மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

24.3.17

Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கேது கொடி பிடிக்கும் காலசர்ப்ப தோஷம்Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கேது கொடி பிடிக்கும் காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன்.

ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail Ketu and is known as viloma.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தியாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?

இந்தப் பாடம் மேல்நிலை வகுப்பில் முன்பு நடத்தப்பெற்ற பாடம்.
ஆகவே யாருக்காவது நினைவில் இருந்தால் இரண்டாவது முறை
படிப்பதில் தவறில்லை. படிக்க வேண்டுகிறேன்!!!!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27 comments:

kmr.krishnan said...

Yes Sir. Studied second time. Thank you Sir.

C Jeevanantham said...

Dear Sir,

Thank you for refreshing the old lesson again.

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
தோஷம் யோகமாக மாறியிருநீதால்
இந்த ஜாதகர் கஷ்டப்பட்டிருக்கக் கூடாதல்லவா?
தோஷம், தோஷம் தானே ஐயா!

moorthy krishnan said...

வணக்கம் ஐயா
தெளிவான விளக்கம்
நன்றி ஐயா
மூர்த்தி

Purushothaman said...

Yes thank you sir.

Purushothaman said...

Vannakam sir I am beginning level studied two or three times

Lakshmi Narayanan Balasubramanian said...

ஆமாம்... மீள் பதிவு வாத்தியார் அவர்களே... இருந்தாலும் சுவைதான் வாத்தியார் சொல்லித்தரும்போது...

நம் அனைத்து மாணவர்களுக்காகவும், ஒரு க்ளு பாடம் தயவு கூறுங்கள்...
சைக்கோ, கிரிமினல், நல்லவனை போல் ஒரு பரமசண்டாளன்,
முறை தவறி உறவு கொள்பவர்கள், மாமா வேலை பார்பவர்கள் பற்றி பாடம் தாருங்களேன்...

ஆவலோடு என்றும்...


அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

Chandrasekaran Suryanarayana said...

Thank you Sir. Studied many times to keep my memory.

selvaspk said...

Sir the lady lost her husband due to 7th Lord in 12 from it's house, guru debilitation, the 8th house from 7th-2nd Lord stands in 3rd as neecha and Saturn, Mars,Sun,raghu, ketu - all wild cards on 7th.

Not sure how this ketu leading is relating to her spoiled life as if you interchange Raghu and ketu, marriage will still a failure even on Raghu leading.

Also in some texts it's said that saaya Graham gets ucha on rishabam.

please make a bit more explanation on below
1. Will ketu leading charts always end in disaster? Nehru had it.

2. Will the house lead by ketu get disaster? 11th house is house of gain, what if ketu leads from that house?

3. What if house of Lord well seated where ketu sits?

4. If Ketu seated in 5th house, will that person always end up in putra dosha? Since each house has multiple aspects.

Please give us some light, like how one can see the exceptions.

selvaspk said...

Apart from previous questions, a humble request to you to enlighten​ people who have gotten this in their chart, so they don't panic.


Astrology is the 3rd vision yet no one can change outcomes. But we can fore see the tunnel and get prepared. Like taking insurance while driving a car.

If Ketu leading horoscopes, then what they need to expect or do.

K.P.Shanmuga Sundaram Sundaram said...

All are pre destined nothing can be re writtened

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
Yes Sir. Studied second time. Thank you Sir.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Subbiah Veerappan said...

////Blogger C Jeevanantham said...
Dear Sir,
Thank you for refreshing the old lesson again./////

நல்லது. நன்றி ஜீவானந்தம்!!!!!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
தோஷம் யோகமாக மாறியிருநீதால்
இந்த ஜாதகர் கஷ்டப்பட்டிருக்கக் கூடாதல்லவா?
தோஷம், தோஷம் தானே ஐயா!/////

தோஷ காலத்தில் நடந்தவற்றிற்கு என்ன செய்ய முடியும். பின் வாழ்க்கை சாதகமாக இருந்திருக்கிறதே!
”பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.’’ என்று எழுதியுள்ளேனே - அதைப் பாருங்கள் வரதராஜன். நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger moorthy krishnan said...
வணக்கம் ஐயா
தெளிவான விளக்கம்
நன்றி ஐயா
மூர்த்தி////

நல்லது. நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Purushothaman said...
Yes thank you sir.////

நல்லது. நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Purushothaman said...
Vannakam sir I am beginning level studied two or three times////

