மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 31 - 40. Show all posts
Showing posts with label Lessons 31 - 40. Show all posts

3.10.07

ஜோதிடப் பாடம் - பகுதி 40




ஜோதிடப் பாடம் - பகுதி 40

இன்று கதை கிடையாது. வெறும் பாடம் மட்டும்தான்.
நேற்று பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் கதையின்
தொடர்ச்சி இரண்டு நாட்கள் கழித்து வரும்.

உலகில் அனைவருடைய ஜாதமும் சமம்தான். அவனு
டையது உயர்வானது. இவனுடையது மட்டமானது
என்று எதுவும் கிடையாது. எவனும் கொம்புடன்
பிறக்கவில்லை!

அது எவ்வாறு என்பது அஷ்டவர்க்கம் என்னும்
ஜோதிடப் பாடம் நடத்தும்போது உங்களுக்குத் தெள்ளத்
தெளிவாக விளங்கும். அது சற்றுப் பெரிய பகுதி.

அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்த பிறகு
அந்தப் பகுதிக்கு வருவேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.

அஷ்டவர்க்கத்தில், எந்தவொரு ஜாதகத்திற்கும் மொத்த
மதிப்பெண் 337 பரல்கள் தான். ஜனாதிபதி பிரதீபா அம்மை
யாருக்கும் 337 பரல்கள்தான். தஞ்சாவூர்ப் பகுதியில் -
வயல் வரப்புகளில் தினக்கூலியாக வேலை பார்க்கும்
வெள்ளைச்சாமிக்கும் 337 பரல்கள்தான்.

முகேஷ் அம்பானிக்கும் 337 பரல்கள்தான். அவருடைய
கார் டிரைவருக்கும் 337 பரலகள்தான். நடிகை சிநேகா
விற்கும் 337 பரல்கள்தான். அவருடன் திரைப்
படத்தில் உடன் நடனமாடும் அததனை நடனப்
பெண்களுக்கும் (extra actresses) 337 பரல்கள்தான்.

ஒரு நாயர் கடையில் அமர்ந்து, இரண்டு வாழைக்காய்
பஜ்ஜி, ஒரு மசாலா டீ சாப்பிட்டுவிட்டு, ஒரு சிகரெட்
டைப் பற்ற வைத்து வலித்துக் கொண்டு, "லே
ஜாயேங்கே, லே ஜாயேங்கே என்ற பாட்டைக் கேட்ட
வாறு, முகேஷ் அம்பானியின் டிரைவரால் ஆனந்தமாக
ஒரு மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியும்.
முகேஷ் அம்பாணியால் முடியுமா?

பிரதிபா அம்மையாருக்கு - ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
- Protocol கள் உணடு

தில்லி கனாட் பிளேஸ் சதுக்கம் பகுதிக்குத் தனியாகச்
சென்று ஒரு ரவுண்ட் அடித்துச் சுற்றி விட்டு, ஒரு சாட்
கடைமுன் நின்று ஒரு பிளேட் பேல்பூரி சாப்பிட்டு விட்டு
வரலாம் என்றால் அரசு இயந்திரங்கள் - அவருடைய
பாதுகாப்பை முன்னிட்டு - அதை அனுமதிக்காது.

வெள்ளைச் சாமிக்கு வேறு விதமான பிரச்சினை இருக்கும்.
தன் மனைவிக்கும், மகளுக்கும், தினசரி இரண்டு வேளை
சூடான அரிசிச் சோற்றிற்கு வழி பண்ணக் கூட வருமானம்
இருக்க்காது. அதற்காக அவன் கவலைப் படமாட்டான்.
இருக்கிற கஞ்சியைப் பகிர்ந்து குடித்து விட்டு, வீட்டு வாசலில்
இருக்கும் வேப்ப மரத்து நிழலில், கயிற்றுக் கட்டிலில்
படுத்து நிம்மதியாகத் தூங்குவான்.

ஒருவனுக்கு இருப்பது இன்னொருவனுக்குக் இருக்காது.
இல்லாதவனுக்குக் கிடைத்தது, பொருள் இருப்பவனுக்குக் கிடைக்காது

அதைத்தான் கண்ணதாசன்,
"பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது;
பஞ்சனையில் காற்றுவரும் தூக்கம்வராது" என்றார்.

ஒருவன் அழகை ஆராதிப்பவ்னாக இருப்பான். அவனுக்குக்
குரங்குபோன்ற மனைவி வந்து சேர்வாள் (தோற்றத்தில்
அல்லது குணத்தில்) ஒருவனுக்கு கிளி போன்ற மனைவி
கிடைப்பாள். அவன் அவளைப் புறக்கணித்து விட்டுக் குரங்கு
போன்ற பெண்ணோடு தொடர்பு வைத்து, மகிழ்ந்து
கொண்டிருப்பான்.

எல்லாம் அவனவன் வாங்கி வந்த வரம். முன் வினைப் பயன்.

கடவுள் அங்கேதான் தன்னுடைய கைவண்ணத்தைக்
காட்டியுள்ளார். அவருடைய படைப்பில் அனைவரும் சமம்.
ஆகவே மொத்தப் பரல்களும் சமம்.

பிரச்சினைகள், கவலைகள் எல்லோருக்கும் பொதுவானது.
அவை இரண்டும் இல்லாத மனிதனே கிடையாது.

நமக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்குப் பிரச்சினை
இருக்கும்.அம்பானி களுக்கு அது கோடிகளில் இருக்கும்.
பிரச்சினை பிரச்சினைதான்.

எல்லோருக்கும் ஒரு ஜான் வயிறுதான்.
உடலில் ஒன்பது வாசல்கள்தான்

பணம் இருப்பதற்காகத் தட்டில் தங்கத்தை வைத்துச் சாப்பிட முடியாது!

எல்லா உணவும் தொண்டைவரைக்கும் தான். ஐ.ஆர் 20
அரிசியானால் என்ன? பாசுமதி அரிசியானால் என்ன?
ருசி தொண்டை வரைக்கும்தான். அதற்குப் பிறகு
எல்லா உணவும் ஒன்றுதான்.

ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்ன? பாய் விரித்த
படுக்கை என்ன? தூக்கம் வரும்வரைதான் வித்தியாசம்.
துங்கிவிட்டால் எல்லா இடமும் ஒன்றுதான்.

பணக்காரன் பத்து லட்ச ரூபாய்க் காரில் பயணிப்பான்.
ஏழை இருபது லட்ச ரூபாய் பஸ்ஸில் பயணிப்பான்.
பயணம் ஒன்றுதான். இவனுக்காவது பஸ்ஸில்
உடன் 57 பேர்கள் துணையுண்டு. அவனுக்கு அவனே
துணை. அல்லது வண்டி ஓட்டும் டிரைவர் மட்டுமே துணை.

எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது.
சந்தோசம் முற்றிலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம்
அல்ல. அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்

ஜாதகத்தில் பணம் இரண்டாம் வீட்டை வைத்து.
சந்தோசம் ஐந்தாம் வீட்டை வைத்து.

ஆகவே ,ஒரு நாள் பாடத்தை மட்டும் படித்து விட்டு, தனியாக
உட்கார்ந்து குழம்பாதீர்கள். மொத்தப் பாடத்தையும் படித்து
விட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்

ஆகவே இந்தத் தொடர் முடிந்த பிறகு ஒரு முடிவிற்கு வாருங்கள்

ஜாதகப்படி மொத்தம் 36 பாக்கியங்கள் (12 கட்டங்கள்
x ஒரு கட்டத்திற்கு மூன்று பாக்கியங்கள் = 36 )
18 பாக்கியங்கள்தான் கிடைத்திருக்கும்.
18 கிடைத்திருக்காது. அவை என்னென்ன?

அதுதான் இனி வரப்போகும் பாடம். ஒவ்வொரு
கட்டமாகச் சொல்லித்தரப் போகிறேன்

இன்று லக்கினம் என்னும் முதல் கட்டம் அல்லது
முதல் வீட்டின் பலாபலன்கள்
-----------------------------------------------------------------
முதல் வீடு.

உடம்பில் தலைப் பகுதி எப்படியோ - அப்படித்தான்
ஜாதகத்தின் முதல்வீடு. அது லக்கினம் எனப்படும்.

1. லக்கினத்தின் அதிபதி யார்?

2. அவர் எங்கே சென்று அமர்ந்திருக்கிறார்.

3. லக்கினத்தின் பெயர் என்ன? அதனுடைய இயற்கைத் தன்மை என்ன?

4. லக்கினத்தில் வேறு எந்த கிரகம் வந்து குடியிருக்கிறது?

5. தனியாகக் குடியிருக்கிறதா? அல்லது வேறு
நல்ல/அல்லது தீயகிரகத்துடன் சேர்ந்து குடியிருக்கிறதா?

6. லக்கினம் எந்தெந்த கிரகங்களின் பார்வையைப் பெற்றுள்ளது?

7.லக்கினநாதன் நட்பு, உச்சம் பெற்று மேன்மை
அடைந்துள்ளாரா? அல்லது பகை நீசம் அடைந்து
கெட்டுப் போய் உள்ளாரா?

8.நவாம்சத்தில் லக்கினநாதன் ராசியில் உள்ளபடியான
வலுவுடன்தான் இருக்கிறாரா? அல்லது அங்கே
வலுவிழந்து இருக்கிறாரா?

9. லக்கினநாதனுக்கு திரிகோணம், கேந்திரம் ஆகிய
இடங்களில் அமரும் பாக்கியம் கிடைத்துள்ளதா?
அல்லது இல்லையா?

10. ஆறு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய மறைவிடங்
களுக்குரிய (தீய) கிரகங்களுடன் லக்கினாதிபதிக்கு
சேர்க்கை ஏற்பட்டுள்ளதா?

11. லக்கினாதிபதிக்கு அஸ்தமன சோகம் (combust)
ஏற்பட்டுள்ளதா?

12. லக்கினாதிபதியின் திசை நடை பெறுகிறதா?
அல்ல்து எப்போது அது வரும்?

13. லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளன?

14. லக்கினாதிபதி தனது ஆதிபத்தியமாகத் தனித்து
எத்தனை பரல்களுடன் உள்ளார்?

15. லக்கினத்திற்கு அதிபதியான கிரகம் natural benefic planetஆ
அல்லது malefic planet ஆ?

16. லக்கினாதிபதி - பொதுவில் - எதற்குக் காரகன் (authority)?

17.லக்கினத்திற்குரிய செயல் பாடுகள் என்னென்ன?

இப்படிப்பட்ட கேள்விகளுக்குரிய விடையைக் கண்டுபிடித்
தால்தான் லக்கினம் எப்படி உள்ளது என்று தெரிய வரும்.

அதேபோல 16 கேள்விகள் x 12 வீடுகள் = மொத்தம்
192 கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால்தான் ஒருவரின்
ஜாதகம் முழுமையாகத் தெரிய வரும்.

அதைத் தெரிந்து சொல்ல குறைந்தது இரண்டு மணி
நேரமாமவது ஆகும் அப்படியெல்லாம் பார்த்துப் பலன்
சொல்ல இப்போது எந்த ஜோதிடருக்குப் பொறுமை
யிருக்கிறது. ஆகவே நீங்கள் கேட்கும் ஒன்று அல்லது
இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு
உங்களை ஒட்டி வீட்டு விடுவார்

அந்தப் பலன்களும் சரியாக நடக்கவேண்டுமென்றால்
அடுத்துள்ள இரண்டு முக்கியம்

1. உங்கள் ஜாதகம் சரியாகக் கணிக்கப்பெற்றிருக்க வேண்டும்
2. அந்த ஜோதிடன் திறமை மிக்கவனாகவும், நல்ல
ஜோதிட அறிவு பெற்றவனாகவும் இருக்க வேண்டும


அதைவிட முக்கியம், அந்த ஜோதிடனுக்கு, அவன்
ஜாதகப்படி நல்ல தசாபுத்தி நடைபெற்றால்தான், அவன்
சொன்னது பலிக்கும். இல்லையென்றால் ஊத்திக் கொண்டு
விடும் (அவன் சொன்னது நடக்காது)

(பாடம் நாளையும் தொடரும்)
பதிவின் நீளம் கருதி, வகுப்பு இன்று இத்துடன் நிறைவு பெறுகிறது!
--------------------------------------------------------
I want feed back. Please send your views about the lesson

1.10.07

ஜோதிடம் மதுவா? மருந்தா?

ஜோதிடம் மதுவா? மருந்தா?

ஜோதிடப் பாடம். பகுதி 39

என் தந்தையார் ஜோதிடத்தில் அபார நம்பிக்கை
கொண்டவர். அவரை வைத்துத்தான் எனக்கும்
ஜோதிடத்தில் நம்பிக்கை ஏற்பட்டது.

