கவுசிகரின் கதை!!!!!
கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,.....
எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள்.
ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம்தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே "சுளீர்' என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை.
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'......
ஓர் கண்ணோட்டம்.....
ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்......
தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது.
பொறுமையாக இதைப்படியுங்கள்.
கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார்.
அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது.
கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது.
ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது' என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார்.
அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது.ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார்.
அவள் "திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள்.
அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய வேண்டி வந்தது.
அன்புடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்டு பின்னர் திண்ணையில் பசியுடன் காத்திருக்கும் ரிஷியின் நினைவு வந்து, உணவுடன் வாசலுக்கு ஓடிவந்தாள்.
கவுசிகனுக்கோ கோபமான கோபம்.
கடுங்கோபத்துடன் தம் தபோ வலிமை தெரியட்டும் என்ற நினைப்பில் எரித்து விடும் எண்ணத்தில் அந்தப் பெண்ணை நோக்கினார்.
அவளோ அலட்சியமாகச் சிரித்தபடி "என்ன.. சாமியாரே! என்னை என்ன கொக்கு என்று நினைத்துவிட்டீரா? உம் கோபத்தில் எரிந்து போவதற்கு?' என்று கேலி பேசினாள்.
கவுசிகன் நடுங்கி ஒடுங்கிப் போய் விட்டார்.
அவள் மேலும் சொன்னாள்.
"நான் குடும்பப் பெண். என் கடவுள் என் கணவர் தான்.அவருக்கான பணிவிடைகளைச் செய்தபின் தான், கடமைகளை முடித்தபின் தான், வேறு எதிலும் நான் ஈடுபட முடியும்.நீர் பெரிய தபஸ்வியாக இருக்கலாம்.. ஆனால், குடும்பப் பெண் குடும்பக் கடமைகளைவிட்டு விட்டு சாமியாருக்குப் பணி விடை செய்ய வேண்டுமா என்ன?
கடமைகள் முடிந்த பிறகு வேண்டுமானால் செய்ய முடியும்' என்றாள்.
இன்று #எத்தனைபெண்கள் #இந்தஉண்மைகளைப் #புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதே என் வருத்தம்.
வீட்டில் குழந்தைகள் தாய், தகப்பன், மாமன், மாமி, கணவன் யாரையும் கவனிக்காது வீட்டில் போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஆஸ்ரமங்களில் போய் கூட்டிப் பெருக்கி பூக்கட்டி, அந்தச் சாமியார் பின்னாலும், இந்தச் சாமியார் பின்னாலும் அலைந்து, பக்திப் பயிர் வளர்ப்பது சகிக்கக் கூடியதா என்ன?
கடமைகளைச் செய்வதுதான் உண்மையான வழிபாடு என்றும், சாமியாரை விடு.. மாமியாரை மதி' என்று கன்னத்தில் அறைகிற மாதிரி சொல்லவில்லையா ?
இந்த மகாபாரதக் கதை!
கவுசிகனுக்குப் பெண் எரியாதது ஆச்சரியம். அதைவிட தான் காட்டில் கொக்கை எரித்தது எப்படித் தெரிந்தது என்று பெரும் ஆச்சரியம்!
காட்டில் தவம் செய்கிறவன் பெறும் ஸித்தியை, வீட்டில் கடமை ஆற்றும் பெண்ணும் பெற்று விடுகிறாள் என்பதே அந்தப் பெண்ணின் பதில்.
அவள் மேலும் சொன்னாள், நீர் வேதங்களைக்கற்றும் தவம் புரிந்தும் தர்மம் இன்னது என்று கற்று அறிந்தவர் தானே ..ஆனல் உமக்கு எது தர்மம் என்று தெரியவில்லை ஆகையால் மிதிலைக்குப்போய் அங்கு தர்மவியாதர் என்ற உத்தமரிடம் தர்மத்தை அறிந்து கொள்ளும், என்று அனுப்பி வைத்தாள்.
மிதிலை வந்து தர்ம வியாதரைத் தேடிய போது கவுசிகனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம்,தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரர்.இறைச்சி வணிகர்.
கவுசிகன் அருவருப்பை மறைத்துக் கொண்டு அவர்முன்போய் நின்றதும்,
முனிவரே.. உம்மை அந்தக் கற்பரசி அனுப்பி வைத்தாளா?'' என்று கேட்டதும் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
கொஞ்சம் பொறுங்கள்.மீதமான இறைச்சி யையும் விற்றுவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி கவுசிகனை உட்கார வைத்தார்.
