++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா?
Doubts: கேள்வி பதில் பகுதி ஆறு
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஆறு!
Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.23
சுனிதா நர்த்தகி
அன்புள்ள ஐயா,
உங்கள் கேள்வி பதில் பகுதி அருமை. இதோ என்னுடைய கேள்விகள்.........
கேள்வி 1 : மாந்தியின் சொந்த வீடு எது? மாந்தி சொந்த வீட்டில் இருந்தால் கெடுபலனா அல்லது நற்பலனா?
மாந்திக்கு சொந்த வீடு கிடையாது! மாந்தி தாதாக்களைப் போல இருக்கும் இடத்தை சொந்தமாக்கிக் கொள்வார் (அதாவது ராகு & கேதுவைப்போல)
கேள்வி 2 : அஸ்தமனம் ஆகி இருக்கும் கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் என்ன பலன் கிடைக்கும்?
பரிவர்த்தனை ஆன நிலையில்தானே அஸ்தமனமும் ஆகியிருக்க முடியும்? அஸ்தமனம் என்பது வீட்டிலேயே சிறைப்படுவதற்குச் (House arrest) சமம். சிறைப்பட்டுக் கிடப்பவர், நமக்கு சிறப்பாக என்ன செய்துவிடுவார் சொல்லுங்கள்? ஆனாலும் அவருடைய ஸ்டேட்டஸை வைத்து (உதாரணம் குரு) குறைவான காரகத்துவப் பலன்கள் குறையில்லாமல் கிடைக்கும்
கேள்வி 3 : லக்னத்திலும், அம்சத்திலும் லக்னாதிபதி லக்னத்தை பார்த்தால் நல்லதா?
ராசிச் சக்கரத்தில் ( In Rasi Chart) லக்னாதிபதி லக்னத்தை பார்த்தால் நல்லது. நவாம்சச் சக்கரத்திலும் (In Navamsa Chart) அதே அமைப்பு இருந்தால் மிகவும் நல்லது. Double century அடிக்கலாம்!
கேள்வி 4 : ஆறாம் வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தால் நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகமா?
ஆறாம் வீடு, நோய், கடன், எதிரி என்று மூன்று அமைப்புக்களுக்கு உரியது. அதைப் பற்றி விரிவாகப் பத்துப் பக்கங்களுக்கு மேல் எழுதிய பாடம் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது: படித்துப் பாருங்கள்
பதில் அளிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பேன் ..............
இப்படிக்கு
உங்கள் மாணவி
அளித்துவிட்டேன் சகோதரி!
-------------------------------------------
email No.24
கோபி கார்த்திகேயன், எஸ்ஸார்
Please clarify my doubt:
Sun
& Venus sitting in Thulam house which is own house for Venus.
Venus is very near to Sun (Less than 10°). Sun gets Neecham in
Thulam.Please clarify whether Venus will loose its power, even The Sun
is in neecham condition?
சூரியன் நீசமானதால் அஸ்தமனம் உண்டா அல்லது இல்லையா? என்ற சந்தேகத்திற்கெல்லாம் இடமில்லை. சூரியன் துலாமில் நீசம் பெறுவான். ஆனால் அவனுக்குள்ள எரிக்கும் தன்மை இல்லாமல் போகுமா என்ன? சுக்கிரனை யார் 10 டிகிரிக்குள் போகச் சொன்னது? போனதால் அஸ்தமன விதிகளுக்கு உட்பட்டாக வேண்டியதுதான்! அஸ்தமனம் பெற்ற சுக்கிரன் வலிமை இழந்து விடும். சுக்கிரன் அஸ்தமனம் ஆனாதால் கவலைப்பட்டுப் படுத்து விடாமல் இருக்க, ஜாதகனுக்கு 337 டானிக்கைப் பரிந்துரையுங்கள்
---------------------------------------------
email No.25
லெட்சுமணன் தியாகராஜன்
ஐயா வணக்கம்,
எனக்குச் சில சந்தேகங்கள்
1) ஒரு கிரகம் நீசமடைந்துவிட்டால் பலன் எதுவுமில்லை (கோமா நிலை) என்று சொன்னீர்கள். அதே நீசமடைந்த கிரகத்திற்கு சுய வர்க்கத்தில் 5 அல்லது மேற்பட்ட பரல்கள் இருந்தால் பலன் எப்படி?
சுய பரல்கள் அதிகமாக இருப்பதால் கோமாவில் இருந்து எழுந்து நடை உடையோடு இருப்பார். நீசமடைந்ததால் மெதுவாகவே தன் வேலைகளைச் செய்வார்!.பலன்கள் கொஞ்சம் குறையவே செய்யும்
2) சனி மூன்றாம் இடத்தில் இருந்து மூன்றாம் பார்வையால் ஐந்தாம் இடத்தைப் பார்த்தால் ஞாபக மறதி அதிகம் இருக்கும் என்று ஒரு நூலில் படித்தேன். அது உண்மையா?
புத்தி, மற்றும் நினைவாற்றலுக்கு உரிய கிரகம் புதன். ஜாதகத்தில் அவர் பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது தீய கிரகங்களின், சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் அல்லது அவரே 6, 8 & 12ல் போய் உட்கார்ந்து சீட்டு ஆடிக்கொண்டிருந்தால், நினைவாற்றல் குறையும். அதாவது ஞாபக மறதி இருக்கும்.
இப்படிக்கு
தி. லெட்சுமணன்
----------------------------------------------------------
email No.26
ஆதிராஜ் (ஆஷ்ட்ரோஆதி)
அய்யா வணக்கம்,
சந்தேகங்களை கேட்க வாய்ப்பு அளித்தமைக்கு முதற்கண் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்..