அதே போல் என் தாய்வழிப் பாட்டனாரும் ஜோதிடத்தில்
அபார நம்பிக்கை உள்ளவர். அவரிடமிருந்து சுமார் 300
ஜாதங்களும், அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் அடங்கிய
- கையால் எழுதப்பெற்ற புத்தகமும் கிடைத்தது.
கிடைத்தபோது, என் சேகரிப்புப் பழக்கத்தினால் அதை
மற்ற புத்தகங்களுடன் பத்திரமாக வைத்திருந்தேன்.
அது கிடைத்தபோது பிற்காலத்தில் அது உதவும்
என்று எனக்குத் தெரியாது

பிறகு ஜோதிடத்தை - சுயமாக நானே படித்துக் கற்ற
காலத்தில் பயிற்சிக்கு (Practical Class) அந்தப் புத்தகம்
பேருதவியாக இருந்தது.

என் தந்தையாருக்கு ஜோதிடத்தில் அரிச்சுவடிகூடத்
தெரியாது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில்
நிறைய ஜோதிடர்களின் தொடர்பும், நட்பும் அவருக்கு
இருந்தது.

அவர்களில் சிலர் எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள்.
முக்கியமாக மூன்று பேர்கள். அந்த மூவரில் இருவர்
கேரளாவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்
ஒருவர் தஞ்சைக்காரர்.

அந்த மூவருமே அசத்தலாகப் பலன் சொல்லக்கூடியவர்கள்
(அதெல்லாம் பின்னால் வரும்)

கேரளாவில் பணிக்கர் இனத்தவரும், தஞ்சைப் பகுதியில்
வள்ளுவர் எனக்கூறப்படும் இனத்தவர்களும் ஜோதிடத்தில்
கரை கண்டவர்களாக இருந்தார்கள். முற்காலத்தில், அந்த
இனத்தவரில் பலர் முறைப்படி ஜோதிடம் கற்று, அதையே
தொழிலாகக் கொண்டு, அதிலேயே திளைத்தவர்களாக
இருந்தார்கள்.

ஆனால் இன்று அப்படியல்ல!

அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. நல்ல ஜோதிடர்கள்
குறைந்து விட்டார்கள். தேடிப் பிடிக்க வேண்டிய நிலைமை.
சிலருக்குத் திருமணப் பொருத்தம் மட்டுமே பார்க்கத் தெரியும்

முன்பு கல்வி, மருத்துவம், ஜோதிடம் ஆகிய மூன்றுமே
தர்மத்தொழிலாகக் கருதப்பெற்றது. அந்த மூன்று துறைகளில்
இருந்தவர்களுமே மக்களுக்கு அதைச் சேவையாகச் செய்து
கொண்டிருந்தார்கள். மக்களின் துயரங்களைத் துடைத்துக்
கொண்டிருந்தார்கள். அது தர்மத் தொழில் என்று சொல்லப்
பட்டதால் யாரிடமும் கைநீட்டிக் காசு வாங்கமாட்டார்கள்.

மீறிக் கட்டாயப் படுத்திக் கொடுத்தால், வீட்டில் ஒரு
ஓரத்தில் வைத்திருக்கும் உண்டியலில் போட்டுவிட்டுப்
போகச் சொல்லி விடுவார்கள்.

சரி, அவர்களுடைய ஜீவனம் எப்படி நடந்தது?

சில இடங்களில் மன்னர்களும் (உதாரணம் மைசூர்,
புதுக்கோட்டை, இராமநாதபுரம்) சில இடங்களில்
ஜமீன்தார்களும், சில இடங்களில் பெரிய பண்ணையார்
களும், சில இடங்களில் மிட்டாமிராசுகளும் அவர்களுக்கு
வருடச் செலவிற்கு அரிசி, பருப்பு, எண்ணெய், விறகு
என்று பொருட்களாகவும், காசு பணமாகவும் மானியம்
அளித்துக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் பத்து
ஏக்கர் முதல் நூறு ஏக்கர் வரை அவர்களுக்கு நிலங்கள்
இலவசமாகக் கொடுக்கப்பட்டு - அதில் இருந்து கிடைத்த
குத்தகைப் பணத்தில் அவர்களுடைய வாழ்க்கை
நிம்மதியாக நடைபெற்றது. அவர்களும் ஊருக்கு உழைத்தார்கள்.

இதைச் சொன்னால இன்றைய இளைஞன் நமபமாட்டான்.
ஏனென்றால் காலம் காலமாக நம் திரைப்பட வல்லுனர்கள்
அவர்களையெல்லாம் வில்லன்களாகவே சித்தரித்துக்
கதைகளை ஓட்டி வந்ததால் இன்று யாருக்கும் ஜமீன்தார்கள்,
மற்றும் பண்னையார்களின் உண்மைக்கதைகள் எடுபடாது.

இரண்டொருவர் கொடுமைக்காரர்களாகவும் இருந்திருக்கலாம்
- இந்தத் திரைப்பட வில்லன்களால், ஒட்டு மொத்தமாக
அவர்கள் யாரையுமே நமக்குப் பிடிக்காமல் போய்விட்டது.

இன்று என்றால், குத்தகைக்காரனுடன் ஜோதிடர் கோர்ட்டிற்கு
அலைந்து கொண்டிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் அப்படி
எவனாது செய்தால், அவனை ஊர்மக்களே மரத்தில் கட்டி
வைத்துப் பின்னி எடுத்து விடுவார்கள். பணமும் வசூலாகிவிடும்.

பணக்காரன், ஏழை என்ற பாகுபாடின்றி அன்றைய மக்கள்
அனைவரும் தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக
இருந்தார்கள்.

இன்றைய நிலைமையை நான் எழுத வேண்டியதில்லை
- உங்களுக்கே தெரியும்!

அப்போதெல்லாம் வாழ்க்கை மிக எளிமையாக இருந்தது.
மக்களும் பெரிய ஆசைகள் எதுவும் இல்லாதவர்களாக
இருந்தார்கள்.

ஒரு பவுன் தங்கம் ரூபாய் பதின்மூன்று என்ற நிலை
யிலும், ஒரு மூட்டை அரிசி ரூபாய் எட்டு என்ற
அளவிலும் இருந்திருக்கிறது. நான் கூறும் காலம்
1900 ம் ஆண்டு முதல் 1939ம் ஆண்டு வரை என்று
வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு முன்பு, விலவாசிகள் இன்னும் குறைவாக
இருந்திருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் ஒரு கட்டிட மேஸ்திரியின்
தினக்கூலி நான்கு அணாதான் (0.25 பைசாதான்)
ஒரு சித்தாளின் தினச்சம்பளம் இரண்டு அணாதான்
(0.12 பைசாதான்) பஞ்சாலைக் கணக்காளரின் மாதச்
சம்பளம் மாதம் ரூபாய் 15.00 தான்

இப்போது அந்தப் பதினைந்து ரூபாயில் ஒரு மசால்
தோசைகூடச் சாப்பிட முடியாது.

1939 முதல் 1945ஆம் ஆண்டுவரை நடந்த இரண்டாவது
உலக யுத்தம்தான் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டி
ருக்கிறது.

அது கிடக்கட்டும், Main Storyக்கு வருகிறேன்.

திரு. ஆசான் என்பவர்தான் (பெயரே ஆசான் என்றுதான்
சொல்வார்கள்) என் தந்தையாரின் ஜோதிட நண்பர்களில்
முக்கியமானவர்.

தினமும் எங்கள் வீட்டில், மாலை நேரத்தில் நடக்கும் சீட்டுக்
கச்சேரிக்கு அவர் தவறாமல் வந்து விடுவார்.

அப்போது என் தந்தையார் தேவகோட்டையிலேயே -
எங்கள் உள்ளூரிலேயே வாழந்து கொண்டிருந்தார்.
எங்கள் வீடு வழக்கமான செட்டிநாட்டு வீடுகளைப்
போல பிரம்மாண்டமான வீடு. தேக்கு மரங்களாலேயே
இழைத்துக் கட்டப்பெற்ற வீடு.

அகலம் 80 அடிகள், நீளம் 160 அடிகள் என்ற அளவில்
முகப்பு, உள்கட்டு, நடுவாசல் (முற்றம்) 2 & 3 உள்கட்டு,
வளவு, மேல்மாடி, 20 அறைகள் என்று மொத்தம்
15,000 சதுரஅடிகள் கட்டிடப் பகுதியைக் கொண்ட வீடு

அது 1895ம் ஆண்டு கட்டப் பெற்றதாகும். கூட்டுக் குடும்ப
வாழ்க்கை. அய்யா, அப்பத்தா (தாத்தா & பாட்டி) பெரியப்பா,
சித்தப்பா அவர்களுடைய குழந்தைகள், சமையல்காரர்,
வண்டிக்காரர் என்றும் மொத்தம் நாற்பது முதல் ஐம்பது
தலைகள் ஒருமித்து ஒற்றுமையுடன் வாழந்த காலம்.

மாலை நேரங்களில் முகப்பில் உள்ள அறையில் வீட்டு
இளைஞர்களும், அவர்களுடைய நண்பர்களூம் பொழுது
போக்காக சீட்டு (Playing Cards) விளையாடுவது சர்வ
சாதாரணம் (அந்தச் சிற்றுரில் வேறு பொழுது போக்கு
இல்லை) இளைஞர்களுடன் பெரியவர்களும் சேர்ந்து
விளையாடுவார்கள். கலகலப்பாக இருக்கும்

Point ற்கு காலணா அல்லது அறையணா, அல்லது
ஒரு அணா வைத்து விளையாடுவார்கள். ரூபாய்க்கு
பதிணாறு அணாக்கள் என்பதை நினைவில் கொள்க

அப்போது ஒரு பெரிய அளவு இட்லியின் விலை
காலணாதான். நான்கு இட்லிகளுக்குமேல் சாப்பிட
முடியாது. விடுதிகளில் சாப்பிடுபவர்கள் ஒரு அணாவில்
காலைப் பலகாரத்தை முடித்துக் கொண்டு விடலாம்.

இந்தத் தசாம்சப் பணமெல்லாம் (பத்து பைசா, இருபது
பைசாவெல்லாம்) 1957ம் ஆண்டுதான் அறிமுகப் படுத்தப்
பெற்றது.

நான் சொல்வதெல்லாம் 1941ம் ஆண்டு முதல் 1947ம்
ஆண்டு வரையான காலம். அப்போது என் தந்தையார்
இளைஞர். இந்தக் கதைகளெல்லாம் அவர் வர்ணனையுடன்
சொல்லச் சொல்ல - பல முறைகள் கேட்கக் கேட்க
என் மனதில் பதிந்து விட்ட பழைய நிகழ்வுகளாகும்

அப்போது என் தந்தையின் நண்பர் ஆசான்,
கேரளாவில் இருந்து தேவகோட்டைக்கு வந்து ஒரு
பெரிய வீட்டின் முகப்புப் பகுதியில் தங்கிக் கொண்டு
ஜோதிடத் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்.

உள்ளூர், மற்றும் சுற்றுப் பகுதிக் கிராம மக்கள் என்று
கூட்டம் அலை மோதும்.

காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி
வரை மட்டுமே ஜாதகங்களைப் பார்த்துப் பலன் சொல்லுவார்.

சூரிய அஸ்தமனத்திற்கு மேல் கிரகங்களைக் கழித்துப்
பார்க்கக்கூடாது என்ற தன் கொள்கையால், எங்கள்
வீட்டிற்குச் சீட்டாடக் கிளம்பி வந்து விடுவார்

மாதத்தில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை
நாட்டுக்குப் போய் வருகிறேன் என்று தன் சொந்த ஊரான
பாலக்காட்டிற்குப் போய்வருவார். அவருடைய
குடும்பமெல்லாம் அங்கேதான் இருந்தது.
அசத்தலாகத் தமிழில் பேசவும், எழுதவும் செய்வார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை என் பெரியப்பா
விற்கும், மற்றும் வீட்டிள்ள இதர உறுப்பினர்களுக்கும்,
அவருக்கும் இடையே கலந்துரையாடல்
நடைபெற்றது.

பேச்சு மலையாள மாந்திரீகத்தைப் பற்றித் திரும்பும்போது,
என் பெரியப்பா, "ஆசான் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை
இருக்கிறது - ஆனால் மாந்திரீகத்தில் நம்பிக்கை இல்லை" என்று சொல்லப்போக, ஆசான் பிடித்துக்கொண்டு விட்டார்

"மாணிக்க அண்ணே (என் பெரியப்பாவின் பெயர்)
உங்களுக்கு மாந்திரீகம் உண்மையா? அல்லது இல்லையா?
என்று தெரியவேண்டும் அவ்வளவுதானே! இப்போதே -
இன்றே நிருபித்துக் காட்டுகிறென் - அதற்கு வேண்டிய பூஜை
சாமான்களை எழுதித் தருகிறேன். உங்கள் வீட்டு
வேலக்காரரை விட்டு வாங்கி வரச்சொல்லுங்கள்!"
என்று சொன்னவர் அடுத்த பத்து நிமிடங்களில்
ஒரு சிறிய சீட்டையும் எழுதிக் கொடுத்து விட்டார்.

