மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.4.12

Doubts: நீங்களும், உங்கள் சந்தேகங்களும்!


..............................................................................................................
Doubts: நீங்களும், உங்கள் சந்தேகங்களும்!

வகுப்பறையில் இன்றையத் தேதியில் 3,167 தொடர்பவர்கள் இருக்கிறார்கள். அதுதவிர நேரடியாகவும், கூகுள் ரீடர் மூலமாகவும் படிப்பவர்கள் சுமார் ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள்

இரண்டாண்டுகளுக்கு முன்பு (அதாவது 22.12.2009 அன்று) 1,131 மாணவர்கள் இருந்தார்கள். அதற்கு. 5 மாதங்களுக்கு முன்பு, அதாவது 15.7.2009 அன்று இருந்தவர்களின் எண்ணிக்கை 300 மட்டுமே. அதற்கு ஒரு ஆண்டு முன்பு இருந்தவர்களின் எண்ணிக்கை 60 மட்டுமே!

புது முகங்களுக்கு, பழைய பாடங்களில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. சிலருக்கு அத்தனை பாடங்களையும் சரியாகப் படிக்காததால் சந்தேகங்கள். சிலருக்குப் படித்தும் சந்தேகங்கள். உங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் முகமாக தொடர்ந்து கேள்வி, பதில் பகுதி வகுப்பை நடத்தினேன். அதில் வந்த கேள்வி, பதில் அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்போது அவற்றை மீள்பதிவாகத் த்ரவுள்ளேன். அனைவருக்கும் அது - குறிப்பாக புதியவர்களுக்கு, அது பயனுள்ளதாக இருக்கும். பழைய மாணவர்களும் பாடங்களைத் திரும்பப் படிப்பதைப்போல அவற்றை மீண்டும் படியுங்கள்
-------------------------------------------------
இரண்டு இளைஞர்கள் தேவாலத்திற்குச் சென்றார்கள். இருவரில் ஒருவன் ஈடுபாட்டுடன் சென்றவன்.

அடுத்தவன், நண்பனின் வற்புறுத்தலுக்காகச் சென்றவன்.

பாதிரியார் அருமையாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். துவங்கி 2 மணி நேரமாகியும், உற்சாகமாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

வற்புறுத்தலுக்காகச் சென்றவன் புகை வண்டி ஆசாமி (அதாவது chain smoker) அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.தன் நண்பனிடம் கிசுகிசுத்தான்:

“டேய் மெல்ல எழுந்து போய், ஒரு தம் அடித்து விட்டு வருகிறேன்”

”அதெல்லாம் கூடாது. சும்மா உட்கார், எழுந்து சென்றால், பாதிரியாரின் கண்ணில் படும்.”

”அப்படியென்றால், இங்கேயே சிகரெட்டைப் பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிடவா?”

”அதெல்லாம், கூடாது. கொன்று விடுவேன். பாதியார் பார்த்தால் கோபம் கொள்வார்!”

”கோபம் கொண்டால் அவர் எப்படிப் பாதிரியாராக இருக்க முடியும்? நீ எழுந்து அவரையே கேள். இல்லையென்றால் நான் எழுந்து கேட்கிறேன்”

அவனுடைய நச்சரிப்புத் தாங்காமல், கூட்டிக்கொண்டு போன நண்பன், எழுந்து நின்று கேட்டான்” Father, பிரார்த்தனையின் போது, புகை பிடிக்கலாமா?”

பாதிரியார் பதில் சொன்னார்,” இல்லை, கூடாது!”

நம்ம ஆள் சொன்னான், உனக்குக் கேட்கத் தெரியவில்லை. நான் கேட்கிறேன் பார் என்று கிசுகிசுத்தவன், எழுந்து நின்று, கணீரென்ற குரலில் கேட்டான். “Father, புகைபிடிக்கும் போது பிரார்த்தனை செய்யலாமா?”

“செய்யலாம். இறைவனைப் பிரார்த்திப்பதற்கு எதுவும் தடையில்லை!”
---------------------------------------------------------------------
”வாத்தி (யார்) எதற்காக இந்தக் கதை?

”அகடவிகட சாமர்த்தியம் எப்படி இருக்கும் என்பதற்காக இதைச் சொன்னேன்”

”அது சரி, வகுப்பறையில், எதற்காகச் சொன்னீர்கள்?

