மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label class room posts. Show all posts
Showing posts with label class room posts. Show all posts

5.4.23

Astrology:கேடு செய்யும் கேது மகா திசை!

Astrology:கேடு செய்யும் கேது மகா திசை!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

மற்ற மகா திசைகளை விட, சனி, ராகு & கேது ஆகிய இயற்கையான தீய கிரகங்களின் மகா திசை மோசமானதாக இருக்கும். சனி 19 ஆண்டுகளும் ராகு 18 ஆண்டுகளும் தீயதாக இருக்கும் என்றாலும் அவற்றைவிட குறைந்த காலமே, அதாவது 7 ஆண்டுகளே உள்ள கேதுவின் திசை அதி மோசமானதாகும். 7 ஆண்டுகளில் போட்டுப் பார்த்துவிடுவார். எச்சரிக்கயாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குக் கேது மகாதிசை அநேகமாக வராது. சுமார் 93 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் கேது புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 2,520 நாட்கள் (7 ஆண்டுகள்) வரும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி கேது திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் சுக்கிர புத்தி, குரு புத்தி, புதன் புத்தி (மொத்தம் 3 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

கேது மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!

உதாரணத்திற்கு கேது மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கான பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

ஆமென்ற கேது திசை வருஷம் ஏழு
அதனுடைய புத்தி நாள் நூற்றி நாற்பத்தியேழு
போமென்ற அதன் பலனை புகழக் கேளு
புகழான அரசர்படை ஆய்தத்தால் பீடை
தாமென்ற சத்துருவால் வியாதி காணும்
தனச் சேதம் உடல் சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்கள் உண்டாம்
நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப் பகையே!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.3.23

Astrology: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

Astrology: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

”புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை”

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் அசத்தலாகச் சொல்லிவிட்டுப் போனார். முழுப்பாடலையும், உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். பிறகு படித்துப் பாருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்!

வெற்றி, தோல்விகளை விட்டுத் தள்ளுங்கள். எல்லோரும், எல்லா நேரத்திலும் வெற்றி பெறமுடியாது. அதற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் ஒத்து வரவேண்டும். ஆகவே புத்தியை வெற்றி தோல்விக் கண்ணோட்டத்தில் மறந்துவிட்டுப் பாருங்கள். புத்தி அவசியம். புத்தி இல்லாத மனிதனை யார்தான் விரும்புவார்கள்? அதைச் சொல்லுங்கள்.

ஜாதகத்தில் குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களும் எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமான கிரகமாகும். புதன் தனித்து, அதாவது தீயகிரகங்கள் எதுவுடனும் சேராமல், அல்லது தீயகிரகங்களின் பார்வை பெறாமல் தனித்து இருந்தால் அது சுபக்கிரகமாகும். அத்துடன் அது கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.

புதன், சுக்கிரனுடன் சேர்ந்தால், அது ஜாதகனுக்கு நிபுனத்துவத்தைக் கொடுக்கும். ஜாதகன் ஆக்க வழியில் செயல்பட்டுப் பேரும் புகழும் அடைவான். அதே புதன், சனியுடன் சேர்ந்திருந்தால் ஜாதகனின் புத்தி எதிர்மறையான வேலைகளைச் செய்யும். அந்த மேட்டர்களில் ஜாதகன் கெட்டிக்காரனாக இருப்பான்.

லக்கினம் அல்லது 7ம் வீட்டில் இருக்கும் புதன் ஜாதகனுக்கு நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். ஆழ்ந்து படிப்பதெல்லாம் நினைவில் நிற்கும் சாமிகளா!

சரி நம்ம முனிசாமி, அதாவது நமது முனிவர்கள் புதனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்?

சொல்லுகிறேன் இருமூன்று ஈராறெட்டும்
   சுகமில்லை ஜென்மனுக்கு குய்யரோகம்
சொல்லுகிறேன் செம்பொன்னும் கணைக்கால்துன்பம்
   சுற்றத்தார் மனமுறிவர் அரிட்டஞ்செப்பு
சொல்லுகிறேன் கேந்திரமும் கோணம் நன்று
   சுகமாக வாழ்ந்திருப்பான் காடியுள்ளோன்
சொல்லுகிறேன் சுயகவிதை மாமன்விருத்தி
   சொர்ண நிலமுள்ளவனாம் கூறே!
- புலிப்பாணி

இருமூன்று ஈராறெட்டும் = 6, 12, & 8 ஆம் இடங்கள் சுகமில்லை என்கிறார். Not useful என்கிறார்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.3.23

Astrology திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)


திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)

உரிய வயது அல்லது உரிய நேரம் என்று நீங்கள் யாரிடமும் வாதிட முடியாது. அது ஆளாளுக்கு மாறுபடும். நீங்கள் வாதிட்டால் பெரும்பாலும் 
அது தோல்வியில்தான் முடியும். அல்லது சண்டையில்தான் முடியும்.

காலையில் எப்போது எழுந்திருக்க வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்பாக, அதாவது காலை 6:00 மணிக்குள் எழ வேண்டும் என்பேன் நான். 
எத்தனை பேர்கள் அதை ஒப்புக்கொள்வீர்கள்?

அதுபோல உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருமணம் நடக்க வேண்டும். உரிய வயது எது? என்பதில்தான் தகறாறு.

அந்தக் காலத்தில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் 
செய்துவைத்தார்கள்.

இப்போது அப்படி இல்லை. கல்வி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு, சம்பளத்தில் ஸ்திரத்தன்மை, வீடு வாசல் வாங்கி செட்டிலாக வேண்டும் என்ற 
அபிலாஷைகள் போன்றவற்றின் காரணமாக பலரின் திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை.

பெண்களும் சரி, ஆண்களும் சரி 30 வயதுவரை திருமணத்திற்கு அவசரப் படுவதில்லை. அதுதான் இன்றைய நிலை. 
பெற்றவர்களும் கவலைப் படுவதில்லை. கல்விக் கடனை கட்டி முடிக்கட்டும். ஒரு 2 படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை 
வாங்கட்டும் என்று பொறுமையாக இருக்கிறார்கள்.

