மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 971 - 980. Show all posts
Showing posts with label Lessons 971 - 980. Show all posts

18.3.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கடன்களால் அவதிப்படுவது

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கடன்களால் அவதிப்படுவது

இன்றைய உலகத்தில், கையில் தாராளமாகப் பணம் இருந்தால் போதும், பல பிரச்சினைகளை ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று நொடியில் தீர்த்து விடலாம். அதை அறிந்துதானோ என்னவோ மக்கள் எல்லாம் கசைக் கடவுளாகக் கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் நன்றாக இருக்கட்டும். நான் பாடத்திற்கு வருகிறேன்.

பணம் இல்லாதவன் நிலைமை என்னவாகும்? அதைவிட, கடனில் மூழ்கி (மூழ்கி என்னும் வார்த்தையைக் கவனியுங்கள்) இருப்பவன் நிலைமை என்னவாகும்?

அவர்களுடைய கஷ்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்தால் மட்டுமே தெரியும்.

12ஆம் வீட்டில் விரையத்தில் இருக்கும் சனியின் தசை நடக்கும்போது, அதை என் நெருங்கிய உறவினர் ஒருவர் அதை அனுபவித்து, என்னிடம் அழுது தீர்த்திருக்கிறார். கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து, சனி திசையின் கடைசி ஆறு வருடங்கள் மிகவும் சிரமமத்திற்கு ஆளாகி அவதிப்பட்டிருக்கிறார்.

நம் கெட்டிக்காரத்தனம் எல்லாம் கிரகங்களிடம் செல்லாது. கஷ்டம் என்றால் அனுபவித்தே ஆகவேண்டும்.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-------------------------------------------------------------


-------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

மேஷ லக்கினம் லக்கினாதிபதி 11ல் (லாபஸ்தானத்தில்)

இரண்டாம் வீட்டிற்கு உரிய (அதாவது தனஸ்தானத்திற்கு அதிபதி) சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார்.

11ஆம் அதிபதி சனி தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு அது 10ஆம் வீடு. ஆனாலும் 11ஆம் இடத்திற்கு அது 12ஆம் இடம்.

ஆறாம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், ஏழரைசனி நடந்தாலும் பணப் பிரச்சினைகள் தலை தூக்கும்.

மேலே உள்ள ஜாதகரின் ஆறாம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். உடன் சனியும், கேதுவும் இருப்பதைப் பாருங்கள். 1996 - 2001 காலகட்டத்தில் அவருக்கு ஆறாம் அதிபதியின் திசை நடந்ததோடு, ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டு, ஆசாமியைத் தெற்கு வடக்காகப் புரட்டிப்போட்டுவிட்டது.அடுத்து வந்த கேது தசையிலும் அது தொடர்ந்தது. அதற்குப் பிறகு சுக்கிரத்சை நடக்கும் காலகட்டத்தில் அவர் மீண்டு வந்துள்ளார்.

பணக்கஷ்டங்களை அலசும்போது இந்த விதிமுறைகளை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.3.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணதிற்கு ஜாதகப் பொருத்தம்


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணதிற்கு ஜாதகப் பொருத்தம்

ஒரு பெண்ணிற்கும் ஒரு ஆடவனுக்கும் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, ஜாதகங்களை வைத்து, தினப் பொருத்தம் (நட்சத்திரப்பொருத்தம்) கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம்,
ஸ்த்ரி தீர்க்கப் பொருத்தம், யோனிப்பொருத்தம், ராசிப்பொருத்தம்,
ராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம்,ரஜ்ஜுப் பொருத்தம்,
வேதைப் பொருத்தம் என்று பத்துப் பொருத்தங்களில் எத்தனை
பொருத்தங்கள் இருவருக்கும் பொருந்தி வருகிறது என்று பார்ப்பார்கள்.

இப் பத்தில் தினம், கணம், யோனி, ராசி, ரச்சு ஆகிய ஐந்தும்
முக்கியமானது என்று இவ்வைந்தும் பொருந்தினால் போதும்
என்று சொல்லி இருவருக்கும் மணம் செய்துவிடுவார்கள். சிலர்
ரச்சு தட்டக்கூடாது. ரச்சுப் பொருத்தத்துடன் வேறு ஏதாவது ஐந்து பொருந்தினால் போதும் என்று  மணத்தை முடித்து வைத்து விடுவார்கள்

சிலர் செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என்றும் பார்ப்பார்கள்.

ஆனால் வேறு ஒன்றும் இருக்கிறது. ஆமாம், இருவருடைய
ஜாதகத்தையும் சேர்க்கும் முன்பாக நன்றாக அலச வேண்டும்.

உடல் காரகன், மனகாரகன், ஏழாம் அதிபதி ஆகியவர்களும் நன்றாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்க்காமல், வெறும் 10 பொருத்தத்தை மட்டும் செய்யப்படும் திருமணங்களில் சில  ஊற்றிக் கொண்டுவிடும்.

ஊற்றிக்கொண்ட பிறகு, ஏன் இப்படியாகிவிட்டது என்று தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார்கள்

என்ன காரணம்? ஏன் அப்படியாகிறது?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமாக இப்பொது ஒரு தம்பதியரின் ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------



-------------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகங்களைப் பாருங்கள். ஒரு தம்பதியரின் ஜாதகம்.

