மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 311 - 320. Show all posts
Showing posts with label Lessons 311 - 320. Show all posts

3.3.10

யாருக்கு முதல் மரியாதை?

The Sun Temple, Konark, Orissa State, India
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாருக்கு முதல் மரியாதை?

எண் ஜோதிடத்தில் ஒன்றாம் எண்ணிற்குத்தான் முதல் மரியாதை! ஒன்றாம் எண்ணை உடையவர்களுக்குத்தான் முதல் மரியாதை!

கிரகங்களில் சூரியனைக் குறிக்கும் எண் ஒன்றாம் எண்ணாகும்.

கிழமைகளில் ஞாயிற்றுக்கிழமைக்கு உரியது.

The Great என்று குறிப்படும் நாயகர் Alexander the Great பிறந்தது ஜூலைத் திங்கள் ஒன்றாம் தேதியில்! The Great என்று குறிப்படும் மற்றுமொரு நாயகர் அக்பர் பிறந்த தேதியின் கூட்டல் தொகையும் ஒன்றுதான் (November 23, 1542) 23 + 11 + 1542 = 19 = 1

சரித்திரத்தில் உள்ள மற்றுமொரு மாமன்னர் அசோகர் (Ashoka the Great) பிறந்த தேதி தெரியவில்லை. விக்கி மகராஜாவிடம் கேட்டுப் பார்த்தேன் கிடைக்கவில்லை. அவரும் ஒன்றாம் எண்ணிற்கு உரியவராக இருக்கலாம்.

தமிழ்த்திரையில் தனக்கென முத்திரையைப் பதித்துவிட்டுப்போன நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்தது ஒன்றாம் தேதியில் (Date of Birth: October 1, 1927)

ஒன்றாம் எண்ணின் தனிதன்மையே எதையும் எதிர்கொள்ளும் வலிமை மிக்க எண் அது. தன்னம்பிக்கைக்கும், துணிச்சலுக்கும் உரிய எண் அது.

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் வலிமை உடையவர்கள் (They are born leaders) எண்ணங்களிலும், செயல்களிலும் சுதந்திரமனப்பான்மை உடையவர்கள். தங்கள் வழியில் குறுக்கிட எவரையும் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆக்கவேலைகளை மட்டுமே செய்யக்கூடியவர்கள். எப்போதும் அசலாகவே இருக்க விரும்புபவர்கள். நகலாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள்.

சொந்த வாழ்க்கையாக இருக்கட்டும் அல்லது வேலை செய்யும் இடமாக இருக்கட்டும் அல்லது தொழிலாக இருக்கட்டும், எதிலும் முதன்மை பெறும் சக்தி இயற்கையாகவே அவர்களுக்கு இருக்கும்!

உடல், மனம், செயல்படும் தன்மை என்று எல்லாவற்றிலுமே வலிமை பெற்றவர்களாக இருப்பார்கள் They are usually incredibly strong in mind, body, and spirit.

ஒன்றுதான் துவக்க எண். மற்ற எண்கள் எல்லாம் அதன் விரிவாக்கமே. அதை மறக்க வேண்டாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அனைவருக்குமே பிறப்பு எண் ஒன்றுதான். அவர்கள் தங்களுடைய பெயரை ஒன்று என்ற எண் வரும்படியாக அமைத்துக் கொண்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணிக்கம் (Ruby) என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ள கல்லாகும்.படிகக்கல்லாகும்,

நவரத்தினங்களுள் அதுவும் ஒன்று. தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இலங்கையிலும் மாணிக்கங்கள் கிடைக்கும். ஒன்று எண்ணிற்கு உரிய கல் இந்தக் கல்.

On wearing a Ruby one becomes proof against the effect of poison என்று சொல்வார்கள். அது எந்த அள்விற்கு உண்மை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்!

இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு உரிய வண்ணங்கள்: ஆரஞ்சு, மஞ்சள், தங்க நிறம் பொருந்தாத வண்ணங்கள்: கறுப்பு, மெரூன்

மேலதிகத்தகவல்கள்:

கிரகங்களுக்கு அரசன் என்று சொல்லப்படும் கிரகம் சூரியன். அதிகாரம், சக்திகளுக்கு உரிய கிரகம், தந்தைக்குக் காரகன். உடல் காரகன். சூரியன் நீசமடைந்திருப்பவர்கள் இந்த இளஞ்சிவப்புக் கல்லை அணியும்போது, நீசத்தன்மை குறையும்.

ஒன்றாம் எண் தனித்தன்மைவாய்ந்த எண்ணாகும். தலைமை ஏற்பதற்குரிய அபரிதமான அறிவையும், ஆற்றலையும், கொடுக்கும் தன்மையை உடையது. ஆர்வம், இலக்கை நோக்கிப் பயணிக்கும் தன்மை, அதீத உந்து சக்தி, துணிச்சல் ஆகியவற்றை வழங்கும் எண். தனித்தன்மை வாய்ந்தது. முதன்மையானது.

பிரச்சினைகளைப் புதுமையான வழியில் எதிர்கொள்ளும் ஆற்றலைத்தருவது. வெற்றிக்கான செயல்பாடுகளை உள்ளடக்கியது ஆகியவைகள் அதன் சிறப்பாகும்.

சுயதொழில் முனைவோர்கள், மேலாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களுக்கு உரிய எண் இந்த எண்ணாகும்

இந்த எண்ணை உடையவர்களிடம் அதீத உழைப்பு இருக்காது. விவேகமான செயல் இருக்கும் (works smarter not harder). தலைமை ஏற்கும் சக்தி இருக்கும்.

மொத்தத்தில் வாழ்க்கையின் முன்னணிக்குக் கொண்டுபோய் நிறுத்தும் வலிமை உடைய எண் இந்த எண். இது மற்றவர்களை ஈர்க்கும் சக்தியை உடையதும் ஆகும்!
-----------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

2.3.10

பெயருக்கு அரிதாரம் பூசுவது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெயருக்கு அரிதாரம் பூசுவது எப்படி?

அபரிதமான வெற்றி அல்லது அபரிதமான தோல்வி!

சனீஷ்வரனின் எண் 8 என்பதை அனைவரும் அறிவோம். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 8

இந்த எட்டாம் எண்ணிற்கு ஒரு விஷேசம் உண்டு. அந்த எண்ணை உடையவர்கள் வாழ்க்கையில் அதீத வெற்றியை அடைவார்கள் அல்லது அதீதமான தோல்வியை அடைவார்கள்.

எண் ஜோதிடத்தில் மட்டுமல்ல, ஜாதகத்திலும் அதே பலன் உண்டு.

சனி, மகரம் மற்றும் கும்ப லக்கினங்களுக்கு அதிபதி. அதில் கும்பலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, லக்கினாதிபதியும் சனிதான், விரையாதிபதியும் (12th Lord) சனிதான்.
அந்த லக்கினக்காரர்களுக்கு, சனீஷ்வரன் ஜாதகத்தில் உச்ச, கேந்திர, கோணங்களில் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சிறக்கும்.

இல்லையென்றால் அவர்கள் படாதபாடு படவேண்டியதிருக்கும். வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.

ஒருவருடைய பெயர் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயர் 8 அல்லது
26 என்று வந்தால் அது சிறப்பாக இருக்காது. இரண்டு எண்களுமே
மோசமான எண்களாகும். ஆனால் 17 என்று வரும் எண் பெரிய
வெற்றியைத் தரக்கூடிய எண்ணாகும்

உதாரணம்: B O M B A Y = 2 7 4 2 1 1 = 17

17ஆம் எண்ணிற்கான பலன்: It is a highly spiritual and fortunate number

அதை 15 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை என்று மாற்றினார்கள்.

