மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

23.4.12

Astrology: ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்!


Astrology: ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்!

நோய் யாருக்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.

வரட்டும்.

ஆனால் அதிகம் தொந்தரவு இன்றி,  அதிகம் செலவின்றித் தீர்ந்துவிட்டால் பரவாயில்லை. அதற்கு மாறாக அதிகம் செலவாகி, அதிகமான உபத்திரவத்தைக் கொடுத்து, இறுதியில் ஆளையே அள்ளிக்கொண்டு போனால் என்ன செய்வது?

நம் கையில் ஒன்றும் இல்லை.

நோயிலேயே புற்று (cancer) நோய்தான் அதிகம் கொடூரமானது.

எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட அனுபவம் வடுவாக மனதில் பதிந்து விட்டது.

என் தங்கையின் கணவருக்கு புற்றுநோய் வந்து 4 ஆண்டுகள் போராட்ட்டத்திற்குப் பிறகும், தீவிர சிகிச்சையளித்தும், பலனில்லாமல் 2010 ஆம் ஆண்டு  பிப்ரவரித் திங்கள் 17ஆம் தேதியன்று அவர் உயிர் நீத்துவிட்டார். அந்த 4 ஆண்டுகளில் புற்று நோயின் தீவிரத்தை அருகில் இருந்து பார்க்கும்படியாகிவிட்டது. இறக்கும் போது அவரின் வயது 52

என் புத்தகப் பணிகள் முடிந்த பிறகு, நோய்கள் குறித்து, பல ஜாதகங்களை வைத்து ஆய்வு செய்யலாம் என்றுள்ளேன். இறைவன் அதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும்

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம். இது அவருடைய ஜாதகம் அல்ல! வேறு ஒருவருடைய ஜாதகம்!
----------------------------------------------------- ---------------------------

---------------------------------------------------------------------------------
 மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும் என்பார்கள்.

மிதுன லக்கின ஜாதகம். ஆறாம் வீடு செவ்வாய்க்கு உரியது. அந்த வீட்டை செவ்வாய் அதற்கு ஏழில் இருந்து நேராகப் பார்க்கிறார். ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனியின் ஆதிக்கம். உடல்காரகன் சூரியனுடன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்கள் கிரக யுத்தத்தில். அத்துடன் அங்கே உள்ள சுக்கிரன் 12ஆம் வீட்டிற்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவின் ஆதிக்கம்.

12ல் உள்ள (விரையத்தில் உள்ள) செவ்வாய் தசையில் புற்று நோய் ஏற்பட்டது. செவ்வாயை 6ல் இருந்து நேரடியாகப் பார்க்கும் சனி நோயைத் தீவிரப்
படுத்தினார். அதே தசையில் வந்த சனி புத்தியில் ஜாதகருக்கு மரணம் ஏற்பட்டது.

ஆறாம் வீடு, மற்றும் 12ஆம் வீடுகளில் அமரும் கிரகங்கள் தங்கள் தசா புத்திகளில் நோயை உண்டாக்கும். அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபக்கிரகங்களின் சேர்க்கை பெற்றால் ஜாதகன் பிழைத்துவிடுவான். இல்லை என்றால் கஷ்டம்தான்!

அன்புடன்
வாத்தியார்


அடிக்குறிப்பு: கேள்வி - பதில் பகுதி நாளை வெளிவரும். நடுவில் மாறுதலுக்காக ஒரு அலசல் பாடம். இது மேல் நிலைப் பாடத்திற்காக - மேல் நிலை வகுப்பிற்காக (தனி இணைய தளத்திற்காக) எழுதப்பெற்ற பாடம். வகுப்பறை மாணவர்களுக்கும் பயன் படட்டும் என்று இன்று வலையில் ஏற்றியுள்ளேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

34 comments:

V Dhakshanamoorthy said...

///வகுப்பறை மாணவர்களுக்கும் பயன் படட்டும் என்று இன்று வலையில் ஏற்றியுள்ளேன்///

நன்றி!!

Ananthamurugan said...

புதிய கோணம்,புதிய முயற்சி!மிகவும் பயனுள்ள பாடம்.நன்றிகள் அய்யா!!!

eswari sekar said...

present sir

அய்யர் said...

medical astrology நல்ல வரவேற்பு
கூடுதலாக ஒரு ஆலோசனை..