என் சந்தேகம் உள்ளூர் நேரம் கணிப்பது தொடர்பானது ......சென்னை இல் இருந்து நான் இருக்கும் ஊர்(ஆரணி ,திருவண்ணாமலை மாவட்டம்) 130 கி.மீ இருக்கும் சென்னை நேரத்துக்கும் எங்கள் ஊர் நேரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது ,,,,,,நீங்கள் பழைய பாடத்திள் உள்ளூர் நேரத்தை பற்றி கவலை பட வேண்டாம் அதை ஜாதகம் கணிப்பவர் பார்த்து கொள்வார் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் .....அய்யா நான் கேட்பது என் ஊர் நேரத்தை அல்ல ....நீங்கள் பெருநகரங்களுக்கு இடைப்ட்ட நேரத்தை கணிப்பதை ஏற்கனவே தெளிவாக விளக்கி உள்ளீர்கள் என் சந்தேகம் 100 கீ.மீ அல்லது 150 கி.மி உட்பட்ட இடங்களில் நேரம் வித்தியாசம் இருக்குமா?அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்படி கண்டுபிடிப்பது ..?
நன்றி வணக்கம்...
எந்த இடமாக இருந்தாலும், 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள சிறு நகரத்தின் இடத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் நாட்டிலுள்ள எல்லாச் சிறு நகரங்களின் அட்ச ரேகையும், தீர்க்க ரேகையும் இணையத்தில் கிடைக்கும். அங்கே இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கான சுட்டி (link)
சென்னை: 80.17 கிழக்கு
ஆரணி 79.19 கிழக்கு
திருவண்ணாமலை 79.07 கிழக்கு
ஒரு டிகிரி குறைந்தால் 4 நிமிடங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆரணிக்கு 4 நிமிடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். IST காலை 6:00 மணி என்றால் ஆரணியின் நேரம் 5:56 ஒரு டிகிரி அதிகமானால் 4 நிமிடங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கல்கத்தா (88.22 பாகைகள்) IST காலை 6:00 மணி என்றால் கல்கத்தாவின் நேரம் 6:34
கணினி மென்பொருட்களில் நீங்கள் ஊர்ப் பெயரை அல்லது அட்ச ரேகை தீர்க்க ரேகைகளை மட்டும் கொடுத்துவிட்டு ஐ.எஸ்.டி நேரத்தை மட்டும் கொடுத்தால் போதும். உள்ளூர் நேரத்தை அது பார்த்துக் கொள்ளும்
------------------------------------------------------------
email No.27
அருள் பிரகாஷ் முத்து
ஆசிரியர் அவர்களுக்கு,
தசா, புத்தி மாற்றங்களை மாற்றங்கள் மூலம் தெரிந்து கொள்வது போல அந்தரங்களின் மாற்றங்களை அன்றாட வாழ்கையில் நாம் உணர முடியுமா ? அவற்றின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் ?
மு அருள்
ஒருவனின் திருமணத்தை சுக்கிரன் அல்லது ஏழாம் இடத்து அதிபதி நடத்திவைப்பான் என்பது பொது விதி. ஒருவனுக்கு ஏழாம் அதிபனும் சுக்கிரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆவனுடைய நட்சத்திரம் கார்த்திகை என்றும் தற்சமயம் வயது 22 என்றும் வைத்துக்கொள்ளுங்கள். ராகு திசையும் அவனுக்குத் துவங்கி விட்டது. அவனுடைய திருமணம் எப்போது நடக்கும்? ராகு திசை முடிந்த பிறகா? அதற்கு 18 ஆண்டுகள் ஆகுமே? அது முடியும்போது ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானே? அதற்குக் கை கொடுக்கத்தான் மகா திசையில் உள்ள புத்திகள் உள்ளன. சரி அப்படியும் பார்த்தால், ராகு திசையில் சுக்கிர புத்தி வருவதற்கு சுமார் 12 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டுமே? அந்த நிலையில் கை கொடுக்க இருப்பதுதான் கிரகங்களின் அந்தரங்கள். ஒவ்வொரு புத்தியிலும், வேறு கிரகத்தின் அந்தரங்கள் வரும். ராகு திசையில், ராகு புத்தி (சுய புத்தி), குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி , கேது புத்தி என்று வரிசையாக ஒவ்வொரு புத்தியிலும் சுக்கிரனின் அந்தரம் ஒன்று முதல் ஐந்து மாத காலம் வரை வந்து போகும்! ஆகவே 23 வயது முதல் 34 வயதிற்குள் ஜாதகனின் மற்ற அமைப்பை வைத்து இடைப்பட்ட காலத்தில் திருமணத்தை சுக்கிரன் முடித்துவிடுவான். இடைப்பட்ட காலம் என்பது கோள்சாரத்தையும் உள்ளடக்கியது. அதை நினைவில் கொள்க!
புத்திகளில் ஒரு கிரகத்திற்கு என்ன சக்தி (Power) உள்ளதோ அதே சக்தி (Power) அந்தரங்களிலும் இருக்கும்
-----------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Aiyya Vanakkam ,
ReplyDeleteParivarthanail 5 allathu 9 idam irunthal athanudam parivathanai agum idam namai payakkum ( Ex : 5 & 4 , soththu sugam , melpadippu ippadi ) , ithil 5 am idam 9 idam intha irandum parivarthanai aagi irunthal entha mathri nanmaigal kidaikkum ,.
மிக நல்ல மீள் பதிவு. நிறைய சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறது. நண்பர்களின் சில கேள்விகள், உண்மையிலேயே மிக நன்றாக எல்லோருக்கும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கின்றன. நன்றி.
ReplyDeletearumayana pathivugal asiriyarukku nandri
ReplyDeleteenathu keviyum ithil idam pertullathu patri mikka magilchi
வணக்கம் ஐயா,
ReplyDeleteஉண்மையில் இது போன்ற மீள்பதிவுகள் நம்மை போன்று சந்தேகங்கள் தோன்றும் பலருக்கும் தெளிவடைய செய்யும் வாய்ப்பை தருகிறது...எனக்கு தோன்றிய சந்தேகங்கள் சிலவற்றை குறிப்பாக தசா புக்தி மற்றும் அந்தரங்களின் மூலம் பலன் அறியும் முறையினை இன்று புரிந்து தெள்வடைந்தேன்...மிக்க நன்றி ஐயா...
