மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 911 - 920. Show all posts
Showing posts with label Lessons 911 - 920. Show all posts

8.2.16

தமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

தமிழா்கள் அனைவரும்  தெரிந்து கொள்ள வேண்டியது"

1.தமிழ் வருடங்கள்(60)

2.அயணங்கள்(2)

3.ருதுக்கள்(6)

4.மாதங்கள்(12)

5.பக்ஷங்கள்(2)

6.திதிகள்(15)

7.வாரங்கள்(நாள்)(7)

8.நட்சத்திரங்கள்(27)

9.கிரகங்கள்(9)

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)

11.நவரத்தினங்கள்(9)

12.பூதங்கள்(5)

13.மஹா பதகங்கள்(5)

14.பேறுகள்(16)

15.புராணங்கள்(18)

16.இதிகாசங்கள்(3).

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

"தமிழ் வருடங்கள்"

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.

"அயணங்கள்"

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

"ருதுக்கள்"

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)

2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)

3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)

4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)

5.ஹேமந்தருது
(மார்கழி,தை)

6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

"மாதங்கள்"

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).

"பக்ஷங்கள்"

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.

"திதிக்கள்"

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.

"வாரங்கள்"

வாரங்கள்(நாழ்) ஏழு ஆகும்

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

"நட்சத்திரங்கள்"

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.

1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.

"கிரகங்கள்"

கிரகங்கள் ஒன்பது ஆகும்.

1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)

"இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்"

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு

"நவரத்தினங்கள்"

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

"பூதங்கள்"

பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
 நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

"மஹா பாதகங்கள்"

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.

"பேறுகள்"

பெறுகள் பதினாறு வகைப்படும்

1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.

"புராணங்கள்"

புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம்
3.பிரம்மவைவர்த்த புராணம்
4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்ய புராணம்.

"இதிகாசங்கள்"

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.

1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.

அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.2.16

ஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?



ஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.
-------------------------------------------------
அதைத் தெளிவுபடுத்தத்தான் இன்றையப் பாடம்!

இன்று வரவேண்டிய புதிர் பாடம் அடுத்த வாரம் வரும். வாத்தியாரின் உடல்நிலை காரணமாக எழுதிப் பதிவிட முடியவில்லை. ஆகவே 
பொறுத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பாடம் அஷ்டகவர்க்க வகுப்பில் வந்த பாடங்களில் ஒன்றுதான். முக்கியமான பாடம் என்பதால் மீள்பதிவாகக் கொடுத்துள்ளேன். முன்பே
படித்தவர்கள், படித்ததுதான் என்று பின்னூட்டம் இடாமல் மீண்டும்
ஒருமுறை படியுங்கள். படித்திராதவர்கள், நன்றாகப் படித்து மனதில் ஏற்றுங்கள்
=================================================
அஷ்டகவர்க்கப்பாடம் எண்.10
முக்கியமான விதிகள் - பகுதி 1

அடிப்படை விதிகள் - பகுதி ஒன்று

பரல்கள் என்றால் என்ன?

அஷ்டகவர்க்கத்தில் மொத்த மதிப்பெண் 337 என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த மதிப்பெண் 12 வீடுகளுக்கும் பொதுவானது என்னும்போது,
337 வகுத்தல் 12 = ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28 அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில் உள்ளது என்றாகிவிடும்.

அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண் எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன் நிற்கும் கிரகம் வலுவானதாக
இருக்கும். அது தன்னுடைய கோச்சாரத்திலும் (Transit) தசா புக்தியிலும்
நல்ல பலன்களைத் தரும். இல்லையென்றால் தீமையான/சுமாரான
பலன்களே நடைபெறும்.

Timing of events ஐக் கணக்கிடுவதற்கும் இந்த அஷ்டவர்க்கம் பயன்படும்.
தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.

1.  25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய
பலன்கள் சாதகமாக இருக்காது.
2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.
3. 30 பரல்களுக்கு மேலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்
4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப் போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில் குறைந்த
பரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது

உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது
அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.

அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். உரிய
காலத்தில் திருமணமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல அன்பான,
அவளைப் போற்றி வைத்துக் கொள்ளக் கூடிய கணவன் கிடைப்பான்.

இப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகன் தலைவனாகி விடுவான்.
அவனுக்குத்  தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.

சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப்போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா?
மொத்தம்  337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க வேண்டும்!

பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம்
பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள்
குறைவாக  இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து
விட்டு தேசம், தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.

செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில் அமையும்.
ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும் வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தியாகவோ அல்லது பில்
கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்!

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே மாதிரியான பதில் சர்வ நிச்சயமாக வராது. ஒவ்வொருவரிடம் இருந்து ஒவ்வொரு மாதிரியான பதில் வரும்.

அன்புமிக்க தாய், அறிவுமிக்க தந்தை, பாசமிக்க சகோதரர்கள்,
சகோதரிகள், பரிவுமிக்க மனைவி, உள்ளத்தைக் கொடுக்கும்
குழந்தைகள், உயிரைக்கூட கொடுக்கும் நண்பர்கள், இவற்றோடு பாரதி
பாடிய காணி நிலம், வற்றாத கேணி, பத்துப்பதினைந்து தென்னை மரங்கள், கத்தும் குயிலோசை, அதோடு...!

என்ன அதோடு? இது போதாதா?

சற்றுப் பொறுங்கள் சொல்லி முடித்துவிடுகிறேன்.

அதோடு இணைப்பாக அசையா சொத்துக்கள், வற்றாத வங்கிக் கணக்கு இருப்பு, பிடித்தமான ஊரில் வசிக்கும் வசதி, போட்டியில்லாத தொழில்,
இன்னோவா, டாட்டா சுமோ அல்லது ஹோண்டா சிட்டி கார்கள், பாரத
ரத்னா வேண்டாம், அட்லீஸ்ட் பத்மபூஷன் பட்டம் கிடைக்கும் கெளரவம்.
 ஒரு வட்டம் அல்லது மாவட்டச் செயலாளர் பதவி, என்று பலரும்
பலவற்றை ஏக்கத்துடன் அல்லது ஆசையுடன் சொல்வார்கள்.

அவ்வளவும் கிடைத்து விடுமா என்ன?

கிடைக்காது!

அதெல்லாம் எப்படிக் கிடைக்கும். அதற்கு உரிய தகுதி நமக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

ஆசையிருக்குத் தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க'
என்று கிராமங்களில் சொல்வார்கள் 80% மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும்! இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

சரி மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.

நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக
வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் தீர்மானிப்பதில்லை.

அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது.
4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.

ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப்
பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை.

பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து ஐந்து ஜீவன்கள் வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவர்,
அவனை நோக்கிக் கேட்டார்,

”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற ஏதாவது கிடைக்குமா?”

அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர்
இருக்கிறது, தரட்டுமா?” என்று கேட்டான்.

அவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.

வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை
உற்று நோக்கினார். அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.

தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:

“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும்
வழியைச் சொல்லித் தருகிறேன்”

அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன், அவரைச் சென்று பார்த்தான்.

அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாக
ஒன்றைச் சொன்னார் “உன்னிடம் இருக்கும் இரண்டு மாடுகளையும்
ஓட்டிக் கொண்டு  போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு வந்து,
விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”

அவன் அதிர்ந்து போய் விட்டான்.

மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில்,
“அய்யா...” என்று இழுத்தான்.

அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய், மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து
என்னைப் பார்ப்பாய், இப்போது போ!”

அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற பணத்தைக் கொண்டு வந்து, வீட்டுப்
பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.

தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.

மாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம்

இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.

அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன?

இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச் சென்று முனிவரைப் பார்த்தான்.

தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார். பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள்
இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?”

அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.

சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,”நேற்றுச் செய்ததுபோல
இன்றும் செய்; ஒன்றும் கேட்காதே, பிறகு சொல்கிறேன் இப்போது
போய் வா”

வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது.

வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள் போட்டுப் பரணுக்குள் வைத்து
விட்டு, எப்போதும் போல சாப்பிட்டு விட்டுக் கண் அயர்ந்தான்.

நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில்
நின்று கொண்டிருந்தன!

இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச்
சென்று  பார்த்தான்

அவர் சொன்னார், “இனிமேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம்
இப்போது 20 மாடுகளுக்கான தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்
போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை வாங்கி வந்து இன்று
முதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!”

அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான், “அய்யா
உங்களுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன்.
இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்சொன்னீர்கள்
என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”

“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால்
 நீ முயற்சி எதுவும் செய்யாமல், இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு உதவும்
பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன்.
எதற்கும் ஒரு அளவு உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்தி
விட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன்  பிரச்சினைகள் எல்லாம் தீரும்
அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால் உன் மாடுகளின் எண்ணிக்கை  கூடிய சீக்கிரம்
100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப் பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.

கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!

நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார்.
முனி வேண்டும்  என்றால் வரும்.

முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும்
டாஸ்மார்க், சல்பேட்டா பார்ட்டிகள் அதாவது தண்ணியடிக்கும்
ஆசாமிகள்.சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்கு
ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?

ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும்
மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்.

அதவது First House (Lagna), Ninth House (House of gains), 10th House
(House of Profession) 11th House (House of Profit) ஆகிய நான்கு
இடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு மேற்பட்ட
எண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.

மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!

அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?

சூப்பராக இருக்கும்!

படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்

எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடைய

ஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன். அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.

சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.

அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப் பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம்

எல்லாம் முதல் வகையில் சேரும். நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம் வகையில் சேரும்.

நம்மைப் பெற்ற அன்னையும் அசையும் சொத்துதான். அனால் சொத்துக்களில் எல்லாம் முதன்மையான சொத்து.

அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான கஷ்டங்கள்.

நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது?

கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர்
இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில் உள்ள 120 கோடி ஜனங்களுக்கும் 120 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.

எப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி
இருப்பதில்லை.

அதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால்
அடுத்த கஷ்டம் கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம்
என்பதை எளிமைப் படுத்திப் பிரச்சினை என்று கொள்ளலாம்.

சிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும். சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல்  வரும்.

அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான்
இந்தத்  தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!”

என்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள்.
அதனால்தான்  அவரைக் கவியரசர் என்கின்றோம்.

ஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று Fine Tuning செய்து, கட்டுரைக்கு வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன்
பிரச்சினைகள்  என்று மாற்றிக்கொள்கிறேன்.

உடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின்
வேறு பகுதியில் பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை
இங்கே நான் எடுத்துக்கொள்ளவில்லை

பொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே
நான் இங்கே வகைப் படுத்திப் பேச உள்ளேன்
------------------------------------------------------------------------------------------
1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது

2. படிக்கவேண்டிய வயதில் சூழ்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க முடியாமல் போய்விடுவது.

3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல் அல்லாடுவது.

4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக் கொண்டே போவது.

5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும் உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.

6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை, நிறைவில்லாத சம்பளம்.

7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அலுப்பு

8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தைகளைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப்
படிக்க  வைக்க வேண்டிய அவதி

9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது ஏற்படும் பரிதவிப்பு

10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடையாமல் ஏற்பட்டு விடும் கடன் சுமைகள்

இப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது
உங்களுக்கு மட்டுமில்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
பெரும்பாலான  பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.

“பணம் இருந்தால் போதும் சார்! எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே
நொடியில் தீர்த்து விடுவேன்!” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.

அது உண்மையல்ல! பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உருமாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து
நிற்கும்.

இன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன!

மெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க
முடியாது! பணம் கொடுத்து அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக் கேட்கும் குழந்தையை வாங்க

முடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி முடியாதது எவ்வளவோ இருக்கின்றன!
-----------------------------------------------------------------------------
சரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.

பிரச்சினை தீரவே தீராது.

ஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல! உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள்
இருந்து  கொண்டே இருக்கும். ஒன்றைக்கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான் ஆக
வேண்டும்.

கேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர்
ஹீட்டர், வாஷிங்மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர்,
ஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் அல்லது மின் விசிறிகள்,
மோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.

பணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்களையும் புதிதாக மாற்றிவிட்டு, நிம்மதியாக இருப்போம்
என்று நினைத்தால், விதி அவனை விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து மருத்துவமனையில்
கொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய
வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.

ஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல
உடன் இருப்பது ஆகும்!
------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையின் அவசியமென்ன?

இரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை!

1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா?

2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம், இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்?
---------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு (House of Mind) ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்)

ஆகிய வீடுகள் நன்றாக - அதாவது வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது என்று கொள்ளலாம்.
அதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா?

சரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது?

மூன்று வீடுகளும் ஒட்டு மொத்தமாக நன்றாக இருப்பது என்பது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். சராசரியாக, மனிதனுக்கு மூன்றில் ஒன்று
நன்றாக இருந்தாலும் போதும்!

முன்பே சொல்லியிருக்கிறேன் உலகில் அனைவருக்கும் உள்ள மொத்த பரல்கள் 337 மட்டுமே அதை 12 ஆல் (ராசிகளால்) வகுத்தால் சராசரியாக
28  வரும். சராசரிக்கும் மேலே கூடுதலாக இரண்டு பரல்களுடன் - அதாவது
30 பரல்கள் அந்த வீடுகளில் - அல்லது ஒன்றிலாவது இருத்தல் நல்லது.
அதோடு ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைக்குரிய பரல்கள் எட்டு. நான்கு என்பது சராசரி. 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் அந்த கிரகம் இருந்தால்
நல்லது

உதாரணம் சிம்ம லக்கின ஜாதகனுக்கு, சூரியன்தான் லக்கின அதிபதி. ஜாதகத்தில் சூரியன் அதன் சுய வர்க்கத்தில் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன்
இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஐந்தாம் வீடு, தனுசு வீடாகும், தனுசிவின் அதிபதி குரு பகவானும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஒன்பதாம் வீடு, மேஷமாகும், மேஷத்தின் அதிபதி செவ்வாயும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு லக்கினக்காரர்களும் தங்களுக்குரிய லக்கினத்தை வைத்து அந்த மூன்று இடங்களையும் தாங்களே மதிப்பிட்டுக்கொள்ள
வேண்டுகிறேன்

இவ்வாறு ஒரு வீடும், வீட்டின் அதிபதியும் அமைந்து விட்டால் போதும். உங்களை ஒன்றும் சீண்ட முடியாது. எது வந்தாலும் தாங்கக்கூடிய உத்தம
மனிதர் அல்லது பெண்மணி நீங்கள். அந்த கிரகங்கள் உங்களுக்குக் கடைசிவரை கை கொடுக்கும்!

அன்புடன்
வாத்தியார்
==========================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31.1.16

Astrology - Quiz 102 Answer: தங்கமழையும் பெய்யவில்லை! குயிலும் பாடவில்லை!

Astrology - Quiz 102 Answer: தங்கமழையும் பெய்யவில்லை! குயிலும் பாடவில்லை!

தங்கமழை எப்படிப் பெய்யும்? அது கவிஞர் வைரமுத்துவின் வரி. திரைப்படம் ஒன்றில் நாயகியின் மனநிலையைக் குறிக்க அந்த வரியைப் பயன்
படுத்தினார்! சந்தோஷமான மன நிலைமையில் சாதா மழையே தங்க மழையாகத் தெரியும்! அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
---------------
சரி, அதை விடுங்கள். பாடத்திற்கு வருவோம்!

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன்.

ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது
 இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு.
 இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail
Ketu and is known as viloma.

அது சம்பந்தமாக ஒரு ஜாதகத்தை அலசுவதற்கு நேற்றுக் கொடுத்திருந்தேன்.
-----------------------------------------------------------------------------------


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில
மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ்நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன்
ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப்
பூர்த்தியாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின்  பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?

4-12-13 அன்று இந்தப் பாடம் முன்பே வெளிவந்துள்ளது. இரண்டாண்டுகளில் நிறைய புது முகங்கள் வந்துள்ளதால் அவர்களுக்காக மீண்டும் வலை
ஏற்றினேன். அதை நினவுபடுத்தி ஒரு அன்பர் எழுதியுள்ளார். அவருக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகும்!