மனைவியின் ஜாதகம்:

1.சிம்ம லக்கினம். லக்கினத்தில் ஆறு & ஏழுக்குரிய சனி.
2.எட்டாம் அதிபதி குரு 11ல்
3.யோககாரகன் செவ்வாய் மறைவிடமான 12ல்
4.லக்கினாதிபதியும், உடல்காரகனுமான சூரியன் எட்டில்
5.புதன் (குடும்பநாதன்) சுக்கிரன் (சுக அதிபதி) ஆகிய இருவரும் சூரியன், கேதுவுடன் எட்டில்
6.அந்த நால்வரும் இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார்கள்.
7.மனகாரகன் சந்திரன், இந்த லக்கினத்திற்கு அவன் விரைய அதிபதியும் ஆவான். அவன் இரண்டில் ராகுவுடன் சேர்ந்து அடிபட்டுப்போய்விட்டான்.
மனமகிழ்ச்சியைக் கொடுக்கும் கிரகம் சந்திரன். அவன் ராகு அல்லது கேது அல்லது சனியுடன் சேர்ந்து  அடிபட்டுக்கிடந்தால் ஜாதகன் அல்லது
ஜாதகிக்கு மனமகிழ்ச்சி என்பது சுத்தமாக இருக்காது.

இந்த ஜாதகிக்குப் பன்னிரெண்டாம் அதிபதியான சந்திரன் இரண்டாம்
இடமான குடும்ப ஸ்தனத்தில் அமர்ந்தது, அதுவும் ராகுவுடன் கூட்டாக
அமர்ந்தது குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. குணக்கேடு அல்லது
மனக்கேடு.. அத்துடன் இரண்டாம் வீடு மாரக ஸ்தானம். அங்கே அமர்ந்த
சந்திரன் + ராகுவால் ஜாதகிக்கு எப்போதும் தற்கொலை செய்து
கொள்ளும் எண்ணம் மேலோங்கி இருக்கும்.

சந்திரன், ராகுவுடன் இருப்பதோடு, மேலும் இரண்டு தீய கிரகங்களின் பார்வையைப் பெறுவதாலும் நிலைமை மோசமாக உள்ளது. சந்திரனும் புதனும், சந்திரனும் சுக்கிரனும் எதிர் எதிராக இருப்பதும் மகிழ்ச்சியைத்
தராது.

என்ன ஆயிற்று?

கணவன் பிரிந்து போய்விட்டான். ஜாதகி தனிப்பட்டுப் போய்விட்டாள்

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.3.17

வருடத்திற்கு ஒருமுறை என்ன செய்ய வேண்டும் நீங்கள்?


வருடத்திற்கு ஒருமுறை என்ன செய்ய வேண்டும் நீங்கள்?

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வணங்கி வளம் பெறுங்கள்...

1
அஸ்வினி -  முக்கிய ஸ்தலம் - கூத்தனூர்
மற்ற தலங்கள்  - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.
-----------------------------------
2
பரணி -  முக்கிய ஸ்தலம் - நல்லாடை
மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.
----------------------------------
3
கார்த்திகை -  முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.
---------------------------------------
4
ரோஹிணி -  முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.
--------------------------------------------------
5
மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம்  - எண்கண்
மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.
-------------------------------------------------------
6
திருவாதிரை - முக்கிய ஸ்தலம்  - சேங்காலிபுரம்
மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.
-----------------------------------------------
7
புனர்பூசம் - முக்கிய ஸ்தலம்  - சீர்காழி
மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.
---------------------------------------------
8
பூசம் - முக்கிய ஸ்தலம்  - திருச்சேறை
மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.
-------------------------------------------------
9
ஆயில்யம் -  முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம்
மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.
---------------------------------------------
10
மகம் -  முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு
மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.
-----------------------------------------------
11
பூரம் -  முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு
மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.
-----------------------------------------------------------
12
உத்திரம் -  முக்கிய ஸ்தலம் - கரவீரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.
-----------------------------------------------------------
13
ஹஸ்தம் -  முக்கிய ஸ்தலம் - கோமல்
மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.
--------------------------------------------------------
14
சித்திரை -  முக்கிய ஸ்தலம் - திருவையாறு
மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு.
-----------------------------------------------
15
சுவாதி -  முக்கிய ஸ்தலம் -  திருவிடைமருதூர்
மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.
------------------------------------------------
16
விசாகம் -  முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்
மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.
-----------------------------------------
17
அனுஷம் -  முக்கிய ஸ்தலம் - நாச்சியார் கோயில்
மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.
-----------------------------------------------
18
கேட்டை -  முக்கிய ஸ்தலம் - வழுவூர்
மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.
--------------------------------------------
19
மூலம் -  முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை
மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.
----------------------------------------------
20
பூராடம் -  முக்கிய ஸ்தலம் - கடுவெளி
மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.
------------------------------------------------
21
உத்திராடம் -  முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்
மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.
--------------------------------------------------
22
திருவோணம் -  முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்.
மற்ற தலங்கள் -  ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.
-----------------------------------
23
அவிட்டம் -  முக்கிய ஸ்தலம் -  திருபூந்துருத்தி
மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி.
--------------------------------------------------
24
சதயம் -  முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்
மற்ற தலங்கள் - கடம்பனூர்,  கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.
------------------------------------------------
25
பூரட்டாதி -  முக்கிய ஸ்தலம் - திருக்குவளை
மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.
-----------------------------------
26
உத்திரட்டாதி -  முக்கிய ஸ்தலம் - திருநாங்கூர்.
மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.
-------------------------------------------
27
ரேவதி -  முக்கிய ஸ்தலம் - இலுப்பைப்பட்டு
மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.
--------------------------------------------------------
படித்தேன் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.3.17

Horoscope: அலசல் பாடம்: - Denial of education, கல்வி மறுக்கப்படும் நிலைமை!


Horoscope: அலசல் பாடம்: - Denial of education, கல்வி மறுக்கப்படும் நிலைமை!

