மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

21.7.10

உயர் அதிகாரி எழுதியுள்ள ஒப்பற்ற நூல்!++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நூல் நயம்:  உயர் அதிகாரி எழுதியுள்ள ஒப்பற்ற நூல்!

இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள் என்று சொல்வதைப் போல,  வள்ளுவரின் திருக்குறளை நயந்து எழுதும் நூல்கள் எல்லாம் ஒப்பற்ற நூல்கள்தான்.

வித்தியாசமாக ஒரு இடுகையைத் தரும் பொருட்டு, சிறந்த நூல் ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்வதில்  உவகை கொள்கிறேன்.

கதை, கவிதை, கட்டுரைகள் முதலியவற்றில் உள்ள மகிழ்விப்பதாக அமையும் தன்மையைக் குறிக்கும் சொல் நயம்  என்னும் சொல். artistic beauty, literary beauty, merit என்று ஆங்கிலத்தில் வகைப் படுத்துவதை தமிழில் ஒரு சொல்லால் விளங்க வைத்துவிடலாம். அதுதான் செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்பு.

இந்திய வருவாய்த் துறையில் பணி புரியும்  உயர் அதிகாரி திரு. சி. இராஜேந்திரன் அவர்களால் எழுதப்பெற்ற ‘திருக்குறள் உவமை நயம்’
என்னும் ஒப்பற்ற நூல், படிப்பவர்களின் மனதில் படிக்கும்போது
ஏற்படுத்தும் இன்பத்தாக்கத்தை அடியவனின் பார்வையில் கீழே கொடுத்துள்ளேன்.

நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்

புத்தகத்தைப் பிரித்தவுடன் 'முகவுரை' பகுதியில் தன்னுரையாக திரு. சி. இராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள வரிகளைப் படித்தவுடனேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவோம்!

    “ஓர்  இனத்திற்குப் பண்பாடும், நாகரிகமும்தான் ஆணிவேர்
போன்றவை. ஆணிவேர் ஆழமாகச் சென்றால்தான் ஒரு மரம் 
நிலைபெற்று  நிற்கும். அதன்  கிளைகளும் பல திசைகளில் பரவி, 
தளிர்த்து,  இலைவிட்டு, பூத்து, காய்த்து, கனி தந்து  பயனுள்ளதாய் 
விளங்க முடியும். வேர்களை மறந்த மரங்களுக்கு வாழ்க்கையில்லை.

  நமது முன்னோர்கள், அவர்கள் உணர்ந்து எழுதி வைத்து விட்டுச் சென்ற அரிய, ஏற்புடைய கருத்துக்களைக் கொண்ட இலக்கியங்கள்தான் நமது பண்பாட்டையும், நாகரிகத்தையும்  நமக்கு  உணர்த்துபவை. 
அவற்றை  மறந்து ஓர் இனத்திற்கு வளமான வாழ்க்கை இல்லை.
நாம் நமது இலக்கியங்களில் ஆழக் கால் ஊன்றி அதிலுள்ள
கருத்துக்களை  உள்வாங்கி செயல்பட்டால்தான், நமக்கும்,
மற்றவர்களுக்கும் பயன் தரும் வாழ்க்கையை வாழ முடியும்”

புத்தகம் பிறந்த கதைக்கு என்னதொரு விளக்கம் பார்த்தீர்களா?

அறத்துப்பாலில் 22ம் பொருட்பாலில் 56ம் இன்பத்துப்பாலில் 19ம் ஆக மொத்தம் 97 அதிகாரங்களில் உள்ள உவமைகள், நயமாக, விளக்கங்களுடன் எடுத்துச் சொல்லப்பெற்றுள்ளன!

எனக்குப் பிடித்த நிலையாமை அதிகாரத்தில் உள்ள உவமைகளை நூல் ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறாரா என்றுதான் முதலில் தேடிப் படித்தேன். அதில் 4 குறள்களின் உவமை நயம் சிறப்பாக எடுத்துச்
சொல்லப்பெற்றிருக்கிறது.

