மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 361 - 370. Show all posts
Showing posts with label Lessons 361 - 370. Show all posts

19.7.10

அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானல்லவா!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானல்லவா!

கவியரசர் கண்ணதாசன் இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள், வழக்கம்போல, காலை 9:30 மணிக்கு தன் அலுவலுக்குச் சென்றார். அதாவது திரைப்படம் ஒன்றிற்கு பாடல் புனையச் சென்றார்.

சென்றடைந்த இடம் மிகவும் பிரபலமான ஸ்டுடியோவின் ஒலியரங்கம். அதாவது ரெகார்டிங் தியேட்டர். முன்புறம் இருந்த ஹாலில், இசை யமைப்பாளர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்,
ஒரு ஷோபாவில் நீட்டிப் படுத்து, நல்ல நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.
வேறு எவரையும் காணோம். இவரை வரச் சொல்லியிருந்த அவர்
அதை மறந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

சுற்று முற்றும் பார்த்துவிட்டுத் தன் காருக்கே திரும்பினார் கவியரசர். அவரைக் கண்டு ஓடிவந்த எம்.எஸ்.வியின் உதவியாளர் கவியரசரின் காதில் மெல்லக் கிசுகிசுத்தார்  “அண்ணே, இரவு முழுவதும் ஒரு படத்திற்குப் பின்னணி இசை சேர்க்கும் வேலை. அது முடிவதற்குக் காலை ஆறு மணியாகிவிட்டது. அனைவரையும் வீட்டிற்குச் சென்றுவிட்டு பகல் பன்னிரெண்டு மணிக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, தலைவர் இங்கேயே படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டார்,,,”

  “அதனாலென்ன பரவாயில்லை!” என்று சொன்ன கவியரசர், காரின் டாஷ்போர்டில் இருந்த நோட்டுப் புத்தகத்தில் இருந்து ஒரு காகிதத்தைக் கிழித்து, அதில் இரண்டு வரிகளை எழுதி, “இதை விஸ்வநாதன் எழுந்த பிறகு கொடுத்து இதற்கு டியூன் போடச் சொல்லு, நான் ஒரு மணிக்கு மீண்டும் வருகிறேன். மீதி வரிகளை அப்போது எழுதித் தருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, எம்.எஸ்.வி எழுந்தவுடன், சீட்டு அவரிடம் சேர்க்கப்பட்டது.

சீட்டைப் பார்த்த எம்.எஸ்.வி புன்னகைத்தார்.

“அட, இது கூட நன்றாக இருக்கிறதே!” என்று சொன்னவர், அதற்கே அன்று மெட்டைப் போட்டு வைத்தார். கவியரசர் திரும்பி வந்தவுடன், அந்த வரிகளை வைத்தே பாடல் முழுமையாக எழுதப்பெற்று, பாடலும் பதிவானது. பிறகு படம் வெளியானவுடன், அந்தப் பாடல் மிகவும் பிரபலமடைந்தது.

கவியரசர் விளையாட்டாக எழுதிக் கொடுத்து, பிறகு பிரபலமான அந்த வரிகள் இதுதான்:

  “அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...
      அகப்பட்டவன் நான் அல்லவா”


முழுப் பாடலையும் தெரிந்து கொள்ள விரும்புவோர் இங்கே அழுத்தி அதைத் தெரிந்து கொள்ளலாம்.
----------------------------------------------------------------------------------
நாம் விரும்பிப் பிறக்கவில்லை. நம் பிறப்பும் நம்மைக்கேட்டு அரங்கேற்றப் படவில்லை. மற்றவர்களைப் பார்க்கும்போது, நம் பிறவியில் உள்ள, நம் வாழ்க்கையில் உள்ள அவலங்கள், கஷ்ட நஷ்டங்கள் நமக்குத்  தெரிகின்றன.

“என்ன நினைத்து என்னைப் படைத்தான் ஆண்டவன் என்பவனே” என்று பாடும் நிலைமையில்தான் பலரின் வாழ்க்கை இருக்கிறது.

கவியரசரின் பாடல் வரிகளை, நாம் இப்படிச் சற்று மாற்றி எழுதினால், நம் வாழ்க்கைக்குச் சரியாக இருக்கும்

“அவனுக்கென்ன எழுதி விட்டான்
   அகப்பட்டவன் நான் அல்லவா?”


ஆமாம், நம் தலை எழுத்தைக் காலன் எழுதி வைத்து விட்டுப் போய்விட்டான். அல்லது எழுதி நம்மை இங்கே அனுப்பிவிட்டான். அகப்பட்டுக்கொண்டு அல்லாடுவது நாமல்லவா?

மனிதர்களில் முழுமையான சந்தோஷத்துடன் இருப்பவர்கள், முழுமையான திருப்தியுடன் இருப்பவர்கள் எவருமே இல்லை. இருந்தால் அவர்கள் ஞானிகள் லிஸ்ட்டிற்குச் சென்று விடுவார்கள். எலும்பும் சதையும், அல்லாடும் இதயமும் கொண்ட மனிதர்களாக இருக்க முடியாது.

ஞானிகள் கூட பூரண ஆயுளுடன் வாழ்ந்தவர்கள் கிடையாது. மத்திம வயதில் புட்டுக் கொண்டவர்களே அதிகம். பூரண ஆயுளுடன் வாழ்ந்த ஞானிகள் சிலரைக்கூட மரணம் சந்தோஷமாகத் தழுவியதில்லை. ரமண மகரிஷி, யோகிராம் சுரத்குமார் போன்ற சில மகான்கள் கூட இறுதிக் காலத்தில் புற்று நோய் வந்து சிலமாதங்கள் சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்ட பிறகுதான் இயற்கை எய்தினார்கள்.

மரணமும், மரணம் வரும் வழியும், மரணம் பயன்படுத்தும் ஆயுதமும் யாரையும் விட்டு வைப்பதில்லை. யாரும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம். பொறுமையாகப் படித்துக்கொண்டு வாருங்கள்!
+++++++++++++++++++++++++++++++
மத்திம ஆயுள்

முன்பே எழுதியுள்ளேன். மத்திம ஆயுள் என்பது 32ற்கு மேல், 60 - 64 வயதுவரை உயிரோடு இருக்கும் அமைப்பு. எனது உறவினர்களில் சிலர் (மொத்தம் ஆறு பேர்கள்) 40  - 50 வயதிற்குள் இறந்திருக்கிறார்கள்.  40 - 50 வயது காலக்கட்டம் என்பது ஒரு கண்டம்தான்.

ஐம்பதைத் தாண்டிவிட்டால், வண்டி சுலபமாக அறுபதுவரை ஓடிவிடும். அதற்குப் பிறகு மக்கர் பண்ணலாம். அது வாங்கி வந்த வரம் கணக்கில் வரும்.

1. எட்டாம் வீட்டில் வீட்டில் சனியைத் தவிர பாபகிரகங்கள் இருந்தால், அதுவும் சுபக் கிரகங்களின் பார்வை இன்றி இருந்தால் மத்திம ஆயுள்

2. ஆறு, மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தால் மத்திம ஆயுள்தான்.

3. லக்கினத்தில் சந்திரன் இருந்து கூட்டாக பாப கிரகங்கள் இருந்தால் அந்த அமைப்பு மத்திம ஆயுளையே கொடுக்கும்.

4. லக்கினத்தில் செவ்வாய் இருந்து, அத்துடன் சுபக்கிரகத்தின் பார்வை இன்றி இருப்பதுடன், 6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும் மத்திம ஆயுளையே கொடுக்கும்

5. லக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவற்றில் பாவிகள் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை இல்லா விட்டாலும் மத்திம ஆயுள்தான்.

6. எட்டாம் அதிபதி கேந்திரத்தில் இருக்க, உடல்காரகன் சூரியனும், ஆயுள்காரகன் சனியும் கூட்டாக 3ஆம் வீடு அல்லது ஆறாம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு மத்திம வயது.

7. லக்கினாதிபதி பலமின்றி இருப்பதுடன், 6, 8, 12 ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, லக்கின அதிபதியுடன் ஒரு தீய கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் ஜாதகனுக்கு மத்திம வயது.

8. சனியும், குருவும் பலமின்றி இருந்து, ஜாதகத்தில் 6, 8, 12 ஆம் வீடுகளிலும், கேந்திரங்களிலும், பாவ கிரகங்கள் குடியிருந்தால் ஜாதகனுக்கு மத்திம வயது.

9. சனி ஆறாம் வீட்டிலும், பாவ கிரகங்கள் எட்டாம் வீட்டிலும் இருக்கும் நிலைமை ஜாதகனுக்கு மத்திம வயதையே கொடுக்கும்.

10.  2, 3, 4, 5, 8 & 11 ஆகிய ஆறு வீடுகளில் தீய கிரகங்கள் குடியிருந்தால், அந்த அமைப்பு ஜாதகனுக்கு மத்திம ஆயுளையே கொடுக்கும். (வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று மட்டுமே நவக்கிரகங்களில் சுபக்கிரகங்கள். ஆயுளைப் பொறுத்தவரை மற்ற ஆறும்  அசுபர்களே!)

11. லக்கினம், மற்றும் சந்திர ராசி எந்த கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வையும் இன்றி இருப்பதுடன். எட்டாம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை என்றால் அது ஜாதகனுக்கு மத்திம வயதையே கொடுக்கும்.

இவை எல்லாமே பொது விதிகள். லக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவற்றின் மொத்த பலன்களை வைத்து (அஷ்டகவர்க்கம் மூலம் அது தெரியும்) இது மாறுபடும். ஆகவே பொது விதிகளை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம்.

மத்திம வயதிற்கு இன்னும் சில விதிகள் உள்ளன. நான் முக்கியமான வற்றையே உங்களுக்குத் தந்துள்ளேன். விவரமாக அவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற
நூல்களைப் படிக்கலாம். படித்துப் பயன் பெறலாம்.

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

14.7.10

ஜோதிடம் வந்த வழி!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடம் வந்த வழி!

கடந்து வந்த பாதையை யாரும் மறக்கக்கூடாது. எத்தனை ஆர்வமாக ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நமது ஜோதிடக் கலை எவ்வளவு புராதனமானது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

எத்தனை ரிஷிகள், எத்தனை முனிவர்கள், எத்தனை ஜோதிட ஞானிகளின் உழைப்பும் பங்காற்றலும் கொண்டது நமது ஜோதிடக்கலை என்பதை அறிந்தால் வியப்பாக இருக்கும்.

அவர்களுகெல்லாம் நன்றி சொல்லும் முகமாக ஜோதிடம் வந்தபாதையை உங்களுக்கு இன்று கோடிட்டுக் காட்டியுள்ளேன்

இயேசு கிறஸ்து பிறப்பதற்கு முன்பாக 3 ல் இருந்து 9 நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் துவங்குகிறது நமது ஜோதிடப்பயணம்.

காலத்தால் முற்பட்ட முதல் ஜோதிட நூல் “யவனஜாதகா”
பிறகு வந்தது “ப்ரஹித் சம்ஹிதா”
அதற்கு அடுத்தது “ப்ரஹித் பாரசார ஹோரா”
அப்புறம் “சரவளி” இவைகள் எல்லாமே சமஸ்கிருதத்தில் (ஓலைச்சுவடிகளாக) உள்ளனவாகும். பலருடைய கைங்கர்யத்தால் மொழிபெயர்க்கப்பெற்று மற்ற மொழிகளிலும் வந்துள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பெற்றபின் அவைகள் உலக அளவில் பிரசித்தி பெற்றன!

பலருக்கும் பயன் படத்துவங்கின!

ஹிந்துக் கலாச்சாரத்தின் பொக்கிஷங்களாக அவைகள் கருதப்படுகின்றன.

பிற்காலத்தில் அச்சுத் தொழில் வளர்ந்த பிறகு அவைகள் புத்தக வடிவமும் பெற்றன.

