மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

19.11.15

Cinema: இசைஞானி இளையராஜாவின் இசை அமைப்பு பற்றி அறிந்ததும் அறியாததும்

Cinema: இசைஞானி இளையராஜாவின் இசை அமைப்பு பற்றி 
அறிந்ததும் அறியாததும் 

Dedicated to all music lovers and especially to Illayaraja fans 

1. ஒரு  பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து
தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக்
கொண்டது வெறும் அரை மணி  நேரம்தான்.

2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"

3. சிகப்பு ரோஜாக்கள்  படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த
செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு  அந்த படத்திற்கு இசை சேர்க்கப்
பட்டது

4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு
எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச
இசை விற்பன்னர்களே மிரண்டு  போனது வரலாறு.

5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில்  "தூங்காத விழிகள் ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி

6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும்  ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு,
அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது

7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.

8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.

9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.

10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.

11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி  செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து,
 பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட்  ட்ராக்கை
அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின்
உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )

12. முன்பெல்லாம்  பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம்
வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்
சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல்  மறுபடி இசையமைப்பாளரே
வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி
இல்லை. ஒரு ரீல் திரையில் பார்த்தால் போதும்  உடனே இசைக்
குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும்.
இப்படி வேண்டாம், வேறுமாதிரி போடுங்கள் என்று  சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.

13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி
இசை அமைத்தவர் இசைஞானி,சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை
மிரளச் செய்தவர் இசைஞானி.

14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".

15. படத்தின் கதையை  கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".

16. வசனமே இல்லாத காட்சியில் கூட,  அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்
சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா
கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில்  நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.

17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு
இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு
முடிக்கும்போது படம் கரெக்டா முடியும்.  அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.

18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே
படம் ‘பிள்ளை நிலா’

19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி

20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான
விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )

21. இசைஞானி  முதன் முதலாக 'ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை
பதிவு செய்த படம் பிரியா.

22. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால்
 ஒரு சேதி"

23. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் "வைதேகி காத்திருந்தாள்", "அரண்மனைக்கிளி".

24.  இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர்
இசைஞானி ( புன்னகை மன்னன் )

25. “பஞ்சமுகி” என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்
படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..

26. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாள்
பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி )
தமிழில் ( சிறைச்சாலை )

27. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச்
சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும்.
அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது
பிரமிப்பான  உண்மை.

28. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக்
கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை
தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.

படித்ததில் பிடித்தது. மின்னஞ்சலில் வந்தது. நன்றாக இருந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31 comments:

kmr.krishnan said...

Okay Sir

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
இசைஞானி (கவனிக்கவும் ஞானி) - இளையராஜா - ஹி இஸ் அன் அன்கம்பேரபல் கேரக்டர் இன் ஹிஸ் ஃபீல்ட் - புதிய ஒரு மைல் கல்லை இசைத் துறையில் தொற்றுவித்தவர், பட்டி தொட்டியெங்கும் இசையைப் பற்றி பேச வைத்தவர்.
இசையின் மறு வடிவம் ஞானி இளையரஜா என கொள்ளலாமா?!!!!!.........
அன்புடன்,
-பொன்னுசாமி

B. Lakshmi Narayanan, Tuticorin said...

இசைஞானி இளையராஜாவின் இசை அமைப்பு பற்றி அறிந்ததும் அறியாததும் தலைப்பும் அருமை, விஷயமும் அருமை...

நன்றி வாத்தியாரே!!!.அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

வேப்பிலை said...

இசை என்னும் காற்றிக்கு
இவர் தான் ராஜா...

எந்த "மானும்"
எப்போதும் ராஜாவாக முடியாது

நிலாவே வா.... உன்னை
நினைச்சேன் பாட்டு படிசேன்

இப்படி எத்ததனை பட்டியலிட
இங்கு இருக்கு....

கார்த்திக் ராஜா இவரைப்போல இசைக்
கலையில் சிறந்து இருந்தும்

யுவனுக்கு கிடைத்த வாய்ப்புகள் இந்த
யூத் த்திற்கு கிடைக்கவில்லையே

என்பது வருத்தம் தான்
என்ன செய்ய... எல்லாம் திருவருள்...

ravichandran said...

Respected Sir,

Happy morning... Thanks for proving so many information about Iyalaraja sir.

Have a pleasant day.

