+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் - பகுதி 2
இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் சுட்டி இங்கே!
------------------------------------------------------------------------------------------
கொடுக்கப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பொது விதிகள். ஜாதகத்தின் மற்ற அம்சங்களை வைத்து இவைகள் மாறுபடலாம். ஆகவே யாரும் குழம்ப வேண்டாம்.
18. எட்டில் கேது இருக்க, அவர் மீது சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், ஒன்றும் பிரச்சினை இல்லை. செவ்வாயின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை தற்கொலையில் முடியலாம்
19. லக்கினத்திற்கு 2ல் எட்டாம் அதிபதி இருக்க (அதாவது தன் வீட்டை நோக்கி இருக்க) லக்கினத்தில் சனியும், 3ல் கேது அல்லது ராகு இருக்கப் பிறந்த ஜாதகனின் முடிவு வலியுடையதாக இருக்கும்.(pain killer உபயோகித்து வலியைப் போக்க முடியாது)
20. மேஷ லக்கினத்திற்கு லக்கினாதிபதியும், எட்டாம் இடத்து அதிபதியும் ஒருவனே. அதாவது செவ்வாய் அந்த இரண்டு இடங்களுக்கும் அதிபதியாவார். அவர் அந்த ஜாதகத்தின் 12ஆம் வீட்டில், சூரியனுடன் (அஸ்தமனமாகி) இருந்தால், ஜாதகனின் மரணம் வலியுடையதாக இருக்கும்.
வலி என்பது, ஜாதகன் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்து, சிகிச்சையளைத்தும் பயனளிக்காமல் இறந்து போகும் நிலைமை. இந்த விபத்து என்பது வாகன விபத்து, தீ விபத்து அல்லது கலவரங்களில் கத்திக் குத்து, துப்பாக்கிச் சூடு போன்று எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதை மனதில் கொள்க! இது வலி என்று கூறப்படும் அனைத்திற்கும் பொதுவானதாகும்.
21. எட்டாம் அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருக்க - அதாவது 7ல் இருக்க, அவருடன் ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் கூட்டாக இருந்தால் மரணம் வலி உடையதாக இருக்கும்.
மரணத்தைப் பொறுத்தவரை, வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியவை தவிர மற்ற அனைத்துக் கிரகங்களுமே தீயவைகள்தான். அதிலும், செவ்வாய், ராகு, கேது ஆகியவைகள் முதல் நிலைத் தீயவர்கள். உங்கள் மொழியில் சொன்னால் Number one rascals!!
22. துலா லக்கின ஜாதகத்திற்கு 1 & 8ஆம் வீடுகளுக்கு உரியவர் சுக்கிரன். அவர் ஜாதகத்தில் எந்த இடத்திலாவது பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டிருந்தால், மரணம் இயற்கையானதாகவும், அமைதியானதாகவும் இருக்காது.
23. எட்டாம் வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் இருந்து, எட்டாம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருப்பதோடு, எட்டாம் அதிபதி சனியின் பார்வை பெற்றிருந்தால், மரணம் இயற்கையானதாகவும், அமைதியானதாகவும் இருக்காது.
24. பொதுவாக பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் வீடு அல்லது வீட்டுக்காரனால் ஜாதகனுக்கு நன்மை கிடைக்காது. எட்டாம் வீட்டிற்கும் அது பொருந்தும்.
25. ராகு, செவ்வாய், சனி ஆகிய 3 கிரகங்களும் 5ல் இருக்க அல்லது 5ஐப் பார்க்க, எட்டாம் அதிபதி நீசமாகி இருந்தால் ஜாதகன் விபத்தில் இறக்க நேரிடும்.
26. 3 & 6ஆம் வீட்டுக்காரர்கள் இருவரும் எட்டில் ஒன்றாக இருக்க, சனி & செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஆயுதத்தால் மரணம்.
27. எட்டாம் வீடு, எட்டாம் அதிபதி, சந்திரன் ஆகிய மூவரும் ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகனின்
மரணம் இயற்கையானதாகவும், அமைதியானதாகவும் இருக்காது.
28. எட்டாம் வீடு, எட்டாம் வீட்டுக்காரன் ஆகியவைகள், செவ்வாய், ராகு அல்லது கேதுவால் பாதிப்பிற்குள்ளாகி இருந்தால் மரணம் வலியுடையதாக இருக்கும்
29. சூரியனும், செவ்வாயும் பரிவத்தனையாகி, எட்டாம் அதிபருக்குக் கேந்திரத்தில் இருந்தால், ஜாதகனின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருக்கும்.
30. லக்கினாதிபதியும், எட்டாம் அதிபதியும் வலுவிலந்து இருப்பதோடு, ஆறாம் அதிபருடன் செவ்வாய் ஒன்றாக இருந்தால் ஜாதகன் யுத்தத்தில் அல்லது தெருச்சண்டையில் இறக்க நேரிடும். ஆயுதத்தால் கொல்லப்படுவன் அல்லது அடித்துக் கொல்லப்படுவான்.
