Astrology சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்
அலசல் பாடம்
1.3.2012
சுவாமி விவேகானந்தா அவர்கள் spiritual gaint of India என்ற பெரும் புகழைப் பெற்றவர் இந்தியாவில் எத்தனையோ மகான்கள் தோன்றி/அவதரித்து, வாழ்ந்து, இறையடி சேர்ந்துள்ளார்கள். யாருக்கும் அந்தப் புகழ் கிடைக்கவில்லை. உலக மக்களால் நன்கு அறியப்பெற்றவர் ஒருவர் உண்டு என்றால், அது விவேகானந்தர் மட்டுமே!
1893 ஆம் ஆண்டு மதங்களுக்காக நடைபெற்ற மாபெரும் உலக மாநாட்டில் கலந்துகொண்டு, இந்து மதத்தின் மேன்மையை உலகறியச் செய்தவர் அவர்.
அவரைப் பற்றித் தெரியாதவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவல்ல!
இன்று அந்த மகானின் ஜாதகத்தை அலசுவோம்!
விவேகானந்தரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள் விக்கி காமாட்சி அக்காவிடம் உள்ளது. கேட்டு வாங்கிப் படியுங்கள். அதற்கான தொடர்பு சுட்டி
http://en.wikipedia.org/wiki/Swami_Vivekananda
-----------------------------------
பிறப்பு விவரம்
12.1.1863ல் காலை 6:33 மணிக்கு கல்கத்தா நகரில் பிறந்தவர்
தனுசு லக்கினம்
ஹஸ்த நட்சத்திரம், கன்னி ராசிக்காரர்
கர்ப்பச்செல் இருப்பு சந்திர திசையில் 4 வருடம் 5 மாதங்கள் 1 நாள்
இயற்பெயர்: நரேந்திரநாத த்த்தா
ராமகிருஷ்ண மடங்களின் நிறுவனர்
ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் , ஜனன யோகம் என்று பல தலைப்புக்களில் அரிய நூல்களை எழுதியுள்ளார்.
1902ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 4ஆம் தேதி -
தனது 39ஆம் வயதில் அவர் முக்தியடைந்தார்
-----------------------------------------------------------------------
தனுசு லக்கினம் + லக்கினத்தில் சூரியன்
2ல் புதன் + சுக்கிரன்
5ல் செவ்வாய்
6ல் கேது
10ல் சனி & சந்திரன்
11ல் குரு
12ல் ராகு
ல்க்கினாதிபதி குரு 11ல்
பாக்கியஸ்தான அதிபதி சூரியன் 1ல் (திரிகோணத்தில்)
பூர்வபுண்ணியாதிபதி செவ்வாய் தன் ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார்
கர்மகாரகன் சனி, பத்தாம் வீட்டில் கொடிபிடித்துக்கொண்டு உள்ளார்
1
லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் (11ல் அமர்ந்தால்) செய்யும் முயற்சிகளுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.
If lagna lord is placed in the eleventh, the native will get maximum benefits for all his efforts பதினொன்றில் அமர்ந்த லக்கினாதிபதியால், தான் பிறந்த நோக்கத்தை அவர் சர்வ சாதாரணமாக நிறைவேற்றி விட்டுப்போனார்
fulfillment of his mission towards his birth.
2
பாக்கிய ஸ்தான (9ஆம் வீட்டு அதிபதி) லக்கினத்தில் அமர்ந்தால் எல்லா பாக்கியங்களும், பெருமைகளும், புகழும் ஜாதகனைத் தேடி வரும்.
