மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.19

காமராஜரும் கண்ணதாசன் வீட்டுச் சாப்பாடும்!!!!


காமராஜரும் கண்ணதாசன் வீட்டுச் சாப்பாடும்!!!!

"காமராசருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும்..

'கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா' என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார்.

அனேகமாக காமராசருக்கு 'நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு' என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.

அய்யாவின் உதவியாளர் வைரவன், தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராசருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும்.
எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராசருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார்.

ஒரு நாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு அய்யாவின் இல்லத்திற்குப் போனேன்.

அய்யா காமராசர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார்.

நான் போய் நின்றதும், 'என்ன?' என்று ஒற்றை சொல்லில் கேட்டார்.

'சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்' என்றேன்.

தன் உதவியாளர் வைரவனிடம், 'வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னார்.

திரும்பும்போது வைரவன், காமராசரிடம், 'சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’ என்று சொல்லிவிட்டார்.

அவ்வளவுதான் காமராசர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை.

'எங்கே படிக்கிறே?' என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

'பச்சையப்பன் கல்லூரியில்’ என்று சொன்னேன்.

'காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமேல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’ என்றார்.

நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார்.

'நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’ என்று சொன்னார்.

அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம்.

மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர்.

அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது.

அந்த காரும்கூட காமராசர் அய்யா கொடுத்ததுதான்."

- காந்தி கண்ணதாசன் பேட்டியிலிருந்து .
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.4.19

Astrology: ஜோதிடம்: *குளிகை என்றால் என்ன..?*


Astrology: ஜோதிடம்: *குளிகை என்றால் என்ன..?*

*தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?*

*இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன்

தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்...*

*யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம்* *கேட்டுக் கொண்ட இராவணன்

அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்...*

*அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார்...*

*உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன்...*

*ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர்...*

*இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர்...*

*தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்...*

*அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள்...*

*வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை...*

*இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டனர்...*

*இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். “இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும்...*

*அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும்.*

*நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்’’ என்றார்..*

*சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால், தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும் படி செய்தார்..*

*சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது...*

*குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தது...*

*குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளான்* *என்பதைக் குறிக்கும் வகையில் இடி, மின்னலுடன் அடர்மழை பெய்தது...*

*அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான்...*

*அவனே இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன். பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்ட்டான்...*

*இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம்* *எனப்படுகிறது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார்...*

*குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது...**குளிகை நேரத்தை, “காரிய விருத்தி நேரம்” என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார்...*

*அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து* *நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது...
*குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப் பட்டான்.*..
*குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம்...*

*சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்....*

*இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருந்து வருகிறது.*

*இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது.குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத்* *தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை...*

*குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை  எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்...*

*ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது ஆக தொட்டதைத் துலங்கச் செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்
-------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.19

Astrology: ஜோதிடம்: 26-4-2019 புதிருக்கான விடை!!!!


Astrology: ஜோதிடம்: 26-4-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்பருக்கு அவருடைய நாற்பதுவயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப்பிறகும் ஆகவில்லை. பெண் துணையின்றி வாழ்க்கையைக் கழிக்கும்படியாகிவிட்டது  ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!! அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!  என்று கேட்டிருந்தேன்

சரியான விடை:
ஏழாம் வீட்டுக்காரனான செவ்வாய் தன் சொந்த வீட்டில் வலுவாக இருந்தாலும், பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் சூரியன் மற்றும் சனி மறு பக்கம் ராகு
ஜாதகருடைய 23வது வயதில் ராகு திசை துவங்கி விட்டது. ராகு 8ம் வீட்டில் இருப்பதோடு, சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கிறார். துலா லக்கினத்திற்கு சூரியன் பாதகாதிபதி. ஆகவே அந்த திசை முழுவதும் ஜாதகருக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டது.
அத்துடன் ராகுவின் மேல் சனியின் பார்வை விழுவதைக் கவனியுங்கள். ராகுவை சனி கட்டிப்போட்டுவிட்டார். (சனியின் பார்வை திருமணத்தைத் தாமதப் படுத்தும்)
சந்திர லக்கினத்தில் இருந்து 7ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் பாவ சந்திப்பில் அமர்ந்து வலிமையின்றி இருக்கிறார்.
மேலும் அந்த வீட்டுக்குரிய புதன் ராசி மற்றும் நவாம்சத்தில் சனியுட.ன் கூட்டாக உள்ளார். அதனால் அவரும் பிரயோஜனப் படாமல் போய்விட்டார் அடுத்து வந்த குரு மகாதிசையும் ஜாதருக்கு அனுசரணையாக இல்லாமல் போய்விட்டது. ஆகவே ஜாதகருக்கு கடைசிவரை திருமணமே நடக்கவில்லை!!!!

புதிருக்கான பதிலை 10 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 3-5-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger Santhanam Salem said...
கேது 2ம் இடத்தில் // 2ம் இடத்தின் மீது துலா லக்கினதிற்கு யோகமில்லாத செவ்வாய் பார்வை // 2ம் இடம் கெட்டது
7ம் இடம் மற்றும் 7ம் இடத்து அதிபதி - பாபகர்த்தாரியோகம் // 7ம் இடம் கெட்டது
சந்திரன் மீது சனி பார்வை - புனர்பூதோஷம்
துலா லக்கினதிற்கு யோககாரகர்கள் சனி, புதன் சேர்க்கை இருந்தும் சனி, புதன் 6ல் மறைவு
துலா லக்கினதிற்கு யோகமில்லாதவர்கள் சூரியன், செவ்வாய், குரு // இதில் செவ்வாய் குரு (6ம் இடத்து அதிபதி) லக்கின பார்வை
ஆட்சி பெற்றுள்ள செவ்வாய் 7ம் இடத்து அதிபதி - காரகோபாவநாஸ்தி
துலா லக்கினதிற்கு நல்ல பலன்களைக் கொடுப்பவர் சுக்கிரன் துலா லக்கினதிற்கு 8ம் இடத்து அதிபதி மற்றும் 6ம் இடத்து அதிபதி குரு பார்வையோடு துலா லக்கினதிற்கு மாரக அதிபதி (killer) செவ்வாய் // லக்கின பார்வை
சந்தானம் சேலம்
Friday, April 26, 2019 8:49:00 AM
------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிருக்கான பதில்
காலமகள் ஏன் கண் திறக்க வில்லை
1. பொதுவாக ஒருவருக்கு திருமணம் கைகூட லக்கினம் , லக்கின அதிபதி , இரண்டாம் இடத்தில் அமர்ந்த கிரகம் மற்றும் இரண்டாம் இடத்து அதிபதி , மேலும் ஒன்பதாம் இடத்தில அமர்ந்த கிரகம் மற்றும் ஒன்பதாம் இடத்து அதிபதியும் முக்கிய காரணமாகிறார்கள்.
2. இவருக்கு லக்கினத்திலேயே மாந்தி அமர்ந்ததும் , லக்கின அதிபதி சுக்கிரன் நவாம்ச கட்டத்தில் எட்டில் மறைந்து மாந்தியுடன் கூட்டணி போட்டதாலும் லக்கினம் பலன் கிட்டவில்லை.
3, இரண்டாம் இடத்தில் கேது லக்கின கட்டத்தில் அமர்ந்து திருமண வாழ்வை தடை செய்தார். இரண்டு மற்றும் ஏழாம் இடத்து அதிபதி செவ்வாய் ஏழில் அமர்ந்து களத்திர தோஷத்தை தந்ததோடு மட்டுமின்றி லக்கினத்தை அவர் கட்டுப்பாட்டில் வைத்து திருமண பந்தம் ஏற்படுவதை தடுத்தார். ஏனென்றால் செவ்வாய் துலா லக்கினத்திற்கு உகந்த கிரகமல்ல. மேலும் செவ்வாய் வர்கோத்தம பலம் பெற்றும் தீமையை அதிக படுத்தினார்.
4. ஒன்பதாம் இடத்தில் குரு அமர்ந்தாலும் 6 மற்றும் 9 பரிவர்த்தனை பெற்று மறைவு ஸ்தான வேலையை மட்டும் செய்தார். திருமணத்தை நடத்த முடியவில்லை. ஒன்பதாம் இடத்து அதிபதி ஆறில் மறைந்து அணைத்து பாக்கியத்தையும் கிடைக்காமல் செய்தார். அதில் திருமணமும் ஒன்றாகும்.
5. துலா லக்கினத்திற்கு யோக காரனான சனியும் ஆறில் சூரியனோடு இணைந்து, மறைந்து பலன் தரவில்லை.
நன்றி.
ப. சந்திரசேகர ஆசாத்
MOB: 8879885399
Friday, April 26, 2019 9:16:00 AM
--------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா ,
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி திரிகோணத்தில் அமர்ந்துள்ளார்
2 .இரண்டில் கேது
3 .கேதுவின் நாலாம் பார்வை சுக்ரனின் மீது
4 .ஏழாம் அதிபதி செவ்வாய் எழில் அமர்ந்துள்ளார்
5 அனால் அவரே இரன்டுக்குரியவர்
6 .இரண்டாம் இடத்திற்கு ஆறில்
இந்தகாரணகளினால் திருமணம் நடை பெறவில்லை
7 .மேலும் காரகன் பாவநாசம் ஏன்பதிற்கிணங்க அயன சயன போக அதிபதி புதன் பனிரெண்டாம் வீட்டை தன பார்வையில் வைத்துள்ளார்
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, April 26, 2019 12:03:00 PM
----------------------------------------
4
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 12 ஏப்ரல் 1966ல் இரவு 8 மணி 21 நிமிடம் போல் பிற்ந்தவர்.பிற்ந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகரின் திருமணத்திற்கான 7ம் இடம் செவ்வாயால் அக்கிரமிக்கப்பட்டும், இரண்டு பக்கமும் சனி, சுரியன் ராகுவால் சூழப்பட்டுள்ளது. குடும்பதானமான் 2ல் கேது.7ம் இடத்திற்கு 23 பரல் மட்டுமே. 7ம் அதிபதிக்கு செவ்வாய் சுய வர்க்கம் 2 பரல் மட்டுமே. 40 வயது வரை ராகு தசா.இவையெல்லாம் அவருக்குத் திருமணம் ஆகாததற்கு காரணங்கள்..
Friday, April 26, 2019 12:05:00 PM
--------------------------------------
5
Blogger Unknown said...
வணக்கம் ஐயா. 7ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சிபலம் பெறுவது முதல் தவறு. இது சில நேரம் திருமண வாழ்க்கை சரியாக அமைவதில்லை அல்லது திருமணம் அமைவதேயில்லை.இவர் இங்கு இரண்டாம் வீட்டில் உள்ள கேதுவை பார்க்கிறார்.7ஆம் வீடு பாபகர்த்தரி தோசத்தில் உள்ளது. புத்திரஸ்தானாதிபதி சனி ஆறில் மறைவது அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.நன்றி
Friday, April 26, 2019 12:10:00 PM
--------------------------------------
6
Blogger Deepika said...
1. திருமணத்தை நடத்தி வைக்கும் 5ஆம் அதிபதி சனியும், 9ஆம் அதிபதி புதனும் 6ல் மறைந்துள்ளது.
2. அதனுடன் துலாம் லக்ன பாதகாதிபதி சூரியன் சேர்க்கை வேறு உள்ளது.
3. இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் கேதுவின் ஆதிக்கம் உள்ளதால் குடும்பம் அமைய தடை
4. துலாம் லக்னத்திற்கு பாவியான குரு பாக்ய ஸ்தானத்தில் நின்று திருமணத்தை தடை செய்தார்.
ஆகவே 40 வயது வரை நடைபெற்ற சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு திசைகள் திருமணத்தை தரவில்லை.
40 வயதுக்கு மேல் நடந்த குரு, சனி திசையும் திருமணத்தை தரவில்லை.
Friday, April 26, 2019 10:44:00 PM
-------------------------------------------
7
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. துலாம் இலக்கின ஜாதகம்.
2. சூரிய தசை 05-06-23
சந்திரன் தசை 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை 7 ஆண்டுகள்
இராகு தசை 18 ஆண்டுகள்
இவ்வாறு 15வயதுக்கு மேல் 40 வயது வரை சாதகமற்ற தசைகள் நடைபெற்றதே
திருமணம் நடைபெறாமைக்கு காரணமாகும்.
3. 2 மற்றும் 7ஆம் இட அதிபதி அதாவது குடும்ப மற்றும் களத்திர ஸ்தான அதிபதியான செவ்வாய் கேந்திர மற்றும் ஆட்சி பலம் பெற்றாலும் ஏழாம் இடத்தில் செவ்வாய் சாதகமான பலன் தராது.
4. மேலும் ஏழாம் இடமும், அவ்விடத்திற்கு அதிபதியும் பாப கர்த்தாரி யோகத்தால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஏழாம் இடத்தின் மீது மாந்தியின் பார்வையும் பாதிக்கிறது.
5. இரண்டு எட்டில் உச்சமான கேது-இராகுவின் பாதிப்பு.
6. களத்திராதிபதி செவ்வாய் கேதுவின் சாரத்தில், களத்திர காரகன்
சுக்கிரன் எட்டாம் இட இராகுவின் சாரத்தில் பாதிப்படைந்துள்ளனர்.
7. 4,5இக்குடையோன் சனியும் ஆறில் மறைந்ததால், மனைவியின் சுகம், புத்திர பாக்கியம் மறைந்தது. ஐந்தோன் ஆறில் மறைந்ததால் சுக்கிரனும் பலப்பட வில்லை.இவ்விதமாக களத்திரம் கடுமையான பாதிப்புகளை அடைந்ததால் அன்பருக்கு 40 வயது வரை திருமணம் நடைபெறவில்லை. அதன் பின்னர் வந்த குரு தசை 3,6 ஆம் ஆதிபத்தியம் பெற்றதால் அதன் பின்னரும் திருமணம் நடைபெறவில்லை.
பெரியோரே, பிழைகள் இருப்பின் பொருத் தருளுக .
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, April 27, 2019 5:03:00 AM
--------------------------------------
8
Blogger Shanmugasundaram said...
Good evening sir the above horoscope person born on 12/04/1966 8.20pm Coimbatore Thula lagnam lagna lord in 6th house seventh house lord and second house lord mars is hemmed between two malefic planets and from 22onwards rahu dasa begins
till upto 40 rahu in 8th house hence marriage denied after that Jupiter dasa started on 40 here guru is functional malefic to thula lagna hence there is no chance of marriage upto 56
Saturday, April 27, 2019 5:25:00 PM
------------------------------------------------
9
Blogger அய்யனார் said...
ஏழாம் இடம் உச்சமாகி சுக்கிரன் வீட்டை பார்ப்பதால் ஆண்மை இல்லாதவர் அவர்..இரண்டில் கேது செவ்வாய் வீட்டில் இதனை உறுதிபடித்துகிறது..5 க்கு உடையோன் ஆறில் மறைவு ...மேலும் உறுதிபடுத்துகிறது..
Saturday, April 27, 2019 9:23:00 PM
-------------------------------------------
10
Blogger Ram Venkat said...
"ஜோதிடப் புதிர்: காலமகள் ஏன் கண் திறக்கவில்லை?"
ஆசிரியருக்கு வணக்கம்.
துலாம் லக்கினம், தனுசு ராசி ஜாதகர். அன்பருக்கு அவருடைய நாற்பதுவயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப்பிறகும் ஆகவில்லை. பெண் துணையின்றி வாழ்க்கையைக் கழிக்கும்படியாகிவிட்டது ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
1) குடும்ப ஸ்தானத்தில் உச்ச கேது அமர்ந்துள்ளார்.
2) குடும்பாதிபதியும், களத்திராதியுமான செவ்வாய் 7மிடத்தில் அமர்ந்தாலும், பாப கர்த்தாரியின் பிடியிலுள்ளார்.
3) லக்கினாதியும், களத்திரகாரகனுமான சுக்கிரன் 5ல் அமர்ந்து குருவின் பார்வை பெற்றுள்ளார். அவர் ஜாதகருக்கு கஷ்டங்களை தாங்கும் மன வலிமையை கொடுத்தார்.
4) ஜாதகருக்கு 22வயதிற்கு மேல் வந்த ராகு திசை 40 வயது வரை நடை பெற்றது. அதற்கு பிறகு வந்த 6ம் அதிபதி குரு தசையும் அவருக்கு உதவவில்லை.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு திருமண பாக்கியம் கிடைக்கவில்லை.
இரா. வெங்கடேஷ்.
Saturday, April 27, 2019 10:50:00 PM
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.4.19