எந்த நோய் பற்றி எழுதும் முன்
அந்த நோய் பற்றிய முன் குறிப்பு

முடிந்தால் நோய்க்கான காரணம்
முயலும் நல்ஆலோசனை என சேரலாம்

உதாரணத்திற்கு இப்படி சில...

///ரசாயனம் கலந்த மாமிச (சிக்கன்-65) உணவுகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் ///


/// சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது ///


"நோய்நாடி நோய் முதல் நாடி "
என்பது வள்ளுவம் தரும் வாக்கல்லவா


"புற்று நோய்"க்கு ஆறு (எண்.6)
என்பது எண்கணிதம்

கணக்கு (கவிதை)புலி தனுசு
அரசியல் அறிஞர் மைனரும்

அய்யரின் இந்த கருத்தை
அப்படியே ஏற்பரோ..?

வழக்கம் போல்
வணக்கமும் வாழ்த்துக்களும்

கலையரசி said...

மாறுபட்ட கோணத்தில் ஜாதக அலசல் இன்று. Feel sorry for your BIL. உங்கள் தங்கைக்கு தேவையான அத்தனை உதவியும் கடவுள் யார் மூலமாவது செய்து கொண்டு இருப்பார், மனோதையிரத்தை அவருள்ளே ஏற்படுத்தவும் செய்வார்.
என்கொரு சந்தேகம் , மனைவி ஜாதகமோ , பிள்ளைகள் ஜாதகமோ , அல்லது பெற்றோர் ஜாதகமோ
ஒருவரின் மரணத்தை தள்ளி போடாத? நம்ம ஊரில் சொல்வார்களே , என் பேரனின் ஜாதகம் இன்னும் எனக்கு கொஞ்சம் ஆயுளை கொடுத்து உள்ளது என்று, அது போல.
எனக்கு உங்கள் பழைய பாடங்களில் எழுதியது ஞாபகம் வருகிறது , ஏழாம் வீடும் , இரண்டாம் வீடும் ஜாதகரின் மரணத்தை அதாவது எந்த மாதிரியான மரணம் என்பதை தெரிவிக்கும் இல்லையா ? அதுவும் நீங்கள் கண்ணதாசன் பாடல் "மரணம் என்ற தூது வந்தது ..." என்று எழுதி இருப்பீர்கள். அந்த பதிவை படிக்கும் (ஜூலை 2010), மரணத்தை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி இருப்பீர்கள். Though we do it practically or not, theortically this is how we need to FACE it, means ACCEPT it. மரணம் பயம் இருப்பதால் தான் பெரும்பாலோனோர் வாழ்க்கை அற முறையில் உள்ளது . அல்லது அதை நோக்கி பயணிக்கிறோம். நன்றி அய்யா , மேல் நிலை பாடங்களில் சிலவற்றை எங்களுக்கு சொல்லி கொடுபதற்கு.-kalai Seattle

Subramanian said...

If the DOB of the person was 30/31 Mar 1957 in ashtakavarga it shows 129 points for the 3/6/8/12 axis against 151 for the rest(1/4/5/7/9/10)

thanusu said...

எனக்கு மிகவும் பிடித்த அலசல் பாடம்.அதிலும் மேல்நிலை பாடத்தை என்போன்ற ஆரம்பநிலையாளருக்கும் தந்தமைக்கு அய்யா அவர்களுக்கு நன்றிகள் .

"புத்தகப் பணிகள் முடிந்த பிறகு ,நோய்கள் குறித்தி ஜாதகங்கள் வைத்து ஆய்வு செய்யலாம் என்று உள்ளேன்".

கண்டிப்பாக செய்யுங்கள் அய்யா நாங்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

தாங்களின் தங்கை குடும்பத்தாருக்கு இறைவன் என்றென்றும் துணை இருப்பான் .

thanusu said...

அய்யர் said...//ரசாயனம் கலந்த மாமிச......

உலகில் புற்று நோய்க்கு அதிகம் பாதிக்கப் படுபவர்கள் சீனர்கள்.அதிக சர்க்கரை நோய்க்கு பாதிக்கப் படுபவர்கள் மலாய்காரர்கள், மாரடைப்புக்கு பாதிக்கப் படுபவர்கள் நம் indian blood (இந்திய, பாகிஸ்தான்,பக்லாதேஷ், அரபு ).