முதலில் பெண்ணை எடுத்துக் கொள்வோம். ஒரு பெண் 12 அல்லது 13 வயதில் பூப்படைகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவளுடைய 
வசந்தகாலம் 36 ஆண்டுகள். அதாவது அதிக பட்சம் 50 வயது. அதற்குப் பிறகு மெனோபாஸ், கர்ப்பப்பைக் கொளாறுகள் போன்றவைகள் வந்து 
பல பெண்களைப் பயமுறுத்தும் காலம் வந்துவிடும்.

32 வயதில் ஒரு பெண்ணிற்குத் திருமணம் என்றால் அவளுடைய வசந்த காலத்தில் பாதி காலாவதியாகிவிடுமே! 24 வயது என்றால் ஓரளவு பரவாயில்லை. 
வசந்த காலத்தில் 1/3 மட்டும்தான் காலியாகும் மிச்சம் 2/3 இருக்கும்

ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் நடைபெற வேண்டும். 
அந்த வயதைத் தாண்ட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
---------------------------------------------
உரிய வயதில் திருமணம் என்பது நம் கையிலா இருக்கிறது? ஜாதகப்படி அதற்கு உரிய நேரம் வர வேண்டாமா?

உண்மைதான். 

நேரம் வராவிட்டால் என்ன செய்வது? 

இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வழி காட்டுவார்
---------------------------------------------
சரி உரிய வயதில், அதாவது இளம் வயதில் திருமணம் நடைபெற ஜாதகப்படி என்ன அமைப்பு இருக்க வேண்டும்? அதை மட்டும் இன்று பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
2. ஏழாம் வீடு சுபக் கிரகங்களின் பார்வையோடு இருக்க வேண்டும். ஏழாம் வீடு பாபகர்த்தாரியோகத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.
3. களத்திரகாரகன் சுக்கிரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
4. லக்கினகாரகன் வலிமையாக இருப்பதுடன் ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும்.
5. ஏழாம் வீட்டில் சுபக்கிரகங்கள் குடி இருப்பது நன்மையானதாகும்
6. இரண்டாம் வீடு கெட்டுபோகாமல் இருக்க வேண்டும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.23

Astrology: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம் ?



Astrology: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம் ?

வர்கோத்தமம் என்பதும் ஒரு யோகம்தான் ராசா!

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! 

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

இதுபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு லக்கினத்தின் யோககாரனுக்கும் ஸ்பெஷல் வர்கோத்தமப் பலன்கள் உண்டு. கேட்டால், ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் அப்படி யிருந்தால் அசந்துபோய் விடுவீர்கள். காற்றில் மிதப்பீர்கள். அப்படி ஒரு சந்தோஷமான மனநிலை ஏற்படும்!

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணக் காருக்குப் பதிலாக உங்களுக்கு குளிரூட்டப்பெற்ற சொகுசுக்கார் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கும் பெண் (மனைவி) அனுஷ்கா சர்மாவைப் போன்ற அழகி என்பதோடு, நன்கு படித்தவளாக, நல்ல வேலையில் (மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் சாமி) இருப்பவளாகவும் அமைந்துவிடுவாள். சந்தோஷப் படுவீர்களா - இல்லையா?

அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். 

உதாரணத்திற்கு லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

அதுபோல ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான விசேட பலன் உண்டு

என்னென்ன கிரகத்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.3.23

Astrology கைக்காசு எப்போது கரையும்?



Classroom Astrology
Kalakkal Lessons
Lesson No.11
Dated 8-3-2023

Astrology கைக்காசு எப்போது கரையும்?

முதலில் கரை என்றால் என்னவென்று பார்ப்போம். கரை என்ற தமிழ்ச்சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உண்டு

1. காகம் கரைவதும் கரைதான். அதாவது காகம் 'காகா’ என்று ஒலி எழுப்புவதைக் காகம் கரைகிறது என்று சொல்லுவார்கள்

2, நீரைத் தேக்கிப் பிடித்து நிறுத்தும் மேடான மண் பகுதிக்கு (ஏரி, குளங்களில்) கரை என்றுதான் சொல்லுவார்கள். ஏரிக்கரை

3. ஒரு திடப்பொருளை நீரில் கரைத்து திரவ நிலைக்குக் கொண்டு வருவதையும் (சோப்பை இப்படிக் கரைத்து விட்டாயே) கரைத்தல் என்று சொல்லுவார்கள்

4. வீணாகக் காசைச் செல்வழிப்பதையும், இப்படிக் காசைக் கரைக்கிறாயே என்றுதான் சொல்லுவார்கள்

5. உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை நீக்கம் செய்வதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைக்கும் கரைத்தல் என்றுதான் பெயர். இந்தக் கட்டியைக் கரைப்பதற்கு எவ்வளவோ செலவு செய்துவிட்டேன்; ஆனால் கட்டி கரைந்த பாடாக இல்லை என்று சிலர் அங்கலாய்ப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கரைத்தலில்தான் வரும்.

6. கற்பூரம் போன்ற பொருட்கள் காற்றில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போகும் நிலைக்கும் கரைந்துபோய்விட்டது என்ற சொல்தான் பயன்படுத்தப்பெறும்

7. இருப்பில் உள்ள சேமிப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிந்து கொண்டிருந்தாலும்’ கைக்காசு கரைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லுவார்கள்

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ஜாதப்படி இப்படிக் கரைக்கும் பணி ஒருவனுக்கு எப்போது அமுலுக்கு வரும்? அதாவது எப்போது நடக்கும்?

பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் மகாதிசையில் அது நடக்கும். அது எந்தவிதமான கிரகமாக இருந்தாலும் அதை நடத்திவைக்கும்.
சனி, ராகு அல்லது கேது போன்ற கிரகங்களின் மகாதிசை என்றால் இந்தக் கரைக்கும் பணி ஜரூராக நடக்கும். சுபக்கிரகங்களின் மகாதிசை என்றால் சற்று மெதுவாக நடக்கும். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும். மொத்தத்தில் கரைத்துவிட்டுப் போய்விடும்!

Any planet in the 12th house would make its dasa expense oriented!

அடடே, பணம் மட்டும்தான் கரையுமா? 

இல்லை. கை இருப்பை, சேமிப்பைக் காலி செய்துவிட்டுப் போவதோடு, வீடு வாசல் இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை விற்க வைத்து, விற்று வரும் பணத்தையும், வைத்துக்கொள்ளவிடாமல் காலி செய்து விட்டுப் போய்விடும்

அதேபோல, அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இதற்குப் பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.3.23

Astrology கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?