Astrology: ஜோதிடப் புதிர்: காலமகள் ஏன் கண் திறக்கவில்லை?


Astrology: ஜோதிடப் புதிர்: காலமகள் ஏன் கண் திறக்கவில்லை?

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அன்பருக்கு அவருடைய நாற்பதுவயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப்பிறகும் ஆகவில்லை. பெண் துணையின்றி வாழ்க்கையைக் கழிக்கும்படியாகிவிட்டது  ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 28-4-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:

=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.4.19

கவுசிகரின் கதை!!!!!


கவுசிகரின் கதை!!!!!

கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,.....

எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள்.

ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம்தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே "சுளீர்' என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை.

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'......

ஓர் கண்ணோட்டம்.....

ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்......

தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது.

பொறுமையாக இதைப்படியுங்கள்.

கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார்.

அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது.

கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது.

ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது' என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார்.

அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது.ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார்.

அவள் "திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள்.

அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய வேண்டி வந்தது.

அன்புடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்டு பின்னர் திண்ணையில் பசியுடன் காத்திருக்கும் ரிஷியின் நினைவு வந்து, உணவுடன் வாசலுக்கு ஓடிவந்தாள்.

கவுசிகனுக்கோ கோபமான கோபம்.

கடுங்கோபத்துடன் தம் தபோ வலிமை தெரியட்டும் என்ற நினைப்பில் எரித்து விடும் எண்ணத்தில் அந்தப் பெண்ணை நோக்கினார்.

அவளோ அலட்சியமாகச் சிரித்தபடி "என்ன.. சாமியாரே! என்னை என்ன கொக்கு என்று நினைத்துவிட்டீரா? உம் கோபத்தில் எரிந்து போவதற்கு?' என்று கேலி பேசினாள்.

கவுசிகன் நடுங்கி ஒடுங்கிப் போய் விட்டார்.

அவள் மேலும் சொன்னாள்.

"நான் குடும்பப் பெண். என் கடவுள் என் கணவர் தான்.அவருக்கான பணிவிடைகளைச் செய்தபின் தான், கடமைகளை முடித்தபின் தான், வேறு எதிலும் நான் ஈடுபட முடியும்.நீர் பெரிய தபஸ்வியாக இருக்கலாம்.. ஆனால், குடும்பப் பெண் குடும்பக் கடமைகளைவிட்டு விட்டு சாமியாருக்குப் பணி விடை செய்ய வேண்டுமா என்ன?
கடமைகள் முடிந்த பிறகு வேண்டுமானால் செய்ய முடியும்' என்றாள்.

இன்று #எத்தனைபெண்கள் #இந்தஉண்மைகளைப் #புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதே என் வருத்தம்.

வீட்டில் குழந்தைகள் தாய், தகப்பன், மாமன், மாமி, கணவன் யாரையும் கவனிக்காது வீட்டில் போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஆஸ்ரமங்களில் போய் கூட்டிப் பெருக்கி பூக்கட்டி, அந்தச் சாமியார் பின்னாலும், இந்தச் சாமியார் பின்னாலும் அலைந்து, பக்திப் பயிர் வளர்ப்பது சகிக்கக் கூடியதா என்ன?

கடமைகளைச் செய்வதுதான் உண்மையான வழிபாடு என்றும், சாமியாரை விடு.. மாமியாரை மதி' என்று கன்னத்தில் அறைகிற மாதிரி சொல்லவில்லையா ?
இந்த மகாபாரதக் கதை!

கவுசிகனுக்குப் பெண் எரியாதது ஆச்சரியம். அதைவிட தான் காட்டில் கொக்கை எரித்தது எப்படித் தெரிந்தது என்று பெரும் ஆச்சரியம்!

காட்டில் தவம் செய்கிறவன் பெறும் ஸித்தியை, வீட்டில் கடமை ஆற்றும் பெண்ணும் பெற்று விடுகிறாள் என்பதே அந்தப் பெண்ணின் பதில்.

அவள் மேலும் சொன்னாள், நீர் வேதங்களைக்கற்றும் தவம் புரிந்தும் தர்மம் இன்னது என்று கற்று அறிந்தவர் தானே ..ஆனல் உமக்கு எது தர்மம் என்று தெரியவில்லை ஆகையால் மிதிலைக்குப்போய் அங்கு தர்மவியாதர் என்ற உத்தமரிடம் தர்மத்தை அறிந்து கொள்ளும், என்று அனுப்பி வைத்தாள்.

மிதிலை வந்து தர்ம வியாதரைத் தேடிய போது கவுசிகனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம்,தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரர்.இறைச்சி வணிகர்.

கவுசிகன் அருவருப்பை மறைத்துக் கொண்டு அவர்முன்போய் நின்றதும்,
முனிவரே.. உம்மை அந்தக் கற்பரசி அனுப்பி வைத்தாளா?'' என்று கேட்டதும் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

கொஞ்சம் பொறுங்கள்.மீதமான இறைச்சி யையும் விற்றுவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி கவுசிகனை உட்கார வைத்தார்.

பின்னர் வீடு போனதும்,தம் தாய் தந்தையருக்குச் சகல பணி விடைகளையும் செய்து அவர்கள் சந்தோஷமடையும்படி, கடமைகளாற்றிவிட்டு வந்து கவுசிகனிடம் பேசத் தொடங்கினார்.

வேதியரே! என் தொழில் கண்டு நீர் வெறுப்படைந்தீர்.இது வழிவழியாக வந்த தொழில்.நான் உயிர்களைக் கொல்வதில்லை. மற்றவர்களால் மரணமடைந்த விலங்குகளின் புலாலை ஈஸ்வர அர்ப்பணமாக விற்கிறேன்.

இல்லறத்தானுக்குரிய உபவாசம், அளவான பிரம்மச்சர்யம் மேற்கொள்கிறேன்.மனத்தாலும் எவருக்கும் தீங்கு செய்யேன்.

எனக்குத் தீங்கு செய்தவருக்கும் நான் தீங்கிழைப்பதில்லை. அறிந்தும் அறியாதும் செய்த சகல பாவங்களுக்காகவும் கடவுளிடம் நாள்தோறும் மன்னிப்பு கேட்பேன்,'' என்று தர்மத்தை விளக்கினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ""இதோ உள்ள என் தாய் தந்தையர் எனக்குக் கண்கண்ட கடவுள். இவர்கள் தான் என் வேதம். என் யாகம். அவர்கள் முதுமை காரணமாக என்னைச் சிரமப்படுத்தினாலும், இன்னுரை கூறி அவர்களுக்கேற்ற உணவளித்து உபசரிக்கின்றேன். இவர்கள் ஆசியால் எனக்குச் சகலசித்திகளும் உண்டாகிவிட்டன.

 ஆனால், நீர் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு தவம் செய்யப் போய்விட்டீர். உம் பெற்றோர் குருடர்களாகி தடுமாறி துன்புறுகிறார்கள்.
அவர்கள் மேலும் தவிக்காதபடி போய் உம் கடமையை ஆற்றுங்கள்,'' என்று கூற கவுசிகன் நாணத்துடன் புறப்பட்டார்.

இந்தக்கதையை இளம்பிள்ளைகள் ஒரு முறைக்கு நூறுமுறை படிக்க வேண்டும்.

பெற்றோரைக் கடுஞ்சொல் பேசி ஏசி நோகடித்து விட்டு முதியோர் இல்லங்களில் அநாதை போல அலைய விட்டு விட்டு கோயில் கோயிலாகப் போய் கும்மியடிக்கிறார்கள்.

இந்தப்பக்தி #வெறும் #வேஷமில்லையா?

இன்று எத்தனை சாமியார்களின் கார்ப்பரேட் கம்பெனிகளில் உயர வேண்டிய இளைஞர்கள் வேலைக்காரர்களாக, இலவச (பரவச!) ஊழியர்களாக வலம் வருகிறார்கள் தெரியுமா?

மரணத்திற்கு முன்பே பெற்றோர் வயிற்றில் கொள்ளி வைத்துவிட்டு பகவான்கள் பின்னாலும், அல்ப ஆனந்தாக்கள் பின்னாலும் ஆடிப்பாடிக் கொண்டு அலையும் அசட்டு ஆத்மாக்களைக் கண்டு என் நெஞ்சு பதறுகிறது!....

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும்.இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல,
உங்கள் இலக்கினை அடையும் வரை.

கோவிலில் பெரியவர் சொல்ல சொல்ல கேட்டு பிடித்தது எனக்கு.!!!!!!
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.4.19

வெய்யில் காலமும் வேண்டாத ஐஸ் வாட்டரும்!!!


வெய்யில் காலமும் வேண்டாத ஐஸ் வாட்டரும்!!!

ஐஸ் வாட்டர் உஷார் ஆளையே கொல்லும்... ஜாக்கிரதை...

வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது.

40 டிகிரி செல்சியஸ் அல்லது 105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.

அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.

வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்தி, வீட்டுக்குள் நிலவும் வெப்பத்துக்கு நமது உடலை தயார்செய்துவிட்டு பிறகுதான் இயற்கையான குளிர் நீரிலோ, வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரை குடிக்கலாம்.

