மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.11.15

இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?


இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?

என்ன வாத்தியார் குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள் என்று சொல்லாமல், கீழே உள்ள பத்திரிக்கைச் செய்தியை முதலில் படியுங்கள். கச்சேரியைப் பிறகு வைத்துக்கொள்வோம்:


படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். உங்களுக்கு படிப்பதற்கு வசதியாக இருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------
இந்தப் பத்திரிக்கை க்ளிப்பிங்கை சங்கரன் கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் நமது வகுப்பறை மாணவர் திருவாளர் கணபதி நடராஜன் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதை உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்.

தினமலர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் - 26-11-2015 அன்று இந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது. புதிய நாஸ்டர்டாமஸ் என்று பத்திரிக்கைக்காரர்களே குறிப்பிட்டு உள்ளார்கள்.

என்ன சொல்கிறார் இந்தப் புதியவர்? நடக்க உள்ளதாகக் கணித்து இரண்டு முக்கியமான செய்திகளைச் சொல்கிறார்:

1. 15-5-2016 அன்று கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான போர்ட்டோரீகோவில் அதிகாலை 2.20 மணிக்கு 5.6 மைல் அளவுள்ள  விண்கல் பூமி மீது வந்து மோதும். அதனால் நம் பூமி முழுவதும் அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படும். 120 கோடி பேர்கள் பலியாவார்கள்.

2. 16-6-2016 அன்று ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் சேர்ந்து 3ம் உலகப் போரைத் தொடங்கும். 25-10-2016 அன்று அக்கூட்டணி உலகப் போரில் வெற்றி பெறும்.
--------------------------------------
இது சம்பந்தமாக இணையத்தைத் தோண்டிய போது நிறைய செய்திகள் கிடைத்தன. இரண்டு மூன்று செய்திகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.

அந்த புதிய நாஸ்ட்ரடாமஸ் இவர்தான். நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்
Pastor Ricardo Salazar in a prophecy video
--------------------------------------------------------------------------


ரஷ்யா மற்றும் சீனா நாட்டு அதிபர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்
The pastor claims Russia and China will team up against a weaker USA


----------------------------------------------------------------------------------------------------------
அந்தப் புதிய நாஸ்ட்ரடாமஸ் கூறிய ஏதாவது இதுவரை நடந்திருக்கிறதா என்ற விவரம் எதுவும் இல்லை. இப்போது அவர் கூறியிருப்பது நடக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

-------------------------------------------------------------
எனது கருத்து:

isis தீவிரவாதிகளின் சமீபத்திய அட்டூழியங்களை, குறிப்பாக பாரீஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய கொடூரம் ஆகியவற்றை பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்வார்கள் என்று உள் மனது சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்! நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்.

அத்துடன் ஒரிஜினல் நாஸ்ட்ரடாமஸ் 21ம் ஆண்டில் இந்தியா சூப்பர் பவர் ஆகும் என்று எழுதிவைத்திருக்கிறார். அது உண்மையாகாமல் போய்விடுமா என்ன? ஆகவே நம்பிக்கையோடும் துணிச்சலோடும் இருங்கள்.

நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!

அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
ஒரு தொலைக்காட்சி செய்தி தொகுப்பில், சமீபத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான செய்தி: “ விண்ணிலிருந்து மிக வேகமாக ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது, அந்த விண்கலம் வரும் 23-11-2015 அன்று பூமியைத்தாக்கும் வாய்ப்புள்ளது என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது” - அது பற்றிய செய்தி எதுவும் வரவில்லை.
எனினும் இது போன்ற சில மாற்றங்களும்,தோற்றங்களும் அண்டவெளீயில் நடந்து கொண்டுதான் உள்ளது என சில விண்வெளி ஆய்வாளர்களும் தெரிவித்து உள்ளனர்.
இது போன்ற செய்திகள் மக்களை குழப்புவதாகும் அல்லது நடப்பில் இருக்கும் மழை வெள்ளம், புயல் பாதிப்பிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, அரசியல் வல்லுநர்களின் திறமையாகவும் இருக்கலாம்.
அன்புடன்,
-பொன்னுசாமி.

வேப்பிலை said...

நிச்சயமாக இது நடக்க வேண்டும்.
நாசா நலமுடன் வாழ்க

இதில் இந்தியாவின் பாதிப்பு
இப்படி இருக்குமா தெரியாது

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
ஜோதிடம் சம்பந்த பட்ட விஷயம் என்பதாலே தங்களுக்கு அனுபினேன்
வெளிட்டமைக்கு மிக்க நன்றி...மேலும் நமது நாடு நாச்டர்டோமஸ் கருத்துப்படி வல்லரசாக போவது உறுதி. !!புழைச்சு கிடந்த பாப்போம் ..!!!