அப்புறம்?

அப்புறம் நடந்ததுதான் மிகவும் சுவாரசியமான விஷயம்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
மற்றவை நாளை!
----------------------------------------
இந்தப் பதிவிற்குத் தொடர்பான படங்கள்
கீழே உள்ளன. அதையும் பாருங்கள்

எங்கள் வீட்டின் வீடியோ படம் உள்ளது.
அதை ஒரு வேறு ஒரு சமயத்தில் வலை
ஏற்றுகிறேன்.

இப்போது இரண்டு படங்களைப் பதிவிட்டிருக்கிறேன்.
அது எங்கள் வீட்டுப் படங்கள் அல்ல!
ஆனால் அது மாதிரி அமைப்புள்ள படங்கள்
அவை. பொதுவாக எல்லா வீடுகளும் இந்த
அமைப்பில்தான் இருக்கும். நீங்கள் பல
திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.
ஆகவே ஒரு பார்வைக்காக அவற்றைக்
கொடுத்துள்ளேன்
-------------------------------------------------





படத்தில் உள்ளது காலணா, அரையணா,
ஒரு அணா, இரண்டு அணா




மன்னர்கள் கால்த்துக் காசுகள்.
1.புதுக்கோட்டை அரசர் காலம்,

2. திருவாங்கூர் அரசர் ரவி வர்மா காலம், 3.
மன்னர் ஜார்ஜ் 5th

காலம்



படத்தைப் பெரிதாக்கிப் பாருங்கள்
1917, 1935, 1944, 1946 என்று காசுகள்

வெளிவந்த வருடம் கண்ணில் படும்
படத்தில் என் தந்தையாருடன் நின்று
கொண்டிருப்பவர் தான் (ஜிப்பாவுடன்)

ஜோதிட மேதை திரு. ஆசான்.
உட்கார்ந்திருக்கும் அன்ப்ர்கள்
என் தந்தையாரின்

நண்பர்கள். சுமார் 50 ஆண்டுக்ளுக்கு
முன்பு எடுக்கப்பெற்ற படம்




எங்கள் பகுதி வீடு ஒன்றின் முகப்புப் பகுதி

ஒரு வீட்ட்டின் வளவு - நடுவாசல்
பகுதி (Court Yard)
(தொடரும்)
----------------------------------
வெறும் பாடம் மட்டும் நடத்தினால் சுவாரசியமாக
இருக்காது. அதனால் பாடம், பயிற்சிவகுப்பு, மாதிரி
ஜாதகங்கள், ஜோதிடக்கதைகள், அனுபவக் கதைகள்
என்று பலவும் கலந்து இனிமேல் பதிவுகள் வரும்.
தொடர்ந்து படித்துப் இன்புறுங்கள்.
வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் வரும்
தினமும் பதிவு போட எனக்கு ஆசைதான்.
எழுதி தட்டச்ச வேண்டாமா?
----------------------------------------------

28.9.07

இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா?

விதிப்படிதான் நடக்குமா? பகுதி 4

இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால்
ஒரே ஒரு பதில்தான்:

இருக்கின்றார்! சர்வ நிச்சயமாக இருக்கின்றார்?

எப்படிச் சொல்கின்றாய்? ஆதாரம் இருக்கிறதா?

இறைவன் என்பவர் நம்பிக்கை' சம்பந்தப்பட்டவர்
அல்ல! அவர் உணரப்பட வேண்டியவர்!

Yes, God is not a matter for belief ;
He is to be understood

நம்பிக்கைக்குக்கு உரியது என்றால் ஆதாரம்
காட்டலாம். உணர்வில் இருப்பதற்கு எப்படி
ஆதாரம் காட்ட முடியும்?

சரி, நம்பிக்கை என்பது எது?
உணர்வில் கொள்வது என்பது எது?

நெருப்பு சுடும் என்பது தெரியும். ஆனால்
ஒரு சிறு குழந்தைக்கு அது எப்போது
தெரிகிறது? ஒரு முறை தன் கையால்
தொட்டு, சூடுபட்டவுடன்தான் அதற்குத்
தெரியும்.

எதையுமே பட்டு உணர்வதுதான் உணர்வு
ஏற்படும் அந்த உணர்வுதான், ஒன்றைப் பற்றி
நமக்கு ஒரு புரிதலைத்தருவது. அந்தப்
புரிதல்தான் அறிவு - அந்த அறிவுதான்
நம்பிக்கை - அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை!

இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்

உணர்வதுதான் அறிவு - அறிவு கொடுப்பதுதான்
அனுபவம் - அனுபவம் ஏற்படுத்துவதுதான்
நம்பிக்கை - நம்பிக்கைதான் வாழ்க்கை!

All are interlinked!
(எல்லாம் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை)

ஒருவன் எனக்கு இறை நம்பிக்கை இல்லை
என்று சொல்லும்போது என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.
உங்களால் ஒன்றும் செய்ய முடியாது!
யாரையும் திருத்துவதற்காக நீங்கள் பிறவி
எடுக்கவில்லை!

உணர்கிறவர்கள் உணரட்டும்;
உணராதவர்கள் உணராமலேயே போகட்டும்!

குடியின் தாக்கம் பற்றி - அது ஏற்படுத்தும்
அல்லது கொடுக்கும் கிறக்கமான உணர்வு
அல்லது கிளர்ச்சி பற்றி, ஒரு சொட்டு
மதுவைக் கூட அருந்திப் பார்க்காதவனுக்கு
எப்படித் தெரியும்?

ஒரு நல்ல ஃபில்டர் காப்பி சாப்பிட்டுவிட்டு,
ஒரு வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை
ஆர அமர உட்கார்ந்து குடித்துப் பாருங்கள்.
அப்போதுதான் தெரியும் சிகரெட்டின் மகிமை!

அதோடு மட்டுமா? காப்பிக்கும் சிகரெட்டிற்கும்
உள்ள ஜோடிப் பொருத்தமும் அப்போதுதான்
தெரியவரும்!

சிகரெட்டையே தொட்டிருக்காதவனுக்கு
அந்தப் பொருத்தத்தை/ மகிமையை என்ன
சொல்லி விளக்க முடியும்?
சொன்னாலும் விளங்குமா?

நெய்யில் வறுத்து, லேசாக உப்பும், மிளகாய்த்
தூளும் தூவப்பட்ட முந்திரிப் பருப்பு மிகவும்
ருசியாக இருக்கும் என்பது, அதைச் சாப்பிட்டு
அனுபவித்தவனுகுத்தானே தெரியும்?
சாப்பிடாதவனுக்கு எப்படித் தெரியும்?

புலவு சாதமும், சிக்கன் குருமாவும்
அல்லது தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும்
அற்புதமான உணவு என்பது சாப்பிட்ட
நமக்குத் தெரியும்! சாப்பிட்டிருக்காத
நைஜீரியாக்காரனுக்கு அது எப்படித் தெரியும்?

அவன், அவன் உணவை உயர்த்தியாகச்
சொல்லுவான். நாம் நம் உணவை
உயர்த்தியாகச் சொல்லுவோம்.

ஆகவே இறைவன் என்பவர் உணர்ந்தவனுக்கு
இருக்கிறார்; உணராதவனுக்கு இல்லை!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச்
சொன்னார்:

"உண்டு என்றால் அது உண்டு!
இல்லை என்றால் அது இல்லை!"

எல்லாம் அனுபவித்து வருவது. அனுபவித்து
வரும்போதுதான் மனிதன் ஒப்புக்கொள்வான்.
அனுபவத்திற்கு முதல் நிலைதான் உணர்தல்

கணணதாசன் வாழ்க்கையை அதன் போக்கிலேயே
நன்றாக அனுபவித்து வாழந்தவர். அவர் சந்திக்காத
துன்பமா? துரோகமா? வறுமையா?செழுமையா?
நட்பா? பகையா? சிறுமையா? பெருமையா?.

எல்லாவற்றையும் அவர் சந்தித்தார் - நல்லது,
கெட்டதை உணர்ந்தார், உணர்ந்ததனால்
அனுபவம் பெற்றார் - பெற்ற அனுபவங்களைத்
தான் தன் எழுத்தில் வைத்தார்.

என்னைப்போல் வாழாதீர்கள் - நான் எழுதியதைப்
போல வாழுங்கள் என்று சொல்லி விட்டும் போனார்

ஒரு தோட்டம். அதில் மல்லிகை, முல்லை, ரோஜா,
கனகாம்பரம், சம்பங்கி, செவ்வரளி, பிச்சிப்பூ, சாமந்தி
என்று விதவிதமான மலர்கள் நிறைந்திருக்கின்றன.
அந்த மலர்கள் ஒவ்வொன்றின் வடிவமும், நிறமும்
மணமும் ஏன் வேற்படுகின்றன?

நிலம் ஒன்றுதான், ஊற்றும் தண்ணீரும் ஒன்றுதான்
அப்படியிருக்கையில் அவை எப்படி வேறுபடலாம்?
விதையிலோ அல்லது நாற்றாக நடும் தண்டிலோ
நிறமோ அல்லது மணமோ கிடையாது. பயிராகிப்
பூக்கின்ற போது அவற்றிற்கு அந்த மணமும்,
நிறமும் எங்கிருந்து கிடைத்தது?

அதெல்லாம் இறைவனின் படைப்பு. அந்த மாதிரிக்
கேள்விகளுக் கெல்லாம் எந்தக் கொம்பனாலும்
பதில் சொல்லமுடியாது!

ஒரு தாவரவியல் விஞ்ஞானியிடம் கேட்டுப்
பாருங்கள். நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டி
ருக்கின்றோம் என்பார்.
We are exploring it என்பார்.

அந்தச் செடிகளின் மூலப் பொருள் இல்லாமல்
ஒரு மலரை உண்டாக்கிக் காட்டச் சொல்லுங்கள்.
எவனாலும் முடியாது!

செய்து காட்டட்டும் - அப்போது சொல்வோம்
இறைவன் இல்லையென்று!

இறைவனுக்குத் தன்னை உணர்ந்தவன அல்லது
உணராதவன் என்ற பேதம் கிடையாது. இருவரும்
அவனுக்கு வேண்டியவர்களே. இருவருமே
அவனால் படைக்கப்பட்டவர்கள் அல்லவா?
அதனால் இருவருமே அவனுக்குச் சமமானவர்கள் தான்.

அதனால் தான் இறைவனை - Almighty என்கிறோம்
இல்லையென்றால் அவர் வெறும் mighty ஆகிப்
போயிருப்பார்.

இறைவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்
பல பெயர்களில் அழைக்கின்றோம்.

ஆறுகள் பல உள்ளன. பல் பெயர்களில் உள்ளன
அவை கலக்குமிடம் கடல்தான்.

மதங்கள் பல இருக்கலாம், வழிபாடுகள் பல
இருக்கலாம். ஆனால் இறைவன் ஒருவன்தான்

இறைவனை நீங்கள் உணரும்போது மேற்கூரிய
அத்தனை பேதங்களும் காணாமல் போய்விடும்

அப்புறம் ஈஷ்வரன், ஸ்ரீராமன், இயேசுநாதர், அல்லா
புத்தபகவான் என்று மற்றவர்களின் பேச்சுக்கள்
எல்லாம் உங்களிடம் எடுபடாமல் போய்விடும்

நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழிபடுங்கள்
அது உங்கள் விருப்பம். அது உங்கள் பழக்கப்பட்ட
விஷயம். அதையும் குறை சொல்ல எந்தக்
கொம்பனுக்கும் அதிகாரமில்லை

அதையும் மீறி ஒருவன் குறை சொன்னால்
அவனை விட்டு விடுங்கள்.

It is his problem - not our problem, because
we do not even have one god. We have
only God and he is the ultimate authority
for us!

சர்வ அதிகாரமும் படைத்தவர் அவர்
ஒருவர்தான்!

உலகில் இன்றுள்ள எவனுமே 'சர்வ' என்ற
வார்த்தையை தன்னுடைய அதிகாரத்துடன்
சேர்த்துப் பயன் படுத்தமுடியாது!

ஹிட்லரையும், முசோலினியையும் நினைத்துக்
கொள்ளுங்கள். அவர்களுடைய சர்வாதிகார
மெல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் சொன்னார்:

"இன்றைக்கு செத்தால்
நாளைக்குப் பால்
ஆனால்
ஆவின் வண்டியில்
அடிபட்டால்
அன்றைக்கே பால்!"

