மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

20.10.20

அறியாமை சுகமும் ஆன்மீக சுகமும்!!!



அறியாமை சுகமும் ஆன்மீக சுகமும்!!!

மூட்டைகளை உதறாமல் மூலவனை சுமக்க முடியாது🙏

கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர்.அவர், 'எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!' என்றபடியே இருப்பார்.

ஒருநாள்! கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.  இதைக் கேட்டதும், ''நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன். என்ன சொல்றே?'' - கேட்டார் சந்நியாசி.

''நானும் இதைத்தான் நினைச்சேன். ஆனா, வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப, எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை. அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா... அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்!'' என்றார் ஆசாமி.   சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.  

ஆண்டுகள் ஓடின!

ஒருநாள்... கோயிலுக்கு வந்தார் சந்நியாசி! அதே சந்நியாசி; அதே பெட்டிக்கடை; அதே ஆசாமி!

''எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன். ஆனா, இன்னும் அதற்கான வேளை வரலை'' - அதே புலம்பல். 
சந்நியாசி மெள்ள புன்னகைத்தபடி, ''சரி... இப்பவாவது புறப்படேன்!'' என்றார். 

''பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். பேரப் பிள்ளைங்களையும் கண்ணாலே பார்த்துட்டா. என் கவலையெல்லாம் தீர்ந்துடும்!'' என்று விவரித்தார் நம்ம ஆள்! 

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சந்நியாசி வந்தார்.
''எனக்கு ஆசையே இல்லை...''- வழக்கம்போல் கேட்டது குரல்!
''இப்போதாவது வருகிறாயா?''- இது சந்நியாசி. 
''கோர்ட்ல கேஸ் இருக்கு. வழக்கு முடிஞ்சிட்டா வந்துடலாம்''- பதிலுரைத்தார் ஆசாமி. வழக்கமான புன்னகையுடன் கிளம்பினார் சந்நியாசி. 

ஆண்டுகள் பல கழிந்தன. மீண்டும் வந்தார் சந்நியாசி. ஆனால், அந்த ஆசாமியைக் காணோம். கடையில் இருந்தவரிடம் நம்மவர் குறித்து விசாரித்தார் சந்நியாசி.

கடையில் இருந்தவர், ''சாமி... எங்க அப்பாதான் அவரு. 'எல்லா பந்தங்களையும் விட்டுட்டு உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, போன வருஷம் ஒருநாள்... நெஞ்சு வலின்னவரு, பொட்டுனு போயிட்டாரு. அப்பா இந்நேரம் உயிரோட இருந்திருந்தா, நிச்சயம் உங்க கூட வந்துருப்பாரு சாமீ...''- கவலையுடன் சொன்னார் நம்மவரின் மகன். 

இதைக் கேட்ட சந்நியாசி, ''உங்க அப்பன் எங்கேயும் போயிடலே. இங்கதான் இருக்கான். அதோ... அங்கே பார்... அதென்ன?''

''அது நாய்... இங்கேதான் சுத்திக்கிட்டிருக்கு!''

''அதான் உங்க அப்பன். இப்ப பாரு'' என்றவர், கையைத் தட்டினார்.

அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயின் தலையைத் தட்டினார். உடனே அது, ''எனக்கு ஆசையே இல்லே...'' என பேசத் துவங்கியது. ''அடேய்... என்னோட வந்துடறியா?'' - சந்நியாசி கேட்டார். 

''சாமி! ஏராளமா சொத்து சேத்து வச்சுட்டேன். பிள்ளைங்க அதை சரியா காப்பாத்துவாங்கன்னு தோணலீங்க. கடையை சரியா பூட்டாமே போயிட றாங்க. அதுதான் நாயா பிறந்து காவல் காத்துக்கிட்டு கிடக்கிறேன்!''- இப்படி நாய் சொன்னதும், 'கடகட'வெனச் சிரித்தார் சந்நியாசி.

பிறகு அவர் சொன்னார் ''அறியாமையில் சுகம் கண்டவர்களுக்கு ஆன்ம விடுதலை எப்படிக் கிடைக்கும்?''

இன்றைக்கு ஆலயங்களைத் தேடிப் போகிற அன்பர்கள், முதலில்... அறியாமை சுகத்திலிருந்து விடுபட வேண்டும்... 
பிறகு, ஆன்மிக சுகத்தை அடையாளம் காண வேண்டும்!

இந்த கதை நமக்கும் பொருந்துமோ...🤔
----------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.10.20

தியானத்திற்கு ரமண மகரிஷி சொன்ன விளக்கம்!!!!


தியானத்திற்கு ரமண மகரிஷி சொன்ன விளக்கம்!!!!

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். 

அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். 

*தியானம் என்றால் என்ன?*

சிரித்துக் கொண்டே அந்தச்சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச்  சொன்னார்.

சிறுவனிடம், *"நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்.*

அதே மாதிரி.....

*எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது.* புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம்.

சுற்றியுள்ளோருக்குக்கோ ஒரே குழப்பம். 

சிறுவன் *மகரிஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்.* 

சிறுவனை சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் *'ம்'* சொன்னார் ரமணர்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது *'ம்'* வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய, பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய *'ம்'* சொல்வதாக இல்லை. 

தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. 

சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி  எப்படா இந்தத் தாத்தா *'ம்'* சொல்லுவார் என்று காத்திருந்தான். 

சுற்றியுள்ளவர்களுக்கும் என்ன தான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

எதிர்பாராத ஒரு நொடியில் *'ம்'* சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.

ரமணர் புன்னகைத்தபடி.....

*"இரண்டு 'ம்' - களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும், என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும்,  அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பெயர் தியானம்..... புரிந்ததா இப்போ?"* என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.

ரமணர் சொன்ன அந்த.....

*இரண்டு 'ம்' கள்*

*வாழ்வு'ம்',*

*சாவு'ம்'*.....

இந்த இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே, ஒருவன் தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள..... *முதிரும் காலமே வேறுபடுகிறது.*
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.2.20

மறுமலர்ச்சி உண்டாக இதைப் படியுங்கள்!!!!


மறுமலர்ச்சி உண்டாக இதைப் படியுங்கள்!!!!

ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

*இழந்த செல்வம் மீட்டு தரும்* " தென்குரங்காடுதுறை "

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்* "திருவாடுதுறை"

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே!
🗣🗣🗣🗣🗣
*கடன், சங்கடங்கள் போக்கும்* " திருபுவனம் சரபேஸ்வரர் "

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.
🗣🗣
*வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம்* "திருச்சேறை"

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு

*பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர* "வாஞ்ஸ்ரீசியய்ம்"

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள். 🗣🗣🗣🗣

*பிதுர் தோஷம் நீக்கும்* " ஆவூர் பஞ்ச பைரவர்கள் "கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".
சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.
🗣🗣🗣🗣🗣🗣
*மரண கண்டம் நீக்கும்* " திருநீலக்குடி "
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

*மாங்கல்ய தோஷம் நீக்கும்* " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

*கிரக தோஷங்கள் விலக்கும்* " சக்கரபாணி "

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.
🗣🗣🗣🗣
*பெண் பாவம் தீர்க்கும்* " திருவிசநல்லூர் "
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.
[24/10, 22:47] ssudarsan2004:  *தேவாரம்  பெற்ற தலங்கள்*

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44
2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள்           --- 52
3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                   --- 13
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                     ----  02
5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள்                        ---- 111
6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள்                           ---- 28
7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள்                          ----- 25

                                                                   மொத்தம்              275
               இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள்                             25

                சிவஸ்தலத்   தொகுதிகள்

       வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்       

1.     *அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*

1. திருக்கண்டியூர்          ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர்         ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை             ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர்          ---  தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி            ----  சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை         --- காமனை எரித்தது
8. திருக்கடவூர்           ---- யமனை உதைத்தது