31. லக்கினாதிபதி & எட்டாம் அதிபதி இருவரும் நீசம் பெற்றிருந்தால், ஜாதகனின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருக்கும் அல்லது வலி உடையதாக இருக்கும்.
32. 1ல் சனி, 7ல் ராகுவும் நீசம் பெற்ற சந்திரனும் இருக்க அமைந்துள்ள ஜாதகனின் மரணம் வலி உடையதாக இருக்கும்.
33. லக்கினத்தில் சனி தனித்திருக்க (அதாவது சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையின்றி இருக்கும் நிலைமை) சூரியன், ராகு, சந்திரன் ஆகிய மூவரும் ஒன்றாக இருந்தால் ஜாதகன் ஆயுதத்தால் கொல்லப்படுவான்.
34. சந்திரன் 6, 8, 12ஆம் வீடுகள் ஒன்றில் இருக்க, லக்கினாதிபதி, சனி அல்லது மாந்தி அல்லது ராகுவுடன் கூட்டாக இருக்கும் நிலைமையும் இயற்கைக்கு மாறான மரணத்தையே கொடுக்கும்.
இப்படிப் பல அமைப்புக்கள் இருக்கின்றன. தொடர்ந்து இன்னும் இரண்டு கட்டுரைகள் எழுதலாம். அடியவன் முக்கியமானவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன். நமது லெவலுக்கு இது போதும். அதாவது நமக்கு ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளது என்னும் நிலைமை மட்டுமே. நம்மில் யாரும் ஜோதிடராக ஆகப் போவதில்லை. அதுதான் நமது லெவல். ஆகவே இது போதும்.
இல்லை, மேலும் தெரிந்து கொள்ளப் பிடிவாதமாக இருப்பவர்களும், அல்லது விருப்பமுள்ளவர்களும், ஜெய்மானி (ஜெய்மினி) ஜோதிட நூலைத் தேடிப் பிடித்துப் படிக்கலாம்.
--------------------------------------------------------------------------------
கல்வி, மருத்துவம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மத் தொழில். காசு வாங்கிக் கொண்டு இவற்றைச் செய்யக்கூடாது என்பது மரபு. தர்மம். அந்தக் காலத்தில் இதைச் செய்தவர்களுக்கு எல்லாம், மன்னர்கள் மானியம் அளித்தார்கள். அதாவது வயிற்றுப்பாட்டிற்கு உதவித் தொகை அளித்தார்கள். வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். ஆகவே அவர்களால் அதைத் தர்மமாகச் செய்ய முடிந்தது.
“கிரகத்தைவைத்துக் காசு பார்க்கும் தொழிலைச் செய்யாதே - அது உகந்த தொழிலல்ல” என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள்.
இன்று அந்த மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழிலாகும். தர்மதேவனும் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கின்றான். ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறான்? இது கலியுகம். இப்படித்தான் நடக்கும் என்பது விதி. பகவான் கிருஷ்ணரே சொல்லியிருக்கிறார். “கலியுகத்தில் நான்கு பேருக்கு மூன்று பேர்கள் அயோக்கியர்களாக இருப்பார்கள்”
கலி முற்ற முற்ற அந்த அளவும் மாறுபடும். தற்சமயம் எட்டு பேர்களுக்கு ஒருவர்தான் நல்லவர்.
சரி, அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கெல்லாம் தண்டனை இல்லையா? உண்டு. அதைப் பகவான் சொல்ல வில்லை.
ஞானிகளுக்கு அது தெரியும். தர்மத்தின் விதிகளையும், கர்மவினைகளின் விளைவுகளையும் அவர்கள் அறிவார்கள். முடிந்தவரை, நாமும் தர்மத்தின் படியே நடப்போமாக!
எட்டாம் வீடைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது!
பொறுமையாகப் படித்துவந்த உங்கள் அனைவருக்கும் நன்றி!
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

இன்று மன்னர்கள் இல்லை. அரசும் இந்தத் தொழில் செய்பவர்களுக்கு உதவுவதில்லை. ஆகவே பணமின்றி இத்தொழிலை யாரும் இலவசமாகச் செய்ய முடியாது. தங்கள் வயிற்றுப் பாட்டிற்கும் வாழ்க்கைக்கும்
தேவையான அளவில் பொருள் சேர்ப்பதில் தவறில்லை. ஆனால்
அளவிற்கு அதிகமாக, வருகிறவனை அவதிப்படுத்தியோ
அல்லது நிர்ப்பந்தப் படுத்தியோ அல்லது அச்சுறுத்தியோ அல்லது ஏமாற்றியோ பொருள் சேர்ப்பது முடிவில் நன்மையளிக்காது.
இதை அவர்கள் உணரவேண்டும்
அல்லது நிர்ப்பந்தப் படுத்தியோ அல்லது அச்சுறுத்தியோ அல்லது ஏமாற்றியோ பொருள் சேர்ப்பது முடிவில் நன்மையளிக்காது.