நல்ல உறுதிவாய்ந்த உடலுடைய நபர் வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். கொதிக்கும் தனது உடலை உடனடியாக குளிர வைக்க விரும்பி குளிர்நீர் ஷவரில் குளித்தார். உடனே, அவருடைய தாடைகள் இறுகிக்கொண்டன. வாயை திறக்க முடியவில்லை. நல்லவேளை ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள்.

கைகால்கள் முடங்கி, உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் அவர் இருக்கிறார் என்று ஒரு டாக்டர் கூறுகிறார்.

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் போட்ட வாட்டரை குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். ஐஸ் வாட்டரை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் இப்போது பரவி வருகிறது.

அனைவரிடமும் இதைப் பகிருங்கள்!!!!
-------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.4.19

சென்னையின் வரலாறைத் தொகுத்த மாமனிதர்!!!!


சென்னையின் வரலாறைத் தொகுத்த மாமனிதர்!!!!

*சென்னை வரலாறைத் தொகுத்த எஸ்.முத்தையா காலமானார் - மாநகரின் ஒவ்வொரு இடமும் முத்தையாவின் நினைவுகளை சேர்த்தே இனி சுமக்கும்*

உலகின் 30வது பெரிய மாநகரமாக கருதப்படுகிறது சென்னை. இந்த சென்னை மாரகருக்கான வரலாறு, அதன் தோற்றம், வளர்ச்சி போன்றவை குறித்த சரியான பதிவுகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், சென்னை மாநகரின் வரலாறைக் காலமுறைப்படி தொகுத்த வரலாற்றுப் பதிவர்தான் எஸ். முத்தையா. அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்கு பின் சென்னை மயிலாப்பூரில் இன்று (திங்கட்கிழமை -ஏப்ரல் 22) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 ‘மெட்றாஸ்’ (சென்னையின் அந்நாளைய பெயர்) மாநகரின் ஆண்களும் பெண்களும் செய்த சாதனைகளையும், அவர்கள் எதில் முன்னோடிகளாக விளங்கினார்கள் என்பதையும் தேடித்தேடி பெருமை பூரிக்க முத்தையா பதிவு செய்தார். இன்று சென்னை தினம் என ஆகஸ்ட் மாதம் நாம் கொண்டாட காரணமாக இருந்தவரே இந்த முத்தையா தான்.

சென்னை மாநகரின் ‘முதல்முறை’ சாதனைகளையும் அவர் விடவில்லை. இப்போது சமூகவலைதளங்களில் சென்னையைப் பற்றி பகிரப்படும் பல்வேறு தகவல்களை மிகுந்த சிரமப்பட்டு சேகரித்து, சரிபார்த்து, யாராவது கூடுதல் தகவல்களைத் தந்தால் அதையும் சேர்த்து, ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் அதையும் செய்து ஒளிரச் செய்தார் முத்தையா.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நகருக்கென்று தனி வரலாறு எழுதப்படவில்லையே என்று கவலைப்பட்ட முத்தையா அதையே மிகச் சிறப்பாக புதிய பாணியில் காலப்போக்கில் செய்துமுடித்தார்.

பள்ளத்தூரில் சுப்பையா செட்டியார்-சிட்டாள் ஆச்சி இணையரின் மகனாக 1930 ஏப்ரல் 13-ல்பிறந்தார் முத்தையா. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இலங்கையின் கொழும்பு நகர முதல்வராக இருந்த என். எம். சுப்பையா செட்டியார் என்பவரின் மகன்தான் இந்த முத்தையா. அன்றைய சிலோன் (இலங்கை) மற்றும் அமெரிக்காவில் இவர் கல்வி பயின்றார்.

சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய முத்தையா, ‘டைம்ஸ் ஆஃப் சிலோன்’ நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்தார்.

அங்கு 17 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு 1968-ல் இந்தியா திரும்பி சென்னையைத் தனது வாழிடமாகக் கொண்டார். டிடிகே நிறுவனத்தின் ‘டிடிமேப்ஸ்’ என்ற வரைபட நிறுவனத்தில் பணியில் அமர்ந்தார்.

1981-ல் ‘மெட்ராஸ் டிஸ்கவர்ட்’ என்ற புத்தகத்தை எழுதினார். சென்னைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சென்னையில் உள்ள முக்கிய இடங்கள், நிறுவனங்கள், நினைவுச் சின்னங்கள், கலைக்கூடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள் குறித்து மிகச் சுவையாகவும் சுருக்கமாகவும் செறிவாகவும் அவர் எழுதியவைஎதிர்கால நகர வரலாற்றாசிரி யர்களுக்கு வழிகாட்டி நூல்களாகும்.

‘மெட்ராஸ் டிஸ்கவர்ட்’ சுற்றுலாப் பயணிகளால் மட்டுமல்ல, நகரவாசிகளாலும் வாங்கப்பட்டு விரும்பி படிக்கப்பட்ட அதிகம் விற்ற நூலாகும். அது பல பதிப்புகளையும் கண்டது.

சென்னை மாநகரைத் தலைமையிடமாகக் கொண்ட வணிக நிறுவனங்கள், அவற்றை நிறுவிய தொழிலதிபர்கள் ஆகியோரைக் குறித்து படிப்போர் வியக்கும் வண்ணம் எழுதினார்.

1991-ல் ‘லோகவாணி-ஹால்மார்க் பிரஸ்’ உதவியுடன் ‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ என்ற மாதமிருமுறை இதழைக் கொண்டுவந்தார்.

அதில் நகரின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் இடம் பெற்றன. 1996-ல்பணமுடையால் தடுமாறிய அப் பத்திரிகை ‘சன்மார்’ குழுமத்தின் என். சங்கர் உதவியால் புத்துயிர்பெற்றது. நகரின் பெரு நிறுவனங்கள் அதற்கு உதவின. 2016-ல் அப்பத்திரிகை வெள்ளி விழா கண்டது.

1999-ல் இந்து பத்திரிகையில் திங்கள்கிழமை தோறும் அவர் எழுதத் தொடங்கிய ‘மெட்ராஸ் மிஸலனி’ வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவர் எழுதியதற்கும் மேலதிகமாக வாசகர்களிடமிருந்து வந்த தகவல்களை, ‘தபால்காரர் கதவைத் தட்டியபோது…’ என்ற பொருளில் கூடுதலாகத் தந்தார். அதுவும் 2009-ல் பத்தாண்டுகளை நிறைவு செய்தது. ஒரு செய்தித்தாளில் அதிக ஆண்டுகள் தொடர்ந்த வாராந்தரப் பகுதியாக அது திகழ்ந்தது. 970 பகுதிகள் அதில் இடம் பெற்றுவிட்டன.

2004 ஆகஸ்டில் ‘மெட்ராஸ் டே’ என்ற நகரின் நாளை, முத்தையா தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடத் தொடங்கினார். அது அப்படியே மெட்ராஸ் வாரம்,மெட்ராஸ் இருவாரம், மெட்ராஸ்மாதம் என்று விரிவடைந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கொண்டாட்டங்களில் தாங்களாகவே வந்து இணைந்தது இதன் தனிச்சிறப்பு. வாசிப்பாளர்கள் வந்து பங்கேற்க, ‘மெட்ராஸ் புக் கிளப்’ என்ற அமைப்பையும் அவர்தான் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகரின் தனிச்சிறப்பு மிக்க குடிமகனாக முத்தையா விளங்கினார். நகரின் பெருமையை தான் உணர்ந்ததுடன் மற்றவர்களையும் உணரச் செய்தார்.

முத்தையாவுக்கு இரண்டு மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள், ஏராளமான எழுத்தாள நண்பர்கள், வாசக அன்பர்களைக் கொண்ட பெரிய குடும்பம் இருக்கிறது. சென்னை மாநகரின் ஒவ்வொரு கட்டிடமும், நினைவகமும் முத்தையாவின் நினைவுகளையும் சேர்த்தே இனி சுமக்கும்.
-----------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.19

Astrology: ஜோதிடம்: 19-4-2019 புதிருக்கான விடை!!!!



Astrology: ஜோதிடம்: 19-4-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்பர் வருத்தப்படும்படி இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார் (அல்ப ஆயுள் என்று வைத்துக் கொள்ளுங்கள்)
ஜாதகப்படி அதற்கு (இளம் வயதிலேயே இறந்ததற்கு) என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!  என்று கேட்டிருந்தேன்

சரியான விடை:
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் ஆறாம் வீட்டில் சிக்கியதோடு. பாபகத்தாரி யோகத்திலும் சிக்கி கெட்டுப்போய் உள்ளார். ஒரு பக்கம் கேது, மறுபக்கம் செவ்வாய்.
இது அல்ப ஆயுசு ஜாதகம். அல்ப ஆயுசிற்கான எல்லா அம்சங்களும் ஜாதகத்தில் உள்ளன.
1. இரண்டு கேந்திரங்களில் தீய கிரகங்கள். 4ல் சனி, 7ல் செவ்வாய்.
2. லக்கினாதிபதியைவிட சனீஷ்வரன் வலுவாக (strong) உள்ளான்
3. சனியின் பார்வை லக்கினத்தின் மேல், அத்துடன் லக்கினாதிபதியின் மேல். சனி உச்சம் பெற்றுள்ளான்
4. செவ்வாயின் பார்வையும் லக்கினத்தின் மேல்.
5. எந்த சுபகிரகமும் கை கொடுத்து உதவக்கூடிய நிலையில் இல்லை. சந்திரன், குரு, சுக்கிரன், புதன் என்று நான்கு சுபக்கிரகங்களும் ஆறாம் வீட்டில் மொத்தமாக சிக்கிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அவை அனைத்திற்கும் பாபகர்த்தாரி யோகம் வேறு.
ஆகவே ஜாதகர் அல்ப ஆயுளில் போய்ச் சேர்ந்து விட்டார் (இறைவனடிக்குத்தான்)