நல்லது. அப்படியே செய்யுங்கள். பாடங்கள் நன்றாக மனதில் பதியும்!!!! நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger Lakshmi Narayanan Balasubramanian said...
ஆமாம்... மீள் பதிவு வாத்தியார் அவர்களே... இருந்தாலும் சுவைதான் வாத்தியார் சொல்லித்தரும்போது...
நம் அனைத்து மாணவர்களுக்காகவும், ஒரு க்ளு பாடம் தயவு கூறுங்கள்...
சைக்கோ, கிரிமினல், நல்லவனை போல் ஒரு பரமசண்டாளன்,
முறை தவறி உறவு கொள்பவர்கள், மாமா வேலை பார்பவர்கள் பற்றி பாடம் தாருங்களேன்...
ஆவலோடு என்றும்...
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி./////

ஜாதகத்தில் மூன்று கிரகங்கள்/அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால், அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும். அதுபோன்ற ஜாதகம் கிடைக்கும் போது, அதை அலசுவோம். நன்றி!!!!

Subbiah Veerappan said...

////Blogger Chandrasekaran Suryanarayana said...
Thank you Sir. Studied many times to keep my memory./////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!

Subbiah Veerappan said...

////Blogger selvaspk said...
Sir the lady lost her husband due to 7th Lord in 12 from it's house, guru debilitation, the 8th house from 7th-2nd Lord stands in 3rd as neecha and Saturn, Mars,Sun,raghu, ketu - all wild cards on 7th.
Not sure how this ketu leading is relating to her spoiled life as if you interchange Raghu and ketu, marriage will still a failure even on Raghu leading.
Also in some texts it's said that saaya Graham gets ucha on rishabam.
please make a bit more explanation on below
1. Will ketu leading charts always end in disaster? Nehru had it.
சின்ன வயதில் நேரூஜி பலமுறை சிறை வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்
------------------------------------
2. Will the house lead by ketu get disaster? 11th house is house of gain, what if ketu leads from that house?
இந்த ஜாதகத்தில் கேது 7ல்தான் உள்ளார். பதினொன்றில் இருந்தால் பலன்கள் வித்தியாசப்படும்!!!!
---------------------------------------------------------------
3. What if house of Lord well seated where ketu sits?
இந்த ஜாதகத்தில் 7ம் அதிபதி அந்த வீட்டிற்கு 12ல் அமர்ந்துள்ளார், நீங்கள் சொல்வதுபோல அமர்ந்தால் பலன்கள் மாறுபடும்!
------------------------------------------------------------
4. If Ketu seated in 5th house, will that person always end up in putra dosha? Since each house has multiple aspects.
Please give us some light, like how one can see the exceptions. /////
கேது 5ல் அமர்ந்தாலும், அந்த வீட்டின் மேல் விழும் சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை வைத்து நீங்கள் குறிப்பிடும் தோஷங்கள் நீங்கி விடும்!!!!
-------------------------------------------

Subbiah Veerappan said...

////Blogger selvaspk said...
Apart from previous questions, a humble request to you to enlighten​ people who have gotten this in their chart, so they don't panic.
Astrology is the 3rd vision yet no one can change outcomes. But we can fore see the tunnel and get prepared. Like taking insurance while driving a car.
If Ketu leading horoscopes, then what they need to expect or do./////

சுப கிரகங்களின் சேர்க்கை/பார்வையை வைத்து மற்ற ஜாதகங்களுக்கு பலன்கள் மாறுபடும். ஆகவே யாரும் இந்த அமைப்பை வைத்து பீதியடைய வேண்டாம்!!!!

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
All are pre destined nothing can be re written////

அதை உணர்ந்தால், யாரும் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை!!!!!

t.nagoji rao said...

Lesson is good. My own sister had kalasarbadosa, again i restudy her horoscope. Thank u Guru. What about the book's next version?

Kripa said...

Dear Admin,
Greetings!
We recently have enhanced our website, "Nam Kural"... We request you to share the links of your valuable articles on our website to reach wider Tamil audience...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி, http://www.namkural.com/

நன்றிகள் பல,
நம் குரல்
Note: - To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

Subbiah Veerappan said...

/////Blogger t.nagoji rao said...
Lesson is good. My own sister had kalasarbadosa, again i restudy her horoscope. Thank u Guru. What about the book's next version?/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Kripa said...
Dear Admin,
Greetings!
We recently have enhanced our website, "Nam Kural"... We request you to share the links of your valuable articles on our website to reach wider Tamil audience...
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி, http://www.namkural.com/
நன்றிகள் பல,
நம் குரல்
Note: - To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button//////

நல்லது.உங்கள் வலைத்தளத்தில் வகுப்பறை பாடங்களைப் படிக்கச்சொல்லி செய்தி வேண்டுமென்றால் வெளியிடுங்கள். அது போதும்! நன்றி!

Anbu Selvan said...

Deare sir

In my jaathagam rahu 4th ketu 10th place from lagnam wat yoga is this