இதை அவர்கள் உணரவேண்டும்
சரி, அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கெல்லாம் தண்டனை இல்லையா? உண்டு. அதைப் பகவான் சொல்ல வில்லை.
ஞானிகளுக்கு அது தெரியும். தர்மத்தின் விதிகளையும், கர்மவினைகளின் விளைவுகளையும் அவர்கள் அறிவார்கள். முடிந்தவரை, நாமும் தர்மத்தின் படியே நடப்போமாக!
எட்டாம் வீடைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது!
பொறுமையாகப் படித்துவந்த உங்கள் அனைவருக்கும் நன்றி!
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
அய்யா வணக்கம்....
ReplyDeleteஎட்டாம் வீட்டை பற்றிய பாடத்தை சிறப்பாக எந்த இடத்திலும் சறுக்களும் இல்லாமல் எல்லா விதிகளை சீர்தூக்கி பார்த்து தகுந்தவறை பாடமாக வகுத்து அதை போதித்து நிறைவு செய்து வீட்டீர்கள் ......நித்தம் நம் வகுப்பறை ஜோதிட ஆர்வலர்கள் இளைப்பாறும் அறை ........
நன்றி வணக்கம்.....
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteகவியரசரின் வரிகளில் நான் அதிகம் முணுமுணுத்த அற்புத வரிகள்.
"தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை"
சராசரி மனிதனின் அத்தனை வக்கிர குணத்திற்கும்
அர்ச்சுனன் அம்பாய்!, அசோகவனச் சீதையின் சொல்லாய்!,
அடித்தார் ஒரே சாவுமணி நச்ச்ச்ச்.....சென்று..
என்னே! ஒரு அர்த்தம் பொதிந்த கவிதை .
சுரமும் நிறமும் பிரித்துப் பார்த்தால்
அதில் ஆழ்ந்த பொருள் ஆயிரமாயிரம் இருக்கும்.
ஐயா, தங்களது ஜோதிடப் புத்தகம் மின்- புத்தக வடிவில் (மின்-வட்டுகளில்) பதிவுசெய்து வெளியிடும் உத்தேசம் ஏதும் உண்டா! அப்படி செய்தால் என்போன்றோருக்கு விரைவு தபால் சேவை வழி பெற்று பயனுற எதுவாக இருக்கும். நன்றி..
ReplyDeleteதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்
ReplyDeleteபாரதியின் பாஞ்சாலி சபதம் சொல்வது இது தானே . . .
மனம் தேடுதே பணம் என்ற நிலையில்
மக்கள் மனம் மாறியதே . . .வேதனை
எட்டுபேரில் ஒருவர் என்ற பட்டியலில் உங்களையும் சேர்த்து உங்கள் வகுப்பறை மாணவர்களும் வரிசையில் . .
பாடத்திற்கு நன்றி, ஐயா.இதை ஞாபகம் வைத்துக் கொள்வதே மிக சிரமம் போல இருக்கிறது :)
ReplyDeleteஐயா வணக்கம்...!
ReplyDeleteஎட்டாமிட பாடங்களை மிகவும் அருமையாக நிறைவு செய்துவிட்டீர்கள்! மிக்க நன்றிகள்...! தங்கள் மாணவர்களை, கிட்டத்தட்ட (மரணத்தை எதிர்கொள்ளும் துணிவைத்தந்து) மனதளவில் தயார்படுத்திவிட்டீர்கள் என்றே சொல்லலாம்.. வட இந்தியாவில் ஒரு வழக்கம் இருக்கிறது. "காத் சக்கரா" (Gaath Chakra) என்று ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட தேதி, திதி, கிழமை, நட்சத்திரம் போன்றவை ஒன்றாக சேரும்போது ஜாதகருக்கு மரணம் அல்லது மரணத்துக்கு சமமான கண்டத்தைக் கொடுப்பான் என்று சொல்கின்றனர். (இது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை) இது போன்ற வழக்கம் நம் தென்னிந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் உண்டா? இது எந்த அளவிற்கு சரி என்பதைப் பற்றி தங்கள் கருத்தை தயவு செய்து தெரிவிக்கவும்...
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
ஷிம்லா, ஹி.பி.
Dear Sir
ReplyDeleteIndru Paadam Arumai.
Adhai Vida Neengal (ungal) Dharmathai patri Last Stanzavil Eludhinadhu miguvaum arumai...
Arumai Sir.
Vazhga Vathiyar..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir,
ReplyDeleteYour last message on dharma touched my heart.
Yes now a days Education, Medical, and Horoscope are becoming a high earning profession.
The world is going into kali yuga in full speed.
Astrology and its prediction has to be told with out getting any money.
I salute your thoughts on dharma and Astrology.
Thanks and warm regards
Ramalingam
astroadhi said...
ReplyDeleteஅய்யா வணக்கம்....