19 அன்பர்கள் சரியான விடையையோடு ஒத்து வரும்படியான பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கேது
கொடிபிடிக்கும் ஜாதகம் என்று கண்டு பிடித்து எழுதியவர்கள் மூவர். அவர்களுடைய பதிலுக்கு +++++++ என்ற குறியிட்டு அடையாளப்
படுத்தியுள்ளேன். அவர்களுக்கு விசேடமான பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================================
1
//////Blogger Srinivasa Rajulu.M said...
தாமதத் திருமணம்; ஆனால் நீடிக்காத திருமண வாழ்க்கை
1) களத்திர மற்றும் சயனபோக அதிபதி மற்றும் காரகன் ஆகிய சுக்கிரன் ராசியிலும் அம்ஸத்திலும் மறைவிடத்தில் இருக்கிறான்.
2) பாபிகளின் பார்வை மற்றும் இருப்பு களத்திர ஸ்தானத்தில் அமைந்தது.
3) இருப்பினும், நீசனானாலும் குருவின் பார்வை இருந்ததால் குருதசை முடிவில் (தாமதத்) திருமணம் நடந்தது.
குடும்ப-சுக ஸ்தானாதிபதி நீசம்; மறைந்துவிட்ட எட்டாம் அதிபன் புதன் மற்றும் எட்டாம் இடத்தில் செவ்வாயின் பார்வை உள்ளதால் திருமண வாழ்க்கை சீக்கிரம் முடிந்தது. சயனபோக அதிபதியும் மறைந்ததால் தங்க மழை இல்லை!
Friday, January 29, 2016 10:02:00 AM ///////
----------------------------------------------------
2
/////Blogger Jaya Prakash said...
viruchikkka lagnam....lanatipathi sevvai raaguvodu serkai...7aam athipathi sukranae kalathirakaaraganaagi 7kku 12l maraivu...thirumana vaazhvu nimmathi illai...thanga mazhaiyum illai..kuyilum paadavillai...5 aam athipathium neecham..9aaam athipathi raagu saaram..raagu dasai,gurudasai,sanidasai,bhudhn dadsai,kethudasai,sukra dasai...ena athu atduthu yogam illa dasaikall...thirumana vaazhvu sugapadaatha jathagaththukku nalla utharaanam
Friday, January 29, 2016 10:20:00 AM /////
----------------------------------------------------------
3
/////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்..........
ஜாதகிக்கு விருச்சகலக்னம். செவ்வாய்+ வில்லன்ராகுவுடன்!
7ஆம் இடத்தில்.கேடிகள் சூரி+கேதுவும்
7ஆம்அதிபதி 6ல். 7ஆம்இடத்திற்கு12ல்(சுக்கிரன் சுகபடவில்லை)
2ஆம்இடத்திற்கும்,7ஆம்இடத்திற்கும் யுனிவர்சல்கேடி சனியின் லேசர்பார்வை
அம்மனிக்கு30வயதுக்குமேல். ரத்தமழை+கன்னீர்மழை பெய்திருக்கும்
bye.......
Friday, January 29, 2016 10:24:00 AM/////
-----------------------------------------------------
4
//////Blogger KJ said...
Sir,
Native will not be having good Marriage life. Possibility of separation after Marriage.
Because, Kethu sits in Seventh house and Ragu in Lagnam. Karaga Sukran with 8th house owner in sixth even though Vibareeth Raja Yoga is there. 
Thanks,
Sathishkumar GS
Friday, January 29, 2016 2:11:00 PM /////
--------------------------------------------------
5
/////Blogger venkat said...
உயர்திரு வாத்தியார் ஐயா வணக்கம்,இந்த புதிர் தாங்கள் முன்பே அலசியதுதான்,http://classroom2007.blogspot.in/2013/12/astrology.html
Friday, January 29, 2016 7:13:00 PM /////
--------------------------------------------------
6
//////Blogger selvaspk said...
அம்மணியின் வாழ்வில் தங்க மழை பெய்ததா? 
தமிழில் குயில் பாடியதா? 
அதாவது அம்மணியின் திருமண வாழ்வில் அதெல்லாம் நடந்ததா? 
I am not clear on question. But I guess you ask about marriage life, wealth of the person.
Marriage
1. 7th house on strong kalathira dosam with all natural malefic aspects (Saturn, Mars, sun, Raghu). With 10 lord with kethu, Venus sitting on 12th from 7th house, debilitated Jupiter, Mars and confirms MARRIAGE DENIAL. Though Jupiter aspects, not strong enough getting a marriage, she should have decided to go on public service.
2. She should be a govt servant, possibly police or military official making her shine among all her peers or male coworkers. Debilitated mars with aspect of Saturn make her stubborn and disciplined nature. Keen intelligence planet Kethu in 7th with Sun the lord of 10th house & bakyathipathi getting jupiter saturn and mars aspects notes she is incorruptible, go high positions on carrier with commanding superior position.
3. Monetary wise, she should be good. Debilitated Mars and Jupiter and aspect of strong Saturn on 2nd house from lagna, moon, navamsa denotes continuous and surplus flow of money through her job. She may even be doing charitable works for social welfare.
Friday, January 29, 2016 10:07:00 PM //////
-------------------------------------------------
7
//////Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு வணக்கங்கள்,
முதலாவதாக, time extension தந்ததிற்கு மிக்க நன்றி. போனவாரத்தான் கேள்விக்கு பதிலெழுதியபின் upload பண்ணவந்தபோது உங்கள் விடை காத்திருந்தது.
இந்த வாரத்தான் கேள்விக்கு பிறந்த திகதி கணிக்க முடியவில்லை, எனினும்...........
செவ்வாய் லக்கினத்தில், சொந்த வீடும் கூட, ஆனால் அம்சத்தில் செவ்வாய் நீசம். லக்கினத்தில் ராகுவும் கூட.
சனி அம்சத்தில் உச்சம். சனியும் குருவும் பரிவரத்தனை யோகம் ராசியில்.
சூரியனும் கேதுவும் ஒன்றுசேர்ந்திருப்பது நல்லதல்ல, அதுமட்டுமல்லாமல் 7ம் வீட்டிலும். 7ம் வீட்டதிபதியாகிய சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்துவிட்டார், மற்றையது பாபகர்த்தரி யோகத்திலும் இருக்கின்றார். செவ்வாயும் சனியும் 7ம் வீட்டை 7ம் பார்வையாகவும் 3ம் பார்வையாகவும் பார்க்கின்றார்கள். 7ம் வீட்டில் கேதுவும் கூட.
குரு 7ம் வீட்டை, 5ம் பார்வையாக பாரத்தாலும், சனி 10ம் பார்வையாக குருவை பார்க்கின்றது. ஆகவே குருவின் பார்வையாலும் நன்மையில்லை.
மொத்தமாக ஜாதகி ராகு தசையில் திருமணம் செய்து, ராகு திசையிலே முடிந்திருக்கலாம். 5ல் சனியிருப்பதனால் பிள்ளைகளாலும் பலனில்லை.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Saturday, January 30, 2016 4:32:00 AM/////
--------------------------------------------------
8
++++++++++//////Blogger kmr.krishnan said...
'முன்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை;பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை' என்பது போலத்தான் இந்த ஜாதகம் உள்ளது.
ஜாதகி 1 ஜூன் 1937; மாலை 6 மணி 33 நிமிடம்,50 வினாடிக்குப் பிறந்தவர்.
பிறந்த் இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
1.ஏழாம் அதிபன் சுக்ரன் ஆறில் மறைந்து எட்டாம் அதிபன் புதனுடன் தன் வீட்டிற்கு 12ல் நின்றது திருமண வாழ்வுக்குப் பெரிய பாதகம்.
2. ஏழாம் வீடு சனி, செவ்வாய், ராகுவால் பார்க்கப்பட்டும், சூரியன் கேதுவால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளதால் மண வாழ்க்கைக்கு பாதிப்பு.
3. கேது கொடிபிடித்துச் செல்லும் சர்ப தோஷம்.
4.ராசி நவாம்சம் இரண்டிலும் ஏழாம் இடத்திற்குக் குருவின் பார்வை என்பதே ஒரு ஆறுதலான செய்தி.ஆனாலும் வலிமையற்ற குரு.
கால சர்பதோஷத்தால் 30 வயதுவரை திருமணம் ஆகவில்லை. பின்னர் சனிதசா வந்துவிட்டது.
இவர் திருமணம் ஆகாமல் காலத்தைக்கழித்தார் என்று கணிக்கிறேன்.
Saturday, January 30, 2016 12:26:00 PM//////
----------------------------------------------
9
/////Blogger SSS CONSTRUCTION said...
SIR, THE ABOVE LADY LOSE HER HUSBAND IN EARLY AGE BECAUSE FIRST,
1. THE LAGANA LORD IS IN 6TH PLACE 
2. THE 2ND LORD GURU IS IN NEECHAM AND THE 7TH LORD IS IN 6TH PLACE WITH 8TH LORD BUDHAN 
3. THE MANGALA STHANAM 8TH LORD BUDHAN IS IN 6TH PLACE WITH 12TH LORD
4. IN NAVAMASA 7TH LORD IS IN 12TH PLACE AND RAGU IS IN SECOND PLACE
5. IN NAVAMASA THE 12TH LORD MARS IS IN 8TH PLACE 
SO THESE INDICATION TO SHOW US HER FIRST MARRIAGE LIFE END EARLY BUT THE SECOND MARIAGE HOPE IS THERE IN RASI 7TH AND 11TH LORD IN CONJUCTION INDICATES HER SECOND MARRIAGE
Saturday, January 30, 2016 12:47:00 PM /////
-----------------------------------------------
10
/////Blogger Mrs Anpalagan N said...
குயில் கூவி என்ன, தங்க மழை பெய்தென்ன? காதும் அவுட்டாகி, கண்ணும் அவுட்டாகினால், எதுவும் உபயோகமில்லை! 
லக்கினாதிபதி ராகுவுடன் லக்கினத்தில்! எழில் சூரியனும் கேதுவும். 
ஏழாம் அதிபதி வெள்ளி, ஆறில்! கூடவே எட்டாம் அதிபதியுடன்! 
ஏழுக்கு வியாழ பார்வை உண்டென்பதால் திருமணமாகி இருக்கும். ஆனால் அது திருப்தியை தரவோ, நீடித்திருக்கவோ வழியில்லாத கிரக நிலைகள்.
Saturday, January 30, 2016 1:37:00 PM//////
------------------------------------------------
11
/////Blogger bala said...
Vanakkam Iyya,
Viruchiga lagna jathagi
Lagnathipathi - Sevai lagnathil + raagu vudan kootani (Sevvai balam izhandhu ullar - Navamsathil neecham)
Thirumana vaazhkai patri paarpathrku 2 + 7 aam idam paarka pada vendum
7 aam idathu athipathi sukran antha veetiruku 12 il ullar + 8aam athipathi budhan udan kootani (lagnathiruku 6il)
3 aam idathil amarndha neecha guru (Navamsathil - sama veetil ullar) 5 aam paarvaiaaga 7aam idathai paarkirar + 7 aam veetiruku saniswaranin 3 aam paarvaiyum ullathu + 7 aam & 8 aam veetin mel sevvai yin paarvai um ullathu
Neecha guru aanalum, guru dasayil jaathagiku thirumanathai nadathi veithaar
lagnathirku 6 aam idathil 7+8 athipathi kootaniyinal jathagi kanavarai pirinthu vaazhvar (Husband would have died or divorced her)