பின்னர் வீடு போனதும்,தம் தாய் தந்தையருக்குச் சகல பணி விடைகளையும் செய்து அவர்கள் சந்தோஷமடையும்படி, கடமைகளாற்றிவிட்டு வந்து கவுசிகனிடம் பேசத் தொடங்கினார்.
வேதியரே! என் தொழில் கண்டு நீர் வெறுப்படைந்தீர்.இது வழிவழியாக வந்த தொழில்.நான் உயிர்களைக் கொல்வதில்லை. மற்றவர்களால் மரணமடைந்த விலங்குகளின் புலாலை ஈஸ்வர அர்ப்பணமாக விற்கிறேன்.
இல்லறத்தானுக்குரிய உபவாசம், அளவான பிரம்மச்சர்யம் மேற்கொள்கிறேன்.மனத்தாலும் எவருக்கும் தீங்கு செய்யேன்.
எனக்குத் தீங்கு செய்தவருக்கும் நான் தீங்கிழைப்பதில்லை. அறிந்தும் அறியாதும் செய்த சகல பாவங்களுக்காகவும் கடவுளிடம் நாள்தோறும் மன்னிப்பு கேட்பேன்,'' என்று தர்மத்தை விளக்கினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ""இதோ உள்ள என் தாய் தந்தையர் எனக்குக் கண்கண்ட கடவுள். இவர்கள் தான் என் வேதம். என் யாகம். அவர்கள் முதுமை காரணமாக என்னைச் சிரமப்படுத்தினாலும், இன்னுரை கூறி அவர்களுக்கேற்ற உணவளித்து உபசரிக்கின்றேன். இவர்கள் ஆசியால் எனக்குச் சகலசித்திகளும் உண்டாகிவிட்டன.
ஆனால், நீர் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு தவம் செய்யப் போய்விட்டீர். உம் பெற்றோர் குருடர்களாகி தடுமாறி துன்புறுகிறார்கள்.
அவர்கள் மேலும் தவிக்காதபடி போய் உம் கடமையை ஆற்றுங்கள்,'' என்று கூற கவுசிகன் நாணத்துடன் புறப்பட்டார்.
இந்தக்கதையை இளம்பிள்ளைகள் ஒரு முறைக்கு நூறுமுறை படிக்க வேண்டும்.
பெற்றோரைக் கடுஞ்சொல் பேசி ஏசி நோகடித்து விட்டு முதியோர் இல்லங்களில் அநாதை போல அலைய விட்டு விட்டு கோயில் கோயிலாகப் போய் கும்மியடிக்கிறார்கள்.
இந்தப்பக்தி #வெறும் #வேஷமில்லையா?
இன்று எத்தனை சாமியார்களின் கார்ப்பரேட் கம்பெனிகளில் உயர வேண்டிய இளைஞர்கள் வேலைக்காரர்களாக, இலவச (பரவச!) ஊழியர்களாக வலம் வருகிறார்கள் தெரியுமா?
மரணத்திற்கு முன்பே பெற்றோர் வயிற்றில் கொள்ளி வைத்துவிட்டு பகவான்கள் பின்னாலும், அல்ப ஆனந்தாக்கள் பின்னாலும் ஆடிப்பாடிக் கொண்டு அலையும் அசட்டு ஆத்மாக்களைக் கண்டு என் நெஞ்சு பதறுகிறது!....
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும்.இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல,
உங்கள் இலக்கினை அடையும் வரை.
கோவிலில் பெரியவர் சொல்ல சொல்ல கேட்டு பிடித்தது எனக்கு.!!!!!!
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வணக்கம் குருவே,
ReplyDeleteஇளம் வயதில் ஒருமுறை Moral Instruction வகுப்பில் கேட்ட கதை ஐயா!
புளகாங்கிதம் அடைந்தேன். இதில் கூறியுள்ளது போல் பெற்றோரையும் தான் கைப்பிடித்த பெண்ணையும்
உயிருக்கு உயிராய் காத்து வந்தால்
ஆடவருக்கும், தங்கள் கணவன்மார்களை மரிதையாதையுடன் வணங்கும் பெண்களுக்கும் இறைவன் கருணை புரிவான் என்பது தெளிவு!
போலி சாமியார்களின் முன் வரிசையில் எத்தனை எத்தனை
பெண்கள், குடும்பத் தலைவிகள்....
சில நாட்களுக்க்குப் பின் சீரழிந்து
போகிறார்கள்.