If the lord of gains is in the lagna, the native will get all the gains in his life
3
கரமகாரகன் சனி பத்தில் அமர்ந்தால், ஜாதகன் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவான். சாதனைகள் செய்வான்.செயல்களை முடிக்கும் உத்வேகம்
(killing instinct) இருக்கும்
4
லக்கினத்தில் சூரியன் அமர்ந்ததால், நல்ல உடற்கட்டையும், தோற்றத்தையும், உடல் வலிமையையும் கொடுத்தான். சூரியன் அரசகிரகம், லக்கினத்தில் அமர்ந்த அவன் சுவாமிஜிக்கு மதிப்பு, மரியாதை, புகழ் என்று அனைத்தையும் வழங்கினான்.
Sun in lagna blessed him with good physical vitality, will-power, honour & dignity.
5.
கரமகாரகன் சனி பத்தில் அமர்ந்தால், ஜாதகனை ஒரு நாளாவது சிறையில் இருக்கும்படி செய்துவிடுவான் என்பார்கள். சாதாரண பிறவிகளுக்கு வேண்டு மென்றால் அது மெய்ப்படலாம். ஆனால் 10 ஆம் இடத்து சனி, ஜாதகனை அவன் நுழையும் துறையில் உச்சத்திற்குக் கொண்டுபோய் விடுவார். விவேகானந்தர் வாழ்க்கையில் அதைச் செயல் படுத்திக்காட்டினான் சனீஷ்வரன். ஆன்மீகத்தில் நுழைந்து உலகப் புகழ்பெறும்படி செய்ததில் சனீஷ்வரனுக்கும் பங்கு உண்டு!
6.
சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு& கேதுவைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம் எனப்படும். சுவாமிஜிக்கு சூரியனுக்கு இரண்டில், சுக்கிரனும், புதனும் உள்ளார்கள். அந்த யோகத்தினால் அவர் அனைவரையும் நேசிக்கும் மனதைப் பெற்றார். உண்மைக்கு மட்டும் துணை போனார். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார்.
7.
அதுபோல சந்திரனுக்கு இரண்டில், சூரியன், ராகு & கேதுவைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது சுனபா யோகம் எனப்படும்.சுவாமிஜியின் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில் குரு பகவான் உள்ளார். அதன் காரணமாக அதீத புத்திசாலித்தனம், புகழ், செல்வம் எல்லாம் அவருக்குக் கிடைத்தது அல்லது அமைந்தது. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
8.
குருவும் செவ்வாயும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கொருவர் ஏழில் அமர்ந்து இருந்தாலும் அதற்குப் பெயர் - அந்த மைப்பிற்குப் பெயர் குரு மங்கள யோகம். சுவாமிஜியின் ஜாதகத்தில் மேஷத்தில் செவ்வாய். அவருக்கு ஏழில் துலாமில் குரு பகவான். அந்த அமைப்பு ஜாதகருக்கு தர்ம சிந்தனை, அற்ச் செயல்கள், எதையும் முனைப்போடு செய்யும் ஆற்றல் ஆகியவற்றைக் கொடுத்தன
9.
தவ யோகம் அல்லது தவ வாழ்க்கை: சுக்கிரன், கேது, சனி ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் இருக்கும் அமைப்பிற்குப் பெயர் தவ யோகம். சுவாமிஜியின் ஜாதகத்தில் அநத அமைப்பு உள்ளது. அதானல் சுவாமிஜியின் வாழ்க்கை சுய நலமில்லாத தியாக வாழ்க்கையாக அமைந்த்து. மக்களின் மேன்மைக்காக - அவர்களை நல் வ்ழியில் செலுத்துவதற்காக பாடுபட்டார். இறைப் பணியில் முழு மூச்சுடன் செயல்பட்டார்.
10.
பத்தாம் வீட்டிற்குரிய புதன் இரண்டில் வந்து அமர்ந்தது. இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம். வந்தமர்ந்த புதன் அவருக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுத்தான். எவரையும் கிறங்க அடிக்கும் பேச்சுத் திறமை அவரிடம் இருந்த்து.
11.
பன்னிரெண்டில் அமர்ந்த ராகுவால் அவர் தேசம் முழுவதும் பயணித்தார். பல உலக நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பை ராகு வழங்கினான்.
