மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.7.10

தாவுதல் தடைசெய்யப்பட்டுள்ளது!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தாவுதல் தடைசெய்யப்பட்டுள்ளது!

எட்டாம் வீடு - பகுதி ஒன்று

எச்சரிக்கை:
இது ஜாதகத்தின் ஆயுள் ஸ்தானத்தைப் பற்றிய பகுதி. பாடம் விவரமாக எட்டு அல்லது பத்துப் பகுதிகளாக வரவுள்ளது. அனைவரும் பொறுமை காக்கவும். தங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து இடையில் யாரும் கேள்விகள் கேட்க  வேண்டாம். சில பொது விதிகளை வைத்துக் குழம்பவும் வேண்டாம். அத்தனை பாடங்களையும் மனதில் உள்வாங்கிப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும்.
--------------------------------------------------------------------
எட்டாம் வீடு  மிகவும் முக்கியமான பகுதி. சவாலான பகுதி.
படிப்பவர்களுக்குச் சிக்கலான பகுதி. அதனால்தான்
இதுவரை அதை நடத்தாமல் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தேன். வெளிவரவுள்ள ஜோதிட நூலிற்கு இந்தப் பகுதிதேவைப்படுவதால்
இப்போது எழுதும் கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளேன்.

ஆயுள் (longevity), மரணம் ஏற்படும் விதம், காலம் (nature of death, time and place of death) ஏற்படவுள்ள சிரமங்கள், துன்பங்கள் (difficulties) சந்திக்கவுள்ள சிறுமைகள் (degradation) எல்லாம் இந்த வீடு சம்பந்தப்பட்ட  பணிகளே!

எட்டாம் வீடு, அதன் அதிபதி, காரகன் சனீஷ்வரன், வந்தமரும் கிரகங்கள், சேர்க்கைகள், பார்வைகள் என்று பல விதிகள் மற்றும் விதிவிலக்குகளை வைத்துத்தான் ஒரு முடிவிற்கு வரவேண்டும். நவாம்சமும், அஷ்டக வர்க்கமும்  அதற்குக் கைகொடுக்கும். பாடத்தில் எல்லா விவரங்களும் வரும். பொறுத்திருந்து படிக்கவும்.. Don't jump to any  conclusion by seeing general rules - தாவுதல் தடைசெய்யப்பட்டுள்ளது! அர்த்தமானதா?
--------------------------------------------------------------------
1
எட்டாம் வீட்டு அதிபதி கஷ்டமான பலன்களையே கொடுப்பார்.

2.
மரணம், விபத்தில் அடிபடுதல், கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை, வறுமையான சூழல், அவமானங்கள், சிறுமை, மன அமைதியின்மை ஆகியவற்றை ஏற்படுத்துபவர் அவரே!

3.
அவர் (அதாவது எட்டாம் அதிபதி - 8th lord) வலிமையோடு, எந்த சுபக்கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இன்றி இருந்தால், மேற்கூறியவைகள் அதிகமாகும். இல்லையென்றால் குறைந்துவிடும்.

இது மூன்றும் பொதுவிதி
-----------------------------------------------------------------------------------
எட்டாம் அதிபதி சென்று அமர்ந்த இடத்திற்கான பலன்கள்

1
எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்:
கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால், சொல்லவே வேண்டாம். கடனிலேயே தினமும் முங்கிக் குளிக்க வேண்டும்.
ஜாதகனுக்கு வியாதிகள், கடன் தொல்லை, வறுமை மூன்றும் சட்டைப் பையிலேயே இருக்கும் (அதாவது கூடவே இருக்கும்)
எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் (Misfortune) தொடர்ந்து வரும்.
எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால் இந்த நிலை மாறும். உதாரணமாக எட்டாம் அதிபதி நவாம்ச லக்கினத்தில்  6, 8, 12ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது போன்ற பலமில்லாத நிலைமை. நீசமாக இருக்கும் நிலைமை!
உடல் உபாதைகள் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், அதாவது வேலை பார்க்கும் இடங்களிலும் மற்றவர்களின் மதிப்பை, உரிய மரியாதையைப் பெற முடியாது.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள்

உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும்.
இதற்கு நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீயகிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன்  வறுமையில் உழல நேரிடும். வியாதிகள் கூடிக் கொல்லும். அடிக்கடி விழுந்து எழுந்திரிப்பான். அதாவது  விபத்துக்கள் நேரிடும்
-----------------------------------------------------------------------------------
2
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால்:
கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும்
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான  உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை
அமையும்.
ஜாதகனின் வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். 
எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும்  தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான்
அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது.
அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும்
சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும்.
சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும்.
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு  செய்து அழித்துவிடுவான்.
உடல் நலம் இருக்காது.
மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான்.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்
-----------------------------------------------------------------------------------
3
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால்:
உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. உடன் பிறப்புக்கள் என்றால் கட்சிக்காரர்கள் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் என்று பொருள் கொள்ளவும்.
மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும்.
சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும். ஏன் சமயத்தில் காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும்
முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும்.
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய  கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு  இருக்கும்

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்
----------------------------------------------------------------------------------
4.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்:
தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும்  இருக்காது.
குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும்
சொத்துக்கள் கையை விட்டுப்போகும்.
சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது.
வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள்  சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும்.
ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும்.
சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும்.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்
------------------------------------------------------------------------------------
5
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால்:
பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன்  விரோதப்போக்கு நிலவும்.

அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும்
எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின்  பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும்.

அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு,
ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும்.

இந்த சேர்க்கை,  தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால்,
சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த  இரண்டொரு வருடங்களிலேயே
பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும்.

இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும்.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்
------------------------------------------------------------------------------------
6.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால்:
அற்ப ஆயுள் (** இது பொது விதி)
உடல் ஸ்திரமாக இருக்காது.
ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளூம்
தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும்
ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான்.
சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும்.

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்

இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ராஜ யோகம் ஏற்படும். ஜாதகனுக்கு செல்வம் சேரும். புகழ் உண்டாகும். நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். அவன்
ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும்.
(அப்பாடா, இதுவரை சொன்ன வற்றில் இது ஒன்றுதான் அம்சமாக,  சந்தோஷத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.)
------------------------------------------------------------------------------------
(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

36 comments:

  1. ஆலயமணியின் ஓசையைப் போல் டங்.... டங்...டங்,
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. ஐயா, பாடம் அருமை...அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்...இப்போதே என்னிடம் உள்ள ஜாதகங்களுடன் ஒப்பிட ஆரம்பித்துள்ளேன்...சந்தேகங்களை தங்கள் அறிவுரைப்படி கடைசியில் கேட்கிறேன்..

    அன்புடன்,
    செங்கோவி

    ReplyDelete
  3. Thanks for the first lesson. we pray to the god to give enough patients and absorbing power to lear this

    ReplyDelete
  4. எட்டாம் எண் மீது மேற்கத்திய நாடுகளில் தீராத பயம். 7, 7அ 9 என்று எழுதுவார்கள். அவ்வளவு அபசகுனம்.எட்டின் அருகில் கூடப் போகமாட்டார்கள்.எட்டியே நிற்பார்கள்.எல்லாம் பகுத்தறிவு செய்கின்ற வேலை

    ReplyDelete
  5. லக்னாதிபதி அஷ்டமாதிபதியாக இருந்தால் ?

    உதாரணம்:

    லகனம்: மேஷ லக்னாதிபதி செவ்வாய், அஷ்டமத்துக்கும் அவனே அதிபதி.
    அதுபோல, துலா லக்னாதிபதி சுக்கிரன், அஷ்டம ஸ்தானமான ரிஷபத்துக்கும் அவனே ராஜா.

    ஒரு வேளை :
    லக்னாதிபதி ராஜா ' கைய வச்சா ராங்கா போவதில்லை' யோ என்னவோ !

