மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.7.10

Doubts - “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா?”

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubts - “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா?”

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 1

சீஸன் என்னும் சொல் விஜய் தொலைக்காட்சி உபயம்

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
------------------------------------------------
மின்னஞ்சல் எண் ஒன்று!
கண்ணன் சீதாராமன்,
கத்தார்

   
ஐயா வணக்கம்.

1.ஒருதிசை நடக்கும் பொழுது அதன் புத்தினாதன் வேலை செய்ய மாட்டார் என்பது உண்மையா அதாவது புதன் திசையில் புதன் புத்தியில் புத்தினாதன் வேலை செய்யமாட்டார் மறு புத்தி வந்த உடன்தான் வேலை செய்வார்  என்று கேள்விபட்டது உண்டு. உண்மையா?

உண்மைதான். சுயபுத்தியில் கிரகங்கள் உரிய பலனைத் தராது. சுபகிரகங்கள் நன்மையான பலனைத்தராது. தீயகிரகங்கள் தீய பலனைத் தராது. இரண்டையும் சேர்த்துப்பாருங்கள். நன்மையாகத் தெரியும்:-))))

2. கால சர்பதோசம்  உள்ளவர்கள் அதே காலசர்ப்ப தோஷம் உள்ள பெண்ணை கல்யாணம் செய்தால் நன்று என்பது உண்மையா?  எந்த அளவில் சாத்வீகப்படும் ஐயா இதற்கு வேறு ஏதேனும் விதி விலக்கு உண்டா ஐயா

தோஷம் உள்ளவர்கள், தோஷம் உள்ள பெண்ணை மணக்கலாம். அது செவ்வாய் தோஷத்திற்கு மட்டும்தான்.
எனக்குத் தெரிந்தவரை, காலசர்ப்ப தோஷத்திற்கு அதுபோலச் செய்யச் சொல்லி யாரும் கொடிகாட்டவில்லை.

3. ஐந்தாவதாகப் பிறக்கும் ஆண்குழந்தை ஆகாது என்கின்றனரே ஏன்? இதற்கு  ஜோதிட ரீதியாக காரணம் ஏதேனும் உண்டா?

அதெல்லாம் உண்மையில்லை. எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? இப்போது உள்ள கல்விக் கட்டணங்களாலும், விலைவாசியாலும், யாரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை.

இன்றையத் தாரக மந்திரம் இதுதான்:
நாம் இருவர்
நமக்கு இருவர்
எப்போதும்
நாம் நால்வர்!

கூட்டுக் குடும்பங்களை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டார்கள். இன்று எல்லாம் சிறு குடும்பங்களே (Micro Families)
சுயநலம் மிகுந்துவிட்டது. பெற்றோர்களைக்கூடக் கவனிக்க பலருக்கும் நேரமில்லை. அதுதான் உண்மை!
கையில் காசை வைத்திருக்கும் பெற்றோர்கள் தப்பிப்பார்கள். இல்லையென்றால் முதியோர் இல்லம்தான்!
--------------------------------
4. தனது ஜாதகத்தை வைத்து கொண்டு தனக்கு வரும் மனைவி மக்களை  எவ்வாறு தெரிந்து கொள்வது ஐயா அதாவது படிப்பு, வேலை, மற்றும் இனம், மொழி என தெரிய வழி வகை உண்டா?

இனம், மொழியை எல்லாமா? சொந்தத்திலா அல்லது அந்நியத்திலா என்பது மட்டுமே தெரியும். எழாம் அதிபதி அல்லது சுக்கிரன், சூரியன் அல்லது சந்திரனோடு தொடர்பு கொண்டிருந்தால் சொந்தத்தில் திருமணம். இல்லையென்றால் அந்நியத்தில் திருமணம். ஏழாம் அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருந்தால், வேறு சுபப்பார்வையின்றி இருந்தால், கலப்புத்திருமணம்.

