே!* *தொண்டை கம்மியிருக்கு...* என்றார்..

அந்தப் பெண் சொன்னாள் - *பரவாயில்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.*

ஒரு தடவை அவருக்கு போர்த்திய பொன்னாடை கிழிந்து இருந்தது...

அதற்கு அவரின் கமெண்ட்: *"இந்த பொன்னாடையில் பூ இருக்கிறது...பழம் இருக்கிறது...பிஞ்சும் இருக்கிறது...*
----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.19

ஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்!!!!!


ஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்!!!!!

ஆறுதல்_பாடல்களுக்கு_அமரகவி #கண்ணதாசன் .

"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ"

என்ற பாட்டு மூலமாக எத்தனை பேர் மாற்றுத்திறனாளிகள் ஆறுதல் அடைந்திருப்பார்கள்.

பிறருக்கு ஆறுதல் சொல்வதற்காகவே தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு படவுலகில் நுழைந்தவர் கவியரசு அவர்கள்.கன்னியின் காதலி படத்தில்

"கலங்காதே மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே "

என்ற பாடலின் மூலம் அடி எடுத்து வைத்தார் கவியரசு அவர்கள்.
காதல், வீரம், சோகம், தத்துவம், தாலாட்டு, நகைச்சுவை என ஐயாயிரத்திற்கு மேல் பாடல்கள் இயற்றி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்ச்சிகளை பாடலாக வடித்தவர்.

"மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"

இந்த பாட்டு வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனயோ கோடி பேரை ஆறுதலடையச் செய்திருக்கும் என்பதே உண்மை.

 வாழ்க்கைச் சிக்கலின் குழப்பத்தில் மயங்கி கிடந்த போது இந்தப் பாடல்தான் என் உயிரை மீட்டுத் தந்தது என்கிறார் இவர் சமகாலத்து கவிஞர் வாலி .

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராமமூர்த்தி பிரிந்த போது, விஸ்வநாதனால் அந்தப் பிரிவைத் தாங்க முடியவில்லை.

அன்று ஒரு பாடல் எழுதுவதற்காக கவியரசரும் விஸ்வநாதனும் அமர்கிறார்கள். காதல் பிரிவை தாங்க முடியாத காதலி பாடும் பாடல், இது தான் சூழல்.

" தம்பி, நீ ட்யூன் போடுகிறாயா? நான் வார்த்தை தரட்டுமா?"

கவியரசர் கேட்கிறார்.

"நீங்க வார்த்தை கொடுங்கண்ணே"

சிறிது யோசனைக்குப் பின் கவியரசர் சொல்கிறார்.

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா?"

வார்த்தைகளை கேட்டதும் விசுவநாதன் கவிஞரை நிமிர்ந்து பார்க்கிறார். தனக்கென்றே சொல்லப்பட்டது போல அவர் பார்வையை உணர்ந்து கொண்ட கவிஞர் மெளனமாக சிரித்தபடியே தலையசைத்து மேலே தொடர்கிறார்.

 ராமமூர்த்தி பிரிந்த துயருக்கு அது ஆறுதலாக இருந்தது. கவியரசர் எதையும் திட்டமிட்டுப் பாடுவதில்லை. சூழலைப் பொருத்து அந்தப் பாத்திரமாகவே மாறி உணர்ச்சிகளைப் பாடலாகக் கொண்டு வருகிறார்.

 "மனைவி அமைவதெல்லாம்
  இறைவன் கொடுத்த வரம்"

என்ற பாடலைக் கேட்டு கண் கலங்காதவர்களே இல்லை. ஏன், கவியரசரே ஒரு கணம் கண்களைத் துடைத்துக் கொண்டார். நல்ல மனைவியைப் பெற்றவர்கள் ஆனந்தமும், வாய்க்கப் பெறாதவர்கள் இந்தப் பாடலைக் கேட்டு ஆறுதலும் அடைந்தனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் கவிஞருக்கு கடிதம் எழுதி வாழ்த்தியது மட்டுமின்றி நன்றியும் தெரிவித்தனர்.

மகனைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் ஏழை ஒருவர் , மகன் அவ்வாறில்லாமல் தீய வழியில் செல்கிறான் என்றறிந்து அந்த ஏழை தந்தை படும் வேதனையை சூழலாகக் கொண்டு பாடல் பாடுகிறார்

"வளர்த்த கடா முட்ட வந்தால்
வச்ச செடி முள்ளானால்
போன ஜென்மப்பாவமடி அம்மாளு "

இதைப் பாடும் போது திரு.டி.எம்.எஸ் அவர்களால் பாட முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. இப்படி ஒரு சூழல் டி.எம்.எஸ் வாழ்விலேயே அப்போது சம்பவித்திருந்தது.

1962 தேர்தலில் தனது நண்பரின் வெற்றிக்காக கவிஞர் பெரும் முயற்சி செய்தார். இதில் நண்பர் தோற்றதை கவிஞரால் தாங்க முடியவில்லை.

 அப்போது பலே பாண்டியா படத்திற்கு ஒரு தத்துவப் பாடல் எழுத வேண்டி வந்தது. வார்த்தைகளில் இந்த நிகழ்ச்சியைப் பிரதிபலித்தார் கவிஞர்.

"யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியலே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியலை "

என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார். சென்ற நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு கண்ணதாசனே புகழைக் குவித்தவர். பாரதியாரைப் படித்தவர்கள் மட்டுமே பயின்றார்கள்.

கவியரசர் கண்ணதாசனையோ படித்தவர்கள் மட்டுமின்றி பாமரர்களும் பயின்றார்கள்.இந்த நூற்றாண்டிலும் அது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.19

வாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்!!!


வாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்!!!

அருமையான செய்யுள் !

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன!
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தை தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்து செட்டியாரே"*

எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடலில் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்

வெங்காயம் ---- (வெண்+காயம்) வெண்மையான உடல்
சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காய்ந்தால் சுக்கு)
வெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்
ஆவதென்ன - ஆவது ஒன்றுமில்லை
இங்கார் - - - - - - (இங்கு + ஆர்)  இப்பூலகில் யார்
சுமந்திருப்பார் இச்சரக்கை ---  அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்
மங்காத ---- குறைவில்லாத
சீரகம் --- வைகுந்தம்
(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)
தந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்
ஏரகத்து - - - (ஏர் +அகம்)
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்
செட்டியாரே! -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!
தேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்

 வெண்மையான உடல் சுருங்கி போனால்  வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்  ஆவது ஒன்றுமில்லை
 இப்பூலகில் யார் அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்
 குறைவில்லாத வைகுந்தம்  அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)  நீ கொடுத்துவிட்டால்
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும் அனைத்து  செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!
 இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்
------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.8.19

Astrology: Quiz: புதிர்: 9-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 9-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஜாதகருக்கு அவரது 27 ஆவது வயதில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால் ஜாதகருக்கு முன்பு பார்த்த வேலையிலும் சரி இப்போது கிடைத்த வேலையிலும் சரி பிடித்தம் இல்லை. எதைப் பார்த்தாலும் வெறுப்பு, மன அழுத்தம் மிகுந்திருந்தது. ஜாதகப்படி அதற்குக் காரணம் என்ன? அது எப்போது சரியாகும்? அல்லது நிவர்த்தியாகும்?

பதில்:

தனுசு லக்கின ஜாதகம். சந்திரன் தான் மனகாரகன். மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவர்தான். சந்திரன் எட்டில் அதுவும் தேய்பிறை அவதாரத்துடன். தேய்பிறைச் சந்திரன் தீயதாகும். அத்துடன் அவருடன் கேது கூட்டாக உள்ளார். அதுவும் இல்லாமல் கேது மகா திசை நடப்பு. இந்த அமைப்புக்கள்தான் ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தங்களுக்குக் காரணம். 30 வயதாகும் போது அவருக்கு சுக்கிர மகாதிசை துவங்கும். சுக்கிரன் 7ல் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கிறார். லக்கினத்தில் இருக்கும் லக்கினாதிபதி குருவின் பார்வையால் சுக்கிரன் பல நன்மைகளை வாரி வழங்குவார். அந்த கால கட்டத்தில் எல்லாம் நிவர்த்தியாகிவிடும்

இந்தப் புதிரில் 4 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன!!!!