ஜோதிடத்தைச் செதுக்கி நாம் படிப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைப்பு செய்த சிற்பிகள் சிலரின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன்

Sri Yukteswar Giri (1855-1936),
Bangalore Venkata Raman (1912-1998),
Bejan Daruwalla (b. 1931),
V. K. Choudhry (b. 1951) 
Sanjay Rath (b. 1963).


அவர்களுக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!
------------------------------------------------------------------------------------------------------
இன்று இருக்கும் நூல்களைப் பட்ட்யலிட்டுள்ளேன்.

Classical texts, Treatises on nativity

    * Skanda Hora or Jyotishmati (God Brahma)
    * Brihat Prajapatya (Daksha Prajapati)
    * Laghu Prajapatya (Daksha Prajapati)
    * Vasishta Hora (Sage Vasishta)
    * Garga Hora (Sage Garga)
    * Koushika Hora (Sage Viswamitra)
    * Sounaka Hora (Sage Sounaka)
    * Brihat Parasara Horashastra (Sage Parasara)
    * Surya Hora or Surya Jatakam or Suryaruna Samvadam (Sage Surya)
    * Lomasa Samhita (Sage Lomasa)
    * Jaimini Sutram (Sage Jaimini)
    * Brigu Sutram (Sage Brigu)
    * Vedanga Jyotish (Lagadha)
    * Yavaneswara Hora or Yavanajataka (Sage Yavaneswara)
    * Vishnugupta Hora (Vishnugupta, also known as Canakya)
    * Satyacharya Hora (Satyacharya)
    * Jeevasarma Hora (Jeeva sarma)
    * Srutakeerti Hora (Srutakeerti)
    * Sidhasena Hora (Sidhasena)
    * Maya Hora (Maya, the student of Sage Surya)
    * Sphujudwaja Hora (King Sphujidwaja)
    * MeenarajaHora or Vridha Yavana Hora (King Meenaraja)
    * Saravali (Kalyanavarma)
    * Brihat Jatakam (Varahamihira)
    * Phala Deepika (Mantreswara)
    * Hora Saram (Prithu Yasas)
    * Sarvartha Chintamani (Venkatesa Daivajna)
    * Hora Ratna (Acharya Balabhadra)
    * Jataka Parijatam (Vaidyanatha Deekshita)
    * Chamatkara Chintamani
    * Kashyapa Hora
    * Poorva Kalamritam (Ganaka Kalidasa)
    * Uttara Kalamritam (Ganaka Kalidasa)
    * Suka Nadi
    * Deva Keralam or Chandra Kala Nadi (Achyuta)
    * Tajaka Neelakanthi (Neelakantha)
    * Pranasanushata Padhati
    * Prasna Ratna
    * Prasna Margam (Panakkattu Sankaran Nambootiri Brahmin)
    * Daivajna Vallabha (Varahamihira)
    * Kālaprakashika
    * Dasadhyayi (Govinda Bhattathiri)
--------------------------------------------------------------
 Treatises on Hindu electional astrology
    * Adbhuta Sāgar
    * Brihannarad
    * Brihatdaivygyaranjan
    * Brihatjyotisār
    * Daivygyamanoranjan Daivygyamanohar Granth
    * Ganak Mandan
    * Gian Manjari
    * Jaganmohan Granth
    * Jyotiprakash
    * Jyotirnibandh
    * Jyotish Ratan
    * Jyotishsār
    * Jyotish Chintamani
    * Jyotirvidabharnam
    * Kāl Khanda
    * Kāl Nirnaya Deepika
    * Kāl Prakashika
    * Madhaveeyam
    * Muhurtarnava
    * Muhurtharathna (Govinda Bhattathiri)
    * Muhurt Bhaskar
    * Muhurt Chintamani (Daivygya Ram)
    * Muhurt Chudamani
    * Muhurt Darpan
    * Muhurt Deepak
    * Muhurt Deepika
    * Muhurt Ganpati
    * Muhurt Kalpadrum
    * Muhurt Mālā
    * Muhurt Manjari
    * Muhurt Martanda
    * Muhurt Muktāvali
    * Muhurt Prakash
    * Muhurt Padavi
    * Muhurt Sāgar
    * Muhurt Sangraha
    * Muhurt Tattva
    * Muhurt Tattvapradeep
    * Muhurtarnava
    * Muktāvali
    * Narpatijacharyāswarodaya
    * Nārdeeya
    * Nibandh Chudamani
    * Poorva Kālāmrit (2)
    * Rajmartanda
    * Ratan Koosh
    * Ratanmāla
    * Samarsār
    * Shiv Swarodaya
    * Vaivahār Pradeep
    * Vivah Kautuhal
    * Vivah Patal
    * Vivah Pradeep
    * Vivah Sār
    * Vivah Vrindavan
    * Vyvahārochchya
    * Yoga Yatra
    * Vyvaharsār
    * Muhurtha malya
------------------------------------------------------------------------------
Samhitas -  treatises on mundane, portents, omens, meteorology, etc.

    * Brahmarshi Samita
    * Brihaspati Samhita
    * Brihat Samhita
    * Parasara Samhita
    * Garga Samhita
    * Rishiputra Samhita
    * Guru Samhita
    * Kashyap Samhita
    * Lomasha Samhita
    * Mānav Samhita
    * Nāgarjun Samhita
    * Narad Samhita
    * Shakalya Samhita
    * Samās Samhita
    * Samhita Pradeep
    * Samhita Sidhhanta
    * Satya Samhita
    * Sur Samhita
    * Vaikhān Samhita
    * Vasist Samhita

+++++++++++++++++++++++++++++++++
இடைச்சேர்க்கை:
1
தமிழில் உள்ள புராண ஜோதிட நூல்கள்.


* குமாரசுவாமியம்
* புலிப்பாணி ஜோதிடம்
* ஜாதக அலங்காரம்
* கேரள மணிகண்ட ஜோதிடம்

----------------------------------------------------
2

ராவண காவியம், சந்திர காவியம் ஆகிய 2 நூல்கள் இருப்பதாக நமது வகுப்பறை மாணவர் திரு.ஆனந்த் அவர்கள் கூறியுள்ளார். அவற்றையும் சேர்த்துக்கொள்ளவும்.
------------------------------------------------------------
3

திருவள்ளுவர் காலத்திலேயே சோதிடம் இருந்தது. ஊழ் என்ற அதிகாரமே அதற்கு சாட்சி . .ஞானசம்பந்த பெருமான் அவதாரத்தை விளக்கும் சேக்கிழார் பெருமான் அவருடைய ஜாதகத்தை இந்த   பாட்டில் இப்படி குறிப்பிடுகிறார். .

      "அருக்கன் முதற்கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
            பெருக்கவலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழ
         திருக்களிரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்
            தருக்கொழியச் சைவ முதல் வைதிகமும் தழைத்தோங்க"

            ------------பெரியபுராண பாடல் எண்,1920
         (மேலே உள்ள செய்தியுடன், பாடலை மேற்கோளாகக் காட்டியவர் நமது வகுப்பறை மாணவர் திரு ஐயர்)
---------------------------------------------------------------
4
கே.பி. பத்ததி என்னும் கிருஷ்ண மூர்த்தி அவர்களின் ஜோதிட நூல்களும் தமிழில் உள்ள குறிப்படப்பவேண்டிய நூல்களாகும்
--------------------------------------------------------------
5. தமிழில் அகஸ்திய ஆரூடம் எனும் ஜோதிட நூல் உள்ளதாக நமது வகுப்பறை மாணவர் திருவாளர் சூரி எனும் சுப்புரத்தினம் அவர்கள் கூறியுள்ளார். அதையும் சேர்த்துக்கொள்ளூங்கள்
----------------------------------------------------------------
எடுத்துக்கூறிய நல்ல உள்ளங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
.


இத்தனையையும் படிக்க முடியுமா?
படித்துத் தேற முடியுமா?
நம் ஆயுள் பற்றாது (பத்தாது)
------------------------------------------------------------------------------------
மகிழ்ச்சியான செய்தி!!!!!!!

வாத்தியார் வெளியூர்ப் பயணம்.
நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை!
அடுத்த வகுப்பு 16.7.2010 அன்று காலையில்!


அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

13.7.10

நடக்குமென்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்துவிடும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நடக்குமென்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்துவிடும்!

சென்ற பதிவின் தொடர்ச்சி! அதைப் படித்துவிட்டு, இதைப் படிக்கவும்.

1
ராசிகளில் மேஷம், கடகம், துலாம் ,மகரம் - ஆகியவை சரராசிகள் எனப்படும்.
இந்தச் சரராசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு  அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும்.
மேஷத்திற்குப் 11-ம் வீடு கும்பம். அதன் அதிபதி சனி. மேஷத்திற்கு
சனி பாதகாதிபதியாகிறார். கடகத்திற்கு 11-ம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன். கடகத்திற்கு பாதகாதிபதியாகிறார்.   துலாத்திற்கு 11-ம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியன். துலாத்திற்கு சூரியன் பாதகாதிபதியாகிறார்.
பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மரணத்தைக் கொடுப்பார்கள்.
மற்றபடி அவர்கள் வேறு எந்த உபத்திரவத்தையும் கொடுக்க மாட்டார்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------------.
உதாரணத்திற்கு மேஷ ராசியை எடுத்துக் கொள்வோம். அதன் பாதக அதிபதி சனி. அதன் லாபாதியும் அவரே! ஜாதகனுக்கு பலவிதங்களில் லாபத்தைக் கொடுத்துக்கொண்டே வருபவர் உரிய நேரம்  வரும்போது ஜாதகனைப் போட்டுத் தள்ளவும் தயங்க மாட்டார். ஜாதகனுக்கு ஹீரோவாக செயல்பட்ட சனி, ஒரே நாளில் வில்லனாகிக் கத்தியை உருவி ஒரே போடாகப் போட்டு மேலே அனுப்பிவிடுவார்,

லாபாதிபதியே பாதகாதிபதியாவது அப்படித்தான் நடக்கும். அப்போது அவர் லாபாதிபதியாகச் செயல் படமாட்டார். பாதகாதிபதியாகச் செயல்படுவார்.
மாரகம் என்று வரும் போது மரணத்தைக் கொடுக்கத் தயங்க மாட்டார். கடமை தவறாதவர்கள் கிரகாதிபதிகள்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம் வீட்டிற்கதிபதிகளான முறையே சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதி ஆகின்றனர். அவர்கள் ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார்கள். ரிஷபத்திற்கு சனி யோககாரகன் ஆவார். அவர் தன்னுடைய தசாபுக்தி காலங்களில் நன்மையைத்தான் செய்வார்.

ஆயினும் ஜாதகனுக்கு ஆயுள் முடியும்போது அவர் தன் கடமையைச் செய்யாமல் விடுவதில்லை. அவர் மரணத்தைக் கொடுப்பார். ஆயுள் இருக்கும்போது நன்மைகளைச் செய்தவர், ஆயுள் முடியம்போது
மரணத்தைக் கொடுக்கத் தவறுவதில்லை!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
3
உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார். மிதுனத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி குரு, கன்னிக்கு 7-ம் வீடான மீனத்திற்கு அதிபதி குரு பாதகாதிபதியாகிறார்.
தனுசுவிற்கும், மீனத்திற்கும் புதன் 7-ம் வீட்டிற்கதிபதியாகி அவர் பாதகாதிபதியாகிறார். இளமையில்  திருமணத்தைச் செய்து வைத்து ஜாதகனை மகிழ்வித்த குருவும், புதனும் ஆயுள் முடியும்போது, ஜாதகனை மேலே  அனுப்பிவைக்கவும் செய்வார்கள்.

மாரகாதிபதிபதிகள், பாதகாதிபதிகள் யார் யார் என்பதைச் சொல்லிக்கொடுத்துவிட்டேன்.