With kind regards,
Ravichandran M
Avanashi

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம் ..
இளையராஜா ..***இசையில் இவர் முதிய ராஜாதி ராஜா *** ஸ்ரீ ரங்கம் கோவில் கோபுரம் கட்டும் சமயம் காஞ்சி பெரியவர்கள் ..இளையராஜாவை சந்திக்க வேண்டும் கொஞ்சம் வர சொல்ல முடியுமா.. ???
ராஜா .என் பெயரை பெரயவர்கள் உச்சரிக்க என்ன தவம் செய்தேனோ என்று மனம் உருகி முன்னே போய் நின்றாராம் ஸ்வாமிகள் ஆசீர்வாதம் செய்து கோபுர நிலை ஒன்றுக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்ய வேண்டும் என்றாராம் ..ராஜா உடனே ஒரு கச்சேரிக்கு ஏற்பாடு செய்து [ அது வரை எங்கும் எதற்கும் பொது கச்சேரி செய்வதில்லை .. ]வந்த வசூல் பணத்தை ஜீயர் சாமிகளிடம் கொடுத்தார் ..கோபுர நிலை கட்ட பட்டது ..ஆனால் ராஜாவை சரிவர மரியாதை தரவில்லை நிர்வாகஸ்தர்கள் ,,மனம் கசந்து போனார்...

வெளி நாட்டில் சிம்பொனி இசைக்காக சென்ற பொது அனைத்து வாத்திய கருவிகளுக்கும் நோட்ஸ் கொடுத்தார் ..அது சாமானிய விஷயமில்லை. வாசித்து முடித்த பின்பு எழுந்து நின்று கை தட்டினார்களாம் .சில நிமிடங்கள் .
ஸ்ரீ மாணிக்க வாசகரின் திருவாசகத்தை பாடி இசை வடிவம் கொடுத்தார்.. !!!
அனால் .திருவாசகம் படிக்க ஒரு விதி இருக்கிறது .**மோகன ராகம்** அல்லது **குறிஞ்சி பண்ணில்தான்** படிக்க வேண்டும் .**ஆலபனை கூடாது**..இதை அவருக்கு எடுத்து சொல்ல சரியான அன்பர் இல்லாததனால் ..அந்த இசை ஆல்பம் பிரபலமாகவில்லை ..!!!
உண்மையில் இந்த ராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று நாம் பெருமை படகூடிய மனிதர்..
சுபம் .

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
Okay Sir////

Thank you sir!

Subbiah Veerappan said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
இசைஞானி (கவனிக்கவும் ஞானி) - இளையராஜா - ஹி இஸ் அன் அன்கம்பேரபல் கேரக்டர் இன் ஹிஸ் ஃபீல்ட் - புதிய ஒரு மைல் கல்லை இசைத் துறையில் தொற்றுவித்தவர், பட்டி தொட்டியெங்கும் இசையைப் பற்றி பேச வைத்தவர்.
இசையின் மறு வடிவம் ஞானி இளையராஜா என கொள்ளலாமா?!!!!!.........
அன்புடன்,
-பொன்னுசாமி////

ஆஹா....நீங்கள் சொன்னால் சரிதான் பொன்னுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
இசைஞானி இளையராஜாவின் இசை அமைப்பு பற்றி அறிந்ததும் அறியாததும் தலைப்பும் அருமை, விஷயமும் அருமை...
நன்றி வாத்தியாரே!!!.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி./////

நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
இசை என்னும் காற்றிற்கு
இவர் தான் ராஜா...
எந்த "மானும்"
எப்போதும் ராஜாவாக முடியாது
நிலாவே வா.... உன்னை
நினைச்சேன் பாட்டு படிசேன்
இப்படி எத்ததனை பட்டியலிட
இங்கு இருக்கு....
கார்த்திக் ராஜா இவரைப்போல இசைக்
கலையில் சிறந்து இருந்தும்
யுவனுக்கு கிடைத்த வாய்ப்புகள் இந்த
யூத் த்திற்கு கிடைக்கவில்லையே
என்பது வருத்தம் தான்
என்ன செய்ய... எல்லாம் திருவருள்.../////

ஆமாம். திருவருள்தான். நன்றி வேப்பிலையாரே!!!!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Thanks for proving so many information about Iyalaraja sir.
Have a pleasant day.
With kind regards,
Ravichandran M
Avanashi/////

நல்லது. நன்றி அவனாசிக்காரரே!