2 aam idathu athipathi neecham petru + 2 aam idathirku saniswaranin 10aam paarvai um ullathu - Ithanal kudumba vaazhkai nandraga irukaathu...
Chandra lagnathil irundhu 2 aam idathirku uriyavanum guru bhagavan thaan. 
Avar neecham petru 12il(chandra lagnathirku) poi irundhadhum jathagiyin thirumana vaazhkai nandraga illai enbayathai solgirathu.
Nandri,
Bala
Saturday, January 30, 2016 2:03:00 PM //////
---------------------------------------------
12
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
இப்பெண்ணிற்கு ஏழாமிடதில் சூரியன், கேது சேர்க்கை, சனி பார்வை, ராகு பார்வை, செவ்வாய் பார்வை, கலத்திர காரகனும் ஏழுக்குடையவனுமாகிய சுக்கிரன் மாங்கல்ய ஸ்தானாதிபதி புதனுடன் ஆறில் மறைந்து விதவை தோசம் இருந்தாலும் ஏழாமிடத்திற்கு குரு பார்வை உள்ளதால் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.ஆனாலும் இவர் கணவரை பிரிந்தோ அல்லது இழந்தோ அல்லது விவாகரத்து பெற்றோ இருப்பார்.
நன்றி
செல்வம்
Saturday, January 30, 2016 2:35:00 PM//////
--------------------------------------------
13
//////Blogger Spalaniappan Palaniappan said...
அய்யா வணக்கம் 30/01/2016
ஜோதிட புதிர் -102. கால தாமத திருமணம் - திருமண வாழ்க்கை சுகமில்லை. 
ஜாதகி விருச்சிக லக்னம், கும்ப ராசி.
லக்னாதிபதி செவ்வாய் (வக்ரம்) & நவாம்சத்தில் நீசம்.
லக்னத்தில் ராகு உச்சம். 7ல் கேது நீசம். மாந்தி தவிர்த்து எல்லா கோள்களும் ராகு - கேதுவுக்குள் இருப்பதால் சர்ப்ப தோஷம்.
தனம் / பூர்வபுண்ணிய காரகன் குரு ராசியில் நீசம் & நவாம்சத்தில் குரு+மாந்தி சேர்க்கை.
களத்திரகாரகன் & களத்திர ஸ்தானதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்கு 12 ல் விரயத்தில். 
அச்டமாதிபதி & லாபாதிபதி புதன் 12ல் விரயத்தில். 
7ம் அதிபதி சுக்கிரன் நின்ற வீட்டிற்க்கு 2ல் நீச கேது. 
செவ்வாயும் சுக்கிரனும் 6/8 ஸ்தானத்தில், மேலும் 7 & 8ம் அதிபதிக்கு பாபகர்தாரி யோக அமைப்பு இருப்பதாலும் திருமண தடை & கால தாமத திருமண அமைப்பை காட்டுகிறது.
4ம் அதிபதி சனி 5ல் இருப்பதும் குரு நீசம் பெற்றதால் சுகம் குறைவு & இல்லறம் சிறப்பாக அமையவில்லை.
களத்திர & ஆயுள் ஸ்தானதிபதி 6ல் மறைவு பெறுவதும் சனி,செவ்வாய் பார்வை 7, 8 க்கு கிடைப்பதும் திருமண வாழ்வை சிறக்க செய்யவில்லை. 
குரு திசை ராகு புத்தியில் திருமணம் நடந்தது . ஜாதகியின் கணவருக்கு ஆயுள் பலம் சிறப்பாக இல்லாதலால் குரு திசை நிறைவில் இல்லற வாழ்க்கையில் கசப்பான நிகழ்வுகள் நடந்தது. (மாங்கல்ய ஸ்தானம் பலம் இல்லை) பின்னர் சனி திசை பிற்பகுதியில் ஓரளவு வாழ்க்கை பாதை சீரானது என்றாலும் ஜாதகியின் அடுத்தடுத்த திருமணங்கள் தோல்வியில் தான் முடிந்திருக்க வேண்டும்.
அன்புடன் 
சோமசுந்தரம் பழனியப்பன், மஸ்கட் 
Saturday, January 30, 2016 3:42:00 PM /////
----------------------------------------------
14
///////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ஜாதகி .லக்னம் விருசிகம் .
லக்னத்தில் லக்னாதிபதி உடன் உச்சமாக ராஹு ...அடுத்து கேது 7ல் ஆஹா கடிகார சுற்றில் கேது கோடி பிடிக்க எல்லா கிரகங்களும் உள்ளடங்கி **விலோமா *** யோகம் அதாவது கால சர்ப்ப தோஷம்.
அலசியாச்சு ..அய்யா ..ஏற்கெனெவே பாடம் 461 ல் மாதிரி ஜாதகம் எண் 21.
திருமணம் ஆகி விதவை ..பொருளாதார ரீதியாக பரவா இல்லாமல் இருக்கும் ஏனென்றால் 11ல் ஜிகஜாண்டிக் வில்லன் மாந்தி .
Saturday, January 30, 2016 4:23:00 PM //////
---------------------------------------------------
15
++++++++++///////Blogger venkatesh r said...
அம்மணியின் திருமண வாழ்வில் புயல் வீசியது. 
அலசல்:
கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷமுள்ள ஜாதகம். லக்கினாதிபதி செவ்வாய் வக்கிரகதியில் ராகுவுடன் சேர்ந்து நவாம்சத்தில் நீசம் அடைந்து வலுவிழந்துள்ளார். தனாதிபதியும் குடும்ப ஸ்தானாதிபதியுமான குரு பகவான் 3மிடத்தில் வக்கிரகதியுடன் நீசமடைந்து விட்டார்.களத்திராதிபதியும், களத்திரகாரகனுமான சுக்கிர பகவான் ஆறில் அட்டமாதிபதி புதனுடன் சேர்ந்து மறைந்து விட்டார். தவிர அபகர்த்தாரியின் பிடியில் உள்ளார். களத்திர ஸ்தானத்தில் சூரியன் மற்றும் கேதுவின் கூட்டணி வேறு. சனி பகவான் தன் 3ம் தனிப்பார்வயில் 7மிடத்தை பார்க்கிறார். இவ்வளவு கெட்ட பலன்கள் இருந்தும், குரு பகவானின் 5ம் தனிப்பார்வை 7ம் இடத்தில் விழுகிற ஒரே காரணத்தினால் அம்மணிக்கு குரு தசையில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் நடந்த சில வருடங்களில் சனி தசையில் கணவரை இழந்து தனிமரமானார்.
Saturday, January 30, 2016 6:33:00 PM//////
-----------------------------------------------------
16
///////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
க்விஸ் 102க்கான அலசல்.
திருமண வாழ்வு நோயாளிக் கணவனால் சோகத்தில் முடிந்திருக்கும்!
கேது பகவான் கொடி பிடித்துச் செல்லும் காலசர்ப்ப தோஷ ஜாதகம்!
மகர லக்கின ஜாதகம்.லக்கினாதிபதி செவ்வாய் லக்கினத்தில் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் ராகுவுடன் கூட்டணி. 7மிடத்தில் அமர்ந்த சூரியன் மற்றும் கேதுவின் பார்வையால் கெட்டுள்ளார்.செவ்வாய் 6மிடத்துக்கும் அதிபதியாக, வில்லனுமாகி லக்கினத்தில் ராகுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.மூர்க்கத்தனம் மிகுந்தவராயிருப்பார்
2,5 க்கான அதிபதி குரு பகவான் 3ல் மறைந்து,நீச்சம் பெற்று கெட்டுள்ளதால் குடும்பவாழ்க்கை இல்லை. 3ம் பதி சனியும் 5ம் பதி குருவும் பகை பெற்ற பரிவர்த்தனை.
7மிட அதிபதி சுக்கிரன், 8ம் பதி புதனுடன் சேர்க்கை பெற்று 6மிடத்தில் அமர்வு.
களத்திராதிபதி சுக்கிரன் 6ல் மறைந்ததால் கணவன் நோயாளியாகி, சுக்கிரன் தன் வீட்டிற்க்கு 12ல் மறைந்ததால், ஜாதகி கணவனை இழந்திருப்பார்.
பாக்கியாதிபதி சந்திரன், பாதகாதிபதியாகி லக்கினத்திற்க்கு 4ல் பகை வீட்டில் அமர்ந்து திக் பலம் பெற்றாலும், தன் வீட்டிற்க்கு 8ல் அமர்ந்ததால் பலம் இழந்துவிட்டார்.தேய்பிறைச் சந்திரன் பாவியாகிறார்.
கும்ப ராசிக்கு 7ம் பதி சூரியன்,ராசிக்கு 4ல் அமர்ந்தாலும், கேதுவின் சேர்க்கையால் கிரகண தோஷம் அடைந்து, லக்கினத்திற்க்கு 7மிட மாகி களத்திர தோஷமளித்துள்ளது.
எந்த கிரகமும் நண்மை செய்யும் அமைப்பில் இல்லாதது துரதிர்ஷ்டமே!!!.
மொத்தத்தில் “தங்க மழை பெய்தும் நிலைக்கவில்லை - தமிழில் குயில் பாடவுமில்லை”.
அன்புடன்,
-பொன்னுசாமி.
Saturday, January 30, 2016 8:22:00 PM//////
----------------------------------------------------
17
///////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம் . இது ஏற்கனவே 03/12/2013ல் கேட்கப்பட்ட கேள்வி (QUIZ-26)
கேள்வியில் மாற்றத்துடன் கேள்வி கேட்கப்பட்டுள்ளது .ஜாதகி 02/06/1937ல் 6.30.35 மணிக்கு பிறந்தவர்.
பதில்: 1. தங்க மழை பெய்யவில்லை . 
2. குயில் பாடவில்லை 
3. திருமண வாழ்வு அதிருப்தியுடன் துவங்கி கடைசியில் சோகத்தில் முடிந்தது.
1. விருச்சிக இலக்கின ஜாதகி. இலக்கினாதிபதி செவ்வாய் இலக்கினத்தில் அமர்ந்திருக்கிறார். யோககாரகர்கள் குரு நீசம் (3ம் இடம்), சந்திரன் (4ம் இடம்).
2. கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். கேது கொடிபிடித்து செல்கிறது.7ல் கேது சூரியனுடன் கூட்டு சூரிய சண்டாள யோகம். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். ஜாதகி கோபக்காரர்.
3. லக்கினாதிபதி செவ்வாய் நவாம்சத்தில் நீசம் (கடகத்தில் உள்ளார்) . சுக்கிரன் பாபகர்த்தாரி தோஷம். குயில் பாட வேண்டும் என்றால் செவ்வாய், சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டும் .
4. 7ம் வீட்டிற்குரிய சுக்கிரன் அந்த வீட்டிற்கு 12ல் அமர்ந்து விட்டார்.அது 6ம் வீடு. அயனம் சயனம் போகம் இல்லாமல் செய்து விட்டார்.8ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்து கணவர் இல்லாமல் செய்து விட்டார்.
5. 2ம் அதிபதி குரு மகர ராசியில் நீசம் - குடும்ப வாழ்கையில்லாமல் செய்து விட்டார் . 
6. பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்க்கு 8ல் அமர்ந்து ஜாதகியன் பாக்கியத்தை கெடுத்து விட்டார் .
7. திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது. சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார். 
8. தங்க மழைக்கு 2ம் வீடு, 5ம் வீடு , 11ம் வீடு நன்றாக இருக்க வேண்டும். 2ம் வீடு நீசம், (36 பரல்) 11ம் வீட்டின்மீது சனியின் பார்வை (33 பரல்) 11ல் மாந்தி, 5ம் வீடு பாபகர்த்தாரி தோஷம் (25 பரல்)
சந்திரசேகரன் சூரியநாரயணன்
Saturday, January 30, 2016 11:42:00 PM////// 
-------------------------------------------------
18
//////Blogger Dallas Kannan said...
Respected Sir
Sorry for the late response.
1. She is married because of Guru's look and Sukra in its own place in Navamsa.
2. Late marriage because of Sani's look and Kethu in 7th house, kalasrabha dosam and Sukra and Budha in Papakarthari yogam.
Marraied life is not that great because of the 2nd point.
Sunday, January 31, 2016 9:12:00 AM /////
-----------------------------------------------
19
++++++++++//////trmprakaash@gmail.com said...
ayya, thirumanam guru paarvai 7m veettilnmel padhivadhaal nadandhirukkum. aanaal nilaithirukkaadhu. kaaranam, 7m athibathy matrum kalathira kaaragar Sukkiran 7rkku 12il, 8m athibathiyudan. matrum lagnam, lagnathbathy and 7m veedu raahu -kethuvin pidiyil. kethu kodi pidithu sellum avayogam.Thanks. Mu.Prakaash.
Sunday, January 31, 2016 4:59:00 PM//////
========================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.1.16