”சந்தேகத்தைக் கேட்கச் சொல்லிவிட்டாரே, வாத்தியார் என்று தங்கள் சொந்த ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களை, பொதுச் சந்தேகம் போல தோற்றமளிக்கும் படி கேட்பவர்களுக்காக  இதைச் சொன்னேன்”
---------------------------------------------------------------------
அடுத்துவரும்  நாட்களில் உங்கள்  சந்தேகங்கள் தீர்க்கப்படும் விதமாக முன்பு வந்த கேள்வி, பதில் பகுதி வெளியாகும். அனைவரும் ஜோதிட சம்பந்தமாக உள்ள உங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம்.. அரசில் குறை கேட்கும் வாரம் என்று நடத்துவார்களே. அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.

முதல் சந்தேகத்தை மாணவி ஒருவர் கேட்டு இந்தத் தொடர் பதிவைத் துவக்கி வைத்துள்ளார். அவர் கேட்டுள்ள கேள்வி: “சுயவர்க்கம் என்றால் என்ன? அதை எப்படித் தெரிந்துகொள்வது?” அதற்கான விரிவான பதில் நாளையப் பதிவில்!

இந்த மீள் பதிவு எதற்காக?

எனக்கு வரும் மின்னஞ்சல்களில் ஒன்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்:
---------------------------------------------------------------------
Raghupathy Kolandavelu k.raghupathy@gmail.com   
24 Mar 2012       
to me
ஐயா,

இந்த பரல் கணக்கு புரிய மாட்டேங்குது.. கணினி கண நேரத்தில் கணித்து கொடுத்துவிடும் என்றாலும், பின் வரும் பாடங்களில் சுயவர்க்க பரல் எண்ணிக்கை தேவைபடுகிறது. இளையராஜாவிற்கு அனுப்பிய மாதிரி ஜாதகத்தை என் பக்கமும் அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன்.
With Thanks
Raghupathy K
---------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

21 comments:

தேமொழி said...

ஹ்ம்ம் ....ஐயா, இனி மீள் பதிவுகள்?
Astrology (மீள் பதிவு) என்ற குறிச்சொல்லே உருவாக்கி, எண்கணிதப் பாடங்களுடன் சேர்த்து ஒரு பத்து பதிவுகளுக்குமேல் அந்தக் குறிச்சொல்லின் கீழ் வரிசைப் படுத்திவிட்டீர்கள். உங்கள் தீவிரத்தைப் பார்த்தால், இது முன்பே எடுத்த முடிவு போலிருக்கிறது.
மீண்டும் நேரம் கிடைக்கும் பொழுது நிறைய மனவளக் கட்டுரைகள் எழுதுங்கள்.

சனியின் நட்சத்திரங்களில் அனுஷம், உத்திரட்டாதி; ராகு மற்றும் கேதுவின் நட்சத்திரக் கோயில்கள் என இன்னமும் எட்டு நட்சத்திரக் கோயில்கள் செய்திகளும், முண்டேன், பிரசன்ன ஜோதிடம் போன்ற பிரிவுகளைப் பற்றியும் அறிமுகப் படுத்துவதாக சொல்லியுள்ளீர்கள்.

January 15, 2012 - 7:00 PM
February 10, 2021 - 6:00 AM
போன்ற நேரங்களில் பிறந்தவர்கள் ஜாதகங்களில் எதைக் கணிப்பது ஜோதிட முறையில் எளிது போன்ற கேள்விகள் நான் கேட்க நினைத்ததுண்டு. இந்த நாட்களில் பிறந்தவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. குறிப்பாக இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள தேதியில் பிறந்தவர்களை அறியும் எதிர்நோக்குப் பார்வை எனக்கில்லை :))))
ஒவ்வொருகிரகமும் தனித்தனியே இருப்பதற்கும், ஒரே ராசியில் இருப்பதற்கும் நான் தேடிய உதாரணங்கள் இவை. அவ்வளவே.

arul said...

sir,


please refer old links if same questions are repeated as it will help us to see new question and answers at least now

Maaya kanna said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

தங்களுடைய இன்றைய வகுப்பறையின் தலைப்பை பார்த்த உடனையே பசியோடு இருக்கும் முரட்டு யானைக்கு கரும்பை உணவாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்ததை உணர்தேன் .