2.       *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்*

1. கேதாரம் (இமயம்)         ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்)      ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி)       ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம்  (மகாராஷ்டிரம்)  ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்)       ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்)   ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்)           --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்)          ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்)        ---- இராமநாதேஸ்வரர்

            *முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர்          ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம்           ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை  ---- நினைக்க முக்தி தருவது
4. காசி                ---- இறக்க முக்தி தருவது

                 *பஞ்சபூத ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம்    ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா                   ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை                ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி                      ----- வாயு (வளி)
5. சிதம்பரம்                          ---- ஆகாயம் (விசும்பு)

                 *நடராஜருக்கான பஞ்ச சபைகள்*

1. திருவாலங்காடு     --- இரத்தின சபை
2. சிதம்பரம்           --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை             --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி      --- தாமிர சபை
5, திருக்குற்றாலம்     --- சித்திர சபை

              *(வியாக்ரபாதர் வழிபட்டவை)  புலியூர்கள்*

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

                  *சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்*

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

1. திருஆரூர்  -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. திருக்கோளிலி  -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. திருவாய்மூர்   ---- நீலவிடங்கர்  --- கமல நடனம்
7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத

           *சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்*

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர்  ---- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர்                       ---- அசபா தாண்டவம்
3. மதுரை                           ---- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்கொளியூர்                     ----. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி              ---- பிரம தாண்டவம்

                *சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்*

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

                 *காசிக்கு ஈடான ஸ்தலங்கள்*

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

                        *நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்*

1.            நந்தி சங்கம தலம்             --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)
2.            நந்தி விலகியிருந்த தலங்கள்  ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3.            நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்

பாக்கம்
4.            நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு
5.            நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி
6.            திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7.            திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக

           
          *சப்த ஸ்தான (ஏழூர் விழா)  தலங்கள்*

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

             *திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்*

1. திருவோத்தூர்    --- ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம்    ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம்       --- கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா       --- ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல்          --- கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர்    --- வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி  --- நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம்    --- கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர்     --- அரங்கநாதர்
12. திருவக்கரை     --- அரங்கநாதர்

        *ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்*

     உட்கோயில்                            கோயில்

1. திருவாரூர் அரநெறி                 ----   திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்       ---    திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில்             ----  மீயச்சூர்

               *காயாரோகணத் தலங்கள்*

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

              *மயானத் தலங்கள்*

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

              *கைலாயத் தலங்கள் தெட்சண கைலாசம்*

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

             *பூலோக கைலாசம்*

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

       *அழகிற் சிறந்த கோயில்கள்*

1. தேரழகு     ---    திருவாரூர்
2. வீதி அழகு  ---    திருஇடை மருதூர்
3. மதிலழகு   ---    திருவிரிஞ்சை
4. விளக்கழகு  ---    வேதாரண்யம்
5. கோபுரமழகு --    திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி

        *பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு*

1. திருக்குற்றாலம்  -- திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம்    --- காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா  --- மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர்     --- சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை         --- இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம்       --- அர்த்தசாம பூசை சிறப்பு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்

குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர், சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி, திருநீலகண்டயாழ்பாணர்.

நடராசர் அபிஷேக நாட்கள் 6

மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை.  ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

ஆயிரங்கால்  மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும் ஒரே தேவாரத் திருத்தலம்

திருநல்லூர்த் திருத்தலம்.

அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்

“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.

திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.

திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.

*சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு*

1.            மயூர தாண்டவம்  - மயிலாடுதுரை
2.            அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3.            கடிசம தாண்டவம்- திருவக்கரை
4.            சதுர தாண்டவம்- திருநல்நூர்
5.            சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6.            லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி

அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.

சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி, சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர், கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.

              *பெரிய கோபுரத் தலங்கள்*

திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி

*மண்டபங்கள் சிறப்பு*

வேலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்
பேரூர் -  கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

*யானை ஏறாத மாடக் கோயில்கள் சில*

1.     திருவானைக்காவல்
2.    ஆக்கூர்
3.    திருத்தேவூர்
4.    திருக்கீழ்வேளூர்
5.    சிக்கல்
6.    வலிவலம்
7.   அம்பர்மகாளம்
8.   தண்டலை நீள் நெறி
9.   திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

                    *பெரிய லிங்கம்*

 கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.

திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.
           

                       *பெரிய நந்தி*

தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

                   *புகழ்பெற்ற கோயில்கள்*

             கோயில் – சிதம்பரம்
             பெரியகோயில்- தஞ்சை
             பூங்கோயில் – திருவாரூர்
             திருவெள்ளடை- திருக்குருகாவூர்
             ஏழிருக்கை-சாட்டியக்குடி
             ஆலக்கோயில்-திருக்கச்சூர்
             கரக்கோயில்- திருக்கடம்பூர்
             கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
             மணிமாடம்- திருநறையூர்
             தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
             அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
             சித்தீச் சுரம்- திருநறையூர்.

*நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்*

1.            திருஞானசம்பந்தர் - ஆச்சாள் புரம்
2.            திருநாவுக்கரசர் - திருப்புகலூர்
3.            சுந்தரர் - திருவஞ்சைக்களம்
4.            மாணிக்கவாசகர் – தில்லை

*சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்*

1.            மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2.            அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3.            மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4.            உமாபதி சிவம்- சிதம்பரம்.

*சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்*

1.            மெய்கண்டார்- திருவண்ணாமலை
2.            அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3.            மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4.            உமாபதி சிவம்- சிதம்பரம்

       பக்தர்கள் பொருட்டு

திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.
------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.2.20

ஆனந்தம் இன்று ஆரம்பம்

ஆனந்தம் இன்று ஆரம்பம்

வேத வியாசர்  மகாபாரதம் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது சரஸ்வதி_நதி பேரிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது. இவர் கதை சொல்வதற்கு சிரமமாக இருந்தது. கீழே போ என்று சொல்லி விட்டார்.

பத்ரிகாசிரமத்தில் கீழே போனவள், திரிவேணி சங்கமத்தில் அந்தர்வாகினியாக கலக்கிறாள்.

ஒரு செயலைச் செய்யும் போது, இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பது போலவே, கடவுள் வழிபாடும் இடையூறின்றி இருக்க கோயிலுக்குப் போக வேண்டும்.

குளம், குட்டை, ஏரி. ஆறு என எங்கு தண்ணீர் இருக்கிறதோ, அங்கு தான் தண்ணீர் எடுக்க முடியும். அதுபோல், எங்கு கோயில் உள்ளதோ அங்கு தான் அருள் என்னும் தண்ணீர் கிடைக்கும்.

பகவானுக்கு விக்ரஹநிலை மிக உயர்ந்த நிலை. எப்போது வேண்டுமானாலும் இதை வணங்கப் போகலாம். எப்போது வேண்டுமானாலும், அருளாகிய தண்ணீரைப் பெறலாம்.

நைமிசாரண்யம், திருவேங்கடம் (திருப்பதி), வானுமாமலை என பகவான் பல இடங்களில் விக்ரஹ நிலையில் காட்சி தருகிறான். வேறு நிலையில், அவன் காட்சி தரமாட்டானா என்றால் அதுவும் தருவான்.

அந்தணர்களுக்கெல்லாம் நெருப்பில் காட்சி தருவான். யோகிகளுக்கெல்லாம் உள்ளத்தில் காட்சியளிப்பான்.

இது மட்டுமல்ல... எங்கும் அவர் இருப்பார் என்று ஒரு கட்சி சொல்லும். ஆனால், நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு பிரதிமை (உருவம்) வடிவில் காட்சி தருகிறான்.