M U M B A I = 4 6 4 2 1 1 = 18 (இது நல்ல எண் அல்ல) மாற்றிய பிறகு பம்பாய் பல பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. மாற்றியவர்கள் இதை அறிந்தார்களா? அல்லது உணர்ந்தார்களா?

தெரியவில்லை!

நம் மெட்ராஸ் சென்னையாக மாறியதும் அறிந்த கதைதான்.
M A D R A S = 4 1 4 2 1 3 = 15 (இது சூப்பரான எண்) மாறிய பிறகு, அதாவது
C H E N N A 1 = 3 5 5 5 5 1 1 = 25 (இது சுமாரான எண்தான். ஆனால் மோசமில்லை)

எல்லா வளங்களுடன் இருக்கும் எங்கள் ஊரின் எண்:
C O I M B A T O R E = 3 7 1 4 2 1 4 7 2 5 = 36
----------------------------------------------------------------------
தனிப்பட்ட பெயர்களின் கூட்டல் எண் சரியாக உள்ளதா என்று எப்படித் தெரிந்துகொள்வது?

சிம்ப்பிள். ஜாதகனின் பிறந்த எண்ணும் (birth number) பெயரின் கூட்டல் எண்ணும் ஒன்றாக இருந்தால் போதும். சரியாயாக உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்.

1, 10, 19, 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 1
2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 2
3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 3
4, 13, 22, 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 4
5, 14, 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 5
6, 15, 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 6
7, 16, 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 7
8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 8
9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 9
---------------------------------------------------------------------
எழுத்துக்களுக்கான எண்கள்:

A = 1, B = 2, C = 3, D = 4, E = 5, F = 8, G = 3, H = 5,

I OR J = 1, K = 2, L = 3, M = 4, N= 5, O = 7, P = 8

Q = 1, R = 2, S = 3, T = 4

U = 6, V = 6, W = 6

X = 5, Y = 1, Z = 7

=========================================================================
இதை எல்லாம் எப்படி வடிவமைத்தார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். கேள்வி கேட்டுக் கொண்டி ருந்தால் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாது.

நம்பிக்கை இருந்தால், கடைப்பிடிக்கலாம், நம்பிக்கை இல்லாவிட்டால் கடாசி விட்டு (உதறிவிட்டு) அடுத்த வேலையைப்பார்க்கலாம். நமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காக, ஆதாரம் கேட்டு, அடுத்தவன் தலையை உருட்டக்கூடாது:-)))

நம் பெயர் நம்மைக்கேட்டு வைக்கப்படவில்லை. அதுதான் பரிதாபம். அதுதான் அவலம். நாம் ஆசைப்படும் பெயரை நாம் மாற்றிக்கொள்ளலாம் என்றால் முடியாது. Birth Certificate, College certificates, Employment order,
Marriage certificate, Bank account, Bank Deposit, Share certificates, Property Deeds, Passport, Ration Card, Voters Card, PAN Card என்று பல விஷயங்கள் அதற்குத்
தடையாக இருக்கும். குறுக்கே நின்று கழுத்தை அறுக்கும்

ஒரு சகோதரி கேட்டுள்ளார். வைத்த பெயரை எப்படி சார் மாற்றிக்கொள்வது?

இளையாராஜாவின் பாடல்களைக் கவனித்தீர்கள் என்றால் தெரியும். நகாசு வேலைகள் செய்திருப்பார். சில பாடல்களில் Fluteன் ஒலி , சிலபாடல்களில் Guitarன் ஒலி, சில பாடல்களில் சாக்ஸஃபோன் ஒலி என்று இடையிடையே சில இசைக்கருவியை அதிகமாக ஒலிக்கவிட்டுப் பாடலை கேட்பவர்கள் மயங்கும்படி செய்திருப்பார்.

அதுபோல நீங்களும் ஏற்கனவே உள்ள உங்கள் பெயரில் ஒரிரெண்டு எழுத்துக்களைக் கூட்டி, உங்கள் பிறப்பு எண்ணுடன் அது இசைந்து ஒலிக்கும்படி செய்துவிடுங்கள்.

பெயர் என்றவுடன், வெளி நாட்டுக்காரனுக்கெல்லாம் First Name, middle name, last name என்றும், நம் வட இந்தியப் பகுதி மக்களுக்கெல்லாம் Sur Name என்று பெயரில் இரண்டு அல்லது மூன்று பகுதிகள் இருக்கும் (உதாரணம் Sachin Tendulkar, Sarath Pavar, Lallu Prasad Yadav )

அதனால் நாம் நமது இன்ஷியலுடன் பெயரை எடுத்துக்கொள்ள வேண்டும் (அப்படித்தானே சுவாமி உங்கள் பள்ளிச் சான்றிதழ்களில் இருக்கும் ?)

சரி இசைந்து ஒலிக்கும்படி எப்படிச் செய்வது?

உதாரணங்கள் வேண்டுமா?

கீழே கொடுத்துள்ளேன்

இருக்கும் பெயருக்கு அரிதாரம் பூசுவது அல்லது மேக்கப் போடுவது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஓக்கேயா?

அதிகப்படியான எழுத்துக்களுடன் மாற்றிக்கொண்ட பெயரை எப்படி நடைமுறைக்குக் கொண்டுவருவது?

அதை அடுத்த பாடத்தில் சொல்லித்தருகிறேன்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++
கீழே உள்ள க்ளிப்பிங்கின் தேதியைப்பாருங்கள். 2.11.1989 என்று உள்ளதா? இருபது வருடங்கள் கழித்துப் பயன்படும் என்று சேர்த்து வைக்கவில்லை. இதுபோன்று, இலக்கியம், சினிமா, ஜோதிடம் சம்பந்தப்பட்ட பேப்பர் கட்டிங்குகள் என்னிடம் நிறைய உள்ளன. வீட்டில் உள்ள மூத்தவர்கள் அவற்றைக் குப்பை (waste) என்பார்கள். நான் சொத்து (wealth) என்பேன். பலருக்கும் பயன்படுவதால் அதை சொத்து என்று சொல்வதில்
தவறில்லை!:-)))))

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள். படம் பெரிதாகத் தெரியும்!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

1.3.10

பெயரில் என்ன இருக்கிறது?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெயரில் என்ன இருக்கிறது?

எங்கள் பகுதி மக்கள் தீவிர சிவபக்தர்கள். நிறைய சிவாலயங்களுக்குத் திருப்பணி செய்தவர்கள். தஞ்சை மாவட்டத்தில் திரு எனும் துவக்க எழுத்துக்களுடன் இருக்கும் 100ற்கும் மேற்பட்ட ஊர்களில் இருக்கும் சிவாலயங்களுக்குப் பலமுறை திருப்பணி செய்தவர்கள். (உதாரணம்: திருவையாறு, திருக்கோலக்கா, திருவாடுதுறை, திருவீழிமிழிலை, திருக்கழிப்பாலை, திருநின்றவூர், திருஇன்னாம்பூர், திருவாரூர், திருக்கரவீரம், திருநெல்வாயில், திருவெண்ணைநல்லூர், திருப்புனந்தாள் etc)

தங்களுடைய ஊர்களிலும் பெரிய சிவாலயங்களைக் கட்டி வழிபட்டு வருபவர்கள். காரைக்குடியைச் சுற்றிலும் மொத்தம் 74 ஊர்கள் உள்ளன. அத்தனை ஊர்களிலும் ஆலயங்கள் உள்ளன.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரையே முதன்மைக் கடவுளாகப் போற்றி வழிபட்டுவருபவர்கள். எதை எழுதினாலும் அல்லது எழுதத் துவங்கினாலும், முதலில் பிள்ளையார் சுழி, சிவமயம், என்று எழுதி விட்டுத்தான் மற்றவற்றைத் துவங்குவார்கள். முடிக்கும்போது, வேணும் அண்ணாமலையார் துணை என்றுதான் கடிதத்தை முடிப்பார்கள்.