இன்றைக்கு அதிகாரத்தில் உள்ள அததனை
பேர்களின் வாய்களிலும், ஒரு நாள் பால்
ஊற்றப்படவுள்ளது அல்லது வாய்க்கரிசி
காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த அரிசியும், பாலுமே அவன் கொடுத்த
கொடைதான்!
(தொடரும்)

------------------------------------------------

22.9.07

சிங்கைக் கண்ணனாருக்காக ஒரு பதிவு!

சிங்கைக் கண்ணனாருக்காக ஒரு பதிவு!

நேற்றைய பதிவிற்கு அன்பர் சிங்கைக்
கோவி கண்ணனார் அவர்கள் எழுப்பிய
வினாக்களுக்கு உரிய பதில்கள் -
நீண்டதாக இருந்த காரணத்தால் தனிப் பதிவாக:

////கோவியார் அவர்கள் சொல்லியது:
பெரும்பாலும் விதியை 'மனு'தாரர்கள்
நம்புகிறார்களோ இல்லையோ, தாழ்த்தப்
பட்டவனை தாழ்த்தியே வைத்திருப்பதற்கு
விதியை காரணம் காட்டுவார்கள்.
எல்லாம் விதிக்கப்பட்டது என்பார்கள்.
விதி உண்மையோ பொய்யோ ஆனால்
சில சமூகங்களின் வயிற்றுப்பிழைப்
பிற்காக விதி நன்றாக செயலாற்றுகிறது.////

எனக்குத் தெரிந்த மனுதாரர்கள் எல்லாம்
ரேஷன்கார்டிற்காகத் தாலூகா ஆபீஸ்களில்
மனுக்கொடுப்பவர்கள்தான். நீங்கள் யாரைச்
சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை!

எல்லோருக்கும் ஒவ்வொரு திறமையைக்
கடவுள் கொடுத்துள்ளார்.
யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை.

இறைவன் படைப்பில் அனைவரும் சமம்.

ஒரு ஆரூர்தாஸ், ஒரு பீம்சிங், ஒரு எம்.எஸ்,வி,
ஒரு செளந்தரராஜன், ஒரு சுசீலா அம்மையார்,
ஒரு கவியரசர், ஒரு சிவாஜி, ஒரு சாவித்திரி
அம்மையார் போன்ற பல திறமையயளர்கள்
சேர்ந்து பணியாற்றியதால் தான் பாசமலர்
என்ற ஒரு அற்புதமான திரைப்படம் கிடைத்தது.
அதுபோல பல திறமையாளர்கள் சேர்ந்ததுதான்
ஒரு வலிமையான தேசம்.

இந்தியாவை மேலும் வலிமைப்
படுத்துவோம் - கைகொடுங்கள்!

கவியரசர் கண்ணதாசன் அவர்களின்
பாடலைப் பாருங்கள்:

தலைப்பு: இனமேது?
"சுடுகாட் டெலும்புகளைச்
சோதித்துப் பார்த்ததிலே
வடநாட் டெலும்பென்று
வந்தஎலும் பில்லையடி!
தென்னாட்ட் டெலும்பென்று
தெரிந்த எலும் பில்லையடி!
நம்நாட் டெலும்பென்றும்
எழுதிவைக்க வில்லையடி!
ஒருநாட்டு மக்களுக்குள்
ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில்
எந்நாளும் துன்பமடி!"

ஓராயிரம் பிரிவை ஏற்படுத்தியது
கடவுளா? சக மனிதன்தானே?

ஏற்படுத்தியவர்களூம், ஏற்றுக் கொண்ட
வர்களும் அடிபட்டுத் திருந்தட்டும் என்று
கடவுள் விட்டு வைத்திருக்கலாம்.

ரோடு போடுவதைப்போல, குடிதண்ணீர்
வழங்குவதைப்போல சமூக நீதிகளும்
அரசின் வேலைதான். கடவுளின் வேலையல்ல!

அதை (தமிழகத்தைப் பொறுதவரை) காமராஜர்
காலத்தில் இருந்து இன்று வரை (52 ஆண்டுகளாக)
எல்லா ஆட்சியாளர்களும் செய்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.
இல்லையென்று சொல்லுங்கள்
பார்ப்போம்

அதற்கும் கவியரசரின் பாடல் உள்ளது:

"ஆண்டான் அடிமை மேலோர் கீழோர்
என்பது மாறாதோ?
அரசனில்லாமல் ஜனங்கள் ஆளும்
காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு!

- படம் : பச்சை விளக்கு - வருடம் 1964

1964ம் வருடமே - அதாவது நீங்கள் பிறக்கு
முன்பே கண்ணதாசன் நிலைமையை
விளக்கிப் பாட்டெழுதி விட்டார்.

நீங்கள்தான் இன்னமும் எதையோ நினைத்துக்
கொண்டும், நாட்டு நடப்பு அறியாமலேயே
எதையோ பிடித்துத் தொங்கிக் கொண்டும்,
முனுமுனுத்துக் கொண்டும் இருக்கிறீர்கள்.

உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்.
காட்சிகள் தெரியும்: கவலைகள் மறையும்!

இது ஒத்தடம் அல்ல: உண்மை!

விதி வலியது. விதியைவைத்து யாரும்
வயிற்றுப் பிழைப்பு நடத்த முடியாது
மாறாக விதிதான் பலபேரை வயிற்றுப்
பசிக்காகத் தட்டுடன் கோவில் வாசல்களிலும்,
தேவாலய வாசல்களிலும்,
தெருவிலும் நிறுத்தியிருக்கிறது!
இது அவர்கள் செய்த கர்மவினையின் பலன்

நீங்கள் சிங்கையில் இருப்பதனால் உங்கள்
கண்ணில் அவைகள் பட வாய்ப்பில்லை!
அடுதமுறை வரும்போது சென்று பாருங்கள்

///உங்கள் கருத்துக்களை மறுக்க வேண்டும்
என்ற நோக்கம் இல்லை. எனது கருத்தை
நான் சொல்வதற்கு உங்கள் வகுப்பில்
தடையில்லை என்பதால் சொன்னேன். :)///

ஆகா, தாராளமாகச் சொல்லலாம்!

தவறான கருத்தென்றால் ஆசிரியர் என்று
பாராமல் நீங்கள் தட்டிக் கேட்கலாம்
(அடித்து அல்ல - அடிதாங்கும் வயசை
அடியேன் தாண்டி விட்டேன்)

வகுப்பில் நீங்கள் முதல் வரிசை மாணவர்.
ஆகவே உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு
- வாத்தியார் சீட்டில் குண்டூசி வைப்பதைத் தவிர!

//விதிப்படியே எல்லாம் நடக்கிறதென்றால்
சோதிடம் பார்த்து பலன் அறிந்து கொள்வதில் என்ன பலன் ?//

ஜோதிடம் பொய் என்றே வைத்துக்
கொள்வோம் - ஒரு வருடம் கழித்து உனக்கு
நல்ல காலம் வருகிறது என்றால் - அந்த ஒரு
வருடமாவது கேட்டுவிட்டுச்
செல்பவன்
நிம்மதியாகத் தூங்குவானே - அது குறைந்த
பட்சப் பலன். அதுகூடக்

கிடைக்கக்கூடாது என்கிறீர்களா?

///விதிப்படியே எல்லாம் நடக்கிறது என்று
உறுதியாக நம்பினால் கடவுள் நம்பிக்கையால்
அதை மாற்ற முடியாது என்றும் சொல்கிறீர்கள்.
ஆனால் அது மனத்திடம் தருவதற்கென்று
ஒத்தடமும் கொடுக்கிறீர்கள். விதிகள் வகுத்தது
யார் ? என்ற கேள்வியில் கடவுளை புகுத்தி

விடைகாண முடியும். அதே சமயத்தில் விதிப்படி
என்றால் சுனாமி, சோகங்களும்,

கும்பகோணம் குழந்தைகள் சாம்பலுக்கும்
விதிமேல் பலியை போட்டு விடலாம் ?
ஆனால் விதியை படைத்தவன் இறைவன்
என்று நம்பினால் கடவுள் கருணையற்றவ
ராகத்தானே தெரிகிறார். நெருப்பு எதையும்
சுடும் அதற்கு குழந்தையோ, கண் இல்லாத
வரோ தெரியாது என்பது தானே இயற்பியல்
விதி ? கத்தி எதையும் கைவிரலையும் வெட்டும்,
கழுத்தையும் வெட்டும் அதுவும்

இயற்பியல் விதி. இந்த இயற்பியலைப்
போல்தான் விதிகள் என்று நம்பப்படுவது

இயக்கங்கள் அனைத்தும் சார்பு நிலை
தத்துவத்தில் இயங்குகிறது. நமது

மனதையும், முன்நிகழ்வுகளையும் வைத்து
இயக்கங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது

இது நன்மை, இது தீமை என்கிறோம்.
ஆனால் அவை யாவும் வெறும் நிகழ்வு

மட்டுமே. நன்மை / தீமை என்ற பகுப்பில்
பார்பதால் நன்மைக்கு சாதகமான

பின்னனியாக இறைநம்பிக்கையும்,
தீமைக்க்கு காரணமாக வினையையும்

வசதியாக வைத்துக் கொள்கிறோம்.:))///

விதியை யாரும் வகுப்பதில்லை.
It is an auto process - self eveolving system
என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
வினை விதத்தவன் வினை அறுப்பான்.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
என்று சொல்கிறோம் இல்லையா - அப்படிப்
பட்ட ஒழுங்குமுறை என்று

வைத்துக் கொள்ளூங்களேன். அது
செயல்களை வைத்துப் பலன் தரும்

ஒரு ஒழுங்குமுறை என்றும் வைத்துக் கொள்ளலாம்

தரையைத் துழைத்து கோடிக்கணக்கான
பேரல்கள் அளவில் தண்ணீரையும், பெட்ரோலிய
எண்ணையையும் மனிதன்

உறிஞ்சுகிறான். 80% சதவிகித மரங்களை
வெட்டிப் பயன்படுத்திவிட்டான்.

அதனால் தான் இயற்கைச் சீற்றங்கள்.
அதற்குக் கடவுள் என்ன செய்வார் பாவம்?


இந்த உடம்பு கடவுள் கொடுத்ததுதான்
ஆத்மா குடியிருக்க! அந்த உடம்பை ஒழுங்காக
வைத்திருக்கிறோமா?
ஜானிவாக்கர் விஸ்கி,
பட்டை சாராயம், பான்பராக், அபின், கஞ்சா,
சிக்கன் மட்டன், தந்தூரி
புரோட்டாவென
கண்ட கண்ட கழுதைகளையெல்லாம் உள்ளே
தள்ளிப்
பாழ்படுத்திவைத்திருக்கிறோம்.

அதற்கும் கடவுள்தான் காரணமா?

கவிஞர் திரு.வரமுத்து சொன்னார்:
40 வயதுவரை நாம் சாப்பிட உணவு:
40ற்கு மேல நம்மையே சாப்பிடும் அந்த உணவு!

பாதிப்பேர் முதலில் பல்லையே ஒழுங்காக
விளக்குவதில்லை. கடவுள் என்ன செய்வார்
பாவம்? உலகில் உள்ள 600 கோடி பேர்களுக்கும்
ஆள்வைத்து அவரா பல்லை
விளக்கிவிட முடியும்?

நன்றும் தீதும் பிறர்தர வாரா!

எல்லா புற அவலங்களுக்கும் நாமே காரணம்.
அதன் பலனை நாமேதான் அனுபவிக்க வேண்டும்.

நான்காவது மாடியில் குறுகிய இடத்தில்,
ஓலைக் கூரையின் கீழ் பள்ளிக்கூடத்தை
வைத்து நடத்தியது யார்?

அனுமதித்தது யார்?

ஆடும்வரை மனிதன் ஆடுவான்
அடிபட்டபின் கடவுளைக் கூப்பிடுவான்.
அல்லது கடவுளின்மேல் குற்றம் சுமத்துவான்

நாம் செய்யும் தவறுகளுக்கு அவர்
எப்படிப் பொறுப்பாவார்?

யோசித்துப் பார்த்துவிட்டு
(வீட்டுப் பாடங்களையும் - அதாவது
Home Work ஐ எழுதிவிட்டு)
நாளை வகுப்பிற்கு வாருங்கள்!

நட்புடன்
வாத்தியார்

21.9.07

எது புண்ணியம்? எது பாவம்?


******************************************************************
விதிப்படிதான் நடக்குமா? - பகுதி 2

எது புண்ணியம்? எது பாவம்?

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப்
பயன்கள் செய்தவனையே சென்றடைவதுதான்
விதி. ஆகவே இப்பிறவியில் ஏற்படும் நன்மை,
தீமைகள் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் -
நாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் நடக்கும்
என்று முன் அத்தியாயத்தில் எழுதியிருந்தேன்.