நான் ரெடி நீங்கள் ரெடியா ஐயா ?.

Rajaram said...

ஐயா வணக்கம்,
வகுப்பறை தனது அடுத்தகட்ட பரிணாமமாக கேள்வி-பதில் பகுதிக்கு நகர்ந்துள்ளது.இதில் ஆசிரியர் சொன்ன அகடவிகட சமார்த்தியம் யார் யார்க்கெல்லாம் இருக்கிறது என்பதை வரும் நாட்களில் வகுப்பறையில் காணமுடியும் என நினைக்கிறேன்.

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
வகுப்பில் மீள்வதிவுகளின் மூலம் சந்தேகங்களை போக்கும் இந்த அறிவிப்பு எனக்கு சந்தோஷத்தை தருகிறது...ஹிஹிஹி...சந்தேகங்களை எழுப்புவது எளிது;அதற்கு தகுந்த சரியான,தெளிவான விளக்கத்தை தருவது உலகிலேயே சிரமமான வேலை ஐயா...

அதற்குள் பல கேள்விகள் என் மூளைக்குள் உதயமாகிவிட்டன...ஹிஹிஹி...

R.Srishobana said...

///January 15, 2012 - 7:00 PM
February 10, 2021 - 6:00 AM
போன்ற நேரங்களில் பிறந்தவர்கள் ஜாதகங்களில் எதைக் கணிப்பது ஜோதிட முறையில் எளிது போன்ற கேள்விகள் நான் கேட்க நினைத்ததுண்டு. இந்த நாட்களில் பிறந்தவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. குறிப்பாக இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள தேதியில் பிறந்தவர்களை அறியும் எதிர்நோக்குப் பார்வை எனக்கில்லை :))))
ஒவ்வொருகிரகமும் தனித்தனியே இருப்பதற்கும், ஒரே ராசியில் இருப்பதற்கும் நான் தேடிய உதாரணங்கள் இவை. அவ்வளவே///

இது போன்று நானும் யோசித்திருக்கிறேன் ஆனால் சோதித்ததில்லை...இராமாயணத்தில் இராவணனின் மகன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களையும் 11ம் இடத்தில் இருக்கும்படி செய்தால் ஜாதகனுக்கு வெற்றி கிட்டும் என்பது இராவணனின் எண்ணம்...நான் ஒரு ஜோதிட நூலில் படித்த ஒரு குறிப்பில் இவ்வாறு அமையப் பெற்றிருந்தால் அவர்கள் 'துறவி'யாவார்கள் என்று இருந்தது...சந்தேகம் இன்னும் வலுத்துவிட்டது...

தனியாக அதிக கிரகங்கள் அமையப்பெற்று இருக்கும் இராம பிரானின் ஜாதகமும் துயரங்கள் நிறைந்த வாழ்விலும் நிறைவான வாழ்க்கையை வாழலாம் என்பதற்கு சாட்சி...எனக்கு இராமபிரானை மிகவும் பிடிக்கும் அதனால் தான் கூறினேன் சகோதரி...

thanusu said...

மீள் பதிவாய் மீண்டும் பாடங்கள். கேள்வி பதில்கள் , அதைப் படிக்கும் போது நிறைய துணை கேள்விகள் கிளம்பும் ,அதை வாத்தியார் சரி செய்ய வேண்டும்.

அவ்வப் போது அலசல் பாடத்தையும் நடத்துங்கள் அய்யா.

Maheswaran said...

இன்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட....
பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே.....

ஐயா இந்த பாட்டில் இன்மையை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம். நன்றி.

Parvathy Ramachandran said...

//இன்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட....
பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே..... //

வாத்தியார் அவர்களே, இதற்கு நான் பொருள் கூறுவதற்கு மன்னிக்கவும். நான் அறிந்த வரையில், அந்த வார்த்தை இன்மை அல்ல, 'இம்மை' அதாவது 'இந்தப்பிறவி' என்று பொருள். இந்தப் பிறவி எடுத்ததன் காரணத்தை நான் அறியாததால் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவும்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said...
ஹ்ம்ம் ....ஐயா, இனி மீள் பதிவுகள்?
Astrology (மீள் பதிவு) என்ற குறிச்சொல்லே உருவாக்கி, எண்கணிதப் பாடங்களுடன் சேர்த்து ஒரு பத்து பதிவுகளுக்குமேல் அந்தக் குறிச்சொல்லின் கீழ் வரிசைப் படுத்திவிட்டீர்கள். உங்கள் தீவிரத்தைப் பார்த்தால், இது முன்பே எடுத்த முடிவு போலிருக்கிறது.
மீண்டும் நேரம் கிடைக்கும் பொழுது நிறைய மனவளக் கட்டுரைகள் எழுதுங்கள்./////

