Horoscope: அலசல் பாடம்: - Denial of education, கல்வி மறுக்கப்படும் நிலைமை!
சின்ன வயதில் சிலருக்கு படிப்பு வராது. படிக்கும் சூழ்நிலை இருந்தாலும் படிப்பு ஏறாது. எட்டாம் வகுப்பைக்கூடத் தாண்ட மாட்டார்கள். வீட்டில்
பெற்றோர்கள் கண்டித்து, அடித்தால் பையன் வீட்டை விட்டு ஓடிவிடுவான். பிறகு பல சிரமங்களுக்கிடையே தேடிப்பிடித்துக் கூட்டிக் கொண்டு
வருவார்கள். வந்தாலும் திரும்பவும் படிக்கச் சொல்லி வற்புறுத்த
மாட்டார்கள். ஒரு ஸ்கூட்டர் ஒர்க் ஷாப்பிலோ அல்லது ஒரு மளிகை/
ஜவுளிக்கடையிலோ அல்லது ஒரு அச்சகத்திலோ அல்லது அதுபோன்ற
சிறு தொழில் செய்பவர்களிடம் வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள்.
அதில் ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றதும், தங்கள் சொத்தில் எதையாவது விற்று அல்லது எங்காவது பணத்தைப் புரட்டி
சம்பந்தப்பட்டவனுக்கு ஒரு சொந்தத் தொழிலை வைத்துக்
கொடுப்பார்கள். அவன் தன்னுடைய பிழைப்பை அதன் மூலம் செய்ய வேண்டியதாயிருக்கும்
அவனுடன் ஒன்றாகப் படித்தவன், பின்னால் சிரத்தையாகப் படித்துப் பொறியியல் பட்டம் பெற்று எங்காவது பெரிய தொழிற்சாலையில்
மாதம் ரூபாய் முப்பதாயிரம் சம்பாதித்துக்கொண்டிருப்பான். நம்மாளும் பின்னால் பெரிய மெக்கானிக்காகி கார் அல்லது மோட்டார் சைக்கிள்களைப் பழுது பார்க்கும் தொழிலைச் செய்து, பலரையும் வேலைக்கு வைத்துத்
தன் நண்பனைவிட அதிகமாகச் சம்பாதிப்பான். 2, 10, & 11ஆம் வீடுகளைவைத்து அவையெல்லாம் அவனுக்கு ஒரு உயர்வைக்
கொடுக்கும். ஆனால் படிப்பு போனது போனதுதான்.
என்ன காரணம்?
எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!
அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
--------------------------------------------------------
----------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில்.அதுவும் சனியுடன் கூட்டணி. கூட்டணி சேர்ந்துள்ள சனி
ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன். ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,
தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.
நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை
மிகவும் தீங்கானது. எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Nice Sir
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteபொட்டில் அடித்தது போல் ஒரு பாடம். ஒரு கிரகம் ஒரு இடத்தில் நன்மையும் ஒரு இடத்தில் தீமையும் செய்யும் என்று தங்கள் பாடத்தில் படித்துள்ளேன். அந்தவகையில் உச்சம் பெற்ற 6ம் அதிபதி தனது சொந்த இடமான 11ம் இடத்தை பார்த்து லாபத்தை கொடுத்தான். அனால் படிப்பை கெடுத்தான் என்று புரிந்து கொள்ளலாமா? நீச பங்கம் பெற்ற சனீஸ்வரர் நல்ல தொழிலை கொடுத்தார் சரியா?
பெரிய தலைவர்களின் அலசல் பாடம் மீண்டும் தொடர்ந்தால் சுவாரசியமாக இருக்கும். அதிலும் நான் முதலில் எதிர்பார்ப்பது நடிகர் அமிதாப் பச்சனின் ஜாதக அலசல்.
நன்றி ஐயா
நன்றி ஆசிரியர் ஐயா.
ReplyDeleteசூரியன் சுக்கிரன் செவ்வாய் உச்சம் பெற்றதால் சாதகருக்கு வாழ்வில் மற்ற நன்மைகள் கிடைத்ததா ஐயா.
வணக்கம் குருவே!
ReplyDeleteமனித வாழ்வின் ஒவ்வொரு அங்கமாக
தனித்தனி ஜாதக அலசல் மிக அழகாக இருக்கிறது, புரியும்படி!
நன்றி குருநாதா!