எந்த மொழியில் திட்டினால் என்ன? மனைவி திட்டினால், அழகாகத்தான் இருக்கும். இரசித்துக் கேட்கப் பழகிக் கொள்ளுங்கள்.
  “சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?” என்றார் கவியரசர் கண்ணதாசன். அதையே சற்று மாற்றி இப்படிப் பழகிக்கொள்ள வேண்டியதுதான்: “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா?”

(மக்களைப் பற்றித் தனிபதிவாக பின் ஒருநாள் எழுதுகிறேன். பெரிய பதிவாக எழுத வேண்டும்)

5. உலகில் உள்ள ஜீவா ராசிகளை பஞ்சபூதங்கள் தான் ஆட்சி செய்கின்றன என்பது உண்மைதானே அப்படி இருக்க விதியை மதியால் எப்படி வெல்ல முடியும்?  அதுதான் சொல்லுவார்களே கடினமாக உழைத்தால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்பது எப்படி ஐயா உண்மை ஆகும் . அதுதான் ஊழ் வினை உழைக்க விடாதே அப்படியே முயற்சி செய்தாலும் கோவலன் கண்ணகி கதையால் அல்லவா முடிவாகிபோகும் ஐயா மிகவும் அருமையாக கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் பிள்ளையார் பிடிக்கப் போகக் குரங்கு ஆன கதையாக அல்லவா ஆகி விடும் ஐயா
kannan Seetharaman
Qatar.


பஞ்சபூதங்கள்தான் ஆட்சி செய்கின்றன. நீரும், நெருப்பும், காற்றும், மண்ணும் இல்லை என்றால் நீங்கள் ஏது? நான் ஏது? இந்த உலகம்தான் ஏது?

விதியை மதியால் வெல்ல முடியுமா? வெல்ல முடியாது!

இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம். அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை! வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று உயிருடன் இருந்திக்க வேண்டும்!

அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக் கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும் அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும் கிடையாது"

Nothing is stronger than destiny!

மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப்பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை
இறைவன் எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!

அதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர்  கண்ணதாசன் அவர்கள். எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே வாழ்ந்த அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் - எத்தனை இலட்சம் தமிழ் உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்! அவர் எழுதிச் சென்ற கவிதைகளை எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இதை வெறும் அதிர்ஷ்டக் கணக்கில் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அவருக்கிருந்த  தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்யவைத்தன!

இந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி  திருவினையாக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.
----------------------------------------------------------------------------------------
2
Chittoor.S.Murugesan said...:
சித்தூர் முருகேசன்

    ஐயா,
    சுமார் இரண்டு மணி நேரத்துக்கு ஒரே லக்னம் தான். இந்தியாவில் நிமிடத்துக்கு 4 குழந்தை பிறக்கிறது. 120 நிமிடத்துக்கு 480 குழந்தைகள் ஒரே லக்னத்தில் ஒரே ஜாதகத்தில் பிறக்கின்றன. ஆனால் 480 சூப்பர் ஸ்டார்களோ, 480 சச்சின் டெண்டுல்கர்களோ இல்லை. இதற்கு காரணம் என்ன?
    (நமக்குனு ஒரு குன்ஸு இருக்குங்கண்ணா . நீங்க அஃபிஷியலா,தியரிட்டிக்கலா எத்தனையோ மேட்டர் சொல்றிங்க இந்த மேட்டர்ல என்ன சொல்றிங்க பார்க்கலாமேனு ஒரு ...இது)

நல்ல கேள்வி சித்தூர் முருகேசன். நீங்கள் தொழில்முறை ஜோதிடர். ஜோதிட ஆய்வாளர். செய்தித்துறையில் இருக்கிறீர்கள். இரண்டு மொழிகளில் பாண்டித்துவம் மிக்கவர். (தமிழ், தெலுங்கு) நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கலாமா? நான் என்ன சொல்வேன் என்று பார்க்க இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். சரிதான். உங்களின் ஆர்வம் வாழ்க! வளர்க!