அடுத்த வாரம் 16-8-2019 வெள்ளிக்கிழமைஅன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
Blogger V Narayanan, Puducherry said...
கேள்விக்கு பதில் இருக்கட்டும்.
வாத்தியாரை full form ல் பார்ப்பது, இனம் புரியாத ஒரு சந்தோஷத்தை தருகிறது.
வெ. நாராயணன்
புதுச்சேரி
Friday, August 09, 2019 10:39:00 AM

உங்களின் மேலான அன்பிற்கு நன்றி நண்பரே!!!!!
----------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 8 ஆகஸ்டு 1972 மாலை 4 மணி 46 நிமிடங்கள் 30 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
ஜாதகருக்கு 10 ஆம் அதி பதி எட்டாம் இடத்தில் அமர்ந்து சூரியனால் அஸ்தங்கதமும் அடைந்ததால்
இவருக்கு வேலை மாறுதல் அதிகம் இருக்கலாம். அல்லது மனத்திற்குப்பிடித்த வேலை இல்லாமல் இருக்கலாம். சுய வர்கத்தில் சனீஸ்வரனுக்கு 7 பரல் கிடைத்து ஓரளவு வலிமை பெற்றதால் வேலை என்று எப்போதும் ஒன்று இருக்கும்.
தற்சமயம் சுக்கிரதசா புதன் புக்தி 30 ஆகஸ்டு 2020 வரை உள்ளது. இது கொஞ்சம் நல்ல நேரம் தான். அதன் பின்னர் வரும் கேது புக்தியில் 30 அக்டோபர் 2021ல் அலுவலகத்தில் சண்டையிட்டு வெளியேறுவார்.
அடுத்துவரும் சூரியதசா 6 வருடங்கள் நன்றாக இருக்க வாய்ப்பு. ஏனெனில் அது 9ம் இடத்தவனின் தசா. அதற்கு அடுத்துவரும் சந்திரதசா 10 ஆண்டுகள் பாதிப்பலன் கொடுக்கும். எப்படியாயினும் இவருக்கு சந்தோஷம் வேலையில் கிடைக்கவே கிடைக்காது. மனோகாரகன், 10ம் அதிபன் 5ம் அதிபன் செவ்வாய் ஆகியோர் அஸ்தங்கம் அடைந்ததால் மன உளைச்சலும், வேலையில் அலைக்கழிப்பும் தொடர்கதை தான்.
Friday, August 09, 2019 2:49:00 PM
-----------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
தனுசு லக்கினம், ஆறாம் அதிபதியின் தசை, சுக்கிர தசை நன்மை செய்வதாக அமையவில்லை.
பத்தாம் அதிபதி, பாக்கியாதிபதி, மனோகாரகன் யாவரும் 8 இல் மறைவது, வெறுப்பு மற்றும் மன அழுத்தத்தினை அளித்திருக்கும். 
நிலைமை சூரிய தசையில் ஓரளவு சரியாகவும் செவ்வாய் தசையில் நிவர்த்தியாகவும் கூடும்.
Saturday, August 10, 2019 5:16:00 PM
-----------------------------------------------
3
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
மிக நீண்ட நாளுக்கு பிறகு தங்கள் புதிர் வந்து உள்ளது .. அதற்கான பதில் :
ஜாதகரின் வேலையின் மீதான வெறுப்பு விருப்பு விற்கான காரணங்கள் :
1 . ஜாதகருக்கு புதன் தசையில் சனி புக்தியில் வேலை கிடைத்தது. ஆனால் அதன் மீது ஜாதகருக்கு பிடித்தம் இல்லாமல் போனது . ஏனென்றால் புதன் ஆனது ஜாதகரின், ஜாதகரின் பத்தாம் இடத்து அதிபதி ஆவர். பத்தாம் இடமானது ஒருவரின் வேலையையும் , வேலை செய்யும் துறையையும் குறிக்கும் இடம் ஆகும். ஆதலால் பத்தாம் இடத்து அதிபதி புதன் மற்றும் கர்மகாரகன் சனியின் புக்தியில் வேலை அமைந்தது. ஆனால் லக்கின அதிபதி குரு விற்கு ஒண்ணாம் நம்பர் வில்லன் புதன் ஆவார் . மேலும் புதன் எட்டில் மறைந்து ராகு பார்வை பெற்று கேது வுடன் கூட்டணியில் உள்ளதால் மனக்கசப்பை மேலும் வேலை மீது அதிக படுத்தியது.
2 . மேலும் எட்டாம் இடத்தின் அதிபதி மற்றும் எட்டாம் இடத்தில் அமர்ந்த கிரகங்கள் பொதுவாக நல்ல பலன்களை தராது. அது கஷ்டங்களை தான் அதிக படுத்தும். அந்த வேலையை புதன் சரியாக செய்தது. மேலும் அது ஆறாம் இடத்தில் அமர்ந்த சனியின் பார்வையில் உள்ளதால் கஷ்டங்களை அதிக படுத்தியது.
3 . இந்த நிலை பின்னர் 22 வயதில் வந்த கேது தசையிலும் 29 வயதில் வந்த சுக்கிர தசையிலும் தொடர்ந்தது. அது 49 வயதில் வந்த சூரிய தசையிலும் ஓரளவு சரியானது என சொல்லலாம். ஆனால் முழுவதும் சரியாகி இருக்காது. ஏனென்றால் சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் கேது பிடியில் எட்டாம் இடத்தில் உள்ளது.
நன்றி
ப சந்திரசேகர ஆசாத்
MOB: 8879885399
Saturday, August 10, 2019 6:48:00 PM
-----------------------------------------------
4
Blogger Lokes said...
பிறப்பு 08-08-1972, 16:40, சென்னை.
சனி தசையின் இறுதியில் பிறந்த ஜாதகர்க்கு, தன் 6 வயது முதல் 23 வயது வரை நடந்த 10 க்குரிய சுய சாரத்தில் கேதுவின் பிடியில் அமர்ந்த புதன் தசையில் வேலை அமையவில்லை. தொடர்ந்து வந்த குருவின் சாரம் வாங்கிய கேது தசையின், குரு புத்தியில் வேலை கிடைத்திருக்கும். 10 ஆம் வீட்டு அதிபதி புதன் 8 ஆம் வீட்டில் ஆட்சிபலம் பெற்ற சந்திரனுடன் அமர்ந்து, சனி பார்வையிலிருக்க கிடைத்த வேலை பிடிக்காமல் வெறுப்பு மிஞ்சியது. மேலும் 10 க்குரிய புதனே மாரக-பாதகஸ்தானமான 7 குரியவன் என்பதால் வேலை கொடுத்து அதன் விளைவாக பாதகம் செய்வான். தனுசு லக்கினமாகி, லக்கினாதிபதியும் ஜாதகத்தின் முழுமுதற்சுபருமான குரு 1 ஆம் வீடாகிய முதல் கேந்திரகோணத்தில் அமர்ந்து, 11 குரிய பாதகாதிபதியின் பார்வையில் அமர்ந்ததால், ஜாதகர் தன் நல்ல குணத்தால் எளிதில் பிறரால் ஏமாற்றப்பட்டு பின்பு வருந்துபவராக இருப்பார். மனோகாரகன் சந்திரனுடன் கேது 10 டிக்ரீக்குள் இணைவு. சுக்கிர தசை முதல் சற்று நிம்மதியடைந்திருப்பார்
Sunday, August 11, 2019 1:53:00 AM
--------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.8.19

Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன?


Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் பூச நட்சத்திரக்காரர். ஜாதகருக்கு அவரது 27 ஆவது வயதில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால் ஜாதகருக்கு முன்பு பார்த்த வேலையிலும் சரி இப்போது கிடைத்த வேலையிலும் சரி பிடித்தம் இல்லை. எதைப் பார்த்தாலும் வெறுப்பு, மன அழுத்தம் மிகுந்திருந்தது. ஜாதகப்படி அதற்குக் காரணம் என்ன? அது எப்போது சரியாகும்? அல்லது நிவர்த்தியாகும்?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 11-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
====================================================================

8.8.19

எது கெடும் ? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!!!!!


எது கெடும் ? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!!!!!

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) திகட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பம் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு

படித்ததில் அசந்தது....☝
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.8.19

நீங்களும் உங்கள் நட்சத்திரத்திற்கான மரமும்!!!!


நீங்களும் உங்கள் நட்சத்திரத்திற்கான மரமும்!!!!

உங்களது *பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம்* எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

*அஸ்வினி*
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

*பரணி*
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

*கார்த்திகை*
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

*ரோஹிணி*
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

*மிருகஷீரிஷம்*
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

*திருவாதிரை*
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

*புனர்பூசம்*
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

*பூசம்*
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

*ஆயில்யம்*
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

*மகம்*
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

*பூரம்*
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

*உத்திரம்*
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

*ஹஸ்தம்*
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

*சித்திரை*
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

*சுவாதி*
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

*விசாகம்*
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

*அனுஷம்*
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

*கேட்டை*
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

*மூலம்*
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

*பூராடம்*
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

*உத்திராடம்*
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

*திருவோணம்*
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

*அவிட்டம்*
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

*சதயம்*
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

*பூரட்டாதி*
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

*உத்திரட்டாதி*
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

*ரேவதி*
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய  நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
 சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லை யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற  பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

*மரங்களை* சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது..  திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்..  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் *விருட்சங்களின்* அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் ..

எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்.

என்றும் இயற்கையை நேசிக்கும்
--------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.8.19

வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!


வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!

ஆவுடையார் கோயில்  -  ஆத்மநாதசுவாமி கோயில்

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil) இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார் கோயில் வட்டத்திலுள்ள, தேவார பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும்.

மூலஸ்தானத்தில், சுவாமி - அம்பாள் சிலைகள் இருப்பது தான் வழக்கம்; ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் சிவலிங்கத்துக்கு பதிலாக குவளையும்,
அம்பாளுக்கு பதிலாக பாதமும் மட்டுமே உள்ளது.