என்றென்றும் அன்புடன் என்று முடிக்கும் இக்காலப் பழக்கமெல்லாம், ஆங்கில மோகத்தால் வந்தது.

அதோடு தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் மீது தீவிர பக்தியை உடையவர்கள். தங்கள் குழந்தைகளுக் கெல்லாம் முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்றையே சூட்டி மகிழ்ந்தவர்கள்.மகிழ்கிறவர்கள்.

கவியரசர் கண்ணதாசனின் இயற்பெயரான முத்தையா என்பதும் முருகனின் பெயர்தான்.

அதனால்தான் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் செட்டிநாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்வார்: ”முத்தப்பன் இல்லாத ஊரும் இல்லை, முருகப்பன் இல்லாதவீடும் இல்லை.”

முருகப்பன், முத்தப்பன், முத்தையா, பழநியப்பன், சுப்பிரமணியன், செந்தில்நாதன், சுவாமிநாதன், வைத்தியநாதன் என்று முருகன் பெயரும், அண்ணாமலை, அருணாச்சலம், கண்ணப்பன், சோமசுந்தரம், மீனாட்சிசுந்தரம் என்று சிவனுடைய நாமங்களாகவே மக்களுடைய பெயர்கள் இருக்கும். அதுபோல பெண்களுடைய பெயர்கள், மீனாட்சி, விசாலாட்சி, வள்ளியம்மை, தெய்வாணை என்று இறைவியரின் பெயராகவே இருக்கும்.

ஊர்களில் உள்ள பொதுக்கோவில்களிலும், பங்காளிகளுக்கென்று உள்ள படைப்பு வீடுகளிலும், ஊரில் உள்ள மக்களின் புள்ளிவிவரங்கள் முழுதாகக் கிடைக்கும். ஊரில் உள்ள ஒவ்வொருவரின் பெயரும் அங்கே பதிவு செய்யப் பெற்றிருக்கும். ஒரு குழந்தையின் பெயர் தந்தையின் பெயருடன் இணைத்தே பதிவாகியிருக்கும்.

என்னுடைய இயற்பெயர். சுப்பிரமணியன்.என் தந்தையாரின் பெயர் வீரப்பன். எங்கள் கோவிலில் பதிவாகியுள்ள பெயர். வீரப்பசெட்டி சுப்பிரமணியன்.

சுப்பிரமணியன் என்பதையும் சுப்பையா என்று சுருக்கி அழைத்தார்கள் அல்லது வைத்தார்கள். பள்ளியில் பதியும்போது எனக்கு சுப்பையா என்று பதிந்ததால் அப்பெயர் நிலைத்துவிட்டது. வைத்த பெயர் மறைந்து விட்டது. எண் ஜோதிடப்படி சுப்பையா எனும் பெயரைவிடச் சுப்பிரமணியன் எனும் பெயர் நல்ல பெயர். அதைப் பின்னால் சொல்கிறேன்

கடிதம் எழுதும்போது இதைச் சுருக்கி வீர.(சுப்பிரமணியன் alias)சுப்பையா என்று எழுதுவார்கள். எனது தந்தைவழித் தாத்தாவின் பெயர் சுப்பிரமணியன். ஆகவே என் தந்தையாரின் பெயர் சுப்பிரமணியன் செட்டி வீரப்பன். சுருக்கமாக சுப. வீரப்பன்.

இந்த இரட்டை எழுத்து இன்ஷியல் எதற்காக? ஒரு எழுத்துப்போதாதா? அதாவது என் தந்தையாரின் இன்ஷியலை சு. என்று போட்டால் போதாதா? எதற்காக சுப. என்று போட வேண்டும்? என்னுடைய இன்ஷியலை வீ. என்று போட்டால் போதாதா? வீர. என்று எதற்காகப் போடவேண்டும்?

ஒருவீட்டில் (அப்போதெல்லாம் கூட்டுக்குடும்பங்கள். பெரிய பெரிய வீடுகள். ஒரு வீட்டில் ஐந்து முதல் பத்துக் குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்த காலம்) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுப்பையாக்கள் இருந்தால், எப்படி அடையாளப் படுத்துவது?

1. அருணாசலம் மகன் சுப்பையா
2. அண்ணாமலை மகன் சுப்பையா
3. முருகப்பன் மகன் சுப்பையா
4. பழநியப்பன் மகன் சுப்பையா

என்று நான்கு சுப்பையாக்கள் இருந்தால், அ. சுப்பையா என்று ஒற்றை எழுத்து இன்ஷியல் இருந்தால், குறிப்பிடப்படும் நபர், அருணாசலம் மகன் சுப்பையாவா அல்லது அண்ணாமலை மகன் சுப்பையாவா என்று எப்படித்தெரியும்? ஆகவே இப்படிச் சொல்வார்கள். அரு. சுப்பையா, அண. சுப்பையா, முரு. சுப்பையா, பழ. சுப்பையா, ஆங்கிலத்தில் AR.Subbiah, AN.Subbiah, MR.Subbiah, PL.Subbiah

(வாய்ச் சொல்லாக அழைக்கும்போது இப்படி அழைப்பார்கள். ஆனாரூனா சுப்பையா, மூனாரூனா சுப்பையா, பானாளானா சுப்பையா)

பட்டிமன்றத் தலைவர் கண.சிற்சபேசன் அவர்களின் பெயருக்கு முன்னால் இருக்கும் கண எனும் எழுத்து அவருடைய தந்தையார் கண்ணப்ப செட்டியாரைக் குறிக்கும். மேடைப்பேச்சாளர் பழ. கருப்பையா அவர்களின் பெயருக்கும் முன்னால் இருக்கும் பழ. எனும் எழுத்து அவருடைய தந்தையார் பழநியப்ப செட்டியார் அவர்களைக் குறிக்கும். திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்களின் தந்தையாரின் பெயர். சுப்பையா.(இவர் திராவிடக் கழக முன்னோடிகளில் ஒருவர். தந்தை பெரியாரின் நெருங்கிய நண்பராக இருந்தவர்). இப்படித் தனித்தன்மையோடு அடையாளப் படுத்துவதற்குத்தான் அந்த இரட்டை எழுத்து இன்ஷியல் முறை.

ப.சிதம்பரம் எனும் பெயரைவைத்து அவருடைய தந்தையார் பெயரை எப்படிச் சுலபமாகச் சொல்ல முடியும்? பரமசிவன் மகனா அல்லது பழநியப்பன் மகனா என்று எப்படித் தெரியும்? அவருடைய தந்தையரின் பெயர் பழநியப்பன். பழ.சிதம்பரம் என்பதுதான் அவருடைய இயற்பெயர். அவர் ப. சிதம்பரம் என்று வைத்துக் கொண்டுள்ளார். பலகாலம் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தவர் அவர். தற்சமயம் அவர் மாண்புமிகு உள்துறை அமைச்சர். வெறுமனே சிதம்பரம் என்று சொன்னால் போதும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரைத் தெரியும். ஆகவே அவர் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம்!