புதிருக்கான பதிலை 9 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 26-4-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger Ramanathan said...
Lord of 7th house Saturn is exalted in 4th house aspecting both lagna(as 12th aspect) and lagna lord Moon (as 3rd aspect)
Lord of 7th house Saturn, as life shortening agent, is more powerful compared to Lord of 8th house Saturn
Lord of 2nd house Sun is also life shortening agent.
The unfortunate end could have happened during Sun Dasa itself, during 7.5 saturn immediately after birth.
If not in Sun Dasa, then could possibly have happened during Guru Dasa
Friday, April 19, 2019 9:16:00 AM
-----------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
இளம் வயது மரணத்திற்கான காரணங்கள்
கடக லக்கினம் 1 டிகிரியில் நின்றது , மேலும் லக்கின அதிபதி சந்திரன் 6 இம் இடத்தில் அஸ்தங்கதம்
ஒருவர் மரணத்திற்கு 2 மட்டும் 8 ஆம் இடத்தில் நின்ற கிரகங்கள் தான் காரணமாகும் .
இவரின் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் நவாம்சத்தில் நின்ற ராகு தசை சனி புக்தியில் மரணம் அணுகியது. ஏனென்றால் சனி 8 ஆம் அதிபதியும் மட்டும் உச்சமாக உள்ளதால் அவ்வாறு நடந்தது. கடக லக்கினத்திற்கு சனி உகந்த கிரகமல்ல. ஆதலால் ராகு தசை சனி புக்தியில் சூரியன் அந்தரத்தில் மரணம் அடைந்தார். சூரியன் இவருக்கு மாரகன் ஆவார்.
நன்றி
ப . சந்திரசேகர ஆசாத்
MOB: 8879885399
Friday, April 19, 2019 12:51:00 PM
----------------------------------------------
3
Blogger அரியபுத்திரன் நடராஜன் said...
ஐயா,
19-04-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் கடக லக்ன ஜாதகம். லக்னாதிபதி சந்திரன் ஆறில் மறைவு. லக்னாதிபதியுடன் பாதகாதிபதி சுக்கிரன் சேர்க்கை. எனவே, லக்னம் கெட்டுவிட்டது. சரி லக்னம் கெட்டால் ராசியை பாருங்களேன். ராசி தனுசு. ராசியாதிபதி குருவுடன் ராசிக்கு பாதகாதிபதி புதன் சேர்க்கை. ராசியும் சரியில்லை.
அஷ்டமாதிபதி சனி உச்சம். லக்னத்தைக் காட்டிலும் அஷ்டம ஸ்தானம் பலம் பெற்ற ஜாதகம். போதாதற்கு பாதக ஸ்தானத்தில் ராகு (விஷம்).
ஜாதகருக்கு ராகு தசையில் மரணம் ஏற்பட்டிருக்கும்.
அ.நடராஜன்
சிதம்பரம்.
Friday, April 19, 2019 4:56:00 PM
----------------------------------------------
4
Blogger classroom2007 said...
Horoscope lesson- 04-19-2019
வணக்கம்.
26 நவம்பர் மாதம் 1984, மாலை 10.25 மணிக்கு, உத்திராடம் நட்சத்திரம் தனுர் ராசி கடக லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகர் பிறந்தார்.
ஜாதகத்தில் 6 ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் பார்வை விழுந்தால், அது பாலரிஷ்ட தோஷம் ஆகும். ---- விதி.
கடக லக்கினம், லக்கினாதிபதி சந்திரன் 6ம் வீட்டில், 6ம் வீட்டு அதிபதி குருவுடன் கூட்டு சேர்ந்தும், பாதகாதிபதி சுக்கிரனுடனும் சேர்ந்து, 3ம் வீட்டு அதிபதி புதனுடனும் சேர்ந்தும் ,8ம் வீட்டு அதிபதி உச்சமான சனியின் 3ம் பார்வையில் உள்ளார். அல்ப ஆயுளில் மரணம் ஏற்பட்டது.
கடக லக்கின சரராசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும்.
புதன் 3ம் வீட்டு அதிபதி. 3ம் வீடு 8ம் வீட்டில் இருந்து 8ம் வீடு.
இந்த ஜாதகத்தில் 11ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 6ல் அமர்ந்து சனியன் 3ம் பார்வையில் உள்ளார் . 11ம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார்.
சந்திரனும் புதனும் 6ம் வீட்டில் சேர்ந்து இருந்தால் ஜாதகர் மரணம் விஷத்தால் ஏற்படும் .
6ம் வீடு பாபகர்தாரி தோஷம் ஒரு பக்கம் செவ்வாய் மறு பக்கம் கேது. அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
சந்திர மகா தசை - 5 வயது (1989) முதல் 15 வயது (1999) வரை.
7ம் வீட்டு மாரக அதிபதி உச்ச சனி (6 பரல்) 4ல் அமர்ந்து 3ம் பார்வையால் 6ல் உள்ள சந்திரனை பார்க்கிறார். சந்திர தசை சனி புக்தியில் (1994) 10 வயதில் அல்ப ஆயுளில் மரணம் ஏற்பட்டது
2ம் வீட்டு அதிபதி சூரியன் 5ல் அமர்ந்து, 11ம் வீட்டில் அமர்ந்து உள்ள ராகுவின் பார்வையில் உள்ளார். 11ம் வீடு பாதக ஸ்தானம்.
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி உச்சமான செவ்வாயின் 7ம் பார்வை லக்கினத்தின் மீது உள்ளது. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். உச்சம் பெற்ற செவ்வாய் பலவிதமான நன்மைகளைச் செய்யக்கூடியவன். அடுத்து வருகிற மகா தசை செவ்வாய். அதற்குள் ஆயுள் முடிந்து விட்டது.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, April 20, 2019 12:20:00 AM
----------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 26 நவ‌ம்பர் 1984ல் இரவு 10.30 மணி அளவில் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
1. லக்கினாதிபதி சந்திரன் நோய் ஸ்தானமான 6ம் இடத்தில் மறைந்தது பிறக்கும் போதே உடல் நிலை சரியில்லாத நிலையைக் காட்டுகிறது.
2. உடல் ஆரோக்கியதிற்கு முக்கியமான சூரியன் கேதுவால் கெட்டார்.
3.ஆயுள் ஸ்தானாதிபதியும்(எட்டாம் இட‌ அதிபதி), ஆயுள் காரகனுமான சனி பகவான் 4ல் அமர்ந்து உச்சமானாலும் சூரியனால் எரிக்கப்பட்டு அஸ்தங்கதம் ஆனார்.
4.லக்கினாதிபதி சந்திரன், ராசியதிபதி குரு, 12க்கு அதிபன் புதன் அனைவரும் ஆறில் மறைந்தது.
5. மேற்கண்ட கிரகங்கள் எல்லாம் சனி செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டன.
6.துவக்க நிலை தசா சூரியன் ,சந்திரன் அவர்களுடைய‌ வலுவிழந்த நிலையால் பயனில்லை.செவ்வாய் தசா (யோககாரன் தசா) சிறிது மூச்சு வாங்கிக் கொண்டிருக்கலாம்.ஆனால் தொடர்ந்து வந்த ராகு தசா படுத்தி எடுத்திருக்கும்.
ராகு தசா குரு புக்தி அல்லது சனிபுக்தி காவு வாங்கியிருக்கும், 30 வயதிற்குள்.
7. நாடி சோதிட விதிகளின் படி இவருக்கு 40 வயதிற்கு மேல் இல்லை.
kmrk1949@gmail.com
Saturday, April 20, 2019 5:57:00 AM
--------------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. கடக இலக்கின ஜாதகம்.
2. இலக்கினாதிபதி சந்திரனும், இலக்கினமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆம், இலக்கினாதிபதி ஆறாம் இடத்தில் அமர்வு. அவருடன் 3,12ஆம் இட அதிபதி புதன், ஆறாம் இடத்தோன் குரு, பாதகாதிபதி சுக்கிரன் ஆகியோரின் கூட்டணி.
3. மற்றும் அட்டமாதிபதி சனியின் உச்ச பார்வை சந்திரன் மீதும் இலக்கினத்தின் மீதும் உள்ளது. மேலும் செவ்வாய், இராகு இவர்களின் பார்வையும் இலக்கினத்தின் மீது உள்ளது.
4. சந்திரன் பாப கர்த்தாரி யோகத்தால் சூழப்பட்டு பாதிப்படைந்துள்ளார்.
5. அட்டமாதிபதி சனி நான்கில் உச்சம் பெற்றாலும், நான்காம் இடத்தோன் ஆறில் மறைந்ததால் ஆயுள் காரகன் மற்றும் ஆயுள் காரகாதிபதியுமாகிய சனி முழு வலிமை பெறவில்லை.
உயிர் உடல் ஆயுள் ஆகியவை இவ்விதமாக கடுமையான பாதிப்புகளை அடைந்ததால் அன்பர் இளம் வயதிலேயே மறைந்தார்.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக பெரியோரே.
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி
Saturday, April 20, 2019 10:37:00 AM
-------------------------------------------
7
Blogger ஃபெர்னாண்டோ said...
சுபர் சம்பந்தம் பெறாத, ருசக யோகம் அடைந்த உச்ச செவ்வாய் மற்றும் அவ்வாறே சுபர் சம்பந்தம் இன்றி, சச யோகம் அடைந்து, மாரகாதியான உச்ச சனி இருவரின் கெடு வலு மிகுந்த பார்வையால் லக்னம் கெட்டுள்ளது. லக்னத்தின் மேல் சுபர் பார்வை, இணைவு இல்லை.
லக்னாதிபதி, நோய் ஸ்தானமான 6-ல் மறைந்து, 6-ம் அதிபதி குரு அங்கு ஆட்சி பலம் பெற்று, உடன் 12-ம் அதிபதி புதன் இணைந்து, பாதகாதிபதி சுக்கிரன் கூடி, சுப வலு இல்லாத, சச யோக மாரகாதிபதி உச்ச சனியின் அதிக கெடு வலு கொண்ட பார்வையும் சேர்ந்து, கெட்டுள்ளார்.
ராசி, ராசிக்கு 6-ம் அதிபதி சுக்கிரன் இணைவால், சுபவலுவற்ற, சச யோக, மாரகாதிபதி உச்ச சனியின் கெடுவலு மிஞ்சிய பார்வையால் கெட்டுள்ளது.
ஆயுள் காரகன் சனி உச்சம், ஆனால், அவருக்கு 8-ம் பாவத்தில் ராகு.
உடம்பு உயிருக்கு காரகனான சூரியன் ராகு-கேதி அச்சில் கெட்டுள்ளார்.
முற்றிலும் பலமிழந்த லக்னாதிபதி தசை 5 வயது நடக்கும்போது தொடங்கியது.
- ஐ எஸ்ஃபெர்னாண்டோ
Saturday, April 20, 2019 12:33:00 PM
----------------------------------------------
8
Blogger Lokes said...
பிறப்பு: 26/11/1984, 22:50 PM.
கடக லக்கினமாகி லக்கினத்தை 7 க்குரிய மாரகாதிபதியும் அட்டமாதிபதியுமான சனி பார்க்க, லக்கினாதிபதி சந்திரன் ஆறில் மறைந்து ஆட்சிபலமுடைய ஆறாம் அதிபதி குருவோடும் விரயஸ்தானாதிபதி புதனோடும் பாதகாதிபதி சுக்ரனோடும் இருக்க ஆறாம் வீடு வலுப்பெற்ற ஜாதகம். அட்டமாதிபதி சனி பார்வையால் லக்கினமும் லக்கினாதிபதியும் வலுவிழந்த ஜாதகம்.
லக்கின யோகாதிபதி செவ்வாய் 7 இல் உச்சம் பெற்று லக்கினத்தை பார்ப்பதாலும் ஆயுள் காரகன் சனி 4 இல் உச்சம் பெற்றதாலும் , மாரகாதிபதி சூரியன் சனி சாரம் பெற்று 8 டிக்ரீக்குள் கேதுவின் பிடியில் இருப்பதால் 4 வயது வரை நடந்த சூரியன் தன் தசையில் மாரகத்தை தரவில்லை. அடுத்தடுத்து 21 வயது வரை நடந்த லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி செவ்வாய் தசை சுமாராக சென்றிருக்கும். அதன் பின் மாரகாதிபதி சூரியனின் சாரமும் பார்வையும் பெற்று பாதகாதிபதி சுக்ரனின் வீட்டில் அமர்ந்த ராகு தசையில் ராகுவிற்கு எட்டில் அமர்ந்த குருபுத்தியில் அல்லது ஆறில் அமர்ந்த சனி புத்தியில் சுயமரணத்தில் வெற்றிகண்டிருப்பார்.
Saturday, April 20, 2019 8:12:00 PM
--------------------------------------------
9
Blogger sundari said...
Dear sir,
Lagana moon in 6th house with 12th house owner mercury mercury is suka owner(3rd house) 6th house owner jupiter in own house 12th house has mandhi that is why he died in young age sir.
Sunday, April 21, 2019 1:18:00 PM
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.4.19

Astrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது?


Astrology: ஜோதிடப் புதிர்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது?

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்.  அன்பர் வருத்தப்படும்படி இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்
(அல்ப ஆயுள் என்று வைத்துக் கொள்ளுங்கள்)

ஜாதகப்படி அதற்கு (இளம் வயதிலேயே இறந்ததற்கு) என்ன காரணம்.?

ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 21-4-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.4.19

அந்தக் காலத்து புகைவண்டிப் பயணம்!!!!


அந்தக் காலத்து புகைவண்டிப் பயணம்!!!!

ரொம்ப நாளாவே தலைக்குள் ஒரு ஊரல் புகைவண்டி பற்றிய நினைவுகள் எழுதச்சொல்லி பிராண்டியபடி இருந்தன,இன்றைக்கு எழுதியே ஆக வேண்டும் என்று முடிவாக என்னுடைய எழுதுகோலான செல்பேசியை எடுத்துக்கொண்டு எழுதத் துவங்கினேன்

இடையிடையே கண் மேலேறி கடிகார முள்ளின் ஓட்டத்தை அவதானித்தபடி காலை நேரமாயிற்றே இனிமெல் தான் குளித்து முடித்து கடைதிறக்க எட்டரை மணிக்குள் செல்ல வேண்டும், ஆச்சு இப்போ மணி ஏழரை நல்ல நேரத்தில் தான் எழுத உட்கார்ந்திருக்கிறோம் என்று மனதில் முனகியபடி எழுத துவங்கினேன்.

கூ....கூ......சிக்புக்.. சிக்புக் என்ற ரயிலின் சப்தங்கள் காதுகளில் ரீங்காரமாய்.

காரைக்குடி ரயில் நிலையத்தில் காலை வெயிலின் சுள்ளென்ற உணர்வில் பிளாட்பாரத்தில் அரை டிராயர் அரைக்கை சட்டையில் நானும் வெள்ளைக்கு மாற்று குறைந்த நிறத்தில் வேட்டியும் பழுப்பு வண்ண சட்டையும் கையில் வெற்றிலையை நீவியபடி அப்பா அருகே ஜாம்பர்செட் என்ற புது மோஸ்தரில் பொட்டு பொட்டு புள்ளிகள் இட்ட கரு நீல சேலையும் முழங்கையையும் தாண்டி நீண்டிருந்த நீல வண்ண ஜாக்கெட்டும் வாணிஸ்ரீ கொண்டையும் போட்டுகொண்டு அம்மா வலது கையில் தண்ணீர் கூஜா ஒன்றும் இடது கையை மடித்து இடுப்பில் வைத்தபடி நிற்க எங்களுக்கு பக்கத்தில் டிரங் பெட்டி ஒன்றும் வக்கூடை என்று சொல்லும் ஓலைக் கூடையும் ஒரு பெரிய துணிபை என்று இருக்க சற்று தள்ளி தலைப்பா கட்டு சகிதம் ஒரு பெரியவரும் பக்கத்தில் அவரின் மனைவி தோற்றத்தில் ஒரு அம்மாவும் சுற்றிலும் தட்டுமுட்டு சாமான்களோடு இருக்க காரைக்குடி மாயவரம் ரயிலுக்கு இன்னும் சற்று நேரம் இருக்க நீல சட்டையம் அதே வண்ண அரைக்கால் சட்டையும் அணிந்த ரயில் நிலைய ஊழியர் நடைபாதை ஓரம் தொங்கி கொண்டிருந்த இரும்பு தண்டவாள துண்டில் கண கண என்று முதல் மணியை அடித்தார்.