இனி அடுத்தபாடம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  “நடக்குமென்பார் நடக்காது
      நடக்காதென்பார் நடந்துவிடும்
   கிடைக்குமென்பார் கிடைக்காது
      கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்”


என்று கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதினார். அது ஜோதிடத்திற்கு முற்றிலும் பொருந்தும்.

ஜோதிடத்திற்குப் பலவிதிகள் மற்றும் விதிவிலக்குகள் உள்ளன. எல்லாவற்றையும் சீர் துக்கிப் பார்த்துப் பலனைச்  சொல்ல வேண்டும். அதற்கு ஜோதிடத்தில் நல்ல பாண்டித்யமும், பொறுமையும் வேண்டும். அதைவிட முக்கியமாக தெய்வ அனுக்கிரகமும் வேண்டும். அப்போதுதான் வாக்குப் பலிதம் இருக்கும். சொன்னது சொன்னபடி நடக்கும்.

இல்லாவிட்டால் ஊற்றிக் கொண்டுவிடும்.

தசாபுத்திப் பலன்களையும், கோள்சாரப் பலனையும், எந்த ஜோதிடன் வேண்டுமென்றாலும் சரியாகச் சொல்வான். மரணத்தைக் கணிப்பதற்கு மட்டும் அதீதத் திறமையும், ஞானமும் வேண்டும்.

என் சொந்தக்காரர் ஒருவருக்கு, ஜோதிடர் ஒருவர், நீங்கள் இன்னும் பத்து ஆண்டுகள் உயிரோடு இருப்பீர்கள் என்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அடுத்து வந்த மூன்றாவது மாதமே இறந்துவிட்டார். சும்மா இறக்கவில்லை.
வயிற்றில் பெரிய வீக்கம் ஏற்பட்டு, பத்து நாட்கள் மருத்துவமனையில், அவதிப்பட்டுவிட்டு இறந்து போனார்.

அதுபோன்று நிறைய உண்மைக் கதைகள் இருக்கின்றன.

அதானால்தான் ஜோதிடம் கற்கும்போது முதல் விதியாக இதைச் சொல்லித் தருவார்கள்:

ஜோதிடத்தால் என்ன நடக்கவுள்ளது என்பதை மட்டுமே ஜோதிடர் கோடிட்டுக் காட்டலாம். ஆனால் அறுதியிட்டுச் சொல்லக் கூடாது. அந்த சக்தி ஆண்டவன் ஒருவருக்கு மட்டுமே உண்டு!
----------------------------------------------------------------------------------------------------------------------
முதலில் குழந்தைப் பருவத்தில் தவறிப்போகும் ஜாதகர்களைப் பற்றிப் பார்ப்போம்:

அதற்கு பாலரிஷ்ட தோஷம் என்று பெயர்:

பிறந்த நாளில் இருந்து எட்டு வயதிற்குள் இறந்துவிடும் அமைப்பு அது! பாலரிஷ்ட தோஷம்!

ஜாதகத்தில் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் (malefic planets) பார்வை விழுந்தால், அது இந்த தோஷத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்டுள்ள மூன்று  வீடுகளில் உள்ள சந்திரனின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், பாலரிஷ்ட தோஷம்
நிவர்த்தியாகிவிடும். உங்கள் மொழியில் சொன்னால் காணாமல் போய்விடும்.

ரிஷப லக்கினக் குழந்தைக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது பாலரிஷ்டம் போன்று தோற்றமளிக்கும். ஆனால் சந்திரன் இருக்கும் அந்த வீடு, சுபக்கிரகமான சுக்கிரன் வீடு, லக்கினாதிபதியும் அவரே! அதனால்
குழந்தை தப்பித்துவிடும். பாலரிஷ்டம் ஒன்றும் செய்யாது.

சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கு, ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அது பாபக் கிரகமான சனியின் வீடு. அந்த வீட்டின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை எதுவும் இல்லை என்றால், பாலரிஷ்ட தோஷம் தன் வேலையைக் காட்டிவிடும்.
---------------------------------------------------------------------------
குழந்தைகள், நீரில் தவறி விழுந்து அதாவது ஆறு, குளம் அல்லது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தவறி விழுந்து, இறந்து விடுவதுதான் இந்த வயதுச் சாவுகளில் அதிகமான சாவுகளாக இருக்கும். அல்லது கடுமையான
நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிடும் குழந்தைகளும் இருக்கும்.

எது எப்படியானும், அது விதிக்கப்பட்டது. பெற்றோர்களால் ஒன்றும் செய்ய முடியாது - பரிதவிப்பதைத் தவிர.

அதற்கான நிலைப்பாடுகள் (அனைத்தும் பொது விதிகள்):

கண்டம் எனும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது அதற்குப் பொருள்:

1. சந்திரன் 8ஆம் வீடு, அல்லது 12ஆம் வீடு, அல்லது 6ஆம் வீடுகளில் இருந்து ராகுவின் பார்வையைப்  பெற்றிருந்தால், சின்ன வயதில் கண்டம்.

2. லக்கினத்தில் தேய்பிறைச் சந்திரன் இருக்க, கேந்திரங்களில் அல்லது எட்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்.

3. 6ஆம் வீட்டில் அல்லது 8ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், மற்றும் சனி கூட்டாக இருக்க, சுபக்கிரகங்களின்  பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்.

4. சூரியன், செவ்வாய், மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 5ஆம் வீட்டில் கூட்டாக இருந்தால்,குழந்தைக்குக் கண்டம்

5. லக்கினத்தில் சந்திரன் இருக்க, அதன் இருபுறமும், தீய கிரகங்கள் இருக்க (பாபகர்த்தாரி யோக அமைப்பு) சுபகிரகங்களின் பார்வை எதுவும் லக்கினத்தின் மேல் இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்

6. ஜாதகத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, ஜாதகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில்  சுபக்கிரகங்களான குரு  அல்லது  சுக்கிரன் பாபகர்த்தாரி  யோகத்தில்  மாட்டிக் கொண்டிருந்தால்  குழந்தைக்குக் கண்டம்

7. லக்கினத்தில் சந்திரனும், சனியும் இருக்க, எட்டில் செவ்வாய் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்

8. லக்கினம் மற்றும் லக்கினத்தில் இருந்து 6, 7 , 8 ஆகிய நான்கு வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்.

9. ஜாதகத்தில் சந்திரனும், சனியும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க, 12ல் சூரியனும், 4ல் செவ்வாயும் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்

10. ஏழாம் வீட்டில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்து, சுபக்கிரகங்களின் பார்வையை அவர்கள் பெறவில்லை  என்றால், குழந்தைக்குக் கண்டம்
--------------------------------------------------------------------
முக்கியமானவற்றை மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் நூறுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஜோதிட நூல்களில்  சொல்லப்பட்டுள்ளன. அத்தனையையும் எடுத்து எழுதினால் ஓவர் டோசாகிவிடும். ஒரு தூக்க மாத்திரைக்குப் பதிலாக  ஐம்பது  தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் என்ன ஆகுமோ அது ஆகிவிடும். ஆகவே பாலரிஷ்ட  தோஷத்திற்கான அமைப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நானும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப் போவதில்லை. இதைப் படிக்கும் நீங்களும் ஜோதிடர் வேலைக்குச்  செல்லப்போவதில்லை. ஆகவே இது போதும்.

இல்லை நாங்கள் முழு விதிகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் என்பவர்கள், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புராண ஜோதிட நூல்களை வாங்கிப் படிக்கலாம்.

அடுத்ததாக அல்பாய்சு, மத்திம ஆயுசு, பூரண ஆயுசு ஆகியவற்றிற்கான கிரக அமைப்புக்களைப் பார்க்கலாம்.

இன்றல்ல. இதன் தொடர்ச்சியாக அது 19.7.2010 திங்களன்று வரும்.

இடைப்பட்ட நாட்களில் வேறு பாடங்கள் நடைபெறும். தொடர்ந்து சாம்பார் சாதத்தையே சாப்பிட்டுக்கொண்டிருக்க  முடியுமா? அதாவது தொடர்ந்து ஜோதிடத்தையே படித்துக் கொண்டிருக்கலாமா? இடையில் வற்றல்குழம்பு, ரசம்,  கெட்டித் தயிர், பாயசம் என்று வெரைட்டியாக உணவு இருக்க வேண்டாமா?

ஒரு வார்த்தை சொல்லுங்கள்!

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

12.7.10

"மரணம் என்னும் தூது வந்தது - அது மங்கை வந்த வழியில் வந்தது!”

உலகக் கால்பந்துக் கோப்பையை இந்த முறை தட்டிச் சென்ற 
ஸ்பெயின் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு 
நம் வகுப்பறையின் மூலம் வாழ்த்துக்களைச்
சொல்லி வைப்போம்!

வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்த வீரர் பந்தை உள்ளே செலுத்தும் 
அற்புதக் காட்சி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"மரணம் என்னும் தூது வந்தது - அது மங்கை வந்த வழியில் வந்தது!”

Our killers - நம்மைக் கொல்பவர்கள்!

நம்மைக் கொல்பவர்களில், இரண்டு வகை உண்டு.

தங்கள் விழிகளால், விழி அம்புகளால் - வேல் வீச்சால், கடைக்கண் பார்வைகளால், தோற்றத்தால், நளினத்தால் கொல்பவர்கள் ஒருவகை (அவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும்)

ஆனால் உண்மையிலேயே நம்மைக் கொன்று, அதாவது மரணத்தை ஏற்படுத்தி, நம்மைச் சிவலோகத்திற்கு   அனுப்பி வைப்பவர்கள் இரண்டாவது வகை.

ஆனால் அந்த இருவகையினருக்குமே ஒரு அதிசயமான ஒற்றுமை இருக்கிறது. இருவருமே நமது ஜாதகத்தின் ஏழாம் பாவ அதிபதிகள். அதாவது ஏழாவது வீட்டின் சொந்தக்காரர்கள்.

அது எப்படி என்பதை இன்று பார்ப்போம்!
------------------------------------------------------------------
எந்த ஒரு பாவத்திற்கும் அல்லது வீட்டிற்கும், அதற்கு முந்தைய வீடு - அதாவது அந்த வீட்டிற்குப் 12ஆம் வீடு எதிர்மறையான பலன்களைத்தான் கொடுக்கும்.

8ஆம் வீடு, 3ஆம் வீடு, ஆகிய வீடுகள்தான் ஒரு மனிதனின் வாழ்நாட்களை நிர்ணயிக்கும் வீடுகளாகும். அவற்றிற்கு முன் வீடு, அதாவது 7ஆம் வீடும், 2ஆம் வீடும்தான் - அதாவது அவற்றின் அதிபதிகள்தான் ஜாதகனைக் கொல்லும் வலிமை படைத்தவர்கள். ஒரு ஜாதகனின் மாரகர்கள் - அதாவது மரணத்தைக் கொடுப்பவர்கள் அவர்கள்தான். அந்த வீடுகளுக்குத் தீயவர்கள் அவர்கள்தான்.

அதாவது விளங்கச் சொன்னால், எட்டாம் வீட்டிற்குத் தீயவன் 7ஆம் வீட்டுக்காரன். 3ஆம் வீட்டிற்குத் தீயவன் 2ஆம் வீட்டுக்காரன்.

லக்கினத்திற்குத் தீயவன் 12ஆம் வீட்டுக்காரன். ஏழாம் வீட்டிற்குத் தீயவன் ஆறாம் வீட்டுக்காரன். தம்பதிகளிடையே, பூசல்கள், விரிசல்கள், பிரச்சினைகள் ஏற்பட ஆறாம் வீட்டுக்காரனே காரணமாக இருப்பான்.