சரி...கடவுளை நீ பார்த்திருக்கிறாயா என்று யாராவது நம்மிடம் கேட்டால், உருவத்தை மனதில் கொண்டு, பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாமா? என்றால் ஆம் என அடித்துச் சொல்ல வேண்டும். காரணம், அதனுள் இருப்பவன் நிஜபகவானே.

உருவம் நிஜமென்றால், அதை யாராவது கொள்ளை அடித்து விட்டுப் போகிறார்களே! அது உயிருள்ள தெய்வம் என்றால், அவர்களைத் தண்டிக்க வேண்டியது தானே! அல்லது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானே, என்று அடுத்து சிலர் கேள்வி கேட்பார்கள். இதை கரிக்கட்டையால் சுவரில் எழுதுகிறவர்களும் உண்டு.

நம்மிடம் யாரும் கேள்வி கேட்காதவரை தெம்பாக இருப்போம். கேட்டு விட்டால் பயந்து விடுவோம்.

பகவானின் அர்ச்சா வடிவம் (உருவம்) தண்டிக்க வந்ததல்ல. தண்டனை ஏதும் இல்லாமல் கருணையோடு நம்மைக் காண வந்திருக்கிற வடிவம்.

அவன் நம் குற்றத்தைப் பார்ப்பதில்லை. அது நம்மைக் காக்கத்தான் வந்துள்ளதே தவிர, தன்னைத்தானே காத்துக் கொள்ளாது.

 ஒரு அலுவலகம் என இருந்தால் சட்ட திட்டம் வைத்துக் கொள்ளலாம். பகவானும் சட்ட திட்டம் வகுத்துக்கொண்டால் நம்மால் தாங்க முடியுமா? குற்றம் பாராமல் உள்ளார். இழுத்த இழுப்புக்கு வந்துள்ளார். அவர் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு வினாடி நினைத்தால் போதும். இங்கு யாராலும் இருக்க முடியாது.

பிரதமர் நம் ஊருக்கு வந்தால், ஜில்லா அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்வர். பரபரப்புடன் இருப்பார். அவர் வந்து நிகழ்ச்சியை முடித்து விட்டுப் போன பிறகு தான் மூச்சு விடுவர்.

அங்கே அவரவருக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் அவரவரும் நிற்க முடியும். மீறிப்போனால், வெளியே தூக்கிப் போட்டு விடுவார்.

பகவானும், சட்ட திட்டம் என சொல்லிக்கொண்டு இப்படி செய்தால் நம்மால் தாங்க முடியுமா!

அவர் கருணையின் வடிவாக உள்ளதால் தான், நம்மால் இங்கே இருக்கவாவது முடிகிறது. அந்த தெய்வத்தை புளியோதரை, புஷ்பம் என சமர்ப்பித்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

 பால், பழமெல்லாம் அது சாப்பிடுமா? என்றால், நிச்சயமாக சாப்பிடும். வாயால் என்ன! மூக்கால் கூட சாப்பிடும். இதற்கெல்லாம் ஆதாரமிருக்கிறது.

தொண்டைமான் சக்கரவர்த்தி சீனிவாசனுடன்_பேசியுள்ளார்.

திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் பெருமாள் ஆற்று மணலைப் பொன்னாக்கி அளித்துள்ளார். காஞ்சிப் பெருமாள் திருக்கச்சி நம்பியுடன் பேசியுள்ளார்.

இவையெல்லாம் உருவ வடிவில் பகவான் நம்மோடு உறவாடுகிறான் என்பதற்கான சான்றுகள் தானே!

அப்படியானால், அவன் நம் முன் நேரடியாகத் தோன்ற வேண்டியது தானே என்று ஒரு கேள்வி எழுகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அவன் நரசிம்மமாக நம் முன்னால் வந்தால், நிலைமை என்னாகும்?

 நாம் என்ன செய்தாலும், போனால் போகிறது என்று தானே விட்டு வைத்துள்ளார்! வேண்டாமென அவர் அடங்கி இருக்கிறார். அதுதான் அவரது பெருமை. நாம் அவருக்கு பிரசாதம் செய்தாக வேண்டுமா?, என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

அவர் பெயரை வைத்து நாம் சாப்பிடத்தான் பிரசாதம். லட்டு, சர்க்கரைப் பொங்கல் என பிரசாதம் வைப்பது என்பது அவரவர் விருப்பம். நம் விருப்பத்தைக் கூட தன் விருப்பமாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

விதுரர் வீட்டுக்கு கண்ணன் வந்தான். அங்கே கறியமுது ஏதும் இல்லை, தாம்பூலம் இல்லை. பழம் மட்டுமே இருக்கிறது. அதையும், பகவான் முகத்தைப் பார்த்தபடியே உறித்துக் கொடுக்கிறார். எப்படி?

பகவானைக் கண்ட பரவச பதட்டத்தில், என்ன செய்கிறோம் என்ற உணர்வின்றி, பழத்தைக் கீழே போட்டு விட்டு தோலை அவரிடம் கொடுக்கிறார்.

அதையும் அவன் விருப்பமாக ஏற்றுக்கொண்டான்.

ஆக, பகவான் தனக்கு உணவா பெரிதென நினைத்தான்! பக்தனின் பதட்டத்தையும், பக்தியையும், தூய உள்ளத்தையும் அல்லவா உணவாகக் கொண்டான்!

தினமும் அரைமணி நேரமாவது பக்தியுடன் முறைப்படி வணங்குங்கள்.

பெண்கள் இதை அவசியம் செய்ய வேண்டும். விளக்கை கை ஏற்றட்டும். நாம சங்கீர்த்தனத்தை வாய் சொல்லட்டும். மனம் எப்போதும் அவனை நினைக்கட்டும்.

உங்கள் வீட்டிலுள்ள பகவானின் உருவத்தை உங்கள் குழந்தை போல் கவனித்துக் கொள்ளுங்கள்.

குகன் பகவானுக்கு தேன், தினைமாவு கொடுத்தான். சபரி கடித்த பழத்தைக் கொடுத்தாள். அன்போடு எதைக்கொடுத்தாலும் அவன் பெற்றுக் கொள்கிறான். ஆண்டாள் என்ன கொடுத்தாள்!

தூமலர் துவித்தொழுது, என்று பாவையில் பாடுகிறாள். அவள் அளித்தது தூயமலர்கள்
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.1.20

எது வழிபாடு?


எது வழிபாடு?

சிந்தியுங்கள்!!!!

வழிபாடு!  ஒரு  எச்சரிக்கை!

இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால்.......

என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே!

வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட....

இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை!

ஆகா…..நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலைமாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா!

நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்!

ஆனால், இங்கே , இறைவன் திருமுன்னோ….? சுத்தம்! ஒரு ஈ, காக்கா கூட இல்லை! என்னதான்யா நடக்கிறது இங்கெல்லாம்?

நீங்கள் வழிபடும் சிவனை விட சக்தி வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?

"நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கிய நாவுக்கரசர் பரம்பரையில் தோன்றிவிட்டு…

“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே” என்று உரத்துச்சொன்ன சம்பந்தர் மரபில் தோன்றிவிட்டு, சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்களை நாடிப் போய் வீழ்ந்து கிடக்கிறீர்களே!

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை!

நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி, தோசபரிகாரம் செய்யணும், அது செய்யணும் இது செய்யணும் என்று வற்புறுத்தி, உங்களையெல்லாம் தவறாக வழிநடத்தும் சில பிரபல ஆன்மீக வியாபர பத்திரிகைகள், ஆன்மீக வியாபார பேச்சாளர்களைச் சொல்லவேண்டும்!

சோதிடம் ஒரு அருங்கலை! மறுக்கவில்லை!

