
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"நடக்குமென்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்குமென்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்"
- கவியரசர் கண்ணதாசன்
+++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Navamsa: நவாம்சத்தைப் பற்றிய பாடம்!
அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் நவாம்சத்தைப் பற்றிய விரிவான பாடத்தை இன்று எழுதியிருக்கிறேன்.
நவாம்சத்தைப் பற்றிப் பலருக்கும் சில குழப்பங்கள் உள்ளன.
நவாம்சம் என்பது ராசியின் 1/9தாவது பகுதி.
Navamsa is the one by ninth division of a rasi chart. It is the magnified version of a rasi chart
ஒரு திரைப் படத்தில் நாகேஷ் ஜோக்காகச் சொல்வார்.” மேலாக ஊற்றினால் ரசம்: கலக்கி ஊற்றினால் சாம்பார்”
அதைப்போல மேலாகப் பார்ப்பதற்கு ராசி, கலக்கிப் பார்ப்பதற்கு நவாம்சம் என்று சொல்லலாமா?
சொல்ல முடியாது. ஜோதிட விற்பன்னர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்.
ராசிச் சக்கரம்தான் பிரதானமானது. நவாம்சச் சக்கரம் உபரியானது.
வைத்தியர் நம்மை சட்டையோடும் பரிசோதனை செய்வார். சட்டையைக் கழற்றிவிட்டும் பரிசோதனை செய்வார். அதுபோல ஜாதகத்தை சட்டையோடு பரிசோதனை செய்வதற்கு ராசிச் சக்கரம். ஜாதகத்தின் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வதற்கு நவாம்சச் சக்கரம்.
சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும்.
ஆனால், அதற்காக ஒவ்வொரு முறையும் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வது விவகாரமாக இருக்கும்.
ஆகவே எப்போது சட்டையோடு பரிசோதனை செய்ய வேண்டும், எப்போது சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை, பாடத்தில் விவரமாக எழுதியிருக்கிறேன்.
அதாவது ராசிச் சக்கரத்தின் உபயோகம் என்ன? நவாம்சச் சக்கரத்தின் உபயோகம் என்ன? என்பதை விவரமாக எழுதியிருக்கிறேன்.
அனைவரும் படித்துப் பயன்பெறுங்கள் அல்லது படித்து மகிழுங்கள். அது உங்கள் சாய்ஸ்!
-----------------------------------------------------------------
”வாத்தி (யார்) பாடம் எங்கே?”
”அது மின்னஞ்சல் பாடம்”
“ஏன் அது மின்னஞ்சல் பாடம்?”
“அதில் பல வில்லங்கமான தகவல்கள் உள்ளன. அதோடு அது மேல் நிலைப் பாடம். இங்கே எழுதினால், வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் என்னைப் பிறாண்டி எடுத்துவிடுவார்கள். ஆகவே அது மின்னஞ்சல் பாடமாகக் கொடுக்கப்பெற்றுள்ளது.”
“மின்னஞ்சல் பாடம் எப்போது வரும்?”
“மின்னஞ்சல் வகுப்பில் பதிவு செய்துள்ள மாணவக் கண்மணிகளில், A to P எனும் எழுத்தில் பெயர் உள்ளவர்களுக்கு முதலில் (வெள்ளிக் கிழமையன்று) வரும். R to Y எனும் எழுத்தில் பெயர் உள்ளவர்களுக்கு அடுத்த நாள் (சனிக்கிழமையன்று) வரும்”
“ஏன் அப்படி?
“ மின்னஞ்சல் வகுப்பறையில் சுமார் 700 மாணாக்கர்கள் உள்ளார்கள். கூகுள் ஆண்டவர் நாளொன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்கு மேல் அனுப்புவதற்கு தடா போட்டுள்ளார். ஆகவே இரண்டு பிரிவாக - 25 மணி நேர இடைவெளிக்குள் அவைகள் அனைவருக்கும் வந்து சேரும்!”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!