ஐயா வணக்கம்.
ReplyDeleteதங்கள் பதிவுக்கு நன்றி.
நான் எனது நட்சத்திரம் இன்று வரும் நாளை வரும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறேன்.
மீண்டும் வாசித்துப் பயன் பெற்றேன். நன்றி ஐயா!
ReplyDeletekelvi pathil paguthi megavum arumi nanrga purinthu kolla mutigrthu
ReplyDeleteஅஸ்தமனமான கிரகங்கள் சுப பலனைத் தராதா அல்லது சுப/அசுப பலன் எதுவுமே தராதா என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். Reduced strength or void of strength.
ReplyDeleteஐயா,
ReplyDeleteதகவல்கள் மிக நிறைந்த மீள் பதிவுக்கு நன்றி.
நீங்கள் "சமீபத்தில் காணமல் போன சூரியா"வின் ........மன்னிக்கவும் அஸ்ட்ரோ ஆதியின் கேள்விக்கு அளித்த பதிலைத் தொடர்ந்து என் சந்தேகம்...
தொழில்நுட்பம் இப்பொழுது மிகவும் முன்னேறிவிட்டது. அத்துடன் ஒரு சில இணையதளங்கள் தொகுத்து தரும் குறிப்பிட்ட சில பெரிய ஊர்கள் புவியில் உள்ள பாகைகைகளைக் கொண்டு அருகில் உள்ள சிற்றூர்களுக்கு உத்ததேசமான பாகைகளை கணக்கில் கொள்ள வேண்டிய நிலையும் மாறிவிட்டது.
உதாரணத்திற்கு: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஒருவருக்கு அந்த மருத்துவமனை அமைந்த இடத்தையே கணக்கில் கொள்ள முடியும்.
கூகிளில் "Thanjavur Medical College, Thanjavur, Tamil Nadu, India" என்று குறிப்பிட்டு தேடினால் அந்த இடத்தின் வரைபடமே கிடைக்கும். அதை கிளிக் செய்தால் கூகிள் மேப்பிற்கு எடுத்துச் செல்லும். படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால்TMCH 300 Beded Ward (Thanjavur Medical College Hospital) என்பது சிவப்பு வண்ண "H" எழுத்தில் குறிப்பிட்டு இருக்கும். அந்த இடத்தில் கிளிக்கினால் , படம் பெரிதாகும். அப்பொழுது ரைட் கிளிக் செய்தால் "What's here?" என்ற ஒரு option கிடைக்கும். அதைத் தேர்ந்தெடுத்தால் வரைபடத்தில் ஒரு பச்சை வண்ண அம்புக் குறி போட்டு அதன் அருகில் அந்த இடந்தின் அட்ச, தீர்க்க பாகைகள் தெரிய ஆரம்பிக்கும். . மேலும் அந்த பச்சை வண்ண அம்பையே கிளிக் செய்தால் 10.758812, 79.105499 (+10° 45' 31.72", +79° 6' 19.80") என்ற மிகத் துல்லியமாக இடத்தின் பாகை கிடைக்கும். மற்ற இணைய தளங்கள் "Thanjavur (Tanjore) 10° 47' N, 79° 10' E" என்றுதான் குறிப்பிடும். எனவே வித்தியாசம் 10° 47' N -->10° 45 N, 79° 10' E --> 79° 6' E.
பச்சை அம்பை கிளிக் செய்யும்பொழுது கொடுக்கப் பட்டுள்ள சுட்டியை அழுத்தி தொடர்ந்து சென்றால்
Thanjavur Medical College and Goverment Hospital Kalaingar Nagar, Thanjavur, Tamil Nadu, India
(GMT+05:30)
என்று இந்திய நேரத் தகவலும், இடத்தின் முகவரி, மருத்துவமனை புகைப் படம் முதற்கொண்டு கிடைக்கும் (ஆனால் படத்தில் இருப்பது Fleming மாணவர் விடுதி, மாணவர்கள் உடைகளைக் காயப்போட்டிருப்பதும் தெரிகிறது, கூகிளிடம் படத்தை மாற்றச் சொல்லி விண்ணப்பித்துள்ளேன்).
இதே போன்று "http://www.findlatitudeandlongitude.com/" இணையதளத்தையும் உபயோகிக்கலாம்.
இந்த முறையைப் பயன்படுத்தி சிறிய ஊர்களின் தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு தஞ்சை அருகில் உள்ள வல்லம், செங்கிப்பட்டி, சூரக்கோட்டை போன்ற சிற்றூர்களின் latitude and longitude தெரிந்துகொள்ளமுடியும். அந்தக் காலத்தில் வீட்டில் பிறந்தவர்கள் கூட வீட்டின் இடத்தை துல்லியமாக கணக்கிட்டுவிடலாம்.
ஆனால் இந்த அளவு துல்லியமாக பார்ப்பது எந்த அளவு உதவியாக இருக்கும் எனத் தெரியவில்லை. இடத்தின் நேரத்தை துல்லியமாக ஜாதகம் கணிக்கும் மென்பொருள் கணித்துவிடுவதால், இந்தத் துல்லியமான தகவலினால் உபயோகம் உண்டா?
ஐயாவின் கருத்து என்ன இதைப்பற்றி எனத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றி.
ஐயா,
ReplyDeleteஒரு கிரகம் அஸ்தமனம் அடைந்திருக்கும்போது, சூரியன் மற்றொரு கிரகத்தோடு பரிவர்த்தனை பெற்றிருந்தால் அஸ்தமனம் இல்லை என எடுத்துக்கொள்ளலாமா? உதாரனத்திற்க்கு, இந்த சித்திரை மாதத்தில் குரு மேஷத்தில் அஸ்தமனம் அடைகிறார். ஆனால் செவ்வாய் சிம்மத்தில் இருப்பதால், சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை ஏற்படுகிறது. அதனால், குருவின் அஸ்தமனம் நீங்கிவிடுமா?