அதென்ன இருவினைப் பயன்கள்?

பட்டினத்தடிகள் அதைப் பற்றி நான்கே
வரிகளில் நெற்றியடியாக எழுதி வைத்து
விட்டுப் போயிருக்கிறார்

பாடலைப் படியுங்கள்:

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழிஅம்பொழுக
மெத்திய மாந்தரும் வீதிமட்டே விம்மிவிம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந்தருஞ் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே"

இதே பாடலை கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் எளிமைப் படுத்தி ஒரு திரைப்படப்
பாடலின் ஆரம்ப வரிகளுக்குப் பயன் படுத்தினார்

அது மிகவும் பிரபலமான பாடல். தமிழகம்
எங்கும் ஒலித்த, ஒலித்துக் கொண்டிருக்கின்ற -
உங்களுக்குத் தெரிந்த பாடல்.
பாடல் வரிகளைப் பாருங்கள்:

"வீடு வரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ?"

இந்தப் பாடலை ஒலிப் பதிவுக்கூடத்தில்
பாடுவதற்காக இருந்த பாடகர்
திரு.T.M.செளந்தரராஜன் அவர்கள்
கவிஞரைப் பார்த்துக் கேட்டார்.

"அப்பச்சி, இந்தப் பாடலின் துவக்க வரிகளை
நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன்.எந்தப்
பாடலின் உந்துதலில் இதை எழுதினீர்கள்?"

கவியரசர் பதில் சொன்னார்.

"அது பட்டினத்தார் பாடல் அய்யா"

"எங்கே முழுப் பாடலையும் சொல்லுங்கள்"

கவியரசர் சொன்னார்

"பட்டினத்தார் பாடலின் கடைசி வரியை
ஏன் விட்டுவிட்டீர்கள்?"

"எதை - பாவ, புண்ணியத்தையா? அதைச்
சொன்னால் நமது மக்களுக்குப் புரியாதையா!
அதனால்தான் யாரோ என்று எழுதினேன்.
புரிகிறவன் புரிந்து கொள்ளட்டும்
புரியாதவனுக்குப் புரியாமலேயே போகட்டும்!"

என்னவொரு அசத்தலான பதில் பார்த்தீர்களா?
மக்களின் நாடி தெரிந்தவர் அவர்.
அதனால்தான் அவர் கவியரசரானார்.
மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்

இதே பாடலை நான் பள்ளியில் படித்துக்
கொண்டிருந்த காலத்தில், நானும், சகமாணவர்களும்
சேர்ந்து இப்படித் திரித்துப் பாடுவோம்.

"வீடுவரை லைஃபு (Life)
வீதிவரை ஒய்ஃபு (Wife)
காடுவரை சன்னு (Son)
கடைசிவரை மண்ணு"

இது உப செய்தி - தொடரின் சுவாரசியத்திற்காக.
அதை விடுங்கள் - இருவினைப் பாவ, புண்ணி
யத்தைப் பார்ப்போம்.

பாவம் எது என்பதும், புண்ணியம் எது என்பதும்
உங்களுக்குத் தெரியாததா என்ன?
இருந்தாலும் கட்டுரைக்காக ஒரு சிறு உதாரணம்
மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை
அவர்களுடைய வயதான காலத்தில்
வீட்டில் வைத்து அவர்களுடைய மனம்
மகிழும்படியாக பிள்ளை பார்த்துக் கொண்டால்
அது புண்ணியக் கணக்கில் வரும் :
மனைவியின் பேச்சைக் கேட்டு அல்லது
தொல்லை என்ற சுய சிந்தனையுடன் அவர்களைக்
கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட்டால்
அது பாவக் கணக்கில் வரும்

அமெரிக்காவில் வேலைக்குப் போகும் தம்பதிகள்
அதிகம் - 90% அவர்கள் தங்கள் குழந்தைகளைப்
பேணி வளர்க்காமல் விடுதிகளில் (Hostel) விட்டு
விடுவார்கள். அதே குழந்தைகள் வளர்ந்து ஆளாகி
ஒரு நிலைக்கு வரும்போது தங்களுடைய பெற்றோர்
களை முதியோர் இல்லத்தில் விட்டு விடுவார்கள்.
கேட்டால், நமது கவுண்டமணி பாணியில்
"அமெரிக்காவில இதெல்லாம் சகஜமப்பா...!"
என்று சொல்லி விடுவார்கள்.

ஒரு ரூபாயோ அல்லது கோடி ரூபாயோ
இறைப் பணிக்குச் செலவழித்தால் அல்லது
ஏழை, எளியவர்களுக்குச் செலவழித்தால் அது
புண்ணியம். பொதுச் சொத்தையோ அல்லது
கோவில் சொத்தையோ கொள்ளையடித்தால்
அது பாவம்

இன்னும் சிறப்பாக விளக்க ஒரு கதை
சொல்கிறேன். சுவாரசியமான கதை. கொஞ்சம்
பொறுமையோடு படியுங்கள்.

ஒரு துறவியும், அவருடைய சீடனும், திருத்தலம்
ஒன்றிற்குப் பயணமாகச் சென்று கொண்டிருந்தார்கள்
இரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது.
வோல்வா பேருந்துகளும், சதாப்தி ரயிலும் இல்லாத
காலம். நடைப் பயணம்தான்

சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த களைப்பு. உடன்
கடுமையான பசி. பெரியவர் பொறுத்துக்கொண்டார்
சீடனால் முடியவில்லை

"சாமி, அதோ ஒரு கிராமம் தெரிகிறது. சிரமபரிகாரம்
செய்து விட்டுப் போகலாமே" என்றான்

துறவியாரும் சரி என்று செயலில் இறங்கினார்.

வரப்பின் மேல் நடந்து, கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தின் நுழை வாயிலிலேயே ஒரு பெரிய
பண்ணை வீடு இருந்து. பின்புறம் நூற்றுக்கணக்கான
ஏக்கர் நிலபுலன்களுடன் கூடிய மிகப் பெரிய வீடு.

துறவி கதவைத் தட்டினார். திறக்கப் படவில்லை
மீண்டும், மீண்டும் நான்கைந்து முறை தட்டினார்.
கால்மணி நேரம் கடந்திருக்கலாம். கதவைத் திறந்து
கொண்டு பீமசேனன் தோற்றத்துடன் ஒரு மனிதன்
வெளிப்பட்டான்.

அவன்தான் அந்தப் பெரும் பண்ணைக்கும், பண்ணை
வீட்டிற்கும் சொந்தக்காரன். பாதித்தூக்கம் அவன்
கண்களில் மிச்சம் இருந்தது

எரிச்சலோடு கேட்டான்," என்ன வேண்டும்?"

துறவி, பொறுமையாகத் தாங்கள் யார் என்பதையும்,
எங்கு பயணிக்கின்றோம் என்பதையும் கூறிவிட்டு
உண்வு வழங்கும்படி வேண்டினார்.

அடிப்படைப் பண்பின்றி அவன் கோபமாக," இதற்குத்
தான் தட்டினீர்களா - சனியன் பிடித்தவர்களே - என்
தூக்கத்தைக வேறு கெடுத்துவிட்டீர்களே - போய்
வேறு இடத்தில் கேளுங்கள்" என்று சொல்லி விட்டுத்
திரும்பவும் தன் வீட்டிற்குள் சென்று படார் என்று
கதவை அறைந்து சாத்தி விட்டான்.

அவன் நடத்தையைப் பார்த்துச் சீடனுக்கு அசாத்திய
கோபம் வந்தது. ஆனால் குருபக்தியினால் கோபத்தைக்
கட்டுப்படுத்தைக் கொண்டான்.

ஆனால் துறவி எதுவுமே நடக்காதது போல சாந்தமாக
நின்றவர், தன் கைகளை உயர்த்தி, "ஆண்டவனே
இவனுக்கு இன்னும் நான்கு மடங்கு செலவத்தைக்
கொடுப்பாயாக!" என்று பிராத்தனை செய்தார்.

சீடன் வியப்பின் எல்லைக்கே போய்விட்டான்.
குருவின் தவவலிமை அவனுக்குத் தெரியும்.
அவர் பிராத்தனை செய்தால் அது நடந்துவிடும்.
ஆனாலும் இவர் ஏன் இந்தக் கிராகதகனின்
நல்வாழ்விற்குப் பிரார்த்திக்கின்றார் என்பது
அவனுக்குப் பிடிபடவில்லை.பேசாமல் நின்றான்.

இறங்கி நடந்த துறவி, கிராமத்தை நோக்கி
நடந்தார். சீடனும் தொடர்ந்தான். கண்ணில்
பட்டது ஒரு குடிசை வீடு. முன் பக்கம்
திண்ணை. அருகில் உள்ள கொட்டகையில்
நான்கு பசுமாடுகள் கட்டப்பட்டிருந்தன

துறவி,"தாயே!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.

அடுத்த நொடியே, ஒரு மூதாட்டி கதவைத்
திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

" வாங்க சாமிகளா? என்ன சாமிகளா வேணும்?"
என்று அன்புடன் கேட்டாள்

துறவி சொன்னார்

அவள் பதறி விட்டாள். அவள் வீட்டில் சற்று
முன்தான் சாப்பிட்டுவிட்டு, பாத்திரங்களைக்
கழுவிப் போட்டிருந்தார்கள்

"சாமி நல்ல மோர் இருக்கிறது.ஆளுக்கு ஒரு
செம்பு தரட்டுமா?" என்று தயக்கத்துடன்
வினவினாள்.

கொண்டுவரச் சொல்லிவிட்டுத் துறவி திண்ணையில்
அமர்ந்தார். சீடனையும் அமரச் செய்தார்.

இரண்டு பெரிய செம்புகளில் அமிர்தம் போன்ற
சுவையுடன் மோர் வந்தது. வாங்கி அருந்தினார்கள்
பசி அடங்கிய பிறகுதான் இருவரும் ஒரு
நிலைக்கு வந்தார்கள்.

துறவி அந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தார்

அவள் தன் கதையைச் சொன்னாள். அவள் வீட்டில்
விதைவைக் கோலத்துடன் ஒரு மகள். பதினெட்டு
வயதில் ஒரு பேத்தி - ஆக மூன்று பேர்கள். நான்கு
பசு மாடுகளை வைத்து ஜீவனம். பால், தயிர், மோர்
விற்று வயிறு வளர்ப்பதை நடிகை மனோரமா
பாணியில் ஏற்ற இறக்கத்துடன் சொன்னாள்.

துறவி விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது,
இப்படிச் சொல்லி ஆசீர்வதித்தார்." உன் பேத்திக்கு
சீக்கிரம் திருமணம் ஆகும். நல்ல மணாளன்
கிடைப்பான். உன் மாடுகளில் இரண்டு இறந்துவிடும்
அனாலும் நீ நன்றாக இருப்பாய்!"

சீடன் நொந்து போய்விட்டான்

அந்த அயோக்கியன் வீட்டில் உன் செல்வம்
நான்கு மடங்கு பெருகட்டும் என்று
சொன்னவர். ஏழையானாலும், பசிக்கு
அற்புதமான மோர் கொடுத்த இந்த
மூதாட்டி வீட்டில் இரண்டு பசுமாடு சாகட்டும்
என்கிறாரே - எதற்காக இப்படி சொல்கிறார்?
என்று புரியாமல், குழப்பத்துடன் தன்
குருவைத் தொடர்ந்தான்.

அவன் மன ஓட்டத்தை ஊகம் செய்த துறவி
அவராகவே முன்வந்து விளக்கம் சொல்லி
அவன் குழப்பத்தைத் தீர்த்துவைத்தார்.

"பண்ணைக்காரனிடம் அபரிதமான செல்வம்
இருந்தும் பசித்தவர்க்கு உணவளிக்க மறுக்கும்
பாவியாக இருக்கின்றான். அவன் செல்வம்
நான்கு மடங்கு பெருகினால் - அவன் பாவமும்
நான்கு மடங்கு பெருகும்.அதனால்தான் அவனை
அப்படி ஆசீர்வதித்தேன். இந்தப் பெண்மணி தன்
ஏழ்மையிலும் தர்மம் செய்யும் தயாநிதியாக
இருக்கிறாள். நான்கு மாடுகளை மட்டுமே வைத்து
இவள் செய்யும் தர்மம் (புண்ணியம்) இரண்டு
மாடுகளை மட்டும் வைத்துச் செய்யும்
போது இரண்டு மடங்காக மாறும். அத்னால்தான்
இங்கே அப்படி ஆசீர்வதித்தேன்"

புண்ணியத்தைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும்,
என் சிற்றறிவிற்குத் தெரிந்தவரை ஓரளவு
தெரிவு படுத்தியிருக்கிறேன்.