12.
இரண்டாம் வீட்டுக்காரன் சனி பத்தில் அமர்ந்தான். அது இரண்டிற்கு ஒன்பதாம் வீடு. அவருடைய வாழ்க்கை லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்படும் படியாக அமைந்த்து. இறைப்பணியுடன், மனித நேய சேவையையும் அவர் செய்தார்.
13.
சாது யோகம் என்ற சந்நியாச யோகம். மாந்திக்கு மூன்றிலும் ஆறிலும் சுபக்கிரக்ங்கள் இருக்கும் அமைப்பு. இங்கே மாந்திக்கு மூன்றில் குருவும், ஆறில் சுக்கிரனும் இருப்பதைப் பாருங்கள். ஜாதகன் துறவறம் பூணும் அமைப்பு. சுவாமிஜியும் முழுத் துறவியாக வாழ்ந்துவிட்டு இறைவனடி சேர்ந்தார்.
14.
ராஜ யோகம். கேந்திர அல்லது கோண அதிபதிகள் இருவர், சேர்க்கை, அல்லது பரிவர்த்தனை அல்லது பார்வையால் ஒருவருக்கொருவர் தொடர்புடன் இருக்கும் அமைப்பு. சுவாமிஜியின் ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் அப்படி உள்ளனர். குரு ஒன்று மற்றும் நான்காம் வீடுகளுக்கு அதிபதி. செவ்வாய் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி. ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில். ராஜ யோகத்தைக் கொடுத்தார்கள்
ராஜ யோகம் என்றால் பென்ஸ் காரில் அல்லது ரோல்ஸ் ராய்ஸ் காரில் போவதா? இல்லை! எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவது. சாதனைகளைச் செய்வது. அதுதான் ராஜ யோகம்
15. ராஜ சம்பந்த யோகம். ஆத்ம் காரகன் சூரியனும், மனகாரகன் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருக்கும் அமைப்பு. சுவாமிஜியின் ஜாதகத்தில் சூரியனுக்குப் பத்தில் சந்திரன். சந்திரனுக்கு நான்கில் சூரியன். பலன்: பல அரசர்களின் நட்புக் கிடைக்கும் அமைப்பு. சுவாமிஜிக்கு பரோடா மன்னர், ராமநாதபுரம் ராஜா போன்றவர்களின் நட்பு தேடி வந்த்து.
சுவாமிஜி முக்தி அடைந்தார் என்று துவக்கத்திலேயே குறிப்பிட்டு விட்டேன். அவதார புருஷர்களுக்கெல்லாம் மரணம் கிடையாது. ஆகவே அவருடைய ஆயுள் ஸ்தானத்தைப் பற்றி நான் எழுதவில்லை.ஆனால் உங்களுடைய குறுகுறுப்பைப் போக்குவத்ற்காக அவருடைய மரணத்தைப் பற்றிய செய்தியை இப்ப்திவின் கடைசியில் கொடுத்துள்ளேன்
-----------------------------------------
சுவாமி ஜாதகத்தைப் பற்றி
அஷ்டகவர்க்கம் என்ன சொல்கிறது.
(நமக்குப் பிடித்த, நாம் புகுந்து விளையாடக்கூடிய பகுதி)
அதையும் பார்ப்போம்!