அவர்களுக்கு (அதாவது 7th & 2nd Lords) மாரகர்கள் (killers) என்று பெயர்

அவர்களுடைய தசா புத்திகளில் மரணம் ஏற்படும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கின ஜாதகத்திற்கு ஏழாம் அதிபதி சனி. இரண்டாம் அதிபதி புதன். அதனால் சிம்ம லக்கினக்காரர்களின் மரணம், சனி தசை புதன் புத்தியில் அல்லது புதன் தசை சனி புத்தியில் ஏற்படும். (இது பொது விதி) இதை இன்னும் ஃபைன் டியூனிங் செய்வதற்கு அடுத்தடுத்த பாடங்களில், வழிமுறைகளைச் சொல்லித் தருகிறேன். பொறுமையாகப் படித்துக்கொண்டே வாருங்கள்.

7-வது வீடு களத்திர ஸ்தானம். அதாவது திருமணத்திற்கு உரிய இடம். அதை அனைவரும் அறிவோம். வாலிப வயதில் திருமணத்தைக் கொடுத்து, ஒரு வேல்விழியாள் மூலம் நம்மைப் பாதி கொல்லும் ஏழாம் அதிபதி, வயதான காலத்தில் அல்லது உரிய நேரம் வரும்போது, நம்மை முழுமையாகக் கொன்று விடுவார்.

அவர்தான் நம்பர் ஒன் மாரக அதிபதி.

அவர்கள் இருவரைத் தவிர, அதாவது 7 & 2ஆம் அதிபர்களைத் தவிர வேறு யாராவது மாரகத்தைக் கொடுப்பார்களா? இருக்கிறார்கள். அவர்களைக் கீழே பார்ப்போம்.

மரணம் என்பது உடல் சம்பந்தப்பட்டது என்றாலும், அதாவது உடலை விட்டு உயிர் நீங்குவது என்றாலும், உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், வலி இல்லாமல் உயிர் பிரியும் நிலைமையும் உண்டு. உடலை வருத்தி, உபாதைகளுக்கு ஆளாக்கி, அவதிக்கு ஆளாக்கி, துன்பத்திற்கு ஆளாக்கி உடல் பிரியும் நிலைமையும் உண்டு. இரண்டாவது நிலைமை சோகமானது.

விபத்தில், விபத்து நடந்த இடத்திலேயே, ஷண நேரத்திலேயே, அந்த நொடியிலேயே, உயிர் பிரிந்துவிட்டால், ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆனால் அங்கே காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,
பத்து நாட்கள் சிகிச்சை, ஐ.சி.யு, இத்யாதிகள், சில லட்சம் பணவிரயம், உறவினர்களின் அச்சச்சோ, இச்சச்சோக்களுக்குப் பிறகு உயிர் போவது அவதியானது.

ஆனால் எதுவும் நம் கையில் இல்லை. எல்லாம் விதிக்கப்பட்டது                           (Pre - destined)

அதைத் தெரிந்துகொண்டு, அதைப்பற்றிக் கவலைப்பட்டு, இருக்கும் நாட்களையும் துன்பமாக்கிக் கொள்வது, பேதமையானது.

இறைவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, எல்லாம் அவன் செயல், அவன் பார்த்துக்கொள்வான் என்று நிம்மதியாக இருக்கும் நிலையே உன்னதமானது. அதைத்தான் நாம் செய்ய வேண்டும். இறைவழிபாடு அதற்கு உதவும். அதைத்தான் எல்லா மதங்களும் நமக்கு வலியுறுத்துகின்றன.

ஆகவே அந்த நிலைக்குத் தயாராக இருப்பவர்கள், இத்துடன் எட்டாம் பாடத்தைப் படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். இல்லை முடியாது, "களவும் கற்று மற” என்பதைப்போல இதையும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தெரிந்து கொண்டாலும் சீரியசாக மாட்டோம் என்பவர்கள் மட்டும் மேலே தொடரலாம்.
-------------------------------------------------------------------------------------
"மரணம் என்னும் தூது வந்தது - அது
     மங்கை என்னும் வடிவில் வந்தது!”


என்று கவியரசர் கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலின் சரணத்தில் எழுதினார். ஏழாம் வீட்டில் ஒரு ஒற்றுமை இருப்பதைத் தெரிந்து, அவர் அதை எழுதவில்லை. படத்தின் கதை அமைப்பிற்காகவே அப்படி எழுதினார். ஆனால் ஜோதிடப்பாடத்தில் மங்கையை நமக்குக் கொடுப்பவnதான் மரணத்தையும் கொடுக்கிறான். அதுவே பெண்ணாக இருந்தால், ஆணின் துணையைக் கொடுப்பவன்தான் மரணத்தையும் கொடுக்கிறான்.

அதனால் கவியரசரின் வரிகளை அதே வரிகளை இப்படி மாற்றினால் நம் பாடத்திற்கு அது சரியாக இருக்கும்

"மரணம் என்னும் தூது வந்தது - அது
     மங்கை வந்த வழியில் வந்தது!”


பெண்கள் அதே வரிகளை இப்படி மாற்றிக்கொள்லலாம்.

"காலன் என்னும் கள்ளன் வந்தான் - அவன்
    கணவன் வந்த வழியில் வந்தான்!"


(இதை எழுதவில்லை என்றால் அவர்கள் வருத்தமுறலாம்...ஹி.ஹி.ஹி!)
------------------------------------------------------------------------------------
7ஆம் அதிபதியும், 2ஆம் அதிபதியும் தான் மரணத்தைக் கொடுப்பார்களா? வேறு யாரும் இல்லையா?

ஏன் இல்லை? இன்னும் ஒருவர் இருக்கிறார்.

ஜாதகத்தில் அவரின் பெயர் பாதகாதிபதி!

1
சர ராசிகள் (Movable signs)
மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)
சர ராசிகளுக்கு 11ஆம் அதிபதி பாதகாதிபதி
----------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகள் (Fixed signs)
ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)
ஸ்திர ராசிகளுக்கு 9ஆம் அதிபதி பாதகாதிபதி
-----------------------------------------------------------------
3
உபய ராசிகள் (Dual signs)
மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
உபய ராசிகளுக்கு மூன்றாம் ஆசாமி இல்லை. 7ஆம் அதிபதியே பாதகாதிபதி
-----------------------------------------------------------------
இந்தப் பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மட்டும் மரணத்தைக் கொடுப்பார்கள். மற்ற காலங்களில் அவர்கள் வேறு எந்தக் கெடுதலையும் செய்ய மாட்டார்கள்

லாபாதிபதியும், பாக்யாதிபதியும் எப்படி மரணத்தைக் கொடுப்பார்கள் என்கின்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அதைப் பற்றிய விவரத்தை நாளை பார்ப்போம். பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

8.7.10

எமனின் பயோடேட்டா!

இது பழைய படம்; புதிதாக  எடுக்கப்பெற்ற படம் கிடைக்கவில்லை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எமனின் பயோடேட்டா!

”என்ன வாத்தியார், எமனுக்கே பயோடேட்டாவா?”

“நேற்று வந்த தமன்னாவிற்குப் பயோடேட்டா போடும்போது, எமனுக்குப் போட்டால் என்ன ராசா?”
------------------------------------------------------------------------------------------------------------------
1. பெயர்: எமன்

2. முழுப்பெயர்: எமதர்மன்

3. புனைப்பெயர்கள்: காலன், யமராஜா

4. புராணப்பெயர்கள்: The seven names of Yama, viz Yama, Dharma-raja, Mrtyu, Antaka, Vaivasvata, Kala, Sarva-pranahara

5. சைனாவில் அவரின் பெயர்: யான்லோ (Yanluo)

6. ஜப்பானில் அவரின் பெயர்: என்மாவ் (Enma-O)

(இந்த இரண்டு பெயர்களின் உச்சரிப்பை நமது ஜப்பான் மைனர் உறுதி செய்வார்)
Yama also known as Yamaraja in India, Yanluo in China and Enma-O in Japan, The Buddhist Yama became an integral part of Chinese and Japanese mythology.

7. தந்தையின் பெயர்: சூரிய பகவான்

8. தாயாரின் பெயர்: உஷா தேவி

9. உடன் பிறப்பின் பெயர்: சனீஷ்வரன்

10. வயது: அறிந்தவர் யாருமில்லை

11. கல்வித்தகுதி: கவியரசர் கண்ணதாசனைப்போல சுயமாகப் படித்துத் தேறியவர்.

12. திருமணம்: ஆகிவிட்டது.

13. மனைவியின் பெயர்: சியாமளா தேவி

14. வாகனம்: அன்றும், இன்றும், என்றும்: எருமை மாடு (அவருடைய வாகனம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வேகமாகச் செல்லக்கூடியது. நீங்கள் லோக்கல் எருமை மாட்டை நினைத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பில்லை)

15. பதவி: Lord of Death

16. இவருக்குப் படியளப்பவர்கள்: (Bosses) Lord Shiva & Lord Vishnu

17. நிரந்தர உதவியாளரின் பெயர்: சித்திரகுப்தன்

18. உறவு என்று சொல்லும்படியாக உள்ளவர்: Greek deity Hades, the god of the underworld.

19. இவரைப் புகழ்ந்து பாடிய ஒரே புலவர்: பாரதியார்.
பாடல்:

"காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்"

 என்னும் புகழ் பெற்ற பாடல். முழுமையான பாடல் வரிகள் பதிவின் இறுதிப்பகுதியில் உள்ளது.

20. ஆயுதம்: தண்டாயுதம்.

21. அடையாளம்: கையில் பாசக் கயிறு இருக்கும். He holds a noose of rope (pāśa) in one hand.

22. இவருடைய செயலகம் இருக்கும் இடம்: பூமிக்குத் தென்திசையில் உள்ளது. விருப்பமுள்ளவர்கள்  சென்று பார்த்துவிட்டு வரலாம். முன் அனுமதி வேண்டும்.

23. இவரைப்பற்றி எழுதப்பட்டுள்ள முக்கியமான நூல்கள்: கருடபுராணம், மார்க்கண்டேயபுராணம்

24. இவருக்கும், இவருடைய உடன் பிறப்பான சனீஷ்வரனுக்கும் உள்ள தொழில் வித்தியாசம்:
சனீஷ்வரன் மனிதனை இறக்கும்வரை வதைப்பார். எமன் இறந்தபிறகு வதைப்பார்
Shani gives us the results of one's deeds through one's life through appropriate punishments and rewards; Yama grants the results of one's deeds after death

25. இவருடைய இரண்டாவது வேலை: மனிதனுடைய நல்ல செயல்களையும், நல்லவை அல்லாத செயல்களையும், ஒன்று விடாமல் கணக்கு எடுத்து, எழுதிவைத்துக்கொண்டு வருபவர் இவர்தான். வங்கி, வருமானவரி, விற்பனைவரி, சேவை வரிக்கணக்குகளை சக மனிதர்கள் எழுதுவதைப் போல இவர் மாற்றி எழுதாமல், அச்சரம் பிசகாமல் சுத்தமாக எழுதிக்கொண்டு வருவார். அதற்கு அவரிடம் எத்தனை ஊழியர்கள், எத்தனை கணினிகள், எத்தனை சர்வர்கள் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
assigned with the task of keeping complete records of actions of human beings on the earth, and upon their death, deciding to have them reincarnated as a superior or inferior organism, depending on their actions on the earth (Karma). Yama is also the lord of justice and is sometimes referred to as Dharma, in reference to his unswerving dedication to maintaining order and adherence to harmony.

மேலதிகத்தகவல்கள்: இது இளைஞர்களுக்கு மட்டும்!

1. முகவரி: திருவாளர் எமன், எமவிலாஸ், 1,பிரதானச் சாலை, எமப்பாக்கம், எமாபுரி, நரகம்

2. மின்னஞ்சல் முகவரி: yamaraj@yamaloha.org

3. மொபைல் நம்பர்: அழைப்பவர் யாருமில்லை: அதனால் அவர் வைத்துக்கொள்ளவில்லை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த டேட்டா போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

நட்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------

பாரதியின் பாடல் - உங்களுக்காக முழுமையாகக் கொடுத்துள்ளேன்

காலனுக்கு உரைத்தல்
ராகம் - சக்கரவாகம்
தாளம்-ஆதி

பல்லவி

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன் -அட
(காலா)


சரணங்கள்

வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்; என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன் -ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே?அட
(காலா)

ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினையறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட
(காலா)

=====================================================
வாழ்க வளமுடன்!

