மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.11.15

அறுவடைக்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்?

அறுவடைக்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்?

மனவளக் கட்டுரை! எண்ணிக்கை வடிவில்!

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என்
நிழலே போதும்
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்து கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது . பயத்தை உதறி எறிவோம்.
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒரு வருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்.
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
27. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்து கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

இவற்றுள் எது அதி முக்கியமானது?
அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

 1. வணக்கம்.
  எனக்கு இது தான் சிறந்தது என்று புத்தியில் உறைத்தது.
  33.  ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
  இதை தான் ஔவையார், திருவள்ளூவர் ஆகியோர் செய்தனர்.  ReplyDelete
 2. ஐயா வணக்கம்.

  // பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.///

  அருமை ஐயா

  கண்ணன்.

  ReplyDelete
 3. Vanakkam iyya..

  Enaku 26 thaan migavum pidithullathu...
  inge kuduthulla Anaithu vishyangalayum pin patra muyarchi seiya vendum...

  Nandri,
  Bala

  ReplyDelete
 4. அன்புள்ளம் கொண்டுள்ள அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
  அத்தனையும் ஆழமான உண்மையெனினும் 33 வதாக குறிப்பிட்ட ஒருதுளி மை பத்து லட்சம் பேரை- அட குறைந்த பட்சம் இதைப் படிக்கும் வகுப்பறையாளர்கள் 5000ம் பேரையாவது- சிந்திக்க வைக்கிறதல்லவா?...பேச்சை விட எழுத்துக்கு வலிமை அதிகமல்லவா!!!!!!!!!!!...
  அன்புடன்.
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 5. Respected Sir,

  Happy morning...Good post...

  I like No.9 - Reason - It's matching for all common people life.

  Have a great day.

  With kind regards,
  Ravi - avn

  ReplyDelete
 6. உள்ளேன் ஐயா
  30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

  ReplyDelete
 7. வாத்தியாரே,
  எனக்கு பிடித்தவற்றை குறித்துக் கொண்டே வந்தேன், கருத்தில் பதிவதற்காக,
  முடிவில் எது அதி முக்கியமானது என்று கேட்டு விட்டீர்கள்!
  சரி, தேர்ந்த நாலைந்தில் ஒன்றை தேர்ந்தெடுத்து விட்டு, எழுத முன் ஏனையோரின்
  கருத்துகளைப் படித்தால், மிகச் சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது 24 என்றே தோன்றியது.
  காரணம் ஜோதிடம், சித்தாந்தம் என்று எதனை ஆழமாக அறிந்தாலும் அது தான் முடிந்த முடிபு.

  33 - எல்லா பேனா மையும் எல்லோரையும் சிந்திக்க வைப்பதில்லை. ( நல்ல எழுத்திற்கு சக்தி அதிகம் என்பதை எப்போதும் மறுக்க முடியாது. ஆனால் நன்றாக எழுதப்படும் மையை பொறுத்ததே.)
  1 - நல்ல விடயமே. எல்லோரும் கேட்போம், ஆனால் எல்லோராலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் கடைப்பிடிக்க முடியாத ஒன்று என்பதே உண்மை.
  2 - இதுவும் உண்மையே. இழக்க முன்னும், இழப்பின் போதும் பலராலும் இதை உணர முடிவதில்லை. (என்னையும் சேர்த்து தான்). ஆனால் காலம் அதனை தகுந்த காலத்தில் உணர்த்தும். இழப்பு என்பது அடுத்த நிகழ்விற்கான ஆரம்பம்.
  26 - இதுவும் கேட்பதற்கு நல்ல விடயம் மட்டுமே. எல்லோராலும் சாத்தியப் படாது.
  9 - இதுவும் எல்லோருக்கும் நடக்கக் கூடிய விடயமில்லை. (அப்படியானால்; ஜோதிடம் படிப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?). திருமணம் பொருத்தமாக அமையாதவர்கள் எல்லோருமே தமது வாழ்வே வீண் என்று நினைத்துவிட்டால்; அவர்களது மீதமுள்ள வாழ்வும் வீணாகியே போகும்.

  24ஐ புரிந்து கொண்டால் துன்பங்கள், குழப்பங்கள் அதிகம் இல்லை. மாறாக நமது பங்கை எவ்வாறு திறமையாக செய்யலாம் என்றே நினைக்க தோன்றும்.

  ReplyDelete
 8. 15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

  ReplyDelete
 9. 6-As its closer to time importance.

  Time in life takes priority than everything else.

  From birth to doing things until death, timing is key.

  ReplyDelete
 10. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
  வணக்கம்.
  எனக்கு இது தான் சிறந்தது என்று புத்தியில் உறைத்தது.
  33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
  இதை தான் ஔவையார், திருவள்ளூவர் ஆகியோர் செய்தனர்.////

  உண்மைதான். நன்றி நண்பரே!

  ReplyDelete
 11. /////Blogger lrk said...
  ஐயா வணக்கம்.
  // பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.///
  அருமை ஐயா
  கண்ணன்.////

  நல்லது. நன்றி கண்ணன்!

