மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

23.5.22

மதுவின் தீமைகளைப் பற்றி கவியரசர் எழுதிய பாடல்!




மதுவின் தீமைகளைப் பற்றி கவியரசர் எழுதிய பாடல்!

“சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் ;
அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு எழுதச் சொன்னால் எப்படி ..?
சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..!
வேறு வழி இல்லை..! படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் . ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் பின்பு பலமாகச்
சிரித்தார் .
சில காலம் முன் அவர் எழுதி இருந்த ஒரு கவிதை :
“ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் – இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான்..”
கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..!
அப்படி இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார் என்றால்…?
புரிந்து கொண்டார் கண்ணதாசன்... !
மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .
எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசனுக்கு தெளிவாக தெரிந்தது..
உடனே 'சங்கே முழங்கு' படப்பிடிப்புத் தளத்திற்குப் புறப்பட்டார். அங்கே எம்ஜிஆர் கவிஞரை வரவேற்றார். பாடல் எழுத தயாரானார்..! கண்ணதாசன்.
“சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்” பாடலுக்கான பல்லவியில்... 
கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,
பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள் ..!
“மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !”
“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.
அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த வார்த்தைகள் :
“அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே”
கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :
“நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது
ந‌ல்ல‌வ‌னும் தீய‌வ‌னே
கோப்பை ஏந்தும் போது”
“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?
கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி சில முற்போக்கான விஷயங்களை சொல்ல வேண்டாமா..?
“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்...
“புகழிலும் போதை இல்லையோ..
பிள்ளை மழலையில் போதை இல்லையோ..
காதலில் போதை இல்லையோ..
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ..!
மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ..?
நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு..
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு.. !”
சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் கண்ணதாசன்.
படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போது தெரிகிறதா..?”
ஆம்...!
இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் வித்தை ..
கவிஞருக்கு எங்கிருந்து வந்தது ..?
இதோ.. அதை கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி..!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே..
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே..
உன்னைத் தவிர
உலகில் எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா..!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”
ஆஹா..!
வாழ்க கண்ணதாசன் புகழ்.. ! வளர்க அவர் தாலாட்டிய தமிழ்...! அவர் நாமம் வாழ்க....!
============================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.3.22

தேசத்தை ஈர்த்த தமிழன் - கண்ணதாசன்*  


தேசத்தை ஈர்த்த தமிழன் - கண்ணதாசன்*
 
*ஊராண்டு நாடாண்டு*
* உயர்வான மேதைகளின்*
* உள்ளத்தை ஆண்ட மனிதன்*
 
*உடலாண்டு மனம் ஆண்டு*
* ஒரு தொண்ணூற்றைந்தாண்டு*
* உலகத்தில் வாழ்ந்த அறிஞன்*
 
*சீராண்டு வேதாந்த*
* சித்தாந்த மெய்ஞானம்*
* சேர்த்தாண்ட ஞானமுனிவன்*
 
*தெளிவோடு பலவாண்டு*
* தென்னாட்டு மாந்தர்க்குத்*
* தெய்வத்தை சொன்ன கலைஞன்*
 
*நூறாண்டு வாழாது*
* ஐந்தாண்டு குறைவாகி*
* நோயாண்டு மாண்ட தெனவோ?*
 
*நுவலரிய பொருள்கள் தரும்*
* வலிமைமிகு கீதையெனும்*
* நூலாண்ட பரந்தா மனே !*
 
*ஊராட்சி என்றாலும்*
* நகராட்சி என்றாலும்*
* ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்*
 
*ஒருபோதும் தன் கட்சி*
* நிருவாகத் தலையீட்டை*
* ஒப்புக் கொள்ளாத தலைவன்*
 
*சீரான அரசாட்சி*
* சிலகாலம் செய்தாலும்*
* திறமாகச் செய்த புனிதன்*
 
*தென்னாட்டு மாந்தர்தம்*
* திறமைக்கு சான்றாகி*
* தேசத்தை ஈர்த்த தமிழன்*
 
*தேராத நூலில்லை*
* தெளியாத பொருளில்லை*
* சென்றோடி விட்ட தெனவோ?*
 
*செழுமை மிகு பொருள்கள்தரும்*
* அழகு மிகுகீதையெனும்*
* தேர்தந்த பரந்தா மனே !*
 
*வாழ்வாங்கு வாழ்வாரைத்*
* தெய்வத்துள் வைக்குமொரு*
* வையத்து வாழு மனிதா*
 
*வையத்துள் இராஜாஜி*
*வாழ்வுக்குச் சான்றாக*
* வாழ்வொன்று எங்கும் உளதா?*
 
*ஊழோங்கி உயிர்வாங்கி*
* உடல்கூடென் றானாலும்*
* உள்ளத்தைக் காலம் வெலுமோ?*
 
*ஒருகோடி வருடங்கள்*
* ஓடட்டும்; அவர்சொன்ன*
* உரைகூட ஓடிவிடுமோ?*
 
*தாழாத பணியென்றும்*
* தமதென்ற இராஜாஜி*
* தருமங்கள் வாழும் தினமே !*
 
*தனது நிகர் இல்லாத*
* இனியதொரு கீதையெனும்*
* தாய்தந்த பரந்தா மனே !*
 
*மாபார தத்தினிலும்*
* இராமாயணத்தினிலும்*
* மனமார மூழ்கி நீந்தி*
 
*மனநீதி பொய்யாது*
* மறைநீதி அகலாது*
* வாழ்ந்தார்க்கு ஆத்ம சாந்தி*
 
*பூபாரம் ஏற்றானை*
* புகழ்ப்பாரம் கொண்டானை*
*பொழுதென்றும் வாழ்த்து மனமே!*
 
*பொய்யாத மானிடர்கள்*
* இவர்போல சிறிதேனும்*
* பொன்னாட்டில் வருக தினமே !*
 
*கோபாலன் ஆவிக்கு*
* மாறாத அமைவொன்று*
* குறையாது தருக வரமே !*
 
*குணமுடைய பொருள்கள் தரும்*
* நலமுடைய கீதையெனும்*
* கொடைதந்த பரந்தா மனே !*
 
*- கண்ணதாசன்*
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்’
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.2.22

அடித்து ஆடலாம் வாருங்கள்!




அடித்து ஆடலாம் வாருங்கள்!

பொங்கலுக்குப் பிறகு கடந்த 17 நாட்களாக பதிவுகள் எதுவும் போடவில்லை. உடல்நிலைதான் காரணம். இப்போது சரியாகி விட்டது.
இனிமேல் முடிந்தவரை தொடர்ந்து எழுதுகிறேன்

இப்போது கவியரசர் கண்ணதாசன் வரிகளில் அசத்தலான புராணக்கதை ஒன்றை உங்களுக்குத் தருவதில் மகிழ்வு கொள்கிறேன் !

கண்ணதாசன் கவிதை வரியில் ஒரு  வாணிய செட்டியாரின்  புராணக்கதை!

ஒரு பாடலின் இடையே வரும் ரெண்டு வரிகளில் 
இவ்வளவு பெரிய உண்மை கதை அல்ல நிஜமே


இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...
என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!
.
“ *இசைத்தமிழ்* நீ செய்த அரும் சாதனை..” 
.
எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் " *திருவிளையாடல்* " படப் பாடல்தான் இது ..!
ஆனால் இன்று ஏனோ....
இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , 
மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...
அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!
.
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -  மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*
.
 பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!
.
இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன *சிவலிங்கம்* சாட்சி சொன்ன கதை..?
.
நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்...
.
“ அது வந்து.... 
அதாவது.... சிவனின் *திருவிளையாடல்களில்* 
அதுவும் ஒன்று....
அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”
.
சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்..
 *கண்ணதாசன்* ...!
.
சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..! 
அவர் ஒரு வரி எழுதினால் ..
அதற்குள்ளே *ஓராயிரம்* அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!
.
கூகிளில் , அங்கும் இங்கும் தேடி ஓடி... 
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....
அது *இதுதான்* ...!
.
அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்... 
.
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் 
தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...
.
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... 
.
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..
அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..
சற்றுத் தள்ளி ஒரு கிணறு...
கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
.
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...
காரணம்...?
அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்... 
.
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!
.
தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....
.
நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...
உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...
.
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , 
இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”
.
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...
அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , *சிவலிங்கமும்தான்* ...!
.
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....
.
கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
.
வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” 
.
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!
.
கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :
"நாங்கள் சாட்சி.."
.
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!
.
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... 
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...! 
.
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
.
இப்போதும் , *மதுரையில்* சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... 
 *வன்னிமரம்* , *கிணறு* , *சிவலிங்கம்* ஆகியவை இருக்கிறதாம்....!
.
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?
.
ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!
. கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “ *சாட்சிநாதர்* ” என்றும் “ஸ்ரீ *சாட்சிநாதசுவாமி* ” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!
.
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]
.
. கதையைப் படித்து முடித்த நான் , 
 *கண்ணதாசனை* எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!
.
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”
.
....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , 
இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..! 
இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் , 
கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!
.
சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் ....
அவர் எழுதிய *ஆயிரக்கணக்கான* பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?
.
அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?
.
 அத்தனையும் இந்த ஒரு *ஜென்மத்தில்* , 
எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?
.
“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த 
நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”
.
 கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞர் மட்டும் அல்ல... மனதில் சிம்மாசனம் போட்டு அமர வைக்க வேண்டிய கவிஞர்
----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.3.21

காலோடு கால்பின்னி எப்போது - யாருக்காக ஆடியது ?