நீங்கள் சொல்லும் (480) குழந்தைகள் எல்லாம் குவியலாக ஒரே ஜாடியில் ஜனிப்பதில்லை. அதாவது ஒரே இடத்தில் பிறப்பதில்லை. இந்தியா எத்தனை பெரிய தேசம். அட்ச ரேகை, தீர்க்க ரேகை, இந்தியப் பொது நேரம், உள்ளூர் நேரம் என்ற கணக்கெல்லாம் எதற்கு இருக்கிறது?

இந்திய நேரப்படி 9:30 மணி என்றால், அந்த நேரத்தில் கான்பூரில் மணி ஒன்பதரை.. கொல்கத்தாவில் மணி பத்து. மும்பையில் மணி  ஒன்பது மட்டுமே. அந்த ஷணத்தில் இந்த 3 ஊர்களிலும் பிறக்கும் குழ்ந்தைகளின் ஜாதகம் மாறுபடாதா?

சென்னைக்கும், கோவைக்கும் 13 நிமிடங்கள் வித்தியாசம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த இரு ஊர்களிலும் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் வேறு படாதா?

அட்ச ரேகை, தீர்க்க ரேகைகள்:
சென்னைக்கு: 13.04' N, 80.17' E. .
கோவைக்கு:  11.00' N. 77.00' E

3.17 பாகைகள் வித்தியாசம்தான் 13 நிமிடங்களை வேறுபடுத்துகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மற்ற ஊர்களுக்குத் தெரிந்துகொள்ள இங்கே சுட்டி உள்ளது.

நாடி முறையில் 150 நாடிகள் உள்ளன. அவற்றையும் இரண்டாகப் பிரிக்கலாம். பூர்வ நாடி. உத்திர நாடி. ஆக மொத்தம் 300 பிரிவுகள். அவற்றின் அளவுகள் ஒரே மாதிரியானவை அல்ல! அவற்றை மேலும் பிரித்தால் 8 விநாடிகளுக்கு ஒரு நாடி வரும் (விநாடி என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்கவும்). சுருக்கமாகச் சொன்னால், எட்டு விநாடிகள் வித்தியாசத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகளின் ஜாதகம்/வாழ்க்கை வெவ்வேறாக இருக்கும்.

(The concept of Cuspal Interlinks Theory is basically the concept of Nadiamsha. In Nadi system  there are 150 nadis and each has been divided into two parts- Purva and Uttara. The prediction for the native born in purva of a naadi is quite different from that of Uttara. In Nadi astrology smallest nadiamsa is of 1 minute 40 seconds and the largest one is of 30'. While in Sub-Sub theory, smallest Sub-Sub arc is of 2' and the largest Sub-Sub arc is of 22.2'. Thus, the division in Cuspal Interlinks Theory is very close to that of Nadiamsha. Since 15" arc of Ascendant rises on the eastern horizon in 1 second change of time. So the Ascendant's arc of 2" (smallest arc in Sub-Sub theory) will rise in approximately 8 seconds. It means the nativity of two individuals, born in the interval of 8 seconds (in case of smallest arc), will be totally different. Like Nadiamsha theory as to with division of a Nadiamsha in purva and uttara, here also the sub-sub arc of Ascendant is divided into two parts - former part and later part. Former part in male sign indicates Male native while later part in male sign indicates Female native. While later part in female sign indicates Male and Former Part in Female sign indicates Female. So, if a male native has to take birth while the smallest arc of ascendant is rising (for example only) in a male sign, he will have to take birth in the former part i.e. up to 4 seconds change of time. This is why, in Sub-Sub Theory , nativity of an individual always tends to be unique to specify uniqueness of native and horoscope prepared is supposed to simulate the destiny of native)
நீங்கள் ஜோதிடர்களை மடக்கும் விதமாக, “அந்த எட்டு வினாடிகளுக்குள், ஒரே மருத்துவமனையில் இரண்டு வெவ்வேறு அறைகளில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் எப்படி இருக்கும்?” என்று கேட்கலாம்.