எனது ஜதகத்தில் கடகலக்கினம் கடக ராசி. 1ல் சந்திரன், இரண்டில் சிம்மத்தில் சூரியன் ஆட்சி , 7,8 க்குரிய சனி, 3,12க்குரிய புதன். மூன்றில் 4,11க்குரிய சுக்கிரன் நீச்சம்,கேதுவுடன் சேர்க்கை. 7ல் மகரத்தில் 6,9க்குரிய நீச குரு. 9ல் மீனத்தில் ராகு. 12 மிதுனத்தில் செவ்வாய்.
ReplyDeleteநீங்கள் கூறியபடியே நான்காம் அதிபன் சுக்கிரன் தன் விட்டிற்கு12ல், அதாவது லக்கினத்திற்கு மூன்றில் அமர்ந்து நீசமாகி கேதுவுடன் சேர்க்கை.3ல் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம். 6ம் அதிபன் குருவின் பார்வை 4ம் அதிபனின் மேல்.
நான் பி எஸ் ஸி;(முதல் வகுப்பு) எம் ஏ. என்ன இரண்டு பட்டங்களும் ஓராண்டு கூடப் படித்து வாங்கினேன்.படிப்பில் தடை ஏற்பட்டது. ஆனால் படிப்பே இல்லாமல் போகவில்லை.
படிப்புக்கு ஆன காரகன் புதன் சூரிய்னால் அஸ்தங்கதம் 8ம் அதிபனுடன் சேர்க்கை. சிறியவயதில் ஒரு சோதிடர் எனக்குப் படிப்பே வராது என்று கூறினார். தடையுடன் படித்துவிட்டேன்.
யோககாரகன் செவ்வாய் 12ல் அமர்ந்தாலும் தன் 4ம் பார்வயால் 4ம் அதிபன் சுக்கிரனைப் பார்ப்பதும்,6ம் இடம், 6ம் அதிபதி குருவைப் பார்ப்பதும் எனக்குப் படிப்பைக் கொடுத்து இருக்கலாமோ?
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteNice Sir/////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger VM. Soosai Antony said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
பொட்டில் அடித்தது போல் ஒரு பாடம். ஒரு கிரகம் ஒரு இடத்தில் நன்மையும் ஒரு இடத்தில் தீமையும் செய்யும் என்று தங்கள் பாடத்தில் படித்துள்ளேன். அந்தவகையில் உச்சம் பெற்ற 6ம் அதிபதி தனது சொந்த இடமான 11ம் இடத்தை பார்த்து லாபத்தை கொடுத்தான். அனால் படிப்பை கெடுத்தான் என்று புரிந்து கொள்ளலாமா? நீச பங்கம் பெற்ற சனீஸ்வரர் நல்ல தொழிலை கொடுத்தார் சரியா?
பெரிய தலைவர்களின் அலசல் பாடம் மீண்டும் தொடர்ந்தால் சுவாரசியமாக இருக்கும். அதிலும் நான் முதலில் எதிர்பார்ப்பது நடிகர் அமிதாப் பச்சனின் ஜாதக அலசல்.
நன்றி ஐயா////
நல்லது. நன்றி நண்பரே! அமிதாப்பின் ஜாதகத்தைப் பின் ஒரு நாள் அலசுவோம்!!!!
////Blogger mohan said...
ReplyDeleteநன்றி ஆசிரியர் ஐயா.
சூரியன் சுக்கிரன் செவ்வாய் உச்சம் பெற்றதால் சாதகருக்கு வாழ்வில் மற்ற நன்மைகள் கிடைத்ததா ஐயா.////
ஆஹா....கிடைத்தது சுவாமி!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கமாக
தனித்தனி ஜாதக அலசல் மிக அழகாக இருக்கிறது, புரியும்படி!
நன்றி குருநாதா!////
நல்லது. நன்றி வரதராஜன்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஎனது ஜாதகத்தில் கடகலக்கினம் கடக ராசி. 1ல் சந்திரன், இரண்டில் சிம்மத்தில் சூரியன் ஆட்சி , 7,8 க்குரிய சனி, 3,12க்குரிய புதன். மூன்றில் 4,11க்குரிய சுக்கிரன் நீச்சம்,கேதுவுடன் சேர்க்கை. 7ல் மகரத்தில் 6,9க்குரிய நீச குரு. 9ல் மீனத்தில் ராகு. 12 மிதுனத்தில் செவ்வாய்.