காலோடு கால்பின்னி எப்போது - யாருக்காக ஆடியது ?

 எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை !
அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.

எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார்.

'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.

இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங்கரையில், இரு இளம் பெண்களோடு இணைந்து  ஆடிப்பாடி வருகிறார் எம்ஜிஆர்.

இதுதான் காட்சியமைப்பு.

கண்ணதாசன் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார். 

அவர் கண்களுக்குள்
தேவாரம், திருவாசகம்,
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், திருக்குறள்... அத்தனையும் ஓடி வந்து அழகாக நடனம் ஆடின.

எதை எடுப்பது, எதை விடுப்பது ? எதுவும் புரியவில்லை கண்ணதாசனுக்கு.

கண் திறந்து பார்த்தார் கண்ணதாசன். அந்த அறைக்குள் அமர்ந்திருந்து,
தன்னையே இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தமிழன்னையின் தரிசனத்தை கண்டு கொண்டார்.

கண் மூடி, கை கூப்பி வணங்கினார் தமிழன்னையை !
"தாயே, தமிழே ! நான் படித்த ஆயிரக்கணக்கான இலக்கியங்களில், இந்த இடத்துக்கு பொருத்தமான வரிகள் எவை தாயே ?
எடுத்துச் சொல் அன்னையே, வேண்டிக் கொள்கிறேன் உன்னையே !"

புன்னகைத்தாள் தமிழன்னை!
பொருத்தமான வரிகளை பொங்கி வரச் செய்தாள் கண்ணதாசன் உள்ளத்தில் !

மாணிக்க வாசகர் எழுதிய வரிகள், கண்ணதாசன் மனதுக்குள் வந்து ஆடின.

மாணிக்கவாசகர் மதுரை வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார். அங்கங்கே பெண்கள் மர நிழல்களில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்த வாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே சில மங்கையர் வண்ணக் கோலப் பொடி  இடிக்கிறார்கள். அப்படி  தாள லயத்தோடு உலக்கையை 
இடிக்கும்போது  அவர்கள் பாடும் பாடல் இது :

"முத்தணி கொங்கைகள் ஆட ஆட 
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச் 
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச் 
செங்கயற் கண்பனி ஆட ஆடப் 
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப் 
பிறவி பிறரொடும் ஆட ஆட 
அத்தன் கருணை யொ டாட ஆட 
ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

ஆஹா, ஆஹா ! தேனினும் இனிய இந்த தித்திக்கும் தமிழை தேடி எடுத்து தனக்குத் தந்த தமிழன்னையை நோக்கி மகிழ்வுடன் புன்னகை செய்தார், கரம் கூப்பி  வணங்கினார் கண்ணதாசன்.

அப்புறம் என்ன ?

எம்.எஸ்.விஸ்வநாதனை நோக்கி சொன்னார் கண்ணதாசன். "விச்சு, இது சரியா இருக்குமா பாரு."

"சொல்லுங்க கவிஞரே!"

"கட்டோடு குழலாட ஆட ஆட
கண்ணென்ற மீனாட ஆட ஆட
கொத்தோடு நகையாட ஆட ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு!"

"ஆஹா" என்றார் எம்.எஸ்.வி.

கண்ணதாசன் தொடர்ந்தார் :
"பாவாடை காற்றோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால்பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு!"

பொங்கி வரும் பூரிப்பில் கண்ணதாசனை கட்டி  அணைத்துக் கொண்டார்  எம்.எஸ்.வி.

காலத்தை வெல்லப் போகும் ஒரு பாடல் அந்த அறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்க, 
வந்த தன் வேலை முடிந்ததென எவருக்கும் தெரியாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள் தமிழன்னை.

அவள் சென்ற திசை நோக்கி கை கூப்பி தொழுதார் கண்ணதாசன் :

“வட்டிக் கணக்கே 
வாழ்வென் றமைந்திருந்த 
செட்டி மகனுக்கும் 
சீர்கொடுத்த சீமாட்டி! 

தோண்டுகின்ற போதெல்லாம் 
சுரக்கின்ற செந்தமிழே 
வேண்டுகின்ற போதெல்லாம் 
விளைகின்ற நித்திலமே 

உன்னைத் தவிர 
உலகில்எனைக் காக்க 
பொன்னோ பொருளோ 
போற்றிவைக்க வில்லையம்மா! 
என்னைக் கரையேற்று 
ஏழை வணங்குகின்றேன்!”

நானும் வணங்குகின்றேன்
கண்ணதாசனை !
தமிழ்த்தாயின் தனிப் பெரும் தவப் புதல்வனை !

படித்ததில் பிடித்தது.
-----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.12.20

கடவுளின் பெயர்களும் கண்ணதாசனின் சொல்நயமும்! .


கடவுளின் பெயர்களும் கண்ணதாசனின் சொல்நயமும்!
.
கண்ணதசனின் சொல்நயம் !

கவிஞர் கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் : 

ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்,' என்று கேட்டாராம். 

இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!

அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.

அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார்.
'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது.
'கணவன்'.!
'உன் குழந்தைகளுக்கு.?'
'அப்பா, தந்தை.!'
உன் அண்ணனுக்கு.?'
'தம்பி.!'
'தம்பிக்கு.?'
'அண்ணன்.!'
'கொழுந்தியாளுக்கு.?'
'மச்சான்.!'
'அண்ணன் குழந்தைகளுக்கு.?'
'சித்தப்பா.!'
விடவில்லை, கேள்விகள் நீண்டு கொண்டே நீண்டு கொண்டே போனது.

பெரியப்பா, மைத்துனர், மாமன், மச்சான்
என பல உறவுகளில் பதில் வந்து கொண்டே இருந்தது.

சில நிமிடங்கள் கண்ணதாசன் நிறுத்தினார். பின்பு ஆரம்பித்தார்.

வெறும் மண்ணை தின்னப் போகும் உன் சடலத்திற்க்கே இத்தனை பெயர் வைத்து அழைக்கும் போது, "யாதுமாகி நின்று, எங்கெங்கும் நின்று உலகையே கட்டிக் காக்கும் என் அப்பன் பரம் பொருளை எத்தனை பெயர்களால் அழைத்தால் என்ன..?? 

அவன் எதற்குள்ளும் அடங்காதவன், எதற்குள்ளும் இருப்பவன். உன்னுள்ளும் இருப்பவன், என்னுள்ளும் இருப்பவன். உன்னை அழைத்தாலும் அவனே, என்னை அழைத்தாலும் அவனே." என முத்தாய்ப்பாக முடித்தார்..

சிலிர்ப்பைத் தவிர சிறிதும் இல்லை அங்கு சலனம் !.

பகிர்வோம்.
----------------------------------------------------
படித்து ரசித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.7.20

கவியரசர் கண்ணதாசன் பெண்களின் விரகதாபத்தினை குறித்து எழுதும்போது காட்டிய விவேகம்!!!!


கவியரசர் கண்ணதாசன் பெண்களின் விரகதாபத்தினை குறித்து எழுதும்போது காட்டிய விவேகம்!!!!

கவியரசர் கண்ணதாசன் மறைந்து சிலநாட்களுக்குப் பின், ஒரு கச்சேரிக்கான விமர்சனத்தில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கலை விமர்சகர் சுப்புடு. "கண்ணதாசனை தமிழில் புதிய சாகித்யங்கள் நிறைய எழுதுமாறு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்து தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் மறைந்து விட்டாரே' என்று ஆதங்கப்பட்டிருந்தார் அவர்.

தமிழ் இசைமரபுக்கு மிகவும் புதிதான அம்சங்களை திரைப்பாடலிலேயே செய்தவர் கண்ணதாசன் என்பதால் தான் அப்படிக்கேட்டுக் கொண்டதாக சொன்ன சுப்புடு, "விரக தாபம் என்கிற விஷயம் இசைப்பாடல்களில் எழுதப்பட்டு வந்த விதத்தையும் கண்ணதாசன் கையாண்ட புதுமையையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

"காலம் காலமாகவே தமிழில் விரகதாபம் என்றால் பால் கசக்கும் பழம் புளிக்கும். இதையே வைத்துக் கொண்டு மன்னன் எப்படி மாற்றுகிறார் பாருங்கள்.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது!
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது".
மேற்கண்ட வரிகளை இதயம் பேசுகிறது இதழில் சுப்புடு எழுதியதாக நினைவு. வரிகள் நினைவிருக்கின்றன. வருடமோ இதழோ நினைவிலில்லை . அப்போது நான் பள்ளி மாணவன்.

"கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்-பாதிக்
கனவுவந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டுநிலா வான்வெளியில் காவியம் பாடும்-கொண்ட
பள்ளியறைப் பெண்மனது போர்க்களமாகும்"

என்று நயமும் நளினமுமாய் நகரும் அந்தப் பாடல். கண்ணதாசன் பெண்களின் விரகம் குறித்து எழுதும்போது சில அற்புதமான நியதிகளைக் கையாள்கிறார். வேட்கை மீதூற பெண் பாடுகிற போதுகூட அவள் காமுகியாக சித்தரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் காட்டும் கவனம் நுட்பமானது "யார் நீ" என்றொரு படம். தான் கைப்பிடித்தவள் பெண்ணா பேயா என்று தெரியாத குழப்பத்தில் நாயகன் விலகியே இருக்கிறான். அவனை மெல்ல ஆசுவாசப்படுத்தி அணைத்துக் கொள்ள முயல்கிறாள் நாயகி

"பொன்மேனி தழுவாமல்
 பெண்ணின்பம் அறியாமல்
 போக வேண்டுமா
 கண்ணோடு கண்சேர
 உன்னோடு நான்சேர
 தூது வேண்டுமா"
 என்பது பல்லவி.

இதில் நாயகி மட்டுமே பாடுகிறாள்.ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையில் நாயகன் தடுமாறுகிறான்.

"இரவென்பதே நம்வாழ்விலே இல்லாமல் போகுமோ
உறவென்பது உன்நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமோ"

சராசரியான பாடலாசிரியர்களாக இருந்திருந்தால் அடுத்த வரியில் போதையை ஏற்றியிருப்பார்கள். ஆனால், பெண்மையின்மீது கவிஞருக்கிருக்கும் மரியாதை கண் மலர்த்துகிறது.
"நீசொல்வதை நான்சொல்வதா இது நீதியாகுமா?
 தாளாத பெண்மை தீண்டும்போது மௌனமாகுமா?
 என்று பாடவைத்து விடுகிறார்.

விரகம் வளர்க்கும் சூழல் என்றாலும் அடுத்த சரணத்தில் காதலின் தளும்பலையே கவிஞர் பாடலாக்குகிறார்,

"மழைமேகமே என் தீபமே என்காதல்தெய்வமே
மறுவாழ்விலும் உன்னோடுநான் ஒன்றாக வேண்டுமே
நீயென்பதும் நானென்பதும் ஒருராகம் அல்லவா..
நாமொன்று சேர்ந்து பாடும்போது வார்த்தை வேண்டுமா"
என்று காமக் கடலில் இறங்கிய பாட்டு காதல் கரையில் சேர்கிறது.
இந்த நாசூக்கு பாரதியிடம் உண்டு. குயில்பாட்டில் குயில் காளையைக் காதலிக்கும்.

"காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடுபோல் பொற்புடைய சாதியுண்டோ?
காளையர்தம் முள்ளே கனம் மிகுந்தீர்,ஆரியரே!
நீள முகமும்,நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச்சுமையும் வீரத் திருவாலும்...'
என்றெல்லாம் நீளப் புகழ்ந்துவிட்டு,

"காளை யெருதரே,காட்டிலுயர் வீரரே
தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர்
காதலுற்று வாடுகிறேன்!காதலுற்ற செய்தியினை
மாதருரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்.
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல்கொண்டால்
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?"

என்று அதற்கான நியாயத்தையும் கற்பிக்கும். காதலை வெளிப்படுத்தும்போதுகூட அதில் கவனமாயிருக்கும் கலையை தன் நாயகியருக்கு கவிஞரும் கற்றுக் கொடுக்கிறார். (இடையில் ஒரு செய்தி .கவிஞருக்கு பாரதியின் குயில்பாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பாரதி குயில்பாட்டை எழுதும்போது என்ன மனநிலையில் இருந்திருப்பான் என்றொரு கவிதையில் சொல்கிறார்.

"ஓராயிரங் குயில்கள்
உட்காரும் சோலையிலே
ஓர் குயிலைக் கண்டானடி-பாரதி
உடன்குயில் ஆனானடி"
என்பது கவிஞரின் கவிதை)

நாயகியும்,நாயகனும் தங்களுக்குள் ஏற்படும் பிணக்கை பிள்ளையிடம் பாட்டுப்பாடி தீர்த்துக் கொள்கிறார்கள். காத்திருந்த கண்கள் படத்தில்

"வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா-அவள்
வடித்துவைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
என்ற பாடல்.அதில் நாயகன் கேட்பான்,

தினம்தினம் ஏன் கோபம்கொண்டாள் கூறடா கண்ணா-அவள்
தேவையென்ன ஆசையென்ன கேளடா கண்ணா!
அங்கே இருப்பது குழந்தையும் கணவனும்தான்.ஆனால் நாயகி என்ன சொல்கிறாள்?

நினைப்பதெல்லாம் வெளியில்சொல்ல முடியுமா கண்ணா-அது
நீபிறந்த பின்புகூட இயலுமா கண்ணா!
இது, கதாபாத்திரத்தின் கனத்தைக் கூட்ட கவிஞர் சேர்க்கும் தங்கம்.

தமிழிலக்கியத்தில் காலங்காலமாகவே தலைவி - தோழி உரையாடல் மரபு உண்டு.தலைவி என்றால் தோழி முக்கியம் என்பதை
இப்போதுகூட தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். தன் காதல் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியும் தோழியும் உரையாடிக் கொள்வதாக ஒரு பாடலை,கவிஞர் பச்சை விளக்கு படத்தில் எழுதியிருப்பார்.

தூது சொல்லவொரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்றுவந்து மெல்ல சேலைதொட
சுகம் கண்டாயோ தலைவி
என்று கேட்பாள் தோழி.

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
என்பாள் தலைவி.இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு காப்பிய அந்தஸ்தே கொடுக்கலாம்.

முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
என்று தோழி சொன்னதுதான் தாமதம்.....
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி
என்று நாயகி பாடுவாள்.

தன் விரகத்தை அவள் மறந்தும் தன் தோழியிடம்கூட சொல்லவில்லையாம்.
தோழி தானாகக் கண்டுபிடித்துவிட்டால் அதற்கு தலைவி பொறுப்பில்லையல்லவா!!
கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி தன் பிரிவாற்றாமையை தோழி தேவந்தியிடம் கூடப்பேசவில்லை. சோமகுண்டம், சூரியகுண்டம்
ஆகியவற்றில் நீராடினால் கணவன் திரும்பக்கூடும் என்று பரிகாரம் சொல்கிற தோழியிடம்,"பீடன்று" என்று மறுத்துவிடுகிறாள் கண்ணகி. அப்படி பரிகாரம் செய்தால் தான் துன்பத்தில் இருப்பது தோழிக்கும் ஊருக்கும் தெரிந்துவிடும் என்பது கண்ணகியின் எண்ணம். இந்த நினைவு நமக்கே வருகிறபோது கவிஞருக்கு வராதாஎன்ன?பாடல் தொடர்கிறது.

காவிரிக்கரையின் ஓரத்தில் இவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி!!

பெண்மையில் இன்னொரு வகையும் உண்டு. வாழ்வையே குடும்பத்திற்காகக் கரைத்துவிட்டு தன் ஆசைகளை அவித்துக் கொண்டு
தவமிருக்கும் பெண்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடி ,பெரிய புராணத்தில் வருகிற திலகவதியார். திருநாவுக்கரசரின் தமக்கை.
நிச்சயிக்கப்பட்ட கணவர் போரில் மாள்கிறார். அந்த அதிர்ச்சியில் பெற்றோரும் மறைகின்றனர். இறந்து போகலாம் என்றால் சிறுவனாகிய தம்பியின் கதி? எனவே திருமணமே செய்து கொள்ளாமல் வீட்டிலேயே தவம்புரிகிறார் திலகவதியார். தம்பி வாழவேண்டும் என்ற தயையுணர்வே காரணம். அதை சேக்கிழார் சொல்கிறார்:

"தம்பியார் உளராக வேண்டுமென வைத்த தயா
உம்பர் உலகு அடையவுறும் நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்"

கவிஞர் வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டிலும் தன்னையே தன் குடும்பத்திற்காக அர்ப்பணித்த முதிர்கன்னிகள் உண்டு. அவர்கள் திலகவதியார்போல் ஆசையை அவித்தவர்களில்லை. ஆனால் அவர்கள் மனதில் ஆசையே கிடையாது என்று கருதி குடும்பத்தினர் தங்கள் ஆசைகளுக்கான வாகனமாய் அவர்கள் உழைப்பை உறிஞ்சுகின்றனர். அவர்கள் மனதில் இருப்பதை அறிந்தவர்கள்யார்? ரவி அறியாததையும் கவி அறிவான் என்றொரு மலையாளப் பழமொழியைக் கேள்விப்பட்டதுண்டு. அப்படியொரு பெண்ணைப்பற்றிய கவிஞரின் பாடல் இது:

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்
கல்லிலே ஈரமுண்டு கண்களா அறியும்?
என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

இந்த மூன்று வரிகளில், அந்தரங்க வலி,தனிமையின் அழுத்தம், நிராதரவான நிலை எல்லாம் வெளிப்படுகின்றன.
அந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு நெருப்பு இருக்கிறது...

"நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான்கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யாரணைப்பாரோ இறைவனின் பொறுப்பு"

கனலும் தவிப்பையும் காத்திருப்பையும் இதைவிட அழகாய் சொல்ல முடியாது. அதேநேரம் அந்தப்பெண்ணை இந்தத் தனிமை
பலவீனப்படுத்தவில்லை.அனுபவங்களும், காயங்களும்அந்தப்பெண்ணுக்குள் ஒரு ஞானத்தை வளர்த்திருக்கிறது.மேனி அழகாய் இருந்தாலும் ஞானம் உள்ளே ஒளிர்கிறது.ஞானிகள் தடுமாறினாலும் தான் தடுமாற மாட்டேன் என்று தருக்கிச் சொல்கிறாள் அவள்.

"சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையின் கேணி
நானொரு ராணி பெண்களில் ஞானி"

அரசர்களில் ஞானி,ஜனகர் என்கிறார்கள். ஜனரஞ்சகமான நாயகி ஒருத்தியை அந்த உயரத்திற்கு உயர்த்திவிடுகிறார் கவிஞர்..
-----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.7.20

கவியரசர் கண்ணதாசன் வரலாறு!!!!!


கவியரசர் கண்ணதாசன் வரலாறு!!!!!

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

 வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர்  முத்தையா.  தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

குடும்பம்

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாள்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் பிறந்தன. ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் பிறந்தார்.

இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும்,பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு

அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மறைவு
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

படைப்புகள்
·         இயேசு காவியம்
·         அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
·         திரைப்படப் பாடல்கள்
·         மாங்கனி
கவிதை நூல்கள்
·         பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
·         கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில் * பாடிக்கொடுத்த மங்களங்கள் * கவிதாஞ்சலி * தாய்ப்பாவை* ஸ்ரீகிருஷ்ண கவசம்
·         சுருதி சேராத ராகங்கள்
·         முற்றுப்பெறாத காவியங்கள்
·         பஜகோவிந்தம்
·         கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்
புதினங்கள்
·         அவளுக்காக ஒரு பாடல்
·         அவள் ஒரு இந்துப் பெண்
·         சிவப்புக்கல் மூக்குத்தி
·         ரத்த புஷ்பங்கள்
·         சுவர்ணா சரஸ்வதி
·         நடந்த கதை
·         மிசா
·         சுருதி சேராத ராகங்கள்
·         முப்பது நாளும் பவுர்ணமி
·         அரங்கமும் அந்தரங்கமும்
·         ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
·         தெய்வத் திருமணங்கள்
·         ஆயிரங்கால் மண்டபம்
·         காதல் கொண்ட தென்னாடு
·         அதைவிட ரகசியம்
·         ஒரு கவிஞனின் கதை
·         சிங்காரி பார்த்த சென்னை
·         வேலங்காட்டியூர் விழா
·         விளக்கு மட்டுமா சிவப்பு
·         வனவாசம்
·         பிருந்தாவனம்
வாழ்க்கைச்சரிதம்
·         எனது வசந்த காலங்கள்
·         வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
·         எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
·         மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்
·         கடைசிப்பக்கம்
·         போய் வருகிறேன்
·         அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
·         நான் பார்த்த அரசியல்
·         எண்ணங்கள்
·         வாழ்க்கை என்னும் சோலையிலே
·         குடும்பசுகம்
·         ஞானாம்பிகா
·         ராகமாலிகா
·         இலக்கியத்தில் காதல்
·         தோட்டத்து மலர்கள்
·         இலக்கிய யுத்தங்கள்
நாடகங்கள்
·         அனார்கலி
·         சிவகங்கைச்சீமை
·         ராஜ தண்டனை
இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
விருதுகள்
·         சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. ""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங். ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

""இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது. இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்... இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

“கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்”

என்ற சொல்வழக்குத்தான் நாளடைவில் [GUN என்ற உயிர்கொல்லி ஆயுத எழுத்துக்களை அகற்றிவிட்டு], நாயகனை நாய் ஆக்கி விட்டது..

கோயிலுக்குச் செல்லும் ஒருவன் கல்லால் ஆன நாயகனை (கடவுளை) வெறும் கல் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அது வெறும் கல்தான். அதேசமயம் அதனை கல் என்ற எண்ணத்தை அகற்றிவிட்டு கடவுளாகப் பார்த்தால் அது கடவுள்தான் என்று பொருள். இதைத்தான் ILLUSIONS என்று மேஜிக் செய்பவர்கள் கூறுகிறார்கள்.   நான் பள்ளியில் படிக்கையில் ஒரு மேஜிக் வித்தை செய்பவர்  எவர்சில்வர் டம்ளரில் கரண்டியால் கிண்கிணி என்று அடித்து சப்தம் உண்டாக்கி விட்டு அந்த     அதிர்வலை அடங்குவதற்குமுன் என் காதில் வைத்து “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற பாடல் உன் காதில் கேட்கிறதா என்றார். என்ன ஆச்சரியம்? ஆம் கேட்டது.!!!

இதைத்தான் கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பாமரனும் புரியும் வண்ணம்

    “தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்”

என்று பாடினார்.

“Concentration is the root of all the higher abilities in man” என்கிறார் மறைந்த உலகப் புகழ்ப்பெற்ற தற்காப்புக்கலை வீரர் புரூஸ்லீ.

“The secret of concentration is to shut down the other windows.”    என்கிறார் இன்னொரு யோகி

“மனதை ஒரு முகப்படுத்த கற்றுக் கொள்பவன் மகான் ஆவான்” என்கிறார் சுவாமி விவேகானந்தர் .

ஐவேளை தினந்தோறும் தொழுகும்  ஒரு முஸ்லீமுக்கு தொழுகையை விட மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான எண்ணம்.

வில்வித்தையில் நிபுணத்துவம் பெற்ற அர்ச்சுனன் பறவையை குறி பார்த்தபோது, அவனுக்கு அந்த பறவை அமர்ந்திருந்த மரமோ, மரத்தின் இலைகளோ, அல்லது அதற்கு பின்னால் தென்பட்ட வானமோ, அதனை சுற்றியிருந்த காட்சிகள் எதுவுமே அவன் கண்ணில் படவில்லை, ஏன் அந்த பறவைகூட அவன் கண்ணுக்கு முழுமையாகத் தெரியவில்லை, அவன் கண்ணுக்கு தென்பட்டது அப்பறவையின் கழுத்து மட்டுமே.

சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று ஒரு கேள்வி கேட்கின்றான்.

“சுவாமி! நீங்கள் எங்கும் பிரம்மம் உள்ளது. அதைவிடுத்து வேறெதுவும் இங்கு இல்லை என்று உறுதியாக சொல்கின்றீர்கள், ஆனால் என் கண்களுக்கோ உலகம்தான் தெரிகின்றதே தவிர பிரம்மம் தெரியவில்லையே. ஏன் சுவாமி?”  எனக் கேட்கின்றான்
.
குருஜீ ஒரு மெல்லிய புன்னகையோடு பதில் கூறுகிறார்.

“ஒருவன் நகை வாங்க பொற்கொல்லர் இல்லத்திற்குச் செல்கிறான். அவரது அறையில் அவர் உருவாக்கிய வளையல், காப்பு, மோதிரம், தோடு கம்மல், பிள்ளையார் உருவம், போன்ற ஆபரணங்கள்   செய்யப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. தங்கமும், அதன் தரமும், அதன் எடையும் மட்டுமே அந்த ஆசாரிக்கு முக்கியம் அதேபோன்று போல பிரம்மத்தைதவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை.    நம்மிருவருக்குமே   காட்சி ஒன்றுதான், ஆனால் பார்க்கும் பார்வைதான் வெவ்வேறு” என்று அவனுக்கு புரிய வைத்தார்.

குருஜி முதல் புரூஸ்லீ வரை அத்தனைப்பேருடைய கருத்துக்களையும் கண்ணதாசன்

    “தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
    சிலையென்றால் வெறும் சிலைதான்”

என இரண்டே வரிகளில் ஒரு மேஜிக்காரர் வரவழைக்கும் ILLUSION    போன்று  காட்சிகளை கொண்டுவந்து நமக்கு எளிதில் புரிய வைத்தார்.

ஒரு மொழியின் வளர்ச்சிக்கு பிறமொழித் தழுவல், கருத்து இறக்குமதி, சிந்தனை அரவணைப்பு, கவிநடை தரவிறக்கம் இவை யாவும் இன்றிமையாத ஒன்று, அதற்குப் பெயர் ‘காப்பி-பூனையோ’ அல்லது ‘ஈயடிச்சான் காப்பியோ’ அன்று.

     “மேற்கே
    ரொமாண்டிசிசம்
    நாச்சுரலிசம்
    ரியலிசம்
    அப்பால்
    இம்ப்ரெஷனிசம்
    என் மனைவிக்கு
    தக்காளி ரசம்”

 உலகம் எப்படியெல்லாமோ வளர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் நாம் நம்மைச் சுற்றி ஒரு சிறிய வட்டத்தைப் போட்டுக் கொண்டு, அறிய வேண்டியதை அறியாமல் காலத்தை வீணடிக்கின்ற போக்கினை சுந்தர ராமசாமி நகைச்சுவை ததும்ப இக்கவிதையில் வடித்திருந்ததை மிகவும் ரசித்தேன்.

 ‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகுக்கு ‘உலகமயமாக்கல்’ என்ற தாதுபுஷ்டி லேகியத்தை வழங்கி தெம்பூட்டியவர் கண்ணதாசன்.

 “மதன மோக ரூப சுந்தரி” என்ற ரீதியில் இருந்த பாடல்களை “பொன்மகள் வந்தாள்” பாணியில் மாற்றிய வார்த்தை சித்தன் அவர்.