  ReplyDelete
 12. ////Blogger kmr.krishnan said...
  24 is most important.////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 13. ////Blogger bala said...
  Vanakkam iyya..
  Enaku 26 thaan migavum pidithullathu...
  inge kuduthulla Anaithu vishyangalayum pin patra muyarchi seiya vendum...
  Nandri,
  Bala/////

  நல்லது. நன்றி பாலா!

  ReplyDelete
 14. /////Blogger GOWDA PONNUSAMY said...
  அன்புள்ளம் கொண்டுள்ள அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
  அத்தனையும் ஆழமான உண்மையெனினும் 33 வதாக குறிப்பிட்ட ஒருதுளி மை பத்து லட்சம் பேரை- அட குறைந்த பட்சம் இதைப் படிக்கும் வகுப்பறையாளர்கள் 5000ம் பேரையாவது- சிந்திக்க வைக்கிறதல்லவா?...பேச்சை விட எழுத்துக்கு வலிமை அதிகமல்லவா!!!!!!!!!!!...
  அன்புடன்.
  -பொன்னுசாமி./////

  உங்களின் தெரிவை எழுதியமைக்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

  ReplyDelete
 15. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning...Good post...
  I like No.9 - Reason - It's matching for all common people life.
  Have a great day.
  With kind regards,
  Ravi - avn////

  நல்லது. நன்றி அவனாசிக்காரரே!

  ReplyDelete
 16. ////Blogger siva kumar said...
  உள்ளேன் ஐயா
  30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்./////

  நல்லது. நன்றி சிவகுமார்!

  ReplyDelete
 17. /////Blogger Mrs Anpalagan N said...
  வாத்தியாரே,
  எனக்கு பிடித்தவற்றை குறித்துக் கொண்டே வந்தேன், கருத்தில் பதிவதற்காக,
  முடிவில் எது அதி முக்கியமானது என்று கேட்டு விட்டீர்கள்!
  சரி, தேர்ந்த நாலைந்தில் ஒன்றை தேர்ந்தெடுத்து விட்டு, எழுத முன் ஏனையோரின்
  கருத்துகளைப் படித்தால், மிகச் சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது 24 என்றே தோன்றியது.
  காரணம் ஜோதிடம், சித்தாந்தம் என்று எதனை ஆழமாக அறிந்தாலும் அது தான் முடிந்த முடிபு.
  33 - எல்லா பேனா மையும் எல்லோரையும் சிந்திக்க வைப்பதில்லை. ( நல்ல எழுத்திற்கு சக்தி அதிகம் என்பதை எப்போதும் மறுக்க முடியாது. ஆனால் நன்றாக எழுதப்படும் மையை பொறுத்ததே.)
  1 - நல்ல விடயமே. எல்லோரும் கேட்போம், ஆனால் எல்லோராலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் கடைப்பிடிக்க முடியாத ஒன்று என்பதே உண்மை.
  2 - இதுவும் உண்மையே. இழக்க முன்னும், இழப்பின் போதும் பலராலும் இதை உணர முடிவதில்லை. (என்னையும் சேர்த்து தான்). ஆனால் காலம் அதனை தகுந்த காலத்தில் உணர்த்தும். இழப்பு என்பது அடுத்த நிகழ்விற்கான ஆரம்பம்.
  26 - இதுவும் கேட்பதற்கு நல்ல விடயம் மட்டுமே. எல்லோராலும் சாத்தியப் படாது.
  9 - இதுவும் எல்லோருக்கும் நடக்கக் கூடிய விடயமில்லை. (அப்படியானால்; ஜோதிடம் படிப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?). திருமணம் பொருத்தமாக அமையாதவர்கள் எல்லோருமே தமது வாழ்வே வீண் என்று நினைத்துவிட்டால்; அவர்களது மீதமுள்ள வாழ்வும் வீணாகியே போகும்.
  24ஐ புரிந்து கொண்டால் துன்பங்கள், குழப்பங்கள் அதிகம் இல்லை. மாறாக நமது பங்கை எவ்வாறு திறமையாக செய்யலாம் என்றே நினைக்க தோன்றும்./////

  உங்களின் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 18. /////Blogger வேப்பிலை said...
  15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.///

  உங்களின் தெரிவைச் சொன்னமைக்கு நன்றி வேப்பிலையாரே!

  ReplyDelete
 19. ////Blogger selvaspk said...
  6-As its closer to time importance.
  Time in life takes priority than everything else.
  From birth to doing things until death, timing is key.////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 20. குருவே வணக்கம்.
  33 தான் உண்மையில் நடப்பிலுள்ளது.
  சந்தேகமே இல்லை எனலாம், குருவே.

  ReplyDelete
 21. ////Blogger வரதராஜன் said...
  குருவே வணக்கம்.
  33 தான் உண்மையில் நடப்பிலுள்ளது.
  சந்தேகமே இல்லை எனலாம், குருவே.///

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com