இது ஒரு உலக சுகாதார நிறுவனம் கொடுத்திருக்கும் அறிக்கை.

சீனர்களின் உணவில் இரசயான (வண்ணம்)பூச்சு அதிகம்.அதனை பொறித்து சாப்பிடுவது இன்னும் பாதிப்பை அதிகப் படுத்துகிறது.

soy sauce, oyster sauce இவை இரண்டும் இல்லாமல் அவர்களின் உணவு அமையாது. இவை கருப்பு வண்ணத்தில் இருக்கும்.

thanusu said...

அய்யர் said..."புற்று நோய்"க்கு ஆறு (எண்.6)
என்பது எண்கணிதம். கணக்கு (கவிதை)புலி தனுசு அய்யரின் இந்த கருத்தை
அப்படியே ஏற்பரோ..?

ஏற்கிறேன்.

எண் கணிதமும் சரி, ஜோதிடமும் சரி , படித்துக் கொண்டு தான் இருக்கிறேனே தவிர எந்த ஆராய்ச்சி நிலைக்கும் நான் சென்றதில்லை .

அய்யா அவர்களின் ஜோதிட பாடங்களை மூன்றாம் முறையாக படித்துக் கொண்டு இருக்கிறேன் ,ஆனால் இதில் "எட்டாம் இடம்" பாடம் மட்டும் ஒருமுறை கூட படித்ததில்லை , பயம் வருகிறது. அய்யாவும் அந்த பாடத்தின் ஆரம்ப வரிகளில் பய உணர்வு உள்ளவர்கள் அடுத்த பாடத்திற்கு போய் விடவும் என்று எழுதி இருப்பார் .

அந்த பயத்தை போக்கிக் கொள்ளத்தான் திரும்ப திரும்ப படிக்கிறேன் ,மேல் நிலை பாடத்தில் சேராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இதற்கும் என் ஜாதகத்தில் ஏதோ ஒரு அமைப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்

Arul said...

அருமையான பாடம் ஐயா...நன்றி...

Jawahar Govindaraj said...

தங்களுடைய ஆராய்ச்சி வெற்றிய‌டைய வாழ்த்துக்கள்!
-‍ஜவஹர் கோவிந்தராஜ்

sadan raj said...

அன்புள்ள ஐயா,மேலே உள்ள ஜாதகத்தில் முதல்நிலை சுபகிரகம் குரு 4ம் இடத்தில்(சுக ஸ்தானத்தில்)இருந்து 7ம் பார்வையாக தன் சொந்தவீட்டையும்,அதில் உள்ள கிரகங்களையும், 9ம் பார்வையாக 6ம் அதிபதி செவ்வாயையும் பார்கிராரே.ஒருவேளை பகை வீட்டிலிருந்து பார்பதால் பலன் இல்லாமல் போய்விட்டதோ? உங்கள் தங்கை தன் குழந்தைகள் மூலம் ஆறுதலடைய செந்தூர் முருகனை பிரார்த்திக்கிறேன்.

arul said...

all are eagerly waiting for your research articles for enriching our knowledge.I had given specific temples that are said to be curing cancer in my astrologicalscience blog

Ananthamurugan said...

thanusu said...
\\"எட்டாம் இடம்" பாடம் மட்டும் ஒருமுறை கூட படித்ததில்லை , பயம் வருகிறது. அய்யாவும் அந்த பாடத்தின் ஆரம்ப வரிகளில் பய உணர்வு உள்ளவர்கள் அடுத்த பாடத்திற்கு போய் விடவும் என்று எழுதி இருப்பார்.//

எல்லாம் மனிதவாழ்வில் நடந்தது,நடக்கபோவது தானே தனுசு.இதற்காக எட்டாம் வகுப்பிற்கே sorry எட்டாம் வீட்டை பற்றி படிக்காமலே இருந்தால் எப்படி ?படிப்பதற்கே பயந்தால்,அதை எழுதிய வாத்தியார் எப்படி உயிரை பணயம் வைத்து எழுதியிருப்பார்..?!.நடப்பது ஆண்டவன் செயல்..!!!

Ananthamurugan said...