வேறு ஒரு உப தலைப்புடன் (Sub Title) மீண்டும்
சந்திப்போம்

(தொடரும்)

20.9.07

விதிப்படிதான் நடக்குமா?




************************************************************
விதிப்படிதான் நடக்குமா?

இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே
ஒரு பதில்தான்:

ஆமாம், எல்லாம் விதிப்படிதான் நடக்கும்!

எப்படிச் சொல்கிறாய்?

நிறையப் படித்ததையும், நீண்ட அனுபவத்
தையும் வைத்துச் சொல்கிறேன்!

முதலில் விதி என்றால் என்ன என்று பார்ப்போம்.

விதி என்ற சொல் இரண்டு வகையில் பொருள் தரும்

முதலில் அது வினைச் சொல்லாக (verb)
வரும்போது ஒரு பொருள் தரும்:
பெயர்ச் சொல்லாக வரும்போது வேறு
ஒரு பொருள் தரும் (noun):

விதி*1 - விதிக்க, விதித்து - வரி, கட்டணம்
முதலியவற்றை வசூலிக்க அறிவித்தல்.வரவு
செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் (levy, taxes)
விதிப்பது. 2.தண்டனை, தடை முதலிய
வற்றை அதிகாரபூர்வமாக அறிவித்தல்
award, impose 3. கட்டுப்பாடு நிர்ணயித்தல்,
நிபந்தனையை முன்வைத்தல் prescribe rules,
condition etc ; laydown

விதி*2 - 1.முன் கூட்டியே வகுக்கப் பட்ட
தாகவும், மனிதனால மாற்றமுடியாததாகவும்
உள்ள நியதி.ஊழ் (destiny, fate). 2.இயற்கை
யின் நிகழ்வில் உள்ள ஒழுங்குமுறை law of nature.

பிறந்தவன் இறந்துதான் போவான் என்ற
இயற்கையின் விதியை யாரால் மீற முடியும்?

எந்தச் செயலுக்கும் ஒரு எதிர்ச் செயல்
என்ற விதியின் அடிப்படையில்தான்
ஏவுகணை செலுத்தப்படுகிறது.

நான் இங்கே ஊழ் என்று பொருள்படும்
விதியைப் பற்றித்தான் எழுத முனைந்துள்ளேன்.

தமிழுக்கு முதல் பெருமை என்று சொல்லக்கூடிய
மறை நூலான 'திருக்குறள்' என்ற பொக்கிஷத்தைக்
கொடுத்த வள்ளூவர் பெருமகனார் விதியைப்
பற்றி என்ன சொல்கிறார்?

அடித்துப் பிழிந்து சாறெடுத்து இருபதே
வரிகளில் அவர் விதியைப் பற்றி
அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

இடம், பதிவின் நீளம், என்னுடைய கால
அவகாசம், கருதி மூன்று குறள்களை
மட்டும் எடுத்துக் கொடுத்துள்ளேன்.
பொறுமையாகப் படியுங்கள்
(பதிவர்களில் 81% இளைஞர்கள். அதனால்
இதைச் சொல்ல வேண்டியதுள்ளது.)
-----------------------------------------------------------------------
திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம்
38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை
அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை
என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி
விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள்
செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு
என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"
குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன்
வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை
வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால்
அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட
வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை
அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்
களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பார்கள்.
அவர்கள் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள்
கிளப்பிச் செலவளிப்பதற்கென்றே சிலபேர் பிறவி
எடுப்பார்கள்.

சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும்
கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ
அல்லது மாப்பிள்ளையோ அல்லது பேரனோ
ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று
அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான்.
விதி அங்கேதான் வேறு படுகிறது.

ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம்.
ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

******
"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"
குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை
வேறு எவை உள்ளன? அந்த ஊழை விலக்கும்
பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு,
வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும்,
அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி
முந்திக்கொண்டு வந்து நிற்கும்

கோவையில் இருந்து சென்னைக்குச் சேலம்
வழியாகச் சென்றால் விபத்து நேறிடும் என்று
அறிந்த ஒருவன், சேலம் வழியில் செல்வதைத்
தவிர்த்து, திருச்சி வழியாகச் சென்று தப்பித்துவிட
முனைந்தால் விதி விடாது. அது அவனுக்காக
திருச்சி டோல்கேட் அருகே காத்துக் கொண்டு நிற்கும்

ஒருவன் தன்னுடைய அபரிதமான பணத்தைப்
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஆபத்து
என்று தெரிந்து கிலோக் கணக்கில் தங்கமாக
வாங்கி வீட்டில் வைத்துக் கட்டிக் காத்தால்,
அது போகின்ற வேளையில் கொள்ளையில்
போய்விடும்

What is stronger than fate (destiny)?
If we think of an expedient
to avert it, It will itself be with us
(before the thought)

******

"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக்
காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன்
எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது
அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது
முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள்
சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்
போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்
தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும்
அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and
a prosperous fate produces enlarged knowledge.

******
இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter)
தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத்
துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப்
பாலின் கடைசி அதிகாரமாக ஊழ்வினையை
வைத்தார்?
அவருக்கே தெரியும், மனிதன் என்னதான்
கடவுளை வணங்கிக் கூழைக்கும்பிடு போட்டாலும்
அல்லது கதறி அழுதாலும், எல்லாம் ஊழ்வினைப்
படிதான் நடக்கும் என்று!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது
தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும்
சக்தியை அவர் கொடுப்பார்.
The Almighty will give standing power!
தாக்குப் ப்டிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும்
பிரசித்தமான நாராயண குருவின் சரித்திரம்
(அதைப் பற்றி வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)

ஆகவே எல்லாம் விதிப்படிதான் நடக்கும்!
நாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் நடக்கும்!

குமுதம் வார இதழின் நிறுவனரும், முன்னாள்
ஆசிரியருமான திரு.S.A.P அண்ணாமலை அவர்களிடம்
(அரசு கேள்வி பதில் பகுதியில்) ஒருமுறை இந்தக்
கேள்வி கேட்கப்பட்டபோது அவர் இப்படித்தான்
பதில் சொன்னார்:

"ஆமாம் அதுதான் உண்மையாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் பிறப்பில் ஏன் இத்தனை பேதங்கள்?"

ஒரு குழந்தை செல்வந்தர் வீட்டில் பிறக்கின்றது.
பிறந்த அன்றே வாழ்க்கைக்குத் தேவையான
அத்தனை வசதிகளும் அதற்கு கிடைத்து விடுகிறது.
மற்றொரு குழ்ந்தை, அன்றாடம் அரிசி வாங்கி,
தினமும் இரண்டு வேளை மட்டுமே - அதுவும்
அரை வயிறு மட்டுமே சாப்பிடும் ஏழை வீட்டில்
பிறந்து பாலுக்குக் கூட பலமணி நேரம் அழும்
நிலையில் பிறக்கிறது.

ஒரு குழந்தை பார்த்தவர் அத்தனை பேரும்
தூக்கிக் கொஞ்சும்படியான அழகுடன் பிறக்கிறது.
இன்னொரு குழந்தை பிறவியிலேயே ஊனத்துடன்
பிறக்கிறது.

ஒரு குழந்தைக்கு அற்புதமாக அன்பைச் சொறியும்
அன்னை கிடைக்கின்றாள். இன்னொரு
குழந்தைக்குப் பிறந்த மூன்றாம் நாளே
தூக்கிக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிட்டுச்
செல்லும் இரக்கமில்லாத தாய் அமைகிறாள்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதெல்லாம் ஏன் இப்படி நடக்கிறது?

ஒரே வரியில் சொன்னால் பிறப்பில் இருந்து
இறப்பு வரை எல்லாமே விதிப்படிதான்.

நான் வலைப் பதிவில் எழுதுவது கூட விதிப்படி
என்று வைத்துக் கொள்ளுங்களேன்........!
(இது நகைச் சுவைக்காக)

(தொடரும்)


**********************************************************

3.8.07

34. கால சர்ப்ப தோஷத்தின் பலன்கள்

34. கால சர்ப்ப தோஷத்தின் பலன்கள்

சென்ற வகுப்பில் நடத்திய பாடத்தின் தொடர்ச்சி

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது அமர்ந்
திருக்கும் இடத்தை வைத்துத்தான் கால சர்ப்ப தோஷத்தின்

பலன்கள் உண்டாகும். சுப கிரகங்களின் வீடுகளில் ராகு
அல்லது கேது அமர்ந்திருந்தால் சுபமான பலன்களே

உண்டாகும்.

உதாரணத்திற்குக் குருவினுடைய வீடுகளான தனுசு
மற்றும் மீனம், அதேபோல சுக்கிரனின் வீடுகளான ரிஷபம்

மற்றும் துலாம், சந்திரனுடைய வீடான கடகம் ஆகிய
இடங்களில் அந்த இரண்டு கிரகங்களில் ஒன்று அமையப்

பெற்றிருந்தால் அந்தக் கிரகம் நன்மையைச் செய்யும்

அசுபர்கள் (Melific Planets) வீடுகளில் அமரும் போது தீய
பலன்களே உண்டாகும்.


பல அரசியல் தலைவர்களின் ஜாதகங்களில் கால சர்ப்ப
தோஷம் அமையப்பெற்றிருந்ததினால் அவர்களுடைய

இளம் வயதில் பசி, பட்டினி, அடி, உதை, சிறைச்சாலை
என்று அந்த வயது வாழ்க்கை அவதி நிறைந்ததாக

இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு ஜவஹர்லால் நேரு
அவர்களின் வாழ்க்கையைச் சொல்லலாம்.


அதுபோல கால சர்ப்ப தோஷ காலம் முடிந்து நல்ல
காலம் ஆரம்பித்த பிறகு மாபெரும் தொழில்

அதிபர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறியவர்கள்
பலர் உண்டு.


ராகு மற்றும் கேதுவின் பிடிக்குள் சிக்கிக் கொண்ட கிரகம்
ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருந்தாலும்

பலவீனமாகத்தான் இருக்கும்.

கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகனுக்கு, ராகு அல்லது
கேது திசை வந்தால், அந்தத் திசையில் நற்பலன்கள்

உண்டாகும். அதேபோல அத்திசை நிறைவுறும்போது
மரணத்தையும் கொடுத்துவிடும். ஆனால் துன்பத்தையும்,
பல
சோதனைகளையும் கொடுக்கும் ராகு அல்லது கேது
திசை மரணத்தைக் கொடுப்பதில்லை


இத்தோஷம் உள்ளவர்கள் தங்கள் சொந்த முயற்சியால்
தான் சாதனைகள் செய்வார்கள்.பெற்றோர் உதவியால்

பெரிதாக பலன்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

1. லக்கினத்தில் ராகு, ஏழில் கேது இருக்கக் காலசர்ப்ப
தோஷமும் உள்ள ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம்


நடைபெறும். திருமணம் ஆனாலும் இல்வாழ்வு சிறக்க
ஒருமித்த கருத்துடைய மனைவி கிடைக்க மட்டாள்.

போராட்டமான இல்வாழ்வுதான்.

2. 2ல் ராகு, 8ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகன், அந்நிய தேசங்களில்தான் வாசம்

செய்வான்.

3. 3ல் ராகு, 9ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகனனுக்குச் சகோதரர்களுடன் நல்ல

உறவு ஏற்படாது. அவனுடைய தந்தைக்கும் அவனால் கெடுதி.

4. 4ல் ராகு, 10ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகர்களுக்குக் கல்வி பெறுவதில் பல தடைகள்

ஏற்படும். ஆனால் தத்தித் தத்திப் படித்துப் பின்னாளில் உயர்
கல்வி பெற்றுவிடுவார்கள். ஆனால் ராகு இருக்கும்

இடம் சுப கிரகத்தின் வீடாக இருந்தால் பெரிய மருத்துவ
நிபுணராக, அறுவை சிகிச்சை நிபுணராக திகழும்படி

ஏற்றம் கிடைத்துவிடும்.

5. 5ல் ராகு, 11ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகனுக்குக் கடுமையான புத்திர தோஷம்

உண்டாகும். பெற்ற பிள்ளைகளால் பெரிய சோதனைகளும்
இழப்புக்களும் ஏற்படும்.


6. 6ல் ராகு, 12ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகனுக்கு, சிறைவாசம், உடல் நலமின்மை

யாவும் ஏற்படும். (ஜவஹர்லால் நேரு அவர்களின் ஜாதகத்
தில் இந்த அமைப்பு இருந்தது - அவருடைய இளவயது

வாழ்க்கை அனைவருக்கும் தெரிந்ததுதானே!)

காலசர்ப்ப தோஷத்திற்குப் பரிகாரம் உண்டா?

உண்டு!

சிவனை வழிபடுதல் ஒன்றுதான் பரிகாரமாகும்.