அதற்கும் பதில் இருக்கிறது. அந்த ஜாதகங்களுக்கு இணையான ஜாதகங்கள் (parallel horoscopes) என்று பெயர். இருவரது வாழ்க்கையும் ஒன்று போலவே இருக்கும். இவனும் எட்டாவது வரையே படித்திருப்பான். அவனும் எட்டாவது வரையே படித்திருப்பான். இவனும் கூலித் தொழிலாளியாக வேலை பார்ப்பான். அவனும் கூலித் தொழிலாளியாக வேலைபார்ப்பான். இவனும் 48 வயதில், மனைவி இரண்டு குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டு மாண்டு போவான். அவனும் 48 வயதில், மனைவி இரண்டு குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டு மாண்டு போவான்.

இணையான ஜாதகங்களின் வாழ்க்கை வேறுபடாதா? ஒரே மாதிரியாகத்தான் இருக்குமா?

பூர்வ புண்ணியத்தை வைத்து, சில குறிப்பிடும்படியான வேறுபாடுகள் இருக்கும். வாழ்க்கை வசதிகள், குடும்பப் பாசம் போன்றவை வேறு படலாம். அதெல்லாம் பூர்வ புண்ணியக்கணக்கில் வரும். அதைக் கணித்துச் சொல்ல எந்தக் கொம்பனுக்கும் சக்தி கிடையாது. அது தர்ம, கர்மக் கணக்கு.

ஒரே ஷணத்தில் பிறந்த இருவரில் ஒருவன் Citi Bankல் வேலை பார்ப்பான். இன்னொருவன் உள்ளூர் கோ-ஆப்பரேடிவ் வங்கியில் வேலை பார்ப்பான். வாங்கும் சம்பளத்தால் இருவருடைய வாழ்க்கைத் தரமும் வேறுபடும்.

ஒருவன் Times of India நாளிதழில் செய்தி ஆசிரியராக வேலைபார்ப்பான். இன்னொருவன் சிவகாசி போன்ற சிற்றூர்களில் இருந்து வெளியாகும் சிறு நாளிதழில் வேலை பார்ப்பான். ஒருவன் மணி ரத்தினத்திடம் உதவியாளனாக வேலை பார்ப்பான். இன்னொருவன் உப்புமா இயக்குனர் ஒருவரிடம் உதவியாளனாக வேலை பார்ப்பான். இந்த வித்தியாசம் எல்லாம் பூர்வ புண்ணியம் செய்யும் ஜகஜால வேலை.

விளக்கம் போதுமா அன்பரே?

இல்லை என்றால், மீண்டும் வருகிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அறிவிப்பு:

   “வாத்தியார் முன்னதாகவே கேள்வி பதில் வகுப்பைத்
துவங்கிவிட்டாரே” என்று யாரும் நினைக்க வேண்டாம்.
1.8.2010 ஞாயிறன்று வகுப்பறை மாணவர் ஒருவரின்
‘நீங்காத நினைவுகள்’ கட்டுரை வெளியாக உள்ளது,
யாருடையது அது? என்கிறீர்களா? பதிவைப் பார்த்துத்
தெரிந்து கொள்ளுங்கள். அதுவரை அது சஸ்பென்சாகவே
இருக்கட்டும்.

சஸ்பென்ஸ் இல்லை யென்றால் வாழ்க்கை சுவைக்காது.

அத்துடன் 2.8.2010 அன்று வாத்தியார் வெளியூர்ப் பயணம். அன்று
வகுப்பிற்கு விடுமுறை. ஆகவேதான் உங்களுடைய ஏமாற்றத்தைத்
தவிர்க்கும் முகமாகக் கேள்வி பதில் வகுப்பு இன்றே துவங்கியுள்ளது. கேள்விகள் நிறைய வந்துள்ளன. ஒவ்வொன்றாக வலயேறும்.
அடுத்த கேள்வி பதில் வகுப்பு 3.8.2010 செவ்வாயன்று.
அனைவரும் பொறுத்திருந்து படிக்கவும்!
----------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

28 comments:

Alasiam G said...

