மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

10.11.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வகுப்பறை மாணவக் கண்மணிகள், வந்து செல்லும் நண்பர்கள், சக
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் மனம் உவந்த
தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=================================================
தீப ஒளித் திருநாளின் முக்கியத்துவம் என்ன?

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப் பெறுகின்ற ஓர் இந்துப் பண்டிகையாகும்.

இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை
மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை ஐப்பசி அமாவாசை முன் தினம்
நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். கிரெகொரியின் நாட்காட்டிப்
படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ம்தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி
தீபாவளி இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராணக் கதைகளின் படி, கிருஷ்ணரின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருஷ்ணர் வராக (பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின்
அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணர் தனது தெய்வசக்தியால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறார்.

கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன்
தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப்படுகிறது.

ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.

நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது.

நரகாசுரன் கதை

மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்றார். அபபோது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பொற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.

பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.

நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கி விழுந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.

நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.

தீபாவளி நரகாசுரன் என்ற தீமையை அழித்த நாள். அதனால் அன்று தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

தீப ஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவைகளின் நலன் கருதி வேடந்தாங்கல் உள்ளிட்ட சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வழக்கத்தை தடை செய்து பட்டாசு இல்லா திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

மேற்குநாடுகளில் தீபாவளி

மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.

Source: wikipedia
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

35 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

classroom2012 said...

துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலரட்டும் .
அனைவருக்கும் இனிய.நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உணர்ந்தவை! said...

Wishing you a Happy Diwali!

Thanks, I always enjoy your writings.

Thanks
Satya

kmr.krishnan said...

தீபாவளித் திருநாள் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

கட்டுரை நிறைவாக உள்ளது. ஸ்ரீகிருஷ்ணரை, கிருசுணன் என்று எழுதலாமா?அவன் இவன் என்று ஒருமையில், கொன்றான் என்றெலாம் கூறுவதைப் பார்க்கும் போது ஐயாவின் நடையில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.
ஐயாவுமா கிருந்த எழுத்துக்களுக்கு எதிரி?

bala said...

Vathiyaar matrum saga manavargalukum en Iniya deepavali nal vazhthukal.... ☺

Kumanan Samidurai said...

Vathiyaruku Nandri,,,

இதயபூர்வமான தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்

S.Kumanan

வேப்பிலை said...

நரகசுரன் செத்த நாள் தான் தீபாவளி என்றல்
நமக்கு தீபாவளி வேண்டாம்

அடுத்தவர் துன்பத்தில்
அப்படி ஒரு மகிழ்ச்சி நமக்கு தேவை இல்லை

ராமன் என்ற மன்னன் பெற்ற வெற்றியை
ராமன் மறைந்த பின்னரும் கொண்டாடுவது

என்பது மத பிரச்சாரம்
எனவே அப்படி தகவலை

இனி பரப்பாமல் இருப்பதே நல்லது
இனிய வணக்கங்கள் வாழ்த்துக்கள்

kittuswamy palaniappan said...

Anbudan Vathiyar avarkalukku Deepavali namasharangal, Anaithu classroom nanbarkalukkum manam kanintha deepavali nal valthukkal.anbudan kittuswamy

ravichandran said...

Respected Sir,

My heartful and sincere wishes to our master as well as all our classmate brothers and sisters.

May god bless us good health and wealth forever.

Wish you happy diwali.

Have a holy day.

With kind regards,
Ravichandran M

இராஜராஜேஸ்வரி said...


நிறைவான இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

Arumugavel said...

அன்புள்ளம் கொண்ட வாத்தியாருக்கும் இணையதள நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்புடன்,
செ.ஆறுமுகவேல்

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

வாத்தியார் அய்யா & சக மாணவ தோழர்களுக்கு தீபாவளி நல வாழ்துக்கள் ....

kumaresan jagan said...

வாத்தியார் மற்றும் வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்..

sriram1114 said...

வணக்கம்
ஆசிரியர் ஐயா அவர்களுக்கும் மற்றும் அனைத்து வகுப்பறை மாணவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

தீபாவளி குறித்த பதிவு மிகவும் அருமை.Very informative.

ஸ்ரீராம்

Chandrasekaran Suryanarayana said...

ஆசிரியருக்கும், சக மாணவர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வரதராஜன் said...