எட்டாம் வீட்டை பற்றிய பாடத்தை சிறப்பாக எந்த இடத்திலும் சறுக்களும் இல்லாமல் எல்லா விதிகளை சீர்தூக்கி பார்த்து தகுந்தவறை பாடமாக வகுத்து அதை போதித்து நிறைவு செய்து வீட்டீர்கள் ......நித்தம் நம் வகுப்பறை ஜோதிட ஆர்வலர்கள் இளைப்பாறும் அறை ........
நன்றி வணக்கம்.....////
நல்லது. நன்றி ஆதிராஜ்!
//////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
கவியரசரின் வரிகளில் நான் அதிகம் முணுமுணுத்த அற்புத வரிகள்.
"தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை"
சராசரி மனிதனின் அத்தனை வக்கிர குணத்திற்கும்
அர்ச்சுனன் அம்பாய்!, அசோகவனச் சீதையின் சொல்லாய்!,
அடித்தார் ஒரே சாவுமணி நச்ச்ச்ச்.....சென்று..
என்னே! ஒரு அர்த்தம் பொதிந்த கவிதை .
சுரமும் நிறமும் பிரித்துப் பார்த்தால்
அதில் ஆழ்ந்த பொருள் ஆயிரமாயிரம் இருக்கும்./////
நல்லது. நன்றி ஆலாசியம்!
/////Alasiam G said...
ReplyDeleteஐயா, தங்களது ஜோதிடப் புத்தகம் மின்- புத்தக வடிவில் (மின்-வட்டுகளில்) பதிவுசெய்து வெளியிடும் உத்தேசம் ஏதும் உண்டா! அப்படி செய்தால் என்போன்றோருக்கு விரைவு தபால் சேவை வழி பெற்று பயனுற
எதுவாக இருக்கும். நன்றி..////////
இல்லை! புத்தகவடிவில் மட்டுமே பாடங்கள் வெளிவரும்!
iyer said...
ReplyDeleteதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்
பாரதியின் பாஞ்சாலி சபதம் சொல்வது இது தானே . . .
மனம் தேடுதே பணம் என்ற நிலையில்
மக்கள் மனம் மாறியதே . . .வேதனை
எட்டுபேரில் ஒருவர் என்ற பட்டியலில் உங்களையும் சேர்த்து உங்கள் வகுப்பறை மாணவர்களும் வரிசையில்
.////// .
எந்த எட்டுப்பேர்கள் பட்டியலில் என்னைச் சேர்த்திருக்கிறீர்கள்?
//////Subbaraman said...
ReplyDeleteபாடத்திற்கு நன்றி, ஐயா.இதை ஞாபகம் வைத்துக் கொள்வதே மிக சிரமம் போல இருக்கிறது :)//////
ஆமாம். கொஞ்சம் கஷ்டம்தான்!
//////M. Thiruvel Murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்...!
எட்டாமிட பாடங்களை மிகவும் அருமையாக நிறைவு செய்துவிட்டீர்கள்! மிக்க நன்றிகள்...! தங்கள் மாணவர்களை, கிட்டத்தட்ட (மரணத்தை எதிர்கொள்ளும் துணிவைத்தந்து) மனதளவில் தயார்படுத்திவிட்டீர்கள்
என்றே சொல்லலாம்.. வட இந்தியாவில் ஒரு வழக்கம் இருக்கிறது. "காத் சக்கரா" (Gaath Chakra) என்று ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட தேதி, திதி, கிழமை, நட்சத்திரம் போன்றவை ஒன்றாக சேரும்போது ஜாதகருக்கு மரணம் அல்லது மரணத்துக்கு சமமான கண்டத்தைக் கொடுப்பான் என்று சொல்கின்றனர். (இது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை) இது போன்ற வழக்கம் நம் தென்னிந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் உண்டா? இது எந்த அளவிற்கு சரி என்பதைப் பற்றி தங்கள் கருத்தை தயவு செய்து தெரிவிக்கவும்...
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
ஷிம்லா, ஹி.பி.//////
அதைப் பற்றித் தெரியவில்லை சுவாமி! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
/////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Indru Paadam Arumai.
Adhai Vida Neengal (ungal) Dharmathai patri Last Stanzavil Eludhinadhu miguvaum arumai...
Arumai Sir.
Vazhga Vathiyar..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman///////
நல்லது. நன்றி ராஜாராமன்!
/////Ram said...
ReplyDeleteDear Sir,
Your last message on dharma touched my heart.
Yes now a days Education, Medical, and Horoscope are becoming a high earning profession.
The world is going into kali yuga in full speed.
Astrology and its prediction has to be told with out getting any money.
I salute your thoughts on dharma and Astrology.
Thanks and warm regards
Ramalingam////////
நல்லது. நன்றி ராமலிங்கம்!