பொதுவாக, சிவாலய மூலஸ்தானங்களில், ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும்; ஆனால், இங்கு, வெறும் ஆவுடையார் மட்டுமே உள்ளது.
லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் குவளை சாத்தப்பட்டுள்ளது.
குவளை உடலாகவும், உள்ளிருக்கும் உருவமற்ற பகுதி ஆத்மாவாகவும் கருதப்படுவதால், சுவாமிக்கு, 'ஆத்மநாதர்' என பெயர் வந்தது.

கோவில்களில் தீபாராதனை தட்டைத் தொட்டு, பக்தர்கள் கண்ணில் ஒற்றிக் கொள்வர். ஆனால், இங்கு, சுவாமிக்கு தீபாராதனை செய்த தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. ஆவுடையாருக்கு பின்புறம் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியனாகவும், சிவப்பு - அக்னியாவும், பச்சை நிறம், சந்திரனாகவும் கருதப்படுகின்றன.

சுவாமிக்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றை வணங்கினாலே தீபாராதனை தட்டை வணங்கியதற்கு சமம் என்பதால், அதை வெளியில் கொண்டு வருவதில்லை.

அதேபோன்று, பொதுவாக, சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கியும், சில
மேற்கு பார்த்தவாறும் இருக்கும். ஆனால், ஆவுடையார் கோவில் தெற்கு நோக்கி உள்ளது.

சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும்
நிலையை, தட்சிணாமூர்த்தி என்பர்.

'(தட்சிணம்)' என்றால் தெற்கு; சிவன்,

மாணிக்கவாசகருக்கு குருவாக உபதேசம் செய்த தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

சூரிய, சந்திர கிரகணங்களின் போது கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இங்கு கிரகணநாளில், ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆதியந்தம் இல்லாத உருவமற்ற சிவனுக்கு, எக்காரணத்தாலும் பூஜை தடைபடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

அம்பாளின் பெயர் யோகாம்பாள்; இவளுக்கும் உருவம் இல்லை.
சிவனை மீறி, தட்சனின் யாகத்திற்கு சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, இத்தலத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல், உருவத்தை மறைத்து தவம் செய்தாள். எனவே, அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை.
அவள் தவம் செய்த போது பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இப்பாதத்தை கண்ணாடியில் பிரதிபலிக்க செய்துள்ளனர்.

இவளது சன்னிதி அடைத்தே இருக்கும் என்பதால், சன்னிதி முன் உள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.

ஆத்மநாதர் முன் உள்ள படைக்கல்லில், புழுங்கல் அரிசியில் சமைத்த
சூடான சாதத்தை ஆவி பறக்க கொட்டுவர்.

அப்போது சன்னிதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும்.

சுவாமி உருவமற்றவர் என்பதால், உருவமில்லாத ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது.

இது தவிர பாகற்காய் மற்றும் கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படும்.

வித்தியாசமான நடை முறைகள் கொண்ட இக்கோவிலை, வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!

1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்!

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே
சொல்லி அடக்கி விட முடியாது.

அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோயில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே
இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.

மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்

இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால்
அது ஏட்டில் அடங்காது.

இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்தது

கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோனாட்டிற் கெல்லையெனச் சொல்

என்றும்

வெள்ளாறதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி

என்றும்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்தார்
தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற
சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது.

அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.

இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருநெல்வேலி,  திருவாரூர், ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில்
உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில்
மிகவும் பெரிய தேர்களாகும்.

இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும்.
சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.

50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.

50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர்

இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட கற்சிலைகள் இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும் போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும்.

வடக்கயிறு:-

இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும்.

உருவம் இல்லை - அருவம்தான்:-

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில்
மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில்
எந்த விதச் சிலையும் கிடையாது.

அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில்
என்பது சொல்லாமலே விளங்கும்.

பூதம் கட்டிய கோயில்:-

ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.

கொடுங்கை:-

கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள்  கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில்  (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை
ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும்
இரண்டரையடி கனமும் உள்ளதாகும்.

இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி
செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

ஒரே கல்லிலான கற்சங்கிலி:-

கல் வளையங்களாலான சங்கிலி
இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான
கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.

படைகல்:-

இங்கே மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்திலே படைகல் என்கிற ஒரு திட்டுக்கல் இருக்கிறது. இந்தத் திட்டுக்கல் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். இந்தத் திட்டுக்கல்லில்தான்
6 கால பூசைகளுக்கும் உரிய அமுதினை வடித்துப் படைத்து ஆற வைக்கிறார்கள்.

புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்:-

எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே
அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள்.
ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான்.

அணையா நெருப்பு:-

கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும்
அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை.

பாண்டியர் - சோழர் - நாயக்க மன்னர்கள் கட்டியது!

இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.

இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன்
கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்ய
சோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது.

உருவமற்ற அருவக் கோயில்:-

தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது.

அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம். இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும்.

தேவதாரு மரம்:-

மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பதும் தேக்கு மரங்கள் நூற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்தது
என்பது நமக்குத் தெரியும். ஆனால் இக்கோயிலில் பயன்படுத்தியுள்ள தேவதாரு மரங்களோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரங்கள் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம்.

இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது.

வற்றாத திருக்குளம்:-

இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றாத திருக்குளமும் மூல விருட்சமான குருந்த மரமும் 96 அடி உயரம் 51 அடி அகலம் உடைய ராஜகோபுரம் ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் கருவறைக்கு
மிக அருகில் 2 கிணறுகள் உள்ளன இதில் 5 அடி ஆழத்தில் இன்றும்
தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம்.

கவிபாடும் கற்சிலைகள்:-

உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன.

அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.

இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.

நவநாகரீக நகைகள்:-

தற்காலிக நவநாகரீக நகைகள் கல்லூரி மாணவிகளும் உயர்தர குடும்பப் பெண்களும் அணிகின்ற நவீன அணிகலன்கள் தங்க நகைகள் சங்கிலிகள் போன்ற எந்த ரக நகையானாலும் அவையனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே இங்குள்ள சிலைகளிலே வழங்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.

நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும்.

இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப்
பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும்.

குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும்.

பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும்.

நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும்.
இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச
கல்யாணி குதிரையாகும்.

சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.

வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தி

இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.

இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும்.

இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின்
ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.

1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடி

இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நாமும் வாழ்க்கையில் ஒரு முறை கண்டிப்பாக இந்த அதிசய ஆலயத்தை தரிசித்தது வரலாமே!!!!!

திருச்சிற்றம்பலம்!!!!!

https://ta.wikipedia.org/wiki/ஆவுடையார்_கோயில்_ஆத்மநாதசுவாமி_கோயில்
----------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.8.19

எனது கஷ்டங்கள் எப்பொது தீரும்?


எனது கஷ்டங்கள் எப்பொது தீரும்? 

இன்று சந்திரனை வைத்து, அந்த தலைப்பிற்குரிய கஷ்டங்களை எப்படி அலசுவது என்று பார்ப்போம்!

சந்திரன் மனகாரகன் அதோடு தாய்க்குக் காரகன்.

(He is the authority for mind and Mother)

ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் பெரிய மனக்கஷ்டங்கள் இருக்காது.

வலு என்றால் என்ன?

1. சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்கும் நிலைமை

2. தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாத நிலைமை

3. கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருக்கும் நிலைமை

4. சுய அஷ்டகவக்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் நிலைமை.
++++++++++++++++++++++++++++++
அப்படி வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும்?

தேவையில்லாத மனக்குழப்பங்கள், கவலைகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.

தீய கிரகங்களுடன், குறிப்பாக சனி அல்லது ராகுவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால், மனம் போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும். வாழ்க்கை எதிர் நீச்சல் போடும் படியாக இருக்கும்.

எதற்கும் கவலைப்படத்தோன்றும். எதிலும் சந்தேகம் தோன்றும். யாரையும் நம்ப முடியாத சூழ்நிலை உருவாகும்.

உதாரணத்திற்கு பஸ்ஸில் ஏறி, பஸ் புறப்பட்ட பிறகு, வீட்டைச் சரியாகப் பூட்டிவிட்டு வந்தோமா என்று சந்தேகம் தோன்றும். ஜாதகத்தின் வேறு அம்சங்களை வைத்து, சிலருக்குக், கணவன் அல்லது மனைவியுடன் கருத்து வேற்றுமை தோன்றி, சண்டை சச்சரவுகள் நிறைந்திருக்கும். மொத்தத்தில் சந்திரன் வலுவாக இல்லையென்றால் மனதில் நிம்மதியாக இருக்காது.