நல்லதோ, கெட்டதோ, நடக்கப்போவதை அறிந்துகொள்ளும் ஆவலில், சோதிடர்களை நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல நாள் பார்க்க, அவர்களைத் துணைக்கழைப்பதையோ, தவறென்று கூறவில்லை. ஆனால், திருக்கோயில் வழிபாடுகளிலேயே சோதிட நம்பிக்கை மூக்கை நுழைப்பதை எந்த வகையிலும்  ஏற்றுக் கொள்ளவே முடியாது!

ஆயிரத்துமுன்னூறு வருடங்களுக்கு முன்பே சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா!

இறைநம்பிக்கை கொண்ட எவரையுமே, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று……….. பின்னே? எதற்காக இத்தனை அச்சம்?

ஆழ்ந்துபார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. இப்படி தோச பரிகாரம், கிரகப்பெயர்ச்சி, என்று ஆயுளைக் கழிக்கும் எல்லோருமே தன்னம்பிக்கை அற்றவர்கள்! எடுத்ததற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்கள்!

உங்களைக் ஏளனம் செய்வதற்காக இதைக்கூறவில்லை!

தயவு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

இறைவழிபாட்டைப் பொறுத்தவரை, நம் சமயத்தில் முழு எழுவரல் (சுதந்திரம்) இருப்பது உண்மை தான். அதைத் தவறாகப்
பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்!

மிகப்பழைய ஆலயங்களுக்குச் சென்றீர்களானால், அங்கே நவக்கிரக திருமுன்களே இருக்காது! அப்படியும் இருக்கின்றதென்றால் அது மிக அண்மையில் கட்டப்பட்டதாகவே இருக்கும்! 500 வருடங்களிட்கு முன்பு
எந்த சிவாலயங்களிலுமே நவக்கிரக சன்னிதானங்கள் இருந்ததில்லை.

அந்தந்த சிவாலயங்கள் யாரால் வழிபடப்பட்டதோ அந்த மூர்த்தி மட்டும் தனியாக பிரதிஸ்டை செய்யப்படிருந்தது.

உதாரணமாக சனி, திருநள்ளாறில் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதனால் அந்த மூர்த்தியை மட்டும் விசேடமாக
பிரதிஷ்டை பண்ணி இருந்தனர் . இது நம் நாயன்மார்கள் தோன்றிய தலங்களில் அவர்களின் விசேட சந்நிதிகள் அமைவது
போல..

திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை!
அது சனி பகவான் கோயில்,
திங்களூர் சிவன்கோயில் இல்லை, அது சந்திரன் கோயில்!
வைத்தீசுவரன் கோவில் சிவன்கோயில் இல்லை, அது செவ்வாய் கோயில்!
இப்படித்தான் இன்று அவை பிரபலம் பெற்று விளங்குகின்றன.

நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரியவை! அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை!
உண்மைதான்!

ஆனால், ஆணை செலுத்துபவனிடமே அடைக்கலம் புகுந்தால், அவை நம்மை என்னதான் செய்யமுடியும்? அதை விடுத்து, கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது, நமக்கு அருள்வதற்குக் காத்திருக்கும் இறைவனை அவமதிப்பதே ஆகும் அல்லவா??

கோளறு பதிகம், திருநீலகண்டப் பதிகம், திருத்தாண்டகம் போன்ற திருப்பதிகங்கள், நம் எத்தகைய ஆபத்துக்களையும்,
துன்பங்களையும் நீக்கக் கூடியவை. அவற்றை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

மேற்படி பதிகங்களையும், அந்தந்த நவகிரகங்கள் வழிபட்ட பரிகார தலங்களில் நாயன்மார்களால் பாடப்பட்ட தேவார
திருபதிகங்களையும் பாடி மூலவரான சிவபெருமானை வழிபடுவதை விட
நம் இடர் களைவதற்கான உபாயமே வேறு இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

மூலமூர்த்தியை வழிபட்ட பின் நவகிரகங்களை வழிபடுவது ஏற்புடையது.

மூலமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபடாமல் செய்யும் நவக்கிரக வழிபாட்டால் யாதொரு பலனும் இல்லை.

தோச நிவர்த்தி பரிகாரம், அது, இது என்று கொட்டும் பணத்தை,வசதிகுறைந்த சிவாலயங்களில் தொண்டு செய்வதற்கும்,
சிறிய சிதிலமடைந்த சிவாலயங்களை புனரமைப் பதிலும், சிவனடியார்களிட்கு உதவுவதிலும் செலவழித்தால்
சிவபுண்ணியமாய் பல்கி பெருகிவந்து இம்மையிலும், மறுமையிலும் நம்மை காத்து இன்பம் தரும்.

ஏதாவது ஏழை எளியவர்களுக்கு உதவுவதிலும், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என்று எங்காவது போய்
அன்னதானம், ஆடைதானம் செய்வதிலும் செலவழியுங்கள். வயிறும் மனமும் நிறைந்து, நாத்தழுதழுக்க, “நீங்க நல்லாயிருக்கணும் ஐயா, அம்மா” என்று அவர்களில் ஒரே ஒருவர் மனதார நினைத்தாலும் போதும். அந்த
வாழ்த்தே சிவனாணையாய், உங்களைப் பற்றவரும் சனிபகவானை ஓட ஓட விரட்டிவிடுமே!

ஆலயங்களில் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், சிவாச்சாரியார்கள் தயவு செய்து இதில் கூடிய கவனமெடுங்கள்! ஏதோ
ஆலயத்துக்கு வருமானம் வருகிறதே என்பதற்காக, ஈசன் முன்னிலையிலேயே சிவத்துரோகம் நிகழ்வதற்கு, தயவு செய்து
அனுமதிக்காதீர்கள்!

"நமது சமய ஒழுக்கத்தை பேணாமையே புறசமய மதமாற்றங்களிட்கான காரணம்.

நாமும் நலமாக வாழ்ந்து எம் சமயத்தையும் வாழ வைப்போம்"

"மேன்மைகொள் சைவசமய நீதி விளங்குக உலகமெல்லாம்."
சிவசிவ!. சிவாயநம அருணாச்சலம்
(படித்ததில் பின்பற்ற வேண்டியது)
----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.1.20

ஆன்மீகக் கதை: ராமானுஜரும் சுல்தானி பீவியும்!!!!!


ஆன்மீகக் கதை: ராமானுஜரும் சுல்தானி பீவியும்!!!!!

மைசூரில் இருந்து தும்கூர் செல்லும் வழியில் ஜக்கனஹள்ளி. அதற்கு அருகே உள்ள ஊர் தான் Melkote என்னும் மேலக்கோட்டை.

சோழ அரசன் சொந்த ஊரில் மத வெறி கொண்டு அலைகிறான். இறைப்பணி இடையறாது நடக்க வேண்டுமே என்று இராமானுஜர் திருவரங்கத்தில் இருந்து இந்த ஊர் பக்கம் வருகிறார்.

ஊர்க் கோவில் மண்மேடாய் கிடக்கிறது. மக்களைக் குறை சொல்ல முடியுமா? பாவம், அவர்களே தவிச்ச வாய்க்குத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்!

பார்த்தார் இராமானுஜர்! அகண்ட காவிரியைப் பார்த்துப் பழகியவர் ஆயிற்றே!

முதலில் மக்கள் பணி! பின்பு மாயவன் பணி!!

தொண்டனூர் என்னும் பக்கத்து ஊரில் நீர் தேக்கி வைக்க பெரிய ஏரி ஒன்றை வெட்டுவிக்கலாம் என்று ஏற்பாடுகள் செய்கிறார். தொண்டனூர் நம்பி என்ற அவர் சீடர், இதற்குப் பெரிதும் உதவி! பின்பு இந்த வறண்ட ஊரில், கல்யாணி குளம் என்ற குளம் ஏற்படுத்தி, அடிக் கால்வாய் மூலமாக அதில் நீர் நிறைத்தார். பின்பு நீர்வண்ணனையும் மனக் குளத்தில் நிறைத்தார்!

கோவில் பணிகள் கிடுகிடுவென்று தொடங்கின!