சின்ன வயதில் சிலருக்கு படிப்பு வராது. படிக்கும் சூழ்நிலை இருந்தாலும் படிப்பு ஏறாது. எட்டாம் வகுப்பைக்கூடத் தாண்ட மாட்டார்கள். வீட்டில்
பெற்றோர்கள் கண்டித்து, அடித்தால் பையன் வீட்டை விட்டு ஓடிவிடுவான். பிறகு பல சிரமங்களுக்கிடையே தேடிப்பிடித்துக் கூட்டிக் கொண்டு
வருவார்கள். வந்தாலும் திரும்பவும் படிக்கச் சொல்லி வற்புறுத்த
மாட்டார்கள். ஒரு ஸ்கூட்டர் ஒர்க் ஷாப்பிலோ அல்லது ஒரு மளிகை/
ஜவுளிக்கடையிலோ அல்லது ஒரு அச்சகத்திலோ அல்லது அதுபோன்ற
சிறு தொழில் செய்பவர்களிடம் வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள்.
அதில் ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றதும், தங்கள் சொத்தில் எதையாவது விற்று அல்லது எங்காவது பணத்தைப் புரட்டி
சம்பந்தப்பட்டவனுக்கு ஒரு சொந்தத் தொழிலை வைத்துக்
கொடுப்பார்கள். அவன் தன்னுடைய பிழைப்பை அதன் மூலம் செய்ய வேண்டியதாயிருக்கும்

அவனுடன் ஒன்றாகப் படித்தவன், பின்னால் சிரத்தையாகப் படித்துப் பொறியியல் பட்டம் பெற்று எங்காவது பெரிய தொழிற்சாலையில்
மாதம் ரூபாய் முப்பதாயிரம் சம்பாதித்துக்கொண்டிருப்பான். நம்மாளும் பின்னால் பெரிய மெக்கானிக்காகி கார் அல்லது மோட்டார் சைக்கிள்களைப் பழுது பார்க்கும் தொழிலைச் செய்து, பலரையும் வேலைக்கு வைத்துத்
தன் நண்பனைவிட அதிகமாகச் சம்பாதிப்பான். 2, 10, & 11ஆம் வீடுகளைவைத்து அவையெல்லாம் அவனுக்கு ஒரு உயர்வைக்
கொடுக்கும். ஆனால் படிப்பு போனது போனதுதான்.

என்ன காரணம்?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
--------------------------------------------------------


----------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில்.அதுவும் சனியுடன் கூட்டணி. கூட்டணி சேர்ந்துள்ள சனி
ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன். ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,
தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.

நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை
மிகவும் தீங்கானது. எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்!

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.2.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!

Denial of happiness - மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!!!

நம் கிராமங்களில் சொல்வார்கள்: “நாயை வைக்கற்போரில் கட்டிவைத்தால், அதுவும் திங்காது. மற்ற ஜீவராசிகளையும் திங்கவிடாது!”

அதுபோல சில மனிதர்கள், மனுஷிகள் உள்ளார்கள். அவர்களும் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள்.. அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக இருக்க விடமாட்டார்கள்.

எப்போதும் எதையோ பறி கொடுத்தவர்கள் போல இருப்பார்கள்.
உம்’ மென்று இருப்பார்கள். சிடு சிடுவென்று எரிந்து விழுவார்கள்.
யாரையும் பக்கத்தில் அண்டவிட மாட்டார்கள். எதையும் ரசிக்கும் மனப்பான்மை இருக்காது. எதிலும் positive thinking இருக்காது.

மொத்தத்தில் மகிழ்ச்சியை அறியாத அதிசயப் பிறவிகளாக இருப்பார்கள். தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.

அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தால் என்ன ஆகும். பெண்ணாக இருந்தால், கணவனையும், ஆணாக இருந்தால் மனைவியையும் ஆட்டி
வைத்துவிடுவார்கள்.

அவர்களுடைய திருமணவாழ்வு மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்வாக இருக்கும்.

அதற்கு என்ன காரணம்?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
1. துலா லக்கின ஜாதகம். லக்கினத்தில் ராகு. அத்துடன் 6ம் அதிபதி குரு.
2. லக்கினாதிபதி சுக்கிரன் பகைவீட்டில், அதுவும் 12ஆம் அதிபதி புதனுடன் சேர்க்கை
3. லாபாதிபதி சூரியன் 12ல்
4. லக்கினத்தில் ராகு & 6ம் அதிபதி குரு. குணக்கேட்டைக் கொடுக்கும்
5. இரண்டாம் அதிபதி செவ்வாய், எட்டாம் வீட்டில் இருக்கிறார். சுபக்கிரகங்களின் பார்வையின்றி. எட்டாம் வீடு தீய வீடு. அத்துடன் சனியின்
பார்வை.

Second lord in the 8th will not give happiness 
from women to men and from men to women!

உங்கள் மொழியில் சொன்னால், எட்டாம் வீட்டில் அமரும் 2ஆம் அதிபதி பெண்ணால் ஏற்படும் மகிழ்ச்சியை ஆணுக்கும், ஆணால் ஏற்படும்
மகிழ்ச்சியைப் பெண்ணிற்கும் கொடுக்கமாட்டார்!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.2.17

Astrology: ஜோதிடம்: வாத்தியார் வேலைதான் கிடைக்கும் என்பது எப்படித் தெரிந்தது?


Astrology: ஜோதிடம்: வாத்தியார் வேலைதான் கிடைக்கும் என்பது எப்படித் தெரிந்தது?

அலசல் பாடம்!

ஒரு இளைஞனின் வீட்டில், அவனை ஒரு ஐ.ஏ.எஸ் பட்டதாரியாக்கி, மாவட்ட ஆட்சியாளர் வேலையில் அமரவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் ஆசை நிறைவேறியதா? பையன் ஐ.ஏ.எஸ்சில் தேர்ச்சி பெறவில்லை ஜாதகத்தைக் கொண்டுபோய் ஒரு ஜோதிடரிடம் கொடுத்து, ஜாதகப்படி எந்த வேலை கிடைக்கும்? என்று கேட்டபோது, அவர் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து விட்டு, ஜாதகப்படி பையனுக்கு வாத்தியார் வேலைதான் சிறப்பாக இருக்கும் என்றும் அவன் அதில் படிப்படியாக முன்னுக்கு வருவான் என்றும் சொன்னார்

எப்படிச் சொன்னார்?

