மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.4.12

வெஞ்சினமும் பழிதீர்த்தலும் தர்மத்திற்கு ஒவ்வாத செயல்கள்!


மாணவர் மலர்

இன்றைய மாணவர மலரை 6 பேர்களின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே தந்துள்ளேன். படித்து மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
 ------------------------------------------------------------------------------
1

அன்னதானத்தின் சிறப்பு
அன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை  
தெரியப் படுத்தியவர்:  வெ.கோபாலன், தஞ்சாவூர்

(தன்னுடைய நண்பர் சி.ஆர்.சங்கரன் என்பவர் அனுப்பிய மின்னஞ்சலில் வந்த கதையை நமக்குச் சுவைபடக் கொடுத்திருக்கிறார் தஞ்சைப் பெரியவர். படித்து மகிழுங்கள்)

    பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ! ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் கொண்டே வினவினார்.

    உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி' க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வர்றது பெரியவா !  வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா....தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்.

    அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...அது சரி. இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா ?" என்று கவலையுடன் விசாரித்தார்.

    உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்.

    இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!

    ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார், தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியயூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.

    அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.

    ஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?"

    உடனே ஸ்வாமிகள், "ஆமாமா! மோட்ஷத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய தர்மம் அது ! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு ! இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.

    ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, "எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா...நாங்கெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும் !" என்றார்.

    அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:

    "ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலே இதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன், கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:

    கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோட தர்ம பத்தினி பேரு சிவகாமி ஆச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலே பள்ளத்துரச் சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கெடையாது. கடைத்தெரு மளிகைக் கடைய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா.

    குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் அவா ரெண்டு பேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் ! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப் பத்தி, இதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன், பாருங்கோ..."

    - சொல்லி விட்டு சஸ்பென்சாக கொஞ்ச நாழிகை மௌனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள்.

    சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: "பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ? அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதி தினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு, வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் ஒக்காத்துவா.

    அவா க்ருஹத்திலே சமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா! அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா ! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா? "

    சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார், ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை. மஹா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: " ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. ஒரு அதிதியக் கூடக் காணோம்! கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார். அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்ம பத்தினி சிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் ? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போட்டுடறேன்' என்று கேட்டார்.

    சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பக்கம் போய்ப் பார்த்தார். கொள்ளையிலே நிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார். உள்ளே வந்தார். அந்த அம்மாவைக் கூப்பிட்டு, தனக்கு 'வேற ஒண்ணும் வேண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத் தண்டு சாம்பாரும் பண்ணாப் போறும்' னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமா முடியுமேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.

    இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானே. ஒரே பாத்திரத்துலே போட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே' னு கொழம்பினார்.

    சித்த நாழி கழிச்சு, கீர வாணலி இரண்டையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?' நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி. அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்' ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்ணறா' னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்."

    - இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: "போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த அந்த ஆச்சிகிட்டே கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன். என் பர்த்தா 'சிவ..சிவ' னு சிவ நாமத்தை சொல்லிண்டே பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.

    திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாம பறிச்சேள். அதனாலே தான் தனியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்' னு சொன்னா. இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா..."

    நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "இப்படி விடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்) என்ன தெரியுமா ? சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்கு' னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய' த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யப் பார்த்தேளா ? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன். அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா..."

    முடித்தார் ஆச்சார்யாள்! கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ" எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது.

    பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாது. நாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல், சர்வசதா காலம் அவனிடம் போய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாது ஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே அதற்குத் தான் பக்தி என்று பெயர்.

    ஜெய ஜெய சங்கர...  ஹர ஹர சங்கர..    ஓம் ஸ்ரீ சாயிராம்.   
    தொகுப்பு - ஸ்ரீ எஸ். ரமணி அண்ணா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
    
வெஞ்சினமும்  பழிதீர்த்தலும் தர்மத்திற்கு ஒவ்வாத செயல்கள்!
ஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு

இந்தியத் திருநாட்டின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள், எல்லாவிதமான மனிதமனங்களின் சித்தரிப்புகள், உணர்ச்சிக் குமுறல்கள், அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் வாழ்வியல் தர்மங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுத ஆரம்பித்தால் முடிவேது?. இந்தக் கட்டுரையில் மகாபாரதத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் கொண்ட வெஞ்சினத்தையும், (தவறிழைக்காமல் புண்படுத்தப்பட்ட மனம் கொண்ட சினம் ) அதன் காரணமாக விளைந்த பழி தீர்த்தலையும் காணலாம்.

குரு வம்சத்துத் தலைமகன் பீஷ்மர். தன் தம்பியான விசித்திரவீர்யனுக்கு மணம் முடிப்பதற்காக, காசி நகரத்து ராஜகுமாரிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை சுயம்வரத்தில் வென்று, ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். எதிரே, மாபெரும் படை ஒன்று வழிமறித்தது. சௌபல நாட்டு அரசன் சால்வன், மிகப் பெரும் படையோடு நின்றிருந்தான்.பீஷ்மரின் வில், அம்புகளை மழையெனப் பொழிந்து, சால்வனின் படைகளைச்சிதற அடித்தது. சால்வன் தோற்றோடினான்.

ஹஸ்தினாபுரம் வந்த பீஷ்மர், ராஜகுமாரிகளை அழைத்துக் கொண்டு, தன் தம்பியைக் காணச் செல்லும் வேளையில், ராஜகுமாரிகளுள் ஒருத்தியான அம்பை, பயத்துடன், பீஷ்மரை அணுகி, தன் மனதை சால்வனுக்குக் கொடுத்ததைக் கூறினாள். முதலில் சினம் கொண்டாலும், பின், தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு உண்டென்பதை மதித்த பீஷ்மர், முன்பே நீ இதை என்னிடம் தெரிவித்திருந்தால், சால்வன் படைகளுடன் வந்த பொழுதே, அவனிடம் உன்னை ஒப்படைத்திருப்பேனே!!! என்று கூறி, அவளை சௌபல (சாளுவ) தேசத்துக்கு, சகல மரியாதைகளுடன் அனுப்பிவைத்தார்.

சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான். (வில்லி பாரதம்).

மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க, சால்வனை நாடிச் சென்றாள் அம்பை. ஆனால் சால்வனோ, மாற்றான் கவர்ந்து சென்ற மங்கையை மணத்தல் முறையன்று என்று கூறி அவளை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.

சென்ற அம்பையைத் தீ மதிச் சாலுவன்,
'வென்று, தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன்'
என்று இகப்ப, இவனுழை மீளவும்,
மன்றல் வேண்டினள், மன்றல் அம் கோதையாள். (வில்லி பாரதம்).

திரும்பவும் பீஷ்மரிடம் வந்தாள் அம்பை. விசித்திரவீர்யன், மற்றொரு ஆணிடம் காதல் கொண்ட பெண்ணை தான் மணப்பது இயலாது என்று கூறிவிட்டான்.

சினம் கொண்டாள் அம்பை. தான் விதியின் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக உருட்டி விளையாடப்படுவதை உணர்ந்தாள். தன்னைக் கவர்ந்து வந்த காரணத்தால், பீஷ்மரே தன்னை மணக்க வேண்டும் என்றாள். தான், திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சபதமெடுத்திருப்பதைக் கூறி, மறுத்தார் பீஷ்மர்.

மீண்டும் சால்வனிடமே சென்று, மணந்து கொள்ளுமாறு கேட்கச் சொன்னார் பீஷ்மர். சால்வன் உறுதியாக மறுத்துவிட்டான். அம்பையின் தந்தை,தன் தூதுவரை அனுப்பி, பீஷ்மரிடம் முறையிட்டதும் பயனற்றதாயிற்று.

ஒரு நாள், இரு நாள் அல்ல. ஆறு ஆண்டுகள் சால்வனிடமும், பீஷ்மரிடமும் கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் மாறி மாறி ஓடினாள் அம்பை.

இறுதியாக, பீஷ்மரின் குரு, பரசுராமரைச் சரணடைந்தாள். அவர், அம்பையை மணந்துகொள்ளும்படி, பீஷ்மரை வேண்டினார். பீஷ்மர் மறுக்க, சினம் கொண்ட பரசுராமர், பீஷ்மருடன் போருக்குத் தயாரானார்.

இருவரின் அஸ்திரப் பிரயோகங்களால், பூமி நடுங்கியது. திக்குகள் அதிர்ந்தன. மலைகள் வெடித்தன. வானுலகம் நிலைகுலைந்தது. உயிர்கள் பதறின.முடிவில்லாமல் பத்து நாள் இரவு பகல் பாராமல் நீண்டது போர். இறுதியில், பீஷ்மரின் கை ஓங்கவே, பரசுராமர், பின்வாங்கினார்.

துடித்தெழுந்தாள் அம்பை. பீஷ்மரை மணக்க இயலாது என்பது முடிவான முடிவு என்பதை அவள் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது. அவள் மனம் மிக வருந்தி, தவம் புரிதலே இனி தன் வாழ்க்கை என முடிவெடுத்தாள்

ஆனால் தவறேதும் செய்யா அவள் மனம், பீஷ்மரைப் பழிவாங்கத் துடித்தது.

பீஷ்மரின் இறப்புக்குத் தான் காரணமாவேன் என்று வெஞ்சினம் கொண்டுசபதம் செய்த அவள், அந்த நோக்கத்துடன், இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்; ஒரு காலின் கட்டை விரலை ஊன்றி நின்று, மறு காலை மடக்கி,பன்னிரண்டு ஆண்டுகள் கடுந் தவம் செய்தாள் .

வெம்பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என, வீடுமன்
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான்' எனா,
வம்பை மோது முலை, வம்பை வீசு குழல்,
வம்பை மன்னும் எழில், வரி கொள் கூர்
அம்பை மானும் விழி, அம்பை என்பவளும்
அரிய மா தவம் இயற்றினாள். (வில்லி பாரதம்)

ஆறுமுகக் கடவுள் அம்பை முன் தோன்றி ஒரு தாமரை மாலையை அளித்தார். அந்த மாலையை அணிந்து கொள்பவர், பீஷ்மரின் இறப்புக்குக் காரணமாவார் என வரமளித்தார். அந்த மாலையை எடுத்துக் கொண்டு, இகலோகத்து அரசர்களிடமெல்லாம் சென்று, அணிந்து கொள்ள வேண்டினாள் அம்பை. ஒருவரும் உடன்படவில்லை. இறுதியாக, பாஞ்சால தேசத்து அரசன் துருபதனிடம் சென்று, முறையிட்டாள். துருபதனும், பீஷ்மரின் பகைக்கு அஞ்சி மறுக்கவே, மாலையை அவன் கோட்டை வாயிலிலேயே மாட்டி விட்டு, தீப்பாய்ந்தாள் அம்பை.

மனித ஆன்மா ஒரு தொகுப்பு நூல் போன்றது. அது, பல ஜென்ம வாசனைகளை ( நினைவுகளை)த் தன்னுள் தொகுத்து வைத்திருக்கும்.ஒரு ஜென்மத்து விருப்போ, வெறுப்போ, ஜென்மங்கள் கடந்தும் தொடரும். சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போவதற்கும், வெறுப்பு வருவதற்கும் இதுவே காரணம். இந்த ஜென்மாந்திர வாசனைகள் இருக்கும் வரை, ஜென்மம் எடுப்பதும் நிற்காது.

அம்பை வெஞ்சினம் கொண்ட மனத்தோடு, அடுத்த பிறவியில், துருபதனின் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சிகண்டி என்று பெயர் சூட்டினான் துருபதன். ஒரு நாள், அவளே அந்த மாலையை எடுத்து, அணிந்து கொண்டாள்.

அம்பை (சிகண்டி) யின் நோக்கத்துக்கு உதவிய காரணத்தால், ஸ்ரீ சுப்பிரமணியரின் அஷ்டோத்திர சத நாமாவளியில்,
"சிகண்டி க்ருதகேதனாய நம: " என்னும் ஒரு நாமம் இருக்கிறது

செய்தி அறிந்து துருபதன், அவளை நாடு கடத்தி விட்டான். கானகம் சென்ற சிகண்டி, 'இஷிகர்' என்ற முனிவரின் யோசனைப்படி நடந்து, ஒரு கந்தர்வனிடம் தன் பெண் வடிவைக் கொடுத்து, அவன் ஆண் வடிவைத் தான் பெற்றுக் கொண்டு, மீண்டும் துருபதனை வந்தடைந்தாள் (அடைந்தான்?). சிகண்டியை ஏற்றுக் கொண்ட துருபதன், அவனுக்கு சகல வித்தைகளிலும் பயிற்சி அளித்தான்.

இந்த சிகண்டியை முன்னிறுத்தியே, பாரதப்போரில் அர்ஜூனன் பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டான். பெண்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதால், பெண்ணாக இருந்து, ஆணாக மாறிய சிகண்டியை எதிர்த்து, பீஷ்மர் ஆயுதம் எடுக்கவில்லை. அர்ஜூனனின் காண்டீபம் சரமழை பொழிந்து, பீஷ்மரை அம்புப் படுக்கையில் தள்ளியது. இவ்வாறாக அம்பை தன் பகை முடித்தாள்.

பாண்டவர்களும் கௌரவர்களும் கைகட்டி, பணிந்து நின்றனர்.

எதிரே அவர்கள் குரு துரோணாச்சாரியார். குருகுலப் பயிற்சி முடிந்து, குருதட்சணை வழங்க வேண்டிய தருணம்.

மூத்தவனான தருமன், " குருவே, தாங்கள் குருதட்சணையாக எதைக் கேட்டாலும், அதை வழங்கக் கடமைப்பட்டுள்ளோம் " என்றான்.

மறுநாள் சொல்வதாகச் சொல்லிவிட்டு, தனிமையை நாடிச் சென்றார் துரோணர். நெஞ்சினுள் சீறிப் பாய்ந்த நினைவலைகளால் தாக்குண்டு செய்வதறியாது நின்றார் அவர்.

பாரத்வாஜ முனிவரின் மகன் துரோணர். தன் தந்தையிடமே கல்வி கற்று வரும்போது, உடன் படித்த, பாஞ்சால தேசத்து இளவரசன், துருபதனிடம் மாறாத நட்புக் கொண்டார். குருகுல வாசம் முடியும் தருவாயில் ஒருநாள், பேச்சு வாக்கில், "நீ நாடாளும் மன்னனாகி விட்டால் என்னை எங்கே நினைவில் வைத்திருக்கப் போகிறாய்!!!" என்று கேட்டு விட்டார். உடனே, துருபதன் (யாகசேனன் என்பது இவனது மற்றொரு பெயர்) கங்கை நீரை துரோணர் கையில் வார்த்து, " நான் மன்னனானால், உனக்குப் பாதி நாட்டைத் தருவேன்"என்று சத்தியம் செய்தான்.

