மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.12.19

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!


வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!

சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் தமிழ்நாடு.

ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்..

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது. எதுவுமே இங்கு தேவையில்லை.

ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.

இங்கு ஒரு நாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்..

*ஞாயிறன்று* இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர்.

*திங்களன்று* சந்திரனை  நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.

*செவ்வாயன்று* விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.

*புதனன்று* விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர்.

*வியாழனன்று* விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.

*வெள்ளியன்று* விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.

*சனிக்கிழமை* விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.

அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்..ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்..நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்..பிறரை ஏமாற்றியிருந்தால்.. ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்..இந்த
ஸ்தலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.

*இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம்.* இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.

சிவகணங்களில் நந்ததீஸ்வரர்.. நவரத்தினங்களில் வைரமும்..
*ராசிகளில் சிம்மமும்..*  தேவர்களில் இந்திரனும்..
மிருகங்களில் கஸ்தூரி பூனையும்.. *இலைகளில் வில்வமும்..
*  பாணங்களில் பாசுபதாஸ்திரமும் *சக்திகளில் உமாதேவியும்* 
பூக்களில் தாமரையும்  *குருக்களில் வியாழ பகவானும்*..
முனிவர்களில் அகத்தியரும்.. *பிள்ளைகளில் பகீரதனும்..* எப்படி உயர்ந்ததோ  அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது...

*இதற்கு புன்னைவனம் சீரரசை*  என்றும் பெயருண்டு.

*இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில்
லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்...*

*ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து
காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும்..*

இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு...

இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம்
கன்னிகா தானம் செய்த பாக்கியம் கிடைக்கும்...

இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.

*சங்கரனாகிய சிவனும்* *நாராயணனாகிய திருமாலும்* *இணைந்திருக்கும் சங்கர நாராயணர்* *கோயில் தான் அது.*

உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்…

இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்

*வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.*

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.

இத்தலத்திற்கு எப்படி செல்வது?

சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது.

ஓம் நமசிவாய!!!!
--------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. bharathiyar padal peRRa sthalam....from rajapalayam 35 kms only

    ReplyDelete
  2. ////Blogger Unknown said...
    Thanks Guru ji///

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  3. /////Blogger Babu (பாபு நடராஜன்} said...
    bharathiyar padal peRRa sthalam....from rajapalayam 35 kms only////

    நல்லது. தகவலுக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com