மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

11.11.15

நான் பேச நினைப்பதையெல்லாம் நீங்கள் பேச வேண்டும்!


நான் பேச நினைப்பதையெல்லாம் நீங்கள் பேச வேண்டும்!

அன்புள்ள மாணவக் கண்மணிகளுக்கு,
வாத்தியாரின் அன்பு கலந்த வணக்கம்!

உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடி stars 2015 வகுப்பு இன்று முதல் செயல்படுகிறது.இதுவரை, சென்ற பத்து நாட்களில் சேர்ந்த சுமார் 50 உறுப்பினர்களுக்கும்   பயனர் பெயர் (User name)மற்றும் கடவுச் சொல் (password) அனுப்பி
வைக்கப்பெற்றுள்ளது.

அதற்குள் அடியெடுத்து வைத்தவர்கள் தங்கள் கருத்தை எழுதலாம். எழுத வேண்டிய முகவரி  spvrsubbiah@gmail.com

Stars2015 வகுப்பறை உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது!

வானவெளியில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கலாம். எனக்கு நீங்கள்தான் நட்சத்திரங்கள். இந்த வகுப்பறையின் பெயர்க்காரணமும் அதுதான்.

உங்கள் அனைவரின் வரவும் நல் வரவாகட்டும்.

உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த
வகுப்பின் செயல்பாடுகள் இருக்கும்

பாடங்கள் அனைத்தும் எளிமையாகவும், அனைவருக்கும் புரியும்
விதமாகவும் இருக்கும். அத்துடன் நீங்கள் விரும்புகின்ற எனது எழுத்து நடையிலும் இருக்கும்.

நீங்கள் இங்கே நிறையக் கற்றுக்கொள்ளலாம். அதே நேரத்தில் சந்தோஷமாகவும் இருக்கலாம். வழக்கமான வகுப்பறைகளில்
இருந்து சற்று வேறுபட்ட  வகுப்பறையாக இது இருக்கும். உங்களுடன்
சேர்ந்து நானும் மாணவன்தான். உங்களுக்கு நடத்தும் அதே நேரத்தில்
நானும் நிறையக்  கற்றுக்கொள்கிறேன்.நான் முப்பது ஆண்டுகளாகப் படித்தவற்றை எல்லாம் மீண்டும் ஒருமுறை என் நினைவிற்குக் கொண்டு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது.

என் ஜோதிட அறிவு, என் வாழ்க்கை அனுபவங்கள் எல்லாம் கலந்து வருவதால் பாடங்கள் சுவாரசியமாகவும், உபயோகமுள்ளதாகவும்
இருக்கும்!

In short, you can learn and also enjoy the class!

உறுப்பினராகச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக!

முருகனருள் முன்னிற்கும்

அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22 comments:

siva kumar said...

உள்ளேன் ஐயா

பெரியவாதாசன் said...

அன்பு ஐயா,

நலமா?

நீண்ட நாட்களுக்குப் பின் இங்கு வருவதால் இந்த விஷயம் எனக்குத் தெரியாமல் போனதே!

இதில் சேர நான் என்ன செய்ய வேண்டும்?

அன்புடன்,

புவனேஷ்வர்

ravichandran said...

Respected Sir,

Happy morning... sweet wishes... Our dreams come true...

Our new classroom opened... Our sincere gratitude to our teacher.

Have a pleasant day.

With kind regards,
Ravichandran M
Avanashi

Nallaswamy Raju said...

RESPECTED TEACHER,
HOW TO JOIN YOUR CLASS
Raju

selvam velusamy said...

வணக்கம் குரு,

மிக்க மகிழ்ச்சி. Stars2015 வகுப்பறைக்கு உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

நன்றி
செல்வம்

வேப்பிலை said...

முருகன் அருள்
முன் நிற்கும்

அது சரி எனக்கு ஏன்
அனுமதி இதுவரை கிடைக்கவில்லை

அதற்க்கு என்ன செய்ய வேண்டும்
அதை குறித்து சொல்லுங்களேன்

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ஸ்டார்ஸ் 2015 தொடக்கம் அருமை. ...
முகப்பு பக்கத்தில் ஒரு வலம்புரி விநாயகர் படமும், அப்பன் பழனி முருகனின் படமும் இருந்தால் நன்றாக இருக்கும் ஆவன செய்ங்களேன் !!

வரதராஜன் said...