பின்னை, இரவும் பகலும், பிரியேம் ஆகித் திரிய,
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா,
'என் ஐ வானம் எய்தி, யானே இறைவன்ஆனால்,
உன்னை ஆள வைப்பேன், உலகில் பாதி' என்றான். (வில்லி பாரதம்)

பின், துரோணர், குரு வம்சத்து குலகுருவான, கிருபாச்சாரியாரின் தங்கை கிருபியைத் திருமணம் செய்து கொண்டார். தன் நண்பன் ,துருபதன்
பாஞ்சால தேசத்து மன்னனான செய்தி அறிந்து மகிழ்வு கொண்டார்.

காலப் போக்கில், துரோணர், கொடிதினும் கொடிய நோயான வறுமைக்கு ஆளானார். தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளைக்குப் பாலூட்ட இயலாமல் உடல் நலிவுற்றாள் கிருபி.மனம் சோர்ந்தார் துரோணர். இறுதியில், தன் நண்பனான துருபதனிடம், ஒரு பசுமாட்டைத் தானம் பெற்று வரலாம் என்று முடிவெடுத்துப் புறப்பட்டார். பாதி ராஜ்யத்தையே தருவதாக வாக்களித்தவன், ஒரு பசு மாட்டைத் தர மாட்டானா? என்பது அவர் எண்ணம்.

அரண்மனையில் தான் யார் என்று விசாரித்தவர்களிடம், பழைய நட்புரிமையில், "உங்கள் மன்னனின் நண்பன்" என்று சொல்லிவிட்டார்.

வெகுண்டான் துருபதன். "அரசனாகிய நான் எங்கே, ஆண்டியாகிய நீ எங்கே" , என்று பலர் முன்னிலையில் இழித்தும் பழித்தும் பேசி விட்டான். மனம் நொந்தார் துரோணர். நம்பி வந்த தன்னை, அவமானப்படுத்திய துருபதன் மேல் சினம் பொங்கியது அவருக்கு. " நான் தவ முனிவர் வழிவந்தவன், ஆகவே, எனக்குச் சக்தி இருந்தாலும் உன் மேல் போர் தொடுக்க மாட்டேன். என் மாணவன் உன்னை வென்று, தன் தேர்க்காலில் கட்டி இழுத்து என் முன் நிறுத்துவான்!!! " என சூளுரைத்து விட்டுப் புறப்பட்டார்.

'புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்;
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்;
அகன்ற மெய்ம்மை உடையாய்! அறிதி' என்றேன்' என்று,
சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்லக் கேட்டான். (வில்லிபாரதம்)

துருபதனை வெல்லுமாறு, மறுநாள் தன் சிஷ்யர்களுக்குக் கட்டளையிட்டார். அர்ஜூனன் அந்தக் கட்டளையைச் செவ்வனே நிறைவேற்றினான். தன்முன் தலை கவிழ்ந்து நின்ற துருபதனை நோக்கி, " நீ என் நண்பன் என்பதால் உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன். மேலும், நீ எனக்கு முன்பே வாக்களித்தது போல் உன் பாதி நாட்டை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். சென்று வா" என்று கூறி துருபதனை விடுதலை செய்தார். துரோணர் இவ்வாறு தன் சபதத்தில் வெற்றி அடைந்தார்.

'அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும்; மற்று
இன்று, உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்;
குன்று எனக் குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே!
உன்தனக்கு வேண்டும்' என்ன, உயிரும் வாழ்வும் உதவினான்.(வில்லிபாரதம்).

பாண்டவர்களில் ஐந்தாமவன் சகாதேவன். பாண்டுவின் இளைய மனைவி மாத்ரிக்கு, அஸ்வினி தேவர்களின் அருளாசியால் பிறந்தவன். நுண்ணறிவில் சிறந்தவன், ஜோதிடக்கலையில் வல்லவன். அமைதியும் ஆழ்ந்த யோசனைத் திறமும் மிகுந்த கிருஷ்ண பக்தன்.

ஸ்ரீ கிருஷ்ணரையே, தன் பக்தியால் கட்டி வைத்த பெருமையுடையவன்.சூதாட்டத்தில். செல்வங்கள் அனைத்தையும் இழந்த தருமர், பிறகு, தன் தம்பியரில்,முதலில் சகாதேவனைத் தான் பணயமாக வைத்துத் தோற்றார்.

எப்பொழு தும்பிர மத்திலே சிந்தை
ஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்-வகை
தானுணர்ந் தான்சஹ தேவானம்-எங்கம்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில்-வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -அங்குச்
செப்பினன் காயை உருட்டினார்-அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான். (மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம்)

முடிவில், பீமனும், அர்ஜூனனும், துரியோதனன், துச்சாதனன், கர்ணன் ஆகியோரைக் கொல்வதாகச் சபதம் செய்தபோது, சகாதேவன், 'எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?' எனும் சொல்லுக்கேற்ப, இதற்கெல்லாம் யார் காரணம் எனச் சிந்தித்து, சூதாட்ட யோசனையைச் சொன்ன சகுனியே இதன் மூல காரணம் எனத் தேர்ந்தான். போரில் சகுனியைக் கொல்வேன் எனச் சபதம் செய்தான்.

'சகுனிதனை இமைப்பொழுதில்,' சாதேவன், 'துணித்திடுவேன்
சமரில்' என்றான்; (வில்லி பாரதம்).

பாரதப் போரில், சகுனியை எதிர்த்துப் போரிட்டான் சகாதேவன். சகுனியைக் காக்கவென, துரியோதனன் சகாதேவன் மேல் எறிந்த வேல், பயனற்றுப் போய் விட்டது. அவ்வாறில்லாமல், சகாதேவன், தன் குறியைச் சரியாக நிர்ணயித்து, சகுனி மேல் வேல் எறிந்து தன் சபதத்தை முடித்தான்.

சகுனி ஆவி போமாறு, சபத வாய்மை கோடாமல்,
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட,
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை
இகலொடு ஏவினான், வீமன் இளவலான போர் மீளி. (வில்லி பாரதம்)

இந்தப் பாடலில், 'சபத வாய்மை' என்ற சொல், சகாதேவன் சகுனியைக் கொல்வதாக இருந்த சபதத்தை நினைவுபடுத்துகிறது.

வெஞ்சினம் கொள்ளுதலும் பழிதீர்த்தலும் தர்மத்தின்படி சரியான செயலாகக் கருதப்படவில்லை என்றாலும், சில தருணங்கள் அப்படி அமைந்தும் விடுகிறது என்பதே மகாபாரதம் சொல்லும் செய்தி. ஆயினும் இனி வரும் காலத்தில், அமைதி நிலவவும், அன்பு தழைக்கவும் எங்கும் நிம்மதி நிறைந்திருக்கவும், இறைவனை வேண்டுவோம்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
பெங்களூரு.

www.aalosanai.blogspot.in   

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகளே அந்தக் காலத்தில் காதல் பூங்காக்கள்!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

"சேவாலயா என்னும் தொண்டு நிறுவனம்" என்ற என் ஆக்கத்தில் (11 ஏப்ரல்  2011) ஒரு 'டைடானிக்' பாட்டியின் கதையைச் சொல்லி இருந்தேன். புதிதாக வந்தவர்கள் அதனைப் படிக்க வேண்டுகிறேன்.

என் அந்த ஆக்கத்திலேயே வேறொரு பாட்டியின் கதை கிடைத்ததையும், அதனைப் பின்னர் சொல்வதாகவும் கூறியிருந்தேன். அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுகிறேன்.

அந்த முதியோர் இல்ல‌த்தில் இருந்த பாட்டிமார்களிலேயே மிகவும் உற்சாகமான பாட்டி அவர். இத்தனைக்கும் அந்த முதியவர்களிலேயே அவர்தான் வயதில் மூத்தவர் என்றார்கள்.நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவரைச் சந்தித்த போதே அவருக்கு 90 வயது கடந்து இருக்கும்.

அந்தக் குழுவுக்கு அந்தப் பாட்டிதான் தலைவர். தலைவர் என்றால் ஏதோ தான் மற்றவர்களுக்கு ஆணை பிறப்பித்து விட்டு, சொகுசாக அமர்ந்திருக்கும் தலைவர் அல்ல அவர். மற்றவர்களின் தேவை அறிந்து அவர்களுக்கான எல்லாச்  சேவைகளையும் செய்பவராக விளங்கினார்.

வாரந்தோறும் ஓரிரு மருத்துவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்து பாட்டிகளுக்கு மருத்துவ சோதனை செய்வர். நமது கதாநாயகிப் பாட்டி எல்லோருடைய மருத்துவ சோதனை பதிவு அட்டைகளையும் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு அந்தந்த பாட்டிகளின் முறை வந்தவுடன் அட்டையை எடுத்துக் கொடுத்து மருத்துவ சோதனைக்கு அனுப்புவார். தானும் அருகில் இருந்து டாகடர் கூறும் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டு, மருந்து சாப்பிடும் முறைகளையெல்லாம் விசாரித்து அறிந்து அந்தப் பாட்டிகளை நேரத்திற்கு மருந்து உண்ண வைப்பார்.  ஒரு பாசம் நிறைந்த தாயாகவும், கண்டிப்பான செவிலியாகவும் அந்தப் பாட்டி நடந்து கொள்வார்.

"ஒரு தொழில்முறை நர்ஸ் கூட இப்படி பணிவிடை செய்ய மாட்டார்கள்" என்று அங்கு நான் சந்தித்த மருத்துவர்கள் வாயாற‌ நம் பாட்டியின் புகழ் பாடினார்கள்.

மற்ற முதியவர்களின் துவைத்த துணிமணிகளை மடித்துக் கொடுப்பார்.

யாரும் படுக்கையிலேயே அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று எழுதப்படாத சட்டத்தைக் கடைப் பிடிப்பார்.முடியாத பாட்டிமார்களைக் கையைப் பிடித்து உணவுக் கூடத்திற்கு அழைத்து வந்துவிடுவார்.

"இதற்காகக் கூட நடக்காவிடில் எப்படி? இப்படியே படுத்துக் கிடந்தால் படுக்கைப் புண் வந்துவிடும்" என்று உரிமையோடு கண்டிப்பார்.

காலை மாலை இரண்டு வேளைகளிலும் நடக்க முடிந்தவர்களோடு தானும் அருகில் உள்ள கடற்கரை வரை சென்று வருவார்.

"நடந்தால் தான் கைகால் விளக்கமாக இருக்கும்"என்று அறிவுரை கூறுவார்.

நமது பாட்டிக்கு ஒரு பெயர் சூட்டி விடுவோமா?.'ஆண்டாள்' என்று வைத்துக் கொள்வோம்.ஆம்! பாட்டி ஒரு ஸ்ரீவைஷ்ணவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.ஆதியில் அவர் ஐயங்கார் மாது. 9 குழந்தைகளைப் பெற்ற அன்னை. சீரும் சிறப்புமாக மடி ஆச்சாரத்துடன் ஸ்ரீஉடையவர் அவதரித்த திருத்தலத்தில் பிறந்து வளர்ந்து திருமணமாகி நல்ல கிரஹஸ்தியாக வாழ்ந்தவர்.

40 வயதுவரை வீடும், அடுப்படியும், கோவிலும் தவிர வேறு ஓர் இடமும் அறியாதவர் நம் ஆண்டாள். கணவனே கண் கண்ட தெய்வம், இல்ல‌றமே நல்லறம் என்ற கொள்கையுடன் எந்த மன சஞ்சலங்களுக்கும் இடமளிக்காமல் மன திருப்தியுடன் வாழ்ந்து வந்தவர் அவ்ர்.

கண‌வர் நல்ல வேத விற்பன்னர். வேதத்தை சடங்குகளுக்குப் பயன் படுத்தக்கூடாது என்ற கொள்கையுடையவர் ஆதலால்,வருமானம் மிகக் குறைவு. வந்த வருமானத்தில் வறுமையில் செம்மையாக வாழ்ந்தது அந்தக் குடும்பம்.

நிம்மதியாகவே வாழ்க்கை முழுதும் செல்வதற்குக் கொடுப்பினை வேண்டும்.ஏற்ற இறக்கங்கள்,நல்லது கெட்டது, நன்மை தீமை அனைத்தும் கலந்தததுதானே வாழ்க்கை!? அமைதியான பூங்காவனத்தில் திடீரெனப் புயல் வீசியது.அனைத்தையும் புரட்டிப் போட்டது.

அப்போதுதான் பெண்களும் பள்ளி செல்ல‌லாம் என்ற மனோபாவம் நடுத்தர வர்க்கத்தில் வேரூன்ற ஆரம்பித்த நேரம். தட்டச்சுக் கற்றுக்கொண்டால் அரசாங்க வேலை கிடைக்காவிட்டாலும், வீட்டில் இருந்தவாறே 'ஜாப் ஒர்க்' செய்தாவது அன்றாடச் செலவுகளுக்கு சில்லறைக் காசுகளைப் பார்க்கலாம் என்ற‌ எண்ணம் பரவத் துவங்கியிருந்தத்து.

இப்போது கை பேசி காதலுக்கு உதவுவது போல,(வெறும் காதலுக்கு மட்டுமா?)அந்தக் காலத்தில் காதல் மலர்வது  தட்டச்சுப் பயிற்றும் பள்ளிகளில்தான்.

தட்டச்சுப் பயில வரும் யுவன்,யுவதிகள் பெரும்பாலும் பதின்வயதினர். புருத் தெரியும் வயது. நெருப்பையும் பஞ்சையும் பக்கதில் வைத்தால்..?

"ஐயோ பத்திக்கிச்சி பத்திக்கிச்சி......" என்று பாட வேண்டியதுதான்.

அப்படித்தான் ஆயிற்று ஆண்டாளின் மூத்த பெண்ணுக்கு.

"படித்தது போதும் யார் கையிலாவது பிடித்துக் கொடுத்து விடுகிறேன்" என்று பெண் வயதுக்கு வந்தது முதல் புலம்பத் துவங்கிவிட்டார் ஆண்டாளின் கண்வர்.ஆண்டாள்தான் புதுமைப் பெண்ணாக பெண் விடுதலை பேசினாள்:

" 18 வயது முடிந்துதான் பெண்ணுக்குத் திருமணம் செய்தல் வேண்டும். அதுவரை பெண் படிக்க வேண்டும். முன்பு போல படிப்பு இல்லாத விதவையான பெண்களைத்  தலையை மழித்து மூலையில் உட்கார வைக்க முடியாது. தேவைப்பட்டால் பெண் தன் கையால் உழைத்து,அல்லது அறிவால் பணிசெய்து சம்பாதித்துப் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும்.எனவே என் பெண் கனகவல்லி பள்ளி இறுதி வகுப்பு முடித்து தட்டச்சும் பயில வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் நான் செய்யத் தயார்"

"எப்படியோ போங்கள்.. நாளை ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொறுப்பும் தண்டனையும் உனக்குத்தான்.." என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் குடும்பத் தலைவர்.