வகுப்பறை ஒரு பூந்தோட்டம்
மஞ்சரிகலாம் மாணாக்கர்கள்,
சஞ்சலமில்லை, சலிப்பில்லை
மஞ்சங்கமிக்கும் நண்பர்களுக்கு பஞ்சமில்லை.
வஞ்சமில்லை மாறாக நல்ல நெஞ்சமுண்டு
தஞ்சமென்று வந்தோருக்கு வகுப்பறையில்
மஞ்சமுண்டு அறிவை கருவாக்க.......
கத்தார் கண்ணன்,
சித்தூர் முருகேசன் - கோயம்
புத்தூர் வாத்தியார்
நல்ல பல கேள்விகளுக்கு
நயம்பட உரைத்த பதில்கள்.
நன்றிகள் யாவருக்கும்.

"திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா"
திட்டிய திட்டுக்கு மெட்டொன்று போட்டுவிட்டால் இன்னும்
திட்டு பல கொட்டாமல், தட்டு முட்டு சாமான்களும் முட்டிக்கொல்லுமா?
நன்றிகள் குருவே!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
"திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகுமா"
திட்டிய திட்டுக்கு மெட்டொன்று போட்டுவிட்டால் இன்னும்
திட்டு பல கொட்டாமல், தட்டு முட்டு சாமான்களும் முட்டிக்கொள்ளுமா?
நன்றிகள் குருவே! /////


திட்டிற்கு மெட்டுப் போடச் சொல்வீர் - பின்
பட்டிற்குப் பணம் கொட்டச் சொல்வீர்
வட்டியின்றி பணம்கிடைக்கும் வழியைச் சொன்னால்
மட்டில்லா மகிழ்ச்சி கொள்வார் மாந்தரெல்லாம்!

iyer said...

நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலையும் மாறி இப்போ . . நாமே இருவர் நமக்கு ஏன் ஒருவர் என்ற நிலையில் . .

குடும்பம் 4க்குள் என்றீர் . .

ஆனால் உங்கள் குடும்பம் மிகப் பெரிது . .

ஒரு ஆசிரியர் . . ஓராயிரம் மாணவர்கள் . .

M. Thiruvel Murugan said...

ஐயா வணக்கம்...!
கேள்வி-பதில் பகுதி அருமை.. குறிப்பாக சித்தூர் முருகேசன் அவர்களின் கேள்விக்கு தங்கள் பதில் மிகவும் Discriptive and Informative. அவரிடம் இருக்கும் "குன்சு" என்னவென்று சொன்னால் அதையும் நாங்கள் தெரிந்துகொள்வோம்...

மிக்க நன்றிகளுடன்
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்

Alasiam G said...

ஐயா! திட்டாங்கு கொட்டியதுவும் பட்டினாலன்றோ!
துட்டுக்கு வழி சொன்னீர் அதுவும் வட்டியில்லா
துட்டுக்கு வழி சொன்னீர் என்றால்
கிட்டுக்கும் தன் பட்டுக்காக, மெட்டுப்போட தட்டுப்பாடு இருக்காது
சட்டெனவே பட்டாம் பூச்சி பிறக்க நடக்கும் அங்கே ஏற்பாடு - எங்கே
பட்டுப் போகுமோ சந்ததி என்று மனம் விட்டுப்போன
வீட்டுப் பெருசுகளின் மனச்சுமை கட்டவிழ்ந்துவிடும் பிற்பாடு.

SP.VR. SUBBAIYA said...