    வாத்தியாரே சரணம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. ////Alasiam G said...
    ஆலயமணியின் ஓசையைப் போல் டங்.... டங்...டங்,
    நன்றிகள் ஐயா!/////

    நல்லது. நன்றி ஆலாசியம்! அதிகாலை 4:30 மணிக்குப் பதிவை வலை ஏற்றினலும் நீங்கள்தான் முதல் பின்னூட்டம். அதேபோல காலை 9:30 மணிக்கு பதிவை வலை ஏற்றினலும் நீங்கள்தான் முதல் பின்னூட்டம்.
    எப்படி முடிகிறது? ரகசியம் என்ன?:-)))

    ReplyDelete
  7. ///SHEN said...
    ஐயா, பாடம் அருமை...அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்...இப்போதே என்னிடம் உள்ள ஜாதகங்களுடன் ஒப்பிட ஆரம்பித்துள்ளேன்...சந்தேகங்களை தங்கள் அறிவுரைப்படி கடைசியில் கேட்கிறேன்..
    அன்புடன்,
    செங்கோவி/////

    முனைப்போடு படித்தால், கடைசியில் சந்தேகங்கள் வராது. தீர்ந்துவிடும்!

    ReplyDelete
  8. //////Ram said...
    Thanks for the first lesson. we pray to the god to give enough patients and absorbing power to learn this//////

    கடவுளிடம் மனுப்போட்டுவிட்டீர்கள் அல்லவா? கண்டிப்பாகக் கிடைக்கும்!

    ReplyDelete
  9. /////kmr.krishnan said...
    எட்டாம் எண் மீது மேற்கத்திய நாடுகளில் தீராத பயம். 7, 7அ 9 என்று எழுதுவார்கள். அவ்வளவு அபசகுனம்.எட்டின் அருகில் கூடப் போகமாட்டார்கள்.எட்டியே நிற்பார்கள்.எல்லாம் பகுத்தறிவு செய்கின்ற வேலை//////

    இங்கே கூட எட்டைக் கண்டு பயப்படுகிறவர்கள்/பயமுறுத்துகிறவர்கள் உண்டு. அதைப் பற்றிய எனது அனுபவத்தை முன் பதிவு ஒன்றில் எழுதியுள்ளேன். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. /////sury said...
    லக்னாதிபதி அஷ்டமாதிபதியாக இருந்தால் ?
    உதாரணம்:
    லகனம்: மேஷ லக்னாதிபதி செவ்வாய், அஷ்டமத்துக்கும் அவனே அதிபதி.
    அதுபோல, துலா லக்னாதிபதி சுக்கிரன், அஷ்டம ஸ்தானமான ரிஷபத்துக்கும் அவனே ராஜா.
    ஒரு வேளை :
    லக்னாதிபதி ராஜா ' கைய வச்சா ராங்கா போவதில்லை' யோ என்னவோ !
    வாத்தியாரே சரணம்.
    சுப்பு ரத்தினம்.//////

    அதற்காக அஷ்டம ஸ்தானத்து வேலைகளைச் செய்யாமல் விடுவாரா என்ன? இரண்டையும் செய்வார்!

    ReplyDelete
  11. எட்டாம் அதிபதி சுபராக இருந்தாலும் கஷ்டங்களை வாரி வழங்குவார் என்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். உங்கள் பாடத்திற்கு நன்றி.

    ReplyDelete
  12. If BENEFIC planet like GURU is 8th lord(especially For leo ascendants)then how it will perform its duties and functions being 8th lord?kindly answer this question sir.

    ReplyDelete
  13. மிகவும் அருமை நன்றி
    sury sir
    மேஷ லக்னத்திற்கு விருச்சிகமும்
    துலா லக்னத்திற்கு ரிஷபமும் 8 ம் வீடுதான் அதன் தாக்கம்
    இருக்கத்தான் செய்தாலும்அவ்வளவாக இருக்காது.
    ஏனெனில் விருச்சிகமும் ரிஷபமும் மூலத்திரிகோணம் இல்லை
    ஆனால் அதே சமயம் விருச்சிக லக்னத்திற்கு மேஷமும்
    ரிஷப லக்னத்திற்கு துலாமும் 6 ம் வீடுதான். இந்த ஆறாம் வீடுகள்
    சற்று ஆபத்தானவை .ஏனெனில் மேஷமும் துலாமும் மூலத்த்ரிகோண வீடுகள்.
    ஆனாலும் எதைக் கண்டும் பயப்பட வேண்டாம்.