கிரகங்களின் சுயவர்க்கம்:
சூரியன் - 5 பரல்கள்
சந்திரன் - 5 பரல்கள்
செவ்வாய் - 3 பரல்கள்
புதன் - 4 பரல்கள்
குரு - 7 பரல்கள்
சுக்கிரன் - 4 பரல்கள்
சனி - 5 பரல்கள்
சூரியன் 5 பரல்களுடன் உள்ளார். சந்திரனும் 5 பரல்களுடன் உள்ளார். இந்த அரச கிரகங்கள் இரண்டுமே வலுவாக உள்ளன. சுவாமிஜிக்கு நல்ல தாய் தந்தையர் கிடைத்தனர். செல்வந்த்ர் வீட்டில் பிறந்தார். அன்பான் தாய். சிறுவயது வாழ்க்கை அதிக மகிழ்ச்சியுடன் இருந்தது. நல்ல உடற்கட்டையும், தெளிவான மனதையும் அந்த இரண்டு கிரகங்களும் வழங்கின. Sun is the authority for body and Moon is the authority for Mind
அது போல அதி முக்கிய கிரகங்களான குரு 7 பரல்களுடனும், சனி 5 பரல்கள் உள்ளார்கள். புதன், சுக்கிரன், இருவரும் 4 பரல்களுடன் சராசரியாக் உள்ளார்கள். செவ்வாயைத் தவிர மற்ற அத்த்னை கிரகங்களும் நல்ல நிலைமையில் உள்ளன.
கேந்திரம் மற்றும் திரிகோண வீடுகளின் மொத்த பரல்கள்:
இருக்கும் பரல்கள்: 1,5,9,4,7,10 = 24+21+21+27+27+31 = 151
இருக்க வேண்டிய பரல்கள் = 337 வகுத்தல் 2 = 169
18 பரல்கள் குறைவாக உள்ளன
--------------------------------
மறைவிடங்களில் (தீய விடுகள்) உள்ள பரல்கள்:
இருக்கும் பரல்கள்: 3,6,8,12 = 30+35+32+31 = 128
இருக்க வேண்டிய பரல்கள் = 337 வகுத்தல் 3 = 112
16 பரல்கள் அதிகமாக உள்ளன
தீய வீடுகளில் பரல்கள் அதிகமாக இருந்தால், சாதாரணப் பிறவியாக இருந்தால், சரக்கடித்துவிட்டு டாஸ்மாக் கடை வாசலில் விழுந்து கிடப்பான்.
உயர் பிறவிகள் ஞானிகளாகி விடுவார்கள். துறவிகளாகி விடுவார்கள். சுவாமிஜி துறவியானார்.
-----------------------------------
சராசரி எண்ணான 28 பரல்களுக்கு மேல் உள்ள வீடுகள்:
3ல் - 30 பரல்கள்
6ல் - 35 பரல்கள்
8ல் - 32 பரல்கள்
12ல் - 31 பரல்கள்
10ல் - 31 பரல்கள்
11ல் - 33 பரல்கள்
குடும்ப வாழ்க்கைக்கு உரிய 2, 5, 9 ஆம் வீடுகளில் 25, 21, 21 (மூன்றுமே பரல்கள் குறைவாக உள்ளன) மனைவி எப்படியிருந்தாலும் பரவாயில்லை. வ்ருகிறவளை வைத்துக் குடும்பம் நடத்துவதுதான் குடும்ப வாழ்க்கை. அதனால் 7ஆம் வீட்டை இக்கண்க்கில் சேர்க்கவில்லை.
அவரை மகான் ஆக்க வேண்டிய, துறவியாக்க வேண்டிய கட்டாயம் காலதேவனுக்கு இருந்ததால், ஜாதகமும் அவ்வாறே ஆமைந்தது. லெளகீக வாழ்க்கைக்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் அடிபட்டுப்போய் விட்டன, ஞான வாழ்க்கைக்கு, யோக வாழ்க்கைக்கு, சந்நியாச வாழ்க்கைக்கு உரிய அம்சங்களே ஜாதகத்தில் மேலோங்கி இருக்கிறது / இருந்திருக்கின்றது.
அவரும் ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ஒரு கலக்கு கலக்கிவிட்டுப் போயிருக்கின்றார்.
