மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.7.10

அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானல்லவா!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானல்லவா!

கவியரசர் கண்ணதாசன் இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள், வழக்கம்போல, காலை 9:30 மணிக்கு தன் அலுவலுக்குச் சென்றார். அதாவது திரைப்படம் ஒன்றிற்கு பாடல் புனையச் சென்றார்.

சென்றடைந்த இடம் மிகவும் பிரபலமான ஸ்டுடியோவின் ஒலியரங்கம். அதாவது ரெகார்டிங் தியேட்டர். முன்புறம் இருந்த ஹாலில், இசை யமைப்பாளர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்,
ஒரு ஷோபாவில் நீட்டிப் படுத்து, நல்ல நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.
வேறு எவரையும் காணோம். இவரை வரச் சொல்லியிருந்த அவர்
அதை மறந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

சுற்று முற்றும் பார்த்துவிட்டுத் தன் காருக்கே திரும்பினார் கவியரசர். அவரைக் கண்டு ஓடிவந்த எம்.எஸ்.வியின் உதவியாளர் கவியரசரின் காதில் மெல்லக் கிசுகிசுத்தார்  “அண்ணே, இரவு முழுவதும் ஒரு படத்திற்குப் பின்னணி இசை சேர்க்கும் வேலை. அது முடிவதற்குக் காலை ஆறு மணியாகிவிட்டது. அனைவரையும் வீட்டிற்குச் சென்றுவிட்டு பகல் பன்னிரெண்டு மணிக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, தலைவர் இங்கேயே படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டார்,,,”

  “அதனாலென்ன பரவாயில்லை!” என்று சொன்ன கவியரசர், காரின் டாஷ்போர்டில் இருந்த நோட்டுப் புத்தகத்தில் இருந்து ஒரு காகிதத்தைக் கிழித்து, அதில் இரண்டு வரிகளை எழுதி, “இதை விஸ்வநாதன் எழுந்த பிறகு கொடுத்து இதற்கு டியூன் போடச் சொல்லு, நான் ஒரு மணிக்கு மீண்டும் வருகிறேன். மீதி வரிகளை அப்போது எழுதித் தருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, எம்.எஸ்.வி எழுந்தவுடன், சீட்டு அவரிடம் சேர்க்கப்பட்டது.

சீட்டைப் பார்த்த எம்.எஸ்.வி புன்னகைத்தார்.

“அட, இது கூட நன்றாக இருக்கிறதே!” என்று சொன்னவர், அதற்கே அன்று மெட்டைப் போட்டு வைத்தார். கவியரசர் திரும்பி வந்தவுடன், அந்த வரிகளை வைத்தே பாடல் முழுமையாக எழுதப்பெற்று, பாடலும் பதிவானது. பிறகு படம் வெளியானவுடன், அந்தப் பாடல் மிகவும் பிரபலமடைந்தது.

கவியரசர் விளையாட்டாக எழுதிக் கொடுத்து, பிறகு பிரபலமான அந்த வரிகள் இதுதான்:

  “அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...
      அகப்பட்டவன் நான் அல்லவா”


முழுப் பாடலையும் தெரிந்து கொள்ள விரும்புவோர் இங்கே அழுத்தி அதைத் தெரிந்து கொள்ளலாம்.
----------------------------------------------------------------------------------
நாம் விரும்பிப் பிறக்கவில்லை. நம் பிறப்பும் நம்மைக்கேட்டு அரங்கேற்றப் படவில்லை. மற்றவர்களைப் பார்க்கும்போது, நம் பிறவியில் உள்ள, நம் வாழ்க்கையில் உள்ள அவலங்கள், கஷ்ட நஷ்டங்கள் நமக்குத்  தெரிகின்றன.

“என்ன நினைத்து என்னைப் படைத்தான் ஆண்டவன் என்பவனே” என்று பாடும் நிலைமையில்தான் பலரின் வாழ்க்கை இருக்கிறது.

கவியரசரின் பாடல் வரிகளை, நாம் இப்படிச் சற்று மாற்றி எழுதினால், நம் வாழ்க்கைக்குச் சரியாக இருக்கும்

“அவனுக்கென்ன எழுதி விட்டான்
   அகப்பட்டவன் நான் அல்லவா?”


ஆமாம், நம் தலை எழுத்தைக் காலன் எழுதி வைத்து விட்டுப் போய்விட்டான். அல்லது எழுதி நம்மை இங்கே அனுப்பிவிட்டான். அகப்பட்டுக்கொண்டு அல்லாடுவது நாமல்லவா?

மனிதர்களில் முழுமையான சந்தோஷத்துடன் இருப்பவர்கள், முழுமையான திருப்தியுடன் இருப்பவர்கள் எவருமே இல்லை. இருந்தால் அவர்கள் ஞானிகள் லிஸ்ட்டிற்குச் சென்று விடுவார்கள். எலும்பும் சதையும், அல்லாடும் இதயமும் கொண்ட மனிதர்களாக இருக்க முடியாது.