ஆனால் அவருடைய பெயர் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது.
P C H I D A M B A R A M 8 + 3 +5+1+4+1+4+2+1+2+1+4 = 36 இது மிகவும் நல்ல எண் (பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ஆகவே அவருடைய பெயர் ப. என்னும் ஒற்றை எழுத்து இன்ஷியலிலேயே எண் ஜோதிடப்படி அருமையாக அமைந்துள்ளது)

அழகப்பன் எனும் பெயரை உடையவர்கள், எங்கள் பகுதியில் நிறையப் பேர்கள் உள்ளார்கள். அதுவும் முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்று. முருகு என்றால் அழகு. அழகு என்பது அவன்தான். அழகுக்கு அப்பனும் அவன்தான்.

ஆனால் இந்த அழகப்பனை இன்ஷியலாக்கும்போது, இரட்டை எழுத்தில் அள. என்றுதான் குறிப்பிடுவார்கள். அழ. என்று எழுதமாட்டார்கள். என்ன கெட்டிக்காரத்தனம் பாருங்கள். அழ. என்றால் அழுகையைக் குறிக்கும்.
அதனால் அள.

ஆங்கிலத்தில் பிரச்சினையில்லை AL.Chidambaram,. AL.Ramasamy

R, என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் ராமசாமி மகன். RM என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் ராமநாதன் மகன். S, என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் சுந்தரம் மகன், SP என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் சுப்பிரமணியனின் மகன்.

அர்த்தம் ஆனதா மக்களே?
-------------------------------------------------------------------------------
சரி, கதைபோதும். சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

படித்து முடித்தவுடன், தனியார் நிறுவனம் ஒன்றில் சில காலம் வேலை பார்த்தவன், அது பிடிக்காமல், வேலையைவிட்டு விலகித் தனியாகத்
தொழில் செய்யத் துவங்கினேன்.

பண முதலீடு இல்லாத சுய தொழில். முகவர் தொழில். விசிட்டிங் கார்டு, டைரி, பேச்சுத்திறமை, தொலைபேசி இந்நான்கும் இருந்தால் போதும். அதில் மூன்று மட்டுமே இருந்தது. OYT (Own Your Telephone Scheme) யில் தொலைபேசிக்கு பணம் செலுத்திவிட்டு ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை அப்போது. தொழில் துவங்கி ஐந்து வருடம் கழித்துதான் இணைப்புக் கிடைத்தது. அது பெரிய கதை. அதைப் பிறகு ஒரு நாள் விவரிக்கிறேன்.

அப்போது எனக்கு ஜோதிடத்தில் அவ்வளவாகப் பரீட்சயம் இல்லாத நிலைமை. என் ஜாதகப்படி, நான் பண முதலீட்டுடனோ அல்லது கூட்டாகவோ எந்தத் தொழிலும் செய்யக்கூடாது. சிம்ம லக்கினம். பத்திற்கு உரிய சுக்கிரன் எட்டில் (உச்சம். ஆனாலும் எட்டாம் வீடு). தொழில்காரகன் சனி 12ல். அவையெல்லாம் தெரியாமல், முருகன் அருளால் நான் சரியாகவே வழி நடத்தப்பெற்றிருக்கிறேன்.

முதலில் இருந்த பெயர் VR.சுப்பையா. அதை நான் இந்தத் தொழில் துவங்கும்போது SP.VR.சுப்பையா என்று மாற்றிக் கொண்டேன். அந்த மாற்றம் நல்ல மாற்றத்தைத் தந்தது. அது சிலகாலம் கழித்துத்தான் எனக்குத் தெரியவும் செய்தது.

எண் ஜோதிடப்படி VR.சுப்பையா விற்கான எண்: 28 அது நல்ல எண் இல்லை.

Number 28 is not a good number. It is a number with full of contradictions. It indicates a person of great promise who is likely to see all taken away from him. It indicates loss through trust in others and the likelihood of having to begin life's road over and over again. It is not a fortunate number.

எண் ஜோதிடப்படி SP.VR.சுப்பையா விற்கான எண்: 39 இது ஓரளவிற்கு நல்ல எண்.

S P V R S U B B ! A H
3 8 6 2 3 6 2 2 1 1 5 = 39

பெயர்களின் கூட்டெழுத்து 11, 12, 13,14, 16,18 20, 22, 25, 26, 28 29, 34,35, 38, 40, 43,44. 47 & 49 என்று வந்தால் நன்மையைத் தராது என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

நன்றாக இருந்த நகரத்தின் பெயரை மாற்றிவைத்து, அதன் மகிமையைக் குறைத்த கதை ஒன்று உள்ளது.

அதைப்பற்றிய விவரம் அடுத்த பாடத்தில்!
-------------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

26.2.10

சோதிப்பவருக்கே ஒரு சோதனை!



நீலக்கல் The Blue Sapphire

+++++++++++++++++++++++++++++++++++++++++++
சோதிப்பவருக்கே ஒரு சோதனை!

நவரத்தினங்களில் சனிக்கான கல் நீலக்கல் The Blue Sapphire

நவரத்தினங்களில் அதிக வலுவானதும், அணிந்தவுடன் வெகு
தீவிரமாகத் தன் குணத்தைக் காட்டுவதும் இந்தக்கல்தான்!
இதற்கு செளரிரத்னா, ஷனிப்பிரியா, யாகுட் (persian name)
என்று பல பெயர்கள் உண்டு.

இந்த நீலக்கல், காஷ்மீர், ரஷ்யா, அமெரிக்கா என்று சில
குறிப்பிட்ட நாடுகளில்தான் கிடைக்கிறது என்றாலும்,
இலங்கையில் கிடைக்கும் நீலக் கல்லிற்குத்தான் மதிப்பு
அதிகம். அதை ஜாதி நீலக்கல் என்பார்கள். மயூர் நீலம்
என்று பெயர். ஆண் மயிலின் கழுத்து நிறத்தில் அக்கற்கள்
இருக்கும்.

இந்திர நீலம்: கரு நீலக்கலரில் இருக்கும்
ஜலநீல்: கரு நீலக்கலரில் இருக்கும் அத்துடன் நடுவில் சற்று
வெளிச்சமாக இருக்கும்

விளைவுகள்: அணிந்தவுடன், அதிரடியாகப் பலனைத் தரக்கூடிய
கல் நீலக்கல்லாகும். 3 மணி நேரம் அல்லது 3 நாட்களில் பலன்
தெரியும். சிலருக்கு ஒருவாரத்திற்குள் பலன் தெரியும்.
பொருத்தமானது என்றால், பணவரவுகள் உண்டாகும்.
பிரச்சினைகள் முடிவிற்கு வரும். தீர்வாகும். பொருத்தமில்லை
என்றால் கீழே விழுந்து அடிபட நேரிடும், விபத்துக்கள் உண்டாகும்,
பண விரையம் ஏற்படும், மற்றவர்களுடன் வாக்குவாதம்
ஏற்பட்டு சிக்கல்கள் உண்டாகும்.

(எல்லாம் இந்த பரிசோதனைக் காலத்திலேயே நடைபெறும்).
ஆகவே தொடர்ந்து அணியலாமா? அல்லது கூடாதா? என்று
நடக்கும் நிகழ்ச்சிகளைவைத்து நாம்தான் ஒரு முடிவிற்கு வரவேண்டும்.