அவர் சொன்னது பலித்தது. அவருக்கும் இரண்டாமிடத்தில், வாக்கில் சனி போல..

அதனால்தான் எதிர்மறை எண்ணம் பலிக்கிறது.

கனகவல்லி தட்டச்சுக் கூடத்தில் காதல் வயப்பட்டாள்.

ஆச்சாரக் குடும்பத்தில் வந்த கனகவல்லியின் உள்ளத்தைக் கவர்ந்தவன்

முகம்மது இப்ராஹிம்!

இப்ராஹிம் பேரழகன். அவன் வெளித் தோற்றத்திலும், அவனுடைய மென்மையான பேச்சிலும் மயங்கிவிட்டாள் கனகா.

தினமும் ஒரு ரோஜாவுடன் தட்டச்சுப் பள்ளியின் வாசலில் நின்று இருப்பான் இப்ராஹிம். லைலா மஜ்னுவாக கனகாவும், இப்ராஹிமும் சிற‌கடித்துப் பறந்தார்கள்.

சிறிய ஊர்தான் அது. முணுக்கென்றாலும் அனைவருக்கும் தெரிந்தவிடும்.

ஊர் வம்பளந்தது. கனகாவின் தந்தையின் காதுக்கு செய்தி வந்தபோது காதல் மிகவும் முதிர்ந்த நிலை.

பெண்ணை வீட்டுச் சிறையில் வைத்தார். கனகா சாப்பிட மறுத்து உண்ணா நோன்பு இருந்தாள்.

ஆண்டாளுக்கு பெண்ணின் நிலையைக் கண்டு துக்கம் மேலிட்டது.கண‌வர் குளியல் அறையில் இருந்த போது கதவைத் திறந்து கனகாவை விடுவித்தாள் ஆண்டாள்.

அந்தச் சிட்டு பறந்து சென்று தன் ஜோடியுடன் இணைந்தே விட்டது.

ஆண்டாளின் கணவர் ஆகாயத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தார். ஆண்டாளுக்கு அவர் அன்று செய்த கொடுமைகள் சொல்லும் தரமன்று.

பெண்ணைத் தலை முழுகி, அவள் இறந்ததாகக் கருதி அவளுக்குச் செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்தார் அந்த வேத பிராமணர்.

ஆண்டாளுடன்  பேசுவதை நிறுத்தி கொண்டார்.ஒரே வீட்டிற்குள் இரண்டு தீவுகள்!

காலம் உருண்டு ஓடியது.

சுமார் 15 மாதங்களுக்குப் பின்னர் ஆண்டாளுக்கு ஒரு செய்தி வந்தது.

அதாவது,கனகா ஒரு ஆண்மகவைப் பெற்று எடுத்து அரசு மருத்துவ மனையில் இருக்கிறாள்.தன் தாய் வந்து காண வேண்டும் என்று  கனகா ஆசைப்படுகிறாள்.பெண்ணின் உள்ளம் பெண்ணே அறிவாள்.

ஆண்டாள் புழக்கடை வழியாக வீட்டை விட்டு வெளியேறி கனகாவையும் அவள் குழந்தையையும் மருத்துவமனையில் வைத்துப் பார்த்தாள்.

இர‌ண்டு கலகக் கண்களும் ஆண்டாளை மருத்துவமனையில் அவள் அறியாமல் பார்த்தன. கனகா வீட்டை அடையும் முன்னர் கணவருக்குச் செய்தி போயிற்று.

புழக்கடைக் கதவை பூட்டி விட்டு வாசல் திணையில் வந்து அமர்ந்து கொண்டார்.

எரிமலை வெடிக்கத் தயாராக இருந்தது.

பின் கதவு பூட்டப்படதை அறிந்து ஆண்டாள் அதிர்ந்தாள்.வேறு வழியில்லாமல் வாயில் பக்கம் வந்து வீட்டுக்குள் நுழைய முயன்றாள்.

அவ்வளவுதான்! அந்த எரிமலை வெடித்தே விட்டது.

நடு வீதியில் காலால் உதை வாங்கிக் கொண்டு ஆண்டாள் கிடந்தாள். காலைக் கட்டிக்கொண்டு அழுதும் பயனில்லை. அந்த அசுரனின் ஆவேசம் தணியவில்லை.

அரிவாள் மணையைக் கொண்டு வந்து ஆண்டாளின் கூந்தலைக் களைந்தார் அந்த மகானுபாவன். அடி வாங்கிக் கொண்டே பின் நகர்ந்தாள்.

கட்டிய புடவையுடன் அந்த கிராமத்தைவிட்டு சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு வெளியேற்றப்படாள் பரிதாபத்திற்குரிய ஆண்டாள்.

அதன் பின்னார் அவ‌ள் அந்த கிராமத்தையோ, உறவினர்களையோ, குழந்தைகளையோ மீண்டும் பார்க்கவேயில்லை.அதற்கான வைராக்கியத்தையும், சோதனைகளை அளித்த‌ அதே ஆண்டவனே அளித்தான்.

பல இல்லங்களில் சமையல் வேலை பார்த்தாள். பல முதியவர்களுக்கு தாதி, செவிலியர் பணி செய்தாள். 80 வயதுவரை ஓய்வின்றி உழைத்த ஆண்டாளின் மீது பரிதாபம் கொண்ட ஒரு கோட்டு வாத்தியப் பிரபல வித்வான் தன் இல்லத்திலிருந்து அவளுக்கு ஓய்வு கொடுத்து முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.

இந்த இல்லத்திலேயும் தன் சேவைப்பணிகளை ஆண்டாள் தொடர்ந்தார்.

இப்போது இருந்தால் ஆண்டாளுக்கு 125 வயது இருக்கும். அவர் எங்கிருந்தாலும் வாழ்க.

ஆண்டாள் மறைந்த செய்தி எனக்குக் கிடைகாததால் அவரை வாழ்த்துகிறேன். ஒரு வேளை அவர் பூதவுடல் மறைந்து இருந்தாலும் அவர் புகழ் உடம்புடன் என் மனதில் என்றும் வாழ்கிறார்.

இவர்களைப் போன்றவர்களால் அல்லவோ "உண்டாலம்ம இவ்வுலகம்!"

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

ராபர்ட் கிளைவ் யாருக்கு முத்தம் கொடுத்தார்?
ஆக்கம்: தேமொழி

ருட்யார்ட் கிப்லிங் (Joseph Rudyard Kipling) என்ற ஆங்கில எழுத்தாளரைப் பற்றித் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கமுடியாது.  அதுவும் இந்த தலைமுறையினருக்கும் அவரைப் பற்றி அறிமுகப்படுத்தியது வால்ட் டிஸ்னியின் படமான "தி ஜங்கில்  புக்" என்பதாகும்.  விக்கிபீடியா களஞ்சியத்தின் மூலம் அவர் பற்றிய செய்திகள் பலவற்றை அறிந்து கொள்ளமுடியும்.  அவரது வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாக சொன்னால், அந்தக்கால ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த மும்பையில் 1865 ஆம் ஆண்டு பிறந்தவர்.  தன்னை ஆங்கிலோ இந்தியர்கள் எனக் கருதிக்கொண்ட இங்கிலாந்தின் குடிமக்களான பெற்றோர்களுக்குப்  பிறந்தவர்.  அவர் பிறந்தபொழுது அவர் தந்தை "Sir J. J. College of Architecture" என்னும் மும்பை கல்லூரியில் பணிபுரிந்தார்.  அவர் பிறந்த வீடு சிதிலமடைந்ததால் அதை இடித்து மற்றொரு கட்டிடம் அங்கே எழுப்பப்பட்டு, அது இப்பொழுது அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுவிட்டது.  கிப்லிங் பிறந்த இடம் எனக் குறிப்பிடும் பட்டயம் மட்டுமே அங்கே ஒரு இடத்தில் பொறிக்கப்படுள்ளதாம், அதைத்தவிர முக்கியத்துவம் தர நம் இந்தியர்களுக்கு அவர் பெயரில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.

அதற்கு குறிப்பாக மற்றொரு காரணம், கிப்லிங் ஆங்கில ஏகாதிபத்தியத்தில் பெருமை கொண்டவர், அவர் காலத்தில் பிரட்டிஷ் அதிகாரம் உலகம் முழுவதும் பரந்து கிடந்தது.  எனவே அது அவரது நாட்டுப் பற்று, அதில் எந்த ஒரு குறையும் சொல்வது தவறு.  ஆனால் அவர் கூறிய மற்றொருகூற்று "தி வைட் மேன்ஸ் பர்டன்" (The White Man's Burden) என்றது பலருக்கு எரிச்சல் மூட்டியது.  ஐரோப்பிய கிறிஸ்துவ வெள்ளைக்காரர்களின் கடமை பின்தங்கிய நாடுகளுக்கு சென்று அந்த மக்களை கலாச்சாரப்படி மேம்படுத்துவது என்பதைத்தான் அவர் அவ்வாறுக் குறிபிட்டார்.  இது பொதுவாக மற்றக் கலாச்சாரங்களைக் கீழ்த்தரமாகக் கருதும் ஐரோப்பியர்கள் அல்லது வெள்ளைக்காரர்களின் கருத்து.

நமது கடிகாரம் சரி என (நாமே நினைத்து) நாம் அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்ய முயன்றால்....??
(அய்யர் ஐயாவின் பின்னூட்டக் கருத்துக்களில் மனதை தொட்ட வரிகள்)

இது போன்ற ஆணவ, அகங்கார எண்ணமுடைவர்களை நம் மண்ணில் பிறந்த ஒரே காரணத்திற்காக நாமும் கொண்டாட விருப்பமில்லாமல் இருப்பதில் தவறில்லைதான்.  தன் பிறப்பின் பின்னணியினால் தன்னை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு சகமனிதர்களை இளக்காரமாகப் பார்பவர்களையே  இளக்காரமாக நினைக்க இன்னொருவர் உலகத்தில் இருக்க மாட்டார்களா என்ன?

நோபல் பரிசுகள்  வழங்க ஆரம்பித்த பின்பு ஆங்கில இலக்கியத்திற்காக முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர் (42 ஆம் வயதில், 1907 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்)  என்ற பெருமைகள் இவரைச் சாரும்.  மும்பையில் பிறந்து ஆறு வயது வரை அங்கு வளர்ந்து, பின்பு பள்ளிப் படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பப்பட்டு, மீண்டும் இந்தியா வந்து கொஞ்ச நாள் வேலைப் பார்த்தார்.  பின் உலகம் முழுவதும் சுற்றினாலும், பல நாடுகளில் வாழ்ந்தாலும், அவரால் இந்தியாவில் வாழ்ந்த நாட்களை மறக்க முடியவில்லை.  அதிலும் அவர் பிறந்த பம்பாய் நகர் மேல் தனி அன்பும் அவருக்கு இருந்தது.  இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதினார்.  ஜங்கிள் புக் கதையில் இந்தியாவை அடிப்படையாக வைத்து எழுதியது போல் அவரது பிற படைப்புகளிலும்  இந்தியாவைப் பற்றிப் பலமுறைக் குறிபிட்டுள்ளார்.

சென்ற வார மலரில் ஏழு கடல்களைப் பற்றிப் படித்த பின்பு, இணையத்தில் தேடியதில் கிப்லிங்கின்  "The Seven Seas" என்ற புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது (http://www.gutenberg.org/files/27870/27870-h/27870-h.htm).  பொதுவாக இலக்கியங்களில் (தமிழோ அல்லது ஆங்கிலமோ, இதில் மொழி பேதம் இருந்ததில்லை) எனக்கு ஆர்வம் குறைவென்பதால் அவைகளைப் பார்ப்பதுடன் நிறுத்திக்கொள்வதே என் வழக்கம், படிக்க முயலுவதில்லை.  இந்த புத்தகத்தை கிப்லிங் பம்பாய் நகரத்திற்கு சமர்ப்பணம் செய்து, பம்பாய் நகரத்தின் மீது ஒரு கவிதையே எழுதியுள்ளார்.  இந்தப் படைப்பில் ஒரு இடத்தில் ஆங்கில ஆட்சியின் கீழிருந்த நகரங்கள் கூறுவதாக "The song of the Cities" என்ற தலைப்பில் பல சிறிய செய்யுள்களும் இடம் பெற்றுள்ளன.  அதில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன (இடம் பெற்ற மற்ற நகரங்கள், Rangoon, Singapore, Hon-Kong, Halifax, Quebec and Montreal, Victoria, Capetown, Melbourne, Sydney, Brisbane, Hobart, and Auckland).  அவற்றில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

The song of the Cities
(by Rudyard Kipling, 1896)

          Bombay
Royal and Dower-royal, I the Queen
     Fronting thy richest sea with richer hands --
A thousand mills roar through me where I
     glean
     All races from all lands.

          Calcutta
Me the Sea-captain loved, the River built,
     Wealth sought and Kings adventured life to hold.
Hail, England!  I am Asia-Power on silt,
     Death in my hands, but Gold!

          Madras
Clive kissed me on the mouth and eyes and brow,
     Wonderful kisses, so that I became
Crowned above Queens --a withered beldame now,
     Brooding on ancient fame.

(* beldame என்றால் அழகற்ற கிழவி என்று பொருள்)

இவரது "If___" (http://www.everypoet.com/archive/poetry/Rudyard_Kipling/kipling_if.htm) என்ற கவிதையைப் படித்துப் பாருங்கள், இந்தக் கவிதையின் சாரம் கீதாஉபதேசத்தின் கருத்துக்களைக் கொண்டது என்று பத்திரிக்கையாளர் திரு. குஷ்வந்த்சிங் அவர்கள் கருதியதாகத் தெரிகிறது.  இது ஒரு நல்ல கவிதைதான்.  பார்வதி படித்தால் எந்த சுலோகங்களின் சாயல் இந்தக் கவிதையில் உள்ளது என்று சொல்லிவிடுவார்கள்.  சிறிது காலம் கிப்லிங் ஒரு யானை தன் துதிக்கையில் தாமரைப் பூவினை வைத்திருப்பதையும், இந்துக்கள் சூரியனின் குறியாகக் கருதும், அதிர்ஷ்டம் தரும் என்று நம்புகிற சுவஸ்திகாவையும் தன் புத்தகங்களில் இலச்சினையாகப் பயன்படுத்தியுள்ளார்.  ஆனால் ஜெர்மனின் நாசிப் படைகளின் குறியாக  சுவஸ்திகா உயோகப்பட ஆரம்பித்தவுடன் அவர் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
 இந்த ஆக்கத்திற்கு ஓவியம் வரைந்து கொடுத்த தேமொழி அவர்களுக்கு நன்றி - தனுசு
 
காத்திருப்பில் கலங்காதே
-தனுசு-

கொல்லிமலை காட்டுக்குள்ள
மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
மூணு நாளா தவிச்சிருக்கு -என்
முகம் காண துடிச்சிருக்கு.

