மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.3.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கடன்களால் அவதிப்படுவது

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கடன்களால் அவதிப்படுவது

இன்றைய உலகத்தில், கையில் தாராளமாகப் பணம் இருந்தால் போதும், பல பிரச்சினைகளை ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று நொடியில் தீர்த்து விடலாம். அதை அறிந்துதானோ என்னவோ மக்கள் எல்லாம் கசைக் கடவுளாகக் கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் நன்றாக இருக்கட்டும். நான் பாடத்திற்கு வருகிறேன்.

பணம் இல்லாதவன் நிலைமை என்னவாகும்? அதைவிட, கடனில் மூழ்கி (மூழ்கி என்னும் வார்த்தையைக் கவனியுங்கள்) இருப்பவன் நிலைமை என்னவாகும்?

அவர்களுடைய கஷ்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்தால் மட்டுமே தெரியும்.

12ஆம் வீட்டில் விரையத்தில் இருக்கும் சனியின் தசை நடக்கும்போது, அதை என் நெருங்கிய உறவினர் ஒருவர் அதை அனுபவித்து, என்னிடம் அழுது தீர்த்திருக்கிறார். கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து, சனி திசையின் கடைசி ஆறு வருடங்கள் மிகவும் சிரமமத்திற்கு ஆளாகி அவதிப்பட்டிருக்கிறார்.

நம் கெட்டிக்காரத்தனம் எல்லாம் கிரகங்களிடம் செல்லாது. கஷ்டம் என்றால் அனுபவித்தே ஆகவேண்டும்.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-------------------------------------------------------------


-------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

மேஷ லக்கினம் லக்கினாதிபதி 11ல் (லாபஸ்தானத்தில்)

இரண்டாம் வீட்டிற்கு உரிய (அதாவது தனஸ்தானத்திற்கு அதிபதி) சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார்.

11ஆம் அதிபதி சனி தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு அது 10ஆம் வீடு. ஆனாலும் 11ஆம் இடத்திற்கு அது 12ஆம் இடம்.

ஆறாம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், ஏழரைசனி நடந்தாலும் பணப் பிரச்சினைகள் தலை தூக்கும்.

மேலே உள்ள ஜாதகரின் ஆறாம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். உடன் சனியும், கேதுவும் இருப்பதைப் பாருங்கள். 1996 - 2001 காலகட்டத்தில் அவருக்கு ஆறாம் அதிபதியின் திசை நடந்ததோடு, ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டு, ஆசாமியைத் தெற்கு வடக்காகப் புரட்டிப்போட்டுவிட்டது.அடுத்து வந்த கேது தசையிலும் அது தொடர்ந்தது. அதற்குப் பிறகு சுக்கிரத்சை நடக்கும் காலகட்டத்தில் அவர் மீண்டு வந்துள்ளார்.

பணக்கஷ்டங்களை அலசும்போது இந்த விதிமுறைகளை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

Ragini Santosh said...

வணக்கம் அய்யா,

2017 பாடம் எப்போது தொடங்கும்? கட்டணம் செலுத்தி காத்துக் கொண்டு இருக்கும் மாணவி. classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை. எனது மின்னஞ்சல் வந்து சேரவில்லையா என தெரியவில்லை.

நன்றி.

ராகினி

kmr.krishnan said...

very useful

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
ஆமாம் குருநாதா! அலசல் அப்படியே படம் பிடித்துள்ளீர்கள்!
சனிபகவான் அஸ்திரத்துக்கு ஆளாகி,
நொந்து நூலானேன், 1980-1999களில்.
விவரிக்க இயலாத அத்தனை தொடர் துன்பங்கள்!?
போதுமடா சாமி?!

moorthy krishnan said...

வணக்கம் ஐயா
அலசல் மிகவும் உபயோகமாக உள்ளது ராகு திசை கேது புத்தி முடிந்து
வாழ்க்கை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வைத்துள்ளது
நன்றியுடன்
மூர்த்தி

Freelancer / Virtual Assitant said...

Sir,
How can I get your appointment for astro prediction. Few times, I hv sent a mail to classroom2007@gmail.com, but no reply.
Kindly guide me.

Subbiah Veerappan said...

////Blogger Ragini Santosh said...
வணக்கம் அய்யா,
2017 பாடம் எப்போது தொடங்கும்? கட்டணம் செலுத்தி காத்துக் கொண்டு இருக்கும் மாணவி. classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை. எனது மின்னஞ்சல் வந்து சேரவில்லையா என தெரியவில்லை.
நன்றி.
ராகினி/////

அன்பு சகோதரி,
உங்கள் மின்னஞ்சலை மீண்டும் ஒருமுறை அனுப்புங்கள். வேண்டியதைச் செய்கிறேன்
அன்புடன்
வாத்தியார்

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
very useful////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
ஆமாம் குருநாதா! அலசல் அப்படியே படம் பிடித்துள்ளீர்கள்!
சனிபகவான் அஸ்திரத்துக்கு ஆளாகி,
நொந்து நூலானேன், 1980-1999களில்.
விவரிக்க இயலாத அத்தனை தொடர் துன்பங்கள்!?
போதுமடா சாமி?!//////

உண்மைதான். ராகு திசையும், சனி திசையும் அப்படித்தான் செய்யும். எனக்கும் அந்த அனுபவம் உண்டு!!!! உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி வரதராஜன்!!!

Subbiah Veerappan said...

////Blogger moorthy krishnan said...
வணக்கம் ஐயா
அலசல் மிகவும் உபயோகமாக உள்ளது ராகு திசை கேது புத்தி முடிந்து
வாழ்க்கை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வைத்துள்ளது
நன்றியுடன்
மூர்த்தி/////

உண்மைதான். ராகு திசையும், சனி திசையும் அப்படித்தான் செய்ய வைக்கும். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!

Subbiah Veerappan said...

/////Blogger Freelancer / Virtual Assitant said...
Sir,
How can I get your appointment for astro prediction. Few times, I hv sent a mail to classroom2007@gmail.com, but no reply.
Kindly guide me./////

அன்புடையீர்,
என் உடல் நிலை காரணமாகவும், வேலைப் பளு காரணமாகவும், தற்சமயம், தனிப்பட்டவர்களின் ஜாதகங்களை எல்லாம் அலசி, ஆராய்ந்து பதில் சொல்ல நேரமில்லை. மன்னிக்கவும்
அன்புடன்
வாத்தியார்