6.7.10

பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்!


 ----------------------------------------------------------------------------
பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்

  “உறவு என்றொரு சொல்லிருந்தால்
   பிரிவு என்றொரு பொருளிருக்கும்”

   என்றார் கவியரசர் கண்ணதாசன்
   அதுபோல
   “பிறப்பு என்றொரு கதையிருந்தால்
    இறப்பு என்றொரு முடிவிருக்கும்”


முடிவில்லாத கதையே இல்லை. முடிவில்லாத மனித வாழ்க்கையும் இல்லை! எல்லோருடைய வாழ்க்கையும் முடிவை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக் கிறது. படம் எத்தனை ரீல்கள்? எப்போது முடியும் என்பது மட்டும் தெரியாது. அது தெரிந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. ஆகவே அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.

  “ஆறிலும் சாவுண்டு.
   நூறிலும் சாவுண்டு”


ஆறு ரீல்களில் முடிகிற படமும் உண்டு. நூறு ரீல்கள்வரை இழுத்தடித்துக்கொண்டு ஓடுகிற படமும் உண்டு.

பயத்திலேயே பெரிய பயம் மரண பயம்தான். அந்த பயம் இல்லாதவர்கள் ஞானிகள் மட்டுமே. அல்லது ஞானம் உள்ளவர்கள் மட்டுமே!
---------------------------------------------------------
எல்லாம் இருக்கிறவரைதான். அதாவது உன்னுடையது, என்னுடையது என்னும் உடைமைப் போராட்டம் எல்லாம்  உயிர் உள்ளவரைதான்!

பட்டம், பதவி, சொத்து, சுகம், செல்வம் எதுவும் கூட வராது.

அதைத்தான் பட்டினத்தார் நெத்தியடியாக ஒற்றைவரியில் சொல்லிவிட்டுப் போனார். “ அடேய் நீ செத்துப்போனால் உன்னுடன் நீ போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் எதுவும் வராது!” என்னும் பொருள்பட இப்படிச் சொன்னார்:

  “காதறுந்த ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே”

காதறுந்து ஒடிந்துபோய் எதற்கும் பயன்படாத ஊசிகூட உன்னுடன் வராது என்றார். அதையும் அவர் சொல்லவில்லை. அவருக்கு மகனாக
வந்துதித்த சிவபெருமான்,  எழுதிக்கொடுத்த  சிற்றோலை மூலம்
உணர்ந்து கொண்டார். அது உங்களுக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும்.
------------------------------------------------------------
ஆனால் நாம் கேட்டுக்கொள்வோமா?  மாட்டோம்!

அதையெல்லாம் சாகிற அன்றைக்குப் பார்த்துக்கொள்வோம். இப்போது போய் இரண்டு  ‘பெக்’ அடித்துக் கவலையை மறப்போம் என்று கிளம்பிவிடுகிறவர்கள் பலர் உண்டு.

 “ஒன்றாம் தேதியானால், செல்போன் பில் கட்ட வேண்டும். பணம் வேண்டாமா? ஹவுஸிங் லோன் கட்ட வேண்டும் அல்லது வீட்டு வாடகையைக் கொடுக்க வேண்டும் பணம் வேண்டாமா? அரிசி
கிலோ 44 ரூபாய் விற்கிறது, பெட்ரோல் லிட்டர் 55 ரூபாய் விற்கிறது - பணம் வேண்டாமா? சில்லறைக் கவலைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் செல்வந்தனாக இருக்க வேண்டும். செல்வம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா?  அல்லது செல்வத்தைத் தேடி அலையாமல் அல்லது உழைக்காமல் இருக்க முடியுமா? பட்டினத்தார் சொன்னதெல்லாம் பரதேசம் போகிற காலத்திற்கு; இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கு அதெல்லாம் ஒத்துவராது.
சும்மா வாயை மூடிக்கொண்டிருங்கள்!” என்று வியாக்கியானம் பேசுபவர்களே அதிகம். அவர்களிடம் வாயைக் கொடுத்தால் மாட்டிக்கொண்டு விடுவோம்.

அடியவன் சொல்வது இதுதான்: ஒருபக்கம் வாழ்வதற்குப் பொருளைத் தேடு. இன்னொரு பக்கம் போகிற  காலத்திற்கு அருளைத் தேடு. இருளைப் போக்கு!
----------------------------------------------------------------
சரி பாடத்திற்கு வருகிறேன்.

மரணத்தின் நிலைப்பாட்டைப் பட்டினத்தடிகள் ஒரு பாட்டில் - அதுவும் நான்கே வரிகளில் மிகவும் அழகாகச் சொன்னார். பாடலைப் பாருங்கள்.

“வீடிருக்க தாயிருக்க வேண்டுமனை யாளிருக்க
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”


  “உன்னுடைய வீடு இங்கே இருக்கிறது. உன்னைப்பெற்ற தாயும், உனக்குக் கழுத்தை நீட்டிய மனைவியும் இங்கே இருக்கிறார்கள். நீ பெற்ற பட்டம், பதவி, பெருமைகள் எல்லாம் இருக்கிறது. உனக்கான அடுத்த வேளை  அறுசுவை உணவு தயாராக இருக்கிறது. உன்னுடைய அருமைப் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள். உன் வீட்டுக் கொள்ளையில் மாடுகளும், அவை ஈன்ற கன்றுக்குட்டிகளும் இருக்கின்றன.  நீ தேடி  வைத்த  பொன், பொருள் எல்லாம் இருக்கிறன்றன. உன் உடல் இருக்கிறது. உன்னை மட்டும் காணவில்லையே - எங்கேயடா போனாய் நீ?” என்று கேட்டு உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துபோன நிலையை மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் அவர்.  உடம்பை விட்டு ஆன்மா நீங்கும் நிலைதான் மரணம்.

அதைச் சொல்வதுதான் எட்டாம் வீடு
----------------------------------------------------------------
வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்தவன் சொன்னான்:

ஓரெட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் பெறதா கல்வியும்
மூவெட்டில் பண்ணாத திருமணமும்
நாலெட்டில் பெறாத குழந்தையும்
ஐயெட்டில் தேடாத செல்வமும்
ஆறெட்டில் பெறாத புகழும்
ஏழெட்டில் சுற்றாத ஸ்தலமும்
எட்டெட்டில் கிடைக்காத மரணமும் வீணே!


ஆக எட்டெட்டில் - அதாவது 64 வயது வரைதான் - வாழ்க்கை அங்கீகாரம் உடையதாக, அதிகாரம் உடையதாக இருக்கும். அதற்குப் பிறகு உயிருடன் இருக்கும் வருடங்கள் எல்லாம் போனசாக வருவது.
அங்கீகரிக்கப்பட்ட காலத்தில்  எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு  விடுங்கள். ஆட்டம் பாட்டத்தை எல்லாம் முடித்துக்கொண்டு விடுங்கள்.
உயில் எழுதி வைக்க வேண்டுமென்றால் வைத்துவிடுங்கள்.

அதற்குப் பிறகு, எந்தக் கவலையும் இன்றி சிறுவர்களைப் போல, சிறுமிகளைப் போல அந்தக் கணங்களில் வாழ்ப் பழகிக்கொள்ளுங்கள். அந்தந்த நேரங்களில் வாழப் பழ்கிக்கொள்ளுங்கள்.

Try to live in a momentary world and enjoy momentary life (Momentary means lasting for only a moment. Occurring  or present at every moment)

வாரியார் சுவாமிகள் சொல்வார்::
“ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால்,  அங்கே பயணிப்பதற்கான இரயில் அல்லது பேருந்து சீட்டிற்கு முன் பதிவு செய்து வைக்கிறோம். வேண்டிய பணத்தை எடுத்து வைத்துக்கொள்கிறோம். அங்கே தங்குவதற்கு
விடுதிகளில் முன் பதிவு செய்து வைக்கிறோம். எத்தனை நாட்கள்  தங்க உள்ளோமோ அத்தனை நாட்களுக்குத் தேவையான உடைகளை எடுத்து வைத்துக்கொள்கிறோம்.  நம்மை  அழகு  படுத்துவதற்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்கிறோம். சூட்கேசைத் தயார்
செய்து  வைக்கிறோம். ஆனால், போனால் திரும்ப முடியாத இறுதிப்
பயணம் ஒன்று இருக்கிறது. அதற்கு எதை எடுத்து  வைத்திருக்கிறீர்கள்?”
என்று கேட்பார்.

எதையும் எடுத்துக்கொண்டு போகமுடியாது என்று அவருக்குத் தெரியும். எதை என்று அவர் கேட்பது புண்ணியக்  கணக்கில் எதை எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதாகும்!

புண்ணியக் கணக்கில் நீங்களும் உங்களுக்கு வேண்டியதை எடுத்து வையுங்கள்.
---------------------------------------------------------------------
மனிதனின் ஆயுள் காலம் நான்கு வகைப்படும்

1. குழந்தைப் பருவத்தில் மரணம். இது எட்டு வயதிற்குள் நடப்பது.
2. அற்ப ஆயுளில் மரணம் - இது எட்டில் இருந்து 32 வயதிற்குள் நடப்பது.
3. மத்திம வயதில் மரணம் - இது 32ல் இருந்து 64 வயதிற்குள் நடப்பது.
4. தீர்க்கமான ஆயுள் அல்லது பூரண ஆயுள் - 64ற்கு மேல் 100 அல்லது 120 வயது வரை வாழ்ந்து மரணிப்பது.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்! இன்றல்ல - அடுத்தடுத்த நாட்களில்.

(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி  நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
பின் குறிப்பு:  ப்ளாக்கர் சொதப்புகிறது. பின்னூட்டங்கள் பதிவிற்கு வருவதில்லை. என்னவென்று  பார்த்துக் கொண்டிருக்கிறேன். பின்னூட்டம் இட்டவர்கள் பொறுத்திருக்கவும்

வாழ்க வளமுடன்!

5.7.10

நீண்ட ஆயுள் நன்மையா அல்லது தீமையா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீண்ட ஆயுள் நன்மையா அல்லது தீமையா?

எட்டாம் இடத்தில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்:

1
சூரியன்

பொதுவிதி - ஒரு வரியில்
Sun- medium life, eye diseases, and altercations (often heated, in which a difference of opinion is expressed)
******************
சூரியனுக்குப் பொதுவாக 1,2,3,4,5, 8, 9 & 11 ஆகிய இடங்கள் உகந்த இடங்கள்: 6, 7, 10 &12 ஒவ்வாத இடங்கள். 8ஆம் இடத்தில் வந்தமரும் சூரியன், ஜாதகனுக்கு, சிக்கலான சூழ்நிலைகளில் கைகொடுப்பான்.

ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சூரியன் வந்தமர்ந்திருந்தால், அதுவும் உச்சம் பெற்றிருந்தால், ஜாதகனுக்குப் பூரண ஆயுள் உண்டு. அரவிந்தசாமியைப் போல கவர்ச்சிகரமாக இருப்பான். சிலர் சிறந்த மேடைப் பேச்சாளராக
உருவெடுப்பார்கள். பெண்ணாக இருந்தால் தமண்னாவைப்போல கவர்ச்சியாக இருப்பாள்.

எட்டாம் இடத்தில் சூரியனுடன் எட்டாம் அதிபதி அல்லது 11ஆம் அதிபதி சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் திடீர்  பொருள் வரவுகள் உண்டாகும்

அதே நேரத்தில், எட்டாம் இடத்தில் வந்தமரும் சூரியன், பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது  நீசம் பெற்றிருந்தால் அல்லது தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றிருந்தால், அது ஜாதகனுக்குச் சாதகமானதல்ல.சிலருக்கு முகத்தில் தழும்புகள், வடுக்கள் ஏற்படும். வழ்க்கை சிலாக்கியமாக இருக்காது!
கண் பார்வைக் குறைவுகள் ஏற்படும்.