//இதை ஞாபகம் வைத்துக் கொள்வதே மிக சிரமம் போல இருக்கிறது//
ReplyDeleteமுக்கியமானவற்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும் என்று நினைக்கிறேன். அதாவது அகால/துர் மரணமா அல்லது இயற்கையில் எந்த வித துன்பமில்லாத மரணமா என்பதுதான் முக்கியம். இதற்கு 8ம் இடத்தில் இருக்கும் கிரகம் சுபரா அல்லது பாபரா என்பது மிகவும் முக்கியம். எந்த கிரகமும் இல்லாவிட்டால் சுபகிரக பார்வையாவது இருக்க வேண்டும். எதுவும் இல்லாவிட்டால் 8ம் இடத்து அதிபதிக்கு சுப கிரக சேர்க்கை அல்லது பார்வை இருக்க வேண்டும். 8ம் இடம்/அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொள்ள கூடாது.
பல விஷயங்கள் பாடத்தில் இருக்கிறது. படித்தவுடனே அவை எனக்கு பிடி பட்டு விட்டது. கூர்ந்து கவணித்தால் யார்க்கும் அது பிடிபடும். 9 கிரகங்களும் 12 ராசியில் எங்காவது இருந்துதானே ஆக வேண்டும்.
மிக்க நன்றி . ஒரு ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் அல்லது தேய்பிறை சந்திரன் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது ?
ReplyDeleteமிக்க நன்றி .
ஐயா,
ReplyDeleteஇன்றுதான் இணையப்பக்கம் வர முடிந்தது...மொத்தமாக தரவிறக்க உள்ளேன் ...படித்துவிட்டு வருகிறேன்..
அன்புடன்
செங்கோவி
7,8 அதிபன் சனி 2ம் இடத்தில் அமர்ந்து தன் வீடான கும்பத்தையே பார்க்கிறார்.அவருடன் கூட சூரியன் மற்றும் புதன்.3ல் சுக்ரனும், கேதுவும்.
ReplyDeleteகடகலக்னம் கடகராசி மகரத்தில் இருந்து நீச குரு நேர் பார்வை.3ல் உள்ள கேதுவை குரு பார்த்து விடுகிறார்.பூசம் நட்சத்திரம் என்பதால் சனி நட்சத்திரத்தின் சொந்த கிரஹம் ஆகிவிடுகிறார்.சனி தசை(8ம் அதிபன்) சிறு வயதிலேயே முடிந்துவிட்டது.இதெல்லாம் என் ஜாதகக் குறிப்புதான்.
தற்சமயம் 2ம் அதிபன் சூரியனின் தசை ராகுபுக்தி 23 டிசம்பர் 2010 வரை.
சூரிய தசை சனிபுக்தி 11 அக்டோபர் 2011 முதல் 22 செப்டம்பர் 2012 வரை.
2ம் அதிபன் தசை, 7ம் அதிபன் புக்தி! எல்லாவற்றையும் அந்த ஏழுமலையானிடம் விட்டுவிட்டேன்.
ஆசிரியருக்கு வணக்கம்:
ReplyDeleteஇதை எப்படி எடுத்துக்கொள்வது ?
தங்கள் குறிப்பு---- ஆறில் செவ்வாய் இருந்து, அவர் மீது வேறு சுபப்பார்வை எதுவுமில்லை என்றால், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
கேள்வி: மேஷ லக்னத்திற்கு ஒன்று மற்றும் எட்டாம் வீடு அதிபதியாகிய செவ்வாய் ஆறாமிடத்தில் (வ) சுபர் பார்வை இன்றி பன்னிரெண்டாம் இடத்தில உள்ள சனி பகவான் பார்வையில் உள்ளார். வேறு எந்த கிரகமும் பார்க்கவில்லை. இதை எப்படி எடுத்துக்கொள்வது ?
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteபொது விதிகள் கொடுக்கப்பட்டுள்ளவை 34 -ம் படித்து நன்கு புரிந்துக் கொள்ள முடிகிறது.அதன் பிறகு கவனத்தில் நிற்பவை குறைந்து விடுகிறது.அவ்வப்போது விதிகளைப் பார்த்து தெரிந்துக் கொண்டாலே
போதும் என எண்ணுகிறேன்.
எட்டாம் இடத்தைப் பற்றிய பாடங்கள் புரியும்படி
நன்றாக உள்ளது.நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-07-27
ஐயா வணக்கம் ,
ReplyDeleteஉங்கள் வலைபூ வலம் வந்தபோது உங்கள் உழைப்பு ஜோதிடம் மீது உள்ள ஆர்வம் / அறிவு தெரிகிறது , நான் சில நாட்கள் முன் தான் உங்கள் வலைப்பதிவை பார்த்தேன் , சில பாடம் படித்தேன் என் மரமண்டைக்கு ஏறவில்லை , ஆகையால் நம் கூகிள் ஆண்டவர் இடம் தமிழில் ஜாதகம் என்று கேட்க அவர் ஒரு முகவரி தந்தார் மிகவும் அருமையாக உள்ளது . தமிழ் மற்றும் ஆங்கிலம் உரை உள்ளது . Free vedic birth charts ( இங்கிலீஷ் ,தமிழ், மலையாளம் ) உள்ளது , அதில் தமிழில் ஜாதகம் கட்டம் , ஜாதகர் எப்படி இருப்பர் போன்ற உரை உள்ளது . ஆனால் ஆங்கில வடிவில் மிகவும் விளக்கமாக தரப்பட்டு உள்ளது குறிப்பாக ; kundil chart , rasi details , navamsa details, divisional lords, astrological personal setails, varga-charts, ashtaka varga part1 , ashtaka varga part 2, strength of planets, dasa calculation predication based on birth star , predication based on birth lagna, predicition based on planents in different houses, important planetary combinations, detailed das prediction, kanaka sani போன்ற அனைத்தும் உள்ளது. உங்கள் வாசகர்கள் விருபினால் பயன்படுத்தி கொள்ளலாம் , அனைத்தும் இலவச சேவை .