ஐந்தாம் வீடு மனதிற்குள்ள வீடு. (House of mind).ஜாதகத்தில் ஐந்தாம் வீடும் ‘வீக்’ காக இருந்து, சந்திரனும் வீக்’காக இருந்தால், மனதிற்குள் நிரந்தரமான கவலை குடிகொண்டுவிடும். அது எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். வீடு, வாசல், கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், உடல் நலம் என்று எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்

மேற்கூறிய அனைத்தும் நிரந்தரக் கஷ்டத்தில் வரும். இப்போது சந்திரனை வைத்துத் தற்காலிகக் கஷ்டத்தைப் பார்ப்போம்!

சந்திரன் 27 நாட்களுக்கு ஒருமுறை தனது சுற்றை முடிக்கும். சராசரியாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திரம். நட்சத்திரம் ஆரம்பிக்கும் நேரமும், முடியும் நேரமும், ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு நாளிற்கு உரிய நட்சத்திரம் எப்பொது ஆரம்பிக்கும் மற்றும் எப்போது முடியும் என்பது பஞ்சாங்களிலும் குறிக்கப்பெற்றிருக்கும், அத்துடன் செய்தித்தாள்களிலும் தினசரி குறிப்பிட்டு எழுதுவார்கள்.

உதாரணத்திற்கு இன்று (31.3.2010) சித்திரை நட்சத்திரம் இரவு 9:30 மணி வரை, அதற்குப் பிறகு சுவாதி நட்சத்திரம் நாளை (1.4.2010) இரவு 9:10 மணி வரை. இப்படியே அடுத்தடுத்து நட்சத்திரங்கள் மாறிக்கொண்டிருக்கும்.

உங்கள் நட்சத்திரத்தைவைத்து நீங்கள் என்ன ராசிக்காரர் என்பதை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அன்றையத் தேதியில் என்ன நட்சத்திரம் என்று பாருங்கள். அட்டவணை கொடுத்துள்ளேன். அதை வைத்து உங்கள் ராசிக்கு எத்தனையாவது ராசியில் அன்றையச் சந்திரன் இருக்கிறார் என்று பாருங்கள்.

அது உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடம் அல்லது 12ஆம் இடமாக இருந்தால் அன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காது. நினைத்த காரியம் நடக்காது. வெட்டி அலைச்சலாக இருக்கும். முக்கியமான காரியங்களை அன்று செய்தால் அது தோல்வியில் முடியும். சுருக்கமாகச் சொன்னால் That will not be your day!

அதை வைத்துத்தான் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் பத்திரிக்கைகளில் தினப்பலன்களை எழுதுகிறார்கள்.

ஒரு ராசிக்காரருக்கு அன்றைய நட்சத்திரம் 2ஆம் ராசியில் இருந்தால் தன லாபம் என்று எழுதுவார்கள். ஏழில் இருந்தால், மனைவியுடன் அந்நியோன்யம் என்று எழுதுவார்கள். 5ல் இருந்தால் மனமகிழ்ச்சி என்று எழுதுவார்கள்.

கோச்சார சந்திரன் (Transit Moon) உங்கள் ராசிக்கு 6, 8, 12 ஆம் இடங்களில் இருக்கும் அல்லது நகரும் நாட்களில், உங்களுக்கு காரிய சித்தி (காரிய ஜெயம்) இருக்காது. நல்ல காரியங்களைச் செய்வதற்கு அவற்றைக் கண்டறிந்து ஒதுக்குவது நல்லது.

உதாரணத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கோ அல்லது ஒரு மருத்துவரிடம் பரிசோதனைக்குப் போவதற்கோ அல்லது பெண்பார்க்கப் போவதற்கோ அல்லது முக்கியமான வெளியூர்ப் பயணங்களுக்கோ அந்த தினங்களை விலக்குவது நல்லது.

1. The transiting Moon in houses from the natal Moon will show the attitude a person has on any given day.
2. It is ideal to have the Moon in a good position from the natal Moon for daily events to run smoothly.

ராசிக்கான நட்சத்திரங்கள்:

மேஷம்: அஸ்விணி, பரணி , கார்த்திகை (1 பாதம்)
ரிஷபம்: கார்த்திகை (2, 3 & 4),ரோகிணி, மிருகசீர்ஷம் (1 & 2)
மிதுனம்: மிருகசீர்ஷம் (3 & 4) திருவாதிரை, புனர்பூசம் (1, 2 & 3)
கடகம்: புனர்பூசம் (4ம் பாதம்) பூசம், ஆயில்யம்

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் (1ஆம் பாதம்)
கன்னி: உத்திரம் (2, 3 & 4) ஹஸ்தம், சித்திரை (1 & 2)
துலாம்: சித்திரை (3 & 4), சுவாதி, விசாகம் (1,2 & 3)
விருச்சிகம்: விசாகம் (4ஆம் பாதம்) அனுஷம், கேட்டை

தனுசு: மூல, பூராடம், உத்திராடாம் (1ஆம் பாதம்)
மகரம்: உத்திராடம் (2, 3 & 4) திருவோணம், அவிட்டம் (1 & 2)
கும்பம்: அவிட்டம் (3 & 4), சதயம், பூரட்டாதி 1, 2 & 3)
மீனம்: பூரட்டாதி (4ஆம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி

என்ன பாடம் புரியும் படியாக உள்ளதா?

ஒரு வரி எழுதுங்கள்

அன்புடன்
வாத்தியார்

பின் குறிப்பு:  இது பெண்களுக்கு மட்டும்:  மாதவிடாய் (periods)  அதாவது மாதத்தில் 3 நாட்கள் வீட்டு விலக்கு, இந்தச் சந்திரனின் சுற்றை வைத்துத்தான் ஒவ்வொரு மாதமும் உண்டாகும். சந்திரனும் செவ்வாயும் வலுவாக இல்லை என்றால் மாதவிடாய்க் கோளாறுகள், அதைவைத்து அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்!
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.8.19

உலகத்தையே ஆட்டிவைத்த மனிதரின் ஜாதகம்


உலகத்தையே ஆட்டிவைத்த மனிதரின் ஜாதகம்

முன்பு, அதாவது எட்டாண்டுகளுக்கு முன்பு, கோச்சிங் வகுப்பு என்ற பெயரில் தனி வகுப்பு ஒன்றை நடத்தினேன். அதில் பயிற்சிப் பாடகமாக நடத்திய பாடத்தை நீங்கள் அனைவரும் (வகுப்பில் உள்ள புது முகங்கள் உட்பட அனைவரும்) படித்துத் தெரிந்து கொள்ள இன்று வலை ஏற்றியுள்ளேன்

அடால்ஃப் ஹிட்லர்

இந்தப் பெயரை அறியாதவர்கள் இருக்க முடியுமா? உலகம் முழுவதும் அறிந்த பெயர். உலகையே ஆட்டிவைத்த பெயர். இரண்டாம் உலக யுத்தத்தின் நாயகனே அவர்தான். 1933 முதல் 1945 வரை சுமார் 12 ஆண்டுகள் அவர் தலைமைப் பதவியில் இருந்தார். எண்ணற்ற நாடுகளை யுத்தங்களின் மூலம் தன் வசப்படுத்தினார். ஜெர்மனியை வல்லரசாக்க வேண்டும் என்ற அவருடைய கனவு நிறைவேறவில்லை. அது அவரையே காவு வாங்கியது.

பிறந்தது: 20.4.1889 - தற்கொலை செய்து கொண்டு இறந்தது: 30.4.1945 மொத்தம் வாழ்ந்தது 56 ஆண்டுகளே ஆயினும் உலக சரித்திரத்தில் தனக்கென்று ஒரு பெயரை நிலை நிறுத்திவிட்டுப்போனார்.

அவருடைய ‘நாஜி’ படையால் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை தெரியுமா? மொத்தம் ஒரு கோடி எழுபது லட்சம் மக்கள். அதில் 60 லட்சம் யூத இனத்தைச் சேர்ந்த மக்களும் அடக்கம்.

முழுமையாக அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள சுட்டியை அழுத்திக் கிடைக்கும் பகுதியைப் படியுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Adolf_Hitler
-------------------------------------------------------------------------
அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம்Example horoscope for the terrible desire of power

பதவி, அதிகாரம், அந்தஸ்து, ஆகியவற்றின் மேல் யாருக்குத்தான் ஈடுபாடு இருக்காது? இருந்தாலும் அதை தன் முனைப்போடு சாதித்துக் காட்டுவதற்கு ஜாதகமும் துணை செய்ய வேண்டுமல்லவா?

ஒருபடி மேலே சென்று சொன்னால், பதவி, அதிகாரம், அந்தஸ்து, ஆகியவற்றின் மேல் ஈடுபாடு, ஆர்வம், பக்தி என்று இல்லாமல் வெறியும் கொண்டு அலைந்தவர்களில் முதன்மையானவர் ஹிட்லர் என்று சொன்னால், மறுப்பதற்கில்லை. அவருடைய ஜாதகமும் அதைத்தான் சொல்கிறது.

பத்தாம் வீட்டின் மேல் செவ்வாயின் பார்வை விழுந்தவர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் மற்றகிரகங்களின் அமைப்பும் சேர்ந்து அதைச் சாதிக்கவைக்கும்.