/////iyer said...
நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலையும் மாறி இப்போ . . நாமே இருவர் நமக்கு ஏன் ஒருவர் என்ற நிலையில் . .
குடும்பம் 4க்குள் என்றீர் .
ஆனால் உங்கள் குடும்பம் மிகப் பெரிது .
ஒரு ஆசிரியர் . . ஓராயிரம் மாணவர்கள் . ./////

ஆமாம். அன்பு, பாசம். விசுவாசத்திற்கு குறையொன்றும் இல்லாத குடும்பம். இதைப்போல ஒரு குடும்பத்தை நீங்கள் வேறு எங்கும் காண முடியாது சுவாமி!

SP.VR. SUBBAIYA said...

////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்...!
கேள்வி-பதில் பகுதி அருமை.. குறிப்பாக சித்தூர் முருகேசன் அவர்களின் கேள்விக்கு தங்கள் பதில் மிகவும் Discriptive and Informative. அவரிடம் இருக்கும் "குன்சு" என்னவென்று சொன்னால் அதையும் நாங்கள் தெரிந்துகொள்வோம்...
மிக்க நன்றிகளுடன்
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன் ////

உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால், அவர் அந்தக் “குன்சு” என்ன என்பதைச் சொல்வார் என்று நினைக்கிறேன்.. பொறுத்திருங்கள்!!

kannan said...

ஐயாவின் ஆசியுடன் மீண்டும் வகுப்பில் மாணவன்.
வாழ்க்கையே எதார்த்தமானது என்பதனை நிருபித்து விட்டீர்கள் ஐயா
அருமை! அடியவனின் ஐயப்பாட்டை தீர்த்த விதம் அதனிலும் அருமை!
நாங்கள் வாழும் நாட்டில் தற்பொழுதும் 5 அல்லது 6 குழந்தைகள் என்பது எல்லாம் சர்வ சாதாரணம் ஐயா.
சக்தி உள்ளவர்களின் திறமையை வரவேற்பது தானே சாலச்சிறந்தது ஐயா.

SP.VR. SUBBAIYA said...

//////Alasiam G said...
ஐயா! திட்டாங்கு கொட்டியதுவும் பட்டினாலன்றோ!
துட்டுக்கு வழி சொன்னீர் அதுவும் வட்டியில்லா
துட்டுக்கு வழி சொன்னீர் என்றால்
கிட்டுக்கும் தன் பட்டுக்காக, மெட்டுப்போட தட்டுப்பாடு இருக்காது
சட்டெனவே பட்டாம் பூச்சி பிறக்க நடக்கும் அங்கே ஏற்பாடு - எங்கே பட்டுப் போகுமோ சந்ததி என்று மனம் விட்டுப்போன
வீட்டுப் பெருசுகளின் மனச்சுமை கட்டவிழ்ந்துவிடும் பிற்பாடு./////

உங்களின் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

//////kannan said...
ஐயாவின் ஆசியுடன் மீண்டும் வகுப்பில் மாணவன்.
வாழ்க்கையே எதார்த்தமானது என்பதனை நிருபித்து விட்டீர்கள் ஐயா
அருமை! அடியவனின் ஐயப்பாட்டை தீர்த்த விதம் அதனிலும் அருமை!
நாங்கள் வாழும் நாட்டில் தற்பொழுதும் 5 அல்லது 6 குழந்தைகள் என்பது எல்லாம் சர்வ சாதாரணம் ஐயா.
சக்தி உள்ளவர்களின் திறமையை வரவேற்பது தானே சாலச்சிறந்தது ஐயா.////////

உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி கண்ணன்!

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களூக்கு,
கெள்வி பதில் பகுதி சிறப்பாகத் தொடஙகப்பெற்று நல்ல விளக்கமான பதில்களுடன் நன்றாக புரியும்படியும் உள்ளது.
நன்றி
வணக்கம்
தஙகள் அன்புள்ள மாண்வன்
வ.தட்சணாமூர்த்தி
2010 07 29

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களூக்கு,
கெள்வி பதில் பகுதி சிறப்பாகத் தொடஙகப்பெற்று நல்ல விளக்கமான பதில்களுடன் நன்றாக புரியும்படியும் உள்ளது.
நன்றி
வணக்கம்
தஙகள் அன்புள்ள மாண்வன்
வ.தட்சணாமூர்த்தி/////

சுணக்கம், பிணக்கம் எதுவும் இல்லாத முதல் பெஞ்ச் மாணவர் தட்சணாமூர்த்தி அவர்களே!
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

தமிழ்மணி said...