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம் ..
இளையராஜா ..***இசையில் இவர் முதிய ராஜாதி ராஜா *** ஸ்ரீ ரங்கம் கோவில் கோபுரம் கட்டும் சமயம் காஞ்சி பெரியவர்கள் ..இளையராஜாவை சந்திக்க வேண்டும் கொஞ்சம் வர சொல்ல முடியுமா.. ???
ராஜா .என் பெயரை பெரயவர்கள் உச்சரிக்க என்ன தவம் செய்தேனோ என்று மனம் உருகி முன்னே போய் நின்றாராம் ஸ்வாமிகள் ஆசீர்வாதம் செய்து கோபுர நிலை ஒன்றுக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்ய வேண்டும் என்றாராம் ..ராஜா உடனே ஒரு கச்சேரிக்கு ஏற்பாடு செய்து [ அது வரை எங்கும் எதற்கும் பொது கச்சேரி செய்வதில்லை .. ]வந்த வசூல் பணத்தை ஜீயர் சாமிகளிடம் கொடுத்தார் ..கோபுர நிலை கட்ட பட்டது ..ஆனால் ராஜாவை சரிவர மரியாதை தரவில்லை நிர்வாகஸ்தர்கள் ,,மனம் கசந்து போனார்...
வெளி நாட்டில் சிம்பொனி இசைக்காக சென்ற பொது அனைத்து வாத்திய கருவிகளுக்கும் நோட்ஸ் கொடுத்தார் ..அது சாமானிய விஷயமில்லை. வாசித்து முடித்த பின்பு எழுந்து நின்று கை தட்டினார்களாம் .சில நிமிடங்கள் .
ஸ்ரீ மாணிக்க வாசகரின் திருவாசகத்தை பாடி இசை வடிவம் கொடுத்தார்.. !!!
அனால் .திருவாசகம் படிக்க ஒரு விதி இருக்கிறது .**மோகன ராகம்** அல்லது **குறிஞ்சி பண்ணில்தான்** படிக்க வேண்டும் .**ஆலபனை கூடாது**..இதை அவருக்கு எடுத்து சொல்ல சரியான அன்பர் இல்லாததனால் ..அந்த இசை ஆல்பம் பிரபலமாகவில்லை ..!!!
உண்மையில் இந்த ராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று நாம் பெருமை படகூடிய மனிதர்..
சுபம் .//////

அருமை. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
தங்களின் ஒவ்வொரு பதிவிலும், ஒரு விஷயம் பற்றி அறிந்து கொள்ளவும் தாங்கள் தொடுக்கும் ஒவ்வொரு மலர்க் கணைகளும் எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றது என்பதை கவனித்திருப்பீர்கள்.தாங்கள் கோடு போட்டாலே போதும், ரோடு போட்டாகிவிட்டது.
எரிகின்ற விளக்கு, வெளிச்சம் மங்கும் போது திரியைத் தூண்டிவிட்டால் மிகப் பிரகாசமாக எரிவதைப் போல் தங்களின் ஒவ்வொரு ஆக்கமும் அமைந்துள்ளது!!!!.
ஒருவேளை டியூப் லைட் போன்ற எனது அறிவு என்னும் மனம் இப்போதுதான் வேலை செய்கின்றதோ?!!!!.
பல விபரங்களைத் தெரிந்துகொள்ளும் படியான வாய்ப்பை உருவாக்கித் தரும் தங்களின் திருத்தொண்டிற்க்கு தலை வணங்குகின்றேன் அய்யா!!!!!!!!!.
அன்புடன்,
-பொன்னுசாமி.

lrk said...

ஐயா வணக்கம்

இன்றும் இரவில் இசைஞானி யின் இசையில் பாடல்களை கேட்டால் தனி சுகமே
கண்ணன்.

SELVARAJ said...

ராஜா ஐயா அவர்கள் "நான் கடவுள்" எனும் படத்தில் "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்" எனும் பாடலை எழுதி இரப்பார். ஏதோ திரைப்பட பாடல் அல்ல அது. இப்பாடலை இயற்ற "பிரம்ம ஞாணம்" வேண்டும். காலஷர்பத்தால் கன்டபடி அடிவாங்கிய பொழுதால்லாம் என்னை தேற்றிய ஒன்று. ஆயிரம் தேசிய விருதுகளை வழங்கலாம் அவருக்கு.

Subbiah Veerappan said...