Classroom Astrology
Kalakkal Lessons
6-3-2023
Lesson No.11
கலக்கல் பாடம்

கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் எது முக்கியம்?

நல்ல வேலை. நல்ல சம்பளம் என்பது முக்கியம். நல்ல வேலைக்கு உரிய வயதில் படித்து (முக்கியமாக தொழில் நுட்பக் கல்வி) பட்டம் பெற்றிருப்பதும் முக்கியம்.

எல்லோருக்கும் அது அமைந்து விடுகிறதா என்ன?

ஜாதகத்தில் 4ஆம் வீடு நன்றாக இருந்தால்தான் படிப்பு அமையும். 4ஆம் அதிபதி கெட்டிருந்தால், லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் போய் அமர்ந்திருந்தால், அத்துடன் 4ஆம் வீட்டில் கேது போன்ற தீய கிரகங்கள் குடியிருந்தால், படிப்பு பாழாகிவிடும்.

படிப்பு பாழானால் என்ன? வியாபாரம் செய்து அல்லது தொழில் செய்து நல்லபடியாகப் பிழைக்க முடியாதா?

முடியும் அதற்குப் பணம் வேண்டுமே? காசு வேண்டுமே? 4ஆம் அதிபதி கெட்டுப் போனதைப்போல, ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்காரனும் கெட்டிருந்தால், என்ன செய்வது? காசு எங்கே இருக்கும்? காசு எப்ப்டி வரும்? இரண்டாம் அதிபதியும் 12ல் இருந்தால் அந்த நிலைமை உண்டாகும்.

யாரும் கை கொடுக்க மாட்டார்களா? லக்கினாதிபதி நன்றாக இருந்தால், அது நடக்கும். ஆனால் லக்கினாதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருந்தால், உதவிக்கு ஒருத்தனும் வர மாட்டான். ஜாதகன் தன்னிச்சையாகத்தான் போராட வேண்டும்.

என்ன செய்வது? கூலி வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமா?

ஆமாம். எத்தனையோ மக்கள் கூலி வேலைகள் செய்து பிழைத்துக்கொண்டிருக்கவில்லையா? அதில்தான் எத்தனை விதமான வேலைகள் உள்ளன.

எங்கள் பகுதிக்கு வாருங்கள். திருப்பூர், சோமனூர், கோவை போன்ற ஊர்களில் ஆயிரக் கணக்கான பேர்கள் தினக்கூலி, வாரக்கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவ்ரும்.

கூலி வேலை பார்த்துக் காலம் தள்ளுவது என்பது மிகவும் சிரமமானதுதான். ஆனால் வேறு நல்ல கிரகத்தின் திசை வரும்போது, நிலைமை மாறி விடும்.
கூலி வேலை செய்தவன், அதே வேலையைப் பத்து ஆட்களை வைத்துச் செய்து பொருள் ஈட்ட ஆரம்பித்து விடுவான்.

நேர்மையாகச் செய்யும் எந்த வேலையும் கேவலமானதல்ல! படித்துவிட்டு BPO அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களைவிட Mason, carpenter, Electrician போன்ற வேலைகளைக் கூலி அடிப்படையில் செய்பவரகள் அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஜாதகத்தில் 2ஆம் அதிபதி, 4ஆம் அதிபதி, லக்கினாதிபதி ஆகிய மூவரும் இளம் வயதில் ஒரு starting கொடுப்பதற்கு முக்கியம். அதை மனதில் கொள்க!

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.2.23

Astrology யாரைப் பார்த்து என்ன சொல்ல வேண்டும்?





Classroom Astrology
Kalakkal Lessons

22-2-2023
கலக்கல் பாடங்கள்
பாடம் எண் 9

யாரைப் பார்த்து என்ன சொல்ல வேண்டும்?

புதிதாகத் திரையுலகத்திற்கு வருபவர்களுக்கு Screen Test எடுத்துத்தான் நடிப்பிற்குத் தேர்வு செய்வார்கள். சிலருக்கு இயற்கையிலே வசீகரமான முகத்தோற்றம் இருக்கும். சிலருக்கு Photogenic Face இருக்கும் (A subject, generally a person is photogenic if appearing aesthetically or physically attractive or appealing in photographs. Photogenic, describes the earliest method for recording camera images)

அதை வைத்து ஆசாமி கதாநாயகனுக்கு ஏற்றவன் அல்லது வில்லனாக அல்லது காமெடியனாக நடிக்க லாயக்கானவன் என்று முடிவு செய்வார்கள்.

நம் முனுசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) கிரகங்களை அவ்வாறு வகைப் படுத்தியுள்ளார்கள். Screen Test எதுவும் எடுக்க வேண்டாம (எடுக்க முடியுமா என்ன?) பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் விதமாக அதைப் பாட்டாகவும் எழுதி வைத்துள்ளார்கள்,

கீழே உள்ள பாடலைப் பாருங்கள்:

“காரியைப் பிடித்துப்பார்த்துக் கடுகவேவிதியைச் சொல்வாய்
சூரியனைப் பிடித்துச்சொல்லுவாய் பலன் பிதுர்க்கு
வீரிய பாம்பைப்பற்றி விளங்கவே யோகஞ் சொல்வாய்
சோர்விலாச் சுகங்கள்றன்னாற் களத்திர பலனைச் சொல்லே”

சனீஷ்வரனை வைத்து ஜாதகனின் விதியைச் சொல்லலாம். அவன் சந்திக்க இருக்கும் கஷ்டங்களைச் சொல்லலாம். எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்களைச் சொல்லலாம், ஆயுளைச் சொல்லலாம்.

சூரியனை வைத்து அவனுடைய தந்தையைச் சொல்லலாம், தந்தையால் கிடைக்கவிருக்கும் நன்மைகளைச் சொல்லலாம். தந்தைவழி சொத்துக்கள், உறவுகளைச் சொல்லலாம்.

ராகுவை வைத்து ஜாதகனுக்கு, ஜாதகத்தில் உள்ள யோகங்கள் கிடைக்குமா அல்லது ஊற்றிக் கொண்டுவிடுமா என்பதைச் சொல்லலாம்

சோர்வு அடையாத இன்பங்களுக்கும் சுகங்களுக்கும் களத்திரகாரகனான சுக்கிரனை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்

சரி, மற்ற கிரகங்களுக்கு? அதை பின்னால் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.2.23

Astrology எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!