    இந்த பாடங்களை படிக்கும் எல்லோருக்கும் ஒன்றை
    சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்வாத்தியார் சொன்னது போல்
    பொதுவான விதிகளை கொண்டு உடனே முடிவெடுக்கக் கூடாது. நமக்குத்
    தெரியாமலே சில நல்ல விஷயங்களை நம் கண்ணுக்குத் தெரியாமல் கடவுள்
    மறைத்து வைத்திருப்பார்.( subsublord level )களில் சென்று பார்த்தால் அவை தெரியும்.

    "நமக்கும் மேலே ஒருவனடா
    அவன் நாலும் தெரிந்த தலைவனடா
    தினம் நாடகம் ஆடும் கலைஞனடா"


    எனவே தகுந்த பரிகாரம் செய்து கொண்டால் போதும்.
    கடவுளைப் பிடியுங்கள் போதும்.பரிகாரமும் நீங்களே
    செய்து கொள்ளுங்கள் . ஜோதிடரிடம் சென்று ஏமாறவேண்டாம்.
    இத்தனை வேலைகளுக்கு இடையில் வாத்தியார் அவர்கள் நமக்கு
    பாடம் எடுப்பதே நாம் செய்த புண்ணியம். கற்ற கலையை
    சொல்லித்தர யாருக்கு ம்னம் வரும் அதுவும் இந்த கலியுகத்தில்.
    எனவே அவரை தொந்தரவு செய்யாமல்பாடங்களை மட்டும் படித்து
    கற்றுக் கொள்வோம்.முடிந்தால் சிறு பின்னூட்டம் அளிப்போம்
    .(என்னைப்போல் அல்லாமல்)

    ஒருமனிதனால் ஒரு நூறு பேரின் ஆத்மாவை தெளிவாக்கு
    வதென்றால் சாதாரணவிஷயமல்ல.
    புண்ணியம் செய்தாலன்றி அது நடவாது.
    வாத்தியாருக்கு ஆயிரக் கணக்கான வாசகர்கள்
    அவருக்கு நம் அனைவரின் நன்றியையும் வாழ்த்தையும் எல்லோர் சார்பாகவும்
    நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
    இறைவன் எல்லா நலமும் வளமும் அவருக்கு அருள்வாராக‌

    நன்றி
    இனியன் பாலாஜி

    ReplyDelete
  14. வணக்கம் அய்யா....

    எட்டாம் இடம் பற்றிய பாடம் துவக்கம் உங்கள் நடையில் அருமை.....ஆக எட்டாம் அதிபதி எந்த இடத்தில் இருந்தாலும் எவருடன் சேர்ந்து இருந்தாலும் அந்த பாவத்திற்க்கும்,அவருடன் இருப்பவரின் ஆதிபத்தியதிற்க்கும் சுபகிரக பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் வில்லங்கம் செய்வார் சில விதி விலக்குகளை தவிர்த்து என கணிக்களாமா அய்யா......

    நன்றி ....

    ReplyDelete
  15. Thank You Sir...
    Detailed and delineated lessons.. Superb.. I'm waiting vey eagerly for the rest of the lessons...

    M. Thiruvel Murugan

    ReplyDelete
  16. //லக்னாதிபதி அஷ்டமாதிபதியாக இருந்தால் ?//
    //If BENEFIC planet like GURU is 8th lord(especially For leo ascendants)then how it will perform its duties and functions being 8th lord?//

    இரண்டும் நல்லதொரு அருமையான கேள்விகள். லக்னாதிபதியே 8ம் அதிபதியாக வந்தால் தீமை செய்தாலும் ஒரு மென்மையான அனுகுமுறை இருக்கும் எனலாம். ஒரு குற்றத்திற்கு குறைந்த பட்ச தண்டனை கிடைப்பது போல் இருக்கும். உதாரணம் மேச லக்னத்திற்கு செவ்வாய். அதே செவ்வாய் கன்னி லக்னத்திற்கு 8ம் அதிபதியாக இருப்பதோடு 3ம் இடம் என்னும் இன்னொரு துர் ஸ்தானத்திற்கும் அதிபதி. அதுவும் லக்னாதிபதி புதனோடு பகைமை உண்டு. இதன் பலன் அதே குற்றத்திற்கு அதிக பட்ச தண்டனை கிடைப்பது போல் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  17. வணக்கம் அய்யா.....