வாருங்கள் ஜாதகத்தை நாமும் பார்ப்போம்!



மீன லக்கின ஜாதகம். பூராட நட்சத்திரம்

1. உயர் கல்விக்கு உரிய ஐந்தாம் வீட்டு அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு ஆறில் அமர்ந்துள்ளார். உடன் செவ்வாயும் ராகுவும் உள்ளார்கள். அதனால் 2. உயர்கல்விக்கான (அதாவது I.A.S அல்லது I.F.S அல்லது I.PS போன்ற படிப்புக்கள்) அமைப்பு ஜாதகத்தில் இல்லை.
3. பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பது நிர்வாக வேலை அமைவதைக் குறிக்கும். ஆனால் உடன் ராகு இருப்பதால் நிர்வாக வேலயில் தொடர்ந்து பிரச்சினைகள் உண்டாகும்
4. பத்தாம் அதிபதி பதினொன்றில், ஆகவே பார்க்கும் வேலையில், அது எந்த வேலையாக இருந்தாலும் உயர்வு இருக்கும்
5. ஐந்தாம் அதிபதி சந்திரனும் பத்தில் இருக்கிறார். அதுவும் நன்மையானதே!
6. லக்கினம் குருவுடையதாக இருப்பதாலும், பத்தாம் வீடும் குருவுடையதாக இருப்பதாலும் வாத்தியார் வேலைதான் ஜாதகனுக்குச் சிறந்ததாக இருக்கும். அதுவே அமைந்தது.

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
========================================================

14.2.17

சனீஷ்வர பாதிப்பிற்கான பரிகாரம்!


சனீஷ்வர பாதிப்பிற்கான பரிகாரம்!

யாரும் சனியோட கடுமையால் கடுமையாக பாதிக்க படக் கூடாது என்பதற்காக சித்தர்கள் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்...

சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்து விட்டு, அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயகரை சுற்றிப் போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.

அப்படித் தூக்கி சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் ,அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதைச் செய்யவும்.

அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழை காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள்
எடுத்துக் கொள்ளும்.

இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இரண்டரை
ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்து போய் விடும்.இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை
எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பேர்களுக்கு அன்னதானம் செய்ததற்குச் சமம்.

எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி,சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.
====================================================
படித்தேன்; பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.2.17

உங்களின் ஜாதகம் சரியா எழுதப் பெற்றுள்ளதா?

உங்களின் ஜாதகம் சரியா எழுதப் பெற்றுள்ளதா?

பஞ்சாங்கத்தில் இரண்டு முறைப் பஞ்சாங்கள் உள்ளன.
1.வாக்கியப் பஞ்சாங்கம். 2. திருக்கணிதப் பஞ்சாங்கம்.
இரண்டுமே அதிகாலத்தவைதான். ஆனால் இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளது.

தமிழ் நாட்டில் பெரும்பாலும் எல்லா ஜோதிடர்களுமே வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் கடைப்பிடிக்கின்றார்கள். அதுவும் தென் மாவட்டங்களில் மிக அதிகமாக வாக்கியப் பஞ்சாங்கமே பயன் படுத்தப்படுகிறது,

இரண்டிலுமே ஏராளமான பஞ்சாங்க புத்தகங்களை ஆண்டு தோறும் வெளிடுகிறார்கள். அவற்றுள் பாம்பு வாக்கிய பஞ்சாங்கமும், வாசன்
திருக்கணிதப் பஞ்சாங்கமும் பிரபலமானவை!




தமிழ் நாட்டைத் தவிர அகில இந்திய அளவில் கேரளா, கர்நாடகா, 
ஆந்திரா உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலுமே திருக்கணிதத்தைதான் பயன் படுத்துகிறாகள், தமிழ் நாட்டில் மட்டும்தான் வாக்கிய பஞ்சாங்கத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வாக்கிய பஞ்சாங்கத்தில் உள்ள அயனாம்சக் குளறுபடிகள் இன்னும் சரி செய்யப்படவில்லை. திருக்கணிதம் கணித அடிப்படியில் கணிக்கப்
படுவதால் மிகத் துள்ளியமாக இருக்கும்

ஆனால் கணினி ஜாதகங்களில் கணித்தால் இந்த இரண்டு முறைகளிலுமே உங்கள் ஜாதகம் கிடைக்கும். ஆனால் உங்கள் வீட்டில், உங்கள்
பெற்றோர்கள் எழுதிவைத்துள்ளது போலவே உங்களுடைய ஜாதகம் வேண்டுமென்றால், கண்ணை மூடிக்கொண்டு வாக்கியத்தில் கணிப்பதே உங்கள் விருப்பப்படி இருக்கும்.

இந்திய அரசும் (Ministry of Earth Sciences) , நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும் திருக்கணிதத்தைதான் பயன் படுத்துகின்றன.



வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திம் உள்ள வேறு பாட்டினால் மாற்றி எழுதும்போது, சிலருக்கு லக்கினமே மாறிவிடும். சிலருக்கு கிரகங்களின் நிலைப்பாடுகள் மாறியிருக்கும், சிலருக்கு நட்சத்திரம் மாறியிருக்கும். ஆகவே  குழம்பிப் போய்விடுவீர்கள்.