மண்ணில் புதையுண்ட மூலவர் விக்ரகம் - திருநாராயணப் பெருமாளைக் கண்டு எடுக்கிறார்.

ஒரு காலத்தில் சிறப்பாய் விளங்கிய ஆலயம் இப்படிக் கவனிப்பார் இன்றி ஆகி விட்டது! பேசாமல் விட்டு விட்டு வேறு செழிப்பான கோவிலுக்குப் போய் வசதியாகச் சாப்பிட்டுக் கொண்டே பணி செய்யலாமே! அவருக்கு வயது வேறு 80ஐ நெருங்குகிறது! ஆனால் உடையவர் இராமனுஜருக்கு மனசு வருமா?

புதிதாக ஆயிரம் ஆலயங்கள் எழுப்பவதற்கு முன், சிதிலமானவற்றைச் சீரமைக்கலாம் இல்லையா? பெற்ற தாய்க்கு வைர அட்டிகை வாங்கித் தருவதற்கு முன், அவள் கிழிந்த புடைவைக்கு வழி காணலாம் இல்லையா? கோவில் சீரமைப்பு முழு வீச்சில் நடக்கிறது.

* மூலவரைப் போல் உற்சவர் ஒருவர் இருக்க வேண்டுமே! எங்கே அந்தத் திருவுருவம்?

# பிஜப்பூர் சுல்தான் முன்னொரு படையெடுப்பில் வந்து பல செல்வங்களையும் சிலைகளையும் கவர்ந்து கொண்டு போய் விட்டான் ஐயா. இனி கேட்டாலும் அந்த ராமப்ரியன் என்ற தங்க விக்ரகம் கிடைக்காது - மக்கள் எல்லாரும் சொல்கிறார்கள். (இது பிஜப்பூர் சுல்தான் இல்லை, தில்லி சுல்தான் என்று சொல்பவரும் உண்டு).

இராமானுஜர் ஒரு கணம் சிந்திக்கிறார். தாமே சுல்தானிடம் போய் உற்சவரைப் பெற்று வருவதாகச் சொல்கிறார். வயதான காலத்தில் கால் கடுக்க நடந்து சுல்தானின் மாளிகையை அடைகிறார்.

சுல்தான் முதலில் சற்று ஏளனமாகப் பேசினாலும், பின்பு இராமானுஜரின் அன்பையும் அறிவுக் கூர்மையும் கண்டு சற்றே மனம் மாறுகிறான். வேறு எந்தப் பொருளும் தரமாட்டேன். இந்தப் பொம்மையை மட்டும் தான் தருவேன்! சம்மதமா நாமக்காரப் பெரியவரே?

மன்னா, மற்ற செல்வம் எல்லாம் கேட்க மாட்டேன். செல்வத்துள் செல்வம் மட்டுமே எனக்கு வேண்டும்.

செல்வப் பிள்ளை அவன். சம்பத்குமாரன் என்பது தான் அவன் முழுப் பெயர். இருந்தாலும் செல்வப் பிள்ளை என்று தான் ஆசையாய் அழைக்கிறோம்! அவனை மட்டும் தருவாய் அப்பனே!

சரி பெரியவரே, கொள்ளைப் பொருட்கள் சேமிக்கும் கூடாரத்தில் தேடச் சொல்கிறேன்.....

ஆகா....என்ன? ஆட்கள் எவ்வளவு தேடியும் எங்கும் கிடைக்கவில்லையா! எங்கே போய் இருக்கும்? நான் களவாடிய பொருளையே களவாடிய களவாணிப் பயல்கள் யார்? ஆங்....ஞாபகம் வந்து விட்டது. என் ஆசை மகள் லச்சமார் சுல்தானி, அதை அந்தப்புரத்துக்கு அல்லவா விளையாட எடுத்துப் போனாள்?

இராமானுசருக்கு கண் கலங்கி விட்டது."நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்பது போய்,"நீ ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்று மாற்றிப் பாட வேண்டியது தானோ!

பருவ மங்கை சுல்தானி, தந்தையின் சபைக்கு வருகிறாள்; இராமானுஜருக்கோ கண்கள் எல்லாம் கரியவன் மேலேயே உள்ளது. ஆனால்....

அப்பா, இது என் ஆசை பொம்மை மட்டும் இல்லை; இதன் அழகைப் பாருங்களேன்! இதழில் எப்படி குறுஞ்சிரிப்பு சிரிக்கிறது! நான் எங்கு சென்றாலும், இதை எடுத்துக் கொண்டு தானே செல்வேன். இதை எப்படி வாப்பா என்னால் தர முடியும்? போங்க வாப்பா! தர முடியாது! தூங்கும் போது கூட, இதை கட்டிக் கொண்டு தானே தூங்குவேன்!

அடப் பெருமாளே! கடைசியில் உன் கதி இந்தக் காலத்து Teddy Bear போலவா ஆக வேண்டும்! :-)

அவள் தான் கரடிப் பொம்மை போல் கட்டிக் கொண்டு தூங்கினால், ஏ ராமப்ரியனின் சிலையே, உனக்கு அவளை விட்டு எழுந்து, நடந்து வர கூடத் தெரியாதா?  நடந்த திருக்கோலம் என்பார்களே! இது தானா உலகளந்த உன் பராக்கிரமம்?

இராமானுசர் எவ்வளவு கேட்டும், விக்ரகத்தைத் தர மாட்டேன் என்று அடம் பிடித்தாள் சுல்தானி. சின்ன வயசுப் பெண் தானே! அரசனுக்கோ தர்ம சங்கடம். தருகிறோம் என்று ஜம்பமாய் சொல்லி விட்டோமே! ஆசை வார்த்தைகள், வேறு பொம்மைகள் என்று காட்டினான் - எதற்கும் மசியவில்லை சுல்தானி. பெண்ணை மிரட்டினான்! உறுமினான்!

வேண்டாம் என்றார் உடையவர். "குழந்தே! சரி, நீ தர வேண்டாம். உன் கையிலேயே வைத்துக் கொள்! ஆனால் அதுவாய் என்னிடம் ஓடி வந்தால் நான் எடுத்துக் கொள்ளட்டுமா?"

"இந்தத் தாத்தாவுக்கு கிறுக்கு பிடித்து விட்டது போலும். வாப்பாவைக் கேட்டாலே மிரட்டி வாங்கிக் கொடுத்து விடுவார். பாவம் தாத்தா, நல்லா ஏமாறப் போகுது" - சிரி சிரி என்று சிரித்துக் கொண்டாள். சரி சரி என்று தலை சரித்துக் கொண்டாள்!

இராமானுசர், இறைவனை மனதில் துதித்து, "என்ன திருவிளையாட்டோ இது! இருப்பிடம் ஏகுவீர் பெருமானே", என்று பிரார்த்தித்தார்.தன் கருணை பொழியும் கண்களால், பெருமாளையே அன்புடன் பார்த்துக் கடாட்சித்து,

எந்தை வருக, ரகுநாயகா வருக, என்கண் வருக, எனது ஆருயிர் வருக!
வாரும் செல்வப் பிள்ளாய், வாரும் செல்வப் பிள்ளாய்...என்று அழைக்க....

ஆ...என்ன அதிசயம்!

செல்வப் பிள்ளை விக்ரகம், அவள் மடியை விட்டு நீங்கி, சாவி கொடுத்த பொம்மை போல், சிறு சிறு அடியாய், குடு குடு நகர்ந்து, இராமானுசரின் கரங்களுக்குள் வந்து விட்டதே!

நன்றி மன்னா! குழந்தாய், நாங்க வருகிறோம்! - இராமானுசர் சொல்ல, அவருடன் கோஷ்டியும் கிளம்பி விட்டது! இது என்ன, கண் முன்னே கண் கட்டு வித்தையா? சபையில் எல்லாரும் வாயடைத்துப் போய் நிற்க, சுல்தானிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!