///இதே போன்று "http://www.findlatitudeandlongitude.com/" இணையதளத்தையும் உபயோகிக்கலாம். ///
ReplyDeleteவாரியாரின் ஜாதகத்தை
வரைந்தெடுத்த பொக்கிஷமே..!!
திருப்பதிக்கே லட்டு
நடத்துனருக்கே டிட்கெட்டு என
கூகிளிடமே குறைகளா..
கும்பிடுகிறோம் தாயே..
துல்லியத்தை அறிய விரும்பும்
புள்ளி ராணியே (sportive ஆக)
வாழ்க ...
வணக்கங்களடன் வாழ்த்தக்கள்
பவழ விழா நாயகமே..
ReplyDeleteபைந்தமிழால் வாழ்த்துகிறோம்..
எழுபத்தி அய்ந்து தானே பவழம்
எழுந்து வருகுதே வாழ்த்து என
அண்ணாந்து பார்க்க வேண்டாம்
அன்பு வாழ்த்துக்கள் உங்களுக்கு
தேமொழி said...உதாரணத்திற்கு: தஞ்சை மருத்துவக் கல்லூரி ..............
ReplyDeleteஅய்யர் said...திருப்பதிக்கே லட்டு
நடத்துனருக்கே டிட்கெட்டு என
கூகிளிடமே குறைகளா..
கும்பிடுகிறோம் தாயே..
துல்லியத்தை அறிய விரும்பும்
புள்ளி ராணியே (sportive ஆக)
வாழ்க ...
தேமொழி அவர்களின் பின்னூட்டத்தைப் படிக்கும் போது எனக்கு உள் மனதில் தோன்றியதை அடுத்த பின்னூட்டத்தைப் படிக்கும் போது அய்யர் அவர்களின் எழுத்துக்களில் பார்த்தேன் .
தேமொழிக்கு ஒரு சபாஷ்.
குருவிற்கு வணக்கம்.
ReplyDeleteதங்கள் பதிவுக்கு நன்றி.
நான் எனது "மகன்" ஜாதகம் இன்று வரும் நாளை வரும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்,
இன்னும் காத்துக் கொண்டுஇருக்கிறேன்
தங்களை தொந்துரு செய்கிறோமோ என்று வருத்தம் தாங்கள் என்னை
மன்னிக்கவும்
தங்கள் மாணவன்
//அவனுடைய திருமணம் எப்போது நடக்கும்? ராகு திசை முடிந்த பிறகா? அதற்கு 18 ஆண்டுகள் ஆகுமே? அது முடியும்போது ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானே?//
ReplyDeleteநீங்கள் சொல்லியபிறகுதான் நான் எனது திருமண நாளையும்,ஜாதகத்தையும் ஒப்பிட்டேன்.
சரியாக ராகு மச்சான் திசையில்,சுக்கிர புத்தி.எல்லா முக்கிய நிகழ்வுகளுமே ராகு சார் நடத்தி வச்சதுதான்.இன்றுவரை தொடர்கிறது.
எதிர்புறம் கேது சார்,தொவைச்சு தொங்கவிட்டாலும் ராகு ட்ரீட்மென்ட் கொடுப்பார்."பாம்பின் கால் பாம்பறியும்"
சகோதரி தேமொழிக்கு...நல்லமுயற்சி..!ஆனால்,பெரும்பாலும் பிறந்த நேரத்தையே துல்லியமாக குறிப்பதில்லையே??
தமிழ்நாட்டு அரசாங்கம் போல், சலுகைகள் கொடுத்து விட்டு (மிக்சி,கிரைண்டர் கொடுத்துவிட்டு )பவரை பத்து மணிநேரம் கட் பன்றமாதிரி,அட்ச ரேகை,தீர்க்க ரேகை பார்த்து விட்டு,பிறந்த நேரத்தை கோட்டை விட்டுவிடுகிறார்கள்.
ReplyDeleteசரி சார்.. எனக்கு ஒரு சந்தேகம். ஒரு கிரகம் தனது நீச வீட்டில் வர்கோத்தமம் பெற்றால் அதற்கு நீச தன்மை போய்விடுமா?
ReplyDeleteகேள்வி பதில் இன்றும் நலம். ஆறாம் பாடத்தை மறுபடியும் திருப்பி விட்டு வந்தேன். எனக்கு ஆறாம் வீட்டில் 41 பரல்கள். சனி திசையில் ராகு புத்தியில் தான் எனக்கு திருமணம் நடந்தது. ராகு புத்தி எனக்கு அருமையகேவே இருந்து உள்ளது. செவ்வாய் புத்தியில் அமெரிக்க வந்த நான் ராகு புத்தியில் வேலையில் பரிமளித்து , திருமணம் முடிந்து , முதல் குழந்தையும் பிறக்க குரு வந்தார். என்ன வேலையே நானாக முன் வந்து விட்டுவிட்டேன் (end of raku puthi). As per 337 law , 6th house 41 paral is taken from my 9th house , it just 19 paral). சூரியன் நீசமாய். புதன் வக்கிரமாய். ஏதோ கொஞ்சம் புதன், சூரியனிடம் தப்பித்து சுக்ரனுடன் பரிவர்த்தனை. என்ன சொல்ல புதன் திசை ஆரம்பித்து உள்ளது . (வக்கிர) புதன் ஏதோ புண்ணியம் காட்டுவார் என்றால் ஆரம்பமே அசத்தல் தான். எட்டு வருடமாய் அமெரிக்காவில் கார் ஒட்டாமல் தப்பித்து வந்த நான் , இபொழுது, என் பெரிய மகனுக்காக கார் ஓட்ட வேண்டியுள்ளது. கார் கற்று கொடுக்கும் கணவரிடம் ஏகத்துக்கு ஏளன பார்வை. அப்பபோ நக்கல் சிரிப்பு , நையாண்டி.
ReplyDeleteமானம் போகிறது. இன்னும் கற்று கொண்ட பாடு இல்லை. திட்ட வேற செய்கிறார். கார் சொல்லி கொடுத்த அமெரிக்கன் "என்னால் முடியாது" என்று விட்டான்.