பச்சரிசி சோறோடு
கருவாட்டு குழம்பாக்கி
தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
ஒத்தையிலே காத்திருக்கு.

உச்சந்தலை கூந்தலிலே
கட்டிவச்ச கருப்பு!
நெற்றியெனும் முற்றத்திலே
பொட்டு வச்ச வனப்பு !

கண்ணுக்குள் குடிவந்த
கடல்மீனின் துடிப்பு!
கன்னக் கதுப்பினில்
உப்பியிருக்கும் செழிப்பு!

வெளஞ்ச சோளக்கொல்லை
போல உந்தன் உடம்பு!
மெலிந்த உதட்டோரம்
மின்னுமடி சிவப்பு!

நிமிர்ந்து நடந்தாலே -சுவைக்கும்
மாங்கனி நினைப்பு!
இத்தனையும் பார்த்தாலே -மனசில்
வைக்குமடி நெருப்பு!

மலரும் நினைவினில் -உன்முகம்
உலர வேண்டாமடி
புலரும் பொழுதிதில் -விலகும்
உன் வருத்தமடி!

கொஞ்சிப்பேச வாரேனடி
கொஞ்சம் பொறு மயிலே!
கூட்டிக் கொண்டு வாரேன்
குளிர்காயும் நிலவை!

கொக்கரொக்கோ கூவும்வரை
நித்திரைக்கு தடை சொல்ல
வில்லாளன் வாரேனடி 
வன வேட்டை முடித்து.
-தனுசு-

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.

இந்த வயதிலும் ஓடிக்கொண்டிருக்கும் வாகனம்!
By S. Sabari Narayanan, Chennai

(இந்த வாகனம் ஏலத்தில் 3 கோடி 65 லட்ச ரூபாய்களுக்கு விலை போனதாம்)

This is the oldest motor vehicle car in the world that still runs.
It was built one year before Karl Benz and Gottlieb Daimler invented the internal combustion engine.

The world's oldest running motor vehicle has been sold at auction for an astonishing $4.62 million (R36.5-million), more than double the pre-sale estimate, as two bidders chased the price up in a three-minute bidding war.

The 1884 De Dion Bouton et Trepardoux Dos-a-Dos Steam Runabout drew a standing ovation as it was driven up onto the stage at Friday's RM Auction in Hershey , Pennsylvania - to prove that this 127-year-old car really does run! - and attracted a starting bid of $500 000, which was immediately doubled to $1 million.
Encouraged by the applauding crowd, the bidding went swiftly up to $4.2 million (R33 million) - 4.62 million (R36.5 million) including the 10 percent commission - before the car was knocked down to a unnamed buyer.

The Dos-a-Dos (Back-to-Back) Steam Runabout was built in 1884 by George Bouton and Charles-Armand Trepardoux for French entrepreneur Count de Dion, who named it 'La Marquise' after his mother.

In 1887, with De Dion at the tiller, it won the world's first ever motor race (it was the only entrant to make the start line!) covering the 32km from the Pont de Neuilly in Paris to Versailles and back in one hour and 14 minutes (an average of 25.9km/h) and, according to contemporary reports, hitting a breathtaking 60km/h on the straights!

La Marquise has only had four owners, remaining in one family for 81 years, and has been restored twice, once by the Doriol family and again by British collector Tom Moore in the early 1990's.  Since then, it has taken part in four London-to-Brighton runs and collected a double gold at the 1997 Pebble Beach
d'Elegance in California . 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

55 comments:

Parvathy Ramachandran said...

பெரியவர். திரு. தஞ்சாவூரார் தெரியப்படுத்திய 'அதிதி போஜன' மகிமை எத்தனை முறை படித்தாலும் மீண்டும் படிக்கத் தூண்டும் அருமையான சரித்திரம். முக்கியமாக அதிதி என்பவர், அழையா விருந்தாளி. இப்போது நடப்பது போல், போன் செய்து, வருவதற்குச் சௌகரியப்படுமா என்று விசாரித்து விட்டுச் செல்லும் உறவினர், நண்பர்களல்லர். ஸ்ரீ மஹா பெரியவர், சிவராத்திரியன்று சிவசாயுஜ்யம் அடைந்த தம்பதிகளைப் பற்றிச் சொன்ன தினமும் ஒரு மாத சிவராத்திரியே. அன்னதானச் சிறப்போடு, நாம ஸ்மரணையின் மகிமையையும் ஒரு சேர விளக்கும் அற்புதக் கதை இது. மீண்டும் படிக்கத் தந்தமைக்கு, என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

Parvathy Ramachandran said...

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

என்பதை மனதைத் தொடும் வகையில் உணர்த்தியது, திரு. கே.எம்.ஆர். அவர்களின் ஆக்கம். தாயன்புக்கு ஈடு இணை இல்லை என்பதையும் மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியது.

// கனகா வீட்டை அடையும் முன்னர் கணவருக்குச் செய்தி போயிற்று. //

ஆண்டாளின் நிஜப் பெயரைத் தான் மகளுக்குச் சூட்டினீர்களா!!!!

மிக மிக மிக அருமையான, வாழ்க்கைச் சரித்திரம். எந்தரோ மகானு பாவுலு!!!!
அந்தரிகி வந்தனமு!!!!!(எத்தனையோ மகான்கள் இந்தப் புண்ணிய பூமியிலே, அத்தனை பேருக்கும் என் வந்தனம் ) என்ற ஸ்ரீ தியாகய்யரின் வரிகள், இந்த மாதருள் மாணிக்கத்துக்கும் பொருந்தும். நல்லதொரு ஆக்கம் தந்தமைக்கு நன்றி.

Parvathy Ramachandran said...

தேமொழியின் ஆக்கத்தின் மூலம் ருட்யார்ட் கிப்லிங் பற்றிப் பல செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. சென்ற வாரமலரின் 'ஏழு கடல்கள்' பற்றி நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி.

கிப்லிங்கின் ' நகரக் கவிதைகளில்' சென்னையை கிளைவ் அழகுபடுத்திய விதத்தை சிருங்காரபாவத்துடன் அவர் வெளிப்படுத்தியது அருமை.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டியில் உள்ள கவிதையைப் படித்து விட்டு, திரு. குஷ்வந்த் சிங்கின் கருத்து பற்றிய என் அபிப்பிராயத்தைப் பிறகு சொல்கிறேன்.

வித்தியாசமான ஆக்கம். நன்றி.

Parvathy Ramachandran said...

காத்திருப்பில் கலங்காதே, திரு. தனுசுவின் போனவார உணர்ச்சிக்குமுறலுக்கு மாற்றாகத் குளிர்தென்றல் வீசி இதம் தருகின்றது.

பாட்டுக்கு மெட்டா, மெட்டுக்குப் பாட்டா என்கிற விவாதம் போல, ஓவியத்துக்குக் கவிதையா, இல்லை கவிதைக்கு வரைந்த ஓவியமா என்ற அழகிய விவாதம் மனதுக்குள் எழுந்தது.

//உச்சந்தலை கூந்தலிலே
கட்டிவச்ச கருப்பு!
நெற்றியெனும் முற்றத்திலே
பொட்டு வச்ச வனப்பு !

கண்ணுக்குள் குடிவந்த
கடல்மீனின் துடிப்பு!
கன்னக் கதுப்பினில்
உப்பியிருக்கும் செழிப்பு!//

என்னும் வரிகளை ஓவியத்தில் உயிர்ப்புடன் கொண்டு வந்த ஓவியர் தேமொழிக்கு ஜே!!!. அதுவும் காத்திருப்பின் வேதனை கண்களில் தெரியக் கிடைப்பது அருமை.

உழைக்கும் மக்களின் ஒப்புயர்வற்ற சொத்தான 'நாட்டுப்புறப் பாட்டு' என்றழைக்கப்படும் (இப்போது இது 'மக்கள் பாட்டு') பாட்டு வகையில் அமைந்த
தனுசுவின் கவிதை, தனுசுவின் பல தளங்களிலும் கவிபாடும் திறனுக்கு மற்றும் ஒரு சான்று. அருமை. ஒவ்வொரு வரியிலும் காதல் தெறிக்கிறது.
பிரிவாற்றாமையை அழகு மிளிரச் சொல்லும் கவிதை தந்தமைக்கு நன்றி.

Parvathy Ramachandran said...

ஓல்ட் இஸ் கோல்ட்' என்பதைச் சொல்லும் திரு. சபரி நாராயணனின் ஆக்கமும் அழகு'. இது போல் அரிய செய்திகள் நிறைந்த கட்டுரைகள் பலவற்றை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.

Parvathy Ramachandran said...

என் ஆக்கத்தை வெளியிட்டமைக்கு, வாத்தியார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அதைப் படிக்கும் சக நண்பர்களுக்கும் நன்றி.

இம்முறையும் சுட்டி வெளியிட்டமைக்கு நன்றி. ஆனால் அதில் இடைவெளி(space) உள்ளது. சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

kmr.krishnan said...

தஞ்சாவூரார் அனுப்பியுள்ள தகவல் உயர்வானது என்று சொல்லவும் வேண்டுமா?

'மாத்ரு தேவோ பவ!பித்ரு தேவோ பவ!ஆசார்ய தேவோ பவ! அதிதிதேவோ பவ!'என்பதல்ல‌வோ வேதவாக்கியம்.அதனுடன் சுவாமி விவேகானந்தர் "தரித்ரதேவோ பவ! மூர்கதேவோ பவ!" என்பதையும் நவீனகாலத்தில் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

"ஏதாவது வேலைக்குச் சென்று பிழைப்பதுதானே!" என்ற கடும் குரலைத் தவிர்ப்போம்.முடிந்தால் அன்னமிடுவோம். முடியாவிட்டால் அமைதி காப்போம்.

நாம் தர்மம் செய்ய, மற்ற‌வர்கள் ஊனமாக இருக்க வேண்டும் என்பது போன்ற‌ மன முடிச்சுக்களை அவிழ்ப்போம். 'இல்லை' என்று வாயால் சொல்லாமல், சிறிய தொகையானாலும் கேட்டவர்களுக்கு கொடுப்போம்.

சமீபத்தில் ஒரு கணினிப் பொறியியல் மாணவியுடன் மயிலை அறுபத்துமூவர் உற்சவத்தில் அன்னதானம் நடந்தது பற்றி விவாதம் வந்தது.அன்னதானத்திற்கு எதிராகவே அந்தப் பெண் பேசி வந்தாள்."யாருக்கும் இலவசமாக எதையும், உணவு உட்படக் கொடுக்கக் கூடாது"என்பதே அவ‌ள் நிலைப்பாடு.

"சரி! நீ தேர்வு முடிந்து வேலையில் சேர்வாய் அல்லவா? அப்போது நண்பர்களுக்கெல்லாம் 'ட்ரீட்' கொடுப்பாயல்லாவா?"

"ஆம்!"

"உன் கொள்கைப்படி அவர்களிடம் எல்லாம் 'ட்ரீடு'க்கான தொகையை வசூல் செய்வாயா?"

"அதெப்படி? மாட்டேன்"
"ஏனோ?"
"அவர்கள் என் விருந்தினர்கள்!"

அதுவேதான் பாரதத்தின் ஆன்மா கூறுவதும். அதிதி என்றால் விருந்தினர். அவர்கள் பிச்சைக்காரரகள் அல்ல.நாமும் தானம் செய்யவில்லை. நாம் 'ஹோஸ்டு'அவர்கள் 'கெஸ்டு'என்றேன். ஏதோ கொஞ்சம் 'கன்வின்ஸ்' ஆனாள் அந்த மைக்ரோ சாஃப்டில் தேர்வு பெற்று சியாட்டில் பறக்க இருக்கும் எதிர்கால பெண் பில்கேட்ஸ்!

kmr.krishnan said...

பார்வதி அம்மையாரின் மாபாரதத் தொகுப்புக் கட்டுரை பயனுள்ளது.

சொந்த வாழ்வில் வேண்டுமானால் பழிக்குப்பழி என்ற உணர்வை நாம் தவிர்க்க‌லாம்.நாடு என்று வந்துவிட்டால் பாதுகாப்புக் கருதி மறத்தினை நாடத்தான் வேண்டியுள்ளது.

நேரு 'இந்தி சீனி பாய் பாய்' என்று நட்புப் பாராட்டினார்.'ஆமாம்' போட்டுக் கொண்டே பகையாளிக் குடியை உறவாடிக் கெடுத்தது சீனா!

அம்மையாரின் படிப்பும் ஆய்வு மனப்பான்மையும் வாழ்க! வளர்க!

kmr.krishnan said...

என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி.

// கனகா வீட்டை அடையும் முன்னர் கணவருக்குச் செய்தி போயிற்று. //

இந்த இடத்தில் கனகா என்பதை ஆண்டாள் என்று வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் ஐயா இந்தத் தவற்றினைத் திருத்தி உதவ வேண்டுகிறேன்.

என் ஆக்கத்தைப் படித்து உடனே பின்னூட்டம் இட்ட பார்வதி அம்மைக்கு நன்றி. பெயர் குழப்பத்தைக் கண்டு சுட்டியமைக்கும் நன்றி

thanusu said...

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் இந்த தானம் செய்வதால் நம்முடைய தனம் குறையாது.ஆய்யா அவர்களின் கதையில் வரும் செட்டியாரைபோலவோ ஆச்சியை போலவோ இன்று பார்ப்பது ஆச்சிரியத்திலும் ஆச்சரியம்.

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் செய்யும் தானமும் தர்மமும் கடமைக்காகவோ, நேர்த்திக்கடனுக்காகவோ எனும் ரீதியிலே அமைந்து விடுகிறது. அதில் ஈடுபாடுமில்லை, பக்தியுமில்லை. அதனால்தான் நம் பெரியோர்கள் இறை ஸ்தலங்களில் தானம் செய்வதை வலியுருத்துகிறார்கள், அதிலும் அன்னதானத்தை குறிப்பிட்டு சொல்கிறார்கள்.

