மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Good News. Show all posts
Showing posts with label Good News. Show all posts

23.3.21

சுஜாதாவின் EVM. (Electronic Voting Machine)



சுஜாதாவின் EVM. (Electronic Voting Machine)

29.8.99 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தொடரிலிருந்து ஒரு பகுதி...

நான் வோட்டுப் போடத் தவறுவதே இல்லை. அதுவும் இந்த முறை வோட்டுப் போடுவது என் வாழ்வில் ஒரு நீண்ட எலெக்ட்ரானிக் பயணத்தின் நிறைவு.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில நகரத் தொகுதிகளில் எலெக்ட்ரானிக் வோட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் உருவ அமைப்பில், பாரத் எலெக்ட்ரானிக்ஸில் முக்கியப் பங்கு எடுத்துக்கொண்டவன் என்கிற தகுதியில் எனக்குத் தனிப்பட்ட திருப்தி. இந்தப் பயணம் பல வருடங்களுக்கு முன் கேரளாவில் பரூரில் துவங்கியது.

முதன்முறையாக ஐம்பது இயந்திரங்களை, ஒரு தொகுதியின் பகுதியில் சோதனை முயற்சியாகப் பயன்படுத்தினோம். அதை எலெக்ட்ரானிக்ஸ் நுண்ணணுவியலுக்குக் கிடைத்த வெற்றியாக ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். ஆனால், இதன் முழு அறிமுகத்துக்கு இத்தனை தாமதமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம், அரசியலும் நீதிமன்றங்களும்தான். எல்லாத் தேர்தலிலும் தோற்றவர் எப்போதும் தன்னைத் தவிர மற்ற எல்லாப் புறக் காரணங்களையும் கூறுவார்... அந்த முறை புதிய காரணம் ஒன்று சேர்ந்துகொண்டது. இயந்திரத்தை வைத்து இன்ஜினீயர்கள், சி.ஐ.ஏ., மைய அரசு எல்லோரும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று முதலில் எல்.டி.எஃப். கம்யூனிஸ்ட் வேட்பாளரும், அவர் வெற்றி பெற்றிட, தோற்றுப்போன யு.டி.எஃப். காங்கிரஸ் வேட்பாளரும் கேஸ் போட்டார்கள். அது கேரள உயர் நீதி மன்றத்தில் தோற்றது.

மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வரை மாமியார் வீட்டுக்குப் போகும் நத்தை போல ஊர்ந்து கொண்டிருக்க, இடையே சில நகர்ப்புற, பாதி நகரத் தொகுதிகளில் ஏறத்தாழ பன்னிரண்டு இடங்களில் இந்த இயந்திரத்தை உப தேர்தல்களில், தேர்தல் கமிஷனில் அப்போது செக்ரெட்டரியாக இருந்த தைரியசாலி கணேசன், ஆர்ட்னன்ஸ் உதவியுடன் பயன்படுத்தினார். சுப்ரீம் கோர்ட் இறுதியில் 'அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்காமல் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது' எனத் தீர்ப்பு அளித்தது (இதற்காக நான் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று சாட்சி சொன்ன அனுபவத்தை மற்றொரு சந்தர்ப்பத்தில், என்னுடைய லீகல் அட்வைஸரைக் கலந்தாலோசித்து விட்டு எழுதுகிறேன்).

அரசியல் சட்டத்தைத் திருத்த, மக்களவைக்குத்தான் அதிகாரம் உள்ளது. மக்களவை கட்சி மாற்றம், ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற தேசத்துக்கு அத்தியாவசியமான விஷயங்களில் கவனமாக இருந்து, தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அதை நிறைவேற்ற ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆயின. இயந்திரத்துக்குப் பச்சை விளக்கு கிடைத்தது. இப்போது ராஜஸ்தானில் நயா கா(ன்)வ் என்னும் கிராமத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு வாக்காளர்களும் 'அதென்ன மெஷின்... சீஸ் கியா ஹை என்கிற ஆர்வத்தினால் மட்டும் வோட்டுப் போட வருகிறோம்' என்ற செய்தியைப் படிக்கும்போது ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கிறேன்.

தேர்தல் கமிஷன் மொத்தம் ஒன்றரை லட்சம் மெஷின்கள் வாங்கி இருந்தது. ஒரு மெஷின் ஐயாயிரம் ரூபாய் என்று சுமார் எழுபத்தைந்து கோடி ரூபாய் செலவழித்து வாங்கியிருந்தவை பயன்படாமல் கலெக்டர் அலுவலகங்களிலும் தாலுகா ஆபீஸ்களிலும் உறங்கிக்கொண்டு இருந்தன. கடைசியில் ராஜகுமாரி முத்தம் கிடைத்து, ஏறத்தாழ பத்தாண்டு தூக்கத்திலிருந்து எழுந்தன.

இயந்திரங்களில் பாதி எண்ணிக்கை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்தவை. மீதி ஹைதராபாத்தில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்னும் மற்றொரு மத்திய சர்க்கார் நிறுவனம் தயாரித்தவை. டிஸைன் ஒன்றுதான்... தமிழ்நாட்டில் ஹைதராபாத் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாடு முழுவதும் பயன்படுத்த கமிஷனிடம் இருக்கும் இயந்திரங்கள் போதாது. மீண்டும் ஆர்டர் செய்து பயன்படுத்தினால் தேர்தல் முடிந்த மாலையே முடிவுகளை அறிவித்துவிடலாம். ராத்திரியே தலைவிதிகள் நிர்ணயிக்கப்பட்டு யார் சிறந்தார்கள், யார் இழந்தார்கள் என்பதெல்லாம் மறுநாள் பல் தேய்ப்பதற்குள் தெரிந்து விடும். 

இரும்பு வோட்டுப் பெட்டிகள் வேண்டாம். வாக்குச் சீட்டுகளை லட்சக்கணக்கில் அச்சடிக்க வேண்டியது இல்லை. கள்ளவோட்டு கிடையாது. செல்லாத வோட்டு கிடையாது. மின்வாரிய கரண்ட் தேவையில்லை, பாட்டரி. அடிக்கடி தேர்தல் வந்தால் பரவாயில்லை. பதினைந்து நாட்களுக்குள் ஒரு பொதுத்தேர்தல் நடத்தலாம். எத்தனையோ சௌகரியங்கள். பீகாரில் போல அதைக் கடத்திக் கொண்டு போனால் மேலே வோட்டுப் போடாதபடி தானாகவே அணைந்து கொள்ளும்.

அதை எதிர்த்தவர்கள் 'முன்னேற்ற நாடான அமெரிக்காவிலேயே பயன்படுத்த வில்லையே... நாம் என்ன அப்படி உயர்ந்து விட்டோம்...?' என்கிற ஒரு வாதத்தை முன்வைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. எல்லா புத்திசாலித்தனமான எலெக்ட்ரானிக் சாதனங்களும் அமெரிக்கா அல்லது ஜப்பானிலிருந்துதான் வரவேண்டும் என்கிற தாழ்வுமனப்பான்மையை நீக்கியது எங்கள் முக்கிய சாதனை.
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.3.21

சேனா ஜல் என்றால் என்னவென்று தெரியுமா?


சேனா ஜல் என்றால் என்னவென்று தெரியுமா?

பிஸ்லெரி-அக்வாஃபினா வெளிநாட்டு நிறுவனங்கள், பாட்டில் தண்ணீரை விற்பனை செய்கின்றன. எங்கள் பணம் நாட்டிற்கு வெளியே செல்கிறது.

 ஒரு கோரிக்கை: பயணம் செய்யும் போது அல்லது சந்தையில் ஷாப்பிங் செய்யும் போது * சேனா ஜல் * (ஆர்மி வாட்டர்) கேளுங்கள். இது கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இது மலிவானது.

இந்திய ராணுவத்தின் இராணுவ மனைவிகள் நலச் சங்கம் "சேனா ஜல்" ஐ அறிமுகப்படுத்தியது. ஜெனரல் விபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் தொடங்கிய இது அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பொதிகளில் வருகிறது. அரை லிட்டருக்கு ரூ .6 செலவாகும், 1 லிட்டர் பேக்கிற்கு ரூ .10 செலவாகும். மற்ற நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ .20 க்கு விற்கின்றன - குறைந்தபட்சம்.

 "சேனா ஜால்" மூலம் கிடைக்கும் லாபம் இராணுவ நலக்குழுவுக்கு செல்கிறது. இந்த பணம் இந்திய ராணுவத்தில் உள்ள தியாக வீரர்களின் குடும்பங்களுக்கும், தியாகிகளின் குழந்தைகளின் கல்விக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நீர் இந்திய இராணுவத்தால் தயாரிக்கப்படுவதால், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் விளம்பரம் இல்லை. இராணுவத்திற்கு விளம்பரத்திற்காக பணம் இல்லை. அதன் குறைந்த விலைக்கு அதுவும் காரணம். விளம்பரம் இல்லாததால், மிகச் சிலருக்கு இராணுவ நீர் பற்றித் தெரியும்.

இங்குதான் எங்கள் வேலை தொடங்குகிறது. நீங்கள் எப்போதாவது சந்தையில் இருந்து தொகுக்கப்பட்ட தண்ணீரை வாங்க விரும்பினால், நிச்சயமாக கடைக்காரரிடமிருந்து "சேனா ஜால்" கேளுங்கள்.

செய்தியைப் பகிரவும் பரப்பவும் செய்யுங்கள்.
----------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.1.21

சிறந்த நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்த கோவை!!!