Astrology எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எட்டேகால் லட்சணத்தை எடுத்துக்கொள்வோம். எட்டேகால் லட்சணம் என்றால் என்னவென்று தெரியுமா? 

தமிழின் எண் வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தமிழில்  ‘அ’ என்று எண்ணால் குறிபிட்டால் எட்டு என்று பொருள். ‘வ’ என்ற எழுத்திற்கு கால் (1/4) என்று பொருள் எட்டேகால் என்பதை ‘அவ’ என்று குறிப்பிடுவார்கள். எட்டேகால் லட்சணம் என்றால் அவலட்சணம் என்று பொருள்படும்

ஒரு பையனோ அல்லது பெண்ணோ அழகில்லாமல் இருந்தால், அவலட்சணமாக இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்லாமல் எட்டேகால் லட்சணம் என்பார்கள்.
எங்கள் பகுதியில் (காரைக்குடியில்) சற்றுக் கெள்ரவமாகச் சொல்வார்கள். உள்ளதுபோல இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்வார்கள். நாம அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எமன் ஏறும் வாகனம் என்பது எருமை மாட்டைக் குறிக்கும். படு சுட்டியாக இருக்கும் பையனைக் கிராமப் புறங்களில் ‘எமப் பயலாக’ இருக்கிறான் என்பார்கள். எமன் கொண்டு போவதைப் போல அசந்தால் பையனும் கொண்டு போய்விடுவான் என்று பொருள். சற்று மந்தமாக இருக்கும் பையனை எமன் ஏறும் வாகனம்போல பையன் இருக்கிறான் என்பார்கள்.

வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்  “இன்று எல்லோரும் எருமைப் பாலத்தான் குடிக்கிறார்கள். அதனால் தெருவில் பொறுப்பில்லாமல் எருமைகள் போலதான் நடந்து போகிறார்கள். வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்குவதில்லை”

மாடுகளிலும் பலவகை உள்ளன. உழுகின்ற மாடு, வண்டி மாடு. கோயில் மாடு என்று அவற்றையும் வகைப்படுத்தலாம். அவற்றைப் பற்றி சுவாரசியமாக எழுதலாம். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன். இப்போது பாடத்தைப் பார்ப்போம்

சனீஷ்வரன் சில வீடுகளில் இருக்கும்போது அழகான தோற்றத்துடன் இருப்பார். உதாரணம் துலாம் வீடு. அது அவருக்கு உச்ச வீடு. அங்கே இருக்கும்போது ஃபுல் மேக்கப்புடனும், பட்டு வேஷ்டி சட்டையுடனும், கையில் ஆறு பவுன் தங்க பிரேஸ்லெட்டுடனும், கழுத்தில் தங்கச் சங்கிலியுடனும் அழகாகக் காட்சியளிப்பார். மேஷத்தில் இருக்கும்போது சுய ரூபத்துடன் இருப்பார். எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வரும் பெண்ணைப்போல சுயரூபத்துடன் இருப்பார். அது அவருக்கு நீச வீடு.

அவர் அவலட்சணமாகக் காட்சியளிக்கும் வீடு ஒன்றும் உள்ளது. அது என்ன வீடூ?

எட்டாம் வீடு அது!

அதுதான் ஜாதகத்தில் உள்ள எட்டாம் வீடு

எட்டாம் வீட்டிற்கும் சனிக்கும் உள்ள உறவைப் பற்றி 4 பக்கங்களுக்கு விவரமாக எழுதலாம். எழுதியிருக்கிறேன், மேல்நிலைப் பாட வகுப்பில் (classroom2013) நேற்றுதைப் பதிவிட்டுள்ளேன். அதை இங்கே கொடுத்தால், பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக, அதாவது துவைத்த ஈரம் காயுமுன்பாகவே அதைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இணையத்தில் அத்தனை நல்லவர்கள் திரிகிறார்கள். ஆகவே இங்கே காயப் போடவில்லை. மேல் நிலைப் பாடங்கள் அடுத்த ஆண்டு புத்தகமாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்.

உங்களுடைய மேன்மையான தகவலுக்காக அதில் உள்ள சில விதிகளை (Rules) மட்டும் சுருக்கிக் கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------------------------
எட்டில் சனி அமர்ந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல! அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும், தடைகளையும் தன்னுடைய வேலையில் அல்லது தொழிலில் சந்திக்க நேரிடும்.

அத்துடன் வேலை ஸ்திரமில்லாமல் இருக்கும். ஸ்திரமில்லாமல் என்றால் என்னவென்று தெரியுமா? Instability என்று பொருள்.

எந்தத் துறையென்றாலும், ஜாதகனுக்கு அது பிடித்தமில்லாமல் போகும். கவலை அளிப்பதாக இருக்கும்.

எத்தனை திறமை இருந்தாலும், எத்தனை திறமையை வேலையில் காட்டினாலும், அந்த வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, அதன் மேல் வெறுப்பும் கூடவே இருக்கும். வேலைக்குத் தகுந்த ஊதியம் இல்லாவிட்டால், எப்படிப் பிடிப்பு வரும்? வெறுப்புத்தானே வரும்!

பத்தாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தாலும், அல்லது பத்தாம் வீட்டுக்காரனின் பார்வையிலும் அந்த வீடு இருந்தாலும், அல்லது சுபக்கிரகங்களின் பார்வையில் அந்த வீடு இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் இல்லாமல் நல்ல பலன்கள் நடைபெறும். அதையும் மனதில் கொள்க!


அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.2.23

Astrology வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!



Astrology வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!
இன்று காதலர் தினம்! (Valentine Day)

காதலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

காதலித்தவனையே அல்லது காதலித்த பெண்ணையே மணந்து கொள்ளுங்கள். ஆனால் உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று மணந்து கொள்ளுங்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் இல்லை. காதலுக்காக அவர்களைப் புறந்தள்ளிவிடாதீர்கள். அவர்களை அழ வைத்தால் அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது!