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்:


   வாக்கியத்தில் கணிக்கப்பெற்றது


திருக்கணிதத்தில் கணிக்கப்பெற்றது

இந்த இரண்டும் ஒருவருடையதுதான். பிறப்பு விபரங்களைக் கவனியுங்கள். இரண்டிலுமே ஒன்றாகத்தான் இருக்கும் தேதி: 5-11-1990 - நேரம்: மதியம் 2.40 

ஆனால் வாக்கியத்தில் ரோஹிணி என்று வரும் நட்சத்திரம், திருக்கணிதத்தில் மிருகசீர்ஷம் என்று மாறியிருக்கும். அதுபோல நட்சத்திரம் மாறியதால் பிறப்பு மகா திசை இருப்புக்களும் மாறியிருக்கும். முன்னதில் சந்திர மகா திசை இருப்பு 1 வருடம் 9 மாதங்கள் 28 நாட்கள் என்றுள்ளது அடுத்ததில் செவ்வாய் மகா திசை 6 வருடம் 8 மாதங்கள் 9 நாட்கள் என்று மாறியிருக்கும்.

அதுபோல ஐந்தாம் அதிபதி புதனின் இருப்பிடம் மாறியிருக்கும். முன்னதில் 5ம் வீட்டிற்கு 6ம் இடத்தில் - விருச்சிகத்தில் இருக்கும் புதன் அடுத்ததில் 5ம் அதிபதி தன் வீட்டிற்கு 5ல் - துலாமில் இருப்பார்

இதுபோல சிலருக்கு லக்கினமே மாறிவிடும். வாக்கியத்தில் சிம்மம் என்று வருவது, திருக்கணிதத்தில் கடகம் என்று வரும். 

லக்கினம் மாறினால் என்ன ஆகும்? எந்த லக்கினத்தை  வைத்துப் பலன் சொல்வது?

ஆகவே உங்கள் ஜாதகத்தை சரியாக கணித்து வைத்துக்கொள்ளுங்கள். திருக்கணிதம்சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

என்னிடம் உரிய மென்பொருள் உள்ளது. 33 பக்கங்கள் விரிவான ஜாதக நிலைகள் கொடுக்கப்பெற்றிருக்கும். இராசி, நவாம்சம், மற்றும் 10 உபரி அட்டவணைகள். அஷ்டகவர்க்கம், செவ்வாய் தோஷ நிர்ணயம், கிரக யுத்த நிர்ணயம், முழு தசா & புத்தி விபரங்கள் எல்லாம் இருக்கும். அத்துடன் உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கள், அவை எதனால் - அதாவது எந்த கிரக அமைப்புக்களால் ஏற்பட்டுள்ளது, அந்தந்த யோகங்களுக்கான பலன்களுடன் இருக்கும்.

விருப்பப் பட்டால் எழுதுங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் கூட முழு ஜாதகம் கிடைக்கும். பி.டிஎஃப் கோப்பு வடிவில் கிடைக்கும். கணினியில் வைத்துக் கொள்லலாம் அத்துடன் அச்செடுத்துக் கையிலும் வைத்துக்கொள்ளலாம்

அது விலை கொடுத்து வாங்கிய மென் பொருள். ஆகவே நீங்கள் சிறிது கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

விருப்பம் உள்ளவர்கள் மட்டும் எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி classroom2007@gmail.com சப்ஜெக்ட் பெட்டியில் திருக்கணித ஜாதகம் என்பதை மட்டும் தவறாமல் குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.2.17

வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா - எது சரியானது?


வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா - எது சரியானது?

கீழே உள்ள கட்டுரை ஒரு பத்திரிக்கையில் வந்தது. உங்களின் தகவலுக்காக அதை அப்படியே கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------------------------------------------
அதிசாரம் எனப்படும் இந்த சனியின் நகர்வு திருக்கணிதப்படி மட்டுமே நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் இன்னும் விருச்சிக ராசியிலேயே ஜென்மச்சனியாக நிலை கொண்டிருக்கிறார்.

வாக்கியப் பஞ்சாங்கங்கள் பிழையானவை. கிரகங்களின் உண்மை இருப்பு நிலையை அவை சொல்லவில்லை என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். பொதுவாக அனைத்து பெயர்ச்சிகளிலும் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையே வித்தியாசங்கள் உண்டு. இவற்றில் சனி விஷயத்தில் அதிகமான வித்தியாசங்கள் ஏற்படும்.

எந்தவிதமான பஞ்சாங்கமாக இருந்தாலும் அவற்றை வெளியிடுபவர்கள் கிரகங்களின் அருகில் போய் நின்று கொண்டு அதன் இயக்கத்தை கண்டுணர்ந்து குறிப்பது இல்லை. இதற்கென சில கூட்டல், கழித்தல் முறைகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு மூலச் சமன்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதை ஜோதிடப்படி சித்தாந்தம் என்று சொல்லுவோம்.

அதன்படி முந்தைய ஆண்டுகளில் சனி இந்த இடத்தில் இருந்தது, பூமி இங்கே இருந்தது. இந்த வருடம் சனி இவ்வளவு நகர்ந்திருக்கிறார், பூமி இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறது. எனவே சனி, பூமியில் இருந்து இவ்வளவு தூரம் இருக்கிறார் என்பதை மூலச் சமன்பாட்டின் தொடக்கத்தை வைத்து கணக்கீட்டு முறையிலேயே வாக்கிய, திருக்கணித, பஞ்சாங்க கர்த்தாக்கள் கிரக நிலையை அறிவிக்கிறார்கள்.

இதில் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஆதியில் ஏற்பட்ட சிறு வித்தியாசங்கள் திருத்தப்படாமல் கூடிக் கொண்டே போய், அதாவது நூற்றாண்டுகளுக்கு முன்பு நிமிடக் கணக்கில் ஆரம்பித்த ஒரு வித்தியாசம் இன்றைக்கு ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே போய் நிமிடம், மணியாகி, மணி நாளாகி, நாட்கள் மாதங்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

இவைதான் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகநிலைகள் மாறுபடுவதற்கான காரணம். சமன்பாடுகளின் மூலங்களில் மட்டுமே கிரக வித்தியாசத்தை திருத்த முடியும் என்பதால் இதை எப்படி நேர் செய்வது என்ற குழப்பத்தில் வாக்கியப் பஞ்சாங்கள் தெளிவற்ற ஒரு நிலையில் இருக்கின்றன.