அன்புள்ள வாத்தியாருக்கும், அனைத்து வகுப்பரை மாணாக்கர்களுக்கும் மற்றஉம் ஜோதிட நூல்கள் தயாரித்துத் தரும் உமையாள் பதிப்பகத்திலுள்ள அனைவருக்கும் (உரிமையாளர் உள்பட) எனதி மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Rajam Anand said...

வணக்கம்
Very informative and re-itterating the importance of celebrating Deepavalli.

எல்லோரிற்கும் இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

Subbiah Veerappan said...

//////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...////

நன்றி நண்பரே!!! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

//////Blogger classroom2012 said...
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலரட்டும் .
அனைவருக்கும் இனிய.நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்////

நன்றி நண்பரே!!! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்

Subbiah Veerappan said...

//////Blogger உணர்ந்தவை! said...
Wishing you a Happy Diwali!
Thanks, I always enjoy your writings.
Thanks
Satya///////

உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி சத்யா!
நீங்கள் சகோதரனா? அல்லது சகோதரியா?

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
தீபாவளித் திருநாள் வணக்கங்களும் வாழ்த்துக்களும்
கட்டுரை நிறைவாக உள்ளது. ஸ்ரீகிருஷ்ணரை, கிருசுணன் என்று எழுதலாமா?அவன் இவன் என்று ஒருமையில், கொன்றான் என்றெலாம் கூறுவதைப் பார்க்கும் போது ஐயாவின் நடையில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.
ஐயாவுமா கிருந்த எழுத்துக்களுக்கு எதிரி?//////

மின்னஜ்சலில் வந்ததை அப்படியே பதிவிட்டதால் வந்த கோளாறு. சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி. பதிவில் திருத்தங்களைச் செய்துவிட்டேன் கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger bala said...
Vathiyaar matrum saga manavargalukum en Iniya deepavali nal vazhthukal.... /////

நன்றி பாலா! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger Kumanan Samidurai said...
Vathiyaruku Nandri,,,
இதயபூர்வமான தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்
S.Kumanan/////

நன்றி குமணன்! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

//////Blogger வேப்பிலை said...
நரகசுரன் செத்த நாள் தான் தீபாவளி என்றல்
நமக்கு தீபாவளி வேண்டாம்
அடுத்தவர் துன்பத்தில்
அப்படி ஒரு மகிழ்ச்சி நமக்கு தேவை இல்லை
ராமன் என்ற மன்னன் பெற்ற வெற்றியை
ராமன் மறைந்த பின்னரும் கொண்டாடுவது
என்பது மத பிரச்சாரம்
எனவே அப்படி தகவலை
இனி பரப்பாமல் இருப்பதே நல்லது
இனிய வணக்கங்கள் வாழ்த்துக்கள்///////

இறக்கும் தருவாயில் ஒரு மனிதன் வேண்டிக் கொண்ட வேண்டுதலைத்தான் நிறைவேற்றுகிறோம் வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

/////Blogger kittuswamy palaniappan said...
Anbudan Vathiyar avarkalukku Deepavali namasharangal, Anaithu classroom nanbarkalukkum manam kanintha deepavali nal valthukkal.anbudan kittuswamy/////

நன்றி நண்பரே! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
My heartful and sincere wishes to our master as well as all our classmate brothers and sisters.
May god bless us good health and wealth forever.
Wish you happy diwali.
Have a holy day.
With kind regards,
Ravichandran M//////

நன்றி நண்பரே! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வகுப்பறையில் நிறைய ரமேஷ்களும், ரவிகளும் ரவிச்சந்திரன்களும் உள்ளார்கள். தங்கள் ஊரின் பெயரைச் சேர்த்துகொண்டு அவர்கள் தங்கள் பின்னூட்டங்களை எழுதினால் நல்லது. ஒரு அடையாளம் கிடைக்கும்

Subbiah Veerappan said...

/////Blogger இராஜராஜேஸ்வரி said...
நிறைவான இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..////

நன்றி சகோதரி! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger Arumugavel said...
அன்புள்ளம் கொண்ட வாத்தியாருக்கும் இணையதள நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்புடன்,
செ.ஆறுமுகவேல்/////

நன்றி ஆறுமுகவேலரே!! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
வாத்தியார் அய்யா & சக மாணவ தோழர்களுக்கு தீபாவளி நல வாழ்துக்கள் ../////

நன்றி கணபதியாரே!!! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!..