ஞானிகள் கூட பூரண ஆயுளுடன் வாழ்ந்தவர்கள் கிடையாது. மத்திம வயதில் புட்டுக் கொண்டவர்களே அதிகம். பூரண ஆயுளுடன் வாழ்ந்த ஞானிகள் சிலரைக்கூட மரணம் சந்தோஷமாகத் தழுவியதில்லை. ரமண மகரிஷி, யோகிராம் சுரத்குமார் போன்ற சில மகான்கள் கூட இறுதிக் காலத்தில் புற்று நோய் வந்து சிலமாதங்கள் சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்ட பிறகுதான் இயற்கை எய்தினார்கள்.

மரணமும், மரணம் வரும் வழியும், மரணம் பயன்படுத்தும் ஆயுதமும் யாரையும் விட்டு வைப்பதில்லை. யாரும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம். பொறுமையாகப் படித்துக்கொண்டு வாருங்கள்!
+++++++++++++++++++++++++++++++
மத்திம ஆயுள்

முன்பே எழுதியுள்ளேன். மத்திம ஆயுள் என்பது 32ற்கு மேல், 60 - 64 வயதுவரை உயிரோடு இருக்கும் அமைப்பு. எனது உறவினர்களில் சிலர் (மொத்தம் ஆறு பேர்கள்) 40  - 50 வயதிற்குள் இறந்திருக்கிறார்கள்.  40 - 50 வயது காலக்கட்டம் என்பது ஒரு கண்டம்தான்.

ஐம்பதைத் தாண்டிவிட்டால், வண்டி சுலபமாக அறுபதுவரை ஓடிவிடும். அதற்குப் பிறகு மக்கர் பண்ணலாம். அது வாங்கி வந்த வரம் கணக்கில் வரும்.

1. எட்டாம் வீட்டில் வீட்டில் சனியைத் தவிர பாபகிரகங்கள் இருந்தால், அதுவும் சுபக் கிரகங்களின் பார்வை இன்றி இருந்தால் மத்திம ஆயுள்

2. ஆறு, மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தால் மத்திம ஆயுள்தான்.

3. லக்கினத்தில் சந்திரன் இருந்து கூட்டாக பாப கிரகங்கள் இருந்தால் அந்த அமைப்பு மத்திம ஆயுளையே கொடுக்கும்.

4. லக்கினத்தில் செவ்வாய் இருந்து, அத்துடன் சுபக்கிரகத்தின் பார்வை இன்றி இருப்பதுடன், 6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும் மத்திம ஆயுளையே கொடுக்கும்

5. லக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவற்றில் பாவிகள் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை இல்லா விட்டாலும் மத்திம ஆயுள்தான்.

6. எட்டாம் அதிபதி கேந்திரத்தில் இருக்க, உடல்காரகன் சூரியனும், ஆயுள்காரகன் சனியும் கூட்டாக 3ஆம் வீடு அல்லது ஆறாம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு மத்திம வயது.

7. லக்கினாதிபதி பலமின்றி இருப்பதுடன், 6, 8, 12 ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, லக்கின அதிபதியுடன் ஒரு தீய கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் ஜாதகனுக்கு மத்திம வயது.

8. சனியும், குருவும் பலமின்றி இருந்து, ஜாதகத்தில் 6, 8, 12 ஆம் வீடுகளிலும், கேந்திரங்களிலும், பாவ கிரகங்கள் குடியிருந்தால் ஜாதகனுக்கு மத்திம வயது.

9. சனி ஆறாம் வீட்டிலும், பாவ கிரகங்கள் எட்டாம் வீட்டிலும் இருக்கும் நிலைமை ஜாதகனுக்கு மத்திம வயதையே கொடுக்கும்.

10.  2, 3, 4, 5, 8 & 11 ஆகிய ஆறு வீடுகளில் தீய கிரகங்கள் குடியிருந்தால், அந்த அமைப்பு ஜாதகனுக்கு மத்திம ஆயுளையே கொடுக்கும். (வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று மட்டுமே நவக்கிரகங்களில் சுபக்கிரகங்கள். ஆயுளைப் பொறுத்தவரை மற்ற ஆறும்  அசுபர்களே!)

11. லக்கினம், மற்றும் சந்திர ராசி எந்த கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வையும் இன்றி இருப்பதுடன். எட்டாம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை என்றால் அது ஜாதகனுக்கு மத்திம வயதையே கொடுக்கும்.

இவை எல்லாமே பொது விதிகள். லக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவற்றின் மொத்த பலன்களை வைத்து (அஷ்டகவர்க்கம் மூலம் அது தெரியும்) இது மாறுபடும். ஆகவே பொது விதிகளை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம்.