////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
தங்களின் ஒவ்வொரு பதிவிலும், ஒரு விஷயம் பற்றி அறிந்து கொள்ளவும் தாங்கள் தொடுக்கும் ஒவ்வொரு மலர்க் கணைகளும் எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றது என்பதை கவனித்திருப்பீர்கள்.தாங்கள் கோடு போட்டாலே போதும், ரோடு போட்டாகிவிட்டது.
எரிகின்ற விளக்கு, வெளிச்சம் மங்கும் போது திரியைத் தூண்டிவிட்டால் மிகப் பிரகாசமாக எரிவதைப் போல் தங்களின் ஒவ்வொரு ஆக்கமும் அமைந்துள்ளது!!!!.
ஒருவேளை டியூப் லைட் போன்ற எனது அறிவு என்னும் மனம் இப்போதுதான் வேலை செய்கின்றதோ?!!!!.
பல விபரங்களைத் தெரிந்துகொள்ளும் படியான வாய்ப்பை உருவாக்கித் தரும் தங்களின் திருத்தொண்டிற்க்கு தலை வணங்குகின்றேன் அய்யா!!!!!!!!!.
அன்புடன்,
-பொன்னுசாமி./////

எழுதுவதில் வெரைட்டி வேண்டுமென்பதற்காகவே ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக ஒவ்வொன்றைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். உங்களைப் போன்று இரசிக்கும் அன்பர்கள் உள்ளவரை அப்பணி தொடரும். நன்றி போனுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

Thursday, November 19, 2015 2:17:00 PM Delete
/////Blogger lrk said...ஐயா வணக்கம்
இன்றும் இரவில் இசைஞானி யின் இசையில் பாடல்களை கேட்டால் தனி சுகமே
கண்ணன்.//////

இந்த ஒரு பாடல் போதாதா? இரவில் கேட்பதற்கு?

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு)

Subbiah Veerappan said...

/////Blogger SELVARAJ said...
ராஜா ஐயா அவர்கள் "நான் கடவுள்" எனும் படத்தில் "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்" எனும் பாடலை எழுதி இரப்பார். ஏதோ திரைப்பட பாடல் அல்ல அது. இப்பாடலை இயற்ற "பிரம்ம ஞாணம்" வேண்டும். காலஷர்பத்தால் கன்டபடி அடிவாங்கிய பொழுதால்லாம் என்னை தேற்றிய ஒன்று. ஆயிரம் தேசிய விருதுகளை வழங்கலாம் அவருக்கு./////

அந்தப் பாடலில் வரும் பல வரிகள் மனதைத் தைக்கக்கூடியவை:

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி நண்பரே!

வரதராஜன் said...

குருவே வணக்கம்.
தங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் கொடுக்கும் "தலைப்பு" மிகவும் பொருத்தமானதாகவே அமைகிறது! அது எனக்கு Times of India நாளேட்டை ஞாபகப்படுத்துகிறது! அத்துனை unique!! இது பற்றி முன்பொருமுறை "சபாஷ்" தெரிவித்தேன்.
எல்லாவற்றையும் படித்து முடித்தபின் வகுப்பறை மாணவர் கணபதியார் கூறியிருப்பது போல இளையராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று பெருமைப்படுவோம், ஐயா!

Subbiah Veerappan said...

//////Blogger வரதராஜன் said...
குருவே வணக்கம்.
தங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் கொடுக்கும் "தலைப்பு" மிகவும் பொருத்தமானதாகவே அமைகிறது! அது எனக்கு Times of India நாளேட்டை ஞாபகப்படுத்துகிறது! அத்துனை unique!! இது பற்றி முன்பொருமுறை "சபாஷ்" தெரிவித்தேன்.
எல்லாவற்றையும் படித்து முடித்தபின் வகுப்பறை மாணவர் கணபதியார் கூறியிருப்பது போல இளையராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று பெருமைப்படுவோம், ஐயா!/////

"'தலைப்பை நன்றாகப் போடு
தானே படிப்பார்கள்
எழுதுவதை நன்றாக எழுது
எல்லோரும் படிப்பார்கள்”
என்று அடிக்கடி சொல்லுவேன்.
எழுத்தின் தாரக மந்திரம் அதுதான்
உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்
பாராட்டு என்பது ஊக்க மருந்தாகும் (Tonic)

Mrs Anpalagan N said...