நீங்கள் கூறியபடியே நான்காம் அதிபன் சுக்கிரன் தன் விட்டிற்கு12ல், அதாவது லக்கினத்திற்கு மூன்றில் அமர்ந்து நீசமாகி கேதுவுடன் சேர்க்கை.3ல் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம். 6ம் அதிபன் குருவின் பார்வை 4ம் அதிபனின் மேல்.
நான் பி எஸ் ஸி;(முதல் வகுப்பு) எம் ஏ. என்ன இரண்டு பட்டங்களும் ஓராண்டு கூடப் படித்து வாங்கினேன்.படிப்பில் தடை ஏற்பட்டது. ஆனால் படிப்பே இல்லாமல் போகவில்லை.
படிப்புக்கு ஆன காரகன் புதன் சூரிய்னால் அஸ்தங்கதம் 8ம் அதிபனுடன் சேர்க்கை. சிறியவயதில் ஒரு சோதிடர் எனக்குப் படிப்பே வராது என்று கூறினார். தடையுடன் படித்துவிட்டேன்.
யோககாரகன் செவ்வாய் 12ல் அமர்ந்தாலும் தன் 4ம் பார்வயால் 4ம் அதிபன் சுக்கிரனைப் பார்ப்பதும்,6ம் இடம், 6ம் அதிபதி குருவைப் பார்ப்பதும் எனக்குப் படிப்பைக் கொடுத்து இருக்கலாமோ?/////
ஆமாம். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! குரு நீசமானும் நன்மைகளைச் செய்யக்கூடியவன். குருவும், கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாயும் சேர்ந்து தங்கள் பார்வையால் உங்களுக்குப் படிப்பைக் கொடுத்தார்கள்! உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
வணக்கம் ஐயா
ReplyDeleteஐயா கிருஷ்ணன் அவர்களை போல எனக்கும் கடக லக்கினம் தான் மீன ராசி 12ல் யோககாரகன் செவ்வாய் 2ம் இடத்தில் 6 கிரகங்கள் நவாம்சத்தில் புதன் உச்சம் ஆனால் 12 வகுப்பு தேறவில்லை. 6ம்வகுப்பு துவங்கியது வரை 5ம் ரங்கிற்குள் வந்தேன். அதன் பிறகு படிப்பில் நாட்டம் இல்லாமல் போகிவிட்டது. கேது திசை துவங்கியதால் என நினைக்கிறேன். அதற்கு அடுத்து வந்தது குட்டி சுக்ர திசையும் காரணம் என நினைக்கிறேன்.
நன்றி ஐயா
வணக்கம் ஐயா,அலசல் பாடம் சூப்பர்.கல்வி தவிர மற்றைய விபரங்களையும் (தொழில்) தொட்டிருந்தால் மேலும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.நன்றி.
ReplyDeleteAyya vanakkam . arumayana alasal.nantrikal
ReplyDelete/////Blogger VM. Soosai Antony said...
ReplyDeleteவணக்கம் ஐயா
ஐயா கிருஷ்ணன் அவர்களை போல எனக்கும் கடக லக்கினம் தான் மீன ராசி 12ல் யோககாரகன் செவ்வாய் 2ம் இடத்தில் 6 கிரகங்கள் நவாம்சத்தில் புதன் உச்சம் ஆனால் 12 வகுப்பு தேறவில்லை. 6ம்வகுப்பு துவங்கியது வரை 5ம் ரங்கிற்குள் வந்தேன். அதன் பிறகு படிப்பில் நாட்டம் இல்லாமல் போகிவிட்டது. கேது திசை துவங்கியதால் என நினைக்கிறேன். அதற்கு அடுத்து வந்தது குட்டி சுக்ர திசையும் காரணம் என நினைக்கிறேன்.
நன்றி ஐயா//////
ஆமாம். அவைதான் காரணம்! நன்றி நண்பரே!!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அலசல் பாடம் சூப்பர்.கல்வி தவிர மற்றைய விபரங்களையும் (தொழில்) தொட்டிருந்தால் மேலும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.நன்றி./////
கல்வியைப் பற்றிய பதிவு. ஆகவே மற்றவற்றைத் தொடவில்லை! நன்றி!!!!
/////Blogger kittuswamy palaniappan said...
ReplyDeleteAyya vanakkam . arumayana alasal.nantrikal////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிட்டுசாமி!!!!!
அருமையான விளக்கம் ஐயா. நன்றாக புரிந்தது.
ReplyDelete