Astrology: Quiz 102: தங்க மழை பெய்ய வேண்டும். தமிழில் குயில் பாட வேண்டும்!!


Astrology: Quiz 102: தங்க மழை பெய்ய வேண்டும். தமிழில் குயில் 
பாட வேண்டும்!!

ஜோதிடப் புதிர் 102

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். ஜாதகத்தை நன்றாகப் பாருங்கள்:


படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்

கேள்வி இதுதான்: அம்மணியின் வாழ்வில் தங்க மழை பெய்ததா? தமிழில் குயில் பாடியதா? அதாவது அம்மணியின் திருமண வாழ்வில் அதெல்லாம் நடந்ததா? ஜாதகத்தை நன்றாக அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் பதிலை சும்மா, காசை சுண்டிப்போட்டுப் பார்த்து எழுதாமல், காரணங்களுடன் எழுதுங்கள்!

அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பதில் எழுத 2 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. பதில்கள் 31-1-2016 ஞாயிற்றுக்கிழமை 
காலையில் வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.1.16

புதிருக்கான பதில்: தாமதத்திருமணம். அவ்வளவுதான்!

புதிருக்கான பதில்: தாமதத்திருமணம். அவ்வளவுதான்!

நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகிக்கு திருமணம் மறுக்கப்படவில்லை. தாமதமாக திருமணம் நடைபெற்றது,

ஜாதகி மிதுன லக்கினக்காரர். 7ம் வீட்டுக்காரர் குரு பகவானின் பார்வை 7ம் வீட்டின் மேள் தீர்க்கமாக உள்ளது. அதனால் அவர் திருமணத்தை தனது மகாதிசை, சுக்கிர புத்தியில் நடத்தி வைத்தார்.

களத்திரகாரகன் சுக்கிரன் 12ம் வீட்டில்போய் அமர்ந்து கொண்டதும், அஷ்டமாதிபதி சனீஷ்வரனின் பார்வை 7ம் வீட்டின் மேல் விழுவதும், திருமணம் தாமதமானதற்குக் காரணம்.

அத்துடன் சந்திர ராசிக்கு 7ம் வீட்டுக்காரன் செவ்வாய், சந்திரனுக்கு எட்டில், தாமதத்திற்கு அதுவும் ஒரு காரணம்.

குருவின் பார்வையால், திருமண வாழ்க்கை சிறப்பாக அமைந்தது.

கலந்துகொண்டவர்களில் 25 பேர்கள் திருமணம் நடக்கும் என்று சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களில் ஒரு சிலர்தான், தாமதத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்

கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் அடியவனின் பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்