சிறந்த நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்த கோவை!!!

ஓய்வுக்குப் பின் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவில் இடம் பெற்றுள்ள ஐந்து நகரங்களில் கோவைமூன்றாவது இடம் பிடித் துள்ளது

 டுமாரோ மேக்கர்ஸ் என்ற பன்னாட்டு ஆலோ சனை நிறுவனம், மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து பல்வேறு கணக்கெடுப்பு களை நடத்தி வருகிறது இந்த நிறுவனம், ஓய்வு காலத்தில் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்கள் குறித்து சமீ பத்தில் தேசிய அளவிலான ஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது 

வாழ்க்கைத்தரம்,  மருத்துவம் போக்குவரத்துவசதிகள், குற்ற விகிதம்மற்றும் சீதோஷ்ண நிலைஆகிய ஐந்து விஷயங்கள்   கணக்கில் எடுத்துக் கொள்கப்பட்டுள்ளன.  விலைவாசி, வாடகை உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும்சேகரித்து அதன் அடிப்ப டையில், ஐந்து நகரங்களை பட்டியலிட்டுள்ளது

இதில் சண்டிகார் முதலிடத்தை பிடித்துள்ளது 
மஹாராஸ்ட்ராவின் பூனேநகரம், இரண்டாவது இடத் தி்ல் உள்ளது 
கோவை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது
அடுத்தடுத்த இடங்களை தெலுங்கானா தலைநகரம் ஹைதராபாத்தும், உத்ரகாண்ட் மாநிலத்தின்குளிர்காலத் தலைநகராக விளங்கும் டேராடூனும் பிடித்துள்ளன

இதில், சண்டிகார்,    முதலிடத்தைப் பிடித்துள்ளது  மகாராஷ்டிராவின்புனே கோவையின் சிறப்புஎன்ன குறிப்பாக, 64 சதவீத இந் தியர்களுக்கு, தங்களுடைய ஓய்வுகாலவருவாய் இலக்கு குறித்த அச்சம் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த நிறுவனம், சென்னையைவிட நுகர்பொருட்களின் விலை, கோவையில் 19 சதவீதம் குறைவாக உள்ள தாக் குறிப்பிட்டுள்ளது வீட்டு வாடகை பொறுத்தவரை, கட்டுக்குள் இருப்பதாகவும், 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய்க் குள் இரண்டு படுக்கைஅறை வசதி கொண்ட வீடுகள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

எல்லா விதமான நோய்களுக்கும் உயர் தர சிகிச்சை அளிக்கக் கூடிய பெரிய பல்நோக்கு மருத்துவமனைகள், சிறிய கிளிக்குகள் அதிகம் உள் ளன. இவை எல்லாவற்றையும்விட, கோவையின் சீதோஷ்ணநிலை மிக முக் கியக் காரணியாக குறிப்பி டப்பட்டுள்ளது. 

சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டி அருகில் இருப்பதும் ஒரு முக்கியக் காரணியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது கோவையில் மேம் பாலங்கள்,புறவழிச்சாலை பல்வேறு கட்டமைப்பு வசதிகளும்
மேம்பட்டு வருகிறது குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, விமான நிலைய விரிவாக்கம் மெட்ரோ ரயில் போன்ற மக்கள் போக்குவரத்து வச திகளை ஏற்படுத்துவதுபோன்ற பணிகளை விரைவில்மேற்கொண்டால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தப் பட்டியலில் கோவை விரைவில் முதலி டம் பிடித்து விடுமென்பதுநிச்சயம்

தினமலர் செய்திக்கு நன்றி
---------------------------------------------
படித்து மகிழ்ந்தது
அன்புடன்
வாத்தியார்
==================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.11.20

மனதை நெகிழ வைத்த தீர்ப்பு!!!!


மனதை நெகிழ வைத்த தீர்ப்பு!!!!

அமெரிக்காவிலுள்ள  ஒரு  நீதிபீடம்.
---------
பதினைந்து வயதான சிறுவன் குற்றவாளி .!

ஒரு கடையிலிருந்து ஆகாரம் திருடியதாக கையும் களவுமாக பிடிக்கப்பட்டபோது.

குற்றம் செய்த குழந்தையோடு நீதிபதி வினவினாா்..

நீ  உண்மையாகவே  திருடினாயா ?

ஆம் ! .Bread  chess  pocket .அந்த குழந்தை கீழே பாா்த்து பதில் சொன்னது.

நீதிபதி :  நீ எதற்காக திருடினாய் ?

குழந்தை :  எனக்கு அது தேவைப் - பட்டது ..

நீதிபதி :  பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் அல்லாவா. ! ..

குழந்தை :  கையில் பணம் இல்லை ..

நீதிபதி :  வீட்டிலுள்ளவா்களிடம் கேட்டு வாங்கியிருக்கலாமல்லவா..                

குழந்தை :  வீட்டில் அம்மா மட்டும உள்ளாா். அவா் நோயில் படுத்துகிடக்கின்றாா் ..ஒரு வேலையுமில்லை அவருக்காக திருடினேன் ..

நீதிபதி :  நீ வேலை ஒன்றும் பாா்க்க வில்லையா ?

குழந்தை :  நான் ஒரு காா் கழுவும் இடத்தில் வேலைப் பாா்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் என் தாயாரை கவனிப்பதற்காக நான் விடுமுறை எடுத்ததால் என்னை 
அந்த வேலையிலிருந்து நீக்கி விட்டனா்.

நீதிபதி : நீ யாரிடமாவது உதவி கேட்டிருக்கலாமல்லவா ?

குழந்தை : நான் காலையில் வீட்டை விட்டு இறங்கி ஐம்பதிற்கும் அதிகம் ஆளுகளிடம் நடந்துசென்று வேலை கேட்டேன் யாரும் எனக்கு வேலை தரவில்லை. நான் நம்பிக்கை 
வைத்தது எல்லாம் அஸ்த்தமித்தது.இறுதியில் இதை செய்யவேண்டிய சூழ்நிலையில் ஆளாக்கப்பட்டேன்.

பிறகு வழக்கின் வாக்கு வாதம்  முடிந்தது. நீதிபதி தீர்ப்பு அறிவிக்க தொடங்கினாா்.  இது மிகவும் உணா்ச்சிபூர்வமான திருட்டு. ரொட்டி திருடிய குற்றம் என்பதில்
சந்தேகமில்லை. இந்த குற்றத்திற்கு நாம்தான் பொருப்பு ஏற்கவேண்டும் என்னையும் சோ்த்துதான். நீதி மன்றத்திலுள்ள அனைவரும் குற்றவாளியே ! 

அதனால் நீதி மன்றத்திலுள்ள ஒவ்வொருவரும் நான் உள்பட அனைவரிடத்திலிருந்தும் பத்து டாலா் வசூலிக்கப்படவேண்டும் . இதை கொடுக்காமல் இங்கிருந்து
வெளியே செல்லக்கூடாது.

இதை  கூறிய நீதிபதி பத்து டாலரை எடுத்து மேசை மீது வைத்தாா். பிறகு பேனாவை எடுத்து தீர்ப்பு எழுத ஆரம்பித்தாா்.

பட்டினியால் திருடிய அந்த குழந்தை மீது மனித சினேகம் இல்லாத விதத்தில் நடந்தும், குற்றம் சுமந்தி போலீஸில் ஒப்படைத்து கொடுத்த கடை முதலாளிக்கு ஆயிரம் டாலா்
அபராதம் விதிக்கப்பட்டது. 24 மணிக்குா்குள்ளில் அபராத தொகை கட்டவில்லை என்றால் கடை முத்திரை போடப்பட்டு நிரந்தரமாக மூடப்படும் என்று நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னா் நீதிமன்றத்தில் வசூலித்த அபராதத் தொகை முழுவதும். அந்த குழந்தைக்கு நீதி மன்றம் வழங்கியது.

நீதிபதியின் தீர்ப்பை கேட்டு நீதி மன்றத்தில் ஆஜா் ஆன அனைவரும் திகைத்து நின்றனா்.ஆனந்தக் கண்ணீா் வடித்தனா்.

நீதிபதியின் தீர்ப்பை கேட்டு ஆச்சரியப்பட்டு நீதிபதியை மீண்டும், மீண்டும் உற்று பாா்த்து கொண்டிருந்தான் அந்த சிறுவன்.

நீதிபதி தன்னில் மறைத்து வைத்த கண்ணீர் அவரை அறியாமல் கண்ணிலிருந்து வழிந்து விழுந்தது.

நேர்மையும், நியாயமும் நிறைந்த மனித சினேகித நீதிமான்கள் நீதி பிடத்தின் துலாசை துல்லியமாக்கி நாம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாா்கள்.
------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.10.20

உங்கள் வீட்டிற்கு புது முகவரி வரப்போகிறது - தெரியுமா?


உங்கள் வீட்டிற்கு புது முகவரி வரப்போகிறது - தெரியுமா?

நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..!

வேலையை துவங்கியது அஞ்சல் துறை!

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை,

6 இலக்க எண் மட்டுமே..

மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

இந்தியாவை முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ள மத்திய அரசு மனிதர்களுக்கு ஆதார் எண்ணை வழங்கியதைப் போல் 

வீடு மற்றும் அலுவலகங்களுக்கு டிஜிட்டல் எண்  கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் இனி ஒவ்வொருவரின் வீட்டின் விலாசம் அகற்றப்பட்டு டிஜிட்டல் எண் பயன்படுத்தப்படும் அளவிற்கு இப்புதிய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தபால் துறை

தகவல் தொடர்பு துறையின் கீழ் இருக்கும் தபால் துறை, இந்தியாவில் இருக்கும் அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு

3 இலக்க பின்கோடை அடிப்படையாகக் கொண்டு

6 இலக்க ஆல்பாநியூமரிக் (ஆங்கில எழுத்துகள் உடன் எண்கள்) டிஜிட்டல் எண் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஈ-லொகேஷன்

கூகிள் மேப் வழங்குவதைப் போலத் தபால் துறை நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்களான அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்குத் 
தனித்தனியாக ஈ-லொகேஷன், 

ஆதாவது மின்னணு முறையிலான இருப்பிட விலாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் என்ன லாபம்..?

இப்படி அனைத்து அசையா சொத்துக்களையும் மின்னணு முறையில் இணைப்பதன் மூலம் சொத்தின் விபரம், அதன் உரிமையாளர், சொத்து வரி அறிக்கைகள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பின் விபரங்கள் என அனைத்தையும் ஒற்றைத் தளத்தில் கொண்டுவர முடியும்.

பயன்பாடு

இந்த 6 இலக்க ஆல்பாநியூமரிக் எண்களை விலாசத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தும் அளவிற்கு இது உருமாறும்.

சொல்லப்போனால் இனி வரும் காலத்தில் விசிடிங் கார்டுகளில் விலாசத்திற்குப் பதிலாக இந்த 6 இலக்க எண் மட்டுமே இருக்கும்.

மேப் மை இந்தியா

இப்போது நீங்கள் ஒருவரின் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும் என்றால் மேப் மை இந்தியா தளத்தில் 6 இலக்க எண்-ஐ பதிவிட்டால் போதும் செல்லும் வழியைக் காட்டிவிடும்.

முதற்கட்டம்

இத்திட்டத்தை முதல் கட்டமாக டெல்லி மற்றும் நொய்டாவில்
2 பகுதிகள்

அதாவது 2 பின்கோடுகளுக்கு மட்டுமே டிஜிட்டல் டேக்-ஐ உருவாக்கப்பட்டு வருகிறது.

உதாரணம்: இந்த டிஜிட்டல் டேக் ABD55F உங்கள் விலாசத்தை முழுமையாக வாங்கிக்கொண்டு சேமிப்பது மட்டும் அல்லாமல் பூமி அச்சுகூற்களையும் சேமித்து வைத்திருக்கும்.

மத்திய அரசு திட்டங்கள்

இத்தகைய முயற்சி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை
சரியான முறையில் நேரடியாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க 
மிகப்பெரிய அளவில் உதவி செய்வது மட்டும் அல்லாமல்
பல பினாமி சொத்துகள், அரசு சொத்துக்களைக் கையகப்படுத்துவதைக் குறைக்க முடியும்.

எளிமையான முறை..

இந்தியா போன்ற  நாடுகளில் நெருக்கமான வீடு மற்றும் அலுவலகங்களை விரைவாகக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று, அதனை எளிமைப்படுத்தும் ஒரு முயற்சிதான் தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் என்று மேப் மை இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஒப்புதல்

இத்திட்டத்தின் மாதிரி மற்றும் முழுவிபரங்களை

மேப் மை இந்தியா 

மத்திய தபால் துறையிடம் விளக்கம் அளித்த பின்பு,

அதனை முழுமையாக ஆய்வு செய்த பின்பே 

இத்திட்டத்திற்குத் தபால் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் படியே தற்போது முதற்கட்ட சோதனை முயற்சிகள் டெல்லி மற்றும் நொய்டா பகுதியில் மேற்கொண்டு வரப்படுகிறது.

இந்தச் சோதனை திட்டம் வெற்றியடைந்தால், மேப் மை இந்தியாவின் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும்
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.10.20

உங்கள் வங்கிக் கணக்கின் மூலம் உங்களுக்கு காப்பீடு உண்டு - தெரியுமா?


உங்கள் வங்கிக் கணக்கின் மூலம் உங்களுக்கு காப்பீடு உண்டு - தெரியுமா?

வங்கிக் கணக்கு இருந்தாலே ரூ.10 லட்சம் காப்பீடு!
By ஜெ.சரவணன் saravanan.j@hindutamil.co.in

வாழ்க்கை மேலும் மேலும் நிச்சயமற்றதாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் எல்லோருக்குமே காப்பீடு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. திடீர் மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகளை நிதி நெருக்கடி ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டுமெனில் நிச்சயம் காப்பீடு தேவை. காப்பீட்டின் அவசியத்தை அறிந்தவர்கள் காப்பீடு எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானோர் நமக்கு என்ன ஆகிவிடப்போகிறது, பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருப்பார்கள். எதுவும் ஆகவில்லை என்றால் கட்டிய பிரீமியம் வீண்தானே என்றும் சிலர் நினைப்பதுண்டு. ஆனால், வங்கிக் கணக்கு இருந்தாலே காப்பீடு வசதி கிடைக்கும் விஷயம் பற்றி தெரியுமா?

1 வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மீது ஒவ்வொரு வங்கியும் காப்பீடு வழங்குகிறது. வங்கிக் கணக்கு மூலம் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகிய இரண்டு காப்பீடு திட்டங்கள் 2015லிருந்தே நடைமுறையில் உள்ளன. இந்தத் திட்டங்களின் மூலம் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கிடைக்கலாம்.

2 பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கானது. பிரீமியம் வருடத்துக்கு ரூ.330. பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கானது. பிரீமியம் வருடத்துக்கு ரூ.12. இந்த பிரீமியம் தொகை வங்கிக் கணக்கிலிருந்தே எடுத்துக்கொள்வார்கள்.

3 விபத்து ஏற்படும்போது கண்பார்வை, கை, கால் ஆகியவற்றை நிரந்தரமாக இழந்தால் இந்தத் திட்டங்களில் ரூ.2 லட்சம் வரை கிளெய்ம் கிடைக்கும். ஒரு கண், ஒரு கால், ஒரு கை போன்றவை இழக்க நேர்ந்தால் ரூ.1 லட்சம் வரை கிளெய்ம் கிடைக்கும்.

4 மேலும் இந்தத் திட்டங்களில் ரூபே கார்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை கிளெய்ம் கிடைக்கும். விசா, மாஸ்டர் கார்டு போன்றவற்றுக்கு அதற்கு ஏற்ப கிளெய்ம் தொகை மாறுபடும். பயனாளியின் வங்கிக் கணக்கின் சேமிப்பு, பணப்பரிவர்த்தனை ஆகியவற்றைப் பொறுத்தும் காப்பீட்டுத் தொகை மாறும். குறிப்பாக ஒரு நபருக்கு பல டெபிட், கிரெடிட் கார்டுகள் இருந்தாலும் ஒரே ஒரு கார்டில் மட்டுமே கிளெய்ம் கிடைக்கும். அந்த கார்டு செயல்பாட்டில் இருப்பது அவசியம்.

5 இயற்கையாகவோ தற்கொலை காரணமாகவோ மரணம் ஏற்பட்டால் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்திலும், விபத்தால் மரணம் ஏற்பட்டால், பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்திலும் க்ளெய்ம் கோரலாம்.

6 இந்தக் காப்பீட்டு திட்டங்களில் கிளெய்ம் பெற முதலில் வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். க்ளெய்ம் பெறுவதற்கான விண்ணப்பம், அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை மரணம் அல்லது விபத்து நடந்த 90 நாட்களுக்குள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை சரிபார்த்து வங்கிகள் காப்பீடு நிறுவனங்களுக்குத் தங்கள் பரிந்துரைகளை அனுப்பும். பின்னர் கிளெய்ம் தரப்படும்.

7 காப்பீடு பெறுவதற்கு விபத்து எனில் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை மற்றும் மருத்துவ சான்றுகளும், மரணம் எனில் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். இந்த ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட நபரின் நாமினி வங்கியை அணுக வேண்டும்.

வங்கிக் கணக்கில் கிடைக்கும் இந்தக் காப்பீடு வசதிகளைப் பற்றி வங்கியாளர்களிடம் அனைவரும் கேட்டுத் தெரிந்துகொண்டால் ஆபத்துக் காலங்களில் கைகொடுக்கும்.
-----------------------------------------
Your ATM card can provide you insurance up to Rs 10 lakh: 5 ...www.financialexpress.com › yo...
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.10.20

என்ன குறியீடு சாமி அது?



என்ன குறியீடு சாமி அது?

*🌈நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்,,,*🍁

🌈இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம்.

🌈அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

🌈அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும்,அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.

🌈ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். 

🌈இந்த கற்சிலைகளைப்பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது.

🌈இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

🌈நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் தரிசித்து வந்தார்கள்.

🌈இதனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

🌈இந்த விசயம் தற்கால மனிதர்களுக்கு தெரியாது.

🌈ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு, ரோகக்காரகன் (நோய்க்கு காரணமானவன்),சத்ரு காரகன் (பகைக்கு காரணமானவன்),ருணக்காரகன் (கடன் தொல்லைக்கு காரணமானவன்) என்று பெயர். 

🌈இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீச்சம் அடைகிறது,அதாவது செயலற்று போகிறது.