வாத்தியாரையா,

ஜோதிடத்தின் பிரமாண்டம் என்று நீங்கள் முன்பு கொடுத்த பதிவும் இன்றைய அண்ணன் சித்தூர் முருகேசன் அவர்களின் கேள்விக்கான பதில் பதிவும் ஜோதிடத்தின் பிரமாண்டத்தை கண் முன் காட்டுகின்றன.... அய்யா

Arulkumar Rajaraman said...

Dear Sir

Kelviyum Badhilum Arumai.
you have lot of information irundhalum Adakkama Badhil Solluvadhu Namadhu Aiyyavinal than mudiyum...

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களூக்கு,

என்னை முதல் பெஞ்ச் மாணவனாக மாற்றியமைக்கு நன்றி
வணக்கம்
தஙகள் அன்புள்ள மாண்வன்
வ.தட்சணாமூர்த்தி
2010 07 29

Ram said...

Dear Sir,

Starting with a real big bang answers to the question. thanks for the same.

with regards

SP.VR. SUBBAIYA said...

//////தமிழ்மணி said...
வாத்தியாரையா,
ஜோதிடத்தின் பிரமாண்டம் என்று நீங்கள் முன்பு கொடுத்த பதிவும் இன்றைய அண்ணன் சித்தூர் முருகேசன் அவர்களின் கேள்விக்கான பதில் பதிவும் ஜோதிடத்தின் பிரமாண்டத்தை கண் முன் காட்டுகின்றன.... அய்யா/////

கற்றது கைமண் அளவு - ஒளவையார்

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Kelviyum Badhilum Arumai.
you have lot of information irundhalum Adakkama Badhil Solluvadhu Namadhu Aiyyavinal than mudiyum...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

“அடக்கம் ஆமரருள் உய்க்கும்” - பொய்யாமொழிப் புலவர்

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களூக்கு,
என்னை முதல் பெஞ்ச் மாணவனாக மாற்றியமைக்கு நன்றி
வணக்கம்
தஙகள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

“நீ எங்கே என் நினைவுகள் அங்கே” - கவியரசர் கண்ணதாசன்

SP.VR. SUBBAIYA said...

/////Ram said...
Dear Sir,
Starting with a real big bang answers to the question. thanks for the same.
with regards//////

“தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!” - கவியரசர் கண்ணதாசன்

ramaswamy said...

ஐயா வணக்கம்!

நான் தங்களின் புதிய மாணவன்!
தங்களின் பதிப்பை வாசித்து வசியமானவன்!
தங்களின் சீரிய பணி தொடர வழ்த்துகள்!

கோவை ராமசாமி.

SP.VR. SUBBAIYA said...

/////ramaswamy said...
ஐயா வணக்கம்!
நான் தங்களின் புதிய மாணவன்!
தங்களின் பதிப்பை வாசித்து வசியமானவன்!
தங்களின் சீரிய பணி தொடர வழ்த்துகள்!
கோவை ராமசாமி. //////

கோவைக்காரர்களுக்கு (தங்கள் கொங்கு மொழிப் பேச்சால்) மற்றவர்களை வசியப்படுத்தித்தானே பழக்கம்!
நீங்கள் வசியப்பட்டது வியப்பான செய்திதான்! நன்றி நண்பரே!

ananth said...

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. கேள்வி பதில் அங்கம் இதைத்தான் கூறுகிறது போலும்.

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு. யாருடைய எண்ணம் என்று வரும் ஞாயிறன்று தெரிந்து விடும். வாத்தியார் பின்னூட்டத்திற்கு பாடல் மூலமாக பதில் சொன்னது போல் நானும் 2 பாடல்களை வைத்து பின்னூட்டம் இட்டு விட்டேன்.