----------------------------------------------------------
1
/////Blogger Mrs Anpalagan N said...
திருமண யோகம் உள்ள ஜாதகம். 89 இல் ஆரம்பித்த குரு தசையில் நடந்திருக்கும். புதிர்களுக்கு பதில் எழுதிப் பழக்கம் குறைவாகையால், அடுத்தடுத்த புதிர்களில் அதிகம் எழுத முயற்சிக்கிறேன். நன்றி ஐயா.////
-----------------------------------------------------------------------
2
/////Blogger slmsanuma said...
அய்யா வணக்கம்
உடல் நலம் தேறி மீண்டும் களத்திற்கு வந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி
புதிர் போட்டியும் மீண்டும் களத்திற்கு வந்தது கண்டும் மிக மகிழ்ச்சி
ஜல்லிக்கட்டு மீண்டும்//மீண்டு வந்தால் (வருமா?) வருமே அப்படிப்பட்ட மகிழ்ச்சி
அம்மணி பிறந்த தேதி 1.9.68
காரகன் சுக்கிரன் அஸ்தங்கதம் // ஆனால் 4 பரல்கள்
பாவகத்தின் மீது சனீஸ்வரன், குரு, செவ்வாய், புதன் ஆகிய கிரக பார்வை
பாவகத்தின் பரல்கள் 26
பாவகத்தின் மீது பாவக அதிபதி குரு பார்வை // சிறப்பு
பாவக அதிபதி குரு 5 பரல்களுடன் // செவ்வாய் பார்வை
பாவக அதிபதி குரு பாவகத்திற்கு 9மிடம் // லக்கினத்திற்கு 3மிடம்
காரகன் சுக்கிரன் மட்டுமே ஆதரிக்கவில்லை
காரகன் சுக்கிரன் பாவகத்திற்கு 6மிடம் // லக்கினத்திற்கு 12மிடம்
எனவே குரு திசையில் செவ்வாய் புத்தியில் அம்மணிக்கு திருமணம் ஆயிற்று.
அதாவது திருமண யோகம் உள்ள ஜாதகம்
உங்களிடம் தேர்வு எழுதி நீண்ட நாட்கள் ஆனதால் பதட்டம் // நேரம் அதிகம் ஆனது
நன்றி
சந்தானம் சேலம்//////
-------------------------------------------------
3
Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
அன்புள்ள வாத்தியாருக்கு,
Quiz 101 க்கான பதில்.
அம்மணி பிறந்த நேரம் 7 Jun 1968 காலை 7:30
திருமணம் ஆனது. குரு திசையில். ஆனால் சுகப்படவில்லை.
மிதுன லக்கினம், துலா ராசி,
1). 7ம் இடத்திற்கு குரு பார்வையும், 7ம் அதிபதி குருவிற்கு சுக்கிரன் கேந்திரத்தில் (10ல்) அமர்ந்ததால் திருமணம் குரு திசையின் ஆரம்பத்திலேயே (23 வயதிற்குள்) நடை பெற்றது. கோள்சாரமும் அதற்க்கு கை கொடுத்தது.
2). பொதுவாகவே மிதுன, கன்னி, தனுசு, மீனம் லக்கின காரர்களுக்கு திருமண வாழ்வு அவ்வளவு திருப்திகரமாக இருந்ததில்லை என்பதற்கு இது உதாரண ஜாதகம்.
3). அம்மணியின் பிறந்த கரணம் விஷ்தி கரணம் அதை மேலும் உறுதி செய்துவிட்டது. விஷ்தி கரணம் தம்பதியினரிடையே ஒற்றுமையின்மையும், பிரிந்து வாழும் சூழ்நிலையும் காட்டுகிறது. அதை 2ம் இடத்தில் குறைவாக உள்ள அஷ்ட வர்க்க பரலும் உறுதி செய்கிறது. 7ம் இடத்திற்கு செவ்வாயின் பார்வையும், சந்திரனுக்கு 8ல் செவ்வாய்(செவ்வாய் தோஷம்) உள்ளதும் கவனிக்க தக்கது.
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.///////
----------------------------------------------------
4
/////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 7th Lord guru is in 9th house from its house.
2. guru aspects 7th place.
Definitely there is marriage.
But Saturn and mars aspecting 7th house further venus in 12th house, there could be various troubles in marriage life.
As you said earlier, in navamsa saturn in lagna and mars in 7th house this will delay the marriage.
There could be delay and trouble in marriage but no denial in marriage./////
---------------------------------------------------------------------------
5
/////Blogger sundar said...
Jupiter 7th lord aspecting 7th place and lagna lord bhuthan also aspecting 7th place.two
good planets seeing 7th place.and karaga sukran is in ownhouse.so definitely marraige will
happen..since sukran is surrounded by Fire planets sun and mars.intial delay or some struggle
will happen before marraige.////////
-----------------------------------
6
/////Blogger karthi said...
Ezhukkudaya Guru 3m veetilirunthu 5 parvayaga 7m edathai parppathal intha jathakikku kandippaga Thirumanam Guru thasaiyil nadanthirukkum.///////
---------------------------------------
7
Blogger kmr.krishnan said...
1. ஜாதகி 7 ஜூன் 1968 அன்று காலை 7 மணி 28 நிமிடங்களுக்குப்பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
2ஏழாம் இடத்திற்கு சனியின் பார்வை, செவ்வாயின் பார்வை. இவை திருமணத்தடை ஏற்படுத்தும்.
3. களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து சூரியனால் அஸ்தங்கதம்.
4. 6ம் அதிபனான செவ்வாய் சுக்கிரன் சம்பந்தம் பெற்று 12ல் மறைந்து சூரியனாலும் அஸ்தங்கதம்.
மேற்கண்டவை திருமண பந்தத்திற்கு ஒவ்வாதவை.ஆனால்
1.குருவின் பார்வை 7ம் இடத்தின் மேல்.
2. லக்கினாதிபதி புதனின் பார்வையும் 7ம் இடத்தின் மேல்.
3. குருவின் பார்வை 9ம் இடத்திற்கும் கிடைப்பதால்,
திருமணம மறுக்கப்படவில்லை என்று முடிவு செய்கிறேன்.
21 வயதில் துவங்கிய குருதசா சாதகமாக அமைந்தது.
குரு தசாகுரு புக்தியில் 1991ல் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு.//////
------------------------------------------------
8
/////////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
மிக்க மகிழ்ச்சி மீன்டும் புதிர் பகுதி இடம்பெருவது.
ஜாதகி மிதுன லக்கணம்
அதிபதி புதன் ராசி துலாம்
லக்கண அதிபதி லக்கனத்தில் இருப்பது நல்லது.
1. திருமணம் ஆனவர்.
2.திருமணம் பிரிவில் முடிந்தது
காரணம்: 1
7ம் வீட்டு அதிபதி குரு அந்த வீட்டிற்கு 9ம் இடமான திரிகோணம் பெற்றுள்ளார். அத்துடன் 2ம் வீட்டு அதிபதி சந்திரனும் திரிகோணம் பெற்று வலுவாக உள்ளார். இந்த அமைப்புகளால் ஜாதகிக்கு திருமணம் நடந்து முடிந்ததை காட்டுகிறது
காரணம்: 2
2ம் வீட்டின் மேல் வில்லன் செவ்வாயின் 3ம்பார்வை விழுகிறது. மற்றும் 7ம் வீட்டிற்கும் 8ம் அதிபதி சனி மற்றும் 6ம் அதிபதி செவ்வாயின் பார்வையும் உள்ளது.அத்துடன் சுக்கிரன் 12ல் மறைவு. இதன் காரனமாக மணவாழ்க்கை பிரிவில் முடிந்தது.
காரணம்: 3
அயன சயன போகத்தில் சூரியன் சுக்கிரன் செவ்வாய் அமர்ந்து அம்மனியின் திருமண வாழ்க்கைக்கு வேட்டு வைத்தார்கள். ///////
-----------------------------------------------
9
/////Blogger amuthavel murugesan said...
ஜோதிடப் புதிர் 101
திருமண யோகம் உள்ள ஜாதகம்.
1. சர்ப தோஷம் உள்ள ஜாதகம்.
2. குருவின் 5 ஆம் பார்வை 7 ஆம் இடத்தின் மேல்
3. செவ்வாயின் 8ஆம் பார்வை 7 ஆம் இடத்தின் மேல்(செவ்வாய் பெண்களுக்கு திருமண விஷயத்தில் குருவை போல் செயல்படுவார்)
4. குரு திசையில் கண்டிப்பாக திருமணம் நடைபெற்று இருக்கும்.
மு.சாந்தி/////
-------------------------------------------------------------
10
////////Blogger Sakthivel K said...
வணக்கம் சார். வாழ்கநலமுடன்.......
மிதுனலக்னம் லக்னாதிபதி புதன் ஆட்சி !
2ஆம் அதிபதி 5ல்.வலிமை (வர்க்கோத்மம்)
7ஆம் வீட்டிற்க்கு குரு பார்வை
திருமணம் நடந்திருக்கும் !!!////////
-------------------------------------
11
////////Blogger venkatesh r said...
வாத்தியார் அய்யாவிற்கு வணக்கம். வழக்கம் போல் ஜோதிடப் புதிர் போட்டி தொடங்கியதிற்கு நன்றி.
புதிர் எண் 101க்கான அலசல்:
அம்மணிக்கு திருமணம் 26 வயதில் குரு தசை, புதன் புத்தியில் நடைபெற்றது்
1. லக்கினாதிபதி புதன் லக்கினத்திலேயே வலுவாக அமர்ந்து களத்திர ஸ்தானத்தை தன் பார்வையில் வைத்துள்ளார்.
2.களத்திராதிபதி குரு 3ல் அமர்ந்தாலும் தன் 5ம் தனிப்பார்வையால் 7மிடத்தை பார்க்கறார்.
3.குடும்ப ஸ்தானம் சுபகத்தாரி யோகத்திலும் அதன் அதிபதி சந்திரன் 5லும் அமர்ந்து வலுவாக உள்ளன.
4.பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும், களத்திரகாரகனுமான சுக்கிரன் 12ல் மறைந்து பாபக்கிரக கூட்டணியில் வலுவிழந்து விட்டார்.
5.அம்மணிக்கு 20 வயது வரை ராகு தசை நடந்துள்ளது. அதற்கு பிறகு வந்த குரு தசை, புதன் புத்தியில் 26 வயதில் திருமணம் இனிதே நடந்தேறியது.//////
-------------------------
12
/////Blogger hamaragana said...
Anbunan vathiyaar ayya vanakkam
(Sorry my system under repair so aim using iPad No Tamil fond)
Chandran varkothamam,Sani varkothamam ..
Laknathpathi Pathan ..lakanathil..
7th house under kuru parvai ..also kuru house..
After 21year married Surely
--------------------------------------
13
//////Blogger daya nidhi said...
kaala thamadhamaga thirumanam nadanthadhu.
1)7 am veetirku SEVVAI,SANI parvai. 7 am adhipathi guruvirkum sevvai parvai thurumana thaamatham
7 kkuriya guru than veetai parpathal 7 am veedu valuvanathu
2) kalathira karagan sukran rasiyil maraidhalum amsathil natpu petrullaar.
3) navamsathil 7am veetil sevai iruppadhu,adhai sani parvai seivathu kodumai endralum, guru 7 am veetai parthu thirumanathai nadathinar
4) 7 am athipathi guru ashtavargathil 26 paral enralum , suyavargathi 5 paral iruppadhal thirumanam ok.
thanks,
S.DAYANIDHI, AVIYANUR///////
--------------------------------------
14
/////Blogger VM. Soosai Antony said...
ஐயா வணக்கம்,
மீண்டும் இந்த புதிரை தொடங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி.
திருமணம் நடைபெறும். ஏனெனில் 7க்குரிய குருவின் பார்வை 7ல் விழுகிறது. லக்னாதிபதி புதனின் பார்வையும் 7ல் விழுகிறது.
சனியின் பார்வை விழுந்தாலும். குருபார்க்க கோடி நன்மையல்லவா?
சுக்கிரன் 12ல் மறைந்து செவ்வாயுடன் இருப்பதால் கணவரை பிரியும் நிலை உருவாகலாம். நவாம்சத்தில் லக்னத்தில் சனீஸ்வரர், இதுவும் ஒரு காரணம். 5க்குரியவனும், களத்திர காரகனுமான சுக்கிரன் மீது சனியின் பார்வையுள்ளது. குழந்தை பாக்கியம் குறைவுதான். குருவின் திசையில் திருமணம் நடந்திருக்கும்.
வணக்கம் ஐயா
வ.ம.சூ. அந்தோணி//////
---------------------------
15
/////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our Quiz No.101:
1. She got married before her age of 30. (Born on 7th June 1968 at 8:00am)
Reasons:
1. Seventh house and its authority is not affected as well as Jupiter is aspecting its
own house as 5th aspect.
2. Logna lord also is in lagna.
3. Second house and its authority is not affected.
4. In Jupiter Dasa marriage had happened.
With kind regards,
Ravi-avn//////
--------------------------------
16
//////Blogger lrk said...
ஐயா வணக்கம்
லக்கினாதிபதி ஆட்சி யில் பலமாக உள்ளார்
2ஆம் அதிபதி கோணத்தில்,
7ஆம் அதிபதி குரு பகவான் தன் வீட்டை பார்க்கிறார் ,
அம்சத்திலும் 7 ஆம் இடத்துக்கு குரு பார்வை உள்ளது
ஆகையால் திருமணம் உண்டு
சுக்கிரன் மறைவு,
8,9 க்கு அதிபதி சனி அம்சத்தில் லக்கினத்தில் ,
அம்சத்தில் 7ல் செவ்வாய், சனி பகவானின் பார்வை
ஆகையால் தாமத திருமணம்.
நன்றி ஐயா
கண்ணன்//////
--------------------------------------
17
/////Blogger KJ said...
Sir,
Native could get late marriage. But Marriage life s good.
Lagnathypathy aspects seventh house and Seventh house owner aspects seventh house.//////
------------------------------------------------
18
////Blogger selvaspk said...
அம்மணிக்கு திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
-Yes, she is married.
அதாவது திருமண யோகம் உள்ள ஜாதகமா? அல்லது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகமா?
- lagna lord, 7th lord, 4th house (hemmed between benefics), 12 the house lord in 12th house indicates marriage.
- chevvai dosam with Saturn aspecting combusted Mars with Venus indicates married to an older spouse.
- Married during Jupiter-Mercury dasa at age of 25-27////
----------------------------------------------------
19
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
அம்மணிக்கு திருமணம் நடைபெற்றது.
ஒரு பெண் குழந்தையும் உண்டு.
1. 2ம் வீட்டு அதிபதி சந்திரன் 5 ம் வீட்டில் திரிகோணத்தில் -2ம் வீடு பலமாக உள்ளது
2. 7ம் வீட்டு அதிபதி 3 ல் அமர்ந்து 5 ம் பார்வையால் 7 ம்வீட்டை பார்க்கிறார்,மேலும்
7ம் பார்வையால் 9ம் வீடு பாக்கியஸ்தானத்தைப் பார்க்கிறார்.
3. 6ம் வீட்டு அதிபதி 12ல் அமர்ந்து 4 ம் பார்வையால் 7ம் வீட்டு அதிபதியையும்,8ம் பார்வையால் 7ம் வீட்டையும் பார்ப்பதால் தடங்கல் எற்படும்.
ஆகாயத்தில் பறந்து கொண்டு இருக்கும் பொழுது இதை எழுதுகிறேன்.
மன்னிக்கவும் தவறு இருந்தால்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்////////
---------------------------------------------
20
/////Blogger bala said...
Vanakkam iyya,
Puthir poti meendum thodangiyatharku mikka magizhchi...
nadigar Ajith vasanathil la sollanum endral "vaathiyar is back" :-)
Puthirukaana vidai..
Mithuna lagna jaathagi.. laganathipathi budhan lagnathil plus villan maandi
Thirumanathirku 7 aam idam.... 7&10 athipathi guru bhagavan...
Guru bhagavan 3aam idathil amarnthu (7 aam veetirku 9il) 7 aam idathaiyum, bhagya sthanathayum, laaba sthanathayum paarkirar
Guru bhagavan mel 6aam athipathi sevai yin paarvaiyum ullathu... 7 aam idathirku sevai+sani+guru+budhan paarvai ullathu...
Sani bhagavan intha jathagathirku 8&9aam athipathi aavar..
Thirumana vayathil athavathu ammaniku 22 vayathil irundhu guru dasa aarambam... Guru dasa vil thirumanam nadai petru irukum... guru dasa sani or budhan buthiyil nadai petru irukum..
Nandri,
Bala///////
-------------------------------------
2`1
///////Blogger rukmani said...
Marriage is sure, bcoz, Guru is the seventh house lord and again lord for marriage for girls, so his 5th aspect on 7th house makes it flourish.//////
------------------------------------------------
22
////////Blogger seenivasan said...
Dear sir,
Yes she is married and the reasons are as below
1.7th lord Jupiter is in 9th place from 7th place which is the house of husband.
2.Lagna lord bhudan is in its own place and keeping a view on 7th place
3.Second place lord moon is sitting in 5 th place & this may be love marriage.
4.12 th place lord also sitting in 12 th place and gives the benefit of ayna syna benefit.//////
-----------------------------------------
23
//////Blogger Ravichandran said...
Ayya,
Marriage would have happened and married life also will be good The following are reasons:
a. Guru is looking 7th house by 5th look
b. Neechbanga Raja yoga is there in this horoscope. 12th house owner(Sukran) is sitting in 12th house along with 6th house owner(Chevvai) and 3rd house owner(Suriyan)
c. Suriyan is not combusting Sukran. Because Sukran is traversing 19th degree and Suriyan is traversing in 22nd degree.
Your Student,
Trichy Ravi//////
--------------------------------------------
24
//////Blogger vanikumaran said...
தாமதமாக திருமணம் நடைபெறும்
பாக்யாதிபதி சனி வர்கோத்தமம்
குடும்பாதிபதி சந்திரன் வர்கோத்தமம்
எழாம் அதிபதி குரு எழாம் வீட்டை தன் பார்வையில் வைத்து உள்ளார் நவாம்சத்திலும் குரு எழாம் வீட்டை தன் பார்வையில் வைத்து உள்ளார்//////
------------------------------------------
25
///////Blogger murali krishna g said...
அய்யா ,
மிதுன லக்னம் !. லக்னத்தில் புதன் ஆட்சி பெற்று 7-ம் இடத்தை பார்வை இடுகிறார் !. 3-ல் குரு இருந்து 5-ம் பார்வை ஆக 7-ம் இடத்தை பார்கிறார் !. அதனால் நிச்சயம் திருமணம் உண்டு !. ஆனால் , சனியும் செவ்வாயும் 10-ம் பார்வை ஆகவும், 8-ம் பார்வை ஆகவும் 7-ம் இடத்தை பார்ப்பதால் காதல் அல்லது கலப்பு திருமணம் தாமதமாக நடந்திருக்கும். அப்படி நடந்து இருந்தாலும் அந்த திருமண வாழ்க்கையில் சந்தோஷம் நீடிக்காது. காரணம் குரு சனி செவ்வாய் பார்வை 7-ம் இடத்துக்கு கிடைபதாலும் சுக்ரன் சஷ்டஷ்டகத்தில் இருபதாலும் !.//////
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.1.16