 அந்த செட்டிநாட்டுச் சிங்கம் ‘கஞ்சன்’ என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வார்த்தைகளை அவரைவிட சிக்கனமாக வேறு யாரும் கையாண்டிருக்க இயலாது.

 “பேசுவது கிளியா?” என்ற பாடல் நல்லதொரு உதாரணம். இரண்டிரண்டு வார்த்தைகளாய் அமைந்த சந்தத்தின் விந்தை அப்பாடல்.

    “பாடுவது கவியா? – இல்லை
    பாரிவள்ளல் மகனா?
    சேரனுக்கு உறவா?
    செந்தமிழர் நிலவா?”

இவ்வரிகள், “பாடுவது கவியா?” என்று கண்ணதாசனின் கவிநயத்தை தம்பட்டம் அடிப்பதோடன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவனது கேரளத்து பூர்வீகம், அவன் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லவொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம்பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.

 இன்றைய பாடல்களை எடுத்துக் கொண்டால் “என்ன விலை அழகே?” என்ற கேள்வி இருக்கும். கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது. அடுத்த அடி “சொன்ன விலைக்கு வாங்க வருவேன்” என்று தொடர்ந்து மேலே போய்க் கொண்டேயிருக்கும்.

 கண்ணதாசனின் பாணி அலாதியானது. அவருக்கு முடிச்சு போடவும் தெரியும். அவிழ்க்கவும் தெரியும். கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவர் கில்லாடி. “உன் புன்னகை என்ன விலை?” என்ற கேள்விக்கு “என் இதயம் தந்த விலை” என்ற பதில் தொடர்ந்து வரும்.

 “நதி எங்கே போகிறது?” என்ற கேள்வியை எழுப்பிவிட்டு “கடலைத் தேடி” என்ற பதிலையும் தருவார் நம் கவிஞர். ஏனெனில் அவர் ஒரு “Perfectionist”. அவர் போட்ட வார்த்தைக்கு ஈடாக வேறொரு நல்ல வார்த்தை அவரால் மட்டுமே போட முடியும். நாம் போட்டால் அந்த “Imperfection” காட்டிக் கொடுத்துவிடும்.

 உண்மையான கவிஞன் எப்படி இருக்க வேண்டும்? அவன் நாட்டையும் நடப்பையும் முறையே தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமுதாயத்தின் அன்றாட விஷயங்களில் ஐக்கியமாகி இருக்க வேண்டும். பொதுஅறிவு நிரம்பியவனாக இருக்க கற்பனைத் திறன் வேண்டும். சமயோசித புத்தி உடையவனாக இருத்தல் வேண்டும்.

 இவை அத்தனை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவர் கண்ணதாசன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அவர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படியென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவரது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்?

 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ்மொழியில் பெயர்த்த தலையாய கவிஞருள் கண்ணதாசன் குறிப்பிடத்தக்கவர். அவர் கம்பனையும், பாரதியையும், பட்டினத்தாரையும் மட்டும் அறிந்து வைத்தவரில்லை; அதற்கு மேலாக பாரசீக மேதைகளையும், மேலை நாட்டு அறிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் கரைத்துக் குடித்தவர் என்ற உண்மை புலப்படுகிறது.

 குலமகள் ராதை என்ற படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலிது:

    “இரவுக்கு ஆயிரம் கண்கள்,
    பகலுக்கு ஒன்றே ஒன்று
    அறிவுக்கு ஆயிரம் கண்கள்,
    உறவுக்கு ஒன்றே ஒன்று”

 பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதையிலிருந்து முதல் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் இரண்டாம் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் எடுத்து (இளந்தலைமுறையினருக்கு புரியும்படி சொல்லவேண்டுமெனில் ‘சுட்டு’) அழகுற தன் பாடலில் கோர்வையாக கையாண்டிருப்பான். அந்த ஆங்கிலக் கவிதை இதுதான் :

     The night has a thousand eyes,
    And the day but one;
    Yet the light of the bright world dies
    With the dying sun.
    The mind has a thousand eyes,
    And the heart but one:
    Yet the light of a whole life dies
    When love is done.

 காப்பியடிப்பது எல்லாராலும் சாத்தியப்படும். சிந்தனையை கிரகித்துக் கொண்டு சாராம்சத்தை பிழிந்துக் கொடுக்க அறிவு ஜீவிகாளால் மட்டுமே முடியும்,

 “உள்ளம் என்பது ஆமை” என்ற பாடல் கண்ணதாசனின் தத்துவார்த்த சிந்தனைக்கு ஓர் உரைகல்.

    “தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
    சிலையென்றால் வெறும் சிலைதான்
    உண்டு என்றால் அது உண்டு –
    இல்லை என்றால் அது இல்லை”

 என்ற வரிகளில் மிகப்பெரிய சூட்சமத்தை எளிமையான வார்த்தைகளில் உணர்த்தியிருப்பார் கண்ணதாசன்.

    “உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
    உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
    உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
    உள்ளத்தும் இல்லை புறத்தில்லைதானே?”

 திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.

 “அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடியதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்திருப்பார் கவிஞர்.

     வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?

 தொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி – என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாசனின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவனுக்கு பயிற்றுவித்த பாட’மது’.

    “நடைபாதை வணிகனென
    நான் கூறி விற்றபொருள்
    நல்ல பொருள் இல்லை அதிகம்”

 என்று அவரே பாவமன்னிப்பு கேட்டிருக்கிறார். (எலந்தப்பழம் பாட்டைத்தான் சொன்னானோ என்னவோ எனக்குத் தெரியாது.)

 “ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இருக்கிறது” என்று உரைத்தவர் அவர்.

 ‘தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்’ என்று சொல்லும் போதும், ‘கள்ளிக்கேது முள்ளில் வேலி போடி தங்கச்சி, காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி’ என்று புலம்பும்போதும் ஒரு பாம்பாட்டிச் சித்தனாகத்தான் நமக்கு காட்சி தருகிறார் அவர்.

Fore more interesting incidents and life history of kannadasan, pls click the following link : https://kannadasan.wordpress.com/
----------------------------------------------------------------
படித்தேன்: ரசித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.6.20

கவியரசரின் கலக்கலான பாடல் வரிகள்!!!


கவியரசரின் கலக்கலான பாடல் வரிகள்!!!

திரைப்படங்களில் பக்தி காதல் குடும்பம் தாலாட்டு சோகம் தத்துவம் என பல்சுவை பொதிந்த இசைப்பாடல்கள்  ஆறாயிரத்துக்கும் எழுதி உள்ளார் கவியரசர் கண்ணதாசன்.

இவரது பாடல்கள் அனைத்தும் எடுத்துக்கொண்ட குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றவாறு  பாடப்பட்ட போதிலும் திரைக்கதை சூழலை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அவை சிறப்பு கூறுகள் பலவற்றை உள்ளடக்கியதாகவாக அமைகின்றன .

பாடலின் ஒரு வரியே கூட அந்த பாட்டை நம் மன சிந்தனையில் ஓட விடக்கூடிய வலிமையை பெற்றவர் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. அப்படி அவர் எழுதிய சில பாடல்கள் கீழே தொகுக்க பட்டுள்ளது.
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+

 எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்

கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா
தலைவா என்னை புரியாதா

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்….
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் – பெரும்
பணிவு என்பது பண்பாகும் – இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? .

கன்னிக் காய் ஆசைக் காய்
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக் காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமா
எனை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா

பிரமிப்பாக இருக்கிறதல்லவா?

காலங்கள் பல கடந்தாலும் கவியரசரின் பாடல்கள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ..
வாழ்க கவியரசர் வளர்க அவர் புகழ்..
----------------------------------
படித்து ரசித்தது; பகிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.5.20

கவியரசர் கண்ணதாசன் எழுதிய சில ஐயங்கள்


கவியரசர் கண்ணதாசன் எழுதிய சில ஐயங்கள்

பொய்மானைத்  தேடிப்
      புறம்போன ராமனுக்கும்
தெய்வம் எனும்பெயரைச்
     சேர்த்துவைத்த தேனடியோ?
தெய்வம் எனும்பெயரைச்
     சேர்த்துவைத்த தேனெனிலோ
தெய்வமே தர்மத்தைத்
      தேடுவதாம் என்பதனால்!

கற்புடையாள் சீதையவள்
      கனலாக மாறாமல்
காட்டிடையே கண்ணீரில்
     கரைந்ததுவும் ஏனடியோ?
காட்டிடையே கண்ணீரில்
     கரைந்ததுவும் ஏனெனிலோ
பாட்டிடையே கம்பனுக்கு
     பலபொருள்கள் தேர்வதற்கே!

சூதாடும் நேரத்தில்
     துணைக்குவராக் கண்ணனவன்
போராடும் பாரதத்தில்
      பொங்கிவந்த தேனடியோ?
போராடும் நேரத்தில்
     பொங்கிவந்த தேனெனிலோ
யாரோடு கூட்டணிஎன்(று)
     அன்றுவரை அறியானால்!

அகலிகையின் கணவனுக்கே
     ஐயந்தீர் ராமபிரான்
அகந்தெளித்த சீதையின்பால்
     ஐயமுற்ற தேனடியோ?
அகந்தெளித்த சீதையின்பால்
     ஐயமுற்ற தேனெனிலோ
பரந்தெரித்த ராமனுக்கும்
     இகந்தெரியாக் காரணத்தால்!

