மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.11.15

உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்களுக்கு என்ன பெயர்?


உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம்  எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்களுக்கு என்ன பெயர்?

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது
ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார்.
ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து
ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால்
நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!
=======================================

2
இளைஞர்களின் மனதில் எதை விதைக்க வேண்டும்?

மேடைப்பேச்சாளர் ராஜா அற்புதமாக அதைச் சொல்லியுள்ளார். காணொளியில் உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

=====================================
இரண்டுமே மனவளம் சம்பந்தப்பட்டது. இந்த இரண்டில் எது மிகவும்
சிறப்பாக உள்ளது.? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

Chandrasekaran Suryanarayana said...

1. ஞானிகளை விழுந்து ஞானத்தை பெரும் வழியே சிறந்தது.
குரு இல்லாமல் ஒருவன் ஞானத்தை அடையமுடியாது ...
இதன் பலன் மீண்டும் பிறவாமல் இருக்க வழி கிடைக்கும்.

siva kumar said...

உள்ளேன் ஐயா

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
மாமன்னர் அசோக சக்ரவர்த்தி கூறிய விளக்கம் அற்புதமானது.
முதல் நிகழ்வே மிகவும் அருமை.
அன்புடன்,
-பொன்னுசாமி.
வாத்தியார் அய்யா மற்றும் வகுப்பறை மாணவக்கண்மணிகளுக்கும்,தோழர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!.

வேப்பிலை said...

எதை யாரிடம் சொல்ல கூடாது
எதை எப்படி சொல்ல வேண்டும்

என இரண்டும்
எப்போதும் போல்

சிகரத்தின் உச்சியை தொடும்
சிறப்பானவை

வாழ்த்துக்கள்
வணக்கங்கள்

Selvam Velusamy said...

வணக்கம் குரு,

எனக்கு அசோகரின் கதை பிடித்தது. தங்களுக்கும் மற்றும் தோழர்களுக்கும் இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்.

நன்றி
செல்வம்

kmr.krishnan said...

இரண்டுமே அருமை ஐயா!

தீப ஓளி ; தீப ஆவளி; தீபாவளித் திருநாள் நமஸ்காரங்கள்.
சக மாண்வர்களுக்கு வாழ்த்துக்கள்.

Rajam Anand said...

Video பார்த்து சிரித்து வயிறு நோகுது, அவ்வளவும் உண்மை.

வாத்தியாரிற்கும் இணையத்தளத்தை எட்டிபார்ப்போரிற்கும் இதயம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
நன்றி

Subbiah Veerappan said...

///////Blogger Chandrasekaran Suryanarayana said...
1. ஞானிகளை விழுந்து ஞானத்தை பெரும் வழியே சிறந்தது.
குரு இல்லாமல் ஒருவன் ஞானத்தை அடையமுடியாது ...
இதன் பலன் மீண்டும் பிறவாமல் இருக்க வழி கிடைக்கும்./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா/////

வருகைப் பதிர்விற்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
மாமன்னர் அசோக சக்ரவர்த்தி கூறிய விளக்கம் அற்புதமானது.
முதல் நிகழ்வே மிகவும் அருமை.
அன்புடன்,
-பொன்னுசாமி.
வாத்தியார் அய்யா மற்றும் வகுப்பறை மாணவக்கண்மணிகளுக்கும்,தோழர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும், தீபாவளி வாழ்த்துக்களுக்கும் நன்றி பொன்னுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

//////Blogger வேப்பிலை said...
எதை யாரிடம் சொல்ல கூடாது
எதை எப்படி சொல்ல வேண்டும்
என இரண்டும்
எப்போதும் போல்
சிகரத்தின் உச்சியை தொடும்
சிறப்பானவை
வாழ்த்துக்கள்
வணக்கங்கள்//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...


////Blogger Selvam Velusamy said...
வணக்கம் குரு
எனக்கு அசோகரின் கதை பிடித்தது. தங்களுக்கும் மற்றும் தோழர்களுக்கும் இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்.
நன்றி
செல்வம்///////

நல்லது. நன்றி!
வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
இரண்டுமே அருமை ஐயா!
தீப ஓளி ; தீப ஆவளி; தீபாவளித் திருநாள் நமஸ்காரங்கள்
சக மாண்வர்களுக்கு வாழ்த்துக்கள்.//////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger Rajam Anand said...
Video பார்த்து சிரித்து வயிறு நோகுது, அவ்வளவும் உண்மை.
வாத்தியாரிற்கும் இணையத்தளத்தை எட்டிபார்ப்போரிற்கும் இதயம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்//////.

நல்லது. நன்றி சகோதரி! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

Kamala said...

இரண்டுமே நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.