    8 ஆம் வீடு பற்றிய பாடம் (எல்லா பாடங்களும் :) ) எளிமையாக இருக்கிறது.

    நன்றி

    ReplyDelete
  18. enakku 5th houseil 8thlord chandran ,lagnathipathi guruvin paarvaiyil irukindrar..(guru vakram)..hehe..."kumaran iruka bayamein". munbellam thangal blog morning seekiram update seiyapattu irukum..ipoludu konjam lataga update aagindradhe.....semozhi maanadu paaaaarthu kalaithu viteergalo ennavo???...hahahahah ...

    ReplyDelete
  19. எட்டின் தொடக்கமே . .
    எட்டிப் பார்க்க வைக்கிறதே . .

    கொஞ்சம் இருங்கள் . .
    ஒரு எட்டு (எமலோகத்திற்கு) போய்ட்டு வர்றேன்னு சொல்ல வைக்குதே . .

    இருக்கட்டும் . .

    ReplyDelete
  20. /////krish said...
    எட்டாம் அதிபதி சுபராக இருந்தாலும் கஷ்டங்களை வாரி வழங்குவார் என்று அனுபவத்தில் தெரிந்து
    கொண்டேன். உங்கள் பாடத்திற்கு நன்றி.////

    உண்மைதான் உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  21. //////இனியன் பாலாஜி said...
    மிகவும் அருமை நன்றி
    sury sir
    மேஷ லக்னத்திற்கு விருச்சிகமும்
    துலா லக்னத்திற்கு ரிஷபமும் 8 ம் வீடுதான் அதன் தாக்கம்
    இருக்கத்தான் செய்தாலும்அவ்வளவாக இருக்காது.
    ஏனெனில் விருச்சிகமும் ரிஷபமும் மூலத்திரிகோணம் இல்லை
    ஆனால் அதே சமயம் விருச்சிக லக்னத்திற்கு மேஷமும்
    ரிஷப லக்னத்திற்கு துலாமும் 6 ம் வீடுதான். இந்த ஆறாம் வீடுகள்
    சற்று ஆபத்தானவை .ஏனெனில் மேஷமும் துலாமும் மூலத்த்ரிகோண வீடுகள்.
    ஆனாலும் எதைக் கண்டும் பயப்பட வேண்டாம்.
    இந்த பாடங்களை படிக்கும் எல்லோருக்கும் ஒன்றை
    சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்வாத்தியார் சொன்னது போல்
    பொதுவான விதிகளை கொண்டு உடனே முடிவெடுக்கக் கூடாது. நமக்குத்
    தெரியாமலே சில நல்ல விஷயங்களை நம் கண்ணுக்குத் தெரியாமல் கடவுள்
    மறைத்து வைத்திருப்பார்.( subsublord level )களில் சென்று பார்த்தால் அவை தெரியும்.
    "நமக்கும் மேலே ஒருவனடா
    அவன் நாலும் தெரிந்த தலைவனடா
    தினம் நாடகம் ஆடும் கலைஞனடா"
    எனவே தகுந்த பரிகாரம் செய்து கொண்டால் போதும்.
    கடவுளைப் பிடியுங்கள் போதும்.பரிகாரமும் நீங்களே
    செய்து கொள்ளுங்கள் . ஜோதிடரிடம் சென்று ஏமாறவேண்டாம்.
    இத்தனை வேலைகளுக்கு இடையில் வாத்தியார் அவர்கள் நமக்கு
    பாடம் எடுப்பதே நாம் செய்த புண்ணியம். கற்ற கலையை
    சொல்லித்தர யாருக்கு ம்னம் வரும் அதுவும் இந்த கலியுகத்தில்.
    எனவே அவரை தொந்தரவு செய்யாமல்பாடங்களை மட்டும் படித்து
    கற்றுக் கொள்வோம்.முடிந்தால் சிறு பின்னூட்டம் அளிப்போம்
    .(என்னைப்போல் அல்லாமல்)
    ஒருமனிதனால் ஒரு நூறு பேரின் ஆத்மாவை தெளிவாக்கு
    வதென்றால் சாதாரணவிஷயமல்ல.
    புண்ணியம் செய்தாலன்றி அது நடவாது.
    வாத்தியாருக்கு ஆயிரக் கணக்கான வாசகர்கள்
    அவருக்கு நம் அனைவரின் நன்றியையும் வாழ்த்தையும் எல்லோர் சார்பாகவும்
    நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
    இறைவன் எல்லா நலமும் வளமும் அவருக்கு அருள்வாராக‌
    நன்றி
    இனியன் பாலாஜி///////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும், அன்பிற்கும் நன்றி பாலாஜி!