சில ஜோதிடர்கள் வாக்கியம் ஞானிகள் அருளியது. திருக்கணித முறைகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. எனவே ஞானிகள் உருவாக்கிய வாக்கியத்தை மாற்றியமைப்பதற்கு யாருக்கும் அருகதை இல்லை என்று தவறாக நினைக்கிறார்கள்.

உண்மையில் வாக்கியத்தை விட திருக்கணிதமே காலத்தால் முற்பட்டது. திருக்கணிதமே பழமையானது. ஜோதிடத்தின் ஆதி பிதாமகர்களான ஆரியபட்டர் வராகமிகிரர் போன்ற ஞானிகள் உபதேசித்தது திருக்கணித முறையைத்தான்.

நமது வானவியல் சாஸ்திரத்தின் ஆதிஞானிகளில் ஒருவரான ஆரியபட்டர் தன்னுடைய பெருமைமிகு நூலான சூரியசித்தாந்தத்தின் முதல் ஸ்லோகத்திலேயே தான் பிரம்மாவின் வழித்தோன்றல் எனவும் இரண்டாவதில் மயன், நம்முடைய மேலான இந்துமதத்தின் ஆதிநாயகனான சிவம் எனும் சூரியனை நோக்கித் தவமிருந்து இந்த பிரபஞ்சத்தின் சூட்சுமங்களையும், சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். இந்த மயன்தான் மேற்குறிப்பிட்ட பிரபஞ்ச ரகசியங்களை நாரதர் உள்ளிட்ட ஏழு ரிஷிகளுக்கும் தெரியப் படுத்தினார் என்றும் ஆரியபட்டர் தெளிவாகச் சொல்கிறார்.

13-ம் நூற்றாண்டு வரை ஆரியபட்டரின் திருக்கணித முறையே நம்முடைய பாரதத்தில் இருந்து வந்தது. 13-ம் நூற்றாண்டுக்குப் பிறகே தவறான வாக்கிய முறை இங்கே கையாளப்பட்டது. ஆரியபட்டரை அடுத்து வந்தவரான வரருசி அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய வாக்கிய சித்தாந்தத்தை வெளியிட்டார். இந்த வாக்கியத்திலும் காலத்திற்கேற்ப மாறுதல்களை செய்து கொள்ளவும் சொன்னார்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் கிரக இருப்பில் ஏற்படும் மாறுதல்களை மாற்றிக் கொள்ள ஞானிகள் நம்மை அனுமதிக்கவே செய்திருக்கிறார்கள். ஆனால் வரருசியின் வாக்கிய சித்தாந்தம் அவ்வப்போது திருத்தப்படாமல் விடப்பட்டதால் இன்றைக்கு திருத்தவே முடியாத ஒரு தவறான நிலையில் வந்து நிற்கிறது.

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திருக்கணிதப்படியான கிரக இருப்புகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் நாசாவிற்கே விண்வெளி சமன்பாடுகளில் மூலக்கணிதங்களை அளித்தது திருக்கணித முறைகள்தான்.

வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் உள்ள முரண்பாட்டை இன்னும் துல்லியமாக ஆராயப் போவோமேயானால், பூமி ஒரு வருடத்தில் சூரியனைச் சுற்றி வரும் நிரூபிக்கப்பட்ட துல்லியமான கால அளவான 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம் என்பதை, வாக்கியங்களில் 3 நிமிடத்தை கூட்டி 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம் என கணக்கிடுவதால் வித்தியாசம் வருகிறது.

தங்களுடைய கணிப்புகள் தவறுவதை உணர்ந்து வாக்கிய பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் தங்கள் முறையின் ஆதார கர்த்தரான வரருசியின் மூல முறையில் கணிப்பதை இப்போது கைவிட்டு விட்டனர். இது கிட்டத்தட்ட வாக்கிய முறை தவறு என்பதை ஒத்துக்கொண்டதற்கு சமம்தான்.

ஆனால் பலநாள் தவறை ஒரே முறையில் திருத்துவது எப்படி என்பதுதான் தற்போது பெரிய குழப்பத்தில் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களினால் சனிப்பெயர்ச்சி சில சமயம் இரண்டு பஞ்சாங்கங்களிலும் மூன்றரை மாத வித்தியாசம் வர ஆரம்பித்து விட்டது. எனவே அனைவரும் கிரக இருப்பின் உண்மையான நிலைமையை கூறுகின்ற திருக்கணித முறைக்கு மாறி அதனைக் கடைப்பிடிப்பது மட்டுமே இதற்கு ஒரு தீர்வாக இருக்கும்.

இந்த குழப்பங்களால் பாதிக்கப்படுவது ஜோதிடம் அறியாத பொதுமக்கள் தான். நட்சத்திர இறுதி நேரங்களில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு இரண்டு பஞ்சாங்கங்களும் வேறு வேறு நட்சத்திரத்தை சொல்லும் போது சாதாரண பொது மக்கள் ஜோதிடத்தையே குறை சொல்லும் நிலைமை ஏற்படுகிறது.

தவறான கணிப்பால் வாக்கிய பஞ்சாங்கப்படி சில நேரம் ஜாதகரின் லக்னமே மாறி விடுகிறது. இது சாஸ்திர துரோகம். இதை மாற்ற அனைத்து ஜோதிடர்களும் துல்லியமான கிரக இருப்பை சொல்லும் திருக்கணித பஞ்சாங்கங்களை மட்டுமே பின்பற்றுவது நல்லது.