If the Sun occupies the 8th, the native will have deformed eyes, be devoid of wealth and happiness, be short- lived and will suffer separation from his relatives. - Saravali
-----------------------------------------------------

2.
சந்திரன்

பொதுவிதி - ஒரு வரியில்
Moon- Affected by phlegm, trouble in left eye, danger of drowning and loss of wealth
******************
எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தமர்ந்திருந்தால் மனப்போராட்டங்கள் மிகுந்த ஜாதகம். மன நிம்மதி இருக்காது. உளவியல் பிரச்சினைகள் உண்டாகும். நிலையான பிடிப்புடையவனாக ஜாதகன் இருக்க மாட்டான். உடல்
நலமில்லாதவனாகவும் இருப்பான். சிலருக்கு தாய் அவனுடைய சின்ன வயதிலேயே, ஜாதகியாக இருந்தால், அவளுடைய சின்ன வயதிலேயே
இறந்து போயிருப்பாள். தாயில்லாக்குழந்தையாக வளர்ந்திருப்பான். அல்லது
வளர்ந்திருப்பாள். கண் பார்வைக்குறைகள் உண்டாகும்.

வம்சாவழிச் சொத்துக்கள் வந்து சேரும். எதையும் அனுபவித்து மகிழக்கூடிய தன்மை இருக்கும். போர்க்குணம் மிகுந்திருக்கும். பெருந்தன்மையும் உடன் இருக்கும். சந்திரன் எட்டில் இருக்க, ஜாதகத்தில் (வேறு எங்கேனும்)
சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் கண்பார்வைக் கோளாறுகள் உண்டாகும்.

If the Moon is in 8th, the native will be very intelligent, very splendourous and will suffer from diseases. If the Moon 
be weak, he will be short-lived. - Saravali
-------------------------------------------------------

3.
செவ்வாய்

பொதுவிதி - ஒரு வரியில்
Mars-Short life, will kill wife, troubles from enemies
******************
ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் இல்லாமல், செவ்வாய் வந்து எட்டில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குறைந்த  ஆயுள். சிலர் மனைவியை இழந்து துன்பப்பட நேரிடும். குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் இருக்கும்.
தங்களது சுயமகிழ்ச்சிக்காகச் சிலர், வேறு பெண்களைத் தொடுப்பாக வைத்திருப்பார்கள். தொடுப்பு என்றால்  என்னவென்று தெரியுமல்லவா?. உறவுகளூடன் மோதல்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கை சண்டை சச்சரவுகளால் நிலை குலைந்து இருக்கும். அதாவது வெளியே சொல்லும்படியாக இருக்காது.

சிலருக்கு மூலநோய் (piles complaint) இருக்கும். மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்துவார்கள்.

If Mars occupies the 8th, the native will suffer from diseases, be short-lived, will possess an ugly, or  deformed  body, will do base acts and will suffer grief. - Saravali
-------------------------------------------------------

4.
புதன்

பொதுவிதி - ஒரு வரியில்
Mercury- Is always good in the 8th house. Learning of Scriptures and Long life.
*****************
எட்டாம் இடத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு.
ஜாதகனுக்குப் பல விஷேச குணங்கள் இருக்கும்.எல்லோரையும் அனுசரித்துப்போகும் தன்மை இருக்கும்.  யாரையும் சமாளிக்கும் அல்லது வளைத்துப்போடும் தன்மை இருக்கும்.

செல்வம் பலவழிகளில் வந்து சேரும். ஜாதகனும் தன் சொந்த முயற்சியில் பொருள் ஈட்டுவான். சுருக்கமாகச்  சொன்னால் செல்வந்தனாக இருப்பான் (பொதுவிதி)

அதிகம் கற்றவனாக இருப்பான். பண்டிதனாக இருப்பான். எல்லா விஷயங்களும் தெரிந்தவனாக இருப்பான். அதிக நாள் உயிரோடு இருப்பான். அதே நேரத்தில் ஆசாமி நோஞ்சான் வடிவத்தில் இருப்பான்.

If Mercury occupies the 8th, the native will win famous names (titles), be strong, long-lived, will support his family  and be equal to a king, or will become a justice - Saravali
-----------------------------------------------------

5
குரு

பொதுவிதி - ஒரு வரியில்
Jupiter- long life but sadness on account of sons.
******************
ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. மனதில் மகிழ்ச்சி இருக்காது. ஆனால் பெருந்தன்மை உடையவனாக  இருப்பான். அறங்கள் செய்பவனாக இருப்பான். பேச்சுத்திறமை இருக்காது. மறைமுகமாகப் பல தகாத  செயல்களைச் செய்வான். ஆனால் அவைகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வான். சிலருக்கு விதவைப் பெண்களுடன் அல்லது தகாத பெண்களுடன் தொடர்பு இருக்கும். உடல் உபாதைகள், வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். மரணம் ஏற்படும் சமயத்தில், வலியில்லாத மரணம்  உடையவனாக இருப்பான்.

குரு நீசமடைந்திருந்தால், வாழ்க்கை சுத்தமாக மகிழ்ச்சியற்றதாக இருக்கும்

If Jupiter occupies the 8th, the native will be insulted, long-lived, be a servant, will serve his own  people, be pitiable and will have union with dirty women - Saravali
-----------------------------------------------------

6
சுக்கிரன்

பொதுவிதி - ஒரு வரியில்
Venus - long life, inheritance, scriptural knowledge.
******************
எட்டாம் இடத்தில் சுக்கிரன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு. பல வரங்களுடன் பிறந்த அமைப்பு.(It is a  blessed position) ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வசதியான வாழ்க்கை அமையும்.

சிலருக்கு, அவர்களுடைய சின்ன வயது வாழ்க்கை ஏமாற்றங்களும், உணர்ச்சிப் போராட்டங்களும் நிறைந்ததாக  இருந்திருக்கும். அதன்காரணமாக வயதான காலத்தில் ஆன்மிகச் சிந்தனைகளும், தர்மச் சிந்தனைகளும்  உடையவர்களாக  இருப்பார்கள். தங்கள் பெற்றோர்கள் மீது அதீத அன்பையும் பாசத்தையும் வைத்திருப்பார்கள். எட்டாம் இடத்து சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால், அதீதமான செல்வம் சேரும்.

(சார் எனக்கு எட்டில் உச்சம் பெற்ற சுக்கிரன், அதீத செல்வம் சேரவில்லையே என்று யாரும் கேட்க வேண்டாம். நான் சிம்ம லக்கினக்காரன் எனக்கும் எட்டில் உச்சமான சுக்கிரன். செல்வம் வந்தது. அத்தனையும் காணாமல்  போய்விட்டது. செலவாகிவிட்டது. அதற்குக் காரணம் இரண்டாம் வீட்டில் பாப கிரகம் அமைந்துள்ளது. ஓட்டை  அண்டா. தண்ணீர் எப்படித் தேங்கும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், பொதுவிதிகளை நம் ஜாதகத்தில்  உள்ள மற்ற அமைப்புக்களுடனும் சேர்த்துப் பரிசீலிக்க வேண்டும்)

எட்டில் அமரும் சுக்கிரன் நீசமடைந்திருப்பதோடு, சனியின் பார்வையைப் பெற்றிருந்தால், ஜாதகன் மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை வாழ நேரிடும்.

If Venus is in the 8th, the native will be long-lived, will enjoy incomparable happiness, be very rich, be equal to a king and moment after moment will feel delighted - Saravali
--------------------------------------------------------------

7
சனீஷ்வரன்

பொதுவிதி - ஒரு வரியில்
Saturn- Long life but sad life due to inadequate earnings
******************
எட்டாம் இடத்தில் சனீஷ்வரன் வந்து அமர்வது நன்மையான அமைப்பு. ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.நீண்ட ஆயுள் நன்மையான அமைப்பு என்று எடுத்துக்கொள்வோம்.

ஜாதகனுக்குப் பல பொறுப்புக்கள் வந்து சேரும். அனைத்தையும் அவன் அசத்தலாகக் கையாள்வான். அதாவது  சங்கடமின்றி முழுமனதுடன் செய்வான். இடையூறுகள், தடைகள் என்று எது வந்தாலும் அவற்றை உடைத்து செய்ல்புரிவான்.

சிலருக்குக் கண் பார்வைக்கோளாறுகள் ஏற்படும். குறைந்த எண்ணிக்கை யிலேயே குழந்தைகள் இருக்கும். பெண்கள் மேல் மயக்கம் கொண்டவனாக இருப்பான். பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். என்ன விதமான  தொடர்பு என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்:-))))

உடல் உபாதைகள் மற்றும் தீராத பிணிகள் இருக்கும். நோய் என்றால் திர்க்கஊடியது. பிணி என்றால் தீர்க்க முடியாதது என்று பொருள் கொள்க! சிலருக்குத் தீராத வயிற்றுக்கோளாறுகள், வாய்த்தொல்லைகள் கூடவே
இருந்து கழுத்தறுக்கும்

இங்கே வேறு தீய கிரகம் வந்து சனியுடன் சேர்ந்துகொண்டால், ஜாதகனுக்கு, அவனுடைய குழந்தைகளால்  மகிழ்ச்சி இருக்காது. சிலர் நேர்மையில்லாதவர் களாக இருப்பார்கள். (பல பெண்களின் தொடர்பு இருக்கும் என்று  முன்பே சொல்லிவிட்ட பிறகு, இதைச் சொல்ல வேண்டுமா என்ன?)

If Saturn occupies the 8th, the native will suffer from leprosy and fistula in the anus, or pudendum and will fail  in his undertakings - Saravali
----------------------------------------------------------------

8
ராகு

பொதுவிதி - ஒரு வரியில்
Rahu- Danger by poison
******************
எட்டாம் இடத்தில் ராகு வந்து அமர்வது நன்மையான அமைப்பு அல்ல!

ஜாதகனுக்குப் பலவிதமான நோய்கள் தேடிவந்து படுத்தி எடுக்கும். சமூகத்தில் உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்காது. அல்லது அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும். நல்லது எது கெட்டது எது என்று ஆராயாமல் எதையும் எடுத்தேன், செய்தேன் என்று இருப்பான். தர்க்கம் செய்பவனாக இருப்பான். தகராறு செய்பவனாக இருப்பான்.

உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் கைகலப்பில் இறங்குபவனாக இருப்பான் (பொதுவிதி) ஜாதகத்தில் சந்திரன் ஒரு தீய கிரகத்துடன் கூட்டாக இருந்து, அதே ஜாதகத்தில் ராகு 8, 12 அல்லது 5ஆம்  இடங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மன நோய் உண்டாகும்!
--------------------------------------------------------------------

9
கேது

பொதுவிதி - ஒரு வரியில்
Ketu- Health of Spouse will be affected
******************
எட்டாம் வீட்டில் கேது இருந்து, ஒரு சுபக்கிரகத்தின் பார்வையும் இருந்தால், ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான்.  பூரண ஆயுள் உண்டு. அத்துடன் அதீத செல்வமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும்.

அதே கேது எட்டாம் வீட்டில் இருப்பதுடன் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன்  அடுத்தவர்களின் சொத்தையும், சமயத்தில் பெண்களையும் அபகரித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவான்.
பலவிதமான நோகளுக்கும் ஆளாவான்
------------------------------------------------------------------------
எட்டாம் வீடு துன்பங்களுக்கும் உரிய வீடு. எட்டாம் வீடு கெட்டிருந்தால், ஜாதகனுக்கு உடல் நோய்கள் இருக்கும்  அல்லது மனநோய் இருக்கும். எட்டாம் வீடு கெட்டிருக்கும் அளவை வைத்து நோய்களின் அளவும் மாறுபடும்.
சாதாரண நோயாகவும் இருக்கலாம். அல்லது புற்றுநோய் (cancer) போன்ற கொடிய நோயாகவும் இருக்கலாம்.

