மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.8.07

34. கால சர்ப்ப தோஷத்தின் பலன்கள்

34. கால சர்ப்ப தோஷத்தின் பலன்கள்

சென்ற வகுப்பில் நடத்திய பாடத்தின் தொடர்ச்சி

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது அமர்ந்
திருக்கும் இடத்தை வைத்துத்தான் கால சர்ப்ப தோஷத்தின்

பலன்கள் உண்டாகும். சுப கிரகங்களின் வீடுகளில் ராகு
அல்லது கேது அமர்ந்திருந்தால் சுபமான பலன்களே

உண்டாகும்.

உதாரணத்திற்குக் குருவினுடைய வீடுகளான தனுசு
மற்றும் மீனம், அதேபோல சுக்கிரனின் வீடுகளான ரிஷபம்

மற்றும் துலாம், சந்திரனுடைய வீடான கடகம் ஆகிய
இடங்களில் அந்த இரண்டு கிரகங்களில் ஒன்று அமையப்

பெற்றிருந்தால் அந்தக் கிரகம் நன்மையைச் செய்யும்

அசுபர்கள் (Melific Planets) வீடுகளில் அமரும் போது தீய
பலன்களே உண்டாகும்.


பல அரசியல் தலைவர்களின் ஜாதகங்களில் கால சர்ப்ப
தோஷம் அமையப்பெற்றிருந்ததினால் அவர்களுடைய

இளம் வயதில் பசி, பட்டினி, அடி, உதை, சிறைச்சாலை
என்று அந்த வயது வாழ்க்கை அவதி நிறைந்ததாக

இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு ஜவஹர்லால் நேரு
அவர்களின் வாழ்க்கையைச் சொல்லலாம்.


அதுபோல கால சர்ப்ப தோஷ காலம் முடிந்து நல்ல
காலம் ஆரம்பித்த பிறகு மாபெரும் தொழில்

அதிபர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறியவர்கள்
பலர் உண்டு.


ராகு மற்றும் கேதுவின் பிடிக்குள் சிக்கிக் கொண்ட கிரகம்
ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருந்தாலும்

பலவீனமாகத்தான் இருக்கும்.

கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகனுக்கு, ராகு அல்லது
கேது திசை வந்தால், அந்தத் திசையில் நற்பலன்கள்

உண்டாகும். அதேபோல அத்திசை நிறைவுறும்போது
மரணத்தையும் கொடுத்துவிடும். ஆனால் துன்பத்தையும்,
பல
சோதனைகளையும் கொடுக்கும் ராகு அல்லது கேது
திசை மரணத்தைக் கொடுப்பதில்லை


இத்தோஷம் உள்ளவர்கள் தங்கள் சொந்த முயற்சியால்
தான் சாதனைகள் செய்வார்கள்.பெற்றோர் உதவியால்

பெரிதாக பலன்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

1. லக்கினத்தில் ராகு, ஏழில் கேது இருக்கக் காலசர்ப்ப
தோஷமும் உள்ள ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம்


நடைபெறும். திருமணம் ஆனாலும் இல்வாழ்வு சிறக்க
ஒருமித்த கருத்துடைய மனைவி கிடைக்க மட்டாள்.

போராட்டமான இல்வாழ்வுதான்.

2. 2ல் ராகு, 8ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகன், அந்நிய தேசங்களில்தான் வாசம்

செய்வான்.

3. 3ல் ராகு, 9ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகனனுக்குச் சகோதரர்களுடன் நல்ல

உறவு ஏற்படாது. அவனுடைய தந்தைக்கும் அவனால் கெடுதி.

4. 4ல் ராகு, 10ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகர்களுக்குக் கல்வி பெறுவதில் பல தடைகள்

ஏற்படும். ஆனால் தத்தித் தத்திப் படித்துப் பின்னாளில் உயர்
கல்வி பெற்றுவிடுவார்கள். ஆனால் ராகு இருக்கும்

இடம் சுப கிரகத்தின் வீடாக இருந்தால் பெரிய மருத்துவ
நிபுணராக, அறுவை சிகிச்சை நிபுணராக திகழும்படி

ஏற்றம் கிடைத்துவிடும்.

5. 5ல் ராகு, 11ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகனுக்குக் கடுமையான புத்திர தோஷம்

உண்டாகும். பெற்ற பிள்ளைகளால் பெரிய சோதனைகளும்
இழப்புக்களும் ஏற்படும்.


6. 6ல் ராகு, 12ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகனுக்கு, சிறைவாசம், உடல் நலமின்மை

யாவும் ஏற்படும். (ஜவஹர்லால் நேரு அவர்களின் ஜாதகத்
தில் இந்த அமைப்பு இருந்தது - அவருடைய இளவயது

வாழ்க்கை அனைவருக்கும் தெரிந்ததுதானே!)