ஐயா,
எல்லாப் பதிவுகளுக்கும் கருத்து எழுதுவது குறைவு. முழுப்பதிவுகளையும் படிப்பதும் குறைவே.
ஆனாலும் படிப்பவை எல்லாமே ரசிக்கும் வகை.
"பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்"
என்ற பாட்டை தேடிப்பிடித்து அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றிகள்.
படம் : நான் கடவுள் (2009)
பாடியவர்: இளையராஜா
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி ???

தனிமரம் said...

அறியாத பல செய்திகளின் தொகுப்பு அருமை ஐயா!

thozhar pandian said...

"எந்த "மானும்"
எப்போதும் ராஜாவாக முடியாது "

இது வம்பு தானே. இராஜாவை பாராட்ட வேண்டுமென்றால் தாராளமாக பாராட்டி விட்டு போக வேண்டியதுதானே. எதற்காக தேவையே இல்லாமல் இன்னொரு இசையமைப்பாளரை வம்புக்கு இழுக்க வேண்டும். வேப்பிலையார் பேர் எழுதவில்லை என்றாலும் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது வெட்ட வெளிச்சம், தமிழ் நாட்டில் சிறு குழந்தைக்கு கூட தெரியும். இசையில் பெரிய இசை, சிறிய இசை என்றெல்லாம் கிடையாது. எப்படி அழகு என்பது ஒவ்வொருவரின் பார்வையில் வேறுபடுகிறதோ, அது போல் தான் இரசனை என்பதும். எனது இரசனையே உயர்ந்தது என்பது மிக மிக சிறுபிள்ளைத்தனமான கருத்து. பலருக்கு இளையராஜா சிறந்த இசையமைப்பாளராக இருக்கலாம். சிலருக்கு அந்த "மான்" பிடித்திருக்கலாம். "மான்" இராஜாவாக முடியாது தான். அது போல் எந்த இராஜாவும் "மான்" ஆகவும் முடியாது. இவர் அவர் போலவோ, அவர் இவர் போலவோ ஆக வேண்டிய அவசியமும் இல்லை.

தமிழர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எல்லாவற்றிலும் ஒப்பிடுவது. உலகம் மிகவும் பெரியது. அனைவருக்கும் இங்கு இடம் உண்டு. அதுவும் "மான்" மேல் தான் இராஜா பக்தர்களுக்கு கோபம். ஏன் என்றால் அவர் வந்த பிறகு அவரும் வெற்றி பெற்றார், இராஜாவை ஆஸ்தான இசையமைப்பாளர்களாக கொண்ட சிலர் வேறு சில காரணங்களுக்காக "மான்" இடம் சென்றனர் என்பதால். அவர் வந்ததால் இராஜாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தான் உண்மை.

இராஜா சிம்பொனி இசையமைத்தார், அதுவும் 13 நாட்களில் என்றால், அந்த சிம்பொனி இசை வெளிவந்ததா? வெளிவரவில்லை என்றால் ஏன்? அது முழுமையாக அங்குள்ள இசை வல்லுனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அது வெளி வந்தாலும் வராவிட்டாலும் இராஜா பெரிய மேதை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் வெளிவராத ஒரு இசை வடிவத்தை பற்றி எதற்கு பேச வேண்டும். அது இல்லாமலே அவர் ஒரு பெரிய மேதை தான்.

இறுதியாக, ஆசிரியர் அவர்களே, இந்த நீண்ட பதிவுக்கு மன்னிக்கவும். ஆனால் தாங்கள் அந்த கருத்தை வெளியிட்டு, அதற்கு ஆமோதிக்கும்படி பதிலும் அளித்ததால் தான் இந்த விளக்கம்.

thozhar pandian said...

Mrs Anpalagan N,

The lyricist for "pichai paathiram" is Raja himself.

BTW, Mr.Selvaraj, "pichai paathiram" was not written for "Naan Kadavul" movie. Raja wrote it for his "Ramana malai" independent album which director Bala used for his movie as it was apt for the situation in the movie.

thozhar pandian said...