ஜாதி, மதம், இனம் குறுக்கே வந்து அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

போராடுங்கள். உள்ளிருப்புப் போராட்டம் நடத்துங்கள். அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். ஒரு கள்ளியை அல்லது மங்கையாக இருந்தால் ஒரு கள்ளனை வசப்படுத்திக் கைக்குள் போட்டுக்கொண்ட உங்களுக்கு, பெற்றோர்களை வசப்படுத்துவதா கஷ்டம்?

ஆனால் ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்க்காதீர்கள். பார்த்துப் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது? பாதியில் விட முடியுமா? பாதியில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

எத்தனை ஆயிரம் குறுஞ்செய்திகள் (SMS), புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், நண்பர்கள் வட்டாரம் என்று சாட்சியாக மாட்டிக்கொண்டு உள்ளனவோ? அவற்றை எல்லாம் எப்படி விலக்க முடியும்? அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் அறை அல்லது காட்டேஜ் எடுத்து, போட்ட ஆட்டங்கள் எத்தனையோ? கணக்கு வைத்துக் கொள்ள முடியுமா என்ன? டூ வீலரில் அல்லது பஸ் பயணத்தில் உரசிய உரசல்கள் எத்தனையோ? ஆகவே ஜாதகத்தை எல்லாம் இருவரும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளுங்கள்.

திருமணத்திற்குப் பிறகு அவனுடைய அல்லது அவளுடைய உண்மையான குணம் மற்றும் குடும்ப பாரம்பரியம் முழுமையாகத் தெரியும்போது, பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

காதல் புனிதமானது. ஒரு வருடம் அல்லது ஒரு மாதம் ஏன் ஒருவாரம் வாழ்ந்தாலும் போதும். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.

ஜாதகம் பார்க்காமல் மணந்து கொள்ளும்போது, அவனுடைய அல்லது அவளுடைய ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அல்லது நீசமாகி ஒன்றுக்கும் லாயக்கில்லாமல் இருந்தால் என்ன செய்வது? அல்லது ஆயுள் பாவம் அடிபட்டுப்போயிருந்தால் என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒன்றும் செய்ய முடியாது. இந்த வியாக்கியானம் எல்லாம் காதலில் குதிப்பதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும்.

என்னிடம் கேட்டிருந்த ஒரு பெண்ணிற்கு இதை எழுதியபோது, சட்டென்று அவள் பதில் அனுப்பினாள்: “சார், எனக்கு அவனைப் பற்றிக் கவலை இல்லை. 
திருமணத்திற்குப் பிறகு அவன் முரண்டு பிடித்தால், அவனைப் பிடித்துக் கொடுத்து, மகளிர் காவல் நிலைத்தில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டி 
சரி பண்ணி விடுவேன். எனக்குப் பிரச்சினை எல்லாம் என் பெற்றோர்களை வைத்துத்தான். என்னுடைய காதலுக்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்னுடைய திருமணம் அவர்கள் ஆசியுடன் நடக்குமா? அதை மட்டும் நீங்கள் என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் ப்ளீஸ்....!”

எப்படி இருக்கிறது நிலைமை பாருங்கள்!

அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டுவதா? அல்லது அவளிடம் மாட்டிக்கொண்டுள்ள அப்பாவி ஜீவனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதா நீங்களே சொல்லுங்கள்!

பத்து சதவிகிதம் இப்படியும் இருக்கலாம். ஆகவே காதலர்களே ஜாதகத்தை மறந்து விட்டு, பெற்றோருடைய ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் திருமண வாழ்வு வெற்றிபெற வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------
“வாத்தி (யார்) கட்டுரைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா, காதலிக்க வழியில்லாமல் (அதாவது ஒருத்திகூடக் கிடைக்காமல்) அல்லது காதலுக்கு வாய்ப்பில்லாம்ல் நேரடியாக திருமண பந்தததில் 
மாட்டிக்கொண்டு விட்டவர்கள், அல்லது மாட்டிக்கொண்டு விட்டதாக நினைப்பவர்கள் எல்லாம், வருந்தாமல் சூடாக வாழைக்காய் பஜ்ஜி இரண்டைச் 
சாப்பிட்டுவிட்டு, ஒரு கோப்பைஃபில்டர் காப்பியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டுத் தங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்க்கலாம். அதில் காதல் மறுக்கப்பட்டுள்ளது 
தெரியவரும்! டென்சன் இல்லாமல் பார்ப்பதற்குத்தான் வாழைக்காய் பஜ்ஜி & ஃபில்டர் காப்பி! சம்ஜே க்யா?

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.1.23

சித்தப்பன் மகனுக்கு மட்டும் ஏனப்பா சின்னவயசிலேயே திருமணம் ஆச்சு?

சித்தப்பன் மகனுக்கு மட்டும் ஏனப்பா சின்னவயசிலேயே திருமணம் ஆச்சு?

ஒரு இளைஞனுக்கு மிகுந்த வருத்தம். 34 வயதாகியும், அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவனுடைய தம்பிக்கு (சித்தப்பா மகனுக்கு) 24 வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது.

இதுபற்றி தன் தம்பி கேட்டபோது, நமது நாயகனின் அப்பா சொல்லிவிட்டார்,  “இவனுக்கு இன்னும் நேரம் வரவில்லை. கால சர்ப்பதோஷம் ஏழரைச் சனி என்று எல்லா கெரகமும் வந்து தள்ளிக்கொண்டே போகிறது. அதற்காக அவனுடைய திருமணத்தைத் தள்ளிப் போடாதே! நீ பாட்டுக்கு செய்து முடி!”

அப்படி வீட்டாரின் சமமதத்துடன்தான் அந்தத் திருமணமும் நடைபெற்றது

அதோடு மட்டுமல்லாமல அதுபற்றி, வீட்டில் உள்ள பெரிசுகள் பேசிக் கொண்டது நமது நாயகனின் காதில் விழுந்தது.

“என்னங்க நம்ம பையனுக்கு மட்டும் இன்னும் திருமணம் அமைய மாட்டேன் என்கிறது. அதற்குக் காரணம் இந்தப் பாழாய்ப்போன ஜாதகத்தை கட்டிக்கொண்டு நீங்கள் அழுவதால்தான்!” இது நாயகனின் அம்மா!

“ஆமாம்டி ராசாத்தி, என்னை மட்டும் குறை சொல்! நாம் பார்க்கிற பெண் வீட்டில் எல்லாம் இவனுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, கடுமையான களத்திர தோஷம் உள்ளது என்று சொல்லிப் பின் வாங்கி விடுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்வது?”