SP.VR. SUBBAIYA said...

/////ananth said...
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. கேள்வி பதில் அங்கம் இதைத்தான் கூறுகிறது போலும்.
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு. யாருடைய எண்ணம் என்று வரும் ஞாயிறன்று தெரிந்து விடும். வாத்தியார் பின்னூட்டத்திற்கு பாடல் மூலமாக பதில் சொன்னது போல் நானும் 2 பாடல்களை வைத்து பின்னூட்டம் இட்டு விட்டேன். ////

நன்றி சொல்வேன் உங்களுக்கு
நல்வரிகளில் பின்னூட்டம் தந்ததற்கு!

ARASU said...

அய்யா வணக்கம்.
நல்லவளாக வாய்க்கும் இல்லாளும் பின்னர் "வாய்மொழித்திட்டாளாய் "மாறுவது
எதனால்?அவளுடைய ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் தீய கிரகங்கள் நின்று
இரண்டுக்கு உரிய கிரகம் 6,8,12 ல் மறைந்தாலும்,தீய கிரகங்களின் திசை புத்திகள் நடந்தாலும் வாயில் இருந்து வசவுகளாகவே வருமோ? அய்யாவின் விளக்கம் தேவை.
அரசு.

ஜீவா said...

அன்பு அய்யாவுக்கு வணக்கம்,
தங்களுடைய பதில்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும், எல்லோரும்
புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் உள்ளது.

அய்யா குழந்தை கருவில் இருக்கும் பொழுது தாயால் வெறுக்கபட்டால்(ஏதோ ஒரு காரணத்தால்),
அந்த குழந்தை பிறந்தவுடன், எல்லோராலும் வெருக்கபடும் என்ப‌து உண்மையா?
அன்புடன் ஜீவா

SP.VR. SUBBAIYA said...

/////ARASU said...
அய்யா வணக்கம்.
நல்லவளாக வாய்க்கும் இல்லாளும் பின்னர் "வாய்மொழித்திட்டாளாய் "மாறுவது
எதனால்?அவளுடைய ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் தீய கிரகங்கள் நின்று
இரண்டுக்கு உரிய கிரகம் 6,8,12 ல் மறைந்தாலும்,தீய கிரகங்களின் திசை புத்திகள் நடந்தாலும் வாயில் இருந்து வசவுகளாகவே வருமோ? அய்யாவின் விளக்கம் தேவை.
அரசு.//////

எல்லாவற்றிற்கும் கணவன்மார்களே காரணம். சும்மா இருக்கும்போது யாரும் அடிப்பார்களா? திட்டமுடியாதபடி நீங்கள் gentleman ஆக இருங்கள். அதுதான் ஒரே வழி!. தவிர்க்க, வேறு சில வழிகள் இருக்கின்றன. அவற்றைப் பதிவில் எழுத முடியாது.

SP.VR. SUBBAIYA said...

////ஜீவா said...
அன்பு அய்யாவுக்கு வணக்கம்,
தங்களுடைய பதில்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும், எல்லோரும்
புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் உள்ளது.
அய்யா குழந்தை கருவில் இருக்கும் பொழுது தாயால் வெறுக்கபட்டால்(ஏதோ ஒரு காரணத்தால்),
அந்த குழந்தை பிறந்தவுடன், எல்லோராலும் வெறுக்கபடும் என்ப‌து உண்மையா?
அன்புடன் ஜீவா/////

தாய் கருவுற்றிருக்கும்போது, தாய் பிரார்த்தனை, பாராயணம் என்றிருந்தால், குழந்தை ஞானத்துடன் பிறக்கும் என்பார்கள். நீங்கள் சொல்வதில் உண்மை இல்லை. எல்லோரும் வெறுக்கத் தகுந்த காரணம் வேண்டாமா?