  “கூத்தாட்டு அவைக்குழாத் தற்று பெருஞ்செல்வம்
   போக்கும் அதுவிளித் தற்று”

                            - குறள் எண் 332

கூத்தாட்டுக் களத்துக்கு ஒவ்வொன்றாய் வரும் மக்கள் கூட்டம் போல் செல்வம் சிறிது சிறிதாக வரும். ஆனால் போகும்போது கூத்தாட்டுக் களத்திலிருந்து கூத்து முடிந்ததும் செல்லும் பெரும் மக்கள் கூட்டத்தைப் போல சிறுகச் சிறுகச் சேர்த்த பெருஞ்செல்வம் விரைந்து ஒரேயடியாகச் சென்றுவிடும்.

தமிழ் - இயல், இசை, நாடகம் - என மூன்று வகைப்படும். கூத்து என்பது நாடகத்தமிழ். கூத்தின் மூலம்  மக்களுக்கு நல்ல பல கருத்துக்களையும், நமது பண்பாட்டையும், கலைஞர்கள் விளக்கிக் கொண்டிருந்த காலம்  அது.......என்று தொடர்கிறது நூலாசிரியரின் விளக்கம்.

    “பீலிபெய் சாகடும் அச்சிறும் அப்பண்டம்
     சால மிகுத்துப் பெயின்
- குறள் 475 (வலி அறிதல் அதிகாரம்)

மயிலறகே  ஆனாலும் வண்டி தாங்கும் அளவிற்கு ஏற்றாமல்
அளவிற்கு மிஞ்சி ஏற்றினால் வண்டியின் அச்சு முரிந்துவிடும்
என்று வள்ளுவப் பெருந்தகை மயிலிறகை வைத்து  உவமையாகச் 
சொன்ன  இந்தக் குறள்  மட்டும் பள்ளிப் பாடத்தில் படித்ததினால்
பலருக்கும் தெரியும். வேறு இரண்டு உவமை நயங்களைச்
சொல்லுங்கள் என்றால் பலரும் விழி பிதுங்க விழிப்பார்கள்.

ஆகவே இந்த நூலில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ள உவமை நயங்களை எல்லாம் படித்து அனுபவிக்கும் போது வள்ளுவரின் மேன்மை மேலும் பளிச்சிடுகிறது.

படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும் நல்லுலகத்தோர் அனைவரும் இதைப் படித்து மகிழ வேண்டும்  என்ற ஆதங்கத்தில் இதற்கு ஒரு விமர்சனம் எழுதத் துணிந்தேன்.

ஒரு உயர் அதிகாரிக்கு படிப்பதற்கு நேரம் கிடைத்தாலும், எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்பது  திகைப்பிற்கு உரிய விஷயம். ஆர்வம் இருந்தால் போதும் என்று பதில் சொல்லாமல் ஒரு இரண்டு பக்கங்கள்  எழுதிப் பாருங்கள், அப்போது தெரியும் நன்றாக எழுதுவது என்பது வரம் என்று!

வள்ளுவரின் உவமை நயங்களை, நயம்பட தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள இந்த நூல் 288 பக்கங்களைக் கொண்டது. சிறந்த முறையில் அச்சிடப்பெற்றுள்ளது.  

Nightingale Binding  என்னும் முறையில்  பக்கங்கள்படிப்பதற்கு வசதியாகக் கட்டமைத்துக் கொடுக்கப் பெற்றுள்ளது. நூலின் வடிவமைப்பைப் பார்க்கும்போது அதன்  விலை குறைவுதான்.  விலை ரூ. 125:00 மட்டுமே

நூலில் உள்ள அத்தனை கட்டுரைகளுமே முத்துக்கள். எல்லாவற்றையும் எடுத்து எழுத நான் விரும்பினாலும்  பதிப்பாளர்கள் தங்கள் காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா என்பது தெரியாது! அதேபோல மிகவும்

அதிகமாக நெஞ்சைத் தொட்ட வரிகளைக் குறிப்பிட்டு எழுதுவதென்றால் எதை எழுதுவது எதை விடுவது என்ற திகைப்புத்தான் மேலிடும். ஒரு புத்தக விமர்சனத்தில் அதைச் செய்வதும் சரியல்ல!

ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து வாங்கிப் படியுங்கள்.அதுதான் நூலைச் சிறப்பாக  எழுதிய திரு.சி.இராஜேந்திரன் அவர்களுக்கும், வெளியிட்டவர்களுக்கும் நாம் செய்யும் மரியாதையும், நன்றிக்  கடனுமாகும்.

பதிப்பாளர்களின் முகவரி:

கவிதா பப்ளிகேஷன்
8, மாசிலாமணி தெரு,
பாண்டி பஜார், தி. நகர்
சென்னை - 600017

தொலைபேசி எண்: 24364243, 24322177


நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா
-------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

15 comments:

Alasiam G said...

முதலில் புத்தகத்தின் அட்டையில் உள்ளவரைப் பார்த்ததுமே நன்கு அறிமுகமானவராகத் தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு மேலும் படிக்கையில் தான் தெரிகிறது அவரும் சொர்க்கபுரியில் (சிங்கப்பூரில்) தான் இருப்பது...
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்"..... எனவும்!
****என்னை வாசித்தவைகள்****,
தொடரும் இனி இம் மன்றத்தில் வளரும்......
ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றிகள் குருவே!

Ram said...

Dear Sir,

It is really difficult to read books and much difficult to write books...

I really liked the 332 verse and how true it is.

2500 years ago sage Thiruvalluvar told and it is still applicaple and even after 5000 years from now...

Fantastic interpretation.

Thanks and warm regards,
Ram

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
முதலில் புத்தகத்தின் அட்டையில் உள்ளவரைப் பார்த்ததுமே நன்கு அறிமுகமானவராகத் தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு மேலும் படிக்கையில் தான் தெரிகிறது அவரும் சொர்க்கபுரியில் (சிங்கப்பூரில்) தான் இருப்பது...
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்"..... எனவும்!
****என்னை வாசித்தவைகள்****,
தொடரும் இனி இம் மன்றத்தில் வளரும்......
ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றிகள் குருவே!/////

சிங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முதல் நிலைச் செயலராக முன்பு பணியாற்றியவர், தற்சமயம், இந்தியாவில், கலால், சுங்கம் மற்றும் சேவை வரித்துறையில் (Commissioner of Customs, Central Excise & Service Tax) உயர் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

SP.VR. SUBBAIYA said...

////Ram said...
Dear Sir,
It is really difficult to read books and much difficult to write books...
I really liked the 332 verse and how true it is.
2500 years ago sage Thiruvalluvar told and it is still applicable and even after 5000 years from now...
Fantastic interpretation.//////

தட்டச்சும்போது எண்ணிக்கையை விட்டு விட்டுவிட்டீர்களே! மொத்தம் உள்ளவை 1,330 குறள்கள்

Ram said...

thanks for the information sir

M. Thiruvel Murugan said...

ஐயா வணக்கம்...!
எனக்கு எப்போதுமே நம் தமிழ் மறையாம் திருக்குறள் மீது அளவிலா பக்தியும் ஈடுபாடும் உண்டு. அதன் உவமை நயங்களை திரட்டி, விளக்கி நூல் வெளியிட்டிருக்கும் திரு சி. ராஜேந்திரன் ஐயா அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.. அந்த நூலுக்கு தாங்கள் அளித்திருக்கும் விமர்சனத்தைப் படித்தவுடன் அவசியம் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து விட்டது. நல்ல விஷயங்களைத் தேடி தங்கள் மாணவர்களுக்கு வழங்கும் தங்களுடைய அர்ப்பணிப்பையும், நல்ல விஷயங்களை திறந்த மனதுடன் பாராட்டும் தங்கள் பெருந்தன்மையையும் பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.... நல்லதொரு புத்தகத்தையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி அதை அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவலையும் எங்களுக்கு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.....

தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
"திருக்குறள் உவமை நயம் "- என்ற புத்தகத்தின் விமர்சனம் தங்களின் கை வண்ணத்தால் மேலும் பெருமைப் பெற்று, நல்ல நூலுக்குத் தகுந்த மதிப்பும் கிடைத்துள்ளது.அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை ஏற்ப்படுத்தியுள்ளீர்கள்.மிக்க நன்றி.

வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-07-21

ananth said...

நேற்றைய பின்னூட்டத்தில் சொன்னதுதான். எவ்வளவோ படிக்கிறோம். இதையும் படித்து (மனதில்) வைப்போம்.

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

புத்தகம் பிறந்த கதை மற்றும் தங்களின்" ‘திருக்குறள் உவமை நயம்",புத்தகத்திற்கான நூல்நயம் மிகவும் அருமையாக உள்ளது.இத்தகைய சிறந்த புத்தகத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-07-22௦
///////////////

சிங்கைசூரி said...

ஆசானே Noted i will also broadcast to our circle here in singai.

SP.VR. SUBBAIYA said...

//////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்...!
எனக்கு எப்போதுமே நம் தமிழ் மறையாம் திருக்குறள் மீது அளவிலா பக்தியும் ஈடுபாடும் உண்டு. அதன் உவமை நயங்களை திரட்டி, விளக்கி நூல் வெளியிட்டிருக்கும் திரு சி. ராஜேந்திரன் ஐயா அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.. அந்த நூலுக்கு தாங்கள் அளித்திருக்கும் விமர்சனத்தைப் படித்தவுடன் அவசியம் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து விட்டது. நல்ல விஷயங்களைத் தேடி தங்கள் மாணவர்களுக்கு வழங்கும் தங்களுடைய அர்ப்பணிப்பையும், நல்ல விஷயங்களை திறந்த மனதுடன் பாராட்டும் தங்கள் பெருந்தன்மையையும் பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.... நல்லதொரு புத்தகத்தையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி அதை அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவலையும் எங்களுக்கு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.....
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்/////

அறிமுகம் செய்தவரைப் பாராட்டுவதை விட, இந்தச் சிறந்த நூலைப் படித்துவிட்டு, அதை எழுதிய பெருந்தகையாளரைப் பாராட்டுவதே சாலச் சிறந்ததாகும்!

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
"திருக்குறள் உவமை நயம் "- என்ற புத்தகத்தின் விமர்சனம் தங்களின் கை வண்ணத்தால் மேலும் பெருமைப் பெற்று, நல்ல நூலுக்குத் தகுந்த மதிப்பும் கிடைத்துள்ளது.அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை ஏற்ப்படுத்தியுள்ளீர்கள்.மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

நல்லது. நன்றி. புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு ஒருவரி எழுதுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////ananth said...
நேற்றைய பின்னூட்டத்தில் சொன்னதுதான். எவ்வளவோ படிக்கிறோம். இதையும் படித்து (மனதில்) வைப்போம்.////

சில புத்தகங்கள் மனதில் தங்கிவிடும். பொன்னியின் செல்வன் ஒரு எடுத்துக்காட்டு!

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
புத்தகம் பிறந்த கதை மற்றும் தங்களின்" ‘திருக்குறள் உவமை நயம்",புத்தகத்திற்கான நூல்நயம் மிகவும் அருமையாக உள்ளது.இத்தகைய சிறந்த புத்தகத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி ///////////////

நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

/////சிங்கைசூரி said...
ஆசானே Noted i will also broadcast to our circle here in singai.////

ஆகா, அப்படியே செய்யுங்கள் நன்றி!