நீங்களே பாருங்கள் செல்வப் பிள்ளையை, அவன் திருமுகத்தை, அவன் பொம்மையாக இருந்து தேய்ந்து போன தழும்புகளை!
________________________________________

அன்று முதல் சுல்தானி, பித்துப் பிடித்தவள் போல் ஆகி விட்டாள். ஊண் இல்லை, உறக்கம் இல்லை! Teddy Bear-ஐக் கட்டியணைத்து உறங்க முடியவில்லை! பெற்றோர் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்! அதை விட விசேடமான பொம்மைகள், ஆட்டம் போடும் பதுமைகள்! - ஹூம்...ஒன்றும் சரி வரவில்லை!

பார்த்தான் அரசன்; இராமானுசர் குழாத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டான்!

ஆனால் காலம் கடந்து விட்டதே! அவர்கள் எல்லையை விட்டு எப்போதோ போய் விட்டார்களே! "மோசக்காரர்கள், கொள்ளையர்கள், கண்கட்டி வித்தைக்காரர்கள்" - அரசன் சீறினான்! கொள்ளையடித்த பொருள் கொள்ளை போனால் கொள்ளையர்கள் மற்றவரைக் கொள்ளையர்கள் என்று கூவுவது வாடிக்கை தானே! :-)

"வேண்டாம் வாப்பா, நானே போய் அந்தத் தாத்தாவிடம் கேட்டு வாங்கி வருகிறேன்! என்னுடன் சில ஆட்களை மட்டும் அனுப்புங்கள்" கிளம்பி விட்டாள் சுல்தானி; அவள் கிளம்பக் கேட்டு, பக்கத்து நாட்டு இந்து இளவரசன் ஒருவன், குபேர் என்று பெயர், அவள் பின்னாலேயே கிளம்பினான் பாதுகாப்பாக!

ஏன்? - ஏன்னா அவனுக்கு இவள் மேல் ஒரு-காதல்! ஒரு-தலைக் காதல்!!
________________________________________

அங்கு என்னடாவென்றால் மேலக்கோட்டை நெருங்கும் போது ஒரு சோதனை! வழியில் வழிப்பறிக் கள்வர்கள்!

நாமக்காரப் பசங்க, ஆண்டிகள் தானே என்று விட்டுவிட்டனர்; சற்று தொலைவு போனதும் தான் இராமானுசர் கையில், துணி மூடியுள்ள, ஜொலிக்கும் மூர்த்தியைப் பார்த்தார்கள்.

அடடா, பெருமாளைத் துரத்திக் கொண்டு பின்னே செல்ல இத்தனை கொடியவரா, இல்லை இவர்கள், கொடி-அடியவரா?

ஒரு கிராமத்துக் குடியிருப்புக்குள் அந்தக் கோஷ்டி புகுந்தது. அதுவோ ஒரு புலையர் சேரி! உடையவர் ஒரு குடிசையில் உதவி கேட்டு உள்ளே புகுந்தார்.உடன் வந்த மற்றவர்க்கோ தயக்கம்! ஆனாலும் உடையவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது?

சேரி மக்கள் கொள்ளையரைத் திசை திருப்பி அனுப்பி விட்டனர்; இராமானுசர் வெளியில் வர, துணிக்குள் என்ன சாமீ, என்று ஆர்வமாய்க் கேட்டனர் சேரி மக்கள்!

துணிக்குள் இருக்கும் செல்வப் பிள்ளையைப் பார்த்தவுடன், சேரி மக்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! குடிசைக்குள் ஓடிப் போய், கம்பங்கூழும், வாழைக்காயும் எடுத்து வந்து கண்ணனின் காலடியில் வைத்தனர். இவர்களின் தூய அன்பைக் கண்டு இராமானுசர் கண் கலங்கினார். "வாருங்கள் என்னுடன் கோவிலுக்கு; செல்வப் பிள்ளையை நிறுத்தி வைக்கலாம்" என்று அழைத்தார்.

நடுநடுங்கி விட்டனர் சேரி மக்கள்; இராமானுசர் கூட வந்தவர்கள் சில பேருக்குக் கூட இது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை! ஆனால் இந்தச் "சீரங்கத்துச் சாமியார்" விடுவதாக இல்லை! கணவன் நாரணனைக் காத்ததால், அவன் மனைவி, லட்சுமியின் வீட்டார் இவர்கள்; திருவின் வீட்டார்!

தீட்டுக் குலம் என்பதை மாற்றித், திருக்குலம் என்று ஆக்கினார். திருக்குலத்தார் என்று பெயரும் சூட்டினார்.

800 ஆண்டுகள் பின்பு வந்த காந்தியடிகள் ஹரி-ஜன் (ஹரியின் மக்கள்) என்று சொல்வதற்கு முன்பே, சொல்லிச் சென்றார் இராமானுசர். வைக்கம் கோவில் நுழைவு செய்த தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே, செயலில் செய்து காட்டிய தீரர் ஆனார் இராமானுசர்.
________________________________________

மேலக்கோட்டை திருநாராயணன் ஆலயத்தில், உற்சவர் செல்வப் பிள்ளையின் விக்ரகம் குடி கொண்டாகி விட்டது! வழிபாடுகளும் தொடங்கி விட்டன!

பின்னால் துரத்திக் கொண்டு வந்த சுல்தானி...அரசனின் செல்வப் பெண், துரும்பாய் இளைத்துப் போய் விட்டாள்; கலைந்த கூந்தலும் ஒட்டிய தேகமுமாய் அவளைப் பார்த்தால் ராஜகுமாரி என்றே சொல்ல முடியாது! வந்து சேர்ந்தாள், நொந்து நூலாய்!

கண்ணன் காலடியில்...

உற்சவர் ஆகி விட்ட தன் கண்ணனைப் பார்த்து விட்டுக் கண் கலங்கினாள், சுல்தானி. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவளுக்குத் தெரிந்து விட்டது! கத்திக் கலாட்டா செய்யவில்லை. ஆனால் கண்ணீரும் நிற்கவில்லை!

இரு கை தலை மேல் குவித்தாள்! மூர்ச்சை ஆனாள். மயங்கி ஒடுங்கி, கீழே விழுந்தாள்! உயிர் பிரிந்தாள்!

அனைவரும் பயந்து விட்டார்கள்! இராமானுசருக்குச் சேதி சொல்லப்பட்டது! கண் கலங்கினார்; அவருக்குத் தெரியும் அவள் கதி என்னவாயிற்று என்று!

கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே
யான் உனைத் தொடர்ந்தாள்; சிக்கெனப் பிடித்தாள்;
எங்கு எழுந்து அருளுவது இனியே?
புகல் ஒன்று இல்லா அடியாள், அவன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து விட்டாள்!

அவளுக்கு வேண்டிய மரியாதைகள் குறைவின்றிச் செய்யப்பட்டன. அவளைப் பின் தொடர்ந்து வந்த காதலன் குபேர் கதறி அழ, அவனைத் தேற்றி, மனச்சாந்தி பெற, பூரி ஜெகன்னாதர் ஆலயம் அனுப்பி வைத்தனர்.

அவள் சிறிய உருவத்தினை, மூலவரின் திருவடிகளில் செய்து வைத்தார், இராமானுசர்! இன்றளவும் ஆலயத்தில் ஸ்ரீ பாத தரிசனத்தின் போது, அவளுக்கு ஆரத்தி காட்டுகிறார்கள்!

துலக்கராய்ப் பிறந்து, துழாய் மாலை வாசனை அறியாத போதும்,
பரந்தாமனிடத்தல் தன்னையே பறி கொடுத்தவள் - அதனால்
சுல்தானி பீவி என்பவள் நாச்சியார் ஆனாள்! வெறும் நாச்சியார் இல்லை!
துலுக்கா நாச்சியார்!! பீவி நாச்சியார்!!!
ராமானுஜரின் கிருஷ்ண பக்தி
-----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.12.19

முதல் தரிசனம் யாருக்கு?