காலசர்ப்ப தோஷத்திற்குப் பரிகாரம் உண்டா?

உண்டு!

சிவனை வழிபடுதல் ஒன்றுதான் பரிகாரமாகும்.

ஸ்ரீஹாளஹஸ்தி, இராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்கள்
அதற்குரியனவாகும். அங்கே அடிக்கடி செல்ல

முடியாதவர்கள் உள்ளூரில் உள்ள சிவாலங்களுக்குச்
சென்று சிவனை வழிபட்டு வரலாம். வாரம் ஒருமுறை

சென்று வழிபடலாம். அல்லது 27 நாட்களுக்கு ஒருமுறை
தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று வழிபட்டு வரலாம்.


சரி, வெளி மாநிலங்களில் அல்லது வெளி நாடுகளில்
வசிக்கும் அன்பர்கள் என்ன செய்யலாம்?


"நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!"
என்று துவங்கும் திருவாசகப் பதிகத்தை மனமுருகப்
படித்துப் பயன் பெறலாம்.


(தொடரும்)

பின் குறிப்பு: எனது சொந்த அலுவல்கள் காரணமாக
நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அன்பர்கள்

மன்னிக்கவும்!


---------------------------------------------------------------------

16 comments:

நாமக்கல் சிபி said...

//பின் குறிப்பு: எனது சொந்த அலுவல்கள் காரணமாக
நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அன்பர்கள்
மன்னிக்கவும்!
//

அட! இதெல்லாம் எதுக்கு! எங்களால் புரிந்து கொள்ள முடியாதா என்ன?

:)

பிரதாப் குமார் சி said...

வணக்கம் சார்
நல்ல நகைச்சுவை பதிவுகள்

SP.VR. SUBBIAH said...

///நாமக்கல் சிபி அவர்கள் சொல்லியது: அட! இதெல்லாம் எதுக்கு! எங்களால் புரிந்து கொள்ள முடியாதா என்ன?///

நீங்கள் சொன்னால் சரிதான் சிபி!

SP.VR. SUBBIAH said...

/// பிரதப் குமார அவர்கள் சொல்லியது: வணக்கம் சார்! நல்ல நகைச்சுவை பதிவுகள///

நாற்பது வயதுவரை எல்லாமே நகைச் சுவையாகத்தான் இருக்கும்! எனக்கும் அப்படித்தான் இருந்தது!

யாரோ ஒருவன் said...

ஐயா, வணக்கம், நான் தங்கள் ஜோதிடம் பற்றிய இந்த பதிவை ஆவலுடன் படித்து வருகிறேன். இந்த கலை பற்றி அறிய ஆவல், காத்திருக்கிறேன்.

வணக்கம்.

Anonymous said...

வணக்கம் குருவே,

நமது முன்னோர்களின் நூல்களில் காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளதா?

அன்புடன்
இராசகோபால்

விக்னேஷ்வரன் அடைக்கலம் said...

thanks alot for this post..

Anonymous said...

உள்ளேன் ஐயா!

ஒரு சந்தேகம் ஐயா!

ஒருவருடைய வாழ்வில் ஏழரைச் சனியன் எத்தனை ஆண்டுகால இடைவெளியில் வரும்?

இராசிக்கும் இலக்கணத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

கடைசி பெஞ் புள்ளிராஜா

Anonymous said...

லக்கணத்தில் கேது, 7இல் ராகு இருந்தால் எப்படி வாழ்க்கை இருக்கும்?

குசும்பன் said...

எனக்கு சிலர் கால சர்ப்ப தோஷம் இருப்பதாக சொல்வார்கள், சிலர் இல்லை என்பார்கள். அதை எப்படி கண்டு பிடிப்பது, ஆனால் என்ன என்னவோ சொல்வார்கள். அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிடுவேன்.

Anonymous said...

ஐயா,

ராகு, கேது ரெண்டும் பன்னிரெண்டு கட்டங்களிலும் வருமாமே? வேறொரு வலைத்தளத்தில் படித்தேன். மேலும் எல்லா கட்டங்களிலும் அவை ஏதோவொரு பிரச்சினையை கொடுக்கும் என்றும் படித்தேன். எனக்கு 2-ல் ராகு, 8-ல் கேது உள்ளது. எனவே, இதே போன்ற ஜாதக அமைப்பு உள்ள பெண்ணை மணக்க வேண்டும் என்கிறார்கள்.
தங்கள் கருத்து என்ன?