மற்றொரு செய்தி, பாடலுக்காகவே படம் ஓடியது என்பது முழுக்க ஏற்க முடியாது. அது காலகட்டத்தை பொறுத்தது. இப்போது எல்லாம் இசைக்காக மட்டும் எல்லாம் படம் ஓடாது, அது எவ்வளவு சிறந்த இசையாக இருந்தாலும். அந்த காலத்தில் திரைப்படங்களை தவிர வேறு பொழுதுபோக்கு கிடையாது. இசையை இப்போது போல் தரவிறக்கம் செய்து கேட்க முடியாது. கேசட்டை வாங்க வேண்டும். இல்லை என்றால் வானொலியில் கேட்டால் உண்டு. இல்லை என்றால் ஏதாவது ஒரு தேநீர் விடுதியிலோ, பேருந்திலோ கேட்கலாம். இந்த காலத்து இசையை தரவிறக்கம் செய்ய வேண்டியது கூட இல்லை. ஏதாவதொரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிச்சயம் நமக்கு பிடித்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த காலத்தில் படம் சுமாராக இருந்தாலும் ஓடத்தான் செய்தது. ஆனால் அதற்கு இசை மட்டும் காரணம் என்று எனக்கு தோன்றவில்லை. பாடல் நன்றாக இருந்தால் அதற்காகவாவது பார்க்கலாம் என்று பலர் திரையரங்கம் சென்றனர் என்பது உண்மைதான். ஆனால் அந்த காலம் அப்படி.

Subbiah Veerappan said...

/////Blogger Mrs Anpalagan N said...
ஐயா,
எல்லாப் பதிவுகளுக்கும் கருத்து எழுதுவது குறைவு. முழுப்பதிவுகளையும் படிப்பதும் குறைவே.
ஆனாலும் படிப்பவை எல்லாமே ரசிக்கும் வகை.
"பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்"
என்ற பாட்டை தேடிப்பிடித்து அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றிகள்.
படம் : நான் கடவுள் (2009)
பாடியவர்: இளையராஜா
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி ???////

This film features 7 songs composed by Ilaiyaraaja. The audio was released on 1 January 2009. Lyrics have been penned by Vaali except for the track Pitchai Paathiram which has been penned by Ilayaraja himself and the title song "Maa Ganga" written by Bharath Achaarya. The song "Matha Un Kovilil" was reused from Raja's own song which he had composed for Achchani (1978).

Subbiah Veerappan said...

////Blogger தனிமரம் said...
அறியாத பல செய்திகளின் தொகுப்பு அருமை ஐயா!////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger thozhar pandian said...
"எந்த "மானும்"
எப்போதும் ராஜாவாக முடியாது "
இது வம்பு தானே. இராஜாவை பாராட்ட வேண்டுமென்றால் தாராளமாக பாராட்டி விட்டு போக வேண்டியதுதானே. எதற்காக தேவையே இல்லாமல் இன்னொரு இசையமைப்பாளரை வம்புக்கு இழுக்க வேண்டும். வேப்பிலையார் பேர் எழுதவில்லை என்றாலும் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது வெட்ட வெளிச்சம், தமிழ் நாட்டில் சிறு குழந்தைக்கு கூட தெரியும். இசையில் பெரிய இசை, சிறிய இசை என்றெல்லாம் கிடையாது. எப்படி அழகு என்பது ஒவ்வொருவரின் பார்வையில் வேறுபடுகிறதோ, அது போல் தான் இரசனை என்பதும். எனது இரசனையே உயர்ந்தது என்பது மிக மிக சிறுபிள்ளைத்தனமான கருத்து. பலருக்கு இளையராஜா சிறந்த இசையமைப்பாளராக இருக்கலாம். சிலருக்கு அந்த "மான்" பிடித்திருக்கலாம். "மான்" இராஜாவாக முடியாது தான். அது போல் எந்த இராஜாவும் "மான்" ஆகவும் முடியாது. இவர் அவர் போலவோ, அவர் இவர் போலவோ ஆக வேண்டிய அவசியமும் இல்லை.
தமிழர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எல்லாவற்றிலும் ஒப்பிடுவது. உலகம் மிகவும் பெரியது. அனைவருக்கும் இங்கு இடம் உண்டு. அதுவும் "மான்" மேல் தான் இராஜா பக்தர்களுக்கு கோபம். ஏன் என்றால் அவர் வந்த பிறகு அவரும் வெற்றி பெற்றார், இராஜாவை ஆஸ்தான இசையமைப்பாளர்களாக கொண்ட சிலர் வேறு சில காரணங்களுக்காக "மான்" இடம் சென்றனர் என்பதால். அவர் வந்ததால் இராஜாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தான் உண்மை.
இராஜா சிம்பொனி இசையமைத்தார், அதுவும் 13 நாட்களில் என்றால், அந்த சிம்பொனி இசை வெளிவந்ததா? வெளிவரவில்லை என்றால் ஏன்? அது முழுமையாக அங்குள்ள இசை வல்லுனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அது வெளி வந்தாலும் வராவிட்டாலும் இராஜா பெரிய மேதை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் வெளிவராத ஒரு இசை வடிவத்தை பற்றி எதற்கு பேச வேண்டும். அது இல்லாமலே அவர் ஒரு பெரிய மேதை தான்.
இறுதியாக, ஆசிரியர் அவர்களே, இந்த நீண்ட பதிவுக்கு மன்னிக்கவும். ஆனால் தாங்கள் அந்த கருத்தை வெளியிட்டு, அதற்கு ஆமோதிக்கும்படி பதிலும் அளித்ததால் தான் இந்த விளக்கம்.////