ஆதாயங்கள்; கல் பொருத்தமாக இருக்கும் என்றால், உங்களுக்கு எல்லாவிதங்களிலும் நன்மைகள் உண்டாகும். மன உளைச்சல்கள் நிவர்த்தியாகும். மன அழுத்தங்கள் குறையும்.
நோயில் படுத்திருப்பவர்களுக்கு நோயின் வீரியம் குறையும்.
71/2 ஆண்டுச் சனியின் பாதிப்பில் இருப்பவர்களுக்குப் பாதிப்புக்கள்
குறையும். துன்பங்கள், வெறுப்புக்கள், ஏமாற்றங்கள் போன்ற
சூழ்நிலைகள் எல்லாம் மாறிவிடும்.

நீலக்கல்லை அணிந்துகொள்ள விரும்புகிறவர்கள், முதலில் ஜாதிநீலக்கல்தானா என்று ஒரு கைதேர்ந்த கல் நிபுணரிடம் கேட்டுவிட்டுத்தான் அணிந்துகொள்ளவேண்டும்.

யார்,யார் நீலக் கற்களை அணிந்து கொள்ளலாம்?

லக்கினங்களின்படியான விவரம் கீழே உள்ளது.

1
மேஷ லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி 2, 5, 7, 9, 10, 11 ஆம்
வீடுகளில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகாதிசை நடைபெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

2
ரிஷப லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி தன் சொந்த நட்சத்திரங்களில் அமையப்பெற்றவர்களுக்கும், அல்லது ராகுவின் நட்சத்திரங்களில் அமையப்பெற்றவர்களுக்கும் இந்த நீலக்கல் பொருத்தமாக இருக்கும்.

3.
மிதுன லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி நீசமாக இருந்தாலும் அல்லது பகை வீடுகளில் இருந்தாலும் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகா
திசை நடைபெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

4.
கடக லக்கினக்காரர்கள்: நீலக்கல்லை நினைத்தே பார்க்கக்கூடாது.

5.
சிம்ம லக்கினக்காரர்கள்: நீலக்கல்லை நினைத்தே பார்க்கக்கூடாது.

6.
கன்னி லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால், அவர்கள் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகாதிசை நடைபெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

7.
துலா லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி 1, 3, 4, 5, 9ஆம் வீடுகளில்
இருந்தால் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகாதிசை நடை
பெற்றாலும்
8.
விருச்சிக லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால்,
அவர்கள் அணிந்துகொள்ளலாம்! அதோடு சனி மகாதிசை நடை
பெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

9.
தனுசு லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால்,
அவர்கள் அணிந்துகொள்ளலாம்

10.
மகர லக்கினக்காரர்கள்: சனி, புதனின் நட்சத்திரங்களில் அல்லது
கேதுவின் நட்சத்திரங்களில், அல்லது தன்னுடைய சொந்த நட்சத்திரங்
களில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்

11.
கும்ப லக்கினக்காரர்கள்: சனி, புதனின் நட்சத்திரங்களில் அல்லது
கேதுவின் நட்சத்திரங்களில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்.

12
மீன லக்கினக்காரர்கள்: நீலக்கல்லை நினைத்தே பார்க்கக்கூடாது.

ஒரு எச்சரிக்கையான விஷயம்: நீங்கள் நீலக்கல்லை அணிய
விரும்பினால், அதை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். உடன்
முத்து (pearl), சிகப்பு (ruby), பவளம் (coral) ஆகையவற்றையும்
சேர்த்து அணியக்கூடாது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கற்கள் என்ன செய்துவிடும் என்று என் நண்பர் ஒருவர், தனது
உறவினரிடம் சவால்விட்டுவிட்டு, ஒரு பெரிய நீலக்கல்லை
வாங்கித் தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். தொடர்ந்து
ஒருவாரம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நிபந்தனை.

அவர் வைத்துக்கொண்ட அன்றே கல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் அவருக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு (Loose Motion). அவருடைய வீட்டுத் தோட்டத்தில், அவர் நின்று கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த காகம் ஒன்று அவர் மண்டையில் கொத்திவிட்டுப் போய் விட்டது. அத்துடன் அந்தவாரம் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பலத்த சரிவினால், கணிசமான அளவில் பணவிரையம் வேறு ஏற்பட்டது. இப்படியாகப் பல தொல்லைகள்.

ஒருவாரம் கழித்து, கல்லைத் தான் வாங்கிய கடையில் கொடுத்துத் திருப்பி எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். பாதிப் பணம் தந்தால் போதும் என்றார். கடைக்காரர் மறுத்துவிட்டார். அதோடு கடைக்காரரே அதற்குப் பரிகாரமும் சொன்னார். கல்லை விபூதி சம்படத்தில் விபூதிக்குள் முக்கி வைக்கும்படி சொல்லி யனுப்பினார். அவரும் அப்படியே செய்ய உபத்திரவங்கள் நின்றன. ஒரு மாதம் கழித்து மீண்டும், அவர் கல்லைச் சோதிக்க முயன்றபோது, அதே நிலை ஏற்பட, மறுபடியும் வீபூதிச் சம்படத்தில் கல்லைவைத்து, மங்களம் பாடி முடித்தார்.

மனிதர்களைப் பல சோதனைகளுக்கு உள்ளாக்குபவர் சனீஷ்வரன். அவரை அல்லது அவருக்கான கல்லைப் பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறவர்களும் அல்லது அவரின் சக்தியைப் பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறவர்களும், அப்படி செய்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 4 அல்லது 5 கேரட் எடையுள்ள நீலக்கல்லின் விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 என்ற அளவில் இருந்தது. தற்சமயம் என்ன விலை உள்ளது என்று தெரியவில்லை. சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் கற்களை விற்கும் வியாபாரிகள் உள்ளார்கள். விசாரித்துப்பார்த்து விலையை எழுதுங்கள். நமது வகுப்பறைக் கண்மணி களுக்கு அது உபயோகமாக இருக்கும்!:-)))))))
கற்களுக்கு நோய்களைத் தீர்க்கும் சக்தி உண்டா? உண்டு என்கிறது ஒரு அறிக்கை. அதுபற்றிய கட்டுரை

திங்களன்று வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

25.2.10

கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!


+++++++++++++++++++++++++++++++++++++++++
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!

பகுதி ஒன்று!

ஒரு பழைய சம்பவம். வருடம் 1985ஆம் ஆண்டில் மே மாதம்.

புதிதாக ஒரு பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரை, அச்சமயம் கோவையில் அக்கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்த பிரவீன் ஆட்டோமோபைல்ஸ்’ நிறுவனத்தில் முழுப் பணத்தையும் செலுத்தி, (அப்போது அதன் விலை ரூ.11,000) விலைக்கு வாங்கினேன்.

அந்த மாடல் வண்டிக்கு, கிராக்கி அதிகம் இருந்ததால், காத்திருக்க விருப்பமின்றி, நண்பர் ஒருவர் உதவியுடன் முழுப்பணத்தையும், அதற்குச் சமமான அமெரிக்க டாலரில் செலுத்தி ஒரே வாரத்தில் வாங்கினேன்.

வாங்கியது முக்கியமில்லை. அதற்குப் பிறகு நடந்ததுதான் முக்கியம்.

ஆர்.டி.ஓ அலுவலகத்தில், அந்த இரு சக்கர வாகனத்திற்கான காகிதங்களை எல்லாம் சமர்ப்பித்து, பதிவு எண்ணிற்கு (Registration Number) விண்ணப்பித்திருந்தேன்.