Mrs Anpalagan N said...

ஐயா

"அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்." ----> இதுவே நமக்கு நல்லது. பேரழிவுகள் பல நம் கண்முன்னே கண்டு விட்டோம். அதையெல்லாம் இன்றிருப்போர் யாரும் எதிர்வு கூறவில்லையே.

பின்வரும் தளத்தில் இருந்து தான் அந்த செய்தி பரவியிருக்க வேண்டும்.

http://www.globalhouse.jp/fulfilled-prophetic-dates-ricardo-salazar/
Mensajes »Fulfilled prophetic dates | Ricardo Salazar

Mrs Anpalagan N said...

I guess today's facts of life post is a brilliant one.
I think Einstein's prediction may happen.
In that case, the earth must have come to it's original better form.
I want to live that long to see, feel and live that life... (who knows, it may not take that long for it to happen; for the way everything is going on in this earth!!!)

Joshva P.P said...

பீதிய கெளப்ரிங்களே அய்யா.........
Joshva

kmr.krishnan said...

இது போன்ற எதிர்மறையான அச்சமூட்டுதல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. முன்பு ஒருமுறை அஷ்டகிரஹ சேர்க்கை என்று அமர்களம் செய்தார்கள்.'என்னதான் ந்டக்கும் நடக்கட்டுமே'என்று ஜாலியாகப் பாடிக்கொண்டு
நம் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

உலகப்போர் இல்லாவிட்டாலும், பெரிய அளவில் போரால் சேதம் ஏறபடும் என்பதை உலகநடப்பைக் கூர்ந்து பார்த்தாலே தெரிகிறது.

lrk said...

ஐயா வணக்கம்

'யாமெருக்க பயமேன் '

என்ற திருமுருகன் அருள்வாக்கு ,
நல்லதே நடக்கும்

கண்ணன்

SELVARAJ said...

நீங்கள் ஏழு மாதத்திற்கு போய்விட்டீர்கள். இதே போன்று மழை இன்னும் ஏழு நாட்கள் அடித்தாலே போதும் சென்னை தாங்காது சுவாமி.

வரதராஜன் said...

குருவே வணக்கம்.
புதிய புதிய சாமியார்கள் தோன்றி, சில காலத்தில் தாங்களே கடவுள் என்பது போல் என்னவெல்லாமோ செய்து கடைசியில் போலீசிடம் மாட்டிக் கொள்கிறார்கள. இதுபற்றிக் கேட்கிறோம்/படிக்கிறோம். அதே போல ' நாசா" செய்திகளாய் வருவது பலதும் நாசாவால் மறுக்தப் பட்டிருக்கின்றன( உலகம் அழியும் என்பது வரை).
அது போன்ற ஒரு செய்தியாயிருக்கலாமல்லவா இதுவும்!?

Subbiah Veerappan said...

//////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
ஒரு தொலைக்காட்சி செய்தி தொகுப்பில், சமீபத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான செய்தி: “ விண்ணிலிருந்து மிக வேகமாக ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது, அந்த விண்கலம் வரும் 23-11-2015 அன்று பூமியைத்தாக்கும் வாய்ப்புள்ளது என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது” - அது பற்றிய செய்தி எதுவும் வரவில்லை.
எனினும் இது போன்ற சில மாற்றங்களும்,தோற்றங்களும் அண்டவெளீயில் நடந்து கொண்டுதான் உள்ளது என சில விண்வெளி ஆய்வாளர்களும் தெரிவித்து உள்ளனர்.
இது போன்ற செய்திகள் மக்களை குழப்புவதாகும் அல்லது நடப்பில் இருக்கும் மழை வெள்ளம், புயல் பாதிப்பிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, அரசியல் வல்லுநர்களின் திறமையாகவும் இருக்கலாம்.
அன்புடன்,
-பொன்னுசாமி./////

செய்திகள் குழப்புவதாக இருந்தாலும், நாம் குழம்பாமல் இருந்தால் போதும் பொன்னுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
நிச்சயமாக இது நடக்க வேண்டும்.
நாசா நலமுடன் வாழ்க
இதில் இந்தியாவின் பாதிப்பு
இப்படி இருக்குமா தெரியாது/////

நடக்க வேண்டுமா? உங்கள் ஆசை நிறைவேறட்டும் வேப்பிலையாரே! நம் நாட்டிற்கு ஒன்றும் பாதிப்பு இல்லாமல் நாம் வணங்கும் பழநி ஆண்டவர் பார்த்துக்கொண்டால் சரிதான்!