அய்யர் said...
"புற்று நோய்"க்கு ஆறு (எண்.6)
என்பது எண்கணிதம்//

SECOND HAND SMOKE KILLS...!! இந்த விளம்பரம் மிக பிரபலம்.சிகரெட் பிடிப்பவரை விட ,அந்த புகையை சுவாசிபவருக்கு புற்றுநோய் தாக்கம் அதிகம்.இதனால் புகை பிடிப்பவர் எண் 6 உடையவராக இருக்கலாம்.ஆனால்,கடைகாரர் எந்த எண்ணோ??!

அய்யர் said...

///புகை பிடிப்பவர் எண் 6 உடையவராக இருக்கலாம்.ஆனால்,கடைகாரர் எந்த எண்ணோ??!///

ஒரு படத்தில் இப்படி ஒரு காட்சி....

"புகை பிடிக்காதீர்" என அறிவிப்பு வாசகம் பேருந்தினுள் எழுதப்பட்L இருக்கும்...

பேருந்தில் பயணம் செய்யும் கதாநாயகி மற்றும் கதாநாயகன் பக்கம் கேமிரா திரும்பும்...

இதில் இந்த அறிவுப்பு வாசகத்த்தில் "பு" வை மறைத்தபடி நின்று கொண்டு ஒருவர்

இப்போ கேமிரா "கை பிடிக்காதீர் "
என்பதை நமக்கு காட்டும்..

கதாநாயகன் கதாநாயகியின் கையை பிடித்துக் கொண்டிருப்பதை கேமிரா சுட்டிக் காட்டும்..

படம் எதுவென்று சொன்னால்
பாராட்டுக்கள் நம் வகுப்பறை தோழர் மைனர்வால் தருவார்..

புகைக்கும் ஆறுக்கும் தொடர்பு உண்டு
விதிவிலக்கெல்லாம் விதியல்ல என்ற விதிப்படி

ஏற்பதும் மறுப்பதும் உங்கள் ஆய்விற்கு விடுகிறோம்..

சிகெரட்டை ஆறாம்விரல் என
சித்தரித்து ஒரு திரைப்பாடல் நினைவிருக்கிறதா...பாடலை சுழல விடுவதற்கு பதில்..

பாடலின் முதல் வரியை தருகிறோம்..
"ஆலங்குயில் போகும் ரயில்..."
விரும்பினால் அந்த பாடலை

ரசித்து கேட்டு
நீங்கள் சுழல விடுங்களேன்...

Ananthamurugan said...

அய்யர் said...

\\சிகெரட்டை ஆறாம்விரல் என
சித்தரித்து ஒரு திரைப்பாடல் நினைவிருக்கிறதா...\\

நீங்கள் குறிப்பிட்ட படம் நினைவில்லிலை....ஆனால் நான் ரசித்த ஜோக் ஒன்று......
ஒருவர் கடையில் "தம்"(வாத்தியாருக்கு பிடித்த வில்ஸ் பில்ட்டர்) வாங்கி பத்தவைத்து,ஆழமாக தம் இழுத்து கடைக்காரர் முகத்தில் ஊதினார்.
கடைகாரருக்கு வந்ததே கோவம்,"ஏன்பா,சிகரெட்டை என் மூஞ்சியிலே ஊதற,கொஞ்சம் தள்ளிப்போய் பிடிக்ககூடாதா?!?

தம்மர் :ஒன்,கடைலேதான் தம் வாங்கினேன்,அப்போ,எங்க அடிக்கிறதாம்,இங்கதான்,அடிக்கணும்!?
கடைகாரர் :என் கடையிலே "காண்டம்" கூடதான் விக்கிறேன்.அதையும் இங்கேயே ..........!?

அய்யர் said...

அனந்த முருகனுக்காக சுழன்று வரும்
அப்படியே இந்த பாடல் back to back

என்ன தவம் செய்தனை யசோதா?
எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க

ஆலங்குயில் கூவும் ரயில்
ஆரிராரோ ஏலேலேலோ,

யாவும் இசை ஆகுமடா கண்ணா!
ஆலாபனை நான் பாடிட
அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!

செல்ஃபோன்

இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது,
தொலைவிலும் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே.

சிகரெட்

விரல்களின் இடையே ஒரு விரல் போல,
சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.

ஓகே… அ… ஆ… வெட்கம்

இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான்.

மீசை

இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான்.
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!