பயணிகளிடம் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது.எல்லோரும் அவரவர் சாமான்களை சரிபார்ப்பதும் கூட வந்த நண்டு சிண்டு குழந்தைகளை டேய் ஓடாதீங்க ரயில் வருது என்று சத்தமிட்டு கூப்பிடுவதுமாக சல சலவென்று ஒரே சத்தம் இதற்கிடையில் இரண்டாவது மணியும் அடிச்சாச்சு எல்லோரும் ரயில் வரப்போகும் திசையை நோக்கி ஆவலும் பரவசமும் பொங்க பார்க்க தூரத்தில் சிக் புக் சிக்புக் சிக்புக் என்ற சப்தமும் வானில் புகையின் மெல்லிய கோடிட்ட தோற்றமும் ரயில் வருவதை உறுதி செய்தது .
இறுதிக்கட்ட பரபரப்பில் காரைக்குடி ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் பயணிகள் கைகளில் தங்கள் பொதிகளை சுமந்தபடி நிற்க இப்போது நீண்ட சிக்... புக் சிக்..புக் என்ற இழுவை சப்தமிட்டபடி கரிய உருண்டையான வடிவ அரக்கன் இரு கைகளை அசைப்பது போல் பக்கவாட்டில் உள்ள பிஸ்டண்கள் சிலிண்டர் வடிவ உருளைக்குள் போவதும் பின்வாங்குவதுமாக நீராவியை உமிழ்ந்தபடி கூ ....கூ...என்று என்று சப்தமிட்டபடி நுழைந்தது,இன்ஜினுக்குள் முகம் உட்பட உடல் முழுவதும் கரி பிசுக்கு தோற்றத்துடன் டிரைவரும் அருகில் நீண்ட கைப்பிடி கொண்ட கரி அள்ளி போடும் சாதனத்தோடு உதவியாளரும், இன்ஜினுக்குள் ஒருபுறம் கரியின் உதவியால் எழுந்த மஞ்சள் நிற நெருப்பு ஜூவாளை வட்டவடிவ கரி போடும் வாயிலில் அழகிய தோற்றம் தர, டிரைவர் வாயிலில்  நின்றபடி வெளியே ஒரு கையை நீட்டியடி இருக்க, ரயில் நிலைய ஊழியரின் கையில் இருந்து நீண்ட பிரம்பில் முன்புறம் வளைந்து பெரிய பேட்மிண்டன் பேட்டில் நரம்புகள் இல்லாதிருப்பது போல அதை நீட்டிய டிரைவரின் கையில் மாட்டிக்கொண்டு இன்ஜினுக்குள் இழுத்துக்கொண்டார் ,அதே போல் ஒரு பிரம்பு பிளாட்பாரத்தில் வீசப்பட்டது.இறுதி பெருமூச்சு விட்டபடி கூ....என்ற நீண்ட விசிலடித்தபடி .நின்றது ரயில்.

நானும் எங்கள் குடும்பமும் பக்கத்திலிருந்த தலைப்பாகட்டுப் பெரியவரின் குடும்பமும் ஒரே பெட்டியில் ஏறி உள்ளே சென்றோம்.அது மீட்டர்கேஜ் என்று இருந்த காலம் பெட்டிகள் அகலம் குறைவாக இருக்கும். மூன்று மூன்று பேர் எதிரெதிரே அமரும்படிக்கு மரத்தில் செய்யப்பட்ட  உட்காரும் பலகையும் சாய்மானமும் இருக்க மேலே பொதிகள் வைக்க பலகையும் இருக்கும் பெட்டியின் வெளித்தோற்றம் ரயில்வேக்குரிய மஞ்சளும் அரக்கும் கலந்த நிறமும் உட்புறம் அழுக்கு மஞ்சளும் நிறம் மாறாமல் இருக்கும் கூரைக்கு சற்று கீழே அபாய சங்கிலி இதை அனாவசியமாக இழுத்தால் அபராதம் ரூபாய் 500 கட்ட வேண்டும் என்ற எச்சரிக்கை பலகையோடு இருக்கும்.இரண்டு புற உட்காரும் பலகைக்கும் அருகில் ஜன்னல் குறுக்கு கம்பிகள் செருகப்பட்டும் ,கண்ணாடி போட்ட இறக்கு கதவும் கொண்டிருக்கும்.

ஜன்னல் அருகே உட்கார்ந்து வெளியில் ஓடும் மரங்கள்,வயல்வெளிகள்,மனிதர்கள் என்று பார்க்க ஆசையோ ஆசையா இருக்கும். அம்மா தான் டேய் கண்ணுல கரி விழுந்துரும் வெளிய எட்டி பார்க்க கூடாது தலைய உள்ள திருப்புன்னு அதட்டிக்கிட்டே இருப்பாங்க.அப்பா என்னை புன் சிரிப்புடன் பார்த்தபடி டேய் தம்பி என்று செல்ல கோபம் தொனிக்கும் குரலில் அதட்டுவார்கள்.

ஆனாலும் எனக்கென்னவோ பார்வை வெளியில் தான் மரங்கள் விர் விர் என பின்னோக்கி ஓடும் அழகும் ரயிலின் ஆட்டமும் ரயிலை விட்டு வீட்டுக்கு சென்றாலும் அன்று முழுவதும் ஆட்டியபடி இருக்கும் நினைவு , ஆஹா........

காரைக்குடியில் கூ.......என்று விசிலடித்தபடி கிளம்பும் ரயிலுக்கு கடைசியில் இருக்கும்  கார்டு வேனிலிருந்து வெள்ளை பேண்ட்,வெள்ளை கோட்,வெள்ளை தொப்பி சகிதம் கார்டு பச்சை கொடியை அசைத்தபடி பிளாட்பாரத்தை ரயில் தாண்டும்வரை வெளியில் எட்டி பார்த்தபடி நிற்பார்.இரவு நேரங்களில் கையில் எண்ணெய் விளக்கு இருக்கும் ஒருபுறம் பச்சை,ஒருபுறம் சிகப்பு என்று கண்ணாடி பொருத்திய விளக்கு தேவைக்கேற்ப விளக்கின் கண்ணாடியை வெளியே காண்பிப்பார்.

கைகாட்டி என்று சொல்லும் ரயிலுக்கு சமிங்கை செய்ய ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் முன்பாக உயர கம்பத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கை போன்ற தோற்றமும்  சிகப்பு ,பச்சை கண்ணாடி வில்லைகள் மேலும் கீழும் பொருத்தப்பட்டு பின்புறம் எண்ணெய்  விளக்கு மாட்டும் கம்பியோடு இருக்கும் .அதிலிருந்து கம்பி வடம் ஒன்று சமிங்ஞை அறையில் ஒரு லிவரோடு பொருத்தப்பட்டிருக்கும்.

அங்கிருக்கும் பாயின்ட்ஸ்மேன் என்றழைக்கப்படும் ஊழியர் ரயில் தங்கள் நிலையத்துக்கு முதல் நிலையத்திலிருந்து கிளம்பிய தகவல் தொலைபேசி வாயிலாக அறிந்த உடன் லிவரை இழுத்து ரயில் உள்ளே வர சமிங்கை செய்வார்.இரவில் எண்ணெய் விளக்கு ஏற்றி கைகாட்டி மரத்தில் ஏறி விளக்கை மாட்டி வைப்பார்,லிவர் இழுத்ததும் கைகாட்டி மேலே ஏறி பச்சை விளக்கு எரியும் தோற்றம் தரும்.

டிக்கெட் கவுண்டரில் மஞ்சள் நிறத்தில் சிறு அட்டையில் போகும் ஊர் புறப்படும் ஊர் தேதி ரயில் சார்ஜ் என்று பதிவுகள் கை அடி மிஷின் மூலம் அடித்து தருவார்கள்.

காரைகுடியிலிருந்து மாயவரம் செல்லும் ரயில் கோட்டையூர்,புதுவயல் என்று எல்லா நிலையங்களிலும் நின்று செல்லும்.

எங்காவது ஒரு நிலயத்தில் ஒரு மணி நேரம் கூட நிறுத்தி விடுவார்கள்,அப்பா போட் மெயில் கிராசிங் என்று சொல்வார்கள் திடீரென்று வேக வேகமாக எதிர் திசையில் ஒரு ரயில் எங்களை கடந்து செல்லும் அப்பொதெளல்லாம் ஒற்றை ரயில் பாதைகள் தான் போக வர இரண்டுக்கும்.

ரயிலுக்கு சரியான  நேரம் என்பதெல்லாம் கிடையாது ,சராசரி ஐந்து மணி நேரம் 8 மணி நேரம் தாமதமாக சேரும் இடத்துக்கு சென்று சேரும்.மாயவரம் வண்டி திருவாரூருக்கு எப்படியும் இரண்டு மணி நேரம் தாமதமாக சேரும்.நாங்கள் திருவாரூரை அடைந்ததும் எல்லோரும் கரி பூசிய உருவத்தோடு வீடு சேர்ந்து முதலில் குளித்து விட்டுத்தான் மறுவேலை.

அப்போதும் ரயிலில் இயற்கை உபாதைகள் கழிக்கும் அறைகள் ரயிலில் உண்டு .

இன்றைய புல்லட் ரயில்,ஜன்தன்,ஹெரிட்டேஜ் என்று பல்வேறு வசதிகள் AC பெட்டிகள்,தூங்கும் வசதிகள் என்று அன்று பர்ஸ்ட் கிளாஸ் என்றும் கூபே என்றும் தனி கேபின்கள் பணம் படைத்தவர்களுக்கு,2ND கிளாஸ் என்று நடுத்தர வர்க்கத்துக்கு தூங்கும் வசதி பெட்டி, பொது மக்களுக்கு மூன்றாம் வகுப்பு என்ற பெட்டி இதில் தான் மகாத்மா எப்போதும் பயணம் செய்வார்கள், என் மக்கள் பயணம் செய்யும் வசதியே எனக்கும் வேண்டும் என்பார்கள்.
1966-68ன் இனிய நினைவுகள்.

இப்போதும் சோபாவில் ஆட்டியபடி நான் ஆச்சியின் 'என்னங்க காலையில் குளிச்சு கடைக்கு போகாம செல்ல நோண்டிக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்க'என்ற அதட்டல் நினைவுலகுக்கு கொண்டு வர எழுந்து குளிக்க சென்றேன்.

ஆக்கம்: நாச்சியாபுரம், சேதுராமன் லெட்சுமணன்.
----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.4.19

அம்மாவா - அப்பாவா - மகளுக்கு யார் முக்கியம்?


அம்மாவா - அப்பாவா - மகளுக்கு யார் முக்கியம்?

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது  அம்மாவா ?அப்பாவா ?

உளவியல் பதிவு,,

உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !

உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !

தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு , அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! பாதுகாவலன் ! ஊக்கமூட்டுபவர் !வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.

ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?

அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.

எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது.

"நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார். என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது,என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது. பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும்.அது தான் முக்கியம்.

டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம் , கவலை , எரிச்சல் , சோகம் என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார். என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை.எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்.

அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி , உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள்,தீர்வுகள் என சிந்தியுங்கள்.
நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும் , ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு.அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.

"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் என்னும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை.
"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.

அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்

இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம்.!!!!!
------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.4.19

திருவார்பு கிருஷ்ணா கோயில்!!!!


திருவார்பு கிருஷ்ணா கோயில்!!!!

*இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும்..*

*ஒவ்வொரு நாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7..*

*கோயில்* *மூடுவதற்கு நேரம் இல்லை..*

*இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம்..*

*அற்புதம்!*

1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில்..

கேரள மாநிலம், 

கோட்டயம் மாவட்டம்  திருவார்புவில் இக் கோயில் அமைந்துள்ளது.

இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார்.

எனவே 23.58 மணி நேரமும்,

365 நாட்களும் கோவில் திறந்திருக்கும்.

கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது.

11.58 மணி முதல் 12 மணி வரை..

இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால்,

கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது.

கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால்,

ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால் கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார்.

அந்த நிலையில் இருந்த  கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை  என்று மக்கள் நம்புகின்றனர்.

அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின்,

நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும்,

பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.

இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால்,

கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை.

அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ஒருமுறை கோயில்..

கிரகணத்தின் போது மூடப்பட்டது.

கதவைத் திறந்தபோது ஆண்டவரின் இடுப்புப் பட்டை  வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள்.

அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்,

கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்ததுஎன்று சொன்னார்.

அப்போதிருந்து கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை.

கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை 2 நிமிடங்கள் மட்டுமே.

பிரசாதம் பெறாமல் பக்தர்கள்  செல்ல அனுமதி இல்லை.

தினமும் 11.58 மணி (ஆலயத்தை மூடுவதற்கு முன்பு) பூசாரி சத்தமாக,

*"இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?"* என அழைப்பார்.

மற்றொரு முக்கிய விஷயம்,

நீங்கள் பிரசாதம் சுவைத்தால்,

நீங்கள் அதன்பிறகு பசியால் வாட மாட்டீர்கள்.

உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப்பிரச்சனை இருக்காதாம்.

*கோயிலின் முகவரி:*

*திருவார்பு கிருஷ்ணா கோயில்,*
*திருவார்பூ - 686020,*
*கோட்டையம் மாவட்டம்,*
*கேரள மாநிலம்..*

*கோவில் திறப்பு நேரம்:*
*நள்ளிரவு 12.00 மணி முதல் நள்ளிரவு 11.58 மணி வரை..*

*எல்லாம் கிருஷ்ணார்ப்பயாமி.
---------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.4.19

அம்பையின் சபதம்!!!!!


அம்பையின் சபதம்!!!!!

சந்தனு தனக்கும் சத்தியவதிக்கும் பிறந்த சித்திராங்கதனையும்,விசித்திர வீரியனையும் மூத்த மகன் பீஷ்மனிடம் விட்டுவிட்டு செத்து போனான்.

சித்திராங்கதன் போரில் மடிந்து போக எஞ்சிய விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்ய வேண்டும்.

காசி ராஜன் தன் மகள்கள் மூவருக்கும் சுயம்வரம் வைக்கிறான்.அதற்கு அஸ்தினாபுரிக்கு அழைப்பு இல்லை.

பீஷ்மனுக்கு கடும் கோபம்.விசித்திரவீரியனுக்கு ஏன் அழைப்பு இல்லை என்று ஞானியான பீஷ்மனுக்கு தெரியாதா?

அப்படியும் பீஷ்மன் சுயம்வரத்துக்கு செல்கிறான்.போகும் போதே மனதுள் 'வரித்த மன்னர் மறங்கெட ,வன்பினால் திரித்து,எம்பியைச் சேர்த்துவல் யான் என (வில்லிபாரதம் ஆதி _126) பீஷ்மன் செய்தது நியாயமா?

விசித்திர வீரியனை எந்த பெண்ணும் விரும்பவில்லை என்றால் அரண்மனை பணிப்பெண்ணை வைத்துக்கொள்ள வேண்டும், இல்லையன்றால் அவனே சென்று விரும்பிய பெண்ணை தூக்கி வந்து மணம் செய்து கொண்டிருக்க வேண்டும்

,பீஷ்மன் பெண் வாடையை சுகிக்க மாட்டேன் என்ற சபதம் எடுத்த பிறகு பெண்ணை கவர்ந்து வர சென்றது தன்னை விட பலசாலி யாரும் இல்லை என்ற திமிர் அல்லவா.

அதன் படி மூன்று பெண்களையும் வலிந்து தேரில் ஏற்றிக்கொண்டு  எதிர்த்த அரசர்களை ஓட ஓட விரட்டி அடித்து விட்டு மாடு பிடிப்பது போல் பிடித்து வருகிறான்.

மூத்தவள் சாலுவன் என்னும் அரசனை விரும்புவதாக சொல்ல அவளை சாலுவனிடம் அனுப்பிவிட்டு மற்ற இருவரான அம்பிகை ,அம்பாலிகையை விசித்திர வீரியனுக்கு மணமுடிக்கிறான்.

சாலுவன் அம்பையை 'பீஷ்மன் தூக்கி சென்றுவிட்ட காரணத்தால் ,உன்னை மணப்பது இழுக்கு'என்று  மணக்க மறுத்து விடுகிறான்.

அம்பை விசித்திர வீரியனை என்னையும் மணந்து கொள் என்று கெஞ்ச அவனோ'அந்நிய ஆடவனை மனதில் நினைத்த உன்னை மணக்க முடியாது'என்கிறான்.

எஞ்சியவன் பீஷ்மன்.

அம்பை பீஷ்மனை தன்னை  மணந்து கொள்ள கேட்கிறாள். பீஷ்மன் தன் விரதத்தை கூறி மறுத்து விடுகிறான். அம்பை பரசுராமரிடம் உதவி கேட்டு செல்ல அவரால் பீஷ்மனை வெல்ல முடியாது பின் வாங்கி விடுகிறார், பரசுராமரை வெல்லும் வீரம் கொண்ட பீஷ்மன் மெச்ச தக்கவனே,ஆனால் அவனின் செயல் அநீதியானது.

வேறு எவரும் உதவ தயாராக இருந்தும் பீஷ்மனை கண்டு பொங்கிய அம்பை பீஷ்மனிடம் "உன்னை சுயம் வரத்துக்கு அழைத்தோமா?அழையாத இடத்துக்கு ஏன் வந்தாய்? அப்போது உன் விரத ஞாபகம் இல்லையா? நீ செய்தது அநீதி அல்லவா? என்னை என் வாழ்வை குலைத்து விட்ட உன்னை பழி தீர்ப்பேன்" என்று சபதம் செய்கிறாள்.

சிவனை நோக்கி தவம் செய்கிறாள்.முருகன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து மறைகிறார்,சிவன் தோன்றி "நீ அடுத்த பிறப்பில் சிகண்டியாக பிறந்து பீஷ்மன் உயிர் பறிப்பாய்"என்று வரமளிக்கிறார்.

பீஷ்மன் கல்வியில் சிறந்தவன்.தருமம் அறிந்தவன்.தன் தம்பிக்கு பெண் தேடும் முறையா இது? பீஷ்மன் செய்தது ரவுடி தனமில்லையா?
தரும நியாயம் தெரியாதவனா? அவனின் அராஜக செயலின் பலன் தான் அம்பையின் சிகண்டி அவதாரம்.

அம்பை மறுபிறப்பில் தான் பலி வாங்க முடியும் என்றதும் உடனே தீக்குளித்து உயிர் விடுகிறாள்.அம்பை  போன்று ஒரு சிலர் மட்டுமே எடுத்த காரியம் முடிக்க எந்த விலையும் கொடுப்பர்.

மறுபிறப்பில் துருபதன் மகளாக பிறந்து முருகன் தந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சிக்கண்டி ஆகிறாள்.

சிறியதோ, பெரியதோ அவரவர் செய்த( கர்மா)வினைப்பயன் அனுபவித்தே தீர வேண்டும். பீஷ்மன் செய்த வினையின் விளைவே சிகண்டி
--ஆக்கம் பழ.கருப்பையா
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================.
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.4.19

Astrology: ஜோதிடம்: 12-4-2019 புதிருக்கான விடை!!!!


Astrology: ஜோதிடம்: 12-4-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அந்த அன்பர். வங்கி அதிகாரியாக சுமார் 19 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியும். அவருக்கு எந்தவிதமான பதவி உயர்வும் கிடைக்கவில்லை. நியாயமாகக் கிடைக்கவெண்டியது கூடக் கிடைக்கவில்லை. மனிதர் நொந்து போய்விட்டார். 42 வயதாகி விட்டது. இனிமேலாவது கிடைக்குமா என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு!!!!இதுவரை ஏன் கிடைக்கவில்லை? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!! என்று கேட்டிருந்தேன்

சரியான விடை
அன்பர் கடக லக்கினக்காரர். லக்கினநாதன் சந்திரன் பாக்கியநாதன் (9th Lord) குருவுடன் சேர்ந்து 2ம் வீட்டில் சிறப்பாக உள்ளார். ஆனால் 10ம் வீட்டுக்காரரான செவ்வாய் ராகுவுடன் சேந்து கெட்டுப் போய் உள்ளார். 7 மற்றும் 8ஆம் இடத்துகாரர் சனீஷ்வரனும் ராகுவுடன் சேர்ந்து கெட்டுப் போயிருக்கிறார்,

பிறப்பில் ஒரு ஆண்டு 7 மாதங்கள் இருந்த சுக்கிர திசை, பிறகு சூரியன் (6) சந்திரன் (10) செவ்வாய் (7) ஆகிய தசா மாற்றங்களுகுப் பிறகு அவர் வேலைக்குச் சேர்ந்த உடனேயே ராகு மகா திசை ஆரம்பித்து விட்டது. துவங்கியதில் இருந்தே அவருக்கு செக் வைத்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் அவருக்கு எந்த பதவி உயர்வும் கிடைக்கவில்லை. ஜாதகப்படி அவர் பட்ட வேதனைகளுக்கெல்லாம் அதுதான் காரணம்.

அதற்கு அடுத்து வந்த குரு மகாதிசையில் அவருக்கு எல்லாம் கூடி வந்தது. கர்மகாரகன் சனீஷ்வரனின் பார்வை குருவின் மேல் விழுவதைக் கவனியுங்கள்,

தசா புத்திகளின் முக்கியத்துவம் அதுதான். நல்ல மகா திசை நடக்கும்காலம்தான் எல்லாம் நன்மையாக இருக்கும்!

புதிருக்கான பதிலை 6 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 19-4-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------