    ReplyDelete
  22. ///Nithya said...
    If BENEFIC planet like GURU is 8th lord(especially For leo ascendants)then how it will perform its duties and functions being 8th lord?kindly answer this question sir.//////

    He is also 5th lord for Leo Lagna. He will confer mixed results

    ReplyDelete
  23. ////astroadhi said...
    வணக்கம் அய்யா....
    எட்டாம் இடம் பற்றிய பாடம் துவக்கம் உங்கள் நடையில் அருமை.....ஆக எட்டாம் அதிபதி எந்த இடத்தில் இருந்தாலும் எவருடன் சேர்ந்து இருந்தாலும் அந்த பாவத்திற்க்கும்,அவருடன் இருப்பவரின் ஆதிபத்தியதிற்க்கும்
    சுபகிரக பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் வில்லங்கம் செய்வார் சில விதி விலக்குகளை தவிர்த்து என கணிக்கலாமா அய்யா......
    நன்றி ....////

    அவ்வாறே செய்யுங்கள் ஆதிராஜ்!

    ReplyDelete
  24. /////M. Thiruvel Murugan said...
    Thank You Sir...
    Detailed and delineated lessons.. Superb.. I'm waiting vey eagerly for the rest of the lessons...
    M. Thiruvel Murugan/////

    நல்லது. பொறுத்திருப்பேன் என்று சொன்னமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  25. /////ananth said...
    //லக்னாதிபதி அஷ்டமாதிபதியாக இருந்தால் ?//
    //If BENEFIC planet like GURU is 8th lord(especially For leo ascendants)then how it will perform its duties
    and functions being 8th lord?//
    இரண்டும் நல்லதொரு அருமையான கேள்விகள். லக்னாதிபதியே 8ம் அதிபதியாக வந்தால் தீமை செய்தாலும்
    ஒரு மென்மையான அனுகுமுறை இருக்கும் எனலாம். ஒரு குற்றத்திற்கு குறைந்த பட்ச தண்டனை கிடைப்பது போல் இருக்கும். உதாரணம் மேச லக்னத்திற்கு செவ்வாய். அதே செவ்வாய் கன்னி லக்னத்திற்கு 8ம் அதிபதியாக இருப்பதோடு 3ம் இடம் என்னும் இன்னொரு துர் ஸ்தானத்திற்கும் அதிபதி. அதுவும் லக்னாதிபதி புதனோடு பகைமை உண்டு. இதன் பலன் அதே குற்றத்திற்கு அதிக பட்ச தண்டனை கிடைப்பது போல் என்று எடுத்துக்
    கொள்ளலாம்.//////

    எது எப்படி இருந்தாலும் அனைவரின் மதிப்பெண்களும் சமம் (337) அதுதான் பெரியதொரு நன்மை. ஆறுதல்.நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  26. ////தமிழ்மணி said...
    வணக்கம் அய்யா.....
    8 ஆம் வீடு பற்றிய பாடம் (எல்லா பாடங்களும் :) ) எளிமையாக இருக்கிறது.
    நன்றி/////

    மணியாக உள்ளதா? நன்றி!