பதிவிரதைகவ், உத்தமப் பெண்கள்
இன்னும் உள்ளனர்
தவசீல ஆடவர்களும் இருக்கின்றனர். ஆனால் இவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதுதான் நாட்டின் அவலநிலைக்குக் காரணம் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை!
காலம் தானே உணர்த்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதும் நிதர்சனம்!
பதிவுக்கு நன்றி ஆசானே!👍💐
அருமை ஐயா...கதையும் உமது கருத்தும்...
ReplyDeleteGood evening sir excellent and truthful thanks sir vazhga valamudan
ReplyDeleteஇந்த காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு அய்யா...
ReplyDelete//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
இளம் வயதில் ஒருமுறை Moral Instruction வகுப்பில் கேட்ட கதை ஐயா!
புளகாங்கிதம் அடைந்தேன். இதில் கூறியுள்ளது போல் பெற்றோரையும் தான் கைப்பிடித்த பெண்ணையும்
உயிருக்கு உயிராய் காத்து வந்தால்
ஆடவருக்கும், தங்கள் கணவன்மார்களை மரிதையாதையுடன் வணங்கும் பெண்களுக்கும் இறைவன் கருணை புரிவான் என்பது தெளிவு!
போலி சாமியார்களின் முன் வரிசையில் எத்தனை எத்தனை
பெண்கள், குடும்பத் தலைவிகள்....
சில நாட்களுக்க்குப் பின் சீரழிந்து
போகிறார்கள்.
பதிவிரதைகவ், உத்தமப் பெண்கள்
இன்னும் உள்ளனர்
தவசீல ஆடவர்களும் இருக்கின்றனர். ஆனால் இவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதுதான் நாட்டின் அவலநிலைக்குக் காரணம் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை!
காலம் தானே உணர்த்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதும் நிதர்சனம்!
பதிவுக்கு நன்றி ஆசானே!👍/////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!!💐
/////Blogger Madurai Veeran said...
ReplyDeleteஅருமை ஐயா...கதையும் உமது கருத்தும்...//////
நல்லது. நன்றி நண்பரே!!!!!!
//////Blogger Shanmugasundaram said...
ReplyDeleteGood evening sir excellent and truthful thanks sir vazhga valamudan//////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
//////Blogger வகுப்பறை said...
ReplyDeleteஇந்த காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு அய்யா...//////
நல்லது. நன்றி!!!
பின்னூட்டத்தில் உங்கள் பெயரையும் எழுதுங்கள் நண்பரே!!!!
//////Blogger வகுப்பறை said...
ReplyDeleteஇந்த காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு அய்யா...//////
நல்லது. நன்றி!!!
பின்னூட்டத்தில் உங்கள் பெயரையும் எழுதுங்கள் நண்பரே!!!!
Reply
முருகன் ஜெயராமன்
புதுச்சேரி
Dear Sir, Excellent message I heard about Kousik story but not dharma vyathar story. Very much impressed with this message. The Reason for those people who are behind the corporate samiyars is the young people are impressed with few good deeds done to them initially and most of these people does not have considerable knowledge on karma and puniyam etc. Today world go with fast and speedy recovery or solution. Hence they believe going behind them . My Strong Believe is What ever good thing you do but your parents and family members are unattend by you then you are a copy of Kousik and you are travelling in reverese direction towards the God. Thank you again for wonderful message.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Its very useful for this generation...
Thanks a lot for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn
Very nice moral
ReplyDelete//////Blogger வகுப்பறை said...
ReplyDeleteஇந்த காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு அய்யா...//////
நல்லது. நன்றி!!!
பின்னூட்டத்தில் உங்கள் பெயரையும் எழுதுங்கள் நண்பரே!!!!
Reply
முருகன் ஜெயராமன்
புதுச்சேரி/////
நல்லது நன்றி!!!!
/////Blogger Elavalagan said...
ReplyDeleteDear Sir, Excellent message I heard about Kousik story but not dharma vyathar story. Very much impressed with this message. The Reason for those people who are behind the corporate samiyars is the young people are impressed with few good deeds done to them initially and most of these people does not have considerable knowledge on karma and puniyam etc. Today world go with fast and speedy recovery or solution. Hence they believe going behind them . My Strong Believe is What ever good thing you do but your parents and family members are unattend by you then you are a copy of Kousik and you are travelling in reverese direction towards the God. Thank you again for wonderful message./////
நல்லது. நன்றி நண்பரே!!!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Its very useful for this generation...
Thanks a lot for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn///////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery nice moral/////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!