பிரதிபலனைப் பார்க்காமல், இயந்திரத்தனமாக செய்யாமல் செய்யும் தானமும் தர்மமும் நம்மை இறைவனிடம் கொண்டு போய் சேர்க்கும் .நல்லதொரு விஷயத்தை தந்த அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன்,துச்சாதனன்,பாஞ்சாலி, சூதாட்டம் போன்ற மெயின் பார்ட் மட்டுமே எனக்கு மஹா பாரதத்தில் தெரியும்.பார்வதி அவர்களின் எழுத்து என்னை மஹாபாரதத்தை முழுமையாக படிக்க தூண்டுகிறது.

சாமானியனுக்கு பழி வாங்கும் உணர்வு அதிகம். அவன் அதை கை விட்டால் அவன்தான் பெரிய மனிதன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கிருஷ்னன் சாரின் "மலரும் நினைவு" தொகுப்பிலிருந்து இன்று ஆண்டாள் அவர்களின் நினைவு.

இன்றும் கூட வட இந்தியாவில் கவுரவக் கொலைகள் தொடர்கின்றன.மத சார்புள்ள நம் தேசத்தில் கலப்பு மணம் இன்னும் எத்தனை நூறு ஆண்டுகளானாலும், முழுமையான அங்கிகாரத்த்ற்கு உட்படாது, என்பதே எதார்த்தம்.

இதில் ஆண்டாள் தான் மனதை தொட்டார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தேமொழி கொடுக்கும் தகவல்களுக்கு நன்றிகள். என்போன்றொருக்கு தேடி படிக்க நேரமே இல்லை என்றாலும் தேமொழி தேடி பிடித்து கொடுக்கும் பல தகவல்களும் நன்றாகவே இருக்கின்றன.

சென்னை கவிதை ஒ.கே.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எனது ஆக்கத்தை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
பழையதை சேகரிப்பதிலும் ,பாராட்டுவதிலும் ஆங்கிலேயருக்கு நிகர் யாருமில்லை. (இந்த வகையில் ஃபிரன்ச் காரர்கள் முதலிடம்).

நம்மவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு காயலான் கடைக்கு கொடுத்து விடுவார்கள்.

Thanjavooraan said...

அன்னதானச் சிறப்பினை விளக்க மகா பெரியவர் சொன்ன கதையை வெளியிட்டமைக்காக நன்றிகள். தனுசுவின் காதல் கவிதையில் காதற்சுவை சங்க இலக்கியங்களை நினைவு படுத்துகிறது. மிக அருமையான உவமைகள். நெற்றிப் பொட்டையும், மாம்பழக் கன்னங்களையும் அவர் சொற்களால் வர்ணித்திருப்பது மிக மிக அருமை. வாழ்க, தொடர்க தனுசுவின் கவிதைத் திறன். மரியாதைக்குரிய பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் வழக்கம் போல மிக அருமையான பகுதியை வில்லிபாரதத்திலிருந்து எடுத்துக் காட்டியிருப்பது அருமை. என்னை அவமானப் படுத்தி என் வாழ்க்கையைப் பறித்த உன்னைக் கொல்வேன் என்ற சிகண்டியின் சபதம் நிறைவேற்றியது போர்க்களத்தில். ஒரு பெண்ணுக்கு எதிராகப் போரிடேன் என்று வில்லைக் கீழே போட்ட அந்த பெருமகனாருக்கு உயிர் பெரிதல்ல, தன் சபதமே பெரிது. கலியின் தொடக்கம்தான் பாரதப் போர். இன்றைய பல தீங்குகளுக்கு அச்சாரமிட்டது பாரதப் போர் என்பதை நினைவு படுத்தியிருக்கிறார். கே.எம்.ஆர். அவர்களுக்கு மூத்த குடிமக்களிடம் இரக்கம் அதிகம். இவரே ஒரு பாட்டிக்குச் சிகை அலங்காரம் செய்தி சேவாலயாவில் கொண்டு போய் சேர்த்த கதையைச் சொல்லியிருக்கிறார். இப்போது இன்னொரு ஆண்டாள் கதை. அந்த காலத்தில் சிறைக் கைதிகளைச் சந்தித்து அவர்கள் கதையை ஒரு பத்திரிகை வெளியிட்டு வந்தது. கே.எம்.ஆர். முதியோர் இல்லம் சென்று கதைகளைத் தேடலாம். (என் சிபாரிசு இது). தேமொழியின் சித்திரமும், ஆங்கில கவிதையின் எழிலைச் சுட்டிக்காட்டும் கட்டுரையும் அருமை. இந்த வாரம் சிறப்பான வார இதழாக அமைந்தது.

thanusu said...

Parvathy Ramachandran said...காத்திருப்பில் கலங்காதே, திரு. தனுசுவின் போனவார உணர்ச்சிக்குமுறலுக்கு மாற்றாகத் குளிர்தென்றல் வீசி இதம் தருகின்றது.

பாட்டுக்கு மெட்டா, மெட்டுக்குப் பாட்டா என்கிற விவாதம் போல, ஓவியத்துக்குக் கவிதையா, இல்லை கவிதைக்கு வரைந்த ஓவியமா என்ற அழகிய விவாதம் மனதுக்குள் எழுந்தது.

ரசித்து இட்ட பின்னூட்டத்திற்க்கு நன்றி பார்வதி அவர்களே.

இது கவிதைக்காக வரையப்பட்ட ஒவியம்தான்.

இந்த கவிதை ஒரு ஜாலி மூடில் எழுதப்பட்டது. எழுதிவிட்டு வாத்தியாரின் சுமையை குறைக்க இனையத்தில் படம் தேடினேன்,கிடைக்கவில்லை,தேமொழியின் நினைவு வந்தது. மின் அஞ்சலில் கவிதையை அனுப்பி கவிதைக்கு ஏற்ப ஒவியத்தை கேட்டேன்.அத்தனை பொருத்தமாக ஒரு ஒவியத்தை அனுப்பி வைத்தார்.

kmr.krishnan said...

ருட்யார்த் கிப்ளிங் பற்றிய அரிய தகவல்களுக்கு தேமொழிக்கு நன்றி. அதென்ன‌
இலக்கியத்தை ஒதுக்குவதாகக் கூறியுள்ளீர்கள்? நீங்களே ஓர் இலக்கிய வாதிதானே? ஏன் இலக்கியம் பிடிக்கவில்லை என்று பெரிய கட்டுரை தாருங்கள்.

kmr.krishnan said...

ஒரு கிராமீயத் தெம்மாங்குப் பாடலும் எழுத வரும் என்று நிரூபிக்கிறார் தனுசு.
"வெளஞ்ச சோளக் கொல்லையா உடம்பு?' ஒரு வேளை சோள‌க்கதிர், அல்லது சோளக் கொண்டை என்று இருக்க வேண்டுமோ?

kmr.krishnan said...

பாடலுக்கேற்ற ஓவியமும் அருமை.நன்றி தேமொழி.

kmr.krishnan said...

சபரி நாராயணனின் பழம் பொருள் கார் பற்றிய தகவலுக்கு நன்றி.

காரை ஏலம் எடுத்தவர் மிகப் பெரிய பணக்காரராக இருக்க வேண்டும்.அந்தத் தகவலையும் சபரி கூகிள் ஆண்டவரைக் கேட்டால் கிடைக்கலாம்.

அய்யர் said...

1.
குடிக்கும் தண்ணீர் 15 ருபாய்க்கு குறைவாக கிடைக்கிறதா.?

சில குறிப்பிட்ட இடங்களில் கிடைக்கும் தண்ணீரும் தரம் நிறைந்ததாக இருக்கிறதா..

///பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாது. ///

பக்தியை பற்றி பட்டி மண்டபம் போல் கேள்வி கேட்ட தஞ்சை சகோதரரே.. மீண்டும்.. டும்.. டும்..
....
நடந்தையே நினைத்திருந்தால்
என்றும் அமைதியில்லை..

பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்

மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏது

2.
சினமும்.. பழியும்..
வழுக்கில்லா வார்த்தைகளால்
வள்ளுவம் சொல்வதை குறிக்கலையே

சிரிக்கவா.. அழுகவா..

நீங்கள் அந்தப் பக்கமே இருப்பதால்
உங்களுக்கு முன்னால் ரசம் தடவிய கண்ணாடியை வைத்து இந்த பாடலை சுழல விட்டு அமைதி கொள்கிறோம்

......
ஒன்று பட வழியிலையே
உண்மைக்கு மொழியிலையே

உள்ளம் திறந்து ஒரு சொல் சொல்வதற்கும் முடியலையே

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்

கருணை பொங்கும் உள்ளம் - அது கடவுள் வாழும் இல்லம்

கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளைத் தேடி அலைகின்றார்

காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்

வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன்

3.
மீண்டும் அந்தப் பக்கமா..
மீட்டுவது மௌனராகமா. மோகனமா..

இந்த பாடல் வரிகளை சுழல விடுகிறோம். படத்தின் பெயரையோ பாடலசிரியரின் பெயரையோ பாட்டின் முதல் வரியையோ சொன்னால் "மைனரின்" பாராட்டினை பெறலாம்

......
மை தடவும் விழியொரம்
மோகனமை தினம் ஆடும்

மயக்கம் தரும்
மன்னவன்னின் திரு உருவம்

மன வீனைனயிலே நாடம் இட்டு
கீதம் ஆக்கி நீண்டுகின்ற தலைவா

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகலாம்

பார்வை நாடகம்,
அரங்கில் ஏறலாம்

4.
தலைப்பினை பார்த்தவுடன் கிளைவ் பற்றி கிசு கிசு என நினைப்பிலே இந்த பதிவினை படிக்க வில்லை..

5.
எண்ணங்களை எழுத்தாக்கும் புலியே
எழுத்துக்களுக்கு உருவம் தரும் அந்த

துரிகையை எப்படி பெற்றீர்
தொலைவில் இருந்தாலும் ஒரு முறை

கிராமத்திற்கு போய்யிட்டு வாங்க
இப்படி பாடிக்கிட்டே...

ஆத்தங்கரை மரமே
அரசமர இலையே
ஆலமர கிளையே
அதில் உறங்கும் கிளியே

6.
என்ன சபரியாரே..
100 ஆண்டுகளுக்கு முன்னர் போயிட்டீங்க...

முன்னாடி பார்க்கிற நீங்க எப்படி இப்படி பின்னாடி... (யாரும் ஹிப்னாடிசம் செய்துடலையே..)

நம்ம அ முருகன் இல்லாம
என்னவோ இந்த மலர் மணம் வாசம் குறைவாக உள்ளதோ..

வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது

ஏதேதோ ராகம்
எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல்
தலைவைத்து ஓடும்

பாட்டுக்கொரு ராகம்
ஏற்றிவரும் புலவா

உனக்கேன் ஆசை
நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை
சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை
கலைமகள் போலே

அய்யர் said...

1.
குடிக்கும் தண்ணீர் 15 ருபாய்க்கு குறைவாக கிடைக்கிறதா.?

சில குறிப்பிட்ட இடங்களில் கிடைக்கும் தண்ணீரும் தரம் நிறைந்ததாக இருக்கிறதா..

///பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாது. ///

பக்தியை பற்றி பட்டி மண்டபம் போல் கேள்வி கேட்ட தஞ்சை சகோதரரே.. மீண்டும்.. டும்.. டும்..
....
நடந்தையே நினைத்திருந்தால்
என்றும் அமைதியில்லை..

பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்

மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏது

2.
சினமும்.. பழியும்..
வழுக்கில்லா வார்த்தைகளால்
வள்ளுவம் சொல்வதை குறிக்கலையே

சிரிக்கவா.. அழுகவா..

நீங்கள் அந்தப் பக்கமே இருப்பதால்
உங்களுக்கு முன்னால் ரசம் தடவிய கண்ணாடியை வைத்து இந்த பாடலை சுழல விட்டு அமைதி கொள்கிறோம்

......
ஒன்று பட வழியிலையே
உண்மைக்கு மொழியிலையே

உள்ளம் திறந்து ஒரு சொல் சொல்வதற்கும் முடியலையே

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்

கருணை பொங்கும் உள்ளம் - அது கடவுள் வாழும் இல்லம்

கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளைத் தேடி அலைகின்றார்

காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்

வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன்

3.
மீண்டும் அந்தப் பக்கமா..
மீட்டுவது மௌனராகமா. மோகனமா..

இந்த பாடல் வரிகளை சுழல விடுகிறோம். படத்தின் பெயரையோ பாடலசிரியரின் பெயரையோ பாட்டின் முதல் வரியையோ சொன்னால் "மைனரின்" பாராட்டினை பெறலாம்

......
மை தடவும் விழியொரம்
மோகனமை தினம் ஆடும்

மயக்கம் தரும்
மன்னவன்னின் திரு உருவம்

மன வீனைனயிலே நாடம் இட்டு
கீதம் ஆக்கி நீண்டுகின்ற தலைவா

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகலாம்

பார்வை நாடகம்,
அரங்கில் ஏறலாம்

4.
தலைப்பினை பார்த்தவுடன் கிளைவ் பற்றி கிசு கிசு என நினைப்பிலே இந்த பதிவினை படிக்க வில்லை..

5.
எண்ணங்களை எழுத்தாக்கும் புலியே
எழுத்துக்களுக்கு உருவம் தரும் அந்த

துரிகையை எப்படி பெற்றீர்
தொலைவில் இருந்தாலும் ஒரு முறை

கிராமத்திற்கு போய்யிட்டு வாங்க
இப்படி பாடிக்கிட்டே...

ஆத்தங்கரை மரமே
அரசமர இலையே
ஆலமர கிளையே
அதில் உறங்கும் கிளியே

6.
என்ன சபரியாரே..
100 ஆண்டுகளுக்கு முன்னர் போயிட்டீங்க...

முன்னாடி பார்க்கிற நீங்க எப்படி இப்படி பின்னாடி... (யாரும் ஹிப்னாடிசம் செய்துடலையே..)

நம்ம அ முருகன் இல்லாம
என்னவோ இந்த மலர் மணம் வாசம் குறைவாக உள்ளதோ..

வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது

ஏதேதோ ராகம்
எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல்
தலைவைத்து ஓடும்

பாட்டுக்கொரு ராகம்
ஏற்றிவரும் புலவா

உனக்கேன் ஆசை
நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை
சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை
கலைமகள் போலே

kmr.krishnan said...