🌈"ஆயில்யம்” என்றால் “பிண்ணிக்கொள்வது” அல்லது “தழுவிக்கொள்வது” என்று பொருள்படும்.

🌈இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் உருவம் பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவமாகும்.

🌈எனவே பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவத்தை தினமும் தரிசித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ரகசியமாகும்.



-----------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.20

கடவுளின் அமிர்தம் எது?


கடவுளின் அமிர்தம் எது?

பெருங்காயம் ஃபெருலா அசஃபொட்டிடா ( Ferula asafoetida )  என்ற செடியின் வேர், தண்டிலிருந்து சுரக்கும்  ஒருவித பசையிலிருந்து  கிடைக்கிறது .

இயற்கையாக கிடைக்கும் பெருங்காயம் துர்நாற்றம் கொண்டதாக இருப்பதால் இதை ஆரம்ப காலத்தில் 'சைத்தானின் கழிவு' என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

ஆனால் இது பல வைரஸ்களை அழிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று ஒரு காலத்தில் நிரூபணம் ஆனதும் 'கடவுளின் அமிர்தம் ' என்று கொண்டாடப்பட்டது.

இது பெர்சியாவை பிறப்பிடமாகக் கொண்டது என்றாலும் துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது.

பெருங்காயச் செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேரையும் கீறிவிட்டு அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால் அதுதான் பெருங்காயம்.

இதில் வெள்ளை பெருங்காயம் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

கலப்படம் இல்லாத பெருங்காயம் எளிதில் தீப்பற்றிக் கொண்டு எரியும் தன்மை கொண்டது. பெருங்காய வாசனை காற்றில் கரையக் கூடியது என்பதால் அதை திறந்து வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் அது வெறும் பெருங்காய டப்பா.

பெருங்காயத்தைப் பற்றி  இந்த தகவல் உங்களுக்கு உபயோகப் படலாம். அதற்காகத்தான் பதிவிட்டேன்

படத்தில் இருப்பது பெருங்காயச் செடி.

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார் 
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.8.20

நேர்மையான நீதிபதிகள்!!!!


நேர்மையான நீதிபதிகள்!!!!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார்.

தவறை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார்.

``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார்.

'``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார்.

உடனே அந்த மாஜிஸ்திரேட் ``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார்.

``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன்.

``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட்.
மகாஜன் வெளியில் வந்தார்!

மெகர் சந்த் மகாஜன்
------------------------------------------------------------------------
* சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.சத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை.

அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது.

அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், சத்தியதேவ் தன் மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்பிப் போனார்.

அவருக்குத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை.

தலைமை நீதிபதி 6 வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால்
 `பொறுப்பு தலைமை நீதிபதி’ நியமிக்கப்படுவது வழக்கம்.

அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே
6 வாரம் விடுமுறை எடுத்தார்.

அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!
-----------------------------------------------------------------------------------------
* குரு பிரசன்ன சிங். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர்.
 ``பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது. அதனால், ஓய்வு பெறுகிறேன்'' எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு இருந்து, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனசாட்சிக்குப் பயந்து நேர்மையோடு நடந்துகொண்ட புண்ணியவான்!

* ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது ஆசிட் அடித்தது,
நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்கு, வழக்குப் போட்ட வழக்கறிஞர்களுக்கு வெட்டு, நீதிபதி வீட்டுக்குக் குடிநீர் கட் என 1991-1996 ஜெயலலிதா ஆட்சியில் நடந்த திகில் விஷயங்கள் அனைத்தும் நீதிபதி குன்ஹாவுக்கு நன்றாகவே தெரியும்.

 அப்படியான சூழலில் சுதந்திர இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை, ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்புகிறார் என்றால் குன்ஹா எவ்வளவு பெரிய நீதிமான்

* நீதிபதி கே.பி.சுப்பிரமணியம் கவுண்டரின் தந்தை கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.

சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிக்னலைத் தாண்டி வந்துவிட்டது.

அந்தக் காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள்.

இவரைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ``அபராதம் கட்டத் தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும்

பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போனார் நீதிபதி பழனிசாமி.
----------------------------------------------------------------------------------------------
* மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம் இது!

ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி.
அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். `

`என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ``இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று வழக்கறிஞர்கள் சொன்னார்கள்.

உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ``இதோ வருகிறேன்'' எனச் சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்கான தண்டனையாக,
ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.

* சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுப்பிரமணிய ஐயர். அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார்
சுப்பிரமணிய ஐயர்.

இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டுப் படிக்க முயன்றும் முடியவில்லை.
பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார்.

என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்குப் போன சுப்பிரமணிய ஐயர்,
ஆளுநருக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். ஆம். `கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லை’ எனப் பதவியை உதறியவர் சுப்பிரமணிய ஐயர்.

- இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறைய பேர் நீதித்துறையில் நிரம்பியிருக்கிறார்கள்.

அன்றும் இருந்தார்கள்.
இன்றும் இருக்கிறார்கள்.   
ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பதவி... **நீதிபதி**

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.7.20

இந்து மதத்தைத் தழுவிய அமெரிக்க செல்வந்தர்!!!


இந்து மதத்தைத் தழுவிய அமெரிக்க செல்வந்தர்!!!

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்ட் (Ford) நிறுவன உரிமையாளர்  ஆல்பிரட் ஃபோர்ட் தன் குடும்பத்துடன் இந்து மதத்தை தழுவியது அனைவரும் அறிந்ததே..!

தற்போது அவர் இந்து-கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சிக்காக ரூ. 250 கோடி நன்கொடை அளித்துள்ளார். உலகின் மிகப்பெரிய இந்து கோவில் இந்தியாவில் கட்டுவதற்கான திட்டத்தையும் இவர் செயல்படுத்தி வருகிறார்.

இந்து மதத்தை தழுவிய பிறகு ஆல்பிரட் ஃபோர்டு தனது பெயரை அமர்இஸா தாஸ் என்றும் அவரது மனைவி பெயர் ஷர்மிளா என்றும் மாற்றிக்கொண்டார்.

இது தான் நமது சனாதன மதத்தின் சக்தி..!

ஹர ஹர மஹாதேவ்...!

Additional information

Alfred Brush Ford (born 1950), also known as Ambarish Das (IAST: Ambarīśa Dāsa), is an American heir to the Ford fortune. He is a great-grandson of Henry Ford, founder of the Ford Motor Company.

Background
See also: Ford family tree
Alfred Ford's father was Walter B. Ford II (1920–1991), whose family were prominent in chemical manufacturing in the Downriver area south of Detroit. His mother, Josephine Clay Ford (1923–2005) was the daughter of Edsel Ford (1893–1943), who was the son of Henry Ford (1863–1947).[4] The two Ford families were unrelated to each other; both his father and mother were born with the last name Ford.

Alfred and William Clay Ford, Jr. (b. 1957), the current executive chairman of the Ford Motor Co., are first cousins. Alfred's mother was the sister of William Clay Ford, Sr. (1925–2014), William Clay Ford, Jr.'s father.

Alfred Ford currently serves on the board of directors of privately held digital marketing firm ChannelNet, where he is also an investor. Ford Motor Company was one of ChannelNet's early clients.

Association with the Hare Krishna Movement

He is an initiated disciple of A.C. Bhaktivedanta Swami Prabhupada (Srila Prabhupada) since 1974. He first met Bhaktivedanta Swami in Dallas, USA.Alfred Ford joined the International Society for Krishna Consciousness (the Hare Krishnas) in 1975 and that same year he made his first trip to India with Prabhupada. He assisted in the establishment of the first Hindu temple in Hawaii and also donated $500,000 to help establish the Bhaktivedanta Cultural Center in Detroit[6] which was completed in 1983.[3] Alfred Ford has made many significant donations to ISKCON over the years which have assisted ongoing projects to build the Pushpa Samadhi Mandir of Prabhupada. He is the chairman of the Sri Mayapur Temple of the Vedic Planetarium (also called TOVP).

Ford is said to have supported the construction of a Vedic cultural centre in Moscow at an estimated cost of $10 million.He also bought a $600,000 mansion to house a Hare Krishna temple and learning centre in Honolulu.
------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.7.20

கேஜ்ரிவாலும் அரசாங்க உத்தியோகமும்!


கேஜ்ரிவாலும் அரசாங்க உத்தியோகமும்!

டெல்லி  முதல்வருக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது...*

*கணவன், மனைவி* இருவரில் யாராவது ஒருவர் தான் *அரசு சம்பளம்* வாங்க வேண்டும் .

அது மாநில அரசாக இருந்தாலும் சரி.

 மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி.

 சட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது.

 *இருவர்களில் ஒருவர் ராஜினாமா செய்தாக வேண்டும்.*

கெஜ்ரிவாலின் அதிரடித் திட்டம்...👏👌

குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய
அரசு வேலை

முதலமைச்சரின் புதிய திட்டம்

இதனால் அனைவரும் மகிழ்ச்சி. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மக்கள் அதிக ஆர்வம். மீண்டும் அவரே முதல்வர் என முதல்வருக்கு பாராட்டு

 1.இத்திட்டத்தின்படி குடும்பம் என்பது கணவன் மற்றும் மனைவி இரண்டு பேர் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளபடும்

 2. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு கட்டாய அரசு வேலை  வழங்கபடும்

3. ஏற்கனவே கணவன் மனைவி இரண்டு பேரும் அரசு பதவியில் இருந்தால், யாராவது ஒருவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஒருவர் பதவி பறிக்கப்படும் . ராஜினாமா செய்தவர்கள் தனியார் துறையில் வேலை செய்யலாம். அவர்கள் அரசு துறையில் பணியாற்ற வேண்டும் என நினைத்தால், அதற்கு அரசும் சம்மதித்தால் அவருக்கு contract   சம்பளம் Rs. 10, 000 மட்டுமே வழங்கபடும்.