“அதுசரி, இனிமேல் பெண் பார்க்கும்போது, அவர்கள் கேட்டால், இவனுக்கு ஜாதகம் இல்லை. வீடு மாற்றும்போது ஒரு பெட்டியோடு அதுவும் தொலைந்து விட்டது என்று சொல்லுங்கள்”

“பிறந்த தேதியைக் கேட்பார்களே?”

“கேட்டால் சொல்லுங்கள். பிறந்த நேரத்தை மட்டும் மாற்றி சொல்லுங்கள். காலை எட்டு மணி என்பதை இரவு எட்டு மணி என்று சொல்லுங்கள். அதான் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு லக்கினம் மாறிக்கொண்டே இருக்குமாமே - ஒரு புத்தகத்தில் படித்தேன். அப்படியாவது இவன் திருமணம் முடியட்டும்!”

“அது அதர்மமில்லையா?”

“பகவனே ஒரு நல்ல காரியத்திற்காக அமாவாசையையே மாற்றி ஒரு நாள் முன்பாக தர்ப்பணம் செய்யவில்லையா? நன்மைக்கு எனும்போது எதுவும் அதர்மம் ஆகாது”

“ஆமாம், உனக்கென்று செய்யும்போது எல்லாமே தர்மக்கணக்கில்தான் வரும்” என்று நக்கலாகச் சொன்னவர், அதற்குமேல் பேசவில்லை

அப்படி எல்லாம் மாற்றிக் கொடுக்கலாமா?

கொடுக்கக்கூடாது. அப்படியொரு மூல நட்சத்திர ஜாதகத்தை ஒரு நாள் தள்ளி பூராட நட்சத்திரமாக்கினார்கள். எட்டில் இருந்த சனி ஏழுக்கு வந்துவிட்டது.

அது பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்!

சிலருக்கு இளம் வயதிலேயே திருமணம் ஆகிறது. சிலருக்கு காலம் கடந்து திருமணமாகிறது. இளம் வயதிலேயே திருமணம் ஆகிவிடுவதற்கான ஜாதக அமைப்பு என்ன? அதை இன்று பார்ப்போம்!

1. லக்கினத்திலும், ஏழாம் வீட்டிலும் சுபக்கிரகங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அல்லது அந்த வீடுகள் சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற வேண்டும்.
2. ஏழாம் வீட்டுக்காரன் தீய கிரகங்களின் கூட்டோடு அல்லது பார்வையோடு இருகக்க்கூடாது
3. குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீடும் அப்படியே இருக்க வேண்டும்
4. சுக்கிரன் அஸ்தமனமாகி இருக்கக்கூடாது
5. சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அதாவது வக்கிரகதியில் இருக்கக்கூடாது.
6. லக்கினம், மற்றும் ஏழாம் வீட்டில் 28ற்கும் அதிகமான பரல்கள் இருக்க வேண்டும்
7. லக்கினாதிபதியும் ஏழாம் வீட்டுக் காரனும் தங்கள் சுயவர்க்கத்தில் 4 அல்லது அதற்கு மேலான பரல்களுடன் இருக்க வேண்டும்

அப்படி இருந்தால் சின்ன வயதிலேயே திருமணம் கூடிவரும்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.1.23

Jothidam உறவால் என்ன கிடைக்கும், சொத்தில் பங்கா அல்லது வக்கீல் நோட்டிஸா?



உறவால் என்ன கிடைக்கும், சொத்தில் பங்கா அல்லது வக்கீல் நோட்டிஸா?

கிரகங்களுக்கும் உறவு உண்டு. நமக்கு சித்தப்பு, பெரியப்பு, மாமன், மச்சான் உறவுகள் இருப்பதைப்போல கிரகங்களுக்கும் உறவுகள் உண்டு.

எப்படி?

கிரகங்களுக்கு ஐந்து வகையான உறவுகள் உண்டு

1. முதல் உறவு: ஒரே ராசியில் இருக்கும் கிரகங்கள் ஒன்றுக்கொன்று உறவாகும்
2. இரண்டாவது உறவு: பார்வையால் ஏற்படும் உறவு
3. மூன்றாவது உறவு: பரிவர்த்தனையால் ஏற்படும் உறவு
4. நான்காவது உறவு: கேந்திர வீடுகளால் ஏற்படும் உறவு
5. ஐந்தாவது உறவு: திரிகோண வீடுகளால் ஏற்படும் உறவு

இதை விரிவுபடுத்தி, இந்த உறவுகளால் ஏற்படும் நன்மைகளையும், தீமைகளையும், கிடைக்கும் செல்வங்களையும் அல்லது 
கிடைக்கும் வக்கீல் நோட்டிசுகள், வம்புகள் வழக்குகளையும் எழுதலாம் என்றுள்ளேன். அது சற்று விரிவான, பெரிய பாடம், 
அத்துடன் அது மேல்நிலைப் பாடம். பொறுத்திருந்து படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.1.23

எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்ன செய்வான்?

Kalakkal Jothidam
20-1-2023
கலக்கல் ஜோதிடம்
பாடம் எண் 3

எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்ன செய்வான்?

ஒரு கிரகம் எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அந்த கிரகத்தால் நன்மை இருக்காது. அவரே எட்டில் போய் மாட்டிக்கொண்டு உள்ளார். 
மாட்டிக்கொண்டு உள்ளவர் என்ன நன்மையைச் செய்ய்ப்போகிறார்?

சரி, குரு எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அவருக்கும் அதே விதிதானா?

இல்லை. குரு நம்பர் ஒன் சுபக்கிரகம். அவர் எங்கே இருந்தாலும் நன்மையைச் செய்வார்.

உதாரணமாகக் குரு துலா லக்கின ஜாதகிக்கு (நன்றாகக் கவனிக்கவும்) 3 மற்றும் 6ஆம் இடத்திற்கு அதிபதி. இரண்டு தீய இடங்களுக்கு அதிபதி. அவர் எட்டில் அமர்ந்தால், அதுவும் ஜாதகியின் மாங்கல்ய ஸ்தானத்தில் அமர்ந்தால், மாங்கல்ய் அதோஷம் உண்டா? அவரின் ஆதிபத்யததை வைத்து இந்தக் கேள்வி.