மத்திம வயதிற்கு இன்னும் சில விதிகள் உள்ளன. நான் முக்கியமான வற்றையே உங்களுக்குத் தந்துள்ளேன். விவரமாக அவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற
நூல்களைப் படிக்கலாம். படித்துப் பயன் பெறலாம்.

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

18 comments:

  1. யானை இடம் நன்றி வைத்தான்
    காக்கை இடம் உறவு வைத்தான்
    மான்களுக்கும் மானம் வைத்தான்
    மனிதனுக்கு என்ன வைத்தான் ?
    மனிதனுக்கு என்ன வைத்தான் ?
    அற்புத வரிகள்.....

    "மனிதனுக்கு பணம் என்னும்
    பகடையில் ஆடும் குணம் வைத்தான்;
    பாழாய்ப்போன மனிதனும்,
    பணத்திற்காக நன்றி, உறவு, மானம்
    அத்தனையும் அடகு வைத்தான்"

    பாடத்திற்கு நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. கடந்த சில நாட்கள் எனது broadband connectionல் பிரச்சினை. வகுப்பறைக்கு விடுமுறை போட வேண்டியதாகி விட்டது. சில வேலைகள் தடங்கலாகி விட்டது.

    ReplyDelete
  3. முதல் 20 இருள் நிலை . . (அறியாபருவம்)
    அடுத்த 20 மருள் நிலை . .
    (மயங்கும் பருவம்)
    அடுத்த 20 தெருள் நிலை . .
    (தெளியும் பருவம்)
    அடுத்த 20 பொருள் நிலை . .
    (சிவ பரம் பொருளுடையம் பருவம்)


    இப்படி வாழ்வு அமைவதனை
    புரிந்து கொள்பவர்கள் . .
    அப்பர் சுவாமிகள் சொல்வது போல்

    இன்பமே எந்நாளும் துன்பமில்லை என
    மகிழ்ச்சியுடன் வாழலாம் . .

    இல்லையா வாத்தியார் அய்யா . .

    ReplyDelete
  4. நன்றி அய்யா
    பாவக மாற்றம் குறித்த தங்களின் பதிவை எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  5. /////Alasiam G said...
    யானை இடம் நன்றி வைத்தான்
    காக்கை இடம் உறவு வைத்தான்
    மான்களுக்கும் மானம் வைத்தான்
    மனிதனுக்கு என்ன வைத்தான் ?
    மனிதனுக்கு என்ன வைத்தான் ?
    அற்புத வரிகள்.....
    "மனிதனுக்கு பணம் என்னும்
    பகடையில் ஆடும் குணம் வைத்தான்;
    பாழாய்ப்போன மனிதனும்,
    பணத்திற்காக நன்றி, உறவு, மானம்
    அத்தனையும் அடகு வைத்தான்"
    பாடத்திற்கு நன்றிகள் குருவே!////////

    பகடையில் ஆடும் குணம் இப்போது பங்குச் சந்தையில் ஆடும் குணமாகிவிட்டது, ஆலாசியம்! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  6. ////ananth said...
    கடந்த சில நாட்கள் எனது broadband connectionல் பிரச்சினை. வகுப்பறைக்கு விடுமுறை போட வேண்டியதாகி விட்டது. சில வேலைகள் தடங்கலாகி விட்டது.//////

    அதனாலென்ன? விடுபட்டவைகளைச் சேர்த்துப்படித்துவிடுங்கள் ஆனந்த்!

    ReplyDelete
  7. /////iyer said...
    முதல் 20 இருள் நிலை . . (அறியாபருவம்)
    அடுத்த 20 மருள் நிலை . .
    (மயங்கும் பருவம்)
    அடுத்த 20 தெருள் நிலை . .
    (தெளியும் பருவம்)
    அடுத்த 20 பொருள் நிலை . .
    (சிவ பரம் பொருளுடையம் பருவம்)
    இப்படி வாழ்வு அமைவதனை
    புரிந்து கொள்பவர்கள் . .
    அப்பர் சுவாமிகள் சொல்வது போல்
    இன்பமே எந்நாளும் துன்பமில்லை என
    மகிழ்ச்சியுடன் வாழலாம் . .
    இல்லையா வாத்தியார் அய்யா . .////

    உண்மைதான் நண்பரே! நன்றி!