3. திருமணம் ஆகாத,  ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்ய நினைத்தால், அவர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அது  சட்டபடி குற்றம்

4.  இத்திட்டத்தின் படி  குறைந்தது ஒருகோடிக்கு  அதிகமான சொத்து உள்ள குடும்பங்களுக்கு  அரசு வேலை கிடையாது. அவர்கள் PAN Card, Income tax விவரங்களை அரசு சோதனை செய்யும்.

5. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர்  மத்திய அரசு ஊழியர் என்றால், நல்ல ஊதியம் பெறுபவர் என்றால் மற்றவருக்கு  மாநில அரசு வேலை கிடையாது.

6. இத்திட்டத்தின் படி எந்த ஒரு நபரும் , வேலைக்கு சேர்ந்தது முதல் 30   வருடம் மட்டுமே அரசு வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் குற்றம்

7.ஏற்கனவே அரசு பதவியில் இருப்பவர்கள் வருமான வரித்துறையின் சோதனைக்கு உட்படுவார்கள். அவர்கள் சொத்து மதிப்பு ஒருகோடிக்கு மேல் இருந்தால் அது குற்றம். மற்றும் பதவி பறிக்கப்படும்

8.  இதன்படி புதிதாக அரசு வேலைக்கு ஆள் எடுக்கும் போது தற்போதுள்ள கல்விதகுதி, உடற்தகுதி,    எழுத்துதேர்வு தகுதி, ஜாதி தகுதி,  பிற சிறப்பு தகுதி(வாரிசு தகுதி, தனியார் துறை அனுபவம், விளையாட்டு வீரர்கள்... )   மட்டும் இல்லாமல் கீழ்கண்ட புதிய  தகுதியும் கணக்கில் கொள்ளட்டும்.

a.   ஒருகோடிக்கு மேல் குடும்ப சொத்து அல்லது வருமானம் இருக்ககூடாது.

b.  குழந்தைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

c.  இதுவரை அரசு  வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

d.ஏற்கனவே கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் மத்திய மாநில அரசு வேலையில் இருந்தால் மற்றவர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதே குற்றம்

f. கிராமத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

g. வேலைக்கு சேர்ந்தவர்கள் எந்தெந்த தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட்டார் என்ற விவரம் ஒளிவுமறைவின்றி தனியாக  வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியபடுத்த படும்.,

h. ஒப்பந்த தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உள்ள விதவை பெண்களுக்கு முன்னுரிமை

இப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் உன்னதமான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம்  கீழ்கண்ட் நன்மைகள் நடைபெறும்

a. குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை கிடைக்கும்.

b. சமூகத்தில் குற்றங்கள் குறையும்

c. குடும்பத்தில் ஒருவர் அரசு வேலை செய்யும்போது அரசின் மற்ற திட்டங்களை மிக எளிதாக அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியபடுத்துவார்

d.  குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை என்பதால்  , அரசியல் மற்றும் பண பலத்தால் ஒரே குடும்பத்தில் அதிக அரசு வேலை பெறுவோர் வேலை பறிக்கப்படும். அந்த பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு வழங்கப்படும்.

e. பணக்காரர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அரசு வேலை கிடைக்கும். வாழ்வு மகிழ்ச்சியாகும்

f.  திருமணம் ஆகாத அரசு ஊழியர்  இரண்டு பேர் திருமணம் செய்யும்  போது யாராவது ஒருவர் அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அந்த வேலை இன்னொரு குடும்பத்திற்கு கிடைக்கும்.

g. குழந்தைகள் உள்ளவர்களுக்கு புதிதாக அரசு பணியில் முன்னுரிமை என்பதால் அந்த குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகும்

h. 30 வருடத்திற்கு மேல் அரசு பதவியில் இருக்ககூடாது என்பதால் வீணாக அரசு அதிகார சுகத்தை அனுபவிப்பவர்கள் பதவி பறிக்கப்படும். அந்த பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு கொடுக்கபடும்

i. இதன்மூலம் தனியார் துறையில் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை செய்யும் ஏழை, நடுத்தர குடும்ப உறுப்பினர்கள் பலகோடி பேருக்கு  அரசு வேலை கிடைக்கும்.

j. இதன் மூலம் இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்

k.  ஏற்கனவே உள்ள தகுதியோடு கூடுதலாக சில தகுதிகளை சேர்த்துள்ளதால் சமுக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்தந்த சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும்

i.  கிராமத்தில் உள்ளவர்களுக்கு அரசு  வேலை கிடைக்கும்

j. எந்தெந்த   தகுதி  அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தார் என்ற விவரம்  வெப்சைட்டில் வெளியிடுவதால் அரசை ஏமாற்றி யாரும்  அரசு வேலையில் தரமுடியாது. அப்படி சேர்ந்தாலும் அவர்கள்  மீது பொதுமக்கள் புகார் அளிக்க முடியும்.  ,

k. ஒப்பந்த தொழிலாளர்   மற்றும் குழந்தைகள் உள்ள விதவை வாழ்வு வசந்தமாகும்

தற்பொழுது அரசு வேலையில் ஏமாற்று சக்திகள் அதிக அளவில், பல்வேறு மறைமுக வழியில் புகுந்து கொண்டதால், வேலையே செய்யாமல்  ஒரு லட்சத்திற்கும் அதிகமான சம்பளம் வாங்குவதால் மற்றும் குறைவான அரசு வேலையே இருப்பதால், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரசு வேலை என்பது எட்டாத கனியாகவும், நிறைவேறாத கனவாகவும் உள்ளது. இதனால் படித்த பல குடும்பம் பல ஆண்டுகளாக  ஏழ்மை நிலையில் உள்ளது. 

எனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் இந்த உயரிய திட்டம் செயல்படுத்தபடும்போது அனைத்து குடும்பமும் மகிழ்ச்சி அடையும்.   

       மொத்தத்தில்  அரசு வேலை என்பது ஏழை எளிய  நடுத்தர  மக்களின் வாழ்வாதாரத்தை உயர்துவதற்கும், லஞ்சம் ஊழல் இல்லாமல் நேர்மையாக பணி செய்வதற்கும் தான்.

பணக்காரர்களும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களும், அடிக்கடி போராட்டம் நடத்தி அரசை மிரட்டுபவர்களும், லஞ்சம் ஊழல் செய்பவர்களும், பரம்பரையாக அரசு பதவியில் இருப்பவர்களும், அரசை ஏமாற்றி குறுக்கு வழியில் வந்தவர்களும்    நீக்கபட்டால் அரசு அலுவலகம் சிறப்பாக இயங்கும்

மேலும் இத்திட்டத்தை தொடங்க நினைப்பது டெல்லியில் உள்ள ஏழை மக்களின் நாடிதுடிப்பை அறிந்த,  மக்களின் முதல்வர் திரு. கெஜ்ரிவால் அவர்கள். அவர் இரண்டு முறை முதல்வர் ஆனவர். இத்திட்டத்தை தொடங்கியதும் மூன்றாவது முறையாக அவரே முதல்வர் ஆவார்.

  இவரை போலவே மற்ற அனைத்து மாநிலங்களிலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் பெரும் எதிர்பார்பாக உள்ளது. வாழ்க கெஜ்ரிவால். வளர்க அவரது புகழ். தொடரட்டும் அவர் மக்கள் பணி. இவர் இந்த திட்டத்தை தொடங்க இருக்கிறார் என்பது அவரது கட்சியினர் மூலம் பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் அனைவரும் அவரை ஊடகம் மற்றும் சமுக வலைதளம் மூலம் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.5.20

வியக்கவைக்கும் கிணறு!!!


வியக்கவைக்கும் கிணறு!!!

சுவஸ்திக கிணறு..... கி.பி. 800 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்தி வர்மன் ஆட்சிக் காலத்தில் சுவஸ்திக வடிவில் இக்கிணறு வெட்டப்பட்டது என்றும், தந்தி வருமனின் பட்டப் பெயரின் ஒன்றான மார்பிடுகு பெருங்கிணறு என பெயரிடப்பட்டிருந்தது என்றும் இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது என தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கிணறு உள்ளது என்று வைத்த போர்டில் வாசித்தோம்.

மேலும் நாலு மூலை கேணி என்றும் இக்கிணற்றில் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் குளிக்கும்போது எதிரில் இருக்கும் படிக்கட்டுகளில் குளிப்பவர்கள் தெரியாத அளவிற்கு கல்தூண்களால் ஆன மறைவு கற்களை கொண்டு அமைந்துள்ளது. மாமியார் குளித்தால் மருமகளுக்கு தெரியாது, மருமகள் குளித்தால் மாமியாருக்கு தெரியாது என்பதால் இதற்கு மாமியார்-மருமகள் குளம் என்று பெயர் பெற்றதாக கிராம மக்களால் காலம் காலமாக அழைக்கபட்டு வருகிறது.