Astrology: Quiz 101: அடித்துத் துவைத்து அலசிப் பிழிவோம் வாருங்கள்!

Astrology: Quiz 101: அடித்துத் துவைத்து அலசிப் பிழிவோம் வாருங்கள்!

ஜோதிடப் புதிர் 101

பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஜோதிடப் புதிர் பகுதியைத் துவங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வாரம் ஒரு புதிர் வெளியாகும். அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். ஜாதகத்தை நன்றாகப் பாருங்கள்:

கேள்வி இதுதான்: அம்மணிக்கு திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? அதாவது திருமண யோகம் உள்ள ஜாதகமா? அல்லது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகமா?

உங்கள் பதிலை சும்மா, காசை சுண்டிப்போட்டுப் பார்த்து எழுதாமல், காரணங்களுடன் எழுதவும்



அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.12.15

Astrology: ஜோதிடம்: உரல் என்றால் தெரியும்; பரல் என்றால் என்ன?


Astrology உரல் என்றால் தெரியும்; பரல் என்றால் என்ன?

இது இன்றைக்கு 2வது பதிவு. முதல் பதிவு சீனியர் மாணவர்களுக்கு. இந்தப் பதிவு ஜூனியர் மாணவர்களுக்கு. அதாவது புது முகங்களுக்கு. ஆகவே குழப்பம் இல்லாமல் அவரவருக்கு உரிய பதிவுகளை அவரவர் படியுங்கள்.
=====================================================
கண்மணிகளில் பலர் அஷ்டகவர்க்கத்தை எப்படிக் கணக்கிடுவது? சுயவர்க்கத்தை எப்படிக் கணக்கிடுவது? என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் நடத்தி முடிக்கப்பெற்ற பாடம். புதிது புதிதாக வருபவர்களுக்கெல்லாம் மறுபடி மறுபடி அதே பாடத்தைச் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அதைவிடச் சிரமம் சிலர் பரல் என்றால் என்ன என்று கேட்டு மின்னஞ்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் முகமாக அஷ்டகவர்க்கத்தில் உள்ள அடிப்படிப் பாடங்கள் சிலவற்றை மீண்டும் வலையில் ஏற்ற உள்ளேன். இன்று முதல் பாடம்!

அஷ்டவர்க்கம் என்பது ஜோதிடத்தில் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம்! தமிழ் நாட்டு ஜோதிடர்கள் பலருக்கு அந்த பிரசாதத்தைப் பற்றித் தெரியாது.

அடியவன் ஜோதிடத்தை ஆங்கில வழியில் படித்ததால், எனக்கு பல வடமொழி ஜோதிட நூல்களின் ஆங்கிலப் பதிப்புக்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தமிழில் இருக்கும் ஜோதிட நூல்களெல்லாம் (நான் படித்த காலத்தில்) செய்யுள் வடிவில் இருந்ததால், படித்து உணர மிகவும் சிரமப்பட்டேன். அதனால் வாங்கிய நூல்களை எல்லாம் மூட்டை கட்டிப் பரண் மேல் வைத்துவிட்டு, ஆங்கிலத்திற்குத் தாவினேன்.

குமாரசுவாமியம் என்னும் அற்புதமான தமிழ் ஜோதிட நூலில் இருந்து உங்கள் பார்வைக்காக, ஒரு செய்யுளைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.

"அரிலவனிரவிமதிக் கருணனிரசதஞ்சே
    யமரர்குசையவர் கட்சுவலம்வலமாக
விருபுறமுமொவ்வொரின்னே ரிதிற்சனிசேய்க்கிடமற்
    றெய்துதன் மற்றவர்க் காட்சியில்லனுமற்ரிலமா
மொருவிடைபெண்கயல் கலைநண்டோர்துலைமுன்போனே
    ருச்சமிவைக்கேழவம் பாம்புக்குறவாடரியாந்
தெரிவையிலானலவனுச்சஞ் சிகிக்கிவைநேர்மிகுத்
    தீதிலவர்பல்கைநீசந் தீர்க்குமின்மித்திரமே

ஏதாவது புரிகிறதா?

சூரியன் முதலான ஒன்பது கிரகங்களுக்குரிய ஆட்சி,  உச்ச, நீச, பகை மற்றும் நட்பு வீடுகளைச் சொல்லும் பாடல் இது.அகத்தியர் காலத் தமிழ் இது. அப்படித்தான் இருக்கும். முருகன் அருளினால் அகத்தியர் அருளிய ஜோதிட நூல் குமாரசுவாமீயம். அதில் இல்லாத ஜோதிட விஷயங்களே இல்லை. அதன் பொருளை அறிந்து கொள்வதற்குள் நம் ஆயுள் முடிந்துவிடும். நமது தமிழ் அறிவு அவ்வளவுதான்!

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளிலும், எந்தந்த கிரகங்கள் ஆட்சி வலிமையுடன் இருக்கும், எந்தந்த கிரகங்கள் உச்சமடையும் அல்லது நீசமடையும், பகை அல்லது நட்புடன் விளங்கும் என்பதைச் சொல்லும் பாடல் இது. மொத்தம் 60 மேட்டர்கள். ஒரே பாடலில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் அகத்தியர்.

“அவருக்கென்ன சொல்லிவிட்டார்
அகப்பட்டது நாமல்லவா!”

என்று கவியரசர் வரிகளைச் சொல்லிப் புலம்பாமல், நாம் வேறு வழிகளில் செல்ல வேண்டியதுதான். அதாவது நமக்கு வசப்படும் மொழியில் படிக்க வேண்டியதுதான்.

மணிகண்ட கேரள ஜோதிடம் என்னும் நூலில் இருந்து மாதிரிக்காக ஒரு பாடலைக் கொடுத்துள்ளேன். இதில் ஒரு வசதி தலைப்பை அத்தியாயத்தின் துவக்கதில் கொடுத்திருப்பார்கள். ஆகவே பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

தலைப்பு தனக் காண்டம். (Chapter on wealth)

ஆட்சியாய் நின்ற பேர்க்குத் தாட்சியுங்கொஞ்சமுண்டு
  தாட்சியாய் நின்றபேர்க்கிங் காட்சியுங்கொஞ்சமுண்டு
ஆட்சியைமகிழ்ந்துபார்த்துத் தாட்சியைத்தள்ளவேண்டாம்
  கேட்சியாயூடுதாக்கிச் சரிப்படச்சொல்வாய்மாதே

பொருள்: தனம், பாக்கியம், லாப ஸ்தான அதிபதிகள் (That is the lords of the 2nd, 9th and 11th) சுபக்கிரகங்களுடன் சேர்ந்திருக்க (In association with benefic planets), லக்கினாதிபதியும் ஆட்சிபலம் பெற்றிருக்க
(Lagna lord in his own sign) அவற்றின் மேல் பாவக்கிரகங்களின் பார்வை இல்லாமல் இருக்க, (without the aspect of melefic planets)  ஜாதகனிடம் செல்வம் இருக்கும் அல்லது செல்வத்தைச் சேர்ப்பான். இதே அமைப்பில் லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தால் (Lagna lord in exaltation) ஜாதகனிடம் அமோகமான அளவு (un imaginable) செல்வம் சேரும்!