ஸ்ரீஹாளஹஸ்தி, இராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்கள்
அதற்குரியனவாகும். அங்கே அடிக்கடி செல்ல

முடியாதவர்கள் உள்ளூரில் உள்ள சிவாலங்களுக்குச்
சென்று சிவனை வழிபட்டு வரலாம். வாரம் ஒருமுறை

சென்று வழிபடலாம். அல்லது 27 நாட்களுக்கு ஒருமுறை
தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று வழிபட்டு வரலாம்.


சரி, வெளி மாநிலங்களில் அல்லது வெளி நாடுகளில்
வசிக்கும் அன்பர்கள் என்ன செய்யலாம்?


"நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!"
என்று துவங்கும் திருவாசகப் பதிகத்தை மனமுருகப்
படித்துப் பயன் பெறலாம்.


(தொடரும்)

பின் குறிப்பு: எனது சொந்த அலுவல்கள் காரணமாக
நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அன்பர்கள்

மன்னிக்கவும்!


---------------------------------------------------------------------

17.7.07

சனி என்ன செய்யும்? என்ன செய்யாது?


நன்றி - தினமலர்
-----------------------------------------------------------------------
சனி என்ன செய்யும்? என்ன செய்யாது?

சனிப் பெயர்ச்சியை வைத்து நாளிதழ்களும் சரி,
குறு இதழ்களும் சரி பரபரப்பாக எழுதிக் கொண்டிருக்கின்றன.
சாதாரணக் குடிமகனுக்கு - என்ன தெரியும்? ஒன்றும் சரிவரத் தெரியாது?

சனிப்பெயர்ச்சி என்றால், சனீஸ்வரன் மூட்டை முடிச்சுக்களை
யெல்லாம் கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் அடுத்த
ஊருக்குக் குடி பெயர்ந்து போகிறார் என்று நினைத்துக்கொண்டிருப்பான்.

வானவெளியின் வட்டத்திலுள்ள 360 டிகிரிகளையும் (பாகை
களையும்) 30 வருடங்களில் (அதாவது 360 மாதங்களில் மாதம்
ஒரு டிகிரி என்ற விகிதத்தில்) கடந்து ஒரு சுற்றை முடிக்கும்
சனீஸ்வரன், ஒரு ராசியின் 30 டிகிரிகளையும் கடந்து அடுத்த
ராசியின் எல்லைக்குள் பிரவேசம் செய்வதுதான் சனிப் பெயர்ச்சி.

கடக ராசியில் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு
பிரவேசித்தவர், அந்த ராசியின் முழு தூரத்தையும் தாண்டி
இப்போது 121வது டிகிரியில் துவங்கும் சிம்ம ராசிக்குள்
பிரவேசிக்கின்றார்

அதனால் என்ன நடக்கும்?

பத்திரிக்கைகளில் சனிக்கென்று எழுதியுள்ள ராசி பலன்களில் குறிப்பிட்டுள்ளதைப் போலதான் அவ்வளவு ராசிக்
காரர்களுக்கும் நடக்குமா?

அப்படி நடக்காது! அப்படியே நடக்காது!

ஏன் நடக்காது?

இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 108 கோடி மக்கள். 12 ஆல்
வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 9 கோடி என்ற அளவில்
மக்கள் இருக்கலாம். அந்த ஒன்பது கோடி மக்களுக்கும்
அவர்களுடைய ராசிப்படி குறிப்பிட்டுள்ள பலன்கள் எப்படி
ஒரே மாதிரியாக நடக்கும்?

அபத்தமாக இல்லையா?

பின் எப்படி நடக்கும்?

ஒவ்வொருவருடைய, பிறந்த ஜாதகம், அவர்களுடைய
இன்றைய வயது, ஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமை,
அஷ்டவர்க்கத்தில் அந்த ஜாதகருடைய குறிப்பிட்ட ராசியி
லுள்ள பரல்கள், முக்கியமாக ஜாகதருடைய நடப்பு
தசா புக்தி போன்றவைகளை வைத்துத்தான் கோச்சார
சனியுடைய தீய பலன்கள் அல்லது நல்ல பலன்கள்
இருக்கும்.

உதாரணத்திற்கு லாபாதிபதியுனுடைய தசை நடந்து
கொண்டிருக்கும் ஜாதகனை, அந்த லாபதிசைக்கு அதிபதி
யான கிரகம் அணைத்துக் கொள்ளூம். Bullet Proof ஜாக்கெட்
போட்ட மனிதனை எப்படித் துப்பாக்கிக் குண்டுகள்
அனுகாதோ அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இல்லை Black Cat Commandos with AK47 Riffle படையுடன்
இருக்கும் ஒரு நபரைத் தீய சக்திகள் எப்படி அனுக
முடியாதோ, அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசிகளில்
சஞ்சாரம் செய்யும் சனி அந்த ஜாதகனை ஒன்றும் செய்யாது.

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி
பலன்கள் பொதுவானவை. மழை பெய்வதைப் போல!
வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்
கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை
ஏற்றிவிட்டு அமர்ந்து செல்பவனும் கவலைப்பட
வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய
வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட்
போட்டிருப்பவனும் சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும்
சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன்
இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்
கொண்டவன் மட்டுமே.

ஆகவே உங்கள் வயது to நடப்பு தாசாபுக்தி என்று மேற்
சொன்னவை மட்டுமே சனியின் பெயர்ச்சிப் பலனை
நிர்ணயம் செய்யும். அதன்படிதான் பலன்களும் இருக்கும்.
யாரும் பொதுப்பலன்களைப் படித்து விட்டுக் குழம்ப
வேண்டாம்!

திருநள்ளாறு கோவிலின் அதிகாரபூர்வ அறிக்கை சனிப்
பெயர்ச்சி (வாக்கிய பஞ்சாங்கப்படி) வரும் ஆகஸ்ட் மாதம்
5ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்று கூறுகிறது. ஆனால் சனி
இடம் மாறி இரண்டு நாள் ஆகிவிட்டது. ஆதாரம் கீழே
கொடுத்துள்ளேன் (இது திருக்கணிதப் படி - Based on Indian
Ephemeries)

தேதியையும், சனி சிம்மராசியில் இருப்பதையும் (Sa = Saturn)
கவனியுங்கள்

வாழ்க வளமுடன்: வாழ்க நலமுடன்!
------------------------------------------------------------


15.7.07

ஜோதிடம் - பாடம் எண்.32


--------------------------------------------------------------------------
ஜோதிடம் - பாடம் எண்.32

தலைப்பு: கால சர்ப்ப தோஷம் Cum யோகம்

அதென்ன தோஷம் cum யோகம் என்று அனேகம் பேர்களுக்கு சந்தேகம் வரும். ஒன்று தோஷம் என்று சொல்ல வேண்டும் அல்லது யோகம் என்று சொல்ல வேண்டும் - அதுதானே முறை!

அல்ல!

ஒரு குழந்தையை வளர்த்துப் பட்டப்படிப்பு படிக்க வைக்கின்ற வயதுவரை - சுமார் 21 வருட காலம் என்று வைத்துக் கொள்வோம் - செலவு செய்ய வேண்டிய காலம். அதே குழந்தை படித்துமுடித்தவுடன் வேலை கிடைத்துச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், அதற்குப் பிறகு அது வரவு வரும் காலமாக மாறிவிடும் அல்லவா - அது போலத்தான் இதுவும்.

கால சர்ப்ப தோஷம் அமைந்த ஜாதகன் முதலில் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தோஷம் நீங்கி அவன் வாழ்க்கை அசுர வேகத்தில் செழிப்பு மற்றும் சந்தோஷம் மிக்கதாக மாறிவிடும். அந்த செழிப்பு மற்றும் சந்தோஷத்தின் அளவு அவனுடைய ஜாதகத்தில் (Basic Chart) உள்ள கிரகங்களின் சுய பலத்தையும், அமைப்பை யும் வைத்து மாறுபடும்

சரி, கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? அதை முதலில் தெரிந்து கொள்வோம்.

ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு தீய கிரகங்கள், வானவெளியில் 180 டிகிரியில் இன்றை ஒன்று எதிர் நோக்கியவாறு இருக்கும். சுழற்சியில் இரண்டின் வேகமும் ஒரே அளவு என்பதால். அந்த 180 டிகிரில் ஒரு இம்மி கூட மாற்றம் இருக்காது.

அவை இரண்டைத் தவிர மற்றும் உள்ள ஏழு கிரகங்கள், அடுத்தடுத்தோ அல்லது கூட்டாகவோ அந்த இரண்டு கிரகங்களுக்கு நடுவே வானவெளியில் இருக்கும் சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில், ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் அந்த கிரகங்கள் மாட்டிக்கொண்டுவிடும்.

All the other seven planets will be hemmed or sandwitched between Rahu and Ketu. This position in a horoscope is called as Kala Sarppa Dosha

அதன் கால அளவு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. சிலர் அதை 33 வருட காலம் என்று சொல்வார்கள். வேறு சிலர் அதை லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ, அததனை வருடம் அது உணடெ ன்பார்கள். அந்தக் கருத்துப் பிரச்சினைகள் எல்லாம் இடையில் பல ஜோதிட வல்லுனர்களால் ஏற்பட்டவை.பொதுவாக முப்பது ஆண்டுகள் என்பதுதான் அனுபவ உண்மை.

நடக்கப்போகும் நன்மையைப் பிறகு பார்த்துக்கொள்வோம். அதற்குத் தீர்வு உண்டா என்றால் இல்லை.

அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

You can't shift or shed down it

பரிகாரம் உண்டா? உண்டு! அது இறைவழிபாடு மட்டுமே!

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேச்சுவரம் கோவில், காஞ்சிபுரத்தில் ஊள்ள சித்திர குப்த சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம், ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்கள் அதற்குரிய ஸ்தலங்களாகும்.

அங்கே சென்று மனமுருகி வழிபட்டால், வரும் தீமைகளை எதிர் கொள்ளும் சக்தியைப் பெறலாம். நன்றாகக் கவனிக்கவும் - தீமைகள் இம்மிகூடக் குறையாது. ஆனால் அதை Just like that எதிர் கொள்ளும் மன வலிமை கிடைக்கும்.

காலசர்ப்ப தோசத்தினால் ஏற்படும் தீமைகளை வகைப் படுத்த முடியுமா?

முடியும்!

அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!

(தொடரும்)
------------------------------------------------------------------------------------------
காலசர்ப்ப தோசத்தினால் இளம் வயதில் மிகவும் சிரமப்பட்டுப் பிறகு சிறப்பானதொரு வாழ்வைப்பெற்ற - நமக்கெல்லாம் மிகவும் பரீட்சயமான இருவரின் ஜாதகங்களைக் கீழே கொடுத்துள்ளேன். அது உங்கள் பார்வைக்காக!





பயிற்சி வகுப்பு:(Practical Class)
1
பாக்யராஜ் அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்? அதன் சிறப்பு என்ன? உச்சம்பெற்ற கிரகம் எது? அதன் பலன் என்ன? அவருடைய ஜாதகத்தில் மிகவும் சிறப்பான இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகம் எது? சிறப்பு என்று சொல்வதன் காரணம் என்ன?

2.
இளையராஜா அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி யார்? அவர் யாருடன் சேர்க்கை பெற்றிருக்கிறார்? அதன் பலன் என்ன? பரிவத்தனை பெற்ற கிரகங்கள் எவை? லக்கினத்தில் சனி வந்து அமர்ந்ததின் சிறப்பு என்ன?

முன்பு நடத்திய பாடங்கள் மறக்காமல் இருந்தால் இதற்குப் பதில் சொல்லலாம்?

சரி, யார் யார் சரியாகப் பதில் சொல்லப்போகிறீர்கள் - யார் யார் பெஞ்ச் மேல் நிற்கப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

நாளை சந்திப்போம்!

30.4.07

காதலிக்க நேரமில்லை!

===============================================

காதலிக்க நேரமில்லை! காதலிப்பார் யாருமில்லை!
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 31

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்'
என்ற கவியரசரின் பாடல் மிகவும் பிரசித்தமானது.

என்னதான் காதல் என்றாலும் , கத்திரிக்காய என்றாலும்,
Love Marriage அல்லது Arranged Marriage என்றாலும்
அது ஜாதகப்படிதான் நடக்கும். ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ள
காலத்தில்தான் நடக்கும்.

காதல் திருமணம் உயர்ந்ததா? அல்லது பெற்றோர்
பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் உயர்ந்ததா?
என்று விவாதித்தால் அதற்கு உடன்பட்ட கருத்து
ஏற்படுவது கடினம்.

இரண்டிலுமே நன்மை, தீமைகள் உள்ளன. ஆனால்
இரண்டின் நோக்கமும் ஒன்றுதான்

காதலிப்பது எதற்காக....? திருமணம் செய்துகொண்டு
இன்பமாக வாழ்வதற்குத்தானே!