இனைய முகவரி :http://www.scientificastrology.com முகப்பு பக்கத்தில் Free vedic birth charts english என்பதை கிளிக் செய்யவும் ,
நன்றி , வணக்கம்
ராஜன்
சென்னை
வணக்கம்,
ReplyDeleteதங்களுடைய எட்டாவது பாடம் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி . தாங்கள் மின்பு ஒரு முறை குறி இருந்தீர்கள் எட்டாவது பாடம் நடத்தும் பொழுது விரிவாக கூறுகிறேன் என்று.
(Each Rasi will have sign (movable, fixed, common and place for each one. example Measha rasi, Movable sign and place is FIRE. like that.) to find the place of death. Could you please give the details for all the Rasi.
Thanks
Chandrasekaran Suryanarayanan
அய்யா வணக்கம்.
ReplyDeleteஎட்டாம் இடத்தின் பாடங்கள் மிக அருமை.மரணத்தின் தன்மை எத்தகையதாக
இருக்கும் என்பதை எட்டாம் வீடு மற்றும் எட்டாம் இடத்து அதிபதி ,மற்றும்
தீய கிரகங்களின் நிலை இவற்றைக் கொண்டு எப்படி அறிய முடியும் என்பதை
விளக்கமாக தெரிவித்திருக்கிறீர்கள் . நன்றி. அதோடு மரணம் ஏற்படும் திசை
புத்திகளை எப்படி எட்டாம் இடத்தை வைத்து கணிப்பது என்பதையும் தெரிவித்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி,
வணக்கம்.
அரசு.
tamildigitalcinema said...
ReplyDeleteஉங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil//////
ஏற்கனவே இரண்டில் உறுப்பினராக இருக்கிறேன். இன்னும் எத்தனை அமைப்பில் சேர? அதற்கு நேரமில்லையே ராசா!
/////ananth said...
ReplyDelete//இதை ஞாபகம் வைத்துக் கொள்வதே மிக சிரமம் போல இருக்கிறது//
முக்கியமானவற்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும் என்று நினைக்கிறேன். அதாவது அகால/துர் மரணமா அல்லது இயற்கையில் எந்த வித துன்பமில்லாத மரணமா என்பதுதான் முக்கியம். இதற்கு 8ம் இடத்தில் இருக்கும் கிரகம் சுபரா அல்லது பாபரா என்பது மிகவும் முக்கியம். எந்த கிரகமும் இல்லாவிட்டால் சுபகிரக பார்வையாவது இருக்க வேண்டும். எதுவும் இல்லாவிட்டால் 8ம் இடத்து அதிபதிக்கு சுப கிரக சேர்க்கை அல்லது பார்வை இருக்க வேண்டும். 8ம் இடம்/அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொள்ள கூடாது.
பல விஷயங்கள் பாடத்தில் இருக்கிறது. படித்தவுடனே அவை எனக்கு பிடி பட்டு விட்டது. கூர்ந்து கவனித்தால் யார்க்கும் அது பிடிபடும். 9 கிரகங்களும் 12 ராசியில் எங்காவது இருந்துதானே ஆக வேண்டும்.///////
கூர்ந்து கவனிப்பதுடன், ஆழ்ந்து படித்தால் முக்கியமான விதிகள் மனதில் ஏறிவிடும். என்னுடைய பழக்கம் அப்படித்தான்.
/////Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி . ஒரு ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் அல்லது தேய்பிறை சந்திரன் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது?
மிக்க நன்றி.
அமாவாசைக்குப் பிறகு, பெளர்ணமிக்குள் வருவது வளர்பிறைச் சந்திரன். பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசை வரை வருவது தேய்பிறைச் சந்திரன். If the Moon is in a place within 180 degrees towards the Sun, it is called
as valarpiraich chandiran.
In astronomical terminology, the New Moon is the lunar phase that occurs when the Moon, in its monthly orbital motion around Earth, lies between Earth and the Sun, and is therefore in conjunction with the Sun as seen from Earth. At this time, the illuminated half of the Moon faces directly toward the Sun, and the dark or unilluminated portion of the Moon faces directly toward Earth, so that the Moon is invisible as seen from Earth.