ஆகா எழுதுகிறேன்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>
//////சனியின் நட்சத்திரங்களில் அனுஷம், உத்திரட்டாதி; ராகு மற்றும் கேதுவின் நட்சத்திரக் கோயில்கள் என இன்னமும் எட்டு நட்சத்திரக் கோயில்கள் செய்திகளும், முண்டேன், பிரசன்ன ஜோதிடம் போன்ற பிரிவுகளைப் பற்றியும் அறிமுகப் படுத்துவதாக சொல்லியுள்ளீர்கள்./////

இந்தக் கேள்வி, பதில் பகுதி புதிதாக வகுப்பில் வந்துள்ளவர்களுக்காக மீள் பதிவாக வெளியிடுகிறேன். சுட்டிகளைக் கொடுத்துப் படித்துக்கொள்ளச் சொல்லலாம். அதைவிட இதுவே சிறந்தது என்பதற்காகத்தான் மீள் பதிவுகள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

///// January 15, 2012 - 7:00 PM
February 10, 2021 - 6:00 AM
போன்ற நேரங்களில் பிறந்தவர்கள் ஜாதகங்களில் எதைக் கணிப்பது ஜோதிட முறையில் எளிது போன்ற கேள்விகள் நான் கேட்க நினைத்ததுண்டு. இந்த நாட்களில் பிறந்தவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. குறிப்பாக இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள தேதியில் பிறந்தவர்களை அறியும் எதிர்நோக்குப் பார்வை எனக்கில்லை :))))
ஒவ்வொருகிரகமும் தனித்தனியே இருப்பதற்கும், ஒரே ராசியில் இருப்பதற்கும் நான் தேடிய உதாரணங்கள் இவை. அவ்வளவே./////

கிரகங்கள் தனித்தனியாக இருப்பதுதான் நல்லது. ஒரே ராசியில் இருந்தால் கிரக யுத்தம்க் கணக்கில் வரும். அதைப் பற்றிய விளக்கம் இத்தொடரில் வரும். பொறுத்திருந்து படியுங்கள் சகோதரி!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>...

SP.VR. SUBBAIYA said...

////Blogger arul said...
sir,
please refer old links if same questions are repeated as it will help us to see new question and answers at least now/////

அப்படித்தான் செய்ய உள்ளேன். கவலைப்படாதீர்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Maaya kanna said...
வாத்தியார் ஐயா வணக்கம்.
தங்களுடைய இன்றைய வகுப்பறையின் தலைப்பை பார்த்த உடனையே பசியோடு இருக்கும் முரட்டு யானைக்கு கரும்பை உணவாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்ததை உணர்தேன் .
நான் ரெடி நீங்கள் ரெடியா ஐயா ?./////

கண்ணன் என்றால் நான் எப்போதும் ரெடிதான்:-))))

SP.VR. SUBBAIYA said...

////Blogger Rajaram said...
ஐயா வணக்கம்,
வகுப்பறை தனது அடுத்தகட்ட பரிணாமமாக கேள்வி-பதில் பகுதிக்கு நகர்ந்துள்ளது.இதில் ஆசிரியர் சொன்ன அகடவிகட சமார்த்தியம் யார் யார்க்கெல்லாம் இருக்கிறது என்பதை வரும் நாட்களில் வகுப்பறையில் காணமுடியும் என நினைக்கிறேன்./////

நல்லது. பொறுத்திருந்து பாருங்கள் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger R.Srishobana said...
வணக்கம் ஐயா,
வகுப்பில் மீள்வதிவுகளின் மூலம் சந்தேகங்களை போக்கும் இந்த அறிவிப்பு எனக்கு சந்தோஷத்தை தருகிறது...ஹிஹிஹி...சந்தேகங்களை எழுப்புவது எளிது;அதற்கு தகுந்த சரியான,தெளிவான விளக்கத்தை தருவது உலகிலேயே சிரமமான வேலை ஐயா...
அதற்குள் பல கேள்விகள் என் மூளைக்குள் உதயமாகிவிட்டன...ஹிஹிஹி...////