தமிழில் உரை எழுதியவர்களும் கடினமான தமிழில் எழுதியுள்ளார்கள். படிப்பவனுக்குக் குழ்ப்பம்தான் மிஞ்சி நிற்கும். எளிய நடையில் யாரும் எழுதவில்லை. அதனால்தான் நான் எழுதும்பாடங்களை எளிமைப்படுத்தி என்னுடைய நடையில் எழுதுகிறேன். நான் பட்ட சிரமங்களை யாரும் படக்கூடாது என்பதுதான் என்னுடைய முதல் நோக்கம்!
_________________________________________________________
அஷ்டகவர்க்கம்.

அஷ்டக் என்றால் வடமொழியில் எட்டு என்று பொருள். வர்க்கம் என்றால் அட்டவனை என்று பொருள். அஷ்டகவர்க்கம் என்றல் எட்டு அட்டவனைகள் என்று பொருள்.

ஒரு ஜாதகத்திற்குக் கிரகங்களால் கிடைக்கும் எட்டுவிதமான சக்திகள் (energy) அல்லது பலத்தை (strength)  எட்டுவிதமான அட்டவனைகள் (charts) மூலம் அறிந்து கொள்வதற்கு உதவுவதே அஷ்டகவர்க்கம் எனப்படும்.

அது என்ன எட்டு அட்டவனைகள். லக்கினம் + ஏழு கிரகங்கள் ஆகியவற்றிற்கான அட்டவனைகள். அவைகள்தான் சுயவர்க்க அட்டவனைகள் (Own chart) எனப்படும். அவற்றைக் கூட்டினால் வருவது சர்வாஷ்டகவர்க்க அட்டவனை (combined chart) எனப்படும்.

கிரகங்கள் ஒன்பது அல்லவா? ஏன் இங்கே எழு மட்டும் கணக்கிடப்படுகிறது?

ராகு & கேது இருவருக்கும் சொந்த வீடு கிடையாது. ஆகவே அவர்கள் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளப் படவில்லை!

ஒவ்வொரு கிரகமும், லக்கினத்துடன் சேர்த்து ஒன்றை மற்றொன்று ஈர்க்கிறது. உங்கள் மொழியில் சொன்னால் வசியப்படுத்துகிறது. அது நல்ல வசியமாகவும் இருக்கலாம். அல்லது தீமையான வசியமாகவும் இருக்கலாம். அதைக் கணக்கிட்டு ஒவ்வொருகிரகத்திற்கும் பார்ப்பதுதான் சுய வர்க்கம். அவற்றை அதாவது எட்டு அட்டவனைகளையும் கூட்டி மொத்தமாகக் கணக்கிடுவதுதான் சர்வ அஷ்டக வர்க்கம் ஆகும்!

அதாவது நீங்கள் மொத்தம் 65 அட்டவனைகளைத் தயார் செய்ய வேண்டியதிருக்கும். அதைச்  சொல்லித் தரவுள்ளேன்.

கணினியில் தற்போது வசதி உள்ளது. அது ஒரே விநாடியில் அவை அனைத்தையும் கணக்கிட்டுக் கொடுத்துவிடும்.
கணினி வரும் முன்பு அதை ஜோதிடர்களும், ஜோதிடம் அறிந்தவர்களும் தன்னிச்சையாகத்தான் அவற்றைத் தயார் செய்தார்கள். நானும் 1997ற்கு முன்பு அப்படித்தான் செய்து பயிற்சி மேற்கொண்டேன்.

அதை எப்படிக் கணக்கிடுவது?

பாடம் மிகவும் நீளமானது. நாளை முதல் அதைப் பார்ப்போம்.

உங்களின் பொறுமை கருதியும், பதிவின் நீளம் கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

(பாடம் தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

மேலதிகத் தகவல்:
Sage Parashara has advocated to consider eight source of energy (7 planets & 1 Lagna) in Ashtakavarga.  In this system, each and every planet including Lagna influences one and another in particular way or other to their natal position.  In any horoscope ascendant is taken as the epitom of promises therein. So when Lagna is got influenced obviously other houses, which are in existence only due to Lagna, also get influenced.  When such influence is to be shown in charts, eight charts are needed to prepare which are known Ashtakvarga.
=========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.11.15

இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?


இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?

என்ன வாத்தியார் குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள் என்று சொல்லாமல், கீழே உள்ள பத்திரிக்கைச் செய்தியை முதலில் படியுங்கள். கச்சேரியைப் பிறகு வைத்துக்கொள்வோம்:


படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். உங்களுக்கு படிப்பதற்கு வசதியாக இருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------
இந்தப் பத்திரிக்கை க்ளிப்பிங்கை சங்கரன் கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் நமது வகுப்பறை மாணவர் திருவாளர் கணபதி நடராஜன் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதை உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்.

தினமலர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் - 26-11-2015 அன்று இந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது. புதிய நாஸ்டர்டாமஸ் என்று பத்திரிக்கைக்காரர்களே குறிப்பிட்டு உள்ளார்கள்.

என்ன சொல்கிறார் இந்தப் புதியவர்? நடக்க உள்ளதாகக் கணித்து இரண்டு முக்கியமான செய்திகளைச் சொல்கிறார்:

1. 15-5-2016 அன்று கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான போர்ட்டோரீகோவில் அதிகாலை 2.20 மணிக்கு 5.6 மைல் அளவுள்ள  விண்கல் பூமி மீது வந்து மோதும். அதனால் நம் பூமி முழுவதும் அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படும். 120 கோடி பேர்கள் பலியாவார்கள்.

2. 16-6-2016 அன்று ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் சேர்ந்து 3ம் உலகப் போரைத் தொடங்கும். 25-10-2016 அன்று அக்கூட்டணி உலகப் போரில் வெற்றி பெறும்.
--------------------------------------
இது சம்பந்தமாக இணையத்தைத் தோண்டிய போது நிறைய செய்திகள் கிடைத்தன. இரண்டு மூன்று செய்திகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.

அந்த புதிய நாஸ்ட்ரடாமஸ் இவர்தான். நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்
Pastor Ricardo Salazar in a prophecy video
--------------------------------------------------------------------------


ரஷ்யா மற்றும் சீனா நாட்டு அதிபர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்
The pastor claims Russia and China will team up against a weaker USA


----------------------------------------------------------------------------------------------------------
அந்தப் புதிய நாஸ்ட்ரடாமஸ் கூறிய ஏதாவது இதுவரை நடந்திருக்கிறதா என்ற விவரம் எதுவும் இல்லை. இப்போது அவர் கூறியிருப்பது நடக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

-------------------------------------------------------------
எனது கருத்து:

isis தீவிரவாதிகளின் சமீபத்திய அட்டூழியங்களை, குறிப்பாக பாரீஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய கொடூரம் ஆகியவற்றை பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்வார்கள் என்று உள் மனது சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்! நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்.

அத்துடன் ஒரிஜினல் நாஸ்ட்ரடாமஸ் 21ம் ஆண்டில் இந்தியா சூப்பர் பவர் ஆகும் என்று எழுதிவைத்திருக்கிறார். அது உண்மையாகாமல் போய்விடுமா என்ன? ஆகவே நம்பிக்கையோடும் துணிச்சலோடும் இருங்கள்.

நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!

அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.11.15

Astrology: நீங்களும் உங்கள் நட்சத்திரமும்!


Astrology: நீங்களும் உங்கள் நட்சத்திரமும்!

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

நமது மாணவக் கண்மணிகளின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத்தலங்களைப் பற்றிக் கீழே கொடுத்துள்ளேன். அந்த ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுக வரலாறுகளைக் கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

அவற்றையெல்லாம் விட முக்கியமான செய்தி - அந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்கின்றனவாம்.

அதற்கு ஆதாரம் கேட்டு மண்டையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களை நம்பிக்கையின் அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டியதுதான்.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்  கர்மவினையே -  லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக்கிரகங்கள் அமர்ந்து -  பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.

நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.

உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாகக் குறையும்.

செலவோடு செலவாக பணத்தைச் செலவழித்துக் கொண்டு, ஒரு முறை உங்களுக்கு உரிய ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------
நட்சத்திரங்களுக்கான ஆலயங்களும், அவைகள் அமைந்த இடங்களும்:

1.அஸ்வினி.
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

2.பரணி.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.

3.கார்த்திகை.
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

4.ரோஹிணி.
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

5.மிருக சீரிஷம்.
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

6.திருவாதிரை.
அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

7.புனர்பூசம்.
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

8.பூசம்.
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

9.ஆயில்யம்.
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

10.மகம்.
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

11.பூரம்.
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

12.உத்திரம்.
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

13.ஹஸ்தம்.
அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

14.சித்திரை.
அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

15.சுவாதி.
அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

16.விசாகம்.
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்.
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

17.அனுஷம்.
அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

18.கேட்டை.
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

19.மூலம்.
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து 22 கி.மீ. பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

20.பூராடம்.
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

21.உத்திராடம்.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

22.திருவோணம்.
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்.
இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்

23.அவிட்டம்.
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

24.சதயம்.
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

25.பூரட்டாதி.
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

26.உத்திரட்டாதி.
அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

27.ரேவதி.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்ற ஊரில் இக்கோயில் உள்ளது.
---------------------------------------------------------------------------------------
என்ன சரிதானா?
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!