திருக்குறள்

இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,
இருவரும் இது போல இருந்தால் சுகம்.

நிலா

இரவினில் குளிக்கும் தேவதை இவளோ,
வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்.

சரி, கண்ணாடி

இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே!

ம்… காதல்

கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ம்ம் ம்ம்
ம்…
நம் நான்-கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவடா!

வாவ், பியூட்டிஃபுல்…

ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!

போதுமா முருகன்,,

SP.VR. SUBBAIYA said...

////Blogger V Dhakshanamoorthy said...
///வகுப்பறை மாணவர்களுக்கும் பயன் படட்டும் என்று இன்று வலையில் ஏற்றியுள்ளேன்///
நன்றி!!////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

Ananthamurugan said...

அய்யர் said...
//போதுமா முருகன்,,

நன்றிகள்!! பார்த்திபன் கனவோ!!?நான் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பது அரிது!!அமரர் கல்கியின் "பார்த்திபன் கனவு" தான் எனக்கு தெரிந்தது.மற்றபடி,தங்களை போன்ற "யூத்ஸ்" கூறினால் கேட்டுகொள்வோம்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ananthamurugan said...
புதிய கோணம்,புதிய முயற்சி!மிகவும் பயனுள்ள பாடம்.நன்றிகள் அய்யா!!!////

நல்லது. நன்றி ஆனந்தமுருகன்!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
present sir////

வருகைப்பதிவிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
medical astrology நல்ல வரவேற்பு
கூடுதலாக ஒரு ஆலோசனை..
எந்த நோய் பற்றி எழுதும் முன்
அந்த நோய் பற்றிய முன் குறிப்பு
முடிந்தால் நோய்க்கான காரணம்
முயலும் நல்ஆலோசனை என சேரலாம்/////

நல்லது. உங்களின் ஆலோசனைக்கு நன்றி விசுவநாதன். ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதும்பொது அதைச் செய்கிறேன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger கலையரசி said...
மாறுபட்ட கோணத்தில் ஜாதக அலசல் இன்று. Feel sorry for your BIL. உங்கள் தங்கைக்கு தேவையான அத்தனை உதவியும் கடவுள் யார் மூலமாவது செய்து கொண்டு இருப்பார், மனோதையிரத்தை அவருள்ளே ஏற்படுத்தவும் செய்வார்.
என்கொரு சந்தேகம் , மனைவி ஜாதகமோ , பிள்ளைகள் ஜாதகமோ , அல்லது பெற்றோர் ஜாதகமோ
ஒருவரின் மரணத்தை தள்ளி போடாத? நம்ம ஊரில் சொல்வார்களே , என் பேரனின் ஜாதகம் இன்னும் எனக்கு கொஞ்சம் ஆயுளை கொடுத்து உள்ளது என்று, அது போல.
எனக்கு உங்கள் பழைய பாடங்களில் எழுதியது ஞாபகம் வருகிறது , ஏழாம் வீடும் , இரண்டாம் வீடும் ஜாதகரின் மரணத்தை அதாவது எந்த மாதிரியான மரணம் என்பதை தெரிவிக்கும் இல்லையா ? அதுவும் நீங்கள் கண்ணதாசன் பாடல் "மரணம் என்ற தூது வந்தது ..." என்று எழுதி இருப்பீர்கள். அந்த பதிவை
படிக்கும் (ஜூலை 2010), மரணத்தை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி இருப்பீர்கள். Though we do it practically or not, theortically this is how we need to FACE it, means ACCEPT it. மரணம் பயம் இருப்பதால் தான் பெரும்பாலோனோர் வாழ்க்கை அற
முறையில் உள்ளது . அல்லது அதை நோக்கி பயணிக்கிறோம். நன்றி அய்யா , மேல் நிலை பாடங்களில் சிலவற்றை எங்களுக்கு சொல்லி கொடுபதற்கு.-kalai
Seattle//////

தனிப்பட்ட ஒருவரின் ஜாதகம், தனியாகவே வேலை செய்யும்! அதை எதுவும் கட்டுப்படுத்தாது. நேரம் வந்தால் போய்ச்சேர வேண்டியதுதான்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger Subramanian said...
If the DOB of the person was 30/31 Mar 1957 in ashtakavarga it shows 129 points for the 3/6/8/12 axis against 151 for the rest
(1/4/5/7/9/10)/////