[Note: The illuminated half of the moon always faces directly toward the sun, as does the illuminated half of any body orbiting the sun. It's the moon's position relative to both the sun and earth that matters.]
////SHEN said...
ReplyDeleteஐயா,
இன்றுதான் இணையப்பக்கம் வர முடிந்தது...மொத்தமாக தரவிறக்க உள்ளேன் ...படித்துவிட்டு வருகிறேன்..
அன்புடன்
செங்கோவி////
ஆகா, அப்படியே செய்யுங்கள்!
/////kmr.krishnan said...
ReplyDelete7,8 அதிபன் சனி 2ம் இடத்தில் அமர்ந்து தன் வீடான கும்பத்தையே பார்க்கிறார்.அவருடன் கூட சூரியன் மற்றும் புதன்.3ல் சுக்ரனும், கேதுவும்.
கடகலக்னம் கடகராசி மகரத்தில் இருந்து நீச குரு நேர் பார்வை.3ல் உள்ள கேதுவை குரு பார்த்து விடுகிறார்.பூசம் நட்சத்திரம் என்பதால் சனி நட்சத்திரத்தின் சொந்த கிரஹம் ஆகிவிடுகிறார்.சனி தசை(8ம் அதிபன்) சிறு வயதிலேயே முடிந்துவிட்டது.இதெல்லாம் என் ஜாதகக் குறிப்புதான்.
தற்சமயம் 2ம் அதிபன் சூரியனின் தசை ராகுபுக்தி 23 டிசம்பர் 2010 வரை.
சூரிய தசை சனிபுக்தி 11 அக்டோபர் 2011 முதல் 22 செப்டம்பர் 2012 வரை.
2ம் அதிபன் தசை, 7ம் அதிபன் புக்தி! எல்லாவற்றையும் அந்த ஏழுமலையானிடம் விட்டுவிட்டேன்.///////
கடக லக்கினத்திற்கு பாதகாதிபதியின் புத்தியையும் நீங்கள் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். ஏழுமலையானிடம் விட்டுவிட்ட பிறகு அதை எல்லாம் பார்க்க வேண்டாம். நான் பழநிஅப்பனிடம் விட்டுவிட்டேன். எனக்கு என்று எதையும் பார்ப்பதில்லை.
/////Rajan said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்:
இதை எப்படி எடுத்துக்கொள்வது ?
தங்கள் குறிப்பு---- ஆறில் செவ்வாய் இருந்து, அவர் மீது வேறு சுபப்பார்வை எதுவுமில்லை என்றால், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
கேள்வி: மேஷ லக்னத்திற்கு ஒன்று மற்றும் எட்டாம் வீடு அதிபதியாகிய செவ்வாய் ஆறாமிடத்தில் (வ) சுபர் பார்வை இன்றி பன்னிரெண்டாம் இடத்தில உள்ள சனி பகவான் பார்வையில் உள்ளார். வேறு எந்த கிரகமும் பார்க்கவில்லை. இதை எப்படி எடுத்துக்கொள்வது?///////
உங்களுக்கு நீங்களே மரணத்தைக் கணித்துப்பார்க்கும் வேலை எல்லாம் வேண்டாம். ஆண்டவன் சித்தம் என்று நிம்மதியாக இருங்கள்!
////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
பொது விதிகள் கொடுக்கப்பட்டுள்ளவை 34 -ம் படித்து நன்கு புரிந்துக் கொள்ள முடிகிறது.அதன் பிறகு கவனத்தில் நிற்பவை குறைந்து விடுகிறது.அவ்வப்போது விதிகளைப் பார்த்து தெரிந்துக் கொண்டாலே
போதும் என எண்ணுகிறேன்.
எட்டாம் இடத்தைப் பற்றிய பாடங்கள் புரியும்படி
நன்றாக உள்ளது.நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி///////
ஆமாம். எல்லாவற்ரையும் நினைவில் கொள்ள முடியாது. திருவாளர் ஆனந்த் அவர்கள் கூறியுள்ளதைப்போல முக்கியமானவற்றை மட்டும் மனதில் ஏற்றிக்கொண்டால் போதும்!
/////ராஜன் said...
ReplyDeleteஐயா வணக்கம் ,
உங்கள் வலைபூ வலம் வந்தபோது உங்கள் உழைப்பு ஜோதிடம் மீது உள்ள ஆர்வம் / அறிவு தெரிகிறது , நான் சில நாட்கள் முன் தான் உங்கள் வலைப்பதிவை பார்த்தேன் , சில பாடம் படித்தேன் என் மரமண்டைக்கு ஏறவில்லை , ஆகையால் நம் கூகிள் ஆண்டவர் இடம் தமிழில் ஜாதகம் என்று கேட்க அவர் ஒரு முகவரி தந்தார் மிகவும் அருமையாக உள்ளது . தமிழ் மற்றும் ஆங்கிலம் உரை உள்ளது . Free vedic birth charts ( இங்கிலீஷ் ,தமிழ், மலையாளம் ) உள்ளது , அதில் தமிழில் ஜாதகம் கட்டம் , ஜாதகர் எப்படி இருப்பர் போன்ற உரை உள்ளது . ஆனால் ஆங்கில வடிவில் மிகவும் விளக்கமாக தரப்பட்டு உள்ளது குறிப்பாக ; kundil chart , rasi details , navamsa details, divisional lords, astrological personal setails, varga-charts, ashtaka varga part1 , ashtaka varga part 2, strength of planets, dasa calculation predication based on birth star , predication based on birth lagna, predicition based on planents in different houses, important planetary combinations, detailed das prediction, kanaka sani போன்ற அனைத்தும் உள்ளது. உங்கள் வாசகர்கள் விருபினால் பயன்படுத்தி கொள்ளலாம் , அனைத்தும் இலவச சேவை .