எல்லாம் வாங்கிவந்த வரம். அதை மனதில் கொள்க!

If malefics occupy various Bhavas (other than 6th, 8th and 12th), they bring harm to the Bhavas, while benefics  increase their potence. Malefics are auspicious in evil Houses, i.e. 6th, 8th and 12th, while benefics prove  adverse in these Bhavas. According the strength of Yogakaraka planets, their beneficial  
relationship, friendly/inimical aspects etc. and position in exaltation/debilitation, the (good, or bad) results of Bhavas 
can vary  (i.e. be maximum, medium, or nil).- 30th Ch. entitled Effects of Planets in Bhavas in Kalyana Varma's Saravali.
-----------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி  நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

2.7.10

எவன் அரசனைப்போல வாழ்வான்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எவன் அரசனைப்போல வாழ்வான்?

எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி

இதன் முன்பாதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி வேண்டப்படுகிறார்கள்

எச்சரிக்கை:
இது ஜாதகத்தின் ஆயுள் ஸ்தானத்தைப் பற்றிய பகுதி. பாடம் விவரமாக எட்டு அல்லது பத்துப் பகுதிகளாக வரவுள்ளது. அனைவரும் பொறுமை காக்கவும். தங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து இடையில் யாரும் கேள்விகள் கேட்க வேண்டாம். சில பொது விதிகளை வைத்துக் குழம்பவும் வேண்டாம். அத்தனை பாடங்களையும் மனதில் உள்வாங்கிப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும்.
--------------------------------------------------------------------
7
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால்:

பூரண ஆயுள் உண்டு.
மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள்.
இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது.
சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும்
சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும்

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான்.
ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.
----------------------------------------------------------------------------------
8.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு!
வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும்

எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு:

மேஷ லக்கினத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும்.ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

ரிஷப லக்கினத்திற்கு எட்டாம் வீடு தனுசு. அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு மகரம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

கடக லக்கினத்திற்கு எட்டாம் வீடு கும்பம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

சிம்ம லக்கினத்திற்கு எட்டாம் வீடு மீனம். அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

கன்னி லக்கினத்திற்கு எட்டாம் வீடு மேஷம். அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

துலா மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன் இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் வீடு மிதுனம். அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

தனுசு லக்கினத்திற்கு எட்டாம் வீடு கடகம். அதன் அதிபதி சந்திரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

மகர லக்கினத்திற்கு எட்டாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

கும்ப லக்கினத்திற்கு எட்டாம் வீடு கன்னி. அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை உச்ச பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

மீன லக்கினத்திற்கு எட்டாம் வீடு துலாம். அதன் அதிபதி சுக்கிரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.


எட்டாம் அதிபதி ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகன் தான் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலேயே செய்வான். அதனால், பல நஷ்டங்களை, தீமைகளை அவன் சந்திக்க நேரிடும்.

எட்டாம் அதிபதி   (சேர்க்கை அல்லது பார்வையால்) கெட்டிருந்தால் மேற்சொன்னவற்றிற்கு எதிர்மாறான பலன்கள் கிடைக்கும் சிலரது தந்தை சிக்கலான சூழ்நிலையில் இறந்துவிடுவார். எட்டாம் அதிபதி கெட்டிருந்தால், ஜாதகன் எடுத்துச் செய்யும் முக்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும். தவறான, ஒவ்வாத தொழில்களையே அவன் செய்வதற்குத் தூண்டப்படுவான். அதன்மூலம் கைப்பொருள் அனைத்தையும் இழப்பான்.

எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்இருக்காது. நல்ல பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்
-----------------------------------------------------------------------------------
9
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்:

பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது. கிடைத்தாலும் நாசமாகிவிடும்
பிள்ளைகளால் கடன் ஏற்படும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதன் மூலம் மோதல்கள், பிரிவுகள் உண்டாகும். என்னடா வாழ்க்கை என்னும் நிலை ஏற்படும்.

ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பெற்றிருந்தால் (உங்கள் மொழியில் சொன்னால் கெட்டிருந்தால்) ஜாதகனின் தந்தை ஒன்பதாம் அதிபதியின் தசா/புத்தியில் காலமாவார்.

இங்கே உள்ள எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத தன்மை நிலவும்.

இங்கே உள்ள எட்டாம் அதிபதி ஆட்சி அல்லது பார்வை/சேர்க்கை பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்குப் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தைவழி உற்வுகளிடையே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். இல்லை என்றால் இதற்கு நேர் மாறான பலன்களே கிடைக்கும்!
--------------------------------------------------------------------------------------
10
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பத்தில் இருந்தால்:

ஜாதகன் ஒரே வேலையில் நிலைத்து இருக்கமாட்டான். அடிக்கடி தன் வேலையை அல்லது தொழிலை மாற்றிக்கொள்வான். சிலர் உறவினர்களிடமும், சக மனிதர்களிடமும், அரசாங்கத்துடனும் கெட்ட பெயரை உண்டாக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள்.

எட்டாம் அதிபதி லக்கினத்திற்குப் பத்தில், அந்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து இருந்தால், அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் வேண்டிய அளவு முன்னேற்றம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் மிகுந்திருக்கும்.

அதுவும் இந்த அமைப்பு, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களிலும் உரிய மரியாதை இருக்காது. அதனால் சிலர் அதர்மவழியில் பொருள் ஈட்ட நேரிடும்.
அவர்களுடைய எண்ணங்களும் தவறானதாக இருக்கும். செயல்களும் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். சிலர் வருமானம் குறைந்து வறுமையில் உழல நேரிடும்.

இரண்டாம் வீட்டுக்காரன் பலமின்றி இருப்பதோடு, எட்டாம் வீட்டுக்காரனுடன் கைகோர்த்துப் பத்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவன் தலைமுடிக்கு மேல் கடன்கள் ஏற்படுவதோடு, கடனைத் திருப்பிக்கொடுக்கமுடியாமல் அவதிப்ப்ட நேரிடும். அவமானப்பட நேரிடும்.

எட்டாம் வீட்டுக்காரன் பத்தில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜீவனுமும் ஏற்றமுடையதாக இருக்கும். தீர்க்கமான ஆயுள் இருக்கும். அத்துடன் ஜாதகனுக்கு, திடீர் பொருள் வரவுகள் உண்டாகும். சிலருக்கு அவனுடைய உறவுகள் மரணமடைந்து, அவர்களுடைய செல்வங்கள், சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
------------------------------------------------------------------------------------
11.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் இருந்தால்:

மூத்த சகோதரர்கள், சகோதரிகளை இழக்க நேரிடும்.
நேர்மையான வழியில் இல்லாது, பலவழிகளிலும் ஜாதகன் பொருள் ஈட்டுவான்.

எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் பதினொன்றாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், செய்யும் தொழில்கள் நஷ்டமடையும். பொருளை இழக்க நேரிடும். கடைசியில் கடனாளியாக நேரிடும்

இங்கே வந்தமரும் எட்டாம் வீட்டுக்காரன், சுபக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால், மேற்கூறிய கெடுதல்கள் இருக்காது. உடன் இருப்பவர்கள் கைகொடுப்பார்கள். உதவுவார்கள்.
-----------------------------------------------------------------------------------

12
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்:
தகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள்.
ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது

இங்கே வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு எதிர்பாராத துன்பங்கள் தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களைப் பிரிய நேரிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுக் கைப்பொருள்களை இழக்க நேரிடும். சொத்துக்கள் கரையும்.

சிலர் தவறான நடவடிக்கைகளில் ஏடுபட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு துன்பப்படுவார்கள். தவறான நடவடிக்கைகள் என்பது, கடத்தல், பிறரை ஏமாற்றுதல், பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்தல், கள்ள நோட்டுப் பரிவர்த்தனை போன்ற செயல்கள் என்று பொருள் கொள்க

எட்டாம் அதிபதி இங்கே வந்து அதாவது பன்னிரேண்டில் அமர்ந்து, பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் திரிகோண வாழ்வு பெற்றால், ஜாதகன் ஆன்மிக வழியில் சென்று, பெரும் செல்வம் மற்றும் புகழை ஏற்படுத்திக்கொள்வான்.

எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் பன்னிரெண்டாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், இருவரும் சேர்ந்து ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான் (அட, இது ஒன்றுதாங்க நன்றாக உள்ளது)
-----------------------------------------------------------------------------------
(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

1.7.10

தாவுதல் தடைசெய்யப்பட்டுள்ளது!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தாவுதல் தடைசெய்யப்பட்டுள்ளது!

எட்டாம் வீடு - பகுதி ஒன்று

எச்சரிக்கை:
இது ஜாதகத்தின் ஆயுள் ஸ்தானத்தைப் பற்றிய பகுதி. பாடம் விவரமாக எட்டு அல்லது பத்துப் பகுதிகளாக வரவுள்ளது. அனைவரும் பொறுமை காக்கவும். தங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து இடையில் யாரும் கேள்விகள் கேட்க  வேண்டாம். சில பொது விதிகளை வைத்துக் குழம்பவும் வேண்டாம். அத்தனை பாடங்களையும் மனதில் உள்வாங்கிப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும்.
--------------------------------------------------------------------
எட்டாம் வீடு  மிகவும் முக்கியமான பகுதி. சவாலான பகுதி.
படிப்பவர்களுக்குச் சிக்கலான பகுதி. அதனால்தான்
இதுவரை அதை நடத்தாமல் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தேன். வெளிவரவுள்ள ஜோதிட நூலிற்கு இந்தப் பகுதிதேவைப்படுவதால்
இப்போது எழுதும் கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளேன்.

ஆயுள் (longevity), மரணம் ஏற்படும் விதம், காலம் (nature of death, time and place of death) ஏற்படவுள்ள சிரமங்கள், துன்பங்கள் (difficulties) சந்திக்கவுள்ள சிறுமைகள் (degradation) எல்லாம் இந்த வீடு சம்பந்தப்பட்ட  பணிகளே!

எட்டாம் வீடு, அதன் அதிபதி, காரகன் சனீஷ்வரன், வந்தமரும் கிரகங்கள், சேர்க்கைகள், பார்வைகள் என்று பல விதிகள் மற்றும் விதிவிலக்குகளை வைத்துத்தான் ஒரு முடிவிற்கு வரவேண்டும். நவாம்சமும், அஷ்டக வர்க்கமும்  அதற்குக் கைகொடுக்கும். பாடத்தில் எல்லா விவரங்களும் வரும். பொறுத்திருந்து படிக்கவும்.. Don't jump to any  conclusion by seeing general rules - தாவுதல் தடைசெய்யப்பட்டுள்ளது! அர்த்தமானதா?
--------------------------------------------------------------------
1
எட்டாம் வீட்டு அதிபதி கஷ்டமான பலன்களையே கொடுப்பார்.

2.
மரணம், விபத்தில் அடிபடுதல், கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை, வறுமையான சூழல், அவமானங்கள், சிறுமை, மன அமைதியின்மை ஆகியவற்றை ஏற்படுத்துபவர் அவரே!

3.
அவர் (அதாவது எட்டாம் அதிபதி - 8th lord) வலிமையோடு, எந்த சுபக்கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இன்றி இருந்தால், மேற்கூறியவைகள் அதிகமாகும். இல்லையென்றால் குறைந்துவிடும்.