தன்னைப் போணியாக, குறுகிய வட்டத்திற்குள் உழலும் குடுமபஸ்தனாக இல்லாமல், ஒரு கம்பீரமான மகானாக வாழ்ந்திருக்கிறார். தர்மசிந்தனை, அற்வழியில் நடத்தல், பொது ந்லம் பேணுதல் போன்ற உய்ரிய குணங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன.
----------------------------------------------------
குறுகிய வட்டத்திற்குள் வாழும் குடும்பஸ்தனின் கழுத்து மேல் அவனுடைய குடும்பம் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு உழைத்துக் கொட்டுவத்றகு மட்டுமே அவனுக்கு நேரம் இருக்கும். டவுன் பஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான். பணம், பணம் என்று எப்போதும் அலைந்து கொண்டிருப்பான். மனைவி, பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் அவன் கண்ணில் பட மாட்டார்கள். வேறு நல்ல சிந்தனைகளே அவனுக்கு வராது. கொள்ளியில் வேகின்றவரையில் அவனுக்கு ஞானமே வராது. ஆனால் 90 சதவிகித மக்கள் அந்த வாழ்க்கையைத்தான் விரும்புகிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அம்பானிகளையும், மோடிகளையும், பில் கேட்ஸ்களையும் பார்த்து ஏங்குவார்களே தவிர, இறை அடியாராகும் ஆசையோ அல்லது சிந்தனையோ அவர்களுக்கு இருக்காது. அவர்க்ள் முக்தி அடையமாட்டார்கள். பல பிறவிகள் எடுத்து, தேடிச் சோறு தினம் தினம் தின்றுவிட்டுத்தான் மடிவார்கள்
நங்க நல்லூரில் அல்லது வில்லிவாக்கத்தில் ஒரு வீடு வாங்கும் கனவோடு அலைவார்களே தவிர, ஒரு அர்ச்சகரின் தட்டில் பத்து ரூபாய் தட்சனையாகப் போடும் தர்ம சிந்தனை இருக்காது. நான்காயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் சீவாஸ் ரீகல் சரக்கு வாங்கி அடிப்பார்கள். ஆனால் ஒரு கோவில உண்டியலில் நூறு ரூபாய் கூடப் போட மனது இருக்காது. குடும்பத்தோடு சரவண பவனுக்குச் சென்று ஒரு வேளை உணவிற்கு ஆயிரம் ரூபாய் செலவழிப்பார்கள். ஆனால் ஒரு ஏழையின் பசியை தீர்க்க ஒரு ஐமப்து ரூபாய்த் தாளைக் கொடுக்க அவர்களுக்கு மனம் இருக்காது. அவர்களுக் கெல்லாம் எப்படி முக்தி கிடைக்கும்?
சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
கற்றுக்கொள்வோம்
அன்புடன்
வாத்தியார்
Death of Swamiji
His tours, hectic lecturing engagements, private discussions and correspondence had taken their toll on his health. He was suffering from asthma, diabetes and other physical ailments. A few days prior to his demise, he was seen intently studying the almanac.
(பஞ்சாங்கம்) Three days before his death he pointed out the spot for this cremation—the one at which a temple in his memory stands today. He had remarked to several persons that he would not live to be forty.
On the day of his death, he taught Shukla-Yajur-Veda to some pupils in the morning at Belur Math. He had a walk with Swami Premananda, a brother-disciple, and gave him instructions concerning the future of the Ramakrishna Math.
Vivekananda died at ten minutes past nine p.m. on 4 July 1902 while he was meditating. According to his disciples, this was Mahasamadhi. Afterward, his disciples recorded that they had noticed "a little blood" in the Swami's nostrils, about his mouth and in his eyes.The doctors remarked that it was due to the rupture of a blood-vessel in the brain, but they could not find the real cause of the death. According to his disciples, Brahmarandhra — the aperture in the crown of the head — must have been pierced when he attained Mahasamadhi. Vivekananda had fulfilled his own prophecy of not living to be forty years old.
---------------------------------------------
வாழ்க வளமுடன்!