///இன்றும் கூட வட இந்தியாவில் கவுரவக் கொலைகள் தொடர்கின்றன.மத சார்புள்ள நம் தேசத்தில் கலப்பு மணம் இன்னும் எத்தனை நூறு ஆண்டுகளானாலும், முழுமையான அங்கிகாரத்த்ற்கு உட்படாது, என்பதே எதார்த்தம்.///

பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு அவர்களே! நம் நாட்டை அரசியல் ரீதியாக
மதச் சார்பற்ற நாடாகவே கூறுகிறார்கள். சமுதாய வகையில் மதச்சார்பு உள்ளதாக நீங்கள் நினைக்கலாம்.

நான் கூறிய உண்மைக் கதை பல்லாண்டுகளுக்கு முன்னர் நடந்தது.
ந‌மது இந்து மதத்தில் 'எம்மதமும் சம்மதம்' என்ற உணர்வு அடிநாதமாக ஒலித்து வருகிறது.அதன் தாக்கத்தால்தான் நமது மக்கள் இத்தனை பேர் மாற்று மதத்தினை தழுவுவதும், அங்கேயும் மிகுந்த ஈடுபாட்டோடு இருப்பதும் நிகழ்கிறது.மாற்று மதத்தில் இருந்து பெண்கள் இந்துமத ஆண்களை மணப்பது கிட்டத்தட்ட இல்லை. இது ஒரு ஒருவழிப்
பாதையாகவே உள்ளது.

இப்போது புதிதாக 'லவ் ஜிஹாத்' என்று துவங்கி, திருமணத்தின் மூலம் மதத்தினை விரிவு படுத்துதல் திட்டமிட்டு நடக்கிறதாம்.அதற்கு அரபு நாடுகளில் இருந்து மானியம் கிடைக்கிறதாகச் சொல்லுகிறார்கள்.

kmr.krishnan said...

//சிறைக் கைதிகளைச் சந்தித்து அவர்கள் கதையை ஒரு பத்திரிகை வெளியிட்டு வந்தது. கே.எம்.ஆர். முதியோர் இல்லம் சென்று கதைகளைத் தேடலாம். (என் சிபாரிசு இது)//

நல்ல வேளை முதியோர் இல்லத்துடன் நிறுத்திக் கொண்டீர்கள்.மனநோய் மருத்துவமனைக்கும் செல்லலாம் என்று பரிந்துரை செய்யாமல் விட்டீர்களே!
பின்னூட்டத்திற்கு நன்றி கோபால்ஜி அவர்களே!

Maheswaran said...

மாணவர் மலர் அருமை. நன்றி.

thanusu said...

Thanjavooraan said...தனுசுவின் காதல் கவிதையில் காதற்சுவை சங்க இலக்கியங்களை நினைவு படுத்துகிறது. மிக அருமையான உவமைகள். நெற்றிப் பொட்டையும், மாம்பழக் கன்னங்களையும் அவர் சொற்களால் வர்ணித்திருப்பது மிக மிக அருமை. வாழ்க, தொடர்க தனுசுவின் கவிதைத் திறன்.

kmr.krishnan said..ஒரு கிராமீயத் தெம்மாங்குப் பாடலும் எழுத வரும் என்று நிரூபிக்கிறார் தனுசு.

அய்யர் said...எண்ணங்களை எழுத்தாக்கும் புலியே

இதுபோன்ற பாராட்டுகள் தான் என்னை மேலும் மெருகூட்ட செய்கிறது.

அனைவருக்கும் நன்றிகள்.

Parvathy Ramachandran said...

ருட்யார்ட் கிப்லிங்கின் கவிதை, பகவத் கீதையின் பன்னிரண்டாம் அத்தியாயமான பக்தியோகத்தின் சாரத்தை உள்ளடக்கியுள்ளது. கவிதையைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
If
If you can keep your head when all about you
Are losing theirs and blaming it on you;
If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too;
If you can wait and not be tired by waiting,
Or, being lied about, don't deal in lies,
Or, being hated, don't give way to hating,
And yet don't look too good, nor talk too wise;
If you can dream - and not make dreams your master;
If you can think - and not make thoughts your aim;
If you can meet with triumph and disaster
And treat those two imposters just the same;
If you can bear to hear the truth you've spoken
Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to broken,
And stoop and build 'em up with wornout tools;
If you can make one heap of all your winnings
And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings
And never breath a word about your loss;
If you can force your heart and nerve and sinew
To serve your turn long after they are gone,
And so hold on when there is nothing in you
Except the Will which says to them: "Hold on";
If you can talk with crowds and keep your virtue,
Or walk with kings - nor lose the common touch;
If neither foes nor loving friends can hurt you;
If all men count with you, but none too much;
If you can fill the unforgiving minute
With sixty seconds' worth of distance run -
Yours is the Earth and everything that's in it,
And - which is more - you'll be a Man my son!
கவிதையோடு தொடர்புடைய ஸ்லோகங்கள்
அத்³வேஷ்டா ஸர்வபூ⁴தாநாம் மைத்ர: கருண ஏவ ச |
நிர்மமோ நிரஹங்கார: ஸமது³:க²ஸுக²: க்ஷமீ || 12- 13||

எவ்வுயரையும் பகைக்காமல், அனைத்துயிரினிடத்தும் நட்பும் கருணையும் உடையவனாய், நான், எனது என்பது நீங்கி, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவனாய், பொறுமையுடையவனாய்,
யோ ந ஹ்ருஷ்யதி ந த்³வேஷ்டி ந ஸோ²சதி ந காங்க்ஷதி |
ஸு²பா⁴ஸு²ப⁴பரித்யாகீ³ ப⁴க்திமாந்ய: ஸ மே ப்ரிய: || 12- 17||
எவன் எதற்காகவும் மகிழ்வதில்லையோ ,எதையும் வெறுப்பதில்லையோ, எதற்காகவும் துயரப்படுவதில்லையோ, ஆசைப்படுவதில்லையோ, நன்மையையும் தீமையையும் துறந்தவனோ அத்தகைய தொண்டனே எனக் கினியவன்.
ஸம: ஸ²த்ரௌ ச மித்ரே ச ததா² மாநாபமாநயோ: |
ஸீ²தோஷ்ணஸுக²து³:கே²ஷு ஸம: ஸங்க³விவர்ஜித: || 12- 18||
பகைவனிடத்திலும், நண்பனிடத்திலும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் பற்றற்று சமமாக இருப்பவன் எவனோ,
துல்யநிந்தா³ஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் |
அநிகேத: ஸ்தி²ரமதிர்ப⁴க்திமாந்மே ப்ரியோ நர: || 12- 19||
புகழையும் இகழையும் நிகராகக் கருதும் மௌனி, எதுவரினும் அதில் மகிழ்ச்சிகொள்ளுகின்றவன். தான் வசிக்கும் இடத்தில் தனக்கு என்ற பற்று இல்லாதவன், ஸ்திர புத்தியுடையவன் எவனோ இத்தகைய பக்தன் எனக் கினியவன்.
பொதுவாக, நான், எனது என்ற எண்ணங்களைக் கடந்து, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதும் 'ஸ்தித ப்ரக்ஞ' மனநிலையை அடைபவர் எவரோ அவரே சிறந்த மனிதர் என்னும் பகவத் கீதையின் சாரமே இந்தக் கவிதையில் தொனிக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.

Parvathy Ramachandran said...

/சினமும்.. பழியும்..
வழுக்கில்லா வார்த்தைகளால்
வள்ளுவம் சொல்வதை குறிக்கலையே

சிரிக்கவா.. அழுகவா..

நீங்கள் அந்தப் பக்கமே இருப்பதால்
உங்களுக்கு முன்னால் ரசம் தடவிய கண்ணாடியை வைத்து இந்த பாடலை சுழல விட்டு அமைதி கொள்கிறோம் //

தங்களது விமர்சனத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சில புராண நிகழ்வுகளை, கதாபாத்திரச் சித்தரிப்புகளை, உள்ளது உள்ளபடி சொல்ல முயன்றிருக்கிறேன். வள்ளுவம் சொல்லும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றாதவர்கள் பட்ட பாடும் பாரதத்தில் இருக்கின்றதே.

உதாரணமாக,
மறுத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்.

தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம்.

என்ற குறள் நெறிகளை துரோணர் மறந்ததால் பழிதீர்க்க முனைந்தார். அவரது செயல், துருபதனின் கோபாவேசத்தைத் தூண்டி, திரௌபதி மற்றும் த்ருஷ்டத்யும்னனின் பிறப்புக்கு வழிவகுத்தது. இறுதியில், பாரதப் போர்

சினமென்னுஞ் சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும்.
என்பதை நிலை நிறுத்தியது. எனினும் தங்களது மேலான கருத்துக்களுக்கு மீண்டும் என் நன்றி.

Ananthamurugan said...

மாணவர்மலர் மிக அருமை...!தனுசு விடுமுறையில் வீட்டிற்க்கு செல்கிறார் என்பது கவிதையில் தெரிகிறது!!!

Ananthamurugan said...

வகுப்பறை வாத்தியார் : வாத்தியார் நடத்தும் பாடம்!மாணவர்களுக்கு புரியவில்லை என்றால் வாத்தியார் பாடம் நடத்துவது அர்த்தமற்றது..??!!
மாணவன்: எனக்கு புரியல சார்..?!


///ருட்யார்ட் கிப்லிங் (Joseph Rudyard Kipling) என்ற ஆங்கில எழுத்தாளரைப் பற்றித் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கமுடியாது.//

எனக்கு தெரியல மேடம் ..?!

Ananthamurugan said...

வாழ்த்துக்கள் kmrk sir...

Ananthamurugan said...

அய்யர் said...
\\நம்ம அ முருகன் இல்லாம
என்னவோ இந்த மலர் மணம் வாசம் குறைவாக உள்ளதோ..

வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது\\

வேலை பளு அய்யா!!
நன்றிகள் பல..!!

Ananthamurugan said...

வில்லிபாரத கதைகள் அருமை.திருமதி.பார்வதி ,மேலும் தொடருங்கள் !!
மகாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாநாயகர்கள் பீஷ்மர்,கர்ணன்,அஸ்வத்தாமா,தி கிரேட் மாயகிருஷ்ணன்.எனக்கு அனைத்திலும் முதன்மையவன் கர்ணன் மட்டும்தான்.அதனால் கர்ண பர்வதத்தை பலமுறை படித்ததுண்டு.பகிர்வுக்கு நன்றி!!!

அய்யர் said...

///Ananthamurugan said...
வேலை பளு அய்யா!!
நன்றிகள் பல..!!////

அப்படியென்றால்....

ஓ..
புரிகிறது...
நாங்கள் எல்லாம் வேலையில்லாதவர்

ச்ச்ச்சும்மா.. இதுக்குத் தான்
ஒங்களை மாதிரி சொல்லி பார்த்தோம்..

அய்யர் said...

.//// Parvathy Ramachandran said... குறள் நெறிகளை துரோணர் மறந்ததால் பழிதீர்க்க முனைந்தார். இறுதியில், பாரதப் போர் ///

குறள் நெறிகளை துரோணர் மட்டும் மறக்க வில்லை..

கிருட்டிணனும் மறந்து இருக்கிறான்..
ராமனும் மறந்து இருக்கிறான்..

பட்டியலிட்டுச் சொன்னால் ...
பல பேர்கள்...

தேவர்கள் என நீங்கள் சொல்லும் அநேகமானவர்கள் குறள் நெறியை மறந்தவர்களே..

அவர்களை கடவுள் என சொல்ல நீங்கள் விரும்புகிறீர்களா..

அல்லது அவர்கள் சொல்லும் உபதேசங்களை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றீகளா..

அவிசொரிந்து ஆயிரம் வேட்டல்
வேண்டாமே... சகோதரி...

அய்யர் அமைதியாக இருக்கட்டடும்

Ananthamurugan said...

அன்னதானத்தில் பல முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை!!:அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்","ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"மற்றும் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.இதையெல்லாம் அறிந்து இருந்தாலும் ஒரு உதாராணம்..எனது மகளுக்கு மார்ச் 3 பிறந்தநாள் குறைந்தது அன்னதானம் செய்யலாம் என்று முதியோர் இல்லம் ,ஆதரவற்ற சிறுவர்கள் இல்லம்,ஆகிய இடங்களில் விசாரித்து நமது தகுதிக்கு மீறி செலவு சென்றதால்,அருகிலுள்ள வசதி குறைந்தவர்களை வீட்டிற்கு உணவிற்கு அழைத்தால் ,அவர்கள்,எதற்காக உணவு அளிக்கிறீர்கள் ?ஏதேனும் மூதாதையர்க்கு திதி என்றால் வரமாட்டோம்.நான்"அம்மா,பெண்ணிற்கு பிறந்தநாள் அதற்க்குதான் என்று கூறினேன்.சரியென்று வந்தனர்.உணவு முடிந்தவுடன்,எனது மகள் இனிப்பு,சாக்லேட் கொடுத்தபோது ,அவர்கள் பெண்ணிடம் "அப்பாவிடம் எதாவது பணம் கொடுக்க சொல்லுமா"?! சரியென்று, வந்தவர்கள் அனைவருக்கும் பணம் கொடுத்து அனுப்பியவுடன் எனது மனைவி என்னிடம் "தர்மத்துக்கும் காசா..??.இதனிளிருந்த்து மிகவும் உடலால், மனதால் தள்ளாமை கொண்டவர்கள் தவிர
அனைவரும் உழைத்து உண்ண வேண்டியவர்களே!!!இது என்னுடைய கருத்து மட்டுமே !தவறு இருப்பின் தஞ்சை பெரியவர் பொருத்தருளவேண்டும்.

Parvathy Ramachandran said...

//வில்லிபாரத கதைகள் அருமை.திருமதி.பார்வதி ,மேலும் தொடருங்கள் !!//

தங்கள் பாராட்டு என்னை 'ஆனந்த' மடையச் செய்தது. நன்றி.

Ananthamurugan said...

அப்போ!அடுத்து "வில்லன் பாரதமா??"

Parvathy Ramachandran said...

ஹா....ஹா......(கண்டுபிடிச்சிட்டாரே!!!!!! டாபிக்கை மாத்திரலாம்)

அய்யர் said...

///Ananthamurugan said...

அனைவரும் உழைத்து உண்ண வேண்டியவர்களே!!!இது என்னுடைய கருத்து மட்டுமே !////

ஆம் உழைத்து உண்ண வேண்டியவர்களே...இப்படி...

சிலர் தம் உழைப்பில்..
பலர் பிறர் உழைப்பில்..

தானம் என்பது வேறு
தர்மம் என்பது வேறு

சும்மா தருவதல்ல..தானம்..
இரக்கத்தில் வருவதல்ல தர்மம்..

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...

மலை போலே வரும்
சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்

நம்மை வாழவிடாதவர்
வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..

நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..

Sivakumar. I said...