இது மூன்றும் பொதுவிதி
-----------------------------------------------------------------------------------
எட்டாம் அதிபதி சென்று அமர்ந்த இடத்திற்கான பலன்கள்

1
எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்:
கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால், சொல்லவே வேண்டாம். கடனிலேயே தினமும் முங்கிக் குளிக்க வேண்டும்.
ஜாதகனுக்கு வியாதிகள், கடன் தொல்லை, வறுமை மூன்றும் சட்டைப் பையிலேயே இருக்கும் (அதாவது கூடவே இருக்கும்)
எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் (Misfortune) தொடர்ந்து வரும்.
எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால் இந்த நிலை மாறும். உதாரணமாக எட்டாம் அதிபதி நவாம்ச லக்கினத்தில்  6, 8, 12ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது போன்ற பலமில்லாத நிலைமை. நீசமாக இருக்கும் நிலைமை!
உடல் உபாதைகள் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், அதாவது வேலை பார்க்கும் இடங்களிலும் மற்றவர்களின் மதிப்பை, உரிய மரியாதையைப் பெற முடியாது.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள்

உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும்.
இதற்கு நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீயகிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன்  வறுமையில் உழல நேரிடும். வியாதிகள் கூடிக் கொல்லும். அடிக்கடி விழுந்து எழுந்திரிப்பான். அதாவது  விபத்துக்கள் நேரிடும்
-----------------------------------------------------------------------------------
2
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால்:
கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும்
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான  உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை
அமையும்.
ஜாதகனின் வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். 
எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும்  தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான்
அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது.
அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும்
சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும்.
சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும்.
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு  செய்து அழித்துவிடுவான்.
உடல் நலம் இருக்காது.
மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான்.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்
-----------------------------------------------------------------------------------
3
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால்:
உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. உடன் பிறப்புக்கள் என்றால் கட்சிக்காரர்கள் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் என்று பொருள் கொள்ளவும்.
மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும்.
சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும். ஏன் சமயத்தில் காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும்
முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும்.
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய  கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு  இருக்கும்

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்
----------------------------------------------------------------------------------
4.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்:
தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும்  இருக்காது.
குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும்
சொத்துக்கள் கையை விட்டுப்போகும்.
சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது.
வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள்  சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும்.
ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும்.
சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும்.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்
------------------------------------------------------------------------------------
5
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால்:
பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன்  விரோதப்போக்கு நிலவும்.

அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும்
எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின்  பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும்.

அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு,
ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும்.

இந்த சேர்க்கை,  தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால்,
சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த  இரண்டொரு வருடங்களிலேயே
பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும்.

இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும்.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்
------------------------------------------------------------------------------------
6.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால்:
அற்ப ஆயுள் (** இது பொது விதி)
உடல் ஸ்திரமாக இருக்காது.
ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளூம்
தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும்
ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான்.
சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும்.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ராஜ யோகம் ஏற்படும். ஜாதகனுக்கு செல்வம் சேரும். புகழ் உண்டாகும். நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். அவன்
ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும்.
(அப்பாடா, இதுவரை சொன்ன வற்றில் இது ஒன்றுதான் அம்சமாக,  சந்தோஷத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.)
------------------------------------------------------------------------------------
(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

30.6.10

Which is the greatest of all human blessings? ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Which is the greatest of all human blessings?  
ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?

எல்லோரும் வாழ்க்கையைப் பயணம் என்பார்கள். பயணத்திற்கு ஒரு துவக்கம் இருப்பதுபோல ஒரு முடிவும் இருக்கும். மரணம்தான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு.

கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார். வாழ்க்கையை வியாபாரம் என்றார். வியாபாரத்தில் வரவும் இருக்கும்; செலவும் இருக்கும்.ஜனனத்தை அவர் வரவு வைக்கச் சொன்னார். மரணத்தைச் செலவு எழுதச்சொன்னார்.

பாடலைப் பாருங்கள்:

போனால் போகட்டும் போடா! - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)

வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!
(போனால்)


இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

போனால் போகட்டும் போடா, என்று சர்வ அலட்சியத்துடன் பாடலைத் துவக்கியவர்,  கூக்குரலாலே உயிர்  திரும்பக் கிடைக்காது, கோர்ட்டுக்குப் போய் ரிட் பெட்டிஷன் போட்டாலும் ஜெயிக்காது, எமனின் கோட்டையில்
நுழைந்தவர்கள் யாரும் திரும்ப முடியாது என்று யதார்த்த உண்மைகளைச் சொன்னவர், முத்தாய்ப்பாய், ஆறுதலாய், நமக்கும் மேலே ஒருவனடா என்று சொல்லிப் பாடலை நிறைவு செய்தார்!

அதோடு கட்டுரை ஒன்றில் அவர் எழுதியிருந்தார்: “எமன் வந்து கூப்பிட்டால் அவனுடன் செல்வதற்கு நீ தயாராக  இருக்கிறாயா? இருந்தால், நீ அதிர்ஷ்டசாலி!” என்றார்.

அப்படி எத்தனை பேர்கள் இருக்கப்போகிறார்கள்?

நூற்றுக்கு ஒருவர் இருந்தால் ஆச்சரியமே!

எமனிடம் தாவா செய்ய முடியுமா?

எமன் வந்தவுடன், நம்மால் அவனிடம் இப்படிக் கேட்க முடியுமா?

“அப்பனே சற்று இரு; எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணிவிட்டு வருகிறேன். என் மனைவி அப்பாவி. வீட்டுச் சாவிகளை எல்லாம் எங்கே வைத்திருக்கி றேன், ரேசன் கார்டை எங்கே வைத்திருக்கிறேன் என்கின்ற சிறு
விஷயங்கள்  கூட அவளுக்குத் தெரியாது. கொடுக்கல், வாங்கலில் யாராரிடம், எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறேன், யாராருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சிக்கலான விஷயங்களும் அவளுக்குத் தெரியாது. எனக்குப் பின்னால் என்னுடைய மகனும், மருமகளும் சேர்ந்து, அவளுக்கு
உதவ மாட்டார்கள். அவள் தெருவில் நிற்கும்படியாகிவிடலாம்! அதனால் உயில் எழுதிப் பதிய வேண்டும். அதையும் செய்து விடுகிறேன். எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடு!”

இல்லை. கேட்டவுடன், அவர் கொடுக்கத்தான் போகிறாரா?

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்!

மரணப் படுக்கையில் படுத்திருப்பவன்கூட, வைத்தியர் நம்மைக் காப்பாற்றி விடுவார், சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்கின்ற நம்பிக்கையோடுதான் படுத்திருப்பான்.

என்ன காரணம்?

எந்த மனிதனுமே மரணத்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை! அதுதான் காரணம்
-------------------------------------------------------------------------------------------
ஒரு குழந்தை பிறப்பதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. சுகப்பிரசவம். தாயின் வயிற்றைச் சற்றுக் கிழித்துக்கொண்டு சிசேரியன் செய்யப்பட்டுப் பிறக்கும் குழந்தை.

மேலோட்டமாகப் பார்த்தால் மரணத்திலும் இரண்டுவகைதான். இயற்கையான மரணம் அல்லது துர் மரணம் (அகால மரணம்)

என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் மரணம் மரணம்தான். இழப்பு இழப்புத்தான். சாதாரண இழப்பல்ல. ஒரு உயிரின் இழப்பு.

தமிழில் மரணத்தை நாசுக்காகச் சொல்லும்போது, இறைவனடி சேர்ந்து விட்டார் என்போம். எங்கள் பகுதியில் சிவபதவி அடைந்துவிட்டார் என்று சொல்வார்கள். இயற்கை எய்திவிட்டார் என்றும் சொல்வார்கள். சிலர்
மரணத்தை வைகுண்டப் பிராப்தி அடைந்துவிட்டார் என்பார்கள்!
------------------------------------------------------------------------------------------
இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று நா‌ம் கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத்துவ உலக‌ம்  எ‌ன்ன சொ‌ல்‌கிறது?

உட‌ல் செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போவதுதா‌ன் மரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம்.
இதய‌ம் செய‌ல்படாம‌ல் ‌நி‌ன்று ‌வி‌ட்ட ‌பிறகு‌ம், மூளையானது இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் 2 ம‌ணி நேர‌ம் வரை கூட மூளை இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ப்பது உ‌ண்டு. இது ‌கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
‌பி‌ன்ன‌ர்தா‌ன் மூளை‌யி‌ன் இய‌க்கமு‌ம் ‌நி‌ன்று போ‌கிறது. இதை செ‌ரிபர‌ல் டெ‌த் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்கள‌்.

இ‌ப்போதுதா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.

‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி தலை‌யி‌ல் காய‌ம் அடை‌ந்தவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் மூளை தனது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்‌தி‌யிரு‌க்கு‌ம். ஆனா‌ல் இதய‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களது உட‌ல்க‌ள்தா‌ன் தானமாக
அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்.

Death is the termination of the biological functions that define a living organism. The word refers both to a particular process and to the condition that results thereby.
----------------------------------------------------------------------------------------------
மரணத்தை விரிவாகச் சொல்வதற்குத்தான் எத்தனை சொற்கள் இருக்கின்றன?

Died - சாவு, மரணம்

Expired - காலாவதியாகுதல். இறந்து போதல்

killed - put to death - கொல்லப்படுதல். பொதுவாக விபத்தில் இறப்பவர்களுக்கு இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்

Murdered - The unlawful killing of one human by another - கொலை செய்யப்பட்டு இறப்பதைக் குறிக்கும் சொல்

Assassination - An assassination is the targeted killing of a public figure, usually for political purposes. பிரபலங்கள், தலைவர்கள் கொல்லப்பட்டு இறக்கும்போது இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்

Strangled to death - To kill by squeezing the throat so as to choke or suffocate; throttle. கழுத்தை நெறித்துக் கொல்லப்படும் நிலைமை

Suffocated to death - To kill or destroy by preventing access of air or oxygen. மூச்சுத்திணறி இறக்கும் நிலைமை

Drowned to death - To kill by submerging and suffocating in water or another liquid. தண்ணீரில் மூழ்கி இறத்தல்

Killed in a stampede - A sudden headlong rush or flight of a crowd of people. கூட்ட நெரிசலில் சிக்கி இறத்தல்

Deceased - a more formal word for dead  - செத்துப்போனவரைக் குறிக்கும் யதார்த்தமான சொல்

Died in the fire accident - தீ விபத்தில் இறத்தல்

Shot dead - சுடப்பட்டு இறத்தல்

Hanged - தூக்கில் இடப்பட்டு இறத்தல் அல்லது தூக்கில் தொங்கி இறத்தல்

Suicide - The act or an instance of intentionally killing oneself. உயிரை மாய்த்துக்கொள்ளுதல். தற்கொலை

Poisoned to death -  விஷம் வைத்து அல்லது கொடுத்துக் கொல்லப்படுதல்

Electocuted - killed by an electric current - மின்சாரம் தாக்கி இறத்தல்

இன்னும் பல சொற்கள் உள்ளன: homicide, infanticide, fratricide, sororicide, matricide,patricide, parricide regicide.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தனை வகைவகையான, விரிவான சொற்கள் பிறப்பிற்குக் கிடையாது. அதை மனதில் கொள்க!
=====================================================
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

Which is the greatest of all human blessings?

மரணம்தான் அது.

உரிய காலத்தில் வலியில்லாமல், நாம் அறியாமல் உயிர் நம்மைவிட்டுப் பிரியும் நிலை இருக்கிறதே, அதுதான் உன்னதமான வரம். ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த வரம் கிடைக்க வேண்டும். அந்த வரம் கிடைத்திருக் கிறதா?  அல்லது இல்லையா என்பதைச் சொல்லும் இடம்தான் எட்டாம் வீடு!

“சாவை, வரம் என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?”

நான் சொல்லவில்லை சுவாமி! அதைச் சொன்ன ஞானியின் பெயருடனே அந்த வைர வரிகளைக் கீழே  கொடுத்துள்ளேன்

அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்:

Death may be the greatest of all human blessings.  ~ Socrates

மரணம்தான் மனிதனுக்குக் கிடைத்த உன்னதமான வரம்!
--சாக்ரட்டீஸ்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!