    ReplyDelete
  8. /////NandaKumar said...
    நன்றி அய்யா
    பாவக மாற்றம் குறித்த தங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன்//////

    பாகவ மாற்றமா? அப்படியென்றால் என்ன? அதைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  9. //பாகவ மாற்றமா? அப்படியென்றால் என்ன? அதைச் சொல்லுங்கள்//
    ராசி கட்டத்தில் ஒரு இடத்தில உள்ள graham பாவம் கட்டத்தில் வேறு இடத்தில மாறியிருப்பது பாவக மாற்றம் இது குறித்து இந்த குறை குடத்திற்கு தெரிந்தது அவளவு தான் இதற்கு மேல் நிறைகுடமாகிய நீங்கள் தான் விளக்க வேண்டும் .
    பாவம் கட்டமா அது என்ன என்று கேட்டுவிடாதீர் அய்யா

    ReplyDelete
  10. Dear sir,
    Lesson on longeivity is good. I have a doubt. There are several ayanamsa (Lahiri(Chitrapaksha),Raman,Krishnamurthy, Zero Ayanamsa, Fagen-Allen (User defined)) to predict a horoscope. If I predict a horoscope according to the above said, the nakshathra patha as well as lagna varies by each one ayanamsa. As nakshathra patha varies by each ayanamsa, the rasi as well as navamsa chart varies. In account of this, I find it difficult to judge a horoscope (Bhavas are varying). Most of the astrologers follow Lahiri ayanamsa, if it so what is the reason? Could you please clarify my doubt? Sir,I request you to write about ayanamsa, because, based based on that only a horoscope is written.
    Thanks sir,
    J.SENDHIL

    ReplyDelete
  11. Yes Sir,
    Ithai ithai ithaiththaan naan ethirpaarththen. Nandri.
    Ithepol innum vanthaal migavum nandraaga irukkum.
    Kaviyarasar kaviyarasar thaan.Avarai minja aal kidaiyaathu.
    Nandri

    ReplyDelete
  12. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    "மத்திம ஆயுள்"- தொடர்பான பொது விதிகள்
    தெளிவாகவும், எளிதில் புரியும்படியாகவும் உள்ளது.
    நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-19

    ReplyDelete
  13. ///////Nandagopal said...
    Yes Sir,
    Ithai ithai ithaiththaan naan ethirpaarththen. Nandri.
    Ithepol innum vanthaal migavum nandraaga irukkum.
    Kaviyarasar kaviyarasar thaan.Avarai minja aal kidaiyaathu.
    Nandri//////

    நல்லது. நன்றி நந்தகோபால்!

    ReplyDelete
  14. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    "மத்திம ஆயுள்"- தொடர்பான பொது விதிகள்
    தெளிவாகவும், எளிதில் புரியும்படியாகவும் உள்ளது.
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  15. //////NandaKumar said...
    //பாகவ மாற்றமா? அப்படியென்றால் என்ன? அதைச் சொல்லுங்கள்//
    ராசி கட்டத்தில் ஒரு இடத்தில உள்ள graham பாவம் கட்டத்தில் வேறு இடத்தில மாறியிருப்பது பாவக

    மாற்றம் இது குறித்து இந்த குறை குடத்திற்கு தெரிந்தது அவளவு தான் இதற்கு மேல் நிறைகுடமாகிய நீங்கள்

    தான் விளக்க வேண்டும் .
    பாவம் கட்டமா அது என்ன என்று கேட்டுவிடாதீர் அய்யா/////

    ஜோதிடம் என்பது கடல் அதில் குடத்திற்கெல்லாம் வேலை இல்லை! பாவச்சக்கரம் என்று கேட்டிருக்க வேண்டும்

    நீங்கள். அதை விடுத்து பாகவமாற்றம் என்ற சொல்லைப் பயன் படுத்தினால் யாருக்கு என்ன தெரியும்? பாவச்

    சக்கரத்தைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது முதலில் பழைய பாடங்களை முறையாகப் படியுங்கள்!

    ReplyDelete
  16. //////dhilse said...
    Dear sir,
    Lesson on longeivity is good. I have a doubt. There are several ayanamsa (Lahiri

    (Chitrapaksha),Raman,Krishnamurthy, Zero Ayanamsa, Fagen-Allen (User defined)) to predict a horoscope. If I

    predict a horoscope according to the above said, the nakshathra patha as well as lagna varies by each one

    ayanamsa. As nakshathra patha varies by each ayanamsa, the rasi as well as navamsa chart varies. In account

    of this, I find it difficult to judge a horoscope (Bhavas are varying). Most of the astrologers follow Lahiri

    ayanamsa, if it so what is the reason? Could you please clarify my doubt? Sir,I request you to write about

    ayanamsa, because, based based on that only a horoscope is written.
    Thanks sir,
    J.SENDHIL///////

    முன்பே திருக்கணிதம் & வாக்கியப் பஞ்சாங்கங்கள் பற்றி எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது

    ReplyDelete
  17. 2 வது விதி கொஞ்சம் முட்டுகிற்து

    ReplyDelete
  18. /////kmr.krishnan said...
    2 வது விதி கொஞ்சம் முட்டுகிறது/////

    சில பொதுவிதிகள் முட்டத்தான் செய்யும். விதிவிலக்குகள் இருக்கும். அதையும் பாருங்கள் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com