இருக்கிற பிரச்சனையில் இதுவும் சேர்ந்து கொள்ள , ரொம்பவே நொந்து உள்ளேன். 337 tonic தான் இப்போதிருக்கும் ஒரே அறுதல்.
அய்யாதான் சொல்லவேண்டும் , நீசமாய் வக்கிரமாய் , பரிவர்த்தனையாய் , பரல்கள் கம்மியாய் , போதா குறைக்கு சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி ஒன்றும் சாதகமான நிலையில் இல்லாத போது, லைசென்ஸ் எடுத்து காரை ஓட்ட வைக்குமா புதபகவான்? கொஞ்சம் positvaaka பதில் சொல்லுங்கள் ஆசானே !!
ராசியில் நீசமான ஒரு கிரகம் அம்சத்திலும் நீசமாகி அதே அம்சத்தில் நீசமான இன்னொரு நீச கிரகம் அதனைப் பார்த்தால் அம்சத்தில் நீசனை நீசன் பார்த்தால் அதன்
ReplyDeleteபலன் எப்படி எடுத்துக் கொள்வது. இரண்டு நீசனுக்கும் பலங்கள் , மற்றும் பலன்கள் எப்படி இருக்கும் அய்யா
நானும் இப்பொதுதான் என் திருமன நாளை ஒப்பிட்டு பார்த்தென் .எனக்கும் ராகு தெசை-புதன் புக்தி-சுக்கிரன் அந்தரத்தில் தான் திருமனம் நடந்துள்ளது.
ReplyDeleteஅன்பு கலை, கவலைப் படாதீர்கள். நானும் உற்சாகமூட்ட விரும்புகிறேன்.
ReplyDeleteபின் வரும் சில குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்:
- குடிகாரனே கார் ஓட்டுறான்... அவனைவிட நான் நல்லாவே ஒட்டுவன் என்று சொல்லிகொள்ளுங்கள்...இதுதான் மிக முக்கியம்
- மேனுவல் ஷிபிட் காராக இருந்தால், அதை கடாசிவிட்டு நன்றாக ஓட்ட வரும் வரை ஆட்டோமாடிக் காரை உபயோகிங்கள்
- கற்றுத்தரும் கணவர் நை.. நை.. செய்தால், அடடா நீங்கள் பொறுமை நிறைந்த சிறந்த ஆசிரியர் என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேனே என்று சொல்லுங்கள்/ஐஸ் வையுங்கள்
- பதினைத்து நிமிடத்திற்கு ஒருமுறைதான் வாயைத் திறக்க வேண்டும் (குறை சொல்ல மட்டுமே, மற்றபடி உற்சாகமூட்ட எவ்வளவு வேண்டுமானாலும் பேச தடையில்லை) என்று ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். விதியை மீறினால் விளைவு கடுமையாக இருக்கும் என்று எச்சரித்து, விதியை மீறினால் நடு வீதியில் இறக்கிவிட்டு விடுவேன்/இறங்கிக்கொள்வேன் என மிரட்டுங்கள்
- "here i come danica patrick" என்று சவால் விட்டுக்கொண்டு டானிகாவின் படத்தை டேஷ் போர்டில் வைத்துக் கொள்ளுங்கள்
- கணவரின் நச்சரிப்பு இல்லாமல் மெதுவாக விண்டோ ஷாபிங் செய்வதையும், பள்ளி விட்டு மகனை அழைத்து வந்து இருவரும் மேக் டானல்ட் போகப் போவதையும், பார்க் போவதையும் கற்பனை செய்து அந்த நாள் அதிக தூரத்தில் இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி தேமொழி அவர்களே.appreciate your words, u have taken efforts to motivate me. thanks a lot. நிச்சயம்.. நீங்கள் சொன்ன முதல் பாய்ண்டை நன்று மண்டையில் ஏற்று கொண்டேன். என்ன செய்வது வண்டியில் ஏறி அமர்ந்த உடனே பல விதமான negative thoughts . feel like Im going to save everyone with care so not maintaining speed limit, over consious. கணவர் இப்போது கொஞ்சம் அமைதி காக்கிறார். but at times he shows off his face .நேற்று ஏற்பாடு செய்து இருந்த driving school driver kuemergency... so out of country (எப்படி நம்ம நேரம் ?!). நாளை வேறு ஒரு ஆளிடம் பழக செல்கிறேன். கண்டிப்பாக நான் லைசன்ஸ் வாங்கிவிட்டால் உங்கள் வீடு தேடி treat கொடுத்துவிடுகிறேன்.
ReplyDeletehave a great weekend themozhi..once again, I could feeel warmth in your words...

ஐயா வனக்கம்,
ReplyDeleteசுரியனுடன் சேரும் புதன் கிரகத்திற்க்கு அஸ்த்தாங்கம் கிடையாதா ? உண்டா ?
நன்றி,
கருவூர் முருகன்.
//////Blogger Soundarraju said...
ReplyDeleteAiyya Vanakkam ,
Parivarthanail 5 allathu 9 idam irunthal athanudam parivathanai agum idam namai payakkum ( Ex : 5 & 4 , soththu sugam , melpadippu ippadi ) , ithil 5 am idam 9 idam intha irandum parivarthanai aagi irunthal entha mathri nanmaigal kidaikkum ,.//////
பூர்வ புண்ணியமும், பாக்கியமும் பரிவர்த்தனையானால் (5th & 9th Lords) ஜாதகன் பல அற்ச செய்லகளைச் செய்து புகழோடும் மதிப்போடும் வாழ்வான்
////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteமிக நல்ல மீள் பதிவு. நிறைய சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறது. நண்பர்களின் சில கேள்விகள், உண்மையிலேயே மிக நன்றாக எல்லோருக்கும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கின்றன. நன்றி.//////
புதுமுகங்கள் பலரும் பயனடையட்டும் என்றுதான் மீண்டும் வலை ஏற்றியுள்ளேன். ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மீள் பதிவுகளால் சலிப்பு ஏற்படாது என்பது என் அனுபவம். நானும் பலவற்றை மீண்டும் மீண்டும் படித்துள்ளேன்!