மாதவியாள் மார்பிருந்து
      மயங்கிவிட்ட கோவலினின்
பேதலித்த புத்திக்குப்
      பின்னணிதான் என்னடியோ?
பேதலித்து புத்திக்குப்
      பின்னணிதான் என்னவென்றால்
பேர்தரித்த வணிகனெனும்
     பிறப்பாய்ப் பிறந்ததனால்!

காரியங்கள் அத்தனைக்கும்
      காரணங்கள் உள்ளவெனக்
காட்டிவிட்ட வேதமெல்லாம்
      கண்மறைந்த தேனடியோ?
காட்டிவிட்ட வேதமெல்லாம்
      கண்மறைந்த தேனனெனிலோ?
காட்டியதை பொய்யென்று
     கண்டுகொண்ட காரணந்தான்

அவ்வளவும் உண்மையென்று
      ஆர்ப்பரிக்கும் மக்களிடை
இவ்வளவு ஐயங்கள்
       எனக்கெழுந்த தேனடியோ?
இவ்வளவு ஐயங்கள்
       எனக்கெழுந்த தேனெனிலோ?
கையளவு கல்வியில்நீ
        கவிபாடும் காரணம்தான்!
-------------------------------------------------
படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.4.20

முட்டாள்களிடையே வாழ்ந்த கெட்டிக்காரன்!



முட்டாள்களிடையே வாழ்ந்த கெட்டிக்காரன்!

கவிஞர் கண்ணன்தாசனின் புத்தகத்திலிருந்து சில வரிகள்...!

கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் !

"இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடியாது."

"ஏன் ?"

"கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !"

"எப்படி ?"

"அது என்ன மதங்களை படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது."

சொன்னார்கள் கண்ணதாசனிடம்.

அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

அப்போதுதான் இந்த சென்ஸார் பிரச்சினை எழுந்தது.

சென்சார் கண்டித்து அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார்.

"பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்."

கண்ணதாசன் சொன்னார்: "நான் சரியாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்."

சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல."

கண்ணதாசன் சிரித்தார் :
"இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ? இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ?
கடவுள்கள் பெயரை சொல்லி , மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?"

சென்ஸார் திகைத்தது. ஆனாலும் ஈகோ தடுத்தது. "இல்லை இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்."

கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு , இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்:

"எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்."

Accepted.

படத்தில் தான்  சிவாஜி இப்படிப் பாடுவார்.
ஆனால் ஒரிஜினல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்'என்ற வார்த்தைதான் இருக்கிறது.

கண்ணதாசன் அடுத்த பாடலை எழுதப் போய் விட்டார்.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது."

ஆனால் இங்கும் பிரச்சினை வந்தது. சென்ஸார் சீறியது.
"அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?"

அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?

"காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே."

இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள் சென்ஸார் அதிகாரிகள்.

இப்போது பதிலுக்கு சீறீனார் கண்ணதாசன் : "என்னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமித்திரரையே காதல் விடவில்லையே ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன்?
என்ன ஆனாலும் சரி .எவர் சொன்னாலும் சரி .இதை நான் மாற்ற மாட்டேன்."

இப்போது படக் குழுவினர் கெஞ்சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ?"

வேறு வழியின்றி வேத வரிகள் மாறின :

"வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே."

பாவ மன்னிப்பு வந்தது. பாடல்களும் ஹிட் ஆனது.

ஆனால் சென்ஸார் கண்களில் மண்ணைத் தூவி , 'பாவமன்னிப்பு' படப் பாடலில் , இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார் கண்ணதாசன்.

"மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்."

இப்படி அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால்தானோ என்னவோ , ஒருமுறை இப்படி எழுதி இருந்தார் அவர் :

"நான் இறந்த பிற்பாடு என்னையே நான் விமர்சனம் செய்துகொண்டால் இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன் கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக  செத்துப் போனேன்.”

*- கண்ணதாசன்*
---------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.12.19

*இசை ரசிகர்களுக்கு உன்னத விருந்து .*


*இசை ரசிகர்களுக்கு உன்னத விருந்து .*

*காலத்தை வென்று இன்றும் இனிமை தரும் பாடல் .*

 *M.G.R. B.சரோஜாதேவி  உடல்மொழியால் வெளிப்படுத்திய காதல் சுவை அற்புதம் .*
 *கவிஞரின் கற்பனை வரிகள் , K.V.மஹாதேவனின் துடிப்பான இசையில் உயிர்பெற்று துள்ளி குதிக்கிறது .*
 *காட்சி அமைப்பு உள்ளிட்ட அனைத்தும் அருமை*
 *கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான பாடல்*

படம் : *தாய் சொல்லைத் தட்டாதே*
தீபாவளி வெளியீடு :  *7.நவம்பர் 1961*
நடிப்பு : *M.G.R*    *B.சரோஜாதேவி* 

பாடல் : *பட்டுச் சேலை காத்தாட*
பாடலாசிரியர் : *கவியரசு* *கண்ணதாசன்*
பாடியவர் : *டி.எம்.சௌந்தர்ராஜன்* *P.சுசீலா*
இசை : *K.V.மஹாதேவன்*
ஒளிப்பதிவு : C.V.மூர்த்தி
இயக்கம் :  M.A .திருமுகம்
தயாரிப்பு : தேவர்பில்ம்ஸ்

*பாடல் :*
பட்டுச் சேலை காத்தாட
பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே - என்னை
காதல் வலையில் அடைத்தவளே!

 *அரும்பு மீசை துள்ளி வர*
 *அழகுப் புன்னகை அள்ளி வர*
 *குறும்புப் பார்வை பார்த்தவரே* *- என்னைக்*
 *கூட்டுக் கிளியாய் அடைத்தவரே!*

கையில் எடுத்தால் துவண்டு விடும்!
கன்னம் இரண்டும் சிவந்து விடும்!
சின்ன இடையே சித்திரமே!
*சிரிக்கும் காதல் நித்திலமே!*

 *நிமிர்ந்து நடக்கும் நடையழகு...!*
 *நெருங்கிப் பழகும் கலையழகு...!*
 *அமைதி நிறையும் முகத்தழகு...!*
 *யாவும் உங்கள் தனியழகு...!*

உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள்தோறும் அலைந்தாலும்
மயங்க வைத்தது ஒரு முகமே!
*மங்கை உந்தன் திருமுகமே!*

 *காசு பணங்கள் கேட்கவில்லை!*
 *ஜாதி மதங்கள் பார்க்கவில்லை!*
 *தாவி வந்தது என் மனமே - இனி*
 *தாழ்வும் வாழ்வும் உன் வசமே!*

பட்டுச் சேலை காத்தாட
பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே - என்னை
காதல் வலையில் அடைத்தவளே!

 🌈 *பாடலும் காட்சியும்* 👇



===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2.12.19

கண்ணதாசனை எதற்காகக் கூப்பிட்டார்கள்?


கண்ணதாசனை எதற்காகக் கூப்பிட்டார்கள்?

சொல்லடி அபிராமி

*கூப்பிடுங்கள் கண்ணதாசனை......*

இது நடந்தது *ஆதி பராசக்தி'* படத்திற்கான பாடல் எழுதும்போது.

'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் , அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல்.

இந்தக் காட்சிக்கு *அபிராமி அந்தாதி* பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில்  திட்டமிட்டிருந்தார்  இயக்குனர்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

ஆனால் அவர்  எதிர்பார்த்த உணர்ச்சிகள் அதில் வரவில்லை.
"கூப்பிடுங்கள் கண்ணதாசனை!" என்றார்.
வந்தார் கண்ணதாசன்.
காட்சியை விளக்கினார் இயக்குனர்.

கண்ணதாசன் தயாரானார் :
"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம்.
எழுதிக் கொள்ளுங்கள்."

கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் *"போதும் அபிராமி அந்தாதி"* என்றார்.

கண்களை மூடிக் கொண்டு மௌனமானார்  கண்ணதாசன். சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை , அவரது சொந்த வார்த்தைகள்:

"சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ?"

வார்த்தைகள் வந்து விழ விழ , அதைப் பிடித்து எழுத்தில்  வடித்துக் கொண்டார் உதவியாளர்.

கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது.

பாடலின் *இறுதி வரிகளாக* , என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி  தரவில்லை.

மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கண்ணதாசன்.
அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து , பந்து விளையாடுகிறாள்.

அவள் துள்ளிக் குதித்து  பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கண்ணதாசன்.

*ஆம்.*

*திருக்குற்றாலக் குறவஞ்சி* பாடல் , கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது.

(தென்காசியை அடுத்த மேலகரத்தில் 18 -ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான்  திருக்குற்றாலக் குறவஞ்சி)

அந்த  குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி  வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச் சொல்லும் வரிகள். பந்து துள்ளுவதைப் போல, பாடல் வரிகளும் கூட துள்ளும். இதோ , அந்தப் பகுதி :

*வசந்தவல்லி பந்தடித்தல்*

செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்  என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே.

ரொம்ப ரொம்ப எளிமையான பாடல்.

வசந்த சௌந்தரி பந்து விளையாடியதைப் பற்றிய பாடல். சற்று வேகமாகப் படித்தால் பந்து துள்ளுவது போல் பாடல்

வரிகள் துள்ளும்...

இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள்.