அதுசமயம், ஒரு இடைத்தரகர் என்னிடம் வந்து, சார் ஒரு ஐநூறு ரூபாய் செலவழிக்க நீங்கள் தயார் என்றால், உங்களுக்கு நீங்கள் கேட்கும், பதிவு எண்ணை (fancy number) வாங்கித் தருவதாகச் சொன்னார்.

"கொடுக்காவிட்டால் என்ன ஆகும்?" என்று கேட்டேன்.

"கூட்டல் எண் எட்டாம் எண் வரும்படியாகப் போட்டுவிடுவார்கள்" என்று பயமுறுத்தும்படியாகச் சொன்னார்.

எட்டாம் எண், சனியினுடைய எண். சனி எனக்கு ராசிநாதன். போட்டால் போடட்டும். அதைப் போட்டுக்கொடுங்கள் என்று கேட்டால், அதற்கும் பணம் பறிப்பார்கள் என்று நினைத்தவன், ஒன்றும் சொல்லாமல், "பணம் எல்லாம் அனாவசியமாகத் தரமுடியாது. எந்த எண் வந்தாலும் எனக்குக் கவலையில்லை" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

நான் நினைத்தபடியே நடந்தது. எட்டாம் எண்ணையே போட்டுவிட்டார்கள். நானும் மகிச்சியோடு ஆர்.சி புத்தகத்தை வாங்கிக்கொண்டுவந்துவிட்டேன்.

அந்த எண்ணால் எனக்கு ஒரு பிரச்சினையும் ஏற்பட்டதில்லை!

நம் ஜாதகம் இருக்கும்போது, எண் நம்மை என்ன செய்துவிடப்போகிறது? என்னும் சிந்தனையும் அதற்குக் காரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரிகமபதநி’ என்று ஏழு ஸ்வரங்களுக்குள் ஒரு ஒலி அலை இருப்பதைப்போல, எண்களுக்கும் ஒரு ஒலி அதிர்வு உண்டு என்பார்கள்.

எட்டாம் எண், சனீஷ்வரனுக்கான எண்!

கறுப்பு நிறம் சனீஷ்வரனுக்கான நிறம்.

சில (இளம்) பெண்கள் கறுப்பு நிறத்தில் உள்ளாடைகள் மற்றும் வெளியாடைகள் அணிவதைப் பார்த்திருக்கிறேன்.நீங்களும் பார்த்திருக்கலாம். தெரிந்த பெண்ணாக இருந்தால், ’அணியாதே அம்மா’ என்று அறிவுரை சொல்வேன். ஜாதகத்தில், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரகளும், லக்கினக்காரர்களும், சனி உச்சமாக இருப்பவர்களும் அணியலாம். மற்றவர்கள் அணியும்போது பாதகமான நிலைமை ஏற்படும்.

சனியைப்பற்றியும், அவருடைய சேஷ்டைகளைப் பற்றியும், உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி நம்பிக்கை இல்லாதவரா நீங்கள்?

அதைப் பரிசோதித்துப் பார்க்க (அதாவது சனியின் பாதிப்பைப் பரிசோதித்துப் பார்க்க) ஒரு வழி இருக்கிறது.

என்ன வழி?

அதை நாளை சொல்கிறேன்!

(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

24.2.10

காதலிப்பார் யாருமில்லை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காதலிப்பார் யாருமில்லை!

கேள்வியும் நானே! பதிலும் நானே!

காதல் திருமணத்திற்கு உரிய முக்கிய கிரக அமைப்பைச் சொல்லமுடியுமா?

காதல் திருமணங்களுக்கான கிரக அமைப்புக்கள்!

(Indications of love marriages)

ஜாதகத்தில் காதல் திருமணத்திற்கான வாய்ப்பைக் கோடிட்டுக் காட்டும் கிரக அமைப்புக்கள்:
1
ஐந்தாம் வீட்டதிபதியும், லக்கின அதிபதியும் கூட்டாக ஒரு வீட்டில் இருக்கும் நிலைமை!

2
ஐந்தாம் வீட்டதிபதியும், லக்கின அதிபதியும் வலிமையுடன் இருப்பதுடன், ஒருவரை ஒருவர் பார்வையில் வைத்திருக்கும் நிலைமை!

3
ஐந்தாம் அதிபதியும், லக்கினாதிபதியும் பரிவர்த்தனையாகி இருத்தல்

4
சந்திரன் அல்லது செவ்வாய் அல்லது சுக்கிரன் ஆகிய மூவரில் ஒருவர் வலிமையாக இருந்து ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் அல்லது பார்க்கும் நிலைமை

5
ஒன்பதாம் வீட்டில் ஒரு தீய கிரகம் வலிமையுடன் இருப்பது. (ஒன்பதாம் வீடு குடும்ப மரபுகளுக்கு உரிய வீடு. அதை நினைவில் வைக்கவும். அதை உடைத்து, ஜாதகனை மரபுகளைக் கடந்து காதல் திருமணம் செய்துகொள்ள வைக்கும் நிலைப்பாடு இது)

6
சுக்கிரனும், செவ்வாயும் நவாம்சத்தில் பரிவர்த்தனை பெற்று இருக்கும் நிலைமை!

ஒரு நாட்டிற்கான ஜாதகத்தில் ஏழாம் வீடு என்பது, வெளிவிவகாரங்களையும், (External affairs) சந்திக்கவிருக்கும் யுத்தங்களையும் காட்டும் (In Mundane Astrology, the Seventh House represents diplomacy & War) தனி மனிதர்களின் ஜாதகத்தில் ஏழாம் வீடு என்பது மனைவியையும், அவளால் அடையவிருக்கும் இன்ப/துன்பங்களையும் காட்டும். என்னவொரு பொருத்தம் பாருங்கள்.

தீயகிரகங்களால் ஏழாம்வீடு பாதிக்கப்பெற்றிருந்தால், திருமணவாழ்க்கை அவலத்தில் முடிந்துவிடும். அதே நேரத்தில் சுபக்கிரகங்களால் மேன்மை பெற்றிருந்தால், இல்லற வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்!

காதல் கனிவதற்கும், கனிந்து பலன் தருவதற்கும் 5ஆம் வீடு முக்கியமானதாகும். 5ஆம் வீடும் அதன் அதிபதியும் வலுவாக இருந்தாம் மட்டுமே உண்டாகும் காதல் கூடிவரும் அல்லது கனிந்து வரும், உனக்கு நான், எனக்கு நீ எனும் வாழ்க்கையையும் பெற்றுத் தரும்.

அப்படி 5ஆம் வீடு சரியாக இல்லையென்றால், காதலை நினைத்துப் பார்க்கக் கூடாது. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் ஒன்றின் துவக்க வரிகளை அடிக்கடி பாடிவிட்டுச் சும்மா இருக்க வேண்டியதுதான்.

என்ன வரி அது?

ஆகா, உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

”காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை!”
++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

16.2.10

கடலை போடுவதற்குக் காலம் பார்க்க வேண்டுமா?


ராகு பகவானின் அழகிய தோற்றம்!:-))))
படம் உதவி: இங்கே பார்க்கவும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வியும் நானே - பதிலும் நானே!

நாட்டுக்கு நாடு ராகுகாலம் வேறுபடுமா? வேறுபட்டால், அதைக் கண்டுபிடிப்பது எப்படி? பயன்படுத்துவது அல்லது அதைத்
தவிர்ப்பது எப்படி?