வணக்கம் ஐயா. புது வகுப்பு தொடங்கியுள்ளது மிக மகிழ்ச்சியான செய்தி. கந்தப்பெருமானருளால் வகுப்பகள் எந்தத் தடையுமின்றி நடக்கவும், தாங்களின் உடல்நிலையும் மேன்மையுடனிருக்கவும் உளமாரப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா////

வருகைப் பதிவிற்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger பெரியவாதாசன் said...
அன்பு ஐயா,
நலமா?
நீண்ட நாட்களுக்குப் பின் இங்கு வருவதால் இந்த விஷயம் எனக்குத் தெரியாமல் போனதே!
இதில் சேர நான் என்ன செய்ய வேண்டும்?
அன்புடன்,
புவனேஷ்வர்/////

அடடே வெகுநாள் ஆகிவிட்டதே ராசா - நீங்கள் கண்ணில்பட்டு!
மின்னஞ்சல் அனுப்புங்கள். முகவரிள் spvrsubbiah@gmail.com

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir
Happy morning... sweet wishes... Our dreams come true...
Our new classroom opened... Our sincere gratitude to our teacher.
Have a pleasant day.
With kind regards,
Ravichandran M
Avanashi//////

கனவு நனவாகும். நனவு நிஜமாக நடக்கும்! எல்லாம் உங்களூர் அவனாசியப்பர் அருள்!

Subbiah Veerappan said...

///Blogger Nallaswamy Raju said...
RESPECTED TEACHER,
HOW TO JOIN YOUR CLASS
Raju////

மின்னஞ்சல் அனுப்புங்கள். முகவரி spvrsubbiah@gmail.com

Subbiah Veerappan said...

////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
மிக்க மகிழ்ச்சி. Stars2015 வகுப்பறைக்கு உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
நன்றி
செல்வம்/////

நல்லது, நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
முருகன் அருள்
முன் நிற்கும்
அது சரி எனக்கு ஏன்
அனுமதி இதுவரை கிடைக்கவில்லை
அதற்க்கு என்ன செய்ய வேண்டும்
அதை குறித்து சொல்லுங்களேன்/////

நீங்கள் யாத்திரையில் இருந்தீர்கள். அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் கழித்துத்தான் வந்தீர்கள். அதனால் நீங்கள் அறிவிப்பிற்கு பதில் அளிக்கவில்லை. அதுதான் காரணம்!

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ஸ்டார்ஸ் 2015 தொடக்கம் அருமை. ...
முகப்பு பக்கத்தில் ஒரு வலம்புரி விநாயகர் படமும், அப்பன் பழனி முருகனின் படமும் இருந்தால் நன்றாக இருக்கும் ஆவன செய்ங்களேன் !!/////

பொறுத்திருங்கள். வெப்சைட் பொறியளரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
வணக்கம் ஐயா. புது வகுப்பு தொடங்கியுள்ளது மிக மகிழ்ச்சியான செய்தி. கந்தப்பெருமானருளால் வகுப்பகள் எந்தத் தடையுமின்றி நடக்கவும், தாங்களின் உடல்நிலையும் மேன்மையுடனிருக்கவும் உளமாரப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி.////

உங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி!

Chandrasekaran Suryanarayana said...

மிக்க மகிழ்ச்சி . உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள் .

தங்கள் ஆசை (100 மாணவர்கள்) இந்த புதிய வகுப்பில் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .

Subbiah Veerappan said...

/////Blogger Chandrasekaran Suryanarayana said...
மிக்க மகிழ்ச்சி . உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள் .
தங்கள் ஆசை (100 மாணவர்கள்) இந்த புதிய வகுப்பில் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ./////

ஆஹா, நிறைவேறினால் நான் மிக்க மகிழ்ச்சி கொள்வேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. இறைவன் செவி சாய்க்கட்டும் நண்பரே!

dgjagadeesan jaga said...

Best wishes Ayya,

நல் வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி.நல்லதே நடக்கட்டும்,

Thanks Ayya.

Vanishree Natarajan said...

Respected Guru

I want to join this new classroom stars2015.
What should I do?

Subbiah Veerappan said...

////Blogger dgjagadeesan jaga said...
Best wishes Ayya,
நல் வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி.நல்லதே நடக்கட்டும்,
Thanks Ayya.////

உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Vanishree Natarajan said...
Respected Guru
I want to join this new classroom stars2015.
What should I do?/////

Please send a mail to spvrsubbiah@gmail.com
That is the mail ID for the new classroom Stars2015