இனைய முகவரி :http://www.scientificastrology.com முகப்பு பக்கத்தில் Free vedic birth charts english என்பதை கிளிக் செய்யவும் ,
நன்றி , வணக்கம்
ராஜன்
சென்னை//////
தகவலுக்கு நன்றி நண்பரே!. நம் வகுப்பறை மாணவர்களுக்குப் பயன்பட்டால் சரி!
/////csekar2930 said...
ReplyDeleteவணக்கம்,
தங்களுடைய எட்டாவது பாடம் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி . தாங்கள் மின்பு ஒரு முறை கூறி இருந்தீர்கள் எட்டாவது பாடம் நடத்தும் பொழுது விரிவாக கூறுகிறேன் என்று.
(Each Rasi will have sign (movable, fixed, common and place for each one. example Measha rasi, Movable sign and place is FIRE. like that.) to find the place of death. Could you please give the details for all the Rasi.
Thanks
Chandrasekaran Suryanarayanan/////
ஒவ்வொரு ராசிக்குமா? 9 to the power of 12 என்று வித்தியாசமான கிரக அமைப்புக்களை வைத்து எக்கச்சக்கமாக வேறுபாடுகள் வருமே ராசா? எழுதியவரை போதும். உங்கள் ஜாதகத்திற்கு என்ன ராசியோ, அதை வைத்துத் தனியாக அலசுங்கள்!
//////ARASU said...
ReplyDeleteஅய்யா வணக்கம்.
எட்டாம் இடத்தின் பாடங்கள் மிக அருமை.மரணத்தின் தன்மை எத்தகையதாக
இருக்கும் என்பதை எட்டாம் வீடு மற்றும் எட்டாம் இடத்து அதிபதி ,மற்றும்
தீய கிரகங்களின் நிலை இவற்றைக் கொண்டு எப்படி அறிய முடியும் என்பதை
விளக்கமாக தெரிவித்திருக்கிறீர்கள் . நன்றி. அதோடு மரணம் ஏற்படும் திசை
புத்திகளை எப்படி எட்டாம் இடத்தை வைத்து கணிப்பது என்பதையும் தெரிவித்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி,
வணக்கம்.
அரசு.///////
ஏழாம் அதிபதி, இரண்டாம் அதிபதி, பாதகாதிபதி ஆகிய மூவரில் யார் வலுவாக இருக்கிறார்களோ அவர்களின் தசாபுத்திகளில் மரணம் ஏற்படும். இதைப் பதிவிலேயே கோடிட்டுக் காட்டியிருக்கிறேனே சுவாமி!
உங்கள் பாடங்கள் புரியும்படி இருந்தன. ஆனால் 8 ம் வீட்டிற்கான அஷ்டவர்க்கம் பற்றி ஏன் எதுவும் எழுதவில்லை? மைனர் அவர்களின் கேள்விக்கு நீங்கள் அஷ்டவர்க்க பார்முலா பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தீர்கள்.
ReplyDelete////Uma said...
ReplyDeleteஉங்கள் பாடங்கள் புரியும்படி இருந்தன. ஆனால் 8 ம் வீட்டிற்கான அஷ்டவர்க்கம் பற்றி ஏன் எதுவும் எழுதவில்லை? மைனர் அவர்களின் கேள்விக்கு நீங்கள் அஷ்டவர்க்க பார்முலா பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தீர்கள். ////
அடடே, உங்களின் நினைவாற்ர்றலுக்குப் பாராட்டுக்கள் சகோதரி. அதைப் பதிவில் எழுதுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சுலபமாக ஒரளவிற்கு ஆயுளை நிர்ணயம் செய்ய முடியும். பதிவைப் படிப்பவர்கள் அனைவரும் அதைச் செய்துவிட்டு என்னப் பிறாண்டி எடுத்துவிடுவார்கள். ஆகவே எழுதவில்லை. ஆனால் வெளிவரவுள்ள புத்தகத்தில் அது இருக்கும். விளக்கம் போதுமா?
// ஆகவே எழுதவில்லை. ஆனால் வெளிவரவுள்ள புத்தகத்தில் அது இருக்கும். விளக்கம் போதுமா? //
ReplyDeleteok sir, thanks.