முதலில் ஹிட்லரின் லக்கினத்தைப் பாருங்கள். துலா லக்கினம். லக்னாதிபதி சுக்கிரன் 7ல், ஏழாம் வீட்டுக்காரன் செவ்வாயுடன் சேர்ந்து லக்கினத்தைப் பார்க்கின்றார். ஒரு இடத்தில் இருப்பதைவிட, பார்வைக்கு வலிமை அதிகம்.
அத்துடன் உச்சம் பெற்ற லாபாதிபதி சூரியனும் அந்த இடத்தில் கூட்டாக இருக்கிறார். அவருடன் பாக்யாதிபதி புதனும் சேர்ந்து கொண்டுள்ளார். 4 வலிமையான கிரகங்கள் ஏழில். அவைகள்தான் அவருக்கு உலகப் புகழைக் கொடுத்தன. அதே 4 கிரகங்கள்தான் அவருக்கு ஆளுமை சக்தியைக் கொடுத்தன. மற்றவர்களின் பலவீனத்தைப் புரிந்து கொள்ளும் சக்தியைக் கொடுத்தன.

அந்த ஆளுமை சக்தி நல்ல வழியில் செல்லவில்லை. அதற்குக் காரணம் என்ன?

துலாலக்கினத்தின் நம்பர் ஒன் வில்லனான குரு, தனது சொந்தவீட்டில் அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக அந்த 7ஆம் வீட்டை, அதாவது அந்த 4 கிரகங்களையும் தன் பார்வையின் கீழ் வைத்திருப்பதைக் கவனியுங்கள். அந்த நிலைதான் அவரை ஒரு சர்வாதிகாரியாக, கொடுங்கோல் ஆட்சியாளராக மாற்றியது.

ஏழில் இருந்து லக்கினத்தைப் பார்க்கும் சூரியனால், அசாத்திய மனவுறுதி கிடைக்கும். அவரிடம் அது இருந்தது.

சந்திரன் மற்றும் குருவுடன் சேர்ந்த கேது, சண்டாள யோகத்தை வலுவாகக் கொடுத்தது. ஆனால் கொடூர மன நிலைமையும் அதுதான் கொடுத்தது.

ஆறாம் வீட்டுக்காரனின் பார்வை பெற்ற ஏழாம் வீட்டால் அவருக்கும் உலகம் முழுவதும் பல எதிரிகள் உருவானார்கள். அவருடைய அழிவிற்கும் அதுவே காரணம் ஆனது!

செவ்வாயும் சுக்கிரனும் கூட்டணி போட்டால், ஆசாமி பெண்கள் விஷயத்தில் பலவீனமாக இருப்பான். அவரும் அப்படித்தான் இருந்தார்.

லக்கினம் (1) சந்திர லக்கினம் (3) சூரியன் (7) ஆகியவைகள் ஒற்றைப்படை ராசிகளில் அமரும்போது மகாபாக்கிய யோகம் கிடைக்கும். அவருக்கும் அது இருந்தது. இல்லையென்றால் வெறும் 12 ஆண்டுகளில் உலகின் பாதியை அவர் எப்படி தன்வசப் படுத்தி ஆண்டிருக்க முடியும்?

துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அதாவது 4 & 5ஆம் வீடுகளுக்கு உரியவன். அவன் பத்தாம் வீட்டில் அமர்ந்து அவரை அட்சியாளராக்கினான். Saturn gave him the power and he became a ruler.

The same Saturn aspect-ed by Mars also gave him the fall in the end. He committed suicide and died

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.7.19

முடிவிற்கு வருகிறது நமது முக்கியமான பிரச்சினை!


முடிவிற்கு வருகிறது நமது முக்கியமான பிரச்சினை!

முடிவுக்கு வருகிறது, அமெரிக்காவின் GPS.

வந்துவிட்டது, இந்தியாவின் IRNSS
( Indian Regional Navigation Satellite System)
இனி யாரும் தப்பிக்க முடியாது

அமெரிக்காவிற்குச் சொந்தமானது, GPS
( Global Positioning System)

ரஷ்யாவிற்குச் சொந்தமானது, GLONASS
( Global Navigation Satellite System)

சீனாவிற்கு சொந்தமானது, BDS ( BeiDou Navigation Satellite System)

ஐரோப்பாவிற்கு சொந்தமானது, GNSS ( GALILEO, Global Navigation Satellite System)

இது வரை இந்தியாவிற்கென்று சொந்தமான நேவிகேஷன் சிஸ்டம் இல்லாமல் இருந்தது.

அமெரிக்காவை நம்பியே இந்தியா இருந்து வந்தது.

அந்த நேவிகேஷன் சிஷ்டத்திற்கு மொத்தம் ஒன்பது செயற்கை கோள்கள் தேவை!!

விண்ணில் ஏழும், standby ஆக மண்ணில்(பூமியில் ) இரண்டும் தேவை.


இந்தியாவின் IRNSS ( Indian Regional Navigation Satellite System) கடந்த 2016 ஆண்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வந்தது!!

ஏழாவதாக வெற்றிகரமாக ஏவப்பட்ட IRNSS-1G மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று முதல், ஆறு மாதங்களில், அமெரிக்காவின் GPSக்கு விடை கொடுத்து விட்டு நம்முடைய IRNSS வசதி, பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல், தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது அமெரிக்க போன்ற நாடுகள், தங்களது தொழில் நுட்பம் மூலம், இந்தியா போன்ற வளரும் நாடுகளை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன

சுருக்கமாகச் சொல்லப் போனால், அமெரிக்காவின் GPS அமைப்பிற்கு இந்தியாவின் அனைத்து மூலை முடுக்குகளும் தெரியும்.

GOOGLE MAP போன்றவை இதன் மூலம் இயங்குகின்றன என்றால் தெரிந்து கொள்ளலாம், நம் நாடு எந்த அளவிற்கு  அமெரிக்காவின் தொழில்நுட்பப் பிடியில் இருக்கிறது என்று!!!

இதனை அறிந்த, சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு என்று தனியாக Beidou என்ற ஒன்றை உருவாக்கி, தங்கள் நாட்டு ரகசியத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளன.

அப்போதைய பிரதமர், மன்மோகனிடம் இந்தத் தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் சொல்லி, அனுமதி கேட்டபோது, அவர் சிலரின் தலையீடுகள் காரணமாகக்  காலந் தாழ்த்தி வந்ததாகவும், கூறப்படுகிறது.

பாஜக அரசு அமைந்ததும், மோடி உடனடியாக அமெரிக்காவின் பிடியில் இருந்து இந்தியாவை விலக்க எண்ணி, அதனை தற்போது நிகழ்த்திக் காட்டி விட்டார் என்றும், நமது நாட்டைச் சேர்ந்த IRNSS செயல்பாட்டிற்கு வந்ததும், முழுவதும் இந்தியா தன்னிறைவு அடையும் என்றும், அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும், அந்நிய நிறுவனங்களை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து, இந்தியத் தயாரிப்புகளை அதிகரிக்க, இப்போதே திட்டம் தீட்டி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்றும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

இனி யாராவது குற்றச் செயல்களில் ஈடுபட்டால், யார் என அடையாளம் காண, அமெரிக்காவை தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லை!!

இனி நாமே நேரடியாக களத்தில் இறங்கி, குற்றச் செயல்களை கண்டறிந்து, உடனடியாக தண்டனை வழங்கலாம்.

பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்டறிய மற்றும் பல ராணுவ ரீதியிலான பயன்பாட்டிற்கும், IRNSS உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

✨🌿இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான், இந்தியா இருக்கும் என்று பலரும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

WhatsApp முதல் Facebook என அனைத்து சமூக வலைத்தளங்களும், தற்போது GPS உதவியுடன் இயங்குவதும், விரைவில் இவை நமது நாட்டின் IRNSS கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய அரசுக்கு பல கோடி ருபாய் வருவாயும் கிடைக்கும்.✨!!

வாழ்க பாரதம் 🇮🇳
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.7.19

நல்லது நடக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!!!


நல்லது நடக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!!!

கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள்

காரணம் சொல்லாதே பக்தி செய் ; பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !

உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !!!

நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள் வாழ்விலும் இருந்தது !
அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள்! நீயும்
அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !

1. தகப்பன் கொடுமைக்காரனா ? ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !

2. தாயால் கெட்ட பெயரா ? பரதனைப் போல் பக்தி செய் !

3. அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ? தியாகராஜரைப் போல் பக்தி செய் !

4. குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா? குசேலரைப் போல்
பக்தி செய் !

5. மனைவி அடங்காப் பிடாரியா ? சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !

6. கணவன் கொலைகாரப் பாவியா ? மீராவைப் போல் பக்தி செய் !

7. புகுந்த வீட்டில் கொடுமையா ? சக்குபாயைப் போல் பக்தி செய் !

8. பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ? பூந்தானத்தைப் போல் பக்தி செய் !

9. பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா? நாரதரைப் போல் பக்தி செய் !

10. நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ? விதுரரைப் போல் பக்தி செய் !