மற்ற மாநிலங்களில் வாக்கியமா? திருக்கணிதமா? எது நடைமுறையில் உள்ளது?

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் இருக்கும் வான சாஸ்திர நிபுணர்கள், பஞ்சாங்க கணிதர்கள் ஆந்திர மாநில திருப்பதியில் ஒன்று கூடி இனி இந்தியாவில் திருக்கணித அடிப்படையில் மட்டும்தான் பஞ்சாங்கங்களை வெளியிட வேண்டும். திருக்கணிதமே சரியானது மற்றும் துல்லியமானது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதையொட்டி இப்போது தமிழ்நாட்டை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் திருக்கணித முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது. உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தவறு என்று தெரிந்தும் வாக்கிய பஞ்சாங்கங்கள் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நமது பக்கத்து மாநிலங்களான கேரளத்திலும், ஆந்திரத்திலும் கூட திருக்கணித முறைப்படிதான் கோவில் திருவிழாக்கள், ராகு-கேது, குரு, சனி ஆகிய பெயர்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தை கோவில்களில் பின்பற்றும் முறை தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.

ஜன.27, 2017 மாலைமலரில் வெளியான கட்டுரை!

நமக்கு அறியத் தந்தவர் நமது வகுப்பறை மாணவரான ஆனந்தமுருகள்
பத்திரிக்கைக்கும், அறியத்தந்த மாணவருக்கும் நமது நன்றி உரித்தாகுக!
----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.2.17

ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?


ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?

எல்லோரும் வாழ்க்கையைப் பயணம் என்பார்கள். பயணத்திற்கு ஒரு துவக்கம் இருப்பதுபோல ஒரு முடிவும் இருக்கும். மரணம்தான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு.

கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார். வாழ்க்கையை வியாபாரம் என்றார். வியாபாரத்தில் வரவும் இருக்கும்; செலவும் இருக்கும்.ஜனனத்தை அவர் வரவு வைக்கச் சொன்னார். மரணத்தைச் செலவு எழுதச்சொன்னார்.

பாடலைப் பாருங்கள்:

போனால் போகட்டும் போடா! - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)

வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

போனால் போகட்டும் போடா, என்று சர்வ அலட்சியத்துடன் பாடலைத் துவக்கியவர்,  கூக்குரலாலே உயிர்  திரும்பக் கிடைக்காது, கோர்ட்டுக்குப் போய் ரிட் பெட்டிஷன் போட்டாலும் ஜெயிக்காது, எமனின் கோட்டையில்  நுழைந்தவர்கள் யாரும் திரும்ப முடியாது என்று யதார்த்த உண்மைகளைச் சொன்னவர், முத்தாய்ப்பாய், ஆறுதலாய், நமக்கும் மேலே ஒருவனடா என்று சொல்லிப் பாடலை நிறைவு செய்தார்!

அதோடு கட்டுரை ஒன்றில் அவர் எழுதியிருந்தார்: “எமன் வந்து கூப்பிட்டால் அவனுடன் செல்வதற்கு நீ தயாராக  இருக்கிறாயா? இருந்தால், நீ அதிர்ஷ்டசாலி!” என்றார்.

அப்படி எத்தனை பேர்கள் இருக்கப்போகிறார்கள்?

நூற்றுக்கு ஒருவர் இருந்தால் ஆச்சரியமே!

எமனிடம் தாவா செய்ய முடியுமா?

எமன் வந்தவுடன், நம்மால் அவனிடம் இப்படிக் கேட்க முடியுமா?

“அப்பனே சற்று இரு; எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணிவிட்டு வருகிறேன். என் மனைவி அப்பாவி. வீட்டுச் சாவிகளை எல்லாம் எங்கே வைத்திருக்கி றேன், ரேசன் கார்டை எங்கே வைத்திருக்கிறேன் என்கின்ற சிறு விஷயங்கள்  கூட அவளுக்குத் தெரியாது. கொடுக்கல், வாங்கலில் யாராரிடம், எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறேன், யாராருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சிக்கலான விஷயங்களும் அவளுக்குத் தெரியாது. எனக்குப் பின்னால் என்னுடைய மகனும், மருமகளும் சேர்ந்து, அவளுக்கு உதவ மாட்டார்கள். அவள் தெருவில் நிற்கும்படியாகிவிடலாம்! அதனால் உயில் எழுதிப் பதிய வேண்டும். அதையும் செய்து விடுகிறேன். எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடு!”

இல்லை. கேட்டவுடன், அவர் கொடுக்கத்தான் போகிறாரா?

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்!

மரணப் படுக்கையில் படுத்திருப்பவன்கூட, வைத்தியர் நம்மைக் காப்பாற்றி விடுவார், சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்கின்ற நம்பிக்கையோடுதான் படுத்திருப்பான்.

என்ன காரணம்?

எந்த மனிதனுமே மரணத்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை! அதுதான் காரணம்
-------------------------------------------------------------------------------------------
ஒரு குழந்தை பிறப்பதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. சுகப்பிரசவம். தாயின் வயிற்றைச் சற்றுக் கிழித்துக்கொண்டு சிசேரியன் செய்யப்பட்டுப் பிறக்கும் குழந்தை.

மேலோட்டமாகப் பார்த்தால் மரணத்திலும் இரண்டுவகைதான். இயற்கையான மரணம் அல்லது துர் மரணம் (அகால மரணம்)

என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் மரணம் மரணம்தான். இழப்பு இழப்புத்தான். சாதாரண இழப்பல்ல. ஒரு உயிரின் இழப்பு.