Subbiah Veerappan said...

//////Blogger kumaresan jagan said...
வாத்தியார் மற்றும் வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்../////

நன்றி நண்பரே!!! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...


////Blogger sriram1114 said...
வணக்கம்
ஆசிரியர் ஐயா அவர்களுக்கும் மற்றும் அனைத்து வகுப்பறை மாணவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி குறித்த பதிவு மிகவும் அருமை.Very informative.
ஸ்ரீராம்/////

நன்றி நண்பரே!!! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ஆசிரியருக்கும், சக மாணவர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்./////

நன்றி சூரியநாராயணன்!!! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
அன்புள்ள வாத்தியாருக்கும், அனைத்து வகுப்பரை மாணாக்கர்களுக்கும் மற்றஉம் ஜோதிட நூல்கள் தயாரித்துத் தரும் உமையாள் பதிப்பகத்திலுள்ள அனைவருக்கும் (உரிமையாளர் உள்பட) எனதி மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்./////

நன்றி வரதராஜன்!!! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger Rajam Anand said...
வணக்கம்
Very informative and re-itterating the importance of celebrating Deepavalli.
எல்லோருக்கும் இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.//////

நன்றி சகோதரி!!! வகுப்பறையின் சார்பில் உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

வேப்பிலை said...

தீபாவளி
தீப ஆவளி என்றும்

தீபா “வலி” என்றும்
திருத்தி கூறும் தீபாவளி

பற்றி ஒரு
பாமரனின் பார்வையில்.....

மதங்களை கடந்து
மகிழ்சிக்காக என

மக்கள் மத்தியில் எப்படியோ
மனதில் இடம் பிடித்தது தீபாவளி

ஒரு புது படம்
ஒரு whatsappஇல் வாழ்த்து

அவ்வளவு தானா
அந்த தீபாவளி இல்லை

தள்ளுபடி விற்பனையாம் நம்மை கடனில்
“தள்ளி”யபடி என்று பிறகு தான் புரியுது

புத்தாடை வாங்கனுமாம் இது
புதிய உத்தி என பிறகு தான் தெரியுது

வரி வசூலிக்கும் அரசுக்கும் தொழில் செய்யும்
வணிகருக்கும் வருவாய் கூட்ட என

வாங்கி வந்த போனஸ் கூட
விளம்பரம் காட்டும் வித்தையானது

போனஸ்ஸாக பெறும் பணத்தை
பேலன்ஸ் ஒன்னு கூட இல்லாமல்

அரசாங்கம் வரியாகவும்
அதை சிறு வியாபாரியிடம் இருந்து

பெரு வியாபாரி கொள்ளை அடிக்கும்
கொள்ளையாக அல்லவா தெரிகிறது
நரகாசுரன் செத்த நாள் தான்
நமக்கு தீபாவளி என்றால்

நன்மையே தந்தாலும்
நமக்கு அந்த தீபாவளி தேவையில்லை

அடுத்தவன் வருத்தத்தில் நமக்கு
அப்படி ஒரு சந்தோஷம் தேவையில்லை

அப்படி அவன் வேண்டி கொண்டதால் தான்
அந்த திருவிழா என்ற சமாளிப்பு வேண்டாம்

அப்படி ஒருவர் வேண்டி இருந்தால் என்னைவிட
அவர் நிச்சயமாக நல்லவனாக தான் இருக்க முடியும்

ஆயிர கணக்கில் கொட்டி கொடுத்து
அரை நிமிட சந்தோஷத்திற்கு

சுற்றுப்புற சூழலை நாம் மசுபடுதனுமா
சுத்தம் செய்ய என அரசு கூடுதலாக

வரி போடனுமா
வேண்டாம் அய்யா இந்த தீபாவளி

நானும் சுத்தம் செய்யரேன்னு
நாடு பூர சுத்தி வரும் நம் பாரதபிரதமர்

ஒரு படம் எடுத்து அதை
ஒலகம் முழுக்க பார்க்க facebookஇல் போடனுமா

பண்டிகை பட்டியலில் இருந்து தீபாவளியை
புறம் தள்ளுங்கள்

தமிழனுக்கு உரிய பண்டிகை
தமிழர் திருநாள் எனும் பொங்கல் தான்

என் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு என சொல்லும்

அது தான் நன்றி சொல்லும் நல்ல நாள்
அதுவே நமக்கு திருநாள் பெருநாள்