1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 30 ஜனவரி 1956 அன்று மாலை 5ம‌ணி 15 நிமிடம் போலப் பிறந்தவர்.
பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகத்தில் 10ம் இடத்திற்கு, அதாவது உத்யோகத்திற்குரிய இட அதிபதி செவ்வாய் 5ல் அமர்ந்து சனி ராகு சம்பந்தம் அடைந்தார்,சனைச்ச‌ரன் 8ம் அதிபதியும் ஆனதால் எட்டாம் அதிபதி பத்தாம் அதிபதியுடன் நின்றதால் வேலை முன்னேற்றம் தடையானது.ராகுவும் சேர்ந்த‌தால் இரண்டு மடங்கு தடையானது.
மேலும் பத்தாம் அதிபதி செவ்வாய் தன் வீட்டிற்கு எட்டாம் இடத்தில் மறைந்தார். அதுவும் ஒரு காரணம்.ஜாத்கரின் 24 வயதில் ராகு தசா துவங்கி 18 ஆண்டுகள்
நடந்தது.அந்தக் காலகட்டம் முன்னேற்றம் முழுதும் தடைப்பட்டது. ராகு தசா முடிந்து குரு தசா துவங்கிய் 42,43 வயதில் அவருக்கு சிறிது முன்னேற்றம் வந்திருக்கும்.
Friday, April 12, 2019 4:42:00 AM
--------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சந்திரன் தகுருவுடன் நட்பு வீட்டில் அமர்ந்து நல்ல நிலையில் உள்ளார்
2 .ஜாதகருக்கு சந்திரா திசை குரு புத்திலயில் வேலை கிடைத்திருக்கலாம்
3 .பத்தாம் அதிபதி செவ்வாயும்,கர்மகாரகன் சனியும் பத்தாம் வீட்டிற்கு எட்டில் அமர்ந்துள்ளனர்
௪. மேலும் ராகுவின் பிடியில் உள்ளதால் வேலையில் உயர்வு ஏற்படவில்லை
5 .அதன் பிறகு வந்த ராகு திசையில் உயர்வு ஏற்பட்டு இருக்கலாம்
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, April 12, 2019 1:03:00 PM
-----------------------------------------------
3
Blogger Sivakumar.aks@gmail.com said...
வணக்கம் சார்
ஜாதகர் 30/1/1956ல் சென்னையில் 5:15மாலையில் பிறந்தவர்.
பதவி உயர்வுக்கான லக்கின அதிபதியான சந்திரனும் சூரியனும் 6/8என்ற நிலையில்.பாக்கியஸ்தான அதிபதியான குரு தன்னுடைய வீட்டிற்கு 6/8நிலையில் உள்ளார். கடக லக்கினத்திற்கு பகை பெற்ற ராகு ஜாதகருக்கு வேலையில் உள்ள காலகட்டத்தில் விரையதிபதியான புதனின் சாரம் பெற்று திசையை நடத்தியதால் ஜாதகர் பதவி உயர்வு என்பது கனவாகவே உள்ளது.அடுத்து வந்த பாக்கியஸ்தான அதிபதியான குரு பகவானும் கேதுவின் சாரம் பெற்று வக்கிரமான நிலையில் திசையை நடத்தியதால் அதுவும் தடையாக உள்ளது சார். எதையும் சாதிக்க லக்கினத்திற்கு யோககார திசை அனுபவிக்கும் வயதில் வரவேண்டும். இந்த நிலையில் தான் ஜாதகருக்கு பதவி உயர்வு பெறாமல் உள்ளளார். ல்கினத்தை சூரியன் பார்ப்பது லக்கின அதிபதியான சந்திரனும் குருவும் சேர்ந்து சுக்கிரன் பார்ப்பது யோககார செவ்வாய் புதனின் சாரம் பெற்றுது இந்த அமைப்பு ஜாதகருக்கு வங்கியில் பணியில் அமர்த்தி அழகு பார்த்தது சார்.
மிகவும் நன்றி சார். உங்கள் மாணவர் தொட்டியம் சிவக்குமார்
Friday, April 12, 2019 7:11:00 PM
------------------------------------------------------
4
Blogger classroom2007 said...
வணக்கம்.
30 ஜனவரி மாதம் 1956, மாலை 5.11 மணிக்கு, பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி கடக லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகர் பிறந்தார்.
10ம் வீடு நன்றாக இருந்து நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்றால் லக்கினம், சூரியன், சந்திரன் இவை மூன்றும் நன்றாக இருக்கவேண்டும். (அடிப்படை அம்சங்கள்)
இந்த ஜாதகத்தில் லக்கினம் 26 பரல், சந்திரன் நவாம்சத்தில் நீசம், சூரியன் 4 பரல் சனியின் 3ம் பார்வை இருப்பதால் ஜாதகருக்கு பதவி உயர்வு போன்றவை கிடைக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்த கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். பலவிதமான நன்மைகளைச் செய்யக்கூடியவன். ஆனால், இந்த ஜாதத்தில் 10 ம் வீட்டு அதிபதி செவ்வாய் 5ம் வீட்டில் விருச்சிகராசியில் இருந்தாலும் சனி , ராகுவுடன் சேர்ந்து இருப்பதால் எந்த வித நன்மையும் அடையமுடிவதில்லை. சுப கிரங்களின் பார்வையும் இல்லை.
இந்த கடக லக்கினத்திற்கு குரு எந்த வித யோகத்தையும் தரக்கூடியவர் அல்ல.
ஜாதகருக்கு 24 வயது முதல் 42 வயது வரை (1980-1998) ராகு மகா தசையில் உத்தியோகத்தில் எந்த பலனும் கிடைக்காமல் இருந்ததற்கு காரணம் ராகுவுடன் சனி, செவ்வாய் கூட்டு சேர்ந்ததே காரணம்.
42 வயதிற்கு (1998) பிறகு வந்த குருமகா தசையில் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைத்தது. காரணம் ஜாதகத்தில் குருவின் 9ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது. லக்கினாதிபதி சந்திரனும் (6 பரல்) 2ம் வீட்டில் குருவுடன் சேர்ந்துள்ளார். சுக்கிரனின் 7ம் பார்வையும் சந்திரன், குருவின் மீது உள்ளது.மேலும், குருவின் கேந்திரத்தில் 10ம் வீட்டு அதிபதி செவ்வாய் இருப்பதால் சாத்தியமானது. 10ம் வீடு 24 பரல்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, April 13, 2019 12:53:00 AM
-------------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிர் ராஜா கைய வைச்ச ஏன் தவறா போனது திற்கான பதில்
பொதுவாக அரசாங்க உத்தியோகத்திற்கான கிரகங்கள் சனி மற்றும் செவ்வாய் ஆகும் . ஜாதகருக்கு அது இரண்டும் ஒன்றாக இணைந்து ஐந்தாம் இடத்தில் அமர்ந்து அரசாங்க பதவியை கொடுத்தது
மேலும் செவ்வாய் இவருக்கு பத்தாம் இடத்து அதிபதியும் ஆவார். அதனால் இவருக்கு அரசு வேலை கிடைத்தது
ஆனால் உயர் பதவிக்கான ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு கூட்டணியுடன் செவ்வாய் சனி உள்ளதால் பதவி உயர்வு இதுவரை இவருக்கு கிடைக்கவில்லை .
நன்றி
இப்படிக்கு
ப . சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
Saturday, April 13, 2019 7:45:00 AM
-------------------------------------------------------
6
Blogger Ram Venkat said...
ஜோதிடப் புதிர்: ராஜா கைய வச்சா எல்லாம் ராங்காகிப் போனதேன்?
வணக்கம்.
கடக லக்கினம், சிம்ம ராசி ஜாதகர்.
வங்கி அதிகாரியாக சுமார் 19 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியும். அவருக்கு எந்தவிதமான பதவி உயர்வும் கிடைக்கவில்லை. நியாயமாகக் கிடைக்கவெண்டியது கூடக் கிடைக்கவில்லை. மனிதர் நொந்து போய்விட்டார். 42 வயதாகி விட்டது. இனிமேலாவது கிடைக்குமா என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு!!!!
இதுவரை ஏன் கிடைக்கவில்லை? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
1) லக்கினாதிபதி சந்திரன் 2ல் அமர்ந்து குருவுடன் சேர்ந்து, வலுவான‌ கஜகேசரி யோகத்தை கொடுத்து கொண்டிருக்கிறார். குருவின் 9ம் தனிப்பார்வை 10மிடமான மேசத்தில் விழுவதால் ஜாதகருக்கு ஒரு வங்கியில் நிலையான உத்தியோகம் கிட்டியது.
2) யோகாதிபதியும் கர்மாதிபதியுமான செவ்வாய், 5ல் அமர்ந்துள்ளார். அவருடன் கர்மகாரகன் சனி, மற்றும் ராகு கூட்டணி. ஜாதகருக்கு 42 வயது வரை ராகு தசை நடந்துள்ளது.
3) இதன் காரணமாகவே, அவர் சிறப்பாக பணியாற்றியும் பதவி உயர்வு கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
4) அதன் பிறகு வந்த குரு தசையில் அவரின் பதவி உயர்வு ஆசை ஈடேறியிருக்கும்.
வாத்தியாரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,
இரா.வெங்கடேஷ்.
Saturday, April 13, 2019 12:56:00 PM
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.4.19

Astrology: ஜோதிடப் புதிர்: ராஜா கைய வச்சா எல்லாம் ராங்காகிப் போனதேன்?


Astrology: ஜோதிடப் புதிர்: ராஜா கைய வச்சா எல்லாம் ராங்காகிப் போனதேன்?

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். வங்கி அதிகாரியாக சுமார் 19 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியும். அவருக்கு எந்தவிதமான பதவி உயர்வும் கிடைக்கவில்லை. நியாயமாகக் கிடைக்கவெண்டியது கூடக் கிடைக்கவில்லை. மனிதர் நொந்து போய்விட்டார். 42 வயதாகி விட்டது. இனிமேலாவது கிடைக்குமா என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு!!!!

இதுவரை ஏன் கிடைக்கவில்லை? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 14-4-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.4.19

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்!


இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்!

முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .

1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
1210   :ஆரம்ஷா
1211  : அல்தமிஷ்
1236  : ருக்னுத்தீன் ஷா
1236  : ரஜியா சுல்தானா
1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266  : கியாசுத்தீன் பில்பன்
1286  : ரங்கிஷ்வர்
1287  : மஜ்தன்கேகபாத்
1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)
கில்ஜி வம்சம்
1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292  :அலாவுதீன் கில்ஜி
1316  :ஷஹாபுதீன்  உமர் ஷா
1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா
1320  : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா
( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)
துக்ளக் வம்சம்
1320  :கியாசுத்தீன் துக்ளக்
1325  :  முஹம்மது பின் துக்ளக்
1351  :பெரோஸ்ஷா துக்ளக்
1388  : கியாசுத்தீன் துக்ளக்
1389 : அபுபக்கர்ஷா
1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394  :அலெக்சாண்டர் ஷா
1394  : நாஸிருத்தீன் ஷா
1395  : நுஸ்ரத் ஷா
1399  :நாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413  :தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414  :கஜர்கான்
1421  :மெஹசுத் தீன் முபாரக் ஷா
1434  :  முஹம்மது ஷா
1445  :அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)
லோதி வம்ச ஆட்சி
1451  : பெஹ்லூல் லோதி
1489  : அலெக்சாண்டர் லோதி
1517  : இப்ராஹிம் லோதி
 (லோதி ஆட்சி 75 வருடம்)
முகலாயர் ஆட்சி
1526  : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்
சூரி வமிச ஆட்சி
1539   : ஷேர்ஷா சூரி
1545  :அஸ்லம் ஷா சூரி
1552  :மெஹ்மூத் ஷா சூரி
1553   :இப்றாஹிம் சூரி
1554  :பர்வேஸ் ஷா சூரி
1554 :முபாரக் கான் சூரி
1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)
முகலாயர் ஆட்சி
1555  :ஹிமாயூன்
1556  :ஜலாலுத்தீன் அக்பர்
1605  :ஜஹாங்கீர் சலீம்
1628  :ஷாஜஹான்
1659 : ஒளரங்கசீப்
1707 :ஷாஹே ஆலம்
1712  :பஹதூர் ஷா  1713 :பஹாரோகஷேர் 
1719  :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
1754  :ஆலம்கீர்  1759 :ஷாஹேஆலம்
1806 :அக்பர் ஷா
1837 :பஹதூர்ஷா ஜஹபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )
ஆங்கிலேயர் ஆட்சி
1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ;லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884 :லார்டு டப்ரின்
1894 :  லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ்கர்னல்
1905: லார்டு
கில்பர்ட்
1910 :லார்டு
சார்லஸ்
1916 :லார்ட் பிடரிக்
1921 : லார்ட் ரக்ஸ்
1926:.லார்ட் எட்வர்ட்
1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
1936 :லார்டு ஐ கே
1943:லார்டு அரக்பேல்
1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)
சுதந்திர இந்தியாவின் ஆட்சி
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966:குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங்   1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. P.V. நரசிம்மராவ்
1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி
1996:  A.J. தேவகொளடா
1997: I.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி

இதை தொகுத்த நண்பருக்கு நன்றி!
--------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.4.19

Astrology: நீங்களும் நானும் திதிகளும்!!!!



நீங்களும் நானும் திதிகளும்!!!!

நட்சத்திரங்களைப் போலவே திதிகளும் முக்கியமானவை!!!!

The word 'tithi' seems to have a dual meaning which differs with the context of its usage.

Tithi= On a Hindu calendar year, dates are referred to tithi. Unlike English calendar it doesn't start with 12 AM and ends with 12 at midnight, but in Hinduism it is mostly based on the positioning on planets amd other terrestrial bodies that determines the 'tithi'.
Tithi= If you reside in south Indian state of Karnataka, 'tithi' in Kannada is referred to the after rights performed by the well-wishers and relatives upon ones demise. It is performed inorder to pray and hope for peace of soul of the person who just passed away.
Incase you are aware of other meanings, do enlighten me in the comments section below.

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்*!

*1.பிரதமை் திதி:*
அதிபதி:
அக்னி பகவான்
பிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்:
உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்*

*2. துதியை திதி:*
அதிபதி:
துவஷ்டா தேவதை
துதியை திதியில் செய்யத் தக்க காரியம்:
விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது!

*3. திருதியை திதி:*
அதிபதி:
பார்வதி
திருதியை திதியில் செய்யத்தக்க காரியம்:
வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்!

*4. சதுர்த்தி திதி:*
அதிபதி:
கஜநாதன் [விநாயகர்]
சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்:
வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு ]

*5. பஞ்சமி திதி:*
அதிபதி:
சர்ப்பம்
பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்:
இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் !

*6.சஷ்டி திதி:*
அதிபதி:
முருகன்
சஷ்டி திதியில் செய்யத் தக்க காரியம்:
வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொது கணக்கு!

*7. சப்தமி திதி:*
அதிபதி:
சூரியன்
சப்தமிதிதியில் செய்யத் தக்க காரியம்:
வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்ற ம், விவசாயம், துவிதியை, திருதியை பஞ்சமி திதியில் சொல்லப் பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி!

*8.அஷ்டமி திதி:*
அதிபதி:
சிவபெருமான்
அஷ்டமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது!

*9.நவமி திதி:*
அதிபதி:
பாராசக்தி
நவமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
பகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது!

*10. தசமி திதி:*
அதிபதி
ஆதிசேஷன்
தசமி திதியில் செய்யத் தக்க காரியம்:
தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம், ஜலம், முக்கியஸ் தரை சந்திக்க உகந்தது இந்த திதி !

*11.ஏகாதசி திதி:*
அதிபதி:
தர்ம தேவதை
ஏகாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்!

*12. துவாதசி திதி:*
அதிபதி:
விஷ்ணு
துவாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
விருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள், தர்ம காரியம், நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். [திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது]

*13.திரயோதசி திதி:*
அதிபதி:
மன்மதன்
திரயோதசி திதியில் செய்யத் தக்க காரியம்:

அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்ட கால திரு மண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்!