தோஷம் இல்லை. ஏன்?

குரு முதல்நிலை சுபக்கிரகம். அவர் எட்டில் அமர்ந்தாலும், அங்கே தன்னுடைய ஆதிப்பத்யத்தைக் கைவிட்டு விட்டு
 (அதாவது 3 & 6ஆ இடங்களுக்கு உரியவன் என்னும் நிலையை விட்டுவிட்டு, நன்மையையே செய்வார். மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்க மாட்டார்.

பெண் தீர்க்க சுமங்கலி!!!!
---------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! 
ளர்க நலமுடன்!

23.12.22

Humour BLACK (TEA) DAY



BLACK (TEA) DAY
அன்றொரு நாள்....

பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட
பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.

ஒரு தட்டு நிறைய மிக்ஸர்..
முறுக்கு...நெய் பிஸ்கெட்டு
...முட்டை பிஸ்கட்.

இன்னொரு தட்டுல சிக்கென் கட்லெட்...
பருப்புவடை ...பழபஜ்ஜி...!!!

குடிக்க காப்பியா டீயா...ன்னு அவங்க கேட்க...
எல்லாரும் டீ காப்பி ன்னு ஆர்டர் பண்ண...

நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....
டீயும் வந்துச்சு...

எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...

கூச்சத்தை கலைத்து...
பழபஜ்ஜியை ஒரு  கடி கடித்து
ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..
எங்க அக்கா பையனுக்கு என்ன தோணிச்சோ..

திடீர்ன்னு,"மாமா.... 
சோடா ஊத்தலையா"ன்னு கேட்க..

rest is history.....

*ப்ளாக்_டீயும்_
ப்ளாக்கான_
திருமணமும்*
-------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.12.22

பணம் - சுஜாதா கட்டுரை




பணம் - சுஜாதா கட்டுரை

பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது.

பள்ளியில்  படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில்  காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’  வாங்கிச் சாப்பிடு என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம்.  ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே  வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு  பிடித்துவிடுவாள்.

பாட்டிக்கு  ஜனோபகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது.  அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய். நடுங்கும்  விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள். பாங்கையே  கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.

திருச்சி  செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி  டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள்.  லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன். மத்யானம் ஓட்டலில்  சாப்பிட இரண்டணா கொடுப்பாள். பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில  நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி  சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.

எம்.ஐ.டி  படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு  செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார். பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை  ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று  ஞாபகமில்ல.

இன்ஜினீயரிங்  படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது  ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது. ஆகா கான் (Aga Khan)  போல உணர்ந்தேன்.  அத்தனை பணத்தை  அதுவரை பார்த்ததே இல்லை. சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச்  செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன். உல்லன் ஸ்வெட்டர்,  ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம். மாசக் கடைசியில் ஒரு  ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.

அதன்பின்  வேலை கிடைத்தது. 1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம்.  அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும்  வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம்  பண்ணினேன். வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து  அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

பி.எஸ்சி.,  பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன். சம்பளம்?  மயங்கிவிடாதீர்கள் ரூ.400! முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு  அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன  போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.

அடுத்தபடி  பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல்  முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது. பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட்ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.

என்னிடம்  ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க  மாட்டேன், சேராது. எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம்  இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக  எதிர்பார்த்து கடன் கேட்டால், வேஷ்டியை அவிழ்த்து....... ஸாரி......பாங்க்  பாஸ் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம். ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம்  சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...

இன்று  பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய்,  அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள்.  புத்தகங்களிலிருந்தும் பத்திரிகைகளிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை  பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்?

என்  அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு  வந்தே தீரும். இது இயற்கை நியதி. அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும்  அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும்.  இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது, செலவு செய்தால்தான் மேற்கொண்டு  பணம் வருகிறது என்பதே.

இன்று  பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம். உண்மை  நிலை இதுதான். இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும்  பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது. ராத்திரி படுத்தால் பத்து  நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

எகனாமிஸ்ட்டுகள்  என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம்  தரலாம். நான் தரும் எளிய புள்ளி விவரம் இது. ஒரு ரூபாய், அதன் வாங்கும்  மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று  புரிந்துவிடும். இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே  வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது. இன்று  ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.

யோசித்துப் பாருங்கள்.

- சுஜாதா.
-------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------

19.12.22

God என்றால் என்ன?


God என்றால் என்ன?_* 

In monotheistic thought, God is usually viewed as the supreme being, creator, and principal object of faith.

ஆங்கிலத்தில் D என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன.

Danger -அபாயம்
Death- மரணம்
Despair -மனமுறிவு
Discourage -மனத்தளர்ச்சி அடை
Disappointment -ஏமாற்றம்
Destruction - அழிவு
Debt - கடன்
Distress-துன்பம்
Disease -நோய்
Dead-மரணம்
Dim-தெளிவற்ற
Detained -தோல்வி
Depression - சோர்வு,கலக்கம்
Drunkard -குடிகாரன்
Down- இறக்கம்
Divide -பிரிவு
Deny-மறுத்தல்
Decay-அழுகுதல்
Deceive -ஏமாற்றுதல்
Decrease -குறை
Dash-மோதுதல்
Dull-அசதி
Duel -சண்டை
Dust-மாசு
Dispute-கலகம்
Dminish-குறைவு
Disturb -தொல்லை
Doubt-சந்தேகம்
Debit -செலவு
Dormant -உறக்க நிலை
Drown-முழ்குதல்
Ditch-பள்ளம்
Dowry -வரதட்சணை
Divorce -திருமணம் முறிவு
Dissolve -கலைத்தல்
Debar-தகுதி இழப்பு

மேற்கண்ட துன்பங்களைப் போக்குபவன்(Go-போ) தான் இறைவன் (God).

எனவே இறைவனை அனுதினமும்
வணங்கி நம் செயல்களைத் துவக்குவோம்.

படித்தேன்.
பகிர்ந்தேன்.
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.12.22

நம்முடைய காலக் கணக்கு


நம்முடைய காலக் கணக்கு

மகாபாரத வருடம் சனாதன தர்ம இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்*

கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்
கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்
கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்
கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்
கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...
அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!
*உண்மை இதுதான்*
 
ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...

நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..

*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?

சிதம்பரம்  நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து
மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி 
தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..

இன்னும் இது 
போன்ற எத்தனையோ கட்டிடகலை..

தொியாமல் கட்ட முடியாது.!

*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.

*Bachelor/ Master of Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. 

* கலாச்சாரமும், ஞானமும்.*

- இதைப் பகிர பெருமை கொள்கிறேன். 🙏
-----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.12.22

Lesson 79 Lesson on Money

Star Lessons

Lesson no 79

New Lessons

பாடம் எண் 79

பாடம்  Holding Money 

வாத்தியார், இரண்டில் சனி இருந்தால் அந்த ஜாதகனுடைய கை ஓட்டைக் கை - கையில் காசு தங்காதுஎன்று சொல்கிறர்களே - அது உண்மையா?”

அது உண்மையல்ல. வேறு அமைப்புக்களும் உள்ளன. அது தெரியாமல் ஓட்டைக் கை என்று சொல்வது தவறு 

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!

-------------------------------------------------

இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் குடியிருந்தால் அதாவது சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால்

அந்த வீடு பாதிப்பிற்கு உள்ளாகும். 

இரண்டாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள். 

பணத்திற்கான இடம் அது (House of finance)

குடும்ப வாழ்க்கைக்கான இடமும் அது(House of Family)

அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech) 

அதில் ஒரு இலாக்கா பாதிக்கப்படும் 

ஏன் அப்படி? சனி போன்ற தீய கிரகங்கள் இருந்தால் அந்த மூன்று இலாக்காக்களுமே பாதிப்பிற்கு உள்ளாகாதா? 

ஆகாது. அந்த வீட்டுக்காரன் முக்கியம். அவன் நன்றாக, வலிமையாக இருந்தால் சனியின் பாதிப்பை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு நன்மைகளைச்  செய்வான். அத்துடன் காரகனும் (authority) முக்கியம் 

பணத்திற்குக் காரகன் குரு

மனையாளுடன் கூடி வாழும் குடும்ப வாழ்க்கைக்குக் காரகன் சுக்கிரன்

அகட விகட சாமர்த்தியமான பேச்சிற்குக் காரகன் புதன்

இந்த மூவரில் யார் கெட்டிருந்தாலும் அந்த இலாக்கா சரிவர வேலை செய்யாது

ஆகவே இவை அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும்!

-------------------------------------------------------

ஒரு உதாரண ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள் 

இரண்டாம் வீட்டில் சனியும், கேதுவும் டென்ட் அடித்து உட்கார்ந்திருக்கிறார்கள். காசு தங்காது என்று சொல்லிவிடலாமா? முடியாது. ஜாதகத்திற்கு உரியவர் பெரிய செல்வந்தர். 

நிலைமை மாறியதற்கு என்ன காரணம்? 

அம்சம் முக்கியமில்லையா? அதையும் பாருங்கள். இரண்டாம் வீட்டதிபதி புதன் உச்சம் பெற்று அங்கே கொடியுடன் உட்கார்ந்திருக் கிறார்.அத்துடன் அதே புதன், ராசியில் திரிகோண வீட்டில் சுக்கிரனைக் கட்டிகொண்டு உட்கார்ந்திருக்கிறார். சுக்கிரன் ஜாதகருடைய 10ம் வீட்டதிபதி! தொழில் செய்து சுயசம்பாத்தியத்தில் செல்வம் சேர்ந்தது! 

ஜாதகர் யார் தெரிகிறதா?

நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களுடைய ஜாதகம் இது!

--------------------------------------------------------------

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.12.22

Lesson No.78 Arishta Yoga

Star Lessons

Lesson no 78

Date 10-10-2022

New Lessons

பாடம் எண் 78

பாடம் அரிஷ்ட யோகம்

(படுக்கவைக்கும் யோகம்) 

நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம் வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால்

அதன் பொருள் வேறு. 

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது. 

இவைகள் பொது விதிகள். தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய

ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே

பாருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப் பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!

----------------------------------------------------------

அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும். 

அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும். 

உதாரணத்திற்குப் பாலஅரிஷ்டம்என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்

+++++++++++++++++++++++++++++++++++++++++

அரிஷ்ட யோகம் 1

(அவயோகம்தான்)

தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு! 

1

லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில்

இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. 

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

2.

எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. 

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான். 

அன்புடன்,

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.11.22

Lesson 76 அறுவை சிகிச்சை (Surgery)

Star Lessons

Lesson no 76

New Lessons

பாடம் எண் 76 

தலைப்பு அறுவை சிகிச்சை ()Surgery)

 

அறுவை சிகிச்சை (Surgery) என்றால் யாருக்குத்தான் பயம் இல்லை? 

Surgery is an act of performing surgery may be called a surgical procedure, operation, or simply surgery. In this context, the verb operate means to perform surgery. 

எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது? பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்? யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம். அந்த நிலைமை பொருள் இல்லாதவனுக்கு வரக்கூடாது. ஏன் ஒருவருக்கும் வரக்கூடாது. இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு மேலே படியுங்கள். 

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி? 

அதை இன்று பார்ப்போம்! 

எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது. 

சனி லக்கினாதிபதியாகவும், எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கவும், அத்துடன் ஆறாம் அதிபதியைப் பார்த்துத் தொலைக்கவும் செய்யும் நிலையில், அப்படி அமர்ந்திருக்கும் சனியைச் செவ்வாய் தன் பார்வையில் வைத்திருந்தால், ஜாதகனுக்கு ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்படும். 

ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்தினால் பாதிக்கப்பெற்ற நிலையில் - அதாவது சேர்க்கை அல்லது பார்வையால் - பாதிக்கப்பெற்ற நிலையில், ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிடும். உதாரணம் ராகு, செவ்வாயின் பார்வையைப் பெற்று இருக்கும் நிலையில், ஜாதகனுக்கு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு முறை அறுவை சிகிச்சை நடக்கும். அது அவைகள் இருக்கும் இடத்தை வைத்து, அறுவை சிகிச்சைக்கு உட்பட இருக்கும் உடலின் அவயங்கள் மாறுபடும் 

அன்புடன்,

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!