11. நீ தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ? கானோ பாத்ராவைப் போல் பக்தி செய் !

12. உடலில் வியாதியால் வேதனையா ? நாராயண பட்டத்ரியைப் போல் பக்திசெய்!

13. யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ? ஜயதேவரைப் போல் பக்தி செய் !

14. இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ? குந்திதேவியைப் போல் பக்தி செய் !

15. மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ? மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !

16. சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ? பாண்டவர்களைப் போல் பக்தி செய் !

17. உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ? ஜயமல்லரைப் போல் பக்தி செய் !

18. பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?கைகேயியைப் போல் பக்தி செய் !

19. உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ? நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !

20. குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ? வால்மீகியைப் போல் பக்தி செய் !

21. கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றாயா ? பீஷ்மரைப் போல் பக்தி செய் !

22. உன் கணவன் கஞ்சனா ? புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய் !

23. வியாபாரத்தில் நஷ்டமா ? சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !

24. உன் கணவன் நாஸ்திகனா ? மண்டோதரியைப் போல் பக்தி செய் !

25. உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ? விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !

26. கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ? சுநீதியைப் போல் பக்தி செய் !

27. குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ? ஜடபரதரைப் போல் பக்தி செய் !

28. நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ? அக்ரூரரைப் போல் பக்தி செய் !

29. ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ? சோகாமேளரைப் போல் பக்தி செய் !

30. சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ? ரந்திதேவரைப் போல் பக்தி செய் !

31. உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ? யசோதையைப் போல்
பக்தி செய் !

32. பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ? தேவகியைப் போல் பக்தி செய் !

33. அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ? கோபர்கள், கோபிகைகள் போல் பக்தி செய் !

34. பிறவிக் குருடனா ? சூர்தாஸரைப் போல் பக்தி செய் !

35. உடல் ஊனமுற்றவரா ? கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !

36. நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ? சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !

37. நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ? பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !

38. உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ? பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !

39. வாழ்க்கையே பிரச்சனையா ? மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப் போல் பக்தி செய் !

இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !

பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு என்றும் ஒரே ஆதாரம் ! அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும் உனக்கு சமாதானம் இல்லை ! இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை நீ தொலைத்தது போதாதோ ? இனிமேல் காரணம் சொல்லாதே !

கிருஷ்ணனிடம் பக்தி செய்ய தொடங்கிவிடு !!
ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!!!!
----------------------------------------------------------------------
படித்து வியந்தது; பகிர்ந்து மகிழ்கிறேன்
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.7.19

அசத்தலான அறிவுரைகள்; அவசியம் படியுங்கள்!!!!


அசத்தலான அறிவுரைகள்; அவசியம் படியுங்கள்!!!!

1. கடவுளிடம் நம்பிக்கை கொண்டால் நிம்மதியுடன் வாழலாம். நியாயத்தின் பக்கம் உங்களால் நிற்க முடியும்.

2. ஏதோ தவறு செய்து விட்டோம் அடுத்ததில் சரியாக இருப்போம் என கடந்து போக பழகியவர்களே வெற்றி பாதையை சீக்கிரம் அடைந்து விடுவார்கள்.

3. கடன் கொடுத்து பார் நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும். கடன் கேட்டு பார் அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று உனக்கே புரியும்.

4. மனசு ஏத்துக்கிட்டா ஒரு விஷயத்த சந்தோஷமா செய்யுறோம். அதே மனசு ஏத்துகிடலனா பிறர் பார்வைக்காக மட்டுமே செய்கிறோம்.

5. வாழ்க்கையில் சந்தோசத்தை மட்டும் எதிர் நோக்கி சென்றால். நமக்கு துன்பம் தான் வந்து சேரும். நமக்கு வரும் கஷ்டங்களை ஏற்று எதிர் நோக்கி செல்லுங்கள். நீங்கள் எதிர்பாராத சந்தோசம் உங்களை தேடி வரும்.

6. உங்களை வெறுப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். வெறுப்பின் வலியை வேறு யார் மூலமோ அவர்களுக்கு புரிய வரும்.

7. கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகள் அனைத்தும் உறவிற்குள் பிரிதலை ஏற்படுத்துபவை. ஆதலால் சற்று நிதானமாக சிந்தித்து வார்த்தைகளை உபயோகிப்பது சிறந்தது.

8. நம் மீது அக்கறை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் நம்மைப் பற்றி கூறும் விமர்சனங்கள் மனதிற்குப் பிடிப்பதில்லை.

9. சில சமயம் நேரமே போக மாட்டேங்குது, சில சமயம் நேரம் எங்க போச்சுன்னே தெரியல. ஆனா வாழ்க்கை அசராம அதே இடத்துல தான் இருக்கு.

10. கடவுளுக்கும், உண்மைக்கும் முக்கியத்துவம் தராமல், மனம் போன போக்கில் வாழ்ந்தால் வாழ்வில் வீழ்ச்சி அடையப் போகிறாய் என்பது பொருள்.

11. உங்கள் வாழ்க்கை நீங்கள் எதிர் பார்த்தது போல் இல்லை என்றால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் நினைத்தது போல் மாற்ற உங்களால் மட்டுமே முடியும். அதுவும் நீங்கள் முயற்சி செய்தால் மட்டுமே நடக்கும்.

12. அவருக்கு என்ன நிம்மதியான வாழ்க்கை என்பது பணம் சார்ந்தது அல்ல நல்ல குடும்ப உறுப்பினர்கள் சார்ந்தது.

13. பார்த்தவுடன் பழகாதே. பழகியவுடன் இணையாதே. இணைந்தவுடன் பிரியாதே. பிரிந்தவுடன் வருந்தாதே. வருந்தியவுடன் தேடாதே.

14. ஒரு உறவை முறித்துக் கொள்ள பொய்களை விடவும் உண்மைகளே அதிகக் காரணம் ஆகின்றன.

15. முன்னெல்லாம் பிரச்சினையைத் தீர்க்கப் பலர் இருந்தார்கள். இப்போதெல்லாம் தூண்டி விட பலர் விரும்புகிறார்கள்.

16. நமது பிரச்சனைகளை பிறர் உதவியுடன் தீர்த்துக்கலாம் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால், பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர அது கொஞ்சம் கூட குறையாது.

17. தன் மகள், மகன் கேட்கும் எந்தப் பொருளும் வீண் செலவாய்த் தெரிவதில்லை பெற்றோருக்கு.

18. மெட்சூரிட்டி என்பது புரிஞ்சுக்குறதோ புரிய வைக்கிறதோ இல்லை. சூழ்நிலையைப் பொருத்து நடந்து கொள்வது.

19. காயப்படுத்துகிற மாதிரி எல்லாருக்குமே பேசத் தெரியும். சிலருக்கு மட்டும் தான் எதைப் பேசக் கூடாதுனு தெரிஞ்சிருக்கு.

20. வாழ்க்கையில நல்லது கெட்டதை புத்தகத்தை விட தெளிவா புரிய வைக்கறது நாம் பழகும் சக மனிதர்கள் தான். எனவே 'ஆகச் சிறந்த புத்தகம் மனிதன்'

21. எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நல்ல நட்பு, ஆனால் கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.

22. மகிழ்ச்சி  நம்மைத் தேடி வருவதில்லை!  நாம் தான் அதை தேடிச் செல்ல வேண்டும்!

23. வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை.  அவர்கள் செய்வதை வித்தியாசமாய் செய்கிறார்கள்.

24. ஓரு சிலர் மனசு கஷ்டமா இருந்தா யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள், இதைப் புரிந்து கொண்டால் பிரச்சனை வராது.

25. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தி முடிவு செய்யுங்கள்.

26. சென்றதை சிந்திப்பவனை விட, இனி மேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி.

27. எல்லாவற்றிலும் திறந்த புத்தகமாக இல்லாமல் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருந்து விடுங்கள். இவ்வளவு தானா இவர் என்று இல்லாமல் கொஞ்சம் புதிர் சுவாரஸ்யமாக இருக்க உதவும்.

28. சிலர் யாரைப் பார்த்தாலும் வெறுப்பாக பேசுவார்கள். மற்றவர்களிடம் சாதாரணமாகப் பேச யார் பழக்குவது.

29. முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள். எல்லோரையும் திருப்திப் படுத்தும் எண்ணம் வேண்டாத விஷயம். செய்ய முடியாதவற்றையும், செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.

30. மற்றவர்கள் பிரச்சனைகளை, கவலையை பகிர்ந்து கொள்ளும் போது முழுமையான அக்கறையுடன் கேட்டு ஆறுதல் கூறுவது தான் மனிதாபிமானம்.

31. எதையும் எதிர் பார்த்து செல்லாதீர்கள். சூழ்நிலை எவ்வாறு இருப்பினும் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள்.

32. உரிமையோடு உரையாடுவதாக எண்ணி உண்மையான உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தி விடாதீர்கள்.

33. இன்னொருத்தரோட இக்கட்டனா சூழ்நிலைய தனக்கு சாதகமா மாத்தி மத்தவங்களை கஷ்டப் படுத்துவது தவறு.