இக்கிணற்றை தாங்கள் காணவேண்டுமெனில் திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் 108 வைணவத் திருத்தலங்களின் ஒன்றான திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ளது.

இந்த கோவிலின் ஒரு தேர் திருவிழாவிற்கு பெஸ்ட் போட்டோகிராபி டுடே ஆசிரியர் பழனிக்குமார் போட்டோ வாக் சென்றிருந்தபோது, இக்கிணற்றை முழுவதுமாக படமெடுக்க முயன்றபோது, அல்ட்ரா வைடு லென்ஸ் இல்லாத காரணத்தால் முடியவில்லை. அருகிலிருந்த நாற்பதடி உயர தண்ணீர் டேங்க் மேலேறி, பலமான காற்று வீசினாலும், ரிஸ்க் எடுத்து, பதிவு செய்த காட்சிதான் நீங்கள் பார்ப்பது.


----------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.3.20

நீங்களும் நானும் ஆக்ஸிஜனும்!

நீங்களும் நானும் ஆக்ஸிஜனும்!

"பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்...?*

*ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்...?*

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை'னு கேக்கறீங்களா...?

காரணம் இருக்கு... அதை கடைசியா சொல்றேன்... இப்ப பதில் சொல்லுங்க... 

"இதென்ன கேள்வி...? எல்லா உயிரினங்களும் அழிந்து போகும்...!" என்கிறீர்களா...?

ஓகே... நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்...?

'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை... என்ன... எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது... பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை...' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்...

இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூலக்கூறு மற்றும் தூசுகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது...
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும்ம்'ன்னு இருட்டா கருப்பா ஆயிடும்.  மேலும் இப்போது பார்ப்பதை போல அனைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல  வெளிச்சம், குவிக்க பட்ட நிலையில் கிடைக்கும். (சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க, இன்னும் விடியலை போல'னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும்... அது வீடோ பாலமோ... எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல பொல பொலவென உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கியப் பிணைப்பு ஆக்சிஜன் தான்.

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது  ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும். எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன். அதாவது வாயு. அதுவும் அது எப்படி பட்ட வாயு...? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹைட்ரஜன். எனவே மொத்த கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவியாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல காணாம கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டி இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில்  ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது.. (நிக்க நேரம் இல்லனா சமாளிக்கலாம் நிற்க நிலமே இல்லனா என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள்... நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல... சூரியனில் உள்ள புறஊதாவை ஓசோன் (O 3) தான் வடிகட்டி அனுப்புகிறது. அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும்  தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காது குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்கபடாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைப்பதற்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்.. அழுத்தம் கணிசமான அளவில் குறைந்துவிடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும்...!  (ஹலோ நான் சொல்றது கேக்குதா...? ஹலோ.... ஹலோ....??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்கபடுவது ஆக்சிஜன் தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம்.. ஓடும் கார்.. பைக்.. எதுவானாலும் அங்கங்கே  இயங்காமல் நிற்கும். (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும்.
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு  இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான். அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக் கொள்ளும்...!

இப்ப சொல்லுங்க...
பூமியில் ஐந்து நொடி... ஐந்தே ஐந்து நொடி...  பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?

நிச்சயமாக முடியாது தானே...?
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்...? 

அப்படிப்பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி செய்ய முடியாத ஆக்சிஜனை ஒரு மரத்தால் உற்பத்தி செய்ய முடியும்...!

எனவே

*"மரம் வளர்ப்போம்...! ஆக்சிஜன் பெருக்குவோம்...!"*

நன்றி:tamil.pratilipi.com
------------------------------------------
படித்ததில் பிடித்த பதிவு
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.3.20

சீட் பெல்ட்டின் முக்கியத்துவம்!!!!

சீட் பெல்ட்டின் முக்கியத்துவம்!!!!

மருத்துவர் இளங்கோவன் 30 ஆண்டுகள் கால நண்பர். தர்மபுரிக்கு முதன் முதலாக வந்த காலத்திலிருந்து, நன்மையிலும் தீமையிலும் பங்கேற்றவர். தே.மு.தி.கவின் மாநில அவைத்தலைவராக இருக்கிறார்.

ஒரு நாள் (26.11.2019) அதிகாலை ஒரு மணி அளவில், சென்னையை நோக்கி அவரும், அவருடைய நண்பர் மூளை, நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர். சங்கரும் இன்னோவா காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ஓட்டுனர் காரை ஓட்டிக் கொண்டிருக்க, முன் இருக்கையில் மருத்துவர் சங்கர் அமர்ந்திருந்தார். நடுவில் இருக்கும் இருக்கையில் மருத்துவர் இளங்கோவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். 

அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் இருக்கும் சுங்கச்சாவடி முன்பாக நிதானமான போது, பின்னால் வேகமாக வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்று காரின் பின்புறத்தில் இடித்தது. இடித்த வேகத்தில் படித்துக்கொண்டிருந்த இளங்கோவன் புரண்டு விழுந்தார். அவர் உடனடியாக எழுந்து, வண்டிக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புகளைப் பார்த்தார். லாரி ஓட்டுனரிடம் சண்டையிட்டது மட்டுமல்லாமல், இழப்பீடு குறித்துப் பேசி காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

மீண்டும் இன்னோவா வாகனத்திலேயே சென்னையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வண்டி புறப்பட்டவுடன் இளங்கோவன் "தலை கொஞ்சம்  வலிக்கிறது. சிடி ஸ்கேன் செய்து பார்த்து விடலாமா?" என்று கேட்டார்.

மருத்துவர் சங்கர் 'சரி' என்றுச் சொல்லி சிறிதுத் தொலைவில் இருந்த சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இளங்கோவன் காரிலிருந்து இறங்கி சிடி ஸ்கேன் அறைக்கு நடந்து  சென்றார்.

சிடி ஸ்கேனில் மண்டைக்குள், மூளையைச் சுற்றி சிறிது ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தது தெரிந்தது. உடனே மருத்துவர் சங்கர் சென்னையில் இருக்கும் அவருக்குத் தெரிந்த மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரைத் தொடர்பு கொண்டார். அவர் உடனடியாக நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டுவரச் சொன்னார்.

அப்பொழுது இளங்கோவனுக்கு கொஞ்சம் வாந்தி வந்தது. லேசாகத் தலைச் சுற்றுவது போல இருந்தது. எனவே ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். வண்டி போகப் போக இளங்கோவனுக்கு மயக்கம் அதிகமானது. மருத்துவமனையை நெருங்கும்போது முழு நினைவையும் இழந்தார். சிம்ஸ் மருத்துவமனையின் அவசரப் பிரிவின் வாயிலிலேயே காத்திருந்த மூளை நரம்பியல் மருத்துவர் சூரியபிரபு  நோயாளியை உடனடியாக அறுவை அரங்கத்துக்கு மாற்றச் செய்தார்.

எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் நேரடியாக கொண்டுச் செல்லப்பட்ட நோயாளிக்கு, தலையில் இருக்கும் மயிரை அகற்றுவது கூட அறுவை அரங்கிலேயே செய்யப்பட்டு உடனடியாக அறுவைச் சிகிச்சைத் தொடங்கியது. மண்டை ஓட்டிற்குள் மூளையைச் சுற்றி இருந்த 300 மில்லி ரத்தம் அகற்றப்பட்டது. ரத்தக் கசிவு காரணமாக இருந்த ரத்தக்குழாய் கண்டறியப்பட்டு ரத்தப்போக்கு நிறுத்தப்பட்டது. மிகப் பெரிய ஆபத்திலிருந்து மருத்துவர் இளங்கோவன் தப்பினார்.

அவருடன் மூளை, நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரான மருத்துவர் சங்கர் இல்லாமலிருந்தால், சவிதா மருத்துவமனையிலிருந்து சிம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஏதேனும் போக்குவரத்துத் தடங்கல் ஏற்பட்டிருந்தால், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சூரிய பிரபு அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வராமலிருந்தால், அறுவை அரங்கம் வேறு ஒரு அறுவை சிகிச்சை காரணமாக உடனடியாகக் கிடைக்காமல் இருந்தால்..... இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்திருந்தாலும் விளைவு விபரீதமாக இருந்திருக்கும். சரியான நேரத்தில் ஆபத்து கண்டறியப்பட்டு, மிகச் சரியான நேரத்தில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நடந்த விபத்து மிகச்சிறிய விபத்து. யாருக்கும் பெரிய வெளிக்காயம் கிடையாது. விபத்துக்குப் பின்னர் வாகனம் உடனடியாக ஒட்டப்பட்டது. இந்தச் சிறிய விபத்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் அளவுக்கான காயத்தை ஏற்படுத்தியதன் காரணம், ஏற்பட்ட காயம் தலைக்காயம் என்பது தான்.

சீட் பெல்ட் அணிவது உயிர் காக்கும் என்பதற்காகத்தான் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.  வளர்ந்த நாடுகளில், காரில் இருக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாயம். குழந்தையாக இருந்தால், குழந்தைக்கான சீட் பெல்ட் உள்ள இருக்கையில் இருக்க வைக்க வேண்டியது கட்டாயம். நம் நாட்டில் ஓட்டுனரும், ஓட்டுனருக்கு அருகில் இருப்பவரும் சீட் பெல்ட் அணிவது மட்டுமே கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இளங்கோவன் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்து இருந்தால் இந்த விபத்தினால் சிறு காயம் கூட ஏற்பட்டிருக்காது.