*14.சதுர்தசி திதி:*
அதிபதி:
கலிபுருஷன்
சதுர்தசி திதியில் செய்யத்தக்க காரியம்:
பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை

வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்!

தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்!

வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண் டும்.

அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்!
பௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.

********************************************************
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.4.19

Astrology: ஜோதிடம்: 5-4-2019 புதிருக்கான விடை!!!!


Astrology: ஜோதிடம்: 5-4-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகி பட்டப் படிப்பில் சிறப்பாகத் தேர்வு பெற்றார். பிறகு ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பினார். அதிலும் சுலபமாகத் தேர்வாகி, படித்துப் பட்டம் பெற்றார். சில மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு நல்ல இடத்தில் (மாவட்டத்தில்) வேலை கிடைத்து, அமர்ந்தார். தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேர்ந்தது.
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!’’’ என்று கேட்டிருந்தேன்

சரியான விடை:
ஜாதகி துலா லக்கினக்காரர். லக்கினாதிபதி சுக்கிரனுடன் செவ்வாயும் (2 & 7ற்கு உரியவர்) சேர்ந்து லக்கினத்தை வலிமை மிக்கதாக்கினார்கள். 10ம் வீட்டில் உச்சம் பெற்ற நிலையில் குரு பகவானின் ஆதிக்கம், அந்த வீட்டிற்கு அதிபதி சந்திரன் 12ல் 9ம் வீட்டுக்காரர் புதன் மற்றும் 11ம் வீட்டுக்காரர் சூரியனுடன் சேர்க்கை. அத்துடன் ராகுவும் கூட்டாகச் சேர்ந்துள்ளார்  நடப்பு தசா நாதன் ராகு உச்சமான புதனுடன் கூட்டாகச் சேர்ந்து நல்ல பலன்களைக் கொடுக்கும் நிலையில் உள்ளார்
இக்காரணங்களால் ஜாதகிக்கு வெற்றி மீது வெற்றி தொடர்ந்து கிடைத்தது!!!!!

இந்த ஜாதகத்தில் மிக்க பலம் பொருந்தியவர் குரு (8 பரல்) 10ம் வீட்டில் கடக ராசியில் உச்சம் பெற்று 7ம் பார்வையால் 4ம் வீட்டை பார்க்கிறார் .ஜாதகி கல்வியில் மிக உயர்ந்த பட்ட படிப்பை பெற்று சிறந்து விளங்கியதற்கு இது தான் காரணம்

புதிருக்கான பதிலை 10 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 12-4-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
படிப்புக்கு உரிய 4 ம் இடத்துக்காரனும் லக்கினத்திற்கு யோக காரகனுமான சனைச்சரன் வர்கோத்தம்ம் பெற்று வலுப்பெற்றார்; 4 ம் இடத்திற்கு உச்ச குருவின் பார் வை. படிப்புக்கான புதன் உச்சம் மூலத்திரிகோணம்; லகனாதிபதி சுக்ரன் ஆட்சி; பூர்வ புண்ணிய ஸ்தானத்தின்கு யோக காரகன் பார்வை . வெற்றிக்கான காரணங்கள் இவையே!
Friday, April 05, 2019 1:15:00 PM
---------------------------------------------------
2
Blogger Surya said...
லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி 2ம் அதிபதி செவ்வாய் உடன் இருக்கிறார். 2ம் இடத்தையும் 4ம் இடத்தையும் உச்சம் பெற்ற குரு பார்ப்பதால் கல்வியில் சிறப்பு. 6ம் இடத்தில் உள்ள கேதுவிற்கு சூரியன் சந்திரன் உச்சம் பெற்ற புதன் குரு பார்வை இருப்பதால் போட்டி தேர்வுகளில் வெற்றி. 10ம் இடத்தில் உள்ள உச்சம் பெற்ற குருவினால் உயர்ந்த IAS வேலை
Friday, April 05, 2019 2:01:00 PM
--------------------------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் கேந்திரத்தில் அமர்ந்து நல்ல நிலையில் உள்ளார்
2 .நாலாம் அதிபதி சனி லாபஸ்தானமான பதினொன்றில்
3 .கல்விக்கு அதிபதி புதன் உச்சம் பெற்று மூலதிரிகோணத்தில் லாபதிபதியுடன் புத ஆதித்ய யோகம் பெற்று உள்ளார்
4 .வெற்றிக்கு அதிபதியான குரு பத்தில் அமர்ந்து உச்சம் பெற்று நாலாம் இடத்தை தன பார்வையில் வைத்துள்ளார்
5 .மனகாரகன் சந்திரன் தன் சுயச்சாரம் பெற்றது சிறப்பு
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, April 05, 2019 2:01:00 PM
----------------------------------------------------------
4
Blogger Ram Venkat said...
ஜோதிடப் புதிர்: வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்!!!!
வணக்கம்.
துலாம் லக்கினம், கன்னி ராசி ஜாதகி. அவர் பட்டப்படிப்பை முடித்து ஐஏஎஸ் தேர்வு பெற்று மாவட்ட ஆட்சியாராகப் பொறுப்பேற்றார். அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேர்ந்தது.
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
1) லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே அமர்வு மற்றும் 2,7ம் அதிபதி செவ்வாயுடன் கூட்டு. லக்கினத்திற்கு யோகாதிபதியான‌ வர்கோத்தம சனியின் 3ம் தனிப்பார்வையுள்ளது.
2) பட்டப்படிப்பிற்கான 4ம் இடத்தை கடகத்தில் அமர்ந்த பவர்ஃபுல் குரு (8 பரல்) தன் நேர் பார்வையிலிருத்தி ஜாதகியின் பட்டப் படிப்பிற்கு தடங்கலின்றி உதவினார்.
3) பட்ட மேற்படிப்பிற்கான 5மிடத்தை அதன் அதிபதி வர்கோத்தம சனி சிம்மத்தில் அமர்ந்து தன் நேரடிப்பார்வையில் ஜாதகியின் ஐஏஎஸ் ஆசையை நிறைவேற்றினார்.
4) புத்தி காரகன் புதன் 12ல் மறைவு, 10ம் அதிபதி சந்திரன் 12ல் மறைவு போன்ற அவயோகங்களை ஜாதகத்தில் ஹம்ச யோகம், மாளவ்ய யோகம் போன்ற ராஜ யோகங்கள் ஈடு கட்டின. மாவட்ட ஆட்சிப் பொறுப்பாளராக பணியேற்றபோது வந்த நடப்பிலுள்ள‌ குரு மகாதசை வெற்றி மேல் வெற்றி பெற உதவிற்று.
-இரா.வெங்கடேஷ்
Friday, April 05, 2019 2:57:00 PM
---------------------------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் கேள்விக்கான பதில் , வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் :
1 . படிப்பு மற்றும் வேலைக்கான இடம் நான்கு மற்றும் பத்தாம் இடமாகும் . இந்த ஜாதகருக்கு நான்காம் இடத்து அதிபதி சனி பதினொன்றில் நின்று படிப்பின்னால் மிகுந்த லாபத்தை , அதாவது வெற்றியை தந்தார் . ஏனென்றால் துலா லக்கின ஜாதகருக்கு சனி மிகுந்த நன்மை செய்யும் கிரகமாகும் .
2 மேலும் வெற்றி ஸ்தான அதிபதி குரு பத்தாம் இடத்தில் உச்சமாக நின்று பல வெற்றிகளை தந்த தோடு மட்டுமல்லாமல் நல்ல அரசாங்க உயர் பதவியையும் தந்தார் .
3 நான்காம் இடத்தில் மாந்தி இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் அது வேலை செய்யாமல் போனது .
4 . மேலும் லக்கின அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் அமர்ந்ததும் , சூரியன் சுக்கிரன் புதன் நவாம்ச கட்டத்தில் வெற்றி ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகருக்கு தொடர் வெற்றியை தந்தார் .
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399.
Friday, April 05, 2019 4:29:00 PM
----------------------------------------------------------
6
Blogger Thanga Mouly said...
லக்கினம், லக்கினாதிபதி கூடவே 2ம், 10ம் வீடுகள் வலுப்பெற்ற ஜாதகம். குருவின் 5ம் பார்வையை 2ம் வீடு பெறுகின்றது. பூர்வ புண்ணியாதிபதி லாபஸ்தானத்தில்,
தொடர்ந்து வந்த செவ்வாய், ராகு மற்றும் குரு தசைகள் நன்மையே செய்துள்ளன.
ஏழரை ஆண்டுகால சனியின் தாக்கம் 30 வயதுவரை வராது, ஏறிய ஏணி வலுவுடன் அவரை இலக்கு நோக்கி பயணிக்க வைத்துள்ளது.
Friday, April 05, 2019 5:53:00 PM
--------------------------------------------------------
7
Blogger Unknown said...
Guru I s 10 th place, puthan is uccham
Saturday, April 06, 2019 12:40:00 AM
-----------------------------------------------------------
8
Blogger Shanmugasundaram said...
Good morning sir the celebrity was born on 02/10/1978 8.15am lagna lord in lagna makes Malvya yoga Yogakaran Saturn in 11th house in vargottama Jupiter also in exalted makes Hamsa yoga 9th lord in exaltation,Dharmakarmathipathy yoga, Amasavasa yoga,Nipuna yoga, Amala yoga,Bheri yoga and Mridanga yoga was present She might have passed her IAS during Rahu dasa venus bukthi and in Astavarga tenth house having 39paral all the above makes her success
Saturday, April 06, 2019 10:23:00 AM
----------------------------------------------------------
9
Blogger TRB. Sanjai Kumarr said...
1. Budha is exalted & own house in rasi chart. Association of Sun & budha both in
rasi & navamsa chart
2. Sun & moon in same rasi gives, authority and wealth. Further association of Budha
gave the native qualify in IAS exam
3. 10th house is occupied by guru, which gave success in profession. Though mandhi
is there in 4th house, it is aspected by guru. Hence the native got good
education.
4. Further, in 11th house occupied by Saturn, who is lord of profession. Hence
success came in the profession. Also saturn got vargottamam. Hence saturn
becomes powerful and gave good success in the carrier.
Thanks & Regards,
TRB. Sanjai Kumarr
Saturday, April 06, 2019 6:02:00 PM
-----------------------------------------------------------
10
Blogger classroom2007 said...
Horoscope lesson- 04-05-2019
வணக்கம்.
02 அக்டோபர் மாதம் 1978, காலை 8.15 மணிக்கு, ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி துலா லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகி பிறந்தார்.
1. லக்கினாதிபதி சுக்கிரன் (4 பரல்) லக்கினத்தில் - அழகான கண்களை உடையவர். புன்சிரிப்பால் எல்லோரையும் ஈர்க்கும் கவர்ச்சி உடையவர் . மேலும் செவ்வாயுடன் கூட்டு. தைரியம் மிக்கவர்.
2. இந்த ஜாதகத்தில் மிக்க பலம் பொருந்தியவர் குரு (8 பரல்) 10ம் வீட்டில் கடக ராசியில் உச்சம் பெற்று 7ம் பார்வையால் 4ம் வீட்டை பார்க்கிறார் . ஷட்பலத்தில் 145% குரு பலம் பொருந்தியவர் . கல்வியில் மிக உயர்ந்த பட்ட படிப்பை பெற்று சிறந்து விளங்கியதற்கு இது தான் காரணம்
3. உச்சமான குருவின் 5ம் பார்வை 2ம் வீட்டை பார்ப்பதால் இரண்டாம் வீடு (31 பரல்) பெற்று நல்ல குடும்பம், நல்ல செல்வ நிலை பெற்று சிறப்பாக அமைந்துள்ளது .
4. உச்சமான குரு 10ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவார். 10ம் வீடு (39 பரல்) பெற்று மிக பலமானதாக உள்ளது.
5. 11ம் வீட்டில் சனி (4 பரல்) இருப்பதால் அரசாங்க வேலை கிடைத்தது 11ம் வீடு 31 பரல்.
6. 6ம் வீட்டில் கேது இருப்பதால் எதிரிகளை வெல்லும் திறமை உடையவர்.
7. இந்த ஜாதகத்தில் நிறைய யோகங்கள் உள்ளன . சுக்கிரன் செவ்வாய் லக்கினத்தில் இருந்தால் ராஜ யோகம் உடையவர் (கல்யாண வர்மா சரவள்ளி )
8. 33 வயதில் 2011-2017 வரை குரு மகா தசை - வாழ்க்கையில் சிறந்து பல வெற்றிகளை பெற கூடிய காலம்.
9. ஜாதகத்தில் சூரியன்/புதன் இணைந்து லக்னத்திற்கு 12-ம் வீட்டில் இருப்பதால் ஜாதகி அனைத்து சௌபாக்கியம்/சௌகரியத்தையும் அனுபவித்தும், மகிழ்வான குடும்ப வாழ்க்கை வாழ்வதோடு மற்றவர்களும் நன்கு வாழவைப்பார்
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Sunday, April 07, 2019 12:01:00 AM
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!