Subbiah Veerappan said...


//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
ஜோதிடம் சம்பந்த பட்ட விஷயம் என்பதாலே தங்களுக்கு அனுப்பினேன்
வெளிட்டமைக்கு மிக்க நன்றி...மேலும் நமது நாடு நாச்டர்டோமஸ் கருத்துப்படி வல்லரசாக போவது உறுதி. !!புழைச்சு கிடந்த பாப்போம் ..!!!//////

எதற்கு சந்தேகம்? பொறுமையோடு இருங்கள் வல்லரசான பிறகே மேலே போவோம்!

Subbiah Veerappan said...

/////Blogger Mrs Anpalagan N said...
ஐயா
"அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்." ----> இதுவே நமக்கு நல்லது. பேரழிவுகள் பல நம் கண்முன்னே கண்டு விட்டோம். அதையெல்லாம் இன்றிருப்போர் யாரும் எதிர்வு கூறவில்லையே.
பின்வரும் தளத்தில் இருந்து தான் அந்த செய்தி பரவியிருக்க வேண்டும்.
http://www.globalhouse.jp/fulfilled-prophetic-dates-ricardo-salazar/
Mensajes »Fulfilled prophetic dates | Ricardo Salazar//////

இருக்கலாம். தகவலுக்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger Mrs Anpalagan N said...
I guess today's facts of life post is a brilliant one.
I think Einstein's prediction may happen.
In that case, the earth must have come to it's original better form.
I want to live that long to see, feel and live that life... (who knows, it may not take that long for it to happen; for the way everything is going on in this earth!!!)/////

மனதைத் தொட்டதாலேயே, அதைப் பதிவிட்டேன் சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger Joshva P.P said...
பீதிய கெளப்ரிங்களே அய்யா.........
Joshva////

எதற்காக பீதி?

”என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!”

என்ற கவியரசரின் பாடலை ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிடும் முன்பு படித்துக்கொண்டே வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்!

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
இது போன்ற எதிர்மறையான அச்சமூட்டுதல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. முன்பு ஒருமுறை அஷ்டகிரஹ சேர்க்கை என்று அமர்களம் செய்தார்கள்.'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'என்று ஜாலியாகப் பாடிக்கொண்டு நம் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.உலகப்போர் இல்லாவிட்டாலும், பெரிய அளவில் போரால் சேதம் ஏறபடும் என்பதை உலகநடப்பைக் கூர்ந்து பார்த்தாலே தெரிகிறது./////

உண்மைதான் உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
'யாமெருக்க பயமேன் '
என்ற திருமுருகன் அருள்வாக்கு ,
கண்ணன்/////

ஆமாம். கவலை வேண்டாம்!
நல்லதே நடக்கும்!

Subbiah Veerappan said...

////Blogger SELVARAJ said...
நீங்கள் ஏழு மாதத்திற்கு போய்விட்டீர்கள். இதே போன்று மழை இன்னும் ஏழு நாட்கள் அடித்தாலே போதும் சென்னை தாங்காது சுவாமி./////

தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. என்ன செய்வது? இறைவனைப் பிரார்த்தித்துக்
கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
குருவே வணக்கம்.
புதிய புதிய சாமியார்கள் தோன்றி, சில காலத்தில் தாங்களே கடவுள் என்பது போல் என்னவெல்லாமோ செய்து கடைசியில் போலீசிடம் மாட்டிக் கொள்கிறார்கள. இதுபற்றிக் கேட்கிறோம்/படிக்கிறோம். அதே போல ' நாசா" செய்திகளாய் வருவது பலதும் நாசாவால் மறுக்தப் பட்டிருக்கின்றன( உலகம் அழியும் என்பது வரை).அது போன்ற ஒரு செய்தியாயிருக்கலாமல்லவா இதுவும்!?//////

இருந்தால் நல்லது. நன்றி வரதராஜன்!

Remanthi said...

நடப்பது நடக்கவே செய்யும்... நடக்கட்டும், இன்று இல்லை என்றாலும் என்றோ ஒரு நாள் போகதான் வேண்டும், கஷ்டப்படாமல் எளிமையாக _____ அமைய இறைவன் சிவனைப் பற்றிக்கொள்வோம்.