அவர் சீட் பெல்ட் அணியாமல் படுத்து இருந்ததுதான் ஆபத்தை ஏற்படுத்தியது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கச் செயலாளராக இருந்த அறிவுச்செல்வன் இதேபோல பின்னிருக்கையில் படுத்திருந்த காரணத்தினால்தான் சிறிய விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தர்மபுரி முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆனந்தகுமார், பின் இருக்கையில் படுத்துக் கொண்டு பயணம் செய்த போது, இதேபோல பின்னால் வந்த வாகனம் மோதி, கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்து சில ஆண்டுகள் கழித்து உயிரிழந்தார்.

இந்தியச் சாலைகளில் பயணம் செய்வது உலகத்திலேயே மிக ஆபத்தானது. சாலை அமைப்புகள், குறியீடுகள் ஆகியவற்றில் மிகப்பெரிய தவறுகள் இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே முகநூலில் எழுதி இருக்கிறேன்.
ஆனால் சாலைப் பயணமில்லாமல் இந்த நூற்றாண்டில் வாழவே முடியாது.

முடிந்தவரை சாலைப் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்ற, கவனத்துடனும் பொறுமையுடனும் செல்வது அவசியம். எந்தச் சூழ்நிலையிலும் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். இரயில் பயணம், சாலைப் பயணத்தை ஒப்பிடும்போது பலமடங்கு பாதுகாப்பானது.

எல்லாவற்றையும்விட, வாகனத்தில் பயணம் செய்யும் எல்லோரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். படுத்துக்கொண்டு போவது எந்த விதத்திலும் பாதுகாப்பில்லாதது.

தலைக் காயங்கள் சில மணித்துளிகளிலேயே மரணம் தரக்கூடியவை. இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியாமல் ஓட்டுவது தற்கொலை முயற்சி என்றே கருதப்பட வேண்டும்.

https://www.youtube.com/watch?v=y3InF19dzlM
https://www.youtube.com/watch?v=s-ARAkG3oPE

ஆக்கம்:
மருத்துவர் இரா. செந்தில்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்
27.11.2019, இரவு. 9.00 மணி
-------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.3.20

அடங்கிப்போன உலகம்!!!!


அடங்கிப்போன உலகம்!!!!

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,
மழை அதன் போக்கில் பெய்கின்றது,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை

மான்கள் துள்ளுகின்றன,
அருவிகள் வீழ்கின்றன,
யானைகள் உலாவுகின்றன,
முயல்கள் விளையாடுகின்றது,
மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன

தவளை கூட துள்ளி ஆடுகின்றது,
பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,
காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ,
சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது

முடங்கியது உலகமல்ல,
மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.
அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்
அவன் மட்டும் ஆடினான்,
அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை,
உழைப்பென்றான்
சம்பாத்தியமென்றான்
விஞ்ஞானமென்றன்
என்னன்னெவோ உலக நியதி என்றான்

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக ,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்

ஓடினான், பறந்தான், உயர்ந்தான், முடிந்த மட்டும் சுற்றினான்,
கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்
அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது
அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்
முடங்கி கிடக்கின்றான் மனிதன் ,
கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்

அவன் வீட்டில் முடங்கி கிடக்க,
வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்.,
கொஞ்சி கேட்கின்றது சிட்டு,
கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்

தெருவோர நாய் பயமின்றி நடக்க,
வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன்.
தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில்,
வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு

அவமானத்திலும் வேதனையிலும்
கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து
கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்...
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.3.20

உங்கள் வயது அறுபதை தாண்டிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!


உங்கள் வயது அறுபதை தாண்டிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!

60/65 வயதிற்கும் மேல் உள்ள ஆண்கள், பெண்களுக்கு, சில முக்கியமான டிப்ஸ்:-

1. கவலைப் படுவதால் எந்தப் பலனும் இல்லை என்பதால்- எதற்காகவும்,  யாருக்காகவும் கவலைப் பட வேண்டாம்.

2.வீட்டைத் தண்ணீர் கொண்டு  துடைக்கும்பொழுது. நடக்க வேண்டாம்.

3.ஸ்டூல்,நாற்காலி,மீது ஏறி பொருட்களை எடுப்பது, சுத்தம்செய்வது, துணிகளை காயப்போடுவது, ஆகியவற்றை    தவிர்க்கவும்

4.கார் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாகக் கூட  இருக்க வேண்டும்!

5.மாத்திரைகளை வேளாவேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

6.உங்களை எந்த விஷயம் சந்தோஷப்படுத்துதுதோ அதை யாருக்காகவும்,காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வேண்டாம்!!!!.

7.வங்கிக்கு அதிகப் பணம் எடுக்கச்சென்றால் தனியாகச் செல்ல வேண்டாம்.

8.வீட்டில் தனியாக இருக்கும்பொழுது அறிமுகமில்லாதோர் வந்தால் கவனமாக அச்சூழலைக் கையாள வேண்டும்.

9.படுக்கையறையிலும், டாய்லெட்டிலும் காலிங் பட்டன்  அவசியம்.அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும்.

10.சைக்கிள்,டூவீலர் ஓட்டுவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.

11.வாழும்வரைசந்தோஷம்.. அது அதிமுக்கியம்.

கடந்தகாலம்,எதிர்காலத்தைப்பற்றி......சிந்தனைகூடாது. நிகழ்காலம் உன்னதம். அதைமுழுமையாக வாழவேண்டும்.
வாழ்க வளமுடன்! நல்ல நலமுடன்! நல்வாழ்த்துக்கள்!
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.3.20

கரோனா இந்தியாவுக்கு செய்த நன்மைகள் :

கரோனா இந்தியாவுக்கு செய்த நன்மைகள் :

ராக்கட் வேகத்தில் பறந்த பங்காளி #சீனா பொருளாதாரத்தை அடிச்சு உதச்சு உட்கார வைத்து உள்ளது கரோனா 👌

29 வருஷத்தில் இல்லாத அளவு #கச்சா_எண்ணெய் விலை வீழ்ச்சி ,  பேரல் 31 டாலர். இந்தியாவுக்கு 10000 கோடி லாபம்.👍

CAA மாதிரி சில #போராட்டங்கள் தானாக அடங்கி போனது...😊

#இத்தாலி கொத்து கொத்தாக சாகிறார்கள், #அமெரிக்காவில் நடுங்கி உக்காந்து இருக்கிறார்கள் ..

மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்தியா மட்டும் #ஆன்மீகபூமினு கரோனா பயம் சுத்தமா இல்லை..💐

Yes bank கொள்ளையர்கள் வெளிநாடு தப்ப முடியவில்லை😊

மெக்கா மதினா , ரோம்  வரலாறு காணாத அளவுக்கு வெறிச்சோடி போனது.
ஆனால் இந்தியாவில் #கோவில்கள் நிரம்பி வழிகிறது.💐

#அசைவம் சாப்பிடும் ஊரெல்லாம் அலரிக்கிட்டு இருக்கு..😢
#சைவம் சாப்பிடும் இந்தியர்கள் எதையும் இழக்க வில்லைனு கெத்து வாழ்க்கை👍

கரோனா மோடியின் #நண்பன்,
So , கரோனா #வைரஸ் அல்ல.. 
அது 2020 ல வந்த இந்தியாவின் #தேவ_தூதன்..☺

பிகு :இந்தியா 2020 ல் வல்லரசு என்ற அப்துல்கலாம் #கருநாக்கு பளிச்சிடும் போல..💐
-----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.12.19

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாமனிதர்!!!!



உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாமனிதர்!!!!

வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே' உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாமனிதன்.... படியுங்கள் !

முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.

தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.

அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.

அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.

Toyoto நிறுவனத்திற்கு piston(உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.

யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.

முதலாவது கனவுத் திட்டம் படுதோல்விஅடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.

புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய pistonமாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.

எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சீமெந்து தட்டுப்பாடு.

எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சீமெந்துக் கூட கிடைக்கவில்லை. ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர்நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சீமெந்து கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.

ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

 மொத்தத்தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.

இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........
ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......
 “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெற்றோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.

அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று?????

அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.

முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.

5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள்முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.

இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

 ஹோண்டா கார்களுக்கு மேற்கத்தேய நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்குவருவது, அதன் மாமனிதன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று.......
--------------------------------------------------------------
Hard Work Never Fail
Soichiro Honda (本田 宗一郎 Honda Sōichirō, 17 November 1906 – 5 August 1991) was a Japanese engineer and industrialist.[1] In 1948, he established Honda Motor Co., Ltd. and oversaw its expansion from a wooden shack manufacturing bicycle motors to a multinational automobile and motorcycle manufacturer.
மேலதிகத் தகவல்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Soichiro_Honda
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.11.19

நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதைப் படியுங்கள்!!!!


நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் 
இதைப் படியுங்கள்!!!!

அன்பு நண்பர்களே வணக்கம். தற்போதைய சூழ்நிலையில் நாம் அனைவரும் 4 சக்ர வாகனம் 🚘 வைத்துள்ளோம்.

வருகின்ற *01/12/2019* முதல் அனைத்து வாகனத்திற்கும் *FasTag* கட்டாயம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாம் பலரும் நம்முடைய வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அப்போது நாம் கண்டிப்பாக *டோல்கேட்டினை* கடக்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வங்கிகள்
சார்பாகவும் இவைகள் வழங்கப்படுகிறது.