பிரதாப் குமார் சி said...

வணக்கம் சார்

நாற்பது வயது வரை "நன்றாக" இருந்த தாங்கள் அதன்பின மாறிய காரணம் அறிய இயலுமா?

நவீன யுகத்தில் இன்றைய தலைமுறையினர் இதுபோன்ற விசயங்கள் அறிந்து கொள்வதால் சமூகத்திற்கு ஏதேனும் பயனுள்ளதா? இது மக்களை பின்னோக்கிகூட்டிக் கொண்டு செல்வது போலுள்ளது.

உயிர்கள் வாழமுடியாத உயிரற்ற செவ்வாய் கிரகம்
3 லட்சம் ஒளிஆண்டுகள் தூரமுள்ள பூமியிலுள்ள உயிருள்ள மனிதனின் வாழ்வை தீர்மானிப்பது, சந்திரனும், சூரியனும் கோள்கள் என்று கூறுவது லாஜிக் உதைக்கிறது.

தற்போது நாசா பத்தாவதாக ஒரு கிரகம் கண்டுபிடித்துள்ளனர். பெயர் வைக்கவில்லை.
அந்த கிரகத்தின் பலன்கள், லக்கினங்கள்,பரிகாரங்கள், வாகனம், பார்வைகள் என்ன என்பது எப்போது யாரால் வரையறுக்கப்படும்.? வரையறுக்கப்பட்டால் 12 கட்டங்களில் எந்த கட்டத்தில் வரும் அல்லது புதிதாக ஒருகட்டம் வரையப்படுமா?

சறறு விளக்கவும். ஏதேனும் மனம் புண்படும்படியாக கேட்டிருந்தால்...மன்னித்தருளுக.

siva said...

Hello sir.. Nice to see your information.

It is really useful

யாரோ ஒருவன் said...

ஐயா!, எனக்கு ஒரு சந்தேகம். எங்கள் ஊரில் ஒரே நேரத்தில் பிறந்த இரட்டையர்களில் ஒருவர் நல்ல நிலைமையில் உள்ளார், மற்றவருக்கோ இன்னும் கல்யாணம்கூட ஆகவில்லை. இருவர் ஜாதகமும் ஒன்றே. இது எப்படி, புரியவில்லை. விளக்குவீர்களா?

Priya said...

Sir,

In the website run by Sri K.N. Rao, there are a series of articles on Kal sarpa yoga, link for one of them given below:

Click here

He is against this concept and says this is brought up by south indian astrologers just for scaring people and making money and he goes on to say that there is no proof for this from any of the ancient astrology texts.

Is there any reference to Kaal Sarpa yoga in any of the books from your collection?
Please tell us more about this.

Thanks a lot,
Priya

Anonymous said...

வணக்கம் அய்யா,

தாங்களுடைய வகுப்பறை விளக்கங்கள் மிகவும் நன்றாக அமைந்துள்ளன. என்னுடை ஜாதகத்தில் உள்ள சாதகமான மற்றும் பாதகமான அமைப்புகள் குறித்து கூறுவீர்கள் ஆனால் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்.

பெயர் : சிவராஜா

பிறந்த ஊர்: கும்பகோணம்

தேதி : 25.04.1973

நேரம் : மாலை 6.50

லக்னம் : துலாம்

இராசி : மகரம்

நட்சத்திரம் : திருவோணம்

லக்கனத்துக்கு 3ல் இராகு
லக்கனத்துக்கு 4ல் குரு, சந்திரன் மற்றும் செவ்வாய்
லக்கனத்துக்கு 6ல் புதன் மற்றும் மாந்தி
லக்கனத்துக்கு 7ல் சூரியன் மற்றும் சுக்கிரன்
லக்கனத்துக்கு 8ல் சனி
லக்கனத்துக்கு 9ல் கேது

நான் படித்து அறிந்த வகையில் கீழ்கானும் யோகங்கள் இருப்பதாக கருதுகிறேன். எனினும் இதுவரையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை, சராசரியை விட மோசமாக இருப்பது போல் தோன்றுகிறது, சரியான வேலை கிடைக்கவில்லை அதனால யாரும் பொண்ணு கொடுக்க கூட யோசிக்கிறார்கள். வெறும் ஆளாக தான் இருக்கிறேன். தாங்கள் கருனை கூர்ந்து விளக்க முடியுமா?