தமிழில் மரணத்தை நாசுக்காகச் சொல்லும்போது, இறைவனடி சேர்ந்து விட்டார் என்போம். எங்கள் பகுதியில் சிவபதவி அடைந்துவிட்டார் என்று சொல்வார்கள். இயற்கை எய்திவிட்டார் என்றும் சொல்வார்கள். சிலர் மரணத்தை வைகுண்டப் பிராப்தி அடைந்துவிட்டார் என்பார்கள்!
------------------------------------------------------------------------------------------
இதயம் துடிப்பது நின்றுவிட்டால் அதைத்தான் மரணம் என்று நாம் குறிப்பிடுவோம். ஆனால் மருத்துவ உலகம்  என்ன சொல்கிறது?

உடல் செல்களின் இயக்கம் நின்று போவதுதான் மரணம் என்கிறது மருத்துவம். இதயம் செயல்படாமல் நின்று விட்ட பிறகும், மூளையானது இயங்கிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் 2 மணி நேரம் வரை கூட மூளை இயங்கிக் கொண்டிருப்பது உண்டு. இது கிளினிக்கல் டெத் என்று அழைக்கப்படுகிறது. பின்னர்தான் மூளையின் இயக்கமும் நின்று போகிறது. இதை செரிபரல் டெத் என்று குறிப்பிடுகிறார்கள்.

இப்போதுதான் ஒருவர் உண்மையிலேயே மரணம் அடைந்ததாக கருதப்படுகிறது.

விபத்தில் சிக்கி தலையில் காயம் அடைந்தவர்களுக்கு சில சமயங்களில் மூளை தனது இயக்கத்தை நிறுத்தியிருக்கும். ஆனால் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்களது உடல்கள்தான் தானமாக  அளிக்கப்படுகிறது. எனவே, மூளையும், இதயமும் தங்களது இயக்கத்தை நிறுத்துவதே மரணமாகும்.

Death is the termination of the biological functions that define a living organism. The word refers both to a particular process and to the condition that results thereby.
----------------------------------------------------------------------------------------------
மரணத்தை விரிவாகச் சொல்வதற்குத்தான் எத்தனை சொற்கள் இருக்கின்றன?

Died - சாவு, மரணம்

Expired - காலாவதியாகுதல். இறந்து போதல்

killed - put to death - கொல்லப்படுதல். பொதுவாக விபத்தில் இறப்பவர்களுக்கு இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்

Murdered - The unlawful killing of one human by another - கொலை செய்யப்பட்டு இறப்பதைக் குறிக்கும் சொல்

Assassination - An assassination is the targeted killing of a public figure, usually for political purposes. பிரபலங்கள், தலைவர்கள் கொல்லப்பட்டு இறக்கும்போது இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்

Strangled to death - To kill by squeezing the throat so as to choke or suffocate; throttle. கழுத்தை நெறித்துக் கொல்லப்படும் நிலைமை

Suffocated to death - To kill or destroy by preventing access of air or oxygen. மூச்சுத்திணறி இறக்கும் நிலைமை

Drowned to death - To kill by submerging and suffocating in water or another liquid. தண்ணீரில் மூழ்கி இறத்தல்

Killed in a stampede - A sudden headlong rush or flight of a crowd of people. கூட்ட நெரிசலில் சிக்கி இறத்தல்

Deceased - a more formal word for dead  - செத்துப்போனவரைக் குறிக்கும் யதார்த்தமான சொல்

Died in the fire accident - தீ விபத்தில் இறத்தல்

Shot dead - சுடப்பட்டு இறத்தல்

Hanged - தூக்கில் இடப்பட்டு இறத்தல் அல்லது தூக்கில் தொங்கி இறத்தல்

Suicide - The act or an instance of intentionally killing oneself. உயிரை மாய்த்துக்கொள்ளுதல். தற்கொலை

Poisoned to death -  விஷம் வைத்து அல்லது கொடுத்துக் கொல்லப்படுதல்

Electocuted - killed by an electric current - மின்சாரம் தாக்கி இறத்தல்

இன்னும் பல சொற்கள் உள்ளன: homicide, infanticide, fratricide, sororicide, matricide,patricide, parricide regicide.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தனை வகைவகையான, விரிவான சொற்கள் பிறப்பிற்குக் கிடையாது. அதை மனதில் கொள்க!
=====================================================
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

Which is the greatest of all human blessings?

மரணம்தான் அது.

உரிய காலத்தில் வலியில்லாமல், நாம் அறியாமல் உயிர் நம்மைவிட்டுப் பிரியும் நிலை இருக்கிறதே, அதுதான் உன்னதமான வரம். ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த வரம் கிடைக்க வேண்டும். அந்த வரம் கிடைத்திருக் கிறதா?  அல்லது இல்லையா என்பதைச் சொல்லும் இடம்தான் எட்டாம் வீடு!

“சாவை, வரம் என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?”

நான் சொல்லவில்லை சுவாமி! அதைச் சொன்ன ஞானியின் பெயருடனே அந்த வைர வரிகளைக் கீழே  கொடுத்துள்ளேன்

அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்:

Death may be the greatest of all human blessings.  ~ Socrates

மரணம்தான் மனிதனுக்குக் கிடைத்த உன்னதமான வரம்!
--சாக்ரட்டீஸ்

இந்தக் கட்டுரையும், இதைத் தொடர்ந்து பத்துப் பகுதிகளாக எட்டாம் வீட்டைப் பற்றிய பாடங்களும் ‘வகுப்பறை ஜோதிடம் - பகுதி 2’ நூலில் வெளிவர உள்ளன. மேலும் பல பாடங்கள் வரவுள்ளன. புத்தகம் தொகுக்கும் வேலை அதாவது முறையாகப் படிப்பதற்கு வசதியாகத் தொகுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் அச்சாக்கம் செய்ய வேண்டும், இரண்டும் முடிந்த பிறகு புத்தகம் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த மாத இறுதிக்குள் வெளியிட எண்ணியுள்ளேன். முறையான அறிவிப்பு பதிவிலேயே வரும். அதுவரை அனைவரும் பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!