இந்த பந்து விளையாட்டு பாடலை , பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன். முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு , கடைசி வரியை மட்டும் இப்படி *மாற்றி முடித்தார்.*

"மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ."

இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்.

நிச்சயமாக  டி.எம்.எஸ்சைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை கொடுத்து பாடி இருக்க முடியாது.

எஸ்.வி.சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.

கண்ணதாசனை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து , இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது.
----------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.11.19

இளமை எப்போது கொலுவிருக்கும்?


இளமை எப்போது கொலுவிருக்கும்?

 *இரவு தென்றலாக குளுமையுடன் மணம் வீசி குதூகலம் கொள்ள வைக்கும் பாடல்*

 படம் : *ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்*
 வெளியீடு : *7 மே 1965*
 பாடல் : *இளமை கொலுவிருக்கும்* 
பாடலாசிரியர் : *கவியரசு கண்ணதாசன்*
 பாடியவர் : *P.சுசீலா*
 இசை : *விஸ்வநாதன்* *ராமமூர்த்தி *
 நடிப்பு : *ஜெமினிகணேசன் & சாவித்திரி* இயக்கம் : *K.J.மஹாதேவன்*

பாடல் :
இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்

அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண்
இயற்கையின் சீதனப் பரிசல்லவோ 
.
இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா
இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா 
.
இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

 *பாடலும் காட்சியும்* காணொளி வடிவம்!!!!


=================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.10.19

கவியரசர் கண்ணதாசனின் கீதை!!!!


கவியரசர் கண்ணதாசனின் கீதை!!!!

*எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்*

`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பார்கள்.

பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான்.

யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது. ஏன், வர்ணங்களிலேகூட ஒரு மனோதத்துவம் உண்டு.

கறுப்பு வர்ணத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனுக்குக் கல்மனம்; வெள்ளை நிறத்தைப் பார்த்தால் தூய்மை; பச்சை தயாள சிந்தை; மஞ்சள் மங்கலமுடையது.

வாசனையிலும் அந்தப் பேதம் உண்டு.

நறுமண மலர்களை முகரும் போது உன் மனமும், முகமும் பிரகாசிக்கின்றன.

நாற்றத்தை முகரும் போது உனக்கே அருவருப்பு.

அதுவே உனக்குப் பழக்கமாகி விட்டால், உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எதிரிகளுக்கு அருவருப்பு.

சகவாச தோஷமும் இதுதான்.

நான் பன்னிரண்டு வயதில் தமிழ் வித்துவான் பரீட்சையில் புகுமுக வகுப்பு எழுதினேன். அப்போது அமராவதி புதூர் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அங்கேயே வித்துவான் பட்டப்படிப்புத் தொடங்கினார்கள். அப்போது வித்துவான் பட்டப்படிப்புக்கு இவ்வளவு ஆங்கிலப்படிப்பு வேண்டும் என்ற விதிமுறை இல்லை.

முதல் வருடம் `என்ட்ரன்ஸ்’ பாஸ் செய்தேன். அப்போது எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ராமநாதபுரம் வித்துவான் ராமசாமிப் பிள்ளை. அவரது எளிய தோற்றம் என்னைக் கவர்ந்தது.

அத்தோடு நான் கிராமத்துக்கு வந்துவிட்டேன்.

வித்துவான் படிப்பைத் தொடர வேண்டும் போல் தோன்றிற்று.

பக்கத்து ஊரான கீழ்ச்செவல்பட்டியில் இருந்த வித்துவான் முத்துகிருஷ்ண ஐயரிடம், தினமும் நான்கு மைல்கள் நடந்து போய்த் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டேன்.

அதையும் முழுமையாகக் கற்கவில்லை.

குருகுலத்திலும், பிறகு சென்னைக்கு வந்ததும், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களிடம் தான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

குருகுலத்தில் நான் படித்த போது அவர்தான் தலைமை ஆசிரியர்.

அவர்களிடம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்; பழகியும் வந்தேன்.

அந்தப் பழக்கத்தில் தான், எனக்குப் பணிவு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, ராயவரத்தில் ஒரு பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்த போது, சில நண்பர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அந்தத் தொடர்பில்தான் மதுப்பழக்கம் ஆரம்பமாயிற்று.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.

திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.

நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.

அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.

பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.

1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.

பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:

இன்று எனக்கே நான் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறேன்.

ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி

நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.

அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.

அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.

அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.

நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!

காஞ்சிப் பெரியவர்களைப் பார்க்கும் போதெல்லாம், `நாமும் அவரது மடத்தில் ஊழியம் பார்க்கக் கூடாதா?’ என்று எனக்குத் தோன்றுகிறது.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.

அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன். சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.

லண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ், இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.

கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி, புத்தபிரானைச் சந்தித்ததும் ஞான தீட்சை பெற்று விட்டாள்.

திருமாலை வணங்கிய சேர மன்னன், முடி துறந்து குலசேகர ஆழ்வாரானான்.

கண்ணனை நம்பிய குசேலன் குபேரனானான்.

துரியோதனன் சோற்றைத் தின்று விட்டதால் தான், சூரகர்ணன் அநியாயத்திற்கே துணை போக வேண்டி வந்தது.

சகுனியைச் சார்ந்த கெளரவர்கள் அழிந்தார்கள்; கண்ணனைச் சார்ந்த பாண்டவர்கள் வாழ்ந்தார்கள்.

அண்ணனைத் துறந்து ராமனைச் சார்ந்த விபீஷணன் அரசுரிமை பெற்றான்.

இராவணனை அண்டி நின்றார், அவனது முடிவையே பெற்றார்கள்.

ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில் தோன்றிற்று.

`சிறிய இனங்களைக் கண்டு அஞ்சுங்கள்; சேராதீர்கள்’ என்றான் வள்ளுவன்.

செம்மண்ணில் மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.

மனிதனின் சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இதுவும் வள்ளுவன் சொன்னதே.

`உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் யோக்கியதை தீர்மானிக்கப்படும்’ என்பது வள்ளுவன் சொல்லே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால், எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.

திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.

நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல துன்பமும் இல்லை. நல்லது. இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

அவனோடு ஒட்டாமலேயே பல நாட்கள் ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த பின் உறவு கொள்வது.

'ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.

மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது இருக்கும் புத்தி, மற்ற சகவாசங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் இருக்க வேண்டும்.

அதற்கு எதிர்மறை என்ன?

`தீயவர் என்றால் தீயைப் போன்றவன் என்று அர்த்தம்.

`நல்லவர்’ என்பார்கள்; அது தவறு.

தீயைப் போன்றவர் என்பதற்கு எதிர்மறை தண்ணீரைப் போன்றவர் என்பதாகும்.

அதை `நீரவர்’ என்றான் வள்ளுவன்.

தீ சுடும்; தண்ணீர் குளிரும்.

குளிர்ச்சியான உறவுகளே, குதூகலமான உறவுகள்.

நம்பிப் பணத்தைக் கொடுத்தால் ஏமாற்றுகின்றவன், நம்பி வீட்டுக்குள் விட்டால் நடத்தை தவறுகிறவன், நம்பித் தொழிற் பங்காளியாக்கினால் மோசம் செய்கிறவன், நம்பிப் பின் பற்றினால் நட்டாற்றில் விடுகிற தலைவன்- இவர்களால்தான் பெரும் நஷ்டங்களும், துன்பங்களும் வருகின்றன.

ஆகவே, இளம்பருவத்தில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு பழகத் துவங்கினால், பல வகையான துன்பங்கள் அடிபட்டுப் போகும்.

அது மட்டுமல்ல, நீ நஷ்டப்படும் போது மளமளவென்று உதவிகளும் கிடைக்கும்.

சாதாரணமாக வழித்துணைக்குக் கூட ஒரு அயோக்கியனை நம்பக்கூடாது; ஆனால் மரண பரியந்தம் ஒரு உத்தமனை அவன் பரம ஏழையாக இருந்தாலும் நம்பலாம்.

தான்கூடச் சாப்பிடாமல், உனக்குப் பரிமாறும் ஏழைகளும் உண்டு.

உன் மேலாடையைத் திருடி வைத்துக் கொள்ளும் பணக்காரர்களும் உண்டு.

இனமும் குணமும் தான் முக்கியமே தவிரப் பணம் அல்ல இதில் முதலிடம் வகிப்பது.

முதலாளி நொடித்துப் போனபோது, அவரைத் தன் வீட்டிலேயே வைத்துச் சோறு போட்ட வேலைக்காரனைக் கண்டிருக்கிறேன்.

அவராலே பணக்காரரானவர்கள் எல்லாம், அவரைக் கைவிட்டதையும் பார்த்திருக்கிறேன்.

`இனம்’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; குணத்தைக் குறிப்பது.

`சிற்றினம்’ என்பது குணத்தால் கீழ் மக்களைக் குறிப்பது.

அவர்களிடமிருந்து அறவே விலகி, ஒவ்வொரு துறையிலும் உத்தமர்களையே சார்ந்து நின்று பாருங்கள்; பெருமளவு துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள்.

* கண்ணதாசன்*
----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.10.19

கவியரசர் கண்ணதாசனும் திரைப்படத் தனிக்கையாளர்களும்!!!!