வாகனத்தின் பதிவு(RC), இன்சுரன்ஸ், உரிமையாளரின் கலர் போட்டோ, ஆதார் கார்ட்_ ஆகியவற்றின் நகள்களை வழங்கி தங்கள்  வங்கிகளின் மூலமே பெற்று கொள்ளலாம்.

மொபைல் ஆப் மூலமாக ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.

*ரூபாய் 500/-* செலுத்தவேண்டும்.
இவற்றில் *100/-* ரூபாய் வாகனத்தில் ஒட்டகூடிய ஸ்டிக்கருக்கும், *200/-* ரூபாய் டெபாசிட்டாகவும், *200/-* ரூபாய் நமது கணக்கில் வரவு வைக்கப்படும்.
*இவைகளை பெற்றபின் தங்களுக்கென்று யூசர் ஐடி வழங்கபடும், பாஸ்வேர்ட் தாங்களே செட் செய்து கொள்ளலாம்*
---------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.11.19

மருந்து செலவை நினைத்து இனி கவலை வேண்டாம்*


மருந்து செலவை நினைத்து இனி கவலை வேண்டாம்*

மத்திய அரசு மக்கள் மருந்தகத்தில் (www.makkalmarundhagam.com)
 * 30% முதல் 90% வரை விலை குறைவாக கிடைக்கிறது..
*Pradhan mantri bhartiya Jan aushadhi Kendra* என்ற பெயரில் இந்தத் திட்டத்தை *மத்திய அரசு* எடுத்துவந்த உள்ளது. எனவே நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் நமது வாட்ஸ்அப் குரூப், பேஸ்புக் போன்ற
சமூக வலைதளங்களிலும் இதை ஷேர் செய்தால் பலருக்கு பெரும்

நன்மையாக அமையும். நிறையப்பேர் உயிர்காக்கும்  மருந்து வாங்கி சாப்பிட வசதி இல்லாமல்  தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு  இந்த செய்தி  சென்றடைந்தால் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல்
இருக்கும்.

சென்னையில் மக்கள் மருந்தகம்  உள்ள முகவரிகள்:-

மாங்காடு:-
 மக்கள் மருந்தகம் ,     RC மருத்துவ வளாகத்தில்
No 76, குன்றத்தூர் மெயின் ரோடு
 மாங்காடு , சென்னை-122.
Mobile 9150202721

நங்கநல்லூர்:-
மக்கள் மருந்தகம்
No 1/55, குபேர முனுசாமி தெரு, உள்ளகரம், நங்கநல்லூர், சென்னை-56
Mobile 6369844016.

K.K.நகர்:-
மக்கள் மருந்தகம்
No 20, 1 வது தெரு, 1 வது செக்ட்டார்,
கே.கே நகர்,சென்னை-78
Mobile 9025384722.

மந்தைவெளி:-
மக்கள் மருந்தகம்,
No 9/3, மாரி செட்டி தெரு ,
மந்தைவெளி ,சென்னை-28
Mobile 9884441067.

அரும்பாக்கம் :-
மக்கள் மருந்தகம் ,
16, லட்சுமி  அம்மாள் தெரு, அய்யாவு காலனி, அரும்பாக்கம், சென்னை-106.
Mobile 90257 03291, 94448 14818.

புரசைவாக்கம் :-
மக்கள் மருந்தகம்,
No 111, வெள்ளாள தெரு ,
புரசைவாக்கம் ,சென்னை-84.
Mobile 99620 159999.

கெருகம்பாக்கம் :-
மக்கள் மருந்தகம்
1, குன்றத்தூர் மெயின் ரோடு, பெரியபனணிச்செரி , சென்னை-128.
Mobile 9884000959,7358425577.

சேலையூர்:-
மக்கள் மருந்தகம்,
No 52/2 ,A1 ஸ்கூல் ரோடு,
சேலையூர் சென்னை-73.
Mobile 63815 65336.

பூந்தமல்லி:-
மக்கள் மருந்தகம்,
 No 4/149,ஆஞ்சநேயர் கோவில் தெரு,
 பூந்தமல்லி, சென்னை-56.
Mobile 9884076205

இந்த மருந்து கடைகள் பற்றி சில குறிப்புகள்:

* வெளி கடைகளில் சுமார் ரூபாய் 1000 க்கு வாங்கும் மருந்து இங்கு சுமார் 300 ரூபாய்க்குள் கிடைக்கும்.
*விலை குறைவு என்றவுடன் நமக்கு தரத்தைப் பற்றி கேள்வி எழும்பும்.
Nable test போன்ற பரிசோதனைக்கு உட்பட்டு தான் மருந்து வருகிறது.
*தயாரிப்பு நிறுவனம் பெயரில்லாமல் ஜெனரிக் பெயரில் மருந்துகள் கிடைக்கும்.
*ஜெனரிக் என்றால் என்ன என்று நமக்கு சந்தேகம் எழும்பும்.
 ஜெனரிக் என்பது மருந்தின் கலவையின் பெயராகும். உதாரணமாக Dolo 650, crocin 650, calpol 650 போன்ற பல தயாரிப்பு நிறுவனங்கள் பெயர் உள்ளது இவர்கள் அனைவரும் பாராசிட்டமால் (paracetamol) 650 என்ற மருந்தை தான்
தயார் செய்கிறார்கள். ஒவ்வொரு கம்பெனியின் பேக்கிங், விலையும் வித்தியாசப்படும் ஆனால் மருந்து கலவை அதேதான்.
பெரும்பாலான மருத்துவர்களும் மருந்துகளின் கலவை பெயர் எழுதாமல்  தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தான் எழுதுவார்கள். இங்கு paracetamol 650 என்ற கலவையின் பெயரில் மருந்து கிடைக்கும்.

*Dolo 650 crocin 650 போன்றவை 15 மாத்திரை சுமார் 30 ரூபாய் இருக்கும். அதுவே மக்கள் மருந்தகத்தில் paracetamol 650 ரூபாய் 9 க்கு கிடைக்கும்.

*இதுபோன்று அனைத்து மருந்துகளும் விலை குறைவாக கிடைக்கும்.
இங்கு மருந்து 30% முதல் 90% குறைவான விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் Rs.300  மிதிப்புள்ள மருந்து Rs.79ருபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்#

மக்கள் மருந்தகம்
இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும்.
(எ.கா) மற்ற மெடிக்கல்களில் ரூ.1000க்கு வாங்கும் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் ரூ.300 மட்டுமே  வரும்.
சர்க்கரை,இரத்தஅழுத்ததம்,இருதயம்,கொழுப்பு, அலர்ஜி,போன்ற நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன.

மக்களை அழிக்கும் பொருட்கள் ( மதுபானம்)மலிவான விலையில் கிடைக்கின்றது.ஆனால்  உயிரை காக்கும் மருந்துகள் விலை அதிகமாக உள்ளது. இதை மாற்றவே  மக்கள் மருந்தகங்கள்.
அனைவருக்கும் பயன்படுமாறு இப்பதிவை உங்கள் மற்ற நண்பர்களுக்கும் SHARE செய்யுமாரும் கேட்டுக்கொள்கிறோம் 🙏

Now we opened our GENERIC SHOP IN Chennai -
 சென்னை மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு  JAN AUSHADHI MEDICAL STORE Generic medical shop துவங்கியுள்ளது.அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும்
மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
உதாரணமாக:
இருதய நோயளிகளுக்கு: மாதம்:ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு நம் மத்திய அரசு மருந்தகத்தில் ரூ.150 மட்டுமே ஆகும் ..
மிகவும் முக்கியம்..... அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக 👩⚕👩⚕ டாக்டர்கள் மருந்து
சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக
விலை மாத்திரைகளையே(அது குறைவாக கிடைக்கும் என்ற போதும்)
அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.......
(1) "1MG Health app for India "என்பதை உங்கள் 📱மொபைலில் டவுன்லோடு செய்யவும்.
(2) மருந்து பெயரை தேடவும்.......
(3) பயன்படுத்தும் மருந்து தேடவும். (உதாரணம்..லிரிகா 75 மில்லி கிராம்)(பிபிசர் கம்பெனி).....
(4) கம்பெனி பெயர்,மருந்து பெயர்,விலை,கலந்துள்ள வேதிப் பொருள்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.
(5) Substitute என்பதை க்ளீக் செய்யவும்....
(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்..... (உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59
ரூபாய்க்கு தருகிறது.
ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே.......
Ex.
1.GLYCOMET GP 1.-10 மாத்திரை விலை Rs.7
2.GLYCOMET GP 1.-10 மாத்திரை விலை Rs.12
3.GEMER 2.  -10 மாத்திரை விலை Rs.12
4.ATORVA 10.  -10 மாத்திரை விலை Rs.6
5.ATORVA 20.  -10 மாத்திரை விலை Rs.10
6.GLYCINORM M80- 15 மாத்திரை விலை Rs.32
7.GULCORED FORT -10 மாத்திரை விலை Rs.11
8.PAN D.  -10 மாத்திரை விலை Rs.19
9.SHELVAL-10 மாத்திரை விலை Rs. 4
10.ATORLIP F-15 மாத்திரை விலை Rs.30
    அன்புக்கு விலை இல்லை.......மற்ற குருப்பில் பதிவிடவும்....... மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்..

*இனைய முகவரி
(www.makkalmarundhagam.com)
-------------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!