/////Blogger arul said...
ReplyDeletearumayana pathivugal asiriyarukku nandri
enathu keviyum ithil idam pertullathu patri mikka magilchi/////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
உண்மையில் இது போன்ற மீள்பதிவுகள் நம்மை போன்று சந்தேகங்கள் தோன்றும் பலருக்கும் தெளிவடைய செய்யும் வாய்ப்பை தருகிறது...எனக்கு தோன்றிய சந்தேகங்கள் சிலவற்றை குறிப்பாக தசா புக்தி மற்றும் அந்தரங்களின் மூலம் பலன் அறியும் முறையினை இன்று புரிந்து தெள்வடைந்தேன்...மிக்க நன்றி ஐயா...//////
நல்லது. நன்றி சகோதரி!
/////Blogger Maheswaran said...
ReplyDeleteஐயா வணக்கம்.
தங்கள் பதிவுக்கு நன்றி.
நான் எனது நட்சத்திரம் இன்று வரும் நாளை வரும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறேன்.//////
உங்கள் நட்சத்திரம் என்ன? சொல்லுங்கள்! பதிவிட்டுவிடுகிறேன்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteமீண்டும் வாசித்துப் பயன் பெற்றேன். நன்றி ஐயா!/////
ஆர்வம் இருந்தால், எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பு வராது! நன்றி!
/////Blogger eswari sekar said...
ReplyDeletekelvi pathil paguthi megavum arumi nanrga purinthu kolla mutigrthu/////
நல்லது. நன்றி சகோதரி!
//////Blogger ananth said...
ReplyDeleteஅஸ்தமனமான கிரகங்கள் சுப பலனைத் தராதா அல்லது சுப/அசுப பலன் எதுவுமே தராதா என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். Reduced strength or void of strength.//////
நிச்சயமாக Reduced strength என்பது உணமை!
Blogger தேமொழி said...
ReplyDeleteஐயா,
தகவல்கள் மிக நிறைந்த மீள் பதிவுக்கு நன்றி.
நீங்கள் "சமீபத்தில் காணமல் போன சூரியா"வின் ........மன்னிக்கவும் அஸ்ட்ரோ ஆதியின் கேள்விக்கு அளித்த பதிலைத் தொடர்ந்து என் சந்தேகம்...
தொழில்நுட்பம் இப்பொழுது மிகவும் முன்னேறிவிட்டது. அத்துடன் ஒரு சில இணையதளங்கள் தொகுத்து தரும் குறிப்பிட்ட சில பெரிய ஊர்கள் புவியில் உள்ள பாகைகைகளைக் கொண்டு அருகில் உள்ள சிற்றூர்களுக்கு உத்ததேசமான பாகைகளை கணக்கில் கொள்ள வேண்டிய நிலையும் மாறிவிட்டது.
உதாரணத்திற்கு: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஒருவருக்கு அந்த மருத்துவமனை அமைந்த இடத்தையே கணக்கில் கொள்ள முடியும்.
கூகிளில் "Thanjavur Medical College, Thanjavur, Tamil Nadu, India" என்று குறிப்பிட்டு தேடினால் அந்த இடத்தின் வரைபடமே கிடைக்கும். அதை கிளிக் செய்தால் கூகிள் மேப்பிற்கு எடுத்துச் செல்லும். படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால்TMCH 300 Beded Ward (Thanjavur Medical College Hospital) என்பது சிவப்பு வண்ண "H" எழுத்தில் குறிப்பிட்டு இருக்கும். அந்த இடத்தில் கிளிக்கினால் , படம் பெரிதாகும். அப்பொழுது ரைட் கிளிக் செய்தால் "What's here?" என்ற ஒரு option கிடைக்கும். அதைத் தேர்ந்தெடுத்தால் வரைபடத்தில் ஒரு பச்சை வண்ண அம்புக் குறி போட்டு அதன் அருகில் அந்த இடந்தின் அட்ச, தீர்க்க பாகைகள் தெரிய ஆரம்பிக்கும். . மேலும் அந்த பச்சை வண்ண அம்பையே கிளிக் செய்தால் 10.758812, 79.105499 (+10° 45' 31.72", +79° 6' 19.80") என்ற மிகத் துல்லியமாக இடத்தின் பாகை கிடைக்கும். மற்ற இணைய தளங்கள் "Thanjavur (Tanjore) 10° 47' N, 79° 10' E" என்றுதான் குறிப்பிடும். எனவே வித்தியாசம் 10° 47' N -->10° 45 N, 79° 10' E --> 79° 6' E.
பச்சை அம்பை கிளிக் செய்யும்பொழுது கொடுக்கப் பட்டுள்ள சுட்டியை அழுத்தி தொடர்ந்து சென்றால்
Thanjavur Medical College and Goverment Hospital Kalaingar Nagar, Thanjavur, Tamil Nadu, India
(GMT+05:30)
என்று இந்திய நேரத் தகவலும், இடத்தின் முகவரி, மருத்துவமனை புகைப் படம் முதற்கொண்டு கிடைக்கும் (ஆனால் படத்தில் இருப்பது Fleming மாணவர் விடுதி, மாணவர்கள் உடைகளைக் காயப்போட்டிருப்பதும் தெரிகிறது, கூகிளிடம் படத்தை மாற்றச் சொல்லி விண்ணப்பித்துள்ளேன்).
இதே போன்று "http://www.findlatitudeandlongitude.com/" இணையதளத்தையும் உபயோகிக்கலாம்.
இந்த முறையைப் பயன்படுத்தி சிறிய ஊர்களின் தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு தஞ்சை அருகில் உள்ள வல்லம், செங்கிப்பட்டி, சூரக்கோட்டை போன்ற சிற்றூர்களின் latitude and longitude தெரிந்துகொள்ளமுடியும். அந்தக் காலத்தில் வீட்டில் பிறந்தவர்கள் கூட வீட்டின் இடத்தை துல்லியமாக கணக்கிட்டுவிடலாம்.