"வெஞ்சினமும் பழிதீர்த்தலும் தர்மத்திற்கு ஒவ்வாத செயல்கள்!" post is very good one. Nice to read the stories and learn lessons from them. your blog name is given in the sign with space. But it is working fine if the space is removed. your blog is good and read நலம் தரும் நந்தன ஆண்டு post.

kmr.krishnan said...

"அதற்குமேல் ஓர் அறம் உண்டு. அதுவே மானுட அறம். என் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள டீக்கடையில் அய்யப்பண்ணன் என்பவர் டீ குடிக்க வருவார். நூறுவயது தாண்டியவர். விவசாயி. அய்யப்பண்ணனுக்கு பொய்கையாறு அணை இன்று இருக்கும் இடத்தில் வயல் இருந்தது. அங்கே செல்ல புலியூர்க்குறிச்சியில் பஸ் இறங்கி எட்டுமைல் நடக்கவேண்டும்.

அய்யப்பண்ணன் ஓட்டலில் நுழைந்து காலையுணவு சாப்பிடப்போகும்போது பஸ் வந்துவிட்டது. அடுத்த பஸ் மதியம்தான். ஆகவே பாய்ந்து ஏறிவிட்டார். கையில் தூக்குப்போணியில் பழையது இருக்கும் தைரியம். மதியம் வரை வெயிலில் வேலைசெய்துவிட்டு பசிவெறியுடன் சாப்பிட வரும்போது பார்த்தால் ஒரு நாடோடி அவரது போணிச்சோற்றை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அருகே நின்ற கம்பைப் பிடுங்கிக்கொண்டு அய்யப்பண்ணன் ஓடி வந்தார்.

நாடோடிக்கும் பயங்கரமான பசி போல. அவன் போணியை வழித்து நக்கிக்கொண்டிருந்தான். பசியாறிய முகத்துடன் ஏறிட்டுப்பார்த்தான். ‘எப்டி நான் அவன அடிப்பேன்…பசியாறின மொகத்தில உள்ளது மகாலச்சுமியில்லா?’ என்றார் அய்யப்பண்ணன் என்னிடம். அய்யப்பண்ணனின் அந்த மனவிரிவே மானுட அறம்."
B.JEYAMOHAN,WRITER

தேமொழி said...

என் கட்டுரையை பதிவிட்ட வாத்தியாருக்கும், உரிமையுடன் ஓவியம் வரைய முடியுமா எனக்கேட்ட தனுசுக்கும், அந்தப் படத்திற்கே அனுமதியளித்த வாத்தியாருக்கும் நன்றி. என் கட்டுரையைப் படித்தவர்களுக்கும், கருத்து எழுத நேரம் எடுத்துக் கொண்டவர்களுக்கும், சே... சே... நம் தரத்திற்கு இது பொருத்தமல்ல என்று தலைப்பைப் பார்த்ததும் படிக்காமலே தாவி அடுத்தக் கட்டுரைக்கு சென்றவர்களுக்கும், அதை மனம் திறந்து சொன்னவர்களுக்கும் நன்றி.

தேமொழி said...

///அய்யர் said...தலைப்பினை பார்த்தவுடன் கிளைவ் பற்றி கிசு கிசு என நினைப்பிலே இந்த பதிவினை படிக்க வில்லை..///

வாத்தியார் ஐயா வழியைப் பின்பற்றி தலைப்பை நன்றாகப் போடு படிப்பவர்களுக்கு ஆர்வம் வரும் என்று எண்ணி செய்த முயற்சியில், அந்த அறிவுரையைப் பின்பற்றுவதில் ஏதோ தவறு செய்துவிட்டேன் என்பது புரிகிறது :))))
கிசு கிசு எழுதும் ஆள் என்று அய்யர் ஐயா தன் தோழியை நினைத்தது தவறு என்று சுட்டிக் காட்ட விரும்புகிறேன். உங்களைப்(அய்யர் ஐயா) பற்றியும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன், ஆனால் அது கிசு கிசு அல்ல. வேண்டுமானால் "கிப்லிங்கின் வாழ்கை வரலாறும், அவர் இலக்கியத் திறனும்" என்று தலைப்பை மாற்றிக் கொண்டு படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இந்த தலைப்பைப் பார்த்தாலும் பலர் ஓடியிருப்பார்கள் என்பது நிச்சயம்.

///தேவர்கள் என நீங்கள் சொல்லும் அநேகமானவர்கள் குறள் நெறியை மறந்தவர்களே.. அவர்களை கடவுள் என சொல்ல நீங்கள் விரும்புகிறீர்களா..///

இதை நானும் பலமுறை நினைத்ததுண்டு, குறிப்பாக கர்ணன் படத்தில், கர்ணன் உயிர் விடும் காட்சியைப் பார்த்தபின்பு இப்படி நினைத்ததுண்டு

தேமொழி said...

தஞ்சை ஐயா மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற கொள்கையைக் கடைபிடிப்பவர் என்று தெரிகிறது. இந்தக் கட்டுரையைப் படித்த பொழுது அதைச் செயலில் காட்டிய KMRK ஐயாவையும் நினைத்துக் கொண்டே படித்தேன். எனக்கு ஆச்சியின் குணம் மிகவும் பிடித்தது. துறவியிடம் நீங்கள் கடவுள் நினைவுடன் செய்யாததால் தனியாக கடவுளுக்கு படைக்க நேர்ந்தது என சொல்லவும் ஒரு துணிச்சல் வேண்டும். நல்ல கட்டுரைக்கு நன்றி.

அந்தக் கால எளிய வாழ்வில் அதிதிக்கு உணவு தருவது சாத்தியப் படலாம். ஆனால் எல்லோரும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் தற்கால வாழ்கையில் அதிதிக்கு உணவு அளிப்பது நடைமுறைக்கு ஒத்து வராது. நாமே ஏதோ குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து மைக்ரோ வேவில் சூடு செய்து சாப்பிட்டுக் கொண்டு, யாராவது நமக்கு சுடச் சுட சமைத்துப் போட்டால் பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம், அதிதி வந்தால் அவர்களுக்கும் அதே கதிதான், நமக்கும் அதோ கதிதான். வேண்டாம் விட்டுடுங்க, இதைத் தோண்டத் தோண்ட வீட்டில் இருப்பவர்களுக்கே உணவு கொடுக்காத பல சோகச் செய்திகள் ஒன்று ஒன்றாக வெளிப்படலாம்.

தேமொழி said...

KMRK ஐயாவின் முதியோர் இல்லத் தொடர்ச்சி அந்தக் காலத்தில் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட்ட பெண்களின் சோதனைகளின் பிரதிபலிப்பு. மக்கள் அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்ற நினைவில் தன் குடும்பத்தினருக்கு செய்த துரோகங்களின் தொகுப்பு. தங்கள் மனசாட்சியின் படி நடந்துகொண்டு விரும்பியவரை மணந்த பெண்ணும், அவளது நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு உதவிய தாயும் குற்றவாளிகள் என்று கருதப்பட்ட நிகழ்ச்சி காலப் போக்கில் திரும்பிப் பார்க்கும் பொழுது மனிதாபிமானமற்ற செயல்களாகத் தோன்றுகிறது.

தஞ்சாவூர் ஐயாவின் அறிவுரைப்படி பாட்டிகளை சந்திக்கச் சென்றால் மைனருக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது. மனமொத்து கலப்பு மணம் செய்பவர்களுக்கு, ஜாதி, மதம், இனம், மொழி ஒரு பொருட்டல்ல. அன்பு ஒரு வழிப் பாதையுமல்ல. பல மதத்தினர் ஒன்றிணைந்த நடிகர் நாகேஷ் குடும்பத்தைப் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் ரமலத் போன்ற இஸ்லாமிய பெண்கள் இந்து ஆணை மணக்க வேண்டும் என்று நினத்தால் பிரபுதேவா போட்ட ஆட்டம் அவர்களை கதி கலங்கச் செய்யாதா? சூடு கண்ட பூனைகளைப் பற்றி உங்கள் சொல்லடைகள் என்ன சொல்கிறது? :))))

வாத்தியார் அவர்கள் கட்டுரைக்கு தேர்ந்தெடுத்த படத்தில் உள்ள பாட்டிகள் மகிழ்ச்சியுடன் இருப்பது நிம்மதியளித்தது. மேலும் தேடியதில் பாட்டிகளை இவ்வாறு ஆதரிப்பவர்கள் "Help Age India" எனத் தெரிந்தது. HELPING HAND Residents of the St Thomas home for the aged (Photo : R.Ravindran, thanks The Hindu Paper) -see at http://www.thehindu.com/life-and-style/metroplus/article950167.ece பந்தம், பாசம் என்று அன்புக்கு அடிமையாய் வாழும் முதியவர்களை, தங்கள் வீட்டுச் சிறையில் இருந்து வெளியேற்றி மிச்சமிருக்கும் நாட்களையாவது முதியவர்கள் தங்களுக்காக வாழ வழி செய்பவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள். ஆதரவற்ற முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவோ, அல்லது அந்த தொண்டு நிறுவனத்திற்கு உதவ நினைப்பவர்களோ தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண் - call HelpAge India at 25322149.

தேமொழி said...

பார்வதிக்கு இரண்டு முறை நன்றிகள். ஒன்று தெரியாத இதிகாசக் கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தி அவர்கள் மூலம் நாம் வாழ்கையில் என்ன பாடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டதற்கு. ஆனால் கோபம் வரும்பொழுது மட்டும் எனக்கு சிந்திக்க ஏனோ நினைவிருக்க மாட்டேன் என்கிறது.

மற்றொரு நன்றி கிப்லிங் கவிதையில் பயன் படுத்திய கீதையின் மூலத்தைத் தேடிக் கொடுத்த பொறுமைக்கு. பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம் ஐயா கீதையில் மேற்கோள் காட்டுகிறார், கிறிஸ்துவ கிப்லிங் கவிதையில் எடுத்தாள்கிறார், சீக்கியமத வழி வந்த குஷ்வந்த் சிங் அதைக் குறிப்பிடுகிறார். பிறப்பினால் இந்துவான எனக்கு அவர்கள் சொல்லி கீதையைப் பற்றி அறியும் நிலை, என்னத்த சொல்ல?

தேமொழி said...

தனுசுவின் கவிதை தெம்மாங்கு பாடல் போல அருமையாக இருந்தது. டி. எம். எஸ்ஸின் "ஏரிக் கரை மேலே போறவளே பெண் மயிலே" என்ற கவிஞர் கா.மு. ஷெரிஃப் எழுதிய பாடலை நினைவுக்கு கொண்டு வந்தது. அந்த அளவுக்கு எளிமை, அருமை. ஆனால் தனுசு... அதாவது "வில்லாளன் வாரேனடி வனவேட்டை முடித்து" என்று எழுதிய வரிகளைப் படித்ததும், அந்தப் பெண்ணின் கையில் ஒரு அலைபேசியின் படத்தைப் போட்டு
"டாடி மம்மி வீட்டில் இல்ல, தடை போட யாருமில்ல, விளையாடுவோமா உள்ளே வில்லாளா" என்று அந்தப் பெண் பாடுவது போல படம் போட கை துறு துறுத்து அபத்தமாக ஒரு ஆசையும் வந்தது.

தேமொழி said...

சபரி குறிப்பிட்ட காரை பற்றித் தேடி காணொளியும் பார்த்தேன், ஆமாம் அந்த வண்டி உண்மையிலேயே நன்றாகத்தான் ஓடுகிறது, தகவலுக்கு நன்றி சபரி. இது போன்ற ஏலம் போடும் உத்தியைப் பின் பற்றினால், நம் நாட்டிலும் கலைப் பொருட்களை மதிப்பளித்து விற்க அல்லது வாங்கும் ஆர்வத்தில் அவைகள் காப்பாற்றப் படலாம். இப்பொழுது செட்டிநாட்டு வீடுகளின் கலைப்பொருட்கள் மட்டுமே மறு சுழற்சிக்கு வருவது தெரிகிறது. "செல்லமே" சின்னத்திரைத் தொடரில் செல்லம்மாவின் வீடாக காண்பிக்கப் படுவது அந்தக் கால பொருட்களைக் கொண்டு வடிவமைத்து போல பார்க்க அழகாக இருக்கும்.

kmr.krishnan said...

//அவர்கள் பெண்ணிடம் "அப்பாவிடம் எதாவது பணம் கொடுக்க சொல்லுமா"?! சரியென்று, வந்தவர்கள் அனைவருக்கும் பணம் கொடுத்து அனுப்பியவுடன் எனது மனைவி என்னிடம் "தர்மத்துக்கும் காசா..??.இதனிளிருந்த்து மிகவும் உடலால், மனதால் தள்ளாமை கொண்டவர்கள் தவிர
அனைவரும் உழைத்து உண்ண வேண்டியவர்களே!!!இது என்னுடைய கருத்து மட்டுமே//
இளைஞர்கள் பலருக்கும் உணவளிப்பது என்பது பற்றியும், தானம்/தர்மம் என்பது பற்றியும் இன்னும் தெரியப்படுத்த வேண்டியது நிறைய உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது.

நீங்கள் அவர்களை வருந்திச் சென்று விருந்துண்ண அழைத்தீர்கள். அது விருந்துதானே தவிர தானம்/தர்மம் அல்ல. விருந்து உபசாரம் முடிநத பின்னர் போது அவர்களுக்கு தாம்பூலம் அளித்து வழியனுப்புதல் வேண்டும்.அது ஒரு முறை. தாம்பூலத்தில் சொர்ணபுஷ்பம் என்று சிறிய தொகை வெற்றிலை பாக்குடன் அளிப்பது ஒரு மரபு.அது மங்கலப் பொருள். அதனை உங்களுக்குத் தெரிவித்து மரபினைக் கடைப்பிடித்து இருக்கிறார்கள்.

அய்யர் said...

தேமொழி said...
///கிசு கிசு எழுதும் ஆள் என்று அய்யர் ஐயா தன் தோழியை நினைத்தது தவறு என்று சுட்டிக் காட்ட விரும்புகிறேன். உங்களைப்(அய்யர் ஐயா) பற்றியும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்,


///தேவர்கள் என நீங்கள் சொல்லும் அநேகமானவர்கள் குறள் நெறியை மறந்தவர்களே.. அவர்களை கடவுள் என சொல்ல நீங்கள் விரும்புகிறீர்களா..///

தெரியும் தோழியரே..
தொட்டுக் காட்டிய மேன்மைக்கு நன்றி


////இதை நானும் பலமுறை நினைத்ததுண்டு, குறிப்பாக கர்ணன் படத்தில், கர்ணன் உயிர் விடும் காட்சியைப் பார்த்தபின்பு இப்படி நினைத்ததுண்டு///

ஒன்றல்ல.. இரண்டல்ல..
பல இடங்களில்....