அஷ்டகவர்கத்துடன் கிரகங்களின் அமைப்பும் முக்கியம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
எனக்கு மிகவும் பிடித்த அலசல் பாடம்.அதிலும் மேல்நிலை பாடத்தை என்போன்ற ஆரம்பநிலையாளருக்கும் தந்தமைக்கு அய்யா அவர்களுக்கு நன்றிகள் .
"புத்தகப் பணிகள் முடிந்த பிறகு ,நோய்கள் குறித்தி ஜாதகங்கள் வைத்து ஆய்வு செய்யலாம் என்று உள்ளேன்".
கண்டிப்பாக செய்யுங்கள் அய்யா நாங்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
தாங்களின் தங்கை குடும்பத்தாருக்கு இறைவன் என்றென்றும் துணை இருப்பான் ////

உங்களின் மன நிறைவான பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Arul said...
அருமையான பாடம் ஐயா...நன்றி.../////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

Blogger Jawahar Govindaraj said...
தங்களுடைய ஆராய்ச்சி வெற்றிய‌டைய வாழ்த்துக்கள்!
-‍ஜவஹர் கோவிந்தராஜ்

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger sadan raj said...
அன்புள்ள ஐயா,மேலே உள்ள ஜாதகத்தில் முதல்நிலை சுபகிரகம் குரு 4ம் இடத்தில்(சுக ஸ்தானத்தில்)இருந்து 7ம் பார்வையாக தன் சொந்த வீட்டையும்,அதில் உள்ள கிரகங்களையும், 9ம் பார்வையாக 6ம் அதிபதி செவ்வாயையும் பார்கிராரே.ஒருவேளை பகை வீட்டிலிருந்து பார்பதால் பலன்
இல்லாமல் போய்விட்டதோ? உங்கள் தங்கை தன் குழந்தைகள் மூலம் ஆறுதலடைய செந்தூர் முருகனை பிரார்த்திக்கிறேன்./////

உங்களுடைய ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி சதன்ராஜ்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger arul said...
all are eagerly waiting for your research articles for enriching our knowledge.I had given specific temples that are said to be curing cancer in my astrologicalscience blog/////


உங்களுடைய தகவல்களுக்கு நன்றி!

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
அலசல் பாடம் என்றவுடன் சற்று சந்தோஷமடைந்தேன்...கூடவே கனமான விஷயங்கள் கலங்க வைத்தது...

ஐயா, 'கான்சர்' போன்ற கொடிய நோய்களின் தாக்கம் நம் நாட்டில் அதிகளவில் அதிகரிப்ப‌தற்கும் நிச்சயம் ஜோதிட ரீதியாகவும் காரணம் இருக்குமல்லவா? அப்படியென்றால் நமது நாட்டின் ஜாதகப்படி 6ல் குரு பகவான் இருப்பது நல்ல அமைப்பு தானே...
நல்ல பதிவுக்கு நன்றி ஐயா...

Jagannath said...

எட்டாம் இடத்தின் மீது எட்டாம் அதிபர் சனி மற்றும் குருவின் பார்வை விழுவது நல்ல விடயம்.

ஆனால் எட்டாம் அதிபர் சனி பகை வீட்டில் அமர்ந்திருப்பதாலும், பாப கிரகமான செவ்வாய் பார்வை பெறுவதாலும் பலவீனமடைகிறார்.

ஆயுள் காரகனும் சனியே என்பதால் மேலே சொன்ன அனைத்தும் பொருந்துகிறது.

இந்த ஜாதகம் அற்பாயுள் (12-32 வயது) என்ற பிரிவில் வருகிறது. நவாம்சம் அல்லது பாவ அமைப்பினால் மத்யாயுள் (32-75 வயது) ஜாதகமாக மாறி மாரக தசா புக்தி வரை வாழ முடிந்திருக்கிறது. அல்லது மாரக தசா புக்தி 32வயதிற்குள் வராமல் இருந்திருக்கலாம்.

வாத்தியாரின் உறவினரின் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் அளிக்கட்டும்.

Jagannath said...
This comment has been removed by the author.
Jagannath said...

சந்திரனுக்கு எட்டில் ராகு இருப்பதும் பாதகமான அம்சம்.