முதலில் ராகுகாலம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

நவகோள்களில் ராகுவிற்கும் கேதுவிற்கும் சொந்த வீடுகள் கிடையாது. சொந்த தினங்களோ அல்லது நாட்களோ கிடையாது.

சூரியனுக்கு - ஞாயிற்றுக்கிழமை (Sunday), சந்திரனுக்குத் திங்கட்கிழமை (Monday), செவ்வாய்க்கு செவ்வாய்க்கிழமை (Tuesday), புதனுக்குப் புதன்கிழமை (Wednesday), குருவிற்கு வியாழக்கிழமை (Thursday), சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை (Friday), சனிக்கு சனிக்கிழமை (Saturday) என்று அவைகள் ஆதிக்கம் செய்யும் நாட்கள் உள்ளன.

அவ்வாறு ராகுவிற்கும் கேதுவிற்கும் தனியாக நாட்கள் கிடையாது.

ஆனால் தினமும் ராகுவிற்கு ஒன்றரை மணி நேரமும், கேதுவிற்கு ஒன்றரை மணி நேரமும் ஆதிக்கம் செலுத்தும் என்று அந்த நேரம் அவைகளின் காலமாக ஒதுக்கப்பட்டுள்ளது.அவைகளுக்கு யார் அந்த நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள்? எந்த அடிப்படையில் ஒதுக்கிக் கொடுத்தார்கள்?
என்று வீணாக மண்டையைப் போட்டு யாரும் உருட்டிக்கொள்ள வேண்டாம். இந்திய ரிஷிகள் கொடுத்துள்ளார்கள். கேள்விகேட்டுப் பதிலைப் பெறலாம் என்றால் அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.

நூற்றாண்டுகளாக வாழ்ந்த ‘பெரிசுகளும்’ அவற்றைத் தவிர்க்கும்படி தங்கள் அனுபவத்தின் மூலம் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்கள். ஆகவே முடிந்தவர்கள் அவர்கள் சொற்படி நடப்போம்.

தினமும் ராகுவிற்கு உரிய ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் எனப்படும். தினமும் கேதுவிற்கு உரிய ஒன்றரை மணி நேரம் எமகண்டம் எனப்படும்.

அந்த நேரத்தில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் புதிய செயல்களைத் தவிர்க்க வேண்டும். வழக்கமாகச் செய்யும் தினசரி அலுவல்களைச் செய்யலாம். That is your routine work. அதாவது காஃபி அல்லது
டீ குடிப்பதற்கும், தம் அடிப்பதற்கும், அலுவலகத்தில் கடலை போடுவதற்கும், ராகு காலம் பார்க்க வேண்டாம்.

தவிர்க்காமல் சுப காரியங்களைச் செய்தால் என்ன ஆகும்?
செய்து பாருங்கள், தெரியும்.

Rahu Kalam is the inauspicious time slot of the day.
It is the most dreaded time of the day as per Astrology
and must be avoided in all ventures for success.

ஒரு இடத்தின் சூரிய உதயத்தை வைத்து ராகு காலத்தை அறிய வேண்டும். அட்சரேகை, தீர்க்க ரேகையை வைத்து ஒரு இடத்தின் நேரம் மாறுபடும்.

ராகு காலத்தை அறியும் வழி:

ஒரு நாளின் பகல் நேரத்தின் அளவைக் கண்டு பிடியுங்கள். அதை எட்டு சமமான பகுதிகளாகப் பிரியுங்கள். பிரித்த பிறகு கீழே உள்ளபடி ஒவ்வொரு தினத்திற்கும் உரிய ராகுகாலம் தெரியவரும்

ஞாயிற்றுக்கிழமை = சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை உள்ள நேரத்தில் எட்டாவது பகுதி அந்தக் கிழமையின் ராகுகாலம் ஆகும்.

திங்கட்கிழமைக்கு = இரண்டாவது பகுதி

செவ்வாய்க்கிழமைக்கு = ஏழாவது பகுதி

புதன்கிழமைக்கு = ஐந்தாவது பகுதி

வியாழக்கிழமை = ஆறாவது பகுதி

வெள்ளிக்கிழமை = நான்காவது பகுதி

சனிக்கிழமை = மூன்றாவது பகுதி.
==================================================================
உங்களுக்குப் புரியும் வகையில் விரிவாக இரண்டு அட்டவணைகளைக் கீழே கொடுத்துள்ளேன். அட்டவணைகளின் மீது கர்சரைவைத்து அழுத்தினால், அட்டவணைகள் பெரிதாகத் தெரியும்.


1


2

நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ராகுகாலம் சூரிய உதயம் 6:00 மணிக்கு என்று கணக்கிடப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. தை, மாசி மாதங்களில் சூரியன் 6:30 மணிக்கு உதிக்கும். அப்போது நாட்காட்டிகளில் குறிப்பிடப் பட்டுள்ள பொது நேரம் மாறுபடும். அர்த்தம் ஆனதா?
++++++++++++++++++++++++++++++++++++++++
தன்னுடைய சொந்தத் தொழில் வேலையாக வாத்தியார் இரண்டு தினங்கள் வெளியூர் செல்வதால், வகுப்பறைக்கு இரண்டு தினங்கள் விடுமுறை. அனைவரும் சமர்த்தாக பழைய பாடங்களை ஒருமுறை திரும்பப்
படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

15.2.10

கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்காதது எது?

++++++++++++++++++++++++++++++++++++++++++
கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்காதது எது?

கேள்வியும் நானே - பதிலும் நானே!
++++++++++++++++++++++++++++++++++==
சனியை நினைத்தால் சிலருக்குப் பயமாக இருக்கிறதே - பயத்தைப் போக்க என்ன செய்யலாம்?

சனியை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். அவர்தான் கர்மகாரகர். இந்த உலகில் நீங்கள் பிறவி எடுத்த கர்மத்தின்படி, நீங்கள் பார்க்கவேண்டிய செயலை அல்லது உத்தியோகத்தை அல்லது வேலையை நிர்ணயிப்பவர் அவர்தான். அதோடு அனைவருக்கும் ஆயுள்காரகனும் அவர்தான். இந்த உலகில் ஒருவன் வாழ வேண்டிய நாட்களை நிர்ணயிப்பவரும் அவர்தான். கணக்குப்படி நாட்கள் முடிந்துவிட்டால், உங்களை ஒரு நொடிகூடத் தாமதிக்கவிடாமல் அள்ளிக்கொண்டு போகிறவரும் அவர்தான்!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிப் பாட்டில் வைத்தார்:

"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல்
இந்தமண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா..."

இந்தப்பாடலில் உள்ள முக்கியமான வரிகள்: “கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது”

கர்மவினைப்படிதான் நமது வாழ்க்கை அமையும் - தனது
தர்மம்படிதான் சனீஷ்வரன் நடந்துகொள்வார்.

ஆகவே சனீஷ்வரனைக் கண்டு யாரும் பயப்படவோ அல்லது கவலை கொள்ளுவதோ வேண்டாம்.