முதல் தரிசனம் யாருக்கு?

*திருப்பதியில் முதல் தரிசனம் யாருக்கு..?*.

"முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?"

திருமலையில் சுப்ரபாத சேவைன்னே ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம். அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க. சடக்குன்னு
அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க! கோவிலில் முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?

வேதம் ஓதுபவர்களுக்கா? - இல்லை!
தமிழ் ஓதும் விற்பன்னருக்கா - இல்லை!
அரசனுக்கா? மந்திரிக்கா? - இல்லை! இல்லை!!
படித்த மேதைக்கா - இல்லை!
நேத்து உண்டியலில் எல்லாரையும் விட அதிகமாப் பணம் கொட்டினவருக்கா? - இல்லவே இல்லை!

இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, எங்கிருந்தோ "மாஆஆ" என்று ஒரு சத்தம்!

கூட்டம் அதிகம் இல்லை! குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்;

இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம். இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலில்! அருகே நந்தா விளக்கு! எதிர்ப் பக்கம் கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாம் எல்லாரும் நிற்கிறோம்.

வாயிலைக் காக்கும் துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.

அர்ச்சகர்கள் குடங்களில் நீருடன் நிற்கின்றனர். பூக்குடலைகள் தாங்கிக் கொண்டு இன்னும் சில பேர் காத்துள்ளனர் - யாருக்கு?

திருமலையில் ஜீயர் என்னும் வைணவத் தலைவருக்கு "பெரிய கேள்வி அப்பன்" என்ற தூய தமிழ்ப் பெயர்! ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், கேள்வியப்பன் என்ற தமிழ்ப்பெயரைச் சூட்டி, அந்தப் பதவியை உருவாக்கினார் இராமானுசர்.

அந்தக் கேள்வியப்பர் பூட்டின் சாவியைத், துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றார்; பின்னர் அவரும் காத்துள்ளார் - யாருக்கு?

அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனை தம்பூராவில் இசைக்கப்படுகிறது;
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தமிழ்த் திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாசுரமும் அப்படியே இசைக்கப்படுகிறது! - வேறு மொழிச் சத்தங்களோ, கோஷங்களோ ஏதும் இல்லை!

மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்து ஓசை எழுப்புகின்றன; காற்றில் நெய் தீபத்தின் மணமும், பச்சைக் கர்ப்பூரத்தின் வாசனையும் மூக்கைத் துளைக்கிறது!

இதோ.....திருக்கதவம் திறக்கப்படுகிறது!
எல்லோர் கண்களும் எக்கி எக்கி, எம்பெருமானைச் சேவிக்கத்
துடியாய்த் துடிக்க...

அடச்சே!....வெள்ளைத் திரை ஒன்று போடப்பட்டுள்ளதே! நாம் காண முடியாதா? - முடியாது...முதல் தரிசனம் வேறு யாரோ ஒருவருக்கு!
- யாரப்பா அது?

ஜீயர், அர்ச்சகர்கள் எல்லாரும் உடனே ஒதுங்கிக் கொள்கிறார்கள்!
படிக்காத, பகட்டு இல்லாத ஒருவர் உள்ளே வர, எல்லாரும் வழிவிட்டு
ஓரமாக நின்று கொள்கிறார்கள்!

யாருக்கு இப்படி ஒரு மரியாதைன்னு பாக்குறீங்களா? - ஒரு மாட்டு இடையனுக்கு!

பசுவும், கன்றுமாய் ஓட்டி வரும் இடையன், பொற்கதவின் முன் வந்து
நிற்க...மெல்லத் திரையை விலக்கி....அவன் மட்டும் இறைவனை ஹா...வென்று பார்க்கிறான்! அவனுடன் பசுவும் கன்றும் இறைவனைக் காண்கின்றன!

பசுவும் கன்றுமாய், வரும் கோனாரின் முகத்தில் தான் திருமலை
அப்பன் முதலில் விழிக்கின்றான்!

இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாய் இருந்து வரும் ஒன்று! சாதி வித்தியாசங்கள் பார்க்கப்பட்ட காலத்தில் கூட, இந்த வழக்கம்
நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது.

கோ+விந்தன் = பசு+காப்போன் அல்லவா அவன்!

உயிர்கள் என்னும் பசுக்களைக் காத்து மேய்க்கும் "நல்ல மேய்ப்பன்"!
அதனால் தான் பசுவைக் காட்டி, அன்றைய பணியை, இறைவனுக்கே அறிவுறுத்திச் செல்கிறான் இந்த இடையன்!

அதற்கு அப்புறம் தான் ஜீயரும், அர்ச்சகர்களும், இன்ன பிற அடியவர்களும் ஒவ்வொருவராய் உள்ளே செல்கிறார்கள்! அனைவர் கையிலும் மங்கலப் பொருட்கள் - கண்ணாடி, விளக்கு, மலர்மாலை என்று...

கண்ணாடியைத் தூக்கிப் பிடித்து, இறைவனுக்குக் காட்டியபடியே செல்கிறார்கள்!

*"ஸ்ரீ மலையப்பன் திருவடிகளே சரணம்*.
----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.12.19

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. 2500 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த வீட்டைப் பற்றி ஒருவர் விவரிக்கிறார். பார்த்து மகிழுங்கள்!



2. இறைவனைப் பற்றி அற்புதமாகப் பேசுகிறார் ஒரு அன்பர். கேட்டு மகிழுங்கள்!



3. ஆண் ஒரு சக்தி: பெண் ஒரு சக்தி. அருமையாக விவரித்துப் பேசுகிறார் அன்பர் கோபிநாத், கேட்டு மகிழுங்கள்



4. உன்னைப் பாதுகாக்கக்கூடியது எது? விடையளிக்கிறார் ஒரு அன்பர். கேட்டு மகிழுங்கள்!



அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.7.19

நல்லது நடக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!!!


நல்லது நடக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!!!

கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள்

காரணம் சொல்லாதே பக்தி செய் ; பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !

உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !!!

நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள் வாழ்விலும் இருந்தது !
அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள்! நீயும்
அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !

1. தகப்பன் கொடுமைக்காரனா ? ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !

2. தாயால் கெட்ட பெயரா ? பரதனைப் போல் பக்தி செய் !

3. அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ? தியாகராஜரைப் போல் பக்தி செய் !

4. குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா? குசேலரைப் போல்
பக்தி செய் !

5. மனைவி அடங்காப் பிடாரியா ? சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !

6. கணவன் கொலைகாரப் பாவியா ? மீராவைப் போல் பக்தி செய் !

7. புகுந்த வீட்டில் கொடுமையா ? சக்குபாயைப் போல் பக்தி செய் !

8. பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ? பூந்தானத்தைப் போல் பக்தி செய் !

9. பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா? நாரதரைப் போல் பக்தி செய் !

10. நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ? விதுரரைப் போல் பக்தி செய் !

11. நீ தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ? கானோ பாத்ராவைப் போல் பக்தி செய் !

12. உடலில் வியாதியால் வேதனையா ? நாராயண பட்டத்ரியைப் போல் பக்திசெய்!

13. யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ? ஜயதேவரைப் போல் பக்தி செய் !

14. இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ? குந்திதேவியைப் போல் பக்தி செய் !

15. மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ? மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !

16. சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ? பாண்டவர்களைப் போல் பக்தி செய் !

17. உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ? ஜயமல்லரைப் போல் பக்தி செய் !

18. பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?கைகேயியைப் போல் பக்தி செய் !

19. உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ? நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !

20. குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ? வால்மீகியைப் போல் பக்தி செய் !

21. கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றாயா ? பீஷ்மரைப் போல் பக்தி செய் !

22. உன் கணவன் கஞ்சனா ? புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய் !

23. வியாபாரத்தில் நஷ்டமா ? சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !

24. உன் கணவன் நாஸ்திகனா ? மண்டோதரியைப் போல் பக்தி செய் !

25. உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ? விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !

26. கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ? சுநீதியைப் போல் பக்தி செய் !

27. குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ? ஜடபரதரைப் போல் பக்தி செய் !

28. நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ? அக்ரூரரைப் போல் பக்தி செய் !

29. ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ? சோகாமேளரைப் போல் பக்தி செய் !

30. சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ? ரந்திதேவரைப் போல் பக்தி செய் !

31. உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ? யசோதையைப் போல்
பக்தி செய் !

32. பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ? தேவகியைப் போல் பக்தி செய் !

33. அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ? கோபர்கள், கோபிகைகள் போல் பக்தி செய் !

34. பிறவிக் குருடனா ? சூர்தாஸரைப் போல் பக்தி செய் !

35. உடல் ஊனமுற்றவரா ? கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !

36. நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ? சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !

37. நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ? பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !

38. உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ? பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !

39. வாழ்க்கையே பிரச்சனையா ? மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப் போல் பக்தி செய் !

இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !

பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு என்றும் ஒரே ஆதாரம் ! அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும் உனக்கு சமாதானம் இல்லை ! இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை நீ தொலைத்தது போதாதோ ? இனிமேல் காரணம் சொல்லாதே !

கிருஷ்ணனிடம் பக்தி செய்ய தொடங்கிவிடு !!
ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!!!!
----------------------------------------------------------------------
படித்து வியந்தது; பகிர்ந்து மகிழ்கிறேன்
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.19

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி!


திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி!

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.

ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது. இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.

அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இலை விபூதியின் மகத்துவம் ;

அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுருக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுருக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டதோடு, அதை உட்கொள்ளவும் செய்தார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.

அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலின் சிறப்பு, சுவாமியின் மேன்மை போன்றவைக் குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை படப் பாடினார்.

சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் சொல்லி இருக்கிறார்.

பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார்.
7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள்.  பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.

"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"

பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."

ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.

இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.

இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.

தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீரும்

ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.

அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.

"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.

"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.

விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
என்று பாடுகிறார்.



நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து *செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.*
-------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.1.19

வாருங்கள், தமிழ் தேன் பருகுவோம்!!!!


வாருங்கள், தமிழ் தேன் பருகுவோம்!!!!

*தமிழ் தேன் பருகலாமா*

ஒரு புலவர் காளமேக புலவரிடம் கேட்டார்.

“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” என்றார்

“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேக புலவர்

”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். *செருப்பில்* தொடங்கி *விளக்குமாறில்* முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.

என்ன கொடுமை?

என் இறைவனை,
முத்தமிழ்முதல்வனை,
செந்தமிழ் தெய்வத்தை,
வெற்றி வேல் அழகனை,
கருணைக் கடவுளை,
கண்கவர் காளையை,
முருகனை
பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா?
தகுமா? முறையா? என மனம் கேட்க

அதை தகும் என்றும்  ,  முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேக புலவர்

...இப்படி .....

 *செருப்புக்கு வீரர்களை*
*சென்றுழக்கும் வேலன்*
*பொருப்புக்கு நாயகனை*
*புல்ல- மருப்புக்கு*
*தண்தேன் பொழிந்த*
*திரு தாமரைமேல் வீற்றிருக்கும்*
*வண்டே விளக்குமாறே*

செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம்.
குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே,
அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.விளக்குமாறு என்பதற்கு விளக்கம் ,  சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.....?

இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.....!
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.12.18

காண்போரை வியக்க வைக்கும் அதிசய கல் கருடன்!


நாச்சியார் கோவில், கும்பகோணம்
----------------------------------------------------------------

காண்போரை வியக்க வைக்கும் அதிசய கல் கருடன்!

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன் <<

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும்
தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று
மயூரசன்மனை அழைத்து வா" என்றார் தேவசேனாபதி.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச்
சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும்
மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற
சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறா?" என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு" என்று.

‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை
ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும்
நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும்
கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு
ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து
சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும்.

காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை
எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை
உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும்
வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்."

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப்
பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி
அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி
அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம்வரை
பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே,
மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும்

இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில்
எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும்,
ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே
#நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் #திருநறையூரில் நிற்கிறது.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை
முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு
மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!..

மேலும் படிக்க:  Wikipedia

Nachiar Kovil or Thirunarayur Nambi Temple in Thirunarayur, a village in the outskirts of Kumbakonam in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Vishnu and his wife Lakshmi. Constructed in the Dravidian style of architecture, the temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil canon of the Azhwar saints from the 6th to 9th centuries AD. It is one of the 108 divyadesams dedicated to Vishnu, who is worshipped as Srinivasa Perumal and his consort Lakshmi as Nachiyar. The temple is the place where god Vishnu is believed to
have initiated Pancha Samskara (religious initiation) to Thirumangai Azhwar. The temple follows the Thenkalai mode of worship.

The temple is believed to have been built by Kochengat Cholan of the late 3rd century AD, with later contributions from Medieval Cholas and Vijayanagar kings. A granite wall surrounds the temple, enclosing all its shrines, while it has a five-tiered rajagopuram, the temple's gateway tower. The temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.

Vishnu is believed to have appeared to the sage Medhavi and married his daughter at this temple, witnessed by Brahma and other gods. Six daily rituals and four yearly festivals are held at the temple, of which the Brahmotsavam, celebrated during the Tamil month of Margazhi (December–January), is the most prominent. The Kal Garuda image in the temple used during the festive occasions is believed to increase in weight seeking 4, 8, 16, 32, 64 and 128 people in succession when the procession comes out of various gates from the sanctum to the main entrance of the temple.
-----------------------------------------------------------------------
படித்து வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.12.18

நமது கஷ்டங்கள் எப்போது பஞ்சாய் பறக்கும்?


நமது கஷ்டங்கள் எப்போது பஞ்சாய் பறக்கும்?

பஞ்சம்_தீர்க்கும்_பஞ்சபுராணம்
-
பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன.

அவற்றில் #தேவாரம் (7 திருமுறைகள்),

#திருவாசகம் (திருக்கோவையார்),

#திருவிசைப்பா

#திருப்பல்லாண்டு

#திருத்தொண்டர்_புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்ச புராணம் பாடுதல் எனப்படுகிறது.

சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. பஞ்சபுராணம் பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்ல வேண்டும். பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்த புராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை.
-
சைவ நெறி பிறழா திருக்கோயில்களில் நாம் சென்று வழிபடுகின்ற நேரங்களில் அங்கே சில காட்சிகளைக் காண்பதுண்டு. பெரிய கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள்.
-
அவர்கள் முடித்த பிறகு திராவிட வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்ச புராணம் பாடுங்கள் என்றும் கூறுவர். ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசைப்பார். அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.
-
மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாரயணம் செய்யலாம்.
-
#விநாயகர்_வணக்கம்

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே."
-
#திருஞானசம்பந்தர்_அருளிய_தேவாரம்

"தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே."
-
#மாணிக்கவாசகர்_அருளிய_திருவாசகம்

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே."
-
#சேந்தனார்_அருளிய_திருவிசைப்பா

"கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே."
-
#சேந்தனார்_அருளிய_திருப்பல்லாண்டு

"பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே."
-
#சேக்கிழார்_அருளிய_பெரியபுராணம்

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்."
-
#அருணகிரிநாதர்_அருளிய_திருப்புகழ்

"ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே."
-
#கச்சியப்ப_சிவாச்சாரியார்_அருளிய_கந்தபுராணம்

"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்."
-
#திருஞானசம்பந்தர்_அருளியது

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே."

-
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!