ஆகவே திருமண வாழ்வு இன்பமானதாக இருக்குமா
என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

மேலை நாட்டுக்காரர்களுக்கு அதைப் பற்றி எல்லாம்
கவலையில்லை. மணவாழக்கை பிடிக்கவில்லையென்றால்
ஜஸ்ட் லைக் தட்' என்று செய்த விவாகத்தை ரத்து
செய்வதற்கோ அல்லது மீண்டும் திருமணம் செய்து
கொளவதற்கோ அங்கே எந்தவித சமூக / கலாச்சார
இடையூறுகளும் இல்லை!

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ எத்தனை முறைகள்
வேண்டுமென்றாலும் திருமணம் செய்துகொள்ளலாம்
அங்கே! திருமணம் செய்து கொள்ளாமலேயே தாம்பத்திய
வாழக்கையையும் மேற்கொள்ளலாம்.

கேள்வி கேட்க ஆளில்லை அங்கே!

அவர்களுடைய குடும்ப உறவுமுறைகளைப் பற்றி ஒரு
வேடிக்கையான தகவலும் உண்டு. ஒருமுறை ஒரு
கணவன் தன் மனைவியைக் கேட்டானாம், " எங்கே
நம் குழந்தைகள்? (Where are our children?)

உடனே அவள் பதில் சொன்னாளாம்," உங்கள் குழந்தை
களும், என் குழந்தைகளும், நமது குழந்தைகளுடன்
விளையாடிக்கொண்டிருக்கின்றன! (Your children
and my children are playing with our children!)

அதாவது உன்னைத் திருமணம் செய்துகொள்ளும்
முன்பாக நான் பெற்றெடுத்த பிள்ளைகளும், என்னைத்
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக உனக்குப்
பிறந்த குழந்தைகளும், நாம் இருவரும் மணம் செய்து
கொண்டபிறகு நம் இருவருக்கும் பிறந்த குழந்தை
களும் ஒன்றாக விளையாடிக்கொண்டிருக்கின்றன
என்றாளாம்!
இதுதான் அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் ந்டை
முறை வாழ்க்கை. நம் நாட்டில் இதுவரை
அதற்கெல்லாம வழியில்லை!

சென்னை போன்ற பெரு நகரங்களில், இலை மறைவு
காய் மறைவாக இரண்டொன்று நடக்கத்தான் செய்கிறது.
நகரவாசிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
ஆனால் மற்ற இடங்களில், குறிப்பாகக் கிராமப்
புறங்களில் அனுமதிக்க மாட்டார்கள்.

நமக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. நம் மண
வாழ்க்கை அதற்குத் தகுந்த மாதிரி இருப்பது அவசியம்!

அப்படியொரு வாழ்க்கை - மண வாழ்க்கை அமைவ
தற்கு ஜாதகம் எப்படி இருக்க வேண்டுமென்று பார்ப்போம்!

ந்ல்ல திருமண வாழ்க்கைக்கு லக்கினாதிபதி, இரண்டாம்
வீட்டிற்குரியவன், 7ம் வீட்டிற்குரியவன் ஆக மூவரும்
பலமாக இருக்க வேண்டும். பெண்களென்றால் அவர்க
ளுடன் குருவும், சூரியனும் கூட பலமாக இருக்க வேண்டும்.

பலம் என்பது என்ன என்பதை இந்தத் தொடரில் பல
முறை சொல்லியிருக்கிறேன். அதாவது ஒரு கிரகம்
தன்னுடைய உச்சவீடு அல்லது, சொந்தவீடு அல்லது
நட்புவீடு அல்லது திரிகோண் வீடுகள், கேந்திர
வீடுகளில் இருப்ப்து முக்கியம். அதுவே அதற்கு
இயற்கையான பலத்தைத் தரும்!

இளம் வயதில் அனைவரின் மனதிலுமே கலர்க் கலராக
கனவுகள் உண்டாகும். திருமண வயதில் பலவிதமான
எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள், தவிப்புக்கள் உண்டாகும்.
அதற்கு ஆண் என்ற பெண் என்ற பேதங்கள் எதுவும்
இல்லை.

எல்லா இளைஞர்களுமே, ஒரு சிம்ரனோ, அல்லது ஒரு
நயன்தாராவோ, அல்லது ஒரு திரிஷாவோ தனக்காகக்
காத்துக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டு கொண்டிருப்பான்.
ஆனால் கடைசியில் ஒரு காந்திமதியோ அல்லது சுந்தரி
பாயோ வந்து அவன் கரம் பிடிப்பாள்.

அதுபோல பல இளம் பெண்கள், ஒரு விஷாலோ அல்லது
ஒரு அஜீத்தோ அல்லது ஒரு விஜய்யோ வந்து தன்னை
ஆட்கொள்ளப்போவதாகக் கனவு கண்டு கொண்டிருப்பாள்.
கடைசியில் ஒரு பிரகாஷ் ராஜோ அல்லது ஓமக்குச்சி
நரசிம்மனோ வந்து அவளைத் திருமணம் செய்து கொள்வான்.

அதுதான் வாழ்க்கை!

கொஞ்ச நாள் கழித்து அவர்களே தங்கள் மனதைச்
சமாதானப் படுத்திக் கொண்டு, முழு மனதோடு அல்லது
அரை மனதோடு குடும்பம் நடத்தத் துவங்கி விடுவார்கள்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை'
என்று தத்துவார்த்தம் வேறு அவர்களைப் பிடித்துக்
கொண்டுவிடும்.

அவனே தன் நண்பனிடம் சொல்வான்." அழகாடா முக்கியம்?
குணம்தானடா முக்கியம்! என் மனைவி குணத்தில் தங்கம்டா,
ரியலி ஐ'யாம் லக்கி!" என்பான்

"கோடி ஒரு வெள்ளை: குமரி ஒரு பிள்ளை "
(அதாவது புதுத் துணி ஒரு சலவை வரைக்கும் தான்.
அதுபோல ஒரு பெண்ணின் அழகும் - அவளுக்கு ஒரு
குழந்தை பிறக்கும்வரைதான்) என்று சகட்டுமேனிக்குப்
பல பொன் மொழிகளைச் சொல்லி நண்பனுக்கும் புத்தி
சொல்ல ஆரம்பித்து விடுவான்.

இதையெல்லாம் மீறி சிலருக்கு மட்டும் பொருத்தமான
ஜோடி கிடைத்துவிடும். பெண் என்றால் அவள் அழகிற்கு
ஏற்பக் கண் நிறைந்த கணவனாக இருப்பான் அல்லது
ஆணாக இருந்தால் அவன் மனதை மயக்கும் அல்லது
மனதை நிறைக்கும் மனைவியாக ஒரு பெண் கிடைப்பாள்

That pair is made for each other ( வில்ஸ் ஃபில்டர்
சிகரெட் விளம்பரத்தில் ஒரு அழகான் ஜோடியைப் படமாகப்
போட்டு இந்த வாசகத்தையும் போட்டிருப்பார்கள்.
Made for each other - அதை நினைத்துக் கொள்ளுங்கள்)
என்று சொல்லும்படியான தம்பதியர் அபூர்வமாக இருப்பார்கள்.

அப்படிப்பட்ட அமைப்பு ஒரு ஐந்து அல்லது பத்து
சதவிகிதம் தான் இருக்கும்!

எல்லாம் ஜாதக பலன்.

ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று சொல்லப்படு
கின்ற ஏழாம் வீடு. அதன் அதிபதி (Owner) 7ல் வந்து
அமர்ந்த கிரகங்கள், சுக்கிரன் ஆகியவற்றைப் பற்றி
விரிவாக அலசுவோம்!
-----------------------------------------------------------------------------------
முதலில் மண் வாழ்க்கை அமைவதற்குப் பல விதிகள்
இருக்கின்றன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

அவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும் மண வாழ்க்கை
அமையும் என்பதில் சந்தேகமில்லை!

இந்த விதிகள் ஆண்கள், பெண்கள் என்று இரு
பிரிவினருக்கும் பொதுவானது!

2ம் வீடு (House of Family affairs) குடும்ப ஸதானம்
7ம் வீடு (House of Marriage) களத்திர ஸ்தானம்

சுப கிரகங்கள் : குரு, சுக்கிரன், சந்திரன்
பாப கிரகங்கள்: சனி, ராகு கேது, செவ்வாய்

மகரராசி, கும்பராசிக்காரர்களுக்கு சனியிடம் இருந்தும்,
மேஷராசி, விருச்சிக ராசிக்காரகளுக்குச் செவ்வாயிட
மிருந்தும் விதிவிலக்குகள் உண்டு. ஏனென்றால்
அவைகள் அந்த வீட்டின் அதிபதிகள்

1. சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும்
ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்.வலு என்பது
அவைகள் தங்களுடைய சொந்த, உச்ச, நட்பு, திரிகோணம்,
கேந்திரம் ஆகிய இடங்களில் இருப்பது!

2. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் உச்சம் பெற்றிருப்பது

3. 5, 9ற்கு அதிபதிகள் லக்கினாதிபதியோடு சேர்ந்தோ
அல்லது லக்கினாதிபதியின் பார்வை பெற்றோ இருப்பது

4.1,4,7,10ம் வீடுகளில் சுபக் கிரகங்கள் இருப்பது ந்ல்லது

5.லக்கினாதிபதி அம்சத்தில் உச்சம் பெற்று ஏழாம் வீட்டு
அதிபதியைப் பார்ப்பது

6.5ம் வீட்டு அதிபதியும், 5ற்கு 5ந்தான 9ம் வீட்டு
அதிபதியும் சுபக்கிரகங்களாக இருந்து வலுவான இடத்தில்
அமர்வது

7. சுக்கிரன் தன்னுடைய நட்புக் கிரகங்களுடன் சேர்க்கை
அத்துடன் லக்கினாதிபதியின் பார்வையையும் பெறுவது.

8. 5, 7, 9 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள் லக்கினத்தில் வந்து
அமர்வது அல்லது லக்கினத்தைப் பார்ப்பது

9. 9, 10ற்கு அதிபதிகள் (அவர்களுக்கு தர்ம,கர்ம அதிபதிகள்
என்று பெயர்) ஏழாம் வீட்டில் சேர்ந்திருப்பது . அல்லது
சேர்ந்திருந்தி ஏழாம் வீட்டைப் பார்ப்பது..

10.சுக்கிரனுக்கு மற்றொரு சுபக் கிரகத்தின் கூட்டணி,
அல்லது பார்வை! அல்லது கோண வீடுகளக்கு ஆதிபத்யம்

11.சுபக்கிரகங்கள் கேந்திர, திரிகோண் ஸ்தானங்களில்
சேர்ந்திருப்பது - அத்துடன் பாவக் கிரகங்களின் பார்வை
பெறாமல் இருப்பது

12. 2, வீடு, 7ம் வீடு ஆகிய இடங்களில் சுபக்கிரகங்கள்
இருத்தல் அல்லது அந்த வீடுகளின் மேல் அவற்றின் பார்வை

13.பொதுவாக சபக்கிரகங்கள் உச்ச வீடுகளில் இருப்பது

14. கிரகங்கள் ஒன்றிற்கொன்று கேந்திரத்திலோ அல்லது
திரிகோணத்திலோ இருப்பது

15. ராசிச் சக்கரத்தில் (In Rasi Chart) சுக்கிரன், குரு
இருவரும் பலம் குறைந்திருந்தாலும், நவாம்சத்தில் உச்சம்,
ஆட்சி போன்ற அமைப்பைப் பெற்றிருத்தல்

16. 2,4,5,7,9,11 ஆகிய வீடுகளில் ஒரு வீடாவது குருவின்
பார்வையைப் பெறுவது!

17. குரு திரிகோண வீடுகளுக்கு அதிபதியாகி, கேந்திரத்தில்
இருந்து ஏழாம் இடத்தைப் பார்ப்பது.

இந்த விதிகள் எல்லாம் திரும்ணம் சிறப்பாக நடப்பதற்கு
மட்டும்தான். திருமண வாழக்கை எப்படி இருக்கும் என்பதற்கு
மேலும் பல் விதிகள் உள்ளன. அவற்றை அடுத்து வரும்
பதிவுகளில் பார்ப்போம்
---------------------------------------------------------------------------------
கோச்சாரப் பலன்களின் ஒரு பகுதி பாக்கியுள்ளது. அதை
அட்டவணையாகக் கொடுக்கலாம் என்றுள்ளேன்
அட்டவணை தயாரிப்பில் உள்ளது. அதை நாளையப்
பதிவில் சேர்த்துக் கொடுக்கிறேன்

பதிவின் நீளம் கருதியும், கடைசி பெஞ்ச் கண்மணிகளின்
பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

(தொடரும்)