இந்தக் கேள்வி பதில் பகுதி உங்களுடைய சந்தேகங்களை எல்லாம் போக்கும். பொறுத்திருந்து படியுங்கள் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
மீள் பதிவாய் மீண்டும் பாடங்கள். கேள்வி பதில்கள் , அதைப் படிக்கும் போது நிறைய துணை கேள்விகள் கிளம்பும் ,அதை வாத்தியார் சரி செய்ய வேண்டும்.
அவ்வப் போது அலசல் பாடத்தையும் நடத்துங்கள் அய்யா.////

அடுத்த வாரம் எழுதுகிறேன்!~

SP.VR. SUBBAIYA said...

////Blogger Maheswaran said...
இன்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட....
பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே.....
ஐயா இந்த பாட்டில் இன்மையை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம். நன்றி.//////

உங்கள் கேள்விக்கு உரிய பதிலை, சகோதரி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் விளக்கி உள்ளார்கள். அது அடுத்து உள்ளது. படித்துப் பாருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Parvathy Ramachandran said...
//இன்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட....
பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே..... //
வாத்தியார் அவர்களே, இதற்கு நான் பொருள் கூறுவதற்கு மன்னிக்கவும். நான் அறிந்த வரையில், அந்த வார்த்தை இன்மை அல்ல, 'இம்மை' அதாவது 'இந்தப்பிறவி' என்று பொருள். இந்தப் பிறவி எடுத்ததன் காரணத்தை நான் அறியாததால் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவும்./////

என் சிற்றறிவிற்கு எட்டியவரை நீங்கள் சொல்வதுதான் சரி சகோதரி! உங்களின் விளக்கத்திற்கு நன்றி!

Balraj said...

அய்யாவுக்கு எனது பணிவான வணக்கங்கள்,
அய்யா ஒரு ஜாதகத்தில் தனுசில் புதன் இருந்து மிதுனத்தில் குரு இருந்தால் பரிவர்த்தனை யோகம் அதே போல சிம்ம லக்னத்தில் சனி இருந்து மகரத்தில் சூரியன் இருந்தாலும் பரிவர்த்தனையே. இதில் சிறந்த பரிவர்த்தனை எது. பரிவர்த்தனை யோகம் நல்லதை செய்யுமா.

ச. பால்ராஜ், லண்டன்.

Balraj said...

அய்யாவுக்கு எனது பணிவான வணக்கங்கள்,
அய்யா ஒரு ஜாதகத்தில் தனுசில் புதன் இருந்து மிதுனத்தில் குரு இருந்தால் பரிவர்த்தனை யோகம் அதே போல சிம்ம லக்னத்தில் சனி இருந்து மகரத்தில் சூரியன் இருந்தாலும் பரிவர்த்தனையே. இதில் சிறந்த பரிவர்த்தனை எது. பரிவர்த்தனை யோகம் நல்லது செய்யுமா.

ச.பால்ராஜ், லண்டன்.

Balraj said...

அய்யாவுக்கு எனது பணிவான வணக்கங்கள்,
அய்யா ஒரு ஜாதகத்தில் தனுசில் புதன் இருந்து மிதுனத்தில் குரு இருந்தால் பரிவர்த்தனை யோகம் அதே போல சிம்ம லக்னத்தில் சனி இருந்து மகரத்தில் சூரியன் இருந்தாலும் பரிவர்த்தனையே. இதில் சிறந்த பரிவர்த்தனை எது. பரிவர்த்தனை யோகம் நல்லது செய்யுமா.

ச.பால்ராஜ், லண்டன்.

Bala said...

அய்யாவுக்கு எனது பணிவான வணக்கங்கள்,
அய்யா ஒரு ஜாதகத்தில் தனுசில் புதன் இருந்து மிதுனத்தில் குரு இருந்தால் பரிவர்த்தனை யோகம் அதே போல சிம்ம லக்னத்தில் சனி இருந்து மகரத்தில் சூரியன் இருந்தாலும் பரிவர்த்தனையே. இதில் சிறந்த பரிவர்த்தனை எது. பரிவர்த்தனை யோகம் நல்லது செய்யுமா.

ச.பால்ராஜ், லண்டன்.