    ReplyDelete
  27. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    எட்டாம் வீடு பற்றிய விளக்கமான விவரங்கள், பொது விதி மற்றும் பலன்கள் மிகவும் சுலபமாகப் புரிந்துக் கொள்ளும் வகையில் தெளிவாக அளித்துள்ளீர்கள்.
    மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-01

    ReplyDelete
  28. ///////Jack Sparrow said...
    enakku 5th houseil 8thlord chandran ,lagnathipathi guruvin paarvaiyil irukindrar..(guru vakram)..hehe..."kumaran
    iruka bayamein". munbellam thangal blog morning seekiram update seiyapattu irukum..ipoludu konjam lataga update aagindradhe.....semozhi maanadu paaaaarthu kalaithu viteergalo ennavo???...hahahahah .../////////

    எல்லா நாட்களும் நமக்காக இல்லையே! ஒன்றுபோல் இருப்பதில்லையே! அதுதான் காரணம்!

    ReplyDelete
  29. //////iyer said...
    எட்டின் தொடக்கமே . . எட்டிப் பார்க்க வைக்கிறதே . .
    கொஞ்சம் இருங்கள் . . ஒரு எட்டு (எமலோகத்திற்கு) போய்ட்டு வர்றேன்னு சொல்ல வைக்குதே . .
    இருக்கட்டும் . .///////

    சொல்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் சுவாமி!:-))))

    ReplyDelete
  30. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    எட்டாம் வீடு பற்றிய விளக்கமான விவரங்கள், பொது விதி மற்றும் பலன்கள் மிகவும் சுலபமாகப் புரிந்துக் கொள்ளும் வகையில் தெளிவாக அளித்துள்ளீர்கள்.
    மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  31. எட்டாம் வீட்டுக்காரன் 3ல் 6ம் அதிபதியுடன் இருக்க சகோதரங்களும் பகையாச்சு, 6ம் காரனால் ஊரவனும் பகையாச்சு, காதும் 80% தான் கேட்குது. இப்படி ஒருவரைப் பாத்திருக்கேன்.
    உங்கள் பாடத்திலும் அதேதான் உள்ளது.
    பாடத்திற்கு நன்றி, சார்.
    அன்புடன்
    செல்லி

    ReplyDelete
  32. //இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும்,//

    இது விபிரீத ராஜ யோக கணக்கில் வராதா ?

    ReplyDelete
  33. /////செல்லி said...
    எட்டாம் வீட்டுக்காரன் 3ல் 6ம் அதிபதியுடன் இருக்க சகோதரங்களும் பகையாச்சு, 6ம் காரனால் ஊரவனும் பகையாச்சு, காதும் 80% தான் கேட்குது. இப்படி ஒருவரைப் பாத்திருக்கேன்.
    உங்கள் பாடத்திலும் அதேதான் உள்ளது.
    பாடத்திற்கு நன்றி, சார்.
    அன்புடன்
    செல்லி //////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  34. ஐயா,

    எட்டாம் அதிபதி இயற்கை சுபக்கிரகமான சுக்கிரனாக இருந்து லக்னத்தில் உச்சம் பெற்றால் என்னென்ன பலன்கள்?

    ReplyDelete
  35. அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    //இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும்,//
    இது விபிரீத ராஜ யோக கணக்கில் வராதா ?
    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!/////

    எட்டாம் வீட்டிற்கு அதிலிருந்து 12ஆம் வீடு ஏழாம் வீடு (அதன் அதிபதி)
    மூன்றாம் வீட்டிற்கு அதிலிருந்து 12ஆம் வீடு இரண்டாம் வீடு (அதன் அதிபதி)
    7ஆம் அதிபதியும், 2ஆம் அதிபதியும் மாரகர்கள் (killers)
    8ஆம் அதிபதிய்ம் 3ஆம் அதிபதியும் வாழ்நாட்களை நிர்ணயிப்பவர்கள். அதைப் பற்றிய பாடம்
    தனியாக வரவுள்ளது. பொறுத்திருந்து படியுங்கள்

    ReplyDelete
  36. ///Arul said...
    ஐயா,
    எட்டாம் அதிபதி இயற்கை சுபக்கிரகமான சுக்கிரனாக இருந்து லக்னத்தில் உச்சம் பெற்றால் என்னென்ன பலன்கள்?/////////

    எட்டாம் அதிபதி உச்சமானால், வேறு தீய பார்வைகள் இல்லையென்றால் ஜாதகனுக்கு பூரண ஆயுள். கடன் மற்றும் பணக்கஷ்டங்கள் இருக்காது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com