ஆனால் இந்த அளவு துல்லியமாக பார்ப்பது எந்த அளவு உதவியாக இருக்கும் எனத் தெரியவில்லை. இடத்தின் நேரத்தை துல்லியமாக ஜாதகம் கணிக்கும் மென்பொருள் கணித்துவிடுவதால், இந்தத் துல்லியமான தகவலினால் உபயோகம் உண்டா?
ஐயாவின் கருத்து என்ன இதைப்பற்றி எனத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றி.//////
ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன. கிராமங்களுக்கு சுற்று வட்டாரத்தில் (30 கிலோ மீட்டர்கள் தூரத்திற்குள்) உள்ள சிறிய நகரத்தைத்தான் பிறப்பு இடமாகக் கொண்டு ஜாதகத்தைக் கணிப்பார்கள். அந்த அடிப்படையில்தான் ஜோதிட விதிகள் கணிக்கப்பெற்றுள்ளன. ஆகவே இத்தனை துல்லியம் பெரிய மாற்றத்தைக் கொடுக்காது. வேண்டுமென்றால் நீங்கள் கணித்துப்பாருங்கள் சகோதரி!
//////Blogger G V Mahesh said...
ReplyDeleteஐயா,
ஒரு கிரகம் அஸ்தமனம் அடைந்திருக்கும்போது, சூரியன் மற்றொரு கிரகத்தோடு பரிவர்த்தனை பெற்றிருந்தால் அஸ்தமனம் இல்லை என எடுத்துக்கொள்ளலாமா? உதாரனத்திற்க்கு, இந்த சித்திரை மாதத்தில் குரு மேஷத்தில் அஸ்தமனம் அடைகிறார். ஆனால் செவ்வாய் சிம்மத்தில் இருப்பதால், சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை ஏற்படுகிறது. அதனால், குருவின் அஸ்தமனம் நீங்கிவிடுமா?//////
அஸ்தமனம் பரிவர்த்தனையால் எப்படி மாறும்? பரிவர்த்தனையான பிறகுதானே அஸ்தமன நிலைமை?
/////Blogger அய்யர் said...
ReplyDelete///இதே போன்று "http://www.findlatitudeandlongitude.com/" இணையதளத்தையும் உபயோகிக்கலாம். ///
வாரியாரின் ஜாதகத்தை
வரைந்தெடுத்த பொக்கிஷமே..!!
திருப்பதிக்கே லட்டு
நடத்துனருக்கே டிட்கெட்டு என
கூகிளிடமே குறைகளா..
கும்பிடுகிறோம் தாயே..
துல்லியத்தை அறிய விரும்பும்
புள்ளி ராணியே (sportive ஆக)
வாழ்க ...
வணக்கங்களடன் வாழ்த்தக்கள்//////
புள்ளி ராணீயல்ல! புள்ளிவிவர ராணி என்று சொல்லுங்கள் விசுவநாதன்!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteபவழ விழா நாயகமே..
பைந்தமிழால் வாழ்த்துகிறோம்..
எழுபத்தி அய்ந்து தானே பவழம்
எழுந்து வருகுதே வாழ்த்து என
அண்ணாந்து பார்க்க வேண்டாம்
அன்பு வாழ்த்துக்கள் உங்களுக்கு/////
பவழ விழா நாயகமா? யர்ர் அவர்?
/////Blogger thanusu said...
ReplyDeleteதேமொழி said...உதாரணத்திற்கு: தஞ்சை மருத்துவக் கல்லூரி ..............
அய்யர் said...திருப்பதிக்கே லட்டு
நடத்துனருக்கே டிட்கெட்டு என
கூகிளிடமே குறைகளா..
கும்பிடுகிறோம் தாயே..
துல்லியத்தை அறிய விரும்பும்
புள்ளி ராணியே (sportive ஆக)
வாழ்க ...
தேமொழி அவர்களின் பின்னூட்டத்தைப் படிக்கும் போது எனக்கு உள் மனதில் தோன்றியதை அடுத்த பின்னூட்டத்தைப் படிக்கும் போது அய்யர் அவர்களின் எழுத்துக்களில் பார்த்தேன் .
தேமொழிக்கு ஒரு சபாஷ்./////
நானும் சொல்லிக்கொள்கிறேன்:
தேமொழிக்கு ஒரு சபாஷ்!!!!!!!!!
//////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்.
தங்கள் பதிவுக்கு நன்றி.
நான் எனது "மகன்" ஜாதகம் இன்று வரும் நாளை வரும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்,
இன்னும் காத்துக் கொண்டுஇருக்கிறேன்
தங்களை தொந்துரு செய்கிறோமோ என்று வருத்தம் தாங்கள் என்னை
மன்னிக்கவும்
தங்கள் மாணவன்//////
உங்கள் மகன் ஜாதகமா? எங்கே அனுப்புனீர்கள்? குழந்தைகளின் ஜாதகங்களுக்குப் பன்னிரெண்டு வயதுவரை பலன் கிடையாது. அதை மனதில் வைத்து அமைதியாக இருங்கள்!
//////Blogger Ananthamurugan said...
ReplyDelete//அவனுடைய திருமணம் எப்போது நடக்கும்? ராகு திசை முடிந்த பிறகா? அதற்கு 18 ஆண்டுகள் ஆகுமே? அது முடியும்போது ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானே?//
நீங்கள் சொல்லியபிறகுதான் நான் எனது திருமண நாளையும்,ஜாதகத்தையும் ஒப்பிட்டேன்.
சரியாக ராகு மச்சான் திசையில்,சுக்கிர புத்தி.எல்லா முக்கிய நிகழ்வுகளுமே ராகு சார் நடத்தி வச்சதுதான்.இன்றுவரை தொடர்கிறது.