34. தகுதியும் வயதும் இருந்தும், வேலைக்கு முயற்ச்சி செய்யாதவர்கள் வாழ்வதே வீண்.

35. நம்மிடம் வசதி இருக்கும் போது உதவிகள் கேட்க ஆயிரம் உறவுகள் வந்து விடும். நம்மிடம் வசதி இல்லை என்றால் நமக்கு ஆறுதல் சொல்லக் கூட உறவினர்கள் வருவதில்லை.

36. எமோஷனலா சிந்திக்கும் போது நியாமான விஷயங்களைக் கூட நமது மனது ஏற்றுக் கொள்ளத் தடுக்கிறது.

37. கடைசி வரை கிடைக்காத விஷயஙுகளுக்கு, முதலில் இருந்தே போராட வைக்கிறது வாழ்க்கை.

38. பெரிய பிரச்சனைகள் எல்லாம் அதுவாக சரியாகி நகரும் வாழ்க்கையில் சிறு பிரச்சனை எல்லாம் நினைத்துப் பார்க்காத கஷ்டத்தை தருவது தான் வாழ்க்கையின் இயல்பு.

39. தேவை என்றால் சந்தர்ப்பத்தை உருவாக்கி பேசி விடுவார்கள். தேவை இல்லை என்றால் பிஸி என்ற வார்த்தையோடு நிறுத்தி விடுவார்கள்.

40. மன குழப்பமில்லாத தருணங்களில்தான் பிறருக்கு உதவிகள் கூட செய்ய முடியும்.

41. உங்களைப் புரிந்து கொண்டு உங்கள் மீது வரும் சிலரின் அக்கறை உங்களை கஷ்டப் படுத்தாது உங்கள் மீதுள்ள பொறாமையால் அக்கறை உள்ளது போல் நடிப்பவர் காட்டும் அக்கறை உங்களைக் கஷ்டப் படுத்தும்.

42. தோல்வியை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் நினைக்க வேண்டிய ஒரு விஷயம் வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்று.

43. யாராலும் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது. ஆனால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை முன் வைக்க முடியும்.

44. ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள்.

45. கஷ்டப் பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனக்கு மட்டும் செலவு செய்ய யோசிக்கும் குடும்பஸ்தன் பெற்ற பிள்ளைகளின் செலவுகளில் அதிகம் யோசிப்பதில்லை.�
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.19

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி!


திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி!

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.

ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது. இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.

அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இலை விபூதியின் மகத்துவம் ;

அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுருக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுருக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டதோடு, அதை உட்கொள்ளவும் செய்தார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.

அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலின் சிறப்பு, சுவாமியின் மேன்மை போன்றவைக் குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை படப் பாடினார்.

சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் சொல்லி இருக்கிறார்.

பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார்.
7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள்.  பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.

"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"

பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."

ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.

இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.

இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.

தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீரும்

ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.

அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.

"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.

"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.

விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
என்று பாடுகிறார்.நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து *செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.*
-------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.7.19

அன்பருக்காக ஒரு பதிவு!

அன்பருக்காக ஒரு பதிவு!

என்னுடைய பழைய பதிவு ஒன்றைப் படித்து விட்டு, இது மாதிரி
அடிக்கடி எழுதுங்கள், தவறாமல் வந்து தடயம் பதித்து விட்டுப்
போவோம் என்று எழுதியிருந்தார் ஒரு அன்பர்!!!!

அவருக்காக இந்தப் பதிவு!
-------------------------------------------------------------------------------

நகைச்சுவைப் பதிவு! ஆராயாதீர்கள்; அனுபவித்து மகிழுங்கள்!

------------------------------------------------------------------------------------

தன் பணக்காரக் கணவனிடம், அவனது அன்பு மனைவி சொன்னாள்

“அன்பே! எனக்கு நாளை 28வது பிறந்த நாள்!”

“ஓ...28 தான் ஆகிறதா? பார்த்தால் அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிற மாதிரித் தெரிகிறது!”

மனைவி, செல்லமாக அடிப்பதற்குக் கையை ஓங்கினாள்: அவன் தடுத்து விட்டுச் சொன்னான்

“உன் பிறந்த நாளும் அதுவுமாக என்னை மருவத்து மனைக்கு அனுப்பி விடுவாய் போலிருக்கிறதே! சரி, சொல்! உனக்குப் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும்?

மனைவி புன்னகைத்து விட்டுச் சொன்னாள்:

“நான்கே நொடிகளில் ஜீரோவிலிருந்து நூறுக்கு எகிறக்கூடிய (நூறைத் தொடக்கூடிய - From 0 to 100) சாதனம் ஒன்று இருக்கிறது. அதை வாங்கிக் கொடுங்கள்; அது என்ன வென்று நான் சொல்ல மாட்டேன்! நீங்களே கண்டு பிடித்து வாங்கிக் கொண்டு வாருங்கள்!”

அதன்படியே கணவன் செய்தான்!

மனைவி நினைத்தையும், கணவன் வாங்கிக் கொண்டு வந்ததையும் கீழே அறியத் தந்திருக்கிறேன்:-))))

முதலில் மனைவி நினைத்தது:விரும்பியது!


ரேஸ் கார்
---------------------------------------------------------------------------------
கணவன் வாங்கிக் கொண்டு வந்தது என்ன?
சற்று யோசித்துப் பார்த்துவிட்டுக் ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

--------------------------------------------------------------------------------------
இப்போது கணவன் மருத்துவமனை ஐ.சி.யூவில்; ஆனால் கவலைப் படும்படியாக ஒன்றும் இல்லை!
He is in a stable condition!:-)))))))
------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.19

வாத்தியார் கேட்ட லிப்ட்!


வாத்தியார் கேட்ட லிப்ட்!

கவிதைப் போட்டி ஒன்றின் தலைப்பைப் பார்த்த உடனேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது.  இதைத் தலைப்பாகக் கொடுத்திருக்காங்களே - நாம்  சுளுவாக  எழுதிவிடலாம் என்று நினைத்தேன்.

எழுதினதோடு சும்மா இருந்திருக்கக்கூடாதா? என் போதாத நேரம் அதை வகுப்பில் வைத்து கொஞ்சம் கரெக்ட் பண்ணிவிடலாம் என்று வகுப்பறைக்கு எடுத்துக்கொண்டு போனதுதான் தப்பாகப் போய்விட்டது சாமிகளா !

தலைமை ஆசிரியர் கூப்பிட்டார்ன்னு ஒரு எட்டுப் போய்விட்டுத் திரும்பறதுக்குள்ள - ஒரு வாலில்லாத பயல் அந்தக் காகிதத்தில ஒரு அடிக்குறிப்பை எழுதி வைத்துவிட்டான்.

சும்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் எழுதியிருந்தான்!

படிப்பைத் தவிர பசங்களுக்கு மத்ததெல்லாம் நல்லா வருது சாமி - நல்லாவே வருது!

இரண்டையும் கீழே கொடுத்திருக்கேன் - நீங்களே பாருங்க!.
----------------------------
கவிதைத் தலைப்பு: கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

மனைவியோடு வெளியில் போனால் மட்டுமே
மனமுவந்து வண்டியை எடுப்பது வழக்கம்
வாகனம் இன்றி வாசலில் நிற்கிறேன்
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

கட்டியிருக்கும் வெள்ளை வேஷ்டி, சட்டை
கணப் பொழுதில் கசங்கிவிடும் - நனைந்துவிடும்
ஆகவே பேருந்தில் அடியேன் செல்வதில்லை
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

ஆட்டோக் காரரிடம் பேரம் இன்றி
அதிரடியாய்ச் சென்று திரும்ப
அடியவன் எனக்குப் பழக்கம் இல்லை
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

இந்தியப் பொருளாதாரத்தை
இயன்றவரை மேம்படுத்த
அடியேன் பெட்ரோல் போடுவதில்லை
ஆகவே கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?
-------------------------
(நான் இல்லாத நேரத்தில் வகுப்புப் பையன் ஒருவன்
எழுதி வைத்த அடிக்குறிப்பு கீழே உள்ளது)

இரண்டு பங்க்குகள் என்தந்தைக்(கு) உண்டு
இலவசப் பெட்ரோல் உங்களுக்(கு) உண்டு
அறுவையின்றி, சிகிச்சையின்றி, வகுப்பைக் கடக்க
அடியேன் எனக்குக் கிடைக்குமா லி•ப்ட்?

எப்படி இருக்கு - என்னைவிட பயல் நல்லா எழுதியிருக்கானில்லையா?
----------------------------
அப்புறம் யோசித்தேன் - என் வகுப்பில நாகபட்டினத்தில இருந்து ஒரு தம்பி வந்து படிக்குது. நல்லா படிக்கும் - அதனால அந்தத் தம்பியை மொத பெஞ்ச்சில உட்கார வச்சிருக்கேன்.

