மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

31.3.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: பலவிதமான நோய்கள் (Multiple diseases)


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: பலவிதமான நோய்கள் (Multiple diseases)

நோய் வாய்ப்படாத மனிதனே இருக்க முடியாது. சளி, காய்ச்சல், உடம்பு வலி என்று ஏதாவது உபத்திரவம் இருக்கும் அல்லது அவ்வப்போது வந்து போகும். அது இயற்கையானது. தாங்கக்கூடியது.

ஆனால் கடுமையான நோய்கள் இருந்தால் வாழ்க்கை ஜாதகனுக்கும் சுகப் படாது. அவனைச்  சுற்றியுள்ளவர் களுக்கும் சுகத்தைத் தராது. சமயத்தில் எப்போதடா இவன் போய்ச் சேர்வான் என்னும் மனநிலை நெருங்கிய உறவினர்களுக்கு ஏற்பட்டுவிடும்

கடுமையான நோய்கள் எவை?

ஊங்களுக்காகக் கூகுள் ஆண்டவரிடம் கேட்டு வாங்கிக் கீழே கொடுத்துள்ளேன்.

a chronic disease is a disease that is long-lasting or recurrent. The term chronic describes the course of the disease, or its rate of onset and development. A chronic course is distinguished from a recurrent course; recurrent diseases relapse repeatedly, with periods of remission in between. As an adjective, chronic can refer to a persistent and lasting medical condition. Chronicity is usually applied to a condition that lasts more than three months. The opposite of chronic is acute.

Examples of chronic diseases include:

    * Asthma
    * Chronic fatigue syndrome
    * Chronic osteoarticular diseases: rheumatoid arthritis, osteoarthritis
    * Chronic respiratory diseases: chronic obstructive pulmonary disease, asthma, pulmonary hypertension
    * Chronic renal failure
    * Diabetes mellitus
    * Chronic hepatitis
    * Autoimmune diseases, like ulcerative colitis, lupus erythematosus
    * Cardiovascular diseases: heart failure, ischemic cardiopathy, cerebrovascular disease
    * Epilepsy
    * Neoplasic diseases not amenable to be cured
    * Osteoporosis
    * Cancer
    * Sickle Cell Anemia
    * Chronic GHVD: intra-oral

Many chronic diseases require chronic care management for effective long-term treatment. Effective chronic disease control requires attention to social, behavioral, environmental and clinical aspects. Multiple morbidities can be common in older adults.

சரி, கடுமையான நோய் எதனால் உண்டாகிறது?

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இந்த ஜாதகத்தில் லக்கின நாதனும், ஆறாம் இடத்தானும் ஒரே ஆசாமி. அதாவது சுக்கிரன். அவன் எப்படி  உள்ளான்?

பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கின்றான். அவன் இருக்கும் விருச்சிக வீடு அவனுக்குப் பகைவீடு என்பது மட்டுமல்ல, அந்த வீட்டிற்கு இருபுறமும் பாபக் கிரகங்கள். அத்துடன் அது watery sign.

ஜாதகனுக்கு முதலில் நீரழிவு நோய் வந்தது. பின்பு கடுமையான மூட்டு வலி. பிறகு புற்று நோய்!

உடல் காரகன் சூரியன் எட்டில். அத்துடன் குருவும் எட்டில். குருவிற்குப் பகைவனான புதனும் குருவுடன் சேர்ந்துள்ளான். அத்துடன் தேய்பிறைச் சந்திரன். கேட்க வேண்டுமா? அனைத்துமே சாதகமாக இல்லை!

போதாதற்கு உச்சமான சனீஷ்வரனின் பார்வையும் அவர்கள் மேல் தீர்க்கமாக விழுகிறது. சனியைத் தூண்டிவிடும் விதமாக விரையாதிபதி செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் சனீஷ்வரனைக் கட்டம் கட்டிக்கொண்டிருக்கிறார்.

இவை எல்லாமுமாக ஒன்று சேர்ந்து ஜாதகனைப் படுத்தி எடுத்ததுடன் பரலோகத்திற்கும் அனுப்பிவைத்துவிட்டன.

ஆறாம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தாலே கடுமையான நோய்கள் உண்டாகும். அதை மனதில் வையுங்கள்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

kmr.krishnan said...

Very useful Thank you Sir.

mohan said...

ஆசிரியர் ஐயா வணக்கம்.
ஒரு நாளில் ஒரே நேரத்தில், ஒரே ஊரில் பலர் பிறக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடக்குமா ஐயா. நன்றி.

Chandrasekaran Suryanarayana said...

6ம் வீட்டு தசையில் தீவிரமான நோய் ஏற்பட்டு புதன் தசை சனி புக்தியில் செவ்வாய் அந்திரங்க புக்தியில் அவருடைய காலம் முடிந்திருக்கும் என்று யூக்கிறேன்.

selvaspk said...