அவர்கள் கடவுள் என சொல்லும்
இவர்கள் சட்டபடிதண்டனைக்குரியவரா
(man made law அல்ல God made law)

எடுத்துச் சொன்னால் வைணவ பேதம்
என சொல்லி முருகனும்

இன்னமும் வகுப்பறை தோழர்கள்
இங்கே வருவார்கள் வாதம் செய்ய

அறியாமையில் இருப்பவர்கள்
அறிவு விளக்கம் பெறும் வரை

காத்திருப்போம்..
காலம் மாறும் என்ற நம்பிக்கையில்

எங்கே உண்மைகள் உறவாடவில்லையோ
அங்கே அன்பு நடமாடுவதில்லை

என சொல்லி உணர்வுகளுக்கு நன்றி
எப்பவும் போல் வணக்கமும் வாழ்த்தும்

kmr.krishnan said...

//அந்தக் கால எளிய வாழ்வில் அதிதிக்கு உணவு தருவது சாத்தியப் படலாம். ஆனால் எல்லோரும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் தற்கால வாழ்கையில் அதிதிக்கு உணவு அளிப்பது நடைமுறைக்கு ஒத்து வராது. நாமே ஏதோ குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து மைக்ரோ வேவில் சூடு செய்து சாப்பிட்டுக் கொண்டு, யாராவது நமக்கு சுடச் சுட சமைத்துப் போட்டால் பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம், அதிதி வந்தால் அவர்களுக்கும் அதே கதிதான், நமக்கும் அதோ கதிதான். வேண்டாம் விட்டுடுங்க, இதைத் தோண்டத் தோண்ட வீட்டில் இருப்பவர்களுக்கே உணவு கொடுக்காத பல சோகச் செய்திகள் ஒன்று ஒன்றாக வெளிப்படலாம்.//

மனமிருந்தால் மார்க்கமுண்டு.நீங்கள் சொல்லும் சோகக் கதைகளையாவது முதலில் நிவர்த்தி செய்யலாம்.வீட்டிலிருப்பவர்களுக்குக் கூட உணவளிக்காத மனநிலையில் இருப்பவர்களுக்கு மனநல வைத்தியம் அவசியம்.

தினசரி அதிதி உபசாரம் செய்ய முடியாது என்பதை ஏற்கிறேன்.காலத்தின் கோலம அது. வாரம்/மாதம் ஒரு நாளாவது தெருவில் சுற்றும் கைவிடப்ப‌ட்ட‌
முதியோர், மன நோயாளிகளுக்கு ஏதோ ஓர் உண்ணும் பொருளைக் கொடுக்க முய‌ற்சி செய்யுங்கள்.

டீக்கடையில் டீ குடிக்க வரும் நகர சுத்தித் தொழிலாளிகளும், கட்டிட வேலைக்குச் செல்லும் தொழிலாளிகளும் காலையில் வேலை துவங்குமுன் யாராவது ஒரு தேவை இருப்பவர்களுக்கு டீ வாங்கிக் கொடுப்பார்கள். அப்படி யாரும் கிடைக்காவிடில் தெரு நாய்க்கு வர்க்கி வாங்கிப் போடுவார்கள்.

நம்மைக் காட்டிலும் அதிக நேரம் உழைக்கும் தொழிலாளிகள் ஒரு நற்செயல் புரிவதை நேரமின்மை என்று ஒதுக்குவது இல்லை.

kmr.krishnan said...

//ஆனால் ரமலத் போன்ற இஸ்லாமிய பெண்கள் இந்து ஆணை மணக்க வேண்டும் என்று நினத்தால் பிரபுதேவா போட்ட ஆட்டம் அவர்களை கதி கலங்கச் செய்யாதா? //

இதற்கான விடை அந்த சமுதாயத்திற்குள்ளேதான் தேட வேண்டும்.
ஒரு முஸ்லிம் ஒரு காஃபிரை மணக்க முடிவெடுத்தால் அவர்களுடைய
உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அதனால்தான் அந்த ஆப்பிரஹாமிக் மதங்களில் மண‌மகளை முஸ்லிம் ஆக்கிய பின்னரே நிக்காஹ் ந‌டைபெறுகிறது.

புனிதமான திருமண பந்தங்களுக்கு சினிமாக்காரரகள் முன்னுதாரணம் ஆக முடியாது.

kmr.krishnan said...

//மேலும் தேடியதில் பாட்டிகளை இவ்வாறு ஆதரிப்பவர்கள் "Help Age India" எனத் தெரிந்தது. //

இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன.

மேற்கத்திய தாக்கத்தால் சமூக சேவை (social work/charity) என்பதையும் ஒரு தொழில் முறையாக்கிய நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றில் நிர்வாகச் செலவுகள், விளம்பரச் செலவுகள் அதிகமாகவும், சேவைக்குக் குறைவாகவும் செலவு செய்யும் போக்கு காணப்படுகிறது.
அது போன்ற நிறுவனங்களைப் பற்றி, தங்கள் பணத்தைச் செலவு செய்யு முன்,நன்கு விசாரித்து அறிந்து கொள்ளவும்.

அய்யர் said...

////அவர்களுக்கு தாம்பூலம் அளித்து வழியனுப்புதல் வேண்டும்.அது ஒரு முறை. தாம்பூலத்தில் சொர்ணபுஷ்பம் என்று சிறிய தொகை வெற்றிலை பாக்குடன் அளிப்பது ஒரு மரபு.///\

அனந்த முருகனுக்காக
அய்யர் சுழல விடும் பாடல்...


சின்னப் பயலே சின்னப் பயலே
சேதி கேளடா நான்

சொல்லப் போற வார்த்தையை
நன்றாய் எண்ணிப் பாரடா

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்

நரம்போடு தான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுன்னு

விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உன்தன்

வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே
(மனதை தொடும் வரிகள்...)

(அழுகின்ற குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் பாடும் பாடல் காட்சி நினைவுக்கு வருகிறதா தோழி தேமொழியாரே...)

kmr.krishnan said...

//அனந்த முருகனுக்காக
அய்யர் சுழல விடும் பாடல்...

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே
(மனதை தொடும் வரிகள்...)

(அழுகின்ற குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் பாடும் பாடல் காட்சி நினைவுக்கு வருகிறதா தோழி தேமொழியாரே...)//

அய்யர் அவர்களே! இதுவரை பல நூறு முறை வேண்டுகோள் விடுத்துள்ளேன். மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்களுக்கு ஏதாவது கருத்து உண்டானால் அதனை எல்லோருக்கும் நன்கு புரியும் படி சொல்வதுதான் முறை.

நான் சொல்லிய ஒரு கருத்தை எடுத்துப்போட்டு அனந்த முருகனை அத‌னை
வேடிக்கையாகக் கூட நம்பவேண்டாம் என்றும்,அது வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தை என்றும் கூறுவது மிகவும் புண்படுத்துவதாக உள்ளது.

வேலையில்லாதவர்களின் வம்பளப்பாக இதனை நீங்கள் கருதினால் உங்களுக்காகவேனும் பின்னூட்டம் இடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

பலமுறை கூறியும் நீங்கள் இதே பூடகமான பின்னூட்டங்கள் இடுவதை நிறுத்துவதில்லை.
சிவயசிவ ஜானகிராமா! உம‌க்கு வ‌ந்த விவேகம் எனக்கு வரவில்லையே!

அய்யர் said...

தோழர் லால் குடியாரருக்கு....

அன்பின் அகரமே
நட்பின் சிகரமே

தங்களின் பின் ஊட்ட பதில்
தப்பாக அல்லவா பார்க்க வைக்கின்றது

விளக்கம் சொல்ல இன்னொரு தோழியரா வேண்டும்

வருந்தும் படி என்ன என
வருடி பார்த்தோம் மீண்டும் தருகிறோம்/சொல்கிறோம்

இதில் பூடகமும் இல்லை
இனம் புரியாத முடகமும் இல்லை

....

////அய்யர் அவர்களே! இதுவரை பல நூறு முறை வேண்டுகோள் விடுத்துள்ளேன். மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்களுக்கு ஏதாவது கருத்து உண்டானால் அதனை எல்லோருக்கும் நன்கு புரியும் படி சொல்வதுதான் முறை.///

உங்கள் அன்பானையின் படியே
டி ஆர் பாணியில் பின்ஊட்டடம் வேண்டாம் என்றீர்

இப்போ
உரைநடையில் இடும் பின் ஊட்டங்கள் தெரியும் தானே தோழரே..

இன்னமும் தெளிவு என்றால் பின் ஊட்டம் இட வேண்டாம் என பொருள் கொள்ள முடியவில்லை,

காரணம் அதனை தாங்கள் விரும்ப மாட்டீர்கள் என்பது நன்றாக தெரியும்


///நான் சொல்லிய ஒரு கருத்தை எடுத்துப்போட்டு அனந்த முருகனை அத‌னை
வேடிக்கையாகக் கூட நம்பவேண்டாம் என்றும்,அது வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தை என்றும் கூறுவது மிகவும் புண்படுத்துவதாக உள்ளது. ///

இதில் புண்படுத்தும் எண்ணமும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை

நாம் உயர்வு மனப்பாண்மை உடையவர்கள் அல்லவா..

எத்தனையோ வரிகள் இருக்கையில்
இந்த வரிகளை எடுத்துக் கொண்டு வருந்துவதற்கு என்ன இருக்கிறது..


இதில் சொல்லவந்தது இது தான்

மரபுகள் எல்லாம் காலப் போகில் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியன. அதனால் தாம்பூலம் சொர்ணபுஷ்பம் என்பதெல்லாம் வாழ்ந்த காலத்தில் வாழும் காலத்திற்கு?? என

திருவிளையாடல் படத்தில் வரும் இந்த பாடல் மற்றும் காட்சியினை நினைவு படுத்தி....

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே
(குறுந்தொகை 2 ஆம் பாடல்) என்பது போல் கேட்டிருந்தது...

///வேலையில்லாதவர்களின் வம்பளப்பாக இதனை நீங்கள் கருதினால் உங்களுக்காகவேனும் பின்னூட்டம் இடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான்.////

அந்த எண்ணத்தில் எழுதியிருந்தால் அது அய்யரையும் சேர்த்துத்தானே.

அண்ணாவின் அடிக்குறிப்பில்இருந்து இந்த நிகழ்வை உங்களுக்காக அளிக்கின்றோம்

அண்ணாவிற்கு சிலை வைக்க நினைத்த எம்ஜிஆர் அண்ணாவை போட்டோ எடுத்து வரச் சொன்னார்
போட்டோ எடுப்பவரிடம் அண்ணா 5 விரல்களை காட்டியபடி எடுக்கச் சொன்னார் "உங்களை ஒரு விரல் காட்டியபடியே எடுத்து வரச் சொன்னார்" என்றார் போட்டோகிராபர்.

அர்த்தம் புரியாமல் சரி தம்பி சொன்னால் சரியாகத் தானிருக்கும் என சொல்லி போஸ் கொடுத்தார்

பின்னர் எம்ஜிஆரிடம், "5 விரல்களை விரித்து காட்டினால் சின்னத்தை குறிக்குமே ஒரு விரல் எதற்கு என்றார்"

"ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன் மொழியை மக்கள் புரிந்து கொள்வார்" என்றார் எம்ஜிஆர்

சிலாகித்து போன அண்ணா தம்பியை கட்டித் தழுவி பாராட்டினார்

இப்பவும் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இந்த வாக்கியம் எழுதப் பட்டிருக்கும்...


///பலமுறை கூறியும் நீங்கள் இதே பூடகமான பின்னூட்டங்கள் இடுவதை நிறுத்துவதில்லை.///

இதில் பூடகமும் இல்லை
அதை தரும் ஊடகமும் இல்லை..

அய்யருக்கு அது அவசியமும் இல்லை
அதுதேவையும் இல்லை..

அய்யரை ஏன் தவறான பார்வையில் பார்கின்றீர் என்பதும் புரியவில்லை..
வகுப்பறை தோழர் மற்றும் வாத்தியாருக்கு புரிந்தால் தெரியப்படுத்தவும்

////சிவயசிவ ஜானகிராமா! உம‌க்கு வ‌ந்த விவேகம் எனக்குவரவில்லையே!//

அவர் வராதது விவேகமா... அப்படி ஒரு மின்னஞசல் அவர் அனுப்பியிருந்தாரோ...

அய்யரின் பின் ஊட்டங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்வதாக பின் ஊட்டம் இட்ட தாங்கள் இப்போ
பின் வாங்கலாமா தோழரே..

வெள்ளி ஞாயிறு அய்யரை விடுப்பு எடுத்துக் கொள்ளச் சொன்னீர்

அய்யரின் எண்ணத்திற்கு பொங்களுர் சகோதரி விளக்கம் சொல்ல சொன்னீர்

ஏற்றுக் கொண்டோம் நட்பு பாராட்டி
இன்னமும் என்ன வேண்டும்..

டிஆர் பாணியில் பின் ஊட்டம் வேண்டாம் என்றீர்

இன்னமும் எத்தனை உங்கள் பட்டியலில் உள்ளது

பஞ்சாக இருக்கும் மனமருகே
நெருப்பு வரலாமா தோழரே...

உங்களுக்கா இந்த பாடலினை
சுழல விடுகிறோம்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

தண்னீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்

நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்

Ananthamurugan said...

////வெஞ்சினமும் பழிதீர்த்தலும் தர்மத்திற்கு ஒவ்வாத செயல்கள்!/

தலைப்பு அருமையாக இருக்கிறது!!!

Uma said...

கோபாலன் சாருக்கு வந்த இந்த மின்னஞ்சலைப் பகிர்ந்ததற்கு நன்றி.

பார்வதியின் ஆக்கம் முன்பு படித்தவற்றை நினைவூட்டியது. சொல்ல வந்ததைத் தகுந்த உதாரணங்கள் மூலம் விளக்கியிருக்கிறார்.

கிருஷ்ணன் சாரின் ஆக்கத்தைப் படித்தபோது இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

நிறைய தகவல்களை உள்ளடக்கிய தேமொழியின் ஆக்கம், மற்றும் தனுசுவின் கவிதை, அதற்குப் பொருத்தமாக தேமொழி வரைந்த ஓவியம், சபரி பகிர்ந்துகொண்ட தகவல் என அனைத்தும் நன்றாக இருந்தன.

கூகிளில் தேடுவதைவிட இந்த முறை தனுசு ஓவியத்திற்காகச் செய்த ஐடியா சுபெர்ப். தேமொழிக்கும் இது ஒரு புது முயற்சியாக, சவாலாக அமைந்திருக்கும்.