எதிர்புறம் கேது சார்,தொவைச்சு தொங்கவிட்டாலும் ராகு ட்ரீட்மென்ட் கொடுப்பார்."பாம்பின் கால் பாம்பறியும்"
சகோதரி தேமொழிக்கு...நல்லமுயற்சி..!ஆனால்,பெரும்பாலும் பிறந்த நேரத்தையே துல்லியமாக குறிப்பதில்லையே??//////
எல்லோருடைய கைக்கெடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டுவதும் இல்லையே!
//////Blogger Ananthamurugan said...
ReplyDeleteதமிழ்நாட்டு அரசாங்கம் போல், சலுகைகள் கொடுத்து விட்டு (மிக்சி,கிரைண்டர் கொடுத்துவிட்டு )பவரை பத்து மணிநேரம் கட் பன்றமாதிரி,அட்ச ரேகை,தீர்க்க ரேகை பார்த்து விட்டு,பிறந்த நேரத்தை கோட்டை விட்டுவிடுகிறார்கள்./////
நேரம் மிகவும் முக்கியமானது. கால சந்திப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு நேரம் அதி முக்கியமானது!
//////Blogger Poornaa said...
ReplyDeleteசரி சார்.. எனக்கு ஒரு சந்தேகம். ஒரு கிரகம் தனது நீச வீட்டில் வர்கோத்தமம் பெற்றால் அதற்கு நீச தன்மை போய்விடுமா?/////
போகாது. அதிகமாகிவிடும்!
///////Blogger கலையரசி said...
ReplyDeleteகேள்வி பதில் இன்றும் நலம். ஆறாம் பாடத்தை மறுபடியும் திருப்பி விட்டு வந்தேன். எனக்கு ஆறாம் வீட்டில் 41 பரல்கள். சனி திசையில் ராகு புத்தியில் தான் எனக்கு திருமணம் நடந்தது. ராகு புத்தி எனக்கு அருமையகேவே இருந்து உள்ளது. செவ்வாய் புத்தியில் அமெரிக்க வந்த நான் ராகு புத்தியில் வேலையில் பரிமளித்து , திருமணம் முடிந்து , முதல் குழந்தையும் பிறக்க குரு வந்தார். என்ன வேலையே நானாக முன் வந்து விட்டுவிட்டேன் (end of raku puthi). As per 337 law , 6th house 41 paral is taken from my 9th house , it just 19 paral). சூரியன் நீசமாய். புதன் வக்கிரமாய். ஏதோ கொஞ்சம் புதன், சூரியனிடம் தப்பித்து சுக்ரனுடன் பரிவர்த்தனை. என்ன சொல்ல புதன் திசை ஆரம்பித்து உள்ளது . (வக்கிர) புதன் ஏதோ புண்ணியம் காட்டுவார் என்றால் ஆரம்பமே அசத்தல் தான். எட்டு வருடமாய் அமெரிக்காவில் கார் ஒட்டாமல் தப்பித்து வந்த நான் , இபொழுது, என் பெரிய மகனுக்காக கார் ஓட்ட வேண்டியுள்ளது. கார் கற்று கொடுக்கும் கணவரிடம் ஏகத்துக்கு ஏளன பார்வை. அப்பபோ நக்கல் சிரிப்பு , நையாண்டி.
மானம் போகிறது. இன்னும் கற்று கொண்ட பாடு இல்லை. திட்ட வேற செய்கிறார். கார் சொல்லி கொடுத்த அமெரிக்கன் "என்னால் முடியாது" என்று விட்டான்.
இருக்கிற பிரச்சனையில் இதுவும் சேர்ந்து கொள்ள , ரொம்பவே நொந்து உள்ளேன். 337 tonic தான் இப்போதிருக்கும் ஒரே அறுதல்.
அய்யாதான் சொல்லவேண்டும் , நீசமாய் வக்கிரமாய் , பரிவர்த்தனையாய் , பரல்கள் கம்மியாய் , போதா குறைக்கு சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி ஒன்றும் சாதகமான நிலையில் இல்லாத போது, லைசென்ஸ் எடுத்து காரை ஓட்ட வைக்குமா புதபகவான்? கொஞ்சம் positvaaka பதில் சொல்லுங்கள் ஆசானே !!//////
நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை முக்கியம். பழநிஅப்பனை பிரார்த்தனை செய்துவிட்டு, கற்றுக்கொள்ளத் துவங்குங்கள். அந்த நம்பிக்கையை அவர் தருவார்!
/////Blogger thanusu said...
ReplyDeleteராசியில் நீசமான ஒரு கிரகம் அம்சத்திலும் நீசமாகி அதே அம்சத்தில் நீசமான இன்னொரு நீச கிரகம் அதனைப் பார்த்தால் அம்சத்தில் நீசனை நீசன் பார்த்தால் அதன்
பலன் எப்படி எடுத்துக் கொள்வது. இரண்டு நீசனுக்கும் பலங்கள் , மற்றும் பலன்கள் எப்படி இருக்கும் அய்யா/////
என்ன குழப்பம்? அம்சம் என்பது magnified version of a rasi chart. ஆகவே ராசியை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்!
/////Blogger thanusu said...
ReplyDeleteநானும் இப்பொதுதான் என் திருமன நாளை ஒப்பிட்டு பார்த்தென் .எனக்கும் ராகு தெசை-புதன் புக்தி-சுக்கிரன் அந்தரத்தில் தான் திருமனம் நடந்துள்ளது./////
நெருப்பு இல்லாமல் சமையலா?
சுக்கிரன் இல்லாமல் திருமணமா?
அந்தர நாயகனாக வந்து உங்கள் திருமணத்தை நடத்தியது சுக்கிரன்தான்!
////Blogger tamilboys said...
ReplyDeleteஐயா வணக்கம்,
சுரியனுடன் சேரும் புதன் கிரகத்திற்க்கு அஸ்த்தாங்கம் கிடையாதா ? உண்டா ?
நன்றி,
கருவூர் முருகன்./////
உண்டு. ஆனால் சிலர் இல்லை என்பார்கள். உண்டு என்றே எடுத்துக்கொள்வோம்!