Please clarify
1) Exalted Saturn being yogadhipathi and Lord of 9th and karaka of life aspecting 8th should have given a long life.
2) Saturn being stronger in shadbala than Mars, how can Mars influence results of Saturn? I thought stronger planet influence weaker one.
3) Though Lagna Lord on papakarthari, Lagna Lord in Kendra, aspecting Lagna and Lagna is not affilicted and 8th house Lord in it's moola trikona, makes it tough to judge the longevity of horoscope being short. Can you please tell how long this person lived? Was he passed away in his early ages?

ashokdiyan said...

gru iya vanakkam
ithatku parrigaram enna iya

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Very useful Thank you Sir./////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Subbiah Veerappan said...

//////Blogger mohan said...
ஆசிரியர் ஐயா வணக்கம்.
ஒரு நாளில் ஒரே நேரத்தில், ஒரே ஊரில் பலர் பிறக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடக்குமா ஐயா. நன்றி.//////

ஆமாம். அப்படித்தான் நடக்கும்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Chandrasekaran Suryanarayana said...
6ம் வீட்டு தசையில் தீவிரமான நோய் ஏற்பட்டு புதன் தசை சனி புக்தியில் செவ்வாய் அந்திரங்க புக்தியில் அவருடைய காலம் முடிந்திருக்கும் என்று யூகிக்கிறேன். //////

உங்களின் யூகம் சரிதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger selvaspk said...
Please clarify
1) Exalted Saturn being yogadhipathi and Lord of 9th and karaka of life aspecting 8th should have given a long life.
2) Saturn being stronger in shadbala than Mars, how can Mars influence results of Saturn? I thought stronger planet influence weaker one.
3) Though Lagna Lord on papakarthari, Lagna Lord in Kendra, aspecting Lagna and Lagna is not affilicted and 8th house Lord in it's moola trikona, makes it tough to judge the longevity of horoscope being short. Can you please tell how long this person lived? Was he passed away in his early ages?/////

யோககாரகன் உச்சம்பெற்றிருந்தாலும் 6ல் அமர்ந்து தன் வலுவை இழந்துள்ளார். லக்கினாதிபதி சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டதால், ஜாதகன் மீள முடியவில்லை என்பதே நிலைமை!!! சந்திரசேகரன் சூர்யநாராயணாவின் பின்னூட்டப்படிதான் நடந்தது!

Subbiah Veerappan said...

//////Blogger ashokdiyan said...
gru iya vanakkam
ithatku parrigaram enna iya/////

பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
காலம் ஒரு மனிதனின் வாழ்வில் எப்படியெல்லாம் கடந்து போகின்றது,
அவ்வாறு நிகழ்வது எதன் அடிப்படையில் என்பது தெளிவாகிறது.
பெரியோர் "அவன் வாங்கி வந்த வரம் அப்படி", என்பார்கள்?
முன் ஜென்ம வினைகளே இஜ் ஜென்மத்துக்கு ஆதாரம் என்பது எவ்வளவு தெளிவு!?
பாப் க்ரஹங்களின் பார்வையும், சேர்க்கையும்...ஒரு மனிதனை என்ன பாடுபடுத்துகிறது?!
பரிகாரங்களே இல்லையா குருநாதர்?

GANAMURUGU said...

ayya, aaraam idathu athipathiyai guru paarvai seithal palan maaruma?

Lakshmi Narayanan Balasubramanian said...

very useful lesson sir...

Thank you very much

lakshmi narayanan
tuticorin

Kannan L R said...

ஐயா வணக்கம்
பாபகர்த்தாரி யோகத்தின் தீவிரத்தை தெரிந்து கொண்டேன் ஐயா

நன்றி

கண்ணன்

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
காலம் ஒரு மனிதனின் வாழ்வில் எப்படியெல்லாம் கடந்து போகின்றது,
அவ்வாறு நிகழ்வது எதன் அடிப்படையில் என்பது தெளிவாகிறது.
பெரியோர் "அவன் வாங்கி வந்த வரம் அப்படி", என்பார்கள்?
முன் ஜென்ம வினைகளே இஜ் ஜென்மத்துக்கு ஆதாரம் என்பது எவ்வளவு தெளிவு!?
பாப் க்ரஹங்களின் பார்வையும், சேர்க்கையும்...ஒரு மனிதனை என்ன பாடுபடுத்துகிறது?!
பரிகாரங்களே இல்லையா குருநாதர்?/////

விதியை - விதிக்கப்பட்டதை வெல்ல முடியாது. பரிகாரம் உண்டு. பிரார்த்தனைதான் பரிகாரம். துன்பங்கலைத் தாக்குப்பிடிக்கும் சக்தியை - வலிமையை அந்த பிரார்த்தனை கொடுக்கும்! நன்றி வரதராஜன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger GANAMURUGU said...
ayya, aaraam idathu athipathiyai guru paarvai seithal palan maaruma?/////

குருபார்வை நன்மை அளிக்கும். அதுவும் ஓரளவிற்குத்தான்!! நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Lakshmi Narayanan Balasubramanian said...
very useful lesson sir...
Thank you very much
lakshmi narayanan
tuticorin/////

நல்லது. நன்றி லெட்சுமி நாராயணன்!!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
பாபகர்த்தாரி யோகத்தின் தீவிரத்தை தெரிந்து கொண்டேன் ஐயா
நன்றி
கண்ணன்//////

நல்லது. உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி நண்பரே111