சனியைவிடப் பயப்பட வேண்டிய ஆசாமி ஒருவன் இருக்கிறான் என்றால், அது ராகு! தண்டிக்க வேண்டிய ஒருவனை சனி சும்மா அடிப்பார். ஆனால் அதே நிலையில் மாட்டுபவனை ராகு சும்மா அடிக்க மாட்டார். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிப்பார். (Rahu is a merciless planet) ராகு மகா தசையில் அதை
அனுபவித்தவர்களுக்குத்தான் அந்த வலி நன்கு தெரியும்.
=-------------------------------------------------
வானவட்டத்தில் பத்து மற்றும் பதினொன்றாம் ராசிகளுக்கு அதிபதி சனி. மகர ராசியும், கும்ப ராசியும் அவருடைய சொந்த ராசிகள். சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் சனி உச்சம் பெறுவார். செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் அவன் நீசமடைவார். அவர் வானவெளியில் ஒரு சுற்றைச் சுற்றி முடிக்க
எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள். இதெல்லாம் அடைப்படை விஷயங்கள்.

கட்டுப்பாடுகள் (restriction), வரைமுறைகள் (limitation), தாமதம் (delay) ஆகியவை நம்மை மீறியும் உண்டாவதற்குக் காரணம் சனிதான். சனிதான் வாழ்க்கையின் யதார்த்தத்தை, அர்த்தத்தை நமக்குப் போதிக்கும் ஆசான் ஆவார். தடைகள், தாமதங்கள், தோல்விகள் என்று அடுத்தடுத்து ஏற்பட்டு நமக்கு பலவிதமான அனுபவங்களைக் கொடுத்து நம்மை நெறிப்படுத்து பவரும் அவர்தான்.

Saturn is the guru who teaches us the realities of our earthly existence. Obstacles,
delays and failures!

வெறுப்பு (frustrations) பதவியிறக்கம் (displacement) தனிமை (loneliness) என்று வாழ்க்கையின் பல நிலைப்பாடுகளை ஜாதகனுக்கு, அவனுடைய மதிப்பு, மரியாதை, சாதனைகள், செல்வம், சமூக அந்தஸ்து என்று எதையும் கணக்கில் கொள்ளாமல், (அவனைப்) புரட்டிப்போட்டுக் கற்றுக் கொடுப்பவரும் அவர்தான்!

நமது கர்மாவை உணரவைத்து, “எல்லாம் என் தலை எழுத்து” என்று சொல்ல வைப்பவரும் அவர்தான்.

Saturn walks us through these educating experiences and leads us to where we belong and what we deserve according to our action or Karma.

ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமச்சனி என்று கோள்சாரப்படி தனது ஒவ்வொரு சுற்றிலும் மொத்தம் 10 ஆண்டுகளும், தனது தசா அல்லது புத்திகளின் மூலம் மொத்தம் 19 ஆண்டுகளும், பல ஜாதகர்களை அவர் வறுத்தெடுப்பது, ஜாதகனுக்கு பல (கஷ்டங்களின் மூலம்) அனுபவத்தைக் கொடுப்பதறகாகத் தான்.

சிலர் இந்தக் கஷ்டங்களில் இருந்து தப்பிவிடுவார்கள். அதற்குக் காரணம், சந்திரராசியிலும், அதற்கு முன் பின் ராசிகளிலும், சந்திரராசிக்கு எட்டாவது ராசியிலும் 30 அல்லது 30ற்கு மேற்பட்ட பரல்கள் அவர்கள் ஜாதகத்தில் இருக்கும். அந்த நான்கில் எத்தனை ராசிகளில் அப்படி இருக்கிறதோ அத்தனை பெருக்கல் இரண்டரை ஆண்டுகளைத் தப்பிக்கும் ஆண்டுகளாக எடுத்துக்கொள்ளலாம். அதேபோல சனி தன் சுயவர்க்கத்தில் 4 பரல்களுக்கு அதிகமான பரல்களுடன் இருந்தால், சனியின், தசா/புத்தி, ஜாதகனுக்கு
தீமைகளைச் செய்யாமல் நன்மைகளைச் செய்யும். ஆகவே அதையும் பாருங்கள்.

தொழில் ஸ்தானத்தை (Tenth House) முதல் இடமாகக்கொண்டு அன்றையக் கோச்சாரச் சனி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். அந்த இடத்தில் இருந்து கோள்சாரப்படி அவர் 6 அல்லது 8 அல்லது 12ஆம் இடங்களில் இருந்தால், உங்கள் வேலைகளில், அல்லது செய்யும் தொழில்களில் சிக்கல் உண்டாகும்.
அந்த இடத்தை அவர் கடந்த பிறகு, அந்தச் சிக்கல்கள் நீங்கிவிடும்.

சனியின் மகோன்னதத்தை அல்லது மேன்மையைப் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்!

Know the time periods of Saturn in your life from your Horoscope and live a meaningful life.
----------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

11.2.10

திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வியும் நானே - பதிலும் நானே! பகுதி 3

திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன?

திருமணம் தள்ளிக்கொண்டே போவதற்கு ஜாதகப்படி உள்ள காரணங்களில் சில:

1. ஏழாம் வீட்டதிபதி நீசம் பெற்றிருந்தாலும் அல்லது வக்கிரகதியில் இருந்தாலும் அல்லது அஸ்தமனம் ஆகியிருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

2. ஏழாம் வீட்டதிபதி 12ல் மறைந்திருப்பதோடு, ஏழாம் வீட்டில் சனி வந்து குடியிருக்கும் அமைப்புள்ள ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத் திருமணம் தாமதப்படும்.

3. ஏழாம் வீட்டதிபதி எட்டாம் வீட்டில், எட்டாம் அதிபதியுடனும், சனியுடனும் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதப்படும்.

4. ஒன்று & ஏழாம் வீடுகளின் மேல் (1/7 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் திருமணம் தாமதப்படும். (லக்கினத்தில் செவ்வாய் அல்லது சனி இருந்தால், அவர்களுடைய நேரடிப்பார்வை ஏழாம்
வீட்டின் மேல் விழுந்து ஜாதகனின் திருமணத்தைத் தாமதப்படுத்தும்)

5. அதேபோல இரண்டு & எட்டாம் வீடுகளின் மேல் (2/8 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

6. சுபக்கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

7. சுக்கிரன் அஸ்தமனமாகியிருந்தால் திருமணம் தாமதப்படும்.

8. ஏழாம் அதிபதி ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

9. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தாமதமான திருமணம்!

10. மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசி ஆகிய இடங்கள் ஏழாம் வீடாக இருந்து, அங்கு சனி வந்து டென்ட் அடித்து இருந்தால் திருமணம் தாமதப்படும்.

11.சூரியனும், சுக்கிரனும் கூட்டாக மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும். அதுவே பெண்ணின் ஜாதகமாக இருந்தால் ஜாதகி திருமண வாழ்வு
வேண்டாம் எனக் கூறிவிடுவாள்.

12. சனி அல்லது செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகியின் திருமணம் தாமதப்படுவதோடு, அவர்கள் தங்களைவிட வயதில் மூத்தவரைத் திருமணம் செய்து கொள்ள நேரிடும்.

இந்த அவலங்களில் இருந்து ஜாதகனை மீட்டு, அவனுக்குத் திருமணத்தை நடத்திவைக்கக்கூடிய ஒரே கிரகம் குரு பகவான் ஆவார். ஆகவே உரிய காலத்தில் திருமணமாகாமல் தவிப்பவர்கள். தினமும் குரு பகவானை
வழிபடுவது நல்ல பலனைத்தரும்.

இதெல்லாம் பொதுவிதிகள். தனி நபர்களின் ஜாதகத்தில் உள்ள வேறு சில நல்ல அமைப்புக்களை வைத்து இந்த விதிகள் தள்ளுபடியாகிவிடும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.
குறிப்பாகப் பெண் வாசகர்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!