நான் எல்லோருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளித்து பதிவில் வெளியிடுகிறேனே தவிர அத்தனை கருத்துக்களும் எனக்கு உடன்பாடா என்றால் இல்லை! உங்களுடைய கருத்துப்பகிர்விற்கு நன்றி தோழரே!

Subbiah Veerappan said...

/////Blogger thozhar pandian said...
Mrs Anpalagan N,
The lyricist for "pichai paathiram" is Raja himself.
BTW, Mr.Selvaraj, "pichai paathiram" was not written for "Naan Kadavul" movie. Raja wrote it for his "Ramana malai" independent album which director Bala used for his movie as it was apt for the situation in the movie./////

தகவலுக்கு நன்றி தோழரே!

Subbiah Veerappan said...

//////Blogger thozhar pandian said...
மற்றொரு செய்தி, பாடலுக்காகவே படம் ஓடியது என்பது முழுக்க ஏற்க முடியாது. அது காலகட்டத்தை பொறுத்தது. இப்போது எல்லாம் இசைக்காக மட்டும் எல்லாம் படம் ஓடாது, அது எவ்வளவு சிறந்த இசையாக இருந்தாலும். அந்த காலத்தில் திரைப்படங்களை தவிர வேறு பொழுதுபோக்கு கிடையாது. இசையை இப்போது போல் தரவிறக்கம் செய்து கேட்க முடியாது. கேசட்டை வாங்க வேண்டும். இல்லை என்றால் வானொலியில் கேட்டால் உண்டு. இல்லை என்றால் ஏதாவது ஒரு தேநீர் விடுதியிலோ, பேருந்திலோ கேட்கலாம். இந்த காலத்து இசையை தரவிறக்கம் செய்ய வேண்டியது கூட இல்லை. ஏதாவதொரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிச்சயம் நமக்கு பிடித்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த காலத்தில் படம் சுமாராக இருந்தாலும் ஓடத்தான் செய்தது. ஆனால் அதற்கு இசை மட்டும் காரணம் என்று எனக்கு தோன்றவில்லை. பாடல் நன்றாக இருந்தால் அதற்காகவாவது பார்க்கலாம் என்று பலர் திரையரங்கம் சென்றனர் என்பது உண்மைதான். ஆனால் அந்த காலம் அப்படி./////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி தோழரே!

வேப்பிலை said...

//////Blogger thozhar pandian said...
"எந்த "மானும்"
எப்போதும் ராஜாவாக முடியாது "//

இந்த கருத்துக்கு விளக்கம் தேவையில்லை
இது ஒருவரை குறித்து சொல்லப்பட்டதல்ல

காட்டுக்கு ராஜா சிங்கம்
காட்டில் பயந்த விலங்கு மான்

இதை தான் குறிப்பிட்டது
இதை நீங்களாகவே கற்பனை செய்து கொண்டால்

குற்றம் மட்டும் வேப்பில்லை மீதா
தூற்றலும் போற்றலும் வருத்தமில்லை

ஆனாலும் தெரிய படுத்தவே
அத்தனை தகவலும்...

உயர்வும் தாழ்வும் ஒப்பீடு தான்
உயர்ந்ததும் இல்லை தாழ்த்தும் இல்லை

அப்படி ஒப்பீடு செய்வதானால்
அவரை கே வி மகாதேவனுடனோ

அல்லது ஆர் டி பர்மானுடனோ ஒப்பீடு செய்திருக்கலாமே
அய்யர் அப்படி இல்லை என்பதை புரிந்து கொண்டால்

மகிழ்ச்சி இல்லையென்றால் புரிந்த பின்
மகிழ்ச்சி... மனம் போல் வாழ்க