இந்த அடிக்குறிப்பை அந்தப் பையன் எழுதியிருந்தா எப்படியிருக்கும்னு கற்பனை செய்து பார்த்தேன்

அவன் எழுதியிருந்தா இப்படித்தான் எழுதியிருப்பான்

கடவுள்கொடுத்த கால்கள் உண்டே கடப்பதற்கு,
நடப்பதற்கு மனம்தான் தேவை! - அடடா
எங்களைப்போல பள்ளிக்கு ஓடிவரவா சொல்கிறோம்?
எதற்குக் கேட்கிறீர்கள் எல்லோரிடமும் லிப்ட்?
-------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.19

முன்னாடியா அல்லது பின்னாடியா?


முன்னாடியா அல்லது பின்னாடியா?

"நெக்ஸ்ட்" என்று டாக்டர் குரல் கொடுத்தவுடன் கதவைத்திறந்து கொண்டு வந்தவரைப் பார்த்தவுடன் டாக்டருக்கே பரிதாபமாக இருந்தது.

வந்தவருக்கு வயது நாற்பது இருக்கும். இரட்டை நாடி உடம்பு. நடக்க முடியாமல் நடந்து வந்தார். முகம் மட்டும் அப்பாவித்தனமாக இருந்தது. தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பிறகு எதிரில் இருந்த இருக்கையில் சிரமப்பட்டு அமர்ந்தார்.

"சொல்லுங்கள்" என்றார் டாக்டர்.

"உடம்பு கனத்து விட்டது சார். அதுதான் பிரச்சினை. எப்படிக் குறைப்பது என்று தெரியவில்லை. சாப்பாட்டைக் குறைக்கமுடியவில்லை. குறைத்தால் பசி பிராணன் போகிறது.இப்போது நூறு கிலோ வெயிட்டாகி விட்டது. குறைப்பதற்கு உதவுங்கள்" என்றார்.

"முப்பது கிலோ அதிகமாக இருக்கிறீர்கள். சடனாகக் குறைக்கக் கூடாது. படிப்படியாகக் குறைத்து விடுவோம். நீங்கள் காலையிலும், மாலையிலும் தவறாமல் ஒரு நாற்பது நிமிடங்களாவது வாக்கிங் போகவேண்டும்."

"சரி சார்!"

"உங்கள் உணவுப் பழக்கத்தைப் பற்றி சொல்லுங்கள்" என்றார் டாக்டர்.

வந்தவர் பட்டியலிட ஆரம்பித்தார்." காலை ஆறு மணிக்கு ஒரு டம்ளர் காப்பி,. எட்டு மணிக்கு நான்கு இட்லி, நான்கு தோசை. பதினோரு மணிக்கு ஒரு கப் சூப், ஒரு பிளேட் காளிப்ள்வர். ஒரு மணிக்கு •புல் மீள்ஸ் வித் சிக்கன் 65, மாலை 4 மணிக்கு மூன்று பஜ்ஜி அல்லது 3 உருளைக்
கிழங்கு போண்டா, இரவு எட்டு மணிக்கு ஆறு சப்பாத்தி, ஒரு கப் ஐஸ்க்ரீம், படுக்கப்போகும் முன்பு இரவு 10 மணிக்கு ஒரு டம்ளர் கற்கண்டு பால்"

டாக்டர் உணவுக்கட்டுப்பாடு மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். வந்தவரின் எடைக்கு அவருடைய அந்த மோசமான உணவுப் பழக்கம்தான் காரணம் என்று தெரிந்து கொண்டவர், அதை மாற்ற நினைத்து மெல்லிய குரலில் சொன்னார்.

"முதலில் பதினைந்து நாட்களுக்குப் பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள். இரண்டு டம்ளர் கோதுமைக் கஞ்சி , ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுங்கள்!"

வந்தவர் அப்பாவித்தனமாகக் கேட்டார், "அது இரண்டையும் எப்போது சாப்பிடவேண்டும் டாக்டர் - சாப்பிடுவதற்கு முன்னாடியா அல்லது பின்னாடியா?"
-------------------------------------------------------------
2
வழக்குரைஞருக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?

உன் பக்கம் உண்மை இருந்தால்
அந்த உண்மையை நீதிமன்றத்தில் அடித்துப்பேசு!

உன் பக்கம் சட்டம் இருந்தால்
நீதிமன்றத்தில் அந்த சட்டத்தை எடுத்துச் சொல்லி அடித்துப்பேசு!

அவை இரண்டுமே உனக்கு சாதகமாக இல்லையென்றால்
நீதிமன்றத்தின் மேஜையை அடித்துப்பேசு!

- மின்னஞ்சலில் வந்தது!
---------------------------
What a lawyer should know?

If you have facts on your side, hammer the facts in Judge's mind;

If you have law on your side, hammer the law in Judge's mind;

If you have neither, hammer the table!

===========================================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.19

மாணவன் எழுதிய அடிக்குறிப்பு!


மாணவன் எழுதிய அடிக்குறிப்பு!

காட்சி 1

நகரப் பேருந்து ஒன்றில் பயணித்துக் கோண்டிருந்தேன்

உள்ளே நல்ல கூட்டம். நெருக்கடி.

பல கல்லூரிக் காளைகள் படியில் தொற்றிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

படி எதிரே உள்ள ஒரு எழுத்து வாசகம் மிக அழகாக படிப்பயணத்தை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

"படியில் பயணம்
நொடியில் மரணம்!"

அதையும் மீறிப் படியில் பயணிப்பவர்களை, நடத்துனர் எச்சரிக்கை செய்தும், அவர்கள் கேட்டபாடில்லை. கோபம் கொண்ட அவர் கிண்டலாக இப்படிச் சொன்னார்.

"என்னம்மா கண்ணுங்களா, எல்லாரும் வீட்டில சொல்லிட்டு வந்திட்டீங்களா?"

அவர்கள் சளைத்தவர்களா?

அதில் ஒருவன் சொன்னான்,  "ஆ...சொல்லாம வருவமா? சொல்லிட்டுத்தான் வந்திருக்கோம். பின்னாடிப் பாரு நம்மளை பாலோ பண்ணி வந்திக்கிட்டிருக்கில்ல ஆம்புலன்ஸ் அதுவும் நாங்க சொல்லித்தான் பின்னாடி வந்திக்கிட்டிருக்கு!"

"ஓ, அப்ப சங்கு ஊதுரவனுக்கு மட்டும் சொன்னாப் போதும் - இல்லையா?" இது நடத்துனர்.

பேருந்தில் கொல்லென்று சிரிப்பு

அடடா! என்னே நகைச்சுவை உணர்வு.
---------------------------------
காட்சி 2

ஒவ்வொரு நாளும் காலையில், வகுப்புத் துவங்கு முன்பாக கரும்பலகையில் பொன்மொழி ஒன்றை அல்லது மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் வாசகம் ஒன்றை எழுதி வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் உத்தரவு
போட்டு வைத்திருக்கிறார்.

தினம் ஒரு பொன்மொழியா - அதற்கு நான் எங்கே போவேன்?

என் வகுப்புக் கண்மணி ஒருவன்தான் "சார் கவலைப் படாதீர்கள். உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்" என்று புது மண்டபத்தில் உள்ள பழைய புத்தகக் கடையில் இருந்து பொன்மொழிக்களஞ்சியம் என்ற புத்தகம் ஒன்றை வாங்கிக் கொடுத்தான். அதிலிருந்துதான் தினம் ஒன்றைப் படித்து அல்லது பிடித்துக் கரும்பலகையில் எழுதிச் சமாளித்து விடுவது என் வழக்கம்.

இன்று போதாத காலம் குறித்துக் கொண்டு வரவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன்
.
பேருந்தில் படித்த வாசகம் நினைவிற்கு வர, அதையே எழுதிவிட்டேன்.

"படியில் பயணம்
நொடியில் மரணம்!
----------------------------
காட்சி 3

தலைமை ஆசிரியர் அழைத்திருந்ததால், அவரைப் பார்த்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வகுப்பிற்குத் திரும்பி வந்தேன்
.
என்ன நினைத்தேனோ அது நடந்து விட்டது!

எவனோ ஒரு கண்மணி நான் எழுதியிருந்த அந்த வாசகங்களுக்கு கீழே அடிக்குறிப்பு ஒன்றை எழுதி விட்டானய்யா,

எழுதி விட்டான்!

நீங்களே பாருங்கள்:

"படியில் பயணம்
நொடியில் மரணம் :

"பிடியில் கவனம்
போகுமே மரணம்!"

அதாவது நல்லாக் கம்பியைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டுப் படியில நீ பாட்டுக்குப்போடா - எப்படிடா மரணம் வரும் -

வந்தாலும் - பிடிச்சிருக்கிற பிடியைப் பாத்திட்டு அது ஓடிப்போயிரும்டான்னு எழுதியிருக்கானய்யா எழுதியிருக்கான்

இந்த மாதிரி எது செஞ்சாலும் அதுக்கொரு அடிக்குறிப்பு வச்சிருக்கிறவங்களையெல்லாம் வச்சிக்கிட்டு எப்படி சாமி
பாடம் நடத்தறது - நீங்களே சொல்லுங்கள்!
----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!