1) குரு சந்திர யோகம்
(லக்கனத்துக்கு 4ல் குருவுடன் சந்திரன்)
2) குரு மங்கள யோகம்
(லக்கனத்துக்கு 4ல் குருவுடன் செவ்வாய்)
3) சந்திர மங்கள யோகம் (லக்கனத்துக்கு 4ல் சந்திரனுடன் செவ்வாய்)
4) ருசக யோகம் (நட்சத்திர லக்கனத்தில் உச்ச, நீச்ச கிரகங்கள் இருப்பது - மகரத்தில் நீச்ச குருவும் உச்ச செவ்வாயும் இருக்கிறது)

5) தேடுதற்க்கரிய 11ம் வீட்டு அதிபன் உச்சம் பெற்று சுக்கிரனுடன் சேர அந்த வீட்டுக்கு அதிபன் லக்கனத்துக்கு கேந்திரம் பெற்றால் பேரியோகம் என்கிறார்கள் அதுவும் உள்ளது அதாவது 11ம் வீட்டு அதிபன் சூரியன் உச்சம் பெற்று சுக்கிரனுடன் 7ம் வீட்டில் இருக்கிறான் அந்த 7ம் வீட்டு அதிபன் செவ்வாய் உச்சம் அடைந்து லக்கினத்திற்க்கு கேந்திரத்தில் இருக்கிறான்.

6)சப்த கிரகங்களும் வலுத்து நிற்ப்பது

"ஆட்சி வீடதற்கு கேந்திர கோண மோடதிக லாபம்
மாட்சியாய்னிற்கவிந்த மன்னவரேழு பேரும்
சேஷ்டனாய்யுலகையாண்டு செங்கோலுக்கதிகனாவான்
சூட்சியாய் மறையோன் சொன்ன சொற்றப்பாதிருக்குமாதே."

இந்த சூத்திரபடி
சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து அவரின் ஆட்சி வீடு 5ம் இடம்(திரிகோணம்)

சுக்கிரன் இருக்கும் இடத்திலிருந்து அவர் அட்சி வீடான துலாம் 7மிடம் (கேந்திரம்)

சனி இருகுமிடத்திலிருந்து அவரின் ஆட்சி வீடுகளான மகரமும் கும்பமும் முறையே 9 மற்றும் 10ம் வீடு (திரிகோணம் மற்றும் கேந்திரம்)

சந்திரன் இருக்குமிடத்திலிருந்து அவர் ஆட்சி வீடு 7ம் இடம் (கேந்திரம்)

செவ்வாய் இருக்குமிடத்திலிருந்து அவர் ஆட்சி வீடுகளான மேஷமும், விருச்சிகமும் முறையே 4 மற்றும் 10 (கேந்திரங்கள்)

குரு மாத்திரம் இந்த சூத்திரத்திற்க்கு உட்படாவிட்டாலும் இன்னுமொறு சூத்திரப்படி அதுவும் வலுத்து இருக்கிறது.

எந்த கிரகமும் அதன் ஆட்சி வீட்டிற்க்கு தனஸ்தானம் அல்லது லாபஸ்தானத்தில் இருப்பது

அதன்படி குருவும் தன் ஆட்சி வீடுகளான தனுசு, மீனத்திற்க்கு முறையே தனஸ்தானம் மற்றும் லாபஸ்தானத்தில் இருக்கிறார்.


"ஓங்கும் லக்கினாதிபதியுற்ற வீட்டிற்க்கதிபதிதான்
பாங்காய்க் கேந்திர கோணம் பற்றி மூலத்திரிகோணம்
தாங்குமுச்சனானாலும் தக்கபுரத்திற்க்கு கதிகாரம்
வீங்கும் பர்வமேழைந்தின் மேலொன்பானாமாண்டுளதே"

என்ற சூத்திரப்படி லக்கினாதிபதி சுக்கிரன் இருந்த வீட்டிற்க்கு அதிபதியான செவ்வாய் லக்கனத்திற்க்கு கேந்திரமான 4ல் உச்சமடைந்து இருக்கிறார்.


வயதாரெட்டு மேன்மூன்று வருஷமிருதங்க யோக பலன்
சுயலாபாதிபதியுச்சன் சுங்கன் கூடியிருந்த மனை
நய வீட்டுடையோன் பத்தேழினான்கிலோன் பானமர்ந்திடவே
செயமாயரசர்க்கதிபதியாஞ் செப்பு ஞானி தனவானே.

இந்த சுலோகப்படி லாபாதிபதி சூரியன் சுக்கிரனுடன்(சுங்கன்) கூடி இருக்கும் 7ம் வீட்டு அதிபதி செவ்வாய் கேந்திரமான 4ல் உச்சமடைந்திருக்கிறான்.

இப்படி இன்னும் நிறைய இருக்கிறது

இதுபற்றி விவரங்களை கூறினீர்கள் என்றால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.


நன்றி
சிவராஜா