கவியரசர் கண்ணதாசனும் திரைப்படத் தனிக்கையாளர்களும்!!!!

கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் !

"இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடியாது."

"ஏன் ?"

"கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !"

"எப்படி ?"

"அது என்ன மதங்களை படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது."

சொன்னார்கள் கண்ணதாசனிடம்.

அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

அப்போதுதான் இந்த சென்ஸார் பிரச்சினை எழுந்தது.

சென்சார் கண்டித்து  அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார்.

"பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்."

கண்ணதாசன் சொன்னார்: "நான் சரியாகத் தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்."

சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல."

கண்ணதாசன் சிரித்தார் :

"இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ? இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ? கடவுள்கள் பெயரை சொல்லி , மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?"

சென்ஸார் திகைத்தது.ஆனாலும் ஈகோ தடுத்தது."இல்லை இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்."

கண்ணதாசன் தலையில் அடித்துக்கொண்டு , இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்:

"எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்."

Accepted.

படத்தில்தான் சிவாஜி இப்படிப் பாடுவார். ஆனால் ஒரிஜினல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்'என்ற வார்த்தைதான் இருக்கிறது.

கண்ணதாசன் அடுத்த பாடலை எழுதப் போய் விட்டார்.

"பாலிருக்கும் பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது."

ஆனால் இங்கும் பிரச்சினை வந்தது.
சென்ஸார் சீறியது."அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?"

அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?

"காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம்  காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே."

இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள்  சென்ஸார் அதிகாரிகள்.

இப்போது பதிலுக்கு சீறீனார் கண்ணதாசன் :  "என்னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமித்திரரையே காதல் விடவில்லையே ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன்? என்ன ஆனாலும் சரி. எவர் சொன்னாலும் சரி.இதை நான் மாற்ற மாட்டேன்."

இப்போது படக் குழுவினர் கெஞ்சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ?"

வேறு வழியின்றி வேத வரிகள் மாறின :

"வேதமெல்லாம்  காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே."

பாவ மன்னிப்பு வந்தது. பாடல்களும் ஹிட் ஆனது.

ஆனால் சென்ஸார் கண்களில் மண்ணைத் தூவி , 'பாவமன்னிப்பு' படப் பாடலில் , இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார் கண்ணதாசன்.

"மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்."

இப்படி அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால்தானோ என்னவோ , ஒருமுறை இப்படி எழுதி இருந்தார் அவர் :

"நான் இறந்த பிற்பாடு என்னையே நான் விமர்சனம் செய்துகொண்டால் இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன் கெட்டிக்காரர்களோடு  பழகத்தொடங்கி முட்டாளாக  செத்துப் போனேன்.” ---கண்ணதாசன்
===============================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.19

சாகாவரம் பெற்ற கண்ணதாசன்


சாகாவரம் பெற்ற கண்ணதாசன்

ஒரு பாடலின் பல்லவி இல்லாமலேயே சரணமோ அல்லது சரணத்தின் ஒரு வரியே கூட அந்த பாட்டை நம் மன சிந்தனையில் ஓட  விடக்கூடிய வலிமையை பெற்றவர் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. அப்படி அவர் எழுதிய சில பாடல்கள் கீழே தொகுக்க பட்டுள்ளது.

அவ்வகை பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த எம். எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன்  டி எம். செளந்திர ராஜன்,  பி.சுசீலா , பி.பி. சீனிவாஸ், சிவாஜி,எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர் ,ஜேசுதாஸ் , எஸ். பி. பாலசுப்ரமணியம் ,சீர்காழி ஐயா மற்றும் இதில் விடுபட்ட ஏனைய கலைஞர்களும் இவருடைய பாடல்களுக்கு பெருமை சேர்த்தனர்.

அதில் சில படப் பாடல்களின் சரணங்கள் மட்டும் உங்கள் ரசனைக்கு.

"எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா"

"தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்"

"கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா
தலைவா என்னை புரியாதா "

"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா"

"உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்"

"காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்"

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்"

"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? "

"கன்னிக் காய் ஆசைக் காய்
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக் காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமா
எனை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ "

"செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா ||

"நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே"

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் "

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா"

"வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா "

பிரமிப்பாக இருக்கிறதல்லவா?
------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.19

ஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்!!!!!


ஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்!!!!!

ஆறுதல்_பாடல்களுக்கு_அமரகவி #கண்ணதாசன் .

"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ"

என்ற பாட்டு மூலமாக எத்தனை பேர் மாற்றுத்திறனாளிகள் ஆறுதல் அடைந்திருப்பார்கள்.

பிறருக்கு ஆறுதல் சொல்வதற்காகவே தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு படவுலகில் நுழைந்தவர் கவியரசு அவர்கள்.கன்னியின் காதலி படத்தில்

"கலங்காதே மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே "

என்ற பாடலின் மூலம் அடி எடுத்து வைத்தார் கவியரசு அவர்கள்.
காதல், வீரம், சோகம், தத்துவம், தாலாட்டு, நகைச்சுவை என ஐயாயிரத்திற்கு மேல் பாடல்கள் இயற்றி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்ச்சிகளை பாடலாக வடித்தவர்.

"மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"

இந்த பாட்டு வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனயோ கோடி பேரை ஆறுதலடையச் செய்திருக்கும் என்பதே உண்மை.

 வாழ்க்கைச் சிக்கலின் குழப்பத்தில் மயங்கி கிடந்த போது இந்தப் பாடல்தான் என் உயிரை மீட்டுத் தந்தது என்கிறார் இவர் சமகாலத்து கவிஞர் வாலி .

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராமமூர்த்தி பிரிந்த போது, விஸ்வநாதனால் அந்தப் பிரிவைத் தாங்க முடியவில்லை.

அன்று ஒரு பாடல் எழுதுவதற்காக கவியரசரும் விஸ்வநாதனும் அமர்கிறார்கள். காதல் பிரிவை தாங்க முடியாத காதலி பாடும் பாடல், இது தான் சூழல்.

" தம்பி, நீ ட்யூன் போடுகிறாயா? நான் வார்த்தை தரட்டுமா?"

கவியரசர் கேட்கிறார்.

"நீங்க வார்த்தை கொடுங்கண்ணே"

சிறிது யோசனைக்குப் பின் கவியரசர் சொல்கிறார்.

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா?"

வார்த்தைகளை கேட்டதும் விசுவநாதன் கவிஞரை நிமிர்ந்து பார்க்கிறார். தனக்கென்றே சொல்லப்பட்டது போல அவர் பார்வையை உணர்ந்து கொண்ட கவிஞர் மெளனமாக சிரித்தபடியே தலையசைத்து மேலே தொடர்கிறார்.

 ராமமூர்த்தி பிரிந்த துயருக்கு அது ஆறுதலாக இருந்தது. கவியரசர் எதையும் திட்டமிட்டுப் பாடுவதில்லை. சூழலைப் பொருத்து அந்தப் பாத்திரமாகவே மாறி உணர்ச்சிகளைப் பாடலாகக் கொண்டு வருகிறார்.

 "மனைவி அமைவதெல்லாம்
  இறைவன் கொடுத்த வரம்"

என்ற பாடலைக் கேட்டு கண் கலங்காதவர்களே இல்லை. ஏன், கவியரசரே ஒரு கணம் கண்களைத் துடைத்துக் கொண்டார். நல்ல மனைவியைப் பெற்றவர்கள் ஆனந்தமும், வாய்க்கப் பெறாதவர்கள் இந்தப் பாடலைக் கேட்டு ஆறுதலும் அடைந்தனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் கவிஞருக்கு கடிதம் எழுதி வாழ்த்தியது மட்டுமின்றி நன்றியும் தெரிவித்தனர்.

மகனைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் ஏழை ஒருவர் , மகன் அவ்வாறில்லாமல் தீய வழியில் செல்கிறான் என்றறிந்து அந்த ஏழை தந்தை படும் வேதனையை சூழலாகக் கொண்டு பாடல் பாடுகிறார்

"வளர்த்த கடா முட்ட வந்தால்
வச்ச செடி முள்ளானால்
போன ஜென்மப்பாவமடி அம்மாளு "

இதைப் பாடும் போது திரு.டி.எம்.எஸ் அவர்களால் பாட முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. இப்படி ஒரு சூழல் டி.எம்.எஸ் வாழ்விலேயே அப்போது சம்பவித்திருந்தது.

1962 தேர்தலில் தனது நண்பரின் வெற்றிக்காக கவிஞர் பெரும் முயற்சி செய்தார். இதில் நண்பர் தோற்றதை கவிஞரால் தாங்க முடியவில்லை.

 அப்போது பலே பாண்டியா படத்திற்கு ஒரு தத்துவப் பாடல் எழுத வேண்டி வந்தது. வார்த்தைகளில் இந்த நிகழ்ச்சியைப் பிரதிபலித்தார் கவிஞர்.

"யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியலே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியலை "

என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார். சென்ற நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு கண்ணதாசனே புகழைக் குவித்தவர். பாரதியாரைப் படித்தவர்கள் மட்டுமே பயின்றார்கள்.

கவியரசர் கண்ணதாசனையோ படித்தவர்கள் மட்டுமின்றி பாமரர்களும